• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
தர்மம் - ப்ரஹ்மம்

தர்மம் - ப்ரஹ்மம்


தர்மம், ப்ரஹ்மம் என்று இரண்டு. தர்மம் இஹலோகத்தில் ஒழுங்காக வாழப்பண்ணுவது. ப்ரஹ்மம் பரலோக விஷயம். தர்மத்தின் வழியாக, தர்மத்துக்கான தர்மத்தின் வழியாகத்தான் ஒரு ஸாமான்ய ஜீவன் ப்ரஹ்மவிசாரத்துக்கும் போகமுடியும். தர்மம் என்ன என்று விசாரித்து, அறிந்து, அநுஷ்டிக்கவே பூர்வ மீமாம்ஸையாகிற தர்மமார்க்க சாஸ்த்ரமும், ப்ரம்மத்தைப் பற்றி விசாரித்தறிந்து அநுபவிக்கவே உத்தர மீமாம்ஸையாகிற வேதாந்தமும் உள்ளன. அக்கால வித்யாசாலைகளில் வேதாந்தம் நிறையச் சொல்லிக் கொடுப்பதாகவே பெரும்பாலாருக்கு வைக்கப்பட்டது. அதிலேயே அப்போதே ஈடுபட்டுவிட வேண்டுமென்று வைக்கவில்லை.

இஹலோக வாழ்க்கையை நன்றாக நடத்தி - அதாவது தர்மத்தின் வழியிலே நடத்தி - உரிய பக்குவம் பெற்றபின்னரே ஒருத்தன் பூர்வத்தில் அறிவு ரீதியில் தெரிந்துகொண்ட ஆத்ம சாஸ்த்ரத்தில் பூர்ணமாக ப்ரவேசிக்கும்படியாகத்தான் ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்தின் வித்யாப்யாஸமும், பிறகு க்ருஹஸ்தாச்ரமத்தின் வாழ்க்கை க்ரமமும் உருவாக்கப்பட்டன.

நாரதர் ஸாமான்ய ஜீவனாக இல்லாமல் அஸாதாரணமர்க இருந்தவராதலால் அவருக்கு தார்மிகமான வாழ்க்கையோடு நின்றுவிடுவதில் வித்யாப்யாஸம் முடித்தபோதே குறை ஏற்பட்டு, ப்ரஹ்மஞானத்துக்கான ஏக்கம் உண்டாயிற்று. க்ரூஹஸ்தாச்ரமத்துக்குப் போகாமல் ப்ரஹ்மசர்யத்திலிருந்தே ப்ரஹ்மஞான நிலைக்குப் போய்விட்டார்.


நாரதர் கதை இருக்கட்டும். ஸாதாரணமான ஒரு மநுஷ்யனை அதர்மத்தில் போக விடாமல் விஷயங்களில் அடிப்படையாக ஒரு பற்றும் கொள்ளும்படி ஆதிகாலக்கல்வி முறை அமைக்கப்பட்டது. அது எப்படி காலக்ரமத்தில் விஸ்தாரமாக வளர்ந்தது என்று சொன்னேன்.


?????? - ???????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
Sri Maha Periva's Advice to Teachers

Sri Maha Periva's Advice to Teachers

இக் காலத்தில் - அதிலும் 'ஸ்வதந்திரம்' என்பதாக ஒன்று வந்திருப்பதாகச் சொல்லப்படும் காலத்திற்குள்தான் - ஹ்ருதயத்தை அடியோடு புறக்கணித்து விட்டு மூளைக்கு மட்டும் சரக்கு ஏற்றுகிறதே கல்விமுறை என்றாகிவிட்டது. ஸ்வதந்திரத்திற்கு முந்தி வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்த கல்வி திட்டம் நம்முடைய வாழ்முறையைப் பாழ்படுத்தி அவர்களுக்கு அடிமை வர்க்கமாகவே நம்மை ஆக்குகிற உத்தேசத்துடன், ஆனாலும் அப்படித் தெரியாமல் ஏதோ நம்மை ரொம்ப முன்னேற்றிவிடுகிற ஒன்றாக அவர்களால் மிகவும் தந்திரமாக வகுக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஆட்சி முடிந்து ஸ்வராஜ்யம் வந்தபின் அந்த முறை மாறவேண்டும் என்று ஆசைப்பட்டோம். மாறவும் மாறிற்று. எப்படியென்றால், முன்னைவிட மோசமான கல்வி முறையாக!இதில் கல்வியும் இல்லை, முறையும் இல்லை.

ஏன் நிஜமாகவே மூளைக்காவது சரக்கு ஏற்றுகிறார்களா என்றால் அதுவும் கேள்வியாகத்தானிருக்கிறது!யோக்யதாம்சம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி ஜாதி, பணபலம், மிரட்டல் என்கிறவற்றை வைத்துக் கல்வி, பட்டம் என்றால் வேறே எப்படி இருக்கும்? லஞ்சத்தை லஞ்சம் என்று அஸல் ரூபத்திலும், டொனேஷன் என்ற பெயரிலும் கொடுத்து அட்மிஷன் பெறுவது, பாஸ் போடப் பண்ணுவது, மிரட்டி உருட்டியுங்கூடப் பாஸ் போடப் பண்ணுவது, இப்படி மாணவன் பண்ணுவதற்கு வாத்தியார்களும் மானேஜ்மெண்டும் இடம் கொடுத்து, ஸலாம் போடுவது, போதாக்குறைக்கு கவர்மென்டே வேறு பண்ணுகிற பேதம் - எந்த வரம்பில் நின்றால் முறை என்கிறதை யோஜித்துப் பார்க்காமல் வோட்டைப் பற்றியே யோஜனை பண்ணிக் கொண்டு, நாளுக்கு நாள் ஜாஸ்தியாக்கிக் கொண்டிருக்கும் ரிஸர்வேஷன்' - என்று ஏற்பட்டிருப்பதைப் பார்க்கும்போது இந்த தேசத்தில் தர்ம ந்யாயமான கல்வி முறை நடக்கிறதா, நடக்குமா என்பதே கேள்வியாயிருக்கிறது!'குரு', 'சிஷ்யர்' என்று ஒவ்வொன்றுக்கும் எத்தனையோ லக்ஷணங்கள் - யோக்யதாம்சங்கள் - கொடுத்து ஏற்பட்டிருக்கும் பெயர்களுக்கும், தற்போது பெருகி வரும் டீச்சர்கள் - ஸ்டூடன்ட்கள் இருக்கிற விதத்திற்கும் எங்கேவுக்கு எங்கேயோவாக இருக்கிறது!நெடுங்காலமாக இருந்து வந்த ஒரு உன்னதமான கலாசாரம் இப்படி ப்ராணாபத்தாக அரிபட்டுக்கொண்டே போய், தேசத்தின் வருங்கால ப்ரஜைகளை நல்லவர்களாவதற்கு எந்த ஏற்பாடுமே இல்லாதபோது, அதை சீர்ப்படுத்த வேண்டும் என்ற ப்ரக்ஞையே அரசாங்கத்திற்கு இருக்கிறதாகத் தெரியாததுதான் எல்லாவற்றையும் விட ரொம்பவும் கவலை தருவதாக இருக்கிறது.

ராஜாங்கத்திற்கு -டில்லியில் இருப்பது, ஸ்டேட்களில் இருக்கிறவை எல்லாவற்றுக்குந்தான் - திரும்பின பக்கமெல்லாம் பிரச்னையாயிருக்கிறதென்பதும் வாஸ்தவந்தான். இருந்தாலும் வருங்காலத்திற்கே விதை முதல் கல்விதானே? அதற்கு தந்து ஸரிப்பண்ண வேண்டுமோ, வேண்டாமோ? அப்படியில்லாமல், இருக்கிறதும் இன்னும் சீர் கெட்டுப்போகப் பண்ணிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான் ரொம்பக் கவலையாயிருக்கிறது. உங்களையும் கவலைப்படுத்துவது தவிர இந்தப் பேச்சால் ஏதாவது ப்ரயோஜனம் உண்டா, தெரியவில்லை தற்கால சாந்தியாகவாவது நம் கவலையைப் போக்கிக்கொள்ள இதுவரை பார்த்த பூர்விகர்கள் கதைக்கேதான் போகணும்...

போகணும் என்கிறேனே தவிர, 'பழங்கதையைப் பேசினால் மட்டும் போதுமா? கண்முன் நடக்கிறதற்கு நமக்குத் தெரிந்த நல்ல வழியைச் சொல்லாமலிருக்கலாமா' என்றும் தோன்றுகிறது. அதனால் இக்கால ஆசிரியர்மார்களுக்கே அப்பீல் செய்து கொண்டு பார்க்கிறேன்.

அவர்கள்தானே தற்காலத்திலும் தங்கள் ஜீவனோபாயமாகவே கல்வியை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வேறே வேலை கிடைக்கவில்லை என்பதனால் இதற்கு வந்ததாக இல்லாமல், வருங்காலப் பிரஜைகளின் அறிவை மேம்படுத்தும் கல்வி என்ற உத்தமமான தொழில் தங்களுக்கு வாய்த்திருப்பதன் அருமையை, அருமை பெருமையை அவர்கள் உணர்ந்து ஆசிரியத் தொழிலை ஒரு ஆராதனையாக ஆற்ற வேண்டும். அதோடு, இவ்வளவு நேரம் சொன்னதுபோல் நிஜமான தரத்தைப் பெற்றதாகும்.

குருகுலவாஸம் மாதிரி இந்த ஆசிரியர்கள் ஸதா காலமும் மாணவர்களைக் கூட வைத்துக்கொண்டு வாழவில்லை. ஆனால், கூட வைத்துக்கொண்டு வாழும் போதுதான் ஒரவர் தன்னுடைய வாழ்க்கை உதாரணத்தால் மாணவர்களின் குணாபிவிருத்திக்கு வழி காட்ட முடியும் என்றும், பள்ளி நேரம், அதில் பீரியட்கள் என்றும் நடைமுறை இருந்து அப்படி 'டீச்' பண்ணும்போது, அறிவுக்கு மட்டுமேயான வெறும் பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுப்பதற்கு அதிகமாக குணாபிவிருத்தி விஷயத்தை எடுத்துப் போட்டுக் கொள்ளுவதற்கில்லை என்றும் தீர்மானித்து விடக் கூடாது.

குருவின் கூடவே வாழும்போது மாணவர் பெறுகிற வாழ்க்கை உதாரணம் ரொம்பவும் கூடுதலானதுதான், ஆக்ஷேபணையேயில்லை. அதனால், ஸ்கூல் நேரத்தில் மட்டும் மாணவர்கள் பழகும் பல ஆசிரியர்களின் வாழ்க்கையுதாரணம் அவர்களை 'டச்'சே பண்ணாது என்று அர்த்தமில்லை. இளம் உள்ளங்களில், தங்களுன் கொஞ்சமோ நஞ்சமோ எவ்வளவு பழகுகிறவர்காளாலும் அவர்களின் தரத்தைப் பொறுத்து நல்ல முறையிலோ, கெட்ட முறையிலோ ஒவ்வொரு அளவுக்கு 'இம்ப்ரஷன்' பதிந்து, அந்த 'இன்ஃப்ளூயென்'ஸில் பசங்களும் அதே வழியில் தாங்களும் போகத் தூண்டதல் பெறுவார்கள்.

இக்கால ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும்போதும் மாணவர்கள் பாடத்தை மாத்திரமின்றி, பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரையும்தான் கவனிக்கிறார்கள். பாடம் அவர்கள் மனஸில் பதிகிற மாதிரிதான், அந்த ஆசிரியரின் நடத்தையும் பதிகிறது. பாடத்தைக் கவனிக்காமலும், அது மனஸில் பதியாமலும் போகிற மந்தமான மாணவனும்கூட ஆசிரியரின் நடத்தையை கவனிப்பான், அது அவன் மனஸில் பதியும். 'அப்படி மாணவர்களுக்குப் பதிவது அவர்களை நற்குண. நல்லொழுக்கங்களில் கொண்டு விடவேண்டும். அந்த ரீதியில் நாம் உத்தமமாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் நமக்கு ஜீவனோபாயம் தருகிற அந்த மாணவ ஜீவர்களுக்குத் தாங்கள் த்ரோஹம் செய்ததாகிவிடும்' என்கிற அளவுக்கு ஆசிரியர்மார்கள் ஆழமாகக் கருதவேண்டும்.

