• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Why only in this Country – Part II

Why only in this Country – Part II

One does not deny that there was scientific advancement in other nations. They had a system of defense and they carried on trade and commerce. But the spirit of rivalry vitiated all walks of life in these lands. No community had an occupation entirely to itself. Everyone could compete with everyone else for every kind of job. In our country people had their own hereditary calling and they were assured of their livelihood. This meant peace and stability in society. We must remember that it was because our people were bound together in their unique varna system that they excelled in culture and character, not to mention the fact the stability afforded by the system facilitated the birth of countless numbers of individuals who exemplified all that is noble in mankind. In contrast, in the absence of a similar institution, jealousy and rivalry became disturbing factors in the life of other countries.

Our nation should have witnessed many a revolution if, as claimed by our social reformers, the people were kept suppressed in the varna system. However, the term "social revolution" was new to us until recently. It is only after reading a about the French Revolution, the American Revolution and the Soviet Revolution that we have known that compulsions would arise for great masses of people to be plunged in unrest. The common people in other countries were again and again involved thus in revolutionary movements. But we note- and this is important - that no revolution has achieved anything of permanent value. If there is an upsurge today there is another fifty or a hundred years later. We have to conclude from this that people abroad have remained discontented most of the time.

Today's situation is all too obvious to be stated. The whole world is in turmoil. Indiscipline, strikes, social upsets and savage orgies of violence have become the order of the day. It is only in a country like the Soviet Union where there is a dictatorship that comes down heavily on those who voice any opposition to it that there is hardly any unrest. However, it is said that the volcano of unrest might erupt any time there. Now and then an intellectual or writer escapes from that land to tell us about the tyranny from which people suffer there. Obviously in the Soviet Union too people are not happy and contented.

India has seldom had an autocracy or dictatorship of this type. It would not have taken the strides it did in the sciences and arts had it been a slave country or a country ruled by despots. people here never lamented before others that they were kept suppressed. All our works of knowledge and wisdom, all our arts and all our temples would not have been possible if the mind was not enabled to unfold itself in an atmosphere of freedom. It would also be preposterous to suggest that a majority of the common people were victims of superstition and delusion and lived in fear of witchcraft. You could speak thus of the tribes living in the forests of Africa or South America. In these places the priest was like a king. He would be fearsome even to look at and he was able to impress his tribesmen that he could do anything with his utterances(his mantra-like formulae). He had also the power to punish people. Such was not the case in our country. People here were fairly knowledgeable irrespective of the JATIs to which they belonged and they were devoted and advances in matters pertaining to the Self.

If you go through the Puranas (including the Tamil Periaypuranam) You will learn that there were great men in all JATIs. Imperial rulers like Chandragupta and ministers like Sekkizhar belonged to the fourth varna. Our priests had no authority to punish anyone, According to the canonical texts the priest must be a man of spotless character and, if he commits a wrong, he must punish himself. If a white man happens to come into physical contact with a black man, the latter is taken to task. But if a priest in our country comes into similar contact with an untouchable, it is he (the priest) who is enjoined to have a bath. Let us leave aside for the moment the question of untouchability. The point to note is that it was not by inspiring fear, by the threat of punishment or by suppression, that such customs were practised. A civilization like ours that is glorified all over the world could not have flourished if some sections of the people were suppressed or were victims of deception.

Jaya jaya sankara, hara hara sankara !

Source: Voice of Paramacharya – Hindu Dharma.
 
உபவேதங்கள் எதற்கு?

உபவேதங்கள் எதற்கு?

‘ஸாங்கோபாங்கமாக’ச் செய்வது என்று ஒரு வார்த்தை அடிபடுகிறது. ஒரு அம்சமும் விடமாமல், பூராவாக எந்த ஒன்றைச் செய்வதையும் ‘ஸாங்கோபாங்கம்’ என்கிறோம். ‘ஸ அங்க உப அங்க’ என்பதே ஸாங்கோபாங்கம். எல்லா அங்கங்களுடனும் துணை உறுப்புக்களுடனும் கூடியது என்று அர்த்தம். நம் மதத்துக்கு மூலமான வேத வித்யையை வைத்தே இந்த ‘ஸாங்கோபாங்கம்’ என்பது எல்லா விஷயங்களுக்கும் பரவியிருக்கிறது.

வேத மதம் ஒரு வேதாமூர்த்தி என்று வைத்துக் கொண்டால் அதற்கு ரிக், யஜுஸ், ஸாமம், அதர்வம் என்னும் நாலு வேதங்களின் ஸம்ஹிதைகள், ப்ராம்மணங்கள், ஆரண்யகங்கள், இவற்றில் முடிவாய் வரும் உபநிஷத்துக்கள் ஆகியவைதான் முக்யமான உடம்பு மாதிரியும் அதற்குள் எங்கும் பரவியிருக்கிற உயிர் மாதிரி, ரத்தம் மாதிரியும். ஆக நாலு வேதமே முக்யமான ரூபம். இந்த ரூபத்துக்கு ஆறு அங்கங்கள். சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பன இந்த ஆறு அங்கங்களோடு கூடின நான்மறையை ‘ஸாங்கமானது’ எனலாம். ‘ஸாங்க உபாங்கத்தில்’ உப அங்கமாக, துணை உறுப்பாக இன்னம் நாலு இருக்கின்றன – அவற்றுக்கு மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்த்ரம் என்று பெயர்.

நாலு வேதம் ப்ளஸ் ஆறு அங்கம் ப்ளஸ் நாலு உபாங்கங்களைச் சேர்த்து வேதமத தேவதையின் ஸாங்கோபாங்கமான பூர்ண வடிவமாகக் கொண்டிருக்கிறோம். இப்படி மொத்தம் வருகிற பதினாலையும் ‘சதுர்தச வித்யா’, ‘பதினாலு வித்யை’என்று சொல்வது வழக்கம்[SUP]*[/SUP]



உப அங்கமாக இருப்பதோடு உபவேதமாகவே மேலும் நாலைக் கூட்டிப் “பதினெட்டு வித்யைகள், அஷ்டாதச வித்யா ஸ்தானங்கள்” என்று சொல்வார்கள் இந்த நான்கு உபவேதங்கள் ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் என்பவையாகும்.



இந்த நாலு ஸமய ஸம்பந்தமாக (ரிலிஜியஸாக) , தத்வ விசாரணையாக (ஃபிலஸாபிகலாக) தெரியாமல் நடைமுறை வாழ்க்கை (ப்ராக்டிகல் லைஃப்) தப்பு தண்டா இல்லாமல் தனி மநுஷ்ய ரீதியிலும் ஸமூஹ, தேச, லோக ரீதியிலும் நடப்பதற்கு உதவுவதாகவே உள்ளன. அதனால் தான் பதினாலு தர்ம ஸ்தானங்களில் இவற்றைச் சேர்க்காமல் – அதாவது ஆத்மார்த்தமாக நேரே ஈடுபடுத்தும் தர்ம நூல்களில் சேர்க்காமல் – அறிவைத் தரும் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் மட்டுமே சேர்ந்திருக்கிறார்கள்.

இவற்றுக்கு நீதிகளைச் சொல்லும் சட்ட நூல்களான தர்ம சாஸ்த்ரங்களுக்குள்ள அதாரிடி (அதிகாரத்தன்மை) கிடையாது. பலவிதமான விஷயங்களை மட்டும் தெரிவிப்பதால் வித்யா ஸ்தானமாக மாத்திரம் மதிக்கப்படுகின்றன.


ஆனாலும் இவற்றுக்கு வேதத்தின் அங்கம், உபாங்கம் என்று பெயர் கொடுப்பதைவிட உசத்தியாக, இதில் ஒவ்வொன்றுமே ஒரு துணை வேதம், supplementary வேதம் என்று பொருள்பட “உப வேதம்” என்று தெரிய பெயர் கொடுத்திருக்கிறது. ஏனென்றால் தர்மத்தின் அடிப்படையில் நின்றுகொண்டு இந்த நாலையும் ‘ப்ராக்டிகல் லைஃபி’ல் நடத்தினால் அதனால் ப்ராக்டிகல் லைஃபே ஐடியல் லைஃபாக மலர வழி ஏற்படும். அதாவது நாம் வாழ்கிற முறை எப்படி வாழ்ந்தால் உசந்த மநுஷ்ய லக்ஷணத்துக்கு உரிய உத்தமமான உபாயமாகுமோ அப்படி ஆகிவிடும். அப்படி ஆனால் அப்போது இந்த நடைமுறை வாழ்க்கையே, இம்மை என்பதே மறுமை என்கிற சாச்வத ஸெளக்யத்தை ஸம்பாதித்துத் தர வழி பண்ணுவதாகிவிடும். முடிவிலே பரமாத்மாவிடமே கொண்டு போய்ச் சேர்க்கும் படியாக வாழ்க்கைப் பாதையை ராஜ மார்க்கமாகப் போட்டுக் கொடுத்தவிடும்.



உங்களுக்கே இந்த நாலு என்ன என்பது புரிந்திருக்கும். ஆயுர்வேதம் என்பது வைத்ய சாஸ்திரம். தநுர்வேதம் யுத்த சாஸ்திரம். காந்தர்வ வேதம் என்பது ஸங்கீதம், நாட்டியம், நாடகம் முதலிய லளித கலைகள். அர்த்த சாஸ்திரம் என்பது பொருளாதாரத்தை அங்கமாகக் கொண்ட அரசியல்.

இந்த நாலில் ஒவ்வொன்றாலும் ஆத்மாவுக்கு எத்தனை ஹானி பண்ணிக் கொள்ளலாமோ அத்தனையும் பண்ணிக் கொள்வதுதான் நமக்குக் கண்கூடாகத் தெரிவது.

வைத்ய சாஸ்திரத்தில் உடம்பைப் பேணிப் பேணித்தான் தேஹாத்ம புத்தியை விட்டுக் கொஞ்சங்கூட மேலே போகாமல் நிற்கிறோம்!யுத்தத்தால் ஆடம் பாம் (ப்) , ஹைட்ரஜன் பாம் (ப்) இவற்றைப் போட்டுப் பண்ணின அக்ரமம் போதாது என்று ஒவ்வொரு Power Block -க்கும் இவற்றைக் காட்டிக் காட்டியே Cold War என்று அத்தனை ஜனங்களையும் கிலியிலும், பரஸ்பர ஸந்தேஹத்திலும், த்வேஷத்திலும் பிடித்து வைத்திருக்கிற அக்ரமத்தைப் பார்த்து வருகிறோம். பாட்டும் கூத்தும் மநுஷ்யனை மிருகத்தின் மட்டத்துக்குக் கொண்டு விடுவதாக எத்தனை cheap -ஆகியிருக்கிறதென்பதையும் அநுபவித்து வருகிறோம். அரசியலா? அதைப்பற்றி நான் வாய் திறக்க வேண்டாம்.



இப்படி எதெல்லாம் பாரமார்த்திகத்துக்கு ரொம்பவும் விக்னம் உண்டாக்கும் ஹேது உள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் விட்டு ஓடு என்று சொல்லாமல், “அதுகளையும் சுத்தப்படுத்து. அதுகளையும் தர்மத்தில் ஊறப்போடு!எத்தனை களிம்பையும் பாசியையும் புளியிலும் எலுமிச்சைச் சாற்றிலும் ஊறப் போட்டு அகற்றிவிடுகிற மாதிரி இவற்றையும் தர்ம வழியால் சுத்தப்படுத்திப் பளிச்சென்றாக்கி, தர்மத்துக்காகவே பிரயோஜனப்படுத்து, அழுக்குக் கண்ணாடி படத்தை மறைக்கிறதென்று கண்ணாடியை எடுத்தவிட்டால் படம் கெட்டுத்தானே போகும்?அதனால் அழுக்கை மட்டும் துடை. கண்ணாடியை எடுத்துவிட்டால் படம் கெட்டுத்தானே போகும் அதனால், அழுக்கை மட்டும் துடை. கண்ணாடியை எடுத்துவிடாதே. சரீரமும் அதற்கான வைத்யமும், யுத்தமும், பொழுது போக்குகளும், ராஜ நீதியும் ஆத்மாவை மறைக்கிற அழுக்குக் கண்ணாடியாக இருக்கிற நிலையை மாற்றி அவற்றையே ஆத்மாவை நன்றாக ரக்ஷித்து, பிரகாசமாகக் காட்டுகிற கண்ணாடியாக மாற்று”என்றே இதற்கு உபாயமாக நம் முன்னோர்கள் நாலு உபவேதங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.



‘அத்வைதா, மாயா’ என்று சொல்லிக்கொண்டு ஹிந்து மதம் நடைமுறை வாழ்க்கையையே கவனிக்காமல், பேடி மாதிரி அதிலிருந்து தப்பி ஓடச் சொல்கிறது என்று இதர மதஸ்தர்கள் சொல்வதுண்டு. இதைவிடத் தப்பான அபிப்ராயம் இருக்க முடியாது.

அவர்களுடைய மதங்களையெல்லாமும்விட மிக மிக விரிவாகவும் ஆழமாகவும் நடைமுறை வாழ்க்கையின் ஸகல அம்சங்களையும் அலசி அது ஒவ்வொன்றிலும் ஒரு ஜீவன் எப்படிப் புகுந்து புறப்பட்டு தீரனாக ஜயசாலியாக வரவேண்டும் என்று விஸ்தாரமாக வழிகாட்டுவது நம் மதம்தான். அவதாரத்தின் உச்சியிலேயே ராமனையும் கிருஷ்ணனையும் வைத்துக் கொண்டு இன்றைக்கும் நாம் கொண்டாடுவது அவர்களுக்கே (இதர மதஸ்தர்களுக்கே) தெரியும். ராமனும் கிருஷ்ணனும் நடைமுறை வாழ்க்கையை விட்டு ஓடவில்லை; அதில் பூரா பூரா ஈடுபட்டு நடத்தினவர்கள் தான் என்று தெரியும்;’ இதை விட்டுவிட்டு ஓடிப்போய் மூக்கைப் பிடித்துக்கொள்கிறேன்’என்று பிடிவாதம் பண்ணின அர்ஜுனனை பகவான் இழுத்துப் பிடித்து உட்கார வைத்து, காண்டீவத்தைக் கையில் கொடுத்து, “ம், போடு சண்டை” என்று கீதையில் சொன்னதும் தெரியும். ஆனாலும் criticise பண்ணுகிறார்கள். நாமும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்!



தர்மத்துக்காக, தர்மத்தோடு இங்கே தநுர் வேதத்தை அப்யஸிக்கும்படி பகவான் அர்ஜுனனைத் தூண்டியிருக்கிறார். இப்படித்தான் ஒவ்வொரு உபவேதமும் தர்மார்த்தமாகப் பிரயோஜனப்படுத்தப்பட வேண்டியதாகும்.


