• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Blessed Maasi Magam-is on March 4 - 2015

Blessed Maasi Magam-is on March 4 - 2015



Blessed Maasi Magam Wednesday to all Devotees !!!!!

Masi Makam or Masi Magam is an important festival in the Tamil speaking world. The festival falls in the Tamil Month of Masi (February – March). In 2015, Masi Makam is on March 4. Maham or Makam is one among the twenty seven stars in the astrological system. The makam star in the Masi month usually falls on the full moon day and is considered highly auspicious in many temples across South India, especially in Tamil Nadu, Puducherry (Pondicherry) and Kerala.

One of the important rituals on this day is the taking of idols to the seashore or ponds. Therefore the festival is also referred as holy bath ceremony. Long processions from different temples arrive at the sea shore with the idols of Lord Vishnu, Lord Shiva. Idols from Shakti temples are also brought to the seashore. Pujas and other rituals are held at the sea shore and thousands of devotees throng the sea shore on this day to offer prayer.

There are numerous myths in vogue related to Masi Makam. Each temple has a myth for celebrating Masi Makam. The most important one is related to Lord Shiva. Legend has it that Lord Shiva appeared as a child before King Vallala of Tiruvannamalai who was an ardent devotee. The king had no child and Lord Shiva promised to perform his last rituals. The king died on a Masi Magam day and it is said that the Lord performed his last rites. Lord Shiva also blessed the king by saying that whoever bathes in the sea during Masi Magam will merge with him and will get ‘mukthi.’ It is believed that every year the Lord visits the sea to perform the last rites of the king.

Once in twelve years the Masi Magam attains even more significance and then Maha Maham is held. Apart from the full moon, during the Maha Maham there is the movement of Jupiter into Leo (singha rasi.) Maha Maham is of great importance at the Adi Kumbeswaran temple in Kumbakonam. There is sacred teerth (tank) called Maha Maham here.

Source: Sage of Kanchi

Chandra Subramaniam
 
அம்பாள் வருகை!

அம்பாள் வருகை!

ஒரு நாள் என் எதிர்வீட்டில் ஒரு சுமங்கலி மாமி
கும்பகோணத்திலிருந்து வந்து தங்கினாள். அவள்
காமாக்ஷி அம்மனை குத்து விளக்கில் ஆவாஹனம் செய்து
முறையாக பூஜை செய்பவள். பூஜை முடிந்தவுடன் கேட்பவர்
குறைகளுக்கு தீபஒளியைப் பார்த்தவாறே தக்க பதில்
சொல்வாள். பூஜைக்கு எல்லாரையும் அழைத்திருந்தாள்
எதிர் வீட்டுப் பெண்மணி. என் பத்னியும் சென்றிருந்தாள்.
அன்று பூஜைக்கு நிறைய சுமங்கலிகள் வந்திருந்தனர்.
பலர் கேட்ட கேள்வைகளுக்கு வெகு நேரம் வரை அந்த
அம்மாள் அருள் வாக்கு சொன்னாள்.

இவளுக்கு அந்த பூஜை அருள் வாக்கு இவற்றில் ஆர்வம்
இல்லாததாகையால் இவள் ஒன்றும் கேட்கவில்லை.
ஆவேசம் வந்த எதிர் வீடுப் பெண்மணி இவளை
ஏதாவது ப்ரச்நைக்கு அருள்வாக்கு கேட்கச் சொன்னாள்.

இவள் ஒன்றும் தேவை இல்லை என்று சொல்லி விட்டாள்
ஆவேசம் வந்த அம்மா சிரித்தாள். இவள் எனக்குக் குறை
ஒன்றுமில்லை என நிதானமாகக் கூறிவிட்டு அகத்திற்கு
வந்து என்னிடம் நடந்தவை எல்லாம் கூறினாள்.

வெள்ளிக்கிழமையன்று ஒரு சுமங்கலி வந்து அழைத்ததால்
நீ போனாய், இனிமேல் போக வேண்டாம் என்று சொல்லி
விட்டேன்.

இரவு பதினொருமணிக்கு எதிர் வீட்டுப் பெண்மணி ஓடி
வந்து காமாக்ஷிஅம்மா உங்களை அழைக்கிறார் என்று
சொன்னாள் நானும் அவளை அனுப்பி வைத்தேன்.அங்கு
வந்த அனைவரும் சென்று விட்டனர். காமாக்ஷி அம்மா
மட்டுந்தான் இருந்தார்.
''நீ ஒருவள் மட்டுந்தான் ,நானே வலுவில் கேட்டும் விண்ணப்பிக்கவில்லை.
எனக்கு அம்பாள் நியமனம் ஆகிறது, நீ அலக்ஷியம் செய்யாதே,
நான் உன் அகத்திற்கு வருகிறேன். அம்பாளை குத்துவிளக்கில் ஆவாஹனம்
செய்து வைக்கிறேன் அம்பாளே உன் அகத்துக்கு வருகிறேன்
என்று சொல்லும்போது மறுக்காதே. பூஜைக்கு ஒரு ஏற்பாடும் வேண்டாம்,
நான் வந்து கொண்டே இருக்கிறேன்; உனக்கு செலவே வைக்கல்லை''
என்றாள்.

இவள் ''அகத்துக்குப் போய் அவரிடம் உத்தரவு வாங்கறேன்''
என்று சொல்லி என்னைக் கேட்டவுடன், வெள்ளிக்கிழமையாகையால்
தட்டமுடியாமல் சம்மதித்தேன்.

அந்த அம்மாள் வந்தபோது நடு நிசி;பூஜை அறையில் குத்து விளக்கில்
ஆவாஹனம் செய்து, பழம் தாம்பூலம் நிவேதனம் செய்து,கற்பூர
ஹாரத்தி செய்து, ஸ்ரீ அம்பாளின் பீஜாக்ஷரங்களுடன் கூடிய
மந்த்ரத்தை உபதேசித்து, தினமும் அந்த மந்த்ரம் சொல்லி 108
முறை குங்குமத்தால் அர்ச்சிக்கும்படி சொன்னாள். மூன்று மாதம்
செய்த பிரகு அதன் பலன் தெரியும் என்றும் சொன்னாள்.

காமாக்ஷி அம்மாள் என்னைப் பார்த்து நீ ஆத்மார்த்தமாக
ஒரு குருவைத் தேடி வருகிறாய். அது சபலமாகும்;குளத்தங்கரையிலோ,
அரசமரத்தடியிலோ ஒரு மஹான் தரிசனம் கிட்டும் அவரால் உனக்கு
மந்தோபதெசம் ஆகும் ;க்ரஹஸ்தாஸ்ரமத்திலிருந்தே உனக்கு
ஆத்ம க்ஷேமம் உன்டாகும், க்ஷேத்ராடனங்கள் லபிக்கும் என
அருள்வாக்கு போல் கூறினார்.

அதன் பின் என் மனைவியும் அந்த மந்த்ரத்தை முறையே
கூறி விளக்கில் அர்ச்சனை செய்து வந்தாள்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபெரியவாளின் தரிசனம் ,
ஸம்பாஷணை எல்லாம் அவர் அவதரித்த விழுப்புரம்
ஸ்தலத்தில் எங்களுக்கு ப்ராப்தமாயிற்று. அவர் வீட்டின்
எதிரே உள்ள ஹனுமார் கோவிலில் சங்கர ஜயந்தி வைபவத்தின்
போது எங்களுக்கு லபித்தது.

மங்கள வாத்யங்கள் முழங்கிக் கொண்டிருந்தன. எங்கும்
ஜன சமுத்ரம்இவற்றின் மத்தியில் ஒரு தம்பதி நீந்திச்
சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் உடலும் உள்ளமும்
பூரித்து ஆனந்த வெள்ளத்தில் திளைத்தபடி இருந்தது.

ஊர்வலம் ஒரு பந்தலை அடைந்தது மாலை ஆறு மணி வேளையில்

கூட்டம் காரணமாக அந்த தம்பதியினருக்கு பந்தலில் நுழைய
முடியவில்லை. அவர்கள் வீதியிலேயே நிற்கும்படி ஆயிற்று.
அந்த சமயம் ஸ்ரீ மடத்து த் தொண்டர் ஒருவர் பந்தலில்
நுழைந்து கொண்டிருந்தார். அவரிடம் இந்தப் பெண்மணி
சென்று ''ஸ்வாமி இந்த க் கமலத்தட்டில் முத்து ஹாரத்தி,
பெரியவருக்கு எடுக்கவேண்டுமென ஆசை; எப்போ ஆரத்தி
எடுக்கலாம் என்று கேட்டாள். அவர் உடனே இதுதான் தக்க சமயம் ;
என்னுடன் வாருங்கள் என்று சொல்லிக் கூட்டத்தை விலக்கி,
அவர்களுக்கு வழி செய்து கொடுத்து அவர்களை மேடைக்கு
முன்பு நின்றிருந்த யானை அருகே நிறுத்தி விட்டார். அங்கு
யானை தீபத்திற்கு வந்தனம் செய்தது.மேடையில் ஆதி சங்கரர்
பாதுகை எழுந்தருளப்பட்டிருந்தது. மஹாபெரியவாளும்,
புதுப் பெரியவாளும் மடத்துச் சிப்பந்திகள் எல்லாரும்
தோடகாஷ்டகம் சொல்லி பாதுகைக்கு வந்தனம் செய்தரர்.
அதன் முடிவில் புதுப் பெரியவாள் அந்தப் பெண்மணியை
நோக்கி ஆரத்தி எடுக்குமாறு சமிக்ஞை செய்தார். அவளும்
எடுத்தாள்.

