• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
அருள்மொழிகள் Continues

அருள்மொழிகள் Continues

31. சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்.


32. பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே சிவகாரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் சொன்னார்கள். வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும் வேஷமாகவே போய்விடுகின்றன. ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து கொள்வதற்காகச் சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம் ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு உபயோகப்படுகின்றன.


33. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.


34. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.


35. நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.


36. ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.


37. ‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.


38. சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.


39. ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜா. அவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும் உடுக்கையிலிருந்து ‘அ இ உண், ருலுக்’ என்பதான பதினாறு சூத்திரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.


ஆனந்தக் கூத்தின் சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான் ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின் கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன. தக்ஷிணாமூர்த்திக் கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக் கொண்டு அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத் தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.


40. ‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.


TO BE CONTINUED


Kanchi periyavar chandrashekarendra saraswati swamigal aruLvakku (காஞà¯￾சி பெரியவரà¯￾ சநà¯￾திரசேகர சரஸà¯￾வதி ஸà¯￾வாமிகளà¯￾ à®…à®°à¯￾ளà¯￾வாகà¯￾கà¯￾) தெயà¯￾வதà¯￾த
 
அருள்மொழிகள் Continues

அருள்மொழிகள் Continues

41. பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்போல இருக்கும். ‘இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக் கொண்டிருப்பது போல இருக்கும். ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, ‘உனக்கு ஒரு வஸ்து இருக்கிறது’ என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம் மூர்த்திகள்.


42. பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).


43. பரமேச்வரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம். அவருடைய நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில் பாப பரிகாரத்துக்கு சுலபமான மார்க்கம் இருப்பதாகச் சொன்னேன். அது இந்த ஸ்மரணந்தான். ப்ரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும். பெரியவர்கள் - சிஷ்டர்கள் சாயங்காலத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட பரமேச்வரன் சகல வேத சாஸ்த்திரங்களின் தாத்பர்யமாகிற ஓங்கார ஸ்வரூபமாக இருக்கிறார். ஓங்காரந் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.


44. நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?


ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.


குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேச்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த இரண்டும் பரமேச்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே சொல்லுகிறது. ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும். சிவநாமோச்சாரணம் செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்.


45. சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்.


46. எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில் சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில் திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி. திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர் இருக்கிறது. அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர் கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில் சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.



47. ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால் அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற கேள்விக்குப் பதிலாகக் கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உன்ன உபதேசம் பண்ணுகிறார் என்று கொஞ்சம் பார்ப்போம். “அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய இருதயத்திற்குள்ளும் இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்” என்று சொல்கிறார். நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன் இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக் கட்டிக்கொண்டு அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல் இருக்கிற தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த ஈச்வரன் தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருத்தேசத்திலும் இருக்கிறான் என்று கண்ணபிரான் உபதேசம் செய்கிறார்.


- ஹர ஹர மஹாதேவா -
அருள்மொழி அமுதம் முற்றிற்று



Kanchi periyavar chandrashekarendra saraswati swamigal aruLvakku (காஞà¯￾சி பெரியவரà¯￾ சநà¯￾திரசேகர சரஸà¯￾வதி ஸà¯￾வாமிகளà¯￾ à®…à®°à¯￾ளà¯￾வாகà¯￾கà¯￾) தெயà¯￾வதà¯￾த
 
மே மாதம் 3-ம் தேதி முதல் ஞாயிறு அன்று சஹஸ்ர &a

மே மாதம் 3-ம் தேதி முதல் ஞாயிறு அன்று சஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞம்

பெரியவா சரணம்.

மே மாதம் 3-ம் தேதி முதல் ஞாயிறு அன்று சஹஸ்ர காயத்ரீ ஜப யக்ஞம் சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் அழகாக அமைந்திருக்கும் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும். வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஜபயக்ஞம் செய்யவரும் அன்பு உறவுகள் அங்கே வந்துவிடுமாறு பணிவோடு வேண்டுகிறோம்.


பொதுவாக ஆலயங்களில் ஜபம் செய்வது உத்தமம் என்றாலும், மூர்த்தி, விருக்ஷம், தீர்த்தம் என்பதாகவும், பாடல் பெற்ற ஸ்தலமாகவும் மட்டுமல்லாம் பஞ்ச தீர்த்தங்களால் சூழப்பெற்றுள்ள சிவாலயம் இந்த மருந்தீஸ்வரர் திருக்கோயில். சித்ராபௌர்ணமி தினத்தில் அம்பாள் த்ரிபுராம்பிகா சன்னதியில் லோகக்ஷேமத்திற்கென காயத்ரீ ஜபம் செய்யவிருக்கும் நாமெல்லம் ஸத்யமாக புண்ணியம் செய்தவர்கள் தாம்!


ஸ்தலத்தினைப் பற்றிய சிறு தகவலை இங்கே பகிரலாமோ!
இறைவன் - மருந்தீசுவரர், பால்வண்ணநாதர், வான்மீகநாதர்.
இறைவி - சொக்கநாயகி.(திரிபுரசுந்தரி).
பாடியவர்கள் - திருஞானசம்பந்தர் (21 பாடல்கள்), அப்பர் (10 பாடல்கள்).
தல மரம் - வன்னி.

பரமேஸ்வரன், பார்வதி திருமணத்தின்போது பூமியைச் சமன் செய்ய தென்திசை வந்த அகத்தியருக்குக் கடுமையான வயிற்றுவலி. இறைவனை வேண்டுகிறார். ஈசன், உமையம்மையோடு காட்சியளித்து, பிணி நீங்குவதற்கான மருந்தும், அதன் வகைகளையும் அறிவித்து அகத்தியரைக் குணப்படுத்துகிறார். பிணி நீங்குவதற்கான ஔடத்தை அருளியதால் இறைவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற திருப்பெயர்!


இராமனின் புனித வரலாற்றை அனைவரும் அறியவேண்டும் என்று நாரதர் கங்கைக் கரையில் உரைத்தார். அதைக் கேட்ட முனிவர் வான்மீகி (வால்மீகி). இராமனின் வரலாற்றை இராமாயணம் என்ற காப்பியமாக இயற்றினார்.


வான்மீகி, தவமியற்றும் போது மார்க்கண்டேயரைச் சந்திக்கிறார். “தென்திசை நோக்கிச் செல். நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும். அங்கு நீ முக்தி கிடைக்கப் பெறுவாய்” என்கிறார். அவ்வாறே வான்மீகி தென்திசையில் பயணிக்கிறார். கிழக்குக் கடற்கரை ஓரத்தில் “நான் இங்கு இருக்கிறேன்” என்ற குரல் கேட்கிறது அவருக்கு! குரல் ஒலித்த திசை நோக்கித் திரும்ப இறைவன், வன்னி மரத்தடியில் காட்சியளிக்கிறார். “தாங்கள் அம்மையோடு இங்கிருந்து பக்தர்களுக்கு அருளவேண்டும்; இத்தலம் எனது பெயரால் அழைக்கப்பட வேண்டும்” என்று வேண்டுகிறார் வான்மீகி. இறைவனும் அவ்வண்ணமே அருள்கிறார். வான்மீகி பெயரால் திருவான்மியூர் என்றான திருத்தலம்!

தலத்தின் சிறப்புகள்!


வரம் வேண்டி இராமன் சிவபூசை செய்த தலம்.


காசியப முனிவரின் சாபத்தால் காமதேனு தன் புனிதத்தன்மையை இழந்து மருந்தீஸ்வரர் திருமேனியில் தினமும் பால் சொரிந்து அருள் பெற்றது. இறைவனுக்குப் ”பால்வண்ணதாசர்” என்ற பெயரும் ஏற்பட்டது. காமதேனுவின் குளம்பு ஏற்படுத்திய வடு இறைவனின் திருமேனியில் இன்னும் உள்ளது!


சிவபெருமான் சூரியனுக்கு அருள்புரிய மேற்கு நோக்கிக் காட்சியளிக்கும் தலம்.
பங்குனி மாதத்தில் ஆண்டுப் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறுகிறது. இவ்விழாவை முதலில் ஏற்று நடத்தியவர் பிரம்மன்!


இந்தப் பங்குனிப் பெருவிழாவின் பத்தாம் நாள் இரவு தியாகராசர் 18 வகை நடனங்களைக் காட்டியருளும் தலம்.


மனதால் நினைத்தால் நேரில் வருவான் இறைவன் என்கிறது இந்த ஆச்சரியமான பதிகம்!
மந்தமாகிய சிந்தை மயக்கு அறுத்து
அந்தமில் குணத்து ஆனை அடைந்துநின்று
எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லீரேல்
வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே!


ஐந்து புலன்களால் நாம் இயற்றும் குற்றங்களைக் களைவான் இறைவன் என்கிறது திருநாவுக்கரசரின் அடுத்த பதிகம்.


நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்
பஞ்சின் மெல்லடியாள் உமைபங்கன் என்று
அஞ்சி நாள்மலர் தூவி அழுதிரேல்
வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே!


வெகுவாகப் பாடப்பெற்ற இந்த திவ்ய திருத்தலத்தில் அனைவருமாக ஒருங்கே அமர்ந்து ஸஹஸ்ர காயத்ரீ ஜபம் செய்து லோகக்ஷேமத்திற்கான நமது ப்ரார்த்தனையை செவ்வனே செய்யும் பாக்கியம் வேண்டி மஹாகுரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் பாதாரவிந்தங்களில் நமஸ்கரிப்போமாக!

வெளியூரில் இருக்கும் அன்பர்களும், தவிர்க்க முடியாத காரணங்களால் திருத்தலத்துக்கு நேரில் வர இயலாதவர்களும் தாங்கள் வசிக்கும் இடத்திலேயே இருந்து கீழ்கண்ட சங்கல்ப மந்திரத்தை உச்சரித்து வேதமாதா காயத்ரீயின் மந்திர ஜபத்தினைச் செய்யவேணுமாய் நமஸ்கரித்து வேண்டுகிறேன்.
__________________________________________________
சுக்லாம்பரதரம் + ஓம் பூ: + மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சுபே ஷோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஷதி தமே கலியுகே ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரத : கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சஹாப்தே அஸ்மின் வர்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்ட்யா: ஸம்வத்ஸரானாம் மத்யே மன்மத நாம சம்வத்ஸரே உத்தராயணே வசந்தருதௌ, மேஷ மாஸே சுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ வாசர: பாநு வாஸர யுக்தாயாம் நக்ஷத்ர: சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம் சுபயோக சுபகரண ஏவங்குண சகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுப திதௌ சம்வத்சர தோஷாநாம் சமனார்த்தம் மம ஜன்மாப்யாஸாத் ஜன்மப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மனோ வாக் காயாதி சர்வாங்கானி விரசித பாபானாம் நிவ்ருத்யர்த்தம் ஆத்ம ஸுத்தி ஸித்யர்த்தம் ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரேரணயா ஸ்ரீ சந்த்யா காயத்ரீ சாவித்ரீ சரஸ்வதீ ப்ரீத்யர்த்தம் லோகக்ஷேம அவாப்யர்த்தம் ஸ்ரீமஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர ஸ்வரூபஸ்ய ஸ்ரீ காஞ்சீ காமகோடீ பீடாதீஷ்வரஸ்ய ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ர குருவர்யஸ்ய ப்ரேரணயா சித்ரா பௌர்ணமீ புண்யகாலே ஸ்ரீ த்ரிபுரசுந்தரீ சமேத ஸ்ரீ ஔஷதீச்வர ஸ்வாமி சன்னிதௌ ஸ்ரீ பராசக்தி அம்பிகா சமேத ஸ்ரீ த்யாகராஜ சுவாமி சன்னிதௌ அஷ்டோத்ர சஹஸ்ர ஸங்க்யயா காயத்ரீ மஹாமந்த்ர ஜபம் கரிஷ்யே ||
_____________________________________________________
ஸ்ரீசரணாள் அருளியபடியாக பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று வேதமாதா காயத்ரீயின் மந்திரத்தை1008 முறை ஜபித்து வேதமாதா மற்றும் வேதஸ்வரூபியின் கருணாகடாக்ஷத்திற்கு பாத்திரமாவோம்.
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.



Sage of Kanchi
 
Plant vilva trees to celebrate HH Periyava’s 80th jayanthi year

Plant vilva trees to celebrate HH Periyava’s 80th jayanthi year

By mahesh on April 28, 2015

balaperiyava_watering_plants.jpg



As a part of 80th year celebrations of His Holiness Pujya Shri Jayendra Saraswathi Shankaracharya Swamigal, devotees in Puducherry have taken up the task to plant tree saplings in various places. As a beginning 80 vilva trees are to be planted. His Holiness Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal watered the first sampling in the premises of Shankara Vidyashram School, Odiyambattu, Viliyanur, Pondicherry and blessed the event.


