• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
ஐம்புலனாலும் அழிவடையும் மானுடன்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 173

ஐம்புலனாலும் அழிவடையும் மானுடன்

‘விவேக சூடாமணி’ என்று ஒரு உத்தமமான ஞான நூல். நம்முடைய ஆசார்யாள் பண்ணினது. அதிலே ஒரு ச்லோகத்தில் இந்தப் பஞ்சேந்த்ரிய ஸமாசாரம் வருகிறது. ஒவ்வொரு ப்ராணி, இந்த ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றினால் மட்டும் ஆசை வாய்ப்பட்டு நாசத்தை அடைவதைச் சொல்லி, மனுஷ்ய ப்ராணி மட்டும் ஐந்து இந்த்ரியங்களில் ஒவ்வொன்றாலுமே, அதாவது ஐந்தாலுமே மோஹிக்கப்பட்டு அழிவதைச் சொல்லி எச்சரிக்கிறார், துக்கப்படுகிறார்.

மான் சப்தத்தினால் நாசமடைவது. வேடன் கொம்பு ஊதுவான். அதைக் கேட்கிற ஆசையால் மான் மயங்கி நிற்கும்போதே பாணம் போட்டு அடித்துவிடுவான்.

யானை ஸ்பர்சத்தால் நாசத்தைத் தேடிக் கொள்கிறது. ‘கெட்டா’ (Khedda) என்று மைஸுர்க் காடுகளில் பண்ணுகிறார்கள் – யானையே கொள்ளும்படியான பெரிய பள்ளம் தோண்டி, மேலே அது பள்ளம் என்று தெரியாதபடி செத்தை செடி கொடிகளைப் பரப்பி வைத்திருப்பார்கள். பிடிக்க வேண்டிய ஆண் யானை பள்ளத்துக்கு ஒரு திக்கில் இருக்கிறது என்றால், அதற்கு எதிர் திக்கில் பள்ளத்துக்கு அந்தண்டை ஏற்கெனவே பிடித்துப் பழக்கப் படுத்திய ஒரு பெண் யானையைக் கட்டி வைத்திருப்பார்கள். அதை ஸ்பர்சித்து ரமிக்கவேண்டும் என்று ஆண் யானைக்கு ஆசை உண்டாகும். அந்த மோஹத்தில் அது குறுக்கே இருக்கிற பள்ளத்தைப் பள்ளமென்றே தெரிந்துகொள்ளாமல், செத்தை செடிசொடியின் மேலாக ஓடும். அவற்றால் இதன் ‘வெய்ட்’டைத்தாங்கமுடியுமா? அப்படியே ஒடிந்து அதுகள் விழ, யானையும் பள்ளத்தில் தொபுகடீர் என்று விழுந்துவிடும். பிடித்து விடுவார்கள்.

ரூபத்தால் நாசமடையும் ஜந்து விட்டில் பூச்சி – தீபத்தின் பளீர் ரூபத்தில் ஆசைப்பட்டுத் தானே வந்த அதில் விழுந்து மடிகிறது? ‘ரஸம்’ என்பதாக வாய்க்கு ஆசை காட்டும் ஆஹாரத்தால் மீன் உயிரை விடுகிறது – தூண்டிலில் உள்ள புழுவைத் தின்ன ஆசைப்பட்டுச் சாகிறது. வண்டு கந்தத்தினால் மரணத்தைத் தேடிக் கொள்கிறது. பெரிசு பெரிசாகச் சம்பகப் பூக்கள் உண்டு. அதன் வாஸனையில் நமக்கே மூக்கில் ரத்தம் கொட்ட அரம்பித்துவிடும் – அத்தனை தீக்ஷ்ணமான ஸுகந்தம்! இப்படிப் பட்ட புஷ்பங்களுக்குள்ளே போய் வண்டு உட்கார்ந்து கொண்டு அப்படியே தன் மதி இழந்து சொக்கிப்போய்விடும். அப்போது புஷ்பத்தின் இதழ் ஒவ்வொன்றாக மூடிக் கொண்டு, மலந்திருந்த புஷ்பம் நன்றாகக் கூம்பிவிடும். அதற்குள் மாட்டிக்கொண்ட வண்டுக்கு அதோடு ஆயுஸ் தீர்ந்துபோகும். இப்படி “பஞ்ச” இந்த்ரியங்களில் ஒவ்வொன்றால் ஒவ்வொரு ப்ராணி “பஞ்சத்வம்” (மரணம்) அடைகிறது என்று ஆசார்யாள் சிலேடை செய்கிறார். மநுஷ்யன் ஐந்தாலுமே அழிகிறோனே என்று பரிதாபப்படுகிறார்:

சப்தாதி: பஞ்சபிரேவ பஞ்ச பஞ்சத்வம் – ஆபு: ஸ்வகுணேந பத்தா: |
குரங்க – மாதங்க – பதங்க – மீந – ப்ருங்கா நர: பஞ்சபிரஞ்சித: கிம் ||

‘குரங்க’ என்றால் மான் குரங்கில்லை. ‘மாதங்கம்’ என்றால் யானை. ‘பதங்கம்’ விட்டில். மீனம்தான் மீன். ப்ருங்கம் என்றால் வண்டு.

‘நர:’ – மநுஷ்யனானவன்; ‘பஞ்சபி:’ – ஐந்தாலும் (ஐம்புலனாலும்); ‘அஞ்சித:’ – கவரப்பட்டிருக்கிறான். ‘பஞ்சபி:அஞ்சித:’ என்பது ஸந்தியில் ‘பஞ்சபிரஞ்சித:’ என்றாயிருக்கிறது. ‘கிம்’ என்று முடித்திருக்கிறார். ‘கிம்’ என்றால் ‘என்ன’. ஐயோ, இப்படி மநுஷ்ய ஜீவனானது பஞ்சேந்த்ரியத்தாலும் கவர்ந்திழுக்கப்படுகிறதே, என்ன பண்ணலாம்?’ என்று பரம கருணையோடு, ‘கிம்’ போட்டிருக்கிறார்.

ஆசை, ஆனந்தம் என்று போய் அடியோடு ஏமாந்து நாசமடைவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன்.

சாச்வத இன்பம் ஆசையால் விளையாது

ஆனால், எப்போதும் இந்த மாதிரி அடியோடு கெடுதலாகத்தான் நடக்கிறது என்று ‘பெஸ்ஸிமிஸ்டிக்காக’ச் சொல்லக்கூடாது. இப்படியும் அநேக ஸமயங்களில் நடக்கிறதென்றே காட்டவந்தேன். கொஞ்சமாவது ஆனந்தம், அதோடு துக்கம் கலந்து வருவது என்பதாகத்தான் பெரும்பாலும் பார்க்கிறோம். புத்தியையும் கெடுத்து, உடம்பையும் கெடுத்து, குடும்ப வாழ்க்கையையும் கெடுப்பதான மதுபானத்தில் ஒருத்தன் போனானானால்கூட, குடிக்கிற அந்த ஒரு நிமிஷம் அவனுக்கு ஒரு ஆனந்தம் இருக்கக்கூடும். ஹோட்டலில் போடுவதில் எப்போதுமே சுட்ட எண்ணெயும், ஊசலும்தான் என்றில்லாமல் வாய்க்கு ருசியாகவும், அதாவது நாக்குக்கு நிஜமாகவே ஆனந்தமளிப்பதாகவும் போடலாம்; அப்போதும்கூட அதற்கான bill, இந்த அநாசாரத் தீனியால் ஏற்படும் ஆத்மஹானி ஆகியவற்றைப் பார்த்தால் ஆனந்தப்படுவதைவிட துக்கப்பட வேண்டியதே ஜாஸ்தி என்று தெரியும். வித்வானுக்கு எப்பவும் தொண்டை கட்டுவதில்லை. சாரீரம் வசதியாயிருந்து, mood -ம் நன்றாயிருந்து அவர் பாடினால், “கொடுத்த காசு வீணில்லை” என்று தோன்றுகிறது. இங்கே ஆனந்தமும் துக்கமும் ஸமம். கைக் காசு போட்டு டிக்கட் வாங்கியது துக்கம்தான், இப்போது அப்படித் தெரியாவிட்டாலும் வித்வான் நன்றாகப் பாடியிராவிட்டால் அப்போது தெரிந்திருக்கும்.

‘இன்னும் எத்தனை வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என்று நினைக்கும்படியாக வித்வான் பாடியிருந்தால் அப்போது துக்கத்தைவிட ஆனந்தம் ஜாஸ்தி. Free pass இலவசச்சீட்டு கிடைத்து ஸபாவுக்குப் போய், வித்வானும் வெளுத்து வாங்கிவிட்டால் அப்போது (செலவு என்பதால் ஏற்படும்) துக்கமில்லாத ஆனந்தம்!

வாஸ்தவம். ஆனால் இந்த ஆனந்தமும் சாச்வதமாய் நின்றதா? dull -ஆக depressed -ஆக, இந்த அழுமூஞ்சி ஸம்ஸாரத்தை நினைத்துக் கொண்டிருக்காமல் ஸபாவுக்குப் போகலாமென்று நினைத்தான். “ஓஸி” டிக்கெட்டும் கிடைத்தது. கச்சேரியும் நன்றாயிருந்தது. ஆனந்தமாகக் கேட்டான். ஆனால் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அந்த ஆனந்தம் அப்படியே இருந்ததா? “கச்சேரி விமரிசையை அகத்திலே கொஞ்சம் ‘அளந்து’ உத்ஸாஹப்படுத்திக் கொள்ளலாம்” என்று இவன் நினைத்துக்கொண்டு வந்தான். ஆனால் ஊர் சுற்றிவிட்டு நாழி கழித்துச் சாப்பிட வந்திருக்கிறானே, போட (பரிமாற) வேண்டுமே என்று அகமுடையாள் உர்ரென்று இருக்கிறாள்! இவனுடைய ஆனந்தம் போய் Dull அடித்து, மறுபடி depressed ஆகிவிடுகிறது. படுக்கப்போய் காற்றில்லை, கொசு பிடுங்குகிறது என்றால் இப்போது அந்தக் கச்சேரி ஆனந்தத்தில் லவலேசமாவது ஆற்றிக் கொடுக்க வருகிறதோ?