இப்படி எங்கள் காஞ்சி பயணம் துவங்கியது.

நெல்லிக்குப்பம் ஸ்ரீ நிவாசன் ஆண்டாள் தம்பதியினர்;
தீவ்ர வைஷ்ணவ பக்தர்கள்; ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை
எப்படி பெரியவா கொனம் கொஞ்சமாகத் தன் பால் இழுத்துக்
கொண்டார் என்பதன் முதல் படி இது.
அவர்கள் ஒவ்வொரு அனுபவமும் புல்லரிக்கச் செய்பவை.

இதன் தொடர்ச்சி நாளையும் பார்க்கலாம்.

நன்றி கோதண்ட சர்மா தரிசன அனுபவவங்கள்

ஜய ஜய சங்கரா...

இந்த இடத்தில் ஒன்று கூற விரும்புகிறேன். பெரியவா
நிறைய சந்தர்ப்பங்களில் தீப பூஜையின் விசேஷத்தைப்
பற்றிச் சொல்லியிருக்கிறார். சுலபமாக சுவாசினிகள்
தினமும் இல்லாவிடினும் செவ்வாய் , வெள்ளியிலாவது
தீப பூஜை செய்து ஒரு நேவேத்யம் செய்து ஹாரத்தி
செய்து வந்தால் அவர்களுக்கு தேவியின் அனுக்ரஹம்
பரிபூர்ணமாய் லபிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம்
இல்லை. அவரவர்கள் முடிந்த எளிய ஸ்லோகங்களைச் சொல்லி
தீப நமஸ்காரம் செய்தால் அந்த வீட்டிற்கு எந்தக் குறையும்
இல்லாததோடு பெரியவா அனுக்ரஹம் பரிபூர்ணமாய்
கிட்டும் என்பதற்கு மேலே சொன்ன சம்பவம் ஓர் நல்ல
உதாரணம். இன்று ஸ்ரீ லலிதாம்பிகை ஜன்ம தினம்.
நானும் இந்தப் பூஜை செய்த பின்பே இதனை எழுத
முற்பட்டேன்

சங்கரா சரணம்



Source: Sage of Kanchi

Sarawathi Thyagarajan
 
நெல்லிக்குப்பம் ஸ்ரீ நிவாஸன் ஆண்டாள் தம&

நெல்லிக்குப்பம் ஸ்ரீ நிவாஸன் ஆண்டாள் தம்பதியினர் அநுபவம்.....தொடர்ச்சி


நேற்றைய தொடர்ச்சி நெல்லிக்குப்பம் தம்பதியின் அனுபவம்...

நெல்லிக்குப்பம் ஸ்ரீ நிவாஸன் ஆண்டாள்
தம்பதியினர் அநுபவம்.........

1966 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் ஸ்ரீகாஞ்சி பெரியவாள்
புதுப் பெரியவாள் ஸகிதம் விழுப்புரத்தில் உள்ள ஹனுமார்
கோவில் தெரு அக்ரஹாரத்தில் சங்கர ஜயந்தி உற்சவத்துக்காகத்
தங்கியிருந்தாறென்று நேற்று பார்த்தோமல்லவா. நேற்று
பெரியவாளை தரிசித்து முத்டு ஹாரத்தி எடுத்து வந்ததைச்
சொன்னேன். மடத்தை நெருங்கும் சமயம் நேர்ந்த அனுபவம்
பற்றி நேற்று பகிந்து கொண்டேன்.

மடத்தில் தரையில் மணல் பரப்பியிருந்தது. ஸ்ரீ மஹாபெரியவா
மேடையின் கீழ் மணலில் ஒரு காலை மடித்து, மறு காளைக்
குத்திட்டு வைத்து, கையில் தண்டத்தை ஏந்திய வண்ணம்
காக்ஷி கொடுத்துக் கொண்டிருந்தார்.

பக்த ஜனங்களைக் கடாக்ஷித்தருளினார். சிறுது நேரம் சென்று
தன் கையை உயர்த்தி சமிக்ஞையால் யாரையோ அழைத்தார்கள்.
ஒவ்வொருவராக எழுந்தார்கள்; அவர்களை'இல்லை' என்பது போல்
கையை அசைத்தார். அருகில் இருந்தவர் ''உங்களைத்தான்
அழைக்கிறார்'' என்று எங்களிடம் கூறினார்.

தயக்கத்துடன் எழுந்த என்னை 'வா' என்பது போல் தலை அசைத்தார்.
அவர் அருகே சென்று வணங்கினேன், கைகால்கள் உதறின. அவர்
சமீபத்தில் சென்று கைகட்டி வாய் பொத்தி நின்றேன்.

செந்துவராடையினால் திரு மேனியையும் தலையையும் மறைத்து
அணிந்து, தண்டத்துடன் அமர்ந்த நிலையில் அவரை ஒரு த்யாகச்
சுடராக, தபஸ்வியாகக் கண்டேன். அவர் ஒளியான திருமுகம்
விகஸித்தது; வெண் பல்வரிசைகள் தோன்றின. பின்னர் என்
மனைவியையும் அழைத்தார் அவளும் சமீபம் வந்தாள்.

''நீ எங்கேருந்து வரே''?

''நெல்லிக் குப்பத்திலேருந்து''

''நீங்க எப்போ இங்கே வந்தேள்''

''இன்னிக்கு காலம்பற வந்தோம்''

''மத்யானம் எங்கே சாப்பிட்டே''

''சந்தான கோபாலபுரத்திலே இருக்கிற என் தங்கையாத்திலே
சாப்பிட்டோம், மறுபடி மாலை ஆறு மணிக்கு இங்கே வந்துட்டோம்.''

''அப்போ இங்கே என்ன நடந்துண்டு இருந்தது''?

நடந்தவற்றை, என் மனைவி ஹாரத்தி எடுக்க உத்தரவு ஆனதைச்
சொன்னேன்.

''எல்லாரும் ஸ்லோகம் சொல்லிண்டு நமஸ்காரம் பண்ணினாளே
அப்போ வந்தியா''?

பரப்ரம்மம் ஒன்றும் தெரியாதது போல் என்னிடம்
கேட்டது!

''ஆமாம்''

''நீ என்ன பண்ணிண்டு இருக்கே''?

''நெல்லிக் குப்பம் சர்க்கரை ஆலையில் குமாஸ்தாவாக
இருக்கேன்''.

''அதே ஆலையில் சுப்பு என்கிறவர் தெலுங்கர் , சின்னதா
சிகை வெச்சுண்டு இருப்பார், ரொம்ப பேசமாட்டார்;
நெற்றியி விபூதி பட்டும் படாமலும் இருக்கும்.''

''ஆமாம் அடியேன் அவருடந்தான் வேலை செய்கிறேன்''.

அவருக்கு உறவுகாரர் மணி ந்னு ஒருத்தர்பளீச்சுன்னு விபூதி
பூசியிருப்பான்;எப்போதும் சிரிச்சு பேசிண்டிருப்பான்.''

''ஆமா அவரையும் தெரியும்''

''அவாத்திலே ஒரு பாட்டி இருக்காளே அவளைத் தெரியுமா?''

''பாத்திருக்கேன், அவா எங்களகத்துக்கு சமீபம் தான் இருக்கா,
அவா இங்குவெளியிலே நிற்பதைப் பார்த்து விட்டுத்தான்
வந்தோம்''
''அவா மணியோட அம்மா''

''அம்மாவா? சொந்த அம்மாவா ஸ்வீகார அம்மாவா?''

''அது தெரியாது''

''அந்த அம்மாவுக்கு காது கேக்காது அது உனக்குத்
தெரியுமா?''

''இருக்கலாம், வயசாயிடுத்தொல்லியோ?''

''காது கேக்காதது நல்லதுதானே?''

இருவரும் மௌனமாக இருந்தோம்.

''காது கேக்காதது நல்லதுதான், ஏன்ன மத்தவா பேசற
அபஸ்மார வார்த்தைகள் காதில் விழாது; பகவத் சிந்தனம்
பண்ணிண்டு இருக்கலாம்.''

இருவரும் தலை அசைத்தோம்.

''அந்த அம்மாவுக்குத் தெலுங்கு தெரியும்,ஸம்ஸ்க்ருதம் தெரியும்,
ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை ,ஸ்ரீமத் ராமாயணம் எல்லாம்
தெரியும், நிறைய பகவத் விழயங்கள் சொல்வாள்''

''அடியேன் அந்த அம்மாவுடன் பேசியது இல்லை''

''உனக்குத் தெலுங்கு தெரியுமா?''

''தெரியாது அடியேன் வைஷ்ணவன்.''

''என்ன நீ வைஷ்ணவனா?'

''ஆமாம் நான் வைஷ்ணவன் நெல்லிக்குப்பத்துக்கு
பெரியவா வரதா எல்லாரும் சொல்லிண்டிருக்கா''

''ஏற்பாடெல்லாம் பண்ணிண்டு இருக்காளா?''
ஸ்த்ரீ புருஷாளெல்லாம் ஆவலா இருக்காளா;
எத்தனை பேர் சிகை வெச்சுண்டிருக்கா?''

''சுமார் பத்து பேர் சிகை வெச்சுண்டிருக்கா''

''அவ்வளவுதானா?''

''எத்தனை குடும்பம் ப்ராம்மணாள் இருக்கா''?

சுமார் நூறு பேர் ப்ராம்மணாள் இருக்கா''

''மறுபடியும் ஞாயித்துக்கிழமை வருவியோ?''

கேள்வியிலேயே பதிலும் இருந்ததால் நான் உடனே
வருவதாகச் சொன்னேன்.

