• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Vasantha Panchami – January 24, 2015

Vasantha Panchami – January 24, 2015

dakshinamurthi_adi_sankara_periyava.jpg






For all sanathana dharma and Adi Acharya devotees, tomorrow is a very important day. On this auspicious day, Adi Acharya received spatika lingams from Lord Shiva from Kailash and established five sankara matams in India.


Adi Sankara’s yatra to Kailasa, the abode of Lord Siva, is one of the most notable events in the history of the Acharya. During the course of his peregrination in the Himalayan region, Sankaracharya desired to have darshan of Sri Paramesvara having his abode in Kailas. Sankara managed to reach Kailas quickly because of His yogic power. He had darshan of Lord Paramesvara and Devi Parvati. According to tradition, Sankara adored Paramesvara by singing two hymns, known as “Sivapadadi-kesanta stotram” and “Sivakesadi-padanta stotram”. Immensely pleased with Sankara’s prayers, Paramesvara blessed Sankara, presented him with five sphatika (crystal) lingas and instructed him to arrange for the worship of the lingas for the sake of the welfare of the universe, indicating also the mode of worship. Paramesvara also handed over to Sankara the palm-leaf manuscript of Soundarya Lahari, which is noted as Siva’s own hymn in praise of the Parasakti. From available biographical information, it is learnt that Sankaracharya placed one of the five sphatika lingas got at Kailas and kept the Yoga Linga for his own personal worship and that of his successors at Kanchi. (Source:: Hinduism Sanathana Dharma and Vedanta: presented by Shri Kanchi Kamakoti Peetham : kamakoti.org)


It is also believed that Lord Nandhikeswara ate the manuscripts of last 51 slokas of Soundarya Lahari that was composed on Parvathi by Lord Parameswara Himself. Sri Sankaracharya returned with the first 49 stanzas and the Lingams. Acharya was sad that he lost half of Soundaryalahiri. In his prayers, Uma Devi blessed Him to write the remainder of the slokas to complete it Himself! The sphatika Lingams are Eswara Swaroopams and Soundaryalahiri is Devi Swaroopam. There is another version of the story around Soundarya Lahari where ambal gave pratyaksha darshanam to acharyal when He was in meditation that prompted Him to write the beauty of ambal as Soundarya Lahari.
The five lingams Acharya obtained are Mukti Lingam, Vara Lingam, Moksha Lingam, Bhoga Lingam and Yoga Lingam. The Mukti Lingam was consecrated at Badhrinath in Uttarakhand. The Vara Lingam was consecrated


at Neelakantha Kshetram in Nepal. The Moksha Lingam was consecrated at Chadambaram in Tamil Nadu. The Bhoga Lingam was consecrated at Kudali in Karnataka & The Yoga Lingam was consecrated at Kanchipuram in Tamil Nadu.



Mahaperiyava established a practice to celebrate this day in a grand manner in our Sri Matam and started distributed laddus on this day as prasadam to all devotees. Even during Mahaperiyava’s padha yatra days, this was done in all the places He stayed during yatra. Even today, this tradition continues in Sri Matam.
Given the fact that tomorrow is a weekend, devotees in and around Chennai, please plan to go to Sri Matam attend Lord Chandramouleeswarar puja to get the blessings. Others should spend time to pray Adi Acharya and bless us with gnanam. Nothing can please Mahaperiyava than worshipping Adi Acharya.
Don’t forget to chant Thotakashtakam & Adi Shankara Ashotram tomorrow.

Jaya Jaya Shankara Hara Hara Shankara


https://mahaperiyavaa.wordpress.com/2015/01/23/vasantha-panchami-january-24-2015/
 
வேதம் போய்விட்டால், பிராம்மணன் என்று தன&#3007

வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை


வேதம் போய்விட்டால், அதற்கப்புறம் பிராம்மணன் என்று தனி ஜாதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போது, 'பார்ப்பானே வெளியே போ' என்று சொல்கிற மாதிரி எங்கேயாவது, 'குயவனே வெளியே போ; வண்ணானே வெளியே போ' என்கிற வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோமா? மாறாகக் குயவர்களோ வண்ணார்களோ திடீரென்று ஓர் ஊரைவிட்டுப் போகிறார்கள் என்றால், மற்றவர்கள் அவர்களைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாவது இருத்தி வைத்துக் கொள்வார்கள். காரணம் என்ன? குயவனால், வண்ணானால் சமூகத்திற்குப் பிரயோஜனம் இருக்கிறது.

வேத ரக்ஷணத்தைச் செய்துகொண்டு, ஸத்வ குணத்தோடு படாடோபமில்லாமல் பிராம்மணன் இருந்து கொண்டிருந்த வரையில், மற்றவர்கள் இவனால் சமூகத்துக்குப் பெரிய பிரயோஜனம் இருக்கிறது என்று கண்டார்கள். இவனிடம் நிறைந்த அன்பும், மரியாதையும், விசுவாசமும் காட்டி வந்தார்கள். இன்று உள்ள மாதிரி துர்பிக்ஷமும் வியாதிகளும் இல்லாமல் அப்போதெல்லாம் சமூகம் சௌக்கியமாகவே இருந்தது என்றால், அதற்குக் காரணம் வேத சப்தமும் யக்ஞாதி கர்மங்களும்தான் என்பதை மற்ற ஜனங்கள் உணர்த்திருந்தார்கள்.


இப்படி ஒரு சமூகப் பிரயோஜனம் இவனுடைய கர்மாவிலிருந்து கிடைத்ததோடு மட்டுமில்லாமல், இன்னொரு பெரிய பிரயோஜனம் இவனுடைய வாழ்க்கையின் உதாரணத்திலேயே (personal example) அவர்களுக்கு உண்டாயிற்று. ஆசைகளைக் குறைத்து, சாந்தர்களாக, சகல ஜீவராசிகளிடமும் தயையோடு, ஸதா பகவத் ஸ்மரணையோடு, தங்களுக்கு உடனடியாக ஒரு லாபமும் தராமலிருந்தும், கர்மாக்களை ஏகப்பட்ட நியமங்களோடு அநுஷ்டிக்கிற தியாக சீலர்களாக, இப்படி ஒரு ஜாதி இருக்கிறதைப் பார்த்துப் பார்த்தே மற்றவர்களுக்கு இப்படிப்பட்ட பண்புகளிலும், ஆத்ம குணங்களுக்கும் ஸ்வபாவமாக இருந்த ஈடுபாடு அதிக மாயிற்று. தங்களால் முடிந்த அளவில், தங்கள் தொழில் இடம் கொடுக்கிற அளவில், அவர்களும் பல நியமங்களை, விரத உபவாஸங்களை மேற்கொண்டார்கள். பிராம்மணன் மற்ற ஜாதிக்காரர்களை எழும்பவொட்டாமல் அமுக்கி வைத்தான் என்றால் அது முழுத் தப்பு. தன் personal example-ஆல் இவன் மற்றவர்களும் தாங்களாகவே எழும்பி உயர்வை அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் சாஸ்திரம் இவனுக்கு அமைத்துக் தந்திருக்கிற வாழ்க்கை முறை.


வேதத்தை மற்றவர்கள் அத்யயனம் செய்யக்கூடாது என்று வைத்தால், அவர்களை இவன் அழுத்தி வைத்து விட்டான் என்று நினைப்பது சுத்தப் பிசுகு. வேத ரக்ஷணம் ஒரு (Life-time) ஆயுட்கால தொழிலானதைச் சொன்னேன். எந்தத் தொழிலையுமே அந்தப் பரம்பரையில் வந்தவன் மட்டுமே அநுஷ்டிக்க வேண்டும். இல்லாவிட்டால், போட்டி - பொறாமை வரும் என்பதுதானே விதி! - வேத ரக்ஷணம் ஒரு தொழில் ஆனபின் இதில் இன்னொருவரை விட்டால் தொழிலாக பங்கீட்டில் குளறுபடியும் கோளாறுகளும் தானே உண்டாகும்? இதனால் சமூகப் சீரமைப்பு குலையத்தானே செய்யும்? அந்தந்தத் தொழிலுக்கும் உயர்த்திதான். தன் தொழிலைவிட வேத ரக்ஷணம் உயர்ந்தது என்று ஏன் இன்னொருவன் நினைத்து இதற்கு வரவேண்டும்?


மற்றவர்கள் வேதத்தை அத்யயனம்தான் செய்யக்கூடாதே தவிர, அதிலுள்ள தத்துவங்களைத் தெரிந்து கொள்வதில் ஒரு தடையுமில்லை. ஆத்மாபிவிருத்திக்கு வேண்டியது இதுதான். லோகக்ஷேமத்துக்கு வேண்டிய வேத சப்த ரக்ஷணத்தை ஒரு தொழிலாக வைத்துக் கொண்டு, சிலர் மட்டுமே இருந்தால் போதும். ஆத்மாபிவிருத்திக்கான அதிலுள்ள அபிப்பிராயங்களை சகலரும் தெரிந்து கொள்ளலாம். அப்பர் ஸ்வாமிகள், நம்மாழிவார் போன்ற பிராம்மணரல்லாதாரின் பாடல்களில் வேத வேதாந்த தத்துவங்கள் நிறைய இருப்பதைப் பார்க்கவில்லையா!


பிராம்மணர்கள் ஞானம், பக்தி இவற்றை ஏகபோக்கியம் (monopolise) பண்ணிக் கொண்டு மற்றவர்களை கீழே அமுக்கி வைத்திருந்தால் ஒரு அப்பர் ஒரு நம்மாழ்வார் மட்டுமில்லை, இன்னும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முக்கால்வாசிப் பேரும், ஆழ்வார்களில் பலரும் தோன்றியிருக்க முடியுமா? பறக்குலத்திலிருந்து, குயவரிலிருந்து இப்படியே சகல ஜாதியிலிருந்தும் நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள். தாயுமானவர், பட்டினத்தார் மாதிரி ஞானிகளை எங்கே பார்க்க முடியும்?

ஸமீபத்திலேயே ராமலிங்க ஸ்வாமிகள் இருந்திருக்கிறார்கள். பக்தியிலும் ஞானத்திலும் இப்படி பிராம்மணர்களும் ஸ்தோத்திரம் செய்கிற மாதிரி மற்ற வர்கத்தார் உயர்வாக வந்தது மட்டுமில்லை; சிவாஜி போன்று பெரிய சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்து வேத தர்மத்துக்குப் புத்துயிர் ஊட்டிய ராஜாதி ராஜர்கள் நாலாம் வர்ணத்திலிருந்தே தோன்றியிருக்கிறார்கள். எனவே அமுக்கி வைப்பது, சுரண்டுவது (exploitation) என்பதெல்லாம் புதிதாகக் கட்டிவிட்ட கதைதான்.


பிசகே இருந்திருக்காது என்று நான் சொல்லவில்லை. ஆனால் தப்பிதங்கல் நடப்பது எதிலுமே சகஜம்தான். பொதுவாக பிராம்மணன் சமூகநலனுக்காக நல்ல காரியங்களைச் செய்து கொண்டு, நல்லவனாக வாழ்ந்து, மற்றவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக (guide) இருந்தால்தான் இத்தனை யுகங்களாக மற்றவர்கள் எல்லோரும் இவனை மதிப்புடன் வாழ வைத்திருக்கிறார்கள்.


அந்தப் பிரயோஜனம் இவனால் இல்லை என்றவுடன் 'பார்ப்பானே, வெளியேறு' என்கிறார்கள்.


ஒரு நோக்கம் (purpose) இல்லாமல், வெறுமே மற்றவர்களுக்குப் போட்டியாக இவனும் பணத்தைத் தேடிப் பறந்து கொண்டிருக்கிறான் என்றால், அப்புறம் இவன் பிராம்மணன் என்று தனியாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. இப்படி 'பர்பஸ்' இல்லாமல் பிராம்மண ஜாதி இருந்தால், அதை மற்றவர்கள் அழிப்பதற்கு முன்னால் நானே அழித்துவிட வேண்டும் போலிருக்கிறது. பிரயோஜனம் (utility) இல்லாமல் ஒரு வஸ்துவும் இருப்பதற்கு உரிமையில்லை. லோகத்துக்குப் பயன் இல்லாவிடில் பிராம்மண ஜாதி வேண்டியதே இல்லைதான்.


??? ??????? ??? ?????????? ???????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
துக்க பரிகாரம்

துக்க பரிகாரம்



ஒருவனுக்கு வியாதி வந்தால், அதற்குப் பலர் பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். தாது வித்தியாசத்தால் நோய் வந்தது என்பார் ஆயுர்வேத வைத்தியர். இங்கிலீஷ் டாக்டர் வேறு காரணம் சொல்வார். இதற்கும் மாறாக இன்னொறு 'ஸைகலாஜிகல்' காரணத்தை இந்நாட்களில் பிரபலமாக்கி வரும் மனோதத்வ நிபுணர் கூறுவார். மந்திர சாஸ்திரக்காரர், குறிப்பிட்ட தெய்வக் கோளாற்றால் இந்த வியாதி உண்டாயிற்று என்பார். ஜோதிஷர் இன்ன கிரகம் இன்ன இடத்தில் இருப்பதே நோய்க்குக் காரணம் என்பர்.

தர்ம சாஸ்திரம் அறிந்தவர்களோ பூர்வ கராம பலனாகத்தான் வியாதி ஏற்பட்டிருக்கிறது என்பார்கள்.

வியாதிக்கு மட்டுமின்றி நம் வாழ்வின் எல்லா விதமான சுக துக்கங்களுக்கும் இவ்வாறு பலவிதக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒரே விஷயத்துக்கு இப்படிப் பல காரணங்கள் சொன்னால் நமக்குக் குழப்பமாயிருக்கிறது. நம் சுக துக்கங்களுக்கு கிரகங்களின் போக்குத்தான் காரணமா? ஜோதிஷர் சொல்கிறபடி கிரகப் பிரீதி செய்வதா? அல்லது மாந்திரீகர் சொல்கிறபடி குலதெய்வத்துக்கோ அல்லது வேறு தெய்வத்துக்கோ கிராம தேவதைக்கோ செய்த அபச்சாரம் காரணமா? அந்தத் தெய்வத்துக்கு சாந்தி பரிகாரம் செய்வதா? நோய்நொடி என்றால் வைத்தியமும் செய்யத்தானே வேண்டும்? கடைசியில் எல்லாம் கர்ம பலன் என்றால், அது தீருகிறபோதுதான் தீரும் என்று வெறுமே, இருந்துவிட வேண்டியதுதானா? இப்படியாகக் குழப்பம் ஏற்படுகிறது.



பல காரணங்களில் எது சத்தியம் என்று யோசித்தால் எல்லாமே சத்தியமாக இருக்கும். ஆதி காரணம் நம் கர்மம்தான் என்பது நிச்சயம். அந்தக் கர்மம் ஒன்றே பலவிதமான விளைவுகளை உண்டாக்குகிறது; மழை ஒன்றுதான் - ஆனால் அதிலிருந்தே எத்தனை விளைவுகள் உண்டாகின்றன? பூமி முழுவதும் ஈரம் உண்டாகிறது; ஈசல் உண்டாகிறது; தவளை கத்துகிறது; சில செடிகள் பச்சென்று தழைக்கின்றன; வேறு சில அழுகுகின்றன. இத்தனையும் ஒரே மழைக்கு அடையாளங்கள். அதே மாதிரி மாந்திரீகமாகவும் ஜ்யோதிஷ ரீதியிலும் வைத்திய சாஸ்திரப்படியும் நாம் குணம் பெற வேண்டிய வியாதிக்கும் ஒரு கர்மாவே காரணம். இன்னும் வாழ்க்கையில் வியாதியைத் தவிர, பலவிதமான பிரச்சனைகள்! பணத்தால், உத்தியோகத்தால், தேக பலத்தால், அறிவுசக்தியால் கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் (Problems) எல்லையில்லாமல் இருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள், கஷ்டங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் கர்மம்தான். ஸயன்ஸ்படி விளைவு (Effect) இருந்தால் காரணம் (Cause) இருந்தேயாக வேண்டும்.



