• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
Only two types of people wish for the progress of their fellow-men.

One is the teacher who wants his pupils to come up in life.

The second one is the bus conductor who keeps saying "munnukku vaanga munnukku vaanga!" :becky:

Some drivers can drive only to their front. :car:

Reverse gear sends shivers down their spine. :scared:

What will they do is they have to do street parking with hardly two feet to spare at either end of the car?
:noidea:
 
Mark Twain.

When angry count four.
When very angry swear. :rant:

The English are mentioned in the Bible.
Blessed are the meek for they shall inherit the earth. :rolleyes:

Don't part with your illusions.
When they are gone, you may still exist, :shocked:
but you have ceased to live. :doh:

 
# 292. சந்தர்ப்பவாதிகள்.

இடப் பிரச்சனை வந்ததன் பின்புலக் கதை இது!

எங்கள் ஃபிளாட்டை அடுத்த ஃபிளாட் காலி.

Owner அதை எங்கள் சஷ்டியப்த பூர்த்திக்கு

உபயோகித்துக் கொள்ள அனுமதி தந்தார்.

இன்னும் இரண்டு பாத்ரூம், இரண்டு பெட்ரூம்கள், ஒரு ஹால்

கிடைக்கும் என்று மண்டபத்தைப் பற்றி சிந்திக்கவே இல்லை.

கடைசி நேரத்தில் வைத்தார்கள் ஆப்பு ஒன்று! :shocked:

அந்த வீடு பூட்டி இருந்ததால் maintenance fees due!

அந்த பாக்கியை எல்லாம் எங்களைக் கட்டச் சொன்னார்கள்! :popcorn:

"ஒரு நாள் கூத்துக்காக இன்னொருவரின் dues

நாங்கள் ஏன் கட்டவேண்டும்?" என்று கேட்டால்

சாவியைத் தரமறுத்து விட்டார்கள். நண்பர்களாம்!!! :mad2:

சந்தர்ப்பவாதிகள் என்றால் யார் என இனம் கண்டுகொண்டேன்.

ஒன்று பணம் கிடைக்கும் அல்லது எங்களுக்கு இடைஞ்சல்.

இரண்டுமே அவர்களுக்குப் பிடித்தது தானே!

ரூல் பேசினால் நம்மை யாருக்கும் பிடிக்காது

ஏன் என்றால் உலகில் 99 % unruly people! :doh:
 
# 293. "சரியான பேஜார் பார்ட்டி!"

திடீரென ஜாகை மாற்றவேண்டிய நிர்பந்தம் எங்களுக்கு.

வாடகை வீட்டை நான் விரும்பவில்லை. :nono:

எப்போதும் யாரவது அதிகாரம் செய்வார்கள்!

அல்லது திடீரென்று காலி செய்யச் சொல்லுவார்கள்!

ஒற்றை அறை வீடாக இருந்தாலும் போதும்;

"வெளியே இறங்கு!" என்று யாரும் சொல்லக் கூடாது

என்று மிகவும் பிடிவாதமாக இருந்தேன் நான்.

மூட்டை கட்டுவதும், பிரித்து எடுத்து வைப்பதும்

என் தலையில் தானே மொத்தமாக விழும். :whoo:

கொஞ்சம் interior ஏரியாவில் ஒரு குட்டி ஃபிளாட்!

ஏழைக்கேற்ற எள்ளுருண்டை போல இருந்தது.

தொடங்கும் போது இருந்ததை விடவும் cost per sq foot

மூன்று மடங்கு "மூக்கு வழியாகக் கொடுத்தோம்!"

(PAID THROUGH THE NOSE இன் தமிழாக்கம்!)

ஆனால் ஃபிளாட்டை முடிப்பதாகவே இல்லை! :spy:

கேட்டால்,"உங்களுக்கு முன்னால் பணம் கட்டியவர்கள்

எத்தனையோ பேர் இருகிறார்கள். பொறுங்கள்!"

என்ற ஒரே பதில் கீறல் விழுந்த ரெகார்ட் போல!

எங்களைப் பார்த்ததுமே "சரியான பேஜார் பார்ட்டி!"

எங்கள் காது படவே சொல்லலானான் SUPERVISOR

இதுவேலைக்கு ஆகாது என்று நான் ஒரே போடாகப் போட்டேன்.

"நீங்கள் சொல்லுவது சரிதான்!

நாங்கள் கடைசியாக வந்திருக்கிறோம்.

நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம்.

