• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்&#296

‘ரசமான விவாதம்’ : பெரியவாளின் சமையல் விளக்கம்.

"குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”


அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும்
சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.


மஹான் பெரிதாகச் சிரித்தார்.


“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே
எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?


“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப்
போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக
இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும்
குழம்பு ரசம் வைக்கிறோம்.

நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு,
ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா?
இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன்
மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான
குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது.


இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது
தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை,
ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின்
வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.


மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது
உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப்
பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து
நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.


அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர்
தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு
எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து
விட்டார் மஹான்.


குழம்பு-குழப்பம்
தான்-அகங்காரம்
ரசம்-தெளிவு
பாயஸம்-இனிமை
மோர்-ஆனந்தம்

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை,
இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை.


Sage of Kanchi


 
ஸெலக்க்ஷன், எலெக்க்ஷன் பொறுப்பாளர்கள்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 145

ஸெலக்க்ஷன், எலெக்க்ஷன் பொறுப்பாளர்கள்

“வைத்தார்கள்”, “செய்தார்கள்,” என்றால், அப்படிப் பண்ணியது யார்? ‘க்ராம மஹாஸபை எப்போதும் நடந்து கொண்டுதானே இருக்கும்? அதுதான் இப்படி யோக்யதை பெற்ற அபேக்ஷகர்களையெல்லாம் பொறுக்கியெடுத்துத் தேர்தல் நடத்தியிருக்கும். அதாவது நடப்பு ஸபை அடுத்த ஸபைத் தேர்தலுக்கு அபேக்ஷகர்களை செலக்ட் செய்திருக்கும்’ என்று நினைக்கலாம். ஆனால் உண்மையில் இப்படி நடிக்கவில்லை. நடப்பு ஸபை அடுத்த ஸபைக்கான தேர்தலை நடத்துவது என்பதிலேயே பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. அக்காலத் தேர்தல் விதிப்படி நடப்பு மெம்பர்கள் அடுத்த ஸபைக்கு மெம்பராக முடியாது, அவர்களுடைய பந்துக்களும் மெம்பராக முடியாது என்பது வாஸ்தவந்தானானாலும் தங்களுக்கு வேண்டப்பட்ட ஸ்நேஹிதர்கள், பவ்யப்பட்டவர்கள் ஆகியோரை அடுத்த ஸபையில் அங்கத்தினராகக் கொண்டுவந்து ஸ்வய லாபம் பெறக்கூடுமல்லவா? இதையும் தடுக்கவேண்டுமென்பதில் நம் முன்னோர் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கிறார்கள். அதனால் அடுத்த தேர்தலில் இப்போதுள்ள ஸபையினரின் ஸம்பந்தம் இல்லாதபடி ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

தற்போது நம் குடியரசில் நடத்தவிருக்கும் முறையில் ஒரு ஸந்தேஹம் வரலாம் – அதாவது ஒரு தேர்தல் நடக்கும் போது அதிகாரத்திலுள்ள ராஜாங்கத்தினர் அந்தத் தேர்தலை நடத்துவதிலேயே, மற்ற கட்சிகளுக்கு இல்லாமல் தங்களுக்கு மட்டும் இருக்கிற அதிகார பலம் முதலான ‘அட்வான்டேஜ்’களைக் கொண்டு தங்களுக்கு ஸாதகமாக ஏதேனும் பண்ணிக்கொண்டுவிட முடியுமோ என்று தோன்ற இடமிருக்கிறது. கட்சி ஆட்சி என்று ஏற்பட்டு, ஏதோ ஒரு கட்சியின் நிர்வாஹத்தில் அடுத்த தேர்தல் நடக்கிறதென்றால், கொஞ்சம் ஸந்தேஹாஸ்பதமாக ஏதாவது தோன்ற இடமுண்டுதானே?*

இதற்கு இடமே இல்லாதபடி, நடப்பு ஸபை மெம்பராயிருந்து, ‘வாரியம்’ என்ற பல கமிட்டிகளில் ஏதாவதொன்றில் பதவி வஹிப்பவர்களான இந்த முப்பது பேருமே பதவி விலகிவிடும் அதற்கப்புறம் “தர்ம க்ருத்ய ஸபைகள்” எனப்படுவனவற்றின் பொறுப்பின் கீழேயே, மத்யஸ்தர்களைக் கொண்டு தேர்தல் நடத்தவேண்டும் என்று சாஸனம் விதிக்கிறது.

இந்த தர்ம க்ருதய ஸபைகள் என்பவை என்னவென்றால் – க்ராம மஹாஸபை தவிர, அதன் முப்பது குடும்பப் பிரிவினை தவிர, அவரவரை ஸ்வதர்மப்படி கர்மா செய்விக்கிற பன்னிரண்டு நாட்டாண்மைகளின் கீழ் க்ராமத்தை பன்னிரண்டு சேரிகளாகப் பிரித்திருந்தது. சேரி என்றால் என்னவோ, ஏதோ என்று நினைக்கவேண்டாம். அக்ரஹாரமும் ஒரு சேரிதான். இவற்றுக்கான பன்னிரண்டு நாட்டாண்மைக்காரர்கள்தான் தர்ம் க்ருத்ய ஸபைகள் என்று ஊஹம் செய்து சொல்கிறார்கள். இவை ஒன்றுசேர்ந்தே தேர்தல் நடத்தியது. “பன்னிரண்டு சேரியிலுட்ம தர்மம் கிருத்தியங் கடைகாணும் வாரியரே மத்தியஸ்தரைக் கொண்டு குறிகூட்டிக் குடுப்பாராகவும்” என்று சாஸனத்தில் இருக்கிறது.

க்ராம மஹாஸபையினர் எல்லாரும் ஒரு வருஷ டெர்ம் முடிந்ததும் வெளியேறிவிடுவார்கள். அப்புறம் மத்யஸ்தர்கள் உதவியோடு அவசியமான காரியங்களுக்காக ‘இன்டரீம் அட்மினிஸ்ட்ரேஷன்’ (இடைக்கால நிர்வாஹம்) தர்ம க்ருத்ய ஸபைக்காரர்களாலேயே நடத்தப்படும். அடுத்த ஸபைக்கான அபேக்ஷகர்களின் ஸெலக்க்ஷன், அப்புறம் அதற்கான எலெக்க்ஷன் ஆகியன இவர்கள் பொறுப்பிலேயே நடக்கும்.

ஒரே ஒரு ஊர் வ்யாவஹாரம்தானாதலால் இந்த ‘இன்டரீம் பீரியட்’ ஒரு சில நாட்களாகத்தான் இருக்கும். அதற்குள் ஸெலக்க்ஷன், எலெக்க்ஷன்எல்லாம் நடந்துவிடும்.

ஊர் ஸபை என்ற ஒரே body-ன் (அமைப்பின்) கீழ் ஒன்றாகக்கூடிப் பணி செய்த முப்பது பேர் அடுத்த வருஷ ஸபைக்கான அபேக்ஷகர்களை ஸெலக்ட் செய்தால், இவர்கள் தங்களுக்குள் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமாறும், இப்போது தாங்கள் செய்த தப்பு தண்டாக்கள் அடுத்த ஸபையிலே வெளிவராதவாறும் ஸெலக்க்ஷனைப் பண்ணிவிடலாம். தனித்தனியாய் வெவ்வேறு ஜாதிகளுக்கென்று அமைந்து, ஒவ்வொன்றும் ஸ்வேயச்சையாய் கார்யம் செய்துகொண்டிருக்கும் பன்னிரண்டு தர்ம க்ருத்ய ஸபைகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு ஸெலக்க்ஷன் செய்யும்போது அவர்கள் தங்களுக்குள் தகிடுதத்தம் எதுவும் பண்ணுவதற்கில்லை. ஒவ்வொரு ஜாதிக்கும் தன்னைப் பற்றியிருந்த தன்மான உணர்ச்சியினால், ‘நாம் ஏதாவது முறை பிசகிப் பண்ணினால் மற்ற ஜாதிகளின் நாட்டாண்மைகள் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?’ என்ற எண்ணம் இந்த நாட்டாண்மை ஒவ்வொன்றுக்கும் இருக்கும். ஆதலால் அவை ஸந்தேஹாஸ்பதமான எந்த யோசனையும் தெரிவிக்கவே முன் வராது.

இதிலே இருக்கும் இன்னொரு ஜனநாயக அம்சம், ஏதோ ஒரு ஜாதியாரின் ஸெலக்க்ஷனாயில்லாமல் ஸகல ஜாதிகளுக்கும் ‘தர்ம க்ருத்யம்’ காணும் பன்னிரண்டு சேரிகளையும் கொண்டு ஸெலக்ட் பண்ண வைத்ததாகும்.

அந்த நாட்டாண்மைகளும்கூடத் தாங்களாகவே எல்லாம் செய்வது என்றில்லாமல் மத்யஸ்தர்களைக் கொண்டு பண்ணியது கவனிக்கவேண்டிய அம்சம். இதற்கெல்லாம் மேல் ராஜாங்க அதிகாரிகள் கண்காணிப்புச் செய்திருக்கிறார்களென்பது வேளாளனையும் பட்டனையும் பற்றி முதலில் சொன்னதிலிருந்து தெரியும். இத்தனை தினுஸுகளில் தேர்தல் தூய்மையை உறுதிப்படுத்தித் தந்திருக்கிறார்கள்!

இப்போது பெரும்பாலும் எவரோ ஒருத்தர் அபேக்ஷகராக நிற்க ஆசைப்பட்டுவிட்டு, அப்புறம் பேருக்கு யாரையோ விட்டு ‘நாமினேட்’ பண்ணச் சொல்வது, ‘ஸெகண்ட்’ பண்ணச் சொல்வது என்கிறது போலில்லாமல், எவரொருத்தரும் தானாக அபேக்ஷிக்காமலே க்ராமத்தின் தர்மஸபைகளுடைய நிர்வாஹிகள் ஜனங்களின் அபிப்ராயத்தை அநுஸரித்து அபேக்ஷகர்களை ஸெலக்ட் செய்தார்கள்.

இப்போதுங்கூட மற்ற வேலைகளுக்கு அபேக்ஷகரே மனுப் போடுவது போலில்லாமல் எலெக்க்ஷனில் மட்டும் அபேக்ஷகர் பேரை வேறே ஒருத்தர் பிரேரணை பண்ண வேண்டும், அதை இன்னொருத்தர் ஆமோதிக்க வேண்டுமென்று இருப்பது, பொதுப்பணிக்கு வருபவன் தானே முந்திரிக்கொட்டை மாதிரி தன்னை ப்ரகடனம் பண்ணிக்கொள்வது அத்தனை அழகல்ல, மற்றவர்கள் அவனை நிற்க வைப்பதுதான் கௌரவம் என்ற எண்ணத்தில்தான். பூர்வத்தில் நிஜமாகவே இப்படி நடந்த ஏற்பாடுதான் இப்போது ஒப்புக்காகவாவது இப்படியொரு நடைமுறை ஏற்பட்டிருப்பதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.

* தேர்தலுக்குச் சில மாதம் முன்பே ஆளும் கட்சி பதவியிலிருந்து விலகி, ஆலோசனைக் குழுவைக் கொண்டு ராஷ்டரபதியே ஆட்சி நடத்தி, அதன் கீழ் தேர்தல் நடந்தால்தான் தூய்மையாயிருக்கும் என்ற ஒரு கருத்து குடியரசு பிறந்து, பல்லாண்டுகளுக்குப் பின்னர் எழுந்தது. ஆனால் ஸ்ரீ சரணர்களோ குடியரசு பிறப்பதற்கு ஓராண்டு முன்பே இத்திசையில் நம் சிந்தனையைச் செலுத்தும் முறையில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.





Sage of Kanchi


Krish Ram
 
Happy Ganesh Chaturthi – Significance of Vinayagar

Happy Ganesh Chaturthi – Significance of Vinayagar

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Wishing you all a Very Happy Ganesh Chaturthi on 17th! All 7 volumes of Deivathin Kural always starts with Vinayaga Perumaan. Here is the very first chapter from Volume 1 on Lord Maha Ganapathy; the key take away from this chapter being how reciting Vinayagar Agaval gives us Parama Gnanam. Given the link to Vinayagar Agaval by MS Amma. Sri Periyava has a special corner for Lord Ganesha which is very well evident on reading these chapters. It is even mentioned in one of the chapters that doing Ganapathy upaasana alone is enough to take care of our Janma; such is the power of Maha Ganapathy!! Let us pray to Maha Ganapathy on this auspicious day to give us Bhakthi, Gnana, Vairagyam and remove any obstacles that may deter us from achieving those. Ganapati Bappa Morya!!! Ram Ram.

விநாயகர்

தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார். தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

அவரைப் “பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.


“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.
முதல் பிள்ளை இவர்; குழந்தை ஸ்வாமி. ஆனாலும் இவரே எல்லாவற்றுக்கும் ஆதியில் இருந்தவர். பிரணவம்தான் எல்லாவற்றுக்கும் முதல்.

பிரணவத்திலிருந்துதான் சகல பிரபஞ்சமும் ஜீவராசிகளும் தோன்றின. அந்தப் பிரணவத்தின் ஸ்வரூபமே பிள்ளையார். அவரது ஆனைமுகம், வளைந்த தும்பிக்கை இவற்றைச் சேர்த்துப் பார்த்தால் பிரணவத்தின் வடிவமாகவே தோன்றும்.

குழந்தையாக இருந்துகொண்டே ஆதிமுதலின் தோற்றமாக இருக்கிற பிள்ளையார் குழந்தைபோல் தோன்றினாலும், பக்தர்களை ஒரேயடியாகத் கைதூக்கி உயர்த்தி விடுவதிலும் முதல்வராக இருக்கிறார். ஒளவைப் பாட்டி ஒருத்தியின் உதாரணமே போதும். ஒளவையார் பெரிய கணபதி உபாஸகி. பிரணவ ஸ்வரூபியான விநாயகரைப் புருவமத்தியில் தியானித்துக் கொண்டு, ஒளவையார் யோக சாஸ்திரம் முழுவதையும் அடக்கியதான “விநாயகர் அகவலை”ப் பாடியிருக்கிறாள்.

அதைப் பாராயணம் செய்தால் பரமஞானம் உண்டாகும். இந்த ஒளவையாரைப் பற்றி ஒரு கதை உண்டு. சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசத்துக்குப் புறப்பட்டார்கள். அவர்கள் ஒளவையாரையும் உடன் அழைத்துப் போக எண்ணினார்கள். அப்போது ஒளவை விக்நேசுவரருக்குப் பூஜை பண்ணிக் கொண்டிருந்தாள். சீக்கிரம் பூஜையை முடித்துத் தங்களுடன் கைலாசத்துக்கு வருமாறு சுந்தரமூர்த்தியும் சேரமானும் அவளை அவசரப்படுத்தி அழைத்தார்கள். அவளோ, “நீங்கள் போகிறபடி போங்கள். உங்களுக்காக நான் என் பூஜையை வேகப்படுத்த மாட்டேன். விநாயக பூஜையே எனக்குக் கைலாசம்” என்று சொல்லி விட்டாள். அவர்கள் அப்படியே கிளம்பி விட்டார்கள். ஒளவை சாங்கோபாங்கமாகப் பூஜை செய்து முடித்தாள். முடிவில் பிள்ளையார் பிரசன்னமாகி அவளை அப்படியே தம் துதிக்கையால் தூக்கி ஒரே வீச்சில் கைலாசத்தில் கொண்டு சேர்த்துவிட்டார்! அவளுக்குப் பிற்பாடுதான் சுந்தரமூர்த்தியும் சேரமான் பெருமாளும் கைலாசத்தை அடைந்தார்கள். அங்கே சேரமான் பெருமாள் திருக்கைலாய ஞான உலாவைப் பாடினார். இதை அருணகிரிநாதர் திருப்புகழில்,


ஆதரம் பயில் ஆரூரர் தோழமை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர்….