ஜகத் முழுதும் காரணம்—விளைவு, செயல்—பிரதிச் செயல் (Action and Reaction) என்ற துவந்தத்துக்குள்தான் காட்டுண்டியிருக்கிறது. பௌதிக சாஸ்திரம் (Physics) முழுதும் இந்த உண்மைதான் விளங்குகுகிறது. ஜடப் பிரபஞ்சம் ஜீவப் பிரபஞ்சம் இரண்டும் ஒரே மூலத்திலிருந்தே வந்ததால் ஜகத்துக்கு உள்ள இந்த விதி மனித வாழ்விலும் உண்டு. நம் செயலுக்கெல்லாம் நிச்சயமாகப் பிரதி உண்டு. இன்று நாம் அநுபவிக்கின்ற சுகங்களுக்கும் கஷ்டங்களுக்கும் காரணம் நாம் முன்னமே இந்த ஜன்மாவிலோ, பூர்வ ஜன்மாவிலோ செய்த நல்லது கெட்டதுகள்தான். சில சமயங்களில் நம் சொந்த பாப புண்ணிய விளைவோடு, குறிப்பிட்ட வேறு சிலரது பாப புண்ணிய பலனும் நம்மைச் சேருவதற்கச் சொல்வதுண்டு. உதாரணமாக, குழந்தைக்கு வியாதி வந்தால், மாதா பிதாவின் பாப பலன் என்பார்கள். அவர்கள் குழந்தைக்கு ஸதா சிசுருஷை செய்வதையும், மனத்தால் அந்தக் குழந்தைக்காக அவர்கள் வேதனைப்படுவதையும் பார்க்கும்போது இதுவும் நியாயம் என்றே தெரியும். எனக்கு இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. அதாவது, நமக்கு ஒரு கெடுதல் வந்தால் அது நம் சத்துருவின் புண்ணிய பலன் என்றும் சொல்லலாம்.



பிரபஞ்சத்தின் சகல ஆட்டத்துக்கும் காரணம் ஒரே ஒரு பராசக்திதான். அந்த ஒரே ஈசுவரனுடைய ஆக்ஞைப்படிதான் உலக இயக்கம் முழுதும் நடக்கிறது. அவன் பல விஷயங்களைச் சம்மந்தப்படுத்தி விடுகிறான். இந்த உலகத்தில் எதுவுமே தொடர்பில்லாமல் நடக்கவில்லை. நமக்குச் சம்மந்தமில்லாதவையாகத் தோன்றுவதை எல்லாம் உள்ளூறச் சம்பந்தப்படுத்தி வேடிக்கை பார்க்கிறான் ஸர்வேஷ்வரன்.


ஒருவர் செய்கிற கர்மம், அதன் பலன் இவையே மனித வாழ்வின் சுக துக்கங்களுக்கு முதற் காரணம். இதற்கே துணைக்காரணமாக—அல்லது அடையாளமாக—கிரகசாரம், தெய்வ குற்றம், ஆரோக்கியக்குறைவு முதலியன அமைகின்றன.


ஜாதக ரீதியில், வைத்திய ரீதியில், மாந்திரீக ரீதியில் எப்படி வேண்டுமானாலும் பரிகாரம் தேடிக் கொள்ளலாம். நம் கர்மா தீருகிறபோது அவை பலன் தரும். பகவான் விட்டவழி என்று பக்தியோடு நம் வாழ்க்கையை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட்டுப் பேசாமல் கிடைக்கிற பக்குவம் இருந்தால், எல்லாவற்றையும்விட அது சிலாக்கியம். அதுவே பெரிய பரிகாரம்; உண்மையான பரிகாரம்.
பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படிப் போனாலும் இனிமேலாவது கர்ம பாரம் ஏறாமல் பார்த்துக்கொள்வதே முக்கியம். பழையதற்குப் பரிகாரம் தேடுவதைவிட, புதிய சுமை சேராமல், பாபம் பண்ணாமல் வாழ்வதற்கு ஈசுவரனைத் துணைகொள்வதே முக்கியம்.


பூர்வ கர்மத்தால் இப்போது ஏற்பட்டுள்ள துக்கத்துக்கும் உண்மைப் பரிகாரம் ஈசுவர தியானம்தான். இனிமேல் துக்கத்துக்கு விதை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம்தான்; இனிமேல் துக்கத்துக்கு இடை போட்டுக் கொள்ளாமல் இருக்கிற உபாயமும் ஈசுவர தியானம் தான். துக்கம் தருவதாக இன்னொரு வஸ்துவே இல்லை என்ற அத்வைத அநுபவம் சித்திப்பதே இதன் முடிந்த முடிவான துக்க பரிகார நிலை. அங்கே துக்கமும் இல்லை; சுகமும் இல்லை; இரண்டுக்கும் ஆதாரமான சத்தியம் மட்டும் ஸ்வயம் பிரகாசமாக இருக்கும்.



????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Veda Dharma Shastra Paripalana Sabha

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana


[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 51st Visesha Upanyasam on 31st January 2015 at Residence of Mr.K.S.Sudhakaran, Flat No 7, 3rd Floor, Sapthagiri Apartments, No 33, St. Mary's Road, Mandaveli Chennai-600028.

Upanysam on "Matha Pithru Bhakthi" Upanyasakar Brahmmasri Dr.K.V.Seshadrinatha Sastrigal from 6:30 PM to 8:00 PM.



Source: Sage of Kanchi
 
வைதிக மதம்

வைதிக மதம்

காரியத்தில் பேதமும் மனோபேதமும்




'ஜாதி, அதற்கான தொழில், அதற்கென்று ஏற்பட்ட ஆசாரங்கள்' என்று சொன்னேன். அது தப்பு. ஜாதிக்காகத் தொழில் இல்லை; தொழிலுக்காகத்தான் ஜாதி. சுள்ளிகளை எந்த அடிப்படையில் வேதமதம் சின்னக் சின்னக் கட்டுகளாகக் கட்டிப் போட்டது? ஒவ்வோரு வர்ணம் என்று பிரித்தது?

மேல் நாட்டுகளில் தொழில் பிரிவினை (Division of labour) என்று பொருளாதாரத்தில் (Economics) சொல்லிக் கொண்டு இன்னமும் அதை நடைமுறைக்குக் கொண்டுவர முடியாமல் இருப்பதைப் பார்க்கிறார்கள். ஒரு சமுதாயம் நடக்க வேண்டும் என்றால் பல தினுசான தொழில்கள் நடக்கத்தான் வேண்டும். எனவே, தொழில் பங்கீடு (division of labour) செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், இத்தனை பேர்தான் இன்ன தொழிலைச் செய்யலாம்; இப்படியரு விகிதாச்சாரத்தில் (proportion) ஒவ்வொரு தொழிலுக்கும் ஜனங்கள் வந்தால்தான் சமுதாயம் சீராக (balanced -ஆக) இருக்கும் என்பதற்கு யார், எப்படிக் கட்டுத்திட்டம் பண்ண முடியும். முடியவில்லை. எல்லோரும் சௌகரியமான தொழில்களுக்கே போட்டி போடுகிறார்கள்; எங்கே பார்த்தாலும் துராசை; போட்டா டோட்டியினால் மனக்கசப்பு; அதைத் தொடர்ந்து பலவிதமான ஒழுக்குத் தப்பிதங்கள் என்று பிரத்தியக்ஷமாகப் பார்த்து வருகிறோம்.

இதே தொழில் பங்கீட்டைப் பாரம்பரியமாக வைத்து நடத்தி வந்த நம் தேசத்தில் அந்த ஒழுங்கு குலைகிறவரையில் சாந்தியும், சந்தோஷமும், சௌஜன்யமும், திருப்தியுமே இருந்து வந்தன. இப்போது கோடீஸ்வரனுக்குக்கூடத் திருப்தி இல்லாமல் இருக்கிறது. அப்போதோ ஒரு செருப்புத் தைக்கிறவன்கூட அக்கடா என்று நிறைந்து இருந்தான். எல்லோருக்கும் துராசைகளைக் கிளப்பிவிட்டு அத்தனை பேரையும் அதிருப்தியில் கொண்டு தள்ளியிருக்கிற புது ஏற்பாடுகள்தான் முன்னேற்றம்; இதுவரை செய்ததும் போதாது. இன்னும் வேகமாக இப்படியே "முன்னேற" வேண்டும் என்று எங்கும் பேச்சாயிருக்கிறது!

அந்தக் காலத்தில் துராசையில்லை. மநுஷ்யர்கள் ஒருத்தருக்கொருத்தர் பாந்தவ்யமாக ஒட்டிக் கொள்கிற சின்னச் சின்ன சமூகங்களாக இருந்துவிட்டதால், இப்படிச் சேர்ந்திருப்பதே பெரிய இன்பம் என்று அவர்கள் கண்டு கொள்கிறார்கள். அதோடு மதத்தில் நம்பிக்கை, தெய்வத்திடம் பயபக்தி, தங்களுக்கென்று குலதெய்வங்கள், அதற்கான வழிபாடுகள் இருக்கின்றன என்ற பெருமை, இதிலெல்லாம் நிறைந்து இருந்துவிட்டதால் அவர்களுக்கு வெளி வஸ்துக்களைத் தேடி மேலே மேலே இன்று தவிக்கிற தவிப்பு இல்லவே இல்லை. சமுதாயம் முழுவதும் நன்றாக இருந்தது.

பலவாகப் பிரிந்தாலும் ஸ்வாமியின் பெயரில் எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தார்கள். அவரவர்க்கும் குலதெய்வம் இருந்தபோதிலும், ஊருக்குப் பொதுவாக பெரிய கோயில் இருந்தது. அந்தக் கோயிலும், அதன் உத்ஸவாதிகளுமே ஊர் வாழ்க்கையின் மைய ஸ்தானமாக இருந்தது. இதைச் சுற்றியே, அதாவது பகவானின் பேரில், அத்தனை சமூகத்தாரும் அவன் குழந்தைகளாக ஒன்று சேர்ந்திருந்தார்கள். ஒரு தேர்த் திருவிழா என்றால் அக்ரஹாரத்துக்காரனும் சேரிக்காரனும் தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள். அந்த சௌஜன்யமான காலத்தை நினைத்தாலே மறுபடி அப்படி வருமா என்று இருக்கிறது. ஒரு வயிற்றெரிச்சல் இல்லை, வசைமாரி இல்லை. அவரவர் தன் காரியத்தை எளிமையாகச் செய்து கொண்டு மனஸில் ரொம்பியிருந்த காலம்.



??????????? ??????? ??? ??????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
கோதூளி மகிமை

கோதூளி மகிமை



ஒவ்வொரு நாளும் காலையில் சூரியோதயத்திலும் மாலையில் சூரிய அஸ்தமனத்திலும் கோதூளி லக்னம் என்று ஒரு நல்ல நேரத்தைக் குறிப்பிடுவார்கள். அந்த கோதூளி லக்னத்தில் நாம் எந்த ஒரு நல்ல பணியை - காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியுமென்பார்கள்.



அதாவது வீட்டிலுள்ள, கிராமத்திலுள்ள பசுமாடுகளெல்லாம் கறந்த பிறகு மேய்ச்சலுக்காக அனுப்பும் காலை நேரம். மேய்ந்து விட்டு அந்த மாடுகள் வீடு நோக்கி வரும் மாலை நேரம் இந்த இரண்டு நேரத்தையும் கோதூளி லக்னம் என்பார்கள்.


இந்தப் பசு மாடுகள் வெளியில் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் அதனுடைய கால்கள் பூமியில் பதிவதன் பயனாய் பூமியிலிருந்து மண் கிளம்பும். அது ஒரே புழுதி மண்டலமாகத் தென்படும். இதைத்தான் கோதூளி என்பார்கள்.



பசுவே புனிதமானது. அதனுடைய திருவடிப்பட்ட இடம் மிகவும் புனிதமானது. அந்த இடத்திலிருந்து கிளம்பும் தூளி அதைக்காட்டிலும் புனிதமானது. பெரும் தீட்டு உள்ளவர்கள் ஸ்நானம் செய்ய முடியாதவர்கள் கூட இந்த கோதூளி தன் மீது படும்படியாகச் செய்து கொண்டு ஸ்நானம் செய்ததற்கு மேலான பலனை அடைவார்கள். லக்ஷ்மி தேவை வாசம் செய்கிற பசுவினுடைய திருவடியிலிருந்து புறப்பட்ட தூளி அவ்வளவு மகிமை வாய்ந்தது.



'லக்ஷ்மி-பார்வதி-சரஸ்வதி இந்த மூன்று சக்திகளுக்கும் மேலான பராசக்தியின் திருவடி தூளியினுடைய சக்தியினால் பிரும்ம தேவரானவர் எல்லா உலகையும் படைக்கிறார். விஷ்ணுவானவர் ஆதிசேஷனாக இருந்து கொண்டு, இந்தப் பூமியை இந்த உலகை தலைமீது தூங்கிக் கொண்டிருக்கிறார்.


பரமசிவனோவெனில் திருவடியின் தூளியைப் பஸ்பமாக ஆக்கி தன் உடல் முழுவதும் பூசிக் கொண்டு வருகிறார் என்று ஆதிசங்கரரின் சௌந்தர்யலஹர் கூறுகிறது.


சமீப காலத்தில் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூட கரூருக்கு அடுத்த நெரூரில் சமாதி அடைந்த ஸ்ரீ சதாசிவ பிரும்மேந்திர ஞானியினுடைய திருப்பாதம் பட்ட மணலை வீட்டிலே அரண்மனையிலே இன்னும் பலர் வைத்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிரது.



பக்தி மார்க்கத்திலே பிரார்த்தனையைப் பற்றிச் சொல்லும் போது, உங்கள் திருவடியிலே என் மனம் பதியவேண்டுமென்று தான் சொல்லுவார்கள். ஆகவே இறைவனுடைய பக்தி இறைவனுடைய திருவடிபட்ட இடத்தின் பெருமை அதனுடைய தூளியின் பெருமை முதலியவைகளெல்லாம் நம்முடைய வாழ்க்கை உய்வதற்கு மேம்படுவதற்கு உதவிகரமாக உள்ளவை. ஆகவே இறைவனிடம் இடைவிடாது பக்தி செலுத்த வேண்டும்.



கோகுலத்திலே தோன்றி, மதுரையிலே வளர்ந்து துவாரகையிலே வசித்த ஸ்ரீகிருஷ்ணபிரானுடைய திருவடி பதிந்த இடமெல்லாம் சங்கு சக்கர ரேகைகள் காணப்படுகிறது என்று பாகவதம் கூறுகிறது. அந்த திருவடிப்பட்ட இடத்திலிருந்து வந்தது தான் கோபி சந்தணம். இன்று நாம் அணிந்து கொள்ளும் சந்தனம்.
பூமியிலிருந்து கிளம்பிய தூளியானது மேல் நோக்கித் தான் செல்லும். அதே போல் இறைவனுடைய திருவடியை பக்தி செய்தால் இறைவனுடைய தூளி மகிமையானது நம்முடைய வாழ்க்கையை மேலே உயர்த்தும்.



Source: Sage of Kanchi

Halasya Sundaram Iyer
 
நிஷ்டா சாந்தி:பராயணம் என்று (விஷ்ணு) ஸஹஸ்&#299

நிஷ்டா சாந்தி:பராயணம் என்று (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது.

நிஷ்டா சாந்தி:பராயணம் என்று (விஷ்ணு) ஸஹஸ்ரநாமத்தில் வருகிறது. அதில் ஒரே விஷயத்தை அழகாக ஸம்பந்தப்படுத்திக்கொண்டு போவதாகச் சில நாமாக்கள் தொடர்ச்சியா வருவதுண்டு. அப்படி ஒரு ஏழெட்டு பேக் ஸந்நியாஸ விஷயமாகவே பூ பூவாகச் சேர்த்து மாலை தொடுத்தாற் போல் வருகிறது.


.........................நிர்வாணம் பேஷஜம் பிஷக் |

ஸந்ந்யாஸக்ருத் சமோ சாந்தோ நிஷ்டா சாந்தி:பராயணம் ||


(விரல் விட்டு எண்ணி) இப்படி ஒன்பது நாமாக்கள் ஒரே விஷயமாக வருகின்றன. 'நிர்வாணம்'- அதுதான் ஞான யோகத்தின் முடிவு. ஸகுணமாக விஷ்ணு என்று இருப்பவனேதான் அப்படி இருப்பவனும். பேஷஜம் என்றால் மருந்து. பவரோகத்திற்கு (ஸம்ஸார வியாதிக்கு) மருந்தான ஞானம் என்று அர்த்தம். 'அருமருந்தொரு தனி மருந்து'என்று பாடுகிற மருந்து.....



முத்துத்தாண்டவர் என்கிற நடராஜா பக்தரின் பாட்டு அது. அவர் (ஸங்கீத) த்ரிமூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தவர். அவரைப் பாம்பு கடித்தபோது நடராஜா தான் மருந்து என்று சொல்லி இந்தப் பாட்டைப் பாடினாராம். உடனே விஷமும் இறங்கி விட்டதாம்.....



