• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Monthly Anusham Utsavam at Sri Kanchi Matam, Malleswaram

Monthly Anusham Utsavam at Sri Kanchi Matam, Malleswaram

Beginning today, Anusham Utsavam will be held every month, the first being held this evening (Friday, Jan 16) at Kanchi Srimatam premises, 5th Main, Malleswaram, Bangalore. The veedhi utsavam is slated to start by 6.15 pm.
Devotees may contact Sri Ganeshan Mama at 9845118800 .


Jaya Jaya Shankara Hara Hara Shankara

https://mahaperiyavaa.wordpress.com...sham-utsavam-at-sri-kanchi-matam-malleswaram/
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 48th Visesha Upanyasam on 18th January 2015 at Residence of Mr.S. Sathiamurthy, S-2, “Aditya Shelters”, AL Block, No:86, 4th Street, 11th Main Road, Annanagar, Chennai-600040.

Upanysam on "Vedhamum Ramayanamum" Upanyasakar Vidwat Pravara Salakshana Vidwan Brahmmasri Gurunatha Ganapadigal from 6:30 PM to 8:00 PM.


Source: Sage of Kanchi
 
Importance of Enunciation and Intonation

Importance of Enunciation and Intonation

You must not go wrong either in the enunciation or intonation of a mantra. If you do, not only will you not gain the expected benefits from it, the result might well be contrary to what is intended. So the mantras must be chanted with the utmost care. There is a story told in the Taittiriya Samhita(2. 4. 12) to underline this.




Tvasta wanted to take revenge on Indra for some reason and conducted a sacrifice to beget a son who would slay Indra. When he chanted his mantra, "Indrasatrur varddhasva. . ", he went wrong in the intonation. He should have voiced "Indra" without raising or lowering the syllables in it and he should have raised the syllables "tru" and "rddha"(that is the two syllables are "udata"). Had he done so the mantra would have meant, "May Tvasta's son grow to be the slayer of Indra". He raised the "dra" in Indra, intoned "satru" as a falling svara and lowered the "rddha" in "varddhasva". So the mantra meant now: "May Indra grow to be the killer of this son (of mine)". The words of the mantra were not changed but, because of the erratic intonation, the result produced was the opposite of what was desired. The father himself thus became the cause of his son's death at the hands of Indra.
The gist of this story is contained in this verse which cautions us against erroneous intonation.



Mantrohinah svarato varnato va
Mithya prayukto na tamarthamaha
Sa vagvajro yajamanam hinasti
Yathendrasatruh svarato' paradhat


What was the weapon with which
Tvasta 's son was killed? Not Indra's thunderbolt but the father's wrongly chanted mantra.


Importance of Enunciation and Intonation from the Chapter "Siksa", in Hindu Dharma : kamakoti.org:
 
தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?

தமிழ் மாஸப் பெயர்கள் எப்படி வந்தன?

காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து

ஆங்கில மாதம் என்றால் அது ஜனவரி ,பிப்ரவரி என துவங்குகின்றன. தமிழ் மாஸம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாஸத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.

1. சித்திரை மாஸம்
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது

2. வைகாசி மாஸம்
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

3. ஆனி மாஸம்
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

4. ஆடி மாஸம்
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

5. ஆவணி மாஸம்
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.

6. புரட்டாசி மாஸம்
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

7. ஐப்பசி மாஸம்
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

8. கார்த்திகை மாஸம்
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்த்திகை. இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

9. மார்கழி மாஸம்
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

10. தை மாஸம்
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

11. மாசி மாஸம்
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.

12. பங்குனி மாஸம்
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.



Source: Sage of Kanchi

Sundaresan Subramanian
 
Nama sankeerthanam

Nama sankeerthanam


10378274_818453188214349_673308857610011605_n.jpg




Source: Sage of Kanchi

Ganesan Sethuraman
 
திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார்

"ஊரெனப்படுவது உறையூர்"எனப் போற்றிப் புகழும் சோழர் குல வேந்தர்களின் தலைநகராகும் உறந்தையம்பதி சரித்திரத்தில் பெருமைபடப் பேசப்பட்டுள்ளது.


செம்பியர்களின் ஆட்சியில் சிறப்புற்றுப் பெருமை பெற்றிலங்கிய திருவுறையூரில் செந்நெற் பயிரில் (A. H. 8- ஆம் நூற்றாண்டு) துன்மதி ஆண்டு கார்த்திகை மாதம் தேய்பிறையில் பொருந்திய துவிதியை திதியில் புதன்கிழமையன்று உரோகிணி நட்சத்திரத்தில் திருமாலினது ஸ்ரீவத்ஸத்தின் அமிசராய் திருப்பாணாழ்வார் அவதரித்தருளினார்.


பிறவாது பிறந்த அக்குழந்தையை அவ்வூரில் பஞ்சம ஜாதியில் பாணர் குலத்துப்பிறந்தானொருவன் நெற்பயிர் பக்கல் வந்தபொழுது கண்டான். கண்ட அளவில் பெற்றோர் யாவர் எனச் சுற்றும்முற்றும் பார்த்து, ஒருவரும் இன்மையால் தனது நல்வினைப் பயன் காரணமாக நாராயணன் தனக்கு அருளிச்செய்த செயலோ என மகிழ்ந்து, எடுத்துச் சென்று மனைவியிடம் அளித்தான், மனைவியும் மலடு தீர்ந்த தன்மையால் பசுவின் பால் முதலிய தூய உணவினைக் கொடுத்துக் குழந்தையைக் காத்து வந்தாள். திருமாலருளால் பிறந்த இவர் தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ்ப் பாடலில் தேர்ச்சி பெற்று, அதனால் பாணர் குலத்தில் சிறப்புற்று இலங்கினமையால், யாவரும் பாணர் குலத் தலைவர் என்பது தோன்ற 'திருப்பாணர்'என இவரை அழைத்தனர்.