என்பதில் சொல்லாமல் சொல்கிறார். “அப்படிப்பட்ட சேரர் ஆண்ட கொங்கு தேசத்தில் உள்ள பழனியில் இருக்கிற பெருமாளே” என்று பழனியாண்டவனைப் பாடுகிறார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கைலாசம் சேர்ந்ததற்கு இப்படி குமாரஸ்வாமியின் சம்பந்தத்தை உண்டாக்குகிறார். மூத்த குமாரரான பிள்ளையாருக்கோ ஏற்கனேவே அந்த சம்பவத்தில் சம்பந்தம் இருக்கிறது. அந்த இரண்டு பேருக்கும் முன்னதாக, ஒரு சொடக்குப் போடுகிற நாழிகைக்குள் அவர் ஒளவைப் பாட்டியைக் கைலாசத்தில் சேர்த்துவிட்டார். பெரிய அநுக்கிரகத்தை அநாயாசமாகச் செய்கிற ஸ்வாமி விக்நேசுவரர்.

https://www.youtube.com/watch?v=z4MP_98draI





https://mahaperiyavaa.wordpress.com/2015/09/15/happy-ganesh-chaturthi-significance-of-vinayagar/


 
Sri Maha Periva's discourse about Vinaayakar

Sri Maha Periva's discourse about Vinaayakar

https://www.youtube.com/watch?v=gW4P1nfEs_8


Published on Sep 16, 2012
Compiled and presented by www.periva.org - a website dedicated to Sri Maha Periva and the Kanchi Periva Forum - www.periva.proboards.com

A beautiful discourse of Sri Maha Periva - running almost 19 minutes, added with wonderful images of Periva and Pillaiyar (alternating nicely) - sure to provide a complete visual treat for any Periva devotee.

With My special greetings to one and all on the occasion of Vinayaka Chaturthi coming up on 17th Sep 2015
 
Veda Dharma Sastra Paripalana


[TD="width: 10"] [/TD]
[TD="width: 100%"]
Veda Dharma Sastra Paripalana
September 16 at 3:08pm
[/TD]

[TD="colspan: 3"]
24th Outstation Visesha Upanyasam @ Vellore by Veda Dharma Shastra Paripalana Sabha on 19th September 2015 from 6.30 PM to 8.00 PM at RENGALAYA Kalyana Mandapam, No. 60 , Vellore-katpadi Main Road Gandhi Nagar, Vellore - 632006.

Upanyasam on “Guru Bakthi”
Upanyasakar "Vadakudi Brahmmasri T.Sundararama Dikshidar".


11988212_504429246378786_2386322438497816929_n.jpg




[/TD]


Sage of Kanchi
 
Bikshavandhan Invitation – Sep 19th @Sri Kanchi Matam

Bikshavandhan Invitation – Sep 19th @Sri Kanchi Matam

All are requested to attend and receive the blessings of Sri Kanchi Acharyas!


Please open the link to view the Invitation

https://mahaperiyavaa.wordpress.com/2015/09/16/bikshavandhan-invitation-sep-19th-sri-kanchi-matam/
 
Ambattur Devotee Incident – Periyava Mahimai by Sri Salem Ravi

Ambattur Devotee Incident – Periyava Mahimai by Sri Salem Ravi

We read 100s or even 1000s of incidents of Periyava. Many are properly referenced with the source’s name from whom this was heard and many dont have any origins. Often we think did this happen for real or someone is just making things up… Incidents like that if they are said by someone whom we respect and that too confirming that it happened for real, we truly enjoy this…This is one of such incidents – I have read it, didn’t know the source. Here Sri Salem Ravi is talking about it and also mentioning that Smt Chellamma Paati was witnessing this whole incident!

This incident is one of my favorites for a simple reason that this devotee was very naive about Swamigal and Sri Matam and he was pleasantly surprised with the simplicity, karunyam and anugraham of Periyava.
Thanks Shivaraman for the audio. Article was taken from my archives.


Ambattur Devotee Incident by Periyava Radio on Mixcloud

அம்பத்தூரில் ஒரு கம்பெனியில் வேலை செய்தவருக்கு ஏகப்பட்ட ப்ரச்சனைகள்! நோயாளி மனைவி, தறுதலைப் பிள்ளைகள்.

அவருடைய நண்பர் பெரியவாளுடைய பக்தர். “நீ உனக்குள்ளேயே நொந்துண்டு இருக்கறதை விட, பேசாம காஞ்சிபுரம் போ! எங்க பெரியவாளை ஒரே ஒரு தடவை தர்சனம் பண்ணு. ஒன்னோட ஸ்ரமங்கள் காத்தோட காத்தாப் போய்டும்!…” என்று சொன்னதை மனஸில் வாங்கிக் கொண்டு காஞ்சிபுரம் வந்தார்.

“ஒலகத்தோட மூலை முடுக்குலேர்ந்தெல்லாம் பெரிய பெரிய ராஜாக்கள், ஜனாதிபதிகள்லேர்ந்து, சாதாரண குடியானவா வரைக்கும் வந்து தர்சனம் பண்ணுவாளாமே! அவரைச் சுத்தி எப்போவுமே ஜனக்கூட்டம் இருந்துண்டுதானே இருக்கும்? அத்தனை கூட்டத்துல அவர் கிட்ட போயி நம்ம அங்கலாய்ப்பை சொல்ல முடியுமா?…” என்ற எண்ணம் அவர் மனஸில் ஓடிக் கொண்டே இருந்தது. பஸ்ஸில் இறங்கி வழி கேட்டுக்கொண்டு மடத்துக்கு வந்தார். ஆச்சர்யம்! ஒரு ஈ.காக்கா இல்லை!

“சரிதான்! நம்ம கெட்ட நேரம், அந்த ஸாமியார் கூட இங்கேர்ந்து கெளம்பிட்டார் போல இருக்கு!…” என்று நொந்து கொண்டார். ஆள் அரவமே இல்லாத இந்த இடத்தில், நண்பர் சொன்ன ஸாமியாரைப் பத்தி யார்கிட்ட கேக்கலாம்?….

கொஞ்சம் தொலைவில் ஒரு கிழவர் தென்பட்டார். நேரே அவரிடம் போனார்.
“ஐயா, பெரியவரே!…இங்க ஒரு சன்யாசி இருக்காராமே…அவர் எங்க போயிருக்கார்…ன்னு தெரியுமா?”

“அவரையா பாக்க வந்தேள்? யார் சொல்லி அனுப்பினா?..”

“என்னோட பிரெண்ட் [பெயரைச் சொன்னார்] அந்த சன்யாசியைப் பத்தி ரொம்ப சொன்னார். எனக்கு குடும்பத்துல கஷ்டம் தாங்க முடியலே; பொண்டாட்டி எப்பப்பாத்தாலும் சீக்காளிதான்! பசங்களோ ஒண்ணுத்துக்கும் ப்ரயோஜனமில்லே !

வீட்டுல நிம்மதி, சந்தோஷம் ரெண்டும் கொஞ்சங்கூட இல்லே! நேர்மையா ஒழைச்சாலும், வாழ்ந்தாலும் நிம்மதியா ஒரு வாய் சாப்பாடு உள்ளே இறங்கலே!..அதான் அவர் சொன்னாரேன்னு அந்த சாமியாரைப் பாத்தாலாவது ஏதாவது விடிவு காலம் பொறக்குமா..ன்னு வந்தேன்…அவரும் இங்க இல்லே..”

“ஓஹோ! அவர்ட்ட சொன்னா, ஒனக்கு எதாவுது தீர்வு கெடைக்குமா என்ன?..”
“இந்த கிழவர் என்ன இப்பிடிக் கேக்கறார்?…” மனசுக்குள் கேட்டுக்கொண்டார்.

“ஸ்ரமம் ஸ்ரமம்…ன்னு சொல்றியே..அதை ஏன் நீ படறதா நெனைக்கறே?….அந்த பாரம் ஒன்னோடது இல்லைன்னு நீ நெனைச்சிண்டா மனஸ் லேஸாயிடுமே !”

“இது எப்பிடி ஐயா? நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டியிருக்கு?என்னோட கஷ்டங்களை வேற யாரு சொமப்பா?…”
கிழவர் சிரித்தார்…

“இப்போ….ஊருக்கு போறோம்ன்னு வெச்சுக்கோ. ஒன்னோட பொட்டி படுக்கை, மூட்டை முடிச்சு..ன்னு எல்லா பாரத்தையும் சொமந்துண்டு போய்த்தானே ஆகணும்?

ஆனா, அப்போ என்ன பண்ணறோம்?யாராவுது கூலியாளை அமத்திண்டு தூக்கிண்டு வரச் சொல்றோம். இல்லியா? அப்போ அந்த பாரம் நம்மளை அழுத்தாது.

அதே மாதிரிதான் நாம படர ஸ்ரமங்களும்! எந்த ஸ்ரமமும் நம்முளுது இல்லே! பகவான் பாத்துப்பான்…ன்னு பூர்ணமா சரணாகதி அடைஞ்சுட்டா…நமக்கு அந்த ஸ்ரமங்களால எந்த பாதிப்பும் வராது!…”

கேட்டுக் கொண்டிருந்த அம்பத்தூர்வாசிக்கு எதிரில் இருப்பவர் “ஜகத்குரு” என்பது தெரியாவிட்டாலும், நெருப்பின் ஒளியையும், உஷ்ணத்தையும் மறைக்க முடியுமா? தெய்வத்தின் வாக்கு கம்பீரமாக பேரருவியாக அவருக்குள் பாய்ந்தது!

“ஐயா….நீங்க சொன்னதைக் கேட்டதும் எனக்கு மனசு கொஞ்சம் லேஸா ஆயிடுத்து. என் பாரம் ஒன்னோடது…ன்னு பகவான்கிட்ட சொல்லிடறது நல்லதுதான்! ஒங்ககிட்ட சொன்ன மாதிரி இந்த சாமியார்ட்ட வந்து என்னோட பாரங்களை எறக்கி வெச்சிட்டு போகலான்னு இங்க வந்தா, அவரைப் பாக்க முடியலே…எனக்கு ஒடனே மெட்ராஸ் போயாகணும்…என்னோட விதி அப்பிடி! அதுனால, இருந்து அவரைப் பாக்க முடியாது…எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போல தோணறது ..ஆனா, ஒங்களண்ட பேசினதுல, மனசுக்கு நெஜமாவே இதமா இருக்கு….ஆமா, நீங்க யாரு? இதே ஊருதானா ஐயா? அந்த சாமியாரை பாத்திருக்கேளா?…”

பெரியவா முகத்தில் ஏகச் சிரிப்பு!

“என்னை…..எல்லாரும் சங்கராச்சார்யார்..ன்னு சொல்லுவா..”

அம்பத்தூர் அடுத்த க்ஷணம் பெரியவாளுடைய திருவடியில் கிடந்தார்!

கோடானுகோடி பேர் ஒரு க்ஷணம் தர்சனம் பண்ண மாட்டோமா? என்று தவிக்கும் மஹா மஹா பெரியவா, மஹா மஹா அற்பமான தன்னோடு இத்தனை நேரமாக எளிமையின் மறு உருவமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்..என்றால், அது அவ்யாஜ கருணை ஒன்றேயன்றி வேறென்ன இருக்க முடியும்?

பெரியவா முன்னால் சட்டையைக் கழற்றி விட்டு நமஸ்கரிப்பதுதான் முறை. அம்பத்தூருக்கோ உள்ளே பூணூலே கிடையாது! ஸர்வாந்தர்யாமியான பெரியவாளுக்கு தெரியாதா? கார்யஸ்தரை கூப்பிட்டு,

“இவரை உள்ள அழைச்சிண்டு போயி, பூணூல் போட்டு விடு!..” என்று கூறி, ஆசிர்வதித்து அனுப்பினார்.

———————————————————-
“கஷ்டம் கஷ்டம்” என்று நாம் படுவதாக நினைத்துக் கொண்டால், அந்த கஷ்டத்துக்கு கொண்டாட்டம்!
“கஷ்டமோ, சந்தோஷமோ, மானமோ அவமானமோ, எல்லாமே பகவானின் இஷ்டம்” என்று த்ருடமாக நம்பிக்கை கொண்டால், நமக்கு கொண்டாட்டம்! ஏனென்றால், அதுதான் உண்மையும் கூட!


https://mahaperiyavaa.wordpress.com...-incident-periyava-mahimai-by-sri-salem-ravi/
 
Amazing incident from the life of MS…

Amazing incident from the life of MS…


DECEMBER 17, 2012

annamayya.jpg


“The noble couple of M.S. Subbulakshmi (MS) and Sadasivam is in a serious financial crisis and need some urgent help. Please plan something to bring them out of this crisis immediately”.

In the beginning of 1979 PVRK Prasad, the Executive Officer Of Tirumala Tirupati Devasthanam (TTD) received two such urgent telegram messages from His Holiness the Paramacharya of Kanchi Kamakoti Peetham Sri Chandrasekharendra Saraswati and from His Holiness Bhagwan Sri Satya Sai Baba Of Puttaparthi.

Messages like that from holy giants can unnerve any mammoth personality and the poor Prasad was no exception. But what shocked Prasad more at that moment was not the status of the senders but the content of their message.

“What happened to MS and why did she land in such a situation that demanded the intervention of divine personalities?” and why do the divine personalities want Prasad to help?

MS has millions of fans all…


Please read more from here

https://mahaperiyavaa.wordpress.com/2015/09/16/amazing-incident-from-the-life-of-ms-2/
 
Let’s Always Wear Vibuthi or Namam

Let’s Always Wear Vibuthi or Namam

Jaya Jaya Shankara Hara Hara Shankara – A very important chapter explaining the significance of wearing symbols on our forehead and body all the time. Let’s make it a point to follow what Sri Periyava says in this regard. We should consciously try to wear these symbols at all times and NOT erase it when we go to work or outside. Our Sastras say we should always wear marks in our forehead based on our family tradition. Ram Ram (Source – Deivathin Kural Vol. 2 – Dharma Sastram)

சின்னங்கள்

நாம் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்றால் அதற்கு சில வெளி அடையாளங்கள், சின்னங்கள் உண்டு.