இப்படியே ரேஸுக்குப் போகிறவர்களில் ஜயிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் அந்தப் பணம் கொண்டு வந்த ஆனந்தம் சாச்வதமாயிருக்கிறதா? அதனாலேயே எத்தனையோ தொல்லை, ஸங்கடம் வருகிறது. பணமும் ஸொத்தும்தான் மநுஷ்யன் பல விதக் கெடுதல்களில் போய்க் கஷ்டத்தை உண்டாக்கிக் கொள்வதற்குக் காரணமாயிருக்கிறது. இந்த லோகத்தில் கஷ்டமே படாமல், ஸுக ஜீவனம் செய்தே செத்துப்போகிற பணக்காரர்களும் இருக்கிறார்கள்; ஆனால் அவர்களும் பணத்துக்காக அல்லது பணத்தினால் செய்த அநேகக் கெடுதல்களுக்காக – தொழிலபிவிருத்திக்காக லஞ்சம் கொடுத்தது, யாசகனை அடித்து விரட்டியது இப்படி ஏதாவது கெடுதலுக்காக – பரலோகத்தில் பதில் சொல்லத்தான் வேண்டியிருக்கும்; அதாவது கஷ்டப்பட வேண்டித்தானிருக்கும். கொஞ்சமோ நஞ்சமோ கஷ்டத்தை உண்டாக்காமல் பொருளாசை ஒருத்தனை விடுவதென்பது நடக்காத கார்யம்.

கஷ்டமே தராமல், துக்கமே கொடுக்காமல் ஆனந்தத்தைத் தரும் ஆசாபூர்த்தியும் (ஆசையின் நிறைவேற்றமும்) அப்போதைக்கு மட்டும் தாற்காலிக – மாகத்தான் அந்த ஆனந்தத்தைத் தருமேயன்றி, சாச்வத ஆனந்தம் தருவதில்லை. ‘ஷவர்’ ரொம்பவும் ஹிதமாகவே கொட்டினாலுங் கூட அதிலேயே சாச்வதமாக நிற்க முடியாது. உசந்தால் அரை மணிக்கு மேல் தாங்காது. வித்வான் எத்தனை நன்றாகப் பாடினாலும் அவர் ஐந்து மணி, ஆறு மணி பாடிக்கொண்டே போனால் ‘போர்’ அடித்துவிடுகிறது வீட்டுக்குப் போக பஸ் கிடைக்குமா என்று விசாரம் ஏற்படுகிறது!

பாதாம்கீர் நன்றாயிருக்கிறது என்றாலும் எத்தனை டம்ளர் சாப்பிடுவது? இரண்டு மூன்று டம்ளர் சாப்பிட்டால் வயிறு முட்டிப்போகிறது. அதற்கு மேலே உபசரித்தால், ‘அய்யோ, தயவு செஞ்சு விட்டுடப்பா’ என்று கெஞ்சுகிறோம். இந்த இரண்டு மூன்று டம்ளராவது நல்லது பண்ணுகிறதா? இல்லை. ஒன்றோடு நிறுத்திக் கொண்டிருந்தால் உடம்புக்குப் புஷ்டியைத் தந்திருக்கும். ஆசையின் மேலே மேலும் இரண்டு டம்ளர் சாப்பிட்டதில் வயிற்றுப் போக்கு, வாயில் எடுப்பு உண்டாகிறது. ஆனந்தம் ஸம்பாதித்துக் கொண்டது நன்றாயிருக்கிறதல்லவா?

ஆசை வஸ்துவை அளவோடு நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மேல் வேண்டியிருக்கிறது. அதற்காக, “அதையே சாச்வதமாய் அநுபவி, நாள் பூரா பாட்டுக்கேளு, அண்டா பாதாம் கீர் சாப்பிடு” என்றாலும் முடிவதில்லை. புஸ்தகப் புழு என்று நாளெல்லாம் படிப்பவர்களுக்குக்கூட ஒரு இடத்தில் அலுப்புத் தட்டி புஸ்தகத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, கொஞ்சும் ‘வாக்’ பண்ணிவிட்டு வரலாம் என்று புறப்படுகிறார்கள். அலுப்பாவது சாச்வதமாகத் தட்டிவிட்டதா, அப்படியாவது இந்தப் பாட்டு அசை, சாப்பாட்டு ஆசை, படிக்கிற ஆசை, அல்லது வேறு எத்தனையோ ஆசைகளில் ஒன்று அடியோடு தீர்ந்ததா என்றால் அதுவும் இல்லை, இன்றைக்கு வேண்டாம் என்று விட்ட ஆசை நாளைக்கு ரொம்பவும் வேண்டியதாக அரித்தெடுக்க ஆரம்பிக்கிறது.



Sage of Kanchi

Krish Ram
 
Navarathri procedures for each day

Navarathri procedures for each day

OCTOBER 13, 2015

I just completed 9 postings of details for each day of Navarathri. Thanks to http://kuppuastro.blogspot.in for the contents. Please note that moola mantra japam is NOT for everyone – one needs to get initiated before chanting any moola mantra japam etc. I am not any authority – please consult some learned people for more clarification.

Wish you all a very happy Navarathri celebrations.

https://mahaperiyavaa.wordpress.com/2015/10/13/navarathri-procedures-for-each-day/


Our Namaskarams to Universal Mother!
 
Navarathri 9th Day Procedure – Brahmi

Navarathri 9th Day Procedure – Brahmi

MAHESHonOCTOBER 13, 2015

brahmi.jpg



அம்பாள் ஸ்ரீபிராஹ்மி

உருவ அமைப்பு அன்ன வாகனம், கையில் ஏடு, ஜெபமாலை, கமண்டலம் கொண்டவள். நான்கு முகம் உடையவள்.

குணம் சௌம்யம்

சிறப்பு ஸ்ரீபிரும்மாவின் அம்சம்

நெய்வேத்யம் சர்க்கரைப் பொங்கல், சுண்டல், பால் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர் மல்லிகை, செம்பருத்தி, கேந்தி

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள் 11

பாட வேண்டிய ராகம் கானடா, குறிஞ்சி

யார் யாரெல்லாம் வணங்க வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள் ரோகினி, ஹஸ்தம், திருவோணம்

திசை புத்தி நடப்பவர்கள்
சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள் லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம் வித்யாதாரிணி – கல்வி, வித்தைகளுக்கு அதிபதி



எண் கணிதப் படி யாரெல்லாம் வணங்க வேண்டும்: பெயர் எண் 1 உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:

[1] தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

[2] மூல மந்திரம்: ஓம் – சிம் – பிராஹ்மயே – நம : (Not for those who were not initiated)
[3] காயத்ரி: ஓம் தேவி பிராம்யை வித்மஹே மஹா சக்த்யைச தீமஹி தந்தோ தேவி பிரசோதயாத்!

Ambaal – Sri Braahmi

Form of Ambaal – Sits on Swan, Holds book in her hands, Japa Mala, Kamandalam, Has four faces

Vehicle
: Swan (Annam)


Nature or Character
– Soumyam (soft, tender)


Significance
– Sri Brahma’s Amsa


Neivadhiyam (Offering)
– Sakkarai Pongal (Jaggery), Sundal, Paal Paayasam (Kheer)


Puja Timings
– Morning 9 1o 10.30, Evening 6 to 7.30 – Check your local times


Flowers
– Malligai, Sembaruthi, Kendhi


Thaamboolam to Offer
– 11


Raaga to Sing
– Kaanadaa, Kurinji


People with the following stars need to worship
: Rohini, Hastham, Thiruvonam

People with the following dasa directions need to worship: Surya or Buddhi or Andharam
People with the following Jadagam need to worship: Lagnam, Kendram, Surya or Rahu residing in Trikonam

Greatness or Result
: Vidhyarini – Blesses us with Vidhya and education

Worship based on Numbers: People born with Name 1 should worship.

Song to Recite:

Dhanam Tharum; Kalvi Tharum; Oru Naalum Thalarvariyaa
Manam Tharum; Dheiva Vadivum Tharum; Nejil Vanjamillaa
Inam Tharum; Nalla Ellaam Tharum; Anbar Enbhavarke
Ganam Tharum Poonguzhalaal Abiraami Kadai Kangale.

https://mahaperiyavaa.wordpress.com/2015/10/13/navarathri-9th-day-procedure-brahmi/
 
Navarathri in Sankara Matam in 1916! --- Subramanya Bharathi"

Navarathri in Sankara Matam in 1916! --- Subramanya Bharathi"

தமிழகத்தின் மகா கவி சுப்பிரமணிய பாரதியையும் கவர்ந்தார் சுவாமிகள்.

1916 ம் வருடம் கும்பகோணத்தில் நவராத்திரி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா பற்றி பாரதியார் எழுதி இருக்கிறார் :

” உலகத்தார் பராசக்தியை நல்ல மழை அருள்புரியும் சரத் காலத்தில் முதல் ஒன்பது இரவும் வணங்கி பூஜை செய்யவேண்டும் என்பது பூர்வீக ஏற்பாடு . மிகப்பயன் உடைய காரியம் .

கும்பகோணம் சங்கர மடத்தில் இந்த பூஜை மிகவும் கோலாகலமாக நடத்தப் போவதாக பத்திரிக்கையில் ஒரு செய்தி போட்டிருந்தது. தேசம் முழுவதும் இப்படி நடப்பது நல்லது. சங்கர மடத்திலும் எனக்கு ஒருவித ஆவல் உண்டானதால் தந்தியை வாசித்தேன் . அந்த தந்தியோடு பாதி சாஸ்திரம் . வர்த்தமான தந்திக்குள்ளேயே சாஸ்திரத்தை நுழைத்தது ஒரு வினோதம் . ஆனால் அதில் கண்ட சாஸ்திரம் உண்மையானதாக இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை . எனவே தந்தியை படித்த போது எனக்கு மகிழ்ச்சி உண்டானது.“

பாரதி இப்படி எழுதுகிறார்!