வாழ்க்கையுதாரணம் என்ற முக்யமான அம்சம் ஒரு பக்கம் இருக்கட்டும். பாடம் போதிப்பது என்றே வருகிற அம்சத்திலும் ஆசிரியர்கள் ஏனோதானோ

என்றில்லாமல். அந்தரங்கபூர்வமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும், பள்ளிக்கூடத்தில் ஏனோதானோ என்று 'டீச்' பண்ணி விட்டு. அதனாலேயே பசங்கள் தங்களிடம் ட்யூஷன் வைத்துக் கொள்ளும்படிச் செய்து. தங்களுடைய ஸம்பாதியத்தை விருத்தி செய்துகொள்ள ஒரு ஆசிரியர் எண்ணினாரானால் அதைப் போன்ற தர்ம விருத்தமான (தர்மத்திற்கு விரோதமான) பாபம் இன்னொன்றில்லை, புண்ய வசத்தால் கிடைத்திருக்கும் 'டீச்சிங்' வேலையை இப்படிப் பாபகரமாகப் பண்ணிக்கொள்ளலாமா? அந்த மாதிரி (ரீதியில்) நினைப்பதற்கே அவர்கள் பயப்படவேண்டும்,

மற்ற தொழில்களுக்குப் போகிறவர்கள் தாங்கள் படித்த படிப்பை உபாயமாகக் கொண்டு அந்தத் தொழிலை ஆற்றுகிறார்கள். அநேக உத்யோகங்களில் இருப்பவர்கள் செய்யும் தொழில்களில் அவர்கள் படித்த படிப்பு நிறையவோ, கொஞ்சமோ 'அப்ளை' ஆகிறது. அதோடு ஸரி. படித்த படிப்பு கொஞ்சங்கூடப் பிரயோஜனமாகாத உத்யோகங்களிலும் பலர் இருக்கிறார்கள். பி.எஸ்ஸி. கெமிஸ்டரி படித்துவிட்டு ஏ.ஜி.ஸ் ஆபிஸில் க்ளார்க் என்றால்? இப்படியெல்லாம் இல்லாமல், படித்த படிப்பு அப்புறம் செய்யும் தொழிலுக்கு உபாயமாயிருக்கிறது என்பதற்கும் மேலே, அந்தப் படிப்பே மூலதனமாக இருப்பது ஆசிரியத் தொழிலில்தான். தாங்கள் மாணவர்களாக இருந்தபோது படித்த படிப்பையே ஆசிரியத் தொழிலில் அப்புறம் அவர்கள் தங்களுடைய மாணவர்களுக்க டீச் பண்ணுகிறார்கள். அவர்க்ள ஒரு பக்கம் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்துகொண்டே மறு பக்கம் கற்போராகவும், ஏற்கெனவே படித்ததையே திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித் திரும்பத் திரும்ப அதே பாடங்களை அவர்கள் டீச் பண்ணுவதால், அந்தப் பாடங்களிலே அவர்கள் முழுக் கருத்தும் செலுத்தினால் அவர்களுக்கே பழைய பாடங்களிலிருந்து புதுப் புது விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். முக்யமாக, மேல் படிப்பிலே இந்த மாதிரி நடக்கும். மேலே மேலே ரெஃபரென்ஸுகள் பார்த்து, பாடங்களுக்கு மெருகேற்றிக் கொள்ள உதவும், புத்திசாலி மாணவர்கள் கேட்கிற கேள்விகளும் இப்படியே ஆசிரியர் 'ஸப்ஜெக்'டை மேலும் ஆழமாகத் துருவிப் பார்த்துத் தெரிந்து கொள்ள உபகாரம் செய்யும். டீச்சர்களை 'மாஸ்டர்' என்று சொல்கிறோமே, அது நிஜமாகவே பொருந்தும்படி அவர்கள் ஸப்ஜெக்டில் 'மாஸ்டர்' பெற்று விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் நன்றாக, தெளிவாக டீச் பண்ணி விஷயத்தை மாணவர்களுக்குள்ளே ஆழமாக இறக்க முடியும்.

ஒரு கதை சொல்வார்கள். பௌராணிகர் ஒருவர் ராஜாவிடம் போய் பாகவதம் சொல்வதாகச் சொன்னாராம். அதைக் கேட்ட ராஜாவுக்கு அவர் எப்போது ராஜமரியாதைக்கும், ஸம்பாவனைக்கும் ஆசைப்பட்டு வந்திருக்கிறாரோ அப்போதே அவர் பாகவதத்தை புத்தியால்தான் படித்திருக்கிறாரேயன்றி ஹ்ரூதயத்தால் படித்து பக்தி - ஞான - வைராக்கியங்களைப் பெறவில்லை என்ற புரிந்துவிட்டது. அந்த மாதிரி புஸ்தக விஷயத்தில், உட்கருத்தில் ஊறாதவர் சொல்லிக கேட்டால் கேட்கிற பேருக்குப் பூர்ணமான ப்ரயோஜனம் கிடைக்காதே என்று பார்த்தான். ஆகையினால், வந்த

ப்ராம்மணருக்கு ஏதோ ஒரு ஸம்பாவனையைப் பண்ணி விட்டு, "இன்னொரு தடவை படித்துப் பார்த்து விட்டு வந்து அப்புறம் உபந்யாஸம் பண்ணுங்கள்" என்றான். பௌராணிகருக்கு அவன் ஏன் அப்படிச் சொல்கிறானென்று புரியவில்லை. ஆனாலும் ராஜாக்ஞை என்பதாலும், அதை நிறைவேற்றினால் நிரம்ப கௌரவம், த்ரவ்யம் எல்லாம் கிடைக்குமே என்பதாலும் அவரும் ராஜா சொன்ன மாதிரி திரும்பிப் போய் இன்னொரு தடவை பாகவதத்தை நுணுக்கமாகப் படித்து விட்டு அவனிடம் வந்தார். இப்போதும் முன் மாதிரியே அவன் அவருக்கு ஒரு ஸம்பாவனையைப் பண்ணி, "இனனொரு தடவை படித்து விட்டும் வாரும்" என்று சொன்னான். அவரும் அதே மாதிரிப் பண்ணினார். ராஜா பழைய பல்லவியையே பாடினான். பௌராணிகரும் முன்போலவே அதற்கு அநுபல்லவி பாடினார். இப்படியே அந்த இரண்டு, மூன்று தடவை மட்டுமில்லை, இருபது தடவை ராஜா அவரை மறுபடி படித்து விட்டு வரும்படி அனுப்பி வைத்து அவரும் அப்படியே பண்ணினார்.

இருபத்தோராவது தடவையும் ராஜா தன் பல்லவியைப் பாடினான். ஆனால் இந்தத் தடவை அவர் அதற்கேற்க அநுபல்லவி பாடவில்லை.

ரொம்ப நாளாகியும் அவர் வராததால் ராஜா என்ன, ஏது என்று பார்த்து வருவதற்காக அவர் கிருஹத்துக்கு ஆள் அனுப்பினான்.

போன ஆள் திரும்பி வந்து, "இந்தத் தடவை அவர் பாகவதம் பாராயணம் பண்ணியுவுடன் அவருக்க பக்தி - ஞான - வைராக்யங்கள் வந்து விட்டதாம். 'ராஜாவுமாச்சு, ராஜஸதஸுமாச்சு, வீடுமாச்சு, வீட்டு மநுஷ்யளுமாச்சு! என்ற விரக்தியாகச் சொல்லிக் கொண்டு, பாகவதநுபவம் பெறவேண்டும் என்று தாபத்தோடு காட்டுக்குப் போய் விட்டாராம்" என்றான்.

ராஜாவுக்கு த்ருப்தியாயிற்று. 'இப்போது பௌராணிகர் பாகவதத்தின் 'ஸ்பிரிட்'டில் ஊறிவிட்டார். இப்போதே அவருக்க பாகவதம் சொல்லத் தக்க பக்வம் வந்திருக்கிறது. அப்படிப்பட்டவர் சொல்லிக் கேட்டால்தான் கேட்கிற பேருக்கும் ப்ரயோஜனம் கிடைக்குமாதலால் இப்போது அவரைத் தேடிக்கொண்டு தானே போய் ச்ரவணம் செய்யவேண்டும்' என்ற ராஜா தீர்மாணித்தான்.

அந்தப்படியே காட்டுக்கப் போனான். தான் தேடித் தேடிப் போன ராஜா தன்னைத் தேடிக்கொண்டு வந்திருப்பதையும் ஒரு பொருட்டாக பௌராணிகர் நினைக்காமல் பகவத் சிந்தனையிலேயே தானிருந்தார். ராஜா அவரை நமஸ்கரித்து பாகவதம் உபதேசம் பண்ணுமாறு ப்ரார்த்தித்தான்.

தன்னை இப்படி பகவத்பரமாத் திருப்பிவிட்ட உபகாரி அவன்தானே என்பதால் அவரும் நன்றியோடும், அருளோடும் அவன் மனஸிலே நன்றாக இறங்குகிற முறையில் அவனுக்கு பாகவதம் சொன்னார்.

இப்படிக் கதை.

(சிரித்து) அந்தப் பௌராணிகர் தம்முடைய ஸப்ஜெக்டான புராணத்தைப் படித்து அதன் 'ஸ்பிரிட்' என்கிற உட்கருத்திலேயே தோய்ந்தபோது பௌராணிகத் தொழிலையே விட்டுவிட்ட மாதிரி, ஆசிரியர்களும் தங்கள் ஸப்ஜெக்டை ஆழ்ந்து படித்து 'டீச்சிங் ஜாபை'யே விட்டு விட வேண்டும் என்ற அர்த்தத்தில் இந்தக் கதையை நான் சொல்லவில்லை. (மீண்டும் நெடுநேரம் சிரிக்கிறார்)

சொல்கிறவர், சொல்லும் விஷயத்தின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு சொன்னால்தான் கேட்கிறவரின் மனஸிலும் அது நன்றாகப் புகுந்து பூர்ண ப்ரயோஜனத்தைக் கொடுக்கும் என்று ராஜா நினைத்தானே, அதை ஆசிரியர்களுக்கெல்லாம் 'அன்டர்லைன்' பண்ணிக் காட்டுவதற்காகவே சொன்னேன், பௌராணிகர் ஆழ்ந்து பாராயணம் பண்ணியது பக்தி - ஞானப் புஸ்தகமாயிருந்ததால் அவர் தொழிலை விட்டார். ஆசிரியர்கள் படிக்கிற புஸ்தகங்கள் அப்படியில்லையே! மத போதனையாக 'டீச்' பண்ணுவதாக இருந்தால்கூட அந்த அளவுக்குத் தீவிரமாக சாதாரண நிலையில் இருக்கப்பட்ட நாமெல்லாம் போய்விட மாட்டோம்! படிக்கப் படிக்க புத்தியாலேயே மேலும் மேலும் நன்றாகத் தெரிந்து கொள்வதோடு ஹ்ருதயத்தாலும் ஒரு அளவுக்கு, ஒரு கணிசமான அளவுக்கே தெரிந்து கொண்டு, அப்படித் தெரிந்து கொண்டதைக் கேட்பவருக்குள்ளேயும் நன்றாக இறக்குகிற சக்தியை ஸம்பாதித்துக் கொள்வதோடு நாமெல்லாம் நின்று விடுவோம். அதுவே போதும். அதுவே பெரிசு. அதற்கு மேல் எதிர்பார்ப்பதற்கில்லை.

மொத்தத்தில் விஷயம், பசங்கள் மட்டும்தான் பாடத்தை பக்தி - ச்ரத்தையுடன் படிக்கவேண்டும் என்றில்லை. வாத்தியார்மார்களும், பழைய பாடத்தையே எத்தனை தடவை திரும்பத் திரும்பத் படித்து, சொல்லிக் கொடுத்தாலும் அந்தக் கார்யத்தை பக்தி ச்ரத்தையுடன் செய்து, சொல்கிற விஷயத்தின் உட்கருத்தைத் தாங்களும் நன்றாகப் புரிந்து கொண்டு கேட்கிற மாணவர்களுக்கும் நன்றாகப் புரியப் பண்ணவேண்டும். இதிலே, திரும்பத் திரும்ப படிப்பதால் வாத்தியார்மார்களே புதிது புதிதாகத் தெரிந்து கொள்வதற்குக் காலேஜ் மாதிரியான மேல்படிப்புக் கட்டத்திலேயே ஜாஸ்தி 'ஸ்கோப் உண்டு.

இன்னும் ஒரு முக்யமான விஷயம்: ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற அறிவையெல்லாம் மாணவர்களுக்கம் ஊட்டத்தான் பாடுபட வேண்டும் என்றாலும் அதில் ஒரு ஜாக்ரதை வேண்டும். பசங்களுக்க விஷயங்களை எடுத்துச் சொல்லி அது அவர்களுக்க உள்ளே போகும்படிப் பண்ணுகிற கார்யத்தில் ரொம்பவும் பொறுமையும், நிதானமும் வேண்டும். பதட்டமும், அவஸரமும் கூடவே கூடாது. தெரிந்ததையெல்லாம் வதவதவென்று பசங்களின் மூளையிலே திணிக்கப் பார்த்தால் ஒன்றுமே உள்ளே இறங்காமல் எல்லாமே பிதுங்கிக்கொண்டு வெளியில் வழிந்து விடுவதாகத்தான் முடியும்.

இங்கே ஆசிரியர்களெல்லாம் உண்டியின் உதாரணத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். நம் கை நிறைய, பை நிறையக் காசு இருந்தாலும் உண்டியில் அப்படியே கொட்டிவிட முடியுமா? அதிலுள்ள சின்ன த்வாரத்தின் வழியாக ஒவ்வொரு காசாகத்தானே போட வேண்டும்? முதலில் போட்டது சிக்காமல் உள்ளே போய் விட்ட அப்புறம், அதுவாகப் போகாவிட்டால் உண்டியைக் குலுக்கி அதைப் போகப் பண்ணிய அப்புறம்தானே அடுத்த காசைப் போடவேண்டும்? அப்படித்தான், ஒவ்வொரு விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஒவ்வொன்றாக மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுடைய அறிவுக்குள்ளே செலுத்தவேண்டும். சொன்ன ஒவ்வொரு அம்சமும் சிக்காமல் அவர்களுக்குள்ளே போய் விட்டதா என்பதைக் கேள்வி

கேட்டு நிச்சயப்படுத்திக்கொண்டு, அப்புறமே அடுத்த அம்சத்துக்குப் போக வேண்டும். ஒன்று உள்ளே போகவில்லையென்றால் நிதானம் இழக்காமல், கோபப்படாமல், மாறாக அவர்களக்கு உத்ஸாஹம் ஊட்டுகிற வகையிலே மறுபடியும் தெளிவாக எடுத்துச் சொல்லி உள்ளே போகப் பண்ணவேண்டும். அப்புறம் அடுத்த அம்சம்.

