• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Truly said. :clap2:
My sister Raji Ram used to edit my Tamil poems.
My younger daughter in law crates my blogs and illustrates them. :love:
I can ONLY write. :typing:
I am yet to learn the other finesses of the trade!
:rolleyes:
 
William Shakespeare.

That is the way to kill a wife with kindness. :rolleyes:

Full fathom five thy father lies,
of his bones are corals made.

Misery acquaints a man :whoo:
with strange bedfellows. :tea:
 
# 182. "அவரைப்போலவே பாடுகிறாய்!"

அவள் பெயருடன் "குட்டி"

என்ற அழகிய அடைமொழி

பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டது.

அவள் திருமணம் முடிந்த பிறகும்

அவள் ஒரு குட்டியே. :moony:

சிறியவள் ஆக இருப்பாள்.

"மாதாட பாரதேனோ" பாடலையே

எங்கும், எப்போதும் பாடுவாள்.

ஒரு பிரபல நடிகை / பாடகி போலவே

இவளும் மூக்கால் பாடி, ஒரு தனித்துவம்

மகத்துவம் ஏற்படுத்திக் கொண்டாள்.

"எல்லாரும் சொல்லறா! நான்

அவரை மாதிரியே பாடுகிறேனாம்!" :sing:

"ஆமாம் ஆமாம் நீ அவரை மாதிரியே

அச்சு அசல் பா
டுகிறாய்!" என்போம். :high5:

அதுவும் உண்மை தானே! :rolleyes:
 
# 183. "எனக்கு நிருபதம்" தாத்தா.

என் தாத்தாவின் நெருங்கிய நண்பர்.

எங்கிருந்தோ தினமும் வருவார்.

தாத்தாவுடன் திண்ணையில் அமர்ந்து

காலை முழுவதும் அளவளாவுவார்.

பிறகு உணவு உண்ணும் நேரம் ஆனதும்

தன் வீட்டுக்கு எழுந்து போய்விடுவார்.

அவர் பெயர் என்ன? எனக்குத் தெரியாது.

அவர் அடிக்கடி பாடும் பாடல்

ஒரு ராம நாடகக் கீர்த்தனை!

"எனக்குநிருபதம் நினைக்க

வரம் அருள்வாய் ஸ்ரீ ராமச்சந்திரா".

அவர் பெயர் எங்களைப் பொறுத்த வரை

"எனக்குநிருபதம் தாத்தா" என்று ஆகிவிட்டது.

"எனக்கு உன் இரு பதம்" என்று

அதைப் பதம் பிரிக்க வேண்டும்

என்பதே வெகு நாட்களுக்குப் பின்னர்

தான் எனக்கே தெரிய வந்தது.
:doh:
 
William Shakespeare.

If music be the food of love, play on; :sing:
Give me excess of it , that surfeiting,
The appetite may sicken and so die. :drum:

Youth's a stuff will not endure. :llama:



Be not afraid of greatness;
some are born great, some achieve greatness,
and some have greatness thrust upon them.
:first:
 
# 184. LADKI HAI YAA LADKAA ?

பெரியவன் குழந்தையில் ஒரு அழகிய

பெண்குழந்தை போலவே இருப்பான்!

அலை அலையாகச் சுருட்டைமுடி,

தினமும் அதில் கிருஷ்ணர் கொண்டை!

அதில் நிறையப் பூச் சுற்றி விடுவேன்.

[இப்போது கேட்கிறான் என்னிடம்

"Did you have to do it in

every single photo?"
:shocked: என்று]

ஒரு வட இந்திய நண்பர் வந்தார்!

குழந்தையைப் பிரியமாகக் கொஞ்சினார்.

அவனை எடுத்துக் கொள்ளும் போது

அவர் கேட்டார்,"லட்கி ஹை யா லட்கா?"