மற்ற மதங்களில்தான் ஈச்வர ஸம்பந்தமானது என்று சிலதை மட்டும் சொல்லிவிட்டு மநுஷ்யனின் ராஜாங்கம், வாழ்க்கையம்சங்கள், ராணுவம், வைத்யம் முதலானவற்றைப் பற்றி எதுவுமே சொல்லாமல் விட்டு விட்டதால் நடைமுறையில்பெரிய கோளாறு உண்டாகி விட்டது. நடைமுறை வாழக்கைக்கு அவசியமான தொழில், சாப்பாடு, ஜாகை, கல்யாணம், படிப்பு முதலானவற்றுக்கும் கலைகளுக்கும் மத ஸம்பந்தமான தர்ம ஆதாரம் இல்லாததனாலேயே அந்த மதங்களைச் சேர்ந்தவர்கள் இவற்றில் ரொம்பவும் கோளாறாகப் போக இடம் ஏற்பட்டுவிட்டது. ‘ஆத்ம ஸம்பந்தமானது’என்று தனியாகச் சிலதை வைத்துவிட்டதாலேயே அதற்குப் பெரும்பாலோர் போகாமல் நடைமுறை வாழ்க்கையோடு நிற்பதாகவும் இந்த நடைமுறையிலே சாஸ்திர ஒழுங்கு இல்லாததால் மனஸு போனபடி செய்ய இடமேற்படுவதாகவும்தான் ஆகியிருக்கிறது.



லோக வியாபாரத்தில் எல்லாத் துறைகளையும் நெறிப்படுத்தித் தரும் நம் மதத்தில் நாலு உபவேதங்களில் முதலாவதாக வருவது ஆயுர்வேதம்.

[SUP]*1[/SUP]உபவேதங்களைக் குறித்து தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் வித்யாஸ்தானம்: முடிவுரை என்ற உரையிலும் பார்க்க.
[SUP]*2[/SUP]இப்பதினான்கில் ஒவ்வொன்றையும் குறித்த விரிவுரைகள் தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதியில் காண்க.



https://dheivathinkural.wordpress.com/2014/09/11/உபவேதங்கள்-எதற்கு1/
 
முருகனின் பூர்வ அவதாரம்

முருகனின் பூர்வ அவதாரம்







பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர்.


இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வபப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.


விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.


"குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், "அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?' என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது" என்றார் பிரம்மா.


ஸனத்குமாரரிடம் பிரம்மா, "உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய். இந்த ஜன்மாவில் நீ, 'தேவராவது, அசுரராவது, எல்லாம் ஒரே பிரம்மம்' என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்" என்றார்.


வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும்.


பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் - ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட - அதுவே சத்தியமாகிவிடும்.


இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.


ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.


ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.


பார்வதீ - பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் 'ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?' என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, "நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது" என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.
'அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!' என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, "அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்" என்றார்.


ஸனத்குமாரர் சிரித்தார். 'உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை' என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.


அதற்கும் ஒரு படி மேலே போனார். "பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்" என்றார்.


ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் 'தாட்பூட்' செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.


"அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.


"ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்" என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர்.


ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம். ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.


ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் 'உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்' என்றார். அம்பாளையும் சேர்த்து, 'உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்' என்று சொல்லவில்லை.


இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார்.


ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.


'கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்" என்று ஸ்வாமியிடம் சொன்னார்.


இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.


இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். "சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்" என்று ரைட் கேட்டாள்.


ஸனத்குமாரர் யோசித்தார். "அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை 'டைட்டில்' கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்" என்றார்.


ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.


யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு 'ராஜி' க்கு - 'காம்ப்ரமைஸு'க்கு - வந்தார்கள்.


ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார். வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.


அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் 'பகீர்' என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள். யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.


பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.


அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.


இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார்.
ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை. அப்போது பிரம்மா அவளிடம், "இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு" என்றார். "ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?" என்று கங்கை அவரைக் கேட்டாள். அவர், "சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்" என்றார்.


இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!



ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். 'சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத் தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன். நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்' என்றார் நாரதர். ஸனத்குமாரர், "ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் 'ஸ்வராட்' - உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்" என்று வழிகாட்டினார். 'இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். 'அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்; அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்' என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.



இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது.


சாந்தோக்ய அவஸ்தா ('அவஸ்தா' என்றால் நிலை) தான் ஜெண்டவஸ்தா (Zend Avesta) என்ற பார்ஸி மதக்கிரந்தத் தொகுப்பாயிருக்கிறது. பார்ஸி மதம், முழுக்க முழுக்க அக்னி வழிபாடுதான். ஸெளராஷ்டிர தேசக்காரர் ஒருத்தர் அதை ஸ்தாபித்தவர். 'ஸெளராஷ்டிரர்' என்பதே 'ஜொரொதஸ்த்ரர்' (Zorothustra) என்றாகியிருக்கிறது. 'ஸெளரம்' என்றால் சூரிய சம்பந்தமானது. சூரியன், அக்னி, காயத்ரி மூன்றும் சம்புவின் விசேஷ ரூபங்கள் என்று ஆசார்யாள் 'பிரசனோத்தர ரத்ன மாலிகை'யில் சொல்கிறார். திருவண்ணாமலையில் அக்னி ஸ்வரூபமாகவே ஈசுவரன் இருக்கிறார். சிவாக்னிதான் முருகன்.
மலையாளத்தில் தீபத்தில் அம்பாளை ஆராதித்து, 'பகவதி சேவை' என்கிறார்கள். ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை 'சக்தி சக்தி' என்றே சொல்கிறோம்.


வேதமே முக்கியமாக அக்னி வழிபாட்டு மதம்தான். 'அக்னி' என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பிக்கிறது. அக்னி காரியமே 'ஔபாஸனம்' என்பது. 'உபாஸனைக்கு' இடமாவது 'ஔபாஸனம்'. உபாஸனை என்றாலே அக்னி காரியம் தான் என்றாகிவிட்டது. ஔபாஸனை நான்கு வர்ணத்துவருக்குமே உண்டானது.


முக்கியமான உபாஸனையான அக்னி காரியத்துக்கு சுப்ரம்மண்யர் அதிதேவதையாக இருப்பதால்தான், அவரை விட்டுவிட்டுப் 'பஞ்சாயதன பூஜை' என்பதில் பிள்ளையார், சூரியன், மகாவிஷ்ணு, அம்பாள், ஈசுவரன் ஆகிய ஐவரை மாத்திரம் ஆராதிக்கச் சொல்வதாகத் தோன்றுகிறது. முருகன் நம் மதஸ்தரால் நிச்சயம் ஆராதிக்கப்பட வேண்டியவர் என்பது, பஞ்சாயதனத்தை மறுபடியும் உயிர்ப்பித்த அதே பகவத் பாதாள் ஸ்தாபித்த "ஷண்மத"ங்களில் முருக வழிபாடான "கௌமார"மும் ஒன்று என்பதிலிருந்து உறுதியாகிறது.


தற்காலத்தில் அக்னி காரியம் குறைந்து, மூர்த்தி பூஜை அதிகமாகியிருக்கிறது. சுப்ரம்மண்ய சம்பந்தமான புராணங்கள், ஸ்தோத்திரங்கள், திருப்புகழ் ஆகியன நிறையப் பிரசாரமாகி, பழனி, திருச்செந்தூர், திருத்தணி முதலான க்ஷேத்திரங்களின் உத்ஸவாதிகள், ஜனங்களை ரொம்பவும் வசீகரித்து வருகின்றன. ஆனதால், பஞ்சாயதன பூஜையிலும் சுப்ரம்மண்யரைச் சேர்த்துக் கொண்டுவிடுவது உத்தமமாகும்.
ஆசார்யாள் "ஸுப்ரஹ்மண்ய புஜங்கம்" என்று ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். அதில் "மயூராதிரூடம்" என்று ஆரம்பிக்கிற சுலோகத்தில் "மஹீ தேவ தேவம்" என்கிறார். "மஹீதேவர்" என்றால் பிராம்மணர். இவர்களால் பூஜை செய்யப்பட வேண்டியவர் சுப்ரம்மண்யர் என்கிறார்.


"சுப்ரம்மண்யர் தமிழ்க் கடவுள்தான்; வேதத்தில் இல்லாதவர்" என்று சிலர் சொல்வதைக் கேட்டு, வைதிகமானவர்கள் அவரை உபாஸிக்காமல் இருந்துவிடக்கூடாது என்றே இதைச் சொல்கிறேன்.
இதே புஜங்கத்தில், திருச்செந்தூரில் கடலோரத்தில் விளங்கும் ஷண்முகநாதரைப் பார்த்து, "பராசக்தி புத்திரனே! சமுத்திரக் கரையில் நிற்கிற நான் சம்சார சமுத்திரத்தின் அக்கரக்குப் பக்தர்களைக் கடந்துவிடுகிறேன். அலைகளெல்லாம் சமுத்திரத்தில் மடங்கி விழுந்து, ஒடுங்கிவிடுவதைப்போல், என் சந்நிதிக்கு வருகிறவர்களின் ஆபத்துக்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒடுங்கியே போகும் என்பதைக் காட்டுகிறாய்" என்று மனசு உருகும்படி பாடியிருக்கிறார். "குகனைத் தவிர இன்னொரு தெய்வம் எனக்குத் தெரியவில்லை. தெரியவே இல்லை" (ந ஜானே ந ஜானே) என்கிறார்.



'கடலிலே அலைகள் எழும்பி, அதிலேயே லயிக்கிற மாதிரி, சகல ஜீவ ஜகத்தும் பரம சத்தியமாக என்னிடம்தான் தோன்றி, என்னிடமே முடிகின்றன' என்ற ஞானோபதேசத்தைத் திருச்செந்தூர் முருகன் சொல்லாமல் சொல்கிறார். நாரதருக்கு ஞானோபதேசம் செய்த ஸனத்குமாரரிடம் ஈசுவரனே தழைந்து வரம் கேட்டு, ஞான ஸ்கந்தனாக அவரைப் பெற்று, மறுபடியும் அவரிடம் தழைந்து ஞானோபதேசம் (பிரணவ உபதேசம்) வாங்கிக் கொண்டார்.


????????? ????? ??????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஸம்ஸ்காரம் என்பதன் பொருள்

ஸம்ஸ்காரம் என்பதன் பொருள்



கர்மா என்றால் என்ன? கர்மா என்பது காரியம். ஒரு வேஷ்டியை உண்டாக்குவதற்கு எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன! பஞ்செடுத்து, கொட்டை பிரித்து, நூல் நூற்று, தறியில் நெய்து, சாயம் தோய்த்து - என்றிப்படி எத்தனை செய்ய வேண்டியிருக்கிறது? அதைப் போல அநேக காரியங்கள் பண்ணி ஒருவனை ஆத்மவித்தாக்க வேண்டும். குணத்தினாலும் சரீரத்தினாலும் சேர்ந்து, ஒன்றையொன்று பரிசுத்தி பண்ணிக் கொள்ளும் முறையில் கர்மா செய்யவேண்டும். இப்படிப்பட்ட கர்மாவுக்கே ஸம்ஸ்காரம் என்று பெயர்.



ஒரு பதார்த்தத்துக்கு உள்ள தோஷத்தைப் போக்குவது எதுவோ, குணத்தை புகட்டுவது எதுவோ அதுதான் ஸம்ஸ்காரம். உதாரணமாக கேச ஸம்ஸ்காரம் என்பது க்ஷெளரம் [க்ஷவரம்] செய்து கொள்வது, அழுக்கு, பேன் முதலியவைகளை எடுப்பது, தைலம் தேய்ப்பது முதலியவை.

ஜீவாத்மாவுக்கு தோஷங்கள் இருக்கின்றன. தோஷத்தை நிவர்த்தி பண்ணி குணத்தை நிரப்ப வேண்டும். சீப்பினால் வாரித் தைலம் தேய்ப்பது போன்றது ஸம்ஸ்காரம். வயலில் சில ஸம்ஸ்காரங்கள் செய்யப்படுகின்றன. முதலில் காயப்போட வேண்டும்; பின்பு உழ வேண்டும்; ஜலம் விட்டுப் பரம்படிக்க வேண்டும். பிறகு விதைக்க வேண்டும்; நாற்றுப்பிடுங்க வேண்டும்; களை பிடுங்க வேண்டும்; ஜலம் பாய்ச்ச வேண்டும்; அதிக ஜலமிருந்தால் மடை திறந்துவிட வேண்டும்; விளைந்த பின் அறுவடை செய்யவேண்டும்; களத்தில் அடிக்க வேண்டும்; பதர் தூற்றவேண்டும், நெல்லைக் கோட்டை கட்டவேண்டும்; பின்பு அந்த நெல் பழகவேண்டும். அப்புறம்தான் அதை உபயோகிக்க வேண்டும்.

இவ்வளவு காரியங்கள் இருக்கின்றன. பஞ்சு நூலாகி வேஷ்டியாக வேண்டுமென்றால் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. பஞ்சு யந்திர சாலையில் எவ்வளவு காரியங்கள் செய்யப்படுகின்றன? நூல் சிக்கலாகாமல் நெய்ய எத்தனை ஜாக்கிரதையுடன் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது? நம்முடைய ஆத்மாவானது இந்திரிய சலனங்களால் சிக்கலாக இருக்கிறது. சிக்கலை எடுத்து எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கச் செய்யவேண்டும். அப்படிச் செய்வதற்கு பல தடைகள் இருக்கின்றன. ஏதோ சில ஸமயங்களில் மட்டும் இப்போது ஆனந்தம் உண்டாகிறது. பல விதமான துக்கம், வலி இருந்தும் இவ்வளவையும் மீறிக் கொண்டு கொஞ்சம் ஆனந்தம் உண்டாகிறதே, இந்த ஆனந்தம் எப்பொழுதும் இருக்குமாறு பண்ண‌வேண்டும். அதற்காக ஜீவனை ப்ரம்ம லோகத்தில் கொண்டு போய் சேர்க்கவேண்டும். அந்த ஈச்வர ஸந்நிதானத்தில் சேர்த்துவிட்டால் அப்புறம் துன்பமே இராது. பிரளயத்துக்கு அப்புறம் ஐக்கியம் உண்டாகும். ஆகையால் அங்கே சேர்க்கத் தயார் பண்ண வேண்டும்.


இதற்குத்தான் நாற்பது ஸம்ஸ்காரங்களையும் எட்டு ஆத்ம குணங்களையும் ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்.