இவ்வளவு நேர சம்பாஷணைக்குப்பிறகு எனக்கு
ப்ரஸாதம் கொடுக்கவில்லை.

கையை உயர்த்தி அனுக்ரஹம் செய்து போய் வருமாறு
பணித்தார். ப்ரஸாதத்திற்காகத் தயங்கி நின்றோம்.

மறுபடி போகுமாறு உத்தரவாயிற்று. தரிசனம் செய்த த்ருப்தியும்,
அவருடன் இவ்வளவு நேரம் சம்பாஷிக்கும் பாக்யம் கிட்டியும்,
ப்ரஸாதம் கிடைக்காத குறையுடன் திரும்பினோம் பின்னால்
எங்களுக்குக் கிடைக்கப்போகும் பாக்யத்தை அறியாமலேயே!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.




Source: Saraswathi Thyagarajan
 
வேதமும் தமிழ்நாடும்

வேதமும் தமிழ்நாடும்

வேதமிருந்தால்தான் லோகம் நன்றாக இருக்கும், ஆத்மாவும் க்ஷேமமடையும் என்பது என் அபிப்ராயம். இந்தப் பெரிய மூலதனம் இப்போது வீணாகப் போயிருக்கிற நிலை மாறி, இதை மறுபடி தழைக்கும்படியாகப் பண்ணவேண்டுமென்பதே எனக்கு ஸதா விசாரமாக இருக்கிறது. அதற்காகத்தான் என்னாலானதை ஏதோ திட்டம் கிட்டம் போட்டு வேத ரக்ஷணம், ஸ்டைபண்ட் என்று பல இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இது இந்த மடம், அல்லது சில ஸ்தாபனங்களின் கடமை மட்டுமல்ல; இது நம் எல்லோர் கடமையுமாகும்; உங்கள் எல்லோருடைய ட்யூட்டியும் ஆகும். நிர்ப்பந்தத்துக்காக இல்லாமல், ஆசையோடு ஆர்வத்தோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து இது வேத பூமி என்பதை மறுபடி நிஜமாக்கப் பிரயாஸைப் படவேண்டும். தமிழ்நாட்டுக்கு இதை நான் முக்கியமாகச் சொல்கிறேன்.

வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று [பாரதி] பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது.


சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி" என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டி௫க்கிறார்கள். அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.' இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது.


சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள். அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையொலியைக் கேட்டுக் கொண்டுதான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்" என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்! இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.



??????? ??????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:

 
Periyava sloka to chant before we leave our house

Periyava sloka to chant before we leave our house

வெளியில் புறப்படும்போது சொல்ல
(நிலைமண்டில ஆசிரியப்பா)

போகுமெம் வழியிலே யாதொரு தடையுமோ
ஆகாத செயல்களோ கெடுதலோ தீமையோ
இல்லாது ஆக்கிடு செல்லும் வழியதைச்
சீராக்கிக் காத்திடு! சங்கரா! ஸத்யனே
நாராயணா! நாங்கள் நம்பிடும் தேவனே
காஞ்சிமா முனிவனே ஸ்ரீராம சந்த்ரனே


https://mahaperiyavaa.wordpress.com/2014/06/24/periyava-sloka-to-chant-before-we-leave-our-house/
 
தநுர்வேதம் ஏற்படக் காரணம்

தநுர்வேதம் ஏற்படக் காரணம்

தநுர்வேதம்
ஏற்படக் காரணம்

யுர்வேதம் சரீர பலத்தைத் தருவதற்காக ஏற்பட்டது. சரீர பலத்தைக் கொண்டு சண்டை போடுவதை ஒரு சாஸ்த்ரமாக விதிமுறைகளில் அடக்கித் தருவது தநுர்வேதம்.


அஹிம்ஸையும் ஸர்வ ஜன ப்ரேமையுந்தான் 'ஐடியல்'என்றாலும் ஸர்வ காலத்திலும், ஸர்வ தேசங்களிலும் ராஜ்யாதிபத்யத்தை விஸ்தரித்துக் கொள்கிற ஆசை, அதற்காகப் படையெடுப்பது, இரண்டு கட்சிகள் யுத்தம் பண்ணிக்கொள்வது என்றெல்லாம் நடந்து வந்திருப்பதால் போர்க் கலையையும் நியதிகளுக்குக் கட்டுப்பத்தி, ஒருத்தனுக்குக் ஆயுதப் பிரயோக முறைகளைச் சொல்லிக் கொடுப்பதற்கும், ஆயுதங்களைச் செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதற்கும் ஒரு சாஸ்த்ரம் தேவைப்படுகிறது. இதுவே தநுர்வேதம்.


வேதத்திலேயே தேவாஸுர யுத்தங்களைப் பற்றி வருகிறது. இந்த்ரன் வ்ருத்ராஸுனை வதம் பண்ணினது தான் தர்மம் அதர்மத்தை ஜயிப்பதற்குப் பெரிய ரூபமாக வேதத்தில் வர்ணித்திருப்பது. எந்த ஸ்வாமியைப் பார்த்தாலும் அஸுரர்களை ஸம்ஹாரம் பண்ணியே அந்த ஸ்வாமிக்குக் கீர்த்தியும், அதை வைத்தே பெயர்களும் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.

திரிபுர ஸம்ஹாரம், ஜலந்தராஸுர வதம், மது-கைடப வதம், கஜமுகாஸுர ஸம்ஹாரம், தாரகாஸுர பத்மாஸுர வதம், மஹிஷாஸுர வதம், சண்டமுண்ட ஸம்ஹாரம், பண்டாஸுர ஸம்ஹாரம், ராவண வதம், கம்ஸ வதம், நரகாஸுர வதம், கௌரவ ஸம்ஹாரம் என்றிப்படி ஈஸ்வரன், மஹாவிஷ்ணு,

பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர், அம்பாள், ராம க்ருஷ்ணாதி அவதாரங்கள் என்று எந்த ஸ்வாமியைப் பார்த்தாலும் அஸுர ராக்ஷஸர்களோடு யுத்தம் பண்ணி ஜயித்ததுதான் அவர்களுடைய விசேஷப் பெருமையாயிருக்கிறது.

புராரி, த்ரிபுராரி, முராரி, மஹிஷாஸுரமர்த்தினி என்று பெயர்கள் ஏற்பட்டிருப்பதும் இன்னாரை சத்ருவாகக் கொண்டு ஜயித்தார்கள் என்பதால் ஏற்பட்டதுதான். 'அரி'என்றால் சத்ரு. (த்ரி) புரங்களின் சத்ருவானதால் பரமேச்வரனுக்கு (த்ரி) புராரி என்று பேர். காமாரி, காலாரி, கஜாரி என்றெல்லாமும் ஈஸ்வரனுக்குப் பெயர்கள் - காமன், காலன், கஜாஸுரன் ஆகியவர்களைக் கொன்றதனால்.

(பிள்ளையார் வதைத்தது கஜாமுகா ஸுரனை;தாருகாவன ரிஷிகள் ஆபிசார யஜ்ஞத்தில் உண்டாக்கி அனுப்பிய அனுப்பிய கஜாஸுரனைப் பரமேச்வரனே வதம் செய்தார்.) முரன் என்று சத்ருவைக் கொன்றதால் கிருஷ்ணருக்கு முராரி என்று பெயர். 'மர்த்தனம்'என்றால் அப்படியே தொகையலாக (துவையலாக) ப் பிசைந்த மாதிரி சத்ருவை ஹிம்ஸித்து ஸம்ஹாரம் பண்ணுவது.

காளிங்கன் மேல் நர்த்தனம் பண்ணியே இப்படி மர்த்தனம் பண்ணி, அப்புறம் 'பிழைத்துப் போ'!என்று அவனை விட்டிருக்கிறார் க்ருஷ்ண பரமாத்மா. 'மாதவன்'என்பதற்குப் பல அர்த்தங்களில் ஒன்று மது என்ற ராக்ஷஸனைக் கொன்றவர் என்பது. 'மதுஸ¨தனன்'என்றும் அதனால்தான் பெயர். 'சேசவன்'என்பதற்கும் ஒரு அர்த்தம், கேசி என்ற அஸுரனைக் கொன்றவர் என்பது.


பிற தேச மைதாலஜிகள், 'இலியட்'மாதிரியான பெரிய காவியங்களிலும் யுத்தம்தான் முக்யமாயிருக்கிறது.


"தர்மத்துக்காக யுத்தம் பண்ணு"என்று அர்ஜுனனை ஆண்டியாகப் போகாமல் தடுத்து பகவான் அநுக்ரஹித்த கீதைதான் இன்று ஞான நூல்களிலெல்லாம் சிகரமாயிருக்கிறது.
சரித்திரத்தைப் பார்த்தாலும் சந்த்ரகுப்தன், ராஜராஜன், ஸீஸர், நெப்போலியன் என்று ரொம்பவும் கொண்டாடப்படுபவர்களெல்லாம் பெரிய பெரிய யுத்தங்கள் செய்து ஸாம்ராஜ்யத்தை விஸ்தாரம் செய்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.



காவியங்களும் இலக்கியங்களும் போற்றுகிற கதாநாயகர்களும் வீரதீர பராக்ரமசாலிகளாகவே இருக்கிறார்கள். மஹாவீரனாக, ஜயசீலனாக இருக்கிறவனைக் கொண்டாடுவதற்காகவே 'பரணி'என்று ஒரு இலக்கிய வகை ஏற்பட்டிருக்கிறது.