திருப்பாணர் பின் அரங்கநாதருக்குப் பாடல் திருத்தொண்டு செய்யும் எண்ணத்தினராய்ப் புறப்பட்டு, தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்தவராதலால் திருவரங்கத்தில் அடியிடத் துணியாமல், தென் திருக்காவிரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கெதரில் யாழுங்கையுமாக நின்று கொண்டு, திருவரங்கனைத் திசை நோக்கித் தொழுதார். பின்பு திருவரங்கநாதப் பெருமானைக் குறித்துப் பல பாடல்களைக் கண்டமும் கருவியுமொக்க, கேட்பவர் செவியும் மனமும் குளிர, எம்பெருமான் திருவுள்ளம் மகிழப்பாடினார். இங்ஙனம் நாள்தோறும் வைகறையில் திருபாணர் திருவரங்கனைக் குறித்துப் பல பாடல்களைத் தம்மை மறந்து பக்தியில் பரவசப்பட்டு பாடிக்கொண்டிருப்பார்.


ஒரு நாள் திருவரங்கநாதனை ஆராதிப்பவராகிய உலோகசாரங்க முனிவர் என்பவர் காவிரியில் நீராடித் திருமண் அணிந்து, துளவமணி மாலையையும், தாமரை மணிமாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு, திருவரங்கநாதன் திருமஞ்சனத்திற்கு நீர்கொண்டு செல்லப் பொற்குடத்தைக் கையிலேந்தி அங்கு வந்தார். அவர் திருப்பாணரைக் கண்டு கைதட்டிக் கூவி, 'அப்பாற் செல்'என்று கூவினார். திருப்பாணர் இவ்வுலகத் தொடர்பை மறந்ததிருந்ததனால் அம்மொழியைச் செவியுறாமலேயே வாளா நின்றிட்டார். இதனால் கோபமுற்ற முனிவர் ஒரு கல்லை எடுத்து வீசினார். அது பாண் பெருமாளுடைய நெற்றியில் பட்டுக் குருதி பெருகச் செய்தது. திருப்பாணரும் தெளிவுற்று, முனிவர் எதிர்ப்புறம் சேய்மையில் நிற்பதைக் கண்டு, மனமும் உடலும் நடுங்கி அவ்விடத்தினின்று சென்று விட்டார்.



பிறகு உலோகசாரங்க முனிவர் பொற்குடத்தில் காவிரியின் நீரை முகந்துகொண்டு, திருவரங்கநாதன் முன் சென்றார். அப்பொழுது திருவரங்கநாதன் நெறறியினின்றும் செந்நீர் பெருகி வந்துகொண்டிருந்தது. இதனை முனிவரும் அர்ச்சகரும் கோயில் அதிகாரிகளுக்கு அறிவிக்க, அவர்களும் இவ்வுற்பாகச் செய்தியை அரசனுக்குக் கூற, அமைச்சர்களுடன் அரசன் ஆராய்ந்தும் காரணம் காணாது, சுவாமி திருவடியிலே பாரத்தை வைத்திட்டான்.



அதற்கு முன்பாக ஒரு நாள் பிராட்டி பெருமாளை நோக்கி, 'பல காலமாக நம்மைப் பாடிவருகிற பாணன் புறம்பே நிற்கப் பார்த்திருக்கலாமோ?'என்று விண்ணப்பம் செய்ய, எம்பெருமான் விரைவிலே அவரைத் தம் அருகில் அழைத்துக்கொள்வதாக வாக்களித்திருந்தனன். அங்ஙனம் வாக்களித்த வண்ணமே திருப்பாணருக்கு அருள்புரிந்து அவருடைய அன்பையும் செயலையும் பெருமையுடன் உலகத்தில் விளங்கச் செய்யவும், கடவுளுடைய திருவருளுக்கு அன்பே முதன்மையானதாகும் என்னும் அருமறையினுடைய உண்மையை இவ்வுலகத்தினர் பலரும் அறியவும் திருவரங்கேசனார் திருவுள்ளங் கொண்டார். அந்நாள் இரவில் உலோகசாரங்கருடைய கனவில் தோன்றி இறைவர், 'முனிவ!நீ சென்று எம்முடைய நல்லன்பராகிய திருப்பாணரை இழி குலத்தவர் எனக் கருதாமல் உன்னுடைய தோள்மீது எழுந்தருளச் செய்து, எம் திருமுன்புகொண்டு வருவாயாக'என்று கட்டளையிட்டருளினார்.



உலோகசாரங்க முனிவர் வைகறையில் கண் விழித்து எழுந்து, கனவிற் கடவுளிட்ட கட்டளையை நினைந்து மிக்க வியப்பை அடைந்தார். அரங்கரது ஆணையை நிறைவேற்ற எண்ணி அமலநாதரிடம் அன்புடைப் பெரியார் பலரைத் தம்முடன் வரவழைத்துக்கொண்டு பாண்பெருமாள் வழக்கமாக நின்று திருப்பாடல் தொண்டு புரியும் இடத்தை நாடிக் களிப்புடன் நடந்தார்.


தொண்டரெல்லாம் தொழுதேத்தும் தன்மையரான பாண்பெருமாளையணுகிய உலோகசாரங்கர், தலைமேற் கைகளைக் கூப்பி, மும்முறை வலம் வந்து, மண்ணிற்கிடந்து பாணருடைய திருவடிகளை வணங்கியெழுந்தார். பின்பு திருப்பாணாழ்வாரை நோக்கி, 'தேவரீரைத் தம்மிடத்துக்கு எழுந்தருளப் பண்ணுவித்துக் கொண்டு வரவேண்டுமென்று நம் பெருமாள் அடியேனுக்குக் கட்டளையிட்டருளினார்'என்று சொன்னார். பாணர் தலைவர் 'நீசனான அடியேன் திருவரங்கப்பெருநகரை மிதித்திடுவேனோ?'என்று தம் சாதி இழிவைச் சொல்லி மறுத்திட்டார்.


அப்பால் முனிவர், 'தேவரீர் மிதித்திடவேண்டா;பெருமாள் பெரிய திருவடியின் திருத்தோளில் எழுந்தருளுதல்போலத் தேவரீர் அடியேனது தோளில் ஏறியருளும்'என்று பிரார்த்தித்தார். 'தங்கள் பாதத்திலே தலையை வைத்து வணங்குவதற்குரிய யான் இக்கொடுந்தொழிலைச் செய்யேன்'என்று பாணர் கூறினார். பின்னர் முனிவர் கடவுளின் கட்டளையைக் கூறி வற்புறுத்தத் திருப்பாணர் தம்முடைய உயிரையும், உடலையும் இறைவரது அடியிணைக்கே உரியனவாக்கி மெய்மறந்து நின்றார்.



