• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 88. The Coffee Ceremony!

அவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர்கள் டீ மட்டுமே குடிப்பவர்கள்!

அது போன்றவர்கள் காபி போட்டால்

சாதாரணமாக வாயில் வைக்க வழங்காது!:wacko:

"காபி வேண்டாம்" என்று சொன்னபோதும்

"குடித்து விட்டுச் சொல்லுங்கள் எப்படி என்று!"

அது போன்ற காபி நான் குடித்ததே இல்லை!:faint:

கோப்பையின் நடுவில் உயர்ந்து நின்றது

ஒரு COFFEE AND CREAM WHIRLPOOL !

நிறமும், மணமும், சுவையும் அப்பப்பா!

நானும் அதே இன்ஸ்டன்ட் காபி தான்!

ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே!

அவர்கள் அதை ஒரு CEREMONY போலச்

செய்வது, விளக்கிய பின் விளங்கியது.

பொடியுடன், சர்க்கரையும், பால் ஏடும்,

நன்றாக கலக்கியபின் அதில் நன்கு
கொதிக்கும் பாலை ஊற்றிய காபி! வாவ்! :tea:

JAPANESE TEA CEREMONY போல

NORTH INDIAN COFFEE CEREMONY!

அதிசயம் ஆனால் உண்மை!

அவர்கள் அந்தக் காபியையும்

கூடக் குடிப்பதில்லையாம்
icon4.png
 
Quotes by Benjamin Jonson.

Those green -rob'd senators of the mighty woods,

Tall oaks.

Unseen before by God or wandering men.

And only blind from sheer supremacy.
 
# 89. ABISHEKAM.

சிவலிங்கத்துக்கு 108 அபிஷேகம் வேண்டுதல்.

திங்களன்று மட்டும் செய்து 78 முடிந்துவிட்டது.

ஒரு மாதத்தில் ஊருக்கு மூட்டை கட்டவேண்டும்.

மிகுந்த முப்பது அபிஷேகங்கள்...? :confused:

பூசாரியிடம் என் நிலைமையை விளக்கினேன்!

தினமும் செய்து தர ஒப்புக் கொண்டார்.

முப்பது நாட்களுக்கு தொடர்ந்து செய்து

ஸ்கோரை எட்டிவிட்டோம் நாங்கள். :bowl:

என் நன்றியைக் காட்ட ஒரு சோமன் செட்!

அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை! :shocked:

மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். :happy:

How true is the saying...

When you receive an act of kindness

please pass it on to the others also!
 
# 90. ஹிமாலயக் 'குட்டி'கள்!

(குட்டி = கூட்டில் ஒளிந்திருக்கும் ஒரு சிறு
பருப்புத் தேங்காயின் செல்லப் பெயர்!)

ஒரு திருமணத்துக்குப் போயிருந்தோம்
பக்ஷணங்கள் எல்லாம் giant size !

லட்டு திருப்பதி லட்டு தானோ?

முறுக்குகள் எல்லாம் குறைந்தது
18 அங்குல விட்டம்!வாவ்!

எப்படித்தான் சுற்றினார்களோ?:faint:

'குட்டி' மினி ஹிமாலயாஸ் போல!
அவர்களிடம் கேட்டேன் "ஏன்" என்று!

முகமூடி போடாத பகல் கொள்ளையர்கள்
(லௌகிக பாஷையில் சொன்னால் சம்பந்திகள்)

அளவுகள் கொடுத்து இருந்தார்களாம்!
அதன்படி எல்லாம் தயார் செய்தார்களாம்!

பதினெட்டு அவர்களின் லக்கி நம்பர் போல!
எல்லாமே பதினெட்டை எட்டி இருந்த
!

ஒருபக்கதில் குட்டியின் காலிக் கூட்டை
வைத்து ஏமாற்றும் சில பிரகிருதிகள், :suspicious:

மறுபுறம் ஹிமாலய சாதனைகள் புரியும்
புரியும் தாராள பந்தா பார்டிகள்!:popcorn:

நாம் எங்கே போகின்றோம்???:noidea:
 
# 91. புல்லெட் குஷ்பூ இட்லி!

Rocky mountain விசிட்.

இரவு அங்கேயே ஹால்ட்.

குழந்தை அமர்ந்து உண்ணவிடமா
ட்டான்.

