• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Quotes by Samuel Johnson.

A Scotchman must be a very sturdy moralist :angel:
who does not love Scotland better than truth.

A man, Sir, should keep his friendship
in constant repair. :hug:

Sir, a woman's preaching is like a
dog's walking on its hinder legs.
It is not done well; but you are
surprised to find it done at all. :rolleyes:
 
75. Harmonium vs E. Sruthi box .

டவுனில் ஓர் டான்ஸ் competition.

Make up உடன் சென்றதால் எங்களுக்கு

பாயிண்ட் டு பாயிண்ட் லிப்ட் கிடைத்தது.

திரும்பி வரும்போது சிட்டி பஸ் தான்.

கூட்டத்தில் ஒரு 'தொங்கும்' பயணம்.

பாதி மேக்கப்புடன் மாணவ மணிகள்.

கையில் பெரிய பைகளுடன் பெற்றோர்கள்.

என் ஹார்மோனியம் ஒரு பெரிய சாக்கில்!

மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றேன் நான்,

ஒரு கையால் கம்பியைப் பற்றி balance ! :tsk:

இன்னொரு கையில் ஹார்மோனியச் சாக்கை

உச்சிக் குடுமி போல பிடித்துக் கொண்டு!

மிருதங்கம் மாஸ்டர் கையில் அவர் கருவி,

வீணை மாஸ்டர் மறந்தாரோ, துறந்தாரோ,

எனக்கு உதவ முன்வரவில்லை அன்றைக்கு. :whoo:

அன்று முடிவு எடுத்து அடுத்த வாய்ப்பிலேயே

வாங்கினது ஒரு compact Electronic Sruthi Box!

அதற்குப் பிறகு ஒரு compact Electronic தம்புரா.

ஆனால் இப்போது நான் program தருவதில்லை.:nono:

எதோ பழமொழி ஞாபகம் வருகின்றதா?

நாயையும்.. கல்லையும் பற்றி??? :rolleyes:

 
# 76. நீலம்மா.

என் மகன்களின் ஸ்கூல் ஆயா நீலம்மா.
நீலக் கலர் புடவை தான் தினமும்;

வழிய வழிய எண்ணை வைத்து வாரி,
காதருகில் பெரிய கொண்டை ஒன்று.

மடிசார் போல வலப் பக்கம் புடவை.
பெரிய குரலும், உருவமும் கொண்டவள்.

நகை எல்லோரும் போட்டுக் கொள்ளுவோம்.
அவள்'நட்'டுப் போட்டுக் கொண்டு இருப்பாள்.

காது விளிம்பு முழுவதும் வரிசையாக,
மேலும் மூக்கின் இருபுறங்களிலும்!

நடுவில் மட்டும் மாட்டின் வளையம் .

'சூர்ப்பனகை ட்ரீட்மென்ட்' செய்தால் தங்கம்
எத்தனை கிலோ தேறுமோ தெரியாது!

தசரா காலத்தில் அவள் மிகவும் பிஸி.
காலனியில் உள்ள 3000 + வீடுகளுக்கும் விசிட்.

அதிகம் இல்லை இரண்டு ரூபாய் தரவேண்டும்.
இரட்டை இலை போல விரல்களை அமைத்து,

அதைக் கத்தரி போல அசைத்துக் கொண்டே,
நமக்கு ஆரத்தி போலத் தொடர்ந்து எடுப்பாள்.

Background மியூசிக் "அம்மா ரெண்டு ரூபாய்!" :sing:
ஆரத்தியும், பாட்டும் இனாம் தரும் வரை தொடரும்.

தான் மீதும் தன் வேலை மீதும் அவளுக்கு
அளவுகடந்த அபிமானமும் பெருமையும் உண்டு!

அவள் அடிக்கடி கூறுவது இதுவே!

"டீச்சர் பணி எவரேனும் சேய கலரு!
நா பணி வாரு சேய கலரா?? :rant:

("யார் வேண்டுமானாலும் டீச்சர் வேலை செய்யமுடியும்.
என் வேலையை அவர்களால் செய்ய முடியுமா?")