In October 1916, the festival of Navarathri was celebrated grandly in the Kumbakonam mutt premises. During each of the nine days, special prayer service with a lakh archana to Devi was conducted. Lamps lit with ghee, a lakh in number as well as free food to one lakh Brahmins was also done as part of the celebration.

Sri Subramania Bharathiar, the great Poet, has commented about this festival in his article and an excerpt follows:

“It is common around the land to celebrate the Goddess and Her splendor during the spring season when She showers Her blessings. It is a common and great practice to worship Her during these nine days. There was flash news in a newspaper that special celebrations were to be conducted on this occasion at the Kumbakonam Sankara mutt."

"Even though it was a common practice, I was curious about Sankara mutt and started to read the news. More than half the article was about Shastras and it was amazing to see the Shastras in a commercial newspaper. But the Shastras were truthful and I was thrilled to read the story


Sage of Kanchi

Panchanathan Suresh
 
விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண பலன்கள் .

விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண பலன்கள் .
****************************************************

Sri Vishnu Sahasra Naama Phala Sruti -
Benefits of Sahasranaamam Recital .
-----------------------------------------

Daily Reciting of Sri Vishnu Sahssranamam has been a routine. AchAryAs and great men have been advising this for benefit of ALL.

It is important and amazing to know what all we will be Blessed with by Sahasranama Recital.

Please read below the full benefits on reciting Sri Vishnu Sasranamam.
=======================================================

Benefits that will be Blessed by reciting Sri Vishnu Sahasranamam.
**********************************************************************

itiidaM kiirtaniiyasya keshavasya mahaatmanaH |
naamnaaM sahasraM divyaanaam asheshheNa prakiirtitam || (1)

Thus the thousand divine names of Bhagavan Keshava, the Supreme who is pre-eminently worthy of being praised, have been sung in their entirity. These divya namas are meant to be recited both here and in all the upper worlds including the transcendent abode (heaven), in as much as they pertain to the MahAtma, the supreme being, Kesava , Sri Vishnu.

ya edaM shrunyaa-Nityam yashchapi parikirtayaet |
Naa-aShubham praptyunaat kinCHIT-somutreH cha manavaH || (2)

Nothing inauspicious (or obnoxious) will befall the one who devoutly listens to the recital of this sahasranama stotra daily or the one who recites it .

veedantago brahmana-asyat Kshatriyo vijayee bhavaet |
vaishyo dhana-SamRidhasya-chhuudra-sukhamvaapnuyaat || (3)

If the person who chants these names is a brahmin, he will attain the knowledge of the vedanta; if a kshatriya, he will become a victorious warrior; if a vaisya, he will acquire immense wealth, and if a sudra, he will remain happy.

dharmaarthii praapnuyaad-dharmam.arthaarti cha.arthamaapnuyaat |
kaamaanava.apnuyaatkaamii prajaarthii cha-apnuyaat prajaaH || (4)

If a person recites the holy names with a desire abiding in dharma, he will achieve it; if he is desirous of wealth he will get wealth; if he is after the pleasures of life , he will get them all; if he wants to have child , he will have it.

bhaktimaan yaH sadotthaaya shuchistadgatamaanasaH |
sahasraM vaasudevasya naamnaametatprakiirtayet || (5)
A devotee who gets up in the morning and purifies himself through bath followed by daily observance of the prescribed rites and rituals and then recites the thousand names of Lord Vasudeva, with a mind firmly fixed on him. [The following
3 sloks 6-8 spell out the benefits (fruits) enjoyed by such a person]

yashaH praapnoti vipulaM GYaatipraadhaanyameva cha |
achalaaM shriyamaapnoti shreyaH praapnotyan.uttamam || (6)

He gains great reputation and is reckoned as the foremost among his kith and kin. He acquires abundant wealth (in this world) and keeps it in tact while, in the other worldhe enjoys everlasting bliss, (anuttamam sreyah - salvation)

na bhayaM kvachidaapnoti viiryaM tejashcha vindati |
bhavatyarOgO dyutimaan-bala-ruupa-guNaanvitaH || (7)

Free from fear (through any source) and sickness (at any time), the chanter acquires valour, power and strength and is endowed with a healthy body, noble traits and dazzling brilliance.

rOgaarto muchyate rOgaath baddhO muchyeta bandhanaat |
bhayaan.muchyeta bhiitastu muchyetaapanna aapadaH || (8)

The one afflicted by sickness will get rid of it, the one in shackles of sorts will get disentangled , while the one stricken by fear will become free from it and the one beset with difficulties, will get absolved of them (whatever be their magnitude).

durgaaNyatit aratyaashu purushhaH purushhottamam |
stuvan naama sahasreNa nityaM bhakti samanvitaH || (9)

That person who praises with devotion the supreme Being , Purusottama. , through the daily recital of these thousand names, surmounts, in no time, the seemingly insuperable difficulties one and. all.

[The emphasis here is on the unflinching devotion of the chanter towards the Supreme beingwith the sole object of attaining him, which results in the automatic disappearance of all hiserstwhile difficulties though not solicited as such, by the chanter (even as darkness vanishes as a matter of course, with the induction of light)].

vaasudevaashrayo martyo vaasudevaparaayaNaH |
sarvapaapa-vishuddhaatmaa yaati brahma sanaatanam || (10)

The one, who seeks out Lord Vasudeva, looking upon Him as the highest goal to be attained, gets cleansed (purged) of all sins. With a mind thus purified, the chanter attains the eternal Brahman.

na vaasudeva bhaktaanaam ashubhaM vidyate kvachit |
janma mRityu jaraavyaadhi bhayaM naiva api jaayate || (11)

Nothing inauspicious ever befalls the devotees of Vasudeva nor do they have any fear from the cyclic operation of birth, disease, old age and death any longer. (with the certain prospect of attaining Him in heaven at the end of the current span of life).

imaM stavama-dhiiyaanaH shraddhaabhaktisamanvitaH |
yujyetaatmaa sukhakshaanti shriidhRiti smRiti kiirtibhiH || (12)

The chanter of this hymn, with zeal and devotion, is blessed with the happy realization of the essential nature of the self (svasvarUpa), besides the qualities of serenity, mental stability, unfailing memory and great fame and wealth (put to beneficial use).

na krodho na cha maatsaryaM na lobho na ashubhaa matiH |
bhavanti kRita puNyaanaaM bhaktaanaaM purushhottame || (13)

Neither anger nor jealousy, neither avarice nor unholy thoughts taint the minds of the true devotees of Purusottama, who have to their credit many a virtuous deed.

dyauH sa-chandraarka nakshatraa khaM disho bhuur mahodadhiH |
vaasudevasya viiryeNa vidhRitaani mahaatmanaH || (14)

The firmament, the Moon, the Sun and the Stars, the Sky, the directions, earth and the vast ocean are one and all, propped up by the supreme valor of vasudeva.

sa sura asura gandharvaM sayaksho.raga raakshasam |
jagad vashe vartatedaM kRishhNasya sacharaacharam || {15}

This world with all its contents, the sentient beings and non-sentient things, the gods, the asura and gandharvas, the yaksas, nagas and raksasas, is under the supreme control of Sri Krishna.

indriyaaNi mano buddhiH sattvaM tejo balaM dhritiH |
vaasudeva.atmakaany aahuH kshetraM kshetraGYa eva cha || (16)

The several sense organs, the mind, the intellect, (the quality of) sattva, power, strenght, firmness and the body as a whole and the individual souls - all of them have Vasudeva as their AtmA (inner
soul) [Vasudevatmakani means that all of them (prakriti and the jivas) constitute his body].

sarvaagamaanaam aachaaraH prathamaM parikalpate |
aacharaprabhavo dharmo dharmasya prabhur achyutaH || (17)

Right conduct has been laid down as the most important, the foremost of all the dharma revealed by the shastras. Right conduct gives rise to dharmas. Bhagavan Acyuta is the deity propitiated by dharma,
who not only helps in one's adherence of dharma, but also awards the fruits thereof.

RishhayaH pitaro devaa mahaabhuutaani dhaatavaH |
jaNgamaa jaNgamaM chedaM jagat naaraayaN.odbhavam || (18)

The sages, manes (pitrs - departed ancestors), gods, the great elements and their effects, the mobile beings and the immobile things comprising the entire universe, have all emnated from nArAyanA.

yOgO GYaanaM tathaa saankhyaM vidyaaH shilpaadi karma cha |
vedaaH shaastraaNi viGYaanam etat sarvaM janaardanaat || (19)

The knowledge of Yoga, sankhya, the several branches of learning, arts, works, vedas, sastras - all these spring from Bhagavan Janardana.

eko vishhNur mahadbhuutaM pRithag bhuutaany anekashaH |
trii.n lokaan vyaapya bhuutaatmaa bhunkte vishvabhug avyayaH || (20)

Lord Visnu is the unique deity of incomparable excellence, in that He pervades the great elements of multifarious kinds and the three worlds (of souls). He is their AtmA and their protector. And yet he stands above them all and is not the least tainted by their defects.

imaM stavaM bhagavato vishhNorvyaasena kiirtitam |
paThedya ichchhet purushhaH shreyaH praaptuM sukhaani cha || (21)

That person who desires to obtain supreme bliss in the yonder heaven as well as the pleasure of this world should read the stotra of Bhagavan Visnu, sung by the great sage Vyasa.

vishveshvaram ajaM devaM jagataH prabhum avyayam |
bhajanti ye pushkaraakshaM na te yaanti paraabhavam || (22)

The lotus eyed is the birthless, Supreme deity, the sovereign Lord of the universe and the cause of creation and dissolution of the universe. Those who sing his praise will never meet with disrespect or discomfiture of any kind.