ஆனால் நாங்கள் கட்டிய அதிகப் பணத்தைத்

திருப்பித் தந்து விடுங்கள்!" என்றேன்

அவன் அதை எதிர் பார்க்கவில்லை.

கடைசியில் வந்ததற்குத் தானே 300 % பணம்!

பிறகு பொறுத்துக் கொள் என்றால் என்ன பொருள்?

பிறகு வேறு வழி இல்லாமல், மனதும் இல்லாமல்,

ஒரு வழியாக வேலையை முடித்துக் கொடுத்தான்.

எத்தனை விதமான மனிதர்கள் நம்மை ஏய்க்கக்

காத்துக் கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள்! :suspicious:


 
I do not know the reason really! :confused:

These posts in Tamil appear alright.

When blogged they become hieroglyphics. :faint:

If I am not able to sort out this problem,

I may stop bloging my tamil writeups and poems.

You may have to read them directly from the threads.

Sorry for the inconvenience caused but

things appear to be beyond my control.
 
Peter Ustinov.

As for being a General, well, at the age of four with paper hats and wooden swords we're all Generals. :fencing:
Only some of us never grow out of it. :doh:

A diplomat these days is nothing but a head-waiter :roll:
who is allowed to sit down occasionally. :couch2:
 
# 294. Copper thread embroidery.

படி ஏறி இறங்கவும், காலை வீசி நடக்கவும்

எளிதாக இருக்கும் சூடிதார் அணித்து

அமெரிக்கப் பயணம் தொடங்கியது.


கோவையில் ஒரு பிரச்சனையும் இல்லை, நல்லவேளை.


சிங்கப்பூரில் ஒரு சிறிய metal detector warning.


கழுத்துத் செயினைக் கழட்டிய பிறகு MUM ஆயிற்று


L. A. வில் மாட்டிக் கொண்டேன் நன்றாக.


நிஜமாகவே "Hands up! pants down !" ஆயிற்று

பிரைவேட் அறையில். :shocked:


knee guard sox கழற்றச் சொல்லி cotton வைத்துத்


துடைத்து எடுத்து analyse செய்தார்கள்!


metal detector ருக்கும், முட்டி சாக்ஸ்சுக்கும் என்ன தொடர்பு?


அவர்களிடம் கேட்க முடியுமா? லா upholders ஆயிற்றே.


அரை மணி கழித்து "She is clean! sorry" :sorry:

சொல்லி அனுப்பி வைத்தார்கள்!


என்ன பிரச்சனை? எப்படி வந்தது ?


ஒரு சிறு பின் அல்லது ஹேர்பின் கூட

அணிந்திருக்கவில்லை நான்


பிறகு strike ஆயிற்று
icon3.png


அந்த புது கமீஸில் இருந்தது


ஒரிஜினல் copperwire embroidery !!! :whoo:
 
# 295 . "Can I give you a hug ?"

சிங்கப்பூர் air port. என்ன மாதிரி செட்டிங் தெரியவில்லை.


யார் நுழைந்தாலும் ஆண் பெண் பாகுபாடு இன்றி


மெடல் detecter அலறியது. என் பாடு கோவிந்தா!


எல்லோரையும் மறுப்புச் சொல்லாமல் அனுமதிக்கும்போதே


எனக்கு மட்டும் சிறப்பான பிரச்சனைகள் வருமே!


இன்று இங்கு என்ன நிகழப் போகிறதோ?


என்ன ஆச்சரியம். ஒரு சின்ன beep கூட இல்லை.


என்னாலேயே நம்ப முடியவில்லை.


அப்போது அங்கிருந்த ஒரு ivory பொம்மை chinese

பெண்ணைக் கேட்டேன் நான், "Can I give you a hug ?"


"Sure go ahead! " என்றாள் சிரித்துக் கொண்டே.


என் மருமகளைத் தழுவது போலத் தழுவிக்கொண்டேன். :hug:


அவளுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. :becky:


பெண்களின் personal space சிறியது என்பது உண்மையே. :high5:


இரண்டு முன்பின் தெரியாத ஆண்களால்

இப்படிச் செய்யமுடியுமா? :rolleyes:
 
First of all life requires Discipline, that is what my Guru used to say, when
we attend discourses. He used to say one should have certain basic concepts
in them to be complied with like "Acceptance of the situation, event; Will (Mind) power
to undertake the assignment (whether it is easy or difficult), Hard work (one should
not get afraid of facing the work), Industrious (diligent) and above all that
Persistence (continue to do the assigned task in a determined way inspite of
difficulties) to be followed strictly to have a disciplined way of life. If we co-relate
the first letter of the Bold words, we would find an acronym "A Whip". This we
can take or assume it as a Command from our Well Wisher i.e. Guru. It is easy to
remember also. Why, for e.g. if you take the effects of hunger, curiosity, etc tests our
nerves at times and they indirectly teaches us a discipline. A disciplined life will
be a happy life.