We can do the same. People living in individual houses can afford to do this.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!


https://mahaperiyavaa.wordpress.com...to-celebrate-hh-periyavas-80th-jayanthi-year/
 
விஞ்ஞானமுமம் ஆன்ம நிறைவும்

விஞ்ஞானமுமம் ஆன்ம நிறைவும்

"வேதாந்தம் உலகமே மாயை என்கிறது. அதனால் உலக வாழ்க்கைக்கு உதவுகிற விஷயங்களில் இந்தியர்களுக்கு அக்கறையே கிடையாது. ஸயன்ஸ், டெக்னாலஜி, வைத்தியம், என்ஜினியரிங் எல்லாம் மேல் நாட்டிலிருந்துதான் இந்தியாவுக்கு வந்திருக்கிறது" என்று சில வெள்ளைக்காரர்கள் சொல்வதுண்டு. இதுவே உண்மை என்று நம்மவர்களும் நம்பி, "ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஸ்வாமியையும், ஆத்மாவையும் பற்றித்தான் ஹிந்து சாஸ்திரங்கள் இருக்கின்றன. லோக வாழ்க்கைக்கு உபயோகமாக அவற்றில் ஒன்றும் இல்லை" என்று கண்டனம் செய்வதுண்டு.


உண்மையில் நம்முடைய சாஸ்திரங்களில் இல்லாத ஸயன்ஸ் எதுவுமே இல்லை. நமது புராதன சாஸ்திரங்களையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால், இந்த உண்மை தெரியும். ஆயுர்வேதத்தை—சரகர், சுச்ருதர் முதலானவர்களின் கிரந்தங்களைப் பார்த்தால், இப்போதைய பெரிய டாக்டர்களும் அதிசயிக்கும்படியான மருத்துவ முறைகளும், ஸர்ஜரி விஷயங்களையும் தெரிந்து கொள்கிறோம்.

மிகவும் புராதனமான அதர்வண வேதத்திலேயே யுத்தத்தில் உண்டாகும் பல விதமான காயங்களைக் குணப்படுத்தும் மூலிகைகள், சிகிச்சை முறை முதலியவற்றைப் பற்றிச் சொல்லியிருப்பது இப்போது ரொம்பவும் உபயோகமாக இருப்பதாகச் சமீபத்தில் காசி சர்வகலாசாலையில் ஒருத்தர் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருக்கிறார்.

என்ஜினியரிங் டெக்னாலஜியிலும் ஆதியிலேயே அபாரமான திறமையை நம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். போஜராஜன் செய்த ஸமராங்கண சூத்திரத்தில் ஆகாய விமானம் உள்படப் பலவிதமான மிஷின்களைச் செய்வதற்கான அடிப்படைத் தத்வங்களை விவரித்திருக்கிறது.

சுமார் இரண்டாயிரம் வருஷங்களான ஓர் இரும்பு ஸ்தம்பம் இன்றைக்கும் தில்லி குதுப்மினாருக்குப் பக்கத்தில் துருப்பிடிக்காமல் இருக்கிறது. டாடா தொழிற்சாலை இல்லாமலே இப்பட்டிப்பட்ட பெரிய தூணை எந்த உலையில் (FURNACE) அடித்து உருவாக்கினார்கள் என்று ஆச்சரியப்படும்படி இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே இப்படிப் பல என்ஜினியரிங் அற்புதங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளான கல்லணை எந்தவிதமான கலவையால் கட்டப்பட்டது என்று இன்றும் புரியவில்லை. ஆவுடையார் கோவில் கொடுங்கையில் பாறாங்கல்லை ஒரு காகிதத்தின் அளவுக்கு மெல்லியதாக இழைத்திருக்கிறார்கள். திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபத்தின் பிரம்மாண்டமான வளைவை (ARCH) எந்த ஆதாரத்தில் கட்டியிருக்கிறார்கள் என்று என்ஜினியரிங் நிபுணர்களும் வியக்கிறார்கள்.



தமிழில் பதினெண் சித்தர்கள் பாடலில் இருக்கிற வைத்திய நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
வான நூலில் (astronomy) நமக்கு இருந்த பாண்டித்தியத்தால்தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை, இன்று கிரகணம் என்று கொஞ்சம்கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க முடிந்திருக்கிறது.


எல்லா கலைகளும் சாஸ்திரங்களும், ஸயன்ஸுகளும், பாரத தேசத்தில் நன்றாக வளர்ந்தே வந்திருக்கின்றன. ஆனாலும், இப்போது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களால் அணுகுண்டு போன்ற எத்தனையோ அனர்த்தங்கள் உண்டாகியிருப்பதைப் பார்க்கிறோமல்லவா? இப்படி நேரக்கூடாது என்பதாலேயே, பக்குவமானவர்களுக்கு மட்டும் நம் தேசத்தில் விஞ்ஞான நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்கள்.

சாதாரண ஜனங்களுக்குப் புரியாத பரிபாஷையில் இந்த சாஸ்திரங்கள் அமைந்திருப்பதற்கு இதுவே காரணம். சித்தர்களின் தமிழ் பாடல்களும்கூட இப்படித்தான் நமக்குப் புரியாத பரிபாஷையில் இருக்கும்.


இப்போது நிபுணர்கள் ஆராய்ச்சி செய்தால், நம் சாஸ்திரங்களிலிருந்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடியும். சில சமாச்சாரங்கள் நமக்குப் புரியாமல் இருக்கும். அதற்காக அவற்றை ஒதுக்கிவிடக்கூடாது. நமக்குப் பின்னால் வருபவர்களுக்காவது அது புரியக்கூடும் என்பதால், நமக்குப் புரிகிற சாஸ்திரங்கள், புரியாத சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் நாம் ரக்ஷித்துக் கொடுக்க வேண்டும்.


மற்ற தேசங்களில் சமீப காலமாகவே இந்த விஞ்ஞான வித்தைகள் வளர்ந்து வந்திருக்கின்றன. நாம் ஆதியில் நமக்கென்றே இருந்த இந்த வித்யா சம்பத்தை மறந்துவிட்டு, மற்றவர்களிடமிருந்து இப்போது கற்றுக் கொள்கிறோம்! இதில் ஒரு முக்கியமான வித்தியாசம், இந்த வித்தைகள் யாவும் பிரம்மவித்தை என்கிற ஆத்ம சிரேயஸுக்கு அநுசரணையாகவே நம் தேசத்தில் வைக்கப்பட்டிருந்தன.

வெறும் லௌகிக சௌக்கியத்துக்காகவே அவற்றை உபயோகப்படுத்தி மேல்நாடுகள் உண்டாக்கியிருக்கிற 'நாகரிக'த்தில் ஆத்மசாந்தி அடியோடு போய்விட்டது. இதை மேல் நாட்டுக்காரர்கள் நான்றாக உணர்ந்திருக்கிறார்கள். விஞ்ஞானத்தின் மூலம் படிப்படியாக நாகரிகத்தில் ஏறி, இப்போது அவர்கள் அதில் உச்ச நிலைக்கு வந்திருக்கிறார்கள். ஆனாலும் இதில் ஆத்ம திருப்தி இல்லை என்று கண்டுகொண்டு நம்முடைய வேதாந்தத்தின் பக்கமும் நம்முடைய பக்திமார்க்கத்தின் பக்கமும் வர ஆரம்பித்திருக்கிறார்கள். நாமோ நம்முடைய லௌகிக வித்தை, ஆத்ம வித்தை இரண்டையும் அலட்சியம் செய்து விட்டு, மற்ற நாட்டவர்கள் அடைந்திருக்கிற இரண்டுங்கெட்டான் நாகரிகத்தைத் தேடி ஓடுகிறோம். அவர்கள் இரும்பு உலகத்திலிருந்து (iron Age) தங்க யுகத்துக்கு (Golden Age)—அதாவது, இருட்டு யுகத்திலிருந்து பிரகாச யுகத்துக்கு—வந்து கொண்டிருக்கிறார்கள்.

நாமோ பிரகாச யுகத்திலிருந்து இருட்டு யுகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறோம்! குறைவிலிருந்து அவர்கள் நிறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால், நாமோ நிறைவிலிருந்து குறைவுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம்.

???????????? ???? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஆச்சார்யன் யார்?

ஆச்சார்யன் யார்?

மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் “ஆச்சாரியன்” என்று வைத்தார்கள்.

ஒன்று: சாஸ்த்ர சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு: தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் ஆச்சார சீலராக இருக்க வேண்டும்.

மூன்று: இப்படித் தனக்குத் தெரிந்து கடைப்பிடிக்கும் சாஸ்த்ரத்தைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும்.

மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

சொல்லிக்கொடுப்பதை நன்றாக புரிந்து ஏற்றுக்கொள்வதே 'க்ரஹண சக்தி'.

அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே 'தாரணசக்தி'.


VAI. GOPALAKRISHNAN: 12] ?????????? ?????


 
ருத்ரன் – சிவன் (சிவம், நடராஜா) – மஹேச்வரன்

ருத்ரன் – சிவன் (சிவம், நடராஜா) – மஹேச்வரன்



த்ரிமூர்த்திகள், அவர்களுக்கும் ஆதாரமான பரப்ரஹ்மம் என்று குருவைக் கொண்டாடும் விஷயமாகக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாமென்று ஆரம்பித்தேன். முதல் மூர்த்தியான ப்ரஹ்மா விஷயத்தின் அலசல் நீண்டு விட்டது.


த்ரிமூர்த்திகளை முதலில் சொல்லியிருக்கிறது: குருர் – ப்ரஹ்மா, குருர் – விஷ்ணு, குருர் தோவோ மஹேச்வர:


ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் என்று சொல்வார்கள். ப்ரஹ்ம – விஷ்ணு – சிவன் என்பதில்லை. சிவபக்தர்கள் சிவன் மும்மூர்த்திகளில் ஸம்ஹார மூர்த்தியாக இருப்பவன் அல்ல என்பார்கள். சிவனுடைய அநேக ரூபங்களில் ஒன்றுதான் ருத்ரன் என்பார்கள்.

சிவன்தான் பரமாத்மா. ஸரியாகச் சொல்ல வேண்டுமானால், ஆண்பாலில் சிவன் என்று சொல்லாமல் அஃறிணையாக சிவம் என்றே சொல்வார்கள். அந்த சிவம்தான் ஸகல க்ருத்யங்களுக்கும் காரணமான முழுமுதற் கடவுள். ஸகல க்ருதயமும் அடங்கிப்போன சாந்தமும் அதுதான். அதிலிருந்தே லோக வ்யவஹாரார்த்தம் ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார க்ருத்யங்களைச் செய்யும் ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ரர் தோன்றுவது. சைவத்தில் – சாக்தத்திலும்தான் – இந்த மூன்றோடு இன்னும் இரண்டு க்ருதயங்கள். பஞ்ச க்ருத்யம் என்பதாக. திரோதானம் அல்லது திரோபவம் என்பது ஒன்று. அதுதான் மாயை.

லோகத்தை எதிலிருந்து எப்படி உண்டாக்கினான்? அதுதான் புரியவே மாட்டேனென்கிறது. ஏதோ ஒரு மாயா சக்தியினால் இப்படி எல்லாவற்றையும் செப்பிடு வித்தை காட்டுகிறான். அதுதான் திரோதானம். மும்மூர்த்திகளின் கார்யங்களுக்கும் அடிப்படையானது அதுதான்.

பஞ்ச க்ருதயத்தில் பாக்கியிருப்பது ‘அநுக்ரஹம்’. எப்படியோ ஜீவனுக்கு கர்மா என்ற ஒன்று ஏற்பட்டபின் அதை அநுபவித்தால்தானே தீர்க்கமுடியும்? அதற்கு (1) சரீரம், (2) அதன் புறக்கரணம் மட்டுமின்றி அகக்கரணம் (மனஸ், புத்தி முதலியவை), (3) இவற்றை வைத்துக்கொண்டு வினையை அறுவடை செய்கிற களமாக உள்ள இந்த ஜகத் என்பது, (4) அறுவடையை அநுபவிப்பது என்பவை தேவையாயிருக்கின்றன. (முறையே) தநு, கரணம், புவநம், போகம் என்று சொல்லும் இந்த நாலையும் பரமாத்மா கொடுப்பதுதான் ‘அநுக்ரஹம்’. இது சின்ன அநுக்ரஹம். பெரிய அநுக்ரஹம், கடைசீயில் இதெல்லாவற்றிலிருந்தும், அதாவது திரோதானத்தினால் உண்டான மாயா லோக வாழ்க்கையிலிருந்தே, ஜீவனை விடுவித்து மோக்ஷ பதத்தைத் தருவதுதான்.

நடராஜாவின் குஞ்சிதபாதம் அந்தப் பதத்தைத்தன் தருகிறது. அதனால்தான் தூக்கிய திருவடி என்று அதற்கு ஏற்றம்.


நடராஜாவின் நாட்டியத்திற்குப் பஞ்சக்ருத்ய பரமானந்தத் தாண்டவம் என்று பெயர். ஒரு கையில் அவர் பிடித்துக் கொண்டிருக்கிற டமருகத்தின் சப்தத்தினால்தான் ஸ்ருஷ்டி உண்டாகிறது.

