• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Namma Sri Vijayendra Saraswathy swamigal.

Namma Sri Vijayendra Saraswathy swamigal.




11951316_1145110158839728_5505371137682731681_n.jpg




Source: Sage of Kanchi


Girija Jayaraman
 
Lectures in English on Purusha and Sri Suktam at Apparao Art Gallery

Lectures in English on Purusha and Sri Suktam at Apparao Art Gallery

From 9 th eptember 2015

7 Wallace Garden, Nungambakkam , Chennai 600006

Ph 9941012388

044 283 32226,

11870683_10156002932565721_3719514176341663420_n.jpg





Source:TAMBARAM THINNAI
 
ஸொந்த” ஸர்க்காரின் அத்துமீறல்!

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 129

ஸொந்த” ஸர்க்காரின் அத்துமீறல்!

ஆக, துருக்க – வெள்ளைக்கார ஆட்சிகளில்கூட நம் சாஸ்த்தர ஸம்மதமாகவோ, சாஸ்த்ர ஸம்பந்தமுள்ளதாகவோ நிர்வாஹம் நடக்காவிட்டாலும் அதை அப்பட்டமாக மீறும்படி ஹிந்து ஸமூஹத்தைக் கட்டாயப் படுத்தி ராஜாங்கச் சட்டம் செய்வதென்பது இல்லை. இந்த மஹா பெரிய அத்துமீறல் தம்முடைய ‘ஸொந்த’மான ஸ்வதந்த்ர ஸர்க்காரால்தான் செய்யப்பட்டு வருகிறது! தேச ஸ்வதந்த்ரம் என்று சொல்லிக்கொண்டே தங்களுடைய ஸொந்த வாழ்க்கைமுறை, எண்ணப் போக்கு எல்லாவற்றையும் வெள்ளைக்கார வழிக்குப் பரதந்த்ரமாக்கிவிட்டவர்கள் நடத்தும் குடியரசின் ரூபம் இப்படியிருக்கிறது.

மத ஸம்பந்தமில்லாத ஸெக்யுலர் ராஜாங்கம் என்று பேர். ஆனாலும் கிறிஸ்துவ மதம், துருக்க மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய மத ஸம்ப்ரதாயங்களின்படியே செய்யப் பூர்ண ஸ்வதந்திரம் தந்திருக்கிறதே தவிர ஹிந்துக்கள் என்று வரும்போது மட்டும் அவர்களுடைய மதக் கொள்கைகளை பாதிக்கும்படியாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே சட்டங்கள் வகுத்து வருகிறார்கள். இப்போது நடக்கும் ‘ஸெக்யூலரிஸம்’ என்பது ஹிந்து சாஸ்த்ரங்களை மீறுவது, அவற்றில் மரியாதையைக் கெடுப்பது என்பதுதான். முக்யமாக, சாஸ்த்ரகாரகர்களுக்குத் தெரியாத, அல்லது பிடிக்காத ஸமத்வம் தங்களுக்குத்தான் தெரியும், அவர்கள் பாரபக்ஷமாகப் பண்ணியதையெல்லாம் தாங்கள் சீர்படுத்தவேண்டும்’ என்ற அபிப்ராயத்தில் கார்யங்கள் செய்துவருகிறார்கள்.

கோபித்துக்கொண்டு ப்ரயோஜனமில்லை. சாந்தமாக. ஸாத்விகமாக எடுத்துச் சொல்வதுதான் நம் கடமை. ஈச்வரனை நம்பி, அவனை ப்ரார்த்தித்துக்கொண்டு, ‘நம்முடைய பெரிய மரபையும் நாகரிகத்தையும் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைத்துவிட்டால், அப்புறம் லோகம் பூராவுக்கும் வழிகாட்டியாக இருந்து அதுமாதிரியான ஒன்றை மறுபடி உண்டாக்கவே முடியாது’ என்பதைப் புதிதாக நிர்வாஹத்துக்கு வந்திருப்பவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொல்லவேண்டும். நல்ல வழிக்கு வருவார்கள் என்று நம்பி, கோபதாபமில்லாமல், ஈச்வர ஸ்மரணையோடு சொன்னால் நிஜமாகவே வழிக்கு வருவார்கள். புது நிர்வாஹம் சின்னக் குழந்தையாயிருக்கிறது. ஒரு குழந்தை எப்படி வீட்டுப் பெரியவரிடம், அவர் ஊருக்கே மதிப்பு வாய்ந்த ச்ரௌதிகள் என்றால்கூட, ஸ்வாதீனமாகப் போய் அவருடைய சிகையைப் பிய்த்து, குண்டலத்தை இழுத்து, அவர் மேலேயே அசிங்கம் பண்ணிக்கூட விளையாடுமோ அப்படித்தான் ஸொந்த ஸ்வாதீனத்தின் மேல் நம்முடைய குழந்தை நிர்வாஹஸ்தர்கள் பாரத தர்மத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறார்களென்றும், அஞ்சு வயஸாகி ஸ்கூலில் போட்டால் குழந்தை அடங்கி, விஷயங்களைப் புரிந்துகொள்கிறது போல், இன்னும் கொஞ்ச காலம் போனால், நாமும் விடாமல் “வாத்யார்” பண்ணிக்கொண்டு தர்ம ந்யாயங்களைச் சொல்லிக்கொண்டேயிருந்தால் ஸரியாகி விடுவார்களென்றும் நம்புவோம்.

ஆனாலும் தற்போது அவர்கள் பண்ணுவது தப்பான சாஸ்த்ரம் அல்லது ஸம்பரதாயத்தை ஸரி செய்வதாகநினைத்துக்கொண்டு செய்கிற தப்புதான்.

ஸொத்துத் தகுதி பற்றி

இதில் ஒரு அம்சமாகத்தான், ஸொத்து இருக்கிறவனுக்கு மட்டும்தான் சட்டஸபை, நகரஸபை ஆகியவற்றில் அங்கம் வஹிக்கத் தகுதி உண்டு என்றால் அது ஒரு Vested Interest (ஒரு குறிப்பிட்ட கும்பலின் நலனை மட்டும் நிலைப்படுத்தும் பட்சபாத அக்கறை) என்று கண்டனம் செய்து, ஸகல ஜனங்களுக்கும் தகுதி உண்டு என்று பண்ணியிருப்பது.

ஆனாலும் இப்போதும் அபேக்ஷகர் டெபாஸிட் தொகை என்று ஒன்று கட்டவேண்டும் என்று வைத்திருக்கிறார்கள். பொழுது போகாமல் எவன் வேணுமானாலும் தேர்தலுக்கு நின்றுவிடப் படாதே என்பதற்காக இப்படி வைத்திருப்பதாகச் சொல்லலாமாயினும், ஏழை இந்தியாவில் டெபாஸிட் தொகைக்குக்கூட வக்கில்லாமல் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்பதைப் பார்க்கும்போது இது இவர்கள் பெரிதாகச் சொல்கிற ஸமத்வத்துக்கு விரோதமானதுதான். பொருளில்லாத ஒரு அபேக்ஷகன் டெபாஸிட்டுக்காகவே ஒருவன் தயவை நாடவேண்டியதாகும். இதுவே ‘கரப்ஷ’னுக்கும், பட்சபாதச் சலுகைக்கும் வழி திறப்பதாக ஆகலாம். வரி கட்டும் தன் ஸொந்த நிலம், ஸொந்த மனைக்கட்டில் வீடு முதலிய ஜவேஜி அபேக்ஷகருக்கு இருக்க வேண்டும் என்று விதி செய்தபோது இந்த ஊழலம்சத்துக்கு இடமில்லை.


Sage of Kanchi

Krish Ram
 
தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 130

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 130

குறைவான லஞ்ச ஹேது

மநுஷ்ய ஸ்வபாவத்தைப் பார்த்தால் ஸொத்து, ஸ்வதந்த்ரம் உள்ளவன்தான் லஞ்சம் வாங்குகிற வாய்ப்பு குறைச்சல். இப்படி நான் சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்ளாமல் சண்டைக்கு வரலாம். பேர் பேராக ஆஸாமிகளைக் காட்டி, ‘லக்ஷம், பத்து லக்ஷம் என்று சேர்ந்த பிற்பாடும் இவர்களெல்லாம் இரண்டு கையாலும் வாங்கிக்கொண்டே இருக்கிறார்களே!’ என்று கேட்கலாம். ஆனாலும் இப்படி வாழ்க்கையே பணம்தான் என்று பணத்துக்காகப் பறக்கிற போக்கு நம்மிடையே ஏற்பட்டது ஸமீப காலத்தில்தான். ஆத்ம ஸம்பத்து தேய்ந்துகொண்டே வந்து, அதே ஸமயத்தில் நூதன நூதனமாக போக்யப் பொருள்கள் கடைக்கு வருவதாகவும், பேப்பர் ரூபாயென்றும், அதை லக்ஷம்,கோடி என்று பாங்க் என்பதாக ஒன்றில் எவ்வளவு வேண்டுமானால் போட்டு வைக்கலாம் என்றும் ஏற்பட்ட பிற்பாடுதான் நம் ஜனங்களுக்குப் பணமே குறி, பணம் சேர்ப்பதே வாழ்க்கை லக்ஷ்யம் என்று ஆனது. இதற்கு முந்தி, போக்ய வஸ்த்துக்களுக்கு ஓர் அளவு இருந்தவரையில், இருந்த வஸ்துக்களின் அநுபோகத்தையும் கட்டுப்படுத்தும் சாஸ்த்ரங்களில் பொதுவாக ஜனங்களுக்கு பயம் இருந்தவரையில், பாங்கில் ஸர்வ ஜாக்ரதையாக எத்தனை வேண்டுமானால் போட்டு வைத்துக்கொள்ள இடம் இல்லாத வரையில், நம்முடைய மக்களுக்குப் பணத்தில் இத்தனை ஆசை இருக்கவில்லை. அதனால் பணக்காரர்கள் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு அப்போது ரொம்பக் குறைவுதான். இப்போதுங்கூட, ‘கம்பேரடிவ்’வாக (ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு) ப் பார்த்தால், பணமே இல்லாதவன் பதவிக்கு வந்தால் ‘கண்டது காணாதது மாதிரி’ என்கிறபடி, வசதி படைத்தவனைவிட ஜாஸ்தியாகத்தான் பணத்தாசை பிடித்துக் கை நீட்டலாம். ஸமத்வம் என்று சொல்லிக்கொண்டு இம்மாதிரியான நடைமுறை உண்மைகளை மறந்து தர்மத்துக்கும் நீதிக்கும் ஹானி செய்வது உசிதமல்ல.