Subham Asthu.


Sage of Kanchi

KOmbur Vankeepuram Madhavan ,
 
கிருஷ்ணரை பற்றிய 50 தகவல்கள்- மஹா பெரியவாள&#30

காஞ்சி மஹா பெரியவாள் உரையிலிருந்து கிருஷ்ணரை பற்றிய 50 தகவல்கள்-



1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

5. கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

7. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் ``அஷ்டமி ரோகிணி'' என்றழைக்கிறார்கள்.

11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ``ராசலீலா'' என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற ``கீதகோவிந்தம்'', ``ஸ்ரீமந் நாராயணீயம்'', ``கிருஷ்ண கர்ணாம்ருதம்'' ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.

16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர்- சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்துசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

17. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்ம சிலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

26. ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா தலத்தில் அருள்புரியும் கிருஷ்ணரான ஸ்ரீநாத்ஜீக்கு என்னென்ன நைவேத்தியம் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, லட்டு, இனிப்பு பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை இவருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள்

27. துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும்.

28. கண்ணனின் லீலைகளை விளக்கும் `கர்பா' என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம. இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது. நீராடும் கோபி யர்களின் ஆடைகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்லுதல், வெண்ணெய் திருடி உண்ணுதல் போன்ற கண்ணன் புரிந்த லீலைகள், அந்த நாட்டியத்தின் மூலம் அழகாக எடுத்துரைக்கப்படுகின்றன.

29. உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும், பண்டரி புரத்தை நாத பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.

30. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார் கிருஷ்ணன். இவருக்கு பால், பாயாசம், நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர்.

31. குருவும், வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்த தலமான குருவாïரில் உள்ள உன்னிக் கிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகை பொருளால் ஆனது.

32. வைணவத் திருத்தலங்களில் பெருமாள் சயன கோலத்தில் சேவை சாதிப்பது போல் முக்தி தரும் திருத்தலமாக துவாரகையில் அமைந்துள்ளது கிருஷ்ணன் கோவில். பகவான் கிருஷ்ணர் இங்கு சயனக் கோலத்தில் அருள்புரிகிறார்.

33. கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபடுவார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

34. மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் `கத்ர கேஷப்தேவ்' என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

35. கிருஷ்ண வழிபாடு நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது. கிருஷ்ணனைப் பற்றிய மிகப் பழமை வாய்ந்த ஆதாரம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திரனுடன் கிருஷ்ணர் போரிட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது.

36. சாந்தோக்ய உபநிஷத்தில் கிருஷ்ணன் தேவகியின் மகன் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

37. அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள் கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.

38. அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் (புருஷோத்தமர்) தனது படைகளுக்கு முன்னாள் கிருஷ்ணனின் உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என கருதினார்.

39. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ்தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.

40. சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள் என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும், ராதை மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டியுள்ளனர்.

41. ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூதி இருளடைந்து தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு குறிப்பிடுகிறது.

42. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் உள்ள வேணுகோபாலன் சிலை நேபாளம் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது. கிருஷ்ண ஜெயந்தியன்று இங்கு பெருமாளுக்கு கண்திறப்பு, சங்கில் பால் புகட்டும் வைபவங்களும் நடக்கின்றன.

43. செங்கத்தில் பத்மாவதி ஆண்டாளுடன் கண்ணன் தரிசனம் தருகிறார். பரம பக்தனான ஏழைக்கு புதையலைக் காட்டிய பெருமாள் இவர்.

44. கண்ணன், ராஜகோபாலனாக செங்கமலவள்ளி நாச்சியாருடன் அருளும் கோயில் கடலூர், புதுப் பாளையத்தில் உள்ளது. திருப்பதி பெருமாளுக்கான காணிக்கைகளை இங்கு சேர்க்கலாம்.

45. மூலவர் கோபிநாதராகவும், உற்சவர் கிருஷ்ண ராகவும், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரத்தில் அருள்கிறார்கள். இந்த கண்ணன் கால்நடைகளை காப்பதாக ஐதிகம்.

46. கண்ணன் பாமா-ருக்மிணியுடன் அருளும் ஆலயம் மதுரை குராïர் - கள்ளிக்குடியில் உள்ளது. இங்குள்ள நந்தவனத்திலுள்ள புளியமரம் பூப்பதும், காய்ப்பதும் இல்லை. குழந்தைகள் கல்வியில் சிறக்க, இங்கே மாவிளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

47. காஞ்சிபுரம், மணிமங்கலத்தில் ராஜகோபாலசுவாமி, செங்மலவல்லித் தாயாருடன் கோயில் கொண்டுள்ளார். பெருமாள் இடது கையில் சக்கரமும் வலது கையில் சங்கும் ஏந்தியிருப்பது அதிசயம்.

48. சென்னை ஆதம்பாக்கம், சாந்தி நகரில் பாண்டு ரங்கன் ஆலயம் உள்ளது. பண்டரிபுரத்தில் உள்ள போலவே கோபுர அமைப்புடன் இந்த ஆலயம் உள்ளது.

49. தென்னாங்கூர், பாண்டுரங்கன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தோற்றத்தில் பாண்டுரங்களையும் ருக்மணியையும் அலங்கரிக்கின்றனர்.

50. மதுரை - அருப்புக்கோட்டை பாதையில் கம்பிக்குடியில் கோயில் கொண்டிருக்கும் வேணுகோபாலசுவாமி, நோயினால் துன்புறும் குழந்தைகளை தெய்வீக மருத்துவனாகக் காப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்



Sage of Kanchi

Krishnamoorthi Balasubramanian
 
Puratassi Anusham invitation from Mylai Anusham Group

Puratassi Anusham invitation from Mylai Anusham Group

ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர ! ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா துணை .
அனைவருக்கும் வணக்கம்/ நமஸ்காரம்,

வரும் சனிக்கிழமை (17-10-2015) மாதாந்திர (புரட்டாசி) திருமயிலை அனுஷ விழா கிழ்கண்ட முகவரியில் நடைபெறும்.

இடம் : Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, CH – 4.

நிகழ்ச்சி நிரல்
:


  • காலை : 6 AM – ஆரம்பம் ,ஹோமம் ,அபிஷேகம், கன்யா பூஜை,சுவாசினி பூஜை
  • மாலை : சஹஸ்ரநாம பாராயணம் , திருமாடவீதியுலா, வேதகோஷம் , திருமுனற ,ஆரத்தி, நமஸ்காரம் மற்றும் அன்னதானம்.


Namaskarams to all. Periyava charanam. coming Saturday (17th October 2015 ) we have our monthly Thriumylai Anusha Vizha.

Venue: Shree Ganesh Flats, Ground floor, New no 52/2 , Old no 35/2, North Mada Street, Mylapore, CH – 4.


Programme
:


  • Morning: Starts at 6 am with Aavandhi Homam followed by Abhishegam,Kanya pooja,and Suvhasini Pooja.
  • Evening: Lalitha Shahasranamam parayanam at 5.30 PM followed by thiruveedhi ula in Mada streets,veda ghosham,thirumurai,Aarthi,Namaskaram and Annadhanam.


Please participate and get blessings of Sarveshawaran Sri Kanchi Maha Periyava. Share the same to others too.

அனைவரும் வருக !! குருவருள் பெருக !!


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Hara Hara Sankara Jaya Jaya Sankara

https://mahaperiyavaa.wordpress.com...-anusham-invitation-from-mylai-anusham-group/

 
கால – தேசாதிகளின் பாதிப்பு

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 174

கால – தேசாதிகளின் பாதிப்பு

இன்னொரு விசித்ரம் – ஆனந்தத்தைத் தருவது என்பதால் ஒன்றிலே ஆசை ஏற்படுவதாகப் பார்த்தோம். ஆனால் இந்த போக்ய வஸ்து அதன் அநுபோகத்தில் ஏதோ ஒரு அளவில் அலுத்துப் போவது மட்டுமில்லாமல், கால தேச ஸந்தர்ப்பாதிகளாலும் ஒவ்வொரு ஸமயத்தில் வேண்டாததாகி விடுகிறது. இப்போது ஆனந்தம் தருகிற ஒன்று எப்போதும் ஆனந்தம் தருவதில்லை. எத்தனை ருசியான ஆஹாரமானாலும், நமக்கு ரொம்பவும் பிடித்தமான உணவு பதார்த்தமானாலும் கொஞ்சம் ஜ்வரம் வந்துவிட்டால் வைக்க வழங்குகிறதா? வேண்டும், வேண்டும் என்று எந்தப் பதார்த்தத்தைத் தேடிப்போய்ச் சாப்பிடுவோமோ அதையே இப்போது வேண்டவே வேண்டாம் என்கிறோம். தேடிப் தேடிப் போய் எது எதுகளை பர்ர்போபமோ அவற்றையே கண்வலி வந்தால் பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்கிறோம். உசந்த காஷ்மீர் சால்வைதான். ‘எத்தனை ஹிதமாய் இருக்கிறது?’ என்று மார்கழி மாஸம் எடுத்தும் போர்த்திக் கொண்டோம். சித்திரை பிறக்கிறது. அதே சால்வைதான். அது ஹிதம் தருகிறதா? மேலே பட்டாலே ‘நெருப்பாட்டம்’ இருக்கிறது. முதல் கார்யமாகப் பெட்டியிலே போட்டு மூடுகிறோம்.

