• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
கார்யமும் த்யானமும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 162

கார்யமும் த்யானமும்

கோயில் ப்ராகாரத்தை தேய்த்து அலம்பி விடுகிற கார்யத்தைச் செய்வதாக வைத்துக்கொள்வோம். ‘ஸாக்க்ஷாத் ஸர்வேச்வரன், ஸர்வ வியாபி, அவனுடைய ஸர்வ வ்யாபகத்தைப் புரிந்துகொள்ள முடியாத அசடுகளான நமக்காக ஒரு அர்ச்சையில் (விக்ரஹத்தில்) குடிகொண்டிருக்கிற இடம் இது.

இதில் அழுக்கு சேராமல் காப்பாற்றினால் நம் ஹ்ருதயத்திலும் அழுக்கு சேராது; இதில் ஊர்வாசிகள் எல்லாரும் சேர்ந்து செய்தால் ஸமூஹத்திலும் த்வேஷம், பேதம் முதலான அழுக்குகள் சேராது’ என்ற எண்ணத்தோடு நல்ல பக்தியோடு, நன்றியோடு தேய்த்து அலம்பினால் விசேஷம். ஆனால், தேய்த்து அலம்புகிற கார்யம் இருப்பதாலேயே இப்படிப்பட்ட ஸத்சிந்தனையில் அப்படியே அமிழ்ந்து போக முடியாது. சிந்தனையின் பூர்ணமான ஐகாக்ரியத்துக்கு (ஒருமுனைப்பாட்டுக்கு) கார்யம் தடைதான். இதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓரளவுக்கு, ஒரு பெரும் அளவுக்கு வேண்டுமானாலும், சிந்தனையை வகை தொகைப் படுத்தத்தான் கார்யம் ஸஹாயம் செய்யுமே தவிர பூர்ணமாக ஒரு எண்ணத்திலேயே ஒருமுகப்பட அது விடாது. சிந்தனையோடு கார்யம் என்று ஒன்று சேர்கிற போதேதான் இருமுகப்பட ஆரம்பித்து விட்டதே!


“ஸரி, அப்படியானால், மேலே சொன்னமாதிரி நன்றி, பக்திகளோடு ஸத்சிந்தனையை ஐகாக்ரியப் படுத்துவதற்காகக் கார்யம்தான் செய்தாகவேண்டுமா என்ன? இதுகளை ஒரு முகமாக்கிக்கொள்ள வசதியாக, வேலையில்லாமல் த்யானம் செய்ய உட்கார்கிறேனே!” என்றால், உட்கார்ந்து பார்.

விளக்குமாற்றைப் போட்டுவிட்டு உட்கார்ந்தாயா?

“உட்கார்ந்தேன்.”

ஸரி, கொஞ்ச நாழி அப்படியே த்யானம் பண்ணு.
…………..

(அற்புத நாடகமாக இரு பாத்ரங்களைத் தாமே தாங்கி நடிக்கும் ஸ்ரீசரணர்கள் சிறிதுபோது மௌனமாக இருக்கிறார்கள்.)

என்ன, த்யானம் பண்ணுகிறாயா? நான் கேள்வி கேட்டு உன் த்யானத்தைக் கலைத்துவிடேனா?

“இல்லை ஸ்வாமிகளே, இல்லை. நீங்கள் கலைக்கவும் இல்லை; ஒண்ணும் இல்லை. அதுவே கலைந்து போய்விட்டது. கலைந்து போய்விட்டது என்று சொல்வதுகூடப் பிசகு. முதலுக்கே எண்ணங்கள் ஒருமுகப்பட்டுச் சேரவில்லை; ஆகையினால் கலைவதற்கு என்ன இருக்கிறது? உட்கார்ந்தவுடன் ஏதோ ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் ஸத்சிந்தனையில் மனஸ் சாந்தமாயிருந்தது. பகவானைக் கவிந்துகொண்டுநின்றது. உடனேயே, ‘இதனால் பக்தி, த்யானம்தான் கர்மாவைவிட உசத்தி என்றாகிறது. இதுதான் ஸூபீரியர், கர்மா இன்ஃபீரியர்’ என்ற எண்ணம் வந்தது.

அப்புறம், ஒளிக்காமல் சொல்கிறேன்: எண்ணம் மேலே மேலே சிதறிப்போய் ‘அத்வைதம் சொல்ல வேண்டிய பெரியவா ஏன் எப்போ பார்த்தாலும் கர்மா – ன்னு கட்டிண்டு அழச் சொல்றார்?’ என்கிறவரைக்கும் ஓட ஆரம்பித்துவிட்டது. ஆதி ஆசார்யாள், க்ருஷ்ண பரமாத்மா முதலானவர்களும் இப்படித்தான் சொன்னாரென்று எடுத்துக்காட்டுகிறாரே என்று நினைப்பு போயிற்று. லக்ஷ்யத்துக்கும் நடைமுறைக்கும் இத்தனை வேறுபாடாக இருக்குமா என்று தோன்றிற்று. அதன் தொடர்ச்சியாக, காந்தீயம்தான் லக்ஷ்யம் என்று சொல்லிக் கொண்டே நடைமுறையில் ஏகப்பட்ட ஃபாக்டரிகளைத் திறந்து வைத்துக்கொண்டும், ராணுவச் செலவை அதிகரித்துக்கொண்டும் போவதைப்பற்றித் ‘தாட்’ வந்தது. அப்புறம் ஏக பாலிடிக்ஸ், எலெக்க்ஷனில் யாருக்கு வோட் போடலாம் என்கிற வரைக்கும் எங்கெங்கேயோ நினைப்பு ஓடி, பிடிக்காத கட்சியின் லீடர் நாசமாகப் போகணுமென்று சபிக்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ‘ஐயையோ, ப்ராகாரம் அலம்பிவிடணும் என்று வந்துவிட்டு, அது ப்ரயோஜனமில்லை என்றல்லவா த்யானம் என்று உட்கார்ந்தோம்?


இப்போது நம் மனஸிலேயே இத்தனை அழுக்கு சேரவிட்டிருக்கிறோமே! தேய்த்து அலம்புகிற கார்யமே இதற்கு எத்தனையோ ச்ரேஷ்டம். அது ஸத்சிந்தனையில் மனஸை ஒருமுகப்படுத்தாவிட்டாலும், மனஸ் கன்னாபின்னா என்று ஓடாமல் நிச்சயமாகக் கட்டுப்படுத்துகிறதல்லவா? போதும். போதும் த்யானம். வேலைக்கு எழுந்திருக்கலாம். ஆனால் பெரியவாகிட்டே ஜம்பமாக த்யானம் செய்கிறேனென்று சொல்லி உட்கார்ந்துவிட்டு இப்போது எழுந்திருக்கிறதென்றாலும் என்னமோ போல இருக்கே!’ என்று எப்போது நினைத்தேனோ அப்போதுதான் நீங்களும் குரல் கொடுத்தீர்கள்! ஆலய சுத்தி செய்ய வந்த விசேஷத்தால் தான் மனஸில் வைத்துக்கொள்ளாமல் இதைச் சொல்கிறேன் போலிருக்கிறது!”

ப்ராகாரத்தை சுத்தம் செய்வதென்றால் தண்ணீர் இழுப்பது, அதற்கான பாத்ரங்கள் ஸம்பாதனம் செய்வது, கட்டைத் துடைப்பத்தை இறுக்கிக் கட்டி வைத்துக்கொள்வது, பிசுக்குப்பட்ட இடங்களில் ஒரு தரத்துக்கு இரண்டுதரமாக அழுத்தித் தேய்ப்பது, த்வாரம் அடைத்துக்கொண்டிருக்கிற இடத்தில் குத்திவிடுவது என்று எத்தனையோ கார்யம், உபகார்யம் வரத்தான் செய்யும். குத்திவிடும் குச்சியே சில ஸமயத்தில் அடைத்துக்கொண்டு விடுகிறாற்போல, இந்தக் கார்யங்களே ஸத்சிந்தனையைக் கொஞ்சம் அடைக்கத்தான் செய்யும், ஆனாலும் அதற்கான பக்வம் வரும் வரையில் – அந்தப் பக்வமும் ஸத்கர்மாக்களாலேயேதான் வரும், அப்படி வரும்வரையில் – த்யானம் என்று உட்காருவதைவிட ஸத்கர்மாவில் ஈடுபடுவதுதான் சிந்தனையை ஓரளவுக்காவது நல்லதில் செலுத்துவதற்கும், இதைவிட ரொம்பப் பெரிய அளவுக்குக் கெட்டதிலிருந்து திருப்பிவிடுவதற்கும் உபகாரம் செய்வது. ‘பாஸிடிவ்’ – ஆக அது செய்வதைவிட, ‘நெகடிவ்’ – ஆகச் செய்யும் உபகாரம் பெரிசு.

அதற்காக ஆரம்ப நிலையிலுங்கூட த்யானம் வேண்டவே வேண்டாம் என்று அர்த்தமில்லை. உத்தமமான விஷயத்திலே மனஸைக் கொஞ்சமாவது நிறுத்தப் பார்க்காமல் ஓயாமல் கார்யம் பண்ணிக்கொண்டே இருப்பதற்கு நாம் மனஸ் உள்ள மநுஷ்யனாகப் பிறந்தேயிருக்க வேண்டாம்! மெஷினாக நம்மை ஏதாவது ஃபாக்டரியில் பண்ணிப் போட்டிருக்கலாம். என்றைக்கோ ஒரு நாள் த்யானத்தில் பக்வம் வரவேண்டுமென்றால் அதற்கு ஆரம்ப முயற்சி பண்ணாமல் எப்படி முடியும்? இனிமேலே பக்வம் வரவேண்டுமென்பதாலேயே இப்போதுள்ள அபக்வ மனஸோடுதான் ஆரம்பித்தாக வேண்டுமென்றாகிறது.

சோனியாயிருக்கிறவன் யோகாஸனம் போட்டால் பலசாலியாகலாம். யோகாஸனம் போடுவதற்கே சோனிக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக ப்ரயத்னத்தை விட்டுவிடுவதா? அஞ்சு நிமிஷமாவது பண்ண ஆரம்பித்து, அப்புறம் பத்து நிமிஷம், கால்மணி, அரைமணி என்று பண்ணிக்கொண்டு போய் எத்தனையோ சோனிகள் ஆரோக்யசாலிகளானதைப் பார்க்கிறோம். அப்படித்தான் இதுவும். ஆத்மா என்ற நினைப்பும் அத்வைதத்திலே ப்ரயாஸையும் உங்களுக்கெல்லாம் இன்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கவேண்டுமென்று சொல்லத்தான் உபந்யாஸம் செய்கிறேன். இது கொஞ்சம் இருக்கும்போதே இதற்கான சித்த சுத்தியைப் பெற நிறைய ஸத்கர்மா செய்யச் சொல்கிறேன். முடிந்த முடிவிலே நினைப்பும், அதாவது த்யானமும் போய் ஞான அநுபவமே நிற்கும்.


Sage of Kanchi

Krish Ram
 
Subramanya Siva prays to Swamigal for devotion in our Hearts!

Subramanya Siva prays to Swamigal for devotion in our Hearts!
================================================

The year is 1921. Shri Subramanya Siva, one of the greatest of freedom fighters, is at Kumbakonam for Mahamaham. There he comes to know that Maha Periyava is camping at Patteeswaram, near Kumbakonam. He goes for His darshan, but stands away from the crowd (almost everyone who had come for Mahamaham has come for Mahaswami's darshan too) as he is afflicted with leprosy and has thinned down considerably because of it.

Mahaperiyava notices his presence and sends a sishya to bring him to His presence. Shri Subramanya Siva comes before Mahaswami and prays for devotion in the hearts of his fellow country men and for the independence of Bharatam! Maha Periyava blesses him!
*****
What a Selfless Soul Subramanya Siva is! Asking Swamigal for devotion in our Hearts and for India's freedom but not for cure of his leprosy. Shankara.

Today October 4th is the 131st birthday of Subramanya Siva. He was born in the year 1884.

12122526_10153635485764244_269071034230624175_n.jpg



Sage of Kanchi


Panchanathan Suresh
 
பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் த&#


பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது!


4-10-2015



இந்தியா சுதந்தரம் அடையும் தருணத்துக்கு முந்தைய டெல்லி. டெல்லியில் குடிபுகுந்திருந்த தமிழர்கள்,ரமணமகரிஷி அளித்திருந்த சுவாமிநாத சுவாமியின் ஒரு சிறு மரச்சிலையை வைத்து பூஜித்து வந்தார்கள்.

1944-ஆம் ஆண்டு முதல் கந்த ஷஷ்டி விழாவைப் பெரிய அளவில் சிறப்பாகவும் நட்த்தினார்கள். இருப்பினும் தென்னிந்தியக் கலையுடன் கூடிய முருகன் கோயில் ஒன்றில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவர்களுக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்த்து. எல்லாவற்றுக்கும் ஒரு தருணம் வரவேண்டும் அல்லவா! பிற்காலத்தில் ஒரு குட்டித்தமிழ் நாடாக விளங்கிய ராமகிருஷ்ணாபுரம் அச்சமயம் பெருங்காடாக விளங்கியது. அதன் நடுவே ஒரு சிறு குன்றும் காணப்பட்டது. குன்று தோறாடும் குமரனுக்கு இது ஏற்ற இடமாக இருக்குமே என்று பக்தர்கள் எண்ணினர்.


1961-ஆம் வருடம். டெல்லி சரோஜினி நகரிலிருந்த விநாயகர் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த கும்பாபிஷேக தினத்தன்று பக்தர் ஒருவருக்குக் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர்,கனவு காணும் நபரின் கையைப் பிடித்துக் கொண்டு அவரை அவரின் இருப்பிடத்துக்குக் கொண்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறார். இவரும் அழைத்துச் செல்கிறார். ஒரு கட்டத்தில் இதுதான் தன் இருப்பிடம் என்று சற்றுத் தொலைவில் தெரியும் குன்றைக் காட்டி நன்றி கூறிவிட்டு, விறுவிறுவென நடந்து மாயமாய் மறைந்து விடுகிறார். அந்த பக்தர் கனவில் கண்ட இடம்,பக்தர்கள் இங்கு குமரனுக்குக் கோயில் கட்டலாமே என்று தீர்மானித்த குன்று இருக்கும் இடம்!


இதன்பின் டெல்லியில் தனி முருகன் கோயில் கட்டுவதற்கான விண்ணப்பத்தை காஞ்சி மகா பெரியவர் முன் வைத்தனர். அவரும் தன் பரிபூரண ஆசிகளை அருளினார். அடுத்து, அரசாங்கத்தின் அனுமதியைப் பெறவேண்டும். எனவே, அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர் பக்தர்கள்.

இதற்கு முன் சூரஜ்மல் எனும் அரசன் இந்தக் குன்றின்மீது ஓய்வு விடுதி அமைக்க எண்ணியபோது அவன் தந்தையின் கனவில் முன்பொரு சமயம் அந்த இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருந்ததாகத் தெரிந்ததால், மகனை ஓய்வு விடுதி கட்டாமல் தடுத்து விட்டார் என்றொரு செய்திக் குறிப்பு அந்தக் குன்று இருக்கும் இடத்தைப் பற்றி இருந்தது. இதனால் அரசாங்கத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதாக இருந்தது.


இந்நிகழ்வு பற்றி திருப்பனந்தாள் மடத்தலைவர் முத்துக்குமாரசுவாமி தம்பிரான். ‘ஆளுபவர்கள் யாராக இருந்தாலும்,தன்னுடைய இடத்தை மாற்ற முடியாதபடியாகவே முருகப்பெருமான் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான் என்றில்லாமல் வேறென்னவென்று குறிப்பிடமுடியும்?’ என்று குறிப்பிட்டார்.


1961-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பக்தர்கள் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்து கோயில் கட்டும் நிலத்தை அரசாங்க அனுமதியுடன் விலைக்கு வாங்கினார்கள். கோயில் கட்டுமானப் பணி தொடங்கியபோது, வாலாஜாபாத் அருகிலிருந்த பட்டுமலைக் குப்பத்திலிருந்து kaakalகல் எடுக்கப்பட்டு வந்து மகாபலிபுரத்தில் விக்கிரகங்கள் வடிக்கப்பட்டன.

இச்சமயம் “உத்தர சுவாமிநாதனின் மூலவிக்கிரகத்துக்கான கல்லை, சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு செந்திலாண்டவன் சிலை வடிப்பதற்காக,

தாமிரவருணி நதிப் படுகையிலிருந்து குறுக்குத்துறை எனுமிடத்தில் எடுக்கப்பட்ட கல்லின் எஞ்சிய பாகம் புதையுண்டு உள்ளது. அதனை எடுத்துப் பயன்படுத்துங்கள். ” என மகா பெரியவா ஆசியருளினார். அன்பர்களும் மகிழ்ச்சியுற்றார்கள்.

பெரியவா குறிப்பிட்ட அந்த குறுக்குத்துறை அகலத்திலும் நீளத்திலும் ஒரு மைலுக்கும் மேலாகப் பரந்து கிடந்தது. இந்த அறுபதாண்டு காலத்தில் அந்த இடத்தின் பல பகுதிகள் மணல்மேடுகளாக மாறியிருந்தன.

அவ்வளவு பெரிய இடத்தையும் தோண்டிப் பார்த்து குறிப்பிட்ட கல்லைக் கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்லவே! நெல்லையப்பர் கோயில் சிவாச்சாரியார், “ஒரு வேளை தெற்கு ரத வீதியிலிருக்கும் 85 வயது முதியவரான சுந்தர தீக்ஷிதர் இந்தக் காரியத்துக்கு உதவலாம். அவர், செந்திலாண்டவன் சிலைக்காகக் கல் எடுத்த காலத்தில், அத்தலத்தில் தொண்டு புரிந்தவர்”என்று வழி காட்டினார்.


சுந்தர தீக்ஷிதரைச் சந்தித்து விவரம் கூற, “பாதி வேலையை முடித்திருந்தேன். எஞ்சிய வேலையை முடிப்பதற்காகத்தானோ என்னவோ,” என்னை இறைவன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறான் என்று கூறி நெகிழ்ந்தவர், சரியான இடத்தையும் காட்டிக் கொடுத்தார். முப்பது தொழிலாளிகள் நாள் முழுதும் மணலைத் தோண்டியபின், 10 அடி ஆழத்தில் மகா பெரியவா குறிப்பிட்ட முக்கோண வடிவக் கல் கிடைத்தது. ஜூன் 2, 1965-ஆம் ஆண்டு, குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நதிப்படுகையிலிருந்து கல் எடுத்து, மகாபலிபுரத்துக்கு அனுப்பினர்.


பரமாச்சார்யரின் உருவில் வந்து அனுக்கிரகித்த கந்தனின் கருணையே கருணை!

கல் கிடைத்து விட்டது. விக்கிரகம் தயாராகிவிட்டதா என்றால், அங்கும் உடனே தயாராகவில்லை. ஆண் விக்கிரகம் வடிப்பதற்கான சரியான ஒலி கல்லில் இருந்து கேட்காததால், பணியில் ஈடுபட்டிருந்த கணபதி ஸ்தபதி செய்வதறியாது திகைத்தார். எனவே மகா பெரியவாளைச் சந்திக்கச் சென்றார்.