நம்முடைய ஸமத்வ முறையிலேயே காஷியர் மாதிரியான வேலைகளுக்கு ஸெக்யூரிடி கட்டவேண்டுமென்று வைத்துத்தானே இருக்கிறார்கள்? அப்போது அந்த ‘போஸ்ட்’டுக்கு ஏழை ‘டிஸ்க்வாலிஃபை’ தானே ஆகிறான்? இது எப்படி ஸமத்வம்? பணத்திலே புழங்குகிறவன் அவற்றைக் கையாடக்கூடும் என்ற நடைமுறை இயற்கையை இங்கே கருத்தில் கொண்டுதான், பொதுப்பணம் கையாடப்படக்கூடாதே என்பதற்காக இங்கே மட்டும் ஸமத்வத்தை விட்டுக்கொடுத்து, கையாடல் நேர்ந்தாலும் ஈடு கட்டும்படியாக ஸெக்யூரிடி டெபாஸிட் என்று ஒன்றை வைத்து ஒழுங்கு செய்திருக்கிறார்கள். பணத்தில் புழங்குகிறவன் கையாடல் செய்யக்கூடும் என்கிற மாதிரியான இன்னொரு யதார்த்த இயற்கைதான், ஜனங்களோடு புழங்குகிற ஒரு ஊர் ஸபைக்காரன் அவர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களுடைய ஸ்வய நலத்தைப் பேணும்படியான ஸெளகர்யம் ஏதாவது செய்து கொடுக்கக்கூடும் என்பதும்.

கையூட்டு

லஞ்சத்தைச் சோழ சாஸனத்தில் “கையூட்டு” என்று சொல்லியிருக்கிறது. ரூபாயிலே கை கொங்சம் ட்ரிக் பண்ணி ட்ராமா ஆடுவதை, விளையாடுவதைக் “கை ஆடல்”, கையாடல் என்கிறோம். கையில் ஊட்டிவிடுகிற மாதிரி ரஹஸ்யமாகப் பணத்தை வைத்து லஞ்சம் கொடுப்பதைக் “கை ஊட்டு” என்று அக்காலத்தில் சொல்லி வந்திருக்கிறார்கள். வாயில் சாதத்தை ஊட்டும்போது அது என்ன சாதம், அதற்குள்ளே என்ன “தொட்டுக்கொள்ள” ஒளித்து வைத்திருக்கிறது என்பது எதுவும் வெளியில் தெரியாது. தட்டிலோ, கையிலோ போட்டு அதை ஒருவர் வாயிலே போட்டுக்கொள்ளும்போது பலபேருக்குத் தெரிவதுபோல இல்லாமல், யாருக்கும் தெரியாமல் ஊட்டிவிட்டுப் போய்விடலாம். இதேபோல யாருக்கும் தெரியாமல், எந்தக் கணக்கு வழக்கிலும் வராமல் பணத்தைக் கையிலே ஊட்டுகிற மாதிரி அழுத்திவிட்டுப் போவது கையூட்டு! சாதத்தை வாய் முழுங்குகிற மாதிரி பணத்தைக் கை முழுங்கிவிடும்!

கையாடல் கூடாது என்பதற்காக ஸெக்யூரிடி கேட்பது போலத்தான், கையூட்டுப் பெறும் வாய்ப்பைக் குறைப்பதற்காகவே ஊர்ஸபைக்காரனாகிறவனுக்கு ஏதோ கொஞ்சம் பூ ஸ்திதி, வீடு என்றெல்லாம் இருக்கவேண்டுமென்று விதி செய்திருப்பது. ஆகவே இது ஸரியானால் அதுவும் ஸரிதான். இங்கே ஸமத்வம் அல்ல நடத்திக் காட்ட வேண்டிய விஷயம் – தூய்மையான நிர்வாஹமே விஷயம். ஸபைக்காரன் பொதுப்பண நிர்வாஹத்திலே தப்பு செய்துவிட்டானென்றால் அதனால் ஏற்படும் நஷ்டத்துக்கு அவனுடைய ஸொத்திலிருந்து ‘அட்டாச்’ செய்துவிடவேண்டும் என்பதாக வைத்து, இதற்கு ஸெக்யூரிடி மாதிரிதான் ஸொத்துத் தகுதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கே தனி ஆளின் கௌரவ அகௌரவங்களைக் குறித்த ஸமத்வ வாதத்துக்கு இடமில்லை, ஓரு ஊரின், ஒரு ஜனஸமூஹத்தின் ஸொத்து ந்யாயமாகப் பரிபாலிக்கப்படவேண்டும் என்ற தர்ம நியாயமான தத்வம்தான் இங்கே கவனித்துப் பேணப்படவேண்டிய விஷயம் என்பதைக் கருத்தில் கொண்டு அப்படியே செய்திருக்கிறார்கள்.

அதோடுகூட ஒரு ஊரிலே நிலபுலன், வீடு வாசல் உள்ளவன் என்றால் அவன் பொறுப்பில்லாமல் அதைவிட்டு ஓட மாட்டான். ஆனபடியால் இப்படிப்பட்டவன் ஊரோடு இருந்து, ஊரின் கஷ்ட நஷ்டங்களை எப்போதும் தெரிந்து கொள்ளும்படியிருக்கும்.

உழைத்துப் பணம் போட்டு ஒரு உடைமையைப் பெற்றவன் அதனிடம் வைத்துள்ள பற்றைப்போல, அக்கறையைப்போல, ராஜமான்ய நிலம் பெற்றவனுக்கு அதனிடம் இருக்காது. பிதுரார்ஜிதமாக ஒரு நிலமோ, வீடோ, வந்தால் அதனிடமும் ஒரு தினுஸான வாஞ்சையே இருக்குமூ. அம்மாதிரி grant -ஆக, gift -ஆகப் பெற்றதில் இராது. தனக்காக்கும் பஹுமானமாய் வந்தது என்பதில் தற்காலிகமாக ஒரு மோஹம் இருந்தாலும் அது நாள்பட்டு உறுதியான பிடிப்பாக நிற்காது. வெறும் ராஜமான்ய நிலத்திலேயே காலம் கழிக்கிறவன் அதைவிட்டு ஓடவும் இடம் ஏற்படும். இதனால்தான் ஸொந்த அல்லது பிதுரார்ஜித நிலத்தை உடைமையாகப் பெற்றிருந்து அதற்கு வரி கட்டுகிறவனாக இருக்கவேண்டும் என்ற விதி செய்திருக்கிறது.

வேத வித்யையில் சிறப்புப் பெற்றவர்களாகவும், வேத பாஷ்யம் போதிக்கிறவர்களாகவும் இருக்கப்பட்டவர்கள் மற்றவர்களைவிடவும் த்ரவ்ய சபலத்துக்கு ஆளாகாமல், போதுமென்ற மனஸோடு எளிமையாக வாழ்ந்துவருவதை அந்நாளில் கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள். அதனால் அவர்களுடைய நடத்தை சுத்தத்தில் கொண்ட அதிகப்படி நம்பிக்கையின் பேரில் இப்படிப்பட்டவர்களுக்கு மட்டும் மிகக் குறைச்சலான நிலபுலன் இருந்தாலும் போதும் என்று விதியை ‘ரிலாக்ஸ்’ செய்து, நிபந்தனையைத் தளர்த்திக் கொடுத்திருக்கிறது. பொதுவாகக் “கானிலத்துக்கு மேல் நிலமுடையான்” என்று யோக்யதாம்சம் நிர்ணயித்ததற்கு sub-clause- ஆக (உபஷரத்தாக) , அதில் பாதியான “அரைக்கானிலமே உடையானாயினும் ஒரு வேதம் வல்லானாய், நாலு பாஷ்யத்திலும் ஒரு பாஷ்யம் வக்காணித்தறிவான்” தேர்ந்தெடுக்கப்படலாம். என்று சேர்த்திருக்கிறது.