மந்த புத்திப் பசங்களுக்கக் கற்றுக் கொடுப்பது ச்ரமம்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் ஆசிரியர்மார்கள் தாங்கள் மேற்கொண்டிருக்கிற இந்தத் தொழில் வித்யாதானம் என்கிற புண்யமான ஸேவை; இதனால்தான் இளம் பிராயத்தினர் உரியபடி மனிதர்களாக உருவாகிறார்கள்; தேசத்தின், லோகத்தின் எதிர்கால க்ஷேமமே இதைத்தான் சார்ந்திருக்கிறது என்பதை 'ரியலைஸ்' பண்ணிவிட்டால் தொழிலில் உள்ள ச்ரமங்களை ச்ரமமாகவே நினைக்க மாட்டார்கள். பொறுமையையும், ப்ரியத்தையும் ஒருபோதும் கைவிடாமலிருப்பார்கள்.

எதிர்காலத்தை உருவாக்கப் போகிறவர்களை உருவாக்குவதில் ஒரு முக்யமான பங்கு ஆசிரியர்களுக்கே இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன். எதிர் காலம் ஒரு பக்கம் இருக்க, தற்காலத்தில் கல்வித்திட்டம் என்பது அறிவு, குணம் ஆகிய இரண்டிலும் தரமானதாக அமைவதற்கும் அவர்கள்தான் போராட வேண்டும் என்பதில் ஆரம்பித்தேன். பழங்காலத்தில் அப்படிப்பட்ட தரமான கல்வித் திட்டமே நடைமுறையிலிருந்ததைத்தான் முக்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்




?????? ??????????????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
"ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?"

"ஸ்ரீ மஹா பெரியவா பிறந்தது எங்கே?"


(விழுப்புரமா, ஈச்சங்குடியா)

புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.



eachangudi1.jpg

ஸ்ரீமகாபெரியவா தான் பிறந்த இடம் விழுப்புரம் என்றும்
சொல்கிறார்கள். ஈச்சங்குடி என்றும் சொல்கிறார்கள்.
எனக்கு சந்தேகமாக இருக்கு.ஈச்சங்குடியில்
ஸ்ரீமகாபெரியவாளின் தாத்தா இருந்தார்.அம்மாவின் அப்பா.
அவருக்கு இரண்டு பெண்கள்.ஒரு பெண்ணுடைய பிள்ளை
ஸ்ரீமகாபெரியவாளின் குரு ஸ்ரீ லக்ஷ்மிகாந்தன் என்று பெயர்.
அம்மாவின் தங்கையின் பிள்ளை.

ஸ்ரீ மகாபெரியவாளின் பெயர் சுவாமிநாதன். ஸ்ரீமகாபெரியவா
ஈச்சங்குடியில் பிறந்தார் என்று ஸ்ரீமகாபெரியவாளின்
சகோதரர்கள் சொல்கிறார்கள்.ஆனால் புத்தகங்களில்
திரு சாம்பமூர்த்தி சாஸ்திரிகள், "ஸ்ரீமகாபெரியவா
விழுப்புரத்தில் பிறந்தார்", என்று எழுதிவிட்டார்.

நான் (பாலு) ஸ்ரீமகாபெரியவாளிடம் இதை பற்றி கேட்டபோது
ஸ்ரீமகா பெரியவர் சொன்னார்-,

"நான் பொய் சொல்லமாட்டேன் சத்தியத்திற்கு பேசுபவன்.
எனக்கு எங்கு பிறந்தேன் என்று தெரியாது. ஒரு தம்பி
நான் விழுப்புரத்தில் பிறந்தேன் என்று ஒரு புத்தகத்தில்
எழுதியிருக்கான்.சாம்பமூர்த்தி சாஸ்திரி.

மற்றொரு தம்பிசிவன் சாஸ்திரிகள் என்பார்கள். என் தங்கை லலிதாம்மாஅவர்கள் நான் இரண்டாவது குழந்தையாக இருப்பதால்
ஈச்சங்குடியில் பிறந்ததாகச் சொல்கிறார்கள். அதனால்
நான் பிறந்த இடம் எனக்கு தெரியாதலால் நான் பொய்
சொல்லமாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.

அதனால் ஸ்ரீமகாபெரியவாளுக்கு ஈச்சங்குடி,விழுப்புரம்
இந்த இரண்டு இடங்களிலும் அவதார ஸ்தலம்
கட்டப்பட்டுள்ளது



https://mahaperiyavaa.wordpress.com/2015/06/08/ஸ்ரீ-மஹா-பெரியவா-பிறந்தத/
Sage of Kanchi
 
Last edited:
பாத்திரமறிந்து

பாத்திரமறிந்து



கட்டாய பாடம் என்பதால், ஏதோ அரை மனஸாக வந்து, கற்றுக்கொண்டதாகப் பேர் பண்ணிவிட்டுப் போய்விடமுடியாது. முழுமனஸுடன் முழு 'கோர்ஸை'யும் நல்ல ப்ரஹ்மசர்ய நியமங்களோடு படிக்கக்கூடிய ஸத்பாத்ரத்துக்கே கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தர்ம சாஸ்த்ரங்கள் கூறுகின்றன.
சுத்தனாகவும், க்ரஹண - தாரண சக்தியுள்ளவனாகவும் வித்யார்த்தி இருக்க வேண்டுமென்கின்றன. சொல்லிக்கொடுப்பதை நன்றாக க்ரஹித்துக் கொள்வதே ச்ரஹண சக்தி. அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வது தாரணசக்தி.



கம்பல்ஸரி என்றும் வைத்துவிட்டு, இப்படித் தகுதியும் வைத்தால் என்ன அர்த்தம்? இயற்கையாகவே க்ரஹண - தாரண சக்தி போதாதவன் என்ன பண்ணுவது? இதற்காகத்தான் முதலில் ப்ரஹ்மோபதேசம் என்று காயத்ரியை உபதேசித்து, அப்புறம் வித்யாப்யாஸத்தில் விடுவது என்று வைத்தார்கள். காயத்ரியை ஒழுங்காக ஜபித்து வந்தால் எவனுக்கும் க்ரஹண - தாரண சக்திகள் உண்டாகிவிடும்.


முறையாக காயத்ரீ அநுஸந்தானம் செய்யாததால் க்ரஹண - தாரண சக்திகளைப் பெறாதவன், அஸத்தாக இருக்கிறவன் ஆகியோருக்கு வித்யையைக் கொடுக்கக்கூடாது என்றும், அப்படிப்பட்டவர்களை ஸமூஹத்திலிருந்து ஒதுக்கிவிட வேண்டுமென்றும் வைத்தார்கள்.



நல்ல விதையானாலும் ஊஷர பூமியில் (உவர் நிலத்தில் விதைத்தால் வீணாகப் போவதுபோல் ஸத்வித்யையும் அஸத்துக்கு உபதேசிக்கப்பட்டால் வீணாகும் என்று சாஸ்த்ரம் எச்சரிக்கிறது.
இப்படிச் சொல்லியிருக்கிறது. யோக்யதையுள்ள சிஷ்யன் கிடைக்கவேயில்லை என்றாலும்கூட ஒரு வித்வான் தன் வித்யையோடேயே செத்தாலும் சாகட்டும், ஆனால் என்ன ஆபத்து வந்தாலும் அபாத்ரத்துக்கு மட்டும் அதைக் (கற்றுக்) கொடுத்துவிடக்கூடாது. ஒரு கதை மாதிரிக்வடச் சொல்லியிருக்கிறது. வித்யா தேவதை ஒரு ப்ராம்மணனிடம், எப்படி கவனமாகக் காப்பாற்றி, கருத்தாகச் செலவழித்து, தக்காருக்கே விநியோகம் பண்ணுவாயோ அப்படித்தான் என்னையும் பண்ண வேண்டும். சுத்தனாய், ஜிதேந்த்ரியனாய், ச்ரத்தையோடு வித்யாப்யாஸம் செய்கிறவனாய், 'இதை நிதியாக ஸம்ரக்ஷிக்க வேண்டும்' என்று நினைக்கிறவனாய் உள்ளவனுக்குத்தான் என்னை உபதேசிக்க வேண்டும்" என்று சொல்வதாக (தர்ம சாஸ்த்ரம்) தெரிவிக்கிறது.



அக்கறையோடும், பக்தியோடும் கேட்காதவனுக்கும், தர்ம விரோதமாக வித்யையை ப்ரயோஜனப்படுத்தக் கூடியவனுக்கும் சொல்லிக் கொடுக்கவேகூடாது என்று மநு தர்ம சாஸ்த்ரத்தில் இருக்கிறது.






எல்லா தர்ம சாஸ்த்ர க்ரந்தங்களுமே பாத்ரம் பார்க்காமல் பணத்துக்ககாக வித்யையைக் கற்றுக் கொடுப்பவன் நரகத்துக்குப் போவான் என்று ரொம்பவும் பயப்படும்படியாகச் சொல்லியிருக்கின்றன.


?????????????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
இறுதி இலக்கு பரமாத்மா தான்.

இறுதி இலக்கு பரமாத்மா தான்.



நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமாஇருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்' டேகிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்தசூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன்.மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துலபரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன்சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்குசெய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்தAmbiguityயும் கிடையாது.

ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்புஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்கபடிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறதுஒரு approximation தான். பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப்போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

மூணு புள்ளி ஒண்ணு நாலுஅப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்றஎண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போலஇத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது.

விட்டத்தின்எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின்விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒருமுற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக்கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின்இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது. விட்டத்தின் ஏதோ ஒருமுடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனைதுல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக்கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட்வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மாஎன்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத,கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்துபடிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிரசுற்றளவாக மாற முடியாது. த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம்செய்கிறது.

உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்தவிட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக்கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள்.அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம்விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படித்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுதுஅப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிரும். கணிதத்தின்முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான்.எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆகஇருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும்இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இதுஇதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மைஇருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மைஎன்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன்இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்துபேதப்பட்டது. என்கிறார். சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னுசொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாமபரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரிஇருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்புவரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பைடி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவேகண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர்எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகானஎண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.

சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்னஅப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவுஒத்துக்கொள்கிறது. அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னுசொல்வாங்களே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மாஅப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால்எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்றுசொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில்இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அதுஉனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி. அதாவது வெளியே குப்பன்,சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில்ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.
 
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி &#

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

01.மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லிருக்கிறார்கள்.இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி, பக்தனை ஸ்பரிஷித்து அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறோம். காசியில் இருக்கும் விஷாலாக்ஷி , பக்தர்களை அனுக்ரஹ சிந்தனையோடு மனதால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீக்ஷை குருவாக இருக்கிறாள்.

02.காயத்ரி என்னும் வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த உச்சாரணம் செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்

03.சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே ஒரு கோயிலாக இருக்கிறது. “சிவ: சோளே” என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச் சோழதேசம் பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்

04.சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.

05.பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும் அத்தகையதே

06.ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்

07.குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம். கனமென்றால் Weight அதிகமென்றா அர்த்தர்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதேலே சிறந்தவர். குரு என்றால் இருட்டைப் போக்குபவர் என்று சொல்கிறார்கள். குருவுக்கும் சீடனுக்கும் ‘லிங்கா’க உபதேசம் இருக்கிறது. குருவிடம் இருந்து புறப்பட்டுபோய் , சீடனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாகத் தூண்டிச் செலுத்துவது ‘தீட்சை’ என்று அறியப்படுகிறது.

08.உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத் தரித்துக் கொள்ள வேண்டும்.

09.வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும் அவர்தான், பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.

10.சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.

11.ஒரே ஒரு சூரியன் தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதை தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அனேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்று தான்! அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினுமினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புதான் . இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கரசார்யரவர்கள் 'பிரம்ம சூத்ர பாஷ்யத்தில் சொல்லிருக்கிறார்.

12.நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி என்ற வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி என்பது யாரைக் குறிக்கிறது?

13.ஒரு நாள் மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன். அங்கே ஒருவரை ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். அங்கே உள்ள கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில் திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள். திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார். அவரைத் தான் ‘உம்மாச்சு’ என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது ‘உம்மாச்சு’ என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும் ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி உமாமகேச்வரர் என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.

14.பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல வேண்டும். ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான் நாக்கு இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் ‘நாக்கினால் செய்யக் கூடியதை இவன் செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை’ என்று பரமேச்வரன் திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக வேண்டும். அதை ஒரு தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். (‘சிவ’ என்ற நாமாவே அது).

15. தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாக பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

16.சப்தத்வீபங்களிலும் வேதமே பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை தவிர இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம் மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள வேண்டும். வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு நம்மிடத்தில் அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம் சிவஸ்வரூபம். கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம், ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை இவைமிக அவசியம்

17.நாம் எதை நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக விளங்குகிற பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான் எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார். ஆகவே விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை எப்போதும் நாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்

18.வேத அத்யயனம், யோகம், த்யானம், பூஜை இவற்றை கஷ்டப்பட்டு அப்யாசம் செய்வதால் கிடைக்கும் ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாக பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ச்ம்ருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லி இருக்கிறார்.வீணா கானத்தை அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.கடுமையான பிரயாசை இல்லாமலே சங்கீதத்தால் மோக்ஷ மார்கத்தில் போய்விடலாம் என்கிறார்.

