P.J.
0
சிந்தனை சிதறாத சிவபக்தி!-அப்பய்ய தீட்சித
சிந்தனை சிதறாத சிவபக்தி!-அப்பய்ய தீட்சிதர்
(சித்த சுவாதீனமற்றவர்கள் குணமாவதற்கு அவர்களது இல்லத்தில் இந்த ஆத்மார்ப்பண ஸ்துதி ஸ்லோகங்களைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்யுமாறு காஞ்சி மகா சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.)
.
ஆதிசங்கர பகவத் பாதர் வகுத்து அருளிய ஷண்மதங்களில் ஒன்றான சைவநெறி தமிழகத்தில் வேறூன்றி நிலைபெறச் செய்யக் காரணமாகத் திகழ்ந்த அருளாளர்களில் ஒருவர் மகான் அப்பய்ய தீட்சிதர்.
சிவபெருமான் மீது கொண்ட அளவற்ற சிவபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர். ஆனாலும் சைவ வைணவ பேதமின்றி திகழ்ந்தார். தலைசிறந்த அத்வைதி.
16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேலூர் மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தில் ஒரு புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சத்தில் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தன்று அவதரித்தவர். தமது தந்தையையே குருவாகக்கொண்டு வேதம் மற்றும் சாஸ்திரங்களை கற்றறிந்தார். ஈஸ்வரன், பெருமாள், துர்க்கை, போன்ற தெய்வங்களின் மீது ஸ்தோத்திரப் பாடல்கள் புனைந்ததோடு மட்டுமில்லாமல், சாஸ்திரங்கள், வேதாந்தங்கள், சைவ வைணவ மத்வ சித்தாந்தங்களைப் பற்றி நூல்களும் எழுதியுள்ளார்.
இவருடைய படைப்புகளில் சிறந்தது "சிவார்க்க மணி தீபிகை' என்னும் சைவ சமய சாஸ்திர நூல்களுக்கே ஆதாரமான நூலாகும்.
இவருடைய பாண்டித்யத்தைக் கேள்விப்பட்டும், நூல்களைப் படித்தும் அப்போது வேலூரை ஆண்ட சின்ன பொம்ம நாயக்கன் என்ற சிற்றரசன் இவரை அரச சபைக்கு வரவழைத்து கெüரவித்து தங்கத்தினால் செய்த புஷ்பங்களினால் கனகாபிஷேகம் செய்தான்.
ஆனால் தீட்சிதர், அந்த தங்கத்தை சொந்த நலனுக்காக உபயோகப்படுத்தவில்லை. அந்த வெகுமதியில் வந்த பணத்தைக் கொண்டு அடையபலத்தில் ஸ்ரீ காலகண்டேஸ்வரர் கோயிலைக் கட்டியும், தனது சிவார்க்கமணி தீபிகை நூலை அனைவரும் படிப்பதற்கு ஏற்பாடும் செய்தார். தஞ்சை நாயக்க மன்னர் ஆதரவையும் பெற்றவர் தீட்சிதர்.
தீட்சிதருக்கு ஒரு சமயம் தனது சிவபக்தி நிலைக்குமா எந்த நிலையிலும் தன்னால் மாறாமல் இருக்க முடியுமா என்ற சந்தேகமும் அதனால் மனக்கவலையும் கொண்டார். இதைச் சோதிப்பதற்காக தன்னையே ஒரு பரீட்சைக்கு உட்படுத்திக் கொண்டார். தன்னுடைய மாணாக்கர்களாகிய சீடர்களை அழைத்து ஊமத்தங்காயை அறைத்து அந்த சாற்றினை தனக்கு பருக கொடுக்குமாறும் அச்சமயம், தான் பேசுவதைக் குறித்துக் கொள்ளுமாறும்
கேட்டுக் கொண்டார். சீடர்களும் அவ்வாறே செய்ய அந்த சாற்றினை பருகின சற்று நேரத்திற்கெல்லாம் தீட்சிதருக்கு சித்தஸ்வாதீனமற்ற நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் வாயிலிருந்து பிரளயமாக வார்த்தைகள் உதிர்ந்தன. அவற்றைக் குறித்துக்கொண்டனர் சீடர்கள். குறிப்பிட்ட நேரம் கடந்தபிறகு ஏற்கெனவே சொல்லியபடி மாற்றுமருந்தினை சீடர்கள் கொடுக்க தன்னிலை அடைந்தார் தீட்சிதர்.
சீடர்கள் எழுதிவைத்திருந்ததைப் படித்து தனது சிவபக்தி உறுதியானது, சிந்தனை எண்ணம் சிதறவில்லையென்று அறிந்து ஆனந்தக் கூத்தாடினார் தீட்சிதர். ஆம் உன்மத்த நிலையிலும் அவர் பாடியது உமா மகேஸ்வரனைப் பற்றிய ஐம்பது ஸ்லோகங்கலாகும். அந்த ஸ்லோகங்களின் தொகுதியே "ஆத்மார்ப்பணஸ்துதி' என்ற தனி நூலாக விளங்குகின்றது. இதில் உள்ள ஒவ்வொரு ஸ்லோகமும் உள்ளத்தை உருக்கும் சிவபக்திப் பிரவாகமாகும். சித்த சுவாதீனமற்றவர்கள் குணமாவதற்கு அவர்களது இல்லத்தில் இந்த ஆத்மார்ப்பண ஸ்துதி ஸ்லோகங்களைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்யுமாறு காஞ்சி மகா சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.
திருநீரு (விபூதி) தரிப்பதும், உருத்திராட்சம் அணிவதும் அதன் மகிமையைப் பற்றியும் உலகோருக்கு உணர்த்தியது தீட்சிதர் என்றால் அது மிகையாகாது.
சிவயோகியரான அப்பய்ய தீட்சிதர் தனது இறுதி நாட்களில் தில்லைச் சிதம்பரத்தில் தங்கி, ஒரு பிரதோஷ நன்னாளில் நடராஜப் பெருமானின் திருவடிகளில் ஐக்கியமானார்.
இவரின் ஜெயந்தி விழா வரும் செப்டம்பர்- 29 ஆம் தேதி அடையபலத்தில் உள்ள காலகண்டேஸ்வரர் சிவன் கோயிலில் தீட்சிதரின் கற் திருமேனி பிரதிஷ்டையாகி உள்ள சந்நிதியிலும், சென்னை திருவான்மியூரில் அவரது நூல்களைப் பிரசுரித்தும், அவரது புகழைப் பரப்புவதோடு பல ஆன்மிக சமூக சேவைகள் செய்துவரும் அப்பய்ய தீட்சிதர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தின் சார்பிலும் விசேஷ ஹோமங்கள், பாராயணங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், வேத விற்பன்னர்களை கெüரவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தகவல்களுக்கு: 97910 19450 / 98653 49166.
- எஸ். வெங்கட்ராமன்.
Source: Sage of Kanchi
Varagooran Narayanan