"யே தோ லட்கா ஹை" என்றவுடன்

அவனைத் திருப்பித் தந்து விட்டார். :bolt:

குழந்தையாக இருக்கும் போது கூட

பையனைக் கொஞ்சக் கூடாதாம். :nono:

இது எப்படி இருக்கு!!!
:rolleyes:
 
# 186. "ராமன் எத்தனை ராமனடி!"

ஆந்த்ராவில் மிகவும் பிரபலம் ஆன பெயர்கள்

ராமாராவ்,
கிருஷ்ணாராவ்,

சுப்பா ராவ், அப்பா ராவ் என்பவையே.

ஒருவர் இருந்தால் அடையாளம் சொல்ல வேண்டாம்.

ஒரே பேரில் நிறைய பேர் இருந்தால்

அடைமொழிகள் வந்து கூடும்!

கருப்பு x, வெள்ளை x ;

குண்டு y, ஒல்லி y ;

குட்டை z , நெட்டை z என்று.

ராம ராவ்களில் எத்தனை பேர்!

எங்கள் ரோடிலேயே மூவர் இருந்தார்.

மாடு, கன்று வைத்திருந்தார் 'கௌபாய்' ஆனார்.

குச்சி போல இருந்தவே குச்சு ஆனார்.

குண்டாக இருந்தவர் குண்டு ராவ் ஆனார்.

இப்போது நோ confusion at all.

கௌபாய் ராமராவ் வேறு, :flock:

குச்சு ராமராவ் வேறு, :cool:

குண்டு ராமராவ் வேறு :bowl:

Adjectives தினசரி வாழ்க்கையில்

எவ்வளவு உபயோகமாக இருக்கின்றன!!!
:rolleyes:
 
No! Not really! But some of our well wishers were worried that we seemed to be drifting apart. :sad:

Just to make them feel happy and to assure them it is only APPARENT and not REAL, I reported a happy event- your visit to our house :).

Are you supposed to report all the events in this forum? :ohwell:
 
William Shakespeare.

There is no satisfaction in hanging a man who does not object to it. :rolleyes:

There is only one universal passion: Fear. :scared:

Beware of the man whose God is in the skies.
:spy:
 
# 186. A.I.R. ப்ரோக்ராம்.

லேடீஸ் கிளப் வழியாக எங்களுக்குச்
chance கிடைத்தது A.I.R. ப்ரோக்ராம்.

யார் பாடுவது, என்ன பாடுவது
எல்லாம் ஒரு வழியாக முடிவாயிற்று.

அன்னமையாவின் "பாவமுலோன"
என்னும் சுத்த தன்யாசி கீர்த்தனை.

எல்லோருக்கும் வார்
த்தைகளைக் கொடுத்து
சாட்டை இல்லாத ரிங் மாஸ்டர் போல, :whip:

ஸ்ருதியும், தாளமும் விலகாமல் பாட
நல்ல பயிற்சியும் கொடுத்தாயிற்று.

ரெகார்டிங் செய்ய வந்தார்கள். :sing:

நான் தான் பயிற்சி அளித்து
lead செய்யப் போகின்றவள்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?
எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு

எனக்கு முன்னால் வந்து ஜம்பமாக
அமர்ந்து கொண்டு விட்டார்கள்.

சுருதி பாக்ஸ் என்னிடம்.

அவர்களுக்கு அதிலிருந்து சுருதி
எடுக்கவும் தொடங்கவும் தெரியாது.

உரலில் தலையைக் கொடுத்துவிட்டு
உலக்கைக்கு பயந்தால் முடியுமா?

இருந்த இடத்தி
ல் இருந்தே பாடினேன்.

ஒரு எண்ணம் மனதில் தோன்றுவதைத்
என்னால் தடுக்க முடியவில்லை.

ரேடியோ ப்ரோக்ராமுக்கே இப்படி
மேலே வந்து விழுந்தவர்கள் :flock:

T.V. ப்ரோக்ராம் ஆக இருந்திருந்தால்
stampede ஆகி இருக்குமா???:noidea:
 
# 187. ஒவ்வொன்று அழகு.

அழகற்றவர் என்று யாருமே
இருக்க முடியாது. :nono:

ஒவ்வொருவரிடம் ஒவ்வொன்று அழகு.
கடவுள் வஞ்சனை செய்பவர் இல்லையே.