நல்ல கேள்வி தான்!:thumb:

இதுவரை யாரும் அவள் விடும்
சவாலை ஏற்றதாகத் தெரியவில்லை!:scared:
 
தேஜஸ் = கூர்மை, தீச்சுடர், வெப்பம், ஒளி, பிரகாசம், காந்தி, ஜோதி, வலிமை, சாமர்த்தியம், தைரியம், ஆன்ம பலம், மஹிமை, சாரம், சத்து, சக்தி, நெருப்பு, வேகம், புதிய வெண்ணை, தங்கம்.
 
# 77. தேஜஸ். (1)

அவனுக்கு இதைவிடவும் பொருத்தமான பெயர்

இருக்கவே முடியாது என்று எனக்குத் தோன்றும்.

பிறந்த அன்றே அழகாகக் கட்டை விரலைக் கொண்டு

வாயில் வைத்துக் கொண்டு எல்லோரையும் அசத்தினான்.

நம் கைவிரல்களை சரியாகப் பிடிப்பான்.

நம் கண்களுக்குள் உற்றுப் பார்ப்பான்.

பலவருடங்கள் சந்தனம் இட்டுக் கொண்டால்

ஓரு நிற மாற்றம் நெற்றியில் தெரியும் அல்லவா?

கட்டை விரலால் சந்தனம் தீற்றியது போல

நெற்றியின் நடுவில் ஒரு அடையாளம்!

நேரில் பார்க்கும் போதும் தெரியும்,

போட்டோக்களிலும் தெளிவாகத் தெரியும். :photo:

முதலில் பேசிய வார்த்தை "அமிர்தா!"

எட்டு மாதக் குழந்தையாகக் காலையில்

கண் விழித்தவுடன் சொன்ன வார்த்தை!

பிறகு அதுவே தினசரி ஜபம் ஆயிற்று. :happy:

சங்கீதத்தில் கோபுச்சயதி என்று ஒன்றுண்டு.

நதியின் பிரவாகத்துக்கு எதிர்மறை ஆனது.

பெரிதாகத் தொடங்கிப் பின் படிப்படியாகச்

சுருங்கியபடியே சிறிதாகும் அழகான யதி.

"அமிர்தா" அது போன்றே மாற்றம் அடைந்தது.

"அமிர்தா...அமிதா... மிதா... தா..." என்று!

இதை இரண்டு ஸ்தாயியில் மாற்றி மாற்றிச் :sing:

சொல்லும் போது அது காதில் அமிர்தமே!
:ear:
 
# 78. தேஜஸ். (2)

படுத்துக் கொள்ளும் நாட்களில்

அவன் கவிழத் தொடங்கினான் .

நீந்த வேண்டிய நாட்களில் அவன்

தவழத் தொடங்கினான்.

நிற்பதற்கு மிகவும் பிடிக்கும்.

மரம் ஏறுவது போல ஏறுவான் நம்

மடியிலிருந்து தோள்வரையிலும்!

கைக்கு எட்டாததைக் கால் விரல்கள் பற்றும்.

அவ்வளவு perfect grip பார்த்ததில்லை!

நடக்கத் தொடங்கும் முன்பே ஓடினான்

கூடைப் பந்து வீரன் போல எப்போதும்

boy on the move holding a ball.

குளிக்கும் போது கூடைப் பந்து ஆடுகின்றான்.

'நெட்'டையும் 'பாலை'யும் பார்த்து அசந்தேன்.

அவன் அம்மா அவனுடைய பொருட்கள்

அத்தனையும் அள்ளிக்கொண்டு வந்து இருந்தாள்,

அவன் பேபி- ரூம் அறையைத் தவிர .

நிறைய நிறையப் படித்தான் தினமும்!

காலண்டரில் நம்பர்களைக் காட்டினான்.

கலர்களைக் சரியாகக் காட்டினான்.

One டு twenty தானே சொன்னான்.

A to zee with objects சொன்னான்.

அம்மாவும் அவனும் மாறி மாறி

rhymes டூயட் பாடினார்கள்.

இரண்டு முறை ஒரு பொருளைத் தொட்டால்

அம்மா அதன் பெயரைச் சொல்ல வேண்டும்.