வேடிக்கையாக ஒன்று சொல்வார்கள். பிரிட்டிஷ் துரைத்தனத்தார் காலத்தில் கிஸ்தி நோட்டீஸ்கள் வருமாம், நிலச் சொந்தக்காரனுக்கு, ‘இப்படித் தீட்டி விட்டானே!’ என்று கோபம் கோபமாக வருமாம். இந்தக் காலத்தில் ‘ஒரு தினுஸில்’ உத்யோகஸ்தர்களை (உத்யோகஸ்தர்களை விட அரசியல்வாதிகளை) ‘ஸரி கட்டி’ வரி, கிரி எதுவானாலும் ஸாதகமாக மாற்றிக் கொள்வதாகச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் இந்த ‘தினுஸு’ அவ்வளவாக நடைமுறையில் இல்லை. அடியோடு இல்லாமலில்லை. ஆனால் இப்போது தாண்டவம் பண்ணுகிற அளவுக்கு அப்போது இல்லை. இப்போது மாதிரி எடுத்ததற்கெல்லாம் ‘ரிட்’டும் அப்போது போடமுடியாது. ஆனதால் அந்த நிலச்சுவான்கள் மூக்கால் அழுதுகொண்டே கிஸ்தியைக் கட்டிவிடுவார்களாம். மனஸிலே மட்டும், ‘வரி போட்ட ஆபீஸரை எப்படியாவது பழி வாங்கவேண்டும்’ என்று கங்கணம் கட்டிக்கொள்வார்களாம்.

தநுர்மாஸ பஜனை முடிந்து ராதா கல்யாணம் நடக்கும். நிலக்காரர்கள் அதற்கு அந்த உத்யோகஸ்தரை மரியாதை பண்ணிக் கூப்பிடுவார்கள். அவரும் வருவார். ராதா கல்யாண முஹ¨ர்த்தம் முடிந்து நன்றாக போஜனமும் பண்ணி வைத்து, சந்தன தாம்பூலம் கொடுத்து உத்யோகஸ்தரை ரொம்பவும் மரியாதையுடன் அனுப்பிவைக்கிற கட்டம் வரும்.

‘நன்னா சந்தனம் பூசிக்கோங்கோ, பூசிக்கோங்கோ’ என்று அவரிடம் கேட்டுக்கொள்வார்கள். நல்ல குளிர் மாசம். அவர் எவ்வளவு பூசிக்கொள்வார்? ஏதோ கையில், கழுத்தில் கொஞ்சம் தடவிக் கொள்வார்.

வரி கட்டிவிட்டு, மனஸுக்குள் க்ஷாத்ரமாயிருப்பவர்கள் பழிவாங்குவதற்கு இதிலேதான் ‘ஆயுத’த்தை ஒளித்து வைத்துக் கொண்டிருப்பார்கள்! வெளியிலே மரியாதை குறையாமல் ரொம்பவும் அன்பு ஸ்வாதீனமாக, யார்டா அங்கே? ஸார் ஷர்ட்டைக் கழட்டுடா, ராதா க்ருஷ்ண ப்ரஸாதமா உடம்பெல்லாம் சந்தனம் தடவலாம்” என்று சொல்லி, அப்படியே அவர் உடம்பெல்லாம் பேலா சந்தனத்தையும் கொட்டிச் சொத சொதவென்று தேய்த்து விடுவார்களாம். பக்கத்துக்கு ஒருத்தராகக் கூப்பிட்டு நிறுத்திப் பெரிய பெரிய விசிறிகளை அவர்களிடம் கொடுத்து, “ஸாருக்கு நன்னா விசுறுங்கோடா” என்பார்களாம்.

இந்த பலவந்த உபசாரத்தில் அதிகாரி உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்கிக்கொண்டு தவியாய்த் தவித்து ஊரைவிட்டு மாற்றல் கேட்டுக்கொண்டு ஒடிப்போய்விடுவாராம்! ஆயுதமாக ஹிம்ஸித்த இந்த சந்தனமும் விசிறியும் சித்திரை வைகாசியில் ‘சைத்யோபசாரம்’ என்பதாக எத்தனை ஆனந்தம் தந்திருக்கின்றன?

ஆசையை விழுங்கும் இன்னோர் ஆசை

ஒரு ஆசையை இன்னொரு ஆசை முழுங்கி, ஆனந்தத்தைப் பறிப்பதையும் பார்க்கிறோம். ரொம்பவும் பிடித்த பாடகரின் கச்சேரி. ஃப்ரீ பாஸும் கிடைக்கிறது. ஆனால், யாரோ நெருங்கின பந்துவுக்கு அன்று ஆபரேஷன், அல்லது “என்னவோ”வே நேர்ந்துவிட்டது, என்றால் கச்சேரிக்குப் போகத் தோன்றுகிறதா? இப்போது பாட்டு ஆசையும், ஆனந்தமும் என்ன ஆயின? ஒரு ஆசையை இன்னொரு ஆசை முழுங்கிவிடுகிறது. பாட்டு ஆசையைவிட பந்துத்வ ஆசை பெரிசாயிருக்கிறது.

சாக்லேட்டை நீட்டினால் கையிலிருக்கிற சொப்பை ஒரு குழந்தை போட்டுவிட்டு இதற்கு ஓடிவருகிற மாதிரிதான் பெரியவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நாமும் இருக்கிறோம்!

ஏதோ கொஞ்சம் ஸ்வாமி ஆசையும் நடுப்புற வந்து கோவிலுக்குப் போகிறான். புறப்பாட்டுக்கு நாழியாகும் என்பதால் காத்துக் கொண்டிருக்கிறான். அன்றோடு சினிமா கடைசி ‘ஷோ’ என்று காதில் விழுகிறது. உடனே “புறப்பாட்டை” விட்டுவிட்டு இவனே ஸினிமா கொட்டாய்க்குப் புறப்படுகிரான். அல்லது மாற்றியும் சொல்லலாம். ஸினிமாவுக்கு கிளம்புகிறான், அன்றைக்கு ஸ்வாமி புறப்பாடு என்று கேள்விப்படுகிறான், உடனே, ஸினிமா கிடக்கட்டும் என்று கோவிலுக்கு நடையை மாற்றிக்கொள்கிறான். எதுவோ ஒன்று மொத்தத்தில் ஒரு ஆசையும் நிரந்தரமாக இல்லை, இன்னொரு ஆசை தன்னை முழுங்க விட்டுவிடுகிறது; ஒரேடியாயும் ஜீர்ணமாகி விடுவதில்லை. மறுபடி பழைய பலத்தோடேயே திரும்பி வந்து நம்மை பிடித்துக் கொள்கிறது.

ரொம்ப கஷ்டம் வருகிற காலத்தில் ஸினிமாவை விட்டு விட்டு நவக்ரஹம் சுற்றுவது, பிள்ளையாருக்குக் குட்டிக்கொள்வது என்றிப்படி ஆசை, புராண ப்ரவசனம் கேட்கப் போகலாமே என்று தோன்றுகிறது. ஸெளக்யம் வந்தால் குஷி பிறந்து, அந்த ஆசைகள் போய் ஸினிமா இல்லாவிட்டால் வேறே ஏதோ கேளிக்கையில் ஆசை பிறக்கிறது.


Sage of Kanchi

Krish Ram
 
Cho speaks about Periyava

Cho speaks about Periyava


his is from “Enge Brahmanan?” serial by Cho. Typed by Sri Varagooran mama / Bala Hanumanதுக்ளக்

ஆசிரியர் சோ கூறுகிறார்…

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.

“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.

அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.
நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா useபண்ணிண்டு இருக்கேன். So, அந்தமாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.

இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம்.

காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incident சொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார்.

பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான்அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”
ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது.

சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.

எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…

எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powers எல்லாம் இருக்கு சார்.

நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது.

But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realizeபண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு

https://mahaperiyavaa.wordpress.com/2015/10/14/cho-speaks-about-periyava/
 
Navarathri Special – Sri Mahalakshmi

Navarathri Special – Sri Mahalakshmi

Jaya Jaya Shankara Hara Hara Shankara – The first three days of Navarathri is dedicated to Durga Devi, the next three days to Mahalakshmi, and the final three days to Saraswathi Devi. We are now on the fourth day of Navarathiri dedicated to Mahalakshmi. Here Periyava explains about the importance of money, how Mahalakshmi helps us attain it the right way, and the birth of Kanakadhara Stothram by our Adi Aacharyal. The link to Kanakadhara Stothram by MS Amma is given below so we could recite these 3 days.
Let us also remember what Periyava said about Gho Matha and Mahalakshmi in Deivathin Kural. Apart from doing Lakshmi Puja to a deity let’s consider doing what Periyava said as a ‘Big Lakshmi Puja‘ (Feeding Gho Matha). Here are some direct quotes from Deivathin Kural on this. Happy Navarathri! Ram Ram.

//ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக – பயம் கலந்த மலைப்பாக – இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே! அதனால்கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. கோ-ரக்ஷணம் என்பது ஜீவகாருண்யத்துக்கு ஜீவகாருண்யம்; அதுவே ஒரு “பெரிய லக்ஷ்மி பூஜையும்” ஆகும். வேதம் இருந்தால் தான் லோகமே நன்றாக இருக்கும்; லோக க்ஷேமமே இங்கே நம்முடைய தேசத்தில் செய்கிற வைதீகமான யஜ்ஞ கர்மானுஷ்டானாதிகளில் தான் இருக்கிறது. அதற்கு இரண்டு அவசியமானவை. ஒன்று யஜ்ஞம் பண்ணுகிற கர்த்தாவான ‘யஜமானன்’. இன்னொன்று யஜ்ஞத்தில் உபயோகமாகிற அதி முக்கியமான த்ரவ்யங்களைத் தருகிற கோ தான். ஆகையினால் கோ இல்லாவிட்டால் யஜ்ஞம், வேள்வி என்பதே இல்லை. கோவுக்குள் முப்பத்து முக்கோடி தேவர்களுமே அடக்கம். ஸகல புண்ணிய தீர்த்தங்களும் ஒரு பசுவுக்குள் இருக்கின்றன. நம்முடைய ஆலயம் ஒவ்வொன்றிலும் சில தெய்வங்களுக்கு ஸந்நிதிகள் இருக்கின்றன; அதைச் சேர்ந்ததாக ஒவ்வொரு புண்ணிய தீர்த்தம் இருக்கிறது. கோ என்பதோ அத்தனை தெய்வங்களும் அத்தனை புண்ணிய தீர்த்தங்களும் குடி கொண்ட ஆலயமாக இருக்கிறது. கோவே ஒரு நடமாடும் கோயில். ஸர்வ தேவதைகளுக்குமான மஹத்தான கோயில்.//