Balasubramanian
Ambattur
 
# 296. "Mrs. Rao ! Take your plate with you!"

கணவன் பெரிய officer.

வசித்து வந்தது பெரிய வீட்டில்.


மொத்தம் நான்கு வேலைக்காரகள்,


வீட்டுவேலைக்கு , துணி துவைக்க,


தோட்டக்காரன், சமையல்காரன்.

உண்டி சுருங்காமல், உடல் உழைப்பைச் சுருக்கி :couch2:

உடல் எடையை பெருக்கினார் ஆபீசர் மனைவி.


முதல் மகன் காதல் திருமணம் செய்து
கொண்டான்.

பெண் வேறு யாரும் அல்ல ஒரு original tam bram girl!


இங்கே செய்வது போல சாப்பிட்ட தட்டை

மேஜையில் விட்டுவிட்டு
சீமாட்டி கை கழுவச் சென்றார்.

அப்போது மருமகள் சொன்னாள்,


"Mrs. Rao ! Take your plate with you!" :heh:


அமெரிக்காவில் எந்த வேலைக்காரி இருக்கிறாள்?


இவர் இப்படிச் செய்து இருக்க வேண்டாமே!


அடுத்த நாள் பட்டுப் புடவையைக் கொடுத்து


பெட்டி போட்டுத் தரச் சொன்னார் மருமகளிடம்.


"உங்கள் வேலைகளை நீங்களே செய்து கொள்ளுங்கள்!


எனக்கு நிறைய வேலைகள் ஏற்கனெவே உள்ளன." :nono:


கோபம் வந்து விட்டது சீமாட்டிக்கு.


குளிப்பதற்கு மாடி ஏறிச் செல்ல வேண்டும்


(ground floor இல் பாத் ரூம் இராது.)


பற்றாக்குறைக்குத் தன் வேலைகளைத்


தானே செய்து கொள்ள வேண்டுமாம்!


என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறாள் இவள் என்ற


கோபத்தில் ஒரு சபதம் செய்தார் அப்போதே


"இனி எந்த காரணத்துக்கும் அமெரிக்கா வரமாட்டேன்!":high5:

 
# 297. Metal detector turned into a howling wolf!

மகனின் நண்பனின் பெற்றோர் வந்திருந்தனர்.

கதைத்துக் கொண்டிருத்போது இதைச் சொன்னார்.


வரும் போது நல்ல காஞ்சிபுரம் புடவை

கட்டி
க்கொண்டிருந்தாராம்.

அவர் வெகு தொலைவில் வரும்போதே

மெடல் detector
wolf whistle :whistle:

அடிக்கத் தொடங்கியதாம்.


உள்ளே நுழையவிடவில்லை அவரை.
:hand:

வேறு வழியின்றி சேலையைக் கழற்றி வீசிவிட்டு


metal detector வழியாக உள்ளே வந்தாராம்!
:doh:

துச்சாதனனின் மறு பிறவியோ அது?
:rolleyes:

அது சரி ஓரு சின்ன embroidery யே என்னை


அந்தப் பாடு படுத்தியபோது கனமான பட்டு


ஜரிகைச் சேலை என்ன பாடு படுத்தாது?


 
Henry Vaughan.

My soul there is a country
Far beyond the stars, :flame:
Where stand a winged sentry
All skilful in the wars. :angel:

Happy those early days! When I :happy:
Shin'd in my Angel-infancy.
:baby:
 
# 298. A cricket player with a good aim.

நெருங்கிய உறவில் ஒரு திருமணம் நிச்சயம் ஆனது.


கன் நமது உறவு.

மணமகள் ஒரு கிரிக்கெட் பிளேயர்!


அதுவும் spin bowler! செந்தமிழில் சொன்னால்


பாலைத் திருப்புற சுந்தரி!


நல்ல உடல் கட்டு, பலம், உயரம் இத்யாதி...


பயல் நோஞ்சான் - இள வயது நாகேஷ் போல!


எதை வைத்து ஜோடி பாத்தார்கள்/சேர்த்தார்கள்


அந்தச் செந்தில் ஆண்டவனுக்கே வெளிச்சம்!


A little incompatibility might be O.K!