பக்தர்கள் வரிசையில் மகா பெரியவாளைச் சந்திக்க நின்றபோது பெரியவரே அவரை அழைத்து,” ‘சிலையைச் செதுக்க ஆரம்பி! போகப் போகத் தானே சரியாகி விடும்’ என்றார்.


அவர் கூறியவாறே நடந்தது. மூலவர் சிலை உருவானதும், அச்சிலையை மகா பெரியவாளின் பார்வைக்கு அனுப்பினார்கள்.


நொடியில் சிலையை ஆராய்ந்த பெரியவர், தக்ஷிண சுவாமிநாதனிடமிருந்து சற்று வேறுபடுத்திக் காட்டத்தானோ, இவரது கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் கல்லிலேயே செதுக்கிவிட்டாய்? என்று கேட்க, கணபதி ஸ்தபதி ஆச்சரியத்தில் பிரமித்து நின்றார்.

தெற்கிலுள்ள சுவாமிநாதனுக்குத் தனியாக வெள்ளி மாலயில் கோர்த்த ருத்ராக்ஷத்தை அணிவிப்பதுதான் வழக்கம். இந்த நுணுக்கத்தை உன்னிப்பாகக் கவனித்துத் தான் பெரியவா அப்படிக் கேட்டார். பெரியவாளின் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது. இதன் பின் விக்கிரகத்தை ஒரு இரவும் பகலும் தன் அருகிலேயே வைத்து, தடவிப் பார்த்து மகிழ்ந்தார். சிலைக்கு, தன் கையாலேயே விபூதி அபிஷேகமும் செய்து மகிழ்ந்தார்.


கும்பாபிஷேகத்தின்போது கூடியிருந்த பக்தர்களிடம் கணபதி ஸ்தபதி மேற்படி விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.


மூல விக்கிரகம் தயாரானதோடு இறைவனின் சோதனை நின்று விடவில்லை
கோயிலுக்கான மற்ற விக்கிரகங்களும்உருவாகிவிட்ட நிலையில், கோயில் கட்டும் அடிக்கல் நாட்டு விழாவை 8.9.1965 அன்று காலை 6.30 மணி முதல் 8.30 மணிக்குள் நல்ல நேரம் என்று குறித்திருந்தார் மஹா பெரியவா. நாள் குறிப்பிட்டாகிவிட்டது. ஆனால் அதற்கு முந்தைய இரவில் வந்த வானொலி அறிவிப்பு அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாகிஸ்தான் விமானப்படை இந்தியா மீது போர் தொடுக்க ஆயத்தமாகியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி. எனவே பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி, விழாவில் பங்கேற்பதற்கில்லை என விடியற்காலை 3 மணிக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் காலை 4.30-க்கு தில்லியிலுள்ள ஷாதரா எனுமிடத்தில் தென்பட்ட பாகிஸ்தானிய விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது என்று வெளியான வானொலிச் செய்தியைத் தொடர்ந்து ஒலித்த சங்கு, அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிப்படுத்தியது. எனவே ஏற்கெனவே குறிபிட்டிருந்த முகூர்த்த நேரத்துக்குள் தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம், அருட்கவி சாதுராம் சுவாமிகள் இருவராலும் அடிக்கல் நாட்டுவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டது.


அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்குச் சில நிமிடங்கள் முன்பு, பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அனுப்பியிருந்த செய்தியின் சாரத்தை இங்கு பார்ப்போம்.

“ஸ்வாமிநாத தேவசேனாபதியான முருகப்பெருமான், முப்படைக்கும் தலைமை ஏற்று, பாகிஸ்தானுடனான போர் துவங்கியதுமே அதை முடித்து விட்டார் அடிக்கல்நாட்டுவிழாவின் வெற்றிக்கான எனது ஆசிகள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மூலவர் விக்கிரகம் வைக்கப்படும் பீடத்தினுள் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ள 25 பொருட்களுடன் யந்த்ரம் ஒன்றும் வைப்பது வழக்கம். ‘சுப்ரமண்ய சர்வ வசீகரண யந்த்ரம்’ உத்தர சுவாமிநாத சுவாமி ஆலயத்தில் வைக்கப்பட்டது.


இந்த யந்த்ர விஷயத்திலும் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உண்டு. பரமாச்சார்யாளின் ஆக்ஞைப்படி தருமபுரம் ஆகம பாடசாலையின் தலைவரானசிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சார்யார் வெள்ளித்தகட்டில் யந்த்ரத்தை அமைத்து வைத்திருந்தார். இதற்கு முன்பாக கணபதி ஸ்தபதியும் காகிதத்தில் யந்த்ரத்தின் அமைப்பை வரைந்து மகா பெரியவாளிடம் ஆசி வாங்கியிருந்தார்.


இரண்டில் எதை வைப்பது என்ற குழப்பம்! கூர்மையாக ஆராய்ந்து பார்த்தபோது –ஒன்று சிவத்தொடர்புடையதாகவும் மற்றொன்று கந்தப்பெருமானின் ஷண்முக யந்த்ரமாகவும் இருந்தது. பின்னர் இரவோடிரவாக வெள்ளித்தகட்டின் பினபுறம் இந்த ஷண்முக யந்திரத்தையும் பொறித்து இரண்டுமே பீடத்தினுள் வைக்கப்பட்டன. இவ்வாறாக சிவனும், சிவகுமாரனுமாக, ஒரு வடிவாகி சிவ்ஸ்கந்தமூர்த்தியாக டெல்லியில் அருள்பாலிக்கிறார்கள்.


இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வும் உண்டு. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் சூரியனின் கிரணங்கள் மூலவர்மீது விழும் வண்ணமாக ஆலய விமானத்தில் இடைவெளி விட்டுக் கட்டுவார்கள். அக்காலங்களில் சூரிய பூஜை நடத்துவார்கள். இதற்கென டெல்லி வானிலை ஆராய்ச்சி மையத்தை அணுகியபோது, இதற்கு ஒரு வருடம் தொடர்ந்து கவனிக்க வேண்டியிருக்குமே எனக் கூறிவிட்டனர்.

கும்பாபிஷேகத்துக்கான நாள் நெருங்கிவிட்டிருந்ததால், இடைவெளி வைக்காமலே விமானமும் கட்டி முடிக்கப்பட்டது. 7.6.1973 அன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தேறியது.


கும்பாபிஷேகத்தை அடுத்துவந்த மார்ச் மாதத்தில் ஒருநாள், வழக்கத்துக்கு மாறாக சற்று முன்னதாகவே கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்த குருக்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. சூரியனின் காலை கிரணங்கள் முருகனின் இடப்பாகத்தில் பட்டு ஜொலித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மேலும் சில நாட்கள் தொடர்ந்து கவனிக்க, மார்ச் 20 முதல் 24 வரை முருகனது திருவுருவத்தின் மீது முழுவதுமாகக் காலைக் கிரணங்கள் பட்டுக்கொண்டிருப்பதைக் கண்டார்.

அன்றுமுதல் வருடந்தோறும் இந்நாட்களில் சூரிய பூஜை வெகு சிறப்பாக நடக்கிறது.

இந்நிகழ்விலும் மகா பெரியவாளின் தீர்க்க தரிசனம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அறியும்போது ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.


மூலவர் கிழக்குத் திசையை நோக்கி இருப்பதால், அத்திசையில் வைக்கப்படும் வாசல் கதவுகளை சிற்பிகள் குறிப்பிட்ட இடத்திலிருந்து மேலும் சில அடிகள் தள்ளி வைக்குமாறு மகா பெரியவா கூறி இருக்கிறார். அவ்வாறே அமைத்தார்கள்.


பெரியவா குறிப்பிட்ட அதே வாசல் வழியாகத்தான் சூரியக்கிரணங்கள் குறிப்பிட்ட நாட்களில் முருகன் மீது படுகின்றன. தமிழகத்தில் காவிரிக்கருகில் குடிகொண்டிருக்கும் சுவாமிநாதன், தில்லியில் தன் மாமன் விளையாடிய யமுனை நதியை நோக்கியவண்ணம் குன்றின் மீது நின்று புரியும் அதிசயத்துக்கு அளவே இல்லை.


தொடர்ந்த வருடங்களில் மீனாக்ஷி, சுந்தரேசர், விநாயகர், நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைத்ததுடன், சிற்ப கலா மண்டபம், ஆதிசங்கரர் பிரார்த்தனைக் கூடம் போன்ற பலவும் அமைத்தார்கள் குன்றின் மேலுள்ள விஷ்ணு துர்கை சந்நிதியில் செவ்வாய்-வெள்ளி தினங்களில் நடக்கும் ராகு கால பூஜையில், வட இந்தியர்களும் திரளாக வந்து கலந்துகொள்கிறார்கள். அமிர்தசரஸ் போன்ற தொலைதூர நகரங்களிலிருந்து சீக்கியர்களும் வந்து வழிபாடு நடத்திப் பயன்பெறுகிறார்கள்.


2001-ஆம் ஆண்டு முதல், சிறப்பு தினங்களில் சுவாமியை மலை மேல் ஊர்வலமாகத் தூக்கிச் செல்வது முதல் பிரசாத விநியோகம் வரை எல்லாக் காரியங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவர் ஒரு சீக்கியர் என்று அறியும்போது வியப்பின் எல்லைக்கே செல்கிறோம்.


மூலவரைத் தரிசிக்க படியேறிச் செல்லும் வழியில் நாகர் சந்நிதி அமைந்துள்ளது. கோயில் கட்டுவதற்கு முன்பாக ஒரு நாள் குன்றின்மேல்தோன்றி பக்தர்கள் காண விளையாடிவிட்டு, குன்றினுள் சென்று மறைந்துவிட்ட நாகத்தின் நினைவாக இந்த நாகராஜா சந்நிதி அமைக்கப்பட்டதாம். குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் சிறியதாக இருந்த அரசமரம், கிளைபரப்பி இன்றளவும் கம்பீரமாக நிற்பதை இடும்பன் சந்நிதிக்கருகில் காணலாம்.


மூலவரின் சாந்நித்யம் கோயிலில் நிறைந்துள்ளது எனபதற்குச் சான்றாக, கோயில் வளாகத்தில் இரு மயில்களும் ஒரு சேவலும் உல்லாசமாக உலவுவதைக் காணலாம். விநாயகர் சந்நிதிக்குப் பின்புறம் ஒன்பதரை அடி உயரத்தில் அமைந்துள்ள மீனாக்ஷி-சுந்தரேசர், வள்ளி-முருகன் ஆகியோரின் திருமணக் கோலங்கள் மிக அழகிய சிற்பங்களாக வடிக்கப்பட்டு பக்தர்களைக் கவர்கிறது.


உத்தர சுவாமிமலையில் நடக்கும் மிகப் பெரிய விழா – கந்த சஷ்டி விழாவாகும். தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி நடத்தும் இப்பெரிய விழா தவிர தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, திருக்கார்த்திகை போன்ற விழாக்களும் வெகு சிறப்பாக நடக்கின்றன.


கார்த்திகை மாதத்தில் நுழைவாயிலில் இருந்து மலை உச்சிவரை ஏற்றப்படும் தீபங்களின் அழகைக் காணும்போது, ‘ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று நாமும் நிச்சயம் பாடுவோம். திருப்புகழ்ச் சக்கரவர்த்தி குருஜி ஏ. எஸ். ராகவன் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திருப்புகழ்த் திருப்படித் திருவிழாவும், அருணகிரிநாதர் நினைவு விழாவும் முறையே வருட முதல் ஞாயிறன்றும், அக்டோபர் இரண்டாம் தேதியும் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.


குன்று கண்டுபிடிக்கப்பட்ட காலந்தொட்டு இன்றுவரை உத்தர சுவாமிநாதனின் சேவையிலேயே காலம் கழித்து வரும் மிக மூத்த அன்பர் எஸ். பட்டாபிராமன் (தொண்ணூறை நெருங்கிவிட்டவர்) அவர்களுடன் பேசும்போது நாமும் அந்தக் காலத்துக்கே சென்றுவிடுகிறோம். கோயில் அமைப்பு, நிர்வாக விஷயங்களுக்காக காஞ்சி பரமாச்சார்யாருடன் பழகிய நாட்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.


“பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட ஒருநேரத்தில் பெரியவாளைத் தஞ்சமடைந்தோம். பணத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, ‘ஆறு வற்றிக் கிடக்கிறது. விரைவில் ஒரு பிரவாகம் வரப்போகிறது. அப்போது யாராலும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது.” என்று ஆசி அருளினார். அவரின் அருள்வாக்கு அப்படியே பலித்துவிட்டது. அன்று முதல் இன்று வரை கோயிலில் பணப் பற்றாக்குறை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்று கூறி உணர்ச்சிவசப் படுகிறார்.


தில்லி தமிழர்கள் தமிழ்-இந்தி இரு மொழிகளையும் இணைத்து ‘மலை மந்திர்’ என்று கூறுவதைக் கேட்ட தமிழர் அல்லாதவர்கள் இதை ‘மலாய்-மந்திர்’ என்று உச்சரிக்க ஆரம்பித்து, அதுவே நிலைத்துவிட்டது. பாலேடு என்பதன் இந்தி வார்த்தைதான் ‘மலாய்’. பாலேடு போன்ற சிறப்பும் சுவையும் மென்மையும் உடையவன்தானே நம் சுவாமிநாதன்! அந்தப் பெயர் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே!

periyava_malai_mandir_murugan.jpg


https://mahaperiyavaa.wordpress.com/...E%BF%E0%AE%B0/
 
Live Telecast Details for Sivan Sar Jayanthi – Oct 7th, 2015

Live Telecast Details for Sivan Sar Jayanthi – Oct 7th, 2015


MORNING PROGRAMME ON OCT 7TH FROM 9:00AM – 11:00AM IST – WEBCASTING LINK:
http://bit.ly/SriSivanSarJayanthiMahotsavamAbishekam




EVENING PROGRAMME ON OCT 7TH – FROM 6:30PM – 8:00PM IST WEBCASTING LINK:
http://bit.ly/SriSivanSARJayanthiMahotsavamProgram



Hara Hara Sankara Jaya Jaya Sankara!



https://mahaperiyavaa.wordpress.com...-details-for-sivan-sar-jayanthi-oct-7th-2015/
 
ஸத்கர்மா பலிக்காததேன்?

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 164

ஸத்கர்மா பலிக்காததேன்?

‘அப்படியானால் சாஸ்த்ரம் பொய்யா? லோகக்ஷேமத்துக்காக என்று அது விதித்த ஸ்வதர்ம கர்மாக்களால் எப்படி அந்த பயன் ஏற்படாமல் போகலாம்?’ என்று கேட்கலாம்.

அப்படி அர்த்தமில்லை. தனி மநுஷ்யன் பண்ணுகிற தப்புக்களுக்கு அவன் அநுபவித்துக் கஷ்டப்படத்தான் வேண்டும் என்று இருக்கிறமாதிரியே ஸமூஹம் பூராவும் தப்பு வழியில் போகிறபோது அதுவும் க்ஷேமத்தை அடையாமல் கஷ்டத்தைத்தான் அடையவேண்டுமென்று ஒவ்வொரு ‘பீரியட்’களில் ஏற்படுவதாக வைத்துக்கொள்ளலாம். அம்மாதிரி ஸமயங்களில் நாம் அதன் நல்லதற்காகப் பண்ணுவது பலிக்காத மாதிரி ஆகிறது. ‘மாதிரி’தான்! பலிக்கவேயில்லை என்று சொல்லமுடியாது. க்ஷேமாபிவ்ருத்தி நம் கண்ணுக்கு முன்னே தெரியாதபோதகூட ஜனஸமூஹத்தின் கூட்டுப் பாபம் நாம் செய்கிற ஸத்கர்மாக்களால் குறையத்தான் செய்யும். ஸொந்த வாழ்க்கை போலவே ஜனஸமூஹத்தின் வாழ்க்கையிலும், ஏற்கெனவே பண்ணினதற்கு அநுபவித்தாகணும்; அதைப் புதிசாகப் பண்ணுவதால் ஒன்று குறைத்துக்கொள்ளலாம், அல்லது பெருக்கிக்கொள்ளலாம் என்று இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் ‘சாஸ்த்ரம் பொய்யா? ஏன் பலன் கிடைக்கவில்லை?’ என்ற கேள்வி வராது.

நாம் செய்த பழைய பாபம் என்ன, ஜன ஸமூஹம் முழுதும் சேர்ந்து பண்ணின பூர்வ பாபம் என்ன, தற்போது நாம் சாஸ்த்ரப்படி பண்ணும் ஸத்கார்யங்களுக்குப் புண்ய ‘வால்யூ’ என்ன, இது பழைய மூட்டையின் பாரத்தை எவ்வளவு குறைக்கிறது என்பதெல்லாம் எதுவும் தெரியாத படியே ஈச்வரன் நம்மை வைத்திருக்கிறான். ஆனபடியால், பலன் என்று எதையோ எதிர்ப்பார்த்துக்கொண்டு, அது கிடைக்கவில்லையே என்பதில் ஆதங்கப்படாமல் நாம் பாட்டுக்கு, “இந்தக் கணக்கெல்லாம் ரஹஸ்யமாகப் பார்த்து எவன் தீர்த்துக் கொண்டிருக்கிறானோ, அவன் தீர்க்கிறபோது தீர்க்கட்டும். நாம் ஒன்றும் கேள்விகேட்காமல், ஒன்றையும் எதிர்ப் பார்க்காமல் நமக்கான கார்யத்தைச் செய்துகொண்டு போவோம்” என்று செய்து கொண்டேயிருக்கவேண்டும். இப்படிப் பலனை முக்யமாக நினைத்துச் செய்யாமலிருக்கும்போதுதான் முழுக்க முழுக்க சாஸ்த்ரம் சொல்லும் தர்ம வழியிலேயே போகமுடியும். பலனைப் பார்க்க ஆரம்பித்துவிட்டோமானால், ‘இப்படி தர்மமாகப் போய் பலன் அடையமுடியவில்லையா? ஸரி, அப்படியானால் வேறு குறுக்கு வழி, தப்புவழி, அதர்ம வழியிலே போய்தான் அடையப் பார்ப்போமே’ என்று தோன்றும். தர்ம வழியிலேயே செல்வதற்கு நிஷ்காம்ய கர்மம் எனும் disinterested action தான் உதவும்.