கர்மா விஷம் ஏறியபோது ஞானமான விஷங்கொல்லிப் பூண்டாக வருகிறவன் பகவான்தான். மருந்தும் அவனே, மருந்து தருகிற வைத்தியனும் அவனே!அதைத்தான் 'பிஷக்'என்று சொல்லியிருக்கிறது. இங்கே திருவான்மியூரில் ஸ்வாமி மருந்தீச்வரராக இருக்கிறார். வைத்தீச்வரன் கோவில் என்றே பேர் உள்ள ஊரில் 'பவரோக வைத்யநாத ஸ்வாமி'என்று ஸம்ஸார வியாதியைத் தீர்க்கிற ஞானாச்சார்யனாக இருக்கிறார். 'கீதை என்ற மருந்தைக் கொடுத்த டாக்டர்'என்று ஆசார்யாள் (விஷ்ணு ஸஹஸ்ரநாம) பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.



கீதையின் ஸ்வாமி முடிவாகக் கொடுத்த மருந்து என்னவென்றால் ஸந்நியாஸந்தான். கர்ம யோகத்தின் வழியாக ஞான யோகத்தில் ஸந்நியாஸத்திற்குத்தான் அழைத்துக் கொண்டு போய் முடித்திருக்கிறார். ஆயுர் வேதத்தில் பேதிக்குக் கொடுத்துவிட்டு அப்புறம் மருந்து தருவதுண்டு அப்படிக் கர்மாக் கழிசடை எல்லாம் போகவே கர்ம யோகத்தை கொடுத்துவிட்டு, அப்புறண் மருந்தாக ஞானத்தைக் கொடுக்கும்போது ஸந்நியாஸ்த்தை விதித்திருக்கிறார். ஆதியில் நாலு ஆச்ரமங்களையும் அவர்தான் உண்டாக்கி, அந்த்யாச்ரமமாக (முடிவிலுள்ள ஆச்ரமாக) இதை ஏற்படுத்தியவர். 'ஸந்யாஸக்ருத்'என்ற நாமா அதைத்தான் தெரிவிக்கிறது.


ஸந்ந்யாஸக்ருத் சமோ


சமோ, சமம், சமம் என்று நிறைய பார்த்துக் கொண்டு போனோமே அதுவும் பகவத் ஸ்வரூபம்தான். மனஸ் அடங்குவது - அதுதானே சமம்?-அதுதான் ஞான யோகத்தின் உயிர்நிலை. துளிக்கூட அடங்காமல் அடங்காப் பிடாரியாக இப்போது


நமக்கு இருப்பதிலிருந்து, துளித் துளியாக அது அடங்கிக் கொண்டே போவதில் எத்தனையோ ஸ்டேஜ்கள். முடிவில் துளிக்கூட மனஸ் என்று ஒரு வஸ்து இல்லாமல் அது அப்படியே ஆத்மாவிலே அடங்கிப் போவதுதான் ஸித்தி ஸ்தானம். அதுதான் ஸந்நியாஸிக்கு லக்ஷ்யம். நான்கு ஆச்ரமிகளில் ஒவ்வொருத்தனுக்கும் இதுதான் தர்மம் என்று சொல்கிற ஒரு ஸ்ம்ருதி 'கொடேஷன்'ஆசார்யாள் இந்த இடத்தில் கொடுத்திருக்கிறார். அதில், ஸந்நியாஸிக்கு சமம் தர்மம்;வான ப்ரஸ்தனுக்கு நியமம் என்ற கட்டுப்பாடான தபோவ்ரதங்கள் தர்மம்;க்ருஹஸ்தனுக்கு தானம் தர்மம்;ப்ரம்மசாரிக்கு தர்மம் குரு சுச்ரூஷை என்று இருக்கிறது.




அப்புறம் சாந்த:என்று நாமா வருகிறது.'சமம்'என்பதோடு கூடியவன் சாந்தன்.

அதற்கடுத்தபடியாகத்தான் 'நிஷ்டா'என்றே நாமம் வருகிறது. ஸந்நியாஸியாகி, மனமடங்கப்பெற்ற சாந்தனாகி ஒருவன் ஞானுபவத்திலேயே நிலைத்து நிற்கிற நிஷ்டையில் நிற்கிறானே, அந்த நிலையும் பகவான்தான். ஸகுணத்தில் பகவானாக இருப்பவன் நிர்குணத்தில் இப்படி இருக்கிறான்.



அந்த நிலையிலிருக்கிற அமைதியை 'சாந்தி'என்றும் அதுதான் பரமான goal என்பதைப் பராயணம் என்றும் இரண்டு நாமாக்களாக் கொடுத்திருக்கிறது.


?????? ?????????????? ????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Veda Dharma Shastra Paripalana Sabha

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana


[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
Veda Dharma Shastra Paripalana Sabha - 52nd Visesha Upanyasam on 1st February 2015 at Residence of Mr.K R Bhiksheswaran, Old No: 299, TTK Road, (Adj. to Hotel Raj park) Alwarpet, Chennai-600018.

Upanysam on "Devatha Aaradhanam" Upanyasakar Vadakudi Brahmmasri T.Sundararama Dikshidar from 6:30 PM to 8:00 PM.


Source: Sage of Kanchi
 
What does Dirgha AyushmAn bhavah mean?

What does Dirgha AyushmAn bhavah mean?


When Periyavaa was giving darshan, four or five Vidwans who had come for darshan, were sitting on the floor.

In the course of his conversation (with the devotees), Periyavaa asked them, “When Bhaktas do namaskaram to me, I bless them with the name ‘Narayana, Narayana’. What do you people who are samsAris say for blessing?”

“We say, ‘dIrgha AyushmAn bhavaH‘; only that is the custom.”
“What does it mean?”

“Remain in saukyam for a long time’ is its meaning.”

Periyavaa asked all the Vidwans present there, one by one. Everyone said the same meaning.
Periyavaa remained in silence for sometime. Then he said, “The meaning you all said is a wrong one.”

The Pandits were taken aback. Everyone of them was a bade bade Vidwan, and had earned the Siromani title.

For the Samskrta Vaakyam ‘Dirgha AyushmAn bhavah’ even those with a little knowledge of Samskrtam can tell the meaning. Such simple words! Yet Periyavaa says the meaning is wrong?

“Shall I tell it myself…..?” The Pandits sharpened their ears.

“Of the twenty-seven Yogas, one is named AyushmAn. Of the eleven KaraNas, one is the called the Bhava.

Among the week days, the Saumya Vaasaram falls on a Wednesday.

When all these three–on a Wednesday, the AyushmAn Yoga and the Bhava KaraNa–occur together, that day is said to be shlAgya.

Therefore, if these three occur together, whatever good phalas would be got, I bless that you may get all those fruits…”

All the Vidwans got up in together and did namaskaram to PeriyavaaL

https://mahaperiyavaa.wordpress.com/2012/07/13/what-does-dirgha-ayushman-bhavah-mean/
https://www.mail-archive.com/[email protected]/msg06843.html
 
Last edited:
உபவாஸம்

உபவாஸம்


சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவானோடு கூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளா விட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும். சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடபுடா’. வேலை செய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை.


வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ண வேண்டுமென்றில்லாவிட்டாலும், தடைபடாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும் படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும். வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோப வாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

‘பசி’ எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுக மிருந்தாலும் மௌனம் அநுஷ்டி:,கண்ணை இழுத்துக்கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக் கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும்.


சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மா விடம் நிற்கும். ‘இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால்,மரண வாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படி பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.


https://mahaperiyavaa.wordpress.com/2012/07/13/உபவாஸம்-as-defined-by-him/
 
கோபம்

கோபம்

'காமம் குரோதம்' என்று சேர்த்துச் சொல்வது வழக்கம். காமம் என்பது ஆசை. குரோதம் என்பதுதான் கோபம், ஆத்திரம், துவேஷம் இவை எல்லாமாகும். மனிதனை பாபத்தில் தள்ளுபவை காமமும், குரோதமுமே என்று கிருஷ்ண பரமாத்மா கீதையில் சொல்லியிருக்கிறார்.


ஒரு வஸ்துவிடன் ஆசை உண்டாகி விட்டால், அதைத் தவறான வழியிலாவது அடைய முயல்கிறோம். இப்படியாகக் காமம் என்பது நம்மைப்பாவத்தில் தள்ளுகிறது. அது நமக்குப் பெரிய சத்ரு. அதே போன்ற இன்னொரு சத்ருவே கோபம். நாம் ஆசைப்படுகிற வஸ்து கிடைக்காதபொழுது இதற்குத் தடையாக இருந்தவர்கள்மீது, அல்லது தடை என்று நாம் நினைத்தவர்கள்மீது கோபம் வருகிறது. அதாவது நிறைவேறாத காமமே கோபம் என்று பெயர் கொள்கிறது.


ரப்பர் பந்தைச் சுவற்றில் ஏறிகிறோம். அது எதிர்த்துக் கொண்டு நம்மிடமே திரும்பி வருகிறது. எறியப்படும் பந்து காமம். அதே பந்து திரும்பி வருகிறபோது கோபமாகிறது. திரும்பி வருகிற பந்து நம்மையே தாக்குகிறது. அப்படியேதான், நம்முடைய கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையேதான் அதிகம் தாக்குகிறது. கோபத்தில் நம் உடம்பெல்லாம் ஆடிப்போகிறது. நம் தேகம், மனசு இரண்டுக்கும் கோபத்தினால் பெரிய கிலேசம் உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் ரௌத்ரகாரமாகச் சத்தம் போடும்போது நம்மை யாரேனும் போட்டோ பிடித்து, அப்புறம் நம்மிடம் காட்டினால் போதும். கோபாவேசத்தில் நம்மை நாமே எத்தனை கோரமாக்கிக் கொள்கிறோம் என்று புரிந்து கொண்டு என்று புரிந்து கொண்டு வெட்கப்படுகிறோம்.



சாதாரணமாக மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் வயிற்றுக்கு ஆகாரம் கொடுத்தால் அப்போதைக்கு பசி அடங்குகிறது. அடுத்த வேளை மறுபடியும் பசி ஏற்படுகிறது. நெருப்புக்கு மட்டும் நாம் ஓர் ஆகாரத்தைப் போட்டால் அது அடங்குவதேயில்லை. இன்னும் அதிகமாகக் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் பல பொருட்களைத் தகித்து கபளீகரம் செய்கிறது. நெருப்பு பிரகாச மயமாக இருந்தாலும், தான் ஸ்பரிசித்துவிட்டுச் செல்கிற பண்டங்களை எல்லாம் கன்னங்கரேல் என்று கருப்பாக்கிக் கொண்டு போகிறது. இதனால் நெருப்புக்கு 'கிருஷ்ண வர்த்மா' என்று ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. காமமும் இப்படிப்பட்ட 'கிருஷ்ண வர்த்மா' தான். அது தீயாக எரிகிறது; அதற்குப் பிரியமான வஸ்துவைக் கொடுப்பதால் பசி அங்காமல் அதிகரித்துக் கொண்டே போகிறது; அது நம் மனசையே கறுப்பாக்கிக் விடுகிறது. ஓர் இச்சை பூர்த்தியாகிற போது தற்காலிகமாக ஒரு மகிழ்ச்சி உண்டானாலும், பிற்பாடு அதையே மீண்டும் தேடி அலைந்து அமைதியையும் சந்தோஷத்தையும் குலைத்துக் கொண்டு அழுகையையும் கோபத்தையும் உண்டாக்கிக் கொள்கிறோம். அழுகை துக்கத்தில் உண்டாவது.

நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தாம் துக்கமும் கோபமும்.



நம் ஆசையின் நிறைவேற்றத்துக்குத் தடையாக இருந்தவர்கள் நம்மைவிடக் கீழ்பட்டவர்களாக இருந்தால் அவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறோம். அவர்கள் நமக்கு மேலே இருந்து விட்டால் கோபித்துக் கொள்ள முடியாமல் நமக்குள்ளேயே துக்கப்பட்டுக்கொண்டு அழுகிறோம். கோபத்தின் கெட்ட சக்தி காமத்தின் சக்தியைவிடப் பெரியது. இதை நள சரித்திரமான 'நைஷதம்' வெகு அழகாகச் சொல்கிறது. கலி அரசன் வருகிறான். அவனது சேனாதிபதிகளாகக் காமனும் குரோதனும் வருகிறார்கள். கட்டியக்காரன் இவர்களுடைய பெருமைகளைப் பாடுகிறான். குரோதனைப் பற்றி அவன் என்ன பாடுகிறான்? 'காமன் புகாத இடமில்லை என்பார்கள். ஆனால் காமனும் புகாத ஒரு கோட்டை உண்டு. அந்தக் கோட்டைக் குள்ளும் இந்தக் குரோதன் குடி கொண்டிருக்கிறானாக்கும். அது எந்தக் கோட்டைத் தெரியுமா? துர்வாஸருடைய இதயம்தான்' என்று குரோதனின் புகழைப் பாடுகிறான். காமமே அறியாத துர்வாஸ மகரிஷியும் கோபத்துக்கு ஆளானவர் என்று தாத்பரியம்.


நாம் இந்த மகாபாவியான குரோதனிடம் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலும் நமக்கே தெரியும்; யாரையும் கோபித்துக் கொண்டு சத்தம் போட நமக்கு சிறிதும் யோக்கியதை இல்லை என்றும், யாரை நாம் கோபித்துக் கொள்கிறோமோ அவர்கள் செய்கிற தவறுகளை, அதைவிடப் பெரிய தவறுகளைக்கூட செய்தவர் நாம் என்பதும் நம் அந்தராத்மாவுக்குத் தெரியும்.

அப்படியே நாம் தவறு செய்யாவிட்டாலும்கூட, அந்த மனிதன் அந்தச் சூழ்நிலையில் செய்த தவற்றை நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் இருந்தால் செய்திருக்கக்கூடும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

குரோதன் நம்முடைய பெரிய சத்ரு. அவனை அண்டவிடாமல் எப்போதும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.



????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
விஷ்ணு சஹச்ர நாமாவில் சொல்லபடும் மகாவிஷ&

விஷ்ணு சஹச்ர நாமாவில் சொல்லபடும் மகாவிஷ்ணு வணக்கம்.

. அவிகாராய ஸுத்தாய நித்யாய பரமாத்மநே
ஸதைக ரூபரூபாய விஷ்ணவே ஸர்வ ஜிஷ்ணவே


மாறுபாடில்லாதவராகவும், தூய்மை உடையவராகவும், என்றும் உள்ளவராகவும், எப்பொழுதும் ஒரே வடிவத்தை உடையவராகவும், அனைத்தையும் வெற்றி கொள்பவராகவும், பரம்பொருளாகவும் விளங்குகின்ற மகாவிஷ்ணுவை வணங்குவோம்.

. யஸ்ய ஸ்மரண மாத்ரேண ஜன்ம ஸம்ஸார பந்தநாத்
விமுச்யதே நமஸ் தஸ்மை விஷ்ணுவே ப்ரப விஷ்ணவே
ஓம் நமோ விஷ்ணவே ப்ரப விஷ்ணவே


சர்வ வல்லமை பொருந்தியவர் விஷ்ணு. பிறவித் துன்பமாகிய தளையானது, அப்பெருமானை நினைத்த மாத்திரத்திலேயே விடுபட்டுப் போய்விடும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய மகா விஷ்ணுவை வணங்குவோம்.


Source: Sage of Kanchi

Hindukkaalin Prasad
 
மகா பெரியவா சொன்ன குலதெய்வ வழிபாடு!

மகா பெரியவா சொன்ன குலதெய்வ வழிபாடு!

குலதெய்வம் குறித்து பலருக்கு சந்தேகம் எழுவது உண்டு. சிலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்றே தெரியாது. குலதெய்வம் குறித்து மகா பெரியவா தந்திருக்கும் விளக்கம்.

''எல்லோருமே தாயார் வயிற்றில்தான் தோன்றுகிறோம். தந்தை காரணகர்த்தா. ஆகவே, எந்த ஓருவருக்கும் பெண் தெய்வம்தான் குலதெய்வமாக இருக்க முடியும். ஆண் தெய்வங்கள் (விஷ்ணு, சிவன், முருகன் போன்றோர்) இஷ்ட தெய்வங்கள் ஆவர். இன்றைய அவசர கதியில் இயங்கும் நமக்கு, எங்கோ தூரத்தில் இருக்கும் குலதெய்வக் கோயிலை விட, அருகில் இருக்கும் தெய்வத்தையே குலதெய்வம் என்று சொல்வது வசதியாகப் போகிறது.

நீங்கள் முழுமையாக ஒரு கோயில் கட்டியிருந்தால் அதுதான் உங்கள் குலதெய்வம். அதை, உங்கள் மூதாதையர் கட்டியிருந்தாலும் கூட! குலதெய்வக் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையேனும் அவசியம் செல்ல வேண்டும். மணமானவர்கள் மனைவியின் வீட்டு குலதெய்வக் கோயிலுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செல்லவேண்டும். எதிர்பாராத சோக நிகழ்வுகள் நடந்துவிட்டால், அந்த ஆண்டு தவிர்க்கலாம்.



