• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
# 158. "தாளம் எல்லாம் பாட்டுக்கு எதற்கு?"

என் பெயரிலேயே இன்னொருவர் இருந்தார்.

என் போலவே இளவயதில் பாட்டுப் படித்தவர்.

ஆனால் என் போல தினமும் பாடவில்லை.

பலன்.... மூச்சைப் பிடித்துப் பாட முடியாது.

எங்கே வேண்டுமானாலும்,

எப்போது வேண்டுமானாலும்,

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்,

நிறுத்தி நிறுத்திப் பாடுவார் சாவகாசமாக. :bored:

ஒரு passenger train போலவே.

ஒரு முறை லேடீஸ் கிளப் நிகழ்ச்சியில்

"ரகு வம்ச ஸுதா" வைத் தொடங்கவே

எனக்கு அதிர்ச்சியில் மூச்சே நின்று போனது!

"எப்படிப் பாடுவரோ இவர்?"என்று!

ஓவர் லோட் உள்ள passenger train போல

பாடி முடித்துவிட்டு என்னிடம் கேட்டார்,

"பாட்டு எப்படி இருந்தது?" என்று.

"பாட்டு மிகவும் நன்றாக இருந்தது, :sing:

தாளத்தோடு பாடி இருந்தால், இன்னமும்

நன்றாக இருந்து இருக்கும்!" என்றேன்.

அப்போது அவர் உதிர்த்த பொன்மொழி தான் :shocked:

" தாளம் எல்லாம் பாட்டுக்கு எதற்கு???"
:rolleyes:
 
# 159. No good deed goes unpunished!

விடியற் காலையிலேயே தினமும்

பால் பாக்கெட் வந்துவிடும் வீட்டுக்கு.

எலெக்ட்ரிக் சுவிட்ச் உள்ள பாக்ஸ்சின்

உள்ளே வைத்துவிடுவான் கூர்க்கா.

ஒரு நாள் போலவே தினமும் தருவது

ஓட்டை விழுந்
தும், அழுதுகொண்டும்,

ஒழுகிக் கொண்டும் இருக்கும் பால் பாக்கெட்! :mmph:

ஒரு நாள் மாயாவி அவனைப் பிடித்தேன் காத்திருந்து.

"ஏன் தினமும் ஓட்டைப் பாக்கெட் வைக்கின்றாய்?"

அவன் சொன்ன பதிலில் நான் மயங்கி விழாதது பாக்கி.

"நீங்கள் ஒருவர் தான் பாத்திரம் வைக்கிறீர்கள்.

மற்ற வீட்டில் வைத்தால் பால் வீணாகிவிடுமே!"

என்றானே பார்க்க வேண்டும்! :faint:

உண்மைக் காரணம் அதுவல்ல.

மற்ற வீட்டில் ஒழுகும் பாலை வைத்தால்

இவனை உண்டு இல்லை என்று :boxing:

அவர்கள் ஆக்கி இருப்பார்கள்.

மண்ணும், தூசும் ஒட்ட வேண்டாம்,

பல்லியோ கரப்பானோ நக்க வேண்டாம்,

என்று முன் ஜாக்கிரதையாக தினமும்

ஒரு பாத்திரம் வைத்ததற்கு punishment!

ஒழுகி அளவு குறைந்த பாக்கெட் தினமும்.

து எப்படி இருக்கு??? :frusty:

அதற்குப் பிறகு அவனை நிறுத்தி விட்டு

நானே தினமும் பாலுக்கு
ப் போக ஆரம்பித்தேன்!
 
quotes by William Shakespeare.

Bell, book, and candle shall not drive me back,
When gold and silver becks me to go on. :llama:

To guild refined gold, to paint the lily, :crazy:
to throw a perfume on the violet. :rolleyes:

The spirit of the time will teach me speed.:clock:
 
# 160. "ஒக்க ரோஜு கூரகாயி கர்ச்சு!"

"வீணை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றாள்.

தினமும் வகுப்புக்கு என் வீட்டுக்கு வந்தாள்.

லைட்டும், ஃ பேனும் போட்டு; பாயும் விரித்து;

வாசிக்க என் வீணையையும் கொடுத்து,

வீணை கற்றும் கொடுத்தால்....

மாதம் முடிந்த பிறகும் அவளிடமிருந்து

பேச்சோ மூச்சோ இல்லை ஃ பீஸ் பற்றி!

நினைவு படுத்தினால் அவள் பதில்,

"மா இன்ட்லோ
ஒக்க ரோஜு கூரகாயி கர்ச்சு!"