??????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
தண்ட நீதி

தண்ட நீதி


ந்த வ்யவஹார லோகத்தில் தர்மத்தின் பொருட்டே தண்டநீதியும் அவசியமாகிறது. பிரஜைகள் பண்ணும் தப்புகளைத் தண்டிக்க போலீஸ், அந்நிய ராஜ்யங்களின் படையெடுப்பைத் தண்டிக்க மிலிடரி என்று இரண்டு விதத்தில் தண்டப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிறது. 'தண்டம்'என்பது ஒரு குச்சி.

உபநயன ஸம்ஸ்காரமுள்ள மூன்று வர்ணத்தாருக்குமே ஆத்ம ஜயம், இந்த்ரிய ஜயம், மனோ ஜயம் செய்துகொள்வதற்காகத் தண்டம் உண்டு. இது உட்பகை. 'ஷட்-ரிபு'என்று உள்ளத்துக்கு ஆறு சத்துருக்கள் - கர்மம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் என்று இவற்றை ஜயிக்கணும்.

இவற்றைத் தவிர ராஜாவானவன் வெளியிலே தர்மத்தின் பகைவர்களாயுள்ள external enemies என்கிற குற்றவாளிகள், திருடர்கள், கொலைக்காரர்கள், அந்நிய தேசத்திலிருந்து படையெடுக்கிற ஸேனா வீரர்கள் ஆகியவர்களையும் ஜயித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டியவனாயிருக்கிறான். இந்த வெளிப் பகையிலேயும் 'உள்', 'வெளி'என்று இரண்டு!ராஜாவின் ஸ்வதேசத்திலேயே கலகம், கொலை முதலியவை செய்கிறவர்கள் 'உட்பகை'. அந்நிய ராஜ்ய ஆக்ரமிப்புக்காரர்கள் 'வெளிப்பகை'. அவற்றை அடக்குவதற்கு symbol -ஆக insignia -வாக (சின்னமாக) ராஜாவுக்கு ஒரு தண்டம் உண்டு.

'செங்கோல்'என்பது அதுதான். செம்மை என்பது நியாயத்தைக் குறிப்பது. ஆகையால் 'செங்கோல்'என்பது தர்ம நியாயமாக தண்டிப்பதையே குறிக்கும்;வெறும் க்ரூரத்தனத்தால் தண்டிப்பதையல்ல. தண்டம் என்பதிலிருந்துதான் தண்டனை என்று வந்திருக்கிறது. கண்டித்து அடக்கி வைப்பதைத் தண்டிப்பது என்கிறோம். உட்பகை, புறப்பகைகளைத் தண்டிப்பதில் க்ஷத்ரியனுக்கு என்று தநுர்வேதம் ஏறபட்டிருக்கிறது.


சண்டையும் ஹிம்ஸையும் வ்யவஹார உலகத்தில் அவசியமாயிருக்கிறதென்பதற்காக எல்லாரும் தேஹ பலத்துக்கு முக்யம் தந்து அதையே பெரிசாக வளர்த்துக் கொண்டு யுத்த அப்யாஸம் பண்ணவேண்டும் என்று நம் பூர்விகர்கள் வைக்கவில்லை. க்ஷத்ரிய ஜாதி என்கின்ற ஒன்றையே இதற்கு அதிகார புருஷர்களாக வைத்தார்கள்.


எல்லாக் கலைகளையும், சாஸ்திரங்களையும் கற்றறிந்து அந்தந்த ஜாதியாருக்கு உரியவைகளை அவரவருக்குக் கற்றுக் கொடுத்தது பிராம்மணன்தான். அவனுக்கு ஏற்பட்ட ஆறு தொழில்களில் ஒன்று இந்த அத்யாபனம், அதாவது teaching ஆகும். ஆனால் இவன் மற்ற ஜாதியாருக்கு யுத்தம், வியாபாரம் முதலிய எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கலாமே தவிர, தானே யுத்தம் பண்ணப்படாது. வியாபாரம் பண்ணப்படாது. வேதத்தை ரக்ஷித்துக் கொண்டிருக்க வேண்டியதே இவனுக்கான ஸ்வதர்மம். பரசுராமர், த்ரோணர் போலத் தாங்களே யுத்தம் பண்ணின பிராம்மணர்கள் exception -கள்தான் (விதிவிலக்கானவர்கள்தான்) . அவர்களை எதிராளிகள் இதற்காக ரொம்பவும் மட்டம் தட்டிப் பேசியிருப்பதையும் பார்க்கிறோம்.



ஜெர்மனியில் ஸகல ஜனங்களுக்கும் யுத்தப் பயிற்சி தந்ததில்தான் அவர்கள் மதோன்மத்தமாகி World War -ஐ உண்டாக்கிவிட்டார்கள். நம் சாஸ்திர ஏற்பாடு இப்படி அல்ல. அதற்காக, அஹிம்ஸை என்று 'ஓவ'ராகப் போய் நம்மை பயந்தாங்கொள்ளிகளாகவும் தோற்றாங்குள்ளிகளாகவும் வைக்காமல் க்ஷத்திரியர்களுக்கு என்று தநுர்வேதத்தைத் தந்திருக்கிறார்கள்.






மற்ற அரசர்களால் தன்னுடைய தேசத்துக்கு ஹிம்ஸை நேரும்பொழுது செய்ய வேண்டிய தண்டோ பாயத்தைச் சொல்லுவது தநுர்வேதம். அதன்படி ஒரு அரசனானவன் எப்பொழுதும் சண்டை செய்யத் தயாராக இருக்க வேண்டும். இப்போது ராஜாங்கத்தில் சொல்லிக் கொள்கிறார்கள் - சீனா, பாகிஸ்தான் யார் வாலாட்டினாலும், 'எங்களிடமும் military preparedness (ராணுவத் தயார் நிலை) இருக்கிறது'என்கிறார்கள். வாஸ்தவமாகவே தயாராயிருப்பது ஒன்று அப்படியில்லாவிட்டாலும் எதிரிக்கு தைர்யம் கொடுத்துப் போகக்கூடாதென்பதற்காகவும், நம் ஜனங்களே demoralise ஆகிவிடக்கூடாதென்பதற்காகவும் தயாராயிருப்பதாகச் சொல்லிக் கொள்வது இன்னொன்று. இது diplomacy என்ற ராஜ தந்திரத்தின் கீழ் வந்துவிடும்.

இரண்டு விஷயங்கள்:நாம் ஸேனைகளையும், ஆயுத 'ஸ்டாக்'கையும் ரொம்ப ஜாஸ்தி ஆக்கிக் கொண்டாலும் அப்படிச் சொல்லிக் கொள்ளக் கூடாது. அப்படி நமக்கு யுத்த வெறி அதிகம் என்று மற்றவர்கள் நினைக்கும்படி ஆகும். அதேமாதிரி, நமக்கு ஸேனாபலம், ஆயுதக் கையிருப்பு போதாவிட்டால் இதையும் சொல்லிக் கொள்ளக்கூடாது. சொன்னால் இது மற்றவர்களைப் படையெடுக்கத் தூண்டி விடுவதாகும். இந்த 'டிப்ளமஸி'ஸமாசாரங்கள் உபவேதத்தில் இன்னொன்றான அர்த்த சாஸ்த்ரத்தில் வருபவை.


தநுர்வேதப்படி ஒரு ராஜாவானவன் எப்போதும் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும். துஷ்ட ராஜாக்கள் தன்னுடைய தேசத்தில் புகுந்து அலங்கோலம் பண்ணாமலிருப்பதற்காக அவன் அப்படி இருக்க வேண்டும். க்ஷத்ரியனான ராஜன் க்ஷத்ரிய வீரர்களைக் கொண்டே தேசத்தை இப்படி ரக்ஷிக்க கடமைப்பட்டிருக்கிறான்

???????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
நெல்லிக்குப்பம் வெங்கடேசன் ஆண்டாள் தம்&#

நெல்லிக்குப்பம் வெங்கடேசன் ஆண்டாள் தம்பதியினர்
அனுபவம் கணக்கிலடங்காதது. கொடுத்துவைத்த
தம்பதியினர். நேற்றைய தொடர்ச்சி!


மறு நாள் நித்யானுஷ்டானத்துக்குப் பிறகு ஆஃபீஸ்
சென்றேன். முதல் காரியமாக மணி, சுப்பு சாரைப்
பார்க்கச் சென்றேன். முதல் நாள் பெரியவா தரிசனம்
பற்றியும், அவர் எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கிவிட்டு,
எங்களுக்கு அருளாசியுடன் அனுப்பி வைத்த்தையும்
சொன்னேன். அவர்கள் இருவரும் நாங்கள் பெரியவா தரிசனம்
செய்ததையும், எங்களுக்கு அருளாசி கிடைத்தது பற்றியும்
மிகவும் சந்தோஷப்பட்டனர்.


மணி இந்த விவரங்களை அம்மாவிடம் சொல்ல அவர் எங்கள்
அகத்துக்கு வந்து முழு விவரம் சொல்லச் சொல்லி, மனம் உருகி,
கண்ணீர் பெருக்கினார்கள்.

ஸ்ரீபெரியவாள் சித்த புருஷர் என்பதைத் தன் சொந்த அனுபவத்தால்
தெரிந்து கொண்டதையும் ரஹஸ்யமாகச் சொன்னாள். நாங்கள்
பரிபூர்ணமாக நம்பியதால் எங்களுக்கு சில ஆத்மானுபவங்கள்
ப்ரப்தியாயிற்று. ஸ்ரீ ஆசார்யாள் ஸங்கல்பப்படி, அம்மா தினம்
எங்கள் அகத்துக்கு வந்து ஆத்ம விசாரம் செய்து எங்களுக்கும்
ஆஅத்ம பரிபக்குவம் ஏற்பட ஸத்சங்கமாக இருந்தாள்.

