• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 170. Kitchen latches.

கணவன் மனைவி தகராறுகள் :argue:

உலகில் எங்கு தான் இல்லை?

அதற்காக ஒருத்தி தன்னைத் தானே

கொளுத்திக்கொண்டு மாய்வாளா?

மாய்ந்தாள் ஒருத்தி, தன் மீது

மண்ணெண்ணெய் அபிஷேகம்

செய்துகொண்டு, பற்ற வைத்துக்கொண்டு, :flame:

அவள் வீட்டுச் சமையல் அறையிலேயே,

தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஒரு நாள்!

அடுத்த நாள் சிவில் department staff

வீடு வீடாகச் சென்று செய்தது என்ன தெரியுமா?

அத்தனை வீட்டுச் சமையல் அறைக் கதவின்

தாழ்ப்பாளையும் கழற்றி எடுத்தது தான்!

"வேறு யாரும் இப்படிச் செய்யக் கூடாது!" :nono:

ஒருவேளை அவள் பாத்ரூமுக்குச் சென்று

பற்ற வைத்துக் கொண்டு மாண்டிருந்தால்...!
:eek:
 
# 171. Flaming Jwaalaa !

அவள் நிஜப் பெயர் ஜ்வாலா இல்லைதான்.

ஆனால் அதற்கு இணையான இன்னொரு "லா"!

எத்தனை அழகோ அத்தனை கோபம்.

எத்தனை கோபமோ அத்தனை வீராப்பு.

ஒரு மிகச் சின்ன விஷயம் தான் அது.

"குழந்தைக்கு uniform யார் போடுவது?"

அந்த சமர்த்துக் குழந்தை தானாகவே

தன் uniform மை அணிந்து கொண்டிருக்கும்.

அதற்கு ஒரு சண்டை, சவால், கோபம், தாபம்!:frusty:

இறுதியில் அக்னிப் பிரவேசம் அவள் ஹாலில்!

திரைப் படங்களில் வருவது போல அவள்

எரிந்து கொண்டே நடந்ததைப் பார்த்த அவள்

எதிர் வீட்டு மாமிக்கு ஜன்னியே வந்துவிட்டது.

அவள் பொன்னிறம் எரிந்து கருநிறம் ஆனது.

சுருட்டைமுடி பொசுங்கி கோரம் ஆனது. :scared:

அவள் பிழைக்கவில்லை! அதுவும் நன்மைக்கே!

அந்த கோர முகத்தில் அத்தனை கோபம்

யாராலும் தாங்க முடியாமல் போயிருக்கும்.

பாவம் நல்ல பெண் குழந்தை அதற்காக

மீண்டும் மறுமணம் செய்து கொண்டார் தந்தை.

"அவள் பொறுமைசாலியாக இருக்க வேண்டும்"

என்று மனதார வேண்டிக்கொண்டேன். :pray:

அவர்கள் மாறிச் சென்று விட்டார்கள்.

அந்தக் குழந்தைக்கு இப்போது சுமார்

பதினைந்து வயது ஆகி இருக்கும்

அம்மா போல அழகாக இருக்கட்டும்.

ஆனால் அவளைப் போல ஒரு பயங்கரக்

கோபக்காரியாக வேண்டவே வேண்டாம்.
:nono:
 
William Shakespeare.

'Tis one thing to be tempted Escalus,
Another thing to fall. :decision:

Sometimes from her eyes :ear:
I did receive fair speechless messages. :tape:

They are as sick that surfeit with too much ,
as those that starve with nothing.
:hungry:
 
# 172. Master tailor Moosa.

அந்தச் சின்ன ஊரில் இவரைத்

தெரியாதவர் இருக்க முடியாது.

மாஸ்டர் tailor தான் உண்மையிலேயே!

எல்லாமே தைக்கத் தெரியும் என்றாலும்

bed தைப்பதில் சூப்பர் specialist இவர்.

இப்போது போல பஞ்சைக் குத்தி அடைத்து,

அங்கங்கே அது நகராமல் தையல் போடுவது

போல் அல்ல அவர் bed தைப்பது. :nono:

அழகாக diamond diamond ஆகத் தைத்து,

ஒரே சீராக அதில் ஒரு சிறு துளை வழியே

பதப்படுத்தப்பட்ட இலவம் பஞ்சை நிறைத்து,

தைத்த இடம் தெரியாமல் seal செய்தல்!