இருந்தாலும் இவனுக்கும் கூட ரிலாக்ஸேஷன்தான். எக்ஸெம்ப்ஷன் இல்லை. இவனுக்கும் ஸொத்து கொஞ்சமாவது இருந்தாக வேண்டுமென்றே வைத்திருக்கிறார்கள்.

Sage of Kanchi

Krish Ram

 
Thirupunavasal Maha Kshethram Kumbabishekam Live Telecast – Sep. 3 2015

Thirupunavasal Maha Kshethram Kumbabishekam Live Telecast – Sep. 3 2015

Jaya Jaya Shankara Hara Hara Shankara – The much anticipated day has arrived at last. Lots of hard work and sacrifice by many people especially Smt. Mahalakshmi Mami and Shri. Subbiah Gurukkal. The program is telecast live both by Sankara and Swasthik TV’s.

Please watch Temple’s Maha Kumbabhishekam LIVE Telecast on WWW.SWASTHIKTV.COM from 7.00AM (Indian Time) onwards on 3rd September.

For any details about LIVE Telecast – please contact : Smt. Sangeetha – 99402 92777

SANKARA TV LIVE telecast – on 2nd Sep. from 7.30 pm to 8.30 pm, on 3rd Sep. from 7.30 am to 8.30 am.
For more information on this temple and other ancient temple renovation projects click the following Link:

http://ancienttemples.webs.com/8-thirupuunavasal

This link is listed in the right side of this blog under ‘Important Links’ Menu option.

Watch and get the blessings of our Periyavas, Vruthapureeswarar Swami, and Ambal!

For temple visit or to get involved in this Maha Kshethram’s Kumbabishekam’s activities, please contact:
Smt. Mahalakshmi Mami Contact Info.http://ancienttemples.webs.com/contact-info.

Shri. Subbiah Gurukkal
– 9597135774.


Siva Siva, Ram Ram!


https://mahaperiyavaa.wordpress.com...thram-kumbabishekam-live-telecast-sep-3-2015/
 
Atirudra Maha Yagna at Hindu Temple of Atlanta – Nov 18-28, 2015

Atirudra Maha Yagna at Hindu Temple of Atlanta – Nov 18-28, 2015

Mahesh September 1, 2015

Dear Readers,

On behalf of Hindu Temple of Atlanta, I have a great pleasure in inviting you all to attend their Atirudra Maha Yagnam planned between November 18 – 28, 2015. All US devotees are invited to attend.

As being part of similar organizing committees, I can understand how difficult it is to put together a 2-day Maharudram event in US. Availability of ritwiks, vedic pundits, logistics of dealing with temples etc despite your regular work is so difficult. Here, Atlanta friends are doing an atirudram – simply extraordinary! One great thing about these events – it has become like a family event in US. It doesn’t matter which Maharudram/atirudram event you attend, you end up seeing lots and lots of familiar faces and it is always an delight to sit and chant Sri Rudram with them.

For an event like this, getting the exact count of ritwiks and chanting is important. To ensure that the event is successful, the organizing committee is sponsoring out of station ritwiks’ travel expenses to attend this event. Please refer to the FAQ section (http://htaatirudram.org/PageContent.aspx?Page=faq) for more info. Ritwiks across the states in US should plan to attend this mega event and receive the blessings of Lord Parameswara and make this grand event a great success.

For more info, please contact the organizers.

Om Nama Sivaya!

Please open the link to view the invite


https://mahaperiyavaa.wordpress.com...na-at-hindu-temple-of-atlanta-nov-18-28-2015/
 
ஸொத்துப் பரிபாலன அநுபவம் அவசியம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 131

ஸொத்துப் பரிபாலன அநுபவம் அவசியம்

இப்படி ஊர் நிர்வாஹ ஸபைக்காரர்களுக்கு ஸொத்தினால் தகுதி ஏற்படுத்தியிருப்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. இவர்கள் பொதுச்சொத்துக்களைப் பராமரிக்கவும், வகையறிந்து செலவழிக்கவும், முறைப்படி கணக்கு வைத்துக்கொள்ளவும் அறிந்திருக்க வேண்டுமல்லவா? எனவேதான் ஸொந்தச் சொத்தின் பரிபாலனத்தில் இவர்களுக்கு அநுபவம் இருந்தால் நல்லது என்று இப்படி ஷரத்து செய்திருக்கிறார்கள். திடீரென்று ஸொந்தமாக ஒரு ஸொத்தைப் பெற்றவன் அதை ‘தாம் தூம்’ என்று செலவு செய்யும் வாய்ப்பு எப்படி அதிகமோ, அப்படியே ஸொத்தில்லாதவனிடம் ஊர்ப் பொதுச் சொத்தின் நிர்வாஹத்தைத் தந்தாலும் ‘தாம் தூம்’ தர்பார் நடத்தக்கூடும். அல்லது இன்னொரு ‘எக்ஸ்ட்ரீ’மாக ரொம்பவும் யோசனை பண்ணிப் பண்ணி ரொம்பவும் சுஷ்கமாகவே பட்டுவாடா பண்ணி, ‘பப்ளிக் வெல்ஃபேர்’ (பொது நலப்பணி) அதற்குரிய ஜரூருடன் நடக்கவிடாமல் செய்து விடுவான். இதனாலெல்லாந்தான் ஸொத்துடமை ஒரு க்வாலிஃபிகேஷனாக வைக்கப்பட்டது.

தன் மனை” என்றதன் காரணம்

‘வரி கட்டும் ஸொத்தின் பரிபாலனத்தில் ஒருத்தனுக்கு உள்ள அக்கறை, அபிமானம், சிக்கனம் முதலியன வரி கட்டாத ஸொத்து விஷயமாக இருக்காது, எனவே இப்படிப் பட்டவனிடம் ஊர்ஸொத்தை ஒப்படைக்கப்படாது’ என்பது போலவே இன்னொன்று. ஸொந்த பூமியிலே வீடு கட்டிக் கொள்ளாமல் ஏதோ புறம்போக்கை வளைத்துப் போட்டு தன்னுடையதாய் ஜீர்ணம் செய்துகொண்டு அதிலே வீடு கட்டிக்கொண்டவனென்றால், இப்படி வளைத்துப் போட்டு ஏப்பம் விடுகிற ஸமாசாரத்தை நாளைக்கு ஸபையின் வ்யவஹாரத்திலும் அவன் மேற்கொள்ளக்கூடும். அதனால் தான் க்ராம ஸபைக்கு மெம்பராகிறவன் “தன்மனையிலே அகமெடுத்துக் கொண்டிருப்பவ”னாக இருக்க வேண்டுமென்று விதி செய்திருக்கிறார்கள். பொது வ்யவஹாரத்தின் சுத்திக்காக இப்படியெல்லாம் தர்மவேலி போட்டிருப்பதை ஜனநாயகம் என்ற மயக்கத்தில் கண்டனம்செய்வதும், அவிழ்த்து விடுவதும் ஜன ஸமூஹத்துக்குச் செய்கிற அபகாரமாகவே முடியும்



Sage of Kanchi

Krish Ram
 
வயதுத் தகுதி -தெய்வத்தின் குரல் (நான்காம&#3021

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 132

வயதுத் தகுதி

அடுத்தபடியாக வயஸுத் தகுதி. போனால் போகிறதென்ற இதற்குமட்டும் நம் ஜனநாயகக் குடியரசிலும் ஒரு கீழ் வரம்பு, இருபத்தைந்தோ முப்பதோ எதுவோ ஒன்று வைத்துவிட்டு மேல் வரம்பு இல்லாமல் விட்டிருக்கிறார்கள். “இளம் தலைமுறை”, “வருங்கால வாரிசு” என்றெல்லாம் பெயரைக் கொடுத்து அநுபவமில்லாத சிறுவர்களையும் தங்கள் தங்கள் கட்சிகளுக்குள் இழுத்துக்கொள்ளும் போக்கு தற்போது உண்டாகி இருக்கிறது. இவர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காகக் கீழ் வரம்பை இன்னம் கீழே கொண்டுபோனாலும் போகலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களைப் போலவே தேர்ந்தெடுப்பவர்களான ‘voter’ (வாக்காளர்)களுக்கும் வைக்கப்பட்டுள்ள ஒரே தகுதி கீழ்வரம்பு வயஸுதான். இருபத்தொன்றில் ‘மேஜர்’ என்பதைப் பதினெட்டாக மாற்றி, அப்போதே வோட்டுரிமை தந்து வோட்டர் ஆக்கிவிட வேண்டுமென்று இப்போது ஒரு பேச்சு இருப்பதாகத் தெரிகிறது.

தற்காலக் ‘கண்டதே காட்சி’க் கோலத்தில், வாழ்க்கையில் அடிபட்டு, கஷ்ட ஸுகங்களை அலசிப் பார்த்துப் புரிந்துகொள்ளும் அநுபவ ஞானம் சென்றுபோன தலைமுறையினரையும்விட புதுத் தலைமுறையினருக்கு ‘லேட்’டாகத்தான் உண்டாவதாகத் தெரிகிறது.