‘ஸ்கௌட்’ (சாரணர்)களுக்குத் தனி உடுப்பு இல்லையா? ஆர்மி [தரைப்படை] , நேவி [கப்பற்படை] ஒவ்வொன்றில் இருப்பவருக்கும் வேறு வேறு வெளி அடையாளங்கள் இருக்கின்றன. போலீஸிலேயே பல பிரிவுகளுக்குப் பல தினுஸாக இருக்கின்றன. இவர்கள் டிரெஸ்ஸையும், பாட்ஜ் முதலானவற்றையும் மாற்றிக் கொள்வதால் இவர்கள் செய்கிற காரியம் ஒன்றும் மாறிவிடாது. இருந்தாலும் அப்படி மாற்றிக் கொள்ளக் கூடாது என்று கட்டாயமாக விதி இருக்கிறது. போலீஸ்காரன் தொப்பியை நேவிக்காரன் வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படியே இவன் தொப்பியை அவன் வைத்துக் கொள்ளக்கூடாது. எதிலும் கட்டுப்பாடு, ஒழுங்கு (discipline, orderliness) இருக்க வேண்டும்.

இந்த டிஸிப்ளின், ஆர்டர் மதத்துக்கும் வேண்டுமல்லவா? அதனால்தான் பல வேறு ஜாதிக்காரர்கள், வெவ்வேறு ஆசிரமக்காரர்கள் ஆகிய ஒவ்வொருத்தருக்கும் வித்தியாஸமான சின்னங்களை, காரியங்களைக் கொடுத்திருக்கிறது. ‘இப்படி வேஷ்டி கட்டிக் கொள்ளு, இப்படி புடவை கட்டிக் கொள்ளு,

இந்த மாதிரி நெற்றிக்கு இட்டுக் கொள்ளு என்றெல்லாம் ரூல்களை தர்ம சாஸ்திரம் சொல்கிறது.

இது வெறும் சமூகக் கட்டுப்பாட்டுக்காக மட்டும் சொன்னதல்ல. இவை ஒவ்வொன்றிலும் ஜீவனைப் பரிசுத்தி பண்ணுகிற சூக்ஷ்மமான அம்சமும் உண்டு.
கச்சேரியில் ஸேவகனாயிருப்பவனுக்கு டவாலி உண்டு. அதிகாரிக்கு அது கிடையாது. ஏன் இப்படி என்று நாம் கேட்பதில்லை. ஆனால் சாஸ்திரத்தில் அவரவர் தொழிலுக்கும் குலாசாரத்துக்கும் ஏற்றதாக வேறு வேறு அடையாளங்களைச் சொன்னால் மட்டும் ஆக்ஷேபிக்கிறோம். ஸமத்வம் (equality) என்று சத்தம் போடுகிறோம்.

ஸமஸ்த ஜன‌ ஸமூகத்தின் க்ஷேமத்துக்காகவும் காரியத்தில் பலவாகப் பிரிந்திருந்த போதிலும், ஹ்ருதயத்தில் ஒன்றாக சேர்ந்திருந்த நம்முடைய சமுதாய அமைப்பில் ஆசார அநுஷ்டானங்களையும், அடையாளங்களையும் பிரித்துக் கொடுத்தது அவரவரது குண-கர்மாக்களுக்கு அநுகூலம் பண்ணுவதற்குத்தான் என்பதை மறந்து, இதிலே வாஸ்தவத்தில் இல்லாத உயர்வு தாழ்வுகளைக் கல்பித்துக் கொண்டு சண்டை போடுகிறோம்.


இப்போது கடைசியில் ஒருத்தருக்கும் ஒரு மதச் சின்னமும் இல்லை என்று ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.


பாக்கி அடையாளங்களை வெட்கப்படாமல் போட்டுக் கொள்கிறோம். ஆத்மாவுக்கு நல்லது செய்கிற மதச் சின்னங்களை போட்டுக் கொள்ள மட்டும் வெட்கப்படுகிறோம். “எல்லாம் ஸூபர்ஸ்டிஷன்” என்கிறோம்.

சீர்திருத்தம் என்று ஆரம்பிக்கிறோம். இப்படிச் சொல்லிக் கொண்டே, சீர்திருத்தக்காரர்கள் என்று அடையாளம் தெரிவதற்காக ஒரு குல்லா போட்டுக் கொள்கிறோம்; அல்லது ஏதோ ஒரு கலரில் ச‌ட்டை, துண்டு போட்டுக் கொள்கிறோம். இவற்றுக்கு தெய்வத்துக்கும் மேலான முக்யத்தைத் தருகிறோம்!


https://mahaperiyavaa.wordpress.com/2015/09/17/lets-always-wear-vibuthi-or-namam/
 
Vibuthi, Thiruman Mahima

Vibuthi, Thiruman Mahima

SEPTEMBER 20, 2015

J
aya Jaya Shankara Hara Hara Shankara – Very beautiful explanation by Sri Periyava on the significance of Vibuthi and Naamam (Thiruman) and why we should wear it. It gives us all Aishwaryam and acts as invaluable Raksha (Sheild). It constantly reminds us the transient nature of the world and our life. Sri Periyava also mentions about the source where we get the Vibuthi from; Gho Matha. The significance of Cow dung and its power of being a strong anti-pollutant is explained here. We need to ensure we get pure Vibuthi (mostly the one’s we get from shops are not authentic). To start with, we can get pure Vibuthi from our Sri Madam. Of course, there are many other places where we can get them as well. Let us follow the footsteps of our Periyava and wear Vibuthi all the time. (Source-Deivathin Kural – Vol 1 ) Ram Ram.


“விறகுக் கட்டையை அக்னியானது பஸ்பமாக்குவது போல், ஞானம் என்கிற அக்னி எல்லாக் கருமங்களையும் பஸ்பமாக்குகிறது” என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். பஸ்பமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரிந்தபின் நிற்கும் ஞானத்துக்கே அடையாளமாகும்.

‘விபூதி பூதிரைச்வர்யம்’ எனறு “அமர கோச”த்தில் உள்ளது. அதாவது, விபூதி என்பதும், ஐச்வர்யம் என்பதும் ஒரே பொருள் தரும்.

எந்தப் பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது கறுப்பாக ஆகும். பிறகு இன்னும் அக்னிபுடம் போட்டால் நீற்றுப் போகும்! சுத்த வெளுப்பாக ஆகிவிடும். அப்புறம் தீயில் போட்டால் அது மாறாது. அதுவே முடிவான நிலை. இப்படி நீற்றுப்போனதே திருநீறு. நீறு பஸ்மம் எனப்படும். ஈசுவரன் மஹா பஸ்பம். எல்லாம் அழிந்த பின்னும் இவற்றை அழித்து விட்டு எஞ்சி நிற்கிற, அழியாத சத்யமான மஹா பஸ்மம் அவன். பஸ்மமாக நீற்று வெளுத்துப்போனதற்கு முந்திய மாறுதல் கறுப்பு. அதுதான் கரி. நிலக்கரிதான் இவ்வுலக ஐச்வரியத்தில் இக்காலத்தில் முதலிடம் பெற்றுள்ளது.

ரொம்பவும் விலைமதிப்பான வைரமும் அதுதான். இந்தக் கரியாக மாறிய பொருளைவிட, மிகவும் உயர்ந்தது நீற்றுப்போன திருநீறு. திருநீற்றுக்கு மேலான பொருளே கிடையாது.
பல வர்ணங்களைக்கொண்ட பொருட்களைக் காண்கிறோம். ஆனால், இந்த வர்ணங்களெல்லாம் வஸ்துவை எரித்தபின் மாறிவிடுகின்றன. எல்லாம் கடைசியில் வெளுத்துப் போய்விடும். நாம் ‘சாயம் வெளுத்துப் போய்விட்டது’ என்கிறோம்.

சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். மெய்யான ஆத்மாவின் தூய்மைக்குப் பெரிய அடையாளமாக இருப்பது விபூதியான். இதை இந்தப் பொய்யான மெய் (தேகம்) முழுவதிலும் பூசிக்கொள்ள வேண்டும். எல்லாம் எரிந்தபின் எஞ்சி நிற்பது விபூதியின் வெண்மை ஒன்றுதான். மற்ற சாயமெல்லாம் பொய்; வெண்மையை உண்மை.

ஞானம் என்னும் தீ மூண்டபின், காரியங்கள் எல்லாம் பஸ்பமாகி விடும் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா உபதேசித்ததில், ‘பஸ்மமாகிவிடும்’ என்றால் எல்லாம் அழிந்து, புத்தர் சொன்னமாதிரி சூன்யமாகிவிடும் என்று அர்த்தமில்லை. விறகுக் கட்டைகள் தீயில் எரிந்து போனபின் எல்லாமே சூன்யமாகி விடவில்லை.; அப்போது எஞ்சி நிற்பது நீறு. அவ்வாறே ஞானம் என்றும் தீயில் கர்மாக்கள் யாவும் எஞ்சி நிற்கும்; மிகுந்து நிற்பதே ‘மகா பஸ்ம’மான பரமாத்மா.


திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் “முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்” என்று பாடினார்.

விபூதியைத் தேகம் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். விபூதியைத் தரித்துக் கொள்வதினால் ஸகல ஐஸ்வரியங்களையும் அடையலாம். பெரும்பாலான மக்கள் விபூதியை அணிகிறார்கள். திருநீறு என்பதே சாதாரண மக்களால் துன்னூறு, துன்னூறு எனப்படுகிறது. கோயிலுக்குப் போனாலும் ஏதாவது பீடாபரிகாரமாக வேண்டுமானாலும், “துன்னூறு கொடுங்கள் என்று மக்கள் கேட்பதை நாம் சகஜமாகப் பார்க்கிறோம். பூத, பிரேத, பைசாச சேஷ்டைகளிலிருந்து காப்பாற்றும் பெரிய ரக்ஷையாக இருப்பது விபூதியே.


வைஷ்ணவர்கள் திருமண் இடுவார்கள். துளசிச் செடியின் அடியில் உள்ள மண்ணை இட்டுக் கொள்வது வழக்கம்.


மண்ணை இட்டுக் கொள்வதும், திருநீற்றை இட்டுக் கொள்வதும் நமக்கு உயர்ந்த தத்துவத்தையே விளக்குகின்றன. மன்னனும் மாசறக் கற்றோனும் பிடி சாம்பலாகி விடுகிறார்கள். நாம் கடைசியில் சாம்பலாகத்தான் போகிறோம். இந்த வாழ்க்கை மயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. மண்ணிலே பிறந்த நாம் மண்ணிலேதான் மடியப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் கடைசியில் மட்கி அதே மண்ணோடு மண்ணாகத்தானே ஆகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப்போகிற தத்துவம் அதுதான், இதை ஞாபகப் படுத்திக் கொள்ளவே நம்மில் சிலர் திருமண் அணிகிறோம். ஸ்ரீரங்கத்தில் ம்ருத் ஸங்க்ரஹணம் செய்யும்போது வில்வ விருஷ மண்ணை எடுக்கிறார்கள்.


வில்வம் லக்ஷ்மி வசிக்குமிடம். பசுவும் லக்ஷ்மியின் வாச ஸ்தானம்.

விபூதி, பசுவின் சாணத்தை அக்கினியிலிட்டு பஸ்மமாக்குவதிலிருந்து உண்டாகிறது. பசுவின் சானம் எல்லாத் துர்நாற்றங்களையும் போக்க உதவுகிறது. மண்ணெண்ணையைக் காட்டிலும் அதிகத் துற்நாற்றம் உள்ள வஸ்து இல்லை எனலாம். அந்த துர்க்கந்தத்தைப் போக்கக்கூட பசுவின் சாணத்தை உபயோகிக்கிறோம். நமது உடல் பல துர்க்கந்தங்களை உடையது. இந்த உடலைச் சுத்தப்படுத்தி, இதனுள் உள்ள ஆத்மாவையும் பரிசுத்தப்படுத்த வல்லது பஸ்மமாகிய திருநீறு. மஹா பஸ்பமான பரமாத்மாவும் விபூதி என்னும் பஸ்மமும் ஒன்றானபடியால் விபூதியை அணிவதனால் ஈச்வர சாக்ஷாத்காரம் ஏற்படும்.


நாம் ஒவ்வொருவரும் குலாசாரத்தை அனுசரித்து திருநீற்றையோ திருமண்ணையோ இடவேண்டும். திருமண் இடுவதற்கு, ‘நாமம் போடுவது’ என்று பெயர். மகாவிஷ்ணுவுக்கு கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்று பன்னிரண்டு நாமங்கள் முக்கியம். இந்த துவாதச நாமங்களைச் சொல்லிப் பன்னிரண்டு இடங்களில் திருநாமங்களை இட்டுக் கொள்வார்கள். இப்படி பகவந் நாமத்தைச் சொல்லி போட்டுக் கொள்வதாலேயே ‘நாமம் போடுவது’ என்று பெயர் வந்துவிட்டது.


திருநீறு, திருமண் இவற்றைத் தரி்ப்பது பரமாத்ம ஸ்வரூபத்தின் உண்மையையும், உலகில் உள்ள பொருள்களின் அநித்தியமான நிலையையும் நினைவூட்டுகிறது.


https://mahaperiyavaa.wordpress.com/2015/09/20/vibuthi-thiruman-mahima/
 
HH Dayanandha Saraswathi Swamigal attained maha samadhi

HH Dayanandha Saraswathi Swamigal attained maha samadhi



September 24, 2015




133968490-Modi-Saraswati_6.jpg

Swami Dayanand breathed his last late tonight, said his close aide and trustee of Dayanand Ashram, Shantatmanand Saraswati.


He had been brought back to the ashram earlier today after 10 days of treatment at the Jollygrant Himalayan Hospital, where his condition had begun to decline steadily, he said.


The spiritual guru had been ailing for a long time.


On September 11, Prime Minister Modi had paid a visit to Swami Dayanand at his ashram to enquire after his health.



http://www.newsnation.in/article/91646-narendra-modis-guru-swami-dayanand-saraswati-passes.html


Sage of Kanchi
 
சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்&

சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே!


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
நன்றி; வானதி பதிப்பகம்


சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், “உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்” காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.


“பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்.” தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், ” நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்…” அவர் உடனே, “திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)” என்றார்.


“ரொம்ப சரி…இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?”


“உத்திரவுப்படி…”


“சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே…”
சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.


அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.


சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். “அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்” என்றார்கள்,பெரியவாள்.




https://mahaperiyavaa.wordpress.com/2015/09/23
 
Ekadasi Fasting Appeal & Reminder

Ekadasi Fasting Appeal & Reminder

இந்த தேசத்தில் எது எப்படியானாலும் வ்ரதோபவாஸங்களில் தலை சிறந்ததான ஏகாதசியை அநுஷ்டானத்தில் இருக்கப் பண்ண வேண்டும். ரொம்பவும் போற்றிப் பின்பற்றப்பட்டு வந்த இந்த மஹா தர்மம் இரண்டு மூன்று தலைமுறைகளில் கொள்ளை போயிருக்கிறது. இன்றைக்கும் எங்கேயோ இரண்டு மாத்வப் பாட்டிகள் ஏகாதசி சுத்தோபவாஸம் பண்ணுவதால் தான் இந்த மட்டுமாவது மழை கிழை பெய்து கொண்டிருக்கிறது.” – ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா


உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம். முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம்.

பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்”– ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா




Jaya Jaya Shankara Hara Hara Shankara,


Ekadasi, the mother of all Vrattams comes in the next day or two depending on where we live. Please check your Panchangam or Calendar for Thithi as it is based on sun rise. Sri Periyava’s strong message on observing this Vrattam is listed in the link below. The goal is to restrain ourselves from worldly activities as much as we can and spend time in Iswara Dhyanam, Purana Shravanam, and Bhagawan Nama Japam.