உலோகசாரங்க முனிவர், பாணநாதரைத் தோளிலேற்றிக் கொண்டு சென்று அரங்கநாதனது திருமுன்பே இறக்கிவிட்டார்.


உடனே திருப்பாணாழ்வார் இறைவனது திருவடி முதல் தலைவரையிலுமுள்ள அழகிய அவயங்களெல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகக் கண் குளிரப் பார்த்து மனமுருகினார். எல்லா அவயங்களிலும் ஈடுபட்டுச் சேவித்துக் களித்தார்;மணவாளருடைய அழகிற் சிறந்த எல்லா அவயங்களிடமும், தாம் நுகர்ந்த அழகையும் இன்பத்தையும் உலகத்தார் எல்லாரும் நுகர்ந்து இன்புற்று உய்யத் திருவுள்ளங்கொண்டார்!அரங்கரது திருமேனியழகைச் சிறந்த பத்துப் பாட்டுக்களால் பாடினார். இந்த அருளிச்செயலுக்கு அமலனாகிபிரான் என்று பெயர்.


பின்னர் மக்கள் பலருங்காணத் திருப்பாணாழ்வார் பெரிய பெருமாளுடைய திருமலரடிகளையணுகிக் கீழே விழுந்து வணங்கி, அத்திருவடிகளினிடமே மறைந்து பேரின்ப வீட்டை அடைந்தார். திருப்பாணாழ்வாரைத் தூக்கித் தம் திருமுன்பு கொணர்ந்தமையைக் கருதி அரங்கநாதர், அந்த உலோகசாரங்கரையும் ஆட்கொண்டு, என்றும் அழிதலில்லாத பேரின்ப வீட்டை அவருக்கும் அளித்தருளினார்.


திருப்பாணாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்:1. திருவரங்கம், 2. திருவேங்கடம்,
3. பரமபதம் முதலியனவாகும்.


???????????????? : ( ??????????/ ??? ????????? - ???? ??????? ????????? ????????? (????? ?????) ) : kamakoti.org:
 
Sri Adi Shankaracharya as an ‘Avatar'

Sri Adi Shankaracharya as an ‘Avatar'

[h=2]What is An Avatar?[/h] The Supreme power assumes form from time to time to bring erring humanity back to the correct path. Leaving His all pervading spirit unaffected, He incarnates choosing a form, place and time. The form and nature He takes will depend on the cause and circumstances leading to the Avatara. Avataras differ in the vehicles or medium through which the Supreme manifests itself, according to the requirement. This is understandable as whenever we find the emergence of a great personality of Superhuman strength advocating or championing the cause of the eternal principles and values of life and Dharma and achieving great things, we are apt to call it an ‘Avatar’.

The ultimate purpose of an incarnation is always the re-establishment of right values, of Dharma in the world. Accordingly, we accept Sri Adi Shankaracharya as an ‘Avatar’ of Lord Shiva. Sri Bhagavatpada Shankaracharya, was not only a great thinker and the noblest of Advaitic philosophers but he was essentially an inspired champion of Hinduism and one of the most rigorous missionary leaders in our country. No matter what superlative we wish to apply to Adi Shankara’s genius, words would scarce suffice to describe even an iota of the mystic we know as Shankara!

please read more from here

Sri Adi Shankaracharya | Sringeri Sharada Peetham
 
Abirami Bhattar

Abirami Bhattar

According to Paambu Panchangam, January 20th is the day when Goddess Abirami gave darshanam to Bhattar in Thirukadaiyur. Let us see what Mahaperiyava had said about this mahan in Dheivathin Kural Vol 2.


abirami_andhathi1.jpg



சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டு – அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.


திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்’ என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது.


ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன் வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி?’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பெனர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்” என்று தலையைத் தூக்கினான்.



அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசீ, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.


மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது ‘அவாந்தர’மே இல்லை.


கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசீயில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், ‘நாம் உண்மையில் யார்? ஸ்வாமி என்பவர் யார்? பரம சத்தியம் என்பது என்ன? என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். ‘சௌசம்’ என்பது ‘சுசி’ என்பதிலிருந்து வந்தது. ‘சுசி’ என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்—புலனடக்கம்—அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.



இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.



Let us know about the great incident that resulted in one of the finest devi stuthi “Abirami Andhathi”


பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர். காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.


மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், இதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது.



தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.


ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை. அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அக மகிழ்ந்தார்.


மன்னரிடம் பட்டரைப் பற்றி பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது. இந்நூலில் யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே!

தீவினையாகிய நரகத்தில் விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள்நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே! வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித்தாயே! என்று பல விதமாகப் போற்றியுள்ளார். அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது சக்தி உபாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.


https://mahaperiyavaa.wordpress.com/2015/01/19/abirami-bhattar/
 
யோக : சித்தவ்ருத்தி நிரோத:

யோக : சித்தவ்ருத்தி நிரோத:

மனசை அடக்குவதுதான் யோகம் 'என்று சொல்கிறார் . புலி,சிங்கம், கரடி முதலிய பிரணிகளையெல்லாம் அடக்குகிறோம். ஆனால் நமக்குக் கொஞ்ச நாழிகை மனத்தை அடக்கத்தெரியவில்லை . எத்தனை எத்தனையோ விஞ்ஞான அறிவையெல்லாம் வளர்த்துக்கொண்டு வெளியில் இருக்கிற பூதங்களையெல்லாம் அது ஆட்டி வைக்கிறது . சித்தத்தை அடக்கி ஒரு நிமிஷம் சும்மா இருக்கத் தெரியவில்லை. ஏதாவது ஒன்றைப் பற்றியே நினை என்றாலும் மனசு கேட்கமாட்டேன் என்கிறது. 'சித்தத்தை நிறுத்துவது தான் யோகம் 'என்று சொல்கிறார் பதஞ்சலி.

'சரி, அதை நிறுத்துவது எப்படி? 'என்ற கேள்வியைப் போட்டுக்கொண்டு அடுத்த ஸூத்ரம் சொல்கிறார். 'ஈசுவரனை நினைக்க ஆரம்பி 'என்கிறார். சித்த விருத்தி நிற்பதற்கு ஈசுவரனை நினைக்க ஆரம்பிக்கவேண்டும்.