ஆத்ம குணம், ஆத்மாவை ஸம்ஸ்காரங்களால் சுத்தி பண்ணிக் கொள்வது என்றெல்லாம் சொல்கிறபோது ஆத்மா என்பது த்வைதிகள் சொல்கிற, அதாவது பரமாத்மாவுக்கு வேறாக இருக்கிறாற்போலத் தெரிகிற, ஜீவாத்மாவைத்தான். வாஸ்தவத்தில் இருப்பது ஒரே ஆத்மாதான்; ஜீவ ஆத்மா, பரம ஆத்மா என்ற பேதமே இல்லை. இந்த ஆத்மா நித்ய சுத்தமானது. ஆகையால் அதை ஸம்ஸ்காரத்தால் சுத்தி பண்ணுவது என்பதே தப்பு. அது நிர்குணமான வஸ்து. அதனால் ஆத்ம குணம் என்பதும் தப்பு. ஆனாலும் அந்த நிர்குண வஸ்து மாயையோ, கீயையோ எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு நம் எல்லார் மாதிரியும் ஆகி, நமக்கு 'அதுவே தான் நாம்' என்பது துளிக்கூடத் தெரியாமல்தானே நடைமுறையில் பண்ணி இருக்கிறது? இப்படி த்வைதமாக பேத லெவலில் இருக்கிற ஜீவனைத்தான் இங்கே ஆத்மா என்று சொல்லியிருக்கிறது. இது அழுக்குப் பிடித்ததுதான். அதனால் ஸம்ஸ்காரம் பண்ணி இதை சுத்தமாக்க வேண்டும். இது துர்க்குணம் பிடித்தது. அதனால் எட்டு ஆத்ம குணங்களை அப்பியஸித்து இதை நல்ல குணமுள்ளதாக்க வேண்டும். அப்புறம் ஸம்ஸ்காரம் முதலான காரியங்களும் போய்விடும் குணங்களும் - உயர்ந்த ஸத்வ குணமும் கூட - போய்விடும். ஜீவாத்ம பரமாத்ம பேதமில்லாத அகண்ட ஏக ஆத்ம அநுபவம் அப்போதுதான் ஸித்திக்கும். அதை அடைவதற்காகவே இப்போது காரியமும் (ஸம்ஸ்காரமும்) , குணமும் வேண்டும். இப்படி அஷ்ட குணங்கள்.




நமக்கு லட்சியமாக உள்ள புராண புருஷர்களின் உத்தம குணங்களை நேரே அப்படியே எடுத்துக் கொண்டு அநுஸரிக்கலாம் என்றால், அதற்கு முடியாமல் ஆசாபாசங்கள், துவேஷங்கள், பயம், மனஸின் மற்ற கிருத்ரிமங்கள் எல்லாம் இடைஞ்சல் செய்கின்றன. நமக்கு நிறைய கர்மாக்களைக் கொடுத்து, அதோடு, 'இப்படித்தான் உட்கார வேண்டும். இப்படித்தான் டிரெஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்' என்றெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கும்படி பண்ணினால்தான் மனஸ் தடித்தனமாகக் கண்டபடி போகாமல் இருக்கிறது. தடித்தனம், அஹங்காரம் குறைய குறையத்தான் ஆசை, துவேஷம் பயம், துக்கம் முதலானவைகளை அடக்கிக் கொண்டு உத்தம குணங்களிலிருந்து நழுவாமல் இருக்க முடிகிறது. ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும் ஒன்றோடொன்று சேர்த்து வருகின்றன.




ஐடியலாக இருக்கிற புராண புருஷர்களின் குணங்களை - கதையாகக் கேட்டு, நாமும் அப்படி இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட குணங்களை - நாம் யதார்த்தத்தில் பெறுவதற்கு ஸம்ஸ்காரங்கள் ஸஹாயம் செய்கின்றன

?????????? ??????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
நாற்பது ஸம்ஸ்காரங்கள்

நாற்பது ஸம்ஸ்காரங்கள்


பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்




கர்ப்பாதானம் முதற்கொண்டு ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. தாயார் வயிற்றில் தேஹம் ஏற்படுகிற க்ஷணம் முதல் ஸம்ஸ்காரங்கள் ஆரம்பமாகின்றன. சரீர பிண்டமானது மந்திர பூர்வமாக உற்பத்தியாகவேண்டும். கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் என்பவை தாயார் தேஹத்துக்கு ஏற்பட்ட ஸம்ஸ்காரமென்று நினைக்கிறார்கள். அது தப்பு. அவை உள்ளே உண்டாகிற ஜீவனைக் குறித்தவை. அந்த ஜீவனுடைய பரிசுத்திக்காக ஏற்பட்டவை. கர்ப்பத்திலுள்ள வேறொரு ஜீவனை உத்தேசித்துப் பண்ணப் படுபவைகளாதலினால் அந்த ஸம்ஸ்காரங்களின் விஷயத்தில் பெரியவர்களுக்குப் பொறுப்பு அதிகம். தங்களுக்காக என்றால் வேண்டாம் என்று எண்ணலாம். வேறொரு ஜீவனுக்காக இருப்பதால் இவர்கள் அதை அநாதரவு பண்ணித் தடுப்பது பெரிய பாபமாகிறது. இக்காலத்தில் சாந்தி கல்யாணம் (கர்ப்பாதானம்), ஸீமந்தம் முதலியவை ஃபாஷனாக இல்லை என்று அநேகர் விட்டு வருவது பெரிய பாபமாகும். ஸ்திரீ-புருஷ உறவிலே நிஜமாக வெட்கப்பட வேண்டிய விஷயங்களில் லஜ்ஜை இல்லாமல் வெள்ளைக்கார ஃபாஷனில் விவஸ்தை கெட்டு நடந்துகொண்டே, இதைப் பரிசுத்தி பண்ணி நல்லதாக ஒரு புது ஜீவனை உண்டாக்குவதற்காக ஏற்பட்ட வைதிக கர்மாக்களை லஜ்ஜைக்குரியவை என்று விட்டுவிடுவது கிரமமே இல்லை.



தேஹம் வெளியில் வருவதற்கு முன்பு பண்ணப்படுபவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம் என்னும் மூன்று ஸம்ஸ்காரங்களும். மந்திர பூர்வமாகத்தான் ஸ்திரீ-புருஷ ஸங்கம் ஏற்பட வேண்டும். மிருகப் பிராயமான வேகமாக இல்லாமல் இதையும் ஒரு ஸம்ஸ்காரமாக மந்திரத்தின் மூலம் உயர்த்தி கருவாக உண்டாகக் கூடிய ஜீவனுக்கும் அதனால் க்ஷேமத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த உயர்ந்த தத்துவத்தை விட்டு விட்டு, இதனால் நாம் ஏதோ ஒரு அநாகரிகமான சடங்கை விட்டுவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வது பைத்தியக்காரத்தனம்தான். லஜ்ஜை இருந்தால், சாந்தி கல்யாணத்துக்கு ஊர் கூட்ட வேண்டாம். ஆனால் அகத்து மட்டோடாவது அவசியம் இந்த கர்மா பண்ணத்தான் வேண்டும். நித்ய ஒளபாஸனம், நாலு நாள் கலியாணம் என்பவையெல்லாம் போய், கல்யாணத்துக்கு மறுநாள் சேஷஹோமம் கூட இல்லாமல், (கல்யாணம் நடக்கும்) அன்றே ஒரு விதமான மந்திர பூர்வ ஸம்ஸ்காரமும் இல்லாமல் இப்போது இதை [ஸ்திரீ-புருஷ ஸங்கத்தை] செய்து வருவது ரொம்பவும் துராசாரம்; ரொம்பவும் பாபமும் ஆகும். மிருகப் பிராயமாகப் பண்ணுவதால் ஸந்ததியும் அப்படியே [மிருகம் மாதிரியே] அமைகிறது. பும்ஸவனம் கர்ப்பத்தின் மூன்றாவது மாதம் செய்ய வேண்டும். ஆறு அல்லது எட்டாவது மாதத்தில் ஸீமந்தம் பண்ணவேண்டும். இப்போது இரண்டையும் சேர்த்து ஏதோ பண்ணுகிறார்கள்.



குழந்தை பிறந்தவுடன் ஜாதகர்மா என்ற ஸம்ஸ்காரம் செய்யவேண்டும். தானங்கள் கொடுக்கவேண்டும். பதினோராவது நாள் நாமகரணம். பெயர் வைப்பதுகூட ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற ஸம்ஸ்காரமாகத்தான் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்ன நக்ஷத்திரத்தில் பிறந்தால் இன்ன மாதிரிப் பெயர் வைக்க வேண்டும் என்று இருக்கிறது. பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது!

லாங்ஃபெல்லோ (நீள ஆள்), ஸ்டோன் (கல்) என்றெல்லாம் கண்ட பெயர்களை வைத்துக் கொள்கிற மாதிரி நம் மதத்தில் இல்லை. இப்போது இப்படிப்பட்ட அசட்டுப் பெயர்கள் இங்கேயும் வந்து விட்டன. ஸ்வாமி பெயராகவே வைத்தாலும் அதைக் கன்னாபின்னா என்று சிதைத்துக் கூப்பிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் ரொம்பத் தப்பு. வைதிக ஸம்ஸ்காரமாக வைத்த பெயர் என்பதற்கான கௌரவத்தை அதற்குக் கொடுக்கவேண்டும்.



குழந்தையின் ஆறாம் மாஸம் உணவூட்டுவதான 'அன்ன ப்ராசன' ஸம்ஸ்காரம்.



கர்ப்பாதானம் முதல் நாமகரணம் வரை குழந்தையை முன்னிட்டு (on behalf ) பெற்றோரே பண்ணுவது. அன்ன ப்ராசனத்தில் தகப்பன் மந்திரம் சொன்னாலும் குழந்தையே சாப்பிடுகிறது.



தாயார் மருந்து சாப்பிட்டால் பால் குடிக்கிற குழந்தைக்கு தேஹபுஷ்டி ஏற்படுகிறதோ இல்லையோ? அதைப்போலவே மாதா பிதாக்களுடைய சித்தவிருத்தி எப்படி இருக்கிறதோ அப்படியே உள்ளே இருக்கும் ஜீவனும் ஸாத்விக ஸ்வபாவமோ, பாப பிரவிருத்தியோ உண்டாகும். மனது சாந்தமாக இருந்து ஒரு ஸமாசாரம் எழுதி அதைப் படித்துப் பார்த்தால் நன்றாயிருக்கும். கோபமாக இருக்கும் பொழுது எழுதி அப்புறம் பார்த்தால் நன்றாக இருப்பதில்லை. சரீரத்திலும் அப்படியே குணதோஷங்கள் ஏற்படுகின்றன. ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால்தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும். மந்திர பூர்வமாகப் பண்ணுவது இதற்காகத்தான்.



இத்தகைய கர்மாக்களை அடியோடு தள்ளாதவர்களும் உரிய காலத்தில் பண்ணாமல் சேர்த்துப் பண்ணி விடுகிறார்கள். இப்படியின்றி, அந்த அந்தக் காலத்தில் அந்த அந்த மந்திரத்தைச் சொல்லி அந்த அந்த திரவியங்களைக் கொண்டு அந்த அந்த ஸம்ஸ்காரத்தைச் செய்யவேண்டும்.



அன்னப் பிராசனத்துக்கப்புறம் 'சௌளம்' செய்ய வேண்டும். அதாவது சிகை (குடுமி) வைக்கிறது. ஸத் கர்மாவுக்கு உபயோகமாக இருக்க அது பண்ணவேண்டும். ஸந்நியாஸிக்கு சிகை இல்லை. மொட்டைத் தலையாக இருக்க வேண்டும். ஸந்நியாஸிகள் மந்திரபூர்வமாகத்தான் சிகையை எடுத்துக் கொள்ளவேண்டும்.

மந்திரபூர்வமாக வைத்துக் கொண்ட சிகையைப் பரமேச்வரனுக்கு முன்பு பண்ணின பிரதிக்ஞைக்கு விரோதமாக இஷ்டப்படி எடுத்து விடுவது தப்பு. சிகையை எடுப்பது ஒரு பெரிதா என்று கேட்கலாம். பொய் சொல்லுகிறது தப்பு அல்லவா? அது எவ்வளவு தப்போ அவ்வளவு தப்பு இதுவும். 'பரமேச்வர ப்ரீதியாக' என்று ஸங்கல்பம் பண்ணியே, சௌள ஸம்ஸ்காரத்தில் சிகை வைக்கப்படுகிறது. அப்படி வைத்துக் கொண்டதைக் கிள்ளுக்கீரையாக எண்ணி மனம் போனபடி எடுத்தால் அந்தப் பரமேச்வரனிடமே பொய் சொன்னதாக ஆகவில்லையா? சிவலிங்கப் பிரதிஷ்டை செய்கிறார்கள். வேல், ஸாளக்கிராமம் வைத்து பூஜை செய்கிறார்கள். பின்பு, கோபித்துக் கொண்டு எடுத்து எறிந்து விடலாமா? அகஸ்மாத்தாகப் போனால் - திருடன் கொண்டு போனால் பாதகம் இல்லை. நாமாக வைத்ததை நாமாக வேண்டுமென்று மாற்றுவது பெரிய தப்பு. சௌளத்தை மட்டும் ஸங்கல்பத்தோடு பண்ணிக் கொண்டு அப்புறம் இஷ்டப்படி அதை எடுத்து விட்டு 'க்ராப்' பண்ணிக் கொள்வது தப்பு.




'.......ஏ போச்சு' என்று பேச்சு வழக்கிலே ரொம்ப அலக்ஷ்யமான ஸமாசாரமாகச் சொன்னாலும், வாஸ்தவத்தில் இது பெரிய ஸமாச்சாரம்தான். வேத அத்யயனம், வைதிக கர்மாநுஷ்டானம், தர்மப்படி இல்லறத்திலிருந்து கொண்டு பண்ணும் தாம்பத்தியம் இவற்றிலே சரீரத்துக்கும், சரீரத்தின் நாடி சலனங்கள் மூலம் சித்தத்துக்கும் ஏற்படவேண்டிய பலத்துக்குத் தலையில் பிரம்மமரந்திரத்தில் சிகை என்ற ரக்ஷை இருப்பது பெரிய காப்பாகும். கூரைக்கு ஓடு போடுகிற மாதிரி அது! வேத கர்மாவும், தாம்பத்தியமும் நின்றுபோன ஸந்நியாஸ ஆச்ரமத்தில் தான் இந்த ரக்ஷை தேவையில்லாமல் போகிறது. ஆகையால் கிருஹஸ்தன் ஸந்நியாஸியாக ஆனாலன்றிக் குடுமியை எடுக்கக் கூடாது. தற்காலத்தில் பிரம்மச்சரிய, கிருஹஸ்தாச்ரம காலங்களிலும் வேத ஸம்பந்ததத்துக்கு முழுக்குப் போட்டு விட்டதால், சிகையும் இல்லாமலிருக்கிறோம்!



பாபம் பண்ணி நரகவாஸம் பண்ணுகிற ஜீவர்களின் பிரீதிக்காக, ஒரு கிருஹஸ்தன் ஸ்நானம் செய்யும்போது மந்திர பூர்வாக சிகோதகம் தரவேண்டும் (குடுமியிலிருந்து ஜலத்தைப் பிழிந்து கொடுக்க வேண்டும்) என்று இருக்கிறது. சிகை இல்லாவிட்டால் இதை எப்படிப் பண்ணுவது?