அபயஹஸ்தத்தினால் ‘ஸ்திதி’ என்ற பரிபாலனம் செய்கிறார். இன்னொரு கையிலிருக்கும் அக்னியால் ஸம்ஹாரம் பண்ணுகிறார். முஸலகனின் மேலே ஊன்றியிருக்கிற அவருடைய வலது பாதத்தால் திரோதான க்ருத்யத்தை நடத்துகிறார். முடிவாக, குஞ்சித பாதம் என்ற இடது திருவடியைத் தூக்கிக் காட்டி, “இதைப் பிடித்துக் கொண்டால் அதுதான் மோக்ஷாநுக்ரஹம்” எனறு தெரிவிக்கிறார்.



நடராஜா சிவம் என்ற பரமாத்மாவாக, ஸகல கார்ய காரண மூலமாக இருப்பவர். அவரிடமிருந்து ஒவ்வொரு கார்யத்திற்கு ஒவ்வொரு மூர்த்தி வருகிறார். இப்படி வரும்போது ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹாரத்துக்கு ப்ரஹ்ம – விஷ்ணு ருத்ரர்கள் இருப்பதுபோல திரோபவ, அநுக்ரஹ கர்த்தாக்களாகவும் இரண்டு மூர்த்திகள் இருக்கவேண்டுமல்லவா? திரோபவ கர்த்தாவுக்குத்தான் ‘ஈச்வரன்’ என்று பெயர். நடைமுறையிலும், இதர சாஸ்திரங்களிலும் ‘ஈச்வரன்’ என்பதற்கு என்ன அர்த்தம் கொடுத்தாலும், சைவ சாஸ்திரப்படி ‘ஈச்வரன்’ என்றால் திரோபவம் என்கிற மாயையைச் செய்யும் மூர்த்தி என்றே அர்த்தம். வெறுமே ‘ஈச்வரன்’ என்று சொல்லாமல் ‘மஹேச்வரன்’ என்பார்கள். ‘அநுக்ரஹ’ கர்த்தாவுக்கு ஸதாசிவன் என்று பேர்.


சுருங்கச்சொன்னால், சைவ சாஸ்திரப்படி, சிவம் என்ற பரமாத்ம வஸ்து ப்ரஹ்ம – விஷ்ணு – ருத்ர – மஹேச்வர – ஸதாசிவர்களைக் கொண்டு ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார – திரோதான – அநுக்ரஹங்கள் என்ற பஞ்ச க்ருத்யங்களைச் செய்கிறது. சாக்தத்தில் சிவத்துக்குப் பதில் சக்தியைப் “பஞ்சக்ருத்ய பராயணா” என்று சொல்லியிருக்கிறது.


ருத்ரன் ஸம்ஹார கர்த்தா. (“குருர் ப்ரஹ்மா”) ச்லோகத்திலோ “மஹேச்வர:” என்று சொல்லியிருக்கிறது. “குருர் – தேவோ – மஹேச்வர:”. ஆனாலும் இங்கே மஹேச்வரன் என்பதைத் தீரோதானகர்த்தா என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் ஸம்ஹாரகர்த்தா என்று பண்ணிக் கொள்வதுதான் பொருத்தம். முதலில் ப்ரஹ்மா, விஷ்ணு என்று ச்ருஷ்டி, ஸ்திதி கர்த்தாக்களைச் சொன்னதால் அடுத்து ஸம்ஹார கர்த்தாவைச் சொல்வதுதானே பொருத்தம்? சைவ சாஸ்த்ரப்படி நுணுக்கமாகப் போகாமல் ஸாதாரணமாக சிவம், சிவன், ஈச்வரன், மஹேச்வரன், ருத்ரன் என்ற எல்லாவற்றையும் ஒருவனுக்கே பேராகச் சொல்வதுபோலவே இங்கேயும் சொல்லியிருக்கிறதென்று அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்.



https://dheivathinkural.wordpress.com/2015/04/28/ருத்ரன்-சிவன்-சிவம்-நடரா/
 
Anusham Pooja - 06 May 2015

Anusham Pooja - 06 May 2015


We are pleased to announce that with the abundant grace and blessings of our Karunamurthy, Sri Maha Periva, the Special Anusham Pooja will be conducted on Wednesday 06 May 2015. The Pooja will be held at Sri Sankara Gurukulam, C P Ramaswamy Street, Off St Marys Road and Abhiramapuram 4th Street, Abhiramapuram, Chennai

Pooja will be performed to Sri Maha Periva's vigraham and His Prathyaksha Holy Paduka. We invite all our members and devotees to join us for this Special Anusham Pooja, and get the bountiful blessings of His Holiness Sri Maha Periva.

Jaya Jaya Sankara, Hara Hara Sankara!

Sage of Kanchi
 
Sandhyavandhanam from Dheivathin Kural

Sandhyavandhanam from Dheivathin Kural




தனுர்வேதத்தில் அஸ்திரம், சஸ்திரம் என்று இரண்டு வகை ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றனவென்றும், அஸ்திரம் மந்திரபூர்வமாக ஒரு பதார்த்தத்தை விட்டால் எதன்மேல் விடுகிறோமோ, அது நாசமடையும் என்றும் சொன்னேன். நாம் பிரதி தினமும் பண்ணவேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை நாசம் பண்ணுவதற்காக பிராமணர்கள் தினந்தோறும் ஒரு அஸ்திரப் பிரயோகம் பண்ணவேண்டும்.

அஸ்திரம் என்றால் ஒன்றை விட்டு எறிகிறதல்லவா ? அந்த அஸ்திரம் எது ? எதை விட்டெறிகிறது ? நம்முடைய புத்தியை ஆசிரயித்திருக்கிற அஸுரர்கள் தொலைய வேண்டும். ஞானசூரியன் பிரகாசிக்க வேண்டும். அது பிரகாசிக்காமல் பண்ணிக்கொண்டு உள்ளே இருக்கிற பிரதிபந்தங்கள் நிவர்த்தியாக வேண்டும், என்ற அந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பண்ணவேண்டும். எந்தக் காரியம் பண்ணினாலும் பன்ணாவிட்டாலும், மூச்சைப் பிடித்துக்கொண்டு அதைப் பண்ணவேண்டும். அதுதான் ஸந்தியாவந்தனத்தில் அர்க்யம் கொடுப்பது.



ஒரு காரியத்தை ‘சிரத்தையாக’ ஒருவன் பண்ணினால் மூச்சைப் பிடித்துக்கொண்டு பண்ணுகிறான் என்று சொல்லுகிறோம். இந்தக் காரியத்தையும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பண்ணவேண்டும். தினந்தோறும் இதைப் பன்ணி வந்தால் அந்தச் சத்ருக்கள் நாசமாய்ப் போய்விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக்கொள்ளவேண்டும். இப்பொழுது நாம் மூக்கைத்தான் பிடித்துக்கொள்கிறோம். “நாசிகாம் ஆயம்ய” என்று சொல்லுவதில்லை; “ப்ராணான் ஆயம்ய” என்றுதான் சொல்லியிருக்கிறது.



எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்படவேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கு மனது ஒருமைப்படவேண்டும். அதற்காகத்தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும் ? மனது நிற்கிறபொழுது மூச்சு நிற்கிறதல்லவா? பெரிய ஆச்சரியம் உண்டாகிறது; பெரிய துன்பம் வருகிறது; பெரிய ஸந்தோஷம் ஏற்படுகிறது அப்பொழுது மனது லயித்துப்போய் ஏகாந்தமாக நிற்கிறது. ஹா! என்று கொஞ்ச நேரம் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஓடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை. அது தானாக நிற்கிறது. மனது அதிலே ஈடுபட்டு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக ? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். மனது ஒருமைப் படுகிறபோது மூச்சு நிற்கிறது. மூச்சு நின்றால் மனது ஒருமைப்படும்.



நாம் அர்க்யம் விடும்போது சித்தைகாக்ரியத்தோடு விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைகாக்ரியம் உண்டாகும். அதை நிறையப் பண்ணுவது யோகத்திற்கு; அது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்யவேண்டியது. நாம் அட்திகமாகப் பண்ணினால் பத்து தடவைதான் பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்று சிலவற்றிற்கு நியமம் ஏற்பட்டிருக்கிறது. சிறு வயதில் உபநயன காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தால் இத்தனை நாளில் யோகீஸ்வரராக இருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ணவேண்டுமல்லவா ? அரை நிமிஷம் பிராணன் நிற்கப்பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம் சரீரத்திற்குத் தகுந்தாற்போல் செய்யலாம். பிரானன் நின்றால் மனது நிற்கும். அது நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரம் ஆகும்.



ஸந்தி பண்ணி ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேசுவரார்ப்பணம் பண்ணவேண்டும். அர்க்யமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ணவேண்டும். பின்பு காயத்ரி பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். கொஞ்சம் நிறுத்துகிறது பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தால் போதும். அதிகம் வேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப் பிரதானம், ஜபம, ஸ்தோத்ரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேசுவரனுடைய அனுக்ரஹம் பெறுவதற்காகப் பண்ணுகிறேனென்று சொல்லிச் செய்யவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். அதிகமாகப் பண்ணினால்தான் உபத்திரவம் உண்டாகும். அதற்கு குரு வேண்டும். தினந்தோறும் பண்ணவேண்டியதால் ரோகிஷ்டன் கூட பண்ணவேண்டியிருப்பதால் உபத்திரவம் இராது.


மனோவாக்காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூண்டினாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன் ஸந்தியாவந்தனத்தில் வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரி ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது. இவைகளைத் தவிர கர்மயோக பக்தியோக ஞானயோக ரூபமாகவும் ஸந்தியவந்தனம் இருக்கிறது. ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று ஒவ்வொரு பாத்திரம் வைத்துக் கொள்ளவேண்டும் அதிலே ஸந்தியவந்தனம் பண்ணவேண்டும். பிராணாயாமம் அவசியம் பண்ணவேண்டும். சந்தியாவந்தனத்தை அவசரமாகப் பண்ணக்கூடாது.



சரியான காலத்தில் உசிதமாக ஸந்த்யானுஷ்டானம் பண்ணினதால்தான் பலர் ரிஷிகள் ஆனார்கள். அபிவாதனத்தில் எந்த மகரிஷியினுடைய சந்ததியில் பிறந்திருக்கிறோமோ அந்த மகரிஷி கோத்திரத்தைச் சொல்லி அன்று முதல் காயத்ரி ஜபிக்கப்பட்டு வருகிறது. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மானுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. அந்த முதல் ரிஷிக்கு அப்புறம் எவ்வளவோ பேர் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள். த்ரயார்ஷேயம், பஞ்சார்ஷேயம், ஸப்தார்ஷேயம், ஏகார்ஷேயம் என்று சொல்லுகிறார்கள். அந்தந்த கோத்திரத்தில் அவ்வளவு ரிஷிகள் இருந்திருக்கிறார்கள் என்றும் அதனால் தெரியவருகிறது. ஸ்ரீவத்ச கோத்திரம் பஞ்சார்ஷேயம்.



தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்துவிடக் கூடாது. பிராணாயாமத்தோடு சித்தைகக்ரியத்தோடு மந்திர லோபமில்லாமல் பரமேசுவரார்ப்பணம் பன்ணி எல்லாவற்றையும் பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும்.


https://mahaperiyavaa.wordpress.com...ndhanam-from-dheivathin-kural-bn-mama-sketch/
 
வேதியரின் தேகத் தூய்மை

வேதியரின் தேகத் தூய்மை


மந்திரசக்தி குறையாமல் இருக்க தேஹத்தை சுத்தியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


தேஹோ தேவாலய: ப்ரக்தோ ஜீவ: ப்ரோக்தோ ஸநாதன:|




தேஹம் ஒரு தேவாலயம். அந்த ஆலயத்துக்குள் இருக்கிற உயிரான ஜீவன் ஈச்வரஸ்வரூபம்.


ஆலயத்தில் அசுத்தியோடு போகக்கூடாது. அங்கே அசுத்தமான பதார்த்தங்களை சேர்க்கக் கூடாது.

மாம்ஸம், சுருட்டு முதலியவைகளை கொண்டு போனால் அசுத்தம் உண்டாகும். ஆகம சாஸ்திரங்களில் தீட்டோடும் தேஹ அசுத்தத்தோடும் ஆலயத்துக்குப் போகக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.



அப்படியே மனித தேஹம் ஒரு தேவாலயமானால் அதிலும் அசுத்தமான பதார்த்தங்களைச் சேர்க்கக்கூடாது. குறிப்பாக, மந்திரசக்தி இருக்க வேண்டிய தேஹத்தில் அசுத்தமானவைகளைச் சேர்த்தால் அது கெட்டுப் போய்விடும்.