சித்தம் நின்றால் பிராணன் நிற்கிறது. அதிக ஆனந்தமோ துக்கமோ வந்தால் மனசு நின்று, சுவாசமும் தடைப்படுகிறது. சித்தத்திற்கும் பிராணனுக்கும் சம்பந்தம் இருப்பது தெரிகிறது. ஆகவே, 'பிராணனை நிறுத்தியும் சித்தத்தை நிறுத்தப் பழகலாம்' என்கிறார். ஆனால் முதலாவதாக, 'சித்தத்தை நிறுத்துவதற்கு ஈசுவரத் தியானம் பண்ணு 'என்கிறார்.

'அந்த ஈசுவரன் யார்? 'என்ற கேள்வியைப் போட்டுக்கொண்டு அவரே அப்புறம் சொல்கிறார்:

க்லேச கர்ம விபாகாசயை : அபராம்ருஷ்ட:
புருஷ விசேஷ: ஈஸ்வர :|

நமக்கு என்ன என்னவோ குறைகள் இருக்கின்றன. அவற்றால் கஷ்டம் வருகிறது; கர்மா ஒரு பக்கம் பிடித்து இழுக்கிறது. துக்கம் வேறு; குறை வேறு. இவற்றால் மிகவும் ஆயாசப்படுகிறோம். மனக் கிலேசம் அடைகிறோம்.இவற்றில் ஒன்றும் இல்லாதபடி வெறும் பட்டமரமாக இருக்கவேண்டும்; ஆனால் அறிவும் இருக்கவேண்டும்.

சில பிறவிகள் மந்தியாக,ஒன்றும் தெரியாமல் இருக்கின்றன. வெறும் கல்லுக்குச் சைதன்யம் இல்லை; குறை இல்லை; மோட்சமும் இல்லை. அப்படிப் பிறவியில் ஒன்றும் தெரியாத மந்தியாக,அசடாக, கல்லு மாதிரி குழந்தையோ ஒருவனோ இருந்தால் அவனை உயர்ந்தவன் என்று சொல்லமுடியாது. அவன் ஜீவன் முக்திதன்மையை அடைந்துவிட்டான் என்று நினைப்பது தப்பு. அது ஒரு பாவத்தின் பலன். அந்த ஜனனம் போய்விட்டால் அடுத்த ஜனனத்தில் அவனுக்குத் துக்கம் வந்துவிடும்.


உலகத்திற்குள் எவன் மகா புத்திமானோ, எவன் புத்தி அதிக சூக்ஷ்மமானதோ நல்ல கத்தியின் கூர் எப்படி இருக்கிறதோ,அப்படிப்பட்ட கூர்மையான புத்தி உடையவனாக எவன் இருக்கிறானோ அவன் பட்ட மரம் மாதிரி, சலனம் இல்லாத மனசு உடையவன் ஆகவேண்டும். காமத்தினாலோ குரோதத்தினாலோ அவன் மனம் சலனம் அடையாமல் பேதிக்காமல் இருந்தால் அதுதான் ஆனந்தம்

கஷ்டத்தையோ துக்கத்தையோ காமத்தையோ தெரிந்து கொள்ளச் சக்தி இல்லை ; அதனால் கஷ்டம் இல்லை; துக்கம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் பிரயோஜனம் இல்லை. அதனால் அவன் எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கிறான் என்று சொல்ல முடியாது. எல்லாம் தெரிய வேண்டும், சூக்ஷ்மமான புத்தியினாலே தன்னைச் சுற்றி நடக்கிற விவகாரங்களையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். ஞானம் பூரணமாக இருக்கிறது. ஆனால் சலனம் இல்லாத மனசு உடையவனாக, காமம் இல்லாத மனசு உடையவனாகக் கஷ்டம், துக்கம் எதுவுமே இல்லாத மனசு உடையவனாக இருந்தால்தான் அவன் எப்போதும் எல்லாக் காலத்திலும் ஆனந்தம் உடையவனாக இருப்பான். அப்படி நம்மில் யாராலும் இருக்க முடியவில்லை. ஈசுவரன் ஒருவன்தான் சர்வக்ஞனாக சதா ஆனந்தரூபியாக சத்சித் ஆனந்த ரூபியாக இருக்கிறான் என்று ஈசுவரனுக்கு ஒரு லக்ஷணம் சொன்னார்கள்


' ஈசுவரன் ஜகத்துக்குக் கர்த்தா அல்ல, அவன் பல தாதாவும் அல்ல ''என்று சொன்னாலும் சொல்லிக்கொண்டு போகட்டும். 'அவர் பல தாதாவாக இருந்தால்தான் என்ன ? நமக்கு அவனால் ஏதாவது காரியம் ஆகவேண்டுமா? 'என்றால் ஒரு காரியம் ஆக வேண்டும். என்ன காரியம்?

நாம் யாரை நினைக்கிறோமோ அவராக மாறிவிடுகிறோம். சர்வக்ஞனாக எல்லாம் உணர்ந்தும் சித்தத்தில் கொஞ்சங்கூட சலனமில்லாமல் சதா ஆனந்த ஸ்வரூபியாக ஈசுவரன் இருக்கிறான். அவனை நினைக்க ஆரம்பித்தால் நாமும் அப்படி ஆகலாம்.


Source: Sage of Kanchi

Surya Narayan
 
ஆசார சாஸ்திரங்களில் விஞ்ஞான நுணக்கம்

ஆசார சாஸ்திரங்களில் விஞ்ஞான நுணக்கம்

ஸமீப காலமாக நம் ஆசாரங்களைப் பற்றி இதற்கு முந்திய தலைமுறைக்கு இருந்ததைவிடக் கொஞ்சம் கௌரவ புத்தி உண்டாயிருப்பதைப் பார்க்கிறேன். முன்னே இங்கிலீஷ் படித்தவர்களென்றால் நம் ஆசாரம் அவ்வளவுமே பேத்தல் என்று நினைப்பவர்களாயிருந்தார்கள். ஆனால் நான் கொஞ்ச நாளாக ஒரு வேடிக்கை பார்க்கிறேன் - ஸயன்ஸும் ஸ்பிரிசுவாலிடியும் (ஆத்மிகமும்) ஒன்றுகொன்று விரோதமானதுபோல் தோன்றினாலும் ஸயனஸ் அபிவிருத்தியாகிக் கொண்டு வருவதாலேயே, புதிசு புதிசாக டிஸ்கவரி செய்யும்போது, "இதென்னடா ஆச்சர்யமாயிருக்கிறது!நாம் ரொம்பவும் அறிவிலே பின் தள்ளி நின்றவர்கள் என்று நினைத்த ஆதிகால இந்தியர்கள்