இந்த வித்தியாசம் மிகவும் gross.


மற்ற சராசரிப் பெண்கள் கோபம் வந்தால்


சாமான்களை விசிறி அடிப்பார்கள் random ஆக!


இவள் நன்கு குறி பார்த்து அடிப்பாளே!


"பயல் என்ன பாடு படப் போகின்றானோ?" என


நான் மிகவும் கவலைப்பட்டேன்!
:sad:

உப்புச் சப்பு இல்லாத காரணத்தால்


திருமணம் நின்று போனது.


பயல் அதிர்ஷ்டக்காரன். பிழைத்தான்;
:happy:

அவள் என்ன ஆனாள் தெரியவில்லை.


வேறு யாராவது குறிக்கு இலக்கு ஆனார்களா


அதுவும் தெரியவில்லை.
:brick:

நமக்குத் தெரியாதவரைப் பற்றிக் கவலைப்பட்டு


என்ன பயன் கூறுங்கள்.


"எல்லாம் நம்மைக்கே"
என்பதை இந்த நிகழ்ச்சி


மீண்டும் ஒருமுறை உறுதி செய்தது!
:high5:
 
# 299. "இப்போவே ஈயம் பூசின பாத்திரம் வேணும்!"

பெண்ணின் தந்தை அரசாங்கத்தில் பெரிய ஆபீசர்.


நல்ல செல்வாக்கும், செல்வமும், மதிப்பும் உடையவர்.


அப்பழுக்கு இல்லாமல் தன் அதிகாரத்தைத்


துஷ் பிரயோகம் செய்யாமல்

நல்ல பெயருடன் இருந்து வந்தார்.


அவருக்கு வந்தது வாழ்க்கையில் ஒரு திடீர் சோதனை


மகள் திருமணத்தின் போது,


சம்பந்தி அம்மாள் வடிவத்தில்.


சீர் பாத்திரங்களைப் பார்த்தவர் முகம்


சுண்டிவிட்டது சுண்டைக்காய் போலவே!
;pout:

புது பித்தளைப் பாத்திரங்களில்

ஈயம் பூசும் வழக்கம் இல்லை!


புழங்குவதற்கு முன்பு நாம் பூசிக் கொள்ள வேண்டும்.


ஈயம் பூசி இருந்தால் பழையபத்திரம் என்று

ஐயப்படுபவர்களும் உண்டு.


இவர் அந்த ராத்திரியில் சொல்கிறார்,


"இப்போவே ஈயம் பூசின பாத்திரம் வேணும்!"
:high5:

மகளை அவர்களுடன் அனுப்புவதற்கு முன்பு

ஈயம் பூசித் தருகிறேன்
என்று எவ்வளவோ

சொன்னபோதும் கேட்கவில்லை அம்மையார்.
:hand:

இப்போதே என்று மூன்று கால் முயல் பிடித்தவர்

ஆனார்.


வாழ்க்கையிலேயே முதல் முறையாகத்

தன் பதவியைப்
பயன்படுத்தி

இரவோடு இரவாக அத்தனை
பத்திரங்களுக்கும்

ஈயம் பூச ஏற்பாடு செய்த்தார் அவர்.


மணம் முடிந்துவிட்டால் யாரும் சீந்த மாட்டார்கள் என


மணத்துக்கு முன்பே அவர் அதிகாரத்தை

நிலை நாட்டினார்
அம்மையார்!

இந்த மாதிரி மாமியாரிடம் நாட்டுப் பெண்

எப்படி அன்பு செலுத்த முடியும்?
:shocked:
 
# 300. "ஈயச் சொம்பு எங்கே ?"

எப்போதும் தண்ணீர் ஊற்றிய பிறகே ஈயச் சொம்பை

அடுப்பின் மேல் வைப்பது வழக்கம் அல்லவா?


அன்று அம்மா ஞாபக மறதியாக சொம்பை

அடுப்பில்
வைத்துவிட்டு

தண்ணீரை எடுத்து ஊற்றுவதற்குள்


சொம்பு மாயமாக மறைந்து விட்டது.


"நெருநல் உளன் ஒருவன்..." கேட்டிருக்கிறோம்


ஒரு நொடியில் என்ன ஆகி இருக்க முடியும்?
:confused:

ஒருவேளை வைக்க மறந்து விட்டோமோ என்று


அடுக்களை முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.


அது மரப்பொடியில் எரியும் அடுப்பு.
:flame:

அப்போதெல்லாம் காஸ் அடுப்புக் கிடையாது.