Here is a summary of the levels of fasting prescribed by Sri Periyava. Let’s start at level 4 and with Periyava’s grace we will progress over a period of time. All we need to do is put in our sincere effort and Periyava will show us the way. Bare minimum, ‘Avoid Rice’ on this day and be in Periyava Smaranam. If possible, have an early dinner before sunset on Dasami (the day before Ekadasi) as Sastras prescribes that way. Spread this message to like-minded people as well.

Ram Ram.




  1. Nirjalam – Without water, very noble.
  2. Sathvik Liquids – Water, Milk, Porridge
  3. Fruits and Sathvik Liquids
  4. Light Tiffin, Fruits – Upma/Idly/Dosa/Chapatti/Poori for one session (without any Patthu) and fruits or Sathvik liquids for another session. Consume this food without any salt.Please ‘AVOID’ taking rice on this day as Sri Periyava has warned about ‘No atonement’ if rice is consumed on this day. It is equivalent to consuming dog’s excretion in every handful we take.

Exemptions
– People who are sick, weak, elderly can consume rice without Kanji water without salt, tamarind, and spice. People are who are below 8 and above 80 are exempted though they can also fast if they can. North Indian’s especially Bengali’s, Maharashtrian’s observe this fast Nirjalam (No Water) including infants and toddlers.


Sathvik Liquids – Water, Milk, Buttermilk (no salt), Wheat Porridge (no salt). Coffee, Tea, Choco drinks, cool drinks, alcohol, are NOT ‘Sathvik’ Liquids. Let’s ensure whatever we consume does not contain ‘Gelatin’ as it will be terrible to have it on this day or rather any day.


Breaking Fast on Dwadasi Morning


Check the Panchagam when the Dwadasi Thithi ends the next morning and do Paaranai (have full meal) before that time. If it is too early and food cannot be prepared offer ‘Thulasi’ Theertham or Milk to Bhagawan and break the fast by consuming it. Agathikeerai, Nellikai Pachadi (Gooseberry/Amla), Sundakaai are items included in Dwadasi menu to bring the body back to equilibrium after the fasting day.

We all have a duty to feed Gho Matha every day but it is very auspicious and parama punniyam to feed Gho Matha with Agathekeerai on Dwadasi.





“People are interested in doing Utsavam, Bikshavandanam, Kanakabhishekam, Peetarohanam, etc. for me and sing my praises. The same gets published in the media. Is there any point in this? Our goal should be to execute what is told in the Sastras. That is the real Utsavam, Bikshavandanam, Peetarohanam, and Kanakabhishekam for me.” – Pujya Shri HH Kanchi Maha Periyava

https://mahaperiyavaa.wordpress.com/2015/09/22/ekadasi-fasting-appeal-reminder/


 
Periyava’s Key Message on Ekadasi – Abstain From Rice!

Periyava’s Key Message on Ekadasi – Abstain From Rice!

ஏகாதசியின் ஏற்றம்




– Jaya Jaya Shankara Hara Hara Shankara –

Ekadasi Thithi comes twice a month and will happen in the next couple days, depending on where we live and based on sunrise. It is important we remember what Periyava has said (Deivathin Kural Volume 3) about this ‘Mother of all Vratham’s’ (fasting) and what we need to do on that day. There are 4 levels of fasting prescribed by Sastras, starting with Nirjala upavasam to all the way down.

The key takeaway is to avoid eating rice on Ekadasi which is a great sin with no atonement equivalent to consuming dog’s excretion. However, the sastras has given a few exceptions on this regard for kids, aged, sick, etc. Chanting of Bhagawan Nama on this day is very auspicious.


Ram Ram!


வ்ரதோபவாஸங்களில்உச்சஸ்தானத்தில்இருப்பதுஏகாதசி.

காயத்ர்யா: பரம்மந்த்ரம்மாது: பரதைவதம் |
காச்யா: பரமம்தீர்த்தம்நைகாதச்யா: ஸமம்வ்ரதம் ||

‘காயத்ரிக்கு மேலே மந்தரமில்லை; அம்மாவுக்கு மேலே தெய்வமில்லை (தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை); காசிக்கு மேலே தீர்த்தமில்லை’ என்று சொல்லிக் கடைசியில் ‘ஏகாதசிக்கு ஸமானமாக வ்ரதுமெதுவுமில்லை’ என்று முடிகிறது. மற்றதற்கெல்லாம் ‘மேலே’ ஒன்றுமில்லை என்பதால் அவற்றுக்கு ‘ஸமமாக’ ஏதாவது இருந்தாலும் இருக்கலாம் என்று ஆகிறது. ஆனால் வ்ரதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஏகாதசிக்கு ‘மேலே’ மட்டுமில்லாமல், அதற்கு ‘ஸமமாக’க் கூட எதுவுமில்லையென்று ரொம்பவும் சிற்ப்பித்துச் சொல்லியிருக்கிறது.


அஷ்டவர்ஷாதிக: மர்த்ய: அபூர்ணாசீதிவத்ஸர :|
ஏகாதச்யாம்உபவஸேத்பக்ஷயோ: உபயோ: அபி ||

என்று தர்ம சாஸ்த்ரம் கூறுகிறது.

தாவது மநுஷ்யராகப் பிறந்தவர்களில் எட்டு வயஸுக்கு மேல் எண்பது வயகுக்கு உட்பட்ட எல்லோரும் இரு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசிகளில் உபவாஸம் இருக்க வேண்டும் என்று அர்த்தம்.

எந்த ஸம்ப்ரதாயக்காரன், எந்த ஜாதிக்காரன், ஆணா பெண்ணா என்ற வித்யாஸமில்லாமல், ‘மர்த்ய’, அதாவது மநுஷ்யராகப் பிறந்த எல்லோரும் ஏகாதசி உபவாஸம் அநுஷ்டிக்க வேண்டும் என்று இது சொல்கிறது.

ரொம்பவும் கருணையோடு குழந்தைகளையும், தள்ளாத கிழவர்களையும் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான் எட்டு வயஸுக்குக் கீழே இருப்பவர்களுக்கும், எண்பது வயஸுக்கு மேலே போனவர்களுக்கும் விதிவிலக்குக் கொடுத்திருக்கிறது. அவர்கள் உபவாஸம் இருக்கக் கூடாது என்று கண்டிப்புச் செய்ததாக அர்த்தமில்லை. முடிந்தால் அவர்களும் இருக்கலாம்.

முடியவில்லை என்பதால் இல்லாவிட்டாலும் பாதகமில்லை என்று அர்த்தம்.

மஹாராஷ்டிரம் முதலிய இடங்களில் ஏகாதசியன்று பச்சைக் குழந்தைக்குக்கூட பால் கொடுக்காத தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள்; அந்தக் குழந்தைகளும் அவர்களுடைய நம்பிக்கையிலேயே நன்றாக இருந்திருக்கின்றன என்று சொல்வார்கள். இத்தனை ‘எக்ஸ்ட்ரீம் டிஸிப்ளி’னை தர்ம சாஸ்திரகாரகர்களே எதிர்பார்க்கவுமில்லை; ரூலாகப் போடவுமில்லை.


பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் ஆரம்பிக்க வேண்டும்.

அப்படியும் முடியாவிட்டால் வீம்பாகப் பட்டினி கிடந்து தேஹ ச்ரமத்தையும் மனஸ் கஷ்டங்களையும் வரவழைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஏகாதசி தவிர மற்ற உபவாஸ தினங்களில் ஒரே பொழுது பலஹாரம் (சாஸ்த்ரீய பலஹாரத்தைச் சொல்லாமல், தோசை-இட்லி பலஹாரத்தைத்தான் சொல்கிறேன்) செய்யலாம். இன்னொரு பொழுது சாஸ்தீரிய பலஹாரமான பழம், பால் மட்டும் சாப்பிடலாம்.

முடியாதவர்கள் ஒருபொழுது அன்னம், ஒருபொழுது தோசை-இட்லி மாதிரி பலஹாரம் பண்ணலாம். ஆனால் முழு நியமப்படி மாற்றிக் கொள்ள முயற்சி பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஏகாதசியில் நிர்ஜலமாயிருந்தால் ரொம்பவும் ச்ரேஷ்டம். அது ரொம்பவும் கஷ்டமும். ஸாத்விகமான பானங்கள் மட்டும் பண்ணுவது அடுத்தபடி. அதற்கும் அடுத்தப்படி நிஜப் பலஹாரமாகப் பழத்தோடு பால் சாப்பிடுவது. அப்புறம் ஒருவேளை மட்டும் பற்றுப்படாத ஸத்துமா, பூரி மாதிரியானவற்றைச் சாப்பிட்டு இன்னொரு வேளை பழம், பால் ஆஹாரம் செய்வது. இன்னம் ஒருபடி கீழே, ஒருவேளை பக்வமான, புஷ்டியான இட்லி, தோசை, பொங்கல், உப்புமா இத்யாதியும் இன்னொரு வேளை பால் பழமும சாப்பிடுவது.


இதற்கும் கீழே போகப்படாது. அதாவது ஒரு வேளைகூட அன்னம் சாப்பிடுவதாக இருக்கப்படாது.


மற்ற உபவாஸங்களில் அதமபக்ஷமாக ஒரு வேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக் கொள்ளும் அளவுக்கு ஏகாதசியைக் கொண்டு வந்துவிடக் கூடாது.


ஏகாதசியில் அன்னத்தைச் சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது.

சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக் கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தை கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒருவேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குத்தான் இந்த relaxation. மற்றவர்களுக்கில்லை.

ன்று ஒருவன் சாப்பிட்டால் அதில் ஒவ்வொரு பிடியிலும் நாயின் அமேத்யத்துக்கு ஸமமான பாவத்தைச் சாப்பிடுகிறான் என்று மிகவும் கடுமையாகவே சொல்லியிருக்கிறது: ப்ரதிக்ராஸம் அஸௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்.



https://mahaperiyavaa.wordpress.com/2015/06/26/periyavas-key-message-on-ekadasi-abstain-from-rice/
 
பண்டிகை, வ்ரதம்; ஏகாதசிச் சிறப்பு

பண்டிகை, வ்ரதம்; ஏகாதசிச் சிறப்பு


பகவத் பரமாகவே பண்டிகைகள் என்று சிலதை வைத்திருப்பதோடு வ்ரதங்கள் என்றும் சிலவற்றை வைத்திருக்கிறது. பண்டிகை என்பது நாம் ஆடை ஆபரணங்களுடன் அலங்காரம் பண்ணிக்கொண்டு, பகவானுக்கு அலங்காரம் பண்ணிப் பூஜை செய்து, அவன் ப்ரஸாதமாக அறுசுவை உணவு சாப்பிட்டு ஆனந்தமாயிருப்பது — போகிப்பண்டிகை, தீபாவளிப் பண்டிகை மாதிரி. புது வஸ்த்ராதிகள், அலங்காரம், பஞ்சபக்ஷ்ய போஜனம் முதலியன இல்லாமல், வழக்கமாகச் சாப்பிடுகிற மாதிரிக்கூட இல்லாமல், நியமத்தோடு உபவாஸமிருந்து பூஜை பண்ணுவது வ்ரதம். க்ருத்திகை வ்ரதம், ஷஷ்டி வ்ரதம், சதுர்த்தி வ்ரதம், ரிஷிபஞ்சமி வ்ரதம், ப்ரதோஷ வ்ரதம், ஸோமவார வ்ரதம், ச்ரவண வ்ரதம், பயோவ்ரதம், இது எல்லாவற்றையும்விட ஸர்வஜன அநுஷ்டானமாக ஏகாதசி வ்ரதம் என்று பல ஏற்பட்டிருக்கின்றன. எல்லா மதங்களிலுமே feasting, fasting என்று இந்த இரண்டும் இருக்கின்றன.


மற்ற வ்ரத தினங்களிலோ பூஜைக்கு அப்புறம் ஒரு பொழுதாவது பலஹாரம் பண்ணலாமென்றிருக்கிறது. ஏகாதசியில்தான் பூர்ண உபவாஸம்.


மற்ற வ்ரதங்களைப் புராண, ஆகமங்கள் சொல்கின்றன. அதில் சிவபரமான புராணாகமங்கள் சொல்பவைகளை வைஷ்ணவர்கள் அநுஷ்டிக்க மாட்டார்கள்; வைஷ்ணவ கிரந்தங்களில் சொல்லியுள்ளதை சைவர்கள் செய்ய மாட்டார்கள். ஏகாதசியோவென்றால் ஒவ்வொரு sect மட்டும் எடுத்துக்கொள்ளும் புராண ஆகமங்களில் மட்டுமின்றி ஹிந்து என்று பெயர் இருக்கிற அத்தனை பேருக்கும் பொதுவான தர்ம சாஸ்திரங்களிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் இதை ஸர்வஜன அநுஷ்டானமான வ்ரதம் என்று சொன்னேன்.


விஷ்ணு நித்ரை செய்து கொண்டிருந்தபோது லோகத்தை ஹிம்ஸை பண்ணிய ஒரு அஸுரனைக் கொல்வதற்காக அவருடைய சரீரத்திலிருந்தே ஸ்த்ரீ ரூபமாக ஒரு சக்தி வெளியே போய் ஸம்ஹாரம் செய்துவிட்டு வந்ததாகவும், விழித்துக் கொண்ட பகவான் அவளுக்கே ஏகாதசி என்று பேர் கொடுத்து இந்த ஏகாதசி வ்ரதத்தை ஏற்படுத்தினாரென்றும் பாத்ம புராணத்தில் கதை வருகிறது.

மஹாவிஷ்ணு கூர்மமாகவும், தன்வந்திரியாகவும், மோஹினியாகவும் அவதாரங்கள் எடுத்து, க்ஷீராப்தியில் அம்ருதம் கடையப் பண்ணி அதை எடுத்துக் கொடுத்த நாளே ஏகாதசி என்பதாலும் அதைப் பொதுவில் விஷ்ணு ஸம்பந்தமுள்ளதாக நினைக்கிறோம். ஆனால் இந்த அம்ருத மதன ஸமயத்தில் முதலில் உண்டான காலகூட விஷத்தைப் பரமேச்வரன் புஜித்ததை முன்னிட்டுத்தான் அன்று எவரும் சாப்பிடக் கூடாது என்று ஏற்பட்டிருப்பதாக சைவர்கள் சொல்வதுண்டு.



இப்படி சைவம், வைஷ்ணவம் இரண்டுக்கும் ஏற்கத் தக்கதாயிருப்பதோடு ஹிந்துவாகப் பிறந்தவனில் எந்த இஷ்ட தெய்வத்தைக் கொண்டவனாயினும், எந்த ஜாதியைச் சேர்ந்தவாயினும் ஸகலருக்குமான வாழ்க்கை விதிகளைப் போடுகின்ற தர்மசாஸ்த்ரமும் ஏகாதசி உபவாஸத்தை விதித்திருப்பது அதன் விசேஷத்தைக் காட்டுகிறது.