இந்த விஞ்ஞான உண்மைகளை, நமக்கு இருக்கிற லாபரட்டரியும் இன்ஸ்ட்ருமென்டுகளும் இல்லாமலே எப்படியோ கண்டுபிடித்து அவர்களுடைய சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறதாகத் தெரிகிறதே!"என்று அதிசயப்படுகிறார்கள். கொஞ்சநாள் முந்தி (பத்திரிகைகளில்) பார்த்திருப்பீர்கள். ரஷ்யாக்காரன் கம்யூனிஸ்ட், நிரீச்வரவாதி. ஆனால் இங்கே நாம், "இதென்ன ஹோமம் என்று சொல்லிக்கொண்டு வீட்டையெல்லாம் புகையாக்கிக் கொண்டு, கண்ணும் கரிக்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?"என்றால், ரஷ்யா தேச ஸயன்டிஸ்ட்கள் வறட்டிப் புகையினால் அடாமிக் ரேடியேஷன் (அணுச் சிதைவின் கதிரியக்கம்) உள்படப் பலவித பொல்யூஷன்களைப் போக்கிக்கொண்டு விடலாமென்று சொல்லி, நம்முடைய ஹோமத்தைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

இதேபோல ஹோமத்தில் போடப்படும் பலவிதமான ஸமித்துக்களின் புகை பரவுவதும் க்ருமி நாசினியாக (antiseptic) உதவுகிறது என்று முன்னே டாக்டர்கள் சொன்னதுண்டு. தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள்.

"ஸ¨ரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!"என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் 'க்ரஹணத் தீட்டு'என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் எழுதுகிறார்கள்.


எல்லாருக்கும் எல்லா ஸயன்ஸையும் சொல்லிக் கொடுத்துவிட்டால் ஒவ்வொருத்தனும் 'ஆடம் பாம் (ப்) 'பண்ணி வைத்துக் கொள்வதில்தான் முடியும் என்றுதான், கெடுதல் வராமலிருப்பதற்கு நாம் பண்ணவேண்டியதை மட்டும் சொல்லி, அதன் காரணத்தை, "ராஹ§ப் பாம்பு ஸ¨ர்யனை முழுங்கிற்று"என்பது போலக் கதா ரூபமாகப் பாமர ஜனங்களுக்குச் சொன்னார்கள் என்று ஒரு கட்சி. இதைக்கூட நான் முழுக்க ஸரி என்று சொல்லமாட்டேன். எல்லாருக்கும் விஞ்ஞான மர்மம் தெரிந்துவிட்டால் அனர்த்தமாகும் என்று நினைத்தது வாஸ்தவம். ஆனால் அதற்காகத்தான் விஞ்ஞான உண்மைகளுக்குப் பதில் கதைகளை இட்டுக்கட்டிச் சொன்னார்களென்பது ஸரியில்லை. இம்மாதிரிக் கதைகளும் நிஜம் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். பகவானின் லீலையில், நமக்கு ஸாத்யமாகத் தோன்றாத என்னென்னவெல்லாம் நடக்குமோ?நமக்கு எப்படித் தெரியும்?

தங்களுடைய லிமிடெட் ஸர்க்கிளைத் தாண்டி நாலெட்ஜ் (அறிவு) வெளியே பரவக் கூடாதென்ற (சுயநலக் கும்பலின் கொள்கை) தான் நம் பூர்விகர்கள் இம்மாதிரி ஸயன்ஸ் உண்மைகளைக் கூறாமல், கதையிலே போர்த்தி மூடி வைத்ததற்குக் காரணம் என்றும் சிலர் குற்றம் சொல்கிறார்கள். இது ரொம்பத் தப்பாகும். மனஸ் கட்டுப் படாதவர்களுக்கு அறிவை மட்டும் கொடுப்பது அனர்த்தத்தில்தான் முடியும். பெரும்பாலான ஜனங்கள் மனஸ் கட்டுப்படாதவர்களாகத்தான் இருப்பார்கள். ஸயன்ஸ் ஸகல ஜனங்களுக்கும் பரவி முன்னேறிக் கொண்டேயிருக்கும்போது, அந்த முன்னேற்றத்துக்கு எதிர் ratio -வில் (விகிதாசாரத்தில்) லோகத்திலே தர்மம் பின்னே போய்க்கொண்டேயிருப்பதை நாம் பிரத்யக்ஷமாகப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?இதை அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே போஜன் 'ஸமராங்கண ஸ¨த்ர'த்தில் சொல்லியிருக்கிறார். அதிலே ஏரோப்ளேனைப் பற்றிக்கூட 'வ்யோமயானம்'என்று சொல்லி, ஆனாலும் அதன் theory -ஐ மாத்திரம் கொஞ்சம் கொடுத்துவிட்டு, "இதைச் செய்யும் procedure -ஐ இங்கே விஸ்தாரம் பண்ணாததால் அது தெரியாதாக்கும் என்று நினைக்க வேண்டாம். நன்றாகத் தெரியும். ஆனாலும் புஸ்தகத்தில் எல்லாருக்கும் தெரியும்படியாக எழுதி வைத்து விட்டால், அதனால் லோகத்துக்கு நன்மையைவிடக் கெடுதியே ஜாஸ்தி உண்டாகும் என்றுதான் இங்கே சொல்லவில்லை"என்று காரணம் காட்டியிருக்கிறார். அவர் சொன்னதிலுள்ள உண்மையை நாம் கண்கூடாகப் பார்த்து விட்டோம்!ரண பூமியில் மட்டும் யுத்தம் என்றில்லாமல் நாடு நகரமெல்லாம் குண்டு பொட்டு World War நடந்ததற்குக் காரணம் விமானப் படையெடுப்புத் தானே? ஹ்ருதயம் சுத்தியாவதற்கு முந்தி புத்திமட்டும் விருத்தியானால் அனர்த்தந்தான் என்பதை ஸமயாசாரங்கள் எடுபட்டுப்போய் ஸயன்ஸ் மட்டும் அபிவிருத்தியாதிக் கொண்டிருக்கிற இக்காலத்தில் நன்றாகப் பார்க்கிறோம். இதனால்தான் சுத்தர்களான நல்ல கல்ச்சருள்ளவர்களுக்கென்று மாத்திரம் நம் பூர்விகர்கள் அநேக விஷயங்களை வைத்துவிட்டனர்.