(எங்கள் வீட்டில் காய்கறிக்கு நாங்கள்

ஒரு நாளில் செலவழிக்கும் தொகை! )

பிறகு வகுப்புக்கு அவள் வரவும் இல்லை!

அந்த மாத ஃபீஸ் அவள் தரவும் இல்லை! :nono:

ஒரு நாள் காய்கறிச் செலவில் ஒரு மாதம்

ஒரு லலிதகலையை யாரேனும் கற்றுத் தந்தால்

சந்தோஷப் படவேண்டுமா அல்லது :happy:

சங்கடப்பட்டு discontinue செய்யவேண்டுமா! :bolt:

நீங்களே சிந்தித்துச் சொல்லுங்கள்!
:nerd:
 
# 161. உத்தம புத்திரன்.

ஒரே மகன் என்று கண்ணுக்கு கண்ணாக

ஓஹோ என்று வளர்த்தனர் பெற்றோர்.

நன்கு படித்த பெண்ணைத் ஓடி, ஆடித் தேடி

அவனுக்குத் திருமணம் செய்வித்தனர்.

இந்தியச் சம்பளம் போதவில்லையாம்.

இருவரும் அயல் நாடு சென்று விட்டனர்.

இப்போது இரண்டு பெண் குழந்தைகள்.

அங்கேயே செட்டில் ஆகியாயிற்று.

மகனைப் பிரிந்த தந்தைக்கு விரைவில்

அத்தனை வியாதிகளும் வந்துவிட்டன

கைகோர்த்துக் கொண்டு whole-sale போல. :grouphug:

இரண்டு கிட்னிகளும் பழுதடைந்து விட்டன.

தினமும் மூன்று முறை solution ஏற்றி

வீட்டிலேயே டெய்லி dialysis நடக்கிறது.

"அடித்துப் புடைத்துக் கொண்டு மகன்

இந்தியா திரும்ப வந்து விடுவானா?"

அனைவர் மனதிலும் இதே கேள்வி. :confused:

அவன் வந்தான் spectator போல! :cool:

Statistics பேசினான் இன்னும் அவருக்கு

maximum life span எவ்வளவு என்று!

என்ன செய்யப்போகின்றாய்? என்று கேட்டால்,

"இன்னும் ஐந்து ஆண்டுகளில் முடிவு செய்வேன்!"

அதாவது அவர் life span முடிந்த பின்னர்,

crippled and gnarled due to arthritis :crutch:

அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசித்து

என்று அவன் நல்ல முடிவு செய்வானாம்!

இவனன்றோ கலி காலத்தின் உத்தம புத்திரன்!
 
Miracles DO happen!

தமிழே தகராறு என்றால்

அந்நிய மொழியைப் பற்றி

சொல்வதற்கு என்ன உள்ளது!

ஆனால்.........

வாழ்த்துவதற்கு நிறைய உள்ளன!

இன்டர்நெட் வலை நீடூழி வாழ்க! :hail:

'காபி-பேஸ்ட்' பல்லாண்டு வாழ்க! :hail:

வந்தோரை எல்லாம் வாழவைக்கும்

<tamilbrahmins .com> சைட் வாழ்க! :hail:

என்றும் குறையாத எண்ணிக்கையில்

நின்று நிலைக்கும் வாசகர்கள் வாழ்க! :hail:

முடவன் கொம்புத் தேனுக்கு

ஆசைப்படலாம். கிடைக்கும்!

நிரூபணம் ஆகி விட்டது!

 
William Shakespeare.

As flies to wanton boys, are we to the Gods;
They kill us for their sport. :tsk:

Get thee glass eyes; :cool:
And, like scurvy politician, seem
To see the things thus dost not. :suspicious:

Nothing in his life
Became him like the leaving of it.
:rolleyes:
 
# 162. KING OF THE COLONY .

ஒரு ஓட்டைக் காலனியின் ஒரு

ஓட்டை செக்கரட்டரி ஆகிவிட்டார்.

தானே
த் தன்னை தேர்வு செய்து கொண்டார்.

மற்றவர் யாரும் விரும்பி முன்வராததால்

அது மிக எளிதில் சாத்தியம் ஆயிற்று.

மனதுக்குள் தானே ராஜா என்று நினைப்பு.

தன் சொந்த இடம் போல ஒரு மிதப்பு.

யாருக்கும் எதற்கும் தரவில்லை மதிப்பு.