எனவே take home food வழக்கம் போல.

சவுத் இந்தியன் speciality என்று

இட்லி வடை கேட்டிருக்கிறார்கள்.

வடை தீர்ந்து விட்டது என்று நல்ல

மனத்துடன் மூன்று மூன்று இட்லிகள். :hungry:

குஷ்பூ புல்லெட் ஆக மாறி இருந்தாள்.:ballchain:

கத்தியினால் தான் வெட்ட வேண்டுமா?

விள்ளவே முடியவில்லை!விழுங்கவும் தான்!

கிரிக்கெட் பால் போல இருந்தது. :bowl:

Speciality இப்படி இருந்தால்
Ordinary எப்படி இருக்குமோ?
:scared:
 
# 93. Container cum food.

IKEA என்ற அழகான கடைகள்.

பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

அதன் specialty பிரட் & சூப்.

பிரட் சிறு பரணி போல இருக்கும்.

அழகான மூடியும் கூட இருக்கும்.

அதையே குடைந்து அதனுள்

சூப்பர் spicy சூப் நிரம்ப!

சூப்பைச் சாப்பிட்டு விட்டு ,

பிரட்டையும் சாப்பிடலாம்.

கண்ணுக்கும் விருந்து நம் பசித்த :love:

வயிற்
றுக்கும் கூட நல்ல விருந்து.:hungry:

முதல் முறைபோன அன்று கிருத்திகை.:nono:

இரண்டாவது முறை இதற்காகவே போனோம்! :grouphug:
 
Benjamin Jonson.

'Beauty is truth , truth beauty,' - that is all
Ye know on earth, and all ye need to know.:moony:

Thou still unravish'd bride of quietness :tape:
Thou foster child of silence and slow time.:clock:

Evenings steeped in honied indolence.
:couch2:
 
Quotes by Benjamin Jonson.

My heart aches, and a drowsy
numbness pains
My sense (Ode to a Nightingale):whoo:

Stop and consider! Life is but a day; :sad:

A fragile dewdrop on its perilous way

From a tree's summit.:tsk:

Darkling I listen.
:ear:
 
# 93. THE LIMITS OF FREEDOM.

அக்காவின் பேரன் அமெரிக்கா வந்தான்,

M. S. Course அங்கே செய்வதற்கு !
அவன் கை நிறைய converted dollars ! :popcorn:

கூடவே பெரிய ஷாப்பிங் லிஸ்டு!

அவனுக்கு Financial Aid கிடையாது. :nono:

"அந்த லிஸ்ட் சாமான்களைப் பிறகு

அமைதியாக வாங்கலாம்!" என்றால்,

"நான் பிடித்த முயலுக்கு முன்றே கால்!" :high5:

பெரிய ஸ்டோருக்கு அழைத்துச் சென்றால்,

ஆள் அடிக்கடி காணாது போய்விடுவான்.

அவனை trace செய்வதே வேலை ஆயிற்று!

எல்லாவற்றையும்
குடைந்து கொண்டு...

எல்லாவற்றையும் அணிந்து கொண்டு...

எல்லாவற்றையும்
taste செய்து கொண்டு...

எல்லாவற்றையும்
டெஸ்ட் செய்துகொண்டு...!

கோபமே வராத
ன் மகனுக்கும் அன்று

கோபம் வந்து விட்டது! காரணம்...?

Perfume section சுவர்க்க பூமி ஆ
கியிருந்தது,

அத்தனை spray க்களையும் பீச்சி!

"ஏன் இப்படிச் செய்கின்றாய்?" என்றால்

"ஃ ப்ரீ சாம்பிள்
தானே!" என்ற பதில்.

"அது உனக்காக மட்டுமல்ல!

எல்லோருக்காகவும்தான்!"

"சென்னை பாண்டி பஜார் perfume

இதை விட நன்றாக இருக்கும்!"

"அப்போது அங்கேயே வாங்கிக்கொள்!"

கைப் பிடித்து இழுத்து வந்தோம் வெளியே.

டாகூடமாக ஏதாவது செய்துவிட்டு,

நம்மை வம்பில் மாட்டுவதற்கு முன்!

ஒரு சொற்றொடர் நினவுக்கு வந்தது!
"அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டி போல!"
:llama:
 
# 94. The youngest account holder.

அப்போதெல்லாம் take home salary

அற்பமான சில நூறு ரூபாய்களே! :roll:

ஆனால் அதிலும் மிச்சம் செய்து சேமிப்போம்.

