• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
விவாஹத்தில் தவிர்க்க வேண்டியவை

விவாஹத்தில் தவிர்க்க வேண்டியவை

Maha Periyavaa, Spiritual April 20, 2013


1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.

2. காசியாத்திரை: முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)

3. ஊஞ்சல்: சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.

4. பாணிக்ரஹணம்: சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.

5. கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.

6. பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.

7. விவாஹப் பணம் (Dowry): மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.

8. வரவேற்பு: முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.

9. திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.

10. கூரைப்புடவை: மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.

1966-ல் பரமாச்சார்யாள் உத்தரவு: “என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்”.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
 
What is true secularism?

WHAT IS TRUE SECULARISM?


10494902_803753899646523_5212248821955502463_o.jpg
 
Mahaperiyava on Paba and Punya

Mahaperiyava on Paba and Punya


Nobody wants to be known as a sinner, but all the same we keep transgressing the bounds of morality and disobey the divine law. We wish to enjoy the fruits of virtue without being morally good and without doing anything meritorious.



Arjuna says to Bhagavan Krsna: "No man wants to commit sin. Even so, Krsna, he does evil again and again. What is it that drives him so? ". The lord replies "It is desire. Yes, it is desire,
Arjuna ".



We try to gain the object of our desire with no thought of right or wrong (Dharma or Adharma). Is fire put out by ghee poured into it? . No, it rises higher and higher. Likewise, when we gratify one desire, another, much worse, crops up. Are we to take it, then, that it would be better if our desires were not satisfied? - No. Unfulfilled desire causes anger, so too failure to obtain the object we hanker after. Like a rubber ball thrown against the wall such an unsatisfied desire comes back to us in the form of anger and goads us into committing sin. Krsna speaks of such anger as being next only to desire (as an evil).



Only by banishing desire from our hearts may we remain free from sin. How is it done? We cannot but be performing our works. Even when we are physically inactive, our mind remains active. All our mental and bodily activity revolves around our desires. And these desires thrust us deeper and deeper into sin. Is it, then, possible to remain without doing any work? Human nature being what it is, the answer is "No". "-- It is difficult to quell one's thinking nor is it easy to remain without doing anything-- ", says Tayumanavasvamigal.

We may stop doing work with the body, but how do we keep the mind quiet? The mind is never still. Apart from being until itself, it incites the body to action.



We are unable either to efface our desires or to cease from all action. Does it then mean that liberation is beyond us? Is there no way out of the problem? Yes, there is. It is not necessary that we should altogether stop our actions in our present immature predicament. But instead of working for our selfish ends, we ought to be engaged in such work as would bring benefits to the world as well as to our inward life. The more we are involved in such work the less we will be drawn by desire. This will to some extent keep us away from sin and at the same time enable us to do more meritorious work. We must learn the habit of doing work without any selfish motives. Work done without any desire for the fruit thereof is Punya or virtuous action.




We sin in four different ways. With our body we do evil; with our tongue we speak untruth; with our mind we think evil; and with our money we do so much that is wicked. We must learn to turn these very four means of evil into instruments of virtue.



We must serve others with our body and circumambulate the Lord and prostrate ourselves before him. In this way we earn merit. How do we use our tongue to add our stock of virtue? By muttering, by repeating, the names of the Lord. You will perhaps excuse yourself saying: "All our time is spent in earning our livelihood. How can we think of God or repeat his names? " A householder has a family to maintain; but is he all the time working for it? How much time does he waste in gossip, in amusements, in speaking ill of others, in reading the papers? Can't he spare a few moments to remember the Lord? He need not set apart a particular hour of the day for his japa. He may think of God even on the bus or the train as he goes to his office or any other place. Not a paisa is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name (Bhagavannama) is the only current coin in the other world.




The mind is the abode of Isvara but we make a rubbish can of it. We must cleanse it, install the Lord in it and be at peace with ourselves. We must devote atleast five minutes every day to meditation and resolve to do so even if the world crashes around us. There is nothing else that will give us a helping hand when the world cosmos is dissolved.
It is by helping the poor and by spreading the glory of the Lord that we will earn merit.



Papa, sinful action, is two-pronged in its evil power. The first incites us to wrong-doing now. The second goads us into doing evil tomorrow. For instance, if you take snuff now you suffer now. But tomorrow also you will have the same yearning to take the same. This is what is called the vasana that comes of habit. An effort must be made not only to reduce such vasana but also cultivate the vasana of virtue by doing good deeds.



It is bad vasana that drags us again and again into wrong-doing. Unfortunately, we do not seem to harbour any fear on that score. People like us, indeed even those known to have sinned much, have become devotees of the Lord and obtained light and wisdom. How is Isvara qualified to to be called great if he is not compassionate, and does not protect sinners also? It is because of sinners like us that he has come to have the title of "Patitapavana" [he who sanctifies or lifts up the fallen with his grace]. It is we who have brought him such a distinction.



"Come to me, your only refuge. I shall free you from all sins. Have no fear (sarvapapebhyo moksayisyami ma sucah). " The assurance that Sri Krsna gives to free us from sin is absolute. So let us learn to be courageous. To tie up an object you wind a string round it again and again. If it is to be untied you will have to do the unwinding in a similar manner. To eradicate the vasana or sinning you must develop the vasana of doing good to an equal degree. In between there ought to be neither haste nor anger. With haste and anger the thread you keep unwinding will get tangled again. Isvara will come to our help if we have patience, if we have faith in him and if we are rooted in dharma.



The goal of all religions is to wean away man- his mind, his speech and his body- from sensual pleasure and lead him towards the Lord. Great men have appeared from time to time and established their religions with the goal of releasing people from attachment to their senses, for it is our senses that impel us to sin. "Transitory is the joy derived from sinful action, from sensual pleasure. Bliss is union with the Paramatman. " Such is the teaching of all religions and their goal is to free man from worldly existence by leading him towards the Lord.


Papa and Punya from the Chapter "Religion In General", in Hindu Dharma : kamakoti.org:
 
அருள்வாக்கு - சிரத்தை!

அருள்வாக்கு - சிரத்தை!

‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்’ மனஸு தளராமல், நம்மால் முடிந்த முயற்சியை விடாமல் பண்ணிக் கொண்டே போனால், எத்தனை காலமானாலும் ஸரி, முறையான முன்னேற்றம் காண ஆரம்பித்து முடிவிலே லக்ஷ்யத்தைச் சேர்ந்து விடலாம். நம்பிக்கை முக்யம். ச்ரத்தை என்பது அதுதான். ‘ஸ்வாமி கைவிட மாட்டார். சாஸ்த்ரமும் குருவும் காட்டும் வழி வீணாய்ப் போகாது’ என்ற த்ருடமான நம் பிக்கைக்குத்தான் ச்ரத்தை, ச்ரத்தை என்று பெயர்.

நாம் பேச்சுவழக்கில் ‘ச்ரத்தையாக ஒன்றை ஒருத்தர் பண்ணினார்’ என்று சொல்லும்போது ‘ஸின்ஸியராக, மனப்பூர்வமாக’ என்ற அர்த்தத்திலேயே அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம். வாஸ் தவத்தில் அது ‘நம்பிக்கை’ என்பதைத்தான் முக்யமான அர்த்தமாகக் கொண்டது. ஆழ்ந்த நம்பிக்கையால் ஏற்படுகிற ‘ஸின்ஸியாரிடி’யோடு ஒருத்தர் ஒன்றைப் பண்ணுவதே ‘ச்ரத்தையோடு பண்ணுவது.’

நேராக நமக்கு ப்ரூஃப் கிடைக்கும் விஷயங்களில் ‘நம்பிக்கை’ என்பது தேவையில்லை. ஆனால், மத சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கும் அநேக விஷயங்களுக்கோ இப்படி ப்ரத்யக்ஷ ப்ரூஃப் இருக்காது; சிலது ப்ரத்யக்ஷத்துக்கு நேர்மாறாகக் கூடத் தோன்றும். ‘புண்யம் பண்ணினால் நல்லது கிடைக்கும், பாபம் பண்ணினால் கெட்டது கிடைக்கும்’ என்று எல்லா மதங்களிலும் இருக்கிறது. ஆனால், ப்ரத்யக்ஷத்தில் அநேக பாபங்கள் பண்ணுபவர்கள் நல்லபடி வாழ்வதையும், புண்ய கர்மாக்கள் பண்ணுபவர்கள் கஷ்டப்படுவதையும் பார்க்கிறோம்.

இப்படியிருக்கிறதே என்றால், அதற்கு நம் ஹிந்து சாஸ்திரத்தில், ‘ஒரு ஜன்மாவுக்குள்ளேயே பாப - புண்ய பலன்கள் தெரிந்தாக வேண்டுமென்றில்லை. அநேக ஜன்மாக்களில் பலன்கள் தொடரும். இன்றைக்கு ஒரு பாவி ஸுகப்படுகிறான், புண்யவான் கஷ்டப்படுகிறான் என்றால் ஜன்மாந்தரத்தில் இந்தப் பாவி புண்யம் பண்ணியிருக்கிறான். அந்தப் புண்யவான் பாவம் பண்ணியிருக்கிறான் என்று அர்த்தம்’ என்று சொல்லியிருக்கிறது. இதை நாம் ப்ரூஃப் பண்ணிக் கொள்ள முடியாது. இங்கேதான் நம்பிக்கை - அதாவது ச்ரத்தை - தேவைப்படுகிறது. இதே மாதிரி இன்னும் அநேகம் ச்ரத்தையின் மேலேயே ஒப்புக் கொள்ள வேண்டியதாயிருக்கிது.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


????????????: ??????????? - ???????!
 