பார்ப்பதற்கும் அழகோ அழகு :love:

படுத்து உறங்குவதற்கும் தான்! :sleep:

occupational hazard இவருக்கு!

மிஷீன் மீது குனிந்து தைத்துத் தைத்து

முதுகு "c" போல வளைந்து விட்டது.

இவர் தைத்த அழகிய bed டில் இவரால்

மல்லாந்து படுத்தோ, கவிழ்ந்து படுத்தோ,

உறங்கமுடியது பாவம்.

ஊருக்கெல்லாம் சப்ளை!

நல்ல கைராசிக்காரர் இவர் ஐயமில்லை.

கல்யாண மெத்தை இவர் தைத்தால்

ஒரே ஆண்டில் "குவா குவா" பிறந்திருக்கும்! :baby:

அல்லது கருவில் உருவாகிக் கொண்டிருக்கும்!
 
# 173. THE MAN WHO KICKED THE BUCKET.

ஒரு வகை மனிதர்கள் கவலைப்பட்டுக் கொண்டு,

எல்லா டெஸ்ட் களையும் செய்துகொண்டு,

இல்லாத வியாதிகளை எண்ணிக் கவலைப்பட்டால்,

இன்னொரு வகையினர் B.P. கூடப் பார்க்க மாட்டார்கள்.

இரண்டுமே தவறு தான் என்பேன்! :nono:

மெத்தப் படித்த PROFESSOR அவர்.

மனைவியும் PROFESSOR தான்.

எந்த டெஸ்டும் செய்து கொள்ளவில்லை,

நன்றாகத்தான் இருந்தார்.

ஒரு நாள் இரவு பாத்ரூம் சென்றவர்

படுக்கைக்குத் திரும்பி வரவில்லை.

மனைவி தேடிக்கொண்டு சென்றால்

பாத்ரூம் கதவருகில் மனிதர்

COLLAPSE ஆகி இருந்தார்.

உயிர் பிரிந்திருந்தது.

இறுதி நேரத்தில் பாத்ரூம் செல்லும் URGE

சிலருக்கு வருமாம். அவருக்கும் வந்திருந்தது.

கும்பகர்ணி மனைவியாக இருந்திருந்தால், :sleep:

அல்லது தனித் தனி பெட்ரூம் இருந்திருந்தால்,

காலை வரையில் நடந்ததே தெரிந்திருக்காது!

படித்தவர்களே இப்படிச் செய்யலாமா? :doh:


cleardot.gif
 
Smt VR
நீங்க சொல்வது சரிதான். சிலர் தனது உடலில் என்ன வியாதிகள் உள்ளன என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். சிலர் அமிர்தத்தையே குடித்துவிட்டதாக நினைத்துக்கொள்கிறார்கள். அவர் போகாமல் இருக்கக்கூடும். இவர் நடுவயதினிலே பறந்து விடுவார். இது ஒருபக்கம். வேறு ஒரு பக்கம் நம்பமுடியாத பரிசோதனை 'அபிப்ராயங்களை' வைத்துக்கொண்டு முறையான சிகிச்சை செய்துகொண்டபின்னும் பறந்துவிடுகிறார். உபத்ரவங்கள் வைத்துக்கொண்டு வாழ்ந்து முடித்துக்கொண்டு, சொல்லிச்செல்பவர்கள் சிலர். எப்படியும் செல்பவர்கள் நமக்கு ஒருகாரணத்தை தந்துவிட்டுத்தான் செல்கிறார்கள். காரணத்தை வைத்துக்கொண்டு என்னசெய்வது. சிலர் நஷ்டஈடு கேட்பார்கள் நிகாரன பணத்தை. உயிரை கேட்க கிடைக்காதே. தெரிந்த ஒருவர் ரத்தகொதிப்பு நோயாளி. குடும்ப மருத்துவர் இருதயநோய் மருத்துவரிடம் அனுப்பினார். அவர் முறையாக பரிசோதனை செய்து, முறைகேடாக ஒன்றுமில்லை. மருந்துகளை தொடர சொன்னார். மருத்துவர் அறையிலிருந்து வெளியில் வந்து இளைப்பாறும் இருக்கையில் இருந்து உயிரை விட்டுவிட்டார். மருத்துவர் தொழிலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது யாருக்கு தெரியும். வாழ்கை என்பது புதிர்தான் என்று தங்கிக்கொண்டு இருப்பவர்களுக்குதான் தெரியும். மருத்துவர்களுக்கும் தெரியும் என்றுதான் நினைக்கிறேன்.
 