நிறையப் புது வார்த்தைகள் கற்றுக் கொண்டான்.
 
Quotes by Samuel Johnson.

Much may be made of a Scotsman,
if he be caught young.:llama:


He was dull in a new way,
and that made many people
think him great.:couch2:


No man but a blockhead :playball:
ever wrote, except for money.


(Does this include all of us
who DO NOT write for money?)
:noidea:
 
I was just watching the recorded version of Miss Universe 2011 and am I impressed with Miss Angola(the winner) and Miss Philippines(4th runner up) answers to the Questions asked.

Miss Philippines:

Q:Would you change your religious beliefs to marry the person you love? Why and why not?

Miss Philippines: If I had to change my religious beliefs, I will not marry the person that I love because the first person that I love is God, who created me. And I have my faith, my principles, and this is what makes me who I am. And if that person loves me, he should love my God too.



Miss Angola:

Q: If you could change one of your physical characteristics, which one would it be and why?

Miss Angola: Thank God I’m very well satisfied with the way that God created me and I wouldn’t change a thing. I consider myself a woman endowed with inner beauty, I have my principles, I have acquired many wonderful principles from my family and I plan to follow these through the rest of my life and now I want to give all of you a piece of advice: Respect one another.



Both these girls were so open about their believe in God and that just added to their beauty.
 
Where it concerns himself
Who's angry at a slander makes it true. :mmph:

True happiness
Consists not in the multitude of friends,
But in the worth and choice. :hug:


Drink to me only with thine eyes,

And I will pledge with mine; :amen:

Or leave a kiss but in the cup,
:spit:

And I will not look for wine.

Benjamin Jonson.
 
# 79. தேஜஸ். (3)

மின்னல் பரமேஸ்வரன் என்று ஒருவர்.

போலீஸ் சர்க்கிளில் மிகவும் பிரசித்தம்.

அவர் மின்னல் வேகம் உடையவராம்.

இவனும் மின்னல் தேஜஸ் ஆனான்.

ஒரு பக்கெட்டைக் கவிழ்த்துப் போட்டு

அதைத் தள்ளிக் கொண்டு வீடு முழுவதும்

புல்டோசர் போல அதை ஓட்டினான். :roll:

chair மேல் குஷன் இருந்தால் பிடிக்காது.

எல்லாவற்றையும் கீழே தள்ளுவான். பிறகு

அவற்றின் மேல் 'தத்துக்கா புத்துக்கா' நடை!

பேபி ஷூவைக் கொண்டு தந்தால், போட்டுவிட்டு

உடனடியாக அவனுடன் வெளியே போகவேண்டும்.

இல்லாவிட்டால் படிப் படியாக

அவன் அழுகை தீவிரம் அடையும்.

முதலில் பாகவதர் போல் "ஆ......!"

அடுத்தது சிரித்துக்கொண்டே அழும்

சிவாஜி கணேசன் போல,"ஆ! அஹ், அஹ், அஹ்"

அதற்கும் நாம் மசியாவிட்டால் பிறகு "ம்......!"

உதடுகள் பிரியாமல் அழுவான். அடுத்தது

"ம்!....ம்!.....ம்! .....ம்!" என்று

full throttle and acceleration! :Cry:

மொட்டை மாடி மிகவும் பிடித்தது அவனுக்கு.

நாற்பது அடி உயரத்தில் இருந்து நல்ல வியூ!

சில வீடுகளுக்குள் நுழைய மறுத்தான்! :nono:

சில வீடுகளில் இருந்து வர மறுத்தான்! :nono:

sensitive to the home atmosphere???

பிடித்த வீடுகளில் Donald Duck போல

பின்னால் பார்த்துக் கொண்டு வேகமாக

முன்னால் ஓடி முட்டிக் கொண்டான்.
 
#80. தேஜஸ்.(4).

வரும்போது ஃப்ளு குழந்தையின்

அடுத்த அடுத்த சீட்கள் இவர்களுக்கு.

ஃப்ளு பிடித்துக் கொண்டுவிட்டது பாவம்! :sick:

Time zone difference (-) 11 - 30 மணிகள்.