An event in NJ to announce Mahaperiyava Manimandapam in USA

An event in NJ to announce Mahaperiyava Manimandapam in USA

Dear devotees who live near NJ,


The Board of Sanatana Dharma Foundation Inc is very pleased to invite everyone to a special occasion that has been planned to announce the initiative to bring forth a Maṇimanḍapa For His Holiness Chandraśekharendra Sarasvatī Svāmigal (68th Śankarāchārya of Kānci Kāmakoṭi Pīṭha) in New Jersey. On this occasion, there will be a Muthuswami Dikshitar Aradhana Concert by Sri Prasanna Venkatesh/Smt Radhika Mani/Sri Kumar Kanthan.


Please mark your calendar, attend in large number to show your support and be part for this great initiative. The key members from the core committee will be more than happy to spend time with each of you to answer any question you might have and engage you going forward also….


Folks in DC, MD, PA, NY – You won’t regret driving to this event as it would be a great opportunity to spend few hours on Periyava satsang.


All North America devotees – Stay tuned for another post related to this same initiative.


Jaya Jaya Sankara Hara Hara Sankara


An event in NJ to announce Mahaperiyava Manimandapam in USA | Sage of Kanchi
 
Veda class - fresh batch - for beginners - for all age groups .

Veda class - fresh batch - for beginners - for all age groups .


Fresh batch, for all age groups, will be held twice a week (Saturdays and Sundays) in the evening hours in West Mambalam area of Chennai.



Those who had Upanayana Samskara and interested to learn at least some portions in Yajur Veda may contact Sri Vijaya Sundaram at 9840818551 for further details.



Source:Krishna Balaji
 
Nature of True Bhakti

Nature of True Bhakti

True Bhakti or devotion is that condition of a devotee’s mind when it is unable to bear even a moment’s separation from the shelter of God, and when even if is forcibly withdrawn from that shelter, by force of circumstances, it struggles and rushes back and attaches itself to God, like a needle to a magnet.

Ankolam nija beeja-santatih ayaskaantopalam soochika,​
Sadhvee naija vibhum lataa kshitiruham sindhuh sarid​
Vallabham;​
Praapnoteeha yathaa tathaa pasupateh paadaaravindadvyam,​
Chetovrittir-upetya tishthati sadaa saa bhaktirityuchyate.​
acall29.jpg

This verse occurs in Sivaananda Lahari, and in it, Sri Sankara Bhagavatpada has explained what real bhakti is. The relationship between the devotee and Isavara is explained with reference to five examples. They are: the tree known as ankolam and its seeds; the lodestone and the needle; a chaste woman and her husband; a creeper and a tree; and a river and the ocean. The ankola tree (azhinchil maram in Tamil) is found in the forest. It is that when its fruit falls to the ground, the seeds, liberated from the fruit by some compelling force within, move close to the trunk of the tree, gradually climb up, and get inseparable attached to the tree. During my travels, I was shown this tree in a forest. I saw the seeds sticking to the trunk of the tree, though I was not able to observe the actual movement of the seeds from the ground to the tree. The example of the seeds which fall away form the tree struggling back and attaching themselves to the tree, is denoted by the words, ankolam nija beeja santatih.
The next example given is ayakaantopalam soochika .Ayaskaanta means magnet, upalam means stone, and soochika means needle. When a needle is brought near a lodestone, it rushes towards the stone and gets itself attached to it. Similarly, the mind of a devotee rushes towards God and finds a heaven there. The next example is that of a saadhvee, a pativrata or chaste woman and her husband, is significant. The literal meaning of vibhuh is, one who pervades everywhere. The idea Sri Sankara wants to convey by using the term vibhuh is that a true pativrata has only the thought of her husband uppermost in her mind, all the time, whatever other objects may be in front of her eyes. She is so saturated with the thought of her husband that she sees her husband, whichever way she may turn. So also a bhakta see only God in everything around him.

The example of Lataa creeper, and kshitiruha tree, is next given to indicate the mind’s frantic efforts to get itself attached to Isvara like a creeper to a tree. As a creeper grows, its shoots sway hither and thither, in an attempt to get a hold on something to which they can attach themselves. The moment the shoots come into contact with a neighbouring tree, the creeper winds itself around that tree, get itself attached to the tree. The mind of the devotee is constantly in search of Isvara, and the moment He is realised, it attaches itself to Him inseparably.


The last example is that of the sindhuh, river and SaridvallabhaOcean. A river has a small origin on a mountain. In the intial stage of its course, which can be compared to our own childhood, the river is noisy, plays about by jumping from one rock to another, and is resless and so flows fast. Its speed reflects its anxiety to join the ocean. When nearing the sea, the river becomes calm and placid. This state can be compared to a woman’s humility, shyness, and serenity in the presence of her husband. The ocean, being a loving husband, rushes forward to receive the river in her arms. That is why the river water is saltish for some distance inland from its mouth. Similarly, the restless soul finds serenity when it reaches the proximity of God, and finally gets engulfed in that ocean of Supreme Bliss.

Sri Sankara has expounded advaita tatva both in the main them of the verse and in the illustrating similies. Water from the sea evaporates into cloud and returns to the earth as rain. The rainwater goes back to the sea as rivers. In that way a circle is completed. The river and the sea, though apparently two, are in reality one. By the process of evaporation, the volume increased by the inflow of river waters. In the same way, everything in this universe is part of God. He is everything and everything ultimately merges in Him. He is Full always, and His fullness is in no way affected either by creation or by the merger in Him of the created beings.

The human soul, jeevatma, is restless like a creeper, in search of a support to sustain it, and eager to rejoin its source, like the river is to rejoin the ocean, its ultimate source. As the jeeva gets to be more and more proximate to God, it obtains saanti or serenity, like that which the waters of a river attain near the river’s confluence with the sea. The bhakta, who eventually becomes a jnani see only Isvara in everything, even as a pativarata thinks only of her husband and lord. When the should finally finds its haven in the Paramaatma, it unites with the Paramaatma, like creeper bugging a tree, or a needle flying to and getting attached with a magnet. If, for any reason, the jeeva is forcibly detached from Isvara, it becomes restless, struggles and eventually gets back to Isvara.


When our devotion to God is motivated by a desire to secure some earthly benefit, it ceases to be real bhakti; it becomes a barter. But when our bhakti is for our spiritual elevation, we attain the saanti of the river when it is near its Lord, the Ocean. The devotee begins his quest for bliss with devotion to One, who, he thinks is outside him. When the devotion is selfless, that is, when the quest is a quest of his own real self, the dvaita bhaava (the duality of God and himself) changes into advaita bhaava, the oneness of himself and God. He surrenders himself absolutely and unreservedly to the Paramaatma, and becomes one with that Only paadaaravinda dvayam Chetovrithirupetya tishthati. We must all strive to develop the kind of devotion to Isvara indicated in the verse from Sivaananda Lahari I have quoted in the beginning.

February 8, 1958

Nature of True Bhakti : kamakoti.org

 
Mahaperiyavaa speech - vol 1

MAHAPERIYAVAA SPEECH - VOL 1

https://www.youtube.com/watch?v=hNpjqj6aAek



காஞ்சி குரு கூறியபடி குழந்தைகளை

வெள்ளி கிழமை தோறும் விநாயகர் அகவலை படிக்க

சொல்வோம்! நாமும் பிள்ளையாரின் குழந்தேள் தான் !

நாமும் படிப்போம்!

A RARE SPEECH OF SRI KANCHI MAHA SWAMIGAL....
MAY HIS BLESSINGS BE SHOWERED ON YOU ....
PLEASE DONATE LIBERALLY FOR THE GREATE
 
Veda Dharma Sastra Paripalana Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Sastra Paripalana Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Shastra Paripalana Sabha - 19th Visesha Upanyasam on 12th October 2014 at Residence of Mr. S Parthasarathy G 2 Kala Flats, 94/58, 10th Avenue, Ashoak Nagar, Chennai 600083.

Upanyasam Presented by Brahmashree Bharanidhara Sasthrigal on "Guru Bhakthi" from 6:30 PM to 8:00 PM


10479722_371420789679633_3661267997952031001_n.jpg





Source: Sage of Kanchi
 
மாருதி மஹிமை:

மாருதி மஹிமை:

hanuman-namakkal.jpg




'குரங்கு புத்தி' என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான்.

இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல்
சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது 'குரங்கு புத்தி' என்கிறோம்.

ஹ்ருதய - கபிம் அத்யந்த சபலம்

என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவனந்தலஹரி - 20). 'பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ !

வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்;

நானும் பிழைத்துப் போவேன்' என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, 'ஹ்ருதய கபி' அதாவது 'மனக்குரங்கு', என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்.


வெள்ளைக்காரர்களும் 'மன்கி மைண்ட்' என்கிறார்கள்.

கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.

ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது - இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

'பசித்தாலும் புல் தின்னாது' என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்னைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.



இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை.

ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப்
பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. 'அஸாத்ய ஸாதகர்' என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார்.

ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.

மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே 'இதைவிட வேகமில்லை' என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !



ரொம்ப வேகமாக ஓடுவது எது?

'வாயுவேகம், மனோவேகம்' என்பார்கள்.

காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.

'காற்று மாதரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?' என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.


சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண.......வாயோரிவ ஸுதுஷ்கரம்
(கீதை 6-34)

பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் 'ஸ்டெடி'யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:


யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா..... (கீதை 6-19)

'நிவாதம்' என்றால் 'காற்று இல்லாமல்' என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். 'வாயுபிடிப்பு' என்றும் 'வாத ரேகம்' என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?

ஆஞ்ஜநேய ஸ்வாமி யார்?