வீட்டுக்கும் தேவாலயத்திற்கும் வித்தியாஸம் இருக்கிறது. வீட்டிலும் அசுத்தம் பண்ணக்கூடாது; ஆனாலும் தேவாலயத்தைப் போல அவ்வளவு கடுமையாக அசுத்தம் வராமல் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு மூலையிலாவது வாய் கொப்புளிக்கவும், ஜல மல விஸர்ஜனத்துக்கும், பஹிஷ்டா [மாதவிடாய்] ஸ்திரீக்கும் இடம் வைக்கிறோம். Flat system-ல் கடைசியில் சொன்னது போய், அநாசார மயமாகி விட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆலயத்தில் கொஞ்சங்கூட இடமில்லையல்லவா?


ஒரு தேசத்தில் வீடும் வேண்டும், ஆலயமும் வேண்டும். அதே மாதிரி ஜனசமூகத்தில் லோக காரியங்களைச் செய்யும் வீடு மாதிரியான தேகங்கள், ஆத்ம காரியத்தைச் செய்யும் ஆலயம் மாதிரியான தேகங்கள் இரண்டும் வேண்டும். தேஹங்களுக்குள் ஆத்மாவை ரக்ஷிப்பவை தேவாலயத்தைப் போல பாதுகாக்கப்பட வேண்டிய பிராம்மண தேஹங்கள். வேத மந்திர சக்தியை ரக்ஷிக்க வேண்டியவைகளாதலால் ஆலயம்போல் அதிக பரிசுத்தமாக அந்த தேகங்கள் இருக்க வேண்டும். அசுத்தியான பதார்த்தங்களை உள்ளே சேர்க்கக் கூடாது. மந்திர சக்தியை ரக்ஷித்து அதனால் லோகத்துக்கு நன்மையை உண்டாக்க வேண்டுவது பிராம்மணன் கடமை. அதனால்தான் அவனுக்கு அதிகமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. "மற்றவர்கள் அது பண்ணுகிறார்களே, நாமும் ஏன் பண்ணக்கூடாது?" என்று அசுத்தியைத் தரும் காரியங்களை பிராம்மணன் பண்ணக்கூடாது. அவர்களெல்லாம் சரீரத்தை வைத்துக் கொண்டு ஸந்தோஷமான அநுபவங்களை அடைகிறார்களே என்று இவன் தனக்குத் தகாதவற்றைச் செய்யக்கூடாது.

"பிராம்மணனுக்கு தேஹம் ஸந்தோஷத்தை அநுபவிப்பதற்காக ஏற்பட்டதல்ல. லோக உபகாரமாக வேதத்தை ரக்ஷிக்க வேண்டிய தேஹம் அது. அது மஹா கஷ்டப்படவே ஏற்பட்டது" என்று ['வாஸிஷ்ட ஸ்ம்ருதி'யில்] சொல்லியிருக்கிறது:

"ப்ராஹ்மணஸ்ய சரீரம் து நோபபோகாய கல்பதே| இஹ க்லேசாய மஹதே".




லோக க்ஷேமத்திற்காக மந்த்ரங்களை அப்யஸிக்க வேண்டும் என்பதற்காகவேதான் செலவு பண்ணி உபநயனம் முதலியவைகளைச் செய்து கொள்வது. வேத மந்திரங்களை ரக்ஷிப்பதாகவே - அதன் மூலம் ஸகல ஜீவ ஜந்துக்களையும் ரக்ஷிப்பதற்காகவே - தேஹத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

'எல்லோரும் ஸெளகரியமான தொழில் பண்ணுகிறார்களே! பணம் சம்பாதிக்கிறார்களே! ஏன் நாம் செய்யக் கூடாது?' என்று பிராம்மணன் நினைக்கக் கூடாது. தன்னுடைய கடமையை நன்றாகச் செய்துவிட்டுப் பிறகுதான் ஜீவனோபாயத்தை நினைக்க வேண்டும். முன்பு இவன் பிராம்மண தர்மங்களைச் செய்தாலே போதுமென்று ராஜாவும் ஸமூஹமும் இவனுக்கு மானியம், ஸம்பாவனை செய்து வாழ வசதி தந்தார்கள்.

இப்போது நிலைமை மாறிவிட்டதால், பணத்துக்கும் கொஞ்சம் பிரயத்தனப்பட வேண்டியதுதான். ஆனால் நிரம்பப் பணத்தை ஸம்பாதிக்க வேண்டுமென்று ஆசைப்படக்கூடாது. இதற்காக அநாசார வழிகளில் பிரவேசிக்கக் கூடாது. பிராம்மணர்களுக்கு தரித்திர நிலை வேண்டியதுதான்.

இன்பங்களைத் தேடாமல் காயக் காயக் கிடந்தால்தான் இவனுக்கு ஞானப் பிரகாசம் உண்டாகும். அதனால் லோகம் வாழும். கண்ட தேசங்களுக்குச் சென்று ஆசார அநுஷ்டானங்களை விட்டுவிட்டு ஸம்பாதிக்கிற ஐச்வர்யம் இவனுக்கு வேண்டாம். அதுபடி ஸம்பாதிக்காவிட்டால் ஒன்றும் முடியாது என்பது இல்லை. லோகத்தில் மந்திர சக்தியைக் காப்பாற்றிக் கொண்டு தன்னுடைய தர்மத்தை அநுஷ்டிப்பது முதல் கடமை. ஸம்பாதிப்பது secondary [இரண்டாவது] தான்.


மந்திர சக்தி என்ற அக்கினியை இவன் காப்பாற்றிக் கொண்டு வந்தால் அது எல்லோருக்கும் க்ஷேமத்தை உண்டாக்கும். லோகத்தில் எவருக்குக் கஷ்டம் வந்தாலும் அதை நிவர்த்திக்கும் சக்தி பிராம்மணனுக்கு மந்திர சக்தியின் மூலம் இருக்க வேண்டும்.

யாராவது கஷ்ட காலத்தில் வந்து பிரார்த்தித்தால், "நீ பண்ணுவதைத்தான் நானும் பண்ணுகிறேன், உனக்கு இருக்கிற சக்திதான் எனக்கும் இருக்கிறது" என்று ஒரு பிராம்மணன் சொன்னால் அவனுடைய ஜன்மா வீண்.


மந்திர சக்தியாகிய அக்கினி இப்பொழுது பெரும்பாலும் அணைந்திருக்கிறது. பிராம்மண தேஹம் விகாரம் ஆகிவிட்டது. அதில் அசுத்தமான பதார்த்தங்கள் சேர்க்கப் படுகின்றன. ஆனால், ஒரு பொறி மட்டும் அணையாமல் இருக்கிறது. அதை விருத்தி பண்ணவேண்டும். அப்படிச் செய்தால் எப்பொழுதாவது பற்றிக்கொள்ளும்.


அந்த நெருப்புப் பொறிதான் காயத்ரீ. அது பரம்பரையாக வந்திருக்கிறது.

????????? ??????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Sri Rudra Kalpa Book released by HH Pudhu Periyava

Sri Rudra Kalpa Book released by HH Pudhu Periyava

By mahesh on May 5, 2015

About the Book
This book, which is captioned “SRI RUDRA KALPA” is author’s 16[SUP]th[/SUP] publication.
In this book, the author has made an excellent compilation, viz.,



  1. Samhita (Moolam) and “Padapatas of “Rudra, Chamaka prasnas” at one place in four Vedas (Rudra, Narayana Suktam and their padapata’s, Shukla and Krishna Yajur and Sama),
  2. As in Rig and Sama Vedas, names of Rishi(Sage), Chandas(Metre) and Devatas (deities) with evidences of origin (Moolam) in “Rudra Chamaka Prasnas” of Shukla and Krishna Yajur veda are given.
  3. The prayers/ desires in “chamaka prasnas” of Krishna Yajur veda are given in chronological order.
  4. Application/usage/chanting of Sri Rudra Ekadasi with puja-homavidhi (Sampurna Rudra Ekadasi prayoga) has been mentioned.
  5. Usage of Sri Rudra Mantras as in the 6[SUP]th[/SUP] chapter of very old “grantha” of “Maharnava” has been incorporated.
  6. Apart from the foregoing, the book contains a very rare ‘stotra” and Namavali of “Siva Sahasranama” (Lingapuranam) as prayed to Lord Parameswara by Lord Narayana to get back his “Srichakra” , when he lost it. It is a specialty of the book.


About the
Author


Acharya Muralikrishna Srowthi a renowned Vedic Scholar started his vedic education at the age of five and a half, under the guidance of his Guru Brahmashri Sankaranarayana Srowthigal. He has completed Sampurna Sama Veda Adhyayanam with Ashtabrahmanam, Shadangam, Lakshana, Srowtha, Smartha, Veda Bhashya. He has also completed Kramantham in Krishna Yajur Veda and Samhita in Rig Veda. He has studied Shastras like Sahithya, Vyakarana, Mimamsa and Dharma Shastra. He has expertise knowledge about conducting rituals in all Vedas.


He has been honored with various awards from various institutions. One of the most prestigious awards is “Sarvoccha Pariksha” by Kasi Raja. “Veda Pandit” by U.P Samskrita Academy, Lucknow.
He has completed his Doctorate in Vedas from Maharishi Sandeepany Veda Vidya pratishthan, Ujjain and the subject was “Vedaanam Samavedosmi iti Bhagavadukthi Samiksha”



“Veda Ratnakara” with a citation and Sanmanam of Rs.100,001. And also a gold medal in all india basis for best scholar given by Sri Kanchi Kamakoti Pithadhipati, Jagadguru HH Sri Sri Jayendra Saraswathi Swamigal.


To name a few other awards, “Samaveda Sarvabhwoma”, “Vedavyasa Vidya Vachaspathi”, “Veda Shastra Rakshamani” and “Vaidika Samrat.


He has trained around forty vidyarthis. Most of the vidyarthis are lecturers in various institutions and are managing various fields. He had rendered speeches about different topics of Veda and Shastra. He has been an examiner and adviser to various institutions.


He is the founder Chairman and President of Vidvath Sabha (Veda Shastra Shiksha Anusandhana Kendram). He has researched on the manuscript work, edited and published fifteen books on various topics relating to Vedas and Shastras.


An ardent devotee of Sri Kanchi Mahaswami, he has made prachara of Guru’s ideas about the veda and shastra in different angles.


BOOKS AVAILABLE

SRIMAD BHAVANAM
7,RADHESHYAM AVENUE ,RAJAKILPAKKAM CHENNAI 600073
PHONE 9444115980
E MAIL [email protected]


https://mahaperiyavaa.wordpress.com/2015/05/05/sri-rudra-kalpa-book-released-by-hh-pudhu-periyava/
 
AN EVENT FROM HISTORY RE-ENACTS IN OUR TIMES : Sudarshan

AN EVENT FROM HISTORY RE-ENACTS IN OUR TIMES : Sudarshan


cdm1.jpg




In Tamizh parlance, the word Kovil refers to two kshetrams only - Chidambaram and Srirangam. For devotees of Siva-Vishnu, Chidambaram is held in great veneration and prime adoration for both Shankara and Narayana are enshrined within the same temple complex and one can have darshanam of both of them standing at a single place itself. Such is the rarity and uniqueness of this kshetram. Furthermore, this kshetram was the pinnacle of devotion for thousands of Shiva Bhaktas and Mahatmas, which is evidenced by almost every single pathigam sung by the venerable Nayanmargal and further devotees having the refrain Thiruchitrambalam.


Srimad Acharya Sarvabhauma Sri Shankara Bhagavadpadacharyal also held this temple close to His Heart, so much that He consecrated one of the five sphatika lingam-s brought from Kailasha in this temple, which goes by the name Moksha Lingam. This Moksha Lingam is offered worship 6 times every single day. Alongside, another well known fact is Acharyal kept aside one more of these sphatika lingam, called the Yoga Lingam, for His own worship. He consecrated this holy Yoga Lingam at the Srimatam established by Him at Kanchi, which is our most worshipful Kamakoti Peetam at Kanchipuram and devotees can witness the Acharya Parampara offering worship to this Sri Chandramaulishwara Yoga Lingam thrice every day.


During the historic Kumbabhishekam held at Chidambaram on May 1, 2015, devotees had the rare privilege of having darshanam of both Yoga Lingam and Moksha Lingam when both the present Kanchi Acharyas - Pujya Sri Periyava and Pujya Sri Bala Periyava - made a Vijaya Yatra to Chidambaram to participate in the Kumbabhishekam event.



On Thursday, April 30, 2015, both Acharyas were accorded ceremonial honours at the holiest of holies during Their visit to the temple. They were led into the temple premises with Purna Kumbham and They offered worship to Srimad Ananda Nataraja Murthi and Sri Shivakamasundari Ambal within the Deva Sabha, where both the Deities were enshrined as a make-shift sanctum until the Kumbabhishekam. On Friday, May 1, 2015, again with due respects, both Their Holinesses were led into the temple where They witnessed the historic kumbhabhishekam of Chitvilasa Chitsabha and Kanakasabha.