Source:Sage of Kanchi

Manokhsaran Sankaran
 
"ஸ்வாமி" என்றால் குமாரஸ்வாமியே

"ஸ்வாமி" என்றால் குமாரஸ்வாமியே "


"ஸ்வாமி" என்பது கடவுளுக்குப் பொதுப் பெயர் என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். பரமேசுவரனும் ஸ்வாமி, மகாவிஷ்ணுவும் ஸ்வாமி, விக்நேசுவரரும் ஸ்வாமி - எல்லா தெய்வங்களையும் "ஸ்வாமி" என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி எந்த மூர்த்தியாகவும் இல்லாமல், இந்த எல்லாமாகவும் ஆகியிருக்கிற பரமாத்மாவை, பராசக்தியை கடவுள் (God) என்று எந்த மதஸ்தராலும் சொல்லப்படுகிறவரையும் "ஸ்வாமி" என்றே சொல்கிறோம்.


ஆனால் இந்த "ஸ்வாமி" என்கிற பெயர் வாஸ்தவத்தில் ஒருத்தருக்குத்தான் உண்டு. இப்போது நாம் சொல்கிற சாமிகள் எல்லாம் அந்த ஒருவரிடமிருந்துதான் அவர் பெயரையே கடனாகக் கேட்டு வாங்கித் தங்களுக்கும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அந்த நிஜமான ஸ்வாமி யாரென்றால் ஸுப்ரமண்யர் தான்; முருகன், முருகப் பெருமான் என்று இந்தத் தமிழ் தேசத்தில் தனியன்போடு சொல்லப் படுகிறவர்தான். அவர் குழந்தையாக இருக்கிற கடவுள்; குமாரஸ்வாமி.


'இவர்தான் ஸ்வாமி என்று எதனால் சொல்கிறீர்கள்?' என்று கேட்பீர்கள். 'அமரகோச'த்தின் ஆதாரத்திலேயே இப்படிச் சொல்கிறேன்.


அகராதி, நிகண்டு என்றெல்லாம் சொல்கிறார்களல்லவா? ஸம்ஸ்கிருதத்தில் இருக்கிற பிரசித்தமான அகராதிக்கு 'அமரகோசம்' என்று பெயர். 'அமரம்' என்று சுருக்கிச் சொல்வார்கள். அதைப்பற்றியும், அதை எழுதினவனைப் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். சுப்ரமணியர் விஷயத்துக்கு இது நேராக சம்பந்தமில்லைத்தான். இருந்தாலும் இதில் பல ரஸமான விஷயங்கள் இருப்பதால்தான் சொல்கிறேன். இதில் நம் பகவத்பாதாளின் பெருமை, மதங்களில் ஒன்றுக்கொண்று இருக்கப்பட்ட உறவுகளின் போக்கு எல்லாம் வெளியாவதால் சொல்கிறேன்.


இந்த அகராதிக்குப் பேர் 'அமரகோசம்' என்றேன். 'கோசம்' என்றால் 'பொக்கிஷம்' என்று அர்த்தம். சப்தக் கூட்டங்கள், சொற்களின் சமூகம் பொக்கிஷமாக இருக்கிற புஸ்தகத்துக்குக் 'கோசம்' என்று பெயர் வந்தது. இம்மாதிரி ஸம்ஸ்கிருதத்தில் பல கோசங்கள் (அகராதிகள்) இருந்தாலும் ரொம்பவும் பிரசித்தமானது 'அமரகோசம்'தான்.


'அமர' என்கிற பேர் எப்படி வந்தது? ஸம்ஸ்கிருதத்தை தேவபாஷை என்பார்கள்; தேவர்கள் அமிருதம் உண்பதால் அமரர் எனப்படுவார்கள்; எனவே தேவபாஷை அமரபாஷை என்றும் சொல்லப்படும்.
அதற்கேற்றாற்போல் "ஸம்ஸ்கிருதம் செத்த மொழி (dead language)" என்று சொல்லிக்கொண்டு, அதைச் சாக அடிக்க எத்தனையோ யத்தனம் செய்தாலும், எப்படியோ அதுவும் அமரமாக இருந்துகொண்டேதான் வருகிறது. 'அமர பாஷையில் உள்ள கோசம்தான் அமர கோசமா?' என்று தோன்றலாம்.



ஆனால் இந்தக் கோசத்துக்கு 'அமரம்' என்கிற பெயர் இப்படி வரவில்லை. அதை இயற்றியவனின் பெயரை வைத்தே அதற்கு 'அமரம்' என்று பெயர் வந்தது. அமர சிம்மன் என்பவனால் செய்யப்பட்டதால் அதற்கு 'அமர கோசம்' என்று பெயர்.


அமரசிம்மன் மகாபுத்திமான். இந்த நிகண்டுவைப் பார்த்தால் அறிவில் அவனுக்கு ஈடு உண்டா என்று பிரம்மிப்பு உண்டாகும். ஒவ்வொரு விஷயத்தையும் அவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்துக்கொண்டு அர்த்தம் சொல்கிறான். இவன் ஹிந்து அல்ல. அமரசிம்மன் ஒரு ஜைனன்.


ஜைனர்களில் படிப்பாளிகள் அதிகம். இலக்கியத்தில் அவர்களுக்கு விசேஷமான இடம் உண்டு, தமிழில் ஐம்பெரும் காப்பியங்களிலே ஜைன சம்பந்தம் அதிகம். காவிய ரசம் நிரம்பி மிக உயர்ந்த நூல்களாக உள்ள சிந்தாமணி, வளையாபதி எல்லாம் ஜைன நூல்கள்தாம். ஸம்ஸ்கிருதத்தில், 'பஞ்ச காவியங்கள்' என்று பொதுவாக இருப்பதைத் தவிர ஜைனர்களே தனியாக தங்கள் மத சம்பந்தமாக ஒரு பஞ்ச காவியம் வைத்திருக்கிறார்கள். இந்த அமரசிம்மனும் அநேக ஜைனமத புஸ்தகங்கள் எழுதினான். ஆனால் இன்று மிஞ்சியிருப்பது மதநூலாக இல்லாத இந்த அகராதி ஒன்றுதான் என்றால் ஆச்சரியமாயிருக்கும். இந்த ஒன்றாவது மிஞ்சியதற்குக் காரணம் ஜைனர்கள் பரம விரோதியாக நினைத்த நம் ஆதிசங்கரர்தான்.


ஆதிசங்கரர் பாரததேசம் முழுவதும் சஞ்சாரம் பண்ணி பல மதங்களைக் கண்டனம் செய்து, வைதிக மதத்தை ஸ்தாபித்தார் அல்லவா? இந்த திக்விஜயத்தில் அவர் அமர சிம்மனையும் சந்தித்தார். பகவத்பாதரின் கொள்கை, 'ஒரே ஒரு சத்தியம்தான் இருக்கிறது! அதுவே பலவிதமாகத் தெரிகிறது. அந்த ஒன்றிலேயே கரைந்து அதுவாகவே ஆகிவிட வேண்டும்' என்பது. பௌத்தர்கள் பொதுவாக எல்லாமே சூனியம், மாயை என்பார்கள். ஆதி ஆசார்யாளும் 'மாயையால்தான் ஒரே பரம்பொருள் பலவாகத் தெரிகிறது. இந்தப் பார்வை போனால் இது அத்தனையும் போய்விடும்', என்று சூனிய நிலையையே சொல்கிற மாதிரி தோன்றினாலும், அவர் முக்கியமாகச் சொன்னது 'இல்லாத (சூனிய) மாயை' அல்ல; 'இது போனபின் எப்போதும் நிலைத்து இருக்கிற, அழிவே இல்லாத பூரணமாக ஒரே சத்தியம் இருக்கிறது' என்பதைத்தான் நம் ஆசாரியாள் முடிந்த நிலையாக அவலம்பித்தார் (நிலை நாட்டினார்) . பௌத்தம் சூன்யத்தோடு நிற்கிறது. பூரணமாக ஒன்று இருக்கிறது என்பது ஆசாரியாளுக்கு முக்கியம். ஒன்றும் இல்லை என்பது புத்தருக்கு முக்கியம். ஒன்று இருக்கவும் இருக்கலாம் (அஸ்தி) ; இல்லாமலும் இருக்கலாம் (நாஸ்தி); இருந்தும் இல்லாமலும்கூட இருக்கலாம் (அஸ்தி நாஸ்தி); என்பது ஜைன மத ஸ்தாபகரான ஜினருக்கு (மகாவீரர்க்கு) முக்கியம்.



இப்படிப்பட்ட கொள்கையை உடைய ஜைனனான அமரசிம்மன் ஆசாரியாளிடம் வாதப் போருக்கு வரும்போது, "நான் ஒரு திரைக்குப் பின்னாலிருந்துதான் உம் கேள்விகளுக்குப் பதில் சொல்வேன்" என்றான்.


ஆசாரியாளும் இதில் உள்ள ரகசியத்தை ஆராய்ச்சி செய்து பார்க்காமல் ஒப்புக்கொண்டார்.
ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களும் அமரசிம்மனுக்கும் வாதப் போர் ஆரம்பித்தது.


அமரசிம்மன் ஒரு திரையைக் கட்டிக் கொண்டு அதற்கு உள்ளேயிருக்கிறான். ஆச்சாரியாள் வெளியே இருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார்.


அமரசிம்மன் பளிச் பளிச்சென்று பதில் சொன்னான். அவன் என்னதான் மகாபுத்திமானாக இருந்தாலும்கூட, இத்தனை சாமர்த்தியமாக எப்படிப் பிரதிவசனம் கொடுக்கிறான் என்பது ஆசார்யாளுக்கு ஆச்சரியமாக இருந்தது. க்ஷணகாலம் யோசித்தார். உடனே பரமேசுவர அவதாரமும் ஸ்ர்வக்ஞருமான அவருக்கு ரகசியம் புரிந்துவிட்டது.


அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொன்னது அமர சிம்மனே இல்லை! ஸாக்ஷாத் சரஸ்வதி தேவியே அவன் மாதிரி பேசியிருக்கிறாள் என்று தெரிந்தது. இவன் அவளை ரொம்ப நாளாக உபாஸித்திருக்கிறான்.

நியாயமாகப் பார்த்தால் இவன் அப்படிச் செய்திருக்கவே கூடாது. ஏனென்றால் இவனுடைய ஜைனமதம் ஒரு கடவுளைப் பற்றியே சொல்லவில்லை. அதை பல ரூபத்தில், ஸரஸ்வதி மாதிரி பல தெய்வ வடிவங்களில் ஆராதிப்பதை ஜைன தத்வம் ஒப்புக் கொள்ளக்கூடாது. அப்படியிருந்தும் இவன் ஜைன மதத்துக்கு ஆதரவாகப் புஸ்தகம் எழுதுவதற்கே ஸரஸ்வதியின் அநுக்கிரகம் வேண்டுமென்று கருதி அவளை உபாஸனை பண்ணியிருக்கிறான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்றாக இருந்திருக்கிறான்.



இப்போதுகூட நாஸ்திகர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப்பேர் வியாதி வெக்கை வந்து ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால் வெங்கடரமண ஸ்வாமிக்கு வேண்டிக் கொள்கிறார்கள்; மாரியம்மனுக்கும் பிரார்த்தனை செலுத்துகிறார்கள். கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்பிராயம்; சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை; அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி ( feeling) க்கு மதிப்பு (respect) கொடுத்தேன்" என்று ஜம்பமாகச் சொல்லிக்கொள்வார்கள்.



இந்த ரீதியில்தான் ரொம்பக் காலம் முந்தியே ஹிந்து மதத்தைக் கண்டனம் பண்ணும் கிரந்தங்களை எழுதிய அமரசிம்மன், அவை நன்றாக அமைய வேண்டும் என்று, ஹிந்து மதத்தின் வாக்குத் தேவதையையே உபாஸனை செய்தான். ஒருவன் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அது நல்லதாகத்தான் இருக்கட்டும், கெட்டதாகத்தான் இருக்கட்டும், அதிலே பூரண சிரத்தையுடன் இறங்கி விட்டான் என்றால், அதற்குண்டான ஒரு பலனை பகவான் தரத்தான் செய்கிறான். அப்படியே இவனுடைய உபாஸனையின் சிரத்தையை மதித்து, இவனுக்கும் ஸரஸ்வதி அநுக்கிரகம் செய்து விட்டாள்.



இப்போது இவன் திரைக்கு இந்தப்புறம் ஸரஸ்வதி தேவியை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவிட்டு உட்கார்ந்திருக்கிறான். தான் எத்தனை புத்திசாலியானாலும் ஆசாரியாள் எதிரில் சூரியனுக்கு முன் பிடித்த மெழுகுவர்த்தி மாதிரி ஆகிவிடுவோம் என்பது இவனுக்குத் தெரியும். அதனால் முன்னமேயே வாக்குத்தேவியைத் தஞ்சம் புகுந்திருந்தான். இவனுடைய உபாஸனைக்கு இன்னும் கொஞ்ச காலம் பலன் தந்துதான் ஆகவேண்டும் என்று அவளும் கட்டுப்பட்டிருந்தாள். எனவே, "என்னை ஒரு கடத்தில் ஆவாஹனம் பண்ணிவைத்துச் சுற்றிலும் திரைபோட்டுக் கொண்டு, நீ அதற்குள் இரு, சங்கரர் வெளியிலிருந்து கேள்வி கேட்கட்டும். உனக்காக நானே பதில் சொல்கிறேன்" என்று வாக்குத் தந்தாள் வாக்தேவி.
அந்தப்படிதான் இப்போது நடந்தது. அதை ஆச்சர்யாளும் துளி மனஸைச் செலுத்தியவுடனே கண்டுபிடித்து விட்டார்.
உடனே அவர், "அம்மா, உன் காரியம்தானா இது? நீ இப்படிச் செய்யலாமா? உன்னையும் மற்ற அத்தனை தெய்வங்களையும் ஆராதிக்கிற பழக்கத்தையே தொலைத்து விட வேண்டும் என்று கிரந்தம் செய்கிறவனுக்கே இப்படி அநுக்கிரகம் செய்யலாமா?அவனுடைய உபாஸனா பலத்துக்காகச் செய்தாய் என்றாலும், இத்தனை புஸ்தகங்கள் அவன் எழுதியுமா அது தீரவில்லை? அதோடு, இத்தனை நேரம் என்னோடு தாக்குப் பிடித்து வாக்குவாதம் செய்ததிலும் எத்தனையோ அநுக்கிரகத்தைச் செய்துவிட்டாயே! அவனுக்குச் செய்ய வேண்டியதற்கு அதிகமாகச் செய்வது நியாயமா?" என்று ஸரஸ்வதியைக் கேட்டார்.
அவருடைய கணக்கு சரியாகத்தான் இருந்தது. அமர சிம்மனுடைய உபாஸனைக்குப் பிரதிபலன் தந்து தீர்த்தாயிற்று என்று ஸரஸ்வதி தெரிந்து கொண்டாள்.



உடனே கடத்திலிருந்து அந்தர்த்தானமாகி விட்டாள். திரை அறுந்து விழுந்தது.


அப்புறம் அமரசிம்மனால் ஆசாரியாளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டான்.
ஸரஸ் - அதாவது நீர் நிலையில் - இருக்கிறவள் ஸரஸ்வதி. அறிவுதான் அந்த நீர்நிலை. அது கொஞ்சம்கூடக் கலங்காமல் தெளிந்திருந்தால்தான் அதற்குள் அவள் இருக்க முடியும். ஆனால், ஆசாரியாள் அவதரித்த காலத்தில் எப்படியிருந்தது? ஏகப்பட்ட மதங்கள் - எழுபத்திரண்டு என்று சொல்வார்கள் - விதண்டாவாதங்களைச் சொல்லிக் கொண்டு அறிவையே கலக்கினதால், ஞான ஸரஸானது ஒரே சேற்றுக் குட்டை மாதிரி ஆகிவிட்டது. அப்போது அத்வைத உபதேசத்தால், ஆசாரியாள்தான் அந்தச் சேற்றை எல்லாம் அடுயோடு வாரி அப்புறப்படுத்தி, ஸரஸைத் தெளியவைத்து, ஸரஸ்வதியை நிஜமான ஸரஸ்வதியாக்கினார். இப்படி ஒரு சுலோகம் உண்டு. ('வக்தாரம் ஆஸாத்ய' என்று ஆரம்பிக்கும்) .



இம்மாதிரி ஸரஸ்வதியை ஸரஸ்வதியாக்குவதற்கே இப்போது அவர் ஸரஸ்வதியை அப்புறப்படுத்தும்படியாயிற்று. பிறகு அவர், ஸரஸ்வதியின் அநுக்கிரகத்தைப் பெற்ற அமரசிம்மனுக்கு தாமும் அநுக்கிரகத்தைச் செய்தார். அதைச் சொன்னால் அதுவே 'அமரகோச'த்தின் கதையும் ஆகும்.
ஆசாரியாளிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டான் அமரசிம்மன்.