சஞ்சலத்துக்கே பேர்போன கபி இனத்தில் பிறந்த அவர் ஸதாகாலமும் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும் வாயுவுக்குப் புத்ரர் ! வாயு குமாரர். 'வாதாத்மஜர்' என்றும் சொல்வார்கள். 'வாத' என்றாலும் வாயுதானே? 'ஆத்மஜன்' என்றால் புத்ரன். வாத - ஆத்மஜன் என்றால் வாயு புத்ரன்.

வாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி

'யூதம்' என்றால் கூட்டம். ஸேனை. வானரப்படையில் முக்யஸ்தர் இவரே. ஆனபடியால் 'வாநர-யூத-முக்யர்'.

இது ச்லோகத்தின் பின் பாதி. முன் பாதி என்ன? அதிலே என்ன சொல்லியிருக்கிறது?

வாயுவேகம், மனோவேகம் என்று இரண்டு சொன்னேனே, அந்த இரண்டு வேகமும் படைத்தவர் இவர் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் மனஸ், இந்த்ரியங்கள் ஆகியவற்றின் சலனத்தில் அல்ல. சரீரத்தாலே செய்கிற கார்யத்தில்தான் வாயுவேக, மனோவேகக்காரராக இருக்கிறவர்.

மனோ - ஜவம் மாருத - துல்ய - வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்

'மனோ-ஜவம்' - மனஸைப் போன்ற வேகம் கொண்டவர். 'ஜவம்' என்றால் வேகம்.

'மாருத - துல்ய - வேகம்' - காற்றுக்கு ஸமமான வேகமுடையவர். 'மாருதம்' என்றாலும் காற்றுதான். 'மந்த மாருதம்' என்கிறோமல்லவா? மாருதத்தின் புத்ரர் என்பதால்தான் அவருக்கு 'மாருதி' என்று பெயர். 'வீர மாருதி கம்பீர மாருதி' என்று (பஜனையில்) பாடுவார்கள்.

ஓயாமல் சலிக்கிற மனஸைப் போல 'மனோஜவர்' : அப்படியே, ஓயாமல் சலித்துக் கொண்டிருக்கிற வாயுவைப் போல 'மாருத-துல்ய-வேகர்'; அவரே வாயுவின் பிள்ளைதான்-
'வாதாத்மஜர்'; சஞ்சல ஸ்வபாவத்துக்கே பேர் போன கபிகுல முக்யஸ்தராக இருப்பவர் வேற- 'வாநர-யூத-முக்யர்!'.

இப்படியெல்லாம் இருக்கிறவருடைய ஆச்சர்யமான மஹிமை என்ன என்றால், இவரையே ச்லோகம்,

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்

என்று ஸ்தோத்ரிக்கும்படியாவும் இருக்கிறார் !

புலன்களை வென்றவர் இவர்: 'ஜிதேந்த்ரியர்'- ஜித இந்த்ரியர்: ஜயிக்கப்பட்ட இந்த்ரியத்தை உடையவர். மனஸ்தான் அத்தனை இந்த்ரிய கார்யத்துக்கும் மூலம். ஆகையால் அதை ஜயிப்பவர்தான் ஜிதேந்த்ரியர். மஹா சஞ்சலம் வாய்ந்த மனஸை ஜயித்த வாய்ந்த மனஸை ஜயித்த ஜிதேந்த்ரியர் இவர்.

அதனாலேதான் புத்திமான்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள 'புத்திமதாம் வரிஷ்ட'ராகி யிருக்கிறார். மனஸை நல்லதிலேயே 'ஸ்டெடி'யாக நிறுத்தி வைப்பதுதான் புத்தி. ஆகையினாலே ஜிதேந்த்ரியாக மனோ நிக்ரஹம் செய்துள்ள ஆஞ்ஜநேய ஸ்வாமி 'புத்திமதாம் வரிஷ்ட'ராயிருக்கிறார்.

'புத்திமான்' என்று சொன்னாலே உசத்திதான். அதைவிட உசத்தி 'புத்திமதாம் வர' என்று சொல்லியிருந்தால். அப்படிச் சொல்லியிருந்தால் 'புத்திமான்களில் சிறந்தவர்' என்று அர்த்தம் கொடுக்கும். அதையும்விட உசத்தி, 'புத்தி மதாம் வரீய' என்று சொல்லியிருந்தால். சிறப்புப் பொருந்தியவர்களிலேயே ஒருத்தரை மற்றவரோடு ஒப்பிட்டு, 'கம்பேரடிவ்' - ஆக அவர் மற்றவர்களைவிட உயர்வு பொருந்தியவரக இருக்கும் போது 'வரீய' என்பர்கள். ஆனால், ஆஞ்ஜநேயரை இப்படுச் சொன்னல்கூடப் போதாது ! இதையும்விட உசத்துயாக, 'இதற்கு மேலே உசத்தியில்லை ; இவரோடுகூட 'கம்பேரிஸ'னுக்கும் இடமில்லை; இவர்தான் புத்திக்கு 'ஸூபர்லேடிவ்'; புத்திமான்கள் அத்தனை பேருக்கும் உச்சத்தில் இவரைத்தான் வைக்கணும்' என்றே (ச்லோகத்தில்) 'புத்திமதாம் வரிஷ்ட' என்று சொல்லியிருக்கிளது. 'வரிஷ்ட'தான் சிறப்பின் உச்சஸ்தானம். அதற்கு மேலேயும் இல்லை, ஸமதையும் இல்லை, அதற்கு அடுத்தபடியாக 'கம்பேர்' பண்ணக்கூட இன்னொன்று இல்லை.

ஞானிகளில்கூட இப்படி ப்ரஹ்மவித், ப்ரஹ்மவித்வரன், ப்ரஹ்மவித்வரீயன், ப்ரஹ்மவித்வரிஷ்டன் என்று உயர்த்திக் கொண்டே போவதுண்டு. மாருதி புத்திமதாம் வரிஷ்டர்.

ஆனால் இந்த இந்த்ரிய ஜயம், புத்திச் சிறப்பு எல்லாவற்றையும்விடப் பெரிய அவருடைய பெருமை என்ன என்றால் அவர் ராமதாஸனாக இருந்து, 'பகவானுக்கு இவரைப் போலப் பணி புரிந்தவரில்லை' என்று இக்ர ஸ்தானம் (முதலிடம்) பக்திமான்களுக்கும் வரிஷ்டராயிக்கிறாரே, அதுதான். தேஹ சக்தியோடு, புத்தி நுட்பத்தையும் ரொம்பவும் காட்டிச் செய்ய வேண்டிய பணி தூது போவது. அந்தத் தூதுப் பணியை ரொம்பவும் சிறப்பாகச் செய்து, ஸாக்ஷாத் ஸீதா-ராமர்களுக்கே துக்கத்தைப் போக்கிப் பெரிய நம்பிக்கையையும் உத்ஸாஹத்தையும் ஊட்டினாரே, அதற்காகத்தான் முக்யமாக அவரைத் தலைவணங்கிப் பணிய வேண்டும். 'ஸ்ரீ ராமதூதாம் சிரஸா நமாமி' என்று பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ண வேண்டும்.

மனோ - ஜவம் மாருத - துல்ய - வேகம்
ஜிதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம் |
வாதாத்மஜம் வாநர - யூத - முக்யம்
ஸ்ரீராமதூதம் சிரஸா நமாமி ||


ஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க!

காற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்
நம்பினோம் நாவரசை நாங்களே !
 
சாக்த தத்வத்திற்கு ஸயன்ஸின் சான்று

சாக்த தத்வத்திற்கு ஸயன்ஸின் சான்று

அசையாத சிவனும் அம்பாளால்தான் அசைந்து காரியத்தில் ஈடுபடுகிறார் என்று வருவதை ஸயன்ஸ்படி கொஞ்சம் விளக்கிப் பார்த்தால்:'மாட்டர்'என்று பதார்த்தத்தைச் சொல்கிறார்கள். அதன் ஸ்வபாவம் 'இனர்ஷியா'என்கிறார்கள் அதாவது சலனமில்லாமல் போட்டது போட்டபடிக் கிடப்பதுதான் என்கிறார்கள். அதனால் 'இனர்ட் மாட்டர்'என்றே சேர்த்துச் சொல்வதாக இருக்கிறது. ஆனாலும் அப்படிப்பட்ட இனர்ட் மாட்டர் பல தினுஸில் சலனப்பட்டு, பல தினுஸில் ஒன்று சேர்ந்துதான் ப்ரபஞ்சம் உண்டாயிருக்கிறதென்று நன்றாகத் தெரிகிறது. அப்படியானால் ஏதோ ஒரு பவர், சக்திதானே சலனமில்லாத மாட்டரைச் சலிக்கும்படியாகப் பண்ணியிருப்பதாக ஆகிறது?அந்தச் சலனமில்லாத மாட்டரைத்தான் சிவன் என்றும் அதைச் சலிக்க வைக்கும் சக்தியைப் பாரசக்தி, அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறது.


நிச்சலனமான சிவனும், க்ரஹ நக்ஷத்ரங்களில் ஆரம்பித்து அணுவுக்குள் உள்ள பரமாணுவரை எல்லாம் ஸதா சலித்துக்கொண்டேயிருப்பதற்குக் காரணமான சக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் 'மாட்டர்', அவள் 'எனெர்ஜி'என்று ஸயன்ஸ் அடிப்படையில் விளக்கிச் சொல்லலாம். இணைபிரியாத இரண்டு பேர் என்றாலும் அவர்கள் அடிப்படையில் இரண்டுகூட இல்லை, ஒன்றேதான் என்பதையும் அடாமிக் ஸயன்ஸில் 'மாட்ட'ரே 'எனர்ஜி'யாவதாகச் சொல்லியிருப்பதைக் காட்டி உறுதிப்படுத்தலாம்.