பய வாய்ப்புக் குறைதல்

கட்டவிழ்த்துவிடுவதில் இதுவே ஆரம்பம். (சற்றுமுன்) சொன்னமாதிரி, இது மனஸை ஓரளவுக்கு நல்லதில் போகப் பண்ணி, பெரிய அளவுக்குக் கெட்டதில் போகாமல் தடுக்கிறது. இதிலே நன்றாகப் பழகிப் பழகிச் சித்த சுத்தி ஏற்பட, ஏற்பட கார்யமில்லாமல் தனியாக மனஸை மட்டும் வைத்துக்கொண்டு த்யானம் என்று செய்ய ஆரம்பிக்கும்போது அது சிதறி ஓடாமல் கட்டுப்பட்டு நிற்க ஆரம்பிக்கிறது. இப்படிக் கட்டுப்பட்டு அது ஈச்வரனிடம் எவ்வளவுக்கெவ்வளவு நிற்கிறதோ அவவ்ளவுக்கவ்வளவு ஸம்ஸாரக் கட்டு அவிழ ஆரம்பிக்கிறது. அப்புறம்தான் மனஸ் என்பதாக ஆத்மாவைக் குறுக்கிக் கட்டுப்படுத்தும் கட்டே ஈச்வராநுக்ரஹத்தினால் அவிழ்ந்து, கர்மா செய்வதற்கு ஒரு தனி ஜீவன் என்பதே இல்லாமலாகி, எனவே ஸம்ஸாரக் கட்டை அடியோடு அறுத்துக்கொண்டு அத்விதீயமான ஆத்மாவாக ஜீவன் தன்னை அறிந்து அதிலேயே நிலைப்பதான முக்தி கிட்டுகிறது.

பயத்துக்குக் காரணமான த்வைதம் போவது அப்போதுதான். கர்மா செய்யும்போதும், த்யானம் செய்யும்போதும் த்வைதம் தவிர்க்கவே முடியாதது. ஆனாலும் மனம் போனபடி நினைப்பதிலும், மனம் போனபடி கார்யம் செய்வதிலும் த்வைதம் நம்மை பயமுறுத்திய மாதிரி, ஈச்வரனையோ பரமாத்ம தத்வத்தையோ நினைப்பதான த்யானத்திலும், தர்மமான கர்ம மார்க்கத்திலும் பயமுறுத்துவதில்லை. நாம் ஈச்வரனை நினைக்கிறோம், அல்லது ஈச்வரன் என்று ஒரு ரூபமாக இல்லாமல் பரமாத்ம தத்வம் என்று அவனுடைய ஸாரத்தை நினைக்கிறோமென்றால் அப்போது அந்த ஈச்வரன் அல்லது தத்வம் நினைப்பவனுக்கு வேறான த்விதீய வஸ்துவாகத்தான் இருக்கிறான், இருக்கிறது. ஆனாலும் மற்ற நினைப்புகளுக்கு லக்ஷ்யமாகும் இந்த்ரிய விஷயங்களைப் போலவோ, உலக வஸ்துக்களைப் போலவோ ஈச்வரன் அல்லது ஈச்வர தத்வம் நம்மைக் குழியில் தள்ளிவிடக்கூடுமென்ற பயத்துக்கு இடமேயில்லை.

ஆனாலும் மனஸ் இந்த உத்தம நினைப்பிலே ஒருமுகமாக ஆகி, அற்றே போய்விடுகிறவரை வேறே ஒருவிதத்தில் ஓரளவுக்கு பயம் இருக்கும்தான். ஈச்வரனுமே வெளியிலே வேறு வஸ்துவாயிருக்கிறவரையில், ‘என்ன மாயம் செய்வனோ? மஹா பெரிய பக்தர்களுக்கும் பிடிபடாமல் அவ்வப்போது ஓடிப்போய் மறைந்துகொண்டு கதறக்கதற விட்டு வேடிக்கை பார்த்தவனாயிற்றே! ஏதோ இப்போது கொஞ்சம் மனஸுக்குப் பிடிபட்ட மாதிரி இருந்தாலும் எப்போது நழுவி ஓடுவானோ? இந்தப் பாழும் மனஸும் என்னென்ன குப்பைத் தொட்டிகளுக்கு ஓடுமா?’ என்கிற பயம் இருக்கத்தான் செய்யும். எந்தவிதமான பயமானாலும் பயம் பயம்தானே? ஆதலினால், மனஸ் உள்ள த்வைத நிலையில் எத்தனை உச்சிக்குப் போனாலும் அது பரிபூர்ண அபய நிலையாய் இருக்க முடியாது. ஆனாலும் மனஸை இஷ்டப்படி விடும்போது அது ரொம்பவும் பயத்துக்கு ஹேதுவாக இருக்கிறாற்போல இல்லாமல், பக்தி மார்க்கத்தில் போகும்போது பயம் என்பதற்கு ரொம்பவும் குறைவாகவே இடம் ஏற்படுகிறது.

தர்ம கர்மாவும் இப்படித்தான். கட்டை அவிழ்க்க வேண்டிய அதுவே கட்டைப் போட்டுவிடப் போகிறதே என்றுகூடச் சில ஸமயங்களில் பயப்படவேண்டியதாகிறது. கர்மா என்று வரும்போது, அது எத்தனை ஸத்கர்மாவாக இருந்தாலுங்கூட, எத்தனை வெளி வஸ்துக்களை, மநுஷ்யர்களை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது? அவற்றை, அவர்களை deal பண்ணுவதில் கோபம், எரிச்சல், ஏமாற்றம் (ஏமாறுவது, ஏமாற்றுவது இரண்டும்தான்) – எத்தனையோ ஏற்பட இடமிருக்கிறது. அப்போது, கட்டு தளருமா என்று இருக்கிறது. ஆனாலும் பலனை எதிர்பார்ப்பதில்லை என்பதில் தீவ்ரமாயிருந்துவிட்டால், “நாம் ஸின்ஸியராக நம்மால் முடிந்த மட்டும் ப்ரயாஸை பண்ணுகிறோம். அப்படியும் இந்த வெளி வஸ்தக்கள் ஸரியாயில்லையா? ஏதோ சொத்தை சொள்ளைதான் கிடைக்கிறதா? மநுஷ்யர்கள் ஸாதகமாக இல்லாமல் குந்தகம் பண்ணுகிறார்களா? எல்லாம் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். இருப்பதைக் கொண்டு நம்மால் என்ன பண்ணமுடியுமோ பண்ணலாம்” என்பதாகக் கோபம் முதலான தப்புணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமலிருக்கலாம்.

எத்தனை சொன்னாலும், த்வைதத்தைச் சேர்ந்ததேயான கர்மாவிலும் பக்தியிலும் பரிபூர்ண அபயநிலை கைகூடாது. ஆனாலும் க்ஷணத்துக்கு க்ஷணம் பயத்துக்கு இடம் கொடுப்பதாக இருக்கிற ஸம்ஸாரத்திலிருந்து அபய பதமான அத்வைதத்துக்குப் போகவேண்டுமென்றால் அதற்குக் கர்மாவும் பக்தியும்தான் ஆரம்ப ஸாதனங்கள். ‘எப்போதும் பயம்’ என்கிற நம்முடைய நிகழ்கால நிலை, இவற்றிலே “எப்போதாவது பயம்” என்று ஆகிறது. அப்புறம் “ஒரு போதும் பயமில்லை” என்கிற நிலை.

அந்த நிலை வர ஆரம்பத்தில் உதவி செய்வது ஸ்வதர்ம கர்மாநுஷ்டானந்தான். அதனால்தான், கீதையிலே பகவான், “ஸ்வதர்மத்தைப் பண்ணி அதிலேயே செத்தாலும் அதுவே ச்ரேயஸ். (ச்ரேயஸ், ப்ரேயஸ் என்று இரண்டு சொன்னேனே, நினைவிருக்கிறதோல்லியோ?) பிறன் தர்மத்தை எடுத்துக் கொண்டாயோ அது பயத்தைத்தான் கொண்டுவிடும்” என்பதாக ‘பயம்’ என்ற வார்த்தையைப் போட்டார். பயம் என்றால் ஸம்ஸார பயம்தான்.

ஸ்வதர்மே நிதநம் ச்ரேய: பரதர்மோ பயாவஹ:

என்றார். ‘நிதனம்’ என்றால் சாவு. தன் தர்மத்தையே பண்ணிக் கொண்டு செத்தாலும் அதுவே ச்ரேயஸ்.



Sage of Kanchi


Krish Ram
 
குங்குமம் எப்படிச் செய்வது

குங்குமம் எப்படிச் செய்வது


நவராத்திரி Tips


From Periva Forum

குங்குமம் எப்படிச் செய்வது என்பதற்கு ஒருமுறை ஸ்ரீ பெரியவர்களே கொடுத்த குறிப்பு:

* முப்பது தோலா கெட்டியான உருண்டை மஞ்சள் எடுத்துச் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்க.

* இதற்கு ஸம எடை எலுமிச்சம் பழச்சாறு விதையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்க. (மஞ்சள் முதலியன கடையில் தோலாக் கணக்கில் எடைபோட்டு வாங்குவதுபோல், எலுமிச்சஞ் சாற்றுக்கு வீட்டில் எடை பார்ப்பது முடியாது. அதனால் முகத்தல் அளவையில் வீட்டில் இருக்கக்கூடிய அவுன்ஸ் க்ளாஸில் அளந்து போடுகிற விதத்தில் சொன்னால், பதினாறு அவுன்ஸ் எலுமிச்சம் பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.)

* இந்தப் பழச்சாற்றில் நன்றாகப் பொடித்த வெங்காரமும் படிக்காரமும் ஒவ்வொன்றும் மூன்று தோலா போட்டுக் கரைக்கவும்.

* மஞ்சள் துண்டங்களை இதில் போட்டுக் கலக்கிக் கொள்ளவும். வாயகன்ற, ஈயம் பூசிய பாத்திரத்தில் வைப்பது உத்தமம்.

* இதை ஒருநாளில் மூன்று தடவை நன்றாகக் கிளறவும். பழச்சாறு மஞ்சளில் சேர்ந்து சுண்டியபிறகு நிழலிலேயே நன்றாகக் காய வைக்கவும்.

* அப்பறம் உரலில் இடித்து வஸ்திராயணம் செய்யவும். (மெல்லிய துணியில் பொடி.யை வடிக்கட்டுவதே வஸ்திராயணம் அல்லது வஸ்திரகாயம்.)

* இப்படி விழுகிற சுத்தமான மஞ்சட் குங்குமத்தை வாயகன்ற ஜாடியில் பத்திரப்படுத்தவும்.

* குங்குமத்தில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி (tea-spoon) சுத்த பசு நெய்விட்டு, கட்டி தட்டாமல், நன்றாகக் கலக்கச் செய்து வைத்தால் காப்பும் ( preservative) ஆகும்;புனிதமும் ஆகும். சுத்தமான பசுநெய் கிடைத்தால் மட்டுமே சேர்க்கவும். சரக்கைப்பற்றிக் கொஞ்சம் ஸந்தேஹமிருந்தால்கூட நெய்யே சேர்க்காவிட்டாலும் பாதகமில்லை



Sage of Kanchi

Bala Thiru
 
நவராத்திரி-13-10-2015 ஆரம்பம்

நவராத்திரி-13-10-2015 ஆரம்பம்.

ஒவ்வொரு காரியம் செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். கண் இருந்தால்தான் பார்க்க முடியும், குருடனால் பார்க்க முடியாது. காதுதான் கேட்கும், செவிடனால் கேட்க முடியாது. இப்படி ஒவ்வொரு பணி செய்வதற்கும் ஒரு சக்தி வேண்டும். இந்த சக்திகளுக்கெல்லாம் சக்தி அளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. அது மின்சாரம் போல. காண முடியாது, உணரத்தான் முடியும். ஆனால் அதை பூரணமாக உணர விரும்பி உருவமாக அமைத்து வழிபடும் போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன. அதை வைத்துத்தான் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று மூன்று சக்திகளாக வழிபடுகிறோம்.

மனிதன் காலை எழுந்ததும் முதலில் தன் கரத்தை உற்றுப் பார்க்கவேண்டும். கையின் மேல்புறத்தில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே துர்க்கையும் கண்டு வணங்க வேண்டும் என்று சொல்வார்கள். மனித வாழ்வின் ஆதாரம் செல்வம். அதற்கு அதிபதியான மகாலட்சுமி முதலில், அந்த செல்வத்தை அறிந்து, உணர்ந்து, நல்வழியில் பயன் படுத்த அறிவு அவசியம். அந்தக் கல்வியின் நாயகியான சரஸ்வதி அடுத்து, இத்தனை இருந்தும் இதனைக் கட்டிக் காக்கும் பராக்ரமம், வீரம் வேண்டுமல்லவா? அடுத்ததாக துர்க்கை இருக்கிறாள் என்றும் இந்த வாக்கியத்தை விளக்கம் சொல்வார்கள். அப்படி, காலை எழுந்தவுடன் இந்த மூன்று சக்திகளையும் பிரார்த்தித்துக் கொண்டோமானால் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அத்தனை பலன்களும் மிகச் சுலபமாக நமக்குக் கிட்டுவிடும்.

இதைத்தான் அக்காலத்துப் பெரியோர்கள் தினம் செய்து வந்தார்கள். பிற்காலத்தில் இப்பழக்கம் மிகவும் குறைந்து பூஜை செய்வதோடு சரியென்று மாறி தற்போது அதுவும் அருகி வருகிறது. இப்போது ஏதூவது விசேஷங்களில் மட்டும் பூஜை செய்தால் போதும் என்று பலரும் கருதுகிறார்கள். அதையாவது ஒழுங்காகச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் நவராத்திரி, சிவராத்திரி எல்லாம் இருக்கிறது.

பார்வதி தேவியே இரவின் ஸ்வரூபமாகவும், பரமசிவனே பகலின் ஸ்வரூபமாகவும் இருப்பதாக ஒரு புராணம் கூறுகிறது. பொதுவாக இரவிலே பூஜை செய்வது கூடாது. ஆனால் நவராத்திரியிலே மாத்திரம் இரவில் பூஜை செய்யலாம். சிவராத்திரியில் சிவனுக்கு பூஜை செய்யலாம்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடும் செய்வார்கள். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில், நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்தி செய்வார்கள்.

வடநாட்டிலும் இந்த நவராத்திரி பூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்படுகிறது. அங்கு விஜயதசமியன்று இந்த பூஜா விக்ரகங்களை பெரிய ஊர்வலமாக எடுத்துச் சென்று சமுத்திரத்தில் கலக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. துர்கா பூஜை என்று கல்கத்தா பகுதிகளில் இன்னும் அது மிகப் பிரசித்தம்.

இதே போன்று வஸந்த பஞ்சமியன்று அஸ்ஸாம், பெங்கால் பகுதிகளில் சரஸ்வதி பொம்மைகளைப் பெரிதாக ஊர்வலமாகக் கொண்டு சென்று சமுத்திரத்தில் கரைப்பார்கள்.

இப்படி துர்கா, லட்சுமி, சரஸ்வதி இந்த முக்கியமான மூன்று சக்திகளுக்கு நாடு முழுவதும் விழா கொண்டாடப் படுகிறது.

துக்கத்தைப் போக்குபவள் துர்க்கை.

செல்வத்தைப் பொழிபவள் லட்சுமி.

ஞானத்தை நல்குபவள் சரஸ்வதி.

இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலம் இந்த நவராத்திரி.

சின்னச் சின்ன அற்ப நலன்களை எதிர்பார்த்து வழிபடுவதற்கல்ல இந்த பூஜை. இனி பிறவாத மிக உயர்ந்த நிலையை அருள வேண்டுவதுதான் இந்த பூஜையின் நோக்கம்.

ஞானத்தோடு, ஆத்ம சுத்தியோடு இந்த பூஜை நிறைவுருவதைக் குறிக்கும் படியாக ஞானவாஹினியான சரஸ்வதி பூஜையோடு இவ்விழா நிறைவுறுகிறது.

இந்த வகையிலே, ஒவ்வொருவரும் நவராத்திரி காலத்திலே நல்லெண்ணம், நல்ல சிந்தனையுடன் அம்பாளை பூஜை செய்து, தியானித்து வழிபட்டு வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற வேண்டுமாய் வாழ்த்தி ஆசிர்வதிக்கின்றோம்!



Sage of Kanchi

varagooran Narayanan
 
உலக நாடகமும் ப்ரளயங்களும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 166

உலக நாடகமும் ப்ரளயங்களும்

எல்லாரும் மோக்ஷத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக்கொண்டு லோக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது ஸாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஒடவிட்டு, பரஸ்பரம் மோதிக்கொள்ளவிட்டு இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்திவருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரஸிப்பதற்குத்தான் அவன் லோக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈச்வரனுக்கு எப்படி ட்ராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?

அதே ஸமயம் அவன் கருணை வள்ளலும்தான். அதனால் வேடிக்கையெல்லாம் பார்த்தாலும் அநேக யுகங்கள், கல்ப காலம் ஆகிறபோது, “ஐயோ பாவம் இப்படி ஆட்டமாக ஆடிவிட்டதுகளே!” என்று பரம கருணையோடுதானே அவர்களை எல்லாம் தன்னிடம் ஒடுக்கிக்கொண்டு விடுகிறான்; அவர்களாக ஸாதனை பண்ணி ஒடுங்குவதில்லை; ஈச்வரனே ஒடுக்கிக் கொண்டுவிடுகிறான்.

உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.

நித்ய ப்ரளயம் என்பதாக தினம் தூக்கத்தில் ஈச்வரனிடம் லயித்திருப்பது; செத்தபின் ஸ்வர்க்க – நரக – புனர் ஜன்மாதிகளுக்கு முன் கொஞ்சகாலம் அவனிடம் லயித்திருப்பது; சுமார் எழுபது சதுர்யுக காலம் கொண்ட ஒவ்வொரு மன்வந்தரத்துக்குப் பிறகும் சிறிது காலம் ஸ்ருஷ்டி முழுக்க ஈச்வரனிடம் லயித்திருப்பதான ஒரு “ப்ரளயம்”; இப்படிப் பதிநாலு மன்வந்தரங்கள் அடங்கிய ப்ரம்மாவின் ஒரு பகல் வேளையான ஆயிரம் சதுர்யுகங்கள்1 முடிந்தபின் அதே மாதிரி ஆயிரம் சதுர்யுகங்கள் கொண்ட அவருடைய ராத்ரி வேளை பூராவும் ஸ்ருஷ்டித் தொழிலில்லாததால் ஜீவர்களெல்லாம் ஈச்வரனிடம் லயித்திருப்பதான “நைமித்திக ப்ரளயம்”, (மேலே சொன்னதுபோல) இரண்டாயிரம் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட பிரம்மா இம்மாதிரி நூறு வயஸு வாழ்ந்துவிட்டு பரமாத்மாவோடு ஐக்யமானபின், இதேமாதிரி நூறு ப்ரம்ம வருஷத்துக்குப்புறம் அடுத்த ப்ரம்மாவைக் கொண்டு அடுத்த ஸ்ருஷ்டியைப் பரமாத்மா ஆரம்பிக்கும்வரையில் ஒரு ப்ரளயம் (“ப்ராக்ருதிகப்ரளயம்”), முடிவே இல்லாத “ஆத்யந்திக ப்ரளயம்” என்று பலவிதமான ப்ரளயங்களை புராணங்கள் சொல்கின்றன.