சௌளத்துக்கு அப்புறம் வருவது உபநயனம். பிரம்மோபதேசம், பூணூல் கல்யாணம் என்பதெல்லாம் இதுவே.



உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம் உபநயனமே.



மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாபதோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவனையும் பாதிக்கும். அதற்காக, ஒரு ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் [கர்ப்ப சம்பந்தமான] கார்ப்பிகம் என்றும் [பீஜ சம்பந்தமான] பைஜிகம் என்றும் இரண்டு வகைப்படும்.


கார்ப்பிகம் தாயால் உண்டாவது. பைஜிகம் தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான [தகுதியான] வயது வரவில்லை.



எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.



நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம். தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்; வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்; காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ-வாக்- காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.



இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக [நேராக] உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் [கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் வரையிலான] கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதைச் செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்' என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்கு ஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான்.

முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான். இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய்விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.




நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை; அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்.



???????? ???????? ????????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
நாற்பது ஸம்ஸ்காரங்கள் சிலருக்கு ஏன் இல்

நாற்பது ஸம்ஸ்காரங்கள்

சிலருக்கு ஏன் இல்லை?


ஜாதகர்மா, நாமகர்மா, அன்னப் பிராசனம், சௌளம் முதலியன எல்லா ஜாதியாருக்கும் பொதுவானவை. உபநயனம் என்பது பிராம்மணர், க்ஷத்ரியர், வைசியருக்கே உரியது. மற்றவர்களுக்கு அது வேண்டியதில்லை என்று வைத்திருக்கிறது.



இப்படிச் சொன்னவுடன் பாரபட்சம், வித்யாஸம் (partiality) என்று சண்டைக்குக் கிளம்பக்கூடாது. லோகத்துக்கு உபகாரமாக சரீரத்தால் தொண்டு செய்வதை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட நான்காம் வர்ணத்தவர்களுக்கு அந்தத் தொழிலாலேயே சித்த சுத்தி ஏற்படுகிறது. அவர்கள் வித்யாப்பியாஸ காலத்திலிருந்து தங்களுக்கேற்பட்ட தொழிலை அப்பன் பாட்டனிடமிருந்து கற்றுக் கொண்டால்தான் அதில் செய்நேர்த்தி உண்டாகும். அவர்களுக்குப் பன்னிரண்டு வருஷ வேதாத்யயனமும் குருகுலவாஸமும் வேண்டியதில்லை. இதைச் செய்யப் போனால் அவர்கள் செய்ய வேண்டிய தொழில் அல்லவா கெட்டுப் போகும்?



உபநயனம் என்பது குருகுல‌வாஸத்துக்கு முதல் படிதான். 'உப-நயனம்' என்றாலே குருவுக்கு 'கிட்டே கொண்டு போய்விடுவது' என்றுதான் அர்த்தம். புத்தி சம்பந்தமான வேத வித்யையை அப்பியஸிக்கும்போது அஹங்காரம் வந்து விடாமல் இருக்கவேண்டும் என்பதாலேயே ஸ்வாதீனமாகப் பழகுகிற தகப்பனாரை விட்டுக் கண்டிப்பிலே ஒழுங்குக்குக் கொண்டு வருகிற குருவிடம் கொண்டுபோய்விடச் சொல்லியிருக்கிறது. சரீர உழைப்பாக ஒரு தொழிலைக் கற்றுக் கொள்கிறபோது அதிலே புத்தித் திமிர், அஹங்காரம் வராது. தகப்பனாரிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம். சரீர சேவை செய்கிறவர்களுக்கு உபநயனமும், குருகுலவாஸமும் அவசியமில்லை.



வம்சாவளியாக வீட்டிலேயே கற்றுக்கொள்வதை விட அதிகமாக சில நுணுக்கங்கள் தெரிய வேண்டுமானால் அதை பிராம்மணனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் கற்றுக் கொள்வதற்கு முடியாமற் போகிறவர்களும் இப்படிச் செய்யலாம். பிராம்மணன் 'களவும் கற்றுமற' என்பது போல எல்லாத் தொழிலையும் தெரிந்து கொண்டு, பிறருக்கு மட்டுமே அவற்றைச் சொல்லிக் கொடுத்துவிட்டு - அதாவது அவற்றைத் தானே ஜீவனோபாயமாகக் கொள்ளாமல மற்றவர்களுக்கு சிக்ஷை பண்ணுவித்து - தன்னளவில் அத்யயனம், யக்ஞம் முதலான வைதிக காரியங்களை மட்டுமே பண்ணிவர வேண்டும்.



தொழில், மனோபாவம் இவற்றுக்கு அநுகூலமாகவே ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அதனால் சிலருக்குச் சில ஸம்ஸ்காரம் இல்லாததால் மட்டம், மட்டம் தட்டுகிறார்கள் என்றெல்லாம் நினைப்பது தப்பு. என்னைக் கேட்டால், வேடிக்கையாக, எவனுக்கு ஜாஸ்தி ஸம்ஸ்காரம் சொல்லியிருக்கிறதோ அவனைத்தான் மட்டமாக நினைத்திருக்கிறார்கள் என்றுகூடச் சொல்வேன். இத்தனை நிறைய ஸம்ஸ்காரம் பண்ணினால்தான் இவன் சுத்தமாவான்; மற்றவனுக்கு இவ்வளவு இல்லாமலே சுத்தமாவான் என்று நினைத்து அதிகப்படி ஸம்ஸ்காரங்களை வைத்ததாகச் சொல்லலாம் அல்லவா? ஜாஸ்தி மருந்து சாப்பிட வேண்டியவனுக்குத்தானே அதிக வியாதி இருப்பதாக அர்த்தம்?



ரிஷிகளைவிடப் பாரபக்ஷமில்லாதவர்கள் எவருமில்லை. அவர்கள் நம் மாதிரி வாய்ச் சவடாலுக்காக ஸமத்வம் பேசுகிறவர்களல்ல. வாஸ்தவமாகவே எல்லாரையும் ஈச்வரனாகப் பார்த்த நிஜ‌மான ஸமத்வக்காரர்கள் அவர்கள்தான். லோகத்தில் பல தினுசான காரியங்கள் நடக்க வேண்டியிருப்பதால் அதற்கேற்றபடியும், இந்தக் காரியங்களுக்கு ஏற்றவாறு மனோபாவங்கள் இருப்பதால் அவற்றை அநுஸரித்தும் வெவ்வேறு விதமான ஸம்ஸ்காரங்களை அவர்கள் வைத்தார்கள். இதிலே உசத்தி- தாழ்த்தி அபிப்ராயங்களுக்கு இடமேயில்லை.



சாஸ்திரங்களில் இப்படி முதல் மூன்று வர்ணத்தாருக்கு உபநயனமும் அது தொடர்பான சில ஸம்ஸ்காரங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

????????? ??? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
பிரம்மச்சரியம்

பிரம்மச்சரியம்


சௌளத்துக்குப் பின் வருவது உபநயனம்.



குழந்தையாயிருந்தவனுக்கு அறிவு வந்து, தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் நடக்கிறது. "பிக்ஷாசர்யம் சர" (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் "பாடம்" ( baad `ham) (அப்படியே செய்கிறேன்) என்கிறான். அதனால் இவனுக்கு உபநயனத்துக்கு முன்பே "பிக்ஷாசர்யம் சர" என்று சொன்னால் அதைப் புரிந்துகொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் இருக்க வேண்டும். ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில் இப்படிப்பட்ட பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால் எட்டு வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.



எட்டு வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றியிருக்கிறோம்!



பிரம்மச்சரிய ஆசிரமம்.




உப-சமீபத்தில், நயனம் - அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது? ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். குரு யார்? வேதவித்துக்கள். முதல் ஆசிரமமான பிரம்மச்சரியத்துக்கு ஒரு குரு; கடைசி ஆசிரமமான ஸந்நியாசத்துக்கு ஒரு குரு. வேத வேதாங்கம் அறிந்தவர்கள் முதல் ஆசிரமத்துக்கு குரு. வேதம் உள்பட எல்லாவற்றையும் விட்டு பிரம்ம ஞானம் அடைந்தவர்கள் கடைசி ஆசிரமத்துக்கு குரு. வித்தையைத் தெரிந்து கொள்வது முதல் ஆசிரமம். ஞானத்தைத் தெரிந்து கொள்வது கடைசி ஆசிரமம்[SUP]*[/SUP].


உபநயனம் பிரம்மச்சரியத்துக்கு ஆரம்பம். அதன் முடிவு 'ஸமாவர்த்தனம்', உபநயனம் முதல் ஸமாவர்த்தனம் வரையில் இருப்பது ப்ரஹ்மச்சரியம். ஸமாவர்த்தனம் என்றால் திரும்பி வருகிறது என்று அர்த்தம். ஒரு இடத்துக்குப் போனால்தான் போன இடத்திலிருந்து திரும்பி வருவது என்பது முடியும். அகத்திலிருந்து குருகுலத்துக்குப் போய் வேத அத்யயனத்தைப் பூர்த்தி பண்ணிவிட்டு அகத்திற்குத் திரும்பி வருவதுதான் ஸமாவர்த்தனம்.



உபநயனம் பூர்வாங்கம். அங்கம் என்றால் பிரதானம் ஒன்று வேண்டும். பிரதானத்திற்கு அங்கி என்று ஒரு பெயருண்டு. உபநயனம் என்ற அங்கத்துக்கு அங்கியாக இருப்பது ப்ரஹ்மச்சர்யம். ப்ரஹ்மச்சர்யம் என்ற இடத்தில் ப்ரஹ்ம என்பதற்கு வேதம் என்பது அர்த்தம். வேதத்தை மனப்பாடமாகக் கற்று ஸ்வாதீனப்படுத்தவே ஒரு ஆசிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ப்ரஹ்மச்சர்யம். அதற்கு பூர்வாங்கம் உபநயனம். அந்த ஆசிரமத்துக்கு கடைசி பக்ஷமாக ஏற்பட்ட காலம் பன்னிரண்டு வருஷங்கள். ஒரு வேதத்தை ஸாங்கோபாங்கமாக அத்தியயனம் பண்ணுவதற்குப் பன்னிரண்டு வருஷங்கள் வேண்டும்.

பிரம்ம என்பதற்கு ஆறு அர்த்தங்கள் உண்டென்று சொன்னேன். பிரம்ம என்பது விஷ்ணுவுக்கு ஒரு பெயர். பரமசிவனுக்கும் ஒரு பெயர். பிராம்மண ஜாதி, தபஸ், பரமாத்ம ஸ்வரூபம் என்பவைகளுக்கும் அந்தப் பெயருண்டு. பிரம்மா என்று நீட்டினால் சதுர்முகனுக்குப் பெயராகிறது.




ப்ரம்மச்சரியம் என்பது வேதாத்தியயனம் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஒரு தீக்ஷை. அதற்குப் பூர்வாங்கமாக ஏற்பட்ட ஒரு காரியம் உபநயனம். பரிஷேசனம் என்று ஜலத்தால் சாதத்தைத் தெளிப்பது எதற்கு? அது போஜனத்திற்கு அங்கம். சாதத்தை அப்படியே சாப்பிட்டு விடக்கூடாது. ஈச்வரப் பிரஸாதமாக்கிச் சாப்பிட வேண்டும் என்றே முதலில் அதன் மேல் ஜலம் தெளிக்கிறோம். இப்படிச் செய்துவிட்டு சாப்பிடாமல் இருந்தால் எத்தனை அசட்டுத்தனம்?

உபநயனம் பண்ணிவிட்டு வேதாத்தியயனம் பண்ணாமலிருப்பது பரிசேஷனம் பண்ணிவிட்டு சாப்பிடாமலிருப்பதைப் போன்றது. இப்போது அத்தனை பேரும் இப்படி அசடுகளாக இருந்து வருகிறோம்.




உபநயனம் என்ற பூர்வாங்கத்திற்கும் ஸமாவர்த்தனம் என்கிற உத்தராங்கத்திற்கும் நடுவில் நான்கு வ்ரதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நம்முடைய தக்ஷிண தேசத்தில் பெரும்பாலும் அநுஷ்டானத்திலுள்ள க்ருஷ்ண யஜுர் வேதத்தை எடுத்துக் கொண்டால், அவை பிராஜபத்யம், ஸெள‌ம்யம், ஆக்னேயம், வைச்வதேவம் என்பவை.



எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். ஆத்மா கடைத்தேறுவதற்கு மந்திரமயமான வேதம் இருக்கிறது. அதைப் பாடம் பண்ணுவதற்கு ஒரு நியமம் வேண்டும். வேத ஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மச்சரியமாகும். இது தவிர, வேத பாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்து மொத்த விரதம் பிரம்மச்சரியம். தனித்தனி பிரிவுக்குத் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன.

வேதத்தை நான்கு காண்டமாக பிரித்திருக்கிறார்கள். அவைகளை நாலு மஹரிஷிகள் பிரவர்த்திப்பித்திருக்கிறார்கள். அந்த மஹரிஷிகளை உத்தேசித்து பிரம்ம யக்ஞம் பண்ணப்படுகிறது. (பிரம்ம யக்ஞம் என்பதற்கு வேத யக்ஞம் என்பதுதான் அர்த்தம்) . ஒவ்வொரு காண்டத்திற்கும் தனித்தனியாக ஒரு விரதம் உண்டு. பிரம்மச்சரிய ஆசிரமத்தின்போது ஒவ்வொரு காண்டத்தை அத்தியயனம் பண்ணுகிறபோது அதற்கு ஏற்பட்ட விரதத்தையும பண்ணவேண்டும். பிரஜாபத்ய காண்டத்திற்கு ஒரு விரதம் ஏற்பட்டிருக்கிறது. அது பிரஜாபத்யம். அப்புறம் ஸெள‌ம்ய விரதம், பின்பு ஆக்நேய விரதம், அப்புறம் வைச்வதேவ விரதம் செய்ய வேண்டும். நான்கு காண்டங்களும் முடிந்தபின்பு குருவினுடைய அனுஜ்ஞை [அனுமதி] யின் மேல் ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ள வேண்டும். [வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் ஸம்ஸ்காரத்தை பண்ணிக் கொள்ள வேண்டும்.]




முன்பு சொன்ன நான்கு காண்ட விரதங்களும் கிருஷ்ண யஜுர் வேதத்துக்கு ஏற்பட்டவை. ரிக்வேதத்துக்கு மஹா நாம்னி விரதம், உபநிஷத் விரதம், கோதான விரதம் ஆகிய நான்கு விரதங்கள் உண்டு. இப்படி ஒவ்வொரு வேதத்துக்கும் தனித்தனி விரதங்கள் இருக்கின்றன. கிருஷ்ண யஜுர் வேதமே அதிகம் பிரசாரத்திருப்பதால் அதை முதலில் சொன்னேன்.