''அம்மா உள்ளத்தால் ஒரு சன்னியாசி. அம்மா உள்ளத்திலேயே
பகவத் சிந்தனமும்,மந்த்ர ஜபமும் செய்து கொண்டிருப்பது
யாருக்கும் தெரியாது. அம்மாவுக்கு எண்பது வயசுக்கு மேல்
ஆகியிருந்தது. ஸ்ரீ பெரியவாள் சொல்லி ஆத்மஞானம் பெற்ற
அவர்களை 'அம்மா'வாக அடைந்தோம். லலிதாம்பாள் என்கிற
அந்த அம்மா எங்களிடம் வாத்ஸல்யத்தைக் காட்டினாள்.

முதல் சந்திப்பில் எங்கள் சம்பாஷணை நடு இரவு
வரை நீடித்தது. பிறகு தினம் அம்மா இரவு ஏழு மணி அளவில்
வந்து வேதாந்தம், பக்தி இவற்றைப் பற்றி விமரிசையாக
எங்களுக்குக் கூறுவாள். ஏதோ ஓர் ஆத்ம சக்தி உத்க்ருஷ்டமான
பர்வச நிலையை பரஸ்பரம் அனுபவிக்கச் செய்தது.

அம்மா பல முறை ராமாயணம், ஸ்ரீமத் பகவத் கீதை ,விஷ்ணு
புராணம், தேவி மாஹத்மியம் பாராயணம் செய்தவள்.

பெரியவாளை சிறுமியாக இருந்ததிலிருந்து அப்போது வரை
அவரிடம் ஏற்பட்ட அனுபவங்களை விஸ்தாரமாக எங்களிடம்
சொல்வாள்.

பெரியவா ஆத்மவிசாரத்தில் உள்ள வ்யக்திகளை அவர்கள்
எங்கிருந்தாலும் நாடி யாத்ரை என்கிற வ்யாஜ்யத்தில் யாரும்
அறியாமல் தன் யோக பலத்தால் ஆகர்ஷித்து, பக்குவப்படுத்தி,
பிறகு யாத்திரையைத் தொடர்வார் என்று இது போன்ற பல
விஷயங்களை சொல்லியிருக்கிறாள். நான் ஆர்வ மிகுதியால்
எழுதி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டதற்கு அம்மா இசையவில்லை.
உங்களுக்கு மட்டுமே சொல்ல எனக்குப் பெரியவா உத்தரவு ஆயிருக்கு
அதனால்தான் தடங்கலில்லாமல் நான் என் அனுபவங்களைச்
சொன்னேன்.மணிக்கோ, சுப்புவுக்கோ கூட நான் சொல்லவில்லை;
நீங்கள் தகுந்த அதிகாரியாக இருப்பதால் ஸ்ரீபெரியவா சங்கல்பப்படி
சொல்கிறேன். என்றாள்.

மஹான்களின் தபோபலத்தால் அவர்களைச் சுற்றி 'ஆத்மசக்தி
அதிர்வலைகள் SPIRITUAL WAVELVIBRATION ஏற்படுகின்றன.
அவை சூழ்ந்துள்ள நெருக்கமான அளவுக்குள் இருக்கும்
சாமான்ய ,ஸம்சாரிக விழயங்களில் ஊறியவர்களுக்கும் அவைகளின்
ஆன்மீக சக்தி தூண்டப்படுகிறது. நாம் அந்த இடத்தை விட்டு
அகன்றால் ஸ்வாபாவிகத் தன்மை திரும்ப வந்துவிடும்.

ஆனால்தேன் இரும்பு போன்ற ஜீவனகள் இதே அனுவம் அடையும்போது
அதிக அளவு காந்த சக்தி தூண்டப்பட்டு, ஆத்மீக சக்தியைத் தன்னுள்ளே
தேக்கி வைத்துக் கொள்கிறது. இந்த விஷயம் அனுபவசாத்யமானது.

எங்கள் மூவருக்கிடையே எப்படி இந்த சித்தாந்தம் பொருந்துகிறது!

ஸ்ரீ பெரியவா மிகப் பெரிய காந்தம்; அதனால் தூண்டப்பட்ட
ஆத்ம சக்தியைத் தன்னுள் தேக்கிவைத்துக் கொண்ட வ்யக்தி
அம்மா! ஸ்ரீ அம்மாவின் காந்த அலைகள்னிரந்தரமாக எங்கள்
ஆத்மாக்களில் தங்கி, இயங்கிவருகின்ரன.

எங்களுக்குமட்டும் பெரியவா ப்ரஸாதம் கொடுக்கதது பற்றி
அம்மாவிடம் கேட்டோம்.''அதான் எனக்கும் புரியவில்லை'' என்றாள்.
''நீங்கதான் ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்குப் பாகப்போகிறீர்களே'
அப்போ பார்க்கலாம் ''என்றாள்.

அவ்வாறே ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்குச் சென்றோம்.
அவரை வந்தனம் செய்தோம்; கூர்ந்து பார்த்துவிட்டு மௌனமாக
இருந்தார். அன்றும் மற்ற எல்லாருக்கும் ப்ரசாதம் வழங்கிவிட்டு
எங்களுக்கு வழங்கவில்லை.மடத்தில் காலை முதல் இரவு வரை தங்கி,
அவர் போகும் இடமெல்லாம் போய் நின்றும் வணங்கியும்
கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்.
அம்மாவிடம் எங்கள் தாபத்தைப் பகிர்ந்து கொண்டோம்.
அவளும் தீவிர யோஜனைக்குப் பிறகு''பின்னால் சொல்றேன்''
என்று சொல்லிவிட்டாள்.

பெரியவா யாத்திரை மேற்கொண்டு கடலூர் மஞ்சக் குப்பம்
என்ற இடத்தில் ஒரு ஸ்கூலில் தங்கினார்.எனக்கு அருகாமையில்
இருந்ததால் அந்த ஒருவாரமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும்
நாங்கள் பொய் சேவித்து நிற்போம்.

ஸ்ரீபெரியவாள் எங்களைப் பார்ப்பதும், மற்றவருக்கு குங்கும
ப்ரஸாதம் வழங்குவதுமாக இருந்தார். மீண்டும் மீண்டும்
நமஸ்கரித்தும் எங்களுக்கு மட்டும் ப்ரசாதம் வழங்கவில்லை .
பின் அம்மா குடும்பத்தாருடன் சேர்ந்து சேவித்தோம்.எங்களைத்
தவிர்த்து மற்றவர்களுக்கு மட்டும் வழங்கினார். அவர்களுடன்
சம்பாஷித்து கை அசைத்து ஆசி கூறினார். அம்மாவுக்கும் ஆச்சரியம்.
அம்மாவும் ஸ்ரீ நிவாசன் ஆண்டாள் தம்பதியினர் என்று சொல்லியும்
அடுத்த முறையும் இதுவே நிகழ்ந்தது. பெரியவா மௌனமாக இருந்து
கடாக்ஷித்துவிட்டு சிறுது நேரம் கண்ணைமூடி இருந்து விட்டு மேனாவுக்குள்
போய்விட்டார்.

மறு நாள் யாத்ரை துவக்கம் ;மேனாவுடன் நானும் பித்தன் போல்
ஓடினேன்;கை தீவட்டி ஒளியில் பெரியவாள் மௌனமாகக் காக்ஷி
அளித்தார்.ஊர் எல்லையை அடைந்ததும் மேனா நின்றது.
ஸ்ரீபெரியவாள் கையை உயர்த்திஆசீர்வதித்துவிட்டபின்
மேனா மூடிக்கொண்டது. வெறித்துப்போய் தனித்து நின்றவன்''
அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்'' என்று நினைத்து துக்கம்
தாளாமல் மெதுவாகத் திரும்பி வந்தேன்.
''
விஷயம் கேள்விப்பட்ட அம்மா ''பெரியவா லீலா வினோதங்கள்
நம் போன்ற சாமானியருக்குப் புரியாது, என்ன நடக்கும் என்பதைப்
பார்க்கலாம்'' என்றாள்.

நாளையும் பார்க்கலாம் மேலே அவர்கள் அனுபவத்தை!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா..




Sage of Kanchi



Saraswathi Thyagarajan
 
தெய்வத்திற்குத் தெரியாத கலை உண்டா?

தெய்வத்திற்குத் தெரியாத கலை உண்டா?

பத்ராஜலத்தில் ராமர் கோவில் திருப்பணி நடந்து வந்தது.

அந்தத் திருப்பணியில் கைதேர்ந்த சிற்பி கணபதி ஸ்தபதி பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயம் அந்த வழியாக யாத்திரை
வந்திருந்த பெரியவாளிடம் ஸ்தபதி ”தாங்கள் அவசியம் வந்து
பார்வையிடவேண்டும்,தங்கள் கடாக்ஷம் வேண்டும் ‘எனக் கேட்டுக் கொண்டதின் பேரில்,பெரியவா கோதாவரி ஸ்னானத்துக்குச்
செல்லும் வழியில் அங்கு சென்றார்.


கல்தூண் ஒன்றில் சிற்பம் நடந்து கொண்டிருந்தது. ”இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது, நுனிப் பாகம் எது” என்று பெரியவா சிற்பியிடம் கேட்டார்.


ஸ்தபதிக்கு ஒரே திகைப்பு!