இப்படி எத்தனை யுகயுகம் அவனிடம் லயித்திருந்தாலும், அதுவும் அவனோடேயே நிரந்தரமாக, சாச்வதமாகச் சேர்ந்து அவனை அறிந்து ஐக்யப்பட்ட அத்வைத மோக்ஷமில்லை. ப்ரளயத்தில் லயித்த ஜீவர்கள் அத்தனை யுகயுகங்களுக்கு அப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி ஏற்படும்போது லயம் நீங்கி அவனுக்கு வெளியிலே வந்து மறுபடி பிறக்கத்தான் வேண்டும். அவனுக்கு ட்ராமா பார்த்துத்தான் ஆகணும். லயத்தில் அவனை அறியும் அநுபவமும் இல்லை.

ஐக்யம் என்று அப்படியே அவனேயான அறிவாகி ஏகமாக ஆகிவிடுவதுதான் சாச்வத விடுதலை. லயம் என்பது ஐக்யமில்லை. ஒரு வஸ்து இன்னொன்றிலே ஒன்றாக இழைந்திருக்கும் நிலைதான் லயமே தவிர, அதுவாகவே ஆகிவிடுவதல்ல. அதனால்தான் ப்ரளயத்தில் லயித்தவர்களை அவன் மறுபடி ஸம்ஸாரத்தில் அவிழ்த்துவிடமுடிகிறது. நித்யப்ரளயமான தூக்கமே எடுத்துக்காட்டு.

சாஸ்த்ரங்கள், இம்மாதிரி ஜீவஸமூஹம் முழுதும் தன் முயற்சியும் ஸாதனையும் இல்லாமல் அவனுடைய க்ருபையாலேயே அவனிடம் லயித்திருப்பதையும் மறுபடி அடுத்த ஸ்ருஷ்டியில் உத்பவிப்பதையும்தான் சொல்கின்றனவே ஒழிய, லோகம் பூராவும் ஞானம் பெற்று அறிவான, ஆனந்தமான மோக்ஷம் அடைவதாகச் சொல்லவில்லை.

அதாவது, ‘லோகம் என்று ஒன்று இருந்தால் அதிலே மோக்க்ஷாதிகாரிகளாக ஆகாத பலபேர் இருந்துகொண்டுதானிருப்பார்கள்; விசேஷமாக பக்தி, ஞானங்கள் இல்லாதவர்களாகவே பலர் இருந்துகொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் தன்னிடம் ஒடுங்கியிருப்பதான சாந்த நிலையைத் தரவேண்டுமென்று ஈச்வரன் நினைக்கும்போது லோகமே இல்லாமல் பண்ணித்தான் ப்ரளயத்தில் எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக்கொள்வான்; லோகம் என்று ஒன்று இருந்து அதில் பக்தி, ரஸம், ஞானத்தின் சாந்தி என்ற இரண்டு மட்டுமே இருப்பதாக விடமாட்டான்’ என்றே சாஸ்த்ரங்களிலிருந்து ஏற்படுகின்றன.

ஞானத்தின் உண்மையான சாந்திநிலைக்கு லோகம் இருந்தும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ப்ரேம ரஸத்துக்கும், அது ஒன்றே பெருகுவதற்கென்று வைகுண்ட, கைலாஸாதி லோகங்கள் இருக்கின்றன. ஆகையால் நவரஸ நாடகமாகத்தான் இந்த ஜீவலோகம் இருக்கவேண்டும்.

1 கல்ப காலம் என்பது ப்ரஹ்மனின் ஒரு பகலான ஆயிரம் சதுர்யுகங்கள்தான்.

உலக வாழ்வின் உயர் நலன்களுக்காக

மஹா ப்ரளயம் என்று அவனே எப்போது எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போதுதான் நாடகம் முடியுமே தவிர, நாடக பாத்ரமாயுள்ள இந்த கோடி கோடி ஜனங்களும் தாங்களாக ஸாதனை பண்ணி முக்தி மார்க்கத்தில் முழுக்கப்போவது என்பது நடக்காது. ஓரளவு பக்தி மார்க்கத்தில் போவார்கள், அதையும் விடக்குறைவாக அத்வைதமான முக்தியைத் தரும் ஞானத்தில் போவார்கள்.

ஆனாலும் இப்படி ஏதோ ஓரளவுக்காவது அவர்களைப் போகப்பண்ணத்தான் வேண்டும், அதுவே ஸம்ஸார தாபத்துக்கு எவ்வளவோ ஆறுதல். “ஓரளவு” என்பதுதான் அளவு கொஞ்சம் கொஞ்சமாய் ஜாஸ்தியாகி எத்தனையோ ஜன்மாவுக்கு அப்புறமாவது பூர்ண ஈடுபாடாக ஆக வேண்டும்.

அப்படி அவர்களைப் போகப் பண்ணுவதற்கு, முக்திக்கு முயல்பவர்கள் சித்த சுத்திக்காகச் செய்ய வேண்டிய தங்களுடைய கர்மாக்களை ‘யுடிலைஸ்’ செய்துகொள்ளலாம். கார்யமில்லாத பக்தி முதலில் ஸாத்யமில்லை, கார்யத்தோடு சேர்ந்த பக்திதான் ஸாத்யம் என்று பார்த்தோமல்லவா? அம்மாதிரி இவர்களை ஒரு ஸத்ஸங்கமாகச் சேர்ப்பது, கூட்டமாக ஆலய வழிபாடு பண்ணவைப்பது, பஜனை செய்ய வைப்பது, இவர்களுக்கு ஸதுபதேசங்களை எடுத்துச் சொல்வது – என்று அநேக கார்யங்களைச் செய்ய இவர்களைவிட ஒருபடி மேலே போனவர்கள் தேவைப்படுகிறார்கள். ஸம்ஸார வாழ்க்கை நன்றாக அமைவதற்காகவே ஈச்வரனை பக்தி செய்வது என்ற அளவோடு நின்றுவிடுகிற இவர்களைவிட ஸம்ஸாரத்திலிருந்து விடுபட விரும்பி, அதற்கான சித்தசுத்தி பெறவே கர்மாவில் ஈடுபடி வேண்டியிருப்பவர்கள் ஒருபடி மேலே போனவர்கள் அல்லவா? அதனால் அவர்கள் இவர்களை பக்தியில் ஈடுபடுத்துவதற்காக மேலே சொன்ன கார்யங்களைப் பண்ணலாம். இது அவர்களுடைய ஸ்வயசித்தசுத்திக்கு உதவுவதோடு எல்லாருக்கும் பக்தியைப் பரப்புவதான லோகோபகாரத்தையும் பண்ணுவதாகிறது.



Sage of Kanchi

Krish Ram
 
HH with the First Batch of Tekkemadham Veda Padashala in Thrissur, Kerala!

HH with the First Batch of Tekkemadham Veda Padashala in Thrissur, Kerala!

Thanks a ton to Shri Mahesh Balasubramanian for this gem.



Source: Panchanathan Suresh

12106728_10153641240239244_6331718431416252545_n.jpg
 
யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ்.

யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ்.


தெய்வத்தின் குரல்


பிரத்யக்ஷமாக மந்திர சக்தியால் அங்கங்கே கொஞ்சம் இப்போதும் நடந்து வருகிறது. இதில் நல்லதைவிட கெட்டதுதான் இப்போது அதிகமாக இருக்கிறது—ஏவல், பில்லி, சூனியம் இது மாதிரி 'மாந்த்ரிகம்' என்றாலே பயப்படுகிற மாதிரி இருக்கிறது. ஆனால் இதிலிருந்தேகூட, கெட்டதைச் செய்ய ஒரு சில சப்தக் கூட்டங்களுக்கு சக்தி இருக்குமானால், நல்லதைச் செய்யவும் ஏன் இப்படிச் சில சப்தக் கூட்டங்களான மந்திரங்கள் இருக்கக்கூடாது என்று யோசித்துத் தெரிந்து கொள்ளலாம்.

நல்லதாகவும் அவ்வப்போது எங்கேயோ கேள்விப்படுகிறோம். 'வருண ஜபம் செய்தார்கள், மழை பெய்தது' என்று படிக்கிறோம். நம் ஊரிலேயே எப்போதாவது இந்த மாதிரி நேரில் பார்க்கிறோம்.


இன்னோரிடத்தில் வருண ஜபம் பண்ணியும் மழை பெய்யாமலிருக்கலாம். அதனால், மந்திரத்தையே சக்தியில்லாததென்று தள்ளிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிட்டு உடம்பு சரியாகிறவர்களும் இருக்கிறார்கள்! குணமாகாமல் சாகிறவர்களும் இருக்கிறார்கள். அதனால் மருந்தே தப்பு என்போமா? மருந்து பலிக்காவிட்டால் வியாதி முற்றியிருக்க வேண்டும் என்கிறோம். அதுபோல் கர்மா ரொம்பப் பலமாக இருந்தால், எந்த மந்திரமும் பலன் தராமல் போகலாம்.

இன்னொரு காரணமும் உண்டு. பத்தியம் தப்பினால் மருந்து பலிக்காது. அந்த மாதிரி மந்திர சக்தி ஸித்திப்பதற்குச் சில நியமங்களைப் பத்தியம் போல் வைத்திருக்கிறது. இந்த நியமங்களில் தப்பு வந்தால் மந்திரங்களிலிருந்து உத்தேச பலன் கிடைக்காது. யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ்.

ஸயன்ஸ் பரிசோதனை செய்கிற லாபரட்டரியில் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்ற ரூலை மீறினால் நிஷ்பலனாகும் அல்லது விபரீதமாகும். மின்சாரத்தில் வேலை செய்யும் போது, 'மரத்தில் நிற்கமாட்டேன்', 'ரப்பர் உறை (gloves) போட்டுக் கொள்ள மாட்டேன்' என்றால் என்ன ஆவது? அப்படித்தான், யோக சாஸ்திரம் ஒரு ஸயன்ஸ் என்றால் அதன் விதிகளின்படி கேட்டுத்தான் ஆக வேண்டும். வருண ஜபம் பலிக்காத பல இடங்களில் நான் விசாரித்ததில் அலவண நியமம் அதாவது ஜபம் செய்கிறவர்கள் உப்பே சேர்த்துக் கொள்ளக்கூடாது என்கிற விதி—சரியாக அநுஷ்டிக்கப்படவில்லை என்று தெரிந்து கொண்டிருக்கிறேன்.


Sage of Kanchi

Halasya Sundaram Iyer



 
Navarathri Puja at Sanskrit College

Navarathri Puja at Sanskrit College

Navarathri Puja at Sanskrit College



Navarathri is celebrated twice in a year.



The first Navarathri is celebrated in spring, culminates in Rama Navami and is called Vasantha Navarathri.



The second one is celebrated in autumn, culminates in Saraswathi Puja and Vijayadasami and is called Sharath Navarathri.



Both Navarathris are celebrated grandly at the mutt.



Navarathri puja started in Chennai on October 1st 1932. From the start of Navarathri, Swamigal would maintain Mouna vratha (Vow of Silence) for nine days and would break the silence on the tenth day. In those days, pujas were conducted in both mornings as well as evenings. Scores of devotees would gather to have darshan of Swamigal as well as see the special pujas. They would make their offerings for the puja based on their own capacity.

Women are given a special status on these days when they are considered embodiments of Devi and are given auspicious gifts such as turmeric, kumkum, flowers etc. Food is served to women before it is given to anybody else. Everyday, Kanya puja is done to young girls between two and ten years of age. Devotees would wait for hours to witness the Kanya puja. Scholars and Vidwans would chant Devi Bhagavatham, Ramayanam, Geetha, and Brahma Sutra Bhashyam. Sri Vidya Homam and Chandi Homam would be conducted in the premises of the mutt. The citizens of Chennai had never before witnessed such a sight and gathered in thousands to partake in the Navarathri celebrations held at Sanskrit College. Mylapore had the appearance of a huge festival which ended with Saraswathi Puja. Swamigal broke his silence the next day on Vijayadasami.



Chandrasekarendra Theertham and Bhashya Mandap



Before Swamigal’s visit to Sanskrit Kalasala, K.Balasubramania Iyer expanded the well there and made it into a small pond for the convenience of Swamigal’s bathing routine. Swamigal took his bath there every day during his stay. In order to memorialize Swamigal’s stay there, Iyer named the pond Sri Chandrasekarendra Saraswathi Theertham. Sanskrit Kalasala had built a mandap where Swamigal would gather with pundits on Vijayadasami and discuss/debate on Brahma Sutra Bhashyam. This mandap was named Bhashya Mandap after the event.



Kanchi Mahaperiyava Perumai and Kataksham

Visit to Ramakrishna School in 1932



During his stay at Mylapore, Swamigal visited nearby Ramakrishna Mission School. The head of the place, Ramanujachariar welcomed our Swamigal with purna kumbam, showed him around the place and explained the daily routine of the students.



Swamigal expressed his pleasure at the work done by the disciples

of Ramakrishna Mutt and he advised them to keep Sri Ramakrishna Paramahamsa’s teachings in mind and follow the path of bhakthi. Swamigal also praised the selfless service done by Ramanujachariar.



A musical concert by G.N.Balasubramaniam was held in the presence of our Swamigal. His Holiness distributed vibhuti and atchadhai to all the students and devotees gathered there. A great devotee of Swamigal from Chetti Nadu donated a big picture of our Swamigal to the school in memory of his visit that day.



I am pround to add here that I am a student of Sri Ramakrishna Hoeme Mylapore studied there in the period 1968-1972 and I am today Living happily with all is only due to the education and Karmas I learned in my childhood stage..



I am very much delighted to read and share the above details of Mahaperiyava Visit and blessing shown to students of Muts.

12088303_1061548623878355_248453977501785451_n.jpg


Sage of Kanchi

Jambunathan Iyer
 
பரதர்மம் ஏன் கூடாது?

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 168

பரதர்மம் ஏன் கூடாது?

இதிலே, ‘பாரம்பர்யமாக இன்னின்ன பண்ணிக்கொண்டு போ’ என்று இருப்பதை மாற்றி, இந்த (பரம்பரை) த் தொழிலைவிட இன்னொன்று உத்தமமாயிருக்கிறதென்று நினைத்து அதற்குப் போகாதே என்று பகவான் சொல்கிறார். ஸ்வதர்மமே பண்ணு, பிறன் தர்மத்துக்குப் போகாதே என்று அவர் இதைத்தான் சொல்கிறார். ஸ்வதர்மத்திலே இருந்தால்தான், இறந்தாலுங்கூடத்தான் அதுவே ச்ரேயஸ்; பரதர்மம் பயத்தை – அதாவது ஸம்ஸாரத்தை – உண்டுபண்ணும் என்கிறார்.

ஏன் இதைவிட நல்லது என்று இன்னொன்றுக்குப் போகப்படாது என்றால், பிறப்புப்படி தனக்கு வாய்த்த கர்மத்தை விட்டு இன்னொன்றை இவன் தேர்ந்தடுக்கிறான் என்னும் போதே இவனுக்கு என்று ஸொந்த அபிப்ராயம், ஸ்வயேச்சைப்படி செய்வது என்பவை ஏற்படுகின்றன என்று அர்த்தம். இப்படிச் சொன்னால் தனி மனஸின் ஆசை வந்துவிட்டதாகத் தானே ஆகிறது? வாய்த்ததைச் செய்வது என்று தன்னிச்சை இல்லாமல் செய்வது போய், இவனாக ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுக்கிறானென்றால், choice வந்துவிட்டது, option வந்துவிட்டது என்றால், கூடவே கூடாது என்று ஒழித்துக் கட்டவேண்டியதான ஆசைக்கு இடம் கொடுக்கிறானென்றுதான் அர்த்தம். கர்மாவைத் தேர்ந்தெடுப்பதிலேயே இஷ்டம், ஆசை என்பது வந்துவிட்டபோது அது காம்ய கர்மமாகிவிடுகிறது. அப்புறம் அதன் பலனை த்யாகம் செய்வதால் மட்டும் அதை நிஷ்காம்ய கர்மமாக்கிக் கொண்டுவிட முடியாது. எப்போது நம்முடையதைவிட நல்லது என்று ஒன்றை விரும்பித் தேர்ந்தெடுத்தானோ அப்போது அதன் பலனில் ஒரு ஸந்துஷ்டியை மனஸ் தேடிப் பெறத்தான் செய்யும். கர்மாவால் மனஸானது தன்னையறியாமலே சுத்தியாவது என்பது தவிர வேறு எந்த ஸந்துஷ்டியைத் தேடி அறிந்து பெறுவதும் அதை அசுத்தி செய்வதுதான்.

பிறன் தர்மத்துக்குப் போகப்படாது என்பதற்கு ஸாதகனை வைத்துக் காட்டுகிற காரணம் இது. லோகத்தை, ஜன ஸமூஹத்தை வைத்தும் ஒரு காரணம் உண்டு. நல்ல அழுத்தமான காரணம். லோக க்ஷேமத்துக்காகப் பலவிதமான கார்யங்கள் செய்யவேண்டியிருக்கிறது. புத்தியால் பாடம் புகட்டுவதிலிருந்து உடம்பால் உழைத்துக்கொட்டுவது வரை அநேகம் செய்யவேண்டியிருக்கிறது. சுத்தமான நெய்யை மங்களமான மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டு ரொம்பவும் பவித்ரமாக ஜ்வலித்துக் கொண்டிருக்கும் அக்னியில் ஆஹுதி செய்வதிலிருந்து, ‘பிடி!விடாதே! வெட்டு!குத்து!’ என்று கத்தியை வைத்துக்கொண்டு சத்ருவோடு யுத்தம் செய்வது, அல்லது திருடனைப் பிடித்து ரத்தக் காயப்படுத்துவதுவரை பலவிதமான தொழில்கள் செய்யவேண்டியிருக்கிறது. இப்படியிருக்கும்போது, இந்த எல்லா தொழில்களும் சீராக நடப்பதற்காகத்தான் பாரம்பர்யமாக கர்மாக்களைக் கொடுத்து வெவ்வேறு ஸ்வதர்மங்களை வைத்திருக்கிறது. இந்தக் கார்யங்களைப் பார்க்கும்போது ஒன்று உசத்தி, ஒன்று தாழ்த்தி என்று தோன்றினாலும், ஸமூஹ நலனை விளைவிப்பது என்ற பலனைப் பார்த்தோமானால் எல்லாமே ஸமம்தான். உசத்தியுமில்ல தாழ்த்தியுமில்லை என்று தெரியும். எந்த ஜாதிக்ககாரனின் தொழில் நின்று போனாலும் ஜன ஸமூஹத்தின் நல்வாழ்வு பாதிக்கப்படத்தான் செய்யும். அது ஸரிவர நடப்பதற்கு, தாழ்த்தியாகத் தோன்றுகிற கார்யங்களும் நடந்தே தீரவேண்டும். ஒட்டன் ஸ்ட்ரைக் செய்தால் ஊரே நாறிப் போகிறது, காலராவும் வைசூரியும் பரவுகின்றன. இதுகளிலிருந்து ஸமூஹத்தைக் காத்து ரக்ஷிக்கும் கார்யத்தை அவன் செய்கிறானென்னும்போது அவனுடைய அந்த ஸ்வதர்மம் எப்படித் தாழ்ந்ததாக இருக்கமுடியும்? அதனால் வாய்த்ததைச் செய்வது என்றில்லாமல் உசத்தி தாழ்த்தி கல்பிப்பதே பிசகு.