வந்து ஒரு வாரம் வரையில் இவன்

'அவன் time zone' இல் இருந்தான்;

இரவு ஒரு மணிக்கு எழுந்து கொண்டான்.

breakfast சாப்பிட்டான், விளையாடினான்;

குளித்து விட்டு டின்னர் சாப்பிட்டுவிட்டு

மதியம் ஒரு மணிக்கு மீண்டும் உறங்கினான். :sleep:

பாவம் என் மகனும், மருமகளும் தான்!

அவனுடனும் விழித்துக் கொண்டு இருந்தார்கள்.

எங்களுடனும் விழித்துக் கொண்டுஇருந்தார்கள்.

அல்லது இருக்க கடின முயற்சி செய்தனர்.

"கச்சேரி முடியும் போது சுருதி சேர்ந்தது போல"

ஊருக்குத் திரும்புவதற்கு முதல் நாள் தான்
நம் டைம் zone க்கு வந்தார்கள் எல்லோரும். :clock:

அங்கே போன பிறகு "Repeat performance?"
:noidea:
 
குறிலும், நெடிலும்!

பாம்பு என்று எழுதச் சொன்னால்
பம்பு என்ற எழுதினான் ஒருவன்!

காரணம் கேட்ட போது சொன்னான்,

"கால் இல்லையே பாம்புக்கு! அதனால்
கால் கொடுக்கவில்லை நானும்" என்று!

குறிலை நெடிலாகவும், நெடிலைக்
குறிலாகவும் மாற்றிப் படியுங்கள்!

பொழுது போகாதவர்களுக்கும் கூட
பொழுது போதாமல் ஆகிவிடும்!
 
Quotes by Sir Alan Patrick Herbert.


An act of God was defined as something which
no reasonable man could have expected. :shocked:


The Englishman never enjoys himself except for a noble purpose. :smokin:


People must not do things for fun.:happy:

We are not here for fun
There is no reference to fun
in any act of Parliament.
:nono:
 
# 81. தேஜஸ்.(5)

ஒரு பிரபல ஹிந்திப் படப் பாடலில்

"ந ந ந, ந ந ந, ந ந ந" என்று வரும்.

தேஜசும் அதுபோலத் தான்!

"ந, ந, ந" என்
று தலையை வேகமாகப்

பக்க வாட்டில் அசைத்து எதிர்ப்பான்!

பிடிக்காவிட்டால் அவனைத் தொட முடியாது.

பிடிக்காத ஆடையைப் போட்டுவிட முடியாது.

பிடிக்காத உணவைத் தர முடியாது.

பிடிக்காதது எதையும் செய்ய முடியாது.

"கழுவும் மீனில் நழுவும் மீன்" என்பார்கள்!

எத்தனை விதங்கள்
ண்டோ அவன்

அத்தனையிலும் தப்பிவிடுவான்.

இடுக்கு வழியாகச் சென்று விடுவான்.

கால்களுக்கு இடைவழியாகச் செல்வான்.

பிடித்துத் தூக்கினால் இரண்டு கை
ளையும்

"Hands up!" செய்து நழுவிவிடுவான்.

ஒல்லி உடம்பு...உயரம் சற்று அதிகம்!

பிடித்த உணவும் சேமியா, நூடுல்ஸ், பாஸ்தா!

முனிவர் போலப் பாலும், பழமும் முதல் சாய்ஸ்!

Organic vegan ஆனதால் சாய் பால் தான்!

வாழைப் பழம் என்றால் உயிர்! அதை

ஓடி ஓடி வந்து கடித்து விட்டுப் போவான்.

அம்மாவின் தோளையும் கடிக்கப் பிடிக்கும்.

ஸிம்பா போல மேலே பாய்ந்து தள்ளி விடுவான்.

நான்கு முனைகள் கொண்ட என் தடியை எடுத்து

சிலம்பு சுழற்றிய போது அசந்து விட்டோம்.

இன்னமும் எனக்கு சந்தேகம் உண்டு!

அவன் அதைச் சுழற்றினானா அல்லது

அது அவனை இழுத்துச் சுழற்றியதா?