19.மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே. 'சேவை' என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம். அதோடு நமக்கு சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு , ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவே சமூக சேவை வேறா என்று கேட்க கூடாது. உலகத்திற்கு சேவை செய்வதாலேயே சொந்த கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

20.பிறவி எடுதிருப்பதின் பிரயோஜனமே யாரிடமாவது ஒருவரிடம் மாறாத ப்ரியம் வைப்பதுதான். நாம் ப்ரியம் வைக்கும் பொருள் நம்மோடு எந்தக் காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்க வேண்டும். நம்மைவிட்டு எக்காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அந்த வஸ்துவிடம் ப்ரியம் வைத்தால்தான் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். நாம் எல்லாரும் எந்த வஸ்து வினிடமிருந்து உண்டாகி, எந்த வஸ்துவினோடு முடிவில் ஐக்கியமாக விடுகிறோமோ அந்த வஸ்துவிடம் வைக்கிற ப்ரியம் தான் சாஸ்வதமானது.அந்த வஸ்துவைத் தான் ஸ்வாமி என்கிறோம்.

21.அன்புடைமை,அருளுடைமை போன்றவற்றைதான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை,யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது. ரொம்பவும் கலந்து போகவும் கூடாது ; ஒரேயடியாக பிரிந்தும் இருக்ககூடாது. ஸ்வதர்மப்படியான காரியத்தில் பிரிந்திருக்க வேண்டும் ; மனதிலே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்

22.கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைதிருப்பதர்க்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக் கொள்கைகளும், ஒழுங்கு முறைகளும், நன் நெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.அவை அடிப்படை உண்மைகளை நாம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப் படித்து, ஆராய்ந்து நாமும் நன்மை பெற்று உலகும் நன்மை பெறச் செய்வோமாக .

23.நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால் ஒரு நதி சமுதிரத்தை அண்டும்போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தபடுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத்தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி அந்த ஒன்றிடம் பக்தி செலுத்துகிறான். தன்னையே ஒருவன் அறிந்து கொள்ளும்போது தானும் கடவுளும் வேறல்ல ஒன்றுதான் என்ற உணர்வு ஏற்படும்.

24.பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யது வெறுமே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்ரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொலப்படுவதில்லை. நாம் அவற்றை சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம்

25.தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திர்ம,தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில்தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால்மு, கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும்.

26.இன்பத்துக்கு சாதனமாக வேண்டுவது பொருள். ருசியாக சாப்பிடலாம், அது ஒரு சந்தோஷம் - ஜீரமானவுடன் அந்த இன்பம் போய்விடும். சங்கீதம் கேட்பதால் உண்டாகும் இன்பமும் அப்படியே; மறுபடி கச்சேரி கேட்கப்போக வேண்டி இருக்கும்.நமக்கு ஒரு நல்வரவு பத்திரம் வாசித்துக் கொடுத்தால் அது ஒரு சந்தோஷம். அது சிறுது நேரமேஇருக்கும். நான்கு பேர்கள் அதை ஒப்புக் கொள்ள வில்லை என்றால் சந்தோஷம் போய்விடுகிறது. இந்த இன்பத்திற் கெல்லாம் ஆதாரம் - பொருள்;

27.கோடிகோடி மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரசாரங்களைச் செய்கிறோம்.

28.நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிறபோது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.

29.ஸ்வப்னம் என்பதே வாழ்க்கையில் நிறைவேறாத அபிலாஷைகளின் ஸ்வரூபம். ஸ்வப்னத்தில் கெட்ட காரியங்கள் பண்ணுவது போல கண்டால், நாம் அப்படி எண்ணிக் கொண்டிருந்திருக்கிரோமோ என்று மனது துக்கப் பட வேண்டும். கெட்ட காரியமோ கெட்ட காமமோ ஒரு நாளும் ஸ்வப்னத்தில் வராமலிருந்தால் அப்போது நல்லவர்களாக இருக்கிறோம் என்று சந்தோஷப்படலாம். நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளத்தான் ஈஸ்வரன் ஸ்வப்னத்தை வைத்திருக்கிறான்.

30.பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவை மனப்பான்மை , தியாகம் எல்லாம். இதைப் பொதுவாக அன்பு என்று சொல்லலாம். பெரியவர்களிடம் அன்புடன் இருப்பது விசேஷம் இல்லை . மஹா பாவிகளிடமும் அதே அன்பு வைக்க வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவனிடமே அன்பு வைக்க வேண்டும்.

31.அவனவனும் தன் உடலையும் புத்தியையும் சுத்தமாக வைத்துக் கொள்வதே பெரிய பரோபகாரம் தான். துர்ப் பழக்கங்களால் ஒருவன் வியாதியை சம்பாதித்துக் கொள்கிறான் என்றால், அப்பறம் அவனால் எப்படிப் பரோபகாரம் பண்ணமடியும்? அது மட்டுமல்ல. அவனது நோய் மறவர்கள்கும் பரவக்கூடும். துர்ப்பழக்கத்தால் நோயை வரவழைத்துக் கொள்வது பர அபகாரம் ஆகும். நம்மை மீறி வந்தால் அது வேறு விஷயம்.



Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian


32.உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு,நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும் ஆசார அனுஷ்டனங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளை பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பற்றவும் முடியும்.
 
Veda Dharma Sastra Paripalana


[TD="width: 100%"]

[TD="colspan: 3"]
"VEDA SAMELANAM" by Veda Dharma Shastra Paripalana Sabha - Jun 2015 - PERAMBUR - 10th Jun 2015 to 13th Jun 2015.
Daily schedules and Upanyasam Details:

Day 1 (10th Jun 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on ""Aachaaram, Aaahaaram, Alankaaram" Upanyasakar "Veda Rathnam Suraathyaayi, Veda Bhashya RathnamBrahmashri Dr.V G Subramanya Ganapadigal"

Day 2 (11th Jun 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on "Aacharya Bakthi" - Upanysakar "Brahmmasri Ky. Bharaneedhara Sastrigal".

Day 3 (12th Jun 2015)
7:30 AM to 08:00 AM - Shri Veda Vyasa Pooja
8:00 AM to 11:30 AM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
3:00 PM to 05:00 PM - Ruk, Krishna Yajur, Sama Veda Parayanam.
7:00 PM to 08:30 PM - Upanyasam on "Veda Mahimai" - Upanysakar "Maha Mahobadhyaya, Vedabashya Rathnam, Dharshana Kalanithi, Meemamsa Vedantha Sironmani,Veda Sastra Rathnakaraa Mullaivasal Brahmashri R.KRISHNAMURTHY SASTRIGAL".

Day 4 (13th Jun 2015)
07:30 AM to 09:00 AM - Shri Veda Vyasa Pooja & Veda Parayana Poorthi
09:30 AM to 11:30 AM - Avahanthee Homam
11:30 AM to 12:30 PM - Pradakshana Namaskaram, Aasirvadham, Swasthi in All sakahas, Veda Parayana Sambhavana, Ghosha Santhi, Arathi.

SUBHAM
[/TD]
[/TD]








11251001_473792669442444_5986490453347465501_n.jpg






Sage of Kanchi
 
Duo Artists Award on Saturday the 13th June, 2015,


Duo Artists Award on Saturday the 13th June, 2015,

Sri Gurubyo Namaha:

Nadhabrahmam cordially invited you to the 14th year Celebration presentation of Duo Artists Award on Saturday the 13th June, 2015, 6.00 p.m @ TAG - Dakshinamurthy Auditorium, P. S. Higher Secondary school, R. K. Mutt Road, Mylapore, Chennai - 600004. The invitation and the programme schedule are attached herewith.


All are welcome.



11427795_1020952951255650_8321430668986612575_n.jpg





Sage of Kanchi
 
ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம்

ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம்

மற்ற மதங்களில் எல்லோருக்கும் பொதுவாக வைத்த தர்மங்களை, அறநெறிகளை நம் மதத்திலும் எல்லோருக்கும் விதித்ததோடு அவரவர் தொழிலைப் பொறுத்து அதற்குத் தனியான விசேஷ தர்மங்களை வைத்து ஒன்றோடொன்று கலந்துவிடாமல் ஸமூஹத்தைப் பிரித்து வைத்ததுதான் நம் நாகரிகத்தின் சிரஞ்சீவித் தன்மைக்கு உயிர்நிலை.



நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வந்திருக்கிறது. ஏதோ ஆதாரம் இருந்துதான் இந்த மதம் இவ்வளவு நாள் பிழைத்திருக்கிறது. எந்த மதமும் இவ்வளவு தீர்க்காயுஸோடு இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய மதத்தை நான் நம்முடைய கோயிலைப் போல நினைத்திருக்கிறேன். நம்முடைய கோயில்கள் மற்றவர்களுடைய சர்ச் அல்லது மசூதியைப் போல சுத்தமாக இல்லை. மற்ற மதஸ்தர்களுடைய கோயில்களோ வெள்ளையடித்து சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய கோபுரங்களில் முளைத்திருக்கும் மரங்களுக்குக் கணக்கேயில்லை. அவ்வளவையும் தாங்கிக் கொண்டு நமது கோயில்கள் நிற்கின்றன. ஆனால் மற்ற மதத்தார்களின் கோயில்களில் இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒரு முறை ரிப்பேர் செய்யா விட்டால் தாங்காது. நம் கோயில்கள் அப்படியில்லை. அவை கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.

பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பாக நம்முடைய பெரியோர்களா பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் அவ்வப்போது ரிப்பேர் இல்லாமலே நம் கோயில்கள் நீடித்து நிற்கின்றன. நாம் கோயில்களில் பல ஆபாஸங்களைச் செய்கிறோம்; அபசாரங்கள் செய்கிறோம்; இவ்வளவுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு நம்முடைய கோயில் நிற்கிறது. லோகத்திற்குள் மிகப் புராதனமான கோயில்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

சீமையில் இருந்து நம்முடைய கோயில்களைப் படம் பிடிப்பதற்காகவென்றே பல பேர் வருகிறார்கள். நம்முடைய அலக்ஷ்யத்தால் அழிவதற்குரிய காரணங்கள் பல இருந்தும் அவை இப்படி நெடுங்காலமாக அழியாமல் நிற்கின்றன. அவற்றை இடித்து விடலாமென்றாலோ அதுவும் சிரமமாக இருக்கிறது. கட்டுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமோ அதைவிட இடிப்பதற்கும் படவேண்டும்.



நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று (மற்ற மதங்களில் இல்லாத ஏதோ ஒன்று) இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால்தான் எவ்வளவோ வித்யாஸங்கள இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது.


அந்த ஏதோ ஒன்று வர்ணாச்ரம தர்மந்தான். மற்ற மதங்களில் எல்லாருக்கும் ஒரே தர்மம் இருக்கிறது. அதனால் தான் அவைகள் அதிகப் பெருமை அடைந்திருக்கின்றன என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவை ஒரு ஸமயம் ஒரே அடியாக ஏறி நிற்கும். ஒரு ஸமயம் இருந்த இடம் தெரியாமற் போனாலும் போய்விடும். ஒரு காலத்தில் புத்த மதம் இருந்த தேசத்தில் பிற்பாடு கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மதம் இருந்த தேசத்தில் இஸ்லாமும், இஸ்லாம் இருந்த தேசத்தில் கிறிஸ்துவமுமாக இப்படிப் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பது சரித்திர பூர்வமான உண்மை.

எகிப்து, கிரீஸ், சைனா முதலிய தேசங்களில் ரொம்பவும் பூர்வத்தில் இருந்து உயர்ந்த நாகரிகங்களை உண்டு பண்ணின மதங்கள் இப்போது இல்லவேயில்லை. இத்தனை மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் "சாக மாட்டேன்" என்று இருந்து வருகிறது.




ஒரு பனைமரம் இருந்தது. அதன்மேல் ஓர் ஓணான் கொடி கிடுகிடுடென்று படர்ந்தது. சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு மேல் வளர்ந்து விட்டது. அப்பொழுது அந்த ஓணாண்கொடி, "இந்தச் சில மாதமாக இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே! இது உபயோகம் இல்லாதது" என்று சொல்லி சிரித்தது. பனைமரம் சொல்லிற்று: "நான் பிறந்து பதினாயிரம் ஒணான்கொடியைப் பார்த்திருக்கிறேன். நீ பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை" என்று! இந்த மாதிரிதான் நம் மதமும் பிற மதங்களும் இருக்கின்றன.




நம் மதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேறு விதமான தர்மங்கள் இருந்தாலும் இந்த தர்மாநுஷ்டாங்களில் ஸமமான பலன்தான் உண்டாகிறது.


http://www.kamakoti.org/tamil/2dk76.htm?PHPSESSID=7e1e08dd4cc1b08cf1bd95e4c8ad1feb
 
Help requested

Help requested



சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகரில் அமைந்திருக்கிறது ஸ்ரீ ஜகத்குரு வேத காவ்ய வித்யா பவனம் என்ற பாடசாலை. இந்த பாடசாலையில் பத்து வருட காலம் வேதம் சொல்லித்தரப்படுகிறது.


இந்த சாமவேத பாடசாலை கடந்த 10 வருடங்களாக சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கைநகர் ஸ்ரீ ஜகத்குரு வேதகாவ்ய வித்யாபவனம் என்கிற க்ருஹத்தில் 24 வித்யார்த்திகளுடன் மிகவும் சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.


எனவே வேத அபிமானிகள் இந்த சாஸ்வதமான தர்மத்திற்கு தங்களால் முடிந்த அளவில் த்ரவ்ய சஹாயம் செய்து தங்களுக்கு தெரிந்தவர்களிடமும் தெரிவித்து பலவிதத்தில் உபகாரம் செய்யச் செய்து ஸ்ரீ வேதமாதாவின் அனுக்ரஹத்தைப் பரிபூரணமாக அடையும்படி ப்ரார்த்திக்கின்றோம்.