இப்படி ஸொந்த choice -ன்படி (தாமாகத் தேர்ந்தெடுத்து) தொழில்களைச் செய்வது என்றால், எல்லாத் தொழிலிலும் இப்போது பாரம்பர்ய முறையினால் அததற்குத் தேவைப்படும் விகிதாசாரப்படி ஜனங்கள் ‘டிஸ்ட்ரிப்யூட்’ (பங்கீடு) ஆகியுள்ளது போல இருக்காது. ஏதோ ஒரு தொழிலுக்கு ஜாஸ்திப்பேர் போவார்கள். இன்னொன்றை யாரும் சீந்தாமல் விடுவார்கள். அல்லது எதற்கும் உபயோக மற்றவர்களை அதில் போடுவோம். அந்தக் கார்யங்கள் நன்றாய் நடக்காமல் ஸமூஹம் பாதிக்கப்படும். பாரம்பர்யமாக வரும் குணம், குடும்பச் சூழ்நிலை முதலியவை ஸ்வதர்ம அநுஷ்டானத்தக்குப் ‘பெர்ஃபெக்க்ஷன்’ தருவதுபோல அப்போது இருக்காது. புதிதாக ஜனங்கள் இஷ்டப்படி எடுத்துக்கொண்ட தொழில்கள் பெர்ஃபெக்டாக நடக்காமல் போகலாம். அதோடு தொழில்களில் ஜனங்கள் பங்கீடாகும் ப்ரபோர்ஷன் ஏறுமாறாக ஆகி, போட்டி, பொறாமை, எமாற்றம் எல்லாம் ஏற்படும். மொத்தத்தில் ஸமூஹ நலனுக்காகக் கார்யங்கள் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்காமல் லோக க்ஷேமமே பாதிக்கப்படும்.

இப்படியாகத் தன் ஸொந்த இஷ்டம் என்று ஒன்றின் மேல் ஸ்வதர்மத்தை விடுகிற தோஷம், அப்படி விட்டதால் லோக க்ஷேமம் பாதிக்கப்படுவதற்கு இடமேற்படுத்துகிற தோஷம் என்ற இரண்டு பெரிய தப்புக்கள் பரதர்மத்துக்குப் போகிறவனைச் சேர்கின்றன. இப்படி தோஷத்தைச் சேர்த்துக் கொண்டபின் இவன் எப்படி சுத்தியாகி ஸம்ஸார நிவ்ருத்தி பெறுவது? அதிலேயே (ஸம்ஸாரத்திலேயே) மேலும் ஆழமாகப் புதைய வேண்டியதாகத்தான் ஆகும். அதனால்தான் (க்ருஷ்ண பரமாத்மா) “பரதர்மம் பயத்தைத் தருவது” என்றார்.

இதற்கப்புறம்தான் தேவாஸுர யுத்தம் என்று ஆரம்பித்தேனே, அந்த ஸமாசாரம் வருகிறது.

பகவான் இப்படி, ‘செத்தாலும் ஸ்வதர்மத்தைப் பண்ணு; அதுதான் ச்ரேயஸ், அதாவது ஸம்ஸார நிவ்ருத்திக்கு ஸஹாயம் செய்வது, பரதர்மம் ஸம்ஸார பயத்தை ஜாஸ்தியாக்குவதே’ என்று சொன்னவுடன் அர்ஜுனன் யோசித்துப் பார்த்தான்.



Sage of Kanchi

Krish Ram
 
Moolam/Anusham/Pradosham Events Sponsorship Details at Adhishtanam and Orikkai

Moolam/Anusham/Pradosham Events Sponsorship Details at Adhishtanam and Orikkai


Few days back, I posted about Sri Matam kainkaryam list. We all have different problems and go to Mahaswami for all our problems. Or we may have important occasions like birthdays, wedding anniversaries etc on those days we might wish to do something to Mahaswami. This is a good opportunity to do something to our Sri Matam. As we all know Vignesh Studio team has been doing monthly anusham, moolam, pradosham at our adishtanam and in Orikkai Manimandapam. While I was talking to Sri Kumar on the details on how one can sponsor any of such events (even if not the entire sponsorship at least partial one), he sent me the break-up of the expenses. This might help devotees to pick and choose what they want to sponsor as per their preference.

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Moolam – Pradosham Expenses at Brindhavanam/ Adhishtanam – Total Rs. 57850


  •  Cow Milk- 150 litres – @ Rs35/- Per litr) – Rs 5250/-
  •  Sandal Powder – Rs. 2000/–
  •  Gangajalam – 2 litres – Rs 450/-
  •  Vibhuthi with Ingredients – 50Kg – @125/kG – Rs 6250
  •  Panjamirtham – Rs 7900
  •  Garland (5 ft) – 15 nos – Rs 7500/-
  • Garland (7 ft) – 10nos – Rs 7500/-
  •  Provisions for prasadam – Rs 6000/-
  •  Vibhuthi Containers 1500 nos – Rs 9000/-
  •  Kumkum Container 1500 nos- Rs 6000/-
Moolam Golden Chariot Expenses (Thanga Ratham) @ Adishtanam – Rs 11,800


  •  Donation For Mutt – Rs2500/-
  •  Garland For Ratham – Rs 2000/-
  •  Vedapandit Sambavanai (35 Pandits) – Rs3500/-
  • Misc – rest of the amount
Anusham Expenses Brindhavanam / Adhishtanam – Rs 11,225


  •  Vibhuthi 25kg with Ingredients @125 perKg – Rs 3125/-
  •  Cow Milk 60 litres – Rs 2100/-
  •  Garland – Rs 6000/-
Anusham – Moolam – Pradosham Expenses at Orikkai / Manimandapam – Rs 10,950



  •  Cow Milk Rs35/- Per litre / Cost For 100 litres – Rs 3500/-
  •  Gangajalam 2litres – Rs 450/-
  •  Panjamirtham & Provisions – Rs 4000/-
  •  Garland 6nos – Rs 3000/-


Corpus fund for Moolam celebration – Sri Kumar is trying to get seven donors to pay Rs. 30000/- – one time contribution to be a donor for 15Years by creating a corpus fund. One can choose any one Moolam day in a year (Either Tamil Month or English Month). That amount will be directly sent to mutt and receipt will be obtained in your name. Apart from this if you wish you can pay other expenses as we have mentioned in the golden chariot for Moolam expenses.

Contact Persons
K.Kumar – Ph: +91 44 42127210, +91 44 24343631 / Mobile: +91 9444325344
B.V.Balaji – +91 9840199917, +91 9444021296


https://periyavakaryam.wordpress.co...onsorship-details-at-adhishtanam-and-orikkai/
 
Yati Mahalayam at Kanchi!

Yati Mahalayam at Kanchi!

Very rare darshan of 108 Dhandi Sanyasis in one place at Sri Kamakshi Kalyana mantapam in Kancheepuram. Full arrangements done by Kanchi Sankara Matam.

Sage of Kanchi

Panchanathan Suresh

11168881_10153644695434244_7434462149119742454_n.jpg
 
Saptha koti maha mantra

“SAPTHA KOTI MAHA MANTRA: CHITTA VIBRAMA KARAKA:
EKA EVA PARO MANTRA: RAMETHI AKSHARA DWAYAM”


12107240_1061764113856806_2214489030342298721_n.jpg



There are 7 croress of Maha mantras which would vitiate one’s mind and one and only Maha mantra which would be of par excellence is RAMA, the two lettered one.


One day, Sri Bodendra Swamigal was camping in a village called Perambur in Needamangalam, a place adjacent to Raja Mannarkudi in Tamizh Nadu. A couple came to have his darshan and invited him to their home for Biksha . The Swamigal also agreed to come the next day.


On the following day, Sri Bodendra Swamigal arrived at the couple’s residence and sat down to eat. Just then, he noticed their son sit by his side and have his food with him. In spite of his repeated requests, the little boy was most unresponsive. The parents then slowly explained the Swamigal that he could neither hear nor speak. He was deaf and dumb by birth. Hearing this, tears rolled down Swamigal’s eyes. He cried uncontrollably because, just a while back, he had made a proclamation in one of his works that one would escape the fear of death if he sings or hears the Taraka Nama even once. He had thought that the Taraka Nama could spare none as everyone would at least hear the Divine Name knowingly or unknowingly during their lifetime. except this deaf and dumb boy.


The devout couple consoled the Swamigal, that it was their past karma which they are reaping now amd requested Swamigal to accept the 'bhiksha'. At the tearful pleadings of the hosts Sri Bodendra Swamigal had three handful of food and then took leave of them. The couple reverentially accompanied the Swamigal to the entrance to the village. Hungry that this boy was, he reached out to the leaf that Swamigal had eaten from, and ate from the remnants left on it.
No sooner had he eaten the ‘Uchchishta’ from Sri Bodendral’s leaf than he began singing the Names of the Lord! When the parents returned to the house, they could not believe their eyes seeing their hitherto deaf and dumb child jumping in joy crying out Bhagavan Nama in Bhakti.

What a miracle!



Sage of Kanchi

Jambunathan Iyer
 
Bhajare Gurunatham (Composition on Mahaperiyava)

Bhajare Gurunatham (Composition on Mahaperiyava)

"Bhajare Gurunatham" --- Song on Mahaperiyava, composed by Periyava
The song Bhajare Gurunatham was composed by Sri Periyava, within a couple of months of Sri Mahaperiyava attaining Maha Samadhi. He just dictated the lines to a devotee and taught on how to sing it in the same tune as Sri Sadasiva Brahmendra's "Bhajare Yadunatham" set to Misra Peelu raaga and Adi tala (by Sri Semmangudi Srinivasa Iyer).

Initially, He always asked all devotees to sing "Bhajare Yadunatham" first and then "Bhajare Gurunatham", so that all got the tune correct. Bhajare Gurunaatham, maanasa bhajare gurunaatham Bhasma rudraakshaadi alankruta sareeram Bilva maalaadi alankruta siraskam Bhajare Gurunaatham maanasa bhajare gurunaatham Manthra mahaamani manthra swaroopam Pranava payodhara pranava swaroopam,pranava swaroopam Bhajare Gurunaatham maanasa bhajare gurunaatham Mandahaasa mukham mandaaksha veekshanam Raajaadhi raajam jagadguru roopam kaamakoti roopam Bhajare Gurunaatham maanasa bhajare gurunaathamYou can Listen the song in Shri T.M. Krishna's melodious voice



http://www.youtube.com/watch?v=nqQsh6nzRb8


Uploaded on Jan 16, 2012
Composition dedicated to Kanchi Mahaperiyava, Shri Chandrasekhara Saraswathy Swamigal
Derived from Sadasiva Brahmendra Composition "Bhajare Yadunatham"
Artist: TM Krishna



Sage of Kanchi

Jambunathan Iyer


 
Please Observe Theetu!

Please Observe Theetu!


Sri Periyava’s view on Theetu. “Theetu” is not something man-made but has been told in our Sastras. There are many types of Theetu – Janana Theetu (Vruddhi), Marana Theetu, Kshaya, etc. Sri Periyava has expressed his dismay on of one these Theetu’s (Monthly Periods for women) as mentioned below. This is not to dispute or throw compassion out of the window, but what we do before and after the fact per our sastras should not be ignored at any cost. Ram Ram


இது நடக்க முடியாத விஷயம் என்று நினைத்து, தர்மத்தையும் சத்தியத்தையும் விட்டுக் கொடுத்துப் பேசுவது எனக்கான காரியமில்லை. நடத்துவதும் நடத்தாததும் உங்கள் கையில் இருக்கிற விஷயம். நான் செய்யக் கூடியது எல்லாம் நம்முடைய தர்ம சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறவைகளை அலுக்காமல் சலிக்காமல் உங்கள் காதில் போடுவதுதான்; சாஸ்திரங்கள் எவற்றை உங்கள் கடமை என்று விதித்திருக்கின்றனவோ அவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி, எத்தனை பிரதிகூலங்கள் இருந்தாலும் நீங்கள் அதன்படிதான் நடக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுதான்.” – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர்


“To think these things are not possible and deviating from the path of Sathiyam and Dharma is not something I will do. Adhering those and making it happen is in your hands. All I can do is keep repeating what is told in our Sastras as our Dharma and what it has said as your duty to be followed. Despite challenges and obstacles you should follow them. This is what I will keep emphasizing to you.” –

Sri Maha Periyava

ஆலயங்களின் தூய்மை

பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுக் கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும், பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.
அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள். வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாமல் ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள். இவற்றுக்கு நான் பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாது. எனக்கு எல்லோரும் சொந்தம்;

ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் என்றால், நான் அவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்று தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும். எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.


கோயில்களின் சூழ்நிலை அமைதியாக, தூய்மையாக இருக்க வேண்டும். பகவத் ஸ்மரணை தவிர மற்ற நினைவுகள் மறந்துவிடும்படியாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது என்ன பார்க்கிறோம்? பெரும்பாலான க்ஷேத்திரங்களில் கோயிலைச் சுற்றி ஏகப்பட்ட கடைகள் வந்துவிட்டன. டீக்கடை, சிகரெட் கடை எதுவுமே பாக்கியில்லை. கோயில் அதிகாரிகளே கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதால் இந்த இடங்களை வாடகைக்குக் கொடுக்கிறார்கள். —- அதாவது அநேகமாக ஸ்வாமியைத் தவிர கோவிலையே வாடகைக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்லலாம். இம்மாதிரியான சூழ்நிலையில் தெய்வ சாந்நித்தியத்தை நாம் கிரகித்துக்கொள்ள சக்தி குறைகிறது. நம் பக்தி சுற்றுச்சூழலால் குறைகிறது.


ஆபீஸ் கட்டிடங்கள், காட்டேஜ்’கள் எல்லாம் இப்போது பல க்ஷேத்திரங்களில் ஏராளமாக முளைத்துவிட்டன. அங்கெல்லாம் தெய்வ சம்பந்தமற்ற காரியங்கள் நிறைய நடக்கின்றன. இது சாந்நியத்தை பாதிக்கிறது. ஏதோ எட்டாக் கையில் இருக்கிற கோயில்களில்தான் விச்ராந்தியான சூழல் இருக்கிறது. அபிவிருத்தி என்ற பெயரில் இவற்றில் அதிகாரிகள் அநாசாரத்தைப் புகுத்திவிடப் போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது.


இப்போது கோயில்களுக்குத் தனித்தனி நிர்வாகம் இல்லாமல் ஒரே சர்க்கார் நிர்வாகத்தில் இருப்பதால் அவர்களுக்குப் பொது ஜனங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். துரதிஷ்டவசமாக, ஆலய ஆபீஸர்கள் ஏதாவதொரு நல்ல காரியத்தை ஆரம்பித்து முடிக்கு முன்பே வேறு ஊருக்கு மாற்றப்பட்டு விடுகிறார்கள். ‘செய்கிற காரியத்தைப் பூர்த்தி செய்து பலனைப் பார்க்கலாம்’ என்கிற உற்சாகம் இருந்தால்தான் அதிகாரிகளிடமிருந்து சிறப்பான பணியை எதிர்பார்க்க முடியும்.
ஆலயங்களில் உட்புறமும், சூழ்நிலையும் சுத்தமாக இல்லாத வரையில், ஆஸ்திக காரியம் எத்தனைதான் நடந்தாலும் எத்தனை கும்பாபிஷேகங்கள் நடந்தாலும் நாம் திருப்திபடுவதற்கில்லை. கும்பாபிஷேகத்துக்கு அப்புறம் சாந்நித்தியம் நிலைத்திருக்க வழி பண்ணாவிட்டால் என்ன பிரயோஜனம்? பிரஜைகள் இவ்விஷயத்தில் தீவிரமான கவனம் செலுத்தினால், அதிகாரிகளுக்கும் சர்க்காருக்கும் பொறுப்புணர்ச்சி அதிகரித்து ஆவன செய்வார்கள். பொது மக்களின் ஏகோபித்த அபிப்பிராயத்துக்கு (public opinion) அந்த சக்தி உண்டு.


ஆலயங்களுக்கு உள்ளேயே நடக்கிற அநாசாரங்களை என்னைத் தவிர யாரும் எடுத்துச் சொல்லமாட்டார்கள் போலிருக்கிறது. அதையும் நானே சொல்கிறேன். இப்போதெல்லாம் டூரிஸ்டுகள், 45, 50 நாள் யாத்திரை கோஷ்டிகள், காலேஜ் பெண்கள், ட்ரெயினிங் ஸ்கூல் பெண்கள் என்று பலர் கூட்டம் கூட்டமாகக் கோயில்களுக்கு பஸ்கள் அமர்த்திக் கொண்டு வருகிறார்கள். அவர்களில் எத்தனையோ பேர் விலகியிருக்க வேண்டிய காலத்திலும் தரிசனத்திற்கு வந்து விடுகிறார்கள். இப்படி செய்வது தோஷம் என்று தெரியாததாலேயே பெரும்பாலும் கோயிலுக்கு வந்து விடுகிறார்கள்.


முன்பெல்லாம வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள். ‘ஸ்வாமிக்கு ஏது தீட்டு?’ சீர்திருத்தக்காரர்கள் நான் சொல்வதை ஆக்ஷேபிக்கலாம். தீட்டு இல்லாத சுவாமி எங்கேயும் இருக்கிறார். அவரைக் கோயிலில்தான் வந்து தரிசிக்கவேண்டுமென்பதில்லையே?


சாஸ்திரப் பிரகாரம் ஸ்வாமியின் சாந்நித்தியத்தைக் கிரகித்துத் தரும் கோயில்களில், அந்த சாஸ்திரங்கள் சொன்ன விதிப்படிதான் ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டும். இந்த விதிகளை மீறுவதால்தான் பல மகாக்ஷேத்திரங்களில், விபத்து, விபரீதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்.


அந்த மகா க்ஷேத்திரத்தில் ஏன் இப்படிப்பட்ட விபத்து உண்டாச்சு? ஸ்வாமி சாந்நித்தியமே போய்விட்டதா?’ என்று கேட்கிறார்கள். நான் மனசு நொந்து சொல்கிறேன்: ஸ்வாமி சாந்நித்தியம் இருப்பதாலேயேதான் நாம் செய்கிற அநாச்சாரத்தைப் பொறுக்க முடியாமல், தம் கருணையையும் மீறி, இப்படி அவ்வப்போது ஒரு விபரீதத்தை நமக்குத் தண்டனையாகத் தருகிறார். விபத்து என்ற பேரில் சில புண்யசாலிகளைத் தம்மிடம் சேர்த்துக்கொண்டு, உயிரோடிருக்கிற நம்மைத்தான் தண்டிக்கிறார். நாம் திருந்த வேண்டும், நல்ல ஆசார ஸம்பன்னர்களாக இருக்கவேண்டும் என்று கருணையினாலேதான் தண்டனை கொடுக்கிறார்.