அதற்கப்புறம் எவனுக்குத் தான் எழுதிய புஸ்தகங்கள் எல்லாம் ஏன் இனிமேலும் லோகத்தில் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. அத்வைத பரமாக ஆசாரியாள் எவ்வளவு எழுதியிருந்தாரோ, அவ்வளவு இவனும் ஜைன சம்பந்தமாக எழுதியிருந்தான். இப்போது தன் சித்தாந்தம் தோற்றுப் போனதாக ஒப்புக்கொண்டபின், இந்தப் புஸ்தகங்களை மற்றவர்களுக்காக விட்டுவைப்பது சரியாகாது என்று நினைத்தான்.


எந்த மதஸ்தரானாலும் நேர்மை, சத்தியம் உள்ளவர்கள் எதிலும் இருப்பார்கள். ஜைனர்களுக்கு சத்தியம், நேர்மை மிகவும் அதிகம். அவர்கள் ஞானசம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுடன் வாதத்துக்கு வந்தபோது, தாங்களாகவே "நாங்கள் தோற்றுப்போனால் கழுவேறிச் செத்துப்போவோம்" என்றார்கள். அப்புறம் கனல் வாதம், புனல் வாதம் இவற்றில் அவரிடம் தோற்றுப் போனார்கள். ஆனால், கருணை மிகுந்த சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகள் அவர்களைக் கழுவேற்ற நினைக்கவில்லை. ஆனாலும் அவர்களாகவே பிடிவாதமாக "நாங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும்" என்று சொல்லிக் கொண்டு கழுவேறினார்கள். ஞானசம்பந்தர் சமணர்களை இரக்கமில்லாமல் தண்டித்ததாகச் சிலர் நினைப்பது தப்பு. இவர் வாதத்தில் ஜெயித்து, அதனால் பாண்டியராஜா இவர் பக்கம் சேர்ந்து, எதிராளிகளுக்கு எந்த சிட்சை தரவும் இவருக்கு அதிகாரம் தந்தும் கூட, அவர் ஜைனர்களை மன்னித்ததே அவருடைய பெருமை. அப்படியும் வாக்குக்காகப் பிராணத்தியாகம் செய்தது ஜைனர்களுடைய பெருமை.



எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அடிப்படையான சீலங்களில் எந்த மதஸ்தருக்கும் நிரம்பப் பற்று இருக்கலாம். இப்போது அமரசிம்மனுக்குத் தப்பென நிரூபணமாகிவிட்ட தன் சித்தாந்தங்கள் லோகத்தில் இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வந்து விட்டது. எனவே, பெரிதாக நெருப்பை மூட்டி, தான் எழுதியிருந்த சுவடிகளை ஒவ்வொன்றாக அதிலே போட்டுப் பஸ்மமாக்கினான். சரஸ்வதியின் அநுக்கிரகம் பெற்று, எத்தனையோ காலம் பரிசிரமப்பட்டு எழுதியதையெல்லாம், இப்போது ஒரு கொள்கைக்காகத் தன் கைகளாலேயே அக்னியில் போட்டு எரித்தான்.


இதை ஆசாரியாள் கேள்விப்பட்டார். ஆனால் துளிக்கூட சந்தோஷப்படவில்லை. மாறாக மிகுந்த துக்கமே கொண்டார். அவர் அமரசிம்மனிடம் ஓடோடி வந்தார். "அடடா, என்ன காரியம் செய்துகொண்டிருக்கிறாய்? லோகம் என்று இருந்தால் நானா தினுசான அபிப்பிராயங்கள் இருக்கத்தான் செய்யும். பல அபிப்பிராயங்கள் இருந்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டுப் பார்த்துச் சர்ச்சை பண்ணுவதுதான் பல நிலைகளில் இருக்கிற ஜனங்களுக்கு அறிவைத் தெளிவுபடுத்தும். எதிர்க்கட்சி இருந்தால்தான் நம் கட்சியில் உள்ள நல்லது பொல்லாததுகளை நாமே அலசிப் பார்த்துக் கொள்ள முடியும். நீ எந்த மதஸ்தனாகத்தான் இருந்துவிட்டுப்போ. ஆனாலும் நீ மகா புத்திமான் என்று நான் உன்னை கௌரவிக்கிறேன். உன் கொள்கைகளை புத்தி விசேஷத்தால் எத்தனை நன்றாக எடுத்து சொல்ல முடியுமோ அத்தனை நன்றாக செய்து புஸ்தகங்கள் எழுதியிருக்கிறாய். உண்மையில் பரம தத்வம் இதற்கு மாறாக இருந்தாலும் இருந்துவிட்டுப் போகட்டும்; உன் புத்தியளவில் நீ இந்த சித்தாந்தங்களுக்கு எப்படி ஆதரவு காட்டியிருக்கிராயோ அதிலேயே ஒரு அழகு, புத்தியின் பிரகாசம் இருந்தது. இதை எல்லாம் லோகத்துக்கு இல்லாமல் செய்யலாமா?" என்று ஆசார்யாள் அவனிடம்சொல்லி, அவன் கையை பிடித்து, அவன் கடைசியாக அக்னியில் போட இருந்த புஸ்தகத்தைப் போடவொட்டாமல் தடுத்தார். அப்போது அவன் கையில் இருந்ததுதான் 'அமர கோசம்'. ஆசாரியாள் தடுத்திருக்காவிட்டால் அதுவும் "ஸ்வாஹா" வாகியிருக்கும். ஆனாலும் துரதிருஷ்டவசமாக, சமய சம்பந்தமான அவனுடைய புஸ்தகங்கள் எல்லாம் போயே போய்விட்டன. அகராதி, நிகண்டு மட்டுமே நம் ஆச்சாரியாளின் கருணையால் பிழைத்தது. 'அமரம்' என்ற பெயருக்கேற்றபடி அதை மட்டும், அவர் அழியாமல் அமரமாக்கிவிட்டார்.



அகராதியில் அதை எழுதியவன் தன்னுடைய சித்தாந்தம் முதலான எந்த சொந்தக் கொள்கைக்கும் பட்சபாதம் காட்டக்கூடாது. பிற மதங்களைச் சேர்ந்த வார்த்தைகளானாலும், இங்கே அகராதியில் அவற்றை விட்டுவிடாமல், ஆட்சேபிக்காமல், அவற்றுக்கு அந்தந்த மதஸ்தர்கள் என்ன அர்த்தம், என்ன பெருமை என்று நினைக்கிறார்களோ அதைத்தான் கொடுக்க வேண்டும். வேண்டுமானால், இப்படி இன்னாருடைய நம்பிக்கை (belief) என்று பட்டும் படாமலும் சேர்க்கலாமே தவிர, கண்டனம் ஒன்றும் பண்ணக்கூடாது. எல்லா வார்த்தைகளுக்கும் அர்த்தம் கொடுக்கத்தான் வேண்டும் - அது எந்தக் கட்சியாளரின் கொள்கை என்று பார்ப்பது அகராதிக்காரனின் வேலை இல்லை.


இந்த நியாயத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் அமரசிம்மன் ஜைனனாக இருந்தபோதே இந்த 'அமர கோச'த்தை எழுதி இருக்கிறான். இன்றைக்கும் சகல ஸம்ஸ்கிருத மாணவர்களும் நெட்டுருப் போடுகிற மாதிரி, பொது நேர்க்கோடு எழுதியிருக்கிறான்.


'அகராதியையா, நெட்டுருவா? அது என்ன காவியமா? ஸ்தோத்திரமா? அதை எப்படி நெட்ருப் போடுவது?' என்று தோன்றும். ஆனால், அமரகோசம் அழகான சுலபமான ஸ்லோகங்களாக, காவியம் மாதிரி, ஸ்தோத்திரம் மாதிரி, அப்படியே நெட்டுருப்போட வசதியாகத்தான் இருக்கிறது. அதை மனப்பாடம் செய்வது வழக்கமாக விட்டிருக்கிறது.


அந்தக் காலத்தில் எல்லா சாஸ்திரங்களும் - வேதாந்தம், வைத்தியம், சங்கீதம், டிக்ஷனரிகூடத்தான் - சுலோகங்களாகத்தான் செய்யப்பட்டன. காரணம் என்ன? அப்போது அச்சு போட்டுப் புஸ்தகம் தயாரிக்கத் தெரியாது. எனவே கடைக்குப் போய்க் விலை கொடுத்து எத்தனை பிரதி வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றால் முடியாது. அத்தனை வித்தியார்த்திகளுக்கும் ஏட்டுச் சுவடியில் எழுதிக் கொடுப்பது என்றால் அதற்கே ஆயுசுக்காலம் போதாது. எனவே எதையும் மனப்பாடம் ( memorise) பண்ணுகிற மாதிரி கொடுப்பதே யுக்தம் என்று கண்டார்கள். பேச்சு நடையில் (prose) இருப்பது மறந்துபோகும்.

எப்போதும் நாம் பேசிக்கொண்டே இருப்பதால், அதே நடையில் இருக்கிற பாடம் தனியாக மனஸில் நிற்காமல் உதிர்ந்து போய்விடும். ஆனால், அதுவே ஒரு சந்தம், எதுகை, மோனை முதலானவைகளோடு சேர்ந்து செய்யுளாக (poetry) வந்து விட்டால் மனப்பாடம் செய்து மனஸில் மறக்காமல் பதித்துக் கொள்ளலாம். இதனால்தான், எந்த சாஸ்திரத்தையும் சுலோகங்களாகச் செய்து உருப்போட வைத்தார்கள். அச்சுப் புஸ்தகங்கள் வருகிற வரையில் மகா பண்டிதர்களாக இருந்த பலர், ஒரு ஏட்டுச்சுவடிகூட இல்லாமல், ஞாபக சக்தியிலிருந்தே சகல சாஸ்திரங்களையும் கற்றுக் கொண்டு சொல்லி வந்தார்கள். இப்போது புஸ்தகம் என்று ஒன்று இருப்பதால், 'பார்த்துக் கொள்வதற்குத்தான் (for ready reference) புஸ்தகம் இருக்கிறதே' என்று எவரும் எதையும், இப்படி மனசுக்குள் ஆழமாக வாங்கிக் கொள்ளாத நிலைமையையே பார்க்கிறோம். இன்று வெளியே லைப்ரரிகள் அதிகம். அக்காலத்திலோ எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் ரொம்பப் பேர் தாங்களே 'வாக்கிங் லைப்ரரி'களாக (நடமாடும் வாசக சாலைகளாக) இருந்து வந்தார்கள்.


காரணம் நெட்டுருப் பழக்கம்தான். இப்படி நெட்டுருப் பண்ணுவதாலேயே புத்திக்கு ஒரு பலம் ஐகாக்ரியம் ( concentration) ஒழுக்கம் (mental decipline) இவையும் மாணாக்கருக்கு உண்டாயிற்று. நிறைய நேரம் இதே காரியமாக உட்கார்ந்தால் தானே, ஒரு விஷயம் மனப்பாடம் ஆகும்? ஆதலால் மாணாக்கர்களின் புத்தியை கன்னாபின்னா என்று பல விஷயங்களில் போகாமல் கட்டிப்போட்டுப படிப்பிலேயே வைத்திருப்பதற்கு, இப்படி மனப்பாடம் பண்ணுவது ரொம்ப சகாயம் செய்தது. இதற்கு வசதியாக சகல சாஸ்திரங்களையும் ஸ்யன்ஸ்களையும் பத்யமாக (poetry) எழுதி வைத்தார்கள். கத்யம், பத்யம் என்று இரண்டு - கத்யம் 'ப்ரோஸ்'; பத்யம் - 'பொயட்ரி'.



சுலோக ரூபத்தில் வெகு அழகாக 'அமர கோச'த்தைத் எழுதினான் அமரசிம்மன். அதிலே ஹிந்துமத தெயவங்களின் பெயர்கள் வருகிறபோது, ஒவ்வொரு தெய்வத்துக்கும் வேறு என்னென்ன முக்கியமான பெயர்கள் உண்டோ அத்தனையையும், கொஞ்சம்கூட மதபேத புத்தியில்லாமல், அடுக்கிக் கொண்டு போவான். அதைக் கேட்டாலே, அகராதியாகத் தோன்றாது; அர்ச்சனை போல - நாமாவளி போல - தோன்றும். உதாரணத்திற்கு இதோ, 'சம்பு' என்ற வார்த்தைக்கு பிரதிபதங்களாக, 'அமரம்' சொல்வதைக் கேளுங்கள்;

சம்பு : ஈச: பசுபதி : சிவ: சூலீ மஹேஸ்வர : |
ஈசுவர: சர்வ ஈசான: சங்கர: சந்த்ரசேகர : ||
பூதேச: கண்டபரசு: கிரீசோ கிரிசோ ம்ருட : |
ம்ருத்யுஞ்ஜய: க்ருதிவாஸா: பினாகீ ப்ரமதாதிப: ||




அமரசிம்மன் பகவன் நாமாக்களை ரொம்பவும் ஆசையோடு சொல்லிக்கொண்டு போகிற மாதிரி இருக்கிறது. ஆரம்ப மாணவர்களும் நினைவு வைத்துக் கொள்கிற மாதிரி சுலபமாக லலிதமாகப் பதங்களைப் போட்டிருக்கிறான்.


'இந்திரா' என்ற வார்த்தை வந்தவுடன் இப்படியே மகாலக்ஷ்மியைப் பற்றிப் பொழிகிறான்; கேட்கவே லக்ஷ்மிகரமாக இருக்கும்.

இந்திரா லோகமாதா மா க்ஷீரோததனயா ரமா
பார்கவீ லோகஜனனீ க்ஷீரஸாகரகன்யகா
லக்ஷிமீ : பத்மாலயா பத்மா கமலா ஸ்ரீ : ஹரிப்ரியா

இப்படிப் போகிறது. டிக்ஷனரி மாதிரி இல்லை; ஸ்தோத்திரமாக இருக்கிறது!
இப்படிப் பக்ஷபாதமில்லாமல் அர்த்தம் சொன்ன அமர சிம்மனுக்கும், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பக்ஷபாதம் வந்ததுதான் வேடிக்கை. 'பௌத்த மதம்' என்று வந்தால் மட்டும் கொஞ்சம் மட்டம் தட்ட வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குப் போகவில்லை. நியாயமாகப் பார்த்தால் பௌத்தத்தை விட ஹிந்து மதத்திடம்தான் அவனுக்கு விரோதம் அதிகம் இருக்க வேண்டும். ஏனென்றால், கடவுளைப்பற்றிச் சொல்லாமலிருப்பது, ஹிம்ஸை இருப்பதால் யக்ஞம் கூடச் செய்யக்கூடாது என்பது ஆகிய கொள்கைகளில் ஜைனம், பௌத்தம் இரண்டுமே வைதிகத்துக்கு விரோதமானவை. அவற்றுக்குள் இம்மாதிரி ஒற்றுமை அம்சங்கள் நிறைய இருக்கின்றன.


பொதுவாக அடுத்த ஊரில் அல்லது அடுத்த தெருவில் நம் பரம விரதியிருக்கிறான் என்றால்கூட அவனிடம் அதிகப் போட்டியிராது; அதிக வயிற்றெரிச்சல் இராது; ஆனால் பக்கத்து வீட்டில் அல்லது எதிர் வீட்டில் நமக்குக் கிட்டத்தில் இருக்கிறானே, இவனுக்கு நம்மிடத்தில் அத்தனை விரோதம் இல்லாவிட்டால்கூட, இவனைப் பார்த்துத்தான் நமக்கு அசூயை, ஆத்திரம் ஜாஸ்தியாக இருக்கும். இவனை எப்படி மட்டம் தட்டலாம் என்று காத்துக் கொண்டிருப்போம். இதே மாதிரி தன் மதத்துக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கிற வைதிக மதத்தைவிட, அதற்கு ரொம்ப ஒற்றுமை உள்ள பௌத்தத்தை மட்டம் தட்டுவதிலேயே அமரசிம்மனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தாற்போலிருக்கிறது. அமரசிம்மன் தன் நிகண்டுவில் ஹிந்து மத வார்த்தைகளுக்கு நியாயமாக அர்த்தம் பண்ணிவிட்டு, புத்த மத வார்த்தைகள் என்று வருகிறபோது என்ன பண்ணினான்?