அவர் வாயைப் பார்த்து பயந்து சிலர் :fear:

தங்கள் வீட்டை distress sale செய்தார்கள்.

கிரஹப்பிரவேசம் செய்ய வந்தவர்கள் சிலர்

செய்யாமல் திரும்பிச் சென்றதும் உண்டு. :scared:

சேரிக்காரர்கள் பாஷையில் பேசிக்கொண்டு, :rant:

அருகில் வந்தவர்களைப் பல்லால் பதம் பார்த்து

செய்து கொண்டு வந்த அட்டகாசம் தாளவில்லை.

கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே!

அந்தக் காலத்து அசுரர்கள் போலவே இவரும்

இருக்கும் இடம் தெரியாமல் சென்று விட்டார்! :bolt:

The wheels of god may grind very slow

but they do grind for sure.
 
# 163. அஸ்து தேவதை?

அவர் மிகவும் கறாராகச் சொன்னார்,

"அபிஷேகத்துக்கு நூறு ரூபாய் தக்ஷணை.

தராவிட்டால் நான் போய்க்கொண்டே இருப்பேன்

அபிஷேகம் கோவிலில் செய்ய மாட்டேன்!" :hand:

என்று போன ஆண்டு தசரா சமயத்தில்.

என்ன விந்தை! என்ன வியப்பு!

அவர் தசரா சமயம் அபிஷேகம் செய்யவில்லை.

அவர் கோவிலுக்கும் கூட வரவில்லை. :nono:

அவர் அப்போது உலகத்திலேயே இல்லை!

எதோ பிரச்சனை என்று கலங்கிய மனிதர் :dizzy:

வாசல் தெளிக்க வீட்டில் வாங்கி வைத்திருந்த

chemical சாணிப் பொடியை எடுத்து நன்கு

சிரப் போலக் கலந்து குடித்து உயிரை விட்டார்!

அஸ்து தேவதைகள் எங்கும் இருப்பார்கள்!

நாம் ஏதேனும் சொல்லும்போது "ததாஸ்து!" :high5:

நமக்கே தெரியாமல் எல்லாம் நடந்துவிடும்.

எப்போதும் நல்லவற்றையே நினைக்க வேண்டும்

எப்போதும் நல்லவ
ற்றை
யே பேச வேண்டும்.

எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்.

 
William Shakespeare.

This royal throne of the kings, this scepter'd isle
This earth of majesty, this seat of Mars,
This other eden, demi - paradise. :couch2:

And therefore, since I cannot prove a lover,
I am determined to prove a villain. :spy:

This land of such dear souls,
this dear, dear land.
:love:
 
# 164. SAREE SELLERS .

A.C.2 tier கோச்சில் வந்தார்கள் அவர்கள்.

வழி நெடுக தெலுங்கில் பேசியபடி.

பாஷை மறக்காமல் இருக்க நானும்

அவர்களோடு கொஞ்சம் "மாட
லாடி"னேன்!

கல்லூரி படிப்பு? ...."லேதண்டி!" (இல்லை).

தமிழ் அறிவு? ....... "அந்தகா தெலியது!"

(அவ்வளவு நன்றாகத் தெரியாது)

இங்கிலீஷ்?..........."ராதண்டி!"

(சுத்தமாகத் தெரியாது)

செய்யும் வேலை?....பட்டுச் சீரலு சேல்ஸ்!

(பட்டு புடவை வியாபாரம்)

மாதம் மாதம் ஹைதராபாத்தில் இருந்து

கோவை வந்து பட்டு சாரிகள் வாங்கிச் சென்று

அவர்கள் ஊரில் installment டில் வியாபாரம்.

"எப்படி பேசுவீர்கள் கோவையில்

தமிழும் ஆங்கிலமும் தெரியாமல்?"

தெலுங்கிலும், ஹிந்தியிலும் சமாளித்து விடுவார்களாம்.

காலையில் இறங்கின உடனேயே ஓட்டலில்

குளித்து, சிற்றுண்டி அருந்தி தயாராகி விட்டு,

சரக்கை எடுத்துக் கொண்டு மாலையே return!

ஒரு மாதம் கோவை வந்து சரக்கு எடுத்தால்

அடுத்த மாதம் காஞ்சிபுரம் செல்வார்களாம்.

Train fare போக நல்ல லாபம் கிடைகின்றதாம்!

இன்ஸ்டால்மெண்டில் வட்டி வேறு கிடைக்குமே!