பாயை விரித்துச் சுருட்டி ஒரு விளையாட்டு!

குங்குமச் சிமிழின் மூடி ஒரு பம்பரம் ஆயிற்று.:tinfoil3:

Skype இல் அக்காவைப் பார்த்துவிட்டு

"பாப்பு பாப்பு" என்றான். அவள், "தேஜஸ்!" :baby:

எல்லாக் கடவுள்களின் பெயரும் தெரியும்.

தவறாகச் சொன்னால் தலை அசைத்து "ந ந ந ந!" :nono:

"ராமா" என்றால் "ஸீதா" என்பான்! "தாத்தா!" "பாட்டி!"

I pad operation எல்லாம் அத்துப்படி. I Pad பற்றிய

ஒரு conference சுக்குச் சென்ற தம்பி சொன்னான்,

"இவனையும் ஒரு delegate ஆக்கி இருக்கலாம்!

பேசத் தெரியாவிட்டாலும் demonstrate செய்வானே!"
:thumb:
 
# 82. தேஜஸ். (6).

அய்யாவுக்கு எப்போதும் டிப் டாப்பாக

ஃ புல் பான்ட்,
புல்ஷர்ட்!

'இன்' பண்ண வேண்டும்.

குளிக்க வைக்க ஆடையைக் கழற்றினால்
அழுது, கத்தி ஊரைக் கூட்டுவான்! :bathbaby:

குளித்தபிறகு ஆயில் மசாஜ், body மசாஜ்

சமர்த்தாகச் செய்து கொள்ளுவான். :baby:

Eye lashes அவ்வளவு நீளம்.

"Butterfly flutter by" என்று பாடத் தோன்றும்.

நெற்றியில் சந்தனத் தழும்பு உள்ளதே!

இப்போது நெற்றியைத் தொட விடமாட்டான் .

மறந்து விடாமல் இருக்க தினமும்

கொஞ்சம் முட்டுக் குத்தித் தவழ்ந்தான்.

மணலில் விளையாடப் பிடிக்குமாம்.

இங்கே மணல் இல்லை! மிஸ் செய்தான்!.

எதிர் வீட்டுத் தாத்தாவை எழுப்பிவிட்டு

அவர் ஊஞ்சல் சேரில் ஓய்யாரமாக ஆடினான்.

மாரீ பிஸ்கட் inaugurate செய்தான். :hungry:

எல்லோர் தோளிலும் சவாரி செய்தான் .

என்னிடம் தூக்கச் சொல்லவில்லை .

அவனுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது

அவனையும் போட்டுக்கொண்டு நானும் விழுவேன் என்று!

சின்ன மர ஸ்டூலின் கால்களுக்கு இடையே

புகுந்து பல சர்க்கஸ் வித்தைகள் செய்தான்.

விளக்கை போட்டுப் போட்டு அணைப்பது

மிகவும் பிடித்த விளையாட்டு! கே. பாலசந்தர்?
:noidea:
 
Quotes by Benjamin Johnson.

So they be ill men, :evil:
If they speak worse, 'twere better; for of such
To be dispraised, is the most perfect praise.

If he were to be made honest by an act of parliament,:angel:
I should not alter in my faith of him.:nono:

Alas!all the castles I have, are built with air,
Thou know'st.
:pout:
 
# 83. T.J .Specials. (7)

அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்...

"சா பா மூ! நோ மே ஸீ!!!"

நிச்சயமாக எதோ பொருள் இருக்கின்றது.

அதோ டோனில் அதே டியுனில் சொல்வதால்.

அது என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை!

அவன் அம்மாவையும், அப்பாவையும்

ஒரு விரலை பிடித்துக் கொண்டு

தன்னுடன் இழுத்துச் செல்வான்.

மற்றவர்களை "வ்வா! வ்வா!" என்று.

வீணை மிகவும் பிடித்துவிட்டது.

தந்திகளைப் பற்றி இழுப்பான்.

லூசாக இருந்ததால் பரவாயில்லை.

இல்லாவிட்டால் விரல் வலிக்கும்.

Action songs நன்றாகச் செய்வான்.