தங்கம் கிராம் பத்து ரூபாய் விற்ற காலம்! :shocked:

மாதக் கடைசியில் கையில் ஐந்து ரூபாய்

இருந்தால் ஒரு ராஜா போல ஃபீல் பண்ணுவோம்! :high5:

ஐந்து ரூபாய் கை மாற்று வாங்கி இருந்தால்

இலங்கை வேந்தன் போல் மனம் கலங்குவோம். :tsk:

என் பெரிய மகனுக்கு ஒரு savings account.

Youngest account holder (வயது 1 +)

Rs. ஐந்து ரூபாய் மட்டும் போட்டு ஆரம்பித்தோம்!

மாதம் ஒரு முறை Bank செல்லும்போது அவனுக்கு

special welcome + குட்டி gifts + toys !

காரணம்.....?

அவன் தான் youngest account holder.

ஒரு prince போலவே அவனை வரவேற்பார்கள்!

அது ஒரு பொற்காலம். நூறு ரூபாயில் குடித்தனம்!

இன்று alms > ஐந்து ரூபாய் தரவேண்டுமாம்!

இல்லாவிட்டால் வீசி எறிவார்கள் தரையில்!
 
Quotes by Benjamin Jonson.

Fame like a wayward girl, will still be coy
To those who woo her with too slavish knees.

Much have I travell'd in the realm of gold,
And many goodly states and kingdoms seen.

The poetry of earth is never dead.

 
# 95. SUPERB PILLOW FIGHT !

மதுரைக் கல்லூரியில் படித்த போது

முதலாம் ஆண்டு விசித்திரமானது!

பகலில் அதுவே எங்கள் வகுப்பு அறை,

இரவு அதுவே படுக்கை அறையாகிவிடும்!

ரூமுக்கு பார்டர் கட்டியதுபோல எங்கள்

பெட்டி, படுக்கை, புத்தகங்கள் - இறையாமல்.

ஒரு நாள் மும்மரமாக சீரியஸ் pillow fight :fencing:

நானும் என்னுடைய அறை சிநேகிதியும்!

வார்டன் சிஸ்டர் நின்று வேடிக்கை பார்த்தது

எங்களுக்குத் கொஞ்சமும் தெரியவே இல்லை!

எல்லோரும் திடீரெனக் கப்சிப் ஆனதால், நாங்கள்:tape:

என்னவோ என்று பார்த்தபோது தெரிந்தது!

அன்று இரவு வராண்டாவில் தூங்கவேண்டும்!:sleep:

அது தான் எங்களுக்குப் PUNISHMENT .

கதவுகள் திறந்தே இருக்கும். அறையினுள்

இருந்த இருபது பேரில் அன்று நாங்கள்

இருவர் மட்டும் கதவுக்கு வெளியே,

ஹாயாகக் காற்றோட்டமாக.....

குறட்டைச் சத்தம் இல்லாமல்.....

நல்ல பனிஷ்மென்ட் தான் அல்லவா?! !
:thumb:
 
# 96. Chemistry experiment.

இரண்டாவது ஆண்டு கல்லூரிப் படிப்பு!

எனக்கு அம்மை போட்டுவிட்டது.

உடனே அப்பா அம்மாவை வரச்சொல்லி

வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

இரண்டு வாரம் enforced vacation!

Chemistry யில் இரண்டு titration மிஸ் ஆனது !

தினம் தினம் சென்று அதைச் செய்ய அனுமதி

கேட்டுக் கேட்டுக் என் கால் தான் தேய்ந்தது!

கடைசி வரையில் என்னை அதைச் செய்ய

அனுமதிக்கவே இல்லை அவர்கள்!

தினமும் ஒரு கதை! ஒரு புதுக் காரணம்!

தட்டிக் கழிப்பது தெரிந்ததும் நான்

அதன் end points நன்றாகத்

தெரிந்து வைத்துக் கொண்டேன் !

அதுவே எனக்கு public examil

வரவேண்டும் என்ற வாழ்த்தினார்கள்!

அதுவே எனக்கு வந்தது! நான் தயார்!!!

அவர்களால் என் மார்க்குகளைக்

குறைக்கவோ தடுக்கவோ முடியவில்லை.