பார்த்தாலே தெரிகிறதே இப்படிக் குழந்தைத் தனமாகக்
கேட்கிறாரே என்று வியந்தபடி, அந்த பாகங்களைச் சுட்டிக் காண்பித்தார்.


”இந்த அடிப் பாகத்தை நுனியாகவும், அடிப் பாகத்தை நுனியாகவும் மாற்ற முடியுமா”? என்று கேட்டார்கள்.


ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.


அடுத்து, “செதுக்குவதற்குமுன் ஒவ்வொரு தூணுக்கும் நுனி, அடிப் பாகம் என்று எப்படி தீர்மானம் செய்வாய்?” என்றும் கேட்டார்.


ஸ்தபதிக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.


உடனே ஸ்வாமிகள், ”ஒரு சுத்தி எடுத்து வா, இதைக் கீழேயிருந்து மேல் வரை தட்டு ஏதாவது தெரிகிறதா பார்” என்றார்.


தட்டிய பிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம். ஆனால் சொல்லத் தெரியவில்லை.


”மீண்டும் ஒரு முறை தட்டு, ஏதாவது தெரிகிறதா பார்” அதில் வரும் சத்தத்தைக் கவனி”


கீழே சத்தம் கணீர் என்று வருகிறது, மேலே போகப் போக சத்தம் குறைகிறது” என்றார் ஸ்தபதி.


“மரத்தில் வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள், அது கெட்டியாக சிகப்பாக இருக்கும். அதைப் பிளக்கமுடியாது; அதை வைத்துத் தான் மரப்பாச்சி பொம்மை செய்வார்கள். அதே போல்தான் கல்லிலும் வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாக இருக்கும்; அதிலிருந்து வெண்கலம் போன்றகணீர் சத்தம் வரும்; அதுவும் கெட்டியாக அடர்ந்ததாக இருக்கும். அதைத்தான் அடிப்பாகமாகக் கொள்வார்கள். சத்தம் அதிகம் வரும் பாகம் அடி, குறைவாக வருவது நுனி பாகம். நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய், சொல்லத்தான் தெரியவில்லை” என்றார்.


உடனே ஸ்தபதி பெரியவா காலில் விழுந்து நமஸ்கரித்து ”தங்கள் அருளால் எல்லாம் நன்றாக அமைய வேண்டும் என்னை ஆசிர்வதியுங்கள் என வேண்டினார்.


பெரியவரும் அவருக்கு அனுக்ரஹித்தார். எல்லா கலைஞர்களுமே
முதலில் அவரது ஞானம் பற்றி அறியமாட்டார்கள்; பின்புதான் தெரியும்!

அவருக்குத் தெரியாத ஒன்று உலகில் உண்டா? அவரே மூன்று சக்திகளையும் இயக்கும் பரமேசுவரன்! தெய்வத்திற்கு தெரியாததொன்று உலகில் உண்டா?

ஜய ஜய சங்கரா…




https://mahaperiyavaa.wordpress.com/2015/03/06/தெய்வத்திற்குத்-தெரியாத/
 
ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின் கட்டுரையில&#3021

ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின் கட்டுரையில் ஒரு சில துளிகள்



ஒரு பழைய குமுதத்தில் 'சோ'வின்
கட்டுரையில் ஒரு சில துளிகள்

சோவின் ஒ சா ம அ சா

"சந்நியாசியான தாத்தா"

என்னுடைய தந்தை வழிப்பாட்டனார் ராமநாத அய்யர்.
அவர் ஒரு அட்வகேட்.'லா லெக்சிகன்' என்று ஒரு
சட்ட அகராதியை எழுதியவர்.

செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் உள்ள பினாயூர்தான்
எங்களுடைய ஊர். பெரிய நிலச்சுவாந்தர். வீடுகளும் பல.

உடம்பின் மேலே சட்டை போட்டுக் கொள்வதை
இடையில் விட்டுவிட்டார். 'நார்மடி' என்று சொல்வார்கள்.
அப்படித்தான் வேட்டி கட்டுவார். வீட்டில் யாருக்காவது
உடல் நலம் சரியில்லை என்றால் ஆஸ்பத்திரிக்குப்போவது
அவருக்குப் பிடிக்காது. அவரே ராம ஜெபம் பண்ணுவார்.
அதில் குணமாகும் என்று மற்றவர்கள் நம்ப வேண்டும்.
அதை மீறி டாக்டரிடம் போனது தெரிந்தால் கோபப்படுவார்.
அதனால் டாக்டரைப் பார்க்கப்போனால் வீட்டில்
அவருக்குத் தெரியாமல்தான் போவார்கள்.

திருப்பதிக்குப் போனால் சென்னையிலிருந்து நடந்தே
போவார். எந்தப் படாடோபமும் அவருக்குப் பிடிக்காது.
நான் சிறு குழந்தையாக இருந்த போது- அப்போது
வெல்வெட் துணியில் என்னைப் படுக்க
வைத்திருக்கிறார்கள்.அப்போது வெல்வெட்டின் விலை
அதிகம்.[இது பிடிக்காமல் முண்டகக் கண்ணியம்மன்
கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்]




இப்படி இருந்த அவருக்கு ஒரு நாள் சந்நியாசம்
வாங்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் வந்து
விட்டது. காஞ்சிப் பெரியவர் மஹாஸ்வாமிகளிடம்
அனுமதி கேட்டார்.அனுமதி கொடுத்ததும் சந்நியாசம்
வாங்கிவிட்டார். எல்லாச் சொத்தையும் மகன்களுக்குப்
பிரித்துக் கொடுத்துவிட்டு காஞ்சி மடத்திலேயே
தங்கிவிட்டார்.


Sage of Kanchi

Varagooran Narayanan
 
Maha Periyava Arul Vakku

Maha Periyava Arul Vakku


Mind is in between body and soul. Mind wants constant happiness, but does not know how to reach it. Mind wants love but does not know where to find it. The real purpose of mind is to know who we are, but the mind itself with its desires and restlessness is itself an obstacle to perceive the soul. Mind takes the support of the body to fulfil its desires, and goes on reminding that we are the body and that we should enjoy world making it difficult to allow us perceive the truth of soul and not the body.

The goal of life and the purpose of mind is to to perceive and experience we are the Soul, Atman or Brahman.


Maha periyava

Sage of Kanchi

Rajeswari Venkatakrishnan
 
Six internal enemies!

SIX INTERNAL ENEMIES!

This world is not eternal. We have to find a place in the eternal world.

There are six internal enemies, who are strong, powerful and under no one's control or law.

They are Kamam, Krodham, Lobham, Moham, Madham and Ascharyam; meaning respectively, mis-directed desire, violent anger, miserliness with greed, passion, egoistic pride and envy.

If we can guard ourselves from these internal enemies and progress through Devotion, Meditation and Awareness, then we can and may arrive at our destination.

That eternal is now and for ever within us only.

But is seemingly far away, and to reach there is Brhma Prayatnam or a Herculean task.

The direction pointer, driver, enabler, provider, friend, guide, philosopher, helper, king and government; is the Acharya or Guru.

(Source: Deivathin Kural)


Source: Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீக&

வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!- மகா பெரியவா


அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்மணி ஒருவர் மனமுருக மகா பெரியவாளிடம் பிராத்தித்து கொண்டார்:

“நான் வேலைக்கு போகிறவள். எனக்கு ஓய்வு நேரம் குறைவு. அத்துடன், மடி, ஆசாரம் என்றெல்லாம் கண்டிப்புடன் இருக்க முடியாது. நீளமான ஸ்தோத்திரங்கள், பாராயணம் செய்யவும் இயலாது. அதனால், எதாவது சுலபமான மந்திர ஜெபம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பெரியவாள் அனுக்ரகம் பண்ணனும்.”

உடனே, கருணாமூர்த்தியான பெரியவாள், அந்த பெண்மணியின் உள்ளுணர்வையும் சிரத்தையையும் புரிந்துக்கொண்டு , “சொல்லு…” என்றார்கள்.


‘” ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த சதாசிவ சங்கர”


ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!


Source: Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
Arul Vakku

Arul Vakku


* கடவுளை வணங்குவதால், மனம் துாய்மை அடைவதோடு பாவச்சுமையும் நீங்கிவிடும்.

* கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே, கோயில் வழிபாட்டை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

* மனமே கடவுளின் இருப்பிடம். நல்ல எண்ணங்களே அவர் விரும்பும் அர்ச்சனை மலர்கள்.

* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், அனைவரும் வழிபடும் கடவுள் ஒருவரே.

* ஒழுக்கமுடைய ஒருவன் ஈடுபடும் விஷயங்கள் அழகும், நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும்.

காஞ்சிப்பெரியவர்


Sage of Kanchi

Swaminathan Ganesan
 
Veda Dharma Sastra Paripalana

[TABLE="width: 100%"]
[TR]
[TD]Veda Dharma Sastra Paripalana
[/TD]
[TD="align: right"]
[/TD]
[/TR]
[/TABLE]
2nd Yesr Shri Lakshmi Narasimaha Anugraha Trust "VEDA SAMELANAM" From 25th March 2015 to 31st March 2015.
Venue: G.K.SHETTY VIVEKANANDA VIDYALAYA, MTH ROAD, Ambadttur Chennai-53.


Source: Sage of Kanchi
 
Vasanta Navarathiri/Veda Sammelanam @Ambattur

Vasanta Navarathiri/Veda Sammelanam @Ambattur


In Chennai Ambattur, Sri Lakshmi Narasimha Anugraha Trust will be conducting Vasantha Navarathri Utsavam from 25.03.2015 to 31.03.2015.