ஆனால் ஒரு வித்யாஸம், பெரிய வித்யாஸம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத ஸத்யமாக இருக்கிறார்கள். சக்தியோக எனெர்ஜி வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும் போதும் சிவ மாட்டர் அழியாமலே இருந்து கொண்டிருக்கிறது!ஏனென்றால் இங்கே 'மாட்டர்'என்பதே ஜடமாக இல்லாமல் உயிரான 'ஸ்பிரிட்'டாக இருக்கிறது;அழியாத, அழிக்க முடியத ஆத்ம தத்வமாக இருக்கிறது;சைதன்ய பூர்ணமாக இருக்கிறது.

ஜடத்திலேயே ஆரம்பித்து ஜடத்திலேயே முடிந்துவிடும் ஸயன்ஸ்படியான மாட்டருங்கூட இந்தச் சைதன்யத்திலிருந்து வந்ததுதான். இப்போது மெள்ள மெள்ள ஐன்ஸ்டீன், ஸர் ஆலிவர் லாட்ஜ், எடிங்டன் போன்ற பெரிய ஸயன்ஸ் மேதைகள் அந்த சைதன்ய ஆதாரத்தின் பக்கமாக ஸயன்ஸைத் திருப்பி விட்டிருக்கிறார்கள். ஆனாலும் அதை லாபரடரியில் எக்ஸ்பெரிமென்ட் பண்ணி நிரூபிக்கவோ, அநுபவிக்கவோ முடியாது. மதாநுஷ்டானத்தினால்தான் அதன் நிரூபணமும், ப்ரத்யக்ஷஅநுபவமும் கிடைக்கும்.

ஸயன்ஸுக்கும் மதத்துக்கும் மாறுபாடுகள் இருந்தாலும் ஒப்புவமை காட்டும்படியும் அநேகம் இருக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரியிலிருந்து நடந்துள்ள அணு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மத சாஸ்த்ரங்கள் - குறிப்பாக அத்வைத வேதாந்தமும் சாக்த நூல்களும் - சொல்வதற்குக் கிட்டக் கிட்ட வந்து கொண்டிருக்கின்றன.

லோகத்தில் 'டைம்', 'ஸ்பேஸ்'என்பவை உள்பட எதுவுமே தன்னுடைய ஆதாரத்திலேயே ஸத்யமாக இருப்பதல்ல, 'ரிலேடிவா'க இன்னொன்றைச் சார்ந்தே எல்லாமும் ஒரு ஓட்டத்தில் ஓடுகிறபோது அந்த ஓட்டத்தின் தொடர்ச்சியாலேயே அது அதுவும் ஸத்யம் மாதிரி நடைமுறைக்கு இருக்கிறது என்பதுதான் நான் புரிந்து கொண்ட மட்டும் 'ரிலேடிவிடி தியரி'. ப்ரஹ்மம் தான் ஒன்றேயான ஆதார ஸத்யம்;அதைச் சார்ந்திருப்பதாலேயே ஸத்யம் மாதிரித் தோற்றமளிக்கும்படியாக மாயை கல்பித்துக் காட்டுகிறதுதான் இந்த லோகம் பூராவும் என்று அத்வைதம் சொல்கிறது.

அந்த மாயையாகவே அம்பாளை சாக்த சாஸ்த்ரங்களும் குறிப்பிடுவதாகச் சொன்னேன். மாயா தத்வந்தான் 'ரிலேடிவிடி'என்று கொள்வதற்கு நிறைய இடமிருக்கிறதல்லவா?இந்த ரிலேடிவுக்கு ஆதாரமான 'அப்ஸொல்யூட்'என்னவென்று ஸயன்ஸ் கண்டுபிடிக்கவில்லை. மத நூல்களும் தத்வ சாஸ்திரங்களும் அதைத்தான் ப்ரஹ்மம், சிவன் என்கின்றன. (மதம் 'ரிலிஜன்', தத்வ சாஸ்திரம் 'ஃபிலாஸஃபி'என்று ஒரு பாகுபாடு சொல்லப்பட்டாலும் நம்முடைய மதத்தில் இந்த இரண்டும் பிரிக்க முடியாமல் [சிரித்து]சிவ-சக்திகள் மாதிரி ஒன்று சேர்ந்துதான் இருக்கின்றன.) புஸ்தகத்தில் சொன்னது மட்டுமில்லை;அந்த அப்ஸொல்யூட்டை மஹான்கள் ஆத்ம ஸ்வரூபமாக அநுபவித்தும் இருக்கிறார்கள். அதுதான் உயிருக்கெல்லாம் உயிராக இருக்கும் ஒரே உண்மையான உயிர்.


அதை ஸயன்ஸ் இதுவரை சொல்லவில்லை. இனிமேலும் ஸயன்டிஸ்ட்கள் எல்லாரும் 'தியரி'யில் அதை ஒப்புக்கொள்ளும் நாள் வந்தாலும், 'அதன் proof ' எங்கள் ஸாமர்த்தியத்துக்குள் வராத ஸமாசாரம். அதைத் தெரிந்து கொள்ள ஆத்ம சாஸ்திரத்திற்குப் போங்கள்'என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும். பராசக்தியின் 'ரிலேடி'வான சலன நாடகத்தில் சிலவற்றைத்தான் விதிகளைக் காட்டி ஸயன்ஸ் விளக்குமேயழிய, லோகத்தின் அத்தனை சலனத்தையும் சேர்த்து ஒரேயடியாகச் சஞ்சலிக்கிற இந்த ஜீவ மனஸைச் சலிக்காமல் சமனப்படுத்தி ஜீவன் நிஜமான தன்னை தெரிந்துகொண்டு 'அப்ஸொல்யூட்'டாக ஆவதற்கு வழி சொல்ல அதனால் ஆகாது. அது ஸயன்ஸின் லக்ஷ்யமுமில்லை. மத சாஸ்திரங்களே அந்த வழியைச் சொல்லும். அவை சொன்னாலும், அவை சொல்கிற வழியில் நாம் போனாலும், கடைசியில் ' goal '-ஆக இருக்கிற இடத்தைத் திறந்து விடுவது அம்பாள்தான். 'அப்ஸொல்யூட்'டிலிருந்து பிரித்து விளையாட்டுப் பண்ணினவளைத் தவிர வேறே யார் மறுபடி அதோடேயே சேர்த்து வைக்க முடியும்?


ஸயன்ஸின் எல்லைக்கு அந்தண்டை இருக்கும் விஷயத்தில் ஸயன்ஸை நாம் இழுத்துக் குறை சொல்வது தப்பு. அதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் தங்களுக்கு ஒரு எல்லை கட்டியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அதீதமான விஷயங்களைச் சொல்லும் சாஸ்திரங்களைப் பொய் என்று அவர்கள் நினைப்பது தப்பு. இரண்டும் காம்ப்ளிமென்டரியாக ஒன்றுக்கொன்று இட்டு நிரப்பிக் கொண்டு போகமுடியும் என்ற எண்ணம் இரண்டு தரப்புக்கும் இருக்க வேண்டும். ஸயன்ஸ் கண்டுபிடிப்புகளையே சாஸ்த்ர தத்வார்த்தங்கள் எப்படி வேறே பாஷையில் சொல்லியிருக்கின்றன என்று பார்த்தால் எத்தனையோ ருசியான விஷயங்கள் அகப்படும்.

த்ருஷ்டாந்தமாக:ஒரு அணுவுக்குள்ளே பாஸிடிவ் எலெக்ட்ரிஸிடி சார்ஜாகியுள்ள மத்ய ந்யூக்ஸியஸான ப்ரோடானை சிவன் என்றும், அதைச் சுற்றிவரும் நெகடிவ் சார்ஜுள்ள எலெக்ட்ரானை அம்பாள் என்றும் வைத்துக் காட்டலாம்.

'ஸ்டில் ஸென்டர்'என்பதாக எதற்கும் மத்யமாக ஒரு சாந்த ஸ்தானமிருக்கிறது. சலனமில்லாவிட்டாலும் அது சக்தியற்ற சூன்யமில்லை என்பதை கவனிக்க வேண்டும். நல்ல கனத்தை ஸம எடைக் கட்டும் 'ஈக்விலிப்ரியம்'இப்படிப்பட்ட சாந்த ஸ்தானந்தான் ஒரு பதார்த்தத்தின் கனம் குவிந்து ஒருமுகப்படும் 'ஸென்டர் அஃப் க்ராவிடி'சாந்த ஸ்தானந்தான். பயங்கரமான புயலில்கூட 'ஸ்டார்ம் ஸென்டர்'என்று இருக்கிறது. மத்யமான ஒரு சாந்த ஸ்தானத்திலிருந்து சக்தி பரவியே, வெளிப்பட்டே, வெடித்தே பதார்த்தங்கள் அமைகின்றன, கார்யங்கள் சக்திகரமாக நடக்கின்றன. அந்த சாந்தத்தைத்தான் சிவன் என்றும், அதை மையமாகக் கொண்டு சுழன்று வெளிப்படுகிற சக்தியை அம்பாள் என்றும் சொல்வது.

ஒன்றுக்குள் மையமாயிருக்கும் பாஸிடிவ், அதைச் சுற்றி நெகடிவ் என்பதை ஸ்வாமி-அம்பாள் என்று பார்க்கும்போது இரண்டு பேரும் ஸமம், இணைந்து செயல் புரிகிறவர்கள் என்று அபிப்ராயம் கொடுக்காததால் இன்னொரு விதமாகச் சொல்லியிருக்கிறது.