காட்டேஜ், எக்ஸ்கர்ஷன் எல்லாமே அநேக க்ஷேத்திரங்களில் பக்தியைவிட, உல்லாசகக் கேளிக்கைகளைத்தான் அதிகப் படுத்தியிருக்கின்றன. மொத்தத்தில், நம் வீட்டில் நம்மால் சகிக்க முடியாத அபச்சாரங்களை சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமி சந்நிதியிலும், மற்றும் பல தெய்வ சந்நிதிகளிலும் இழைக்கிறோம்.
இது எனக்கு நன்றாகத் தெரிந்தும், சொல்லாமல் வெறுமனே இருந்தேனானால், அதுவே எல்லாவற்றிலும் பெரிய அபசாரம் என்பதால் என் மனஸிலிருந்ததைச் சொன்னேன். உங்களிடம் சொல்வதாக மட்டும் நினைக்காமல், சாக்ஷாத் வேங்கடரமண ஸ்வாமியிடமே பிரார்த்தனையோடு சொல்கிறேன்.

அந்த அபசாரங்களைத் தடுத்து நிறுத்துவதில் ஆஸ்திக மகா ஜனங்கள் கண்ணும் கருத்துமாக இருக்க அவர்தான் அருள் செய்ய வேண்டும்!


Source – Deivathin Kural Volume – 1 – Bhakthi Section


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/09/please-observe-theetu/
 
மாமியார் விஷயம்

மாமியார் விஷயம்

21 Feb 2014

Suresh

புருஷனின் மாதா-பிதாக்களைச் சொன்னேன். ஸமீப காலம் வரையில் மாமியார் என்பவள் வேண்டாதவளாக இருந்தாள்; இப்போது வேண்டியவளாகிவிட்டாள்; ஆனால் இது நல்ல திருப்பம் என்று ஸந்தோஷப்படும்படி இல்லாமலிருப்பதுதான் பெரிய குறை.

இப்போது மாமியார் எதற்குத் தேவைப்படுகிறாள் என்றால் மாட்டுப்பெண் ஆஃபீஸுக்குப் போயிருக்கிறபோது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான்! பேபி-ஸிட்டர், க்ரெஷ் முதலானதுகளை விட மாமியார் கவனிப்பிலேயே சள்ளையும் குறைச்சல், செலவும் குறைச்சல் என்பதாலேயே அவளை வா, வா என்று கார்யார்த்தமாகக் கூப்பிட்டு வைத்துக்கொள்கிறார்கள்.

பெண்கள் உத்யோகம் பார்ப்பது ஸகலமான பேருக்கும் இப்போது பெருமையாக இருப்பதாலும், அது ரொம்ப அவச்யந்தான் என்று தோன்றுவதாலும்,

மாமியார்மார்களும், ஸந்தோஷமாகவே குழந்தைகளுக்கு ‘ஆயா பண்ண’ ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வயஸு காரணமகா உடம்பு இடம் கொடுப்பதில்லைதான். அக்கடா என்று படுத்துக் கொண்டிருக்க மாட்டோமோ என்றுதான் உள்ளூர இருக்கும். ஆனாலும் இன்றைய போக்குக்கே அவர்களும் ஆதரவாக இருப்பதால் ச்ரமப்பட்டுக் கொண்டே பொறுப்பைச் சுமக்கிறார்கள். அம்மாவை விடப் பாட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்வாதீனம். ஜாஸ்தி; பயம் குறைச்சல். அதனால் படுத்தி எடுக்கத்தான் செய்யும். அதையும் பொறுத்துக்கொண்டுதான் பாட்டிமார்கள் செய்கிறார்கள். அவர்களே அப்படி ஸம்மதமாக இருந்தாலுங்கூட இப்படிப்பட்ட ஒரு நிலைமையை ஏற்படுத்துவது கொஞ்சமும் தர்ம ந்யாயங்களில் வராது. வயஸுக்காலத்தில் அவர்களைப் பிள்ளை-
மாட்டுப்பெண் உட்கார்த்தி வைத்து சுச்ரூஷை செய்யவேண்டியதே தர்மமும் ந்யாயமும். அதற்கு நேர்மாறாக, தங்கள் பொறுப்பை அவர்களிடம் தள்ளி வேலை வாங்கினால் அது மஹா தோஷமாகும். அந்த வயஸுகட்டத்தில் வீட்டுப் பொறுப்பு முழுதையும் மாட்டுப்பெண்ணே வாங்கிக்கொண்டு சுற்றுக் கார்யம் சிலதற்குத்தான் மாமியாரை எதிர்பார்க்கலாம்

.

ஒரு ஸ்த்ரீ க்ருஹிணியாக வீட்டோடேயே இருந்து கொண்டிருஇந்தால்கூட, புருஷன்-குழைந்தைகளின் ஆஃபீஸ்-ஸ்கூல் அவஸரத்தில் காலை வேளையில் அவள் அவஸரமாகவே ஆக்கிப் போட வேண்டியிருந்தாலும் ராத்ரியாவது அதற்குக் ‘காம்பன்ஸேட்’ பண்ண வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.


காலை வேளைச் சாப்பாடு எப்படிப் போனாலும் ஸாயந்திரம் பசங்கள் ஸ்கூல் விட்டு வந்ததும் தாயாரகப் பட்டவள் அதுகளுக்குப் புதிதாகத் தன்கையால் தினம் ஒரு தினுஸாக டிஃபன் பண்ணிப் போட்டு அந்த இளம் நெஞ்சுகள் ஸந்தோஷப் படுவதைப் பார்த்துத் தன் ஹ்ருதயமும் ஸந்தோஷப்படவேண்டும். அப்புறம் விளக்கேற்றி வைத்துவிட்டு, தெய்வ ஸ்தோத்ரம், பாராயண்ம் என்று கொஞ்சம் போது செலவு செய்துவிட்டு ராத்ரிச் சமையலுக்கு ஆரம்பிக்கவேண்டும்.


வயிற்றுக்குப் போடுவதோடு ஆத்மாவுக்குப் போடுவது


புருஷன் வைந்ததும் அவனையும் ஸந்த்யாவந்தனமோ – அவனுக்கான வழிபாடு வேறேயாக இருந்தால் அந்த வழியையோ பண்ணுவதற்கு அவனை ஊக்குவிக்க வேண்டும். இதுவும் ஒரு முக்கியமான பணி. ஸமீபகாலம் வரையில் நம்முடைய ஸ்த்ரீகள் வெகு அழகாகச் செய்து வந்த பணி. அன்ய மோஹத்தில் நம் மதாசரணைகளை அடியோடு விடத் துணிந்துவிட்ட புருஷர்கள் பலரைப் பொண்டாட்டிமார்கள்தான் திருப்பத் திரும்ப நச்சரித்துக் கொஞ்சத்தில் கொஞ்சமாவது மதத்தின் பக்கம் திருப்பி வந்திருக்கிறார்கள். அநேக வீடுகளில் அமாவாஸ்யை தர்ப்பணம், திவஸம்-திங்கள், பிள்ளைக்கு உபநயனம், தெய்வத்துக்கு வேண்டுதல் செய்வது முதலானவை ஸ்த்ரீகளின் ‘கம்பல்ஷ’னின் பேரிலேயேதான் புருஷர்கள் செய்திருக்கிறார்கள். வயிற்றுக்குப் போடுவதோடு, ஆத்மாவுக்கும் போடுவதான இந்த உத்தம கைங்கர்யத்தை எந்நாளும் ஸ்த்ரீ ப்ரஜைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.


புருஷன் அந்த உபாஸனையை முடித்ததும், குடும்பம் முழுதுமாக – புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் – எல்லாரும் பக்கத்திலிருக்கிற கோவிலுக்குக் காற்றாடப் போய்விட்டு வரலாம். பிள்ளையார் கோவில்கள்தான் மூலைக்கு மூலை இருக்கின்றனவே! அப்படியொன்றுக்கு குடும்ப ஸஹிதம் தினமும் போய்விட்டு வருவது மனஸுக்கு ஒரு பெரிய டானிக். இந்த டானிக்கை ப்ரிஸ்க்ரைப் செய்யும் டாக்டராகவும் பெண்களே இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.


கோவிலிலிருந்து திரும்பி வந்ததும் சாப்பாடு. அப்புறம் கொஞ்ச நேரம் – கொஞ்ச நேரந்தான் – மனோரஞ்ஜகமாக டீவியில் ஆடல்-பாடல் பார்ப்பது. அப்புறம்,

எப்படியும் ராத்ரி 9.30 மணி 10 மணிக்கு முன்னால் நித்திரை போய்விடவேண்டும். அப்போதுதான் மறுநாள் விடிவதற்கு முன் பஞ்ச பஞ்ச உஷக்காலத்தில் எழுந்திருக்க முடியும். இப்போது ஒரே கோளாறாம். 11 மணி வரை கூட டீவி ப்ரோக்ராம் இருப்பதால் அதைப் பார்த்துவிட்டு, அந்த ஸ்ட்ரைன், ஆபீஸ் போய்விட்டு வந்த ஸ்ட்ரைன் எல்லாம் சேர்ந்து ஸ்த்ரீகளுக்கு விடியற்காலம், ஸூர்யோதயம் என்றாலே என்ன என்று தெரியாத தூக்கம் என்று ஆகியிருப்பதாகத் தெரிகிறது! *

முன்னேயெல்லாம் விடிகிறதற்கு முந்தியே எழுந்து தெளித்து, மெழுகி, கோலம் போடுவார்கள். அது க்ருஹத்தை அழகு பண்ணுவது மட்டுமல்லாமல் க்ரஹிணியையும் நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல மனத்தெளிவுடனும் இருக்கப் பண்ணிற்று. இப்போது இந்தப் பழக்கங்களெல்லாம் கொள்ளை போயிருப்பதைப் பார்க்க சொல்லி முடியாத கஷ்டமாக இருக்கிறது. இப்படி முழுக்க முழுக்க பணம், பதவி, அல்பமான லெளகிக ஸெளக்யங்கள் ஆகியவற்றுக்குப் பறப்பதாக் ஏற்பட்டு, நிஜமான ஸெளக்யத்தை – ஆத்ம ஸெளக்யம் மட்டுமில்லை; சரீர ஸெளக்யத்தையுமேகூட – காற்றிலே பறக்க விட்டிருப்பதாக ஏற்பட்டுவிட்டதே என்று வேதனையாயிருக்கிறது. தலைக்கு மேல் வெள்ளம் போய்விடவில்லை என்று சாஸ்திரீய வழியிலான நல்லதைச் சொல்கிறது. சொன்னால் ஆயிரம், பதினாயிரம், லக்ஷத்தில் ஒருத்தராவது கேட்டு அந்தப்படிப் பண்ணினால்கூட அது ஒரு லாபந்தான் என்பதால்தான் சொல்கிறது; புலம்புகிறது.


* (பல சானல்கள், கேபிள் டிவி முதலியன வந்து ஒரு நாளின் 24 மணி நேரமும் நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கியதற்கு முற்பட்ட காலத்தில் கூறியது.)

https://mahaperiyavaa.wordpress.com/2014/02/21/மாமியார்-விஷயம்/

 
பாபத்தில் தள்ளும் சக்தி எது?

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 169

பாபத்தில் தள்ளும் சக்தி எது?

“ஆனால் இப்படி, ‘நமக்கென்று ஒரு இஷ்டமும் வேண்டாம். எந்தக் குலத்தில் பிறந்தோமோ அதற்கான வர்ண தர்மத்தை, எந்தெந்த வயஸுக் கட்டத்தில் என்னென்ன செய்யவேண்டுமோ அந்த ஆச்ரம தர்மத்தை நாம் பாட்டுக்குக் கேள்வி கேட்காமல் பண்ணிக்கொண்டு போவோம்’ என்று இருக்கவொட்டாமல் எதுவோ ஒன்று மென்னியைப் பிடித்துத் தள்ளுகிறாற்போல இருக்கிறதே! இப்படி ஸரியான வழியாகப் போகவிடாமல் வேறு வழியில் போக வைத்து மநுஷ்யனை பாபத்தில் பிடித்துத் தள்ளுகிறதே! இவனுடைய அறிவுக்குப் புரிந்து, அறிவு அங்கீகாரம் கொடுத்து இப்படிப் பண்ணுவதாயில்லாமல், வேறு ஏதோ ஒரு சக்தி பலாத்காரம் செய்தல்லவா இவனை இப்படித் தள்ளுவதாக தெரிகிறது? அது என்ன?” என்று அவனுக்கு யோசனை வருகிறது. இது வேண்டாம், இன்னொன்று வேண்டும் என்று இவன் நினைக்கும்படியாக இவனை பலவந்தப்படுத்தி வேண்டாததை வேண்டப்பண்ணிப் பாபத்துக்கு ஆளாக்கும் force எதுவோ இருப்பது அவனுக்குத் தெரிகிறது; அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. ‘எதுவோ’ என்று விவரம் புரியாததாகத் தெரிகிறதே தவிர, ‘இன்னது’ என்று அந்த ஃபோர்ஸைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.

அது என்னவென்று தெரிவிக்கும்படியாக பகவானிடம் கேட்கிறான்:

அத கேந ப்ரயுக்தோயம் பாபம் சரதி பூருஷ:|

அநிச்சந்நபி வார்ஷ்ணேய பலாதிவ நியோஜித: ||

“வார்ஷ்ணேய” என்று வ்ருஷ்ணி குலத்தோன்றலான பகவானைக் கூப்பிட்டான் என்று சொன்னேன். மேலே (இந்த ச்லோகத்துக்கு) அர்த்தம் சொல்லத்தான் நினைத்தேன். ஆனால், இதற்கு முன்னாடி கீதையில் என்ன இருக்கிறது, எந்த context -ல் அர்ஜுனன் இப்படி கேட்டான் என்று சுருக்கமாகச் சொல்ல நினைத்து ஆரம்பித்தது வளர்ந்துகொண்டே போய்விட்டது! அப்புறம் டெவலப் பண்ணலாம் என்று நான் நினைத்திருந்த சரக்கில் அநேகம் இப்போதே வந்துவிட்டது. ஆகக்கூடி, ஸம்பந்தமில்லாத விஷயமில்லை.

“அத” – ஆனாலும். அதாவது நீ சொல்கிறபடி, மனஸின் இஷ்டம் என்று ஒன்று இல்லாமல் பட்ட கட்டை மாதிரி ஆக்கிக்கொண்டு சாஸ்த்ரப்படி வாய்த்த ஸ்வதர்மாவை பண்ணலாமென்று ஒரு ஜீவன் நினைத்தானானாலும்,

“அயம் பூருஷ:” – இந்த ஜீவனானவன். ‘புருஷன்’ என்பதே பூருஷன்’ என்றும் நீளும். ‘விழி’, ‘நிழல்’ முதலான வார்த்தைகள் ‘வீழி’, ‘நீழல்’ என்று நீள்கிற மாதிரி.

ஆனாலும் இந்த ஜீவனானவன் –

“அநிச்சந்நபி” – புத்தி பூர்வமாக அப்படி ஆசைப்படாவிட்டாலும்: நன்றாக ஆலாசித்துப் பார்த்து, வேண்டும் வேண்டாம் என்று ஒன்றை விட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், ‘இன்வாலன்டரி’யாகவே;

“கேந” – யாரால்,

“ப்ரயுக்த:” – நன்றாக ஏவப்பட்டு,

பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறாற்போல யாரோ இவனை வேண்டும் வேண்டாம் என்கிறவற்றில் தள்ளுவது தெரிகிறது. அது யார் என்று தெரியவில்லை.

[‘கேந’ – யாரால்

“ப்ரயுக்த:” – வன்மையாக ஏவப்பட்டு.]

“பலாத்” – பலாத்காரமாக,

“நியோஜித இவ” – உந்தித் தள்ளினாற்போல, ‘யுஜ்’ – ‘யோஜ்’ என்பது வேர்ச்சொல். இன்னொன்றோடு சேர்ப்பது, பிணைத்துப் பூட்டுவதுதான் ‘யுஜ்’. ‘யுஜ்’ என்பதன் அடியாக ‘யுக்தம்’ என்று சொல்கிறோம். ‘யோஜ்’ என்பதன் அடியாகவே ‘யோகம்’ என்கிறோம். சித்தம் சிதறவிடாமல் சேர்த்துப் பூட்டிப் பிணைப்பதால் அது யோகம். மாட்டைப் பூட்டிப் பிணைக்கிற ஏர்க்காலை ‘yoke’ என்று சொல்வது இந்த தாதுவிலிருந்துதான். ‘யோஜ்’ என்பதிலிருந்து ‘யோஜித’. பூட்டிப் பிணைப்பது ஏதோ ஒன்றிலே செலுத்துவதற்காகத்தான். மாட்டை ஏர்க்காலில் பிணைப்பது அதை வயலில் செலுத்தத்தான். சித்தத்தைச் சேர்த்துப் பிடிப்பது அதைப் பரமாத்ம தத்வத்தில் செலுத்தத்தான். அதனால் ‘சேர்ப்பதான’ யோகத்திலேயே ‘செலுத்துவதான’ சக்தியும், propelling force -ம் தொக்கி நிற்கிறது. “யோஜித”. என்பது செலுத்தப்படுகிற நிலையைத் தெரிவிக்கிறது. ஒரு வார்த்தைக்கு முன்னால் ‘நி’ என்று போட்டால் அது இரண்டுமூன்று தினுஸான புது அர்த்தத்தைக் கொடுக்கும். அவற்றில் ஒன்று, அர்த்தத்துக்கு ஜாஸ்தீ அழுத்தம் கொடுப்பதாகும். பாதம் (paatam) – விழுவது, நிபாதம் (nipaatam) – நன்றாக விழுவது. தர்சனம் தெரிவது, நிதர்சனம்- நன்றாகத் தெரிவது. ‘யோஜித’வுக்கு ‘நி’ சேர்த்து ‘நியோஜித’ என்றால் ‘நன்றாகச் செலுத்தப்பட்டு’, ‘உந்தித் தள்ளுவது மாதிரிசெலுத்தப்பட்டு’ – என்று அர்த்தம்.

ஒரு ஜீவனானவன் யாரால் பலாத்காரமாகச் செலுத்தப்பட்டு –

‘பாபம் சரதி?’ – பாபத்தில் போகிறான்? பாபத்தில் புகுகிறான்? அதாவது, பாபம் பண்ணுகிறான்?

‘தானே மனஸாரத் தெரிந்து இஷ்டப்பட்டுச் செய்யாமல், வேறு யாரோ பலவந்தமாகப் பிடித்துத் தள்ளின மாதிரி மநுஷ்யர்கள் பாபத்தில் போய் விழுகிறார்களே இப்படிப் பிடித்துத் தள்ளும் அந்த ஆசாமி யார்?’ பகவானை அர்ஜுனன் கேட்கிறான்.