குருகுல வாஸத்தை முடிக்கும்போது செய்யும் ஸமாவர்த்தனத்திற்கு ஸ்நானம் என்றும் ஒரு பெயர் உண்டு. அதைச் செய்து கொண்டவனுக்கு ஸ்நாதகன் என்று பெயர்.



எல்லாரும் தம் தம் வேதத்தையும் வித்தைகளையும் அத்தியயனம் பண்ண வேண்டும். ஆவணி அவிட்டம் வருகிறது. அன்று உபாகர்மா பண்ணுகிறோம். அன்று வேதத்தில் புது பாகம் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். தை மாஸம் பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் [முடித்தல்] பண்ண வேண்டும். ஆவணி மாதத்தில் ஆரம்பித்துத் தை மாதத்தில் விட்டுவிட வேண்டும். அதாவது ஏறக்குறைய தக்ஷிணாயன ஆறு மாதத்தில் வேதாத்தியயனம் பண்ணவேண்டும். மற்ற ஆறு மாதங்களில் வேதத்தின் ஆறு அங்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.



வேதாத்யயனம் செய்யும்பொழுது அந்த அந்தக் காண்டத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பிரம்மச்சரியத்துக்கு ஏற்பட்ட தனி நியமாத்தோடும் பண்ணினால் தான் மந்திர ஸித்தி உண்டாகும். நாம் ஒன்றும் பண்ணுவதில்லை. "உபயோகம் இல்லை" என்று மட்டும் சொல்லுகிறோம். கல்யாணத்துக்கு முன்பு 'வ்ரதம்' என்று ஒரு பெயர் வைத்து ஒரு மணி நேரத்துக்குள் எல்லா ஸம்ஸ்காரங்களையும் சுருக்கி அர்த்தமே தெரியாமல் கிடுகிடு என்று பண்ணுகிறோம். அதுவாவது இருப்பதனால் இந்த உபந்நியாஸம் பண்ண நேரிட்டது.



வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி [அருகதை உள்ளவனாக்கி] அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும்.



த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான். இந்தத் தகுதியை அவர்கள் பெறுவது உபநயன ஸம்ஸ்காரத்தில்தான். இதைக் காலத்தில் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.



இப்போது இம்மாதிரி விஷயங்களில் சாஸ்திரங்கள் ரொம்பவும் அநாதரவு செய்யப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் சாஸ்திரத்தைப் பார்த்துச் செய்து வந்த நம் தேசத்தில் இப்போது நிலைமை அடியோடு மாறிவிட்டது.




* உபநயன சம்ஸ்காரத்தால் வேதமோத அதிகாரம் பெற்று "பிரம்மசாரி"யாகிறவன் ஆசிரியரிடம் ஒழுகவேண்டிய முறைகளை "குருகுல வாசம்" என்ற உரையில் காண்க.




?????????? ??????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
ஸ்ரீகோவிந்தபகவத்பாதர் - Dr.V. A.தேவசேனாபதி

ஸ்ரீகோவிந்தபகவத்பாதர் - Dr.V. A.தேவசேனாபதி


11006381_330242070503359_7065606719948023610_n.jpg


please read from here


Sankara
 
பிரம்மச்சாரியின் லக்ஷணம்

blank.gif



பிரம்மச்சாரியின் லக்ஷணம்.


ஒவ்வொரு நாளும் பிரம்மச்சாரிகள் அக்னி காரியம், அதாவது ஸமிதாதனம் (சுள்ளிகளை மந்திரபூர்வமாக ஹோமம்) பண்ண வேண்டும். பிக்ஷாசர்யம் (பிக்ஷை எடுத்தல்) செய்ய வேண்டும். அலவணமாக (உப்பில்லாமல்) சாப்பிட வேண்டும். பிரம்மசாரிகளில் பிராம்மணன் பலாச (புரச) தண்டமும், க்ஷத்ரியன அச்வத்த (அரசு) தண்டமும், வைசியன் அத்தி தண்டமும் வைத்துக் கொள்ள வேண்டும். 'ச்ருத தாரண'த்துக்காகத் தண்டம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது எதை அத்தியயனம் பண்ணுகிறானோ அதைக் கெட்டியாக இருத்திக் கொள்வதற்கு அப்படிச் செய்ய வேண்டும். இடிதாங்கி, ஏரியல் என்றெல்லாம் இல்லையா? அப்படி மநுஷ்யனுக்கானது இந்த தண்டம். இடிதாங்கி scientific [விஞ்ஞான பூர்வமானது] என்றால் தண்டமும் scientific தான். வேதத்திலுள்ள எல்லா மந்திரங்களும் மறவாமல் மனதில் இருக்கும்படி பாதுகாக்க தண்டம் வேண்டும். வேத மந்திர சக்தியை தாரணம் பண்ணுவதற்கு அந்த தண்டத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. வேதநிதி அகலாமல் இருக்க அதை வைத்துக் கொள்ள வேண்டும். பிரம்மச்சாரி மேலே கிருஷ்ணாஜினம் (மான்தோல்) போட்டுக் கொள்ள வேண்டும். மேல் வேஷ்டி போட்டுக்கொள்ளக் கூடாது. எலெக்ட்ரீஷியன் மரத்தின் மேல் நிற்கவேண்டும்; ரப்பர் gloves போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற மாதிரி ஆத்மிக மின்ஸாரத்துக்கு பெரியவர்கள் இந்த விதிகளைக் கொடுத்திருக்கிறார்கள்.




இப்பொழுது நாம் ஒரு நாள் உபாகர்மாவைத் தான் பண்ணுகிறோம். அப்புறம் தொடர்ந்து வேதம் படிப்பதில்லை. உத்ஸர்ஜனமும் [ஒரு வேதப்பகுதியைப் படித்து முடிப்பது] பண்ணுவதில்லை. அது பண்ணாததற்குப் பிராயச்சித்தமாக 'காமோகார்ஷீத்' ஜபம் பண்ணுகிறோம்; "நான் பாபம் பண்ணவில்லை; காமம் பண்ணியது, கோபம் பண்ணியது; என்னிடம் வராதே; நமஸ்காரம் பண்ணுகிறேன்!" என்று சொல்லுகிறோம். அந்த மந்திரத்துக்கு அதுதான் அர்த்தம். உத்ஸர்ஜனம் பண்ணினால் இந்த ஜபம் அவசியம் இல்லை.



கால நியமம், விரத நியமம், ஆஹார நியமம் முதலியவைகளை அநுஷ்டிப்பது பிரம்மச்சரியம். அத்யயனத்தில் ஸ்வர லோபம், வர்ண லோபம் முதலான உச்சாரணத் தப்புக்கள் ஏற்படக்கூடும். இதற்குப் பிராயச்சித்தமாக ஆவணியவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுவதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் காயத்ரி ஹோமம் பண்ண வேண்டும். இப்பொழுது ஹோமமாக பிரதம சிராவணக்காரர்கள் (தலைப்பூணூல் பையன்கள்) மட்டும் பண்ணுகிறார்கள். மற்றவர்கள் ஹோமமின்றி ஜபம் மாத்திரம் செய்கிறார்கள். இப்படியின்றி எல்லாருமே ஹோமம் செய்ய வேண்டும். வெறும் ஜபம் பண்ணினால் தூக்கம் வருகிறது. அதனால் லோபம் வருகிறது. ஒரு காரியம் இருந்தால் தூக்கம் வராது. அதற்காகவாவது ஸமித்தினால் ஹோமம் பண்ணலாம். பலாஸ ஸமித்தால் பண்ண வேண்டும். இல்லாவிட்டால் அச்வத்த ஸமித்தால் பண்ணவேண்டும். கடைசி பக்ஷம் தர்ப்பையினாலாவது பண்ண வேண்டும்.



பிரம்மச்சாரி சாப்பிடுவதற்கு கணக்கு இல்லை. வயிறு நிறைய சாப்பிடலாம். ஆனாலும் நாக்கு ருசியைக் குறைக்க வேண்டும். இவன் இஷ்டப்படியான சமையலாக இருக்கக்கூடாது, பிக்ஷையில் எது கிடைக்கிறதோ அதையே சாப்பிட வேண்டும் என்பதும் இவனை பிக்ஷை எடுக்க வைத்ததற்கு ஒரு காரணம். மூல காரணம், பிச்சை எடுப்பதால் இவனுக்கு விநயம் ஏற்படும் என்பதே. ருசி பார்க்கக் கூடாது என்றாலும் ஆஹாரத்தின் அளவுக்கு கட்டுப்பாடு இல்லை.

பிரம்மச்சாரி வயிறாரச் சாப்பிட வேண்டும். பட்டினி முதலிய உபவாஸங்களை பிரம்மச்சாரிக்கு சாஸ்திரங்கள் விதிக்கவில்லை. வளர்கிற பருவத்தில் அவன் புஷ்டியாக இருக்க வேண்டும். அதே ஸமயம் ஸத்வ குணத்தோடு, முரடாக இல்லாமல் இருக்க வேண்டும். குரு சுச்ருஷை இப்படிப்பட்ட ஸத்வ குணத்தை ஊட்டவே ஏற்பட்டது.


தனது வேத சாகையையும், சதுர்தச வித்யைகளில் மற்றவற்றையும் பன்னிரண்டு வருஷ குருகுல வாஸத்தில் கற்றுத் தேற வேண்டும். பிறகு ஸமாவர்த்தனம் பண்ணிக் கொண்டு அகத்துக்குத் திரும்பிப் போய் விவாஹம் செய்து கொள்ள வேண்டும்.


????????? ??????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
“ப்ரஸாதத்தை ப்ரஸாதமா கொஞ்சமாத்தான் குடு&

“ப்ரஸாதத்தை ப்ரஸாதமா கொஞ்சமாத்தான் குடுக்கணும்



நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய ஸ்ரீ ரமணி அண்ணா பெரியவாளை தரிசனம் பண்ணப் போனார்.

“க்ஷேமமா இரு. இப்போவே நெறைய கூட்டம் வரதாமே? பெரிய ஆஞ்சநேயரோன்னோ…..அதான் அப்படி ஒரு ஆகர்ஷணம். ஆமா, பெரிய ஸ்வாமியாச்சே! அவர் சாப்பிடறதுக்கு நெறைய நைவேத்யம் வேணுமே? என்ன பண்ணறே?” என்றார்.


“தெனமும் ஒரு மூட்டை அரிசி வடிச்சு நிவேதிக்கறோம்”


“சுத்த அன்னமாவா?”


“இல்லே பெரியவா. சித்ரான்னங்களா தயார் பண்ணறோம்.”


“என்னென்ன பண்ணறேள்?”


“காலேலேர்ந்து வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், புளியோதரை, மிளஹோரை, தயிர்சாதம்னு மாத்தி மாத்தி பண்ணறோம் பெரியவா”


“அவ்வளவையும் வாங்கிக்க நெறைய பக்த ஜனங்கள் வராளோ?”


“அபரிமிதமா கூட்டம் வரது பெரியவா. அத்தனை ப்ரஸாதமும் செலவாயிடறது” என்றார் பெருமையுடன்.


சற்று மெளனமாக இருந்துவிட்டு “ப்ரஸாதத்தை எப்டி குடுக்கறேள்? துளி போறவா? இல்லே, நெறையவா?”


“கையிலே வாழை இலையை குடுத்து வாரிக் குடுக்கறோம் பெரியவா” என்றார் பெருமை பொங்க.
“அதை நானும் இங்க வரவா மூலம் கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும். ஒன்னை ஒண்ணு கேக்கறேன்.

ஸ்வாமி ப்ரஸாதத்தை துளியூண்டு ப்ரஸாதமா குடுக்கறது சரியா? இல்லே, சாப்பாடு மாதிரி நெறைய குடுக்கறது சரியா?”


பதில் சொல்ல முடியவில்லை.


“என்ன இப்பிடி ஸ்தம்பிச்சு நின்னுட்டியே? ஒன் மூல்யமா நானும் தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இதை கேக்கறேன்”


“இல்லை பெரியவா. வரவாள்ளாம் ரொம்ப தூரத்துலேர்ந்துகூட வரா…..பசியா இருப்பா….அதான்……”
“நீ நெனைக்கறது புரியறது. ப்ரஸாதத்தை கொஞ்சமா குடுத்துட்டு, பசியா வரவாளுக்கு ஒக்கார வெச்சு சாப்பாடு போட்டா சரியா இருக்குமோன்னு பட்டுது……..நம்ம பண்டிதாளும், ஸாஸ்த்ரங்களும் இப்பிடி பண்ணு. அப்படி பண்ணாதே….ன்னு சொன்னாலும், சில விஷயங்கள் அனுபவ ரீதியா பார்த்தாத்தான் தெரிஞ்சுக்க முடியறது”


“நீங்க என்ன சொல்லறேளோ, அதை பண்ணறேன்”


‘நீயே ஒருநாள் தெரிஞ்சுப்பே” முடிவை சொல்லாமலே உத்தரவு குடுத்துவிட்டார்.


சில வருஷங்கள் கழித்து, ஒருநாள் பாண்டிச்சேரி ஆஞ்சநேயருக்கு இதே மாதிரி இலையில் கதம்ப சாதம், தயிர் சாதம் குடுத்துக் கொண்டிருந்தார் ரமணி அண்ணா.


நாலைந்து பேர் அவரிடம் வந்து படுஸீரியஸாக, ” ஸாம்பார், தயிர் சாதமெல்லாம் நெறையவே தர்றீங்க…….வாய்க்கும் ரொம்ப நல்லாவே இருக்கு. இருந்தாலும் ஒண்ணு சொல்லறோம். ஸாம்பார் சாதத்துக்கு தொட்டுக்க ஒரு பொரியலும், தயிர் சாதத்துக்கு கொஞ்சம் ஒறைப்பா ஊறுகாயும் வெச்சீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும்” என்றார்கள்.


ரமணி அண்ணாவுக்கு தூக்கி வாரிப் போட்டது! பல வருஷங்களுக்கு முன் பெரியவா சொன்னது உடனே நினைவுக்கு வந்தது.


“ப்ரஸாதத்தை ப்ரஸாதமா கொஞ்சமாத்தான் குடுக்கணும். அனுபவத்ல புரிஞ்சுப்பே” என்று சொன்ன பாடம் இன்று புத்தி புகட்டியது


https://nithanam.wordpress.com/page/58/
 
பன்னிரு கீதைகள்:-

பன்னிரு கீதைகள்:-


குரு க்ஷேத்திரப் போர்களத்தில் அர்ச்சுனனை முன் வைத்து அகில உலகத்திற்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருளியது பகவத் கீதை.