On Saturday, May 2, 2015, the grand chariot was drawn with both Srimad Ananda Nataraja Murthi and Sri Shivakami Ambal seated within bedecked with rare and beautiful jewels. Among the jewels that They wore were the diamond studded Chandrakala, diamond studded Abhaya Hastam and diamond-studded Kunchithapadam, all offered by Mahaperiyava during His eventful visits to the Kshetram. Also the Lord wore a golden thandai (anklet) that was offered by the present Acharyas during this current visit. As the ratham stood in front of the Srimatam camp on the South Car Street, both Acharyas offered flowers and fruits and had darshan of the Lord and Ambal.




During the Kumbabhishekam event, Veda Parayanam in different formats, such as Ghanam, Jata, Varna Kramam, Samhita, etc, were performed. Due honours were made to all these Vaideekas on behalf of Srimatam and offered sambhavana totally amounting to several lakhs of Rupees. The Podhu Dikshithars were also given appropriate sambhavana by Srimatam and their suvasini wives were blessed with 9-yard sarees.

Today, Monday, May 4, 2015, a grand bhikshavandanam was offered by the Podhu Dikshithar committee that oversees the temple management. This is a honour that is reserved only for the Acharyas of Kanchi Kamakoti Peetam. The Secretary of the Podhu Dikshithar Committee performed the Bhikshavandanam Sankalpam in the Divine Presence of Sri Mahatripurasundari sametha Srimad Chandramoulishwara swami Puja that was being performed by HH Bala Periyava during the first Kala puja on behalf of all the Chidambaram Dikshithars, historically referred to as Thillai Moovayiram. Documents from the past history shows that during previous visits of the Kanchi Acharyas, the Samsthana Puja was always performed at the 1000-pillared Raja Sabha mantapam at Chidambaram, although this time the camp was at a different location due to the kumbhabhishekam.

A Veda Patashala is being commenced to impart Veda Adhyayanam to the children of the Dikshitar clan, with the blessings of Sri Acharyas and Their gracious support. This would enable and empower the present generations and many more further generations to perform worship to the Lord until time immemorial.

Sankara: AN EVENT FROM HISTORY RE-ENACTS IN OUR TIMES : Sudarshan

 
There have been Mahatmas in every age.

There have been Mahatmas in every age.


There have been Mahatmas in every age. They have divine vision. Nothing is unknown to them.

Sri Ekamram (a householder who had been a personal attendant to Maha Periyava for nearly three decades) said that once when Maha Periyava had camped in Pandaripura, there lived in this holy kshetra a young boy who used to do severe sadhana. He used to visit Periyava every day.

His hair was unkempt and he wore religious marks on his body. He repeatedly sought sanyasa from Maha Periyava. But Maha Periyava’s only response to all his pleadings was silence. Whereas, there was this man who was doing ‘bhiksha kainkarya’ (cooking and serving food) to Maha Periyava and who was not in the least interested in sanyasa. But Periyava coaxed him into it! This man went on grumbling, ‘I did not want sanyasa but Periyava has given it!’ And people around found fault with Periyava’s actions. They said, “How religious and spiritual this young boy is but Periyava has refused sanyasa to him whereas He has given it to another who does not want it and does not seem to deserve it!”

People see and judge a person outwardly whereas a Mahatma ‘sees’ through him and knows him inside out. After some years it was learnt through newspapers that this boy who had sought sanyasa from Periyava had married a foreign lady! With our limited mind we cannot see within. But a Mahatma’s viewpoint (‘drishti’) is always right.



Nama Dwaar: Sri Swamiji on Sri Maha Periyava
 
Sri Maha Periva 122nd Jayanti

Dear Members,

As most of you would be aware, Sri Maha Periva 122nd Jayanti is to be celebrated this year on 2nd June 2015 - likely to be on a Pournami day. We are making elaborate arrangements to make this a memorable, special event this year as well. And there are some very sweet surprises in store for those who would be attending this personally.

We will have two sessions of programs during the day - one in the morning session with Abhishekam, Laksharchana etc and will get over with lunch/ prasadam to attendees. And the second session would be in the evening commencing with Lalita Sahasranama Parayanam (being a Pournami day, and Periva's special attachment to this makes it even more compelling for us to chant) and going on to conclude with upanyaasam about His Mahima, concluding with Prasaadam distribution again.

Details of the event:
Date: Tuesday 2nd June 2015
Time: Event Commencement by 0800 AM IST
Venue: Kanchi Mahaswamy Anantha Mandapam, adjacent to Sri Anantha Padmanabha Swamy Temple, Adyar, Chennai
 
Mahaperiyava Deeksha Dhina Abishekam Live Telecast starts at 8.30 AM IST Today

Mahaperiyava Deeksha Dhina Abishekam Live Telecast starts at 8.30 AM IST Today

8-5-2015






Please click here to watch live from Sri Kanchi Matam Adishtanam.
Video Courtesy: Sri Vignesh Studios


Live Streaming | Kanchi Periyavals Pradhosham
Kanchi Live-1

Thank you Sri Kumar for you unparalleled kainkaryam! A big thanks from all devotees around the world from the bottom of our hearts!

https://mahaperiyavaa.wordpress.com...am-live-telecast-starts-at-8-30-am-ist-today/
 
சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (பு&#2

சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

Thanks to Mannargudi Sri Sitaraman Srinivasan Mama for the article.


பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?


“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்


மஹாபெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர்உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில்சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.


எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா.

ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம். மேளராக மாலிகையின்வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.


‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ’ஹரிதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்).


இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம்‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்:


“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”


அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.


இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?


“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.


இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும்?


நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.


எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.


அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும்எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.


’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.


நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ்.அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி,இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.


எம்.எஸ்.அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.





https://mahaperiyavaa.wordpress.com/2015/05/08/சூரிய-சந்திரர்கள்-உள்ள/
 
Mahaperiyava Puranam Launch

Mahaperiyava Puranam Launch

Shri Shivaraman does not need any introduction. The man behind the camera interviewed 100s of devotees’ experience has now decided to own a dedicated website for his needs. A new website www.mahaperiyavapuranam.org has been launched few days back. Going forward he will post the articles/videos in this site. Please visit/subscribe to the new site.


The sankalpam I had for this blog in 2009 was to bring ALL Periyava related contents in one place. So far I have not deviated from that sankalpam – Periyava has been helping me to stay on course. I will continue to maintain the same focus and will bring Shivaraman’s contents also here in the blog.


On behalf of all of us here, we pray Mahaperiyava to shower His blessings on Shivaraman to continue do the holy tasks he has been doing all these years and bring us all more treasures.

Shivaraman – wish you all the bests with your dedicated website!



https://mahaperiyavaa.wordpress.com/2015/05/08/mahaperiyava-puranam-launch/
 
Sanyasa Deeksha Day Moolam 08.05.2015

Sanyasa Deeksha Day Moolam 08.05.2015

https://www.youtube.com/watch?v=zf8x-tRJ5NU

Streamed live on May 8, 2015
SANYASA DEEKSHA NAKSHATHRA DAY Celebration Every Month and Sanyasa deeksha jayanthi every year for Pujya Shri Chandrasekarendra Saraswathi Mahaswamigal, The 68th Sankaracharya of Sri Kanchi Kamakoti Peetam, Kancheepuram, Tamilnadu, India.
 
பஞ்ச க்ருத்யமும்காமேச்வரி-காமேச்வரர்க&#2

பஞ்ச க்ருத்யமும்காமேச்வரி-காமேச்வரர்களும்

ஹரி-ஹர-விரிஞ்சன் என்று த்ரிமூர்த்திகளைச் சொல்கிறார். இவர்கள் அம்பாளை வழிபடுவதாகச் சொல்கிறார். இதற்கு முன்னாடி, 'சிவனும் உன்னோடு கூடினால்தான் அசையக்கூட முடிகிறது - அதாவது, பிரபஞ்ச நிர்வாஹத்தைப் பண்ண முடிகிறது'என்றார். அப்படியானால் மும் மூர்த்திகளில் சொன்ன 'ஹரன்'வேறு, முதலில் சொன்ன 'சிவன்'வேறு என்றாகிறது; இல்லையா?


எல்லாம் ஒன்று என்பது இருக்கட்டும். அந்த அத்வைதம் இங்கே எடுபடாது என்றுதானே ஸ்தோத்திரமே ஏற்பட்டிருக்கிறது?இந்த நிலையில் - உள்ளே எல்லாம் ஒன்றாயிருந்தாலும், வெளியில் வேறாகக் காண்கிற நிலையில் - ஹரன் வேறு, சிவன் வேறுதான்.


'ஹரன்'என்றால் போக்குகிறவன், நீக்குகிறவன், இல்லாமல் பண்ணுகிறவன் என்று அர்த்தம். அபஹரணம், ஸம்ஹரணம் என்பதில் வரும் 'ஹர'இதுதான். இதுவே 'ஹாரம்'என்றும் வரும் - அபஹாரம், ஸம்ஹாரம். ஸ்ருஷ்டிக்கும் ப்ரம்மா, ரக்ஷிக்கும் விஷ்ணு, ஸம்ஹாரம் செய்யும் ருத்ரன் என்ற மூன்றில் ஸம்ஹார ருத்ரனைத்தான் ஹரன் என்கிறார்.


ஒரே பரமாத்மாதான் முத்தொழிலுக்காக இப்படி மும்மூர்த்தியாயிற்று. அவர்களுக்கு அந்தத் தொழில்களைப் பண்ணுவதற்கான சக்தி பரமாத்மாவின் மூலமான சக்தியிலிருந்துதான் வந்திருக்கிறது. அந்த மூல சக்தியே அம்பாள். பரமாத்மா என்கிற பரப்ரம்மத்தின் சக்தி அவள். மும்மூர்த்தி மாத்திரமின்றி ஈ, எறும்பிலிருந்து அத்தனை ஜீவராசிகளின் சக்தியும் அவளிடமிருந்து வந்ததுதான்;ஸகல ஜகத்திலுள்ள ஜட வஸ்துக்களின் சக்தியுந்தான்!


பரப்ரம்மத்தின் சக்தி என்றால் அதுவும் பரப்ரம்மமேதான். எது ஒன்றும் அதுவாக இருக்கக் காரணம் அதன் சக்திதானே?ஒரு வஸ்துவின் சக்திபோய்விட்டதென்றால் அந்த வஸ்துவின் பயனே போய்தானே விடுகிறது?பத்து ஹார்ஸ் பவர் மோட்டார் என்றால் அந்த ஹார்ஸ் பவர்தானே அந்த மோட்டாரை மோட்டாராக்கியிருக்கிறது?அந்தப் பவர் போய்விட்டால்?அதுவே போன மாதிரிதானே?அப்புறம் மோட்டார் என்று பேர் வைத்துச் செய்த கார்யம் எதுவாவது அது செய்ய முடியுமா?அதன் உள்ளேயே கையைவிட்டு விளையாடினால்கூட 'ஷாக்'அடிக்காது. ஒரு ஆஸாமி அந்த ஆஸாமியாயிருப்பதே அவனுடைய சக்தியினால்தான். ஆனபடியால் பரப்ரம்ம சக்தி என்பது பரப்ரம்மமேதான். ஆனாலும், யாரானாலும் தன் சக்தியைக் காட்டாமல் சும்மாயிருக்கவும் செய்யலாமல்லவா? அப்படி வெளி வ்யாபாரத்தில் ஈடுபடாமல் சாந்தமாக, தன்னில் தானாக பரப்ரம்மம் இருப்பதையே 'சிவம்' என்பது.


அப்படிப்பட்ட சிவ நிலையிலிருந்துதான் வெளியிலேயே ஓடிக்கொண்டிருக்கும் மனஸ், வெளி வ்யாபாரங்களிலேயே விழுந்துகொண்டிருக்கிற இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஜீவ நிலைக்கு நாம் வந்திருக்கிறோம். நம்முடைய நிஜத்தன்மையை நாம் அடைந்து, மாயா கார்யமும் ஸம்ஸார பந்தமும் போய் மோக்ஷத்தில் எப்போது சேர்வோம் என்றால் அந்த சாந்த சிவத்திலேயே மறுபடி இரண்டறக் கலக்கிறபோதுதான். நமக்கு மிகவும் உயர்ந்த ஆனந்தத்தைக் கொடுப்பதான மோக்ஷம் இப்படி சாந்தமாயிருப்பதால், அப்போது நாம் இரண்டறக் கலந்திருக்கும் ப்ரம்மமும் சாந்தமாக, செயலில்லாமல், சக்தியைக் காட்டாமல் இருப்பதாகவே ஏற்படுகிறது. அதனால்தான் ப்ரம்மம், பரப்ரம்மம் என்றாலே செயலடங்கியுள்ள ஒன்றாகச் சொல்கிறோம். ஒரு செயலுமில்லாமல் ஒருத்தர் சித்தப்ரமை பிடித்து உட்கார்ந்திருந்தால் ''ப்ரம்மமாயிருக்கு'' என்கிறோம்!