ஏற்கனவே மாங்காடு பாடசாலைக்கு முகநூல் நண்பர்கள் மூலம் உதவி செய்ததை இந்நேரத்தில் நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும் மாங்காடு பாடசாலைக்கு செய்த உதவியை போலவே இந்த பாடசாலைக்கும் செய்ய ஆசைப்படுகிறேன். உங்களால் இயன்ற அளவு பாடசாலைக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். (பாடசாலைக்கு நேரடியாக காசோலை அனுப்புகிறவர்கள் அனுப்பலாம்)வருகிற ஜூலை ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேகரிக்கும் காசோலைகளை திரு.Rightmantra Sundar, Chandra Sekaran, Ramasamy Sivakumar, மற்றும் நான் உட்பட சிலர் நேரில் சென்று சேர்ப்பிக்கலாம் என்று உள்ளோம்.


காசோலை/டிராஃப்ட் Sri Jaghadhguru Vedha Kavya Vidhya Bhawanam Trust இந்த பெயரில் மட்டும் எடுக்கவும். (Only Account Payee). காசோலை அனுப்ப வேண்டிய முகவரி

Sri.Chandra sekaran
45 a 5th Cross Street
Hindu Colony
nanganallur
chennai 600 061
Land mark near sbi atm near meenakshi medicals
phone: 9176619617


திரு.சந்திரசேகர் தனியார் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கிறார். வேதத்தின் மேல் அவர் வைத்திருக்கும் மரியாதையின் நிமித்தம் காசோலைகளை சேகரித்து அங்கு சேர்க்கும் பணியினை மேற்கொள்கிறார். ராமருக்கு அணில் உதவுவது போல பாடசாலைக்கு எங்களால் ஆன பணியை செய்கிறோம். இதில் எந்த வித லாப நஷ்டம் நாங்கள் பார்க்கவில்லை.
11390310_1433956366926403_1302958311101361868_n.jpg





Source: Halasya Sundaram Iyer

Sage of Kanchi
 
Amazing 30-minutes rare video darshan of Mahaperiyava

Amazing 30-minutes rare video darshan of Mahaperiyava

June 3, 2015

Thanks to http://www.periva.org for this video – they released this part of Jayanthi special. I dont recall, seeing this video in the past. Felt like I traveled with Periyava for 30 mts..Amazing to see few people are being blessed and couples are probably celebrating sasthiabthapoorthi (starting from 14:00 mts). Wonderful to see HH Balaperiyava with Him. Background audio is not old – already released one, however the quality is very good…


I see Sri Ekambaram mama, Sri Simpson Vaitha mama (I guess) and of course Sri Balu mama. Periyavas are visiting a very very small temple in a middle of a field and praying. Can anyone tell which place is this?
As usual, Periyava ends the pravachanam by saying “If one day, Eswaran gives me some power to give you anugraham to you all, I will bless you all”!!


Blessed to watch and hear this wonderful video

[url]https://www.youtube.com/watch?v=tG1nTmsB-bc


https://mahaperiyavaa.wordpress.com...0-minutes-rare-video-darshan-of-mahaperiyava/





[/URL]
 
Veda Dharma Sastra Paripalana


[TD="colspan: 3"]
11th Outstation Visesha Upanyasam @ Vridhachalam on 13th June 2015 Noon 12:00 to 1:30 PM

Venue: Thiru Mudhu Kundram Thirumana Mandapam, Ayyanar Koil Street (Nr Municipal Office) Vridhachalam– 606001 (Cuddalore Dt.)

Upanyasam on "Nithyakarmaanushtaanam”
Upanyasakar "Veda Rathnam Suraathyaayi, Veda Bhashya RathnamBrahmashri Dr.V G Subramanya Ganapadigal" from 12:00 Noon to 1:30 PM.


11350505_1596100927338364_2005908407331030148_n.jpg



Sage of Kanchi
[/TD]
 
Kaanchi Mahaaswamigal Says on Power of Sound Vibrations

Kaanchi Mahaaswamigal Says on Power of Sound Vibrations

Not all mantras that create vibrations are necessarily meaningful. In this context we have the example of the music. The alapana of a raga (the elaboration of a musical mode) is "pure" sound, that is, it has no words, but it is still is capable of producing emotions like joy, sorrow, etc.

During the researches conducted by a university team, it was discovered that the vibrations created by the instrumental music quickened the growth of the plants and resulted in a higher yield. Here is a proof that the sound has the power of creation.

Also to be noted is the fact that the instrumental music played to the plant does not obviously have any verbal contact - this establishes that the sound has its own power.


Sage of Kanchi
 
கோவிந்தபுரம் - காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் த

கோவிந்தபுரம் - காஞ்சி ஸ்ரீமஹாஸ்வாமிகள் தபோவனம்

"ப்ரபஞ்ச சங்கரன்"
================
கலியுகத்து ப்ரத்யக்ஷ பரமேஸ்வரனான நடமாடும் தெய்வம், காஞ்சிப் பொக்கிஷம், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 122-வது ஜெயந்தி மஹோத்ஸவம் 02.06.2015 அடியேனின் வாழ்வில் மட்டுமல்லாது நம் அனைருய வாழ்விலும் மஹாபுண்ணியங்கள் நிறைந்த பொன்னாளாம்!


எத்தனையோ ஸ்வரூபங்களில் பக்தர்களுக்கு தரிசனங்களை தந்து ரக்ஷித்த எம்பெருமான் ஆச்சார்யர், இந்த மஹோத்ஸவ பொழுதிலிருந்து "ப்ரபஞ்ச சங்கர" னாய் தரிசனம் நல்கி வருகின்றார் - கோவிந்தபுரம் காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகள் தபோவனத்தில்!


ஆம்! அகிலாண்டகோடி ப்ரும்மாண்ட நாயகியின் அற்புதப் பேரருளான ஸ்ரீசரணாள், லோகத்தின் சாக்ஷி தேவதையான சூரியபகவானின் கிரணங்களின் வாயிலாக தமது ஸ்வரூபத்தை நமக்கு தரிசனம் செய்ய வைக்கின்றார் என்பதாக, தபோவனத்தின் த்யானமண்டபத்தில் ஒவ்வொரு சாளரங்களிலும் SOS-ல் தயாரிக்கப்பட்ட ஸ்ரீசரணாளின் பிம்பங்கள், காலத்துக்கும் பக்தகோடிகளுக்கு தரிசனங்களைத் தந்து குருவருள் நிறைக்கும்படியான பாக்கியத்தினைத் தந்துள்ளார்கள்.
அற்பப் பதருக்கும் அருள்புரிவார் நம் ஆச்சார்யர் என்பதற்கு அடியேனின் வாழ்வும் ஒரு சான்று என்றால் மிகையாகுமோ!

அடியேனின் கனவினில் தோன்றிய ஒரு பிம்பஸ்வரூபத்திற்கு உயிர்கொடுக்கும் வண்ணமாய் எண்ண அலைகளையும், அதற்கு உறுதுணைபுரிய பிற ஜீவர்களையும் தந்து, இந்த அற்புத ஸ்வரூப தரிசனத்திற்கு ஆவண செய்துள்ளாரே ஸ்ரீமஹாஸ்வாமி. கருணாகரானந்த மூர்த்தியான அவருக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்களைச் செய்து இன்றைய பொழுதினிலே உங்கள் அனைவருக்கும் தரிசனத்திற்காக பகிர்கின்ற பொழுதினிலே இந்த சத்கார்யத்தில் அடியேனுடன் உறுதுணை புரிந்த ஜீவர்களுக்காகவும் உங்கள் அனைவருடனாக ஆத்மார்த்தமாக ப்ரார்த்தித்துக் கொண்டு பகிர்கின்றேன்.

இந்த த்யான மண்டபத்தின் விசேஷமே, ஸ்ரீசரணாள் தமது 67 குருமார்களும் சுற்றிலும் இருக்க, மத்தியமாய் தவக்கோலத்தில் அமர்ந்து இருப்பதே.


ப்ரபஞ்சத்தின் சாக்ஷி தேவதையான சூரியனின் கதிரலைகளில் ஸ்ரீசரணாளின் ஸ்வரூபம் நம் கண்களுக்கு தரிசனம் செய்விக்கப்படுவதாலேயே முதற்கண் இந்த ஸ்வரூபத்திற்கு "ப்ரபஞ்ச சங்கரன்" என அழைக்க மென்மனம் தூண்டியது என்றாலும், இந்த ப்ரபஞ்சத்திலிருக்கின்ற ஜீவர்களெல்லாம் நலமோடு வாழ தமது குருமார்களிடம் தவக்கோலத்தில் ப்ரார்த்திக்கும் சன்னதியில் இந்த பிம்ப தரிசனம் தருவதாலும் "ப்ரபஞ்ச சங்கரன்" என அழைப்பது மிகவும் பொருத்தமானதாகவே சிறியேனின் மனத்தில் தோன்றுகிறது.


அன்பானவர்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் வாழ் நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்குச் சென்று ஸ்ரீசரணாளையும், நமது காமகோடி சங்கரர்கள் அனைவரையும் (68 குருமார்கள்) தரிசித்து குருவருள் பெறும் பாக்கியம் கிட்டவேண்டும் என ஸ்ரீசரணாளை மனதார ப்ரார்த்திக்கின்றேன்.


இந்த சத்கார்யம் முழுக்க முழுக்க ஸ்ரீசரணாளின் க்ருபையால் மட்டுமே நடந்தேறியது என்பதற்குச் சான்று, இதனைச் செய்த இஞ்சினீயரை முதன்முதலில் நேரில் சந்தித்தது இந்த சத்கார்யம் முடிக்கப்படும் தருவாயில் தான் என்பதே! கிட்டத்தட்ட ஒன்னரை மாதகாலம் நாங்கள் தொலைபேசியிலும் , கணினியின் ஈமைல் வழியாகவும், கருத்துக்களையும், படங்களையும் பரிமாறிக்கொண்டோம். மனத்தில் தோன்றிய ஒரு பிம்பத்தை செயல்முறையில் தோற்றுவிக்க இருவரும் அவரவர்கள் இருக்கும்படியான இடங்களிலிருந்தவண்ணமாய் செய்து ஒருங்கே செயல்படவைத்த ஸ்ரீசரணாளின் க்ருபையை என்னென்று சொல்வது?


மந்திரமோ, தந்திரமோ தெரியவேண்டிய அவசியத்தை விடவும் அதிக முக்கியம் மனம் லயித்திருக்க வேண்டியது தான் என்பார்கள் "அம்பா காமாக்ஷி" என ஸ்ரீசரணாளால் அழைக்கப்பட்ட குருஅம்மா ஸ்ரீமதி சாந்தா அம்மையார். அவ்வாறு லயித்துவிட்டோமானால் பெரியவா ப்ரத்யக்ஷமா கூட இருந்து நமது தர்மமான ப்ரார்த்தனைகளை அழகாக நடத்தித் தருவார்கள் என்பார். ஆம்! ஸ்ரீபெரியவா முடிவு பண்ணிட்டா முன்பின் பார்த்திராத இருவர் எண்ணங்களும் கூட ஒருசேர இயங்கி ஒரு புதிய பிரவாகத்தினை உண்டுபண்ணும் என்பதனை உணரவைத்த அற்புதமான பொழுது.
நேரில் ஸ்தலத்திற்குச் சென்று இந்த அற்புதத்தைக் காண்பவர் சர்வ நிச்சயமாக உணர்வர், அப்பாவின் அருட்பிரசாதத்தை.


இப்படி ஒரு விஷயம் உலகத்தில் முதன்முதலில் உருவாக்கப்பட்டு, முதன்முதலில் கலியுக தெய்வமான ஸ்ரீசரணாளின் பொன்னுருவத்தினை லோகத்திற்கு தரிசிக்க வைத்த அனைத்து தேவதைகளுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.


குருவுண்டு பயமில்லை; குறையேதும் இனியில்லை!
பெரியவா கடாக்ஷம்
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.



Sage of Kanchi
 
Kaanchi Mahaaswamigal Says on Saadhana

Kaanchi Mahaaswamigal Says on Saadhana

The effort has to start at the same time what we learn from this is that to be the real Self instead of the false Self it is so difficult. The false self is the mind, a creation of MAyA. The real Self is the Truth that is Brahman.

It may take many life-times; it may be very difficult and long. But the effort has to start right now. The more you postpone it, the life-cycle will get more extended. Suppose we don’t start this ascent of the spiritual ladder now.

What do you think will happen? We will be continuing to commit further sinful activities and these will accumulate more and more dirt and trash in the mind. More life-times have to be spent. That is why I said the effort has to start rightaway, in order to escape from this life-cycle. I said just now escape from this life-cycle; I also said efforts have to be done.

These two together constitute the definition of SAdhanA. Instead of doing certain things in a haphazard fashion as and when the mood or the occasion arises, those great ancestors of ours who have reached the goal have prescribed for us specific methodologies for us.To walk that path is what is called SAdhanA.



Sage of Kanchi
 
Swasthi vachakam kanchi mutt


SWASTHI VACHAKAM KANCHI MUTT


https://www.youtube.com/watch?v=5QgyNZCmaWk


Published on Jun 13, 2015
Namaskarams to all ! this audio is prepared for learning swasthi vachakam of kanchi kamakoti peetam. the swasthi is recited in a slow speed such that you can learn it easily. I would be happy if all bhakthas especially my generation people listen and mug it up, and recite it daily to have a blissful day !! the video also can be viewed daily because, it is presented with all mukhya devathas and hierarchical order of all gurunathas of the holy Peetam.

itham shri shankara bagavathpadha charanaaravindhayo : samarpanam ||
 
கல்வித் திட்டத்தில் கால அளவைகள்

கல்வித் திட்டத்தில் கால அளவைகள்

கல்வித் திட்டத்தில் கால அளவைகள்
தற்காலத்தில் வேத பாடசாலைகளில் பன்னிரண்டு வருஷ கோர்ஸ் வைப்பது வழக்கமாயிருந்தது. பாஷ்யங்களையும் நன்றாகப் படித்து நல்ல அர்த்த ஞானம் பெறுவதற்கு இதற்கப்புறம் எட்டு வருஷம் படிக்கவேண்டியிருக்கிறது.