ஸமீப காலமாக நம் சாஸ்திர விஷயங்களில் பல ஸயன்ஸுக்கு ஒத்து வருகின்றனவென்று கண்டு கொண்டதில் படிப்பாளிகள் கொஞ்சம் அதனிடம் கௌரவ புத்தி காட்டத் தொடங்கியிருக்கிறார்களென்று சொன்னேன். ஸயன்ஸ் கொஞ்சம் விருத்தியாயிருந்தபோது கேலி செய்தார்கள். இப்போது அதிக வளர்ச்சி அடைந்தபின் சில அம்சங்களைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னம் ஸயன்ஸ் விருத்தியாக ஆக இன்னம் பல சாஸ்தீரிய ஸமாசாரங்களுக்கும் scientific basis இருப்பதாகக் கண்டுபிடிப்பார்கள்.


???? ?????????????? ??????? ????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Anugrahabhashan by HH Vijayendra Saraswati Swamigal @ Bhagavatha Seva Trust Function

Anugrahabhashan by HH Vijayendra Saraswati Swamigal @ Bhagavatha Seva Trust Function

https://www.youtube.com/watch?v=ZSRtgWeNLtM


Anugrahabashanam by HH Pujyashri Vijayendra Saraswati Swamigal in Bhagawatha Seva Trust function, Dec'2014 @ Krishna Gana Sabha
 
சத்தியம்

சத்தியம்


கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசீயில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், 'நாம் உண்மையில் யார்? ஸ்வாமி என்பவர் யார்? பரம சத்தியம் என்பது என்ன? என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். '

சௌசம்' என்பது 'சுசி' என்பதிலிருந்து வந்தது. 'சுசி' என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்—புலனடக்கம்—அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.



இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.


???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
நிதித்யாஸனம் - மஹா பெரியவா

நிதித்யாஸனம் - மஹா பெரியவா


sankara.jpg



ஞான வழியில் லக்ஷ்ய ஸித்தியை அடைவிக்கிற முடிவான நேர்-ஸாதனத்திற்கு நிதித்யாஸனம் என்று பெயர், இது த்யான யோகத்தைச் சார்ந்ததுதான். உயிரோடு உறவு கொண்டாடி ஆத்ம ஸமர்ப்பணம் செய்வதான பக்தி யோகத்தையும், கரைத்துக் கொண்ட த்யான யோகமாகத்தான் அதை அப்யஸிக்க வேண்டும். விவேக சூடாமணியில் இதை ஆசார்யாள் ஸ்பஷ்டமாகத் தெரிவித்திருக்கிறார். தாம் மட்டும் அப்படிச் சொல்லவில்லை, வேதத்திலேயே அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார்.




ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாந் முமுக்ஷோ: முக்தேர்-ஹேதூந் வக்தி ஸாக்ஷாச்-ச்ருதேர்கீ:


அடிப்படை ச்ரத்தை, அதோடு பக்தி யோகம், த்யான யோகம் இரண்டையும் கலந்து பண்ணுவதே - த்யான யோகத்திலேயே பக்தி பாவத்தையும் கரைத்துப் பண்ணுவதே - முமுக்ஷுவாக இருப்பவன் முக்தியைப் பெறுவதற்கான ஹேது/உபாயம், இப்படி சாக்ஷாத் வேத வாக்யமே சொல்கிறது என்று சங்கராசார்யார் கூறி இருக்கிறார். கைவல்ய உபநிஷத் என்னும் க்ருஷ்ண யஜுர் வேதத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது. இதன் ஆரம்பமே, 'ச்ரத்தா-பக்தி-த்யான-யோகாதவைஹி' என்பதுதான். ப்ரம்ம சூத்ர பாஷ்யத்திலும் ஆசார்யாள் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


ப்ரம்ம ஸுத்ரத்தில் ப்ரஹ்மானுபவத்தை உண்டாக்கும் ஸாதனத்திற்கு 'ஸம்ராதனம்' என்று பெயர்.ஆராதனம், ஆராதனை என்ற மாதிரியே அர்த்தம் கொடுப்பது 'ஸம்ராதனம்' என்ற வார்த்தை. பக்தி வழிபாட்டைத்தான் பொதுவாக ஆராதனை என்று கூறுகிறோம்.இங்கே ஞான வழிபாட்டை 'ஸம்ராதனம்' என்று கூறியிருக்கிறார். இவ்வார்த்தையை ஆசார்யாள் விளக்கி பாஷ்யம் பண்ணும் போது 'பக்தி-த்யான-ப்ரணிதானாதி அநுஷ்டானம்'என்றே சொல்லியிருக்கிறார். 'ப்ரணிதானம்' என்றால் ஸமாதி, ஸமாதானம் போன்ற்றைப் போல 'பரிபூர்ணமாக ஒருமுகப்படுத்திச் சேர்த்து வைப்பது' என்று அர்த்தம். அந்தஃகரணத்தைப் பூர்ணமாக ஒருமுகப்படுத்தி த்யானம் செய்வதுதான் அந்த ஸாதனம் என்றே தோன்றும். ஆனால் அதே ஆசார்யாளே இங்கே பக்தியை முதலில் போட்டுஅப்புறமே த்யானத்தைச் சொல்லி இரண்டிலும், இரண்டாலும் ப்ரணிதானம் பண்ண வேண்டும் என்கிறார்.