பகவான் ராமனாக அவதரித்து பரதனை முன் வைத்து சித்திரக்கூடத்தில் புரிந்த தத்துவ உபதேசமே ராம கீதை.

அகஸ்தியர் ராமனிடம் சிவபெருமானின் பெருமைகளை விளக்கி பாசுபத விரதத்தை போதிப்பது சிவ கீதை.

தன்னை மகளாக அடைய விரும்பிய பர்வத ராஜனுக்கு அம்பிகை அருளியது தேவி கீதை.

முத்கல புராணத்தில் ஸ்ரீ கணபதி உபதேசித்துள்ள ஸத்திய தத்துவமே கணபதி கீதை.

ஸ்கந்த புராணத்தில் உமா மகேஸ்வரர் ஸம்வாத வடிவில் குருதத்துவ இலக்கணமாக விளங்குவது குரு கீதை.

நசிகேதஸூக்கு யமதர்மராஜன் உபயோகித்ததும் கடோபநிஷத்தில் கூறப்படுவது யமகீதை.

ஸ்ரீமத் பாகவதத்தில் பதினோறாவது ஸ்கந்தத்தில் பகவான் கண்ணன் கூத்தவருக்கு உபதேசித்த தூய தத்துவமே ஹம் கீதை.

பாலசன்யாசியான தத்தாத்ரேயர் யது மகாராஜனுக்கு செய்த உபதேசமே தத்த கீதை.

ஜனக மன்னனுக்கு அஷ்டாவக்ரர் உபதேசித்தது அஷ்டாவக்ர கீதை.

காணும் அனைத்துமே பிரும்மம்; நாமனைத்தும் அதன் ஸ்வரூபமே பேத புத்திலுள்ள மோகத்தை விலக்கு என்று பிரும்ம புத்திரரான ரிபு அவரது சீடர் நிதாகருக்கு அருளியது ரிபு கீதை.

மனிதனின் முழுமுதற் சத்ருவான மனதை அடக்கியாளும் வழிமுறைகளைக் கூறி தெய்வ பக்தியை வலியுறுத்துவது பிக்ஷூ கீதை.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
Vishwanatha's Grace on Shankara in Kashi

Vishwanatha's Grace on Shankara in Kashi


During Shankara's stay in the city of Kashi an incident happened as ill to test his inner development.

The day was about to dawn. Shankara was on his way to the Vishwanath Temple. A man whom people called pariah (of a low caste)Once, who was accompanied by his wife and 4 dogs. The disciples of Sri Sankara shouted at him to make way, and to keep a distance. The untouchable smiled and said, ""According to your principle of Advaita, which you practice, all the Jivatma are same as God. How do you ask me to go? How am I different from your Paramacharya? What you say is unreasonable. How can I go away from myself?" "To which are you referring as untouchable, this body or the Self? Is not this body also made of dust in the same way as your body? Does the Self ever get polluted? And how can the Self which is present everywhere keep itself at a distance? Is there any difference between you and me the way it has pervaded?" It is a situation in which any one might get confounded.




But Shankara’s reaction was entirely different. Throwing away all his pride, he fell prostrating at the feet of that man. "This is not an ordinary man. One who has ‘described the nature of the Self in such a simple and lucid language is really not ordinary: He is no other than God Himself. Is not this inner enlight-enment a form of Vishweshwara’s Grace?" he said to himself and felt happy.

Sri Sankara realised that it was not an ordinary person and understood that it was Lord Shiva himself who had come along with His consort and the four Vedas. He prostrated before the Lord and sang five slokas called "Manisha Panchakam".

Lord Shiva presented himself along with Visalakshi and blessed Sri Sankara. Shankara even after experiencing the Advaita doctrine was caught for a moment in the illusion of high and low. He offered his salutation to that God in human form who had dispelled his illusion.


Guru Adi Shankara: Vishwanatha's Grace on Shankara in Kashi
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
BANGALORE 10th Visesha Upanyasam @ by Veda Dharma Shastra Paripalana Sabha on 28th February 2015 at Residence of Mr. Nanda Kumar(Mob: 8971800112), # 205, 1st Floor, 10th B Cross, J.P.Nagar,Opposite to Oxford School Ground, Bangalore – 560078.
Upanyasam on "Jatakarma, Namakaranam, Annapraasanam & Choulam" by Upanyasakar "Brahmmasri Bangalore S Rajagopala Ganapatigal" from 6:00 PM to 8:00 PM.

For further information/updates/queries/activity listing and also for any help for Visesha Upanyasam @ Bangalore:Vasudevan S 9986003604 - Prakash A 9980850683 - Venkatesh D K 9880214091 - Ramasubramanian 9686508508 - S R Thyagarajan 8792831901

TamilNadu Contacts for activity listing on Veda Sammelanam : VG Krishnamurthy (9884058582) & S Krithivasan (9840964078)
TamilNadu Contacts for VISESHA UPANYASAM's please contact: Sivakumar S (9884036362) & Rajagopal K (9884655518) & Sundar M (9840494696)




Sage of Kanchi
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
57th Visesha Upanyasam @ Adayar by Veda Dharma Shastra Paripalana Sabha on 28th February 2015 at Residence of Mr.V Pandarinathan @ No: 1, State Bank Colony, Ellaiamman Koil Street, Shastrinagar, Adyar, Chennai-600020.

Upanyasam on "Bhojana Niyamam" Upanyasakar "Brahmmasri Dr. K.V. Seshadrinatha Sastrigal" from 6:30 PM to 8:00 PM.



Sage of Kanchi
 
சின்னச் சின்னப் பாவங்கள்.

சின்னச் சின்னப் பாவங்கள்.


ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?''அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,

''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை. சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?''ஞானி சிரித்தார்.முதல் ஆளிடம்,''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,''என்றார்.

இரண்டாமவனிடம்,''நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.''என்றார்.இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.


இப்போது ஞானி சொன்னார்,
''சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான். இரண்டாமவன் தயக்கத்துடன்,
''இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?''என்று கேட்டான்.

ஞானி சொன்னார்,''முடியாதல்லவா, அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம். நீ சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன். யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது. அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.'' என்றார் குரு.

நல்லவர்களை விடக் குற்றவாளிகளே விரைவில் பக்குவ நிலையை அடைய முடியும். தனை நல்லவர்களாக நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு விமோசனமும், பரிபக்குவமும் எளிதில் சித்திப்பதில்லை.

Sage of Kanchi

Hindukkalin Prasad
 
வேள்விகளில் பலி கொடுப்பது ஜீவ ஹிம்ஸையல்&

வேள்விகளில் பலி கொடுப்பது ஜீவ ஹிம்ஸையல்லவா?...

அடையாறு தியஸாபிகல் சொசைடியில் உலகளாவிய
நிலையில் வெஜிடேரியன் கான்ஃபெரென்ஸ் ஒன்று
1957ஆம் ஆண்டு நடந்தது. அதில் எக்காரணம் கொண்டும்
ஜீவஹிம்ஸை செய்யக்கொடாது, ஜீவ ஹிம்ஸை பாபம்
மரக்கறி உணவுதான் சாப்பிடவேண்டும், மாமிச உணவை
அறவே தவிர்க்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றினார்கள்.
இது 1957ஆம் வருடம் மஹாபெரியவா புதுப் பெரியவாளுடன்
சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லொரியில் தங்கி இருந்தபோது.

மானாடு முடிந்தபின் தியஸாஃபிகல் சொசைடியின் சேர்மென்
திரு சங்கர மேனன் வெளி நாட்டிலிருந்து வந்த ப்ரதினிதிகள்
கோஷ்டியை பெரியவா தரிசனத்துக்கு அழைத்து வந்தார்.
வெள் நாட்டவரும் அவரை தரிசிக்க மிக்க ஆவலுடன்
இருந்தார்கள்.

மேனன் தான் அழைத்து வந்தவர்களின் விவரத்தையெல்லாம்
பெரியவாளிடம் சொல்லி, பெரியவாளின் மஹத்துவத்தைப்
பற்றியும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்வாமிகள் ``என்னைப் பற்றி ஒன்றும் அதிகமாகச் சொல்ல
வேண்டாம்,அவர்களுக்குத் தெரிந்த வரை போதும்``
என்று கையமர்த்தி விட்டார்.

வந்தவர்கள் ஸ்வாமிகளிடம் நாங்கள் ஏதாவது கேட்கலாமா?
என வினவவும், ஸ்வாமிகள் அதற்கு அனுமதியளித்தார்.

அவர்கள் கேட்ட முதல் கேள்வியே``வேள்விகளில் ஜீவ ஹிம்ஸை
செய்கிறார்களே அது பாபமல்லவா``? அப்படிச் செய்யலாமா ``?
என்பதுதான். யாகம் என்பதே ஜீவ ஹிம்ஸை என்பதுதா
அவர்கள் தீர்மானம்.

``செய்யலாம் அது பாபமல்ல`` என்று பதிலளித்தார் ஸ்வாமிகள்.

வந்தவர்கள் கொல்லென்று சிரித்து விட்டனர், மேனனுக்கு
இதைப் பார்த்து ரொம்பக் கோபம் வந்து விட்டது. நீங்கள் இப்படி
தரக் குறைவாக நடந்து கொள்வீர்கள் என்று தெரிந்திருந்தால்
நான் அழைத்து வந்திருக்கவே மாட்டேன், எப்படிப்பட்ட
மஹான் என்று இவரைப் பற்றித்தெரியாமல் நீங்கள்
நடந்தது அனாகரீகமான செயல் என்று கோபத்துடன்
சொன்னார்.

ஸ்வாமிகள் அவரை அமைதிப் படுத்தி, ``ஜீவஹிம்ஸை பாபம்,
அதை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது என்ற
தீர்மானத்துடன் இருக்கிறார்கள், நான் அதை மீறிச் சொன்னவுடன்
அவர்களுக்கு சிரிப்பு வந்து விட்டது; என்னை அவமானப் படுத்தும்
நோக்கம் அவர்களுக்கு இல்லை`` என்று சொன்னார்கள்.

ஸ்வாமிகள் பேசத் தொடங்கினார்கள். ``ஒரு முரடன் ஒருத்தனை க்
கொலை செய்கிறான், நீதிபதி அவனுக்குத் தூக்குத் தண்டனை
அளிக்கிறார். நீதிபதி செய்தது ஜீவ ஹிம்ஸைதானே?`` நாம்
அவரைக் குறை கூறுகிறோமோ?``

வந்தவர்கள் ஸ்வாமி நம்மை நன்றாக மடக்கி விட்டார்கள் என்று
சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

ஸ்வாமிகள் மேலும் சொன்னார்``ஒரு நாற்சந்தி முதலில் ஒரு
ஆம்புலன்ஸ் வருகிறது; ஒரு உயிரைக் காக்கச் செல்வதால்
அதனை முதலில் விட்டு விடுகிறோம்; மற்றொரு சமயம்,
ஆம்புலன்கெ ஒரு ஃபைர் இஞ்சின் இரண்டும் வந்தால்
ஃபைர் இஞ்சினை முதலில் அனுப்பி விடுகிறோம்;
அப்போது பல உயிர்களைக் காப்பாற்ற ஒரு உயிர் போனால்
பரவாயில்லை என்று. வறொரு சமயம் ஃபைர் இஞ்சின்,
ராணுவ வாகனம் வந்தால் ராணுவ வாகனத்தை
முதலில் அனுப்பிவிடுகிறோம், அப்போது நாட்டுக்காக ஒரு
ஊரிலுள்ள சில உயிர் போனால் பரவாயில்லை என்ற எண்ணத்தில்.

அப்போதும் மனம் அறிந்து அந்த ஊரிலுள்ள பல உயிர்களைப்
பலை கொடுப்பதும் ஜீவ ஹிம்ஸைதானே?``
ஓர் அரசன் தன் நாட்டை, ப்ரஜைகளைக் காக்க அண்டை
தேசத்துடன் சண்டை செய்கிறான்; அதனால் பல உயிச் சேதம்,
அதுவும் ஜீவ ஹிம்ஸைதானே?``
அதுபோல் வேள்விகளில் கொடுக்கும் பலி பாபம் அல்ல.
அவை உலக நன்மைக்காகச் செய்யப் படுவதால்``

வேதம் அனாதியானது; பகவானுக்கு மூச்சுக்காற்றுபோல்
விளங்குவது, வேதமும், பகவானும் சாசுவதமானவர்கள்.
Eternal.
வேள்விகளைச் செய்த்து தேவர்களைத் திருப்தி செய்தால்தான்
தேவர்கள் மழையை ப் பொழிந்து நமக்கு நல் வாழ்வு
அளிக்கிறார்கள். எனவே வேள்விகளில் செய்யும் ஹிம்ஸை
பாபமாகாது.

இதனைக் கேட்ட வெளி நாட்டினர் மிகவும் அவர் பேச்சில் உருகி
அவர் சொன்ன நியாயமான வாதங்களை ஏற்று சந்தோஷத்துடன் சென்றார்கள்

ஜய ஜய சங்கரா...

தகவல்:- தரிசன அனுபவங்கள் கோதண்ட ராம சர்மா.

இதை படித்தவுடன் எனக்கு அப்பைய தீக்ஷிதர் வாழ்வில்
நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அவரிடம் பொறாமை கொண்டிருந்த தாதாசாரியார்
என்பவர் ,தீக்ஷிதர் தீவிர சைவ பக்தராக இருந்து பல
யாகங்கள் செய்து வாஜபேயராக இருந்தது கண்டு
மன்னனிடம் அவருக்குள்ள மரியாதையையும் அளவற்ற
அன்பையும் குலைக்கத் திட்டம் தீட்டினான். அவர் காளஸ்தியில்
செய்யும் யாகத்தில் பலி கொடுப்பதை மன்னனிடம் சொல்லி
சிவ பக்தரான இவர் எப்படி பலை கொடுக்கலாம் ஆகவே
தாங்கள் யாகத்துக்குச் செல்ல வேண்டாம் என்று கூற
மன்னனும், அவர் வார்த்தையில் மோசம் போனான்.


மற்ற மன்னர்கள் யாவரும் வந்திருந்தனர். இந்த நிகழ்வை
மானஸீகமாக உணர்ந்த தீக்ஷிதர் யாகத்தில் பலியானவை
எல்லாம் எப்படி இறவனடி சேர்கின்றன என்பதை உலகத்தாருக்குப்
ப்ரத்யக்ஷமாய் உணர்த்தினார். பலியிடப்பட்ட ஆடுகள் மற்றும்
ஏனைய எல்லாம் தங்க ரேக்கால் பூசப்பட்டு விமானத்தில்
பகவானிடம் செல்வதை அங்கு வந்திருந்த மக்கள் கண்களுக்கு
நிதரிசனமாகத் தெரிந்தது. மன்னர்கள் வந்திருந்த அனைவரும்,
தீக்ஷிதரை வணங்கி, அவரிடம் ஆசி பெற்றதுமல்லாமல், அவரது
கீர்த்தி மேலும் பெருகிற்று. இது உண்மையாக நடந்த சம்பவம்!

நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களின் அறியாமைப் போக்க
பெரியவா சொன்ன மேற்படி விளக்கம் , தீக்ஷிதரின் அனுபவத்தால்
நமக்கு நம் அற்யாமையைப் போக்க வல்லதொன்றாக நினைத்து
இதனையும் சேர்த்துப் பகிர்ந்தேன்.

பாரத நாடு பல பெரிய மஹான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி!!



Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
சூரிய சந்திரரைக் கொண்டு பாலூட்டும் தாய்

சூரிய சந்திரரைக் கொண்டு பாலூட்டும் தாய்


tk_2323046f.jpg



சித்தாந்தங்கள் நமக்கு எட்டும், எட்டாது. எட்டாமல் போனாலும் தோஷமில்லை. அன்பு எவருக்கும் எட்டாமல் போகாது. அதுதான் நமக்கு வேண்டியது.


அந்த அன்பை, ஜகத்துக்கெல்லாம் மாதாவாக அந்த ஜகத் ரூபமாகவே இருக்கிறவளின் அன்பை, சுவாமி என்ற உயிருக்கு உடம்பாக அவளைச் சொல்லும்போதே ஆசார்யாள் தாய்ப்பாலாகக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்.


அம்பாளை அவய சரீரமாக இல்லாமல் விச்வாகாரமாக, விராட் ஸ்வரூபமாகச் சொன்னாலும் அது ஜடம் என்று சொல்ல அவருக்கு மனசு வரவில்லை. அம்பாளுடைய மாத்ருத்வத்தை அவரால் மறக்க முடியவில்லை. அதனால்தான் சமஸ்த ஜீவராசிகளுக்கும் பால் கொடுக்கிற தாயாக இந்த விராட் ஸ்வரூபத்திலேயே என்கிறார். அதாவது சூரியன் சந்திரன் இரண்டும் அவளுடைய (விராட் ரூபத்தில்) ஸ்தனங்களாக இருக்கின்றன என்கிறார்.


குழந்தைகளுக்குத் தாய் ஸ்தன்ய பானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்குங்கூட சூரிய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள்.

தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த நூற்றாண்டு ஆரம்பத்தில் இதை சயன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு ரொம்ப முன்னால், வேத காலத்திலிருந்தே தாவரங்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பது நமக்குத் தெரியும்.


சூரிய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள். உயிரூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? சூரிய ரச்மியிலிருந்துதான் தாவரங்கள் ஜீவன் பெறுகின்றன என்பது தெரிந்த விஷயம். சூரிய வெளிச்சமில்லாத இருட்டான இடத்தில் விதை போட்டால் செடி வராது. தாவரங்கள் நேராகத் தாங்களே ஜீவ சத்தை சூரியனிடமிருந்து பெறுகின்றன.


அதோடு நிற்காமல் பரோபகாரமாக, இப்படி நேரே சூரியனிடமிருந்து ஜீவ சத்தைப் பெற முடியாத நமக்காகவும் தாவரங்களே நாம் அடுப்பு மூட்டிச் சமைக்கிற மாதிரி சூரிய உஷ்ணத்தில் அந்த சூரிய சக்தியையே நமக்கு ஜீரணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன. சோலார் குக்கர். காய்கறிகளையும், அரிசி முதலான தானியங்களையும் நாம் சாப்பிடும்போது இந்த சூரிய பிரசாதமான சக்திதான் நமக்கு உள்ளே போய் ஜீவசத்தைத் தருகிறது.


சூரிய சக்தியாலேயே biosphere என்கிறதாக இந்த லோகம் ஜீவ லோகமாக இருக்கிறது. சூரியனுடைய வெளிச்சத்திலே ஒயாமல் ரிலீசாகிக் கொண்டேயிருக்கும் சக்தி சகல அணுக்களுக்கு உள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற்போல ஃபோடோஸிந்தஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ பிரபஞ்சத்தை நடத்துகிறது என்று இப்போது சயன்சில் சொல்வதை, எத்தனையோ யுகம் முந்தியே நம்முடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது.


தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்தச் சக்தியைப் பெறுகிறதற்குத்தான் காயத்ரீ முதலான மந்திரங்களைக் கொடுத்திருக்கிறது.


சயன்சுக்கும் பல படி மேலே போய் தேக சக்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தி சக்தி, பாரமார்த்திகமான சாதனா சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து கிரகித்துக்கொள்வதற்கு காயத்ரீயைக் கொடுத்திருக்கிறது.


அங்கே சவிதா, சாவித்ரி என்று நம்மைப் பெற்றெடுத்து வாழ்வு தருகிற பிரியமான தாயாகவே சூரிய சக்தியைச் சொல்லியிருக்கிறது. இந்த சக்தியும் ஆதி சக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்கந்தான் , பாலூட்டும் அங்கம் என்கிறார் ஆசார்யாள்.


சந்திரனையும் ஏன் அப்படிச் சொன்னார்? சந்திர கிரணத்தினால் என்ன உணவு கிடைக்கிறது? அது ஜிலு ஜிலு என்று இருப்பதைப் பார்த்தால் ஆனந்தமாயிருக்கிறதே. இதுவே சாப்பாடுதான். அது மட்டுமில்லை. மூலிகைகள், மருத்துவ சக்தியுள்ள ஒஷாதி வகைகள் சந்திரிகையிலிருந்துதான் சத்து பெறுகின்றன.


சூரிய ரச்மியில் உண்டான பதார்த்தங்களை வகைதொகை இல்லாமல் சாப்பிட்டு நாம் வியாதியை உண்டாக்கிக் கொள்ளும்போது மருந்துகளைத் தேடிப் போகிறோம். மருந்துகளைச் செய்யும் மூலிகை வர்க்கம் சந்திர கிரணத்திலிருந்துதான் போஷாக்கு பெறுகிறது.


இந்த மூலிகைளுக்கு உச்சியிலே ஸோமலதையை வேதமே சொல்லியிருக்கிறது. சோமன் என்றாலே சந்திரன்தான். சோம ரசத்தை பூலோகத்தின் அமிருதம் என்றே சொல்லலாம். அந்த ஆஹுதிதான் சோம யாகங்கள் என்றே பிரசித்தமான யஜ்ஞங்களில் மையமான அம்சம். யோகிகளுக்கு சிரஸ் உச்சியில் அமிருதம் கொட்டுவதும் சந்திரனிலிருந்துதான்.


சமுத்திரம் பொங்குவதும் அடங்குவதுமாக tide என்று ஏற்படுவது முக்கியமாக சந்திரனின் இழுப்பினால்தான். பருவம், பருவக்காற்று, மழை என்பவையெல்லாமே இப்படிச் சந்திரனுடன் சம்பந்தப்பட்டுவிடுகின்றன. சூரிய ரச்மிகள் சமுத்திர ஜலத்தை ஆவியாக்கி அந்த ஆவிதான் மழையாகப் பொழிந்து தானியச் செழிப்பு ஏற்படுகிறது.


இந்த விதத்திலும் சூரியன் நமக்குச் சாப்பாடு போட்டு உயிர் கொடுக்கிறது என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அந்த மழையை உண்டாக்குவதில் சந்திரனுக்கே ஜாஸ்திப் பங்கு என்கிறபோது அவனுந்தான் நமக்குச் சாப்பாடு போடுகிறான் என்றாகிறது.


ஆக, அன்னபூர்ணேச்வரியாக நமக்குச் சாப்பாடு போட்டு ரக்ஷிக்கிறவள் சூரிய சந்திரர்களைக் கொண்டே பாலூட்டுகிறாள் என்பது ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது. சூரியனுடைய உஷ்ண தாரை, சந்திரனுடைய சீதள தாரை இரண்டாலும் அம்பிகை ஜீவ சமூகத்திற்கு பானம் கொடுத்து வளர்க்கிறாளென்று சொல்வது சயன்சின் உண்மைகளையே பக்தி பாஷையில் சொல்வதுதான். சூரியன் புத்தி பிரகாசத்தை உண்டாக்குகிறானென்றால் சந்திரன்தான் மனசுக்கு அதி தேவதை.


பௌர்ணமி, அமாவாசைகள் உப்பு சமுத்திரத்தில் tide உண்டாக்குகிறாற்போலவே சித்தத்தின் எண்ண சமுத்திரத்திலும் பாதிப்பு உண்டாக்குவது பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. சித்தக் கோளாறு உள்ளவர்கள் விஷயத்தில் அது நன்றாகத் தெரிகிறது. அவர்களை 'lunatic' என்பது சந்திர சம்பந்தப்படுத்தி வைத்த பெயர்தான். லத்தீனில் 'luna' என்றால் சந்திரன் .


அமாவாசையில் தர்ப்பணம். அதை நிறைந்த நாள் என்பது. கிரகண காலத்தில் மந்திர ஜபத்திற்கு வீர்யம் கூடுதலாவது முதலானவை. சூரிய சந்திரர்களுக்கு இக, பரலோகங்களின் உள்ள அநுக்ரஹ சக்தியைக் காட்டுகின்றன. அந்த அநுக்ரஹமெல்லாமும் முடிவிலே அம்பாள் கொடுக்கும் ஞானப்பாலின் சொட்டுக்கள்தான்.


இதையெல்லாம் அடக்கித்தான் “சசி மிஹிர வக்ஷேருஹ யுகம்” என்றார்.


சூரிய, சந்திரர்களைப் பரமாத்மாவின் வலது, இடது கண்களாகச் சொல்வது வழக்கம். சூரியனாயிருந்து கொண்டு உன்னுடைய வலது கண் பகல் வேளையைப் படைக்கிறது. சந்திரனாயிருந்து கொண்டு இடது கண் ராத்திரியைப் படைக்கிறது. நம் ஸ்தோத்திரத்திலேயே ஒரு சுலோகம் இதனைச் சொல்கிறது.
அம்பாளுடைய தாடங்கங்களாக சூரிய சந்திரர்களை சகஸ்ரநாமத்தில் சொல்லியிருப்பதையும் முன்னாடி சொன்னேன். இதெல்லாவற்றையும் விட நம்மைக் குழந்தைகளாக்கி அவள் பால் கொடுக்கிற வக்ஷேருஹங்களாக அவற்றைச் சொல்வதே நெஞ்சைத் தொடுகிறது.


(தெய்வத்தின் குரல் மூன்றாம் பாகம்)



????? ?????????? ?????? ?????????? ????? - ?? ?????
 
பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம

பலரும் செல்லும் பக்தி வழியின் முக்கிய அம்சம் இறைவனிடம் சரண் அடைவது.

இது வெறும் சொல்லளவிலே மட்டும் இல்லாது மனத்தளவில் ஆழமாக இருந்தால்தான், அது பரிபூரண சரணாகதி ஆகும்.

அப்படி இருந்தால் சரணடைந்தவன் நான் தான் இறைவனிடம் சரணடைந்துவிட்டேனே, எனக்கு இது நடக்கவில்லையே, அது கிடைக்கவில்லையே என்று நினைக்கவும் மாட்டான், சொல்லவும் மாட்டான்.

அப்படிச் சரணடையும்போது மனம் பூரண அமைதி கொள்ளும்.

அப்போது அந்த அமைதியை அனுபவித்துக் கொண்டிருப்பவன் யார் என்று கேட்டால் அவனால் என்ன சொல்லமுடியும்?

நான் என்று சொல்வானா அல்லது இறைவன் என்பானா, அல்லது இறைவன் தன்னுள் இருப்பதால் என்பானா?

அப்படியே எதுவும் சொன்னாலும் முன்பு இறைவன் அவனுள் இல்லாது போயிருந்தானா, இல்லாது போய் இருந்தால் அப்போது அவன் என்னவாய் இருந்தான் என்ற கேள்விகளுக்கு என்ன பதில் வரும்?

ஆக பக்தி வழி மன அமைதியைக் கொடுக்கும் என்பதோடு சரி. அமைதியாய் இருக்கும் அவன் யார் என்பதற்கு அங்கு பதில் இல்லை.

அவனை சரண் அடைவோம் வாழ்வினில் நலம் பல பெருவோம்.


Source: Sage of Kanchi

Kumar Ramanathan
 
கணேச பஞ்சரத்னம் ...

கணேச பஞ்சரத்னம் ...

https://www.youtube.com/watch?v=hJi48Tt8G4g

This beautiful sloka honors Sri Maha Ganesha (Ganapati), Remover of Obstacles.

Vocals: M. S. Subbulakshmi

முதாகராத்த மோதகம் ஸதாவிமுக்தி ஸாதகம்
கலாதரா வதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம்
அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்
நதாசபாசு நாசகம் நமாமி தம் விநாயகம்

பூரண மோதகம் கைக்கொண்டவனே
காரணம் முக்திக்கு ஆனவனே- நெற்றிச்
சூரணமாய்க் கலைச் சூடிநின்று
ஆழிசூழ் உலகைக் காப்பவனே
தான்தலை என்றே நின்றவர்க்கே
தான் தலைவன் என ஆகிநின்றுத்
தீயரை நாசம் செய்வித்த – வி
நாயகன் உனைத்தினம் வணங்கிடுவோம்

நதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்
நமஸ் ஸுராரி நிர்ஜரம் நதாதிகாப துத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

பயமெனும் பேரிருள் போக்கிடவே – புது
ஞாயிறுயெனவே எழுந்தவனே
தேவாசுரர் பாதம் பணிந்திடவே – அவர்
மூவாப்பிணியை முடிப்பவனே
சூரர்கள் தொழுதிடும் அதிபதியே – நிதி
சாரமதைத் தினம் காப்பவனே
வாரண முகத்து மூலவனே
சூரகணங்களின் நாயகனே – மஹா
ஈஸ்வரன் இணையாம் உனைத் தொழுதால்
சாஸ்வதமாய் பரம் கிட்டிடுமே.

ஸமஸ்த லோகசங்கரம் நிரஸ்த தைத்ய குஞ்ஜரம்
தரேதரோ தரம்வரம் வரேப வக்த்ர மக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

ஈரேழ் உலகினைக் காத்திடவே
வீழ்த்திடுவான் தைத்யக் கூட்டத்தையே
பானைபோல் வயிற்றைக் கொண்டவனே
யானையின் முகத்தொடு அருள்பவனே
ஐங்கரத்தொடு புகழ் கொண்டவனே – பெருங்
காருண்யத்தால் மன்னித்தருள்பவனே
உள்ளத்திலுண்மைக் கொண்டு தினம்
பொலிந்திடும் கரியைத் தொழுதிடுவோம்

அகிஞ்ச நார்த்தி மார்ஜனம் சிரந்த நோக்தி பாஜனம்
புராரி பூர்வ நந்தனம் ஸ¤ராரி கர்வ சர்வணம்
ப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்
கபோல தான வாரணம் பஜே புராண வாரணம்

விந்தை பலதினம் செய்திங்குச்
சிந்தை நோயைத் தீர்ப்பவனே
தந்தையாம் திரிபுரம் வென்றவனின்
முந்தை புதல்வனாய் உதித்தவனே
இந்திரன் அகந்தையைக் கொன்றவனே
அந்தியில் நிலையாய் இருப்பவனே
தந்தத்தை சொந்தமாய் கொண்ட கரி
தந்தலை தனையேச் சூடியவன்
ஐந்துகரத்தனைப் பாடிடுவோம்.