தர்ம சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் உபவாஸ நாட்களைச் சொல்கிறேன். ஒவ்வொரு பக்ஷத்திலும் வரும் ஏகாதசியன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமை, அமாவாஸ்யை, பௌணர்மி ஆகிய நாட்களில் பகலில் மட்டும் போஜனம் செய்து இரவில் உபவாஸமிருக்க வேண்டும். ஒவ்வொரு பக்ஷத்திலும் அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும் பகலில் சாப்பிடாமல், ராத்திரி மட்டும் ஆஹாரம் பண்ண வேண்டும்.



ராமநவமி, கோகுலாஷ்டமி, சிவராத்திரி ஆகியனவும் பூர்ண உபவாஸ தினங்களாகச் சொல்லப்ப்ட்டிருக்கின்றன. ஆனால் சிவராத்திரியில்தான் இதை ஓரளவுக்கு விதிப்படிச் செய்வதாகவும் மற்ற இரண்டு தினங்களில் பூஜைக்கு அப்புறம் சாப்பிடுவதாகவும் (கிருஷ்ண ஜயந்தி பூஜை ராத்ரியில் செய்யப்படுவதால் பலஹாரம் செய்வதாகவும் -இதில் ஏகப்பட்ட பக்ஷண தினுஸுகள் சேர்ந்துவிடும்) நடந்து விடுகிறது.



குருவார வ்ரதம் என்பது நடைமுறையில் பரவியிருக்கிறது.


தக்ஷிணத்தில் எல்லாவற்றையும்விட அதிக வழக்கிலிருப்பது சனிக்கிழமை வ்ரதம்தான்.

ரொம்பப் பேர் அன்று ராத்ரி போஜனம் பண்ணுவதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வேங்கடரமண ஸ்வாமியை உத்தேசித்து இந்த வ்ரதம் ஏற்பட்டிருக்கிறது.

“கலௌ வேங்கடநாயக:” [கலியுகக் கடவுள் ஏழுமலையானே] என்பதற்கேற்க, அவரது வ்ரதமே வெகுவாக அநுஷ்டானத்திலிருக்கிறது — சாஸ்த்ரத்தில் அது இல்லாவிட்டாலும்.



இதேபோல ஸோமவார வ்ரதமும் இங்கே சைவர்களிடையேயும், ஸ்மார்த்தகளிடையேயும் ஓரளவு நிறையவே வழக்கிலிருக்கிறது. வடக்கேயோ சைவ வைஷ்ணவ வித்யாஸமில்லாமல் எல்லோருமே ஸோமவார விரதமிருக்கிறார்கள். அதனால்தான் லால்பஹாதூர் சாஸ்திரிகூட ரொம்பவும் உணவு நெருக்கடி ஏற்பட்டபோது எல்லாரும் திங்கட்கிழமை உபவாஸமிருப்பது என்று வைத்துக்கொள்ள வேண்டுமென்று சொன்னார். திங்கட்கிழமை ராத்ரி ராஜாங்க விருந்துகள் நடத்துவதில்லை என்றேகூட நிறுத்தி வைக்கப்பட்டது.



இப்படி ராஜாங்க ரீதியிலேயே ஸோமவார ‘ஒரு பொழுது’ விதிக்கப்பட்டதிலிருந்து, உபவாஸங்களுக்கு சாஸ்த்ரத்தில் சொன்ன பலன்களோடு உணவுப் பிரச்னையை குறைப்பதில் பங்கு இருக்கிறதென்பதும் புதிதாகத் தெரிய வந்திருக்கிறது. சாஸ்த்ரப் பிரகாரம் எல்லோரும் உபவாஸாதிகளை அநுஷ்டித்தால் உணவிலே நமக்கு எப்போதும் ‘ஸர்ப்ளஸ்’, ஏற்பட்டு, ‘எக்ஸ்போர்ட்’ பண்ணி ‘எக்ஸ்சேஞ்ச்’ கூட நிறைய ஸம்பாதித்து விடலாம்!



சாந்த்ராயணம் என்னும் ஒரு வ்ரதம் உண்டு. உடம்பைப் போட்டு ரொம்ப வருத்திக் கொள்ளப்படாது தான் என்பது நம் மதக் கொள்கையானாலும், எத்தனை ஸாதனைகள் பண்ணியும் சித்த சுத்தி வராதவர்கள், தங்களுக்கு மற்றவர்களைவிட ஜாஸ்தியாயிருக்கிற பூர்வ பாப கர்மாதான் இப்படிப் பழி வாங்குகிறதென்று புரிந்து கொண்டு அதைக் கழிப்பதற்காக உடம்பை வருத்திக் கொண்டு சில அநுஷ்டானங்களைப் பண்ணும்படி சாஸ்த்ரம் விதிக்கிறது.

இதற்கு ‘க்ருச்ரம்’ என்று பெயர். இப்படிப் பண்ணினால் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் அதற்குப் பதில் ‘க்ருச்ர ப்ரதிநிதி’யாக இத்தனை ஆயிரம் காயத்ரி பண்ண வேண்டும் என்றும் இருக்கிறது. இப்படி ‘ஸ்ப்ஸ்டிட்யூட்’டைச் சொல்லிவிட்டதால், இந்த ‘ஸப்ஸ்டியூட்’டுக்கும் ‘ஸப்ஸ்டிட்யூட்’, அதற்கும் ‘ஸப்ஸ்டியூட்’ என்று போய், ஒரு கோதானம் பண்ணிவிட்டால் அது க்ருச்ரத்துக்கு ஸமானம் என்று ஆகி பசுவுக்குப் பதில் அதன் விலையைத் தக்ஷிணையாகத் தருவதாக ஆரம்பித்து, இந்தத் தக்ஷிணையையும் குறைத்துக் கொண்டே போய், தற்போது பரிஹாஸத்துக்கு இடமாக, ஒரு பிராம்மணனுக்கு ஆறே காலணா தக்ஷிணை கொடுத்துவிட்டால் க்ருச்ரம் அநுஷ்டித்தாகி விட்டது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம்! பாப பரிஹாரமாக உடம்பை வருத்திக் கொள்வதற்காகவே சாந்த்ராயண விரதம் ஏற்பட்டிருக்கிறது. சந்திரகலை வளர்வது தேய்வதைப் பொறுத்து போஜனம் செய்யும் அன்ன கவளத்தின் எண்ணிக்கையை அமைத்துக் கொள்வதுதான் சாந்த்ராயணம்.



இதை ஆரம்பிக்கிற திதியையட்டி இரண்டு தினுஸுகள். ஒன்றை ‘கட்டெறும்பு சாந்த்ராயணம்’ என்றும், மற்றதை ‘கோதுமை சாந்த்ராயணம்’ என்றும் வேடிக்கையாகச் சொல்லலாம்.

கட்டெறும்பு எப்படியிருக்கிறது? தலை பெருத்து ஆரம்பிக்கிறது; அப்புறம் நடுவில் சிறுத்துத் தேய்ந்துவிடுகிறது; மறுபடி பின்பாதி பெருத்துக் கொண்டு போகிறது. இதே மாதிரி ஒரு தினுஸு சாந்த்ராயணத்தைப் பௌர்ணமியன்று ஆரம்பித்து, அன்று பதினைந்து கவளம் சாப்பிடவேண்டும். மறுநாளான க்ருஷ்ணபக்ஷப் பிரதமையன்று பதினாலு கவளம், அதற்கு மறுதினமான த்விதியை பதின்மூன்று கவளம் என்று இப்படியே குறைத்துக்கொண்டே போய் அமாவாஸ்யையன்று முழுப்பட்டினி கிடக்க வேண்டும்; அப்புறம் மறுதினமான சுக்லபக்ஷப் பிரதமையன்று ஒரு கவளம், த்விதியைக்கு இரண்டு கவளம் என்று ஏற்றிக் கொண்டே போய் பௌர்ணமியில் பதினைந்து கவளம் என்று முடிக்க வேண்டும்.



கோதுமை எப்படியிருக்கிறது? ஊகமுள் மாதிரி சிறுத்து ஆரம்பிக்கிறது. நடுவிலே பெருத்து மறுபடி சிறுத்து முடிகிறது. இதேபோல் சாந்த்ராயண நியமத்தை சுக்லபக்ஷப் பிரதமையில் ஆரம்பித்து, அன்றைக்கு ஒரே ஒரு கவளம் போஜனம் செய்யவேண்டும். அப்புறம் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு கவளம் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.

பௌர்ணமியன்று பதினைந்து கவளமாகும். அதற்கு மறுநாளிலிருந்து கிருஷ்ணபக்ஷம் பூராவும் ஒவ்வொரு கவளமாகக் குறைத்துக் கொண்டே வந்து அமாவாஸ்யையன்று சுத்த உபவாஸத்துடன் முடிக்க வேண்டும்.


சாந்த்ராயணத்தில் முழுப்பட்டினி கிடக்கும் நாள் தவிர மற்ற தினங்களில் ஒரே வேளைதான் சாப்பிட வேண்டும் – அன்றைக்கு எத்தனைக் கவளமோ அந்தக் கணக்குப்படி.


விரதங்களைப் பொதுஜனங்கள் ‘ஒரு பொழுது’ என்பார்கள். அநேகமாக பகலில், அன்னம் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதையும் இரவில் இட்லி, தோசை போன்வற்றைச் சாப்பிடுவதையும் வ்ரதாநுஷ்டானமாக நினைக்கிறார்கள். சாஸ்திரப் பிரகாரம், அன்னத்துக்கு பதில் இப்படி வயிறு நிறைய, நல்ல புஷ்டியுள்ள இட்லி, தோசை இத்யாதிகளைச் சாப்பிடுவது உபவாஸமாகாது. “பல (ஆ) ஹாரம்” என்று அதில் சொல்லியிருக்கிறபடி வெறும் பழங்களை மட்டும் சாப்பிடுவதுதான் நிஜமான உபவாஸம்.



https://dheivathinkural.wordpress.com/2014/08/29/
 
வேத வித்தை வளரவும் வழி : தெய்வத்தின் குரல&#302

வேத வித்தை வளரவும் வழி : தெய்வத்தின் குரல்

வேத வித்யாப்யாஸமே ஸ்வயம்பாகத்தால் வளரும். இதற்கும் அதற்கும் என்ன ஸம்பந்தம் என்று தோன்றலாம். சொல்கிறேன்: வடக்கே நான் போயிருக்கும் போது பார்த்திருக்கிறேன். ஒரிஸ்ஸா, பெங்கால், யு.பி. முதலிய இடங்களில் நம்மூர் மாதிரி வேத பாடசாலை என்றில்லாவிட்டாலும் ஸம்ஸ்க்ருத பாடசாலை என்று இருக்கும். நம்மூரில், தமிழ்நாட்டில் மொத்தம் ஏதாவது முப்பது நாற்பது பாடசாலைகள் நல்ல ‘ஸ்ட்ரெங்க்த்’தோடு இருக்குமா என்கிறதே ஸந்தேஹமாயிருக்க, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட ஸம்ஸ்க்ருத பாட சாலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தன. பாடசாலை என்பதே அங்கே ‘டோல்’ என்பார்கள். இந்த விஷயத்தில் ரொம்ப backward -ஆக இருக்கும் என்று நாம் நினைக்கிற அஸ்ஸாமிலேயே சுமார் இருநூறு டோல் இருக்கிறதாம். இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால் நம் பாடசாலைகளுக்கு நிறைய மூலதனம் இருக்கிறாற் போலவும் வடக்கத்திப் பாடசாலைகளுக்குக் கிடையாது.

ஆசாரம், ஸம்பிரதாயம் என்பதிலெல்லாம் நாம்தான் ரொம்ப மேல் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போதிலும், நம் பக்கத்தில் நிறைய மூலதனமிருந்தும் வேதபாடசாலைகள் தினக்ரமேண க்ஷீணித்துப் போகிறதேன், வடக்கே இத்தனை ‘டோல்’கள் இப்படி நல்ல ‘ஸ்ட்ரெங்கத்’தோடு இருப்பதேன் என்று எனக்கு ரொம்ப நாள் புரியாமலிருந்தது. அப்புறம்தான் அவர்களையே கேட்டதில் புரிந்தது.

“மூலதனம் இல்லை என்கிறீர்கள். இத்தனை மாணவர்கள் எப்படியிருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“மாணவர்கள் இருப்பதற்கு மூலதனம் என்னத்துக்கு?” என்று எதிர்கேள்வி கேட்டார்கள்.

“ஃப்ரீயாக சாப்பாடாவது போட்டால்தானே வித்யார்த்திகள் சேர்வார்கள்?” என்றேன்.

“ஆமாம், சாப்பாடு போடவேண்டியதுதான். அதற்கு மூலதனம் வைப்பானேன்? கிரானாக்கார பனியாவோ, மார்வாரியோ இருக்கிறான். (கிரானா என்றால் பலசரக்குக் கடை.) ஸம்ஸ்க்ருதம் படிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பசங்கள் போய்க் கேட்டால் அவன் ஆட்டமாவும் மக்கனும் கொடுத்து விடுகிறான். (மக்கன் என்றால் வெண்ணெய்.) அந்தந்த மாணவனே அந்த மாவைப் பிசைந்து தவ்வாவிலே போட்டு சுட்டு ரொட்டி பண்ணித் தின்று கொள்கிறான். அவ்வளவுதானே? ‘மக்கன்’ கிடைக்காவிட்டால் கூடச் சரி. அப்படியே நெய்யுமில்லாமல் சுக்கான் ரொட்டியாக வாட்டித் தின்று விடுவது எங்களுக்குப் பழக்கந்தான். தவ்வா கூட வேண்டுமென்பதில்லை. ரொட்டி மாவுருண்டையையே கொஞ்சம் தட்டி அப்படியே சுள்ளியிலே போட்டுவிட்டால் அது உப்பிக்கொண்டு வெந்துவிடும். அதைத் எடுத்துத் தின்பதும் வழக்கம்தான். கொஞ்சம் ஜாஸ்தி வசதியிருந்தால் பருப்பை வேகவைத்து ஒரு டாலும் பண்ணிக்கொண்டு விடுவோம். எத்தனையோ கிரானாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கடைக்காரனும் ஒரு பையனுக்கு மாவு முதலானது கொடுக்க யோசிப்பதில்லை” என்று ரொம்பவும் ஸிம்பிளாகச் சொல்லி விட்டார்கள்.

இங்கே நம்மூரிலானால் பாடசாலை வைக்கிறோம் என்றாலே உக்ராணம், வெங்கலப் பானை, வாணலி, அண்டா, குண்டான், அரிசி மூட்டை, புளிப்பானை, அப்புறம் அஞ்சறைப் பெட்டி இத்யாதி வேண்டியிருக்கின்றன. நிர்வாஹம் பண்ண மணியக்காரன், காவலுக்கு ஆள் இதெல்லாம் வேறே. எத்தனைதான் மூலதனமிருந்தாலும் இப்போதிருக்கிற இன்ஃபளேஷனிலும் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருப்பதிலும், சாப்பாட்டுக் செலவுக்கே கட்ட மாட்டேனென்று ஆகிறது. அப்புறம்தானே வாத்தியார் சம்பளம், பசங்களுக்கு ‘ஸ்டைபென்ட் இதெல்லாம்? இந்தக் காரணத்தால்தான் பாடசாலைகளையே மூட வேண்டியிருக்கிறது.