Hello Mrs. Visalakshi,

Have been reading your posts.. I have been a bit busy, so not able to give you my opinion on every thread, but wanted to say, I enjoyed all the ones I read and to wish you the Very best.. take care..

Subhalakshmi :-)
 
Dear Subha,
I too missed you feedbacks - usually the likes and sometimes long posts.
I can guess you are busy - unlike me on whom time hangs heavily - in spite of the hundred chores I willingly do everyday!
You too take care and visit the Forum whenever you find free time!
:wave:

Hello Mrs. Visalakshi,

Have been reading your posts.. I have been a bit busy, so not able to give you my opinion on every thread, but wanted to say, I enjoyed all the ones I read and to wish you the Very best.. take care..

Subhalakshmi :-)
 
William Shakespeare.

Hath not a Jew eyes? hath not a Jew hands, organs, dimensions, senses, affection and passions? :frusty:

If you prick us, do we not bleed?
if you tickle us, do we not laugh? :becky:
if you poison us do we not die? :rip:
and if you wrong us, shall we not revenge? :fencing:
 
# 174. தென்னை மட்டையும், சாணமும்.

அவள் நன்கு படித்தவள்.

நல்ல வேலையில் இருந்தவள்.

நல்ல குடும்பதைச் சேர்ந்தவள்.

பெண் பார்க்க வந்த அன்றே

வேலையை விடச் சொன்னார்கள்.

ஆயிரக் கணக்கில் சம்பாதிக்கும் பெண்ணை

'ஆயா'வாக்கி சில நூறு ரூபாய் சேமித்தார்கள்.

அவள் 'பணத் திமிரை' அடக்கவேண்டும் :high5:

என்பதே அவர்கள் வாழ்வின் நோக்கமாயிற்று.

புதுமைப் பெண் ஆனாலும் பழமைவாதியும் கூட.

"நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்" :doh:

என்று அவற்றை ஏற்றுக் கொண்டாள்.

அடுத்து சாலையில் கிடக்கும் தென்னை மட்டைகளை

வெந்நீர் போட இழுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்.

மாடு வாலைத் தூக்கும் முன்பே சென்று நின்று

'பிரெஷ்' ஆகச் சாணம் பொறுக்க வேண்டுமாம்!

சாது மிரண்டால் என்ன ஆகும் தெரியுமல்லவா?

இங்கேயும் அது தான் ஆயிற்று!

அதன் பிறகு அந்தப் பெண் துணிந்து

தனக்கு விருப்பம் இல்லாத எந்த வித

வேலைகளைச் செய்வதில்லை. :nono:

இவர்களாலும் செய்ய வைக்க முடியவில்லை.

ஏனென்றால் அவளிடம் ஆத்மபலம் இருந்தது.
:thumb:
 
# 175. கண்ணுப்புள்ளே <=> கண்ணம்மா?

எங்கள் கல்லூரி வார்டன் வயதானவர்.

உயரமானவர், குழந்தை போன்றவர்.

நான் கல்லூரியில் பணி புரியும் போது

என்னை அவர் அழைக்கும் பெயர்

"கண்ணுப் புள்ளே"! :ear:

எங்கள் தாய் தந்தையர் கூட அத்தனை

"
கண்ணுப் புள்ளே"யைக் கூப்பிட்டதில்லை!

எப்போதும், எங்கும், யார் இருந்தாலும்

அதே பெயர் கூறித்தான் அழைப்பார்.

சில சமயம் நான் நினைப்பேன். :rolleyes:

விசாலாக்ஷி => கண்ணம்மா => கண்ணுப் புள்ளே?
:noidea:
 
William Shakespeare.