சிலருக்குத் தலைமுடி அழகாக இருக்கும்;
சிலருக்கு உதடுகள் ஆப்பிள் துண்டுகள்.

சிலருக்குக் காதளவோடிய கண்கள்;
சிலருக்கு நேரான எள்ளுப்பூ நாசி!

சிலருக்கு முத்துப் பல்வரிசை;
சிலருக்கு மூன்றாம் பிறை நெற்றி!

சிலருக்கு வில் புருவங்கள்;
அவளுக்கு அழகிய கண் இமைகள்!

கண்ணை மூடித் திறக்கும்போது,
பட்டுப் பூச்சி பூவின் மேல் அமர்ந்து,

தேன் அருந்துவது போல இருக்கும்.
எப்போதும் slow motion போலவே.

தூங்கும் விழிகள் அல்ல அவை.
மயக்கும் விழிகளும் அல்ல.

ஆனால் பார்த்தால் ரொம்ப
relaxing ஆக இருக்கும். :couch2:

கோஷ்டி கானத்தில் முதல் வரிசையில் நிற்பார்.

பெயர் கூடத் தெரியது.
குரல் எப்படியோ தெரியாது

ஆனால் அந்த ரசிகனான camera man
அவரையே அடிக்கடி காட்டுவான். :photo:

பாட்டுக்கு நன்கு பொருந்தும் அந்தப்
பட்டுப்பூச்சி கண் இமை அசைவுகள்.
:clap2:
 
முற்பகல் செய்யின்...

பெருந்தனக்காரர் அவர் முதாதையோர்!
பெருமை அதிகம் இருப்பது இயல்பே!

"மற்றவரோடு பழகுவது நம்முடைய
சுற்றத்தின் மதிப்பைக் குறைத்துவிடும்!" :nono:

எதற்கும் எப்போதும் போவதில்லை!
எதற்கும் அனுப்புவார் தம் கைத்தடியை!!

பணியாள் அதைக் கொண்டு செல்வான்.
பணியாள் அதைக் கொண்டு வருவான். :roll:

பெரியவர் காலம் ஒருநாள் முடிந்தது
மரியாதை செலுத்த வந்தவர் எவர்??? :confused:

அத்தனை வீட்டிலிருந்தும் வந்து சேர்ந்தன
எத்தனையோ விதமான கைத்தடிகள் !!! :rolleyes:

 
William Shakespeare.

Activity is the only road to knowledge. :laser:

The golden rule is that there are no golden rules. :cool:

The populace cannot understand the bureaucracy :confused:

it can only worship the national idols. :hail:
 
# 188. ONE HUNDRED PENNIES IN A BUNDLE!

நம்மூரில் கடைகளில் சில்லறையை

நம்மிடம் வாங்கிக் கொண்டு அவர்கள்

நமக்கு முழு நோட்டுகளாகத் தருவார்கள்.

அமெரிக்காவில் சரியான சில்லறை கொடுத்தால்,

"NO NO I HAVE TO GIVE YOU THE BALANCE.

YOU DON'T HAVE TO PAY ME MORE MONEY!"

பலன் பலப்பல 'பென்னி' என்னும் ஒரு பைசாக்கள்

சேர்ந்து கொண்டே போகும் நம்மிடம்! :popcorn:

"BUS FARE கொடுக்கலாமா இவற்றை?

"TRY YOUR LUCK ! NO ONE WILL SCOLD YOU "

நூறு காசுகளை எண்ணி எடுத்துச் சென்று

சின்ன packet போலக் கட்டி அதை BUS

டிரைவர்-கம்-கண்டக்டர் இடம் தந்தேன்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு அவர் கேட்டார்,

"HOW LONG HAVE YOU BEEN COLLECTING?" :rolleyes:

"NOT FOR VERY LONG REALLY! :nono:

WE KEEP GETTING THEM ALL THE TIME!"

அவர் வாய்விட்டுச் சிரித்து விட்டார். நானும் தான். :becky:

 
# 189. Radha maadhavam.

சிட்டி பாபுவின் அற்புத படைப்பு இது.

மாணவ மாணவிகளுடன் குழுவாக

ராகமாலிகையில் அமைக்கப்பட்டது.