“மடத்துக்குள்ளே முட்டாக்குப் போட்டு உட்கார்த்தி வைத்திருக்கிற உனக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? அந்த ஸயன்ஸ், இந்த ஸயன்ஸ், புதுப்புது நிர்வாஹ முறைகள், வியாபார முறைகள், டெக்னாலஜிகள், கலை ஆராய்ச்சிகள் என்று நாளுக்கு நாள் நாங்கள் என்ன போடு போடுகிறோம் தெரியுமா? இதனால் ஜெனரல் நாலெட்ஜ் லெவலே (பொது அறிவு மட்டமே) ரொம்பவும் உசந்துவிட்டது. ஸ்கூல் பசங்கள்கூட யூனியன், பார்லிமென்ட் எல்லாம் வைத்துக்கொள்கிற அளவுக்கு எல்லாருக்கும் அறிவு வெளிச்சம் கொடுத்துவிட்டோமாக்கும்” என்று சொல்லலாம்.

இதெல்லாம் உண்மையாக இருக்கலாம். ஆனால் இது அவ்வளவுமே மூளையும், தாற்காலிக இந்த்ரியஸுகமும் ஸம்பந்தப்பட்ட விஷயம்தான். “வாழ்க்கை என்ன? எதனால் அது ஸாரப்படும்?” என்பதைப் புரிந்துகொள்ள வைக்க இவை ஒன்றும் உதவவில்லை. அதோடு இல்லை. நேர்மாறாக, இந்தக் கண்டுபிடிப்புக்களின் ஜ்வலிப்பில் உண்டான glare -னால் (கண் கூசலினால்) வாழ்க்கையை உள்ளபடிப் புரிந்துகொள்வதில் ஜனங்கள் முன்னைவிட பின்னேதான் போய், அநுபவத்தில் குறைந்தவர்களாக ஆகிவருகிறார்கள். என்னை மடத்துக்குள்ளே முட்டாக்குப் போட்டு உட்கார்த்தி வைத்திருந்தாலும் பலதரப்பட்ட ஜனங்களும் இங்கே வந்து குறைகளைச் சொல்லிக் கொள்கிறார்கள் அல்லவா? இவர்களுடைய பலவிதமான ப்ரார்த்தனைகளைக் கேட்கிறபோது, ப்ரச்னைகள் என்று நினைத்துக் கொண்டு இவர்கள் ஒப்பித்துவிட்டுப் போகிறவற்றைப் பார்க்கிறபோது, போன தலைமுறையைவிட இப்போது எப்படி ஜனங்கள் உலகத்தைப் புரிந்துகொள்ளும் அநுபவ ஞானத்தில் பின்னே போய்க் கொண்டிருக்கிறார்களென்று நன்றாகத் தெரிகிறது. அநகே ஸந்தர்ப்பங்களில், “என்ன இத்தனை வயஸானவர் இப்படி உலகத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளாதவராக இந்த மாதிரி கேட்கிறாரே? நாற்பது வருஷம் முந்தி நாம் பட்டத்துக்கு வந்த நாளாக* ப்ரார்த்தனைகள் – லௌகிக விஷயமாகவுந்தான் – நிறையக் கேட்டே வந்திருக்கிறோம். ஆனாலும் அந்தக் காலத்தில் இந்த மாதிரி இந்த வயஸுக் கட்டத்திலிருந்தவர்கள் கேட்டிருப்பார்களா?” என்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த நிலையில் வோட்டர்கள், அபேக்ஷகர்கள் ஆகியோருடைய ஏஜ்- லிமிட்டை மேலும் குறைப்பது யதார்த்தத்துக்குப் பொருந்தாததாகவே படுகிறது.

பொது விஷயங்களில் ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டுமானால் அதற்கு உலக ஞானமும் வாழ்க்கையநுபவமும் இருக்கவேண்டும். நன்றாக அடிபட்டு இவற்றை அறிவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு வயஸு முதிர்ச்சி தேவைப்படுகிறது. இவ்விஷயத்தை தீர்க்கமாக அலசிப் பார்த்துத்தான் அக்காலத்தில் ஆயிரம் வருஷத்துக்கு முந்தி, முதல் கல்வெட்டுப்படி அபேக்ஷகருக்கு முப்பது வயஸு என்று கீழ் வரம்பு கட்டினவர்கள் அப்புறம் இரண்டு வருஷம் மேலும் நடைமுறைகளைப் பார்த்துப் புனராலோசனை செய்ததில் அதுகூடப் போதாது என்று இரண்டாம் கல்வெட்டுப்படி முப்பத்தைந்து என்று உயர்த்தியிருக்கிறார்கள். இப்போது பச்சைக் குழந்தைகளைக்கூடத் தங்கள் தங்களுக்கு ஸாதகமாகப் பாலிட்டிக்ஸில் இழுத்துக்கொள்ள வேண்டுமென்பதே ஒவ்வொரு கட்சியின் தலைவர்கள் என்கப்பட்டவர்களுக்கும் அடிப்படை எண்ணமாக இருப்பதால் தற்போது செய்கிற புனராலோசனைகளோ வயஸைக் குறைப்பதில்தான் நோக்கமாயிருக்கின்றன.

தற்போது வயஸுக்கு மேல்வரம்பே இல்லை. ஆனாலும் அப்போதோ இயற்கையை கவனித்து இவ்விஷயமாகவும் விதி செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு வயஸுக்குமேல் போய்விட்டால் வ்ருத்தாப்யத்தில் ஓய்ச்சல் வந்துவிடுகிறது. ஞாபக மறதி ஏற்படுகிறது. இமமாதிரித் தளர்ந்து உடம்பிலும் உள்ளத்திலும் ஆடிப்போவதை “ஸெனிலிடி” என்கிறார்கள். வியாதிகளும் அப்போது அதிகம் பிடுங்கி எடுக்கின்றன. இவற்றோடு பழங்காலத்தில் அந்த வயஸில் ஆரம்பநாளிலிருந்து பின்பற்றி வந்த சாஸ்த்ர அப்யாஸங்களினால் விவேக வைராக்யாதிகளில் புத்தி அதிகம் போகத்தொடங்கியிருக்கும். அதனால் எதிலும் ரொம்பப் பட்டுக்கொள்ளாமல், தப்புத் தண்டா நடந்தால்கூட, ‘என்னமோ எல்லாம் ஈச்வர லீலை’ என்று விட்டுவிடும் மனோபாவம் தோன்றியிருக்கும். பொது நிர்வாஹத்தில் இப்படிப்பட்ட மனப்பான்மை கூடாதாயிற்றே! நல்ல உணர்ச்சி வேகமும் கண்டிப்பும் கார்யச் சுருசுருப்பும் இருக்கவேண்டுமே! அதனால்தான் வயஸுக்கு ‘லோயர் லிமிட்’டோடு ‘அப்பர் லிமிட்’டும் விதித்திருக்கிறது.

முதலில் அறுபது என்று நிர்ணயித்திருக்கிறார்கள். அப்புறம் இன்னம் ஆழமாகச் சிந்தனையைச் செலுத்தி, இரண்டு வருஷம் நடைமுறையையும் பார்த்ததில் எழுபது என்று உயர்த்தியிருக்கிறார்கள். அறுபதுக்கு மேலே ரொம்ப ஓடி ஆட முடியாதே என்று முதலில் அபப்டி நிர்ணயித்திருப்பார்கள் போலிருக்கிறது. அபப் §றம் பார்த்ததில், ஓடி ஆட முடியாவிட்டாலும் வயஸு ஏற ஏற எழுபதுவரைகூட அநுபவ முதிர்ச்சி நன்றாக வளர்ந்து பொது விஷயங்களில் புத்திமதி சொல்லவும், திட்டங்கள் சட்டங்கள் வகுக்கவும் திறமை ஜாஸ்தியாகிறது என்று கண்டிருக்கிறார்கள். அறுபது வயஸு ஆகி ஷஷ்ட்யப்த பூர்த்தி பண்ணுகிறார்களே அதோடு அநேகமாக ஓடி ஆடுவது குறைய ஆரட்மபிக்கிறது. அதனால்தான் முதலில் அப்போது ‘ரிடயர்மென்ட் ஏஜ்’ வந்துவிடுகிறது என்று வரட்மபு வைத்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓடி ஓடி உடம்பால் வேலை செய்வது குறைந்த பிற்பாடுதான், ஒருவேளை இதனாலேயே ‘கன்ஸர்வ்’ செய்யப்படுட்ம எனர்ஜி (சேமிக்கப்படும் சக்தி) யாலோ என்னவோ, அறிவு நல்ல முதிர்ச்சியுடன் ஆற்றலோடு செயல்படுகிறது. இப்படி ஒரு பத்து வருஷம் இருந்தபின் ஸெனிலிடி – “வயஸான தோஷம்” என்கிறார்களே, அது – உண்டாகிறது, அல்லது புத்தி ஞான வைராக்யத்திலே போய்விடுகிறது. அறுபது வயஸு என்று நிர்ணயம் செய்தபின், ஸபையில் அங்கத்தினர்களாக இல்லாமல் அந்த வயஸுக்கு மேலேபோன ஊர்ப் பெரியவர்கள், ஸபை மூலமாக இல்லாவிட்டாலும் தனிப்பட ஊர் நலனுக்கான நல்ல யோசனைகள் தரமுடிவதை கவனித்திருப்பார்கள் போலிருக்கிறது. அதனால், “அதிகம் ஓடியாடிச் செய்ய வேண்டியதைச் செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, executive wing -ன் அதிகாரிகள், சிப்பந்திகள் அதற்கென்று இருக்கிறார்கள். ஸபைக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே ஆர அமர (‘அமர’ என்றாலே ‘உட்கார்ந்து’ தானே?) யோசித்துச் சட்ட திட்டங்கள் போடுபவர்களாகவும், அவ்வப்போது மட்டும் ஊரைச் சுற்றிக் கார்யங்களை இன்ஸ்பெக்ட் பண்ணச் சக்தியுடையவர்களாகவும் இருந்தால் போதும்” என்று புனராலோசனை செய்து, இரண்டு வருஷத்துக்கு அப்புறம் அறுபதை எழுபது என்று ‘அமென்ட்’ செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

* இது ஏறக்குறைய நாற்பதாண்டு முன் ஸ்ரீ சரணர் அருளியது. அவரது வாக்கு தற்போது மேலும் உறுதிப்பட்டு த்வனிக்கிறது.