அதாவது ஒன்று மத்தியிலிருப்பது, மற்றது சுற்றியிருப்பது என்பதற்குப் பதில் இரண்டும் பேர் பாதி, பேர் பாதி என்று சொல்லியிருக்கிறது. அதுதான் அர்த்தநாரீச்வர ஸ்வரூபம் - வலது பக்கம் பாஸிடிவ் ஸ்வாமி, இடது பக்கம் நெகடிவ் அம்பாள். இப்படிச் சொல்வதிலும் புஷ்டியான காரணம் தெரிகிறது. என்னவென்றால், இடது பக்கம்தானே ஹ்ருதயம் இருக்கிறது?தேஹம் பூராவுக்குமே அதுதான் சக்தி தருகிறது. அது ஸரியாக வேலை செய்யாவிட்டால் வலது பக்கமும் ஒன்றும் பண்ண முடியாது - ''ந கலு குசல ஸ்பந்திதுமபி''தான்!

இதில் ஒரு ஸ்வராஸ்யம் என்னவென்றால், இடது பக்கமுள்ள ஹ்ருதயந்தான் தேஹம் பூராவுக்கும் சக்தி கொடுக்கிறது என்றாலும், ஒரு தேஹத்தில் இடது பக்கத்தை விடவும் வலது பக்கம்தான் ஜாஸ்தி பலத்தோடு, 'பவ'ரோடு கார்யத்துக்கு உதவுவதாக இருக்கிறது. வாகாக வேலை செய்ய வலது பக்கம்தான் உகந்ததாக இருக்கிறது. வலது கையால் செய்ய முடிகிற மாதிரி இடதால் முடியாது. நொண்டி 'ப்ளே'யில் கூட வலது காலைத்தான் பலத்துக்காக ஊன்றிக் கொள்வது! நடராஜாவே 'இடதுகால் உதவாமல்'வலது காலை மட்டுமே ஊன்றிக் கொண்டிருப்பதாகப் பாடி வைத்திருக்கிறார்கள்!

இதிலேயே அம்பாள்தான் சக்தி தருபவள் என்பதைத் தெரிவிப்பதாகவும் ஒரு அம்சமிருக்கிறது. சரீரத்தின் வலது-இடது பக்க வியாபாரங்களை எது எது நடத்தி கன்ட்ரோல் செய்கிறது என்று பார்த்தோமானால், வலது பக்க வியாபாரத்தை மூளையின் இடது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும், இடது பக்க வியாபாரத்தை மூளையின் வலது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும் தெரிகிறது. அதாவது ஜாஸ்தி சக்திகரமாகக் கார்யம் பண்ணும் நம்முடைய சரீரத்தின் சிவ ஸைடுக்கு அப்படி சக்தி கொடுத்து கன்ட்ரோல் பண்ணுவது மூளையின் சக்தி ஸைடே என்றாகிறது!

இதில்தான் அம்பாளுடைய பாதிவ்ரத்ய [கற்பு நெறி]அழகு இருக்கிறது. அவள்தான் பதிக்கும் சக்தியாயிருக்கிறாளென்றாலும், தன்னைவிடவும் அவரையே சக்தராகக் காட்டுகிறாள். அவருடைய ப்ரளய தாண்டவமென்றால் அகிலாண்டங்களெல்லாம் கிடுகிடுகிடுவென்று நடுங்கிப் பொடித்துப் போகும்படி அப்படி ஒரு சக்தி!ப்ரளய தாண்டவந்தான் என்றில்லை. ஆனந்தத் தாண்டவம் செய்வதையே 'அஷ்ட திசையும் கிடுகிடென்று' என்று கோபாலக்ருஷ்ண பாரதி பாடியிருக்கிறார்!அவரே நேரே செய்ய வேண்டுமென்றில்லை - அவருடைய ஜடையை பூமியிலடித்து ஒரு வீரபத்ரர் புறபட்டால் போதும், புறப்பட்ட ஆஸாமி காட்டும் சக்தியைப் பார்த்தே, இன்றைக்கும் புராணத்தில் கேட்டே, நடுங்கும்படி இருக்கிறது!ஒரு அறை விட்டாரானால் ஸ¨ர்யனின் பல்லெல்லாம் உதிர்ந்து போகிறது!பரமேச்வரன் ஒரு சிரிப்புச் சிரித்தாலே எத்தனையோ 'ஹிரோஷிமா பாமு'க்கு மேலே சக்தி வெளிப்பட்டு த்ரிபுரங்கள் பஸ்மமாகின்றன!பதிக்கு அப்பேர்ப்பட்ட சக்தியை அம்பாள் தருகிறாள்!

'சக்தி என்ற பெயரே பெண் தெய்வத்துடையதாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்களை 'அபலா', 'மெல்லியல்'என்று சொல்லி ஆண்கள் அடக்கி வைப்பது அக்ரமம்'என்கிறவர்கள் இதைக் கவனிக்க வேண்டும். சக்தி என்று பெண்பால் பேர் கொடுத்த அதே சாஸ்திரங்கள் தான் பராசக்தி பரமேச்வரனுக்கு அதிக சக்தி தந்து, அவர் அடக்கி வைத்து இவள் அடங்கினாள் என்றில்லாமல், தானே அடங்கியிருந்து அப்டியிருப்பதுதான் பெண்களுக்கு அழகு என்று காட்டுவதையும் சொல்கின்றன. சிதம்பரத்தில் பார்த்தால் தெரியும். முன்னேயே சொன்னாற்போல் பஞ்ச க்ருத்யம் அம்பாளுக்கானதுதான். அதையே அங்கே அவள் நடராஜாவுக்குக் கொடுத்துவிட்டு, தான் பரம சாந்தையாக இருக்கிற இடம் தெரியாமல் இருப்பாள்.

ஒரே சரீரத்தில் வலதில் பதி, இடதில் தான் என்று இருக்கும்போது வலதுக்கே அதிக சக்தி தருகிறாள் என்றேன். வலது பக்கத்தை தக்ஷிண பாகம் என்றும், இடது பாகத்தை வாம பாகம் என்றும் சொல்வது. 'தக்ஷிணம்'என்றால் திறமையோடு கூடியது.

பொருத்தமாக வலது பக்கத்திற்குப் அப்படிப் பெயர் இருக்கிறது. 'வாமம்'என்றால் அழகாக இருப்பது. அழகியாக, ஸுந்தரியாக அம்பாள் இருப்பதே அவளுக்கு ஸாரபூதம் என்று ஆசார்யாள் 'ஸெளந்தர்ய லஹரி'பண்ணியிருப்பதற்கேற்க அழகுப் பிரதானமான வாம பாகம் அவளுடையதாக இருக்கிறது. சக்தி என்றே இருப்பவள் சக்தியைப் பதிக்கு அதிகம் தந்துவிட்டு, தான் முக்யமாக ஸுந்தரமாக நிற்கிறாள்.
அவர் அசையாதவர், இவள்தான் அசைக்கிறவள் என்பதற்கு ஓரளவு மாறாக இது [தக்ஷிணம், வாமம் என்ற ஸம்ஸ்கிருத வார்த்தைகள்]இருக்கிறதென்றால், தமிழிலும் இங்கிலீஷிலும் அடியோடு மாறாக இருக்கிறது. வலம்-இடம் என்பதில் 'வலம்'என்றாலே 'பலம்'தான்!'இடம்'என்பதோ இருப்பாக இருக்கிற ஸ்தானம், ஸ்டேஷன். 'ஸ்டேஷனரி'என்றாலே அசையாமல் இருப்பது என்று தான் அர்த்தம்!இங்கிலீஷில் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறது.

'லெஃபட்'என்பது 'பாரலைஸ்'ஆகி ஒன்றுமே ஒன்றுமே செயலில்லாமலிருப்பது என்ற அர்த்தமுள்ள வேர்ச் சொல்லிலிருந்து வந்தது என்றும், அது 'வீக்னெஸ்'ஸைக் குறிப்பது என்றும் சொல்கிறார்கள். 'ரைட்' என்பது 'ஸ்ட்ரெய்ட்'ஸம்பந்தப்பட்டது என்றும் நேராக, செங்குத்தாக இருப்பது என்று அர்த்தம் என்றும் சொல்கிறார்கள். 'ரைட் ஆங்கிள்'என்கிறபோது இந்த அர்த்தம் தெரிகிறது. அதில் கீழ்க்கோட்டுக்கு 90 டிகிரியில் ஒரு செங்குத்து கோடு நிற்கிறது. ஒருத்தனுக்கு பலம், சக்தி இருந்தால்தானே நேராக ஜோராக நிற்க முடியும்?சக்தி போதாவிட்டால் சுருண்டு படுத்து விடுகிறோம். பலம் குறைந்தபோது முதுகு கூனிப் போகிறது. நேராக நிற்பது பலசாலிகளின் அடையாளம்.

தேஹ சக்தி, மனோ சக்தி இரண்டையும் இணைத்து அபிவிருத்தி செய்வதற்காக முறைப்படி யோகாஸனம் சொல்லிக் கொடுக்கும்போது முதலில் நேராக நிமிர்ந்து நிற்கத்தான் கற்றுக் கொடுப்பார்கள். அதற்கு உத்தானாஸனம் என்று பெயர். ஆகையால் 'ரைட்'என்றால் சக்தி, 'லெஃப்ட்'என்றால் செயலில்லாமல் கிடப்பது என்பதாக அம்பாள்-ஸ்வாமி தத்வங்களுக்கு நேரெதிராக இருக்கிறது!அம்பாள் தன் சக்தியையெல்லாம் பதிக்குக் கொடுத்துவிட்டு, தனக்கென்று செயலில்லாமல் அவனிடம் சரணாகதி பண்ணிவிட்ட மஹா பதிவ்ரதையாக இருப்பதைச் சொல்கிற மாதிரி!