மஹாலக்ஷ்மி

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்றார் திருவள்ளுவர். எல்லோரும் வீடு வாசலை விட்டுவிட்டு ஆத்ம விசாரத்தில் ஈடுபட முடியாது. உலக வாழ்க்கையை நடத்துவதானால் பணம் வேண்டித்தான் இருக்கிறது. இப்படிச் சம்பாதித்து குடும்பம் நடத்துபவர்கள் இருப்பதனால்தான் வேறு சிலர் ஆத்ம விசாரம் செய்ய முடிகிறது. பொருள் தேடி வாழ்க்கை நடத்தும் கிருஹஸ்தர்கள்தான் ஆத்ம விசாரத்தில் ஈடுபட்ட சந்நியாசிகளுக்கு பிக்ஷை அளித்து அவர்களை ரக்ஷிக்கிறார்கள். கிருஹஸ்தர்கள் இல்லாவிட்டால், பொருளைப் பற்றி நிர்விசாரமாக சந்நியாசிகள் என்று சிலர் ஞானம், பக்தி இவற்றிலேயே ஈடுபட்டிருக்க முடியாது. “பொருள் (பணம்) என்பது பொருள் இல்லாதது”. ‘அர்த்தம் அனர்த்தம்’ என்று சொன்ன அதே ஆதி சங்கராசாரியாள், அதே ‘பஜகோவிந்த’த்தில் பணப் பேராசை பிடித்து அலையாதே! ஆனால் உனக்கு உரிய கர்மத்தினால் நீ சம்பாதிக்கிற பொருளைக் கொண்டு நியாயமாக வாழ்ந்து உன்னையே உயர்த்துக் கொள் என்றார்.


யல்லபஸே நிஜ கர்மோபாத்தம்

வித்தம் தேன விநோதய சித்தம்.

செல்வத்துக்கு அதி தேவதையாக இருக்கப்பட்டவள் மஹாலக்ஷ்மி. அவளைப் பிரார்த்தித்தால் நமக்கு தர்ம நியாயமாக வேண்டிய சம்பத்தைத் தந்து அநுக்கிரகம் செய்வாள். ஞான, வைராக்கியக் கிரந்தங்களை நிறையச் செய்த ஸ்ரீ ஆசாரியாள் தம்முடைய பரம காருண்யத்தால் விவகார தசையிலுள்ள லோக ஜனங்களை உத்தேசித்து அவர்கள் மஹாலக்ஷ்மியை எப்படிப் பிரார்த்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிற மாதிரி, ‘கனகதாரா ஸ்தவம’என்ற லக்ஷ்மீ பரமான ஸ்தோத்திரத்தை, நமக்கு அநுக்கிரகித்திருக்கிறார்.

இந்தக் ‘கனகதாரா ஸ்தவம்’ உண்டானதற்கு ஒரு கதை உண்டு. ஆசாரியார் சன்னியாசம் வாங்கிக் கொள்வதற்கு முற்பட்ட கதை அது. அவர் பால தசையில் காலடியில் பிரம்மச்சாரியாக குருகுலவாசம் செய்து வீடு வீடாகப் போய் பிக்ஷை வாங்கி வந்த சமயம், ஒரு துவாதசியன்று பரம தரித்திரன் ஒருவன் வீட்டுக்கு பிக்ஷைக்காகப் போனார். அவனுக்கு அநுக்கிரகம் பண்ணவவே போனார் போலிருக்கிறது! இவர் போன போது உஞ்சவிருத்திப் பிராமணனாகிய வீட்டுக்காரன் வீட்டில் இல்லை. பத்தினி மட்டும் இருந்தாள். இவரைப் பார்த்த மாத்திரத்தில், “அடடா! எப்படிப்பட்ட தேஜஸ்வியான பிரம்மச்சாரி! இவருக்குப் பிக்ஷை போட்டால் சகல புண்ணியமும் உண்டாகும்” என்று நினைத்தாள். ஆனால், பிக்ஷை போடத்தான் வீட்டில் ஒரு மணி அரிசிகூட இல்லை. தேடித்தேடி பார்த்ததில் ஒரு புரையில் அழுகல் நெல்லிக்காய் ஒன்று அகப்பட்டது. துவாதசிப்பாரணைக்காக அவள் புருஷன் ‘சேமித்து’ வைத்திருந்த நெல்லி! ‘போயும் போயும் இதையா அந்தத் தெய்வக் குழந்தைக்குப் போடுவது!’ என்று ரொம்பவும் மனசு குமுறி வேதனைப்பட்டாள். ஆனால் “பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டுவிட்ட பிரம்மச்சாரியை வெறுமே திருப்பி அநுப்பக்கூடாது என்பதால் வாசலுக்குப் போனாள். அங்கே மகா தேஜஸ்வியாக நிற்கிற பாலசங்கரரைப் பார்த்துச் சொல்லி முடியாத வெட்கத்தோடும், அழுகையோடும் திரும்ப உள்ளே வந்தாள். வந்த பிறகு, ‘ஐயோ இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைக்கு ஒன்றும் போடாமலிருப்பதா?’ என்று நினைத்து வாசலுக்குப் போனாள். இப்படி வாசலுக்கும் உள்ளுக்குமாகத் தவித்து தவித்து நடமாடிவிட்டு கடைசியில் ‘அழுகலோ மட்டமோ? நம்மிடம் இருப்பதைத்தானே நாம் கொடுக்க முடியும்!’ என்று ஒரு மாதிரி மனஸைத் தேற்றிக்கொண்டு அந்த அழுகல் நெல்லிக்கனியை ஆசாரியாளுக்குப் போட்டாள்.
பொருளில் தரித்திரமாக இருந்தாலும், அவளுடைய மனசு எத்தனை பெரியது என்பதையும், அவளுக்கு தன்னிடம் எத்தனை அன்பு பொங்குகிறது என்பதையும் ஆசாரியாள் கண்டுகொண்டார். அவர் மனசு அவளுக்காக உருகிற்று. உடனேதான் அவளுக்காக மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்து, ‘கனகதாரா ஸ்தவம்’ பாடினார்.

https://www.youtube.com/watch?v=NbYVVNGnicI



Uploaded on Sep 21, 2009
Adi Shankaracharya was possibly one of the great saints of his time.. After brahmopadesa, as is usual during those times, he was asked to beg alms for his lunch. One day when he went to a Brahmin house, the lady of the house was so poor that she did not have anything to give him. She

searched hard and found one small fruit of gooseberry, which she gave to Sankara the boy. He was so touched by her gesture that he sang


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/16/navarathri-special-mahalakshmi/
 
Holy Five Syllables - Panchakshara Mantra

Holy Five Syllables - Panchakshara Mantra

Panychakshara as popularly known is the holy five syllables (literally holy five letters) that is the supreme Mantra of all devotees of Lord Shiva. As the name suggests it is made up of five syllables. This great Mantra is Namah Shivaya (Namah Shivaaya).

The five syllables in this Mantra are Na - Mah - Shi - Va - Ya.

The core of the vedas

The Holy Five Syllables Namah Shivaya is the heart of vedas. It is the core of the very famous chapter of vedas that stands in the middle of the vedas - the shata rudriyam or Rudra suktam. This great Mantra of veda samhita while hailing the God as the Lord of everything of the worlds, salutes the God as Namah Shivaya cha Shivataraya cha.

Meaning of the Panchakshara Mantra

The meaning of this matchless Mantra is abound. The puranas and the philosophical texts talk in a very detailed and elaborate manner its meaning and significance and hail its ultimateness. Here only a simple meaning is presented to start with.

The word Shiva means auspiciousness and perfection. It refers to the God Who is Perfect without any kind of dependency on anything external to make It complete. Naturally because of this self-perfection, It is completely blissful and ever auspicious. (All other auspicious things are in one way or the other dependent on the external circumstances etc.) The prefix Namah is the Mantra of salutation. The Mantra NamahShivaya salutationally invoke the Perfect God Shiva.

The subtle meaning of this very holy Mantra is:
Namah - not mine; Shivaya - belongs to Shiva. It is negating the Ahankara (ego) and realizing everything to belong to Lord Shiva.

Various Panchaksharas

Panchakshara has five syllables, so is Lord Shiva with five faces. Depending upon which letter the Panchakshara is starting with, the Panchakshara gets the name of a face of the God.

NamahShivaya is the Sadyojata Panchakshara and ShivayaNamah is the Aghora Panchakshara or the Aghora Mantra. Similarly the other Panchaksharas also get the names.

As the Panchakshara NamahShivaya is at the center of vedas, it is referred as vedic way Panchakshara. ShivayaNamah is the Panchakshara is used very much in the Agamic worship of the Lord. So it is referred as the Agamic way Panchakshara.

There are various Panchaksharas as Stula Panchakshara, Sukshma Panchakshara, Atisukshma Panchakshara etc. Each of which have specific significance. The tantric philosophic scriptures such as Thirumandhiram have the details about them.

Ways of chanting the Panchakshari

While many Mantras have restrictions as to when and how it can be chanted etc., there is no such restriction to the Panchakshara Mantra. The great prodigy Sambandhar says in Thevaram, "When you sleep as well as when you do not sleep, think of the Holy Five Syllables with heartful of devotion ! This is the Mantra that terribly kicked out the death when chanted (by markandeya) with sincerity."

Whoever you are, whenever be the time, whatever be the situation chant the Holy Five Syllables. There are no restrictions of color, creed, caste, gender or any other restrictions. All it requires is sincerity.

This Mantra could be chanted as it is as Panchakshara or could be chanted along with the Pranava (aum) as Shadakshara Mantra (om NamahShivaya). In fact it is to be noted that Pranava itself is Panchakshara Mantra (Akara, Ukara, Makara, Bindhu, Natham).