The quality of mercy is not strain'd, :nono:
It droppeth as a gentle rain from heaven,
Upon the place beneath.:rain:

Patch grief with proverbs. :blabla:

Comparisons are odorous.
:hand:
 
# 176. The first dance program .

பாடுபவன் குரலும், ஆடுபவன் காலும்

சும்மா இருக்கவே முடியாது போல.

கலை நிகழ்ச்சி என்றவுடனேயே நான்

"மாலைப் பொழுதினிலே" என்ற ராகமாலிகை

பாடலுக்கு அபிநயிக்க எண்ணினேன்.

இவரும் சம்மதித்து, அந்த பாடல் உள்ள

M. S. S பாடிய ஒரு L.P. யைத் தேடி வாங்கி வந்தார்.

குட்டிப் பயலுக்கு அப்போது ஒன்றரை வயது.

பாட்டைப் போட்ட உடனேயே

"மாய்ப் பாட்டு! மாய்ப்பாட்டு" என்று

குதூகலமாக என்னைத் தேடிவருவான். :baby:

நான் அவன் கைக்குச் சிக்காமல் ஆடியபடி

dance practice செய்வேன். :dance:

Program நாள் அன்று நான் என்

வீட்டிலேயே make up செய்து கொண்டு

ஒரு கையில் record player உம்

ஒரு கையில் ரெகார்ட்டும் எடுத்துக்கொண்டு

ஆடிடோரியம் சென்றபோது அங்கிருந்த

அனைவருக்கும் அத்தனை வியப்பு.:shocked:

Organizer ஓடி வந்து விட்டார்.

"இது வரையில் இது போல இங்கு

யாருமே செய்ததில்லை மேடம்.

அது வேண்டும் இது வேண்டும் என்று

என் உயிரை வாங்குவார்கள்!

வீண் செலவும் எக்கச்சக்கமாக ஆகும்.

இந்த மாதிரித் தயாராக வந்தவர் இல்லை"

அதை
ப் பார்த்தவர்கள் வேண்டிகோளின் படியே

நடன வகுப்புக்களைத் துவங்கினேன் அதற்குப் பிறகு.

Time and money யாருடையது ஆனாலும்

நாம் அதை வேஸ்ட் பண்ண மாட்டேன்.
:nono:
 
# 177. BODY LANGUAGE.

அவர்கள் வீட்டில் செய்வது அறியோம். :confused:

சொல்வது ஒன்று செய்வது வேறொன்று.

நம்மையும் அப்படியே நினைப்பார்கள்.

என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள்! :suspicious:

கண்ணில் எண்ணையை ஊற்றிக்கொண்டு

உன்னிப்பாக கவனிப்பார்கள் நம்மையே. :spy:

போகாமல் இருக்கவும் முடியாதபடி

மிகவும் வேண்டியவர்கள் அவர்கள்.

வருடாந்தர விசிட் punishment ஆகும்!

இருவருக்குமே என்று கூடத் தோன்றும்!

வலுக்கட்டாயமாக ஓட்ட வைத்ததுபோல.

எதாவது கொடுத்தல் வேண்டாம் என்பார்கள்.

அதை உண்மை என்று நினைத்துக் கொடுக்காமல்

விலகிச் சென்று விட்டால் சொல்லுவார்கள்

வருபவர்கள் போபவர்களிடம் எல்லாம்,

"அதை எனக்குத் தரவே இல்லை அவள்!" :gossip:

இன்னொருவர் இன்னமும் மோசம்!

சரியான confusion மாஸ்டர்!

வேண்டாம் என்பார் வாயால்!

கையை நீட்டித் தா என்பது போல வைத்துக்கொண்டு!

குட்டிப்பயலுக்கு ஒரே confusion .

"வேண்டாம் என்று கையையும் நீட்டினால்

என்ன செய்யவேண்டும் மம்மி?"

நான் சொன்னேன் அவனிடம்,

"வாய் போய் சொல்லும் ஆனால்

கண்களும், உடலும் உண்மை பேசும்!

கையைத் தா என்பது போல நீட்டினால்

அதில் அதைக் கொடுத்து விடு".