பிரம்ம ஸுத்ரத்தில் ஒரு இடத்தில் ஒருவன் தான் பெற்றுக்கொண்ட உபதேசத்தை விடாமல் பல ஆவிருத்தி மனனம் செய்ய வேண்டும் - அதாவது ஆலோசனை பண்ணி, அலசி-அலசி உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று வருகிறது. இங்கே மூல ஸுத்ரத்தில் பக்தி பாவத்துடன் செய்கிற உபாஸனையோ அல்லது ஞான ஸாதனை பற்றியோ ஏதுமில்லை, பொதுவாக ஆவிருத்தி பண்ணனும் என்று மட்டும் இருக்கிறது. இதற்கு முன்னாலும், பின்னாலும் வரும் ஸுத்ரங்களைக் கொண்டு பார்த்தால், ஞான மார்க்கத்தில் மஹாவாக்ய உபதேசம் பெற்ற பிறகு முமுக்ஷு பண்ண வேண்டிய மனனம்தான் இங்கே சொல்லியிருப்பது என்று தெளிவாகிறது. ஆசார்யாள் இதை மிக தெளிவாக பாஷ்யம் பண்ணியிருக்கிறார். ஆனால் இந்த ஸுத்ரத்தின் முடிவில் தொகுத்துச் சொல்லும் போது அவராகவே உபாஸனா மார்க்கத்தைப் பற்றியும் சொல்லி, அறிவது, உபாஸிப்பது என்ற இரண்டையும் வித்யாஸப்படுத்தாமல் ஒன்றாகவே உபநிஷதங்களில் சில இடங்களில் சொல்லியிருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார்

Guru's Blog: ???????????? - ??? ???????

 
Veda Dharma Shastra Paripalana Sabha

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana


[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 49th Visesha Upanyasam on 24th January 2015 at Residence of Mr.M.J.Gopalan, 12/19, First Main Road, Sri Sai Nagar Annexe, Virugambakkam, Chennai-600092 (Near Chinmaya Nagar Bus Stop).

Upanysam on "Pithru Boojanam Sraardha Swaroopam" Upanyasakar Brahmmasri R. Chandramouli Srouthigal from 6:30 PM to 8:00 PM.


Source: Sage of Kanchi
 
மாதங்கியின் பதினாறு பெயர்கள்

மாதங்கியின் பதினாறு பெயர்கள்


மாதங்கி தேவி எட்டு கைகளை உடையவள். ஒரு கையிலுள்ள சம்பா கதிர் உலகியல் இன்பங்களையும்; மற்றொரு கரத்திலுள்ள தாமரை மலர் கலை உள்ளத்தையும்; இன்னொரு கரத்திலுள்ள பாசம் ஈர்ப்பு சக்தியையும்; வேறொரு கரத்திலுள்ள அங்குசம் அடக்கியாளும் திறனையும்; காரிகை உலகியல் ஞானத்தையும்; கிளி ஆத்ம ஞானத்தையும்; இரு கைகளில் ஏந்திய வீணை சங்கீத ரசனையையும் அருளுகின்றன. காளிதாசனின் சியாமளா தண்டகம் மேற்கண்ட வடிவுடைய தேவியையே போற்றுகிறது. பேரருள் தரும் தேவி துதியாக சியாமளா தண்டகம் விளங்குகிறது.

இத்தகைய எட்டு கரங்களுடைய சியாமளா தேவியின் திருவுருவத்தை காஞ்சி காமாட்சி யம்மன் கோவிலில் காணலாம். மந்திர சாஸ்திரப்படி மதுரை மீனாட்சியே சியாமளா தேவியாக விளங்குகிறாள். எண் கை வடிவமும் சக்கரமும் இதன் அடிப்படையிலேயே அங்கு அமைக்கப்பட்டுள்ளன.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
How far is Kailash & Vaikuntha ?

How far is Kailash & Vaikuntha ?

Once a Guru asked his students "How far is Kailash & Vaikuntha,the celestial abodes of Lord Shiva & Lord Vishnu.

The students immediately rushed and referred to Vedas , Upanishads & all Scriptures and started calculating the distance in Yojanas.

The Guru said, Hold on, there is no need to check out scriptures.

Further the Guru answered,

"Kailash is within the reach of hand and Vaikuntha is at distance when our voice can be heard ".

The students got astounded on hearing this and enquired the Guru how it is possible.

Guru reminded that , when Markandeya, a staunch devotee of Lord Shiva, hugged the Shiva Linga (picture attached) with his hands with extreme devotion, he had darshan of Lord Shiva ,who rescued him from YAMA, Lord of Death. So Kailash is within our hands of reach.

Guru continued saying," Lord Vishnu listened to the prayers and came down to earth all the way to protect Gajendra , the elephant from the clutter of Makara, the crocodile and bestows him moksha or salvation". (Picture attached)

Similarly, Lord Vishnu gave darshan to Draupadi , Prahaladha and many more listening to their prayer.

So, Vaikuntha is within the reach of our voice or even little whisper of prayers.

It is only our true devotion and self surrender towards the Lord which will grace us with his vision.



Source: Sage of Kanchi

Balaji Iyer
 
Totakacharya (8th century CE)

Totakacharya (8th century CE)


10404372_760262464055173_619270303956383147_n.jpg


Totakacharya (8th century CE) was a disciple of Ādi Śaṅkara, the Advaita philosopher. He was made the first Jagadguru (head) of the Jyotirmaṭha Pīthaṃ, the northern maṭha founded by Ādi Śaṅkara near Badrinath. He founded a maṭha by name Vadakke Matham in Thrissur, Kerala.

Meeting Ādi Śaṅkara:
---------------------------
The Mādhavīya Śaṅkaravijayam states that when Ādi Śaṅkara was at Śṛṅgeri, he met a boy named Giri. Ādi Śaṅkara accepted the boy as his disciple. Giri was a hard-working and loyal servant of his Guru, Ādi Śaṅkara, though he did not appear bright to the other disciples. One day, Giri was washing his Guru's clothes, when Ādi Śaṅkara sat down to begin a lesson on Advaita Vedānta. He however did not start the lesson saying he was waiting for Giri to come back from his chores and singing lessons. At this, Padmapada pointed to a wall and said that it would be the same if Ādi Śaṅkara taught to this dumb object as he taught to Giri. Now, Ādi Śaṅkara wanted to reward Giri for his loyalty and devotion. Thus he mentally granted Giri the complete knowledge of all the śāstras (sciences). The enlightened Giri composed extempore the Toṭākāṣṭakam, a Sanskrit poem in the toṭaka metre, in praise of the Guru Ādi Śaṅkara. Thus the dumb disciple Giri became Toṭākācārya.