இம்மியும் மாறாமல் ஒவ்வொரு முறையும்!

இவனுக்குப் பிடித்தவைகள்..லைட், நிலா, ஃபேன்.

அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளான்.

சீதா ராமர் கல்யாண உற்சவத்தை

கண் கொட்டாமல் பார்த்து ரசித்தான்.

கை
த் தடியைச் சிலம்பு சுற்றி அவனைக்

கண் கொட்டாமல் ரசிக்க வைத்தான்.

Seedless மாதுளை முத்துக்களை

மிகவும் ரசித்து, ருசித்துப் புசித்தான்!

எட்டு ஊருக்குச் சத்தம் போடும் மிக்ஸியை

வந்து வந்து தவறாமல் வேடிக்கை பார்த்தான்.:happy:

நினைத்தபோதெல்லாம் கூவும் சேவலின்

குரலைக் கேட்டு நடுநடுங்கினான்! :fear:

மண்டு, குண்டு சேவல் நாள் முழுவதும்

மருட்டிக் கொண்டிருந்தது குழந்தையை.

நிறைய நிறையக் கற்றுக் கொண்டான்.

நிறைய நிறையக் கற்றுக் கொடுத்தான்.

அடுத்த சந்திப்புக்காக நாங்கள் மிகவும்

ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளோம்.

தேஜசின் தேஜஸ், ஓஜஸ், யசஸ் முதலியன

தினமும் வளர்ந்து பெருகவேண்டும்!:pray:

எல்லா நலன்களும், பெருமைகளும் பெற்று

அவன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும்!
:hail:

P. S.

TEJAS = T. J !
= Tom and Jerry!! My favorites!!!
 
# 84. Baby Swapna's birthday.

ஸ்வப்னா எங்கள் பக்கத்துவீட்டுக் குழந்தை.

அன்று அவள் முதலாம் ஆண்டு நிறைவு விழா!

"கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!

கொஞ்ச நேரத்தில் வருகின்றேன் என்றார்" அவள் அம்மா.

காலை எட்டு மணிக்கு விட்டுச் சென்றவர் மீண்டும்

மாலை ஐந்து மணிக்கு வந்ததார் குழந்தைக்காக!

அப்போதெல்லாம் இன்று போல LEAK PROOF NAPKIN

குழந்தைகளுக்கு அணிவிப்பது என்பது கிடையாது.

என் மகனுக்கு ஊட்டிய எளிய உணவையே

BIRTHDAY BABY ஸ்வப்னாவுக்கும் ஊட்டினேன்.

அவளையும் சுத்தம் செய்தேன்; தூங்க வைத்தேன்.:sleep:

அன்று மாலை கோலாகல பார்ட்டி நடந்தது. :party:

எனக்கு INVITATION இல்லை! எதிர்பார்க்கவுமில்லை.

"என் கடன் பணி செய்து கிடைப்பதுவே" என்னும்

மனப்பான்மை வளர இவை நிரம்பவும் உதவுமே!

தோட்டத்தில் பார்ட்டி! நன்கு பார்க்க முடிந்தது!

பட்டுச் சட்டையும், நகைகளும் பூட்டின பின்

அதே ஸ்வப்னாவா என்று அதிசயித்தேன். :baby:

எல்லோரும் தூக்கி கொஞ்சி விளையாடினார்கள்.

எல்லோரும் அன்று காலை எங்கே இரு
ந்தார்கள்???
:noidea:
 
dear friends,

I had given the time of telecast of Beverly Chihuahua as

1-30 P.M. It actually started at 2 P.M. and went on till 4

P.M. Hope you were able to watch it. I usually do not

watch T.V. and so got the matinée time mixed up!
Sorry if I had caused you any inconvenience!:pray2:
 
# 85. Terrace Classes.

பதினைந்து குழந்தைகள் ஆடுவதற்கு

எத்தனை இடம் வேண்டும் தெரியுமா?

என் வீட்டு ஹால் நிச்சயம் போதாது!

தினமும் கிளாஸ் இருந்ததால் சிறிய

வகுப்புகள் ஆக ஆக்கவும் முடியவில்லை!