With the blessings of H.H.Pudu Periyava and H.H. Bala Periyava, we have conducted Vasantha Navarathri Utsavam during April 2014. In that Utsavam, Veda Parayanam in 10 Sakas and Bhajans were recited. Apart from the above, Kamyartha homams (Ganapathyhomam, Mahalakshmi Homam and Chandi Homam) and Veda Upanyasam were conducted.


This year also, we have planned to conduct Veda Parayanam in 15 Sakas and Homams.Vidwad Sadas will be conducted on 31.3.2015. Here is the Vasantha Navarathri Utsavam Festival Invitation.


I looked at the invitation – they have planned a great event. Great veda pundits are attending this event…People in and around Ambattur, please attend. The vibrations from a vedic chanting of this kind would be fantastic!


View original

https://mahaperiyavaa.wordpress.com/2015/03/16/vasanta-navarathiriveda-sammelanam-ambattur-2/
 
" uyurudan kalantha anbu"--'anbu'- love merged with life.

" uyurudan kalantha anbu"--'anbu'- love merged with life.

OM SRI GURUPYONAMAHA, RESPECTFUL PRANAMS TO SRI. MAHA PERIVA.

எதனிடம் ஈடுபாடு வைக்கிறோமோ அது உயிருள்ள ஒன்று. அதிலே நம் சிற்றுயிர் ஈடுபாடு என்ற பெயரில் உறவு கொண்டாடுகிறது. அப்புறம் உறவும் போய், தானும் போய், அதுவேயாகிவிட வேண்டும் என்று இருப்பதே அன்பு. உயிர்! அது முக்கியம்! ப்ராண ஸ்நேஹிதன், உயிர்த் தோழன் என்கிறோமே, அப்படி உயிரோடு உயிர் சேர்வது அன்பு.

செஸ்ஸுக்கு, கிரிக்கெட்டுக்கு உயிர் இருப்பதாகத் தெரிகிறதா? சங்கீதம், நாட்டியம், காவியம் ஆகியவற்றை உயிருள்ள தேவதையாக வைத்துத் தங்களையே அதற்குக் கொடுத்து ஈடுபாட்டுடன் அப்யாஸம் பண்ணுபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் அவற்றில் ரொம்பவும் உயர்ந்த கட்டத்தைத் தொடும்போது, மெய் மறந்து பண்ணினார்கள் என்கிறோம். என்ன அர்த்தம்? அப்போதைக்குத் தன்னையே அந்தக் கலைக்கு இவர்கள் கொடுத்து விடுகிறார்கள்.

அதைத்தான் மெய் மறந்து என்கிறோம். அந்தக் கலைக்கு உயிர் இருப்பதால் அதுவே இவர்களுக்குள்ளே புகுந்து இவர்களை அதில் உசந்த ஒன்றைப் பண்ணும்படிச் செய்கிறது.

சயன்ஸில்கூட இப்படி மெய் மறந்த நிலையில்தான், இன்ட்யூஷனில், ஐன்ஸ்டைன் போன்றவர்கள் டிஸ்கவரி பண்ணுகிறார்களென்றால், அதெப்படி? கலைகளை அப்யாசிக்கிறவர்களைப் போல அவர்கள் ஒன்றும் சயன்ஸ் ஒரு உயிருள்ள தேவதை என்று நினைக்கவில்லையே என்றால், எல்லா உயிர்களுக்கும் மேலே ஒரு பேருயிர் இருக்கிறதோ, இல்லியோ? அத்தனை கலை, ஞானம், கார்யம் எல்லாவற்றுக்கும் அதுதானே மூலம்.

ஒரே ஈடுபாடாக, dedicate டாக இவர்கள் சயன்ஸுக்குத் தங்களை அர்ப்பித்துக் கொண்டிருப்பதை மெச்சி அந்தப் பேருயிரே அவர்களுடைய சிற்றறிவின் வேலைக்கு மேற்பட்ட இன்ட்யூஷணாக ஒரு உண்மையை அவர்களுக்கு தெரிவித்து விடும்.

செஸ்ஸில், கிரிக்கெட்டில் கூட டெடிகேஷன் பூர்ணமாயிருந்தால் இப்படி நடக்கலாம். ஆனால் இங்கேயெல்லாம் ஒரு உயிரின் அர்ப்பணம், மற்ற உயிர் தன்னை உயிராகத் தெரிவித்துக் கொண்டு உறவு கொண்டாட வைக்கும் பெரிய அழகு, மாதுர்ய ரஸம் ஆகியவை இருக்காது.

நித்யாநித்ய வஸ்து விவேசனம் என்று ஆராய்ச்சி பண்ணுவதிலிருந்து ஆரம்பித்து வைராக்யம், தமம், சமம், உபரதி என்றெல்லாம் போகிற சாதனை அத்தனையிலுமே ஜட வஸ்துக்கள் மாதிரி எல்லாவற்றையும் வைத்துத் தன்னையும் ஜடம் மாதிரி அடக்கி, ஒடுக்கிப் போட்டுக் கொள்வதாயிருக்கிறதே தவிர உயிரோடு உறவு கொண்டாடுகிற ரஸம் இல்லை.

அந்த வழி ஒரே dry -ஆகத் தான் தெரிகிறது. அப்படியே போனால் பௌத்தம் சொல்கிற சூன்யத்தில்தான் முடியும். வேதாந்தம் சொல்கிற ப்ரம்மமோ சூன்யமில்லை, அது பூர்ணம். அப்படியே ரஸமாயிருப்பது. உபநிஷத்தே சொல்லி யிருக்கிறது, ரஸ மயமான அதை அடைந்து ஜீவன் ஆனந்த மயமாகிறான் என்று.

உயிர் மயமாக இருக்கப்பட்ட சித் வஸ்து அது. சிதானந்த ரஸம், சிதானந்த பூர்ணம் என்றெல்லாம் சொல்வது. அப்படிப்பட்ட உயிராக அதை நினைத்து, அது நம்மோடு உறவு ஏற்படுத்திக் கொண்டு தன்னிலேயே கரைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு ஊட்டவே இங்கே பக்தியைக் கொண்டு வந்து வைத்தது. Dry -ஆன சாதனை க்ரமத்திற்கு ஜலம் பாய்ச்சி குளுகுளு பண்ணவே பக்தி.

முன்னே dry -ஆக வைத்ததும் நியாயம்தான். காயப் போட்டு அப்புறமே மருந்து கொடுக்கிற சிகிச்சை முறை உண்டு. பயிர்களில் கூடச் சிலவற்றுக்குத் தண்ணீரே விடாமல் வாடப் போட்டு அப்புறமே தண்ணீர் விட்டு அவற்றை ஒரே கிளுகிளுவென்று வளரப் பண்ணுவதுண்டு. அப்படித்தான் இங்கேயும்.

மனசிலேயும், புத்தியிலேயும் அகங்காரத்திற்கு ஆகாரமாகவே எண்ணங்களும் உணர்ச்சிகளும் தீர்மானங்களும் தோன்றிக் கொண்டிருக்கிற நிலையிலேயே நாம் இருந்து வருவதால் அந்த ஆகாரத்தைப் போடாமல் காய dry, பண்ணித்தான் ஆகணும்.

அப்படி ஆக்கியதாலேயே அப்புறம் அகங்காரத்தை இன்னொன்றுக்கு ஆகாரமாகக் கொடுக்கக் கூடிய அன்பு உண்டாகும். அப்போது அதைப் பேருயிர் அல்லது ஒரே உயிரான பிரம்மத்திடம் பக்தியாக ஆக்கிவிட வேண்டும்.

பிரம்மம் என்கிற ஆத்மாவிடம் பக்தி, ஸகுணமாகக் கொஞ்சம் ஈச்வரனிடம் பக்தி, குருபக்தி, இன்னும் இன்னொரு முக்கியமான விஷயத்திலும் பக்தி வைக்க வேண்டும். என்னவென்றால், அப்புறம் மஹா வாக்ய மந்திரோபதேசம் வாங்கிக்கொள்ளப் போகிறோம். உபநிஷத் மற்றும் பல அத்யாத்ம சாஸ்திர விஷயமெல்லாம் ஆழமாகத் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்த மந்திரங்கள், தத்வார்த்தங்கள் எல்லாமும்கூட உயிரோடு இருக்கிறவை என்பதைப் புரிந்து கொண்டு ஏதோ எழுத்து, எழுத்தின் வழியாகத் தெரிந்து கொள்ளும் விஷயம் என்று மட்டும் இவற்றை நினைக்காமல், இவையெல்லாம் ஜீவனோடு தெய்வமாக இருக்கிறவை; விக்ரஹ ரூபம் மாதிரி இதெல்லாமும் ப்ராண ப்ரதிஷ்டையான அக்ஷர ரூபம் என்று புரிந்துகொண்டு அவற்றோடும் உறவு கொண்டாடும் முறையில் ப்ரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவையும் நம்மை இல்லாமல் கரைக்கிற இடத்திற்குக் கொண்டு விடுகிறவை என்று அன்போடு உறவு கொண்டாடி, பக்தி பண்ண வேண்டும். குரு உபதேசித்து, அப்புறம் நாம் மனனமும் த்யானமும் பண்ண வேண்டிய வேதாந்த தத்வங்கள் லோகத்தில் தப்பாகச் சொல்கிறாற் போல் dry philosophy (வறட்டு வேதாந்தம்) இல்லவேயில்லை.