லெஃபட், ரைட்டின் ரூட் மீனிங் இப்படியிருந்தாலும் பாலிடிக்ஸில் பார்த்தால் லெஃப்டிஸ்ட் - இடது சாரி - கட்சிகள்தான் ஒரே புரட்சி பண்ணிக் கொண்டிருப்பதாகவும், ரைட்டிஸ்ட் - வலதுசாரி - கட்சிகள், 'இருக்கிற படி இருக்கட்டும்'என்று கன்ஸர்வேடிவாக சாந்த வழியில் போவதாகவும் இருக்கிறது!இங்கே வலப் பக்கம் சிவ சாந்தம், இடப் பக்கம் சக்தியின் கார்யத் துடிப்பு என்பது பொருத்தமாக இருக்கிறது!

தத்வார்த்தம், கவி மரபு, ஸயன்ஸ் ஆகியவற்றோடு பாலிடிக்ஸையும் கொண்டு வந்துவிட்டேன்!மனஸில் விஷயங்களை ஆழமாகப் பதிப்பதற்கு இப்படிப் பல விதத்திலும் அர்த்த பலம் கொடுத்தால்தான் முடிகிறது!​
வலது-இடது விஷயமாக இன்னொரு ஸமாசாரம். பிம்பத்தில் வலதாக இருப்பது ப்ரதி பிம்பத்தில் இடதாகி விடுகிறது;அதே மாதிரி இதில் இடது அதில் வலதாகி விடுகிறது. நிர்குண ப்ரஹ்மம் சைதன்யம் என்ற அத்வைதமான த்தவம் மாயைக் கண்ணாடியில் பிரதிபிம்பிக்கும்போது த்வைத லோகத்தை நிர்வாஹம் செய்யும் ஸகுண ப்ரம்மமாகிறது என்று அத்வைத சாஸ்திரங்களில் ஒரு கொள்கை உண்டு. அதாவது சிவனேதான் மாயைக் கண்ணாடியில் தெரியும்போது அம்பாளாகிறார்!அந்த மாயை என்ன என்று கேட்டால் அத்வைதத்திலே, 'என்ன என்று கேட்காதே!ஏனென்றால் அது என்னவென்று சொல்லவே முடியாது. அதுதான் மாயம் பண்ணுவதாச்சே!நாம் அதை என்னவென்று புரிந்து கொள்ள விடுமா?'என்று முடித்து விடுவார்கள். சாக்தத்தில், 'அந்த மாயையும் அம்பாள்தான், அம்பாளுடைய ஒரு அம்சம்தான்'என்று சொல்லியிருக்கிறது. முன்னேயே சொன்னேன்; சாக்தத்தில், சிவனை ஜீவனாக வெளிப்படுத்துகிற கட்டத்தில்தான் மாயை வருகிறது என்று சொன்னேன்.


ஜீவனுக்குத் தான் சிவனே என்பது தெரியாமல் மயக்கி வைத்திருப்பதுதான் மாயை. இருக்கிற சாச்வத வஸ்துவான சிவனை ஜீவனுக்குத் தெரியாதபடியும், இல்லாமல் அழிந்து போகிற வஸ்துக்களே இருப்பதாகத் ஜீவனுக்குத் தெரியும்படியும் செய்வதுதான் மாயாசக்தியின் வேலை. இங்கே பிம்பம்-பிரதிபிம்பம் என்பது மறுபடி பாஸிடிவ்-நெகடிவில் கொண்டு விடுகிறது. ஆனால் முந்தி சொன்னது எலெக்ட்ரிஸிடியின் பாஸிடிவ்-நெகடிவ். இப்போது சொல்லப்போவது ஃபோட்டோக்ரஃபியின் பாஸிடிவ்-நெகடிவ். ஃபோடோவின் பாஸிடிவில் வெளிச்சம் வெளிச்சமாகவும், இருட்டு இருட்டாகவும் உள்ளபடி இருக்கும். நெகடிவில் வெளிச்சம் இருட்டாகவும், இருட்டு வெளிச்சமாகவும் இருக்கும். அதுதான் இருப்பது இல்லாததாகவும், இல்லாதது இருப்பதாகவும் தெரிகிற அஞ்ஞானம்;மாயையின் கார்யம்! இப்போது நாம் இந்த அஞ்ஞானப் புதைச் சேற்றுக் குழியில்தான் அழுந்திக் கிடப்பதால் இதற்கும் அம்பாள்தானே காரணமென்பதால் அவளை முக்யமாக மாயை, மாயை என்றே சொல்கிறோம்.


ஆனால் ஒன்றை மறக்கப்படாது, மறக்கவேபடாது. அதனால்தான் ஏற்கெனவே சொன்னாலும் மறுபடி சொல்கிறேன். இல்லாததை இருப்பதாகத் காட்டி மாயம் பண்ணும் அம்பாள் ஒருநாள் பரம கருணையோடு அதை இல்லாததாகவே பண்ணி, இருக்கிற ஒன்றிலேயே நம்மை ஒன்றாகச் சேர்க்கவும் செயவாள். அவளே கதி என்று அவளுடைய காலைப் பிடித்துக் கொண்டு - மானஸிகமாகத்தான், விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு - விமோசனம் வேண்டினால் நிச்சயம் அப்படி அநுக்ரஹிப்பாள்.


இப்படிச் சொல்லிக்கொண்டு போகிறபோது பாஸிடிவ், நெகடிவ் விஷயமாக இன்னொரு பாயின்ட் அகப்படுகிறது. இந்த இரண்டு வார்த்தைகளுக்கே என்ன அர்த்தம்? 'பாஸிடிவ்'என்றால் இருப்பது; 'யெஸ்'என்பது. 'நெகடிவ்'என்றால் இல்லாதது;'நோ'என்பது. சக்தி லீலை எத்தனை நன்றாயிருந்தாலும் சாச்வத ஸத்யமாக இருப்பது இல்லை. அதனால் அவளையே நெகடிவ் என்று சொல்ல ந்யாயமுண்டு. சிவ சாந்தந்தான் சாச்வத ஸத்யமாக என்றும் இருப்பது. ஆகையினால் பாஸிடிவ். ஆனால் இப்படி நெகடிவ்களுக்கெல்லாம் ஆதாரபூதமாக இருக்கப்பட்டவளே நம்மை அந்தப் பாஸிடிவில் ஐக்யப்படுத்துபவளாகவும் இருக்கிறாள்.....

எல்லாருக்கும் ஏற்காததாக இருக்கும் ஸமாசாரங்களிலும் ஸயன்ஸ், தத்வார்த்தம், கவி மரபு முதலியவற்றைக் காட்டி ஏற்கும்படியாகப் பண்ணக்கூடியவற்றை அப்படி விளக்கலாம். ஆனாலும் பொது ஸபையில் சொல்வதற்கேயில்லை என்கிற மந்த்ர, தந்த்ர, யந்த்ர விஷயங்களையும், சில கவிதா வர்ணனைகளையும் அடியோடு தொடாமல் விட்டுவிட வேண்டும். உசந்த நிலைகளில் நம்மைச் சேர்ப்பதற்கென்றே ஏற்பட்ட ஸ்தோத்ரத்துக்கு அர்த்தம் சொல்லப் போய், கேட்பவர்களுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயங்களையோ, அவர்களுக்கு விபரீத பலன் உண்டாக்குகிற விஷயங்களையோ, அவர்கள் மனஸில் விகல்பம் தோன்றும்படியான விஷயங்களையோ சொல்வது பெரிய குற்றம்;அம்பாளுக்கும் ஆசார்யாளுக்கும் பண்ணும் அபசாரம்.


????? ???????????? ???????? ?????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:

 
Value of Prayer

Value of Prayer


In this life we are faced with various kinds of difficulties, afflictions and sorrows. We go to a doctor to get relief for our bodily ailments. We approach numerous authorities for obtaining solution for our worldly problems. We also pray to God. Our great men have given guidance as to how to pray and what to pray for. There is one school of thought which says that we should pray to God only for our spiritual salvation. But there are others who think that we owe a duty to the members of the family, and, in the discharge of that duty, we have perforce to invoke the blessings of God by prayer. This is a proper approach and, therefore, even when we have to go to human agencies to get relief, we should first submit our difficulties and troubles to God.


Lord Sri Krishna says in the Gita :


Chaturvidhaa bhajante-maam janaah sukritinorjuna;
Aarto jijnaasur-arthaarthee jnaanee cha bharatarshabha.


Bhagavan mentions four categories of persons who pray to God. The first category is denoted by the term Aartah, i.e., those who are suffering physically and mentally, afflicted by diseases, pain, poverty, troubles, difficulties, etc. They pray to God to lighten their burden and make their existence tolerable.

The second category of persons is denoted by the term Jijnaasu those, who are thirsting for knowledge and are eager to get at the truth of things.

The expression Arthaarthee denotes the class of people who are fairly well off in the world, but desire to be blessed with more of the good things of life, so that they can live free from troubles and sorrow and also serve others.

The last category of persons is denoted by the term Jnaani, those who have acquired Jnaana or wisdom and realised the Supreme Truth. They are people who have realised that there is nothing outside God and that all is God. Yet they too pray.

Their prayer is described in the Gita as prayer with the realisation that Vaasudeva is all (Vaasudeva sarvamiti).





Value Of Prayer : kamakoti.org
 
Nine types of service

Nine types of service

Adi Sankara’s Bajagovindam narrates that there are nine types of service to be offered at the feet of Lord. A devotee can adopt any one, according to one’s choice and temperament.


Here are nine types of service to be offered at the feet of lord. A devotee can adopt any one, according to one's choice and temperament. They are

1. sravanam(listening to the stories or glory of lord),
2. keertanam (singing the glory of the lord),
3. smaranam (constantly thinking about the nature and beauty, divine qualities and characteristics of the lord,
4. paadasevaram (adorning the sacred feet of lord in a spirit of self-obliteration),
5. archanam (worshiping the lord with rituals, mantras and with self-less love),
6. vandanam (salute or to pay obeisance to the lord),
7. dassyam (serving the lord),
8. sakhyam (invoking an affectionate friendship with lord, and
9. aatma nivedanam (to offer oneself with complete dedication or total surrender to the lord as a humble gift at his altar).