The essence of Toṭākāṣṭakam:
---------------------------------------

viditā khila śāstra sudhā jaladhe mahito paniṣat kathitār thanidhe ।
hṛdaye kalaye vimalaṃ caraṇaṃ bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 1॥

O Śaṅkara, Who is learned in nectar-ocean like pile of treatises, and Who is the repository of explained philosophy in the honored Upaniṣat! I throw myself before Your faultless feet in my heart. O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

karuṇā varuṇālaya pālaya mām bhavasāgara duḥkha vidūna hṛdam ।
racayā khila darśana tattva vidam bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 2॥

O You, Whose heart is an ocean of compassion! Protect me, Whose heart is afflicted by the miseries of metempsychosis. Convert me into one, Who is learned in the object of all the philosophies. O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

bhavatā janatā suhitā bhavitā nija bodha vicāraṇa cārumate ।
kalayeśvara jīva viveka vidam bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 3॥

By You, the common people have become satisfied. O You, Who can meditate upon the Self, and Who has a beautiful mind! Incite me to learn the knowledge of God and living-beings. O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

bhava eva bhavā niti me nitarāṃ samajāyata cetasi kautukitā ।
mama vāraya moha mahājaladhiṃ bhavaśaṅkara deśika me saranam ॥ 4॥

You are Bhava (Śiva) — thus is my conclusion. It has set-forth curiosity in my consciousness (cetas). Absolve my ocean of immense delusion.# O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

sukrite dhikrite bahudhā bhavato bhavitā sama darśana lālasatā ।
atidīna mimaṃ paripālaya māṃ bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 5॥

When numerous virtues have been accomplished, then by You, a desire to achieve indifference emerges. Protect me, who is very weak, thoroughly. O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

jagatīm avituṃ kalitākṛtayo vicaranti mahā mahasaśchalata: ।
ahimāṃ śurivātra vibhāsi guro bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 6॥

To satiate this incomplete world, the great knowledge exponents roam in disguise [of a human]. Among them, you shine like the rays of sun. O Preceptor, O Śaṅkara, Who is the realized master! Be my refuge.

guru puṅgava puṅgava ketana te samatām ayatām nahi ko’pi sudhī: ।
saraṇāgata vatsala tattva nidhe bhavaśaṅkara deśikame śaraṇaṃ ॥ 7॥

O You, Who is the best among preceptors, and Who has a bull on His flag! Indeed there is no wise expounder like you right now. O Śaṅkara, Who cares for those seeking refuge, Who is the repository of truth, and Who is the realized master! Be my refuge.

viditā na mayā visadaika kalā na ca kiñcana kāncana masti guro ।
drutameva vidhehi krupāṃ sahajāṃ bhavaśaṅkara deśika me śaraṇaṃ ॥ 8॥

By me, not even one quality (kalā) has been understood. I don’t even have any amount of gold (wealth), O Preceptor! Very quickly bestow compassion, which is Your second nature. O Śaṅkara, Who is the realized master! Be my refuge.


Source: Sage of Kanchi

Balaji Iyer
 
பக்தியே பளுவானது, வலுவானது.

பக்தியே பளுவானது, வலுவானது.

தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும்.

தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.

அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.

ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட்டில் பக்தியை வைத்துப் பார்த்தால், பக்தியே பளுவானது, வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
Veda Dharma Shastra Paripalana Sabha

Veda Dharma Shastra Paripalana Sabha


[TABLE="width: 100%"]
[TR]
[TD][/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 1st Visesha Upanyasam on 25th January 2015 at Residence of Mr. Anusham Rajagopal “Sri Mahaperiva Graham”,No: 113, Raghuram Colony, Salem -636007, Tamilnadu.

Upanysam on "Nithyakarmaanushtaanam" Upanyasakar Brahmmasri P M Vijayaraghava Sastrigal from 10:00 AM to 12:00 Noon.



Source: Sage of Kanchi
 
மகா சக்தி

மகா சக்தி

ஆக்குவதும், காப்பதும் மற்றும் அழிப்பதும் தன் முக்குணத்திலான சத்வ, ரஜஸ், தமஸ் என்றவற்றால் நடத்தி வைக்கும் மகா சக்தி அவள்.

மகா காளி, மகா லஷ்மி மற்றும் மகா சரஸ்வதி என மூன்று ரூபங்களை மும்மூர்த்திகளைப் போல எடுத்து உலகைக் காத்தவள் அவளே நம்மையும் இந்த உலகின் மாயையில் இருந்து விடுதலைப் பெற உதவ வேண்டும்.

அக்ஞானத்திற்கு ஆதாரமாக மாயையை ஒழித்து ஞானத்தை தர வந்தவளின் மகிமையை எடுத்துரைக்க எழுதப்பட்டதே சண்டி சப்த சதி எனும் நூல்.

தமது பரப்பிரும்ம ரூபத்தை அம்பிகை எப்படி வெளிப்படுத்தி போதிக்கிறாள் என்பதைக் கூறுவதே தேவி மகாத்மியம் என்ற இந்த மகாத்மியம்.

அமலகமல ஸம்ஸ்தா லேகினி புஸ்தகோத்யத்
கரயுகள ஸரோஜா குந்த மந்த்ரகௌரா
த்ருதசதா கண்டோல்லாஸி கோட்ரபீடா
பவதுபவ பவபயானாம் பங்கின பாரதி ந.

நம் சந்தேகங்களை குருவிடம் கேட்டு அறிய வேண்டும் என்பதே வாக்வாதினியின் பொருள். அடிக்கடி குருவிடம் சென்று நம் சந்தேகங்க ளைக் கேட்டாலொழிய உண்மைப் பொருளை அறிய முடியாது. சில விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்தால்தான் உண்மையை உணர முடியும்.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana


[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 50th Visesha Upanyasam on 26th January 2015 at Residence of Mr.T K Ramadurai, Block No 4, Flat no 4C, Asvini Amarisa, No 77, Kalasathamman Koil Street, Ramapuram, Chennai 89.

Upanysam on "Bagavath Bakthi - Ratha Sapthami" Upanyasakar Brahmmasri Mullaivasal Brahmashri R.KRISHNAMURTHY SASTRIGAL from 6:30 PM to 8:00 PM.


Source: Sage of Kanchi
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top