ஸம்ஸாரம் என்பது த்வைதம், அதனால் பயம் என்று சொன்னோம். பயத்தைத் தருவது எதுவோ அது பாபம். ஆகையால் பரதர்மத்தில் போவது பகவான் சொன்னபடி ‘பயாவஹ:’ என்றால் அது பாபத்தை உண்டாக்குவதாகவே இருக்கும். இதனால்தான் அர்ஜுனன் பாபத்தைக் குறிப்பிடுகிறான்.

ஸ்வதர்மத்தைவிட்டுப் பரதர்மம் மேற்கொள்வதுபாபம். இது மட்டுமில்லை. இன்னம் அநேக பாபங்கள். நரக லோகங்களின் வர்ணனையைப் பார்த்தால் தெரியும், ‘எத்தனை ஆயிரம் பாபங்கள் இருக்கின்றன? அது ஒவ்வொன்றுக்கும் என்ன தண்டனை?’ என்று, இந்தப் பாபங்கள் எல்லாவற்றையும் குறித்துத்தான் அர்ஜுனன் கேட்கிறான். மநுஷ்யர்கள் அநேக பாபங்களைப் பண்ணிவிடுகிறார்கள். எல்லாமே யோசித்து, திட்டம் போட்டு, அவர்கள் பண்ணினார்கள் என்று இல்லை. தங்களையும் மீறிப் பண்ணிவிடுகிற மாதிரிதான் இருக்கிறது. “அநிச்சன்” என்று இதைத்தான் அர்ஜுனன் சொன்னது. இப்படி இவனைப்பண்ணவைப்பது யார் என்று கேட்கிறான்.

இங்கே அர்ஜுனன் ஜீவர்கள் பாபம் பண்ணுவதற்கு எந்த சக்தி காரணம் என்றுதான் கேட்கிறான். பாபத்திலிருந்து ஜீவன் விடுபட வழி என்ன என்று கேட்கவில்லை. அப்படிக் கேட்டிருந்தால், ‘எத்தனை சறுக்கி விழுந்தாலும் அத்தனை பாபத்துக்கு இடையிலேயும் விடாமல் ஸ்வதர்மத்தையே பின்பற்றிக் கொண்டு போனால் அதுவே பாபத்தில் இழுத்துவிடும் அஸுர வ்ருத்திகளிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக ஜீவனை விடுவிக்கும்’ என்று சொல்லியிருப்பார். ஏற்கெனவே இதை அவர் அவனுக்குச் சொல்லி ஆயிற்று. ஸ்வதர்மப்படி நிஷ்காம்ய கர்மயோகம் செய்வதைக் குறித்து, “இந்த தர்மத்தை ஸ்வல்பம் அநுஷ்டிக்க ஆரம்பித்து விட்டாயானாலும் மஹா பயமான ஸம்ஸாரத்திலிருந்து ரக்ஷித்துவிடும்” என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்.

பயம், பாபம், பந்தம், ஸம்ஸாரம் என்ற எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்கிறவைதான். ஆகையால் பயத்திலிருந்து ரக்ஷிப்பது என்றால் பாபத்திலிருந்து மீட்பது என்றே அர்த்தம்.

இப்போது அர்ஜுனன் பாப விமோசனத்துக்கு வழி கேட்கவில்லை. ஏற்கெனவே அவர் சொல்லிவிட்டார் என்பதால் இருக்கலாம். பின்னேஎன்ன கேட்கிறானென்றால், ‘தேவ – அஸுர குணங்களின் சண்டையில் அஸுரர்களான பாப வ்ருத்திகளை உண்டாக்கி, அவற்றில் ஜீவனைத் தூண்டிவிடுகிற சக்தி என்ன? ஒரு மநுஷ்யனை பாபத்திலே கட்டாயப்படுத்தி புகுத்துகிற ஆஸாமி யார்?’ என்றே கேட்கிறான்.


Sage of Kanchi

Krish Ram
 
காம – க்ரோதம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 170

காம – க்ரோதம்

‘அதுவா, இரண்டு சக்திகள் காரணம்’ என்று பகவான் பதில் சொல்கிறார். அவை என்னென்ன என்று பேரைச் சொல்லுகிறார்.

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ: |
மஹாசநோ மஹா பாப்மா வித்த்யேந – மிஹ வைரிணம் ||

‘ஏஷ’ – இது : எது காரணம் என்று கேட்டாயே, அது என்னவென்றால்,

‘காம:’ – காமம். அதாவது ஆசைதான் மனிதனைப் பாபத்தில் தள்ளுவதான எல்லா கெட்ட வ்ருத்திகளையும் தூண்டிவிடும் மூல காரணம்.

அது மட்டும்தானா? இன்னொன்றும் இருக்கிறது.

‘ஏஷ: க்ரோத:’ – அந்த இன்னொன்று என்னவென்றால் ‘க்ரோதம்’; அதாவது கோபம்.

இந்த இரண்டும்,

‘ரஜோகுண ஸமுத்பவ’மானவை – அதாவது மநுஷ மனஸு சாந்தமாகி ஸாத்விகமாகவுமில்லாமல், ஓய்ந்து மந்தித்துப் போய்த் தாமஸமாகவுமில்லாமல், வேகப்பட்டுக்கொண்டு கொந்தளிப்பிலே இருக்கிற ஒரு நிலை உண்டே, அந்த நிலைக்கு ஆதாரமாயுள்ள குணமான ராஜஸத்தில் உண்டானவை; “ரஜோகுண ஸமுத்பவ:”

‘உண்டானவை’ என்று நான் சொன்னாலும் பகவான் ஒருமையில் “உண்டானது” என்றுதான் சொல்கிறார் – ‘ஸமுத்பவ:’ என்பது ஒருமைதான். காமம் ஒரு காரணம், இன்னொன்று க்ரோதம் என்பதாக இரண்டை சொல்லிவிட்டு, ‘அவை ரஜோகுணத்தில் உண்டானவை’ என்காமல், ‘அது ரஜோகுணத்தில் உண்டானது’ என்று சொன்னால் இது சொற்குற்றம்தானே என்றால், குற்றம் பகவான் மேலில்லை. என் குற்றம்தான். காமம் தவிர இன்னொன்று க்ரோதம் என்று நான்தான் சொன்னேன். பகவான் அப்படி சொல்லவில்லை.

“எது ஜீவனைப் பாபத்திலே பிடித்துத் தள்ளுகிறது” என்று அர்ஜுனன் கேட்டதற்கு, ‘எதுவா? அதுதான் காமம், அதுதான் க்ரோதம், அது ரஜோகுணத்தில் உண்டானது: காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:” என்றே சொல்கிறார். அதாவது, காமமாக இருக்கிற அதுவேதான் க்ரோதமாகவும் இருக்கிறது என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளும்படிச் சொல்லியிருக்கிறார். காமத்துக்கு இன்னொன்று க்ரோதம் என்று காட்ட இங்கே வார்த்தை இல்லை. ‘காமமும் க்ரோதமுமாகிய ஒரு கெட்ட சக்தி’ என்று வைத்தக்கொள்ளலாம். ஆனாலும் காம – க்ரோதம், அதாவது விருப்பு – வெறுப்பு என்று இரட்டையாக நாம் எப்போதும் சொல்வதாலேயே அந்த பழக்கத்தில் நான் தான் ஒன்று, இன்னொன்று என்று சொல்லிவிட்டேன்.

அப்படியானால் காமமும் க்ரோதமும் ஒன்றா என்ன? காமம் ஆசைப்படுகிற உண்ர்ச்சி, விருப்புணர்ச்சி. க்ரோதம் என்பதோ த்வேஷ உணர்ச்சியில் உண்டாவது. நேர்மாறான விருப்பும் வெறுப்பும் எப்படி ஒன்று? ஸ்வதர்மம் வேண்டாம் என்று விடுவது வெறுப்பிலே. பரதர்மம் வேண்டும் என்று எடுத்துக்கொள்வது விருப்பத்திலே. இந்த இரண்டும் எப்படி ஒன்று?

ஒன்றுதான். யோசித்துப் பார்த்தால் புரியும். காமமே நிறைவேறாதபோது க்ரோதம் என்ற ரூபத்தை எடுத்துக் கொள்கிறது என்று புரியும். நமக்கு ஒன்றிலே ஆசை இருந்து அது கிடைக்காவிட்டால்தான் கோபம் உண்டாகிறது. நமக்கு ஒருத்தரிடம் வெறுப்பு ஏற்படுகிறதென்றால் அது நமக்கு எது விருப்பமோ அதற்கு மாறாக அவர் நடக்கிறார் என்பதால்தான். நம் விருப்புப் பூர்த்திக்குத் தடை ஏற்பட்டால் அதுவே வெறுப்பாகிறது. நம் ஆசையின் நிறைவேற்றத்துக்கு எதுவோ குறுக்கே வந்தால் அதனிடம் கோபம் உண்டாகிறது. பரதர்மத்திலே ஏற்படுகிற ஆசை அல்லது விருப்பத்துக்கு தடையாக இருக்கிறது என்பதால்தான் ஸ்வதர்மம் வேண்டாம் என்று அதை வெறுத்து விட்டுவிடத் தோன்றுகிறது. ஒவ்வோர் ஆசைக்கும் இப்படியே. ஆசையாலேயே த்வேஷம் ஏற்படுகிறது. பந்தை எறிகிறோம் – இதுவே நம் ஆசையின் ஓட்டம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது குறுக்கே தடையாக சுவர்மாதிரி எதுவோ வருகிறது. உடனே பந்து நம்மிடமே திரும்புகிறதல்லவா? அப்படித் திரும்பும் வேகம்தான் க்ரோதம்.

ஆசார்ய பாஷ்யம் இப்படித்தான் காமம் க்ரோதம் என்ற இரண்டையும் ஒன்றாகவே சொல்கிறது. “காமமே தான் ப்ரதிஹதமாகிறபோது க்ரோதமாகப் பரிணமிக்கிறது” என்று ஆசார்யாள் சொல்கிறார். “ப்ரதிஹதம்” என்றால் ஒன்றிலே போய் மோதிக்கொண்டு திரும்புவது என்று அர்த்தம்.

ஆனால், நடைமுறையில் விருப்பு, வெறுப்பு என்கிறவை எதிரெதிர் உணர்ச்சிகளாகத் தெரிவதால் இரண்டாகச் சொல்றோம்.

பகவானே இன்னோரிடத்தில் (2-62) சொல்லியிருக்கிறார்.

காமாத் க்ரோதோ (அ)பிஜாயதே |

(ஆசையிலிருந்து கோபம் பிறக்கிறது)

மேலே அர்ஜுனன் கேள்விக்கு பதில் சொன்னபோது காம – க்ரோதம் என்ற இரண்டு மாதிரி சொல்லி, இரண்டு இல்லை என்றும் தெரிவிக்கிற விதத்தில் அப்புறம் ஒருமையில் சொன்னாரென்று பார்த்தோம்.

இன்னோரிடத்தில் (16-21) ஒன்றில்லை, இரண்டில்லை, மூன்று விஷயங்களைச் சொல்கிறார். பாபத்தில் தூண்டுவது காம – க்ரோதம் என்று மேலே சொன்னாரோல்லியோ? அந்தப் பாபத்தினால் நமக்கு ஸம்பவிப்பது என்ன? ஸம்ஸாரம். ஸம்ஸாரத்திலும் ரொம்ப கோரமான அநுபவம் நரகவாஸம். நரகத்தைப் பற்றித்தான் மூன்று விஷயங்களைச் சொல்கிற இடத்தில் குறிப்பிடுகிறார்:

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசந – மாத்மந: |

“ஆத்ம நாசம் என்ற நரகத்துக்கு வழி திறந்துவிடுகிற வாசல்கள் மூன்று விதமானவை.”

என்னென்ன?

காம: க்ரோதஸ் – ததா லோப:

“காமம், க்ரோதம், லோபம் என்கிறவை.”

‘லோபம்’ என்றால் என்ன? காமத்திலேயே ஒரு அம்சம்தான் அது. புருஷனுக்கு ஸ்த்ரீயிடம், ஸ்த்ரீக்குப் புருஷனிடம் உண்டாகும் ஆசையிலிருந்து, பீச்சுக்குப் போக வேண்டும், அங்கே சுண்டல் வாங்கிச் சாப்பிடவேண்டும் என்றிருக்கிற ஆசை வரை லோகத்தில் எத்தனை ஆயிரம் தினுஸு ஆசையிருக்குமோ அத்தனையும் காமம்தான். மஹா பெரியவர்களுக்குத் தன்னைத்தானே தெரிந்துகொண்டு தானாக இருக்கவேண்டும் என்ற உசந்த நாட்டமிருக்கிறதே, இதைக்கூட உபநிஷதத்தில் ‘ஆத்ம காமம்’ என்றுதான் சொல்லியிருக்கிறது என்றேனே! இத்தனை விதமான ஆசைகளுக்குள்ளே பொருளில், ஸொத்தில் இருக்கிற ஆசைக்கு மாத்திரம் லோபம் என்று பெயர். தன் பொருளை விடவே மனஸில்லாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருப்பவனை லோபி என்கிறோம்.

ஆக, லோபமும் காமத்தின் ஒரு ‘பார்ட்’டாகவே இருந்தும் பகவானே இங்கே, ‘த்ரிவிதம் – மூன்று தினுஸு, ஒன்று – காமம், இரண்டு – க்ரோதம், மூன்று – லோபம்’ என்கிறார்.



Sage of Kanchi


Krish Ram
 
நவராத்திரி நாயகியர்

நவராத்திரி நாயகியர்

நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமம் பரதேவதையை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது. லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறது.

லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைப்பு, அழிப்பு, காப்பு எல்லாம் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்க்கையாக இருக்கிறபோது, வீரம், சக்தி எல்லாம் தருகிறது. மஹாலக்ஷ்மியாகி சம்பத்துக்களைத் தருகிறது. ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது.



ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியானதால் மலைமகள். மஹாலக்ஷ்மி பாற்கடலில் தோன்றியதால் அலைமகள். ஸரஸ்வதி சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள்.


பர்வதராஜ புத்திரியாக வந்த அம்பாளும், க்ஷீரசாகரத்திலிருந்து பிறந்த மஹாலக்ஷ்மியும், இரண்டு மஹரிஷிகளுக்குப் பெண்களாகவும் அவதரித்திருக்கிறார்கள்.


மஹாலக்ஷ்மியை மகளாகப் பெற்று, சீராட்டி வளர்க்க வேண்டும் என்று பிருகு மஹரிஷி தபஸ் செய்தார். அதற்கிணங்கவே லக்ஷ்மிதேவி அவருக்குப் புத்திரியாக உத்பவித்தாள். பிருகுவுக்குப் புத்திரியானதால் அவளுக்கு பார்கவி என்று பெயர் ஏற்பட்டது.



‘பார்கவி லோக ஜனனி க்ஷீரஸாகர கன்யகா’ எனறு ஸம்ஸ்கிருத அகராதியான ‘அமர கோசம்’ சொல்லும். இப்படியே காத்யாயன மகரிஷி சாக்ஷாத் பரமேசுவரியைப் பெண்ணாக அடைய வேண்டும் என்று விரும்பித் தபஸ் செய்தார். அம்பிகையும் அவருக்கு மகளாக ஆவிர்பவித்தாள். காத்யாயனருக்குப் பெண் என்பதாலேயே அவளுக்குக் காத்யாயனி என்ற பெயர் உண்டாயிற்று. துர்க்கைக்கு உரிய காயத்ரியிலே அவளைக் ‘காத்யாயனியாக தியானிக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறது.


லோக மாதாக்களாக இருக்கப்பட்ட தெய்வங்களைக் குழந்தையாக வரச் சொன்னதில் நிரம்ப விசேஷம் இருக்கிறது. ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்கிறோம். தெய்வமே குழந்தையாக வந்தால், ரொம்பக் கொண்டாட்டமாகும். குழந்தைக்கு நம்மைப் போல் காமமும் குரோதமும் துக்கமும் வேரூன்றி இருப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ரொம்பவும் ஆசைப்பட்ட ஒரு வஸ்துவை அடுத்த க்ஷணத்தில் தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறது. கோபமும் இப்படியே சுவடு தெரியாமல் நிமிஷத்தில் மறைந்து போகிறது. அழுகையும் இவ்வாறேதான். நாம்தான் உணர்ச்சிகளை ஆழ உள்ளுக்கு வாங்கிக்கொண்டு மனத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். உணர்ச்சிகள் வேரூன்றாமல் குழந்தைகள் போல் நாமும் ஆனந்தமாக இருக்க வேண்டும். இதனால்தான் உபநிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது.


சாக்ஷாத் பராசக்தியைக் காத்யாயனியாகவும், மஹாலக்ஷ்மியை பார்கவியாகவும் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால், நமக்கும் குழந்தைத் தன்மை சாக்ஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர்ஃப்ரூப் என்று சொல்வதுபோல், நாம் காம ப்ரூஃப், சோக ப்ரூஃப் எல்லாமாக, சாந்தமாக ஆவோம். குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி, நமக்கு இந்த அநுக்கிரகத்தைச் செய்வாள்.



குழந்தையாக வந்த காத்யாயனியைத் தமிழ் நாட்டுக் கிராம ஜனங்கள்கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் ஊகம். ‘காத்தாயி’ என்று சொல்கிற கிராம தேவதை காத்யாயனிதான் என்று நினைக்கிறேன்.
‘பட்டாரிகை’ என்று பெரிய ஸ்ரீவித்யோபாஸகர்கள் குறிப்பிடும்
அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் ‘பிடாரி’ என்று சொல்லிப் பூஜிக்கிறார்கள்.

பழைய செப்பேடுகளில் ‘பட்டாரிகா மான்யம்’ என்பதைப் ‘பிடாரிமானியம்’ என்று திரித்துக் குறிப்பிடுவதிலிருந்து இதை உணரலாம

இவ்வாறே கிராம ஜனங்களும்கூட ஸரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். ‘பேச்சாயி, பேச்சாயி’ என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாக்தேவி ஸரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.
அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதிதேவியையும் பூஜித்து எல்லாச் சக்தியும், சம்பத்தும், நல்ல புத்தியும் பெறுவோமாக!


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/11/happy-navarathri-navarathri-nayagiyar/

 
Very Important – Petition to PM on Banning Cow Slaughter

Very Important – Petition to PM on Banning Cow Slaughter


10 OCTOBER 2015



cow-10.jpg



Jaya Jaya Shankara Hara Hara Shankara,

Dear All –

It takes less than 5 seconds to click the link below and electronically sign this petition against Cow Slaughter that apparently works in horrifying & barbaric means in killing Gho Mathas.

You can also add a comment so when it is sent to the concerned authorities it makes a very powerful impact. It pierces our heart while reading the narration on how a cow is slaughtered and I could not finish reading it.

These noble souls have been trying to get a 2500 member signature for 4 months and still 350 away!! We should sign these petitions ‘IN BILLIONS’ and show our support for this cause. Spread this link around to FB, Twitter, WhatsApp and other social media tools how much ever you can.