அவர்கள் சொன்னதிலிருந்துதான், ‘ஓஹோ! தக்ஷிணத்தில் வேதவித்யை க்ஷீணித்துப் போகிறதற்கே நம்முடைய அஞ்சறைபெட்டிச் சமையல்தான் காரணமா? நாக்கு ருசிக்காகவா நம் மதத்தின் வேரான வேதத்தை அறுத்திருக்கிறோம்?’ என்று தெரிந்தது.

இத்தனை தினுஸு, காரமும் புளிப்புமாகச் சாப்பிட்டாலே பிரம்மசாரியாக இருக்கவேண்டியவனுக்கு நல்லதில்லை. “நீயே சமைத்துச் சாப்பிட்டுக்கொள்” என்று விட்டுவிட்டால் அவன் இந்த ‘அஞ்சறை பெட்டி ஆஃபீஸ்’ நடத்தவே மாட்டான். படிக்கணும், அநுஷ்டானம் பண்ணணும் என்பதால் அவனாகவே வடக்கே செய்கிற மாதிரி ஏதோ ஒரு தினுஸு, இரண்டு தினுஸு லேசான ஆஹாரமாக, ஸத்வப் பிரதானமானதாக, பண்ணிச் சாப்பிட்டுவிட்டுத் திருப்தியாயிருந்து விடுவான். பாடசாலைக்குப் பெரிய மூலதனம் வேண்டாம் என்றால், வேத வித்யையும் தன்னால் இப்போதிருப்பதைவிட நன்றாக வளரும்.

Sage of Kanchi


 
பயத்துக்கு இடம் தரும் த்வைதம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 154

பயத்துக்கு இடம் தரும் த்வைதம்

இதற்குமுன் அவர் அவனிடம், “ஒவ்வொருத்தனும், அவன் ஞானவானாயிருந்தாலுங்கூட, தன் இயற்கைப்படிதான் நடப்பான். ப்ரக்ருதி என்கிற இயற்கையிலேதான் ஜீவன் தோன்றியிருக்க, ப்ரக்ருதி வேகத்தை ஒருத்தன் நிக்ரஹம் பண்ணுவதென்பது (அடக்குவது) எப்படி முடியும்? அதனால் அவரவர் இயற்கையை அநுஸரித்துப்போயே நாசூக்காக, க்ராஜுவலாக (ஒவ்வொரு படியாக) அதை சீர்திருத்தி உயர்த்துவதற்காக அவரவர் இயற்கைக்கு ஏற்றபடி பல தொழில்களையும், அதற்குரிய வாழ்முறைகளையும் வர்ண விபாகம் செய்து ‘ஸ்வதர்மம்’ என்று கொடுத்திருக்கிறது. இதிலே ஒருத்தனின் ஸ்வதர்மம் இன்னொருத்தனுடையதை விட ச்ரேஷ்டமாகத் தோன்றலாம். ஆனாலும் அது நன்றாயிருக்கிறதே என்று இவன் தன்னுடைய ஸ்வதர்மத்தைவிட்டு அதற்குபோனால் இவனுடைய ப்ரக்ருதி அதிலே இவன் ஒழுங்காகச் செயலாற்ற விடாது. விளைவாக அந்தத் தொழிலும் அந்த வாழ்முறையும் கெட்டு, இவன் தன் ஸ்வதர்மப்படி செய்திருக்க வேண்டிய தொழிலின் பலனும் ஸமூஹத்துக்கு நஷ்டமாகி ஒரே குழறுபடியாகிவிடும். ஆனதினாலே, தனக்காக ஏற்பட்ட தர்மம் அவ்வளவு சிறந்ததாகத் தோன்றாவிட்டாலுங்கூட, சிறந்ததான இன்னொன்றுக்குப் போவதைவிட இதையே அநுஷ்டானம் பண்ணுவதுதான் ச்ரேயஸ்” என்றெல்லாம் சொல்லி, முடிவாக ஒன்று ரொம்ப அழுத்தமாகச் சொன்னார். க்ஷத்ரிய தர்மத்தை விட்டுவிட்டு, ‘யுத்தம் வேண்டாம்; இந்த ஜீவஹிம்ஸையை விடப் பிச்சை வாங்கிச் சாப்பிடுவதே மேல்’ என்று ப்ராம்மண ஸந்நியாஸியின் தர்மத்துக்குப் போக நினைத்த அர்ஜுனனுக்கு நன்றாக உறைக்கிற மாதிரி, ‘ஸ்வதர்மத்தைப் பண்ணிச் செத்தாலும் அதுவே ச்ரேயஸ். பிறனுடைய தர்மத்தில் போவது பெரிய பயத்தில் கொண்டுவிடும்’ என்று முடித்தார்.

பயம் என்றால் என்ன? ‘நமக்கு என்ன ஆயிடுமோ? ஏதாயிடுமோ?’ என்று நிம்மதியில்லாமல் தவிப்பதுதான் பயம். ‘நம்மை எதுவும் என்னவும் பண்ணமுடியாது, அசைக்க முடியாது’, என்று ஸ்திரமாக ஒரு ஸ்தானத்தில் நம்மை அமர்த்திக் கொள்கிறவரையில் பயம் இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஜீவனை ஆட்டமில்லாத நிம்மதியான ஒரு ஸ்தானத்தில் சாச்வதமாக இருக்கச் செய்வதுதான் மோக்ஷநிலை என்பது. நமக்கு அந்நியமாக எதுவோ ஒன்று இருக்கிறவரைக்கும், ‘அது நம்மை என்ன பண்ணிவிடுமோ? நாம் நிம்மதியின் ஸெளக்யத்திலேயே ஸ்திரமாக இருக்கமுடியாதபடி அதனிடமிருந்து என்ன கெடுதல் வருமோ?’ என்ற எண்ணம், அதாவது பயம், இருந்துகொண்டேதான் இருக்கும்.

‘நாம் ஒன்று, நமக்கு இரண்டாவதாக இன்னொரு அந்நிய வஸ்து, அநேக அந்நிய வஸ்துக்கள், உள்ளன’ என்ற வேறுபாட்டுக்குத்தான் “த்வைதம்” என்று பெயர். ‘த்வி’ (dvi) என்றால் இரண்டு. “Two” என்பது அதிலிருந்து வந்ததுதான். உச்சரிப்பு ‘டூ’ என்று இருப்பதால், இந்த ஸம்பந்தம் பளிச்சென்று புரியாமலிருக்கலாம்; ஸ்பெல்லிங்கைப் பார்த்தால் புரிந்துவிடும். ‘T-W-O என்பது D-V-I ஸம்பந்தமுடையதாகத் தெரிகிறதல்லவா?

த்வைதமிருந்தால் அப்போது ஒன்றுக்குத் தன்னைவிட வேறாக உள்ள இன்னொன்றால் பயம் ஏற்பட இடமுண்டு. எப்போது த்வைதம் போய், தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்று தெரிந்து கொள்கிறோமோ, வேறில்லாத தானாகிய ஆத்மாவில் ஆணி அடித்தாற்போல் நம்மை ஸ்திரமாக அமர்த்திக் கொள்கிறோமோ, அப்போதுதான் பயம் போகும். இப்படி த்வைதமில்லாமல் ஆவதுதான் அத்வைதம்.

வேதம் சொல்கிற மோக்ஷம் அந்த அத்வைத அநுபவந்தான் என்று நம்முடைய ஆசார்யாள் ப்ரஹ்ம ஸூத்ரம், உபநிஷத்துக்கள், கீதை ஆகியவற்றுக்குப் பாஷ்யம் செய்து நிலைநாட்டியிருக்கிறார். அத்வைதம்தான் மோக்ஷம். அது பயமில்லாத அபயநிலை.

அத்வைதமே அபயம்

இந்த விஷயத்தை உபநிஷத்துக்களில் சொல்லியிருக்கிறது. ஒன்றேயான ஸத்யவஸ்துவில் – மெய்பொருள், ஆத்மா, ப்ரஹ்மம் என்றெல்லாம் சொல்வது அதைத்தான்; அந்த ஸத்ய வஸ்துவில் – எப்போது ஒருவன் அதற்கு அந்நியமாக இன்னொன்றை பேதம் செய்து பார்க்கிறானோ அப்போதே அவனுக்குப் பயம் ஏற்பட்டுவிடுகிறது என்று தைத்திரீய (உபநிஷ) த்தில் சொல்லியிருக்கிறது1. ப்ருஹதாரண்யகத்திலும் ஒரு இடத்தில்2 ப்ரஜாபதியானவர், “எனக்கு அந்நியமாக எதுவும் இல்லாதபோது எனக்கு எதைக் குறித்து பயம் ஏற்படும்?” என்று கேட்டதாகச் சொல்லிவிட்டு, “இன்னொன்று இருந்தால்தான் த்விதீயமான அதனிடமிருந்து பயம் உண்டாகிறது” என்று முடித்திருக்கிறது.

இப்படிச் சொன்னதால் அத்வைதமாகப் போய்விட்டால் பயமே இல்லை என்று ஆகிவிடுகிறது. இப்படி ஒன்றிலிருந்து inference -ஆக (அநுமானமாக) அந்த முடிவை draw பண்ணிக்கொள்ளும்படி நம்மை விடுவதோடு நிற்காமல், டைரக்டாகவே அத்வைதம்தான் அபயநிலை என்றும் உபநிஷத்துக்கள் பல இடங்களில் உபதேசிக்கின்றன. தைத்திரீயத்திலேயே சற்று முன்னாடி சொன்னதற்கு இரண்டு மூன்று மந்திரம் முந்தி3, மனோ வாக்குகளால் எட்டமுடியாததான அத்வைதமான ப்ரஹ்மாநந்த நிலையைச் சொல்லிவிட்டு, அதை அடைந்தவன் ஒருபோதும் பயப்படமாட்டான் என்ற நேரடியாகக் கூறியிருக்கிறது. அப்புறம், ‘ஆனந்தவல்லி’ என்ற அந்தப் பகுதியை முடிக்கிற இடத்தில் மறுபடியும், மனோவாக்குகளால் எட்டமுடியாத ப்ரஹ்மாநந்த அத்வைத நிலையை அடைந்தவன் ஒரு இடத்திலும் பயப்படமாட்டானென்று சொல்லியிருக்கிறது. முதலில், காலத்தில் ஒருபோதும் (“கதாசன”) பயப்படமாட்டான் என்றும், அப்புறம், ஒரு இடத்திலும் (‘குதச்சன’) பயப்படமாட்டான் என்றும் சொன்னதால், இப்போது ஸயன்ஸில் ஸகல தத்வங்களையும் அடக்கிக்கொண்டு விடும் இரண்டு ஆதார வஸ்துக்கள் என்று சொல்லும் Time, Space இரண்டையும் சொன்னதாகிவிடுகிறது. இதே போல ப்ருஹதாரண்யகத்திலும் (நான்காம் அத்யாயத்தின் நான்காம் பிரிவான) சாரீரக ப்ராஹ்மணம் எனும் ஸெக்க்ஷனின் கடைசி மந்த்ரங்களில் ஆத்ம ஞானியை வர்ணித்துவிட்டு முடிவாக, ப்ரஹ்மமேயான ஆத்மா அஜரமானது (மூப்பில்லாதது) , அமரமானது, அம்ருதமானது என்று அடுக்கு மொழியில் சொல்லி, இவற்றோடு அது அபயமானது என்றும் கூறியிருக்கிறது. மறுபடியும் தனியாக எடுத்து, “ஆமாம், ப்ரஹ்மம் என்றால் அபயம்தான். தன் ஆத்மாவை ப்ரஹ்மமாகத் தெரிந்துகொண்டவன் பயமேயில்லாதவனாகிறான்” என்று முத்தாய்ப்பு வைத்திருக்கிறது.

1 தைத்திரீய உபநிஷத்தின் ஆனந்தவல்லி எனும் பகுதியில் ஏழாவது மந்த்ரம்
2 முதல் அத்யாயம் நாலாம் ப்ராஹ்மணம், இரண்டாவது மந்த்ரம்
3 ஆனந்தவல்லி நான்காம் மந்த்ரம்


Sage of Kanchi

Krish Ram
 
அவிழ்த்துப் போட்ட கேசம் அத்தனை அமங்களமா&

அவிழ்த்துப் போட்ட கேசம் அத்தனை அமங்களமானது

குடுமி, கொண்டை, பின்னல் என்றிப்படிக் கேசத்தை விரிக்காமல் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் மங்களம். ஸ்திரீகள்-புருஷர்கள் யாரானாலும் பிரேத கார்யத்தில்தான் கேசத்தை அவிழ்த்து விடுவது. மற்ற சமயங்களிலும் அப்படி இருந்தால் அதைப்போல ஒரு க்ஷாமம் கிடையாது. எப்போதும் அப்படி என்றால் லோகத்தில் பிரேதம், ஆவி சூழ்ந்திருக்கிற மாதிரியான நிலவரம்தான் இருக்கும். மனசின் அடக்கம், கட்டுப்பாடு என்பதில்தானே உத்தமமான வாழ்க்கையே இருக்கிறது? அதற்கு வெளிச் சின்னமாகத்தான் அடங்காமல் பறக்கிற கேசத்தை ஸ்திரீ-புருஷர் இருவருமே முடிந்து கொண்டு அதனாலேயே துர்மங்கள சக்திகள் சேராமலும் ரக்ஷித்தார்கள்.


கேசத்தின் ஒவ்வொரு இழையையும் அப்படியே விரித்து விட்டு விட்டால் துஷ்ட சக்திகளைப் பிடித்து இழுத்து வருகிற ஒவ்வொரு ‘எரியல்’ மாதிரி. அதனால்தான் அதை அப்படி விடாமலே முடிவது. அடியிலிருந்து நுனிவரை பின்னி, நுனியில்கூட ஒரு பிச்சாளமும் வெளியே பார்க்க இல்லாமல் நாரோ, குஞ்சலமோ வைத்துத் தற்காப்புப் பண்ணுவார்கள். பின்னலையே கொண்டையாகப் பிச்சோடா என்றும் முடிந்து போட்டுக் கொள்வார்கள்.


நம் மாதிரி ‘லோல்’ படாமல் பாரமார்த்திகமாகப் போன யோகசித்தர்கள் விஷயம் வேற. அவர்கள் நீண்ட ஜடையை அப்படியே தொங்க விட்டாலும் பீடைகள் நெருங்காது. அவர்களுடைய அவிழ்ந்த கேசமும் திவ்ய சக்திகளையே க்ரகுஇத்துக் கொடுக்கும். மகான்களான ரிஷிகளும் ‘ஜடாமுடி’ என்றே சொல்கிற மாதிரி ஜடையைத் தூக்கி கட்டி நன்றாக முடிந்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.