பாஷை தெரியாத ஊருக்கு வந்து சென்று

வாழ்வாதாரத்தைப் பெருக்கும் பெண்மணிகள் :popcorn:

இவர்களைக் கண்டதும் நினைவுக்கு வந்த குறள் :clap2:

"இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின் :bored:

நிலம்என்னும் நல்லாள் நகும்." :laugh:
 
# 165. HOME PRODUCTS.

சாரீ வியாபாரிகளைக் கண்டு வியந்த எனக்கு

உடனேயே இன்னொரு வியப்புக் காத்திருந்தது. :happy:

ஒரு சின்ன sale cum exhibition community ஹாலில்.

இருபது விதமான பொடி வகைகள்.

ஒரு வேளை உபயோகத்திலிருந்து

ஒரு மாதம் உபயோகம் செய்யும் வரையில்!

ஐந்து ரூபாய் கொடுத்துப் பருப்பு
ப்பொடி வாங்கி

ஆவலாய் உண்பவர்கள் அநேகர் உண்டு.:hungry:

அவர்களை குறி வைத்துத் தொடங்கப்பட்டது இது.

நல்ல சேல்ஸ். நல்ல முயற்சி. :thumb:

நல்ல சேவை. நல்ல தொண்டு.

நாக்குச் செத்தவர்களுக்கும்,

திருமணம் தள்ளிபோகும் மனிதர்களுக்கும்,

ஹோட்டல் சாப்பாடில் வயிறு ரிப்பேர் ஆகுபவர்களுக்கும்,

இது ஒரு வரப்ரசாதம் என்பதில் ஐயம் இல்லை.

இங்கும் செய்பவர் ஒரு சுந்தரத் தெலுங்குப் பெண்ணே.

நம் அண்டை மாநிலத்தவர் எல்லோரும்

கடின உழைப்பாளிகளே! ஐயமில்லை.
:clap2:
 
காவல்காரனும், திருடனும், :spy:
கை கோர்த்துக்கொண்டால், :tea:
கவலை இல்லாமல் தினமும் :popcorn:
இரவு முழுவதும் திருடலாம்! :bump2:

How very convenient to both the persons!

More so since they are going to

share the loot equally!
 
It is said that as you do to others, they will do to you. Similarly, a life without
love is like a year without summer. Ideas should be very clear and chocolate thick.
It is better in times of need to have a friend rather than have money. Do not
choose for anyone, what you do not choose for yourself.

Balasubramanian
Ambattur
 
William Shakespeare.

Yet do I fear thy nature; :fear:
It is too full o' the milk of human kindness
To catch the nearest way. :scared:

If it were don when 'tis done, then 'twere well
It were done quickly. :moony:

I dare do all that may become a man;
Who dares to do more than none.
:confusion:
 
166. Bald head and the comb !

நம் திருமணம் முடிந்ததும் இருக்கும்

நிறையப் பட்டுப் புடவைகள் நம்மிடம்.

மகன் / மகள் திருமணத்துக்குப் பிறகு

இருக்கும் நிறையப் பட்டுப் புடவைகள்.

அந்த இடைப்பட்ட காலத்தில்...

அந்த இருபது, முப்பது வருடங்களில்...

நம் புடவைகளும் "பட், பட்" ஆகிவிடும். :pout:

புதியது வாங்கும் வழக்கம் இல்லாவிட்டால்

ஒரு காலத்தில் இருக்காது ...silk saris. :nono:

அப்போது தான் நிறையக் கல்யாணங்களும்

பிற celebration களும் குடும்பத்தில் நடக்கும்!

வயதான பிறகு, வந்து குவியும் புடவைகள்! :popcorn:

வெளியில் போக மாட்டோம் அல்லது

வெளியில் போகப் பிடிக்காது / முடியாது!

புடவை கனத்தைத் தாங்க முடியாது!

உயரமும், நீளமும் ஆளை முழுக்கும்!

இதைப் பார்க்கும் போது நினைவுக்கு வருவன

வழுக்கைத் தலையும், அழகிய சீப்பும்.

அல்லது O. Henry யின் கதையில் வரும்

Hair clip பும் Watch strap பும்! :doh:

 
# 167. Majestic paatti went poof!

நெடு நெடு என்று நல்ல உயரம்;

வெள்ளித் தலை முடி அடர்த்தியாக.

தலைவலி கூட வந்தது இல்லை.

கூன், செவிடு, B. P, sugar எதுவும் இல்லை.