பூர்வகாலத்தில் மாணவனின் புத்தியைப் பொறுத்ததும், அவன் எந்த வித்யைகளை எவ்வளவு தூரம் அப்யஸிக்க விரும்புகிறான் என்பதைப் பொறுத்தும் வித்யாப்யாஸ காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பன்னிரண்டு வருஷமே பொதுவாக ஏற்பட்டது. அதம பக்ஷம் ஒன்பது வருஷம். பதினெட்டு வருஷ, முப்பத்தாறு வருஷக் கோர்ஸ்களும் இருந்திருக்கின்றன. வாழ்நாள் முழுதும் நன்றாக ஸ்பெஷலைஸ் பண்ணிக்கொண்டே போவதற்கு வஸதியாக, 'இத்தனை வருஷம்' என்று கட்டுப்படுத்தாமல் கோர்ஸ்களும் இருந்திருக்கின்றன.

வாழ்நாள் முழுதும் நன்றாக ஸ்பெஷலைஸ் பண்ணிக்கொண்டே போவதற்கு வஸதியாக, 'இத்தனை வருஷம்' என்று கட்டுப்படுத்தாமல் கோர்ஸ்கள் வைத்திருந்ததாகக்கூட மநுஸ்ம்ருதியிலிருந்து தெரிகிறது. அறிவுக்கே தன்னை அர்பணித்துக் கொண்டு, கல்யாணம் க்ருஹஸ்தாச்ரமம் இல்லாமல் கல்வியிலேயே ஒருவள் ப்ரஹ்மசாரியாக வாழ்நாள் முழுதும் ஈடுபட்டிருக்க தர்ம சாஸ்த்ரம் அநுமதி தருகிறது. சுத்த ப்ரஹ்மசாரியாக இருக்கக்கூடியவன், விசேஷமான புத்தி ப்ரகாசமுள்ளவன் என்பதாக குரு நன்றாகப் பரீக்ஷித்து நிச்சயப்படுத்திக் கொள்ளக்கூடியவனுக்கு மாத்திரமே இப்படி ஆச்ரம விதிகளிலிருந்து விலக்கு தந்திருக்கிறது. அவனைத்தான் நைஷ்டிகன், நைஷ்டிக ப்ரம்மசாரி என்பது.


கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு வருஷத்தையும் இரண்டு டெர்ம்களாகப் பிரித்திருந்தார்கள். முதல் டெர்ம் சுமார் ஐந்து மாஸம் கொண்டது. இரண்டாவது டெர்ம் சுமார் ஏழு மாஸ காலம். முதல் டெர்முக்கு 'உபாகர்மம்' என்றும் இரண்டாவது டெர்முக்கு 'உத்ஸர்ஜனம்' அல்லது 'உத்ஸாகம்' என்றும் பெயர்.


உபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது 'ஆவணியாவட்டம்' - அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் - என்று நினைவுக்கு வரலாம்.


இது ரிக் வேதிகளுக்கு ச்ராவண மாஸத்தில் ச்ரவண நக்ஷத்ரம் வரும் நாள். ச்ராவண மாஸம் என்பது ஆடி அமாவாஸ்யையிலிருந்து ஆவணி அமாவாஸ்யை வரையுள்ள காலம். ச்ராவணி என்பதன் திரிபுதான் ஆவணி.
யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்


ரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள். யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.


மிகவும் பூர்வ காலத்தில் ச்ராவண மாஸப் பூர்ணிமை தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரத்தன்றேதான் வந்து கொண்டிருந்தது, அதனால்தான் அந்த மாஸத்துக்கே அப்படிப் பேர். தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்றாகவே இருந்த காலத்தில் அந்த நாளில்தான் ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இருவரும் உபாகர்ம டெர்மை ஆரம்பித்தார்கள்.

அப்புறம் க்ரஹக் கோளாறில் அம்மாஸப் பௌர்ணமியன்று ச்ரவண நக்ஷத்ரத்துக்கு அடுத்ததான அவிட்டம் வந்தபோதும் யஜுர் வேதிகள் பெனர்ணமித் திதியிலேயே உபாகர்மாவை வைத்துக் கொண்டார்கள். தர்ம சாஸ்த்ரங்களில் குறிப்பாக 'ச்ராவண பூர்ணிமையில் உபாகர்மம் செய்யவேண்டும்' என்றே சொல்லியிருப்பதால் (பூர்ணிமைத்) திதியை யஜுர் வேதிகள் முக்யமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவிட்டத்தில் அந்தப் பூர்ணிமை வந்தாலும் அன்றைக்கே உபாகர்மா செய்தார்கள்.


இதுதான் "ஆவணி அவிட்டம்" - அதாவது "ஆவணியாவட்டம்" என்று நாம் சொல்வது.
ரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் சரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவை "ச்ராவணம்" என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த "ஆவணியாவட்ட"ப் பெயரையே ரிக் வேதிகளும் தங்களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்.


இப்போதும் சில வருஷங்களில் ச்ராவண மாஸப் பௌர்ணமி ச்ரவண நக்ஷத்ரத்திலேயே வருகிறது. அப்போது ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே நாளில் உபாகர்மா வருகிறது.


ஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்ததியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸ்ப்பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.


உபாகர்மம் என்பதே இப்போது பல பேருக்குத் தெரியாத வார்த்தை. (தாங்கள் என்ன வேதம் என்பதுகூட அநேகம் பேருக்குத் தெரியாமலிருக்கலாம்) தெரிந்தவர்களில் பெரும்பாலாரும் அது பழைய பூணூல் சிக்குப்பிடித்து அழுக்காவி விட்டதே என்று புதும் பூணூல் மாற்றிக் கொள்கிற ஒரு நாள் என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றிக்கொள்வதென்பது உபாகர்மாவிலே ஒரு சின்ன அங்கம்தான்.


உபாகர்மா என்பது அந்த ஒரு நாளோடு போகாமல் அடுத்த ஐந்தாறு மாஸங்களான ஒரு டெர்முக்கு ஆரம்ப நாளாக இருப்பதாகும்.


இந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது 'ச்ருதி' என்றே சொல்லப்படுவனவான தேவதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்குமூ. புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் 'தைஷம்' என்றும் பெயர் உண்டு. 'தைஷம்'தான் 'தை' ஆயிற்று.)


அப்போது 'உத்ஸர்ஜனம்' என்கிற கர்மாவைச் செய்து ச்ருதி பாடத்தை முடிப்பார்கள். புஷ்யமாஸம் பூர்ணிமையிலாவது அதற்கு முன்வரும் ரோஹிணியிலாவது உத்ஸர்ஜனகர்மா செய்யவேண்டும். ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறைந்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.


உத்ஸர்ஜனம் என்றாலும் விஸர்ஜனம் என்றுதான் அர்த்தம் - அதாவது "விட்டு விடுவது". வேத அத்யயன - அத்யாபனங்களை ஒரு கட்டத்தில் விட்டுவிடுவதற்காகச் செய்யும் வைதிக கர்மா உத்ஸர்ஜனம். மறுபடி ஏழு மாஸம் கழித்து அடுத்த "ஆவணியாட்ட"த்தில், விட்ட கட்டத்திலிருந்து வேத பாடத்தைத் தொடங்கவேண்டும். 'உபக்ரமணம், என்றால் தொடங்குவது என்று அர்த்தம், அதனால்தான் அன்று செய்கிற கர்மாவுக்கு 'உபாகர்மா' என்று பெயர்.


வேதத்தில் புதுப்பாடங்கள் இல்லாத இந்த ஏழு மாஸந்தான் இரண்டாவது "டெர்ம்". இதில் வேதாங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களான் சி¬க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவார்கள். ஏனைய எல்லா வித்யைகளைக் கற்றுக் கொடுப்பதும் இந்த டெர்மில்தான். உபாகர்மாவுக்கான நாள் வந்தவுடன் இதை நிறுத்திவிட்டு, வேத பாடங்களுக்குப் போவார்கள். அதை உத்ஸர்ஜனம் பண்ணினவுடன் மறுபடி இந்த வேதாங்கங்களிலும் காவ்யம் முதலான இதர வித்யைகளிலும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், இந்த உத்ஸர்ஜனம்தான் வடக்கே "ஸரஸ்வதி பூஜா" என்று சொல்லும் வஸந்த பஞ்சமி.


தற்போது "ஆவணியாவட்டம்" என்று பண்ணுவதில் போளியும் வடையும்தான் முக்யமாயிருக்கின்றன. ஒரு டெர்ம் முழுதும் கற்க வேண்டிய வேத பாடங்களில் ஆரம்ப ஸ¨க்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள்
தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. 'விட்டு விடும்' உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை) , வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸ¨த்ரத்தை மாத்ரம், வாத்யார் சொல்வதைத் திரும்பவும் உளறிக் கொட்டிவிட்டு முடிப்பதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக இந்த ஆவணியாவட்டத்துக்கே 'உத்ஸர்ஜனம்' செய்யாமல் எதனாலோ விட்டு வைத்திருக்கிறார்கள். வடை, போளிக்காக இருக்கலாம் இப்படி நாமே நம்மைப் பரிஹஸித்துக் கொள்ளும்படியான துர்த்திசையில் இருக்கிறோம்.


வித்யாப்யாஸ காலத்தில் ஒரு ப்ரஹ்மசாரியானவன் இப்படி மாறி மாறி வேதம், வேதாங்காதி இதர வித்யைகள் என்று இரண்டு டெர்ம்களில் படித்தப் பன்னிரண்டு வருஷங்களில் பூர்த்தி பண்ணவேண்டும். தன் வேத சாகையையும் தன் வேதத்தையும் மட்டுமின்றி மற்ற வேதங்களையும் படிப்பது, இரண்டு வேதம் தெரிந்த த்விவேதி, மூன்று வேதம் தெரிந்த த்ரிவேதி, நாலுவேதம் தெரிந்த சதுர்வேதி என்றெல்லாம் ஆவது. வேதாந்கம் மட்டுமில்லாமல் மற்ற வித்யைகளையும் படிப்பது, இதர ஜாதியாருக்கான வித்யைகளையும் கற்பது. ஸ்பெஷலைஸ் செய்வது என்றெல்லாம் போகும்போதுதான் பதினெட்டு வருஷம், முப்பத்தாறு வருஷம்கூட குருகுலவாஸம் செய்வார்கள்.

http://www.kamakoti.org/tamil/part4kural76.htm
 
க்ருஹஸ்தர்களுக்கு ஏன்?

க்ருஹஸ்தர்களுக்கு ஏன்?

உபாகர்மாவும் உத்ஸர்ஜனமும் கல்வி ஸம்பந்தமானவை என்றால், இவை வித்யாப்யாஸம் செய்யும் ப்ரஹ்மசாரிக்கு மாத்திரம்தானே இருக்கவேண்டும்? இதை எப்படி க்ருஹஸ்தர்களுக்கும் சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது?

(இக்கேள்விக்குப் பதில் :) ப்ராம்மணனுக்கு சாஸ்த்ரபடியான கடமை அத்யயனம் செய்தபின் (தான் படித்தபின்) அத்யாபனம் செய்வதாகும் (தான் படித்ததைப் பிறத்தியாருக்குச் சொல்லிக் கொடுப்பதாகும்). ஒவ்வொரு ப்ராம்மணனும் இப்படி ஒரு சிஷ்யனுக்காவது சொல்லக் கொடுக்கும்போது, ஒவ்வொரு டெர்மையும் வேதோக்தமான உபக்ரமண, உத்ஸர்ஜன கர்மாக்களோடு செய்து பரிசுத்தி செய்யவேண்டியதாகிறது. க்ருஹஸ்தனான பின் இவன் யாருக்கும் அத்யாபனம் பண்ணவில்லை என்றாலுங்கூட இவனுக்கே படித்தது மறந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமல்லவா? அதற்காக அவற்றை இப்படி இரண்டு டெர்மாகப் பிரித்து ஆதியில் கற்றுக்கொண்டது போலவே மறுபடி மறுபடி நெட்டுரு போட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதற்காகவும் உபாகர்மாவும் உத்ஸர்ஜனமும் ஒரு க்ருஹஸ்தன் பண்ண வேண்டியதுதான்.

தர்ம சாஸ்த்ரங்களில் க்ருஹஸ்த தர்மங்களை விவரிக்கிற பகுதியில்தான் உபாகர்மா (உத்ஸர்ஜனம் ஆகியவை) பற்றிச் சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மசர்ய தர்மங்களைப் பற்றிய பகுதியில் அல்ல.

கல்வி என்பதை ஈச்வர ப்ரீதியான ஒரு தபஸாகவே நினைத்த காலமானதால் ப்ரஹ்மோபதேசத்துடன் ஆரம்பித்து, அநேக வ்ரதங்களை அவ்வப்போது அநுஷ்டித்தே அதைப் பூர்த்தி செய்தார்கள்*. பூர்த்தி செய்வதற்கு ஸமாவர்த்தனம் என்று ஒரு சடங்கு உண்டு. அது ஆனபின்தான் ப்ரஹ்மசாரி கல்யாணம் செய்துகொண்டு க்ருஹஸ்தாச்ரமம் ஏற்பது. “உபாகர்மாவை ஸமாவர்த்தனமானவன் இன்ன முறையில் செய்யணும்; ஆகாதவன் இன்ன முறையில் செய்யணும்” என்று சில ஸ்ம்ருதிகளில் பிரித்துச் சொல்வதாலேயே இது ஸமாவர்த்தனம் செய்துவிட்ட க்ருஹஸ்தனுக்கும் உரியது என்று தெரிகிறது. கற்றுக் கொண்டது மறந்து போகாமலிருப்பதறகாக – இதை “தாரணம்” என்று சொல்லியிருக்கிறது – க்ருஹஸ்தனும் ஒரு ஸ்டூடன்டாகவே அத்யயனாதிகளைப் பண்ணிக் கொண்டேயிருக்கவேண்டும் என்று (ஸ்ம்ருதிகளை இயற்றியுள்ள) ரிஷிகளில் சிலர் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மாணவனை அடிக்கலாமா?