புத்தரைக் குறிப்பிடும் வார்த்தை வரிசையாகச் சொல்ல நேர்ந்தபோது, அவருக்கென்றே பிரசித்தமாக இருக்கிற பெயர்களை - "ததாகதர்"; (லக்ஷியத்திலேயே செல்கிறவர்) போன்ற பெயர்களை அமரசிம்மன் சொல்லவேயில்லை. பொதுவான பெயர்கள் சிலவற்றை மட்டும், "இதைப் படிக்கிற எந்த மதஸ்தர் வேண்டுமானாலும் தன் ஸ்வாமி என்று நினைக்கும்படியிருக்கட்டும்" என்கிற மாதிரி சொல்லிவிட்டான். அதோடு நிற்கவில்லை, 'ததாகதர் சாக்யமுனி' முதலான பெயர்களை எல்லாம் ஜீனருடையதாக (மகாவீரருடையதாக) ஆக்குகிறான்! புத்தருடைய 'பாடி-கார்ட்' ஆக (மெய்க்காவலராக) ஸுகதர் என்று இருந்தார். அவர் பெயரைக்கூடத் தன் மதாசாரியரான ஜினருடைய பெயர்களில் ஒன்றாகவே கொடுக்கிறான்.



ஆனால், ஹிந்து மதத்திடம் இப்படியெல்லாம் மனக்கோணல் ( prejudice) எதுவும் காட்டவில்லை. ஹிந்துக்களுக்குள்ளேயே வைஷ்ணவர்கள், சைவர்களுக்கிடையில் இருக்கக் கூடிய பரஸ்பர 'ப்ரெஜுடிஸ்' கூட இவனுக்கு இல்லை. ஈஸ்வரன் பெயர்களைச் சொல்கிறமாதிரியே மகாவிஷ்ணுவின் நாமாக்களைக் கொடுக்கிறான். அதனால்தான் சைவ, வைஷ்ணவ பேதமில்லாமல் எல்லா மாணவர்களும் 'அமர'த்தை நெட்டுருப்போடும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது.



இப்படி எந்த ஸ்வாமிக்கும் ஏற்றத்தாழ்வு சொல்லாத பரமதஸ்தனான அமரசிம்மன், தன்னுடைய கோசத்தில் வேறெந்த தெய்வத்துக்கும் "ஸ்வாமி" என்ற பெயரைத் தராமல் ஸுப்ரம்மண்யரையே "ஸ்வாமி" என்கிறான் என்றால், அதை நாமெல்லாம் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?


தேவஸேனாபதி: சூர: ஸ்வாமீ கஜமுகாநுஜ.

என்கிறது அமரகோசம்.


?????? ??????? ????????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Upcoming Visesha Pujas in February 2015 at Kanchi Matam


Upcoming Visesha Pujas in February 2015 at Kanchi Matam



1st - Sunday - PRADOSHA PUJA

3rd - Tuesday - POURNAMI PUJA, Poornahuti of Sahasra Chandi Homam

12th - Thursday - HH Sri Chandrasekharendra Saraswathi Swami (Kalavai Parameshti Guru) Aradhana

16th - Monday - PRADOSHA PUJA

17th - Tuesday - MAHA SHIVARATRI PUJA

17th - Tuesday - JAYANTHI MAHOTSAVAM OF HH Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal

19th - Thursday - HH Sri Mahadevendra Saraswathi Swamigal(Kalavai Paramaguru) Aradhana





Source: Sage of Kanchi

Punchanathan Suresh
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="class: MsoNormalTable, width: 100"]
[TR]
[TD][/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
"VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Paripalana Sabha - 5th Feb 2015 to 8th Feb 2015 - West Mambalam.
Venue: Sri Vasudeva Sathsangam, 35A,
Vasudevapuram Street, West Mambalam Chennai - 600033.
Daily schedules and Upanyasam Details:

Day 1 (
5th Feb 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on "Bagavad Githaium Karma Anushtanamum" - Upanysakar Bhramhashri Vaspathi Dr MV Ananthapadmachariyar.

Day 2 (
6th Feb 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on "Pithru Boojanam" - Upanysakar Upanyasa Choodamani Shri Ramakatha Rathnam Veda lakshna Vidvan Brahmashri Mannargudi Gopalakrishna Sasthirgal.

Day 3 (
7th Feb 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Sukla Yajur, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on "Vedamum Ramayanamum" - Upanyasakar Veda Rathnam Suraathyaayi, Veda Bhashya Rathnam Brahmashri Dr.V G Subramanya Ganapadigal.

Day 4 (8th Feb 2015)
07:30 AM to 09:00 AM - Shri Veda Vyasa Pooja & Veda Parayana Poorthi
09:30 AM to 11:30 AM - Avahantee Homam
11:30 AM to 12:30 PM - Pradakshana Namaskaram, Aasirvadham, Swasthi in All sakahas, Veda Parayana Sambhavana, Ghosha Santhi, Arathi.

SUBHAM

Jaya Jaya Shankara - Hara Hara Shankara.

With Regards,
Veda Sammelanam coommitte
Chandrasekara Sharma - 9444532301 ([email protected])
VG Krishnamurthy - 9884058582 ([email protected])
S Krithivasan - 9840964078 ([email protected])




Source: Sage of Kanchi
 
18000 விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணினால்

18000 விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணினால்

18000 விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ணினால் அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…? வந்தான் – பெரியவர் வடிவில்!

கட்டுரை-இந்திரா சௌந்தரராஜன்

ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்த சமயம், பூகோள ரீதியாக ஒரு பெரும் வறட்சியை நம்நாடு சந்திக்க நேர்ந்தது. வறட்சி என்றால் சாதாரண வறட்சி அல்ல… ஜனங்கள் எப்படி உயிர் வாழ்வார்களோ என்று அஞ்சும் அளவிலான வறட்சி. இதுபோன்ற வறட்சியும் இயற்கை சார்ந்ததே… இது ஒன்றும் நடந்துவிடக்கூடாத, நடக்க முடியாத ஒன்றல்ல.

ராஜாஜி ஆட்சிக்காலத்திலும் வறண்ட போது, மிகுந்த இறை நம்பிக்கையும் நேர்மையும் உடைய ராஜாஜி, இதுகுறித்து மிகவும் கவலைப்பட்டார். அப்போது வருணஜெபம் செய்தால் மழை பொழியும் என்று சட்டசபையிலேயே பேசப்பட்டது. அதற்கு எதிரான கருத்துகளும் பேசப்பட்டதாக தகவல்.

ஆனால், ராஜாஜி இறைவழிபாட்டை நம்பினார். அதிலும் இறங்கினார். மறுநாளே ஒரு பெரும் மழை பெய்யவும் நம்பிக்கை வலுவானது. ஆனால், அன்று இருந்த வறட்சிக்கு, ஒரு மழை எல்லாம் ஒரு மூலைக்குத்தான். ஆறுகளில் வெள்ளம் பாய்ந்து, ஏரி-குளங்கள் நிரம்ப வேண்டும் என்றால் பருவ காலம் முழுக்க தவறாமல் மழை பொழிய வேண்டும். அவ்வேளையில் பெரியவரிடமும் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்பட்டபோது, ‘பாரதம் படிப்பது – குறிப்பாக விராட பர்வதம் படிப்பது மிகுந்த நன்மையைத் தரும்’ என்றாராம்.

உடனேயே, அன்றைய வேத வித்தகரான வழுத்தூர் ராஜகோபாலசர்மா என்னும் அன்பர், தன் இல்லத்திலேயே பாரதம் படிக்கத் தொடங்கிவிட்டார். பாரதம் பதினெட்டு பருவங்கள் கொண்டது. அதை முழுவதுமாய் வாசித்து முடிக்க பல ஆண்டுகள் ஆகும். ஞாயிற்றுக் கிழமைதோறும் அன்பர்கள் ஒன்றுதிரள வாசிக்கும் செயலும் தொடங்கியது.

கூடவே, சர்மாஜி ஒரு சங்கல்பமும் செய்துகொண்டார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் 18000 முறை பாராயணம் செய்துவிடுவது என்பதே அது!

நன்றாக கவனியுங்கள். ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல… 18000 முறை! இதுபோக பாரதத்தின் பதினெட்டு பருவங்கள் எல்லாமே தேச நலனுக்காக… மழை வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல; தர்மம் வாழ வேண்டும் – நீதி, நியாயம் விளங்க வேண்டும். வருங்காலம் மக்களுக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம்.

சரி; மழை பெய்ததா – வறட்சி நீங்கியதா என்கிற கேள்வியும் எழுகிறதல்லவா? அது எப்படி நீங்காமல் இருக்கும்? அன்று தர்ம தேவனாக ரிஷ்ய ஸ்ருங்கர் இருந்து தீர்த்தார் என்றால், இன்று பெரியவர்தானே அந்த இடத்தில் இருப்பவர். அவரே வழிகாட்டியபிறகு, வருணன்தான் வழிக்கு வராமல் போவானா? வானமும் பொழிந்து, பூமியும் மலர்ந்தது!

சர்மாஜியின் மகாபாரத வாசிப்பும் தொடர்ந்தது. நான்காவது வருடம் அது பதினெட்டாவது பருவத்தை அடைந்தது. இடையில் எவ்வளவோ தடங்கல்கள் வரப்பார்த்தது – பொருளாதார சிரமங்கள் ஏற்பட்டன. ஆனால், அவ்வளவையும் மீறி, ஞாயிறுதோறும், பக்தி சிரத்தையுடன் பாரதம் படித்து, சர்மாஜி கடந்துவிட்டார்.

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் 18000 என்கிற அந்த அளவை நெருங்க ஆரம்பித்தது. இது ஒரு சாதாரண விஷயமல்ல. மிகப்பெரும் செயல்!

கல்கத்தா சேட்ஜி பதினெட்டு புராணத்தை வெளியிட்டு, மகா பெரிய வியாதியில் இருந்தே, விடுதலை பெற்றுக் கொண்டார். என்றால், இந்தச் செயலுக்கு எத்தனை பெரிய அனுக்கிரகம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திகன்கூட இப்படி ஒரு எத்தனத்தை கேள்விகேட்க யோசிப்பான். ஏனென்றால், இதன்பின்னால் அப்படி ஒரு நம்பிக்கை – அப்படி ஒரு முயற்சி ஒளிந்து கிடைக்கிறது. இதன் உச்சக்கட்டம்தான் நாம் அறியவேண்டிய முக்கிய விஷயமாகும்.

பன்னிரெண்டு கோடி முறை ராம நாமம் ஜெபித்தவருக்கு ஹனுமனின் தரிசனம் வாய்க்குமாம். பதினெட்டு கோடி முறை ஜெபித்தவருக்கு ராம தரிசனம் சித்தியாகுமாம். இது அனுமானமாய் சொல்லப்படுவதல்ல… நடந்திருக்கிறது. ராம தரிசனமும், ஹனும தரிசனமும் வாய்க்கப் பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

என்றால், இந்த 18000த்துக்கு அந்த ராமன் நேரில் வரவேண்டுமே…?

வந்தான் – பெரியவர் வடிவில்!

சர்மாஜி பதினெட்டாயிரத்தை நெருங்கிய சமயம், பெரியவர் சென்னையில் வந்து முகாமிட்டிருந்தார். சர்மாஜியும் அவரை சந்தித்து, தனது பாரத வாசிப்பையும், சஹஸ்ரநாமம் 18000த்தை தொட இருப்பதையும் கூறினார். பெரியவர் பூரித்துப்போனார். அந்த பதினெட்டாயிரக் கணக்கு, இங்கே என் எதிரிலேயே பூர்த்தியாகலாமா என்று கேட்டார். சர்மாஜிக்கும் பழம் நழுவி பாலில் விழுந்தது போலானது. அன்பர்களோடு கூடி, அங்கேயே பாராயணம் செய்து பூர்த்தி செய்தார். பெரியவரும் அன்றைய நிகழ்வில் பூர்ண கும்ப கலசத்தை, தன் கரம் தொட்டு ஆசீர்வதித்து தரவும் அது வினியோகமாயிற்று.

பாராயணம் புரிந்தவர்களுக்கு மடத்திலேயே பிரசாத போஜனம். சொல்லி வைத்த மாதிரி ஆனந்தம் ஆனந்தம் என்று வானமும் குதூகலித்தது. நனைந்து கொண்டுதான் போனார்கள்.

சர்மாஜியும் வீட்டை அடைந்தார்.

அதுவரை நடந்த பாராயணங்கள் எல்லாம் ஒரு லக்ஷ்மி நாராயணர் படத்தின் முன்தான் நடந்தது. நிறைவு பெரியவர் முன் நிகழ்ந்துவிட்டிருந்தது. அந்த நினைவுகளோடு அந்தப் படத்தை பார்த்து வணங்கினார்.

உள்ளே ஒரு சிறு நெருடல்.

இறுதிப் பாராயணத்தில் இந்த படம் இருந்திருக்கலாமோ? இவர் இடத்தில் பெரியவரே இருந்துவிட்டார். இருந்தாலும் சற்று நிரடியது. அந்த உச்சக்கட்டமும் இனிதான் வேலை செய்தது. மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து சர்மாஜியிடம், பெரியவர் உங்காத்துக்கு வரப் போறதா தகவல் சொல்லிவிட்டார்” என்றார்.

சர்மாஜி பாதாதி கேசம் சிலிர்த்துப் போனார். ‘என் வீட்டுக்கா… அவர் பாதம் இங்கே படப்போகிறதா? நான் அவ்வளவு புண்ணியசாலியா?’ – அவருக்குள் கேள்விகள் ஓடத் தொடங்கிவிட்டன.

சர்மாஜி வீடு மைலாப்பூரில்… வழியில் நாகேஸ்வரராவ் பூங்கா, லஸ் கார்னர், கற்பகாம்பாள் நகர், விவேகானந்தர் கல்லூரி தெரு வழியாகத்தான் வந்தாக வேண்டும். விஷயம் பரவி ஜனங்களும் அவரை தரிசனம் செய்யத் தயாராகிவிட் டனர்.

சர்மாஜி என்ன செய்தார் தெரியுமா?

அந்த லட்சுமி நாராயணர் படத்தை வீட்டு வாசலில் ஒரு மேஜை போட்டு, அதன்மேல் வைத்து மாலை போட்டு ஒரு விளக்கையும் ஏற்றி வைத்துவிட்டார்.

அதேசமயம், பெரியவரின் இந்த வருகை தெரிந்து, நாத்திக வாதிகளும் தங்கள் எதிர்ப்புணர்வை காட்டும் விதமாய், கறுப்புச் கொடி மற்றும் தங்கள் வாதங்களுடன் நிற்பதாக தகவல்.

பெரியவரும் புறப்பட்டுவிட்டார்.

இந்த நாத்திகவாதிகள் பார்வையில் படாமல், அவரை அழைத்துச் செல்ல முயன்றவர்களை தவிர்த்தவர், ‘ஒளிபவனா துறவி? – இம்மாதிரி இடங்களில் ஒளிர்பவனல்லவா துறவி!’ என்பது போலவும், ‘வாழ்த்தும் வசவும் எனக்கு சமமானதே’ என்பதை உணர்த்துவது போலவும், அதேவழியில் அவைகளை ஏற்றுக் கொண்டபடியே, சர்மாஜி வீட்டு வாசலுக்கும் வந்து சேர்ந்தார்.

காத்திருந்தது அந்த லக்ஷ்மிநாராயணர் உருவப்படம்!

அதை நோக்கி நின்றார் பெரியவரும். சர்மாஜியின் உறுத்தலுக்கு விடைபோன்ற அந்த வேளையில்…

வாசலில் லக்ஷ்மி நாராயணர் படத்தை வைத்துக்கொண்டு சர்மாஜி காத்திருக்க, பெரியவரும் வந்து சேர்ந்தார். உடனே சர்மாஜி பெரியவரை உபசரிக்கத் தொடங்கினார். படத்துக்கு பக்கத்திலேயே ஒரு பலகை போடப்பட அதில் பெரியவரும் ஏறி அமர்ந்தார்.

ஒன்று வைகுண்டபதியின் வரிவடிவத் தோற்றம்!

இன்னொன்று அவனுடைய மானுட ஞானத்தோற்றம்!

சர்மாஜியும் தம் குடும்பத்தோடு பெரியவரையும் படத்தையும் சுற்றிவந்து கீழே விழுந்து வணங்கிச் சேவித்தார்.

நான்கு ஆண்டுகாலம் அவர் செய்த உபன்யாசத் தவத்துக்கு வரமானது வீட்டு வாசல் தேடி வந்துவிட்டது. பெரியவரும் சுற்றி நிற்பவர்களை எல்லாம் விலகச் சொல்லிவிட்டு சர்மாஜியின் வீட்டை ஒரு பார்வை பார்த்தார்.

எளிமையான ஓட்டுக்கூரை வீடு!

இந்த வீட்டில் வாழ்ந்து கொண்டுதான் இதை நீ சாதித்தாயா?” என்று கேட்டு ஆசீர்வதித்தார்.