பொதுவாக, கேசத்தை வளர்ப்பது சக்திகளைச் சேகரித்துக் கொள்பவர்களுக்கு ஆனதுதான். பைபிளில் கூட ஸாம்சன் என்கிறவனின் சக்தி அவனுடைய கேசத்திலேயே இருந்ததாகக் கதை வருகிறது. மகான்களிடம் அதீத சக்தி இருந்தாலும் அது நல்லதற்கே ப்ரயோஜனமாகும். நம்மிடம் சக்தி ஒரு அளவுக்கு மேல சேர்வது ஆபத்துதான். கிருஹஸ்தரானால் அப்படி சக்தியைச் சேர்த்துத் தருகிற கேசத்தை நன்றாக கட்டி முடிந்து அடக்க வேண்டும். சக்திகளை தள்ளி சாந்தத்திலேயே போக வேண்டுமேன்பதால் தான் அவன் கேச விசர்ஜனம் பண்ணி மொட்டையடித்துக்கொண்டது. வபனம் என்று அப்படி ‘பீரியாடிக’லாக அவன் சாஸ்திரம் சொல்கிறபடி நாள் பார்த்து கேச விசர்ஜனம் செய்வதற்கு முன் கேசம் வளரத்தானே செய்யும்? அது சக்தியை இழுத்துக் கொள்ளமலிருப் பதற்காகவும் அவன் முட்டாக்குப் போட்டுக் கொள்வது. முண்டனம் செய்த மண்டையை வெளியே காட்டக்கூடாது என்பதும்

ஒரு காரணம். தபோ சக்தியை க்ரஹித்து தாரணம் பண்ணும்படியாக நேரும் தீக்ஷ காலம் முதலியவற்றில் க்ஷவரம் கூடாது என்று சாஸ்திரம் கூறியிருக்கிறது. அதே சாஸ்த்ரம் அந்தக் காலம் ஆனவுடன் க்ஷவரம் செய்து கொள்வதையும் ஒரு முக்கியமான ஸம்ஸ்காரமாகவே சொல்லியிருக்கிறது.


மொத்தத்தில் விஷயம், நம்மைப் போன்ற சாமான்யப்பட்டவர்கள் கேசத்தை அவிழ்த்துப் போட்டுக் கொண்டிருந்தால் அது கேட்ட சக்திகளை, பீடைகளை ஆகர்ஷிக்கும் என்பதுதான்.


துர்மாந்த்ரீகம் பண்ணும்போது, நாசகாரமான ஆபிசாரம் செய்வதென்றால், அப்போது அதற்கான யந்த்ரத்தில் ஒருவருடைய நகத்தை வைத்தும், கேசத்தைச் சுற்றியுந்தான் பூமியிலே புதைப்பார்கள். இதிலிருந்தே கேசம் என்று சர்வ சாதாராணமாக இருப்பதை அதற்கேற்ற முறையில் ஜாக்ரதையாக ரக்ஷிக்காவிட்டால் எத்தனை ஆபத்து, அனர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.


கேசத்தில் இப்படி ஆபத்துக்கு இடமிருக்கிறது என்பதால் அதை வெட்டிக் குறைத்து புருஷர்களானால் ‘க்ராப்’ வைத்துக் கொள்வது , ஸ்திரீகளானால் ‘பாப்’ வைத்துக் கொள்வது என்பதும் சுத்தத் தப்பு. இப்படிப்பட்ட எல்ல விஷயங்களிலும் சாஸ்திரம்தான் பிராமாணம். எது எவருக்கு, எந்த அளவுக்கு என்று அது நிர்ணயம் செய்து கொடுத்திருக்கிறபடிதான் செய்ய வேண்டும். புருஷர்களானால் க்ருஹஸ்தரும் ப்ரம்மசாரியும் கேசத்தில் ஒரு பாகத்தை மட்டும் க்ஷவரம் செய்துகொண்டு மற்றதை ‘சிகை’ என்ற குடுமியாக முடிந்து கொள்ள வேண்டும். சந்நியாசி முழு மொட்டை. ஸ்த்ரீ சந்நியாசியின் உசந்த ஸ்தானத்திலேயே ஞான-வைராக்யாதிகளுக்கு இருப்பிடமாக வைக்கப்பட்ட விதந்துக்களுக்கும் (விதவைகளுக்கும்) அப்படியே பூர்ண கேச விசர்ஜனம்.

இங்கேயும் சாஸ்திரமே அங்கீகரிக்கிற குலாசாரத்தின் படி அந்தக் குலங்களைச் சேர்ந்தவர்கள் விசர்ஜனம் செய்யாமலும் இருக்கலாம். விதந்துக்கள் விஷயம் இப்படி இரண்டு விதமாயிலிருந்தாலும், ஸ்த்ரீகளில் பாக்கி அதிகம் பேராக இருக்கிற கன்னிகைகளும் சுமங்கலிகளும் ‘பாப்’ செய்து கொள்வது மாதிரியாகக் கேசத்தை வெட்டிக் கொள்கிற எந்த பேஷனையும் ஸ்வப்னத்தில்கூட நினைக்கக் கூடாது. ஸ்த்ரீகள் விஷயத்தில் விரித்த கேசம் எத்தனை அலக்ஷ்மியோ (மூதேவித்தனமோ) அத்தனை அலக்ஷ்மி கேசததைக் கொஞ்சமோநஞ்சமோ வெட்டிக் கொள்வதும். இதனாலெல்லாம் ஊரிலும் க்ஷாமம் ஜாஸ்தியாகும்.




https://mahaperiyavaa.wordpress.com/2

 
ஸரஸ்வதியும், தக்ஷிணாமூர்த்தியும்

ஸரஸ்வதியும், தக்ஷிணாமூர்த்தியும்

12065655_10154215976968294_1211484597586652520_n.jpg
12042627_10154215976988294_5499018348767572606_n.jpg


ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி ரெண்டு பேருமே அண்ணந்தங்கை. அப்போ, அவாளுக்குள்ள நெறைய விஷயஒத்துமை இருக்கணுமோல்லியோ?

ஸரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி ரெண்டு பேரையுமே வித்யா தேவதைகளா வெச்சிருக்கா. ஸரஸ்வதி, ஸகல கலாவாணி, வித்யா ஸ்வரூபிணி ன்னு எல்லார்க்கும் தெரியும்.

ஸர்வ வித்யைகளுக்கும் ப்ரபு, ஈஶானன்...ன்னு வேதமே ஸதாஶிவனான தக்ஷிணாமூர்த்தியை சொல்றது. பேச்சு, கார்யம், அறியறது எல்லாம் அடங்..கிப் போன நெலேல இருக்கற தக்ஷிணாமூர்த்தியே "மேதா தக்ஷிணாமூர்த்தி" யாகி, பெரிய்...ய்ய புத்தி ப்ரகாஶம், வாக்வன்மை, வித்வஶக்தி எல்லாம் தரார்.

ஶரஸ்வதி, தக்ஷிணாமூர்த்தி ரெண்டு பேருமே அக்ஷமாலை, சுவடி இதுகளோட சந்த்ரகலையையும் தலேல வெச்சிண்டிருக்கா.

அதுக்குப் பேரே 'கலை'! எது வளர்ந்துண்டே இருக்கோ, அதுக்குப் பேரு 'கலை'. வித்யைக்கு முடிவே கெடையாது. "கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு" ன்னு ஸாக்ஷாத் ஸரஸ்வதியே வினயத்தோட நெனைக்கறாளாம் ! இவள் தலேல வெச்சிண்டிருக்கறது மூணாம் பிறை. அது பூர்ண சந்த்ரனா வளரணும்.

ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தி மாதிரியே நெத்திக்கண் உண்டு. ஆசை பஸ்மாமானாலொழிய ஞானமில்ல. அதுக்குத்தான் காமனை எரிச்ச நெத்திக் கண் இவகிட்டயும் இருக்கு.

ரெண்டுபேருக்குமே ஜடாமகுடம் இருக்கு. அதுவும் ஞானிகளோட அடையாளம்.

ரெண்டு பேருமே வெள்ளவெளே...ர்ன்னு இருக்கா. ஏழு கலர்லயும் சேராத வெள்ளை, பரம நிர்மலமான ஶுத்த ஸத்வ நெலையை குறிக்கறது. இந்த வெள்ளையுங்கூட இன்னும் நிர்மலமா, தன் வழியா ஒளி ஊடுருவி போற அளவுக்கு transparentஆ தெளிஞ்சு போறச்சே, ஸ்படிகமா... ஆயிடறது.

தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி ரெண்டு பேருமே இப்டியாப்பட்ட ஸ்படிகத்னாலான அக்ஷமாலையைத்தான் வெச்சிண்டிருக்கா.

வெள்ளை நிறம், சந்த்ர கலை, ஸ்படிகமாலை இதையெல்லாம் நெனச்சாலே, நமக்கு மனஸ்ல ஒரு தூய்மை, தாப ஶாந்தி, அமைதி எல்லாமே உண்டாறது.

நம பார்வதி பதயே!
ஹர ஹர மஹாதேவா !!


Sage of Kanchi

Shoba Shankar
 
Mukkuruni Vinayagar – Details from Mahaperiyava

Mukkuruni Vinayagar – Details from Mahaperiyava




Inside the Temple of Madurai Meenakshi is the sanctum of Lord Ganesha bearing the name Mukkuruni Pillaiyar. Mukkuruni Ganesha is also found in Nagapattinam and Chidambaram.

Three ‘kurunni’ (a measure) of grains are used to make ‘modaka’ (a dish made of rice flour) for offering to this Ganesha. Hence, he is known as ‘Mukkuruni Pillaiyar’.


In Madurai, this Ganesha is found on the path that lay between Meenakshi Sannidhi and Chokkanãthar Sannidhi. In Chidambaram, he is found at the head of ‘Therkku veedhi’ (South Street).

In Nagapattinam, Kanchi Mahaswami Sri Chandrasekarendra Saraswati Swamiji had a single, huge ‘modaka’ made out of the entire flour and offered it to Lord Ganesha. A sack full of rice was ground into flour and one huge ‘kozhukattai’ was prepared out of it!


Legends have it that everyone teased Ganesha for sitting idle with his pot belly. So, Ganesha decided to find some employment! Ganesha, taking the form of a young boy, approached a devotee of his who was working on the fields and offered to assist him. This man asked, “How much wage do you expect?”


Ganesha in the form of a young boy said, “Three (’moonru’) ‘kurunnai’ grains.” Thus, he earned the name ‘Mukkuruni Pillaiyar’!


At the end of the work he earned the grains and returned home happily. He went to his mother Parvati and offered the wage earned. Parvati said to her son, “Oh, my child! anything that the son might earn through arduous labour does not make the mother happy. It is only the father who feels pleased when the son earns. So, give the earnings to your Father!”


So, Ganesha went to his father Lord Siva and gave it to him. Lord Siva who behaves like a mad one (‘pithhan’) knows not what He does. He took the grains from Ganesha and emptied the whole sack on his own head!

Om Gham Ganapathaye Namaha


Please watch this you tube video

https://www.youtube.com/watch?v=A0mI0PsNLvU



https://mahaperiyavaa.wordpress.com/2012/01/11/mukkuruni-vinayagar-details-from-mahaperiyava/
 
Tomorrow Sep 28th is last day of Chaturmasya Vratam!
===========================================

Their Holinesses Pujyashri Jayendra Saraswathi Shankaracharya Swamiji and Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji will perform Viswaroopa Yatra tomorrow, on Monday - 28th Sep. 2015. The Yatra will commence at 4.30 pm from Shrimatam.



12011234_10153623698174244_7230165937999798311_n.jpg


The Viswaroopa Yatra is performed on the Bhadrapada Poornima day (falling on 28 September this year), signifying the conclusion of the Chaturmasya Vratam – that begins with the Vyasa Pooja on the Ashada Poornima day. Yatra danam is performed at Shrimatam after which, Their Holinesses proceed on the Vishvaroopa Yatra in a procession comprising of devotees , elephants, dundubhi , and mangala vadyam.

After crossing the Northern perimeter of the Kanchipuram Town , Lord Krishna is invoked with the Shloka:

Vasudeva sutam Devam, Kamsa Chanoora Mardanam I
Devaki Paramanandam Krishnam Vande jagadgurum II

and Sri Krishna Pooja is performed. After this, the XI Chapter of Srimad Bhagavad Gita is chanted, as per customs. Important verses are repeated by the assembled gathering. The puja concludes with deepa Aradhana for Lord Krishna.

Devotees can participate in the Yatra, and bring the XI Chapter of the Bhagavad Gita along with them and join in the chanting.

*****
Thanks to Kanchi Kamakoti Peetam for this valuable info!

Dear Everyone, please plan to visit Kanchi tomorrow and be blessed by participating in the Yatra!

Shankara.


Source: Sage of Kanchi

Panchanathan Suresh
 
Astrology behind Mahalaya Paksha

Astrology behind Mahalaya Paksha

This year, Mahalaya Paksha starts on Monday, September 28th and ends on Monday, October 12th, 2015 (IST). Mahalaya begins with the Moon in the transcendental sign of Pisces, the 12th house of the natural Zodiac. This house signifies salvation and liberation (or moksha).

Ketu, the South Lunar Node, will be with the Moon in Pisces. This placement is significant because from the 12th house of enlightenment, Ketu can reinforce the positive energies that can liberate your ancestors. Ketu represents your maternal Ancestors.

Mahalaya ends with the Moon in Virgo. The Moon will be conjunct with Rahu and Mercury. Rahu, the North Lunar Node, represents your paternal Ancestors. Tarpanam rituals performed on this day will further appease your Ancestors. So astrologically, this Mahalaya has an even closer connection to the Ancestors’ world. Take advantage of the Moon’s hidden powers during the upcoming Special New Moon of the Ancestors (Mahalaya Amavasya).

Tarpanam performed during this Mahalaya will prepare your Ancestors’ souls for the attainment of Moksha (or liberation) and will give them true freedom and peace. After attaining liberation, ancestors acquire more power and knowledge and have access to the Light. From the Light, they can bless you with all kinds of boons and solutions to your problems.

Mahalaya Paksha: 15 Moons and Their Benefits

This ritual brings about different benefits different Moon phases of the 15 days:

Moon Phase or Tithi Benefits of Specific Moon Phase Tarpanams
1st Moon Brings blessings of wealth.
2nd Moon Brings Blessings of continued lineage.
3rd Moon Brings Business prosperity.
4th Moon Brings Ability to triumph over enemies.
5th Moon Brings About prosperity.
6th Moon Brings Fame and good reputation.
7th Moon Increases Inner strength and brings spiritual growth.
8th Moon Increases Intelligence.
9th Moon Increases Support of women in life.
10th Moon Brings Success in profession.
11th Moon Brings Blessings for prosperity of children and growth of their intelligence.
12th Moon Brings Blessings for continuity of lineage and success from education.
13th Moon and 14th Moon Moon Brings possession of vehicles and a life of peace and longevity.

Mahalaya Amavasya – New Moon Helps in receiving divine light because their grace is equivalent to God’s grace. On this day, ritual is done specially for those ancestors who passed away due to weapons or accidents.

Donate food and clothing to spread love and promote well-being and prosperity amongst humanity. When you participate for promotion of greater causes, you are no more stuck with lesser mindset. The act of giving others and helping people in appropriate times has always been considered to great acts of benevolence in all religions of the world. The Vedic Scriptures say to “Give food to the hungry, clothes to the naked, knowledge to the ignorant, teachings to the knowledgeable, teach meditation to the vital, give wisdom to the meditator and just be silent when with a wise one and share in his energy”.

Dear friends you can light up a lamp using a mixture of black sesame oil and ghee facing towards south. Each time when u light the lamp say with your whole heart, my munnorgale please accept this small tharpanam and engalai asirvathiyungal. Nandri.

U may help others by donating food or knowledge.