ரொம்பவும் நெரிப்பு இல்லாமலிருப்பதற்கே அவ்வப்போது அநத்யயனம் என்று லீவ் கொடுத்ததைச் சொல்லும்போது, வித்யார்த்தியிடம் பொதுவாக ஆசார்யர் எப்படி நடக்கவேண்டுமென்பது பற்றிய தர்மசாஸ்த்ரக் கருத்துகளையும் தெரிவிக்கத் தோன்றுகிறது.

ப்ரியம் என்று சொல்லிக்கொண்டு ரொம்பவும் செல்லம் கொடுத்துக் குட்டிச் சுவராக்கிவிடக்கூடாது என்பதுதான் பொதுக் கொள்கை. அதற்காகத்தான் வீட்டிலேயே படிப்பதென்றில்லாமல் குருகுலத்தில் சேர்த்ததே. சிஷ்யன் ஸ்வயேச்சைப்படிப் போகவிடாமல் அவனை ஆசார்யரின் வார்த்தைப்படியே நடக்குமாறுதான் சாஸ்த்ரம் கட்டுப்படுத்துகிறது. இதனால் ஆசார்யர் எப்போதும் உர்ரென்று மிரட்டி உருட்டிக் கொண்டிருக்கவேண்டுமென்று ஒரு இடத்தில்கூடச் சொல்லவில்லை. ப்ரியத்தோடு நடத்தும் போதே பையன் ஸ்வாதீனமாகப் போகாதபடியும் அவனை ஒழுங்குபடுத்தவேண்டுமென்பதே சாஸ்த்ரக் கருத்து. உபநிஷத்துக்களில் ஆரம்பித்துப் புராண – இதிஹாஸங்களைப் பார்த்தால் குரு – சிஷ்யாள் பரஸ்பரம் ஆழ்ந்த ப்ரியத்திலேயே கட்டுப்பட்டிருந்ததற்கு நிறைய த்ருஷ்டாந்தம் கிடைக்கும்.

மதுரமாகப் பேசியும், ப்ரியமாக நடத்தியுமே சிஷ்யனை முன்னேற்றப் பார்ப்பதுதான் வழி என்று சொல்லியிருக்கிறது. “ஸெளம்யா!” என்று சிஷ்யனைக் குளிரக் குளிரக் கூப்பிடுவதிலிருந்து இந்த மாதுர்யம் தெரிகிறது.

சிஷ்யனை அடிக்காமலே சிக்ஷை சொல்லித்தர வேண்டும் என்று கௌதம ஸ்ம்ருதியில் இருக்கிறது. சிக்ஷை தருவது என்றாலே தண்டனை தருவது என்று பிற்பட்டு அர்த்தம் ஏற்பட்டிருந்தாலும், ஆதியில் போட்ட ‘ரூல்’ இப்படித்தான் இருக்கிறது.

ஆனாலும் தவிர்க்கமுடியாமல் சில ஸமயங்களில் அடிக்கவும் வேண்டியிருக்கலாம். அதனால்தான் “அடியாத மாடு படியாது”, “அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி உதவுகிறதில்லை” என்றெல்லாம் வசனம் இருக்கிறது. “Spare the rod and spoil the child” (‘பிரப்பம்பழம்’ போடாவிட்டால் பிள்ளை குட்டிச் சுவர்தான்) என்று வெள்ளைக்காரர்களும் சொல்கிறார்கள்.

இம்மாதிரி, அடிக்கும்படியாக நிர்பந்தம் ஏற்பட்டால் கூட, சின்னதாக ஒரு கயிறு அல்லது மூங்கில் கம்பால் தட்டலாமேயொழிய, சவுக்கு, புளியங் கொம்புகளால் வீறுவது என்பது கூடாது என்று மநுஸ்ம்ருதி சொல்கிறது. முதுகில் மட்டும்தான் அடிக்கலாம், வேறே எங்கேயும் அடிக்கப்படாது, தலையில் ஒருகாலும் அடிக்கப்படாது என்று கட்டுப்பாடு செய்திருக்கிறது. தலையில் அடித்தால் பொறி கலங்கிவிடக் கூடுமல்லவா?

இப்படி ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் சாஸ்த்ரங்கள் கூர்மையாக கவனித்துப் பயனுள்ள உபதேசங்களைத் தந்திருக்கின்றன.

மொத்தத்தில் மாணவன் அந்தப் பருவத்தில் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்கவேண்டும். இதில் அவனே இந்த்ரியத்தைக் கட்டிக்கொள்வது முக்யம்.



http://www.kamakoti.org/tamil/part4kural77.htm
 
Gho Matha Samrakshanam – Panchagavyam

Gho Matha Samrakshanam – Panchagavyam

June 14, 2015

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Some amazing facts about Pancha Gavyam that acts as a strong cleanser both internally and externally. Let’s realize the importance of this incredible product from Gho Matha and start using this more often as we can and attain more Athma Kshemam. This in-turn promotes Gho based organic farming as well.


லௌகிகமாக வெளி அசுத்தியைப் போக்குவதை விட முக்யம், வைதிகமாக அது உள் அசுத்தியையும் போக்குவதே. மற்ற ஜந்துக்கள் விஷயத்தில் மூக்கைப் பிடித்துக் கொண்டு அலம்பித் தள்ள வேண்டியதாக இருக்கிற மலத்தையே அது கோவிடமிருந்து கோமயமாக வருகிறபோது நம்முடைய உள்ளழுக்கைப் போக்கிக் கொள்வதற்காக நாம் உட்கொள்ளும் பஞ்ச கவ்யத்தில் ஒரு வஸ்துவாகச் சேர்க்கும்படி சாஸ்திரத்தில் விதித்திருக்கிறது.|


‘பஞ்சகவ்யம்’ என்றால் என்ன? ‘கவ்யம்’ (gavyam) என்றால் கோ ஸம்பந்தப்பட்டது. அப்படிப்பட்ட ஐந்து சேர்ந்ததே பஞ்சகவ்யம். அதில் மூன்று – பாலும், பாலிலிருந்து பெறுகிற தயிரும், நெய்யுமாகும். பாக்கி இரண்டு? இங்கேதான் எதிரிடையானவையும் வருகின்றன. கோமயமும், கோமூத்திரமும்தான் அந்தப் பாக்கி இரண்டு. பால், தயிர், நெய், கோமூத்திரம், கோமயம் என்ற ஐந்தையும் கலந்து செய்வது பஞ்ச கவ்யம். க்ஷீரம், ததி, ததா சாஜ்யம், மூத்ரம், கோமயம் ஏவ என்று சொல்லியிருக்கிறது. ஒருவருக்கு ஏற்பட்ட விழுப்பு, தீட்டுகளைப் போக்குகிற புண்யாஹவாசன கர்மாவில் ‘பஞ்சகவ்ய ப்ராசனம்’ என்பதாக இந்த ஐந்தையும் சேர்த்த ஒன்றைக் கொடுப்பார்கள். அதை உட்கொள்ள வேண்டும்.


வெளியிலே விழுப்பு போய் மடியாவது என்ற சுத்திகரணம் பஞ்சகவ்யத்தினால் நடக்கிறது என்றாலும் அதுவே அதன் முக்ய ப்ரயோஜனம் இல்லை. அதனுடைய முக்ய ப்ரயோஜனம் இதைவிடப் பெரிய சுத்திகரணமாக, நமக்கு உள்ளழுக்கை உண்டாக்கிய பூர்வ கர்ம பாபத்தையே போக்குவதுதான்.


ஸாதாரண விஷயமில்லை. நம்முடைய கஷ்டங்கள், ஜன்மாக்கள் எல்லாவற்றுக்கும் காரணம் பாபகர்மாக்கள் தான். அவையே நசிப்பது என்றால் எவ்வளவு பெரிய விஷயம்? அதற்குப் பசு தருகிற ஐந்து வஸ்துக்கள் உதவுகின்றன என்றால் பசுவைப் போன்ற பரம உபகாரி நமக்கு எவருண்டு?

சரீர சுத்தியோடேயே, சித்தத்துக்குப் பரம அசுத்தியை உண்டாக்கும். பாபமாகிற அசுத்தத்தையும் நிவர்த்தித்துக் கொள்ளப் பஞ்ச கவ்யம் உதவுகிறது. சித்தத்துக்கு ஏற்பட்ட பாப அசுத்தியே சரீரத்தில் தோலிலிருந்து ஆரம்பித்து எலும்புக் குருத்து வரையில் பலவித வியாதிகளாகப் பரவுகிறது. இந்த வெளி வியாதி உள் வியாதி இரண்டையும் சுட்டெரிக்கவே பஞ்சகவ்ய ப்ராசனம். ‘ஒரு கட்டையை அக்னி பஸ்மம் பண்ணுகிறாற்போல நான் உட்கொள்ளும் இந்தப் பஞ்சகவ்யம் சர்மத்திலிருந்து (தோலிலிருந்து) அஸ்தி (எலும்பு) வரை என் தேஹத்தில் ஊடுருவியுள்ள பாபத்தை பஸ்மம் பண்ணட்டும்’ என்றே பஞ்சகவ்ய ப்ராசனத்தின் (உட்கொள்தலின்) போது சொல்லும்படி சாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது:

யத்
த்வக்அஸ்தி கதம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே |
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹத்வாக்நிவேந்தனம் ||

தஹது அக்நி: இவ இந்தனம்’ என்பதே ஸந்தியில் ‘தஹத்வாக்நிரிவேந்தனம்’ என்று ஆகியிருக்கிறது. ‘இந்தனம்’ என்றால் ‘விறகு’. விறகை நெருப்பு எரிக்கிற மாதிரிப் பாபத்தைப் பஞ்ச கவ்யம் எரித்துவிடட்டும் என்று அர்த்தம்.

கோ
விலிருந்து கிடைக்கும் பாலிலிருந்து சாணி வரையில் எல்லாமும் நம் வியாதிகளைப் போக்கிப் புஷ்டியும் தருகின்றன; பாபத்தைப் போக்கி ஆத்மாவைக் கடைத்தேற்றவும் செய்கின்றன.

பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய இந்த எல்லாவற்றுக்கும் இருக்கிற நாலு சிறப்புக்கள்; ஒன்று, அவை வாய்க்கு ருசியாக இருக்கின்றன; இரண்டு, உடம்புக்குப் புஷ்டி அளிக்கின்றன; மூன்று, ஆஹாரமாக இருப்பதோடு மருந்தாகவும் இருக்கின்றன; நாலு, வைதிக ப்ரயோஜனம் உடையவையாக இருந்துகொண்டு பாபத்தைப் போக்கி ஆத்மாவை ரக்ஷித்துக் கொடுக்கின்றன.

Share this:

https://mahaperiyavaa.wordpress.com/2015/06/14/gho-matha-samrakshanam-panchagavyam/
 
மாணவன் லட்சணம்

மாணவன் லட்சணம்


Source: Sage of Kanchi
Krish Ram
http://www.kamakoti.org/tamil/part4kural80.htm


ராம் ராம், இந்த நாள்இனிமையாக அமைய நம் ஜகத்குரு ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 54

மாணவன் லட்சணம்

மாணவனுக்கு ப்ரஹ்மசர்ய நியமத்தை மநு விசேஷித்துச் சொல்லியிருக்கிறார். “இந்த்ரிய ஸம்யமம்” (அதாவது புலனடக்கம்) என்பது அவர் சொல்லும் இன்னொரு பேர். இந்த நியமம் எதற்காகவென்று காரணம் சொல்லும்போது, கல்வியின் நோக்கம் அறிவைப் பெறுவதான “வேத க்ரஹணம்” மாத்திரமில்லை, ஆத்மாபிவ்ருத்தியாகிய “வ்ரதா தேசனமே” படிப்பின் லக்ஷ்யம் என்கிறார். இதனால்தான் வித்யாப்யாஸத்தை வ்ரதமாயும் தபஸாயும் சொல்லியிருப்பது.

மாணவனின் அன்றாடக் கடமைகளையும் மநு தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஸந்த்யா வந்தனம், அக்னிஹோத்ரம் (அதாவது ப்ரஹ்மசாரிக்கான ஸமிதாதானம்) , தனக்கான பாடத்தை முறைப்படி கற்று மனப்பாடம் செய்வதான “ஸ்வாத்யாயம்”, பிக்ஷை எடுப்பது (பிக்ஷாசர்யம்) , ஆசார்யனுக்காக ஜலம் கொண்டுவருவது, விறகு வெட்டிக்கொண்டு வருவது, சுத்திக்கான ம்ருத்திகை (குழைமண்) கொண்டுவருவது, அவருடைய பூஜைக்குப் புஷ்பம் கொண்டுவருவது முதலான எடுபிடிப் பணிகள், பாடத்தை நன்றாக விளக்கி “ப்ரவசனம்” பண்ணும்படி ஆசார்யரை ப்ரார்த்தித்துக் கொண்டு செவ்வனே கேட்டறிதல் – என்றிப்படி சிஷ்ய தர்மத்தைச் சொல்லியிருக்கிறது. “ஸ்வாத்யாயம், ப்ரவசனம் ஆகிய இரண்டையும் கொஞ்சங்கூட விட்டுவிடப் படாது” என்று தைத்திரீய (உபநிஷ)த்திலும் சொல்லியிருக்கிறது.