உயிருள்ள மூர்த்திகளுக்குச் சமதையாக இருக்கிறவை என்று புரிந்துகொண்டு பக்தியுடன் அப்யாஸிக்க வேண்டும். இதுவரைக்கும் dry -யாகச் சாதனை பண்ணி வந்த நாம் இனிமேலே வரப்போகும் மூன்றாம் கட்ட சாதனாங்கங்களான ச்ரவண, மனன, நிதித்யாஸனங்களை குளுகுளுவென்று பக்தியோடு பண்ண வேண்டும்.

இனிமேல் முதலில் பண்ண வேண்டியது சந்நியாஸம் என்று கவனித்தோமோனால் இப்போதுதான் ரொம்ப dry கட்டமென்று தோன்றும். ஆனால் மாறாக இப்போதுதான் ரொம்பக் கசிவு, அப்படியே ‘சொத சொத' ஆரம்பிக்கப்போகிறது. வெளிப்பார்வைக்கும், வெளி லோகத்தைப் பொறுத்த மட்டிலும் ஒரே dry தான்.

மாயாலோகமென்று அப்படியே அந்த ‘வெளி'யைத் தள்ளி விடுகிற கட்டந்தான். ஆனால் உள்ளுக்குள் ஜிலு ஜிலு வென்று ப்ரேமாம்ருதம். வெளியிலே காய்ந்த மட்டை. உள்ளே இளநீர். அந்த ப்ரேமாம்ருதத்தை எல்லாவற்றுக்கும் உள்ளேயுள்ள வஸ்துவிடம் சுரக்க வேண்டிய கட்டமாக இதை ஆசார்யாள் கருணையோடு காட்டிக் கொடுத்திருக்கிறார்.

(தெய்வத்தின் குரல் ஆறாம் பகுதி)
காஞ்சி மஹா பெரியவா,

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM.


Sage of Kanchi

Bala Thiru
 
ஸ்ரீசங்கர ப்ரபாவம் என்னும் ஸ்ரீ சங்கர பக

ஸ்ரீசங்கர ப்ரபாவம் என்னும் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்யர் சரித்திரம் (1936)

Please open the link to read

Sankara



Sage of Kanchi

Siva Bgs
 
Advaitha Siddhantha Q&A

Advaitha Siddhantha Q&A

Million thanks to Sankara for bringing lot of these treasures out to the world…..
This is one of those amazing treasures….This Q&A is one of the most exhaustive, well-rounded work on advaitha. Quotes from vedam, Thirukural, Upanishads, ithikasa etc….This reminds me on a work of Sri Adi Shankara where the questions are answered in one word/sentence only! I forgot the name of that work….
This is a must-read…Don’t miss…
Here is the download link.


https://mahaperiyavaa.wordpress.com/2015/03/15/advaitha-siddhantha-qa/



Sage of Kanchi
 
ஸ்ரீசக்ரத்திற்கான விளக்கம்

ஸ்ரீசக்ரத்திற்கான விளக்கம்


devotee_doing_padha_puja_mahaperiyava.jpg




சிட்டியின் அனுபவம் தொடர்கிறது……


சென்னை வானொலியில் தலைமை நிருபர் பணிக்கு (இது மும்பை திரைப்பட ப் பணிக்கு சமமானது.)மாற்றும்படி கோரி நான் ஊழியனாய் இருந்த தகவல் ,ஒலிபரப்புத்துறைக்கு (டெல்லி) நான் விண்ணப்பித்துக்கொண்டேன். அந்த சமயத்தில்தான் ஆசாரியாள் அவர்களின் உரையை மொழி பெயர்க்கும் வாய்ப்பும் கிட்டியது. அந்த மொழிபெயர்ப்பை அங்கீகாரம் பெறுவதற்காக நான், சடகோபன், என் ஆஃபீசர் ஸ்ரீ நிவாசன் அவர்களுடன் காஞ்சி சென்றேன்.


அன்றைய இரவில் அவர் ஓய்வெடுக்கும் சமயம் இரவு ஒன்பது மணிக்கு எங்களை அழைத்தார்.

அவரிடம் இந்த மொழி பெயர்ப்பு பற்றி ப்ரஸ்தாபித்தபோது அது பற்றி பேசாமல் வழக்கம் போல் உலக விஷயங்களைப் பற்றி அளவளாவிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கச் சென்றுவிட்டார்.


நாங்கள் பெரியவர் உத்தரவு கிடைகாததாலும், அவருக்கு அவர் உரையை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதில் விருப்பமில்லையோ என்ற சந்தேகத்திலும், அன்று இரவு காஞ்சியிலேயே தங்கி விட்டு மறு நாள் காலையில் போய் படுத்து உறங்கி விட்டோம்.


மறு நாள் காலையில் மடத்து ஊழியர் ஒருவர் பெரியவர் எங்களை அழைப்பதாகச் சொல்லி எழுப்பினார். நாங்கள் அவசரமாக பல்தேய்த்து, கையில் அந்த ஆங்கில மொழி பெயர்ப்பு ப்ரதியையும் எடுத்துக்கொண்டு மடத்துக்குச் சென்றோம்.


என்னைப் பார்த்த பெரியவர் ”எங்கே போய்விட்டாய்? மடத்திலேயே படுத்துக் கொண்டிருக்கலாமே” என்று சொல்லி க் கொண்டே, மடத்தை விட்டு வெளியே நடந்தார்.


அவருடன் புதுப்பெரியவரும், இரண்டு சிஷ்யர்களும் உடனிருந்தார்கள்.


போகும்போது புதுப் பெரியவரிடம் ”எங்கே போகிறோம்” என்று கேட்டேன்.


அவர் சிரித்துக் கொண்டே”யாருக்குத் தெரியும் ” என்றார்.


காமக்ஷியம்மன் கோவிலைச் சுற்றிய தெருக்களில் நடந்து கொண்டே உலகாயதமாக பேசிக் கொண்டிருந்தாரே அன்றி என் மொழி பெயர்ப்பு பற்றி எதுவுமே பேசவில்லை. நாலௌ வீதிகளிலும் வலம் வந்தபின் கோவில் உள்ளே சென்று குளத்தில் ஸ்னானம் செய்ய ஆரம்பித்தார். புதுப் பெரியவரும் அவருடன் சென்று விட்டார்.


நானும், சடகோபனும் மேலே படிக்கட்டில் நின்று கொண்டிருந்தோம்.


அவர் கீழே ஸ்னானம் செய்தவாறே என்னிடம் அரசியல் பற்றியும் அப்போதுதகவல் ஒலி பரப்புத்துறை அமைச்சரான இந்திராகாந்தி பற்றியும் கேள்விகள் கேட்டுகொண்டே ஸ்னானத்தை முடித்துக் கொண்டார்.


எனக்கு நான் மேலே நின்று, அவர் கீழே இருந்து அண்ணாந்து பார்த்து கேட்கும் கள்விகளுக்கு விடை அளிக்க மிக சங்கடமாயிருந்தது. நான் அப்புறம் போய் நின்று கொள்கிறேன்” ஸ்வாமிகள் ஸ்நான அனுஷ்டானங்கள் முடித்தபின் வருகிறேன்” என்று அனுமதி பெற நினைத்தேன்.


”ஏன்” என்று அவர் கேட்டதற்கு என்ன சொல்வது என்று பதில் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து” நான் கீழே இருக்கேன், நீ மேலே நிற்கிறேன் என்றா, பரவாயில்லை, நீ அங்கேயே இரு ” என்று சொல்லி மேலும் அரசியல் பற்றி எல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்.


ஸ்னானம் முடிந்த பின் ஜபம் முடித்து சிஷ்ய பரிவாரம் சூழ கோவிலுக்குள் சென்றார். சிட்டியைப் பார்த்து ”நீ வா ” என்று சைகை காண்பித்தார்.


புடுப் பெரியவாள் பெரியவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தார்;

அவரைத்தாண்டிப் போவதற்கு யோசிக்கும்போதுதான் ”நீ வா என்கிற உத்தரவு!”
புதுப் பெரியவர், ”நீரொம்பக் கொடுத்து வெச்சவன்’ என்று சொல்லி சிட்டிக்குப் போக வழி விட்டு அனுக்ரஹித்தார்.


அம்மன் சன்னிதிக்கு முன் ப்ரதிஷ்டை செய்திருந்த ஸ்ரீசக்ரத்தைக் காண்பித்து”இது பற்றித் தெரியுமா?” என்று கேட்டார்.


சிட்டிக்கு இது பற்றித் தெரிந்திருந்தும் தன் சிற்றறிவைப் பெரியவர் முன்பு வெளிப்படுத்த அஞ்சி, ”தெரியாது” என்று சொல்லி விட்டார்.


உடனே அர்ச்சகரைக் கூப்பிட்டு ஸ்ரீசக்ரத்தைப் பற்றி சிட்டிக்கு விளக்கும்படி சொன்னார். பின்னர் நடந்த அர்ச்சனையில் , ஆஅசாரியார்கள் இருவருடனும் காமாக்ஷி அம்மனையும் ஒருசேர காணும் பேறு கிட்டியது!


(யாருக்கு இப்படிப்பட்ட பாக்யம் கிடைக்கும்? அத்துடன் அவர் உத்தரவின் பேரில் ஸ்ரீசக்ரத்திற்கான விளக்கம் வேறு ! சிட்டி எத்தகைய பாக்ய சாலி!) மற்ற சன்னிதிகளிலும் வழிபட்டுவிட்டு, சிஷ்யர்களுடன், சின்னக் காஞ்சிபுரத்திலுள்ள மடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். நாளை மேலே என்ன நடந்தது என்று பார்ப்போம்…


ஜய ஜய சங்கரா


https://mahaperiyavaa.wordpress.com/2015/03/15/ஸ்ரீசக்ரத்திற்கான-விளக்/
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top