Sage of Kanchi


Krish Ram
 
Hindu Temple of Kentucky invites you all for Maharudram event – Sep 4, 5 & 6

Hindu Temple of Kentucky invites you all for Maharudram event – Sep 4, 5 & 6


As per the latest update yesterday, 20 more ritwiks are needed to get the 121 count. Any qualified ritwiks in US are requested to do their best to participate in this event and make this event a successful one.

On behalf of Hindu Temple of Kentucky, I have a great pleasure in inviting you all for the Maharudram event that has been planned for September 4, 5 & 6.

Sri Rudram is a yajur vedic hymn in praise of Lord Shiva. This is accepted by many as the greatest form of worship for universal peace, prosperity and salvation.Maharudram will be performed by 121 Ritwiks chanting Sri Rudram 11 times totaling 1331 times.

The organizing committee has been doing a great job in making every arrangements. They definitely need more qualified ritwiks to sign up to get to the 121 counts. If you are a qualified ritwik and interested in participating in this event, please contact one of the following members of the committee. Please visit this link for more details

Ritwik accommodation and airport pick up will be taken care of.

https://mahaperiyavaa.wordpress.com/2015/09/03/hindu-temple-of-kentucky-invites-you-all-for-maharudram-event-sep-4-5-6-2/

 
Happy Sri Krishna Jayanthi

Happy Sri Krishna Jayanthi

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy Sri Krishna Janmashtami to all devotees. Please find below on what Sri Periyava has said about Sri Krishna Jayanthi in Deivathin Kural Volume 1

. RadheKrishna! Ram Ram.


krishna-janmashtami-1.jpg



வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ஸ்ரீ ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும்.


ஸ்ரீ கிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், “உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக் கொண்டிருக்கிறான்” என்கிறார்.

எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது. இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணபக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தான்.

நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல்; தக்ஷிணாயனம் அவர்களுக்கு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது. இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்லபக்ஷம் அவர்களுக்குப் பகல்; கிருஷ்ணபக்ஷம் இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பட்சம் பித்ருக்களுக்கும் இரவாகிறது.

அஷ்டமி பக்க்ஷத்தின் நடுவில் வருவதனால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது? ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் நிசி. எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி ஸ்ரீ கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை.


அவனுடைய பெயரும் கிருஷ்ணன்; ‘கிருஷ்ண’ என்றால் ‘கறுப்பு’ என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு.

இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி. நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியானதால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது.

அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது.

அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீமத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.


உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலகஉயிர்களுக்கெல்லாம் ஞான ஒளி தருகிற கண்ணாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக்கண்ணையும் புறக்கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண்; கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண்; அந்த ஒளியும் அவன்தான்.


ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரஸிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்ஸனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான ஸத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்ற போது) காளை மாடுகளை அடக்கிக் காட்டுபவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, துரௌபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக் கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன், குசேலர் போன்ற அநாதர்களை ரக்ஷிக்கும் பக்த வத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன்,

பீஷ்மருக்கு மாத்திரமல்ல – தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுப்பவன் – இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.

உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாக அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சனும்,

கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களைக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம். ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஓர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைளே சுவாரஸ்யமாக இருக்கும்.

ஸ்ரீ கிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவரவேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான்.


பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகைகளான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.


சிவராத்திரிக்கும் கிருஷ்ணாஷ்டமிக்கும் இடையே சரியாக 180 நாள் இடைவெளி இருக்கும். ஒன்றிலே ஞான ஜோதியான லிங்கம் உதித்தது. அதுவேதான் இன்னொன்றில் வெளியிலே எல்லாம் கருமையாக வைத்துக்கொண்டாலும், உள்ள ஞானத்திலும் கருணையிலும் ஜோதியான கண்ணனாக வந்தது.


https://mahaperiyavaa.wordpress.com/2015/09/03/happy-sri-krishna-jayanthi/
 
வ்ருத்த’ லக்ஷணம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 133

வ்ருத்த’ லக்ஷணம்

நடுத்தர வயஸான முப்பத்தைந்திலிருந்தே ஸபை அங்கத்தினராகலாமாயினும் பொதுவாக சோழர் காலத்துக்கும் முன்னாலிருந்து ஐம்பது வயசுக்கு மேலே போய் ‘வ்ருத்தர்’ கள் என்று குறிப்பிடும்படியாக இருந்தவர்களின் யோசனைதான் அநுபவ கனம் வாய்ந்தது என்பதாக அதிகம் மதிக்கப்பட்டு வந்திருக்கிறது. ‘Elders’ என்று மேல் நாட்டில் கூட ஒரு தனி மதிப்பு தருகிறார்கள் அல்லவா? ஸபா லக்ஷணத்தைச் சொல்லும் ஒரு பழைய ச்லோகத்திலே வயஸான பெரியவர்களுக்குத்தான் விசேஷத் தகுதி கொடுத்திருக்கிறது:

ந ஸா ஸபா யத்ர ந ஸந்தி வருத்தா:

ந தே வருத்தா : யே நா வதந்தி தர்மம் |

ந ஸ தர்மோ யத்ர ந ஸத்யம் அஸ்தி

ந தத் ஸத்யம் யத்-சலேநாநுவித்தம் ||

ஒரு ஸபையில் வ்ருத்தர்கள் இல்லாவிட்டால் அது ஸபையே ஆகாது. (ஸபையைப் பெண்பாலில் ‘ஸா’ என்று சொல்லியிருக்கிறது. தமிழில் அஃரிணையாகச் சொல்கிற அநேக ஸமாசாரங்களை ஸம்ஸ்க்ருதத்தில் ஆண்பால், பெண்பாலாகச் சொல்லியிருக்கும்.

நதியைப் பெண்ணாகச் சொல்லியிருப்பது, கங்கா, யமுனா, காவேரி முதலான பேர்களிலிருந்தே எல்லாருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதிலேயும்கூட ஒரு வித்தியாஸமுண்டு. கிழக்கு முகமாக ஓடுகிறவற்றுக்குத்தான் ‘நதி’ என்று பேர் கொடுத்துப் பெண்பாலாகச் சொல்வது. மேற்கு முகமாக ஓடுவது ‘நதி’ அல்ல; அது ‘நதம்’. உதாரணமாக, நர்மதையும் நாம் பெண் தேவதா ரூபத்திலேயே சொன்னாலும் அது மேற்கு முகமாய் ஓடுவதால் ஆண்பாலான நகம்தான். இங்கிலீஷில் கூட பல அசேதன வஸ்துக்களை ‘ந்யூடர் ஜென்டரா’ க வைக்காமல் ஆண்பால், பெண்பால்களாகச் சொல்கிறார்கள்.

Ship-கப்பலை ‘she’ என்கிறார்கள். அந்த மாதிரி இங்கே ஸபை என்பதை ஸ்த்ரீலிங்கமாகச் சொல்லியிருக்கிறது. ‘ஸபை என்றால் பேச்சுத்தானே முக்யம், அதனால்!’ – என்று வேடிக்கையாய் வைத்துக்கொள்ளலாம்.) என்ன சொல்லியிருக்கிறதென்றால்,


ந ஸா ஸபா யத்ர ந ஸந்தி வருத்தா:

‘எதிலே வயஸான பெரியவர்கள் இல்லையோ அது ஸபையே ஆகாது’- அதாவது, வயஸான பெரியவர்கள் அங்கம் வஹிப்பதே முறையான ஸபை. ‘வ்ருத்தா:’ என்பதை வயஸான பெரியவர்கள் என்று சொன்னேன். வயஸினாலே மட்டும் பெரியவர்களாக இருந்துவிட்டால் போதுமா? அவர்களை ‘ஸபேயர்’களான வ்ருத்தர்கள் என்கலாமா ? கூடாது, கூடாது.