இன்று வரை காரணம் தெரிய வில்லை! ஒரு குரு

ஒரு மாணவியை இப்படி சோதிக்கலாகுமா?
 
Little drops make the mighty ocean. How very true!

We were given the option of "liking" the posts on

10-2-2011.

Little drops (likes from friends of the past / present

and future) had trickled in and today I was surprised

to find that it had slowly reached a four digit

number!

Thank you friends for your selective liking of the real

good ones.

He who promises everything promises nothing.

In the same way

He who likes every thing likes nothing .

Only your discretion adds value to your opinion.

Thank you all from Rajuvish (the first one to like one

of my posts) to the latest addition (natpushpa)

through all the other honorable members!
:pray2:
 
Quotes by Benjamin Jonson.

I have met with women whom I really think would like to be married to a poem,
and given away by a novel. :rolleyes:

So I do believe ....that works of a genius are the first things in the world. :thumb:

The excellence of every art is its intensity,
capable of making all disagreeables evaporate, from their being in close relationship with beauty and truth.
:first:
 
# 97. யானை மேலே சவாரி.

எங்கள் ஊரில் அடிக்கடி

யானையைப் பார்க்கலாம்.

மரங்களை நகர்த்துவதற்கும்

loading & unloading செய்யவும்

சொந்த யானைகளை சில புள்ளிகள்

வைத்துக்கொண்டு இருப்பார்கள்.

மனிதனின் கூலியை மிச்சம் செய்யலாம்.

யானை கொடிபிடித்து strike செய்யாதே!

பெரிய குழியை வெட்டி ஒரு காட்டு

யானையைப் பிடிப்பதையும் கூடக்

காட்டிக் கொடுத்துள்ளார் என் தந்தை.

யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து

ஆடி ஆடி கம்பீரமாகச் செல்பவர்களைப்

பார்க்க
ப் பார்க்க ஆசையாக இருக்கும்!

ஒரே ஒரு தடவையாவது ஆனை சவாரி

வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று.

ஒரு முறை வீட்டுக்கே வந்தது யானை.

மட்டைக் தேங்காயை காலால் தேய்த்து

உரித்து, உடைத்து, பருப்பை எடுத்து

உண்ணும் விந்தையைக் கண்டேன்!

வாழைப் பழங்கள் ஒரு குலை மாயமானது!

கடைசியில் யானைக்காரன் "யாருக்காவது

யானை சவாரி செய்ய வேண்டுமா?" என்றான்!

பல நாள் கனவு பலிக்கப் போகின்றது!

"எனக்கு! எனக்கு!" என்று முன்னால் ஓடினேன்!

அப்போது நான் குழந்தையும் அல்ல,

பெரியவளும் அல்ல,

இரண்டும் கெட்டான் வயது.

கீழே இருந்து ஒருவன் என்னைத் தூக்கிக் கொடுக்க

யானை மேல் இருந்தவன் வாங்கிக்கொண்டான்.

பார்த்தால் தெரிவதில்லை நமக்கு.

யானையின் மேல் ஊசி போன்ற ரோமங்கள்!

கிராமபோன் ஊசிகளைப் பொருத்திய ஒரு

சீப்பினால் உடலை வாரி விட்டது போல வலி!

துடித்துப் போய்விட்டேன் எதிர்பாராத வலியால்.

கீழே இறங்கினால் போதும் என்று ஆகி விட்டது.

அப்போது புரிந்தது ஏன் அம்பாரி தேவை என்று!

அவர்கள் யானையைப் படுக்கச் சொல்லி விட்டு

அதன் கழுத்தின் மேல் ஏறும் மர்மமும் விளங்கியது!

ஆசைப் படுவதெல்லாம் கிடைப்பது கூட

சில சமயங்களில் வேதனை தான் அல்லவா?
 
Last edited:
# 98. ஆடி வெள்ளி.

பெரியவனின் convocation களை மிஸ் செய்தோம்.

சின்னவனின் convocation
களை மிஸ் செய்யவில்லை.

அதற்கும் பெரியவனே காரணம்.

அவன் வற்புறுத்தல் தான் காரணம்.

காலையிலே I.I.T சென்று மதியம் வரை

அமர்ந்து இருந்து, வெளியே வந்தோம்.

குடலே ஜீரணம் ஆகிக் கொண்டு இருந்தது.