இப்படிப் பார்த்துக்கொண்டு போகிறபோது சிவன் பரப்ரம்மம், அம்பாள் பரப்ரம்ம சக்தி என்று பாகுபடுத்திச் சொல்ல இடமேற்படுகிறது - இது இல்லாமல் அது இல்லை என்றாலும், இரண்டையும் வேறு வேறு மாதிரிப் பிரித்துக் காட்ட இடமேற்படுகிறது.


இப்போது ப்ரம்ம சக்தியினால் நடக்கும் கார்யங்களில் முத்தொழிலோடுகூட இன்னும் இரண்டைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது. சாந்த சிவ ஸ்வரூபமாகவே இருந்த நமக்கு அந்த ஸ்வரூப ஞானத்தை மறைத்து அதனிடத்தில் அஞ்ஞான ஜீவ பாவத்தைத் தோன்றப் பண்ணி ஸம்ஸார மாயையில் பிடித்துத் தள்ளியிருக்கிற ஒரு தொழிலையும் ப்ரம்ம சக்தி செய்விக்கிறாள் என்று தெரிகிறது.

இந்த மாயையிலிருந்து தப்பித்துப் பல மஹான்கள் தங்களுடைய நிஜ ஸ்வரூபமான சிவ ஸ்வரூப ஞானம் பெற்று சாந்த ஸமாதியான மோக்ஷநிலையை அடைந்திருக்கிறார்களென்பதிலிருந்து இப்படிப்பட்ட மோக்ஷஅநுக்ரஹத்தைச் செய்வதான தொழிலையும் பராசக்தி - ப்ரம்மசக்தி - செய்வதாக ஏற்படுகிறது. ஆக, ஸ்ருஷ்டி-ஸ்திதி-ஸம்ஹாரத்தோடு இன்னும் இரண்டு தொழில் சேர்கிறது:ஒன்று - நமக்கு நம்முடைய நிஜமான ஆத்ம ஸ்வரூபம் தெரியாமல் மாயா சக்தியால் மறைப்பது. இன்னொன்று - மாயையிலே மாட்டிக்கொண்டிருக்கிற நம்மை அதிலிருந்து விடுவித்து, 'சிவமாக்கி எனையாண்ட்'என்று மாணிக்கவாசக ஸ்வாமிகள் பாடின மாதிரி பரமாத்ம ஸ்வரூபத்தில் சேர்த்து மோக்ஷத்தை அநுக்ரஹிப்பது. இந்த இரண்டு தொழிலுக்கும் முறையே 'திரோதானம்'என்றும் 'அநுக்ரஹம்'என்றும் பேர். திரோதானம் என்பதைத் திரோபாவம் என்றும் சொல்வதுண்டு.

'திரஸ்'என்கிற தாதுவுக்கு 'ரஹஸ்யப்படுத்துவது', 'மறைப்பது'என்றும் அர்த்தம். 'திரஸ்கரிணி'என்று ஒரு வித்தை கேள்விப்பட்டிருக்கலாம் - ஒரு வஸ்துவை மறைந்துபோகும்படிப் பண்ணும் வித்தை. 'திரஸ்'ஸிலிருந்துதான் 'திரை'வந்திருக்கிறது. ஒரு வஸ்துவை நமக்குத் தெரியாதபடி திரை விழுந்து மறைத்தவிடுகிற தோல்லியோ?மாயைத் திரையைப் போட்டு நம் ஆத்மஸ்வரூபத்தை மறைத்து ஸம்ஸாரத்தில் ஆட்படுத்துகிற பராசக்தியின் தொழில் திரோதானம்.

திரையை அறுத்து மோக்ஷம் கொடுக்கும் தொழில் அநுக்ரஹம். பராசக்தி ஸ்ருஷ்டி, vFF, ஸம்ஹாரங்களுக்கு அதிகாரியாக ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரர்களை வைத்திருப்பது மாதிரி திரோதானத்திற்கு வைத்துள்ள அதிகாரிக்குப் பேர்தான் ஈச்வரன். மஹேச்வரன் என்றும் சொல்வதுண்டு. முதலில் சொன்ன முத்தொழிலும் மாயைக்கு உட்பட்டதுதான். அந்த மாயா லோக நிர்வாஹம் முழுக்க ஈச்வரனின் அதிகாரத்தில் இருக்கிறது. மாயையை நிவ்ருத்தி பண்ணி மோக்ஷத்தைக் கொடுக்கும் அநுக்ரஹத் தொழிலைப் பண்ணும் அதிகாரியின் பேர் ஸதாசிவன்.



ஐந்தொழில் - பஞ்சக்ருத்யம் - என்று இவற்றைச் சொல்வது. சைவ ஸித்தாந்தம் முதலான சிவ மதங்களிலும் இது உண்டு. ஆக்கல், அளித்தல் (காப்பு அளித்தல்) , அழித்தல், மறைத்தல்;அருளல் என்று தமிழில் சொல்வார்கள். சைவர்கள் இப்படி பஞ்ச க்ருத்யம் புரிவது பரமசிவன்என்று சொல்வார்கள். நடராஜாவின் நாட்டியத்தையே 'பஞ்ச க்ருத்ய பரமானந்த தாண்டவம்'என்று விளக்குவார்கள். சாக்தத்தில் அம்பாளைத்தான் பஞ்ச க்ருத்யம் புரிபவளாகச் சொல்வார்கள். ''பஞ்ச க்ருத்ய பராயணா''என்று ஸஹஸ்ரநாமத்தில் பேர் வருகிறது.


எடுத்துக்கொண்ட விஷயம் சாக்தமான ஸ்தோத்ரம் என்பதால் மட்டுமில்லாமல், நடுநிலையாகப் பார்த்தாலுங்கூட பஞ்சக்ருத்யங்களையும் ஒவ்வோர் அதிகாரிகளைக் கொண்டு செய்கிற தலைமை ஸ்தான அதிகாரி அம்பாள் என்பதே அதிகப் பொருத்தம் என்று தெரியும். எப்படியென்றால், க்ருத்யம் - கார்யம் செய்வது -என்பது சக்தியைக் கொண்டு நடப்பதுதானே? சக்தியைக் காட்டினால்தானே கார்யம் நடக்கும்? சக்தி என்றாலே அம்பாள் தானே? சைவ சாஸ்திரங்களிலும் சக்தி ஸஹிதனாகவே தான் சிவனைச் சொல்லியிருக்கிறது - அதாவது சிவ பத்னிக்குத்தான் சக்தி என்று பேர் கொடுத்து, அவளோடு அவன் சேர்ந்திருப்பதாகவே சொல்லியிருக்கிறது.



அத்வைதத்திற்கும், நம்முடைய 'ஸெளந்தர்ய லஹரி'யின் அபிப்ராயங்களுக்கும் ரொம்பக் கிட்ட வந்துவிடுகிற காஷ்மீர சைவத்தில் உச்சாணியான பரமாத்மாவை 'சிவ-சக்தி'என்றே சேர்த்துச் சொல்லியிருக்கிறது. ஆகையினால், வெறும் தத்வமாக, ஸமாதி மாதிரியான கார்யமில்லாத உள்ளநுபவமாக இல்லாமல் கார்யம், பஞ்ச 'க்ருத்யம்'என்று வரும்போது அதைப் பராசக்தியான அம்பாளின் அதிகாரத்தில் சொல்வதுதான் பொருத்தம்.


ஐந்து அதிகார தேவதைகளைக் கொண்டு அவள் பஞ்ச க்ருத்யம் பண்ணுகிறாள் என்றாள் அப்போது அவள் அந்த ஐந்துக்கும் மேலே, ஐவருக்கும் மேலே இருக்கிறாள் என்றாகிறது. பரப்ரஹ்மத்தின் பரிபூர்ண சக்தியிலிருந்து தானே இந்த ஐந்து சக்திகளும் வந்திருக்கின்றன?அப்போது அதுதானே எல்லாவற்றுக்கும் மேலானதாக இருக்க வேண்டும்?


அந்த மூலசக்திதான் நம் ஸத்தோத்ரத்தின் லக்ஷ்யமான ஸுந்தரி. அத்தனை தொழில்களுக்குமே அவள்தான் ஆதார சக்தி. க்ருத்ய மூர்த்திகள் ஐந்து பேருக்குமே அவள்தான் [சிரித்து]யசமானியம்மா!ஞானத்தை, மோக்ஷத்தை அநுக்ரஹிக்கும் ஸதாசிவனுக்குங்கூட அவள் மேலே அவன் வெறும் ஞான ஸ்வரூபமாக இருக்கிறபோது -'just Being 'என்கிறார்களே, அப்படி, 'இருக்கிறதுதான்', 'செய்கிறதில்லை'என்று தன்னில் தானாக இருக்கும்போது அவனுக்கு மேலே, கீழே ஒன்றும் கிடையாது. ஆனால் அவனும் ஞானத்தை அநுக்ரஹிப்பது என்ற கார்யத்தைப் பண்ணும்போது அப்படி அவனைப் பண்ணுவிக்கிற சக்தி அவனுக்கும் மேலே இருக்கத்தானே செய்கிறது?



''மேலே''என்பதை ஸ்தூலமாகவே அந்த ஐந்து பேருக்கும் மேலே அவள் உட்கார்ந்து கொண்டிருப்பதாக ஸாகாரத்தில் [உருவத்தில்]காட்டி, அநுபவிகளுக்கும் மந்த்ர ஸித்தி பெற்றவர்களுக்கும் தர்சனம் கொடுத்திருக்கிறாள். எப்படியென்றால் அவள் ராஜராஜேச்வரியாகக் கொலு வீற்றிருக்கும் ஆஸனத்தின் நாலு கால்களாக ப்ரஹ்ம-விஷ்ணு-ருத்ர மஹேச்வரர்கள் இருப்பார்கள். நாலு காலையும் சேர்த்து உட்கார்வதற்கான மேல் பலகை இருக்குமல்லவா? அந்தப் பலகையாக ஸதாசிவன் இருப்பார்.



இப்படி ப்ரஹ்மாதி பஞ்ச க்ருத்ய மூர்த்திகளை ஆஸனமாக்கிக் கொண்டிருக்கும் அம்பாளை, அதாவது பூர்ண ப்ரஹ்ம சக்தியைக் காமேச்வரி என்று சொல்வது. அந்த அவஸரத்தில் பரப்ரஹ்மத்தை அவளுடைய பதியான காமேச்வரன் என்று சொல்வது.


''அவள்தான் ஸகலமும் பண்ணுகிறவள் என்னும் போது அவளுக்கு எதற்குப் பதி என்று ஒருத்தனைச் சொல்லி, காமேச்வரன் என்று அவனுக்குப் பேர் கொடுத்து வைக்க வேண்டும்?''


அவள்தான் ஸகலமும் என்றாலும் அவளுக்குள்ள அநேக ரூப பேதங்களில் இப்படி ஸ்ரீவித்யா தேவதையாக இருக்கும்போது மாதா என்ற பாவமே அவளுக்கு முக்யமானது.

நாம் எல்லோரும் அவளை ஒரு குழந்தை அம்மாவிடம் அன்போடு போய் ஒட்டிக்கொள்கிறது போல அன்பு பண்ண வேண்டும் என்பதாலேயே மஹாசக்தியான அவள் சக்தியைவிட ஸெளந்தர்யமும் லளிதமும் பொங்கித் ததும்பும்படியாக இப்படி ரூபம் கொண்டது. அதனால்தான் ஸஹஸ்ரநாமத்தில் ஆரம்பப் பேரே ''ஸ்ரீமாதா''என்று இருப்பது. நம்மை ஸ்ருஷ்டித்து, பரிபாலித்து, ஜன்மாக்களுக்கு நடு நடுவே ஸம்ஹாரம் என்ற பெயரிலே 'ரெஸ்ட்'கொடுத்து, மாயா மறைப்பு விளையாட்டுகளும் காட்டி, முடிவிலே மோக்ஷ£நுக்ரஹத்தில் தன்னோடு ஒன்றுபடுத்திக் கொள்ளும் தாயாக இருப்பவள் அவள்.

தாயார் என்று 'பார்ட்'[வேஷம்] போட்டுக் கொண்டால் தகப்பனாரைக் காட்டியே ஆக வேண்டும்.




தகப்பனாரில்லாத தாயாரென்றால் ... இரண்டு தினுஸாகவும் 'அந்த மாதிரி'ஜகன் மாதாவை நினைக்க விடலாமா? கன்னியான பாலா, கன்யாகுமாரி ஆகியவர்களின் ஸமாசாரம் வேறே. அஸுரசக்திகளை அடக்கவே ஏற்பட்ட துர்கை விஷயமும் வேறே. இவள் முக்யமாக ஸ்ரீமாதா. அப்போது பிதாவும் இருந்துதானே ஆகணும்?அதனால்தான் காமேச்வரனைப் பசியாகக் கொண்டது;அந்த 'உப்புக்குச் சப்பாணி'அகமுடையானுக்கு லோக தர்மத்தை அநுஸரித்து உசந்த ஸ்தானமும் கொடுத்தது. ''[லலிதா]த்ரிசதி''யில் அவள் காமேச்வரன் பத்னி என்பதற்கே பதினைந்து பேர்களை அடுக்கிக் கொண்டு போயிருக்கிறது.