ந தே வருத்தா: யே நா வதந்தி தர்மம்

‘எவர்கள் தர்மத்தை எடுத்துச் சொல்லவில்லையோ அவர்கள் வ்ருத்தர்களாக மாட்டார்கள்’. செங்கல்லையும் காரையையும் போட்டு மண்டபம் காட்டி அதிலே யுவர்களாயும், மத்யமா வயசுக்காரர்களாகவும் இருப்பவர்களை மெம்பர்களாகக் கொண்டு விவாதங்கள் நடத்திவிட்டால் அதனால் அது ஸபை ஆகிவிடாது. வ்ருத்தர்கள் இருந்தால்தான் அது ஸபையாகும். அதேபோல, வயஸு எழுபது ஆச்சு. பல்லுபோச்சு, தலை நரைத்துவிட்டது என்றால் மட்டும் ஒருத்தர் வ்ருத்தராகிவிட மாட்டார். இப்படிப்பட்ட ஒரு கிழவர் காரஸாரமாகப் பேசுகிறார், ரொம்ப விஷயம் தெரிந்து வைத்திருக்கிறாரென்றால்கூட ஸபைக்குத் தகுதியுடைய வ்ருத்தராக மாட்டார். எத்தனை விஷயம் தெரிந்தாலும் அதெல்லாம் முடிவாகக் கொண்டுசேர்க்கவேண்டிய தர்மம் தெரிந்தவரா? அப்படிப்பட்டவராயிருந்தால்தான் ‘வ்ருத்தர்’ என்ற பேருக்கு உண்மையில் உரியவராகி ஸபையில் அங்கம் வஹிக்க யோக்யதை பெறுவார்.


Sage of Kanchi

Krish Ram
 
20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களு&#299

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்- மஹா பெரியவா

மொத்தம் 20 வகை பிரதோஷங்களும் அதன் பலன்களும்:
சோம வாரம் எனப்படும் திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேசம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது.

குறிப்பாக ஜாதகத்தில் மதி [சந்திரன்] நல்ல நிலையில் இல்லாதவர்கள் சோம வார பிரதோஷம் அன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்து வழிபட்டால் உங்கள் ஜாதகத்தில் உள்ள மதி மட்டுமல்ல உங்கள் மதியும் [புத்தியும் நன்றாகும்]

மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் .

1.தினசரி பிரதோஷம்
2.பட்சப் பிரதோஷம்
3. மாசப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்

6. திவ்யப் பிரதோஷம்
7.தீபப் பிரதோஷம்
8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்

11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்

16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்

20 வகை பிரதோஷங்கள் அவற்றின் பலன்களையும் பார்ப்போம்.

1.தினசரி பிரதோஷம் :
தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும்.

நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு “முக்தி” நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு [பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்] செய்வது உத்தமம் ஆகும்.

3. மாசப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் “திரயோதசி” திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் “பாணலிங்க” வழிபாடு [பல்வேறு லிங்க வகைகளில் பான லிங்கம் ஒரு வகை] செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய “திரயோதசி திதி”யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது “சுயம்பு லிங்கத்தை”த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது “திவ்யப் பிரதோஷம்” ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் “வ” வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, “சப்தரிஷி மண்டலம்” ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் “மகா பிரதோஷம்” ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, “தண்டீசுவர ஆலயம்”. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள “திருப்பைஞ்ஞீலி” சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள “ஸ்ரீவாஞ்சியம்” சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள “திருக்கோடி காவல்” சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், “மகா பிரதோஷம்” எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்’ என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்’ என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்’. தேவகியும் வசு தேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணர் பிறந்தார். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் பிறவி குறைபாடுகள் கூட சரியாகும்.




Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
What does " AYUSHMAN BHAVAH mean?"

What does " AYUSHMAN BHAVAH mean?"

When Maha Periyavaa was giving darshan, four or five Vidwans, who had come for darshan, were sitting on the floor. In the course of his conversation (with the devotees), Maha Periyavaa asked them, “When Bhaktas do namaskaram to me, I bless them with the name ‘Narayana, Narayana’. What do you people, who are samsaris say for blessing?”

“We say, ‘DhIrgha AyushmAn bhava‘ only, that is the custom.” they said.

“What does it mean?” Mahaperiyavah.

“Remain in saukyam for a long time ..is its meaning.” they said.

Maha Periyavaa asked all the Vidwans present there, one by one. Everyone said the same meaning.

Maha Periyavaa remained in silence for some time. Then he said, “The meaning you all said is wrong.”

The Pandits were taken aback. Each one was a Vidwan, and had earned the Siromani title etc.

For the Samskirta Vaakyam ‘Dirgha AyushmAn bhavah’ even those with a little knowledge of Samskirtam can tell the meaning. Such simple words! Yet Periyavaa says the meaning is wrong! The Pandits were looking at each other!

“Shall I tell it myself…..?” Maha Periyava shot the next arrow!!

The Pandits sat straight. & sharpened their ears.

“Of the twenty-seven Yogas, one is named Ayushman. Of the eleven Karanas, one is the called the Bhava. Among the weekdays, the Sowmya Vaasaram refers to a Wednesday. When –the Ayushman Yoga and the Bhava Karana–occurs together on a Wednesday - Sowmya vasaram, that day is said to be shlagya -very auspicious day. Therefore, if these three occur together, whatever good phalas would be got, I bless that you may get all those fruits…”

All the Vidwans got up together and did Shashtaanga namaskaram to Maha PeriyavaaL.

P.S . During the regular cycle of the Yoga, Karana & the Vasaram, the configuration of all the three occurs once in a way & that day is considered to be very auspicious



Sage of Kanchi

Bala Thiru
 
த்ரியம்பகன்


த்ரியம்பகன்

"த்ரியம்பகன்” என்பது சிவனின் திருநாமங்களில் ஒன்று. இது மூன்றாவது கண்ணைக் குறிக்கும். மற்ற இரண்டு கண்களும் புறக்கண்கள். பார்வையில் படும் குப்பைகளையெல்லாம் அவை மூளைக்கு புகட்டிக் கொண்டிருக்கின்றன.

இதன் மூலமாக யாரையாவது பார்த்தால், பழைய அபிப்பிராயங்கள் உங்களுக்குள் புறப்படுகின்றன. இந்த இரண்டு கண்களும் உண்மையை பார்ப்பதில்லை. எனவே அறிதலுக்கென்றே சிவனின் மூன்றாவது கண் திறக்கிறது. அதுவே ஞானக்கண். இந்திய மரபில் அறிதல் என்பது படிப்பால் பெறுவதல்ல. புத்தகங்கள் தருவதல்ல.

ஆழ்ந்த புரிதலையே அறிதல் என்கிறோம். இந்த மூன்றாவது கண் திறக்கிற போதுதான் சிவனை உணர்கிறீர்கள்.

படித்த மனிதர்கள் எல்லோருக்குமே ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த கதை தெரியும். ஆப்பிள் பழம் கீழே விழுந்தது பற்றியே அனைவரும் பேசுகிறார்கள். ஆனால், செடியாக இருந்த அந்த ஆப்பிள் மரத்தை ஒரு சக்தி மேல் நோக்கி வளர்த்திருக்கிறதே அது குறித்து யாரும் பேசுவதில்லை.


ஆனால் இப்போது ஆய்வுகளின் மூலம் மனிதனுக்கு ஒரு மூன்றாவது கண் இருப்பதாகவும் அதன் மூலம் பல அற்புதங்கள் நிகழ்த்தமுடியும் என்றும் தெரியவருகிறது. இந்த மூன்றாவது கண் பெயர் பினியல் சுரப்பி. (Pineal Gland).

பிரெஞ்சு அறிவியல் நிபுணரான Rene Descartes (René Descartes was a French philosopher, mathematician and writer who spent most of his life in the Dutch Republic (1596-1650) இதனை ஆன்மாவின் இருக்கை என குறிப்பிடுகிறார். இது இந்துக்களின் ஆக்ஞா சக்கரத்துடன் ( நெற்றி சக்கரம்) தொடர்புடையது.

சிவபெருமானின் நெற்றிக்கண் எந்த வடிவில் எப்படி காணப்படுகிறதோ அதே மாதிரி இதுவும் அமைந்துள்ளது.

இந்த பினியல் சுரப்பி ஒளியின் மூலம் தூண்டப்படுகிறது.இது மெலெண்டொனின் எனும் திரவத்தை சுரக்கிறது. இத்திரவம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.மன அழுத்தத்தை குறைக்கிறது.


நமது மதம் இந்த சுரப்பியை தூண்டுவதன்மூலம் ஞானம்/ பேரின்பம் அடையலாம் என கூறுகிறது. இந்த மூன்றாவது கண்ணை தூண்டுவதன்மூலம் முக்காலங்களை அர்யும் தன்மை,விழிப்புணர்வு, பல நல்ல சக்திகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

குண்டலினி தியானம் மூலம் இந்த மூன்றாவது கண்ணை தூண்டலாம். நம் குருமார்கள் தீட்சயளிக்கும் பொருட்டு புருவ மத்தியில் ஆசீர்வாதம் செய்வது எத்தன பொருட்டு என்பது இப்போதாவது புரிகிறதா?

தகுந்த பயிற்சியுடனும் நம்பிக்கையுடனும் இந்த ஆக்ஞா சக்கரத்தை இயங்கச்செய்து அளவில்லா ஆனந்தத்தையும் சக்தியையும் பெறலாம்.ஒருவர் தகுந்த பயிற்சி பெற்றால் நினைவுகளைக் குவித்து நெற்றிப்பொட்டின் ஊடாக வெளியேற்றி தீயை கூட வரவைக்கலாம் . (சிவன் திரிபுரங்களை எரித்த கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்).
மனதிலுள்ள தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்க்கலாம்

( சிவன் காமனை எரிந்தத கதையும் ஏன் முருகப்பெருமான் தோன்றிய கதையும் அனைவரும் அறிந்ததே )

இதை தகுந்தபயிற்சியிடன் எப்போதும் விழிப்பு நிலையில் வைத்திருந்தால் நாம் திறமைசாலிகளாக வாழலாம். அப்படி நாம் வாழக்கூடாது என்று நினைக்கும் சிலர்தான் இதயெல்லாம் போலி என்று கதைபரப்பினார்களோ தெரியவில்லை.