பிறகு அவனும் புரிந்து கொண்டான்

அவர்களுடைய "life's philosophy!"

அவர்களுக்கு ஒன்றுமே வேண்டாமாம்.

நாமே பலவந்த
மாக் கொடுக்கின்றோமாம்.

நல்ல pretension நல்ல policy போங்கள்!

 
William Shakespeare.

Love looks not with eyes but with the mind, :nono:
And therefore is the wing'd cupid painted blind. :cool:

I cannot tell what the dickens his name is. :heh:

Marry, this is the long and short of it.
:moony:
 
# 178. ROPE WAY...TWO WAYS!

மலம்புழா அணையை விசிட் செய்தோம்

கணவரின் கல்லூரி நண்பர்களுடன் ஓர்முறை.

நல்ல உச்சி வெயிலில் அங்கு போய் சேர்ந்தோம் :flame:

எல்லோரும் சீனியர்/ சூப்பர் சீனியர் சிடிசன்ஸ்.

ரோப்வேயில் ஒரு ரவுண்டு போனால் பார்க்

மொத்தமும் பார்க்க முடியுமாம் சொன்னார்கள்.

டிக்கெட் வாங்கிக் கொண்டு "Q" வில் நின்றோம்!

அவர்கள் சிஸ்டம் கண்டவுடனேயே நான்

பயந்து பின் வாங்கினேன். வேறு வழியில்லை.

ரோப்வே தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.

chair car வரும் இடைவெளியில்,

செல்லவேண்டிய அடுத்த இரண்டு நபர்களை,

வட்டத்துக்குள் நிற்கவைத்தனர்.

பிளாட்பாரத்தின் ஒரு நுனியில்

unloading the passengers

இன்னொரு நுனியில்

loading the passengers .

இரண்டு hunks இரண்டு தோள்களையும்

பற்றி வலித்து நம்மை இறக்கி விடுகின்றனர்.

chair போகும் வழியில் நம்மையும்

அதில் வழித்துக் கொண்டு போகின்றது.

என்னை எல்லாம் தோளைப் பற்றி வலித்தால்,

dislocation ஆகிவிடும் shoulders நிச்சயமாக.

ஒல்லிப் பிச்சான்களுக்குப் பரவாக இல்லை!

ஆனால் என் போன்றோருக்கு...:scared:

பின் வாங்கவும் விடவில்லை இவர்.

முன்செல்லவும் மனம் இல்லை எனக்கு!

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு விட்டு

அந்த குட்டி வட்டத்தில் நின்றேன் நான்.

சேர் வழித்து எடுத்துக் கொண்டு போயிற்று.

இறங்கும்போது பயம் பிடித்துக் கொண்டது.

இரண்டு ஆட்கள் என்னை இறக்குவதற்கு.

ஆளுக்கு ஒரு கையைப் பிய்த்துக்

கொடுத்து அனுப்பி விடுவார்களோ?

சரியன அதிர்ச்சி வைத்தியம் தான்.

பிறகு U.S.A. சென்ற
போது அங்கும் ரோப்வே.

ஆனால் என்ன வேறுபாடு நம்பவே முடியவில்லை. :shocked:

அவர்களால் அதன் போக்கை நிறுத்த முடியும்;

EXTRA TIME கொடுக்க முடியும்.

ஒரு family முழுவதும் அமரும்படி

ஒவ்வொரு சீட்டும் நீண்டு இருந்தது.

என்னையும், ஆறு மாதக் குழந்தை

தேஜஸையும் பார்த்த உடனேயே போன்

செய்தார்கள் extra time வேண்டும் என்று.

இறங்கும் போது அவர்கள் அப்படியே.

பிறகு மலையிலிருந்து ஏறும் போதும்

கீழே வந்து இறங்கும் போதும் சரி

நிறைய அவகாசம் கொடுத்து நம்மை

மனிதர்கள் போட நடத்தினார்கள்..

இந்தியர்களுக்கு எதையும் தாங்கும் இதயம் :ballchain:

உள்ளது உண்மையே என உணர்ந்து கொண்டேன்!
 
# 179. கடைத் தேங்காய்.

அந்த மாமி அதிகம் படித்ததில்லை.