Benefit of chanting the Mantra

The thoughts make the person. The one who has the positive thoughts is happier and the one full of worries is the sad one. The thoughts not only have effect at that moment but they definitely make impression on the personality of the individual, which could have a very long lasting impact. In this background while the good thoughts itself would be making things better, what needs to be said about the super-powered Mantras that are rich in meaning as well as energy !

Given the fact that "we tend to become what we keep thinking about", when one chants the Sacred Panchakshara that hails the God as Perfection and Auspicious, it would take one towards that Blissful Perfection. It takes to the union with the Supreme God. What else can be more rewarding ! Even the worst sinner would get corrected and get to the glorious states if chants this Mantra piously.
Widespread glory of panchaksara in scriptures

The importance and glory of this Mantra is stressed across the shaiva scriptures, as the most important Mantra the devotee has to keep like own soul. Listing them would be highly arduous task given the importance this Mantra gets in the scriptures. One may find a few of them in the stotras section and thirumurai medicine.

Learning the various scriptures and chanting thousands of stotras (praise) of God, is all given secondary importance to chanting this great Mantra. The authentic scriptures very clearly state that for the one who chants this Mantra, even if none of the other scriptures are known or even any other worship of God is undertaken, that person would definitely gets eligible for the immense grace of the Supreme Lord Shiva. For this the chanting of the Holy Five Syllables has been prescribed as a definite requirement for the devotee. While the Rudraksha and Holy Ash are the ornament externally for the devotee the internal ornament is the Panchakshara Mantra.

The supreme Mantra very simple to chant and comes with no restrictions attached in order for everybody to chant and get benefitted. With no inertia in mind chant and keep chanting as much as possible NamahShivaya.

Full of love, with melting heart, tears brimming, one who chants leading them to the Glorious path, the name that is the real essence of the four vedas is the Mantra namaccivaya.


Sage of Kanchi

Jambunathan Iyer
 
Blessed Saturday , the fifth day of Navaratri to worship Maa Skandamata !!!!!

Blessed Saturday , the fifth day of Navaratri to worship Maa Skandamata !!!!!

The 5th day of Navratri is dedicated to Goddess Skandamata, the 5th manifestation of Goddess Durga and the mother of Lord Kartikeya, who was chosen by the devatas as their commander in chief in the war against the demons.

The image of Devi Skandamata portrays Her holding Lord Skanda in his infant form and a lotus in her right hand. She has four arms, three eyes and a bright complexion. She is also called as Padamasani since She is often depicted seated on a lotus flower in a her idol. She is also worshiped in the form of Parvati, Maheshwari or Mata Gauri. The left arm of the goddess is in a pose to grant boons with grace to her devotees.

The legend says that Tarkasur, a great demon, once pleased Lord Brahma with his great devotion and extremely tough penance. He asked Lord Brahma to shower His blessings and make him immortal. Lord Brahma denied him this blessing, saying none can escape death. Tarkasur acted smart and asked for the death by the son of Lord Shiva, since he thought Lord Shiva would never get married. Tarkasur started tormenting the people on the earth. Fearing his strength would cause destructions, the devatas requested Lord Shiva to get married. He agreed and married Goddess Parvati. Their child, Lord Kartikeya/ Skand Kumar, demolished Tarkasur. Devi Skandmata is a symbol of the mother-son relationship.

By worshipping Her, you get immense love and affection from her and gets all his desires fulfilled. You may attain supreme joy even in this very mortal world. Her worship automatically includes the worship of Lord Kartikeya (in his child form).
Chant this mantra to worship Goddess Skandamata…

सिंघासनगता नित्यम पद्माश्रितकरद्वया |
शुभदास्तु सदा देवी स्कन्द माता यशश्विनी ||

Siṅghāsanagatā nityama padmāśritakaradvayā |
śubhadāstu sadā dēvī skanda mātā yaśaśvinī ||


1613856_10153231441728004_2841118029075913223_n.jpg


Sage of Kanchi

Chandra Subramaniam
 
sixth day of Navaratri to worship Maa Katyayani !!!!!

sixth day of Navaratri to worship Maa Katyayani !!!!!

The sixth manifestation of Goddess Durga worshipped on Navratri Shasti is ‘Katyayani’. The goddess is known as Katyayani because she was born to Sage Katyayan.

According to a legend, there was a sage named Kat. His son “Katyayana” observed a hard penance and long austerities to receive the grace of the Goddess Durga.

Kata was very famous and renowned in the ancestry of saints. The Goddess was pleased with the hard penance of Maharishi Katyayana and took birth on the earth in the form of the daughter of Sage Katyayana on Dakshin devils in accordance with his desire on Krishna Chaturdashi to protect the devas from the demons and devils.

Sage Katyayana had the first privilege to worship her, so she was also named Katyayani after him. Katyayana worshiped her for three days on Shukla Saptami, Ashtami and Navami. On the tenth day i.e. on Vijadashami she killed Mahishasura and freed all the gods from his atrocities.

Goddess Katyayani is worshipped with the chant of following Mantra

या देवी सर्वभू‍तेषु माँ कात्यायनी रूपेण संस्थिता।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नम:1।।


Sage of Kanchi

Chandra Subramaniam
 
Navarathri Special-Significance of Navarathri

Navarathri Special-Significance of Navarathri


navaratri.jpg



Jaya Jaya Shankara Hara Hara Shankara,

The significance of Navarathri told in a very short and simple way. We can educate ourselves as well as explain to our kids. Thanks to Kanchi Periyava forum for this article.
Ram Ram.

Navaratri is a festival dedicated to the worship of Goddess Sakthi.

The word Navaratri literally means nine nights in Sanskrit; nava meaning nine and ratri meaning nights. During these nine nights and ten days, nine forms of Shakti/Devi are worshiped. The 10th day is commonly referred to as Vijayadashami or Dussera.

The festival commences on the first day of the bright fortnight of the month of Puratasi. Navaratri is celebrated all over India in different ways.

In Gujarat people celebrate the festival with garba and dandiya. In West Bengal they make pandals, and worship idols of Goddess Durga. Exquisitely crafted and decorated clay idols and set up and they are immersed in the river on the fifth day.

In Tamil Nadu, people set up steps and place idols on them. It is called the Golu. The first three days goddess Durga is worshipped, in order to destroy all our impurities. The second three days Goddess Lakshmi is worshipped, who bestows her devotees with wealth and abundance. And the final three days Goddess of Wisdom, Saraswati is worshipped.

On the 9th day, Saraswati pooja is performed, all books are stacked along with an idol of the goddess. Ayudha Pooja is also performed on this day. All kinds of tools and equipments are cleaned and worshipped . Even vehicles, shops are decorated and pooja is perfomed.

They distribute sweets and flattened rice mixed with peanuts, fried gram, jaggery. The 10th day, Vijaya Dasami – It’s the day when evil is destroyed by good and a new prosperous beginning is made.

All new ventures started on this day is believed to flourish. All kids read a book from the stack of books kept along with the idol on Saraswati pooja. Many parents admit their children to play school or other arts courses on this day.

https://mahaperiyavaa.wordpress.com/2015/10/17/navarathri-special-significance-of-navarathri/

 
Last edited:
Our Minds and Homes must be Pure during Navarathri!"

Our Minds and Homes must be Pure during Navarathri!"
===========================================

உலகில் தீமை அழிந்து நன்மை பெருகிட நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கு சிவராத்திரி போன்று, பெண்களுக்கு நவராத்திரி முக்கியம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவும், தீர்க்க சுமங்கலியாய் வாழவும் சுமங்கலிகள் இந்த ஒன்பது நாட்களிலும் அம்பிகையை பூஜிக்க வேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்விவளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

தினமும் காலையில் சர்க்கரைப்பொங்கல், உளுந்தவடையும், மாலையில் சுண்டல், பால் பாயசமும் நைவேத்யம் செய்ய வேண்டும். பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடவேண்டும். இந்நாட்களில் சவுந்தர்ய லஹரி, லட்சுமி, துர்கா அஷ்டோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், தேவி பாகவதம் போன்றவற்றை பாடலாம். நவராத்திரியின்போது சுமங்கலிகள் நூல் புடவை அணிவது சிறப்பு.

கன்னி பூஜை: முதல்நாள், ஒரு கன்னிக்கும்(பெண் குழந்தை), ஒரு சுமங்கலிக்கும்பூஜை செய்ய வேண்டும். அந்த குழந்தைக்கு பாவாடை, சட்டை, மஞ்சள், குங்குமம், வளையல், கண்ணாடி, சீப்பு, பூ ஆகியவற்றை வழங்கி மகிழ்விக்க வேண்டும். இதே போல், இரண்டாம் நாள் இரு கன்னிகளும், மூன்றாம் நாள் மூன்று கன்னிகளும் என ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தையை அதிகப்படுத்தி, ஒன்பதாம் நாள் ஒன்பது கன்னிகளுக்கு பூஜை செய்ய வேண்டும். சுமங்கலியைப் பொறுத்தவரை, தினமும் ஒருவரே போதுமானது.

கொலு விதிமுறை: நவராத்திரி பூஜை செய்பவர்கள் மனத்தூய்மை, ஒழுக்கத்துடன் இருப்பது அவசியம். அம்பிகை கொலு வீற்றிருக்கும் இடம் எப்போதும் தூய்மையோடும், கோலம் இட்டு அழகுடனும் இருப்பது மிக அவசியம். பூக்களால் அம்பிகையை தினமும் அலங்காரம் செய்ய வேண்டும். கொலு வைத்தவர்கள் துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடாது. தேவி உபாசகர்களை வீட்டிற்கு அழைத்து மரியாதை செய்ய வேண்டும். நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது

We celebrate Navarathri so that bad things are removed and good things are cultivated. Just like Sivarathri is important for Men, Navarathri is primary for Women. So that Happiness engulfs a family and to remain a lifelong Sumangali, Women must pray to Ambal on all the 9 days.