Every devotee has the liberty to choose a path that is convenient and appealing to one to realize the god. In all the above modes of worship, the spirit of bhaja is visible. With this bhavanam, the devotee has to worship the Govinda, who is the knower of each atom of this universe. He is the very essence of all animate and inanimate beings in this universe. So, Govinda is the atman, Govinda is the brahman, Govinda is the highest reality and the very essence of this universe. Each devotee should seek one's identity with that spirit, force, reality, truth and supreme braman or god, instead of wasting one's time in materialistic pursuits of secular knowledge for worldly possessions, name and fame.

Telugu songs and lyrics -- Welcome to the world of music : Bhaja Govindam -- Adi Shankaracharya
 
ஆசாரம்

ஆசாரம்

ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. மநுஷ்யனின் மனநெறி நன்றாயிருந்து விட்டால் அதன் சக்தி ஸாமான்ய மானதில்லை. அது இவனுடைய ‘நேச்சர் ‘என்னும் இந்திரிய வேகங்களை அடக்கியாள்வது மட்டுமில்லை; வெளி ‘நேச்சரை’யே அடக்கியாண்டு விடுகிறது. பிராம்மணன் அத்யயன ஆசாரத்தை அநுஷ்டித்தால் அதற்காகவே மும்மாரிகளில் ஒன்று பெய்கிறது என்பது தமிழ் மூதுரை; வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை.


இப்படியே பதிவ்ரதைகளின் கற்பு நெறியினால் இயற்கை இன்னொரு மழையைப் பெய்கிறது என்று சொல்கிறது: மாதர் கற்புடை மங்கையர்க்கோர் மழை.


இதையே இப்போது பகுத்தறிவாளர்களும் கொண்டாடும் திருக்குறளும் சொல்கிறது:


தெய்வம் தொழாள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை



ராஜா நீதி நெறிப்படி ஆட்சி பண்ணுவதும் ஒரு மழையை வரவழைத்துவிடும் :
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை



இதற்கு மறுதிசையில், இவர்கள் நெறி தப்பினால் இயற்கையும் கன்னா பின்னா என்ற பண்ண ஆரம்பிக்கும்.
வள்ளுவரே சொல்கிறார்: ராஜா நீதிமுறை தப்பினால் பிராம்மணனும் தன் ஆசாரமமான அத்யயனத்தை மறந்துவிடுவான் — அறுதொழிலோர் நூல் மறப்பர். ஒருத்தன் முறை தப்பினால் மற்றவர்களும் முறை தப்பிப் போய்விடுவார்களென்று எச்சரிக்கிறார். இப்படி மநுஷ்யனுக்கு மநுஷ்யன் மனநெறி கெட்டுப்போவதால் பாதகமான பலன் தொடர்ந்து போவது மட்டுமில்லை. ராஜா தன் ஆசாரத்தை விட்டால் பால் வளமும் குன்றிவிடும்: ஆ பயன் குன்றும் என்று ‘தெய்வப்புலவர்’ என்னும் திருவள்ளுவர் சொல்கிறார். இதற்குப் பகுத்தறிவு பதில் சொல்ல முடியாது.

?????? | ??????????? ?????
 
The worship of sri anjaneya swami.

THE WORSHIP OF SRI ANJANEYA SWAMI.


Sri Kanchi Kamakoti Jagat guru
Sri Jayendra Saraswathi
Sankaracharya swamigal



In many temples, Anjaneya has been installed. Ofcourse, in the Rama temple, Anjaneya in bound to be there. But even in other temples, Anjaneya is often installed. For instance in the Vinayaka temple at Sarojini Nagar, New Delhi, whose Kumbhabhishekam was performed on the 13th June 1973, there is an Anjaneyasannidhi.
What are the fruits that we get by worshipping Anjaneya? These are beautifully summed up in the following sloka:
बुद्धिर्बलमं यशॊ धैर्यं निर्भयत्वमरॊगता ।
आजाड्यं वाक्पटुत्वं च हनुमत्स्मरणाद्भवेत् ॥


The order in which these fruits are mentioned is very significant. First buddhi is mentioned. By worshipping Anjaneya, one will get Sad Buddhi सत् बुद्धि or good intellect. If the buddhi is all right, then everything else will become all right automatically. The second fruit is balam or strength. They have not put strength first in the list of fruits. If strength comes before buddhi, the one does not know in what direction one will go. Therefore, priority has been given to buddhi.



In Soundaryalahiri Adi Sankara says:


सरस्वत्या लक्ष्म्या विधिहरिसपत्नॊ विहरते
रते: पातिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा ।
चिरं जीवन्नेव क्षपितपशुपाशब्यतिकर:
परानन्दाभिरब्यं रसयति रसं त्वद्भजनवान् ॥


In this sloka also, it is Saraswati who is mentioned first and then only Lakshmi. Saraswati, the Goddess of knowedge, gives us knowledge, while Lakshmi, the Goddess of wealth, gives us wealth. As between wealth and knowledge, first priority has been given only to knowledge. If money comes to a person without Sad Buddhi सत् बुद्धि then he would not know how to make use of it and how to spend it properly. But if a man gets buddhi first, and then he gets money, he can make proper use of the wealth he got. Therefore, first, one should have Saraswati kataksha and then pray for Lakshmi kataksha.


The same idea is found also in the Taittriya Upanishad, which says:


स मेन्द्रॊ मेधया स्पूणॊतु ततॊ मे श्रियमावह ।
Here also, the devotee prays first for Medha or intellect and then only for wealth. Adi Sankara Bhagavatpada in his commentary says:


एभवमदीनि कुर्वाणा श्रीर्या तां ततॊ मेधानिर्वर्तनात् परम् आवह आनय ।
अमेधसॊ हि श्रीरनर्थायैवेति ।


He says that only bad things will happen to a person who gets money but who has no intellect. If a person has no knowledge or intellect, then he will use the money only for wrongful ends.


Then, the other fruits that flow from worship of Anjaneya are : fame, glory, courage, the gift of the tongue and good health.



A person may be well-versed in the Vedas and in philosophy but weak in body. A person may have mental strength but may be physically weak. A person may have a well-built body but have no mental strength. A person may be physically strong but have no bhakti. a person may have just bhakti wothout any knowledge. But Anjaneya gives such persons buddhi as well as mental strength and so many other things.


It is said that Anjaneya was an expert in nine Vyakaranas or grammar systems. Rama describes him in the Ramayana as Navavyakaranavetta (नवव्याकरणवेत्ता) So, Anjaneya is the best person to give us buddhi, (knoweldge).

He gives us buddhi, (knowledge), mental strength as well as physical strength and good health.


The worship of Anjaneya is prevalent throughout India. In Andhra Pradesh, He is worshipped as Anjaneyulu; in Maharashtra, he is worshipped as Maruti. In North India, He is worshipped as Mahavira. But the name Hanuman is commonly known everywhere.


The worship of Anjaneya will do everyone immense good, Anjaneya is a symbol not only of bravery but also of a true bhakta. As the Dhyanasloka says:


यत्र यत्र रघुनाधकीर्तनं तत्र् तत्र कृतमस्तकाञ्जलिं ।
बाष्पवारिपरिपूर्णलॊचनं मारुतिं नमत राक्षसान्तकं ॥


Wherever the utterance of "Ram Ram" is heard, there Anjaneya is sitting and meditating on Sri Rama.


वैदेहीसहितं सुरद्रुमतके हैमे महामण्डपे
मध्ये पुष्पकमासने मणिमये वीरासने सुस्थितम् ।
अग्रे वाचयति प्रभञ्जनसुते तत्त्वं मुनिभ्य: परं
व्याख्यान्तं भरतादिभि: परिवृतं रामं भजे श्यामलं ॥


Sri Rama is giving upadesa about truth to all the maharishis assembled around Him, keeping Anjaneya at the forefront. This shows the prominence given among bhaktas to Anjaneya.

The worship of Anjaneya, therefore, will give us many coveted fruits in practical life. Therefore, let us all pray to Anjaneya and obtain His grace and be happy.


|| jaya jaya shakara hara hara shankara ||

|| Sri Ram Jaya Ram Jaya Jaya Ram ||
|| Sri Ram Jaya Ram Jaya Jaya Ram ||






Article in praise of Lord Hanuman | The worship of Anjaneya Swami by Sri Kanchi Kamakoti Jagat guru Sri Jayendra Saraswathi Sankaracharya swamigal | VAYUSUTHA: son of Wind God Vayu | Hanuman | Anjaneya | Maruti |
 
-பூராதி புவந போக்த்ரே

-பூராதி புவந போக்த்ரே

பூராதி புவந போக்த்ரே: பூ என்றால் பூமி. பூராதி - பூமி முதலிய; புவந - உலகங்கள். கணக்கில்லாத லோகங்களைப் பதிநாலு லோகம் என்றும். அதில் கீழ் லோகங்கள் எழு போக பூமியிலிருந்த ஏழு லோகம் என்றும் கிளாசிஃபை பண்ணி, மேலும் சுருக்கமாக பூர்-புவஸ்-ஸுவர் லோகம் என்று மூன்றாகச் சொல்வது வழக்கம்.

பூலோகம் அடி. புவர் லோகம் நடு. ஸுவர் லோகம் உச்சி. மூன்றையும் சேர்த்து "வ்யாஹ்ருதி'கள் என்பதாக ஓம்காரத்துடன் சேர்த்துச் சொல்வது வேத ஸம்ப்ரதாயம். நாம் வைதிகமாகப் பண்ணும் கர்மமோ, ஜபமோ, த்யானமோ எதுவானாலும் ஸமஸ்த லோகங்களுக்கும் அதனால் நல்லது ஏற்பட வேண்டும் என்ற உசந்த அபிப்ராயத்தில் அப்படிச் சொல்வது.