நிதாந்த காந்த தந்தகாந்தம் அந்தகாந்த காத்மஜம்
அசிந்த்யரூப மந்த ஹீந மந்தராய க்ருந்தனம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்
தமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்தகம்

தந்தத்தை சுகந்தவாய் வைத்திருப்பான் – அந்தி
மந்தகனை அழித்தொழித்திடுவான் – மூடர்
சிந்தித்து அறியா உருவத்துடன் – அன்பர்
நெஞ்சத்தில் என்றும் நிரந்தரமாய் - ஒற்றை
தந்தத்தைக் கொண்ட வாரணத்தைச்
சந்ததம் நாமும் போற்றிடுவோம்.

பலச்ருதி:
மஹா கணேச பஞ்ச ரத்ன மாத ரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ர பாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோக தாம தோஷதாம் ஸுஸா ஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமா ஹி தாயரஷ்டபூதி மப்யுபைதி ஸோசிராத்

நூற்பயன்
ஐந்தணி இதனை கருக்கொண்டு
காலையில் விநாயகனை வணங்கிட
நோயற்ற வாழ்வுடன் தோஷமி்ன்றி
நிம்மதியுடனே நற்புத்திரரும்
நரைதிரையில்லா நீளாயுள்
வரையேதுமில்லாத அனுபூதிடன்
பெற்றே நற்கதி எய்திடலாம்.



Source: Sage of Kanchi

Hindukkalin Prasad
 
நமது ஆச்சார்யர்களை பற்றி தெரிந்துகொள்வ&#

நமது ஆச்சார்யர்களை பற்றி தெரிந்துகொள்வோம்

காஞ்சி காமகோடி பீடத்தில் தற்போது உள்ள ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்யர் மற்றும் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சாரியர்கள் உட்பட 70 ஆச்சார்யர்கள் இப்பீடத்தை அலங்கரித்துள்ளனர்.அவர்களின் முதலாமானவர் ஆதிசங்கரர் ஆவார்.இவரை அனேகமாக அனைவருக்கும் தெரிந்தவர். மற்ற ஆச்சார்யர்களை பற்றி இனி வரும் நாட்களிள் நாம் தெரிந்துகொள்வோம்.ஆதிசங்கருக்கு அடுத்தபடியாக பீடத்தை அளங்கரித்தவர் ஸ்ரீ சுரேஸ்வரரின் சிஸ்யர் ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஆவார்.

3:ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
(கி.மு.407முதல்364 வரை)

10647227_753420148052972_2382090699178390521_n.jpg


ஸ்ரீ சர்வஞ்ஞாத் மேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் தந்தை பெயர் வர்த்தனர்.தந்தை இவருக்கிட்ட நாமம் மஹாதேவர்.ஸ்ரீ ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடமேறியபின் நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேத விற்பன்னர்கள் வாதிட வந்தனர்.வாதிட்ட சில நாழிகைகளிலேயே அவர்கள் ஒவ்வொருவராய் தோற்க,மூன்று நாள் தொடர்ந்து தளராமல் வாதிட்டார் ஏழு வயதே ஆன மஹாதேவர்.நான்காம் நாள் பகவத்பாதரின் கருத்தை ஏற்றுச் சரணடைந்தார்.இளம் வயது மஹாதேவரின் விசாலமான ஞானத்தைக் கண்டு அவரை சிஷ்யராக ஏற்று தமது வாரிசாக்கத்திருவுளம் கொண்டார் குரு சங்கரர்.

அப்பாலகனின் பெற்றோரை வரவழைத்து தமது விருப்பத்தை வெளியிட்டார்.அவர்கள் மகழ்வுடன் சம்மதித்தனர்.குருநாதரே மஹாதேவனுக்கு சந்யாச தீக்ஷை அளித்து சர்வக்ஞாத்மர் என்ற தீக்ஷா நாமத்தை சூட்டினார்.இப் பால சந்யாசி சுரேஸ்வராச்சாரியரின் பொருப்பில் விடப்பட்டு சகல சாஸ்திர பண்டிதரானார்.

'இந்திர ஸரஸ்வதி'என்ற பட்டம் இவரிலிருந்துதான் தொடங்கியது.தேவேச்வரர் என்றே இவர் சுரேஸ்வரரைக் குறிப்பிடப்படுவார்.இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு அழகு மிளிரும் நடையில் 1267 பாசுரங்கள் கொண்ட விரிவான விளக்க உரை எழுதி உள்ளார் இந்த விளக்க உரை'சம்க்ஷேபசாரீரகா' எனப்படுகிறது. அத்துடன் கவிதை நடையில் 'சர்வக்ஞவிலாச' எனும் நூலையும் இவர் இயற்றி உள்ளார்.அப்போதைய துவாரகா மடத்தின் ஆசார்யரான பிரம்ம ஸ்வரூபருக்கு குருவாக இவர் இருந்தார்.இவர் காலத்துச் சோழ மன்னன் மனுகுலாதித்த சோழன் இம்மன்னனைப் பற்றித் தன் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் காஞ்சியில் கி.மு.364ல் நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ண பஞ்சமியில் சித்தியடைந்தார்




Source: Sage of Kanchi

Hari Haran
 
பக்தி வரவேண்டும் என்றால் ஒழுக்கம் மிகவு&

பக்தி வரவேண்டும் என்றால் ஒழுக்கம் மிகவும் அவசியம்.


பக்தியில் நம்முள் குடிகொண்டு இருக்கும் இறைவனை உணரலாம்.

பக்தி வரவேண்டும் என்றால் ஒழுக்கம் மிகவும் அவசியம்.

வாழ்க்கைக்கு ஒழுக்கம் மிக அவசியம். ஒழுக்கமே ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மேம்படுத்தும். ஒழுக்கமுள்ள வாழ்வு வாழ இறைவனின் அருளும் நமக்குத் தேவை.

ஓரிடத்தில் விளக்கு இருப்பது நமக்குத் தெரிந்தால் தானே, அந்த விளக்கை ஏற்றி வைத்து நம்மால் வெளிச்சத்தைப் பெற முடியும். விளக்கு எங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வெளிச்சம் தேவைப்படுவதைப் போல, இறைவனை வணங்கவும், வாழவும் இறைவனின் அருள் நமக்குத் தேவை.

இறைவன் அருளைப்பெற என்ன செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவனிடம் அசைக்க முடியாத பக்தி வரவேண்டும்.

இறைவனை வழிபடவும் இறைவனின் அருள் இருந்தால் தான் முடியும்.

அப்படிப்பட்ட இறையருளைப் பெற ஒழுக்கம் நிறைந்த வாழ்வு நமக்கு வழிகாட்டுகிறது.

அதற்கு நாள்தோறும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.

நல்லனவற்றையே எண்ணி, நல்லனவற்றையே பேச வேண்டும்.

அப்படிச் செய்யும் போது மனம் இறைவன் அருள்பெற ஏதுவாகிறது.

மனம் பண்பட்டவுடன் இறையருள் அங்கே உதயமாகிறது.

பண்பட்ட நிலம் பயிர்த்தொழிலுக்கு ஏற்றதாகிற மாதிரி, பண்பட்ட உள்ளம் வழிபாட்டுக்கு ஏற்றதாகிறது.

அப்படி பண்பட்ட உள்ளத்தினை உடையவர்கள் தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் இறைவனை வழிபட வேண்டும்.

இறைவனிடம் இடைவிடாத பக்தி செலுத்த வேண்டும்.

நல்ல மனத்தையும் நல்ல சிந்தனையையும் அருளும்படி இறைவனிடம் நாம் வேண்டிக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கம் அவரவர் நிலைக்கு ஏற்றபடி மாறும்.

நாம் எல்லோரும் ஒழுக்கமாக வாழ்ந்து நம் உள்குடி இருக்கும் இறைவனை உணர வேண்டி, அவன் மேல் அசைக்க முடியாத பக்தி வர வேண்டி அவன் நாமம் தினமும் கை தூக்கி ஆழமான உணர்வுடன் அவன் நாமம் உரைப்போம் .



Sage of Kanchi

Kumar Ramanathan
 
பூதிருத்ராக்ஷ மாஹாத்ம்யம்



பூதிருத்ராக்ஷ மாஹாத்ம்யம்


சைவ சமயச் சின்னங்களான விபூதி, ருத்ராக்ஷங்களின் பெருமைகளை விளக்கும் பொருட்டு “பூதிருத்ராக்ஷமாஹாத்ம்யம்” ஸ்ரீபரமசிவேந்த்ரரால் இயற்றப்பட்டுள்ளது. ‘மந்திரமாவது நீறு’ என்று திருஞானசம்பந்தரால் போற்றப்படும் பெருமையுடையது திருநீறு.

வடமொழியில் விபூதி,
பஸிதம்,
பஸ்மம்,
க்ஷாரம்
ரக்ஷை
என்ற ஜந்து பெயர்களால் வழங்கப்படுகிறது.



• விசேஷமான செல்வம் தருவதால் “விபூதி” என்றும்

• அணிபவர்க்கு ஒளி தருவதால் “பஸிதம்”என்றும்
• பாபத்தை பஸ்மமாக்குவதால் “பஸ்மம்” என்றும்
• ம்ருகங்கள் முதலான உயிர்களால் ஏற்படும் துன்பங்களைப்போக்குவதால் “க்ஷாரம் " என்றும்

• பைசாசம் முதலிய உபாதைகளினின்று காத்தாலால் “ ரக்ஷை "என்றும் திருநீறு வழங்கப்படுகிறது.


சிவாக்னியால் சரீரத்தை எரித்து சக்தியாகிய (சோமம்) அம்ருதத்தினால் பரிசுத்தம் செய்து யோக மார்க்கத்தினால் மறுபிறப்பற்றவனாக ஆவதற்கு விபூதியாகிய மஹாபஸ்மம் முக்கியம் என்று ப்ருஹத்ஜாபால உபநிஷதம் கூறுகிறது.


பூதிருத்ராக்ஷ மாஹாத்ம்ய நூலின் முற்பகுதியில் விபூதியின் பெருமையும் பிற்பகுதியில் ருத்ராக்ஷத்தின் பெருமையும் எண்ணிலாத வேத, சாஸ்த்ர, புராண, ஆகமங்களிலிருந்து மேற்கோள்கள் வாயிலாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.


திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற ஆயுர்வேத வைத்யராகவும், ஸ்ரீமடத்தின் சிஷ்யராகவும் விளங்கிய V.B. நடராஜ சாஸ்திரிகளால் தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூலகத்திற்குத் தரப்பட்ட 260 சுவடிக்கட்டுகளுள் இச்சுவடியும் அடங்கும். இச்சுவடித் தொகுப்பில் ருத்ராக்ஷ மாஹாத்ம்யம் காணப்படவில்லை. எனவே விபூதியின் சிறப்பைக் கூறும் பூதி மாஹாத்ம்யம் மட்டுமே தஞ்சாவூர் மன்னர் ஸரபோஜியின் ஸரஸ்வதி மஹாலய நூலத்தாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 1.




விபூதியின் பெருமை,
• பசுவைத் தேர்ந்தெடுத்தல்,
• அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆஹாரம்,
• கோமயம் (பசுஞ்சாணம்) எடுக்கும் முறை,
• கோமயம் எடுக்கும் நபரின் தகுதியும், நியமும்,
• விபூதி தயாரிக்கும் முறை,
• விபூதி அணியும் முறை,
• பஸ்மஸ்நாநம் செய்ய வேண்டிய காலங்கள்,
• த்ரிபுண்ட்ரம் என்பதின் பொருள்,
• த்ரிபுண்ட்ரம் தரிக்க வேண்டிய இடங்கள்,
• த்ரிபுண்ட்ரம் தரிக்கும் முறை

முதலிய பல அரிய விஷயங்களை

1. ப்ருஹத்ஜாபால உபநிஷத்
2. பத்ம புராணம்
3. பராசர புராணம்
4. வஸிஷ்ட புராணம்
5. லிங்க புராணம்
6. கருட புராணம்
7. ப்ரும்ம புராணம்
8. நாரதீய புராணம்
9. ஸ்காந்த புராணம்
10. ப்ரும்மகைவர்த்த புராணம்
11. அகஸ்த்ய புராணம்
12. ப்ரும்மாண்ட புராணம்
13. ஸ¤தஸம்ஹிதை
14. க்ரியாஸாரஸ்ம்ருதி
15. சங்கரஸ்ம்ஹிதை
16. மஹாபாரதம்
17. போதாயநஸ¤த்ரம்
18. தர்மஸாரஸ¤தாநிதி
19. சிவரஹஸ்யம்
20. ஸெளரஸம்ஹிதை
21. கூர்ம புராணம்
22. ப்ருஹந்நாரதீயம்
23. ஸ்ம்ருதிரத்னாவளி
24. ஸ்ம்ருதி பாஸ்கரம்
25. மானவ உப புராணம்
26. சிவதர்மம்
27. பாரத்வாஜ ஸ்ம்ருதி மற்றும்
28. மானவீய ஸம்ஹிதா

ஆகிய பழமையான நூல்களின் அடிப்படையில் உரிய மேற்கோள்களுடன் காட்டி ஸ்ரீஸ்வாமிகள் பூதிமாஹாத்ம்யம் நூலை அமைத்துள்ளார்.


திருநீற்றின் பெருமையை விளக்கும் நூல் இதுபோல் மற்றொன்று இல்லை.


திருவாவடுதுறை ஆதீன மடத்தின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் க்ரந்தச் சுவடிகளுள் பூதிருத்ராக்ஷமாஹாத்ம்யத்தின் மற்றொரு பகுதியான ‘ருத்ராக்ஷமாஹாத்ம்யம்’ அடங்கிய முழுமையான சுவடி ஒன்று திருவாவடுதுறை ஆதீன நூலகத்தில் இருப்பதாக தஞ்சை ஸரஸ்வதி மஹால் நூல்நிலையத்தில் ஸம்ஸ்க்ருத பண்டிதராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற N.ஸ்ரீநிவாஸன் கண்டறிந்துள்ளார்.


ருத்ராக்ஷமாஹாத்ம்யமும் விரைவில் வெளிவர குருவருள் துணை செய்ய வேண்டும்.


Sankara: ??????????????????????? ????????? ?????? - III : ??????
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top