ராஜராஜேச்வரி, லலிதா, த்ரிபுரஸுந்தரி முதலான பெயர்களைக் கொண்டவளும் அவளேதான் என்றாலும் காமேச்வரி நாமாவுக்குத் தனிச் சிறப்பு உண்டு. என்னவென்றால், சைவத்தில் சிவன் எப்படி சக்தி ஸஹிதனாகவே இருக்கிறானோ, அப்படியே சாக்தத்திலும் இந்த ஸ்ரீவித்யா தந்த்ரத்தில் சக்தியானவள் சிவ ஸஹிதையாகவே பக்தியோடு இருக்கிறாள்.

பூர்ண ப்ரஹ்ம சக்திக்கு யார் பதியாக இருக்க முடியும்? அதைத் தவிர எதுவுமே இல்லாதபோது யார் பதி ஆகமுடியுமென்று ஆலோசித்துப் பார்த்தால் சக்தியைக் காட்டாமல், கார்யம் பண்ணாமல், சாந்தமாக இருந்து கொண்டிருக்கிற ப்ரஹ்மமான சிவன்தான் அந்த சக்திக்கு வேறே மாதிரி, இன்னொன்று மாதிரி தெரிவதால் அதுதான் பதியாயிருக்க முடியுமென்று தெரிகிறது. அதாவது சாந்த சிவனின் சக்தி ப்ரபாவம் அந்தப் பத்னி மூலம் பஞ்ச க்ருத்யங்களாக வெளிப்படுவதாக ஆகிறது.



இதிலிருந்து இன்னும் என்ன ஆகிறதென்றால், அந்த சிவனே நேராக சக்தி விலாஸத்தைக் காட்டும் கார்யத்தைப் பண்ணாவிட்டாலும், அப்படிப் பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதாக ஆகிறது. ''ஒன்றாக இருந்த ப்ரம்மம் பலவாக ஆக ஆசைப்பட்டது'' என்றே உபநிஷத்துச் சொல்கிறது.


சாந்த ப்ரம்மம் அப்படியே இல்லாமல் கார்ய ப்ரம்மமாயிற்று என்றால், அப்போது அந்தக் கார்யத்துக்கெல்லாம் முந்தி, அது கார்ய ப்ரம்மமாகணும் என்று ஆசைப்பட்டிருக்கணும்தானே?'ஆசைப்பட்டது'- 'அகாமயத' என்றே உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது.


எப்போதும் சித்சக்தியான ஞானசக்தியை உள்ளே வைத்துக் கொண்டுள்ள ப்ரஹ்மம் - சிவம் - சக்தியை வெளிப்படுத்தி ப்ரபஞ்ச லீலை பண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டதே அதனுடைய இச்சா சக்தி எனப்படுகிறது. அப்புறம் வாஸ்தவமாகவே பஞ்ச க்ருத்ய லீலை செய்தது க்ரியா சக்தி. அது இருக்கட்டும். இப்போது விஷயம், தன்னில் தானாயிருந்த ப்ரம்மம் வெளிமுகப்படும்போது முதலில் தோன்றியது அதன் இச்சை, ஆசை;'காமம்'என்று உபநிஷத் சொல்வது. 'காமம்'என்பது இங்கே தப்பர்த்தம் தருவதில்லை. சுத்தமான இச்சைக்கே அப்படிப் பேர். பூர்ண ப்ரஹ்ம சக்தி ப்ரஹமத்திலிருந்து வேறே மாதிரி கொண்ட முதல் ஆவிர்பாவம் அந்தக் காமம்.

அதுவேதான் அவனுக்குப் பத்னி ஸ்தானம். அப்பா அம்மா சேர்ந்து ப்ரஜைகள் உண்டாகிறாற்போல சாந்த ப்ரஹ்மமான சிவன் இந்த இச்சா சக்தியோடு சேர்ந்தால்தான் ப்ரபஞ்ச லீலை, பஞ்ச க்ருத்யங்கள் எல்லாம் என்பதால் அவர்கள் பதியும் பத்னியும் ஆகிறார்கள். அவனுடைய இச்சையின், காமத்தின் ஸ்வரூபமானதால்தான் அவளுக்குக் காமேச்வரி என்று பெயர்.


அதுதான் முதல் பெயர். ப்ரஹ்மத்திடமிருந்து முதல் evolute [பரிணாம தத்வம்] காமம் என்றால் அதை வைத்து ஏற்பட்ட [காமேச்வரி என்ற]பேர்தானே ப்ரஹ்ம சக்தியின் முதல் நாமாவாக, ப்ரதான நாமாவாக இருக்க வேண்டும்?எவன் இப்படி ஆசைப்பட்டானோ அவன் காமேச்வரன். வெறும் ப்ரஹ்மமாக இருந்த அவன் ஆசைப்பட்டதோடு ஸரி. அந்த ஆசையைக் கார்யமாக்கி ப்ரபஞ்ச லீலையாகப் பஞ்ச க்ருத்யம் என்று வாஸ்தவமாகவே பண்ணிக் காட்டுவது முழுக்க முழுக்க சக்தியான அவள்தான். அதாவது, காமேச்வரிதான் விக்டோரியா, எஸிபெத் ராணிகள் மாதிரி, தானே பூர்ண ஆட்சியதிகாரத்துடன் இருப்பவள்;ஸமஸ்த ஜகத்துக்களையும் ஜீவர்களையும், தேவர்களையும் ஆள்கிறவள்.




ஆள்கிற ராஜாவுக்குப் பெண்டாட்டியாயிருப்பதால் மட்டும் ராணியில்லை;தானே நேராக ஆட்சிப் பொறுப்பு வஹிக்கிற ராணி!ஸஹஸ்ரநாமத்தில் முதல் நாமாவாக 'ஸ்ரீமாதா'என்று அவளை அன்போடு அம்மாவாகக் கூப்பிட்டவுடனேயே அடுத்த இரண்டு நாமாக்கள் அவளுடைய ஆட்சியதிகாரத்தை - அவள் அகிலாண்ட, ப்ரம்மாண்ட சக்ரவர்த்தினியாக இருப்பதைத்தான் - 'ஸ்ரீமஹாராஜ்ஞி'என்றும், 'ஸ்ரீமத் ஸிம்ஹாஸனேச்வரி'என்றும் சொல்லியிருக்கிறது.
அவள் ஸிம்ஹாஸனேச்வரியாக சிம்மாஸனத்தின் மேலிருப்பது ஒரு கோலம். அது எல்லா ராஜா-ராணிக்கும் உண்டானதுதான். அவளுக்கென்று ஸ்பெஷலாக இருப்பது பஞ்ச ப்ரஹ்மாஸனம் என்று சொன்னேன். அதற்கு மேலே காமேச்வரியாக அவள் உட்கார்ந்திருப்பதைச் சொன்னேன். அவள் தனியாயில்லாமல் பதியான காமேச்வரனோடு கூட இருக்கிறாளென்று சொன்னேன்.

பஞ்ச ப்ரஹ்மாஸனத்தின் மேலே அந்தக் காமேச்வரனின் மடியின் மேலேதான் அவள் உட்கார்ந்திருக்கிறாள். அதனால் அவனும் அவளுக்கு ஆஸனம்!



ப்ரஹ்மத்திலிருந்து முதலில் தோன்றியது ப்ரபஞ்ச லீலையில் வெளிப்பட வேண்டுமென்ற காமமே ஆதலால் காமேச்வர-காமேச்வரிகள் என்பதே ஆதி தம்பதியரின் ஆதிப் பேர்;முதலான முக்கியப் பேர்.


அவளை லலிதாம்பாள் என்றாலும் அவனை லலிதேச்வரன் என்பதில்லை. லலிதம் என்றால் பரம நளினம், ரொம்ப ம்ருது. பெண்பாலான அவள்தான் அப்படியிருக்க முடியுமே தவிர அவன் அப்படியிருக்க முடியாது. அதே மாதிரி அவளை ராஜராஜேச்வரி என்றாலும் அவனை ராஜராஜேச்வரன் என்பதில்லை. தஞ்சாவூரில் ராஜராஜேச்வரம் இருக்கிறதென்றால் அது கோவில் கட்டின ராஜா [ராஜராஜ சோழன்]பேரை வைத்து ஏற்பட்ட பெயர்;ஸ்வாமியை வைத்து அந்தக் கோவிலுக்கு ஏற்பட்ட பேர் ப்ருஹதீச்வரம் என்பதே. ராஜராஜேச்வரிக்கு ஜோடியாக ராஜராஜேச்வரன் என்று இல்லை.

ஏனென்றால் இப்போது சொன்ன மாதிரி, அவள் தான் ஆட்சி அதிகாரம் பெற்ற அசல் மஹாராஜ்ஞி. [சிரித்து] விக்டோரியாவின் அகமுடையானான ஆல்பெர்ட் மாதிரி, இப்போது எலிஸபெத் அகமுடையான் ஃபிலிப் மாதிரிதான் இந்த மஹா ராஜ்ஞியம்மாளின் பதியும்!இந்த உபமானங்கூட அவ்வளவு ஸரியில்லை. ஏனென்றால் விக்டோரியா, அவளை விடவுங்கூட இப்போதிருக்கிற இங்க்லான்டின் ராணி ஆகியவர்கள் பார்லிமென்டுக்குக் கட்டுப்பட்டவர்கள்தான்.

ராஜராஜேச்வரி அப்படியில்லை - 'ஸாவரின் பவர்'என்கிற பூர்ண அதிகார ஸ்வதந்திரம் பெற்றவள்.............


'ஸவரன்'என்று பவுனைச் சொல்கிறோம். பவுன் என்பது 'பவுனட்'என்கிற இங்கிலீஷ் வார்த்தைதான். அது ஒரு எடைக்கும் பெயராயிருக்கிறது. ஆதியில் அந்த எடையுள்ள வெள்ளிக்கும் அதே பேர் உண்டாயிற்று. அப்புறம் எப்படியெப்படியோ மாறிப்போய் 72 குந்துமணி எடையுள்ள தங்க நாணயத்திற்கு அந்தப் பேர் வந்துவிட்டது. அதிலே 'ஸாவரி'னான ராஜா தலை போட்டிருக்கும் அதனால் ஸாவரின் என்றும் அந்தக் காசுக்கே பேர் வந்து, தமிழில் ஸவரன் என்றாகிவிட்டது. 'ஸவரன்'என்பதும் 'ஸ்வர்ணம்'என்பதும் ஏறத்தாழ ஒரேபோல ஒலிக்கின்றன. ஸ்வர்ணத்துக்கு ஸவரன் என்று பேர் இருப்பதில் இப்படி இரட்டிப்புப் பொருத்தமிருக்கிறது!.....



அம்பாள்தான் ஆட்சியதிகாரமுள்ள ஸாவரின் ராணி. அதனால் ராஜராஜேச்வரி. ஸ்வாமிக்கு அந்த அதிகாரமில்லை. அதனால் அவரை ராஜராஜேச்வரன் என்று சொல்ல நியாயமில்லை. த்ரிபுரஸுந்தரி என்பது அவளுடைய இன்னொரு முக்யமான பேர். 'ஸெளந்தர்ய லஹரி'என்பதே அந்த த்ரிபுர'ஸுந்தரி'யை வைத்துத்தான் என்று சொன்னேன். இதற்கும் ஜோடிப் பெயராக ஸ்வாமிக்கு த்ரிபுரஸுந்தரன் என்று பேர் கிடையாது.





நேர்மாறாக, பயமுறுத்துகிற மாதிரி, த்ரிபுராந்தகன் [த்ரிபுர அந்தகன்]என்றுதான் இருக்கிறது!ஏனென்றால், மூன்று லோகத்திலும் அவள்தான் ஈடற்ற அழகு. அவனுடைய அழகும் அவள் அழகுக்கு ஈடாகாததால் அவனுக்கு அழகும் அவள் அழகுக்கு ஈடாகாததால் அவனுக்கு அப்படி பேரில்லை. த்ரிபுரஸுந்தரி என்றால் த்ரிலோகங்களிலும் அழகில் முதல் அவளே என்று அர்த்தம்.

அப்படி அவளை முதல் என்று சொன்னவிட்டு, அவன் எத்தனை அழகாயிருந்தாலும் அவனையும் முதல் என்று எப்படிச் சொல்ல முடியும் அவன் [அழகில்] உசந்த பக்ஷம் போனாலும் இரண்டாவதாகத்தானே இருக்க முடியும்?அதனால் அவனுக்கு த்ரிபுரஸுந்தரன் என்று பேர் கிடையாது.

ஆனால் இரண்டு பேர் [இருவர்]இருந்தால்தானே பரஸ்பரம் ஆசை (காமம்) கொள்ள முடியும்?அதனால் காமேச்வர-காமேச்வரி என்பதுதான் அழகான ஜோடிப் பேராக இருக்கிறது.