அதை விட அவசரம் - a visit to the rest room!

எதோ ஒரு ஹோட்டலில் நுழைந்தோம்.

இவரை ஆர்டர் செய்யச் சொல்லி விட்டு

நான் என் வேலையை கவனிக்கச் சென்றேன்!

நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஒரு சங்கடம்.

bladder muscles tone குறைந்து விடுவதால்!

இவர் சாதத்தில் குழம்பை ஊற்றிக் கொண்டிருந்தார்.

வினோதமான மணம் அன்றைய சமையலில்!

இவ்வளவு பெரிய ப
ங்கிக் காய்த் துண்டா?

ஆந்த்ராவின் த்ரீ-இன்-ஒன் போல இங்கேயுமா?

குழம்பை saucer இலிருந்து ஊற்றினேன்.

ஜலதரங்கம் போல ஒரு சப்தம் கேட்டது.

தட்டில் கையை வைத்தால் விரல் நீள

எலும்புத் துண்டு அந்தக் குழம்பில்!

எனக்கு அன்று ஆவேசமே வந்து விட்டது!

ஆடி வெள்ளிக்கிழமையன்று இப்படியா?

என்ன பேசினேன் என்று நினைவில்லை.

ஆனால் ஹோட்டல் இன் சார்ஜ் ஓடி வந்துவிட்டார்.

"இவர் தான் ஆர்டர் செய்தார்" என்றான் சர்வர்.

இவர், "நான் ஆர்டர் செ
ய்யவில்லை!" என்றார்.

இவர் என்ன சொன்னாரோ தெரியாது!

அவன் என்ன கேட்டானோ தெரியாது!

"எங்களப் பார்த்தால் ஆடி வெள்ளியன்று

ட்டுக்கறிக் குழம்பு சாப்பிடுபவர்கள்

போல இருக்கிறதா?" என்று ரகளை செய்தேன்.

" அம்மா! நீங்க ஒண்ணும் தரவேண்டாம்!

வேறு vegetarian ஹோட்டலுக்குப்போங்கள்!"

என்று சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

வெளியே வரும் போது சிலர் சாப்பிடும்

வஸ்துக்கள் என் வயிற்றைப் புரட்டின.

உள்ளே நுழையும் போது அவைகள்

ஏன் எங்கள் கண்களில் படவில்லை?

SELECTIVE HEARING போல இங்கும்

SELECTIVE SEEING என்று ஒன்று உண்டா?

ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும்

தவறாமல் என் நினைவுக்கு வந்து

என்னைத் தொந்தரவு செய்யும் இது!

நல்ல வேளை எலும்பைப் போட்டிருந்தான்...

இல்லாவிட்டால்...நினைக்கவே பயமாக இருந்தது/
 
# 99. க்ருஷ்டையா.

மூன்றாவது servant quarters இல்

குடிபுகுந்தது அவன் குடும்பம்.

எங்களுக்கு வேலை செய்ததும்

இவனது மனைவி மனோரமாவே!

ஒரு மகன், ஒரு மகள் அவ்வளவே!

நல்ல வருமானம் கிடைத்தும் அது

அப்படியே wine ஷாப்புக்குப்

போய்விடுவதனால் அந்த வறுமை.

பகலெல்லாம் நன்றாக இருப்பான்.

இரவில் ஆளே மாறிவிடுவான்!

"மஹா பாரதமுலோ க்ருஷ்ண பரமாத்மா

ஏமி செப்பாடு தெலுசா?" என்ற தொடங்கி

மனோரமாவை சப்பாத்தி மாவு பிசைவான்.

குழந்தைகள் பயந்து வீறிட்டு அலறும்.

அவர்கள் முதுகிலும் நாலு சாத்துவான்.

அப்போது நாம் என்ன சொன்னாலும்

அவன் காதில் விழாது என்பதால்;

அடுத்த நாள்அறிவுரை சொன்னால்

குனிந்த தலை நிமிராமல் கேட்பான்.

"இனிக் குடிக்க மாட்டேன்!" என்று சத்தியம்

தன் தலை மேல் அடித்துச் செய்வான்.

"குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு!"

இங்கு அவன் பேச்சு மாலை வரை தான்!

இரவு மீண்டும் அதே கூத்து! அதே ரகளை!

அவள் அத்தனை பொறுமைசாலியாக

அவனுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்தாள்?