அதன்பின் வெகு சீக்கிரத்தில் அந்த வீடு, தன் முதுமைக்குரிய பலவீனங்களைப் போக்கிக் கொண்டு பலமானதாக மாறி, அதன்பின் பல நல்ல காரியங்களும் அந்த வீட்டில் அடுத்தடுத்து நடந்தன.

அதுமட்டுமல்ல; பத்ரிநாத், கேதார்நாத் என்று சர்மாஜி யாத்திரை சென்று வரவும் வாய்ப்பு உருவாகியது. பெரியவரே ஒரு ஸ்படிக மாலையை அணிவித்து அனுப்பி வைத்தார்.

மொத்தத்தில் சர்மாஜியின் கடைத் தேற்றத்துக்கு எதுவெல்லாம் தேவையோ, அதுவெல்லாம் நிகழத் தொடங்கியது.

அவ்வளவுக்கும் ஒரு ஆரம்பம்தான் காரணம்.

ஊரும் உலகும் வாழ்ந்திட, பாரதம் படிப்பது என்கிற அந்த சுயநலமில்லாத ஆரம்பம், படிப்படியாக சர்மாஜியை அவர் குடும்பத்தையே சுத்திகரித்து நமக்கும் ஒரு நல்ல உதாரணமாக மாறிவிட்டது.

பதினெட்டு புராணங்கள் ஒரு சேட்ஜி வாழ்வில் மறுமலர்ச்சி புரிந்தது என்றால், மகாபாரதம் சர்மாஜி வாழ்வில் அவரை தெய்விக அனுபவங்களுக்கு ஆட்படுத்தி ஞானியாக்கியது.

பின்னாலே, கண்களைத் திறந்துவிட்ட ஒரு குருநாதராய் நம் பெரியவர்!


- வரகூரான் நாராயணனால் தமிழில் டைப் செய்யப்பட்டது






Articles - 18000 ?????? ????? ??? ???????? ????????? ???? ????? ?????? ???????????? ??????? ? ???????? ???????! - Legendsinmusicpedia
-
 
சிவ பக்தி என்றால்

சிவ பக்தி என்றால் நினைவுக்கு உடனே வருவது சிவானந்தலஹரி தான். எப்படி ஆதி சங்கர பகவத் பாதாள் ஸௌந்தர்யலஹரியில் அம்பாளின் அழகை ஒவ்வொரு வரியிலும் படம் பிடித்துக் காட்டுகிறாரோ, அதுபோல் சிவானந்த லஹரியில் பக்தி ரஸத்தைப் படம் பிடித்துக் காண்பிப்பதுடன்
பக்தியில்லாதவனக்கும் பக்தி வரும் வகையில் நயம்பட சிவபிரானை நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார். ஸௌந்தர்யலஹரியில் அழகு மாத்திரம் அல்லாமல் மந்த்ரம், தந்த்ரம் யந்த்ரம் எல்லாமே நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார். நம் பெரியவாளுக்கு எல்லா ஸ்லோகங்களும் இஷ்டம் என்றாலும் தனது ஆதி குரு எழுதியவற்றிற்குத் தனி மதிப்புக் கொடுத்து வந்தார். அதிலும் இந்த இரண்டு க்ரந்தங்களும் அவருக்கு மிக இஷ்டமானவை.

மார்க்காவர்த்தித பாதுகா பசுபதேர் அங்கஸ்ய கூர்சாயதே
கண்டூஷாம் புனிஷேசனம் புரரிபோர் திவ்யாபிஷேகாயதே|
கிஞ்சித் பக்ஷித மாம்ஸஸேஷபலகம் நவ்யோபஹராயதே
பக்திம் கிம் கரோத்யஹோ வனசரோ பக்தாவதம்ஸாயதே||

பரமேச்வரனுடைய உடலுக்கு வழி நடந்து தேய்ந்த பாதுகை
புருவங்களின் மத்ய ப்ரதேசம் போல் ஆகிறது. த்ரிபுர ஸமாரம் செய்த ஸ்ரீ பரமேச்வரனுக்கு வாயில் ஏந்திய ஜலத்தால் செய்யப்படும் அபிஷேகம் கங்கா ஜலத்தால் செய்யப்படும் அபிஷேகம் போல் ஆகிறது. கொஞ்சம் உண்ணப்பட்டு மிகுந்திருக்கும் மாம்ஸத்தின் கபலம் புதிதாந நேவேத்யம் போல் ஆகிறது. வேடன் பக்தர்களுள் சிறந்தவன் ஆகிறான். என்ன ஆச்சரியம் !! ஈசனிடத்திலுள்ள பக்தி செய்யாது?கூச்சாயதே என்றால் தர்ப்ப முஷ்டி போல் பரிசுத்தமானது என்ற பொருள்.

ஸ்ரீபரமேச்வர பக்தியில் சிறந்தவரான கண்ணப்பனாயனார் வேடுவ குலத்தில் பிறந்தவர். அவர் பக்தியையே மேற்கண்ட ஸ்லோகத்தில் விளக்குகிறார். பாதுகையை இரு கண்களுக்கும் மத்தியில் அடையாளத்திற்காக வைத்து தன் கண்களைப் பிடுங்கி ஸ்ரீ பரமேச்வரனுக்கு அர்ப்பணிக்கிறார். வாய் ஜலத்தால் அபிஷேகம் செய்தார். அவர் தின்று ருசிபார்த்து மிகுந்த மாமிசத்தை ஸ்வாமிக்கு நிவேதனம் செய்தார். இருந்தாலும் ஈசன் இவை எல்லாவற்றையும் புனிதமாகக் கருதி ஏற்றுக்கொண்டார். புனித பக்தி எதைத்தான் செய்யாது?

சம்போ சங்கர உமாபதே சாம்ப சுந்தர பசுபதே
நந்தி வாஹனா பூஷணா சந்த்ர சேகரா ஜடாதரா
கங்காதாரா கௌரிமனோஹர கிரிஜாகாந்தா ஸதாசிவா

இன்று ப்ரதோஷம் அதுவும் ஸ்திரவார ப்ரதோஷம் மஹாப்ரதோஷம் எனக் கருதப்படும் புனித நாள் ஆகவே இதனை ப் பகிர்வு செய்கிறேன்.

சிவாலயத்தில் உள்ள நுழையும்போது நந்திகேசரை வணங்கி
நந்திகேச மஹாபாகா சிவ த்யான பராயணா
உமாசங்கர சேவார்த்தம் அனுஜ்ஞாம் தாது மர்ஹஸி||

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி அவரது அனுமதியின் பேரில்தான் சிவ தரிசனம் செய்யவேண்டும். சிவ தரிசனம் முடிந்து கோஷ்டஸ்வாமிகளை தரிசனம் செய்த பின் சண்டீசரை வணங்கி அவர் ஸதா ஈசன் த்யானத்தில் இருப்பதால் அவரிடம் விடைபெற்று நம் வருகையைப் பதிவுசிதுவிட்டு வரவேண்டும். அந்த சன்னிதியில்
நீலகண்ட பதாம்போஜ பரிஸ்புரத மானஸ சம்போ
சேவா பலம் தேஹி சண்டேஸ்வர நமோஸ்துதே என்ற ஸ்லோகத்தை ஆஃபீஸில் பதிவேட்டில் நம் வருகையைப் பதிக்கிறார்போல் பதிந்து விட்டு வரவேண்டும்.

சங்கரா சிவ சங்கரா குரு சங்கரா க்ருபா சங்கரா சந்த்ர சேகரா
காலநேத்ர த்ரிபுரஹாரி கௌரி சங்கரா! ஜய குரு சங்கர கிரிஜா ரமணா ஜய சர்வேச் வரா கிரிஜா ரமணா | பன்னக பூஷண பரம சிவா பார்வதி ரமணா ஸதா சிவா| ஜய ஜய சங்கர ஜய அபயங்கர பய பயங்கர கிரிஜா சங்கர திமி திமி திமி தக நர்த்தன் கேலா||

நம: பார்வதிபதயே... ஹர ஹர மஹாதேவா||




Source: Sage of Kanchi
Saraswathi Thyagarajan
 
மகாபெரியவா சொன்ன போஜராஜன் கதையும் நீதிய&

மகாபெரியவா சொன்ன போஜராஜன் கதையும் நீதியும்

மகாபெரியவா சொன்ன போஜராஜன் கதையும் நீதியும்

போஜன் என்பவர் ஓரூ மகாராஜா. அவருடைய சபையில் தான் காளிதாசர் என்ற கவி இருந்தார். இப்பொது நான் சொல்லப்போகிற கதையை அநேகமாக முக்கால்வாசிப்பேர் கேட்டிருப்பார்கள். இன்னும் ஐம்பது வருஷம் கழித்து இது ஒருத்தருக்காவது தெரியப் போகிறதோ இல்லையோ ?

அந்தக் காலத்தில் நல்ல கவிதையாக யாராவது ஒருத்தர் எழுதிவிட்டால் , போஜராஜன் அதை எழுதியவருக்கு ஓர் எழுத்துக்கு ஒரு லட்சம் என்று கொடுப்பானாம்; அக்ஷர லக்ஷம் கொடுப்பான். போஜராஜனிடமிருந்து அப்படிப் பணத்தை வான்கிகொண்டவர் காளிதாசர். இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சிநேகம்; பிரியம். அதிக சிநேகம் வந்துவிட்டால் அதிக விரோதமும் வந்துவிடும். அதிகப் பிரியம் இருந்தால் அதிகத் துக்கம் வந்துவிடும். அளவுக்கு மிஞ்சிப் பழகுகிற இடத்தில இது தெரியும். முன்பு எப்படி இருந்ததோ அதற்கு நேர்மாறாகப் போகும். அந்த மாதிரி போஜராஜனும் காளிதாசரும் மிகவும் அதிகமாகப் பழகி இரண்டு பெரும் சேர்ந்து எதையும் அனுபவிப்பது, கவிதாரசத்தை ஆராய்வது என்று உலகமே ஆச்சரியமடைந்து பாராட்டும்படியாக இருந்தார்கள். மனசோ வாக்கோ காயமோ எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான்.

இப்படி இருக்கும்போது போஜராஜனுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது. காளிதாசனுக்கு சாக்ஷாத் பரதேவதையின் கடாக்ஷத்தினாலே வாக்குப் பொங்கி வழிகிறது. அவன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் மரணம் அடைந்த பிறகு ஒரு சரம சுலோகம் எழுதுவான் அல்லவா ? அதைக் கேட்க நமக்குப் பிராப்தி இராதே; அது எப்படி இருக்குமோ? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர நான் எப்படிக் கேட்கமுடியும்?''என்ற எண்ணம் வந்துவிட்டது.

உடனே காளிதாசரை அழைத்து வரச் சொன்னான். "உன்னை எதற்காக இப்போது அழைத்தேன் தெரியுமா? நான் செத்துப் போய்விட்டேன் என்று வைத்துக்கொள். அப்பொழுது என் பேரில் என்ன எழுதுவாயோ அதை இப்போது எழுதி எனக்குக் கொடுக்கவேண்டும். அந்தச் சரம சுலோகத்தை நான் இப்போது கேட்க வேண்டும் 'என்று சொன்னான்.

மகாராஜா, இது என்ன விபரீத புத்தி ? இதைச் செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவு போடுகிறீர்களே. எனக்கு என்ன தெரியும் ? நான் ஓர் ஆட்டு இடையனாக இருந்தேன்.அவள் எதையோ போட்டாள் .. ஆட்டுப் புழுக்கை என்று தூ தூ என்று துப்பியவன்; சாக்ஷாத் அம்பாளுடைய கடாக்ஷத்தினால் அல்லவா இன்றைக்கு இந்த வாயிலிருந்து கவிதை பிறந்து கொண்டிருக்கிறது? என் வாக்கினாலே ஒன்று பாடினால் அப்படியே நடந்துவிடும்; அதனால் நான் பாட முடியாது. "

" நீ பாடவில்லை என்றால் எனக்கும் உனக்கும் முகாலாபனம் கிடையாது. ராஜ உத்தரவைத் தட்டினால் நீ ஒரு பிரஷ்டன் ஆகிவிடுவாய். பிரஷ்டன் அப்புறம் இந்த ராஜ்யத்தில் இருக்க முடியுமா? "

"என்னோடு முகாலாபனம் பண்ணாவிட்டாலும் பரவாயில்லை. தங்கள் உத்தரவை மீறிய பிரஷ்டனாக நான் எங்காவது போய்விடுகிறேன். இந்தத் தேசமும் கவிகளும் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நான் பிரஷ்டனாகத் தான் போகவேண்டும். அதுதான் உங்கள் உத்தரவும் "என்று சொல்லிவிட்டு சபையை விட்டே காளிதாசர் அந்த ராத்திரியே தேசத்தை விட்டே எங்கோ கிளம்பி போய் விட்டாராம்.

காளிதாசரைப் பொழுது விடிந்தால் காணவில்லை. ராஜாவுக்கு மிகவும் துக்கம். காளிதாசர் எங்கே என்று கண்டுபிடித்துவிடவேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளும் ராஜ்யத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையைத் தெரிந்துகொள்ள ராஜாவே மாறுவேஷம் போட்டுக்கொண்டு போய்விடுவான். இப்போது போஜராஜன் காளிதாசரைக் கண்டுபிடிக்க மாறு வேஷம் போட்டுக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.


'காளிதாசன் என்ற உருவத்தில் நாம் இந்தத் தேசத்தை விட்டு எங்கே போனாலும் ஜனங்கள் நம்மைக் கண்டு கொண்டு விடுவார்கள் "என்று எண்ணின காளிதாசர் அந்த ஊரை விட்டுக் கிளம்பும்போது பைத்தியக்காரப் பிச்சைக்காரனைப் போல் , சந்நியாசியைப் போல் , வேஷம் போட்டுக் கொண்டு ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்தார். போஜ ராஜனோ குடு குடுப்பைக்காரன் வேஷத்தில் ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தான். மற்ற விஷயங்களில் எல்லாம் இவர்கள் இரண்டு பெரும் எப்படி ரசிகர்களோ அது மாதிரி வேஷம் போட்டுக் கொள்வதிலும் சமர்த்தர்கள் போல் இருக்கிறது!

ஒரு நாளைக்கு இவர்கள் இரண்டு பெரும் சந்திக்கும் சந்தர்ப்பம் வந்து இட்டது. காளிதாசர் பைத்தியக்கார சந்நியாசி வேஷம் போட்டுக் கொண்டிருந்தார் அல்லவா? அந்த வேஷத்திற்குத் தகுந்தாற் பொலநடக்க வேண்டும் என்று எண்ணி ஒரு கசாப்புக் கடைக்குள் நுழைந்து தம்முடைய தண்டத்தினாலே மாமிசத்தைத் தொட்டு, "என்ன விலை? "என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதை இந்தக் குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் இருக்கும் போஜராஜன் பார்த்தான். 'வேஷமோ சந்நியாசி. இவனோ மாமிசம் விலை கேட்கிறான். இது என்ன ஆச்சரியமாக இருக்கிறதே!''என்று மெல்ல அவனிடம் போய்

"சந்நியாசியே, மாமிசம் சாப்பிடலாமா?"என்று கேட்டான்.

தன்னைக்கேட்பவன் போஜ ராஜன் என்பது காளிதாசருக்கும் தெரியவில்லை.


"கள்ளைக் குடிக்காது போனால் மாமிசம் ஜரிக்காது என்று அவர் ஏதோ பதிலுக்குச் சொன்னாராம். உடனே போஜராஜன், "நீயோ சந்நியாசி. கள்ளும் மாமிசமும் எல்லாம் சாப்பிடலாமா? : என்று கேட்டான்.


"" பிரஷ்டனுக்கு வேறு என்ன கதி இருக்கிறது?" என்று காளிதாசர் பதில் சொன்னவுடன் போஜராஜனுக்கு, 'அடேடே! இவன் தான் காளிதாசன் போலிருக்கிறது !"என்று தோன்றிவிட்டது. அவர்கள் இருவரும் சிநேகமாக இருந்தபோது கடைசியாகப் போஜன் , 'நான் ராஜா. நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் பிரஷ்டன் 'என்று சொல்லிவிட்டோமே 'என்று நெஞ்சை அரித்துக் கொண்டிருந்தது . காளிதாசன் இவ்வாறு கேட்கவும் 'இவன்தான் காளிதாசன் 'என்று போஜன் தெரிந்து கொண்டுவிட்டான்.

'இவ்வளவு தூரம் நீ என்னைக் கேட்கிறாயே? நீ எந்த ஊர்? "என்று குகுடுப்பைக்காரனைப் பார்த்துப் பிச்சைக்காரச் சந்நியாசி கேட்டானாம். போஜன் பொய் சொல்லவில்லை. "நான் இருக்கிறது தாரா நகரம். அங்கிருந்துதான் வருகிறேன் "என்று சொல்லிவிட்டான் போஜரஜாவின் நகரம் தாரா நகரந்தானே? அதனாலே, "போஜராஜா சௌக்கியமா ? "என்று அவரை காளிதாசர் கேட்டார்.. 'இதுதான் சமயம், இவன் வாயினாலேயே சரம ஸ்லோகத்தைக் கேட்க "என்று போஜராஜவுக்குத் தோன்றிவிட்டது.