Sage of Kanchi

Murli Hariharan
 
மனக் கலப்பில்லாத உயிர் உணர்வு

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 157

மனக் கலப்பில்லாத உயிர் உணர்வு

அந்த உயிர் மனஸின் கலப்பு இல்லாமல், மனஸின் எண்ணங்கள், இந்த எண்ணங்களின் விளைவாக ஏற்படும் கர்மா ஆகியவற்றின் பந்தம் இல்லாமல் தனியாக இருப்பதை உணர்வதுதான் அத்வைத மோக்ஷம். அது ஜட ஸ்திதி அல்லவே அல்ல. ‘ஜீவன்’ என்பதே ‘உயிர்’ என்பதாயிருக்க, அந்த உயிர் தத்வம், எப்படி ஜீவனில்லாத ஜடமாக இருக்க முடியும்?

“பின்னே மனஸின் கலப்பு இல்லாமல் அது மாத்ரம் இருந்த ஸ்திதிகளான நித்ரையிலும், மூர்ச்சையிலும் கொஞ்சங்கூட உணர்ச்சியே இல்லாமல் ஜடம் மாதிரித்தானே கிடந்தோம்?”

உணர்ச்சி இல்லாமல் ஜடம் மாதிரிக் கிடந்ததென்பது வாஸ்தவம் அப்பா. ஆனால், இப்படி இருந்தது மனஸ்தான்; உயிர் இல்லை. மனஸின் கலப்பில்லாத ஸ்திதி என்று நீயே சொன்னபடி, மனஸ் அப்போது உயிரைவிட்டுப் பிரிந்திருந்தது. அதனால், உயிரின் ஜீவசக்தி மனஸில் இல்லாமலிருந்தது. இக் காரணத்தாலேயே மனஸ்தான் ஜடமாயிற்று. உயிர் அப்போதும் ஜீவசக்தியோடு இருக்கத்தான் செய்திருக்கிறது. அதனால்தான் ஹ்ருதயம், ச்வாஸ கோசம் முதலானவற்றை அது வேலை செய்ய வைத்திருக்கிறது. இப்போது பகவான் செய்கிற பெரிய மாயையிலே நம் எல்லோருக்கும் மனஸின் உணர்ச்சியையே புரிந்துகொள்ள முடிகிறது; மனஸால் எதை உணரமுடியுமோ அதையே நமதாக க்ரஹித்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான் மனஸ் நின்றுபோனபின் உயிர் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமக்கு எது புரிவிக்கும் கருவியாயிருக்கிறதோ, அது வேலை செய்யாமல் நின்று போன விட்டு எதை எப்படிப் புரிந்துகொள்வது? நாம் கண்ணை மூடிக்கொண்டவுடன் லோகம் தெரியாமல் போகிறாற்போல, நம் மனஸ் வேலை நிறுத்தியவுடன் நம்மால் எந்த அநுபவமும் பெற முடியவில்லை. அதனால் ஜடமாய்விட்டதாக நினைக்கிறோம். ஆனால், நாம் கண்ணை மூடிக்கொண்டவுடன் நிஜமாகவே லோகம் இல்லாமல் போய்விட்டதா என்ன? கடிகாரம் நின்று போய்விட்டால் நமக்கு ‘டைம்’ தெரியவில்லை. அதனால் காலமே நின்று போனதாகுமா என்ன?

மனஸ் போனபின் உள்ள உயிர்தத்வத்துக்கும் உணர்ச்சி இருக்கிறது. அதுதான் ஸத்யமான, சாச்வதமான உணர்வே! “பேர் உணர்வு” என்று அதைத்தான் சொல்கிறார்கள். சைதன்யம், ஞானம் என்பது அதைத்தான். அதற்கு ஞானம் இருக்கிறது என்பதுகூட ஸரியில்லை. அதுவே ஞானம், சைதன்யம், சித் ஸ்வரூபம், சின்மாத்ரம் என்றும் சொல்வார்கள். இங்கிலீஷிலும் அழகாகச் சொல்கிறார்கள்: மனஸ் அநேக விஷயங்களை உணருவதை, ‘அது conscious -ஆக இருக்கிறது’ என்று சின்ன ‘c’ போட்டுச் சொல்கிறார்கள்; ஜீவனுடைய ஜீவனான நிஜ தத்வம் தானே உணர்வாக இருப்பதை காபிடல் C போட்டு Consciousness என்கிறார்கள்.

‘மனஸில்லாதபோதும், அதற்கும் மேலான நம்முடைய உயிர் தத்வமாயிருப்பதுதான் நிஜத்தில் நாமாக இருக்க வேண்டும். அதை அண்டியே தனக்கு ஜீவகலையைப் பெறுகிற மனஸ் நிஜ நாமாக இருக்கமுடியாது. (உடம்பும் இப்படியே நிஜநாமாக இருக்க முடியாது.) மனஸ் இல்லாமல் நாம் இருக்கிற நீலை உண்டு அனால் உயிர் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதாலேயே உயிர்தான் நாம் என்றாகிறது. ஏனென்றால், மனஸ் நாமென்றால், தூக்கத்தில் அது இல்லாதததால் நாமே இல்லை என்று ஆகிவிட வேண்டுமே! அப்படி ஆகவில்லையே!

ஆத்ம உணர்வும், மனோ வாழ்க்கையும்

இப்படியாக வேறே ஒரு நிஜ நான் இருக்கிறது. அது எப்படி ஞானமயமாய், ஆனந்தப் பேருணர்வாயிருக்கிறது என்று நமக்குத் தெரியாதபடி மாயையானது மனஸின் திரையைப் போட்டு, மனஸின் அநுபவங்களை மட்டுமே ஜீவன் தனதாக நினைத்து, பெற்று, அநுபவிக்கும்படியாக வைத்திருக்கிறது.

நிஜ நாமாக இருந்து அதன் உணர்வை அறியவேண்டும், அதுவாகவே ஆகவேண்டும் என்று நாம் ஸதா ஸர்வகாலமும் விரும்பி, தவித்து, பாடுபட்டு ஸாதனை, ஆத்ம விசாரம் பண்ணிக்கொண்டு, மாயைத் திரையைப் போட்டிருக்கும். பகவானிடம் அதை விலக்கும்படி ப்ரார்த்தனை செய்துகொண்டேயிருந்தால் நிஜமாகவே மனஸ் உருகிக் கரைந்து போய்விடும்; எது நம்முடைய நிஜஸ்வரூபமோ அந்த ஆத்மா ப்ராகாசிக்க ஆரம்பித்துவிடும். தூக்கத்தையும் மூர்ச்சையையும் போலில்லாமல், ‘மனஸ் போனதால் அறிய முடியவில்லை, உணர முடியவில்லை’ என்று இல்லாமல் அப்போதுதான் இதற்கு மேம்பட்டதாகத் தன்னைத்தானே அறியும் அறிவாகவும், தன்னைத்தானே உணரும் ஆனந்த ஸ்வாநுபூதியாகவும் இருக்கலாம். தன்னை உணர்ந்து அறிவதே அங்கே ஆனந்தம்; தானே ஆனந்தம்!

இப்போது நாம் எதோடு நம்மையே ஐடின்டிஃபை பண்ணிக்கொண்டிருக்கிறோமோ (அதுவேதான் நாமாக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ) அந்த மனஸுக்குத் தன்னைத் தெரியவே தெரியாது. பிறவற்றைத்தான் தெரிந்து கொள்ளமுடியும் என்பதற்குக் ‘கான்வர்ஸா’க (எதிர்வெட்டாக), நம்முடைய நிஜ ஸ்வரூபமான ஆத்மாவாக உள்ளபோது தன்னை மட்டுந்தான் தெரியும்; பிற வஸ்து எதுவுமே தெரியாது.

தெரியாதது மட்டுமில்லை; ஆத்மாவுக்கு வேறான பிற வஸ்து என்று ஒன்று இல்லவே இல்லை என்பது ஞானவிசாரம் செய்தால் தெரியும். ஆத்மாநுபவ நிலையில் வேறொரு வஸ்து தெரியவில்லை என்றால், அது ஒருவன் கண்ணை மூடிக்கொள்ளும்போது லோகம் வெளியில் இருந்து கொண்டிருந்தாலும் அவனுக்கு மட்டும் தெரியாமற் போவதுபோல மட்டுமில்லை. ஸத்யமாகவே ஆத்மாவுக்கு வேறாக எதுவும் இல்லை. அதிலிருந்தே மாயையால் ஜீவமனஸ், அதற்கு செயற் களமாயுள்ள ஜகத் முதலியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன1.

கற்பிக்கப்பட்டவை என்பதால் அவை அடிப்படையில் தாமே ஸத்யமானவை அல்ல என்றாகிவிடுகிறது. நம்மிடமிருந்து ஒரு மாயத்தோற்றம் உண்டானால் அந்தத் தோற்றம் நாமில்லைதானே? அதாவது நம்மையே வேறே யாரோ என்று எண்ணிக் கொள்ளும்படியாக நம்மிடம் ஒரு வேஷம் கற்பிக்கப்பட்டால் அந்த வேஷம் நிஜமான நாமல்ல. அல்லவா? ஆனாலும் நாம் இல்லாமல் அந்த வேஷம் உண்டாக முடியாது. அதைக் கல்பிக்க ஒரு அடிப்படை இருந்தால்தான் இதன் மேல் அதை ஏற்றிக்காட்டமுடியும். ஆசார்யாள் இதை “அத்யாஸம்” என்று சொல்வார். Super – imposition என்கிறார்கள். Substratum என்கிற அடிப்படை “அதிஷ்டானம்.” அதன்மேலே அத்யாஸமாக இன்னொன்று ஏற்றிக்காட்டப்படுகிறது. வேஷம் போட ஒரு ஆஸாமி இல்லாவிட்டால் வேஷமேயில்லை என்கிறதுபோல அதிஷ்டான ஆத்மா இல்லாமல் அதன் மேல் அத்யாஸமாக ஆரோபணம் செய்யப்படுகிற (ஏற்றுவிக்கப்படுகிற, தோற்றுவிக்கப்படுகிற) மாய மனஸும், மாயமான ஜகத்தும் இல்லை. ஆனால், ஆத்மா அவற்றில் இல்லவே இல்லை. வேஷத்துக்குள் நிஜ ஆசாமி கொஞ்சமாவது இருக்கிறானா? வேஷத்தைக் கலைத்தபின் அந்தக் கதாபாத்ரத்துக்கு இருந்த பேர், அதன் கதை எதுவுமே துளிக்கூட இவனுடையதாக இல்லாமல் போய்த்தானே விடுகின்றன? அப்போதும் இவன்பாட்டுக்குச் கொஞ்சங் கூட பாதிக்கப்படாமல்தான் இருந்தபடியேதானே இருக்கிறான்? வேஷத்திலேயே நிஜ ஆஸாமி கொஞ்சமாவது இருந்தால், வேஷம் போன பிற்பாடு அந்தக் கொஞ்சம் போய் இவன் மூளியாகி இருக்கவேண்டுமே! அப்படிக் காணோமே!

இதே மாதிரித்தான் ஆத்மாவில் மாயா கல்பிதமாக, அதாவது வேஷமாக ஏற்பட்ட ஜீவ ஜகத்துக்கள் ஆத்மா இன்றி இருக்கவேமுடியாது என்றாலும் ஆத்மா இவற்றிலே இல்லை. இதைத்தான் பகவான்.

மத் – ஸ்தாநி ஸர்வ பூதாநி ந ச (அ)ஹம் தேஷு (அ)வஸ்தித:

அதாவது, “ஸர்வ பூதங்களும் என்னிடமே இருப்பு உடையன; ஆனால் நான் அவற்றில் இல்லை” என்கிறார்2.

“நான் அவற்றில் இல்லை” என்றால் ஆத்மா ஜீவஜகத்துக்களில் இல்லை என்று அர்த்தம். ‘ஆத்மா ஜீவனில் இல்லை என்றால் என்ன அர்த்தம்?’ என்றால், ஜீவனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மா மாயா கல்பிதத்தால் அந்த ஆத்மாவை அறியாத தனியான ஜீவத்வம் என்பதோடு, இன்டிவிஜுவாலிடியோடு இருக்கும் ஸ்திதி நிஜம் இல்லை என்று அர்த்தம். கல்பனை என்றாலே நிஜமில்லை என்றுதானே அர்த்தம்? ஸரி, இந்த ஜீவத்வம் (இன்டிவிஜுவாலிடி) என்பதை (ஆத்மாவை அறியாத) நாம் என்னவாக நினைத்து ‘ஐடின்டிஃபை’ செய்துகொண்டிருக்கிறோம்? மனஸாகத்தான். இப்போது என்னவோ நாம் தோண்டித் துருவிப் பார்த்து மனஸுக்கு மேலே உயிர் தத்வமாக ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடித்தாலும், இது நம்முடைய வாழ்க்கை நடைமுறையில் உண்மையாக நிலைக்கவில்லை. நாம் என்பது நம் மனஸ்தான் என்ற எண்ணத்திலேயேதான் நம்முடைய வாழ்க்கை நடக்கிறது.

வாழ்க்கை என்று எதைச் சொல்கிறோம்? சாப்பிடுவது, கல்யாணம் பண்ணிக்கொள்வது, குழந்தை குட்டி பெறுவது, படிப்பது, ஸம்பாதிப்பது, ஊர் ஊராய் ஓடுவது, பாட்டு கேட்பது, ஸினிமா பார்ப்பது, நாவல் படிப்பது என்று இப்படி அநேக கார்யங்களைப் பண்ணுவதைத்தான் வாழ்க்கை என்றும் ஜீவனம் என்றும் சொல்கிறோம். இந்தக் கார்யங்களில் நம்மைச் செலுத்துவதாக அநேக எண்ணங்கள் இருக்கின்றன. இந்த எண்ணங்களை யெல்லாம் பிறப்பிப்பது மனஸ். கார்யங்களில் நம் இந்த்ரியங்களை ஏவுவதும் அதுதான். ஆகையால் தனி ஜீவன் என்கிறவனின் ஸாரமாகத் தோன்றுகிற ஜீவனம் என்பதே மனஸை ஸென்டராக வைத்து நடத்தப்படுவதுதான். எண்ணத்தினாலும் கார்யத்தினாலும் உருவாகிற ஜீவனம் என்பது எண்ணமும் கார்யமுமில்லாத ஆத்மாவைக் குறித்ததாக இருக்க முடியாதுதானே? ஆக, என்ன முடிவுக்கு வருகிறோமென்றால், ஃபிலாஸபி முடிவில் நாம் எந்த முடிவுக்கு வந்தாலும் ஸரி, லோகத்திலே ஜீவனம், ஜீவத்வம் என்றால் அவை மனஸை வைத்துத்தான்!ஆகையால் “நான் ஜீவ ஜகத்தில் இல்லை” என்று பகவான் அடித்துச் சொல்கிறபடி ஆத்மா ஜீவ பாவத்தில் இல்லை என்றால், அது மனஸிலே இல்லை என்றே அர்த்தம்.

1 இவ்விஷயம் இவ்வுரையின் பிற்பிரிவுகள் சிலவற்றில் விவரிக்கபெரும்.
2கீதை 9.4 ‘தெய்வத்தின் குரல்’ முதற்பகுதியில் ‘கண்ணன் சொன்னான்; கம்பனும் சொன்னான்’ என்ற விரையும் பார்க்க.


Sage of Kanchi

Krish Ram
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top