நம் முன்னோர்களின் நல்ல சிந்தனைகளையும் வழிகாட்டல்களையும் நமது அறிவீனத்தால் போலி என்று கேலி செய்து இழந்துவிட்டோம். இனியாவது விழிப்போம்.

”இந்துமதம் அர்த்தமுள்ளது. பொருள் பொதிந்தது”

அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.

– யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.

– பன்னிரெண்டாம் திருமுறை



Sage of Kanchi

Kumar Ramanathan


 
விதிவிலக்கான வயோதிகர்கள்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 135

விதிவிலக்கான வயோதிகர்கள்

ரிஷிகள் மனஸினால் பரத்தில் இருந்துகொண்டே வெளிப்பார்வைக்கு இஹத்திலும் ஈடுபட்டு ஸதாஸர்வகாலம் லோக மங்களத்துக்காகக் கார்யம் செய்துகொண்டிருந்தவர்கள். எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் உயிரோடு இருந்தாலும், தேஹ-புத்தி சக்திகள் குறையாமல், ‘செனிலிடி’ வராமல் இருந்தவர்கள். ஞான வைராக்யமென்பதற்காக லோக கல்யாணத்தை விட்டு விட்டு ஓட வேண்டுமென்றில்லாமல், அதில் ஊன்றி நின்ற அதே ஸமயத்திலேயே இதிலும் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். வஸிஷ்டர் மாதிரியானவர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்குப் புரோஹிதர்களாக இருந்து நல்லதை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போது ‘அப்பர் லிமிட்’ தேவைப்படவில்லை.

ஆனால், அது ரொம்ப பழைய கதை. ‘த்ரேதாயுகத்துச் ஸமாசாரம்’ என்கிறோமே, வாஸ்தவமாகவே அந்தக் காலத்தைச் சேர்ந்த கதை. அப்புறம் எல்லாமே வரவர க்ஷீணித்து வந்திருப்பதில், கலியுகத்தில் ரொம்பப் பெரியவர்கள்கூட நல்ல வ்ருத்தாப்யம் எழுபது வயஸுக்கு மேல் ஏற்பட்டு, தேஹ சக்தி, புத்தி சக்தி இரண்டும் நலிவதாகத்தான் ஆகி வந்திருக்கிறது. ஆயிரம் வருஷம் முந்தி நிச்சயம் இப்படி ஆகித்தானிருக்க வேண்டுமென்று உத்தரமேரூர் சாஸனத்திலிருந்து தெரிகிறது.


அபூர்வமாக விதிவிலக்கான வ்ருத்தர்கள் இருக்கிறார்கள்.பெர்னாட்ஷா இருக்கிறார்*. சர்ச்சில் கொஞ்சங்கூடக் கிழம் தட்டாமல் அவருடைய தேசத்தையே ஆவேசத்தில் கிளம்பி உலக மஹாயுத்தம் நடத்தியிருக்கிறார். காந்தி எத்தனையோ வருஷமாகப் பூஞ்சையாகத்தானிருந்தாலும், மனோபலத்தாலும் ராம நாம சக்தியாலும் கடைசிவரை தீக்ஷண புத்தியுடனும் ஆரோக்யத்துடனும் இருந்திருக்கிறார்.

விச்வேச்வரய்யா இருக்கிறார். Grand Old Man என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எக்காலத்திலும் எந்த இடத்திலும் இருக்கக்கூடுமானாலும், ஒரு ஊர் ஆட்சியையோ ராஜ்ய நிர்வாஹத்தையோ ஏற்று நடத்தக்கூடிய பொறுப்பை எப்படிப்பட்டவரிடம் கொடுக்கலாம் என்று விதி செய்யும்போது, ஜனங்களின் ஜெனெரல் லெவலைப் பார்த்துத்தான் செய்யமுடியுமே தவிர, விதிவிலக்காக இருப்பவர்களுக்கு இடமளிக்கும்படியான ரீதியில் செய்ய இயலாது. ஒரு கான்ஸ்டபிள் வேலை என்றால் பொதுவாகப் பார்த்து இன்ன உயரம், பருமன், ‘வெய்ட்’ உள்ளவன்தான் செய்ய முடியும் என்று வைக்கிறார்கள். அதற்கு விலக்காகச் சற்று குட்டையாக, ஒல்லியாக உள்ள ஒருவன் எத்தனைதான் சூரத்தனம் காட்டிப் பேர் பெற்றவனாயிருந்தாலும், கான்ஸ்டபிள் வேலைக்கு மனுப்போட்டால், ‘எல்லாம் ஸரிதாம்பா; ஆனால் ப்ரிஸ்க்ரைப் பண்ணின உசரம், பருமன் இல்லையே!’ என்று சொல்லிக் கையை விரிக்கத்தான் செய்வார்கள்.


அலுவலக வேலையும் பொதுச்சபை பணியும்

வேறெங்கேயோ போவானேன்? சர்க்கார் சிப்பந்திகளையே எடுத்துக் கொண்டால் ஐம்பத்தைந்து, உசந்தால் (ஜட்ஜ் மாதிரியானவர்களுக்கு) அறுபது என்று ஏதோ ஒரு வயஸில் ‘கம்பல்ஸரி’ யாக ‘ரிடயர்’ செய்துதானே விடுகிறார்கள்? உத்யோகங்கள் எல்லாவற்றுக்குமே வயஸில் லோயர் லிமிட், அப்பர் லிமிட் இரண்டும் வைத்திருக்கிறார்கள்.

தினந்தினமும் ஆபீஸுக்குப் போய் அடியிலிருந்து நுனி வரை ஃபைல் பார்ப்பது, எழுதுவது, டைப் அடிப்பது, அல்லது இன்ஸ்பெஷன் பண்ணுவது, அல்லது டிராயிங் போடுவது, டூர் போவது என்பது போலில்லாமல் ஊராட்சி, நாட்டு ஆட்சி ஆகியவற்றின் ஸபைக்காரர்கள் அவ்வப்போது மட்டும் கூடி, பேச்சு வேலையே முக்யமாய் நடத்தி மேல் மட்டங்களில் மட்டுமே ஸுபர்வைஸ் செய்கிறது போலத்தான் பணி செய்கிறார்களென்பது வாஸ்தவம். அதனால் மற்ற சிப்பந்திகளைப்போல இவர்களை தினசர்யையால் ஐம்பத்தைந்து அறுபது வயசிலேயே ஆட்டங் கண்டு போகக் கூடியவர்களென்று வைத்து ரிடையர் செய்யவேண்டியதில்லைதான். ஆனாலும் ‘டெய்லி ருடீன்’ (தினசரி அலுவல்) எப்படியிருந்தாலும், அகத்தோடு இருந்து ஓய்வெடுத்துக் கொள்பவரானாலுங்கூட, எழுபது வயஸுக்கு மேல் விருத்தாப்யக் கோளாறுகள் ஒருவருக்கு தலைதூக்குவதுதான் பொது இயல்பு என்பதைக் கவனித்தால், சட்ட ஸபை, மற்ற போது ஸபைகளிலுள்ளவர்களுக்குக்கூட வயஸுக்கு மேல் வரம்பு வைக்க நியாயமுண்டுதான்.

மூதறிஞர்களின் ஆலோசனைக் குழு

நல்ல விருத்தாப்யத்திலும் புத்தி தீக்ஷ்ணம் குறையாமல் யோசனைகள் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்களென்றால், அவர்களது புத்தி தேசத்துக்கு ப்ரயோஜனப்படும்படியாக ஒரு அட்வைஸரி கவுன்ஸில் (ஆலோசனை ஸபை) அமைத்துக் கொள்ளலாம். கவுன்ஸில் என்றதால் அவர்கள் எல்லாரும் ஒரே ஸமயத்தில் ஒரு இடத்தில் கூடி செஷன்ஸ் நடத்தி விவாதிக்க வேண்டுமென்பதுகூட இல்லை. இந்தப் பெரிய தேசத்தில் ஒரு மூலையிலிருந்து இன்னொன்றுக்குப் போய் இம்மாதிரிக் கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூட அவர்களுக்கு அசக்தமாயிருக்கலாம். சட்டஸபைக்காரர்கள் ஒவ்வொரு செஷனிலும் கூடிப் பல நாள் விவாதிக்க வேண்டும் என்றிருப்பதைப் போலவும் இல்லாமல், எப்போது அந்தப் பெரிவர்களின் யோசனை தேவை என்று தோன்றுகிறதோ அப்போது ராஜாங்கமே அவர்களுக்கு எழுதிக் கேட்டோ, ஆளனுப்பியோ அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுப் பரிசீலிக்கலாம்- கமிஷன், டெலிகேஷன் என்று போட்டுப் பலரை விசாரித்து அபிப்ராயங்கள் பெறுவதுபோல். கவர்மெண்ட் கேட்டால்தான் அவர்கள் யோசனை தெரிவிக்கலாமென்றில்லாமல் அவர்களுக்காகவே எப்போது எதைப் பற்றி ஏதாவது யோசனை தெரிவிக்கலாமென்று தோன்றினாலும் அதைத் தெரிவித்துக்கொள்ள இடம் கொடுத்து, அந்த யோசனையைப் பரிசீலனை செய்யலாம்.