ஆனால் உடம்பு முழுக்க சாமர்த்தியம்!

யாரிடமிருந்து எதை பெறமுடியும்;

யாரிடம் அதைக் கொடுத்து தன்னுடைய

வேலைகளைச் செய்துகொள்ள முடியும்

என்று அத்தனையும் அத்துப்படி.
icon3.png


சாது மருமகளிடமும், நல்ல மகனிடமும்

கேட்டுக் கேட்டு மகளுக்கு வேண்டியவை

அத்தனையும் வாங்கிக் கொள்வாள். :popcorn:

மகளுடன், மருமகன் வரும்போது

அவற்றை தன் பரிசுகள் போல கொடுத்து

மற்ற வேலைகளை வாங்கிக் கொள்வாள்.

எனக்கு எப்படித் தெரியும் என்கின்றீர்களா?

அந்த மருமகள், மகள் இருவருமே என் நண்பிகள்.

கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு

மாமி தரும் குட்டை நான் உடைக்கவில்லை!

நம் படிப்புக்கும், நம் பிழைப்புக்கும்

ஒரு தொடர்பும் இல்லை என்பதை :nono:

நம்பத்தான் வேண்டியுள்ளது உலகில்

நன்கு பிழைப்பவர்களைக் காணும்போது. :shocked:

 
William Shakespeare.

Good-night, good-night! parting is such a sweet sorrow :sad:
Then i shall say good-night till it be morrow. :wave:

What's in a name? that which we call a rose
by any other name would smell as sweet. :high5:

And 'tis not hard, I think,
For men so old as we to keep the peace.
:peace:
 
# 180. புதுப் பணக்காரன்.

மழிக்கபடாத முகம்; காடுபோல தலைமுடி,

சோப்பையும் நீரையும் கண்டறியாத சட்டை.

எட்டுப் பக்கங்களையும் உபயோகிக்கப்பட்ட

எட்டு முழ வேஷ்டி - சுருண்டு, வரி விழுந்தது!

எட்டுப் பக்கங்கள் எப்படி என்கின்றீர்களா?

நான்கு பக்கங்கள் x இரண்டு பார்டர்கள்!

லொட லொடக்கும் ஒரு பழைய சைக்கிள்!

பூட்டாமல் போகலாம் வெகு தைரியமாக!

பேரிச்சம்பழக்காரன் கூட வாங்கமாட்டான்.

கேஸில் இருந்த சொத்து கிடைத்து விட்டது!

இன்று அவர் ம
க்கள்களுக்கு வைர நகைகள்

வாங்கும் லிஸ்டைத் தயாரிக்கின்றார்!!!
 
# 181. FASTER THAN GRAVITY!

"Free Fall" தான் Fastest என்று

நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி.

அதை விடவும் fast மனிதன் தான்!

பார்த்தல் நீங்களும் நம்புவீர்கள்.

ஒரு ஸ்பூன் நெய்யை ஒரு பந்திக்கு

பரிமாறிவிட்டு, அதை பத்திரமாகத்

திரும்பக் கொண்டு வர முடியுமா? :shocked:

நம்மால் நிச்சயம் முடியாது! :nono:

ஆனால் அவரால் அது முடியும்.

ஏனென்றால் அவர் faster than gravity! :rolleyes:

மேலே இருந்து ஊற்றிவிட்டு அதையே

கீழே ஸ்பூனில் மீண்டும் பிடித்து விடுவார். :thumb:

நெய்யை இலையில் யாரேனும் தேடினால்

தேடிக்கொண்டே இருக்க வேண்டியது தான்!

இவரிடம் இன்னொரு specialty உண்டு!

எல்லோரும் "தொப்பை மாமா" ஆவார்கள்!

இவரோ "சப்பை மாமா" ஆகிவிட்டார்!
 
It is true that water cannot be divided by passing a hand through it.

It is also true that blood is thicker than water. :hug:

Happy day for me since Mrs. Raji Ram and Mr. Ram spent the day with us on their way back to Chennai form Kerala. :happy:

We could recapture the days of the past. She taught me how to include the images in my posts!
icon3.png


She has been my guru and guide all along! :peace:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top