பஞ்ச ப்ரஹ்மாஸனத்தின் மேலே பூர்ண ப்ரஹ்ம சக்தியானவள் ப்ரஹ்மத்தின் பஹிர்முகப்படும் [வெளிமுகமாகும்]காமத்தை ஹேதுவாகக் கொண்டு காமேச்வரி என்ற பெயரில் ஆவிர்பாவம் கொண்டு, காமேச்வரன் என்ற பதியான அந்த ப்ரஹ்ம சிவத்தோடு ஸ்ருஷ்டி லீலா நாடகம் அத்தனையும் பண்ணுகிறாள்.



பிரபஞ்சம் ஸ்ருஷ்டியாகி நடப்பதற்கே பஞ்ச க்ருத்யம் என்று தெரிகிறது. வெளியில் தன்னையே பல ரூபமாக விட வேண்டுமென்று அவளுக்கு ஆசை - காமம் - இருப்பதால் தான் இப்படி நடத்துகிறாள். இப்படிக் காமமுடையவளாயிருப்பதால் அவள் காமேச்வரி.


'தன்னையே பலவாக்கித் தன்னிடமிருந்தே பிரித்து வைக்கணும்;மாயையினால் பிரித்து வைக்கணும் என்று இப்படியும் ஒரு காமமா?க்ரூரமான காமமாக அல்லவா இருக்கிறது?' என்றால் - அப்படியில்லை. முடிவிலே எத்தனை யுகாந்தரம், கல்பாந்தரமானாலும் அதற்கப்புறம் பிரித்து வைத்த எல்லாவற்றையும் தன்னிடம் ஏகமாக ஐக்யப்படுத்திக் கொள்ளத்தான் அவளுக்கு உத்தேசம். பிரித்து வைத்து அப்புறம் சேர்த்துக் கொள்வதில்தான் கூடுதலான ஆனந்தம் உண்டாகிறது!நம் கூடவே ஒருத்தர் இருந்து கொண்டிருந்தால் ப்ரியம் பொங்கிக் கொண்டு வருவதில்லை. அவரே பிரிந்து வெளியூர், வெளிதேசம் போய் விட்டு பஹ§ காலம் கழித்துத் திரும்பி வந்தால் ப்ரியம் பொங்கிக் கொண்டு வருகிறது. அம்பாள் தன்னையே நாமாக்கிப் பிரித்து மாயையிலே தள்ளியிருக்கிற காமமும் இந்த மாதிரி, அப்புறம் ஒன்று சேர்த்துக் கொள்வதிலுள்ள அதிப்ரேமையின் ஆனந்தத்தைக் காரணமாகக் கொண்டது தான். எந்தத் தாயாரும் குழந்தையிடம் 'ஒளிஞ்சு-ப்ளே' விளையாடவில்லையா?


ஸமுத்திரத்திலிருந்து ஆவியாகப் போகிற ஜலம் மேகமாகி எத்தனையோ நூறு மைல் தள்ளி நதியாக உற்ப்த்தியானாலும், அந்த நதி ஊரெல்லாம் சுற்றித் திரிந்தாலும் முடிவிலே தன்னை பிறப்பித்த தாயான ஸமுத்ரத்திலேயே ஸங்கமித்துத்தானே தீர்கிறது?........


காமேச்வர ஸஹிதையான காமேச்வரி பஞ்ச ப்ரஹ்மாஸனத்தில் வீற்றிருக்கிறாள். ப்ரஹ்மமும் அதன் பூர்ண சக்தியும் - குறிப்பாக இச்சா ரூபத்திலிருக்கிற பூர்ண சக்தியும் - எல்லாவற்றுக்கும் மேலே. அந்த ஜோடியிலிருந்தே பஞ்ச க்ருத்யங்களும் ஏற்பட்டு ஸ்ருஷ்டி விசித்ரம், ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறதென்று தாத்பர்யம்.



இதையே ஸ்தூலத்தில் ரூபம் கொடுத்துக் காட்டும் போது பஞ்ச ப்ரம்மாஸனத்தின் மேலே காமேச்வரனுடைய இடது மடியிலே காமேச்வரி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவர்கள் கிழக்குப் பார்க்க உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். அதற்கேற்றபடி அந்த ஆஸனத்தைப் போட்டிருக்கும்போது ஆக்நேய திக்கில் (தென் கிழக்குத் திசையில்) உள்ள அதன் கால்தான் ப்ரஹ்மா;நிர்ருதியில் (தென் மேற்கில்) உள்ள கால் விஷ்ணு; வாயு (வடமேற்கு) திக்குக் கால் ருத்ரன்;ஈசான்யத்தில் (வடகிழக்கில்) உள்ள கால் பெயர் பொருத்தத்தோடு ஈச்வரனாகவே இருக்கும்.





நாலு கால்களையும் சேர்த்துப் போட்ட மேல் பலகை ஸதாசிவன். ப்ரம்ம சக்தியிலிருந்து, ப்ரம்ம சக்தியால், ப்ரம்ம சக்தியை ஐந்து தொழில் பிரித்துக் காட்டுகிற இந்த ஐந்து பேரையும் பஞ்ச ப்ரம்மம் என்றே சொல்லி இவர்களாலான ஆஸனத்தைப் பஞ்ச ப்ரம்மாஸனம் என்று சொல்லியிருக்கிறது.
ப்ரம்மம் என்று உச்சஸ்தானத்தில் பேர் சொன்னதற்கு நேர்மாறாக, தூக்கிவாரிப் போடுகிற மாதிரி, இந்த ஐந்து பேரை 'ப்ரேதம்'என்றும் சொல்வதுண்டு. ''பஞ்ச ப்ரஹ்மாஸன ஸ்திதா''என்று அம்பாளுக்குப் பேர் சொன்ன அதே ஸஹஸ்ரநாமம் ''பஞ்ச ப்ரேதாஸநாஸீநா'', ''பஞ்ச ப்ரேத மஞ்சாதிசாயினி''என்றும் பேர்கள் சொல்லியிருக்கிறது. என்ன தாத்பர்யமென்றால், இவள் அவர்களுக்கு அந்தப் பஞ்ச க்ருத்ய சக்திகளைக் கொடுக்காமலிருந்தால் அவர்கள் ப்ரேதத்துக்கு ஸமம்தான் என்பதே!ஹார்ஸ் பவர் போன மோட்டார், ஃப்யூஸான பல்பு மாதிரி!



காமேச்வரனுக்கும் அவள்தான் பிராண சக்தி. ''காமேச்வர ப்ராண நாடி''என்றும் நாமா இருக்கிறது. ஸஹஸ்ரநாமம், த்ரிசதி இரண்டிலும் அந்தப் பேர் வருகிறது. ஆனாலும் லோக தர்மத்தில் ஒரு ஸ்த்ரீயானவள் பதிக்கு மேல் ஸ்தானம் கொடுத்து அவனோடு சேர்ந்து இருப்பதே பெருமை என்றிருப்பதால் மஹாசக்தி வாய்ந்த பராசக்தியும் தனக்கு மேல் ஸ்தானத்தில் காமேச்வரனைப் பதியாகக் காட்டிக் கொண்டு விளங்குகிறாள்.


???? ??????????? ?????????-??????????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Swamigal Matam Peetadhipathi Pattabhishekam Day – May 9, 1907!

Swamigal Matam Peetadhipathi Pattabhishekam Day – May 9, 1907!

By mahesh on May 9, 2015




Swamigal Matam Peetadhipathi Pattabhishekam Day!
=========================================
This day May 9, 1907, exactly 108 years back, Swamigal’s “Pattabishekam” as the 68th Peetathipathi of Kanchi Kamakoti Peetam was performed at the Kumbakonam Math. Devotees including Shivaji Maharaja of Tanjavur, government officials and pundits participated in the event!
Shankara.


https://mahaperiyavaa.wordpress.com...-peetadhipathi-pattabhishekam-day-may-9-1907/
 
ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்

ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம்


என் தாயே!
நான் இவ்வுலகில் ஜனித்த நேரம்,
பிரசவ காலப் பெருவலியை
பல்லைக் கடித்துப் பொறுத்தாய்.

சுளிப்புதர நான் அசுத்தம் செய்த படுக்கையை
களிப்புடன் பரிவாகவே நீ பகிர்ந்தாய்.

மணிவயிற்றில் எனை நீ சுமந்த காலம்
மேனியிளைத்து வலியும் ஏற்றாய்.

இதற்கெல்லாம் ஈடாக
ஏதும் செய்தல் இயலுமோ?
எத்தனை நான் உயர்ந்தாலும்,
என்னருமைத் தாயே?
****

குருகுலத்தினில் நானிருந்து பயின்றகாலை,
துவராடை நான் தரித்து துறவு பூண்டதாய்
கனவுகண்டு அரற்றினாய்.

கடுகி வந்து கலங்கினாய்.
தடவி, தழுவியென் தலைகோதினாய்.

அருகிருந்த ஆசான்களும் மாணாக்கரும்
உருகியுன் நிலை உணர்ந்தார்கள்.
பேதையுன் பேரன்பை மறப்பேனோ?
பாதம் பற்றி பரவுதலன்றி
ஏதும் செய்தலறியேன் தாயே!

******

“அம்மையே! அப்பனே!
சிவனே! கண்ணனே!
குவலயம் காக்கும் கோவிந்தா!
ஓ ஹரி! ஓ முகுந்தா!”

என்னவெல்லாம் சொல்லிக் கதறினாய்
எனைப் பிரசவித்த வேளை?

இதற்கெல்லாம் ஈடாக
என்னருமைத்தாயே!
பணிந்துன்னை வணங்குதலன்றி
என்செய்கேன் அம்மா?

********

மரணத்தின் வாயிலில் நீ இருந்த நேரம்
அருகில் நான் இருந்தேனில்லை.

மடியேந்தி உன் தொண்டை நனைய,
குடிக்க நீரும் வார்த்தேனில்லை.

அந்திம யாத்திரைக்காய் உனக்கேதும்
மந்திர சடங்குகள் செய்தேனில்லை.

செவிப்புலன் அடங்கும் சிறுவேளை காதருகே
தவிப்போடு ராமநாமம் உரைத்தேனில்லை.

காலம் தாழ்ந்தே வந்து
கடமை தவறிய மைந்தனென் பிழை
கருணையுடன் பொறுப்பாயம்மா.

*******

“ என் முத்து மணிச்சரமே!
என் கண்மணியே!
என் சின்ன ராஜாவே!
என் உயிரின் உயிரே!”

என்றெல்லாம் என்னைச்
சீராட்டி மகிழ்ந்தவளே!

இத்தனை அன்புக்கும் ஈடாக
இடுவேனோ வெறும் வாய்க்கரிசி
என் கடைசி நன்றியாய்
என்னருமைத் தாயே.


??????? ??????: ??? ????????? ?????? ???????
 
Kumbabishekam Invitation from Indianapolis Hindu Temple – June 7, 2015

Kumbabishekam Invitation from Indianapolis Hindu Temple – June 7, 2015

Hindu Temple of Central Indiana Committee cordially invites you all for the grand kumbabishekam of their new temple on Jun 7, 2015. Indianapolis is blessed to be a nice small self-sustained community, which is nothing but a single large family….Together they are building their new temple – extraordinarily well-planned, well-managed and with dedication.

I had a pleasure of visiting Indianapolis few months back to do Mahaperiyava Padhuka Abishekam. Both the Chandrasekhars in the town are great devotees of Mahaperiyava and followers of the blog, who hosted us and took us around the new temple where the construction was going on. There are sthapathis and other workers from India – many are from Tamilnadu doing wonderful job. One interesting feature I noticed is that each murthi is going to have different gopuram as per their tradition. The whole city is now ready for the kumbabishekam. They created this wonderful video sometime back but this tells the tale of how this temple is going to unite all Indians and keep them united forever. It is great to see how the next generation is also involved in this project.


Our veda teacher from Chicago, Sivasri Chandrasekhara Gurukkal is the pradhana gurukkal for this kumbabishekam. We, devotees from Chicago are ready to drive to attend this event with our gurukkal.


They have put together lots of activities as part of the kumbabishekam. All devotees in and around Indianapolis are cordially invited to attend this kumbabishekam and receive the blessings.

https://mahaperiyavaa.wordpress.com...n-from-indianapolis-hindu-temple-june-7-2015/


 
Kanchi Acharya Visited French Institute in Pondicherry.

Kanchi Acharya Visited French Institute in Pondicherry.

His Holiness Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal today afternoon visited the French Institute in Pondicherry. His Holiness visited the manuscript, photography, indology, social sciences, ecology sections and also the library.The scholars showed the various manuscripts & publications, upcoming books of the institute. His Holiness appreciated the work undertaken in the institute.

The senior most scholar of the institute who is a recipient of the Rashtrapathi award and other scholars were honoured. His Holiness who has visited the institute during previous Yatras, recalled association of the institute since inception with the Acharyas of the Shri Kanchi Kamakoti Peetham. The institute has a treasure of Shaiva Siddhanta manuscripts has derived the guidance of Kanchi Acharyas.

11059999_1644045785827649_1574773437730170940_n.jpg






Source: Shri Kanchi Kamakoti Peetam, Kancheepuran
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top