இப்படிப்பட்ட நல்ல வ்ருத்தர்களான பெரியவர்கள் பல கட்சிகளிலும் இருப்பார்கள்; ஒரு கட்சியிலும் சேராதவர்களாகவும் இருப்பார்கள். கட்சிகளை வைத்தே ஆட்சி முறையை நிர்ணயிப்பதாக இருக்கும் நம்முடைய குடியரசு வந்தபின்* இம்மாதிரி தேசம் முழுதும் உள்ள நல்ல அநுபவஸ்தர்களான மூதறிஞர்களை – ‘மூதறிஞர்’ என்பதுதான் இப்படிப்பட்டவர்களைக் குறிக்கும் அழகான வார்த்தை- மூதறிஞர்களை கொண்ட கவுன்ஸிலை நடு நிலைமையுடன், ப்ரெஜூடிஸ்கள் இல்லாமல் அமைத்து நடத்துவது எந்த அளவுக்கு ஸாத்யமென்று தெரியவில்லை.

தற்போதைக்கு அரசியல் கட்சிக் கண்ணோட்டமில்லாமல் நிதி விஷயம் நன்றாகத் தெரிந்தவர்கள், சட்ட விஷயம் நன்றாகத் தெரிந்தவர்கள் ஆகியோரை மந்த்ரி ஸபையில் வைத்துக்கொள்ள நேருவுக்கு அபிப்ராயமிருந்தாலும் போகப் போக எப்படியாகுமோ? கட்சிகளின் பெயரில் ஒரு எலேக்ஷன் நடந்துவிட்டால், அதுவும் இப்போது உத்தேசித்துள்ளபடி வயஸு வந்த அத்தனை பேருக்கும் வயஸு வருவதைத் தவிர வேறெந்த தகுதியும் வேண்டியதில்லை என்று வைத்து வோட்டுரிமை கொடுத்து பார்ட்டி அடிப்படையில் ஒரு எலெக்ஷன் நடத்திவிட்டால் அப்புறம் கட்சி வேற்றுமைகளைப் பாராட்டாமலும், எந்தக் கட்சியிலும் சேராமல்உள்ளவர்களை மதித்தும், நல்ல மூதறிஞர்களாக உள்ள எவருக்கும் ராஜாங்கத்தில் இடம் தருவது நடைமுறைக்கு வருமா என்று கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.

வயஸுக்கு மேல் வரம்பு பற்றி ஆரம்பித்து வரம்பில்லாமல் எங்கெங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாற் போலிருக்கிறது!

* இப்பகுதி 1950 ஜனவரி 26-ல் குடியரசு ப்ரகடனமாகுமுன்பே அருளப்பட்டது.



Sage of Kanchi

Krish Ram
 
HH Bala Periyava Anugraha Bhashanam from Gosala

HH Bala Periyava Anugraha Bhashanam from Gosala


Jaya Jaya Shankara Hara Hara Shankara – Short and beautiful Anugraha Bhashanam by Sri Bala Periyava from a Gosala explaining about Guru and Ganapathy, significance of Siva Panchaksharam, unshakable faith and adherence to our sastras, patriotism towards Bharatha Desam, learning sanskrit and carnatic music, etc. This video is less than five minutes in Tamil. Providing links to Telugu and Hindi Anugraha Bashanam’s that are a little bit longer. Let us follow the footsteps of our Aacharya’s and try to spend more time in Ghosala’s on a consistent basis. Sri Periyava has said in Deivathin Kural Japams done in Gosala will yield billion (crore) times more benefit than done normally so let’s make it a point to visit Gosalas frequently and do Bhagawan Nama Japam (Rama, Siva, Govinda). Ram Ram.


https://mahaperiyavaa.wordpress.com/2015/09/09/hh-bala-periyava-anugraha-bhashanam-from-gosala/
 
Why Stainless Steel(Ever Silver) vessels are not allowed in Prayers?

Why Stainless Steel(Ever Silver) vessels are not allowed in Prayers?

Mahaperiyava from “Dheivathin Kural”..Thanks to Karthi for mentioning this in FB…Periyava had said this in 70s…Now, things are even worse.. People have forgotten bronze, copper vessels…In fact, couple of years back I was in Kumbakonam in a metal shop and the merchant was saying that nobody buys these any more except temples. Households buy only ever-silver and silver. Due to cost factor, silver is affordable for all the time. For puja related, even though we can’t afford silver, we should certainly go for non-eversilver items…While we can’t convince everyone to follow, at least those who do nithya puja and follow aachara anushtanams can at least follow this….



இப்போது எவர்ஸில்வர் என்று ஒன்று ரொம்ப நடமாடுகிறது.

ஸ்வாமி தீபம் உள்பட கலசமாக வைக்கிற குடம் உள்பட எல்லாம் அதில் வந்துவிட்டது.

இத்தனை காலம், இரும்புப் பாத்திரம் உதவாது என்ற சாஸ்திர விதியை அநுஸரித்து வந்தவர்களும் இப்போது எவர்ஸில்வரை உபயோகிக்கிறார்கள்.
“இரும்பு கூடாது என்றதற்குக் காரணம் அது துரு பிடிக்கக்கூடும் என்பதுதான்;

அதனால் அதில் ஆரோக்கிய ஹானி உண்டாக்குகிற ஹேது உள்ளது என்கிறதுதான். ஆனால் அந்த இரும்பை இப்படி எவர்ஸில்வராக ‘ப்ராஸஸ்’பண்ணிவிட்டபின், அதில் துரு பிடிப்பதற்கேயில்லை. அது health hazard ஆகாது. இரும்பின் தோஷத்திற்குப் பரிஹாரம் பண்ணிவிட்டதால் அதை உபயோகிக்கலாம்” என்று சொல்கிறார்கள்.

துருவுக்காகத்தான் இரும்பு கூடாது என்று இவர்களாகவே அநுமானம் பண்ணிக்கொண்டு இப்படி எவர்ஸில்வரை சாஸ்திரோக்தமானதாக ஆக்கிவிட நினைக்கிறார்கள்.

ஆனால் சாஸ்திரம் இரும்பு கூடாது என்றது துருவுக்காக அல்ல; அல்லது துருவுக்காக மாத்திரம் அல்ல. அது பாபகரமானது, ஆஸுர [அசுரத்தனமான] சக்திகளையும், சனைச்சரன் மாதிரி உக்ர க்ரஹங்களின் சக்தியையும் நம்மிடம் இழுத்து வரும் என்பதால்தான் கூடாது என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது.
எவர்ஸில்வரிலும் இந்த தோஷம் போய்விடாது.


https://mahaperiyavaa.wordpress.com...er-silver-vessels-are-not-allowed-in-prayers/
 
Kaanchi Mahaaswamigal ….

"Anasuya" means nonjealousy.

Heart-burning caused by another man's prosperity or status is jealousy. We ought to have love and compassion for all and ought to be patient and forgiving even towards those who do us wrong.

We must not envy people their higher status even if they be less deserving of it than we are and, at the same time, must be mature enough to regard their better position as the reward they earned by doing good in their previous life



Sage of Kanchi

Jambunathan Iyer
 
Visit of Thailand Rajaguru to Shrimatam - 11/9/2015

Visit of Thailand Rajaguru to Shrimatam - 11/9/2015

11988223_1689995871232640_1362257675184998121_n.jpg


Thailand Maha Rajaguru Phra Guru Bidhi Sri Visudhigun visited Kanchi and had darshan of His Holiness Pujya Shri Jayendra Saraswathi Shankaracharya Swamigal and His Holiness Pujya Shri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamigal. The Maha Rajaguruof Thailand belongs to the Vasishtha Gotra and conducts various rituals including the Tirvembavai ceremony in the Thailand Royal Court. His ancestors belonged to South India and have deep connections with Kanchipuram.

The Swarna Pada Puja performed to His Holiness Shri Periyava by His Holiness Pujya Shri Bala Periyava& Pushpabhishekam at Mahaswami Adhishthanam were a few events where the Maha Raja Guru took part. Earlier in the day He was received by Srimatam officials and the Maha Rajaguru had darshan of harathi at the Chadramouleeshwara Swamy Puja shrine.

A book on Tiruvempavai in Thai, Tamil, Grantha & Roman script was released on the occasion. The Maha Rajaguru submitted a book on Cultural Heritage of the Kingdom of Thailand named "Devasthana" containing chapters on Trimurthi, Brahmin Philosophy, Passage of Priests from Jambudvipa to Siam, Devasthana: The Shrine of Gods in Capital City, Restoration of Devasthana etc to Their Holinesses. He was accompanied by other brahmins of Thailand and their Consul General.

His Holiness had elaborate discussions with the Raja Guru. Dr. Nagasamy and other senior people took part in the discussions.

The Maha Rajaguru also had darshan at Kamakshi temple.

11988532_1689995877899306_7034134973608642610_n.jpg




12027812_1689995874565973_983618479652420225_n.jpg



Source: Shri Kanchi Kama Koti Peetam, Kancheepuram


FB



 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top