Trust me, I have been a subscriber to Change.org for the past 18 months or so and have seen so many victorious campaigns which I have been a very small part of by Periyava’s grace. Please, please sign this. I will do Namaskaram to your feet. This will please our Periyava more than anything.

Ram Ram

IT’S OUR DUTY TO PROTECT GHO MATHA!
IT’S OUR RIGHT TO PROECT OUR GHO MATHA!!
IT’S OUR DHARMA TO PROTECT OUR GHO MATHA!!!!


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/10/important-petition-to-pm-on-banning-cow-slaughter/
 
Vedaranyam – Kshetram for Vedam – Kumbabishekam invitation – Oct 26th

Vedaranyam – Kshetram for Vedam – Kumbabishekam invitation – Oct 26th

Mahesh : 10 October 2015






On behalf of Mahalakshmi Charitable Trust, I have a great pleasure in sharing the kshetra mahatmiyam of Vedaranyam and the invitation of kumbabishekam.

Until I talked to mami, I did not know the kshetra mahatmiyam of Vedaranyam – only shows my ignorance. I was amazed to see how great this place is. Mami, as usual, has been working very closely with Sri Matam with HH Balaperiyava for guidance. We should thank the TN Govt in taking the lead in completing the kumbabishekam for this kshetram along with few other important kshetrams. On my personal request, mami has put together the list of all important points related to kshetra mahatmiyam. Sincere to mami for this…Almost all these information is new to me..

All devotees should take advantage of participating in this event.

Om Nama Sivaya!
Sri Veenaavaadha Vidhushini Ambal Samedha Sri Vedhaaranyeswarar Thirukovil, Vedharanyam, Nagapattinam District

Kshethra Mahathmiyam

  1. Vedaaranyam is also known as Thirumarai Kaadu Kshethram. This kshethram is worshipped by Vedhams and Vedhas residing in this Kshethram.

  1. Vedas stayed here in this Kshethram worshipping the Lord, and prayed to the Lord that they are not visible to naked eyes; so with the blessings of the Lord even today the Vedas are residing in this temple in the form of Plants, Trees, Grass, Insects, Birds, Animals, Humans etc. Every creature in this sthalam has a connection to the Vedas.

  1. Once a rat’s tail, without its knowledge, inadvertently pulled the moolasthana deepam’s thiri (wick) resulting in a bright flicker of the deepam for a moment, which the Great Lord Sri Thirumarikaadar deemed as the rat’s Shivakaingaryam. The blessed rat was born as Mahabali Chakravarthy in its next birth, who as we all know still rule the Paatala Lokam after Blessed by Lord Narayana, and whose territories are still protected by Lord Narayana.

  1. Sri Thirungana Sambandar Swamigal sang the famous Kolaru Padhikkam in this temple to help devotees get rid of their problems posed by the Navagrahas.

  1. This Kshemtram is also known as Bhuvani Vidangar Kshethram in Saptha Vidanga Kshethrams.
  2. Lord Sri Veenaavaadha Vidhushini Samedha Sri Vedaaranyeshwarar is a very powerful Ambal, sung by great saints like Sri Appar, Sri Thiru Gnana Sambandhar, and Sri Sundarar. Sri Thirunavukkarasar (Appar) sang Padhigam to open this temple door, while Sri Thiru Gnanasambandhar sang a Padhigam to close the door. Many such miracles happened in this temple. This kshethram gives Gnana to devotees and opens their mind.

  1. This Kshetram is famous for Moorthi, Sthalam, and Theertham. Several great Mahaans including Paranjothi Munivar who created Thiruvilayadal Puraanam, Thaayumaanavar who has sung over one lakh songs, Thiruvaadudurai Namashivaya Murthigal, etc., were born in this Punniya Sthalam.

  1. Sage Vedha Vyaasar attained Jeeva Samadhi in this sthalam, great saints like Nasikedhu, Dhoomakedhu, Vishwamithrar did penance in this sthalam.

  1. Sundhari Peedam, which is one of the 64 Sakthi Peedams, is situated here. Sri Veenaavaadha Vidhushini Ambal, here is residing as Sundari Ambigai, helps clean our minds and makes it beautiful.

  1. Saraswathi Devi is without Veena in this temple which is a very rare sight. The story is, Ambal residing in this temple felt very happy in hearing Sarawathi Devi’s veena recital. The Ambal’s voice was so sweet that it comprehensively sounded way better that the Yaazh Isai, hence was called ‘Veenaavaadha Vidhushini’. Having heard Ambikai’s voice, Saraswathi Devi took an oath that she will not play Veena and did penance, hence you see Saraswathi Devi without Veena in this Temple. Sri Sundarar sang about this incident in his Thirumurai (No. 7) as well.

  1. Lord Durgai, facing south (in contrast to usually-north-facing in most other temples), has a separate sannidhi and appears as a big deity. The Durgai in this temple appears very calm, blesses the devotees, and grants their wishes.

  1. Moolasthana Vigragams of 63 Naayanmaargal along with 10 Thogai Adiyars are in this temple. Bay of Bengal is located in the east and Navakodi Sidhargal resided in Kodiyakarai which is located in the south of this temple.

  1. The Lord appeared in front of Agasthiya Munivar in Thirumana Kolam in this place, which Kolam can be seen even today inside the Garba Graham behind the Shiva Lingam.

  1. The Lord here was instrumental in showing Veedhi Vidangar to Musukundha Chakravarthy and Pradhishta in Thiruvaarur. The Lord was also the reason for Pradhista of Bhuvani Vidangar, one of the Saptha Vidas in this Kshethram (the others residing in Thiruvaaror, Thirunaagai, Thirukaaravaasal, Thiruvaaimoor, Thirunallaaru, Thirukuvalai). The praised Lord Sri Veenaavaadha Vidhushini Samedha Sri Vedaaranyeshwarar resides in this ‘Saptha Vidanga Kshethram’.

  1. Lord Rama, after killing Ravanan came to this temple and prayed to Lord Vedharanyeshwarar to get rid of His sin. Also, the residing Vinayagar, kicked his leg to get rid of his Haththi Dhosham, is called Veerahathi Vinayagar. To prove this, one can see the Ramar Paadhuga in this sthalam.

  1. The three classes of bodies of water here are called Vedaamrudha Theertham (River), Vedha Nadhi (Ocean), and Vedatheertham (Manikarnikai). History says that as per Puranas, Ganga Matha herself comes here daily to get rid of her Paavams (sins), take a dip in the Vedhatheertha Kulam (pond) in this temple. This is depicted by the fact the sand in the temple pond sport a different colour from the rest. Puranas also say that the four Vedas took a dip in this holy water during the month of Margazhi and attained Moksham.

  1. Like Kaasi, Gaya, and Rameswaram, this Sthalam is a praised Parikaara Sthalam for Pithru Dhoshams and is on par with them. Those who are unable to do the last rites and other pithru related rituals (Thithi, Devasam, Tharpanam) of their ancestors should come here during Aadi Ammavasai, Thai Ammavasai, and Maalaya Paksham to do the rituals to their ancestors which will acts as a very good Parigaaram (atonement) and remedy.

  1. ‘Mahodhaya Punniya Kalam’ is on 25th Thai Amavasya, Manmadha Varusham (Feb. 8, 2016).
    Such times come very rarely and the last one came around 144 years. The same year, i.e., Manmadha Varudam, February 22[SUP]nd[/SUP], 2016, Mahamaham in Kumbakonam which comes once in every 12 years in Masi Month, Maga Nakshathram, also will take place. Since this two Maha Punniya periods come one after the other, this Mahodhaya Punniya Kaalam is extremely auspicious, sacred, and very rare to get. Since these two rare and very auspicious happenings are coming in a very short span of time, one after the other, we should take a dip in the holy water here during this period and do Thithi, Tharpanam, and Dhanam which will give crores and crores of benefit than done normally, as per our Puranas. Doing Snanams (head bath) in ‘Vedhanadhi’ also called as ‘Sannidhi Kadal’, the theertham inside the temple called as ‘Manikarnikai Theertham’, ‘Rudrakodi Kadal Theertham’ located in the south bottom of the temple, and ‘Aadthi Sethu Kadal Theertham’ are considered very very auspicious. We should take a dip in the holy water here during this period and do Thithi, Tharpanam, and Dhanam which will give crores and crores of benefit than done normally, as per our Puranas.

  1. Sri Kanchi Maha Periyava and Sri Kanchi Periyavaas have elaborated at great length about the greatness of this Kshetram and its inextricable connection with the greatness of Vedas.
Highlights on Vedaranyam Kumbabishekam events:


  1. Uthamapksha kumbabishekam – 110 kundam’s, 150 Sivacharya’s and 8 Kalam – first kalam starts on 22[SUP]nd[/SUP] Oct. evening.
  2. Mutiple Venna concert since Kolar pathigam (Veyiru Tholi Pankan) is sung by Sambanthar in this temple for Ambal Veena Vadha Vibhushini.
  3. Vedaparayanam with 100 Veda Pandits on all 8 Kalams
  4. Pravachanam by Sri Acharya Nochiyur Venkatraman on Vedaranya Sthala Mahatmiyam on 24[SUP]th[/SUP] evening.
  5. Pravachanam by Vajpayee Sundarama Deeskhidar on Mahodaya Pnyakalam on 25[SUP]th[/SUP] evening
  6. Since Vedavyasar attained Jeeva Samadhi here, Vedavyasar photo is taken in the procession lead by Sri Chandarmouli Shivaarpanam trust on 24[SUP]th[/SUP]evening with 100 Veda Pandits.
  7. Visesha sandhi by all Sivacharya’s on all 8 kalams and big procession on 24[SUP]th[/SUP] evening covering all 4 veedhi’s with –



  1. 25 sets of Nadaswaram and Thavil
  2. 125 Sivacharya’s
  3. 40 Othuvar’s
  4. 100 veda Pandits
  5. Chendamelam
  6. Sivaganagal Vadyam
  7. Elephants, Horses and Rishabam etc.


8. Sarpa pooja with two original Sarpam
9. Cultural and Musical program’s every day evening from 22[SUP]nd[/SUP] to 25[SUP]th[/SUP] October
10. Swamy oorvalam covering all 4 veedhi’s on 26[SUP]th[/SUP] Night.

https://mahaperiyavaa.wordpress.com...-for-vedam-kumbabishekam-invitation-oct-26th/
1-52564d95ef.jpg
1-ee73280120.jpg
1-52564d95ef.jpg
 
நந்தி பற்றிய 50 தகவல்கள்- ஸ்ரீ மஹா பெரியவா

நந்தி பற்றிய 50 தகவல்கள்- ஸ்ரீ மஹா பெரியவா

1. நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள்.

2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், "என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.

3. பிரதோஷ காலங்களில் நந்தியை தவறாமல் வழிபடுபவர்களுக்கு அருள் வரம் தரும் பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

4. நந்தி தேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி ஒன்று, நாகை மாவட்டம் ஆத்தூர் மந்தாரவனேசுவரர் கோவிலில் உள்ளது.

5. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் பிரமாண்ட அதிகார நந்தி வாகனம் உள்ளது. இந்த அதிகார நந்தியை தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தந்தை பொன்னுசாமி கிராமணி என்பவர் செய்து கொடுத்தார்.

6. ஆந்திர மாநிலம் லேபாட்சியில் உள்ள கருங்கல்லில் வடிக்கப்பட்ட நந்தியே இந்தியாவில் உள்ள கல் நந்திகளில் பெரிய நந்தியாம்.

7 தமிழ்நாடு மக்களுக்கு நந்நி என்றதும் தஞ்சை பெரிய கோவில் நந்திதான் நினைவுக்கு வரும். இந்த நந்தி ஒரே கல்லால் ஆனது.

8. மதுரை ஆவணி மூல வீதியில் "மாக்காளை'' எனப்படும் சுதையால் அமைக்கப்பட்ட பிரமாண்ட நந்தி உள்ளது. இத்தகைய மாக்காளை நந்திகளை நெல்லை, சுசீந்திரம், ராமேஸ்வரம், திருவிடை மருதூர் ஆலயங்களிலும் காணலாம்.

9. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

10. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.

11. மைசூர் சாமுண்டி மலை மீதுள்ள நந்தி கண்கவர் அழகான நந்தியாகும். இது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

12. கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவ ஆலயம் உள்ளது. அங்கு 4 மூலைகளிலும் நந்தி வைக்கப்பட்டுள்ளது.

13. மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள நந்திக்கு கருவறை நந்தி என்று பெயர்.

14. திருவாரூர் தியாகராஜர் கோவில் சன்னதியில் ஈசனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி எழுந்து நிற்கும் நிலையில் நந்தி உள்ளது. இந்த நந்தியை வழிபட்டால் செய்த பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்பது நம்பிக்கை.

15. திருமந்திரம் எனும் நூலை எழுதிய திருமூலருக்கு குருவாக நந்தி திகழ்ந்தார். திருமூலருக்கு நந்தி பெருமான்தான் 9 வேத ஆகமங்களை விளக்கி அருளியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

17. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நந்தி துர்கா மலையே பரவலாக நந்தி மலை என்று அழைக்கப்படுகிறது. நந்தி மலையே பென்னாறு, பாலாறு பொன்னையாறு ஆகிய ஆறுகளில் பிறப்பிடமாக கருதப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,500 அடி உயரத்தில் இருக்கின்றது. ஆயிரம் வருடத்து பழமை வாய்ந்த நந்தி கோவிலால் நந்தி மலை என்ற பெயர் ஏற்பட்டது.

18. நந்திகேசுரரின் வரலாற்றை லிங்க புராணம் கூறுகிறது. பிறப்பில் எம்பெருமானாகிய சிவபெருமானே நந்திகேசுவரராகப் பிறந்து கணங்களின் தலைவரானார் என்பது புராண மரபு.

19. இந்திய வரலாற்றை ஆராய்ந்தால் தத்துவம், யோகம், நாட்டியம், இசை, ஆயுர்வேதம், அஸ்வவேதம், காமவேதம் முதலிய பல்வேறு சாத்திரங்களைத் தோற்றிவைத்தவராக நந்திகேசுரர் என்ற முனிவர் வாழ்ந்திருக்கிறார் என அறியலாம்.

20. சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

21. தமிழ்நாட்டில் ஆடவல்ல பெருமான் தண்டுவுக்கு நாட்டியம் கற்றுக்கொடுப்பதாக ஒரு சிற்பம் மாமல்லபுரத்தில் தர்மராஜ ரதத்தில் உள்ளது. இங்கு சிவன் நாட்டியாசாரியராகவும் தண்டு முனிவர் மனித உருவிலும் உள்ளனர்.

22. காஞ்சிபுரத்தில் இராஜ சிம்மன் கட்டிய கைலாய நாதராலயத்தில் பின்புறச் சுவரில் ஒரு சிற்பம் உள்ளது. அதில் சிவபிரான் ஊர்த்துவதாண்டவம் புரிகிறார். அவர் அருகில் நந்திகேசுவரர் ஆனந்தமாக நாட்டியம் கற்றுக் கொண்டு ஆடுகிறார்.

23. தமிழ்நாட்டில் நந்திகேசுவரரின் மதம் கி.பி. 700லேயே சிறப்பிடம் பெற்றிருந்தது.

24. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது.

25. பஞ்சமுக வாத்தியலடீசணம் என்னும் சுவடியில் குடமுழா வாத்தியம் நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

26. காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

27. ஆகம சாஸ்திரங்களையும், சைவசித்தாந்த தத்துவங்களையும் சிவபெருமானிடம் அறிந்து உலகுக்குப் போதித்தவர் நந்திகேசுவரரே. சைவமரபில் தலையாயது ''சிவஞான போதம்'' என்னும் நூல். இதை நந்திகேசுவரரே முதலில் போதித்தார்

28. சிவாலயங்களில் துவாரபாலர் இருவரில் தலையில் சூலம் தரித்து நிற்பவர் நந்திகேசுவரர் ஆவார்.

29. சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயிலில் நான்கு கோபுரங்களிலும் அதிகார நந்தியின் உருவத்தைக் காணலாம்.

30. நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

31. சில சிவாலயங்களில் நந்திக்குப் பதிலாகக் குரங்கு தூவாரபாலனாகத் திகழ்வதைக் காணலாம். எவ்வாறு சிவதத்துவத்தை நந்தி வாயிலாகப் பரமன் போதித்தாரோ அதே போல ராமதத்துவம் அனுமன் வாயிலாகப் போதிக்கப்பட்டது.

32. தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

33. முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

34. `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது. `நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு!' என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது.

35. நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பிவிட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.

36. ஆலயங்களைக் காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது என்பது தெளிவாகிறது. இதன் அடையாளமாகத் தான் திருக்கோவில்களின் மதில் சுவர்களில் நந்தியின் திருவுருவை அமைத்துள்ளனர்.

37. நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

38. நந்திக்கு இவ்வுலகத்தின் எதையும் கண்டிக்கவும் தண்டிக்கவும் அதிகாரம் வழங்கியுள்ளான் பரமேஸ்வரன்.

39. நந்தியின் அருள் இருந்தால்தான் மனிதர்களுக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும் முக்தி கிடைக்கும். அதனாலேயே தேவர்களும் நந்திதேவரைப் போற்றித் துதிக்கின்றனர்.

40. எல்லா உயிர்களையும் ஒரு காலத்தில் ஓய்வு படுத்துதல் மகாசங்காரம் எனப்படும். இந்த அதிகாரத்தை சிவபெருமான் நந்தி தேவருக்கு வழங்கியிருக்கிறார்.

41. நந்திதேவருக்கு ருத்திரன் என்ற பெயரும் உண்டு. ருத் என்பது துக்கம். ரன் என்பது ஓட்டுகிறவன். துக்கத்தை ஓட்டுகிறவன் என்பதே ருத்திரன். தூயவன், சைலாதி எனவும் நந்தியை அழைப்பர்.

42. மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், ருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமாலையன் போன்ற தேவர்களெல்லாம் நந்தியைக் குருவாகக் கொண்டு வேதம் கற்றவர்கள் ஆவர்.

43. பிரவிர்த்தி என்ற சேர்க்கையை விட்டு நிவிருத்தி என்ற விலகலைத் தேர்ந்தெடுப்பது ஞானத்தின் மார்க்கம். இதைக் கற்றுக் கொடுத்தவர் நந்திதேவரே. இவர் வழி வந்தவர்களே மெய் கண்ட சந்தானத்தின் குருபரம்பரை என்றழைக்கப்படுகிறார்கள்.

44. சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறுயாராலும் இயலாது. இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும்.

45. சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

46. பிரதோஷ காலம் மட்டுமின்றி எக்காலத்தும் நாம் சிவபெருமானி டம் வைக்கும் வேண்டுதல் களை நந்திதேவரிடம் வைத்தால் போதும். அவர் அதைப் பரமேஸ்வரனிடம் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது ஐதீகம்.

47. நந்தியை வழிபடும்போது, `சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னிதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக' என்று பிரார்த்திக்க வேண்டும்.

48. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

49. பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

50. நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.*


Sage of Kanchi

Krishnamoorthi Bala subramanian
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top