தாலி தந்த அந்த மெல்லிய வேலிக்காகவா?

தகப்பன் என்ற ஒருவன் தேவை என்றா?

அவனால் கால் காசு பிரயோஜனம் இல்லை!

பூவுக்கும் பொட்டுக்கும் அவள் தந்த மதிப்பா?

இதுதான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் வாழ்க்கையா?
 
100. கன்னையா.

காய்கறி வியாபாரம் செய்து வாழ்பவன்;

கணக்கில் புலி
கள் தான் அவனும் மனைவியும்!

சந்தையில் அத்தனை விதமான காய்கறிகள்

அத்தனை மாறுபட்ட விலைகளில் வந்து குவியும்.

யார் யார் எத்தனை எடையில் எதனை

வாங்கினார்கள் என்று நினைவு வைத்து

மனக் கணக்கிலேயே செய்துவிடுவான்.

ஒரே சமயத்தில் பல customer களை

கவனிப்பார்கள் அவனும் மனைவியும்.

சுருள் தலை முடியும், நல்ல மரியாதையும்

கொண்ட அவன் கடையில் குவியும் கூட்டம்.

அவனுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.

மகன், மகள், மகன் என்ற வரிசையில்.

பெரிய இடத்துப் பிள்ளைகள் போல

தோரணை, தோற்றம், பழக்கம் எல்லாம்!

பெரியன் பத்தாவது படித்து முடித்தான்.

பாலிடெக்னிக் சேர்ந்து படிக்க விரும்பினான்.

செலவை எண்ணி அஞ்சினார்கள் பெற்றோர்கள்.

அவன் எதையும் கேட்கத் தயாராக இல்லை.

அவர்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளவும் இல்லை.

எதையோ கரைத்துக் குடித்து உயிரை விட்டான்.

வளர்ந்த மகன் கை கொடுப்பான் என்ற கனவு

இலவு காத்த கிளியானது! உடைந்து போனார்கள்!

ஒரே வாரத்தில் தலை முடி நரைத்த விந்தை கண்டேன்!

நடைப் பிணமாக அவர்களை ஆக்கி விட்டு

அவன் ஹாயாகப் போய்ச் சேர்ந்துவிட்டான்.

ராமனைப் பிரிந்த தசரதன் நினைவுக்கு வந்தார்.

குழந்தைகள் என்றைக்கு பெற்றோர் என்பவர்

பணம் காய்க்கும் மரம் அல்ல என்ற உணருவார்?

வைத்துக் கொண்டே தன் குழந்தைகளுக்குத்

தர மறுக்கும் பெற்றோர்களும் உலகில் உண்டோ???
 
Be good, sweet maid, and let who will be clever;
Do noble things, not just dream them, all day long.:sleep:

When all the world is young, lad,
And all the trees are green; :love:
And every goose a swan, lad
And every lass a queen. :music:

For men must work , and women must weep,
And there's little to earn and many to keep. :sad:

Charles Kingsley.
 
# 101. Alphabets ashok.

மனோரமா கிருஷ்டையாவின் மகனுக்கு

alphabets அசோக் என்று பெயரிட்டேன்!

காரணம்......?

A to z அவன் அழகாக எழுதுவான்! :thumb:

இதில் என்ன அதிசயம் என்கின்றீர்களா?

அந்த எழுக்களில் ஓசையை அறியாமல்,

அந்த வரிசையை மனனம் செய்யாமல்,

அவன் எழுதுவதே அந்த விந்தை.

ஹீரோக்பிக்ஸ் போல அவற்றையே

அப்படியே வரிசையாகக் கற்று இருந்தான்.

அவன் ஆர்வத்தைப் பார்த்த நான்

அவனுக்கு அவற்றை நன்கு கற்றுத் தந்தேன்.

இன்றைக்கும் என்னால் ஓசையை நினைக்காமல்

a to z எழுத முடியும் என்று தோன்றவில்லை!

அவன் எப்படித்தான் எழுதினானோ!!! :clap2:
 
# 102. நாவல்கள் எழுதிய நாயகி.

அவர் ஒரு ஆசிரியரின் மனைவி

என்று அறிந்து இருந்தேன் நான்!

அவர் ஒரு புகழ் பெற்ற நாவல்

ஆசிரியர் என்று பின்னர் தெரிந்தது. :typing:

எத்தனை அடக்கம், எளிமை, நளினம்!