மறுபடியும் காயத்ரி வந்து விடுகிறது! காயத்ரி ஆரம்பத்திலும் வ்யாஹ்ருதிகளைச் சேர்த்திருக்கிறது. முன்னேயே "பூஸுராதி' என்ற இடத்தில் பூவை (தீட்சிதர்) கொண்டு வந்தார். அப்புறம் வாஸவாதி ஸகல தேவர்களைச் சொன்னபோது அவர்களுடைய வாஸ ஸ்தானமான ஸுவர் லோகத்தை அண்டர்ஸ்டுட் ஆக, உள்ளுறை பொருளாகக் குறிப்பிட்டார். இப்போது கீர்த்தனம் முடிகிற ஸமயத்தில் பூராதி புவநம் என்று அத்தனை லோகங்களையும் சொல்கிறார்.

பூராதி புவநங்களில் நட்கும் ஸகல காரியமும் ஒரு பராசக்தியின் லீலா அநுபவத்திற்குத்தானே? அந்த மஹா சக்தியாக இருந்து கொண்டு ப்ரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஆண்டு அநுபவித்துக் கொண்டிருக்கும் போக்தா ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியே என்கிறார்.

பூராதி புவந போக்த்ரே.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22056&ncat=19&Print=1
 
சர்வப்ரஹரணாயுத

[SUB]சர்வப்ரஹரணாயுத[/SUB]


large_164336240.jpg



விஷ்ணு சகஸ்ர நாமத்தில், பெருமாளின் கடைசி திருநாமம் "சர்வப்ரஹரணாயுத' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதிசங்கரர், "எம்பெருமானுக்கு எல்லாமே ஆயுதம்' என்று பொருள் கூறியுள்ளார்.

விஷ்ணு மற்ற அவதாரங்களில் ஆயுதத்தைக் கையில் தாங்கியிருக்க, நரசிம்ம அவதாரத்தில் மட்டும் ஆயுதம் ஏதும் வைத்துக் கொள்ளாமல் நகத்தையே ஆயுதமாக்கி இரண்யனை அழித்தார். அதனால், "சர்வப்ரஹரணாயுத ' என்ற திருநாமம் நரசிம்மனுக்குரியது என்கிறார் ஆதிசங்கரர்.

கோபக்கனல் தெறிக்கும் உக்கிர நரசிம்மர், தாயாரோடு இருக்கும் போது, கோபம் தணிந்து அருளை வாரி வழங்கும் லட்சுமி நரசிம்மராக மாறி விடுகிறார். இவருக்குரிய மந்திரத்திற்கு "மந்திர ராஜம்' என்று பெயர்.

இந்த மந்திரத்தின் கடைசி பகுதியான ""உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோ முகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்'' என்பதை தினமும் 11 முறை சொல்ல விரும்பிய அனைத்தும் எளிதில் கிடைக்கும். வெளியில் செல்லும் போது பாதுகாப்பு கவசமாக விளங்கும்.


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லுங்க!

சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லுங்க!

பூஜை நேரத்தில் மட்டுமல்ல! வீட்டில் சமைக்கும் போதும் உங்கள் இஷ்ட தெய்வத்திற்குரிய
ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டே வேலை செய்யலாம். இவ்வாறு செய்தால் சமைக்கும் சாதம் கடவுளுக்கு படைத்த "பிர'சாதமாகி விடும். சாதம் என்றால் "சாதாரண சோறு'. "பிர' என்றால் "கடவுள்'. கடவுளுக்குரிய சாதம் என்பதையே "பிரசாதம்' என்கிறோம்.


மகான் கபீர்தாசர் தறி நெய்யும் போது ராம, ராம, ராம என்று சொல்லிக் கொண்டே நெய்வார். காந்திஜி ராமநாமம் சொல்லிக் கொண்டே ராட்டையில் நூல் நூற்பார். மகான் ராமதாசர் இதுபற்றி குறிப்பிடும் போது, ""குளித்தாலும், சமைத்தாலும், தண்ணீர் எடுத்தாலும், தெருவில் நடந்தாலும், வேலை செய்தாலும் எப்போதும் கடவுள் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருங்கள். இதனால், மனக்கவலை தீரும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்,'' என்கிறார்.


http://www.dinamalar.com/aanmeegamnews_detail.asp?news_id=8020
 
Periyava & Tagore


Periyava & Tagore



It was Navarathri time and Periyava was in Calcutta. It was a grand celebration at Periyava’s camp. Everyday there was a ‘Navaa Varna Pooja’, Sumangali Pooja, Kanya Pooja & many more. She never missed it out. She is a Mami settled in Calcutta. She was also a regular visitor to Sri Rabindranath Tagore’s ashram. After about nine long days to Periyava’s camp, she had been to Tagore’s ashram. Any Calcutta-vaasi is naturally a ‘Devi Upasaka’. And
Tagore was a ‘Sri Vidya Upasaka’ but he did had some modern thoughts. Tagore’s command on Literature is known well. Mami had visited Tagore after a short break. Tagore was asking her where were she on those days. She explained that Periyava had come & there were Navavarna pooja, Sumangali pooja, Kanya pooja, etc.
Tagore understood that Periyava was also a Devi Upasaka’.



Tagore , “Does Swamiji do Kanya Pooja with any child or only with Brahmin child?”

Mami, “No! Periyava never deviates from the tradition. He does Kanya Pooja only with Brahmin child”.


Tagore, being one of the world’s highly respected (nobel) liberates , quoted one of the namas from the Sri Lalitha Sahasra Namam : “Aa’brahma keeda Janani” and said “He is a great Devi Upaska, won’t he know the meaning of it? It means SHE is the source of everything, from tiny insects all the way to Brahma (who creates the world). Still he is thinking having only a Brahmin child for Kanya Pooja!”


Mami was very upset to hear someone like Tagore taking a jig at Periyava. She came back to Periyava’s camp & her face was still dull.


Periyava asked, “நேத்தைய பூஜைக்கு வரலையோ?” (“Didn’t you come to puja yesterday?”)


Mami, “இல்லே பெரியவா, தாகூரை பாக்க போய் இருந்தேன்…” (“No – I went to meet Tagore.”), she couldn’t decide ‘to say or not to say’.


Periyava understood and asked “ஏன்? அவர் என்ன பத்தி எதாச்சும் சொன்னாரோ?” (“Did he say anything about me?”)


She couldn’t with hold, told everything what he said with tears.


Periyava smiled & said, “அவரை அதுக்கு அப்புறம் மூணு அக்ஷரம் இருக்கு, அதையும் சேத்து படிக்கச் சொல்லு!” (“There are three more askharams – ask him to include them while reading”.


Now Mami caught up with enthusiasm. She knows there is a fitting reply but couldn’t get it. Was asking Periyava, what it means.


Periyava, “முதலில் அவரிடம் சொல்லு. அப்புறம் பாக்கலாம்…” (“First go and tell, let us see later”)
So without any other way Mami quickly went back to Tagore & said what Periyava said.


Tagore recollected “Aa’brahma keedajanani Varnaasrama Vidhayini Nijaakjaroopa Nigama PunyaaPunya Phalapradha!” Repeated it mentally few times. “Aha! Aha! Is this the way to understand the Devi’s Sahasranama? I never knew it. HE has replied. Swamiji has replied my very own question”.


Tagore told with a bit of excitement and also quickly begged down, “Swamiji is a Mahaan! Have you told what I told to him. Oh! It’s a mistake.”


Immediately, he found out the next step being a honest literal “I must have his darshan. Please arrange but not openly because evry Swamiji will put pressure on me to visit. But I must have his darshan!”


Mami came back satisfied to Periyava. Tagore did have darshan when Periyava visited a ‘Sethiji’s home’ unknown to common public.


Tagore wrote in his daily, “There are Mahaans even today whom I’ve to visit & STILL learn!” of course, without naming Periyava.


Many devotees have said – few devotees have had darshan. Tagore is fortunate to hear from ‘Devi’ herself, this time. Probably out of his Upasana or out of Periyava’s Karunyam …


Periyava & Tagore | Sage of Kanchi
 
அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு

வர வர வர வித்யையின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு சாஸ்த்ரமாக மறைந்துகொண்டே வருகிறது. எத்தனையோ கலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

பழைய கலைகள் தெரிந்தவர்கள். ஆயுர்வேத வைத்யர்கள், சில்பிகள், ரதகாரர்கள், பரத சாஸ்த்ர நிபுணர்கள் என்று ஏதோ கொஞ்சமாவது இல்லாமல் போகவில்லை.நிஜமான யோக்யதையுள்ள இந்தச் சில வித்வான்களுக்கு ஆதரவு கிடைப்பது ச்ரமமாயிருக்கிறது.

ஆதரிப்பவர்கள் இல்லாவிட்டால் நல்ல வித்வத் உள்ளவர்களுக்கு மனஸு தளர்ந்து போய் அவர்கள் தங்கள் வித்வத்தைத் தங்களுடைய ஸந்ததிக்கோ, சிஷ்யர்களுக்கோ கற்றுக்கொடுக்காமலே போய்விடுவார்கள். நமக்கு வித்யைகள் நஷ்டமாகிப்போகும். இப்படித்தான் தற்போதே நேர்ந்திருக்கிறது. இது மேலும் இப்படியே போய்க்கொண்டிருப்பதற்கு விடப்படாது என்பதற்காகத்தான் இவ்வளவு சொல்வதும்.


??????? ??????????? ????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top