விறகு அடுப்பு, கரி அடுப்பு, மரப்பொடி என்று


வேறு வேறு அடுப்புகளில் ஏற்றிச் சமைத்த காலம்.


அடுத்த நாள் சாம்பலைக் கொட்டும்போது

அதில்
புதையல் போல பளபளக்கும்

ஒரு வெள்ளி உருண்டை! :love:

சொம்பு மாயமானதன் மர்மம் அப்போது விளங்கியது!


அம்மா எப்போதும் போல ஒரு புது யுக்தியைக்


கண்டு பிடித்துக் கையாண்டார் சமைக்கும்போது.


ஈயத்தில் ரசத்தை வைப்பதற்கு பதிலாக


ரசத்தில் ஈயத்தை போட்டுக் கொதிக்க வைத்து


அதே ருசியையும் சுவையையும் உண்டாக்கினார்.


நாங்கள் அதை வைத்து விளையாடுவோம்


காகிதத்தில் அழகாக எழுதுவோம்.


உருகியபிறகு அதன் உபயோகம்

அதிகரித்தது உண்மை.
:rolleyes:

 
அன்பு நண்பர்களுக்கு,
வேலை பளுவைக் கொஞ்சம் குறைக்க வேண்டி இருக்கிறது. நிறைய வேலைகள் ஒன்றரை ஆண்டுகளாக நின்றே போய்விட்டன.
இன்னும் ஒரு அமெரிக்கப் பயணம் உருவாகும் போலத் தெரிகிறது.
அதற்கு முன்பு செய்ய வேண்டியவை ஏராளம் ஏராளம்.
எனவே இனி ஒரு நாளைக்கு இரண்டு போஸ்டுகளுக்கு பதிலாக ஒரு போஸ்ட் என்று குறையும்.

கல்யாண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மீண்டும்
சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்களைத் தொடருவேன்.
உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 
குட்டக் குட்டக் குனிபவர்கள் உள்ளவரை :hail: :hail:

குனியக் குனியக் குட்டுபவர்கள் இருப்பார்கள்!
:whip: :brick:
 
தலையாலே காலைத் தாங்கினால்
வாமனன் செய்தது போலவே
பாதளத்தில் அழுத்தியும் விடுவார்கள்!:shocked:
 
I made an oblique reference to an age old story.
LO and behold!
Immediately it was proved to be true beyond any doubts
by the spitting of poison!

Who can know about a person better than himself??? :rolleyes:
 
# 299.
மணம் முடிந்துவிட்டால் யாரும் சீந்த மாட்டார்கள் என
மணத்துக்கு முன்பே

அவர் அதிகாரத்தை நிலை நாட்டினார்
அம்மையார்! .........

புதிய 'ஸ்டையில்' கருதி, 'கேட்டிருந்த' இருபத்தி ஐந்து சவரனுக்கும், தன் இஷ்டப்படி நகை செய்து கொண்டாள் மணமகள்.

செய்து வைத்தது எல்லாமே ஒற்றை வரிச் செயின்கள்! சம்பந்தி வீட்டிலிருந்து, சம்பந்தமே இல்லமால் ஒரு பெரியவர்(!),

தம் வீட்டு 'ராஜா' மாப்பிள்ளை, இரட்டை வரிச் செயின் தராவிட்டால், தாலி கட்ட மாட்டான் என்று ரகளை செய்து,

இரவோடு இரவாக பக்கத்து டவுனுக்குச் சென்று நகை வாங்கி வர வைத்தது, எங்கள் வீட்டுத் திருமணம் ஒன்றிலேயே

நடந்தது!
மனித
மனம் சில வேளைகளில் ராக்ஷச குணம் கொண்டது!


குறிப்பு: இது நடந்தது, சவரன் நூறு ரூபாய் விற்ற காலம்; எனினும், Four digit salary என்று பெருமை பேசிய காலம்!! :thumb:



 
....நடந்தது! மனித மனம் சில வேளைகளில் ராக்ஷச குணம் கொண்டது!
Dear Mrs. RR, life is like that, full of hypocrisies and self-righteous banalities. The bottom line is, those with upper hand get to dictate, and all others must prostrate and gulp it. The same family, when faced with equally demanding groom-side, will cry wolf, completely impervious to the irony of their own rank hypocrisy. Well, life is like that, even when they themselves say so.

Cheers!
 
Dear Prof. Sir,

We learnt a lot by such episodes and never gave any trouble to our 'sambandhi's, when the boys in our family circle were married.

இது கதை அல்ல; நிஜம்! :)

Regards............
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top