Personification of simplicity

and modest to the core!

பின்னால் அவரிடம் சிலாகித்தபோது,

"இது என்ன பெரிய விஷயம்?" என்பது போல் :nono:

அதை build up/ blow up செய்யவில்லை. :hand:

நிறை குடம் தளும்பாது உண்மைதான்!

நிறைந்த கனிகளின் கிளை தாழ்ந்து

நிற்பதும் உண்மை தான் உணர்ந்தேன். :hail:
 
Four things greater than all things are -
Women and Horses and power and War. :moony:

And a woman is only a woman, :music:
but a good cigar is smoke. :smokin:

And what should they know of England
Who only England know? :rolleyes:

Rudyard Kipling.
 
# 103. கூட்டணி.

என்னை எதிர்ப்பவர்கள் எப்போதும்

கூட்டு முயற்சியாகவே செய்வார்கள்.

நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பலம்

அவற்றின் எண்ணிக்கையிலேயே! :flock:

ஈயக் குண்டு எறியும் ஒரு போட்டி!

அதை நடத்துபவரின் பெயரும் அதுவே!

எல்லோர் பெயர்களை எழுதிக் கொண்டு,

அவர்களுக்கு நம்பர்கள் அல்லாட் செய்துவிட்டு,

ஒவ்வொருவராக குண்டு எறிய வைத்து,

அங்கே அவர்களின் நம்பரை வைத்தார்கள்.

கடைசிப் பெண் எறிந்த உடனேயே

பரிசு யாருக்கு என்ற ரிசல்ட் அறிவிப்பு! :director:

வீசிய நீளங்களை அளக்கவும் இல்லை!

எந்த நம்பர் முதலிடம் என்று அளந்து பார்த்து,

லிஸ்டில்
வர் யார் என்று பார்த்துச்

சொல்லவேண்டும் 'யார் வென்றவர்'

என்று அல்லவா?

கண்டக்டர் விடவில்லை! நானும் தான்!

"பார்த்தாலே தெரிகின்றதே!" என்றார்.

"பார்த்தல் நம்பர் தெரியும்! பெயர் கூடவா?"

வேறு வழி இல்லாமல் அளந்து பார்த்தால்

என் நம்பர் அந்த இடத்தில் உள்ளது! :first:

காற்றுப் போன பலூன் ஆகிவிட்டது

கண்டக்டர் * * * * * * * முகம்!

நான் போராடுவேன் என்று அவர்

சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"உங்களுக்குப் அவரைப் பிடித்திருந்தால்

பரிசை ஃப்ரீயாகக் நீங்கள் கொடுங்கள்!

போட்டி என்று வைத்தால் அதைப்

பொறுப்பாகச் செய்யுங்கள்" என்றேன்!

Projectile படித்துவிட்டு வீசிய என்னை :brick:

Just like that ஓரம் கட்ட விடுவேனா?
 
# 104. My Hindi teacher.

நான் பள்ளியில் படிக்கும்போது

ஹிந்தி ஒழிப்புப் போராட்டம்!

ஹிந்தி வகுப்புகளிலும் கல் விழும்.

ஹிந்தி ஆசிரியர் மீதும் கூட.

ஹிந்தி டீச்சர் ஒரு திருமணம் ஆகாத மிஸ்.

விதவைத் தாயார் அவருக்குத் துணை.

பெட்டிக் கடை போன்ற சிறிய வீட்டில்

மனநிறைவோடு வாழ்ந்து இருந்தனர்.

சொற்பச் சம்பளம் கிடைக்கும்
அந்த வேலையும் போனால்....?:peep:

நல்லவேளை அவருக்கு ஆபீஸ்

கிளெர்க் உத்தியோகம் கிடைத்தது!

மண்டையை உடைத்துக் கொண்டு

ஹிந்தி படித்தாலும், அவர்கள்

மண்டை மீண்டும் உடையலாம்! :brick:

யானை தான் தலையிலேயே

மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும்.

தமிழனும் அதையே செய்கின்றான். :crazy:

உலகின் எந்த மூலைக்குச்சென்றாலும்

பிழைக்கும் தகுதியைப் பெறவேண்டாமா??

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்
கொண்டு இருந்தால் போதுமா???
:horn:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top