ஆரோக்ய வளர்ச்சிக்கும் உதவி

இதிலே அறிவு வளர்ச்சி, குண வளர்ச்சி மாத்திரமில்லாமல் தேஹாரோக்ய அபிவ்ருத்தியும் கலந்திருப்பதை கவனிக்கவேண்டும். காலங்கார்தாலே எழுந்து குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்து, ப்ராணாயாமம், ஸூர்ய நமஸ்காரம் பண்ணுவதில் புத்தி சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் வ்ருத்தியாவதோடு தேஹ ஆரோக்யமும் நல்ல வளர்ச்சி பெறும். குருவுக்காக விறகு வெட்டிக்கொண்டு வருவது போன்ற வேலைகளில் இதேபோல, ஒரு பக்கம் மனஸில் எளிமை உண்டாவதோடு மறுபக்கம் சரீரத்திலும் வலிவு ஏற்படும்.

ஒரு மனுஷ்ய ஜீவனென்றால் அவனுக்கு தேஹம், புத்தி, ஆத்மா என்று மூன்று இருக்கிறது. மூன்றையும் நல்ல முறையில் வளர்ப்பதாகப் பழங்காலக் கல்வி முறை இருந்திருக்கிறது.

மிகவும் பூர்வகாலத்தில் நம்மிடம் இருந்த ‘எஜுகேஷன் ஸிஸ்டம்’ பற்றி இவ்வளவும் சொன்னேன். இன்னம் அநேக விஷயங்களும் இருக்கின்றன. எனக்கே தெரியாமல் எவ்வளவோ இருக்கும்.

தனிமனிதரையே மையமாக

இதற்கப்புறம்தான் பௌத்த – ஜைனர்கள் ஆதரவில், இதற்கு முன்னிருந்ததை விட அதிகமாகவும் பெரிய அளவிலும் வித்யாசாலைகள் ஏற்பட ஆரம்பித்தது. அதற்கு முந்தியும், சாந்தோக்ய உபநிஷத்படியே, பல வித்யைகள் இருந்து, அதனால் பெரிய வித்யாசாலைகளும் ஏற்பட்டிருந்தன என்றாலும், ஒரு ‘ஸென்ட்ரல் கவர்ன்மென்ட்’ கீழேயே ஒன்றொன்றும் நிறைய ஸ்வதந்த்ரமுள்ளதாக அநேக ‘ஸ்டேட் கவர்ன்மென்ட்கள்’ உள்ள “ஃபெடரல் ஸெட்-அப்” மாதிரி, தனித்தனி வாத்யார்கள் ஒவ்வொரு க்ரூப் மாணவர்களுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, அவர்கள் வாழ்க்கையைத் தங்கள் வாழ்க்கையோடு கோத்துக்கொண்டு, அவர்களுக்கு ‘இன்டிவிஜுவல் அட்டென்ஷன்’ கொடுத்து, அவர்களுடைய அறிவோடு குணத்தையும் வ்ருத்தி செய்வதாகவே நம்முடைய வித்யாப்யாஸ அமைப்பு இருந்தது. அந்த வாத்யார்கள் எல்லோரும், மாணாக்கார்கள் எல்லோரும் குலபதிக்குக் கட்டுப் பட்டிருந்தார்கள். அந்தக் குலபதியின் மிகவும் உயர்ந்த சீலங்கள் தன்னால் இந்த எல்லோரையும் கட்டுப்படுத்தி நன்னெறிப்படுத்தியது. அவருடைய ஸாந்நித்ய மாத்ரத்தின் சக்தியினால் மட்டுமின்றி, அவர் நடைமுறையிலும் ‘ஸுபர்வைஸ்’ செய்து கண்காணித்துக் கொண்டிருந்ததால் கல்வி என்பது அறிவு, ஸம்பாத்யம் என்பவற்றோடு நிற்காமல் ஒரு ஜீவனின் ஆத்மா பூர்ணத்வம் பெறுவதற்கு வழி போட்டுக் கொடுப்பதாகவே அமைந்தது.

குலபதி என்ற தனி ஆஸாமி உச்சியிலே இருப்பது; அப்புறம் அவர் கீழே ஒவ்வொரு வாத்யாரும் ஒவ்வொரு batch-க்கு தனி ஆஸாமியாக நின்று பொறுப்பேற்றுப் பாடம் சொல்லிக் கொடுப்பதென்பது பெரிய குருகுலங்களில் (நடந்த ஸமாசாரம்). பொதுவாகத் தனித்தனி ஆசார்யர்களே நடத்திய சிறிய குருகுலங்கள்தான் அதிக அளவில் இருந்தன. ‘இன்ஸ்டிட்யூஷன்’ போதனை குறைவாகவும், ‘இன்டிவிஜுவல்’ போதிப்பது அதிகமாகவும் இருந்தது.

ஒவ்வொரு இன்டிவிஜுவலாகப் பலபேரிடம் போய்ப் பல குருகுலங்களில் படித்து வித்யையை அபிவிருத்தி செய்து கொள்வதென்பது ஆதியிலிருந்து ஸஹஜமாக இருந்திருக்கிறது. ஸமீப காலத்திருங்கூட மீமாம்ஸை ஒருவரிடம், ந்யாயம் இன்னொருவரிடம், வேதாந்தம் இன்னொருவரிடம் என்று பலபேரிடம் குருகுல வாஸம் செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள், இன்றைக்கும்கூட இப்படிச் சிலராவது இல்லாமலில்லை. ஒரே சாஸ்த்ரத்திலேயே ஒரு கட்டம் வரை ஒரு குருவிடம், அப்புறம் இன்னொருவரிடம் என்று சிக்ஷை பெறுவதுமுண்டு.

இதிலே கவனிக்க வேண்டிய அம்சம், ஒரே குருகுலத்தில் இத்தனை ஆசார்யர்களும் சேர்ந்து இருந்து கற்றுக்கொடுக்கவில்லை, ஒவ்வொருவதும் தனியாகத் தன்னுடைய குருகுலத்திலேயே சொல்லிக்கொடுக்கிறார் என்பதுதான். அதாவது இன்ஸ்டிட்யூஷன் என்ற ஒன்று உயிருள்ள பல குருமார்களைத் தன் அங்கமாக ஆக்கிக்கொண்டு போதிக்கும் முறையல்ல இது. தனி குருமார்கள் ஒவ்வொருவரும் இன்டிவிஜுவலாகத் தங்களுடைய வித்யா பலத்தையும், அநுஷ்டான சக்தியையும், குணநலத்தையும் ஆதாரமாகக் கொண்டு கற்றுக்கொடுக்கும் போதிப்பு முறையே இது.









 
"Mahaperiyyava Padhuka Darshan during Satara Padhayatra 1978-84 !"

"Mahaperiyyava Padhuka Darshan during Satara Padhayatra 1978-84 !"

This is the padhuka Mahaperiyava used while doing the famous Satara Padhayatra between 1978 and 84. He was 84 when He started that padhayatra and, we walked an average of 16-20 kms per day. Thanks to Mahesh Krishnamoorthy Maama for sharing the divine pic.



10606529_10207003156896349_2120622829998378243_n.jpg






Periyava Saranam !!! Gurunatha Padhuka Saranam !!!





Sage of Kanchi

Sriram Sheshagiri
 
Teachings of Mahaperiyava ~ Man and Beast

Teachings of Mahaperiyava ~ Man and Beast

Animals grow transversely. That is why they are called "tiryak" in Sanskrit. Man who grows upright ought to have, unlike beasts, a high ideal before him. He will then obtain more happiness than all other creatures. But what do we see in reality? Man experiences greater sorrow than all other creatures. Animals do not know so much desire, so much sorrow and so much humiliation, as do humans. More important, they are innocent of sin. It is we humans who keep sinning and suffering as a consequence. In one sense it seems to me that Isvara has not endowed us with the same advantages that he has endowed animals with. We are not fitted with weapons of defence.

If a cow feels threatened it has horns to defend itself. The tiger has its claws. We have neither horns nor claws. Sheep have hair to protect them from the cold of winter, so too other animals. But man is not similarly equipped. So he cannot repulse an attack; nor can he run fast like the horse, which has no horns but is fleet-footed. Against all these handicaps, man has the advantage of being more intelligent than all other creatures. In order to protect himself from the cold of winter, man removes the hair (fur) of animals and weaves it into rugs. When he wants to travel fast he yokes a horse to his cart.

God has furnished man with this kind of skill; though he has neither claws nor horns to defend himself, a human being can forge weapons on his own. With the strength of his intelligence he remains the master of all other creatures and also rules over the entire world of inert matter.

All species of animals have their own habitats. Some types of bear that are native to the cold climes do not thrive in our country. The elephant is a denizen of the forests of India and some other countries of South-East Asia and Africa, but it does not flourish in a cold climate. But man inhabits the entire earth. He uses his brains to make any part of this planet fit for him to live. But, even with his superior intelligence, man suffers. All hardships stem from the fact of birth. How can one save oneself from being born again? But, then, what is the cause of our birth?

The wrongs committed by us are the cause of our birth and we have taken this body of flesh and blood to suffer punishment for the same. Suppose a certain number of whiplashes are to be administered according to the law. If the body perishes after ten lashes, we take another birth to suffer the remaining strokes. The sins we commit in satisfying our desires are the cause of our being born again and again.

If there is no "doing", there will be no birth also. Anger is responsible for much of the evil we do and desire is at the root of it. It is of the utmost importance that we banish desire from our hearts. But it is not possible to remain without any action after having cultivated so many attachments. If the attachments were done away with we would cease to sin.

What is the cause of desire? Desire arises from the belief that there is something other than ourselves and our being attached to it. In truth it is the one Shivam that manifests itself as everything. The cow sees its reflection in the mirror and charges it imagining it to be another cow. If a man sees his own image thus, does he think that there is another person in the mirror? He is not perturbed by his image because he knows that it is himself.

Similarly, all that we see is one and the same thing. Desire springs from our belief in the existence of a second entity, and it causes anger, which, in turn, plunges us in sin. A new birth becomes inevitable now. If we are enlightened enough to perceive that all objects are one, there will be no ground for desire. There must be an object other than ourselves, a second entity, to be desired. No desire means no anger and no sin. In this state there will be neither any "doing" nor any birth. And, finally, there will be no sorrow.

How do we obtain such enlightenment or jnana? Our body is sustained by our mother's milk. It is Ambal who nourishes us with the milk of jnana. She is indeed the personification of jnana. We will be rewarded with the light of wisdom if we firmly hold her lotus feet and dissolve ourselves in her. One who does so becomes God. The first step in this process of enlightenment is to make a man truly a man, by ensuring that he does not live on an animal level. The second step is to raise him to the heights of divinity.

All religions have this goal. They may represent different systems of thought and philosophy. But their concern ought to be that man is not condemned as he is today to a life of desire and anger. All religions speak in one voice that man must be rendered good and that he must be invested with the qualities of love, humility, serenity and the spirit of sacrifice.


Source: Sage of Kanchi

Jambunathan iyer
 
Kal Vaitta Vaaram – scholarly greatness of Vaidheekas’

Kal Vaitta Vaaram – scholarly greatness of Vaidheekas’

As we all know, Kal Vaiththa Vaaram is a very special way of testing ultimate Vedhic scholarship – it is a form of an “ongoing continuing education and testing” to scholars who “graduated” even a long time ago. For instance, in the US, in several professions regular recertification is required as one’s continued mastery of one’s professional training, e.g., medical doctors. Since time immemorial, our Vedhic forefathers have developed several such systems to nurture and develop knowledge.

It must be widely appreciated that our Sri Matham, under the current Gurus HH Sri Pudhu Periyava and HH Sri Bala Periyava, has pursued nurturing and supporting Vedhic Samrakshanam with even greater vigor and dedication since Sri Maha Periyava’s days; if any, these events which used to be truly rare during Sri Maha Periyava’s sthoola sareeram days are become “much less rare” because the frequency of such events has increased greatly under the guidance of HH Sri Pudhu Periyava and Sri Bala Periyava. Because most of these truly esoteric scholarly events are not well publicized, it is important that the full and continued extent of commitment of our Sri Matham for Vedha Samrakshanam is worth reiterating.


For instance, in the picture below, under the watchful guidance and encouragement of HH Sri Bala Periyava, some of the foremost authorities in the entire world on Krishna Yajur Vedha are conducting this test and the participants themselves must be true scholars of the highest level of vedhic accomplishments, mostly salakshana Ghanapatigals, etc.

The five great Vedhic scholars who serve as “examiners” on the right hand side are:




Bramhasri Hyderabad Venkatrama Ghanaptigal, Bramhasri Vajpaye Sundarama Deekshithar, Bramhasri Mullaivasal (in front of the mike – His Vedha Sapthaham, posted on this site, is a must to listen), Bramhasri VG Sundarmurthy Ghanaptigal, and Bramhasri Sathalapathi Ghanapatigal


As HH Sri Bala Periyava very nicely elaborated in His speech, the examiners have to have perfect “poker face,” not letting out a hint of how well a participant is progressing. It must be remembered that most participants are capable of chanting the Krishna Yajur vedham in Ghanam form “in their sleep” and, yet, when they are required to chant precisely 250 padams in front of these “masters”, that is lots of fun to watch!


The loukeekam form of education that we all have is so different; hardly, any of us would remember the details after a year out of school, whereas these scholars remember every notation, every intonation, every maathirai, every aksharam, etc., even after 50 years! That is the scholarly greatness of these Vaidheekas! Now we understand why Vedhas say all the Thirimurthys, Bramha, Vishnu and Shivan reside in these most respected Vaidheekas.


https://mahaperiyavaa.wordpress.com/2015/06/15/kal-vaitta-vaaram/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top