சுமார் 25 நிமிடங்கள் தொடர்ந்து

இசை வெள்ளத்தில் மூழ்க வைக்கும்.

குட்டிப் பெண்களை வைத்து ஒரு

நாட்டிய நாடகம் ஆக்கினேன் இதை.

அவர்களுக்கு ராகம் மாறுவதெல்லாம்

அவ்வளவு நிச்சயமாகத் தெரியாது. :confused:

அதனால் ஒவ்வொருவரும் அவரவர்

ஸ்டெப்களை நினைவு கூற வேண்டும்.

கடைசியில் கண்ணன் நுழைவான்.

பயிற்சி என்றுமே வீண் போகாது.

நன்றாக அமைந்து விட்டது அது.

எல்லா பெற்றோர்களும் வந்து,

"என் பெண் இவ்வளவு நல்ல ஆடுவானே

எனக்குத் தெரியாது!" என்ற போது

பட்ட பாடு வீண் போகவில்லை என்ற

மனத் திருப்தி ஏற்பட்டது. :thumb:

நாட்டியம் படித்தவள் ஒரே ஒரு பெண்

அவளுக்கு நீளமான இசையை அளித்துவிட்டேன். :dance:

கண்ணன் வேடம் யார் போட்டாலும் கண்ணைக் கவருமே! :love:
 
William Shakespeare.

In heaven an angel is nobody in particular. :flock:

Life levels all men:death reveals the eminent. :hail:

Decency is indecency's conspiracy of silence.
:tape:
 
# 190. "Stand up for the prayer!"

Prayer பாடச் சொல்லுவார்கள், ஆனால்

அமைதி காக்க மாட்டார்கள் ஒரு நிமிடம் கூட. :blabla:

மைக்கு முன்னே நின்று நாம் பாட, :sing:

நமக்குப் பின்னே இருந்து இவர்கள் பேச,

இரண்டுமே மைக் வழியாக அவியலாக

வெளியில் கேட்கும் என்ற அறிவும் இருக்காது. :crazy:

ஒருமுறை ரொம்பக் கோபம் வந்துவிட்டது எனக்கு! :mad2:

Prayer என்ற சொன்ன கையேடு organizer

தொடர்ந்து வேறு யாரிடமோ பேசியதால்.

அன்றிலிருந்து சொல்லத் தொடங்கினேன்,

"Please stand up for the prayer!"

நிற்கும்போது பலருக்கு பேசாமல் இருப்பது

எளிதானது போலத் தோன்றியதால், அதுவே

பிறகு எல்லா இடங்களிலும் தொடர்ந்தது.
 
# 191. MAGNETIC PARTNERS !

Annual G.C.T. meet இன் போது

சுலபமான சில கேம்ஸ் இருக்கும்.

போன முறை வைத்திருந்தேன்

FINDING ONE 'S PARTNER .

பிரபல ஜோடிகளின் பெயர்களைத்

நிறையத் தேர்ந்து எடுத்தேன்.

ஆண்களின் பெயர்கள் எழுதிய ஸ்லிப்

பெண்களுக்கு அளிக்கப்பட்டது.

பெண்கனின் பெயர் எழுதிய ஸ்லிப்

ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.

விசில் அடித்தவுடன் பிரிந்து

நின்று இருந்த இரண்டு குழுக்களும்

கடல் போல் ஆர்ப்பரித்துக் கொண்டு,

ஒன்றை நோக்கியொன்று ஓடத் தொடங்கி

"ரோமியோ!" "ஜூலியட்!"

"வள்ளுவர்!" "வாசுகி!"

"அம்பிகாபதி!" "அமராவதி!"

என்று கூச்சல் காதைப் பிளந்தது.

அம்பிகாபதியும், அமராவதியும்

பிரிந்திருந்த இரண்டு காந்தங்கள் போல

சேர்த்து ஓடி வந்து பரிசு பெற்றனர்.

எழுபதுகளில் இப்படி இருக்கும் இவர்கள்

இருபதுகளில் எப்படி இருந்திருப்பார்களோ!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top