உடனே கொஞ்சம் அழுகிறாற்போல் அழுதுவிட்டு "அதுவா? அதை ஏன் கேட்கிறாய்? அவர் செத்துப்போய் இன்றைக்குத்தான் ஆறாம் நாள் "என்று மிக்க துக்கத்தோடு சொல்வது போலச் சொல்லிவிட்டான். உடனேயே காளிதாசர் ஒரு சுலோகம் பாடிவிட்டார்.

அத்ய தாரா நிராதாரா நிராலம்பா சரஸ்வதீ !
பண்டிதா: கண்டிதாஸ் ஸர்வே போஜராஜே திவம் கதே!!


போஜராஜன் சொர்க்க லோகத்திற்குப் போனவுடன் தாரா நகரம் 'நிராதாரா 'வாகப் போய்விட்டது. இதுவரையிலும் அதற்கு ஆதரவாகப் போஜன் இருந்தான். இப்போது தனக்கு ஆதரவாக இருந்த ராஜனை இழந்து நிராதரவாகப் போய்விட்டது நகரம்.

இந்தப் பாட்டைக் காளிதாசர் சொன்னாரோ இல்லையோ , அந்தக் குடுகுடுப்பைக்காரன், போஜராஜா அப்படியே செத்து விழுந்துவிட்டான். "ஐயோ, நீதானா போஜராஜன் ? நான் சரம சுலோகம் பாடமாட்டேன் என்றேனே ! கேட்டாயா? உன் பிடிவாதத்தினால் இறந்து போய்விட்டாயே! "என்று கவி மிகவும் துக்கப்பட்டாராம். அவருடைய துக்கத்தைச் சகிக்கமாட்டாமல் சரஸ்வதி ஆவிர்ப்பவித்து, "நடந்தது நடந்தது தான். முன்பு பாடியதை வேண்டுமானால் மாற்றிப்பாடு. உனக்காக அவனுக்கு ஒரு மூன்றேமுக்கால் நாழிகை உயிர் கொடுக்கிறேன். வாய் வார்த்தையாவது பேசிக்கொள்ளுங்கள் "என்று அனுக்கிரகம் செய்தாளாம். காளிதாசர் தாம் முன்பு பாடிய பாட்டை அப்படியே திருப்பி,

அத்ய தாரா ஸதாதாரா ஸதாலம்பா சரஸ்வதீ !
பண்டிதா மண்டிதாஸ் ஸர்வே போஜராஜே பவம் கதே!!


என்று பாடினான். போஜராஜன் கண்ணை விழித்து எழுந்தானாம். காளிதாசர் போஜராஜனைக் கட்டிக்கொண்டு, "ராஜா, இப்படிச் செய்துவிட்டீர்களே, இன்னும் மூன்றேமுக்கால் நாழிகைகள் தானே நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்!" என்று துக்கப்பட்டபோது , "துக்கப்படாதே . நன் இறந்துபோனால் என்ன ? இறந்து போவது ஒரு துக்கமா? இறந்து போவதற்குள் உன் வாக்கிலிருந்து வந்த அமிருதத்தைக் கேட்டேனே! அந்த ஒரு பாக்கியம் கிடைத்தது போதாதா ? இன்னும் மூன்றே முக்கால் நாழிகை இருக்கிறது. கவலைப்படாதே . நம்முடைய நினைவாக ராமசரித்திரத்தையே அந்தக் காலத்திற்குள் பாடிவிடுவோம் என்று சொன்னானாம். ஏழு நாள்தான் இருக்கின்றன என்றவுடன் பரீட்சித்து பாகவதத்தை கேட்டாற்போல , போஜராஜன் மூன்றே முக்கால் நாழிகைதான் இருக்கின்றன என்றவுடன் ராமசரிதத்தைப் பாடலாம் என்று நினைத்தான்.


உடனே இருவரும் ராமாயணத்தைப் பாடினார்கள். 'கொஞ்ச நாழிகை கிடைத்தாலும் போதும். அதற்குள் பகவத் ஸ்மரணை செய்து, தாபத்தைப் போக்கிக் கொண்டு ஜன்ம நிவிருத்தியைத் தேடிக்கொள்ள வேண்டும் 'என்று போஜராஜன் காளிதாசரோடு அப்படி ராமாயணத்தையே சுலோகங்களாகவும் வசனங்களாகவும் பாடி முடித்தானாம். இதற்கு 'போஜ சம்பூ 'என்று பெயர்.

போஜராஜன் கதையிலிருந்து நமக்கு என்ன நீதி கிடைக்கிறது ? உயிர்போக மூன்றே முக்கால் நாழிகைதான் இருக்கிறது என்றாலும் அதற்குள் பகவானைப் பாடலாம், அவனுடைய நாமத்தை ஜபிக்கலாம் என்று அவன் பாடிக் காட்டியிருக்கிறான் . நமக்கு எவ்வளவு ஆயுசு என்று சொல்லமுடியாது. ஒரு நாளைக்கூட,ஒரு மணியைக் கூட, ஒரு நிமிஷத்தைக்கூட நாம் வீண்படுத்தக்கூடாது . ஒரு நிமிஷம் கிடைத்தாலும் போதும். பகவன் நாம ஸ்மரணை செய்ய வேண்டும். அவனுடைய ரூப தரிசனம் பண்ண வேண்டும். ஒரு காரியத்தைச் செய்வோம். இன்னொரு காரியத்தை ஆரம்பிப்பதற்கும் இடையில் ஒரு வினாடி கிடைத்தாலும் போதும்

பகவானை நினைக்கலாம். நாம் அப்படிச் செய்யவேண்டும். எப்போதும் நமக்குப் பகவான் நினைவு இருக்கவேண்டும். இதைப் பரீக்ஷித், போஜராஜன் இரண்டு பேரும் பிரத்தியக்ஷமாக காட்டிப் போயிருக்கிறார்கள். போஜராஜன் தனக்குக் கிடைத்த மூன்றே முக்கால் நாழிகையை வீண் பண்ணாமல் செய்த காரியம் ஒன்றுதான் இன்றைக்கும் நாம் அவனை நினைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது.
நாம் எல்லோரும் உஷத் காலத்தில் எழுந்தவுடன் குளிர்ந்த பெருமாளை, கருமேகம் போல நீருண்ட மேனியுடைய கார்மேக வர்ணனைக் குளிர்ந்த உள்ளத்தோடு ஸ்மரணை செய்வோம்.

"நாராயணாய நலிநாயத லோசநாய
நாமாவசேஷித மஹாபலி வைபவாய!
நாநா சராசர விதாயகஜன்மதேச -
நாபீபுடாய புருஷாய நம; பரஸ்மை !!



Source: Sage of Kanchi

Surya Narayan
 
கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்!

கர்வத்தை அழிக்கும் ராமமந்திரம்!


68921_322016328007657_5280842611842532256_n.jpg


சிலர் பக்திப்பூர்வமாக, 'ராமா' என்பர். வேறு சிலரோ, ஏதாவது தவறு செய்து விட்டால், தலையில் அடித்தபடியே, 'ராமா ராமா' என்பர். தொனி தான் மாறுபடுமே தவிர, ராம மந்திரத்தை எப்படிச் சொன்னாலும், அதற்குரிய பலன் கிடைக்கும்; குறிப்பாக, ராம மந்திரம் கர்வத்தை அழிக்கும் சக்தியுடையது.

ராமாயணத்தில் பலவகை உண்டு. அதில் ஆனந்த ராமாயணம் என்பதும் ஒன்று. இதில் ஒரு காட்சி —
இலங்கையில் சீதையை சந்தித்த பின், திரும்பிக்கொண்டிருந்த ஆஞ்சநேயர், வானில் பறந்தபடியே நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அசை போட்டார். கடல் தாண்டிச் சென்றது, ராவணனின் மகனைக் கொன்றது, ராவணனையே நேரில் சந்தித்தது, இலங்கைக்கு தீ வைத்தது, வடிவங்களை சுருக்கியும், நீட்டியும் சீதையைக் கண்டுபிடித்தது போன்ற தான் செய்த செயல்களை நினைத்த வுடனேயே கர்வம் அவரைத் தொற்றிக் கொண்டது. 'என்னை விட பலசாலி யார் உண்டு?' என்று தன்னைத்தானே பாராட்டிக்கொண்டே பறந்தார்.

வழியில் தாகம் எடுத்தது. மகேந்திர கிரி என்னும் மலை அப்போது கண்ணில் பட்டது. அந்த மலையில் நீர்நிலை ஏதாவது இருக்கலாம் என வட்டம் போட்டு பார்த்தார்; கண்ணில் ஏதும் படவில்லை. ஓரிடத்தில் ஒரு முனிவர் இருப்பது புலப்பட்டது. அவர் முன்னால் இறங்கியவர், தண்ணீர் இருக்குமிடத்தைக் காட்டும்படி கேட்டார்.

முனிவர் பேசவில்லை; ஓரிடத்தை நோக்கி கையைக் காட்டினார். ஆஞ்சநேயர் அவர் முன்னால், தன்னிடமிருந்த ராமனின் முத்திரை மோதிரம், சீதையின் சூடாமணி ஆகியவற்றை வைத்துவிட்டு போனார். அப்போது ஒரு குரங்கு வந்து, அங்கிருந்த சூடாமணியையும், முத்திரை மோதிரத்தையும் அருகில் இருந்த முனிவரின் தீர்த்தச்செம்புக்குள் போட்டுவிட்டது.

ஆஞ்சநேயர் திரும்பி வந்து பார்த்தார்; பொருட்களைக் காணாமல் முனிவரிடம் கேட்டார். முனிவர் செம்பை நோக்கி கையை நீட்டினார். அதை ஆஞ்சநேயர் பார்க்க அதனுள் ஏராளமான முத்திரை மோதிரங்கள் கிடந்தன.

'இவை எப்படி இதனுள் வந்தன? எல்லாம் ஒன்றுபோல் உள்ளதே... இதில் என்னுடையதை எப்படி கண்டுபிடிப்பேன்?' என்றதும், முனிவர் பதிலளித்தார்.

'வானரனே... இதற்கு முன் பலமுறை பெருமாள், ராமாவதாரம் எடுத்துள்ளார். அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் வருவார்; என் முன்னால் வைப்பார். என் தீர்த்தச் செம்பிற்குள் அதை ஒரு குரங்கு தூக்கிப் போட்டு விடும். இவை எல்லாமே ராமனுக்குரியவை தான்...' என்றார்.

ஆஞ்சநேயர் வெட்கிப்போனார். 'அப்படியானால், பல யுகங்களில் பல ஆஞ்சநேயர்கள் இதே சாதனையைச் செய்துள்ளனரே... நான் மட்டுமே செய்ததாக கர்வம் கொண்டேனே...' என வருந்தினார்.

எவ்வளவோ முயன்றும் மோதிரத்தைக் கண்டுபிடிக்க இயலாமல், ஊர் திரும்பினார். ராமனிடம் தன் அனுபவத்தைச் சொல்லி வருத்தப்பட்டார்.

அப்போது ராமனின் அருகில் அதே தீர்த்தச் செம்பு இருந்தது; உள்ளே பார்த்தால் அனுமன் கொண்டு சென்ற முத்திரை மோதிரம் கிடந்தது. 'இதெப்படி இங்கே வந்தது?' என்றதும், 'ஆஞ்சநேயா... என் பக்தனான உன் மனதில் கர்வம் தோன்றியவுடனேயே நான், நீ வந்த பாதையில் முனிவர் போல் அமர்ந்திருந்தேன். உன் கர்வத்தைப் போக்கவே இவ்வாறு செய்தேன். 'ராம' மந்திரத்தை தொடர்ந்து சொன்னதினால் தான் , உன் கர்வம் நீங்கிற்று!' என்றார் நாமும் நமது கர்வம் நீங்க ராம நாமம் சொல்வோம்.



Sage of Kanchi

Hindukkalin Prasad
 
சித்த சுத்திக்கான வழி

சித்த சுத்திக்கான வழி


அன்னம், வஸ்திரம், நிழல் இவற்றுக்காக நாம் ஒரொரு காரியத்தைச் செய்து கொண்டிருப்பதனால் துக்கப்படுகிறோம். துக்கம் போய் , சதா ஆனந்தமாக இருக்கவேண்டுமென்றால் நாம் செய்கிற காரியங்களை எல்லாம் முதலில் ஈசுவரார்ப்பணம் செய்ய வேண்டும். ஈசுவரனுடைய அனுக்கிரகம் கிடைத்து விட்டால் அப்புறம் நாம் ஒரு காரியமும் செய்யாமல் ஆனந்தமாக இருக்கலாம். ஈசுவரனுடைய அனுக்கிரகத்தை அடைகிற வரையிலும் இம் மூன்றையும் நம்மால் விட்டு இருக்க முடியாது. அதற்காகப் பல காரியங்களைச் செய்யும்படிதான் இருக்கும். ஆனால் தர்மமான முறையில் செய்ய வேண்டுமென்றால் ஈசுவர பக்தி எப்போதும் இருக்க வேண்டும். அதற்காக, 'நான் பக்தி மாத்திரம் பண்ணிக் கொண்டே இருக்கிறேன் ' என்றால் பிரயோஜனம் இல்லை.

ஓர் எஜமானனிடம் இரண்டு ஆட்கள். ஒருவன் சதா எஜமானனை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருக்கிறான். மற்றொருவன் எஜமானனிடம் அன்பில்லாமல் தன் கடமை என்று மாத்திரம் அவனுக்கு வேண்டிய வேலைகளைச் செய்துகொண்டே இருக்கிறான். எஜமானன் முட்டாளாக இருந்தால் தன்னை எப்போதும் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருக்கிற வேலைக்காரனிடம்பிரியமாக இருப்பான். மிகவும் புத்திசாலியாக இருந்தாலோ, அவனுக்கு, கூலிக்காக வேலை செய்து கொண்டிருக்கிரவனிடமும் பிரியம் இருக்காது; சதா ஸ்தோத்திரம் பண்ணுகிறவனிடமும் பிரியம் இருக்காது. பக்தியோடு, அவனுடைய காரியம், தன் கார்யம் என்று பேதம் இல்லாமல் எல்லாம் அவனுக்காகவே - ஒரு குறையும் இல்லாமல், பிரியமாகக் காரியங்கள் செய்து கொண்டிருப்பவனிடம் அதிக வாத்சல்யம் வைப்பான்.

அப்படி ஈசுவரன் ஒரு நல்ல எஜமானன். அவன் புத்திசாலி, அவனை நாம் எப்போதும் ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் திருப்தி செய்ய முடியாது. அவன் சொன்ன வேலையைச் செய்யாமல் அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தால் அவன் சந்தோஷப்பட்டு, நமக்கு அனுக்கிரகம் செய்ய மாட்டான். நாம் ஸ்தோத்திரம் பண்ணி அவனுக்கு ஆகவேண்டியதில்லை. அது அவனுக்குக் கௌரவமும் இல்லை; அகௌரவமும் இல்லை. அம்மாதிரியே நாம் கர்மாக்கள் செய்து அவனுக்கு ஆக வேண்டியதில்லை. நம்முடைய சித்த சுத்திக்காகத்தான் ஈசுவரனே அனேக கர்மாக்களை விதித்திருக்கிறான்.

அதாவது நித்தியப்படி ஸ்நானம், சந்தியை, ஜபம், ஹோமம், தேவபூஜை , ஆதித்தியம் - இப்படி ஆறு கர்மாக்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த ஆறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அவற்றில் எல்லாம் அடங்கிவிடுகின்றன. ஈஸ்வரானுக்கிரகம் நமக்கெல்லாம் கிடைத்து விடும்.

ஷட் கர்மாணி திநே திநே !

என்றபடி ஒவ்வொரு நாளும் பண்ணவேண்டும்.

ஸ்நானம் எவ்வாறு செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிறதோ அப்படிப் பண்ணினால்தான் ஆத்மசுத்தி ஏற்படும். வெறும் சோப்பை மட்டும் தேய்த்தால் உடல்தான் சுத்தி ஆகும். அவரவர்களுக்குச் சில மந்திரங்கள் இருக்கின்றன. ஒன்றும் தெரியாது என்றால், 'ராம கிருஷ்ண 'என்றாவது சொல்லிக் கொண்டு ஸ்நானம் பண்ண வேண்டும்.

- மகா சுவாமிகள் அருளுரை --


Sage of Kanchi

Surya Narayan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top