ஜம்மென்று ஆஜானுபாகுவாக இருப்பார்.

அவர் ஒரு நாள் இரவு தூக்கதிலேயே

அமைதியாக இறந்து போய்விட்டார். :bolt:

எந்த symptom உம் இல்லாமல்...

பழுத்த இலை உதிர்வதைப்போல...

கனிந்த பழம் விழுவதைப்போல...

அப்போது புரிந்தது இந்த உண்மை.

Only a hair thin line separates :fear:

a man's life from his death! :sad:
 
William Shakespeare.

Will all great Neptune's ocean wash this blood
Clean from my hand? :nono:
No this my hand will rather
The multitudinous seas incarnadine
Making the green one red. :frusty:


A dagger of the mind, a false creation,
Proceeding from the heat oppressed brain.
:whoo:
 
# 168. MADI MAAMI AND WASHED CLOTHES.

சில மாமிகள் இரட்டை வேலை செய்வார்கள்.

வேலைக்காரி தேய்த்து வைத்தவற்றை

எல்லாம் மீண்டும் அலம்பி எடுப்பார்கள். :roll:

அவள் துவைத்ததை மீண்டும் அலசிக்
காய வைப்பார்கள், அதும் தங்கள் கைகளாலேயே!:washing:

காலையில் எல்லோரும் பறக்கும்/ பரபரக்கும் நேரம்.

மாமி துணி உணர்த்தும் போது விழுந்து விட்டாள்.

மிகவும் போதாத காலம் அவருக்கு;

SKIRTING மோதி மண்டை பிளந்து விட்டது,

HEAVY BLEEDING மயங்கி விட்டாள். :faint:

யாருக்கும் தெரியவில்லை இது நடந்தது.

OFFICE GOERS + SCHOOL CHILDREN

அடாவடி முடிந்து பார்த்தால்

மாமி WAS IN A POOL OF BLOOD. :shocked:

தையல் போட்டு, ரத்தம் கொடுத்து,

முடிந்ததெல்லாம் செய்தும் மாமியைக்

காப்பாற்ற முடியவில்லை.

AIR INDIA மகாராஜா போல பெரிய

தலைப்பாகை BANDAGE
உடன்

சில நாட்கள் இருந்தார் உயிருடன்

ஆனால் ACCIDENT பிழைக்கவில்லை.

மடி மாமிகள் யோசிக்க வேண்டும்

உயிரா... மடியா... எது முக்கியம்?
 
Last edited:
# 169. "அம்மா நம்ம என்ன கோத்திரம்?"

அவர் ஒரு பெரிய சீர்திருத்தவாதி! :llama:

பூணூலை முதுகு சொறியக் கூட

உபயோகிக்காமல் கழற்றி வீசியவர்.

மகனுக்கு பூணூல் போடவேயில்லை. :hand:

அதனால் அவன் நான்-பிராமின் போலவே

பேச்சு, பழக்க, வழக்கம் எல்லாமே. :hungry:

அவனுக்கு நாற்பது வயது ஆனது!

அவர் காலம் முடிந்து போனது!

'காரியம்' செய்யும் போது அவனிடம்

வாத்தியார் கேட்டார் "என்ன கோத்திரம்?"

அவன் அத்தனை பேர் முன்னிலையில்

தயங்காமல், மயங்காமல், மழுப்பாமல்,

"அம்மா! நம்ம என்ன கோத்திரம்?"
. :shocked:
 
அண்ணனும் திண்ணையும்.

அண்ணன் பெயரில் தன் மகன்/ மகள்
மணப் பத்திரிகையை அச்சடிப்பவர்கள்

உள்ளனர் இன்றும் நம்மிடையே உலகத்தில்.
உள்ளத்தின் மரியாதையைக் காட்டும் வழி.

அண்ணனின் உரிமை திண்ணையின் மேலே.
அண்ணன் இருக்கும்போது அமர முடியாது
திண்ணை மேலே அவர் தம்பி ஒருநாளும்!

அண்ணன் எப்போது வெளியே போவன்?
திண்ணை எப்போது காலி ஆகும் என்று
காத்திருப்பனாம் அன்புத் தங்கத் தம்பி!
 
இரவு முழுவதும் உறங்காமல் இருந்து, :whoo:

இரவு முடியும் முன் எழுந்து கொண்டு,

பரபரவெனப் போஸ்ட் செய்பவர்கள் :roll:

பிறரைக் கைகாட்டும்போது நினைப்பேன், :heh:

"ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை."
:rolleyes:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top