பலன்... மொட்டை மாடியில் வகுப்பு!

எங்கு பார்த்தாலும் விழிக் கணைகள்

தொடங்கின முதல் சில நாட்களுக்கு!

பிறகு அவரவர் வேலையைப் பார்த்தனர்.

நமக்குத் தொல்லை இல்லாமல் ஆனது!

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்!

போயும் போயும் வகுப்பை யார் தினமும்

நேரத்தை வீணாக்கிப் பார்க்கப் போகின்றார்கள்?

என்று எண்ணிய என் எண்ணம் நிஜமானது!
:thumb:
 
# 86. Brick Race.

Ladies' Club போட்டிகளில் மிகப்

பிரபலமானது இந்தப் போட்டி.

தம்பதியினரின் திறமையைச்

சோதிக்கும் ஒரு விளையாட்டு.

(விபரீதக் கற்பனைகள் வேண்டாம்!

செங்கல் நிலத்தின் மேலே இருக்கும்! :brick:

எடுத்து வீச அனுமதி கிடையாது!) :nono:

கணவன் இரண்டு செங்கல்களை

மாற்றி மாற்றி தரையின் மீது

மனைவிக்காக வைத்துக் கொடுக்க,

அவள் அதன் மீது balance செய்தபடி

தரையை மிதிக்காமல் நடந்து வர வேண்டும்.

முதலில் முடிவுக் கோட்டை அடைபவர்

போட்டியில் வென்றவர் ஆவர்.

அங்கேயும் மூன்று ரகக் கணவர்கள்....!

மனைவி வெல்லவேண்டும் என்று

தள்ளித் தள்ளிக் கற்களை வைத்து,

அவளையும் கீழே தள்ளுபவர்.(1)

மனைவி விழக் கூடாது என்று

பக்கம் பக்கம் கற்களை வைத்து

வெல்லும் வாய்ப்பைப் பறிப்பவர்.(2)

சரியான தூரத்தில் வைத்து உதவுபவர்.(3)

என் கணவர் மூன்றாவது ரகம். :cool:

எனக்கும் balance நன்றாக நிற்கும்.

எங்களுக்கே முதல் பரிசு எப்போதும்!
:first:
 
Quoted by Benjamin Johnson.

But this is human life: the war, the deeds,
The disappointment, the anxiety,
Imagination's struggle far and neigh,
All human.:doh:

He never is crown'd :nono:
With immortality, who fears to follow
Where airy voices lead. :bowl:

The joys of all his life were said and sung. :sing:
 
[FONT=comic sans ms,sans-serif]Benjamin Jonson.

The fanatics have their dreams,wherewith they weave
A paradise for a sect;
[/FONT]
[FONT=comic sans ms,sans-serif]the savage too
From forth the loftiest fashion of his sleep
Guesses at Heaven.

Everyman whose soul is not a clod
Hath visions.

Ever let the fancy roam,
Pleasure is never at home.
[/FONT]
 
# 87. இவன் ராமனா? கண்ணனா?

பிறந்தது ரோஹிணி நக்ஷத்திரத்தில்!

பெயர் என் தந்தையுடையது "ராமன்".

இவன் ராமனா? கண்ணனா? தெரியாது! :noidea:

ஒரு முறை Mrs.C.M.D யுடன் trouble!

அவர் அஜந்தாக் கொண்டை போடுவார்.

அவர் உயரத்துக்கும், நிறத்துக்கும்,

அழகுக்கும், அது அழகு சேர்க்கும்.

நான் எப்போதும் முன்னால் அமர்வேன்.

அன்று அவருக்குப் பின்னால் என் chair.

ஏமாந்த ஒரு split -second இல் இவன்

அஜந்தாவைப் பறிக்க முயன்று தோற்றான்.

கோபமாகத் திரும்பியவர் இவனது

பொக்கை வாய்ச் சிரிப்பில் மயங்கி

மடியில் வைத்துக் கொஞ்சலானார்!

If you are a cute baby :baby:

(or a sweet/pretty lady) :music:

you can do anything and

get away with it! என்று

அன்று நிரூபணம் ஆயிற்று!
:thumb:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top