The first three days they must pray to Durga so that their minds will be stronger. The next three days they must pray to Ambal in the form of Lakshmi so that they are blessed with abundant wealth. And the last three days they must pray to Saraswati so that they are blessed with good education and an elevated Jnana.

Sweet Pongal and Vadas must offered as Neivedhyam in the mornings and Sundal and Payasam Kheer must be offered to Her as neivedhyam in the evenings. The 10th day must be celebrated as Vijayadasami.

On these days one must recite Soundarya Lahari, Lakshmi and Durga Astothrams, Mahishasuramardhini Stothram, Devi Bhagavatham etc. It is advisable if the Women wore only simple thread based sarees (instead of those made of Silk).

Kanya Pooja: On the first day, pooja must be done to one Kanya girl (unmarried) and to one Married Woman (Sumangali). And that girl must be mad happy by giving her Pavadai (Flowing colorful frocks which come upto ankle length) and matching Top, Turmeric, Kungumam, Bangles, Mirror, Comb, flowers etc.

In the same way, on the second day poojas must be done to 2 Kanya girls, on the third day for 3 Kanya girls etc., increasing the Kanya girl number by one each day. Ending up doing Pooja for 9 Kanya girls on the last ninth day. It is enough if there is just one Sumangali lady for each day.

Those of who do Navarathri poojas must maintain the Purity of Mind and a general discipline. The Home where Ambal resides in the Golu must always be Pure and also must be decorated with Kolams (Drawings to God made with rice flour). Ambal must be decorated with flowers daily!

Those who keep Golus must not attend Sorrowful events. Devi Upasakas must be invited home and we must pay our due respects to them. There must no quarrels, arguments at home and one must must not indulge in idle pastimes during the Nine Holy Days of Navarathri!"


Source: Sage of Kanchi

Panchanathan Suresh
 
Blessed Monday , the Seventh day of Navaratri to worship Devi Kalaratri !!!!

Blessed Monday , the Seventh day of Navaratri to worship Devi Kalaratri !!!!

Ekveni Japakarnapura Nagna Kharastitha |
Lamboshthi Karnikakarni Tailabhyakta Sharirani ||
Vaampadolla Salloh Lata Kanthak Bhushna |
Vardhan Murdha Dhvaja Krishna Kalratri Bhayankari ||

The most horrendous appearance of Durga is in form of Kalaratri.

Devi Kalratri is the seventh aspect of Durga and Worshiped among Navdurga. She is believed to be the most violent Devi among Navdurga.
She has dark krishna (black) complexion and her appearance is extremely fearful.

Her large red eyes, open red tongue, and sobre on hand violently demolish devils and monsters. She is also glorified with name 'Kali Maa'.

Devi Kalaratri has three round eyes, and scattered long black hair. She wears a bead that gleams like fire of electric power. Durga manifested herself as completely destroy the dirt and demons from existence.

She is revered with name Kalratri, because she represents herself as a death of Kaal appeared like a dark night for demons. Donkey is her procession, as she rides on gadarbh. Goddess Kalaratri also has four arms.

She holds sobre in her upper left hand and thorn of iron in lower left hand. Her upper right hand is in Var Mudra and lower right hand is in Abhay Mudra. Her splendor is limitless. She removes any kind of fear in life.

During seventh day of Navaratri, Sadhak or devotee enters in Sahastrar chakra. After immersing oneself in Sahastrar Chakra, devotees are able to see the entrance of getting complete perfection in Universe.

However, appearance of Maa Kalratri is so dreadful, but her grace is generous toward devotees. Worshipping Maa Kalaratri on the seventh day gives abundant fruitful result.

With her grace, devotees get power, position and eminent status on earth. She protects her devotees against evil influence of demons and wrong people. Worshiping her devotees get complete protection and long life.

In Hindu mythology, it is believed that it is only Goddess Kalratri who could demolish the extreme agony of devil Raktabeej. No one could kill Raktabeej, as even one drop of his scattered blood was able to form another embodiment of Raktabeej. And that way, scattered blood of Raktabeej formed other billions of Raktabeej.

Devi Bhagwati manifested herself in Kalaratri, and kept a Patra (vessel) to keep and imbibe entire blood of his body. Her extreme violent appearance while destroying Raktabeej and other demons hugely terrified all organisms of Universe. But still, she is a generous Goddess for her great devotees.

During Navratri, Saptami Poojan of Devi Kalratri is considered as Maha Pooja or great worship of Goddess Durga. Delighting this deity, devotees certainly get enormous happiness, power and comforts in life.

Maa Kalratri is Worshiped to destroy agony of awry influence from life of mankind. On the seventh day of Navratri Pooja, Saptami fast is observed to please this deity. Tantra-mantra practices are also performed and accomplished under blessings of this Goddess.

Seventh day of Navratri pooja is envisaged as one of the great days in Durga Pooja. Worship Maa Kalaratri on the seventh day of Navratri Pooja and obtain her enormous grace.

Jai Maa Kalratri!



Sage of Kanchi

Chandra Subramaniam
 
அத்வைதம் தவிர அனைத்திலும் துக்கம்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 178

அத்வைதம் தவிர அனைத்திலும் துக்கம்

ஸ்ருஷ்டியிலே ஈச்வரன் சாச்வத ஆனந்தம் தருவதாக எதொன்றையுமே படைக்கவில்லை. அவனே தர்சனம் தந்தால்கூட அது ஸர்வ கால ஆனந்தமாக இருப்பதில்லை. நாமதேவரைப் போல, ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகைளைப் போல தினந்தினம் அவனைப் பார்த்துக் கொட்டமடித்தவர்களைகூட அவ்வப்போது விட்டுப் பிரிந்து அழ அழவுந்தான் வைத்திருக்கிறான். கிருஷ்ணனுக்கு ராதை உயிர் என்கிறார்கள். அவளையும் விரஹத்தில் அப்படியே தேஹமே சிதறிப்போய் விடுகிறாற்போலத் துடிக்கத்தான் விட்டிருக்கிறான். ஆசைப்பட்டால் அழுதுதான் ஆகணும் என்றே இப்படியெல்லாம் வைத்திருக்கிறான். அவனை வெளியிலே வேறாக வைத்து ஆனந்தப்படுகிறவரை அதுவும் சாச்வத ஸுகமில்லை, அத்வைதம் தவிர எல்லாம் துக்கம்தான் என்று காட்டவே இப்படிப் பண்ணுகிறான் போலிருக்கிறது.

இலக்கியம், ஸங்கீதம், சிற்பம் முதலானதுகளில் மனஸைக் கொடுத்தவர்கள் (அதாவது நிரம்ப ஆசை வைத்தவர்கள்) உசந்ததாக அவற்றில் ஒன்றைப் பார்த்து விட்டால் அதுமாதிரி பார்ப்போமா பார்ப்போமா என்று ஸதாவும் ஒரு தவிப்பாகத் தேடிக்கொண்டே இருப்பார்கள். தவிப்பது, தேடித்தேடி அலைகிறது என்றால் அது அசாந்திதான், துக்கம்தான்.

கெட்ட அநுபோகங்களும் இதே மாதிரி ஒருதரம் ருசி கண்டுவிட்டவர்களுக்கு ஆசை வெறியைத் தூண்டிவிடுகிறது. அப்புறம் அவர்களே கொஞ்சம் அறிவு தெளிந்த நிலையில், ‘ஐயோ, இத்தனை கீழ்த்தரமாக இருந்து விட்டோமே’ என்று தனக்குள்ளேயே குன்றிப்போய் மிகவும் துக்கப்படும்படி இருக்கிறது.

பிறரை வருத்தியும்

இதிலே இன்னொரு பெரிய தப்பு என்ன என்றால், நாம் எதுவோ ஒன்றில் ஆசைப்பட்டு விட்டால், அதன் அநுபோகத்தில் நமக்குக் கிடைக்கும் ஸ்வய த்ருப்திக்காகப் பிறத்தியார் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்து விடுகிறது. நமக்கு வாய்க்கு ருசியாக ஒன்று வேண்டும் என்பதற்காக வயஸான தாயார் கல்லுரலைக் கட்டிக்கொண்டு மன்றாடினாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இப்படி எத்தனையோ கஷ்டங்களுக்கு, கொடுமைகளுக்குப் பிறரை ஆட்படுத்தி நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கிறோம். இதெல்லாம் நம் பாபக்கணக்கில் ஏறி வருங்காலத்தில் நம்மை வட்டிபோட்டுத் தீட்டிவிடும்.

இந்த விஷயத்தை ஆலோசித்துப் பார்க்கும்போது பிறர் கஷ்டப்பட்டாவது நாம் த்ருப்திப்பட நினைக்கிறோம் என்பது நமக்கே தெரியாத விதத்தில், ரொம்பவும் நல்ல உத்தசேங்களில்கூட எத்தனை சூதாக (இதைத்தான் மாயை என்பது) வேலை செய்கிறது என்று தெரிகிறது. பொது ஜனஸேவை, பரோபகாரம் என்று செய்கிறோமே, தாத்பர்யம் என்ன? நம்மைக் கஷ்டப்படுத்திக்கொண்டாவது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இந்த ஸேவையாலும் பிறத்தியாருக்கு த்ருப்தியைத் தருவதைவிட நமக்கே த்ருப்தி உண்டாக்கிக் கொள்கிறதுதான் உள்ளூர, நம்மை அறியாமலே, நமக்கு முக்யமாய்விடுகிறது. எப்போது பார்த்தாலும் நாம் விரும்புவது போன்ற பரோபகாரப் பணி நமக்குக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாதல்லவா? அப்படி சரீரத்தாலோ, த்ரவய்தத்தாலோ உபகாரம் பண்ண முடியாமலிருக்கிற நாளில், தொண்டில் ரொம்பவும் ஈடுபட்டவர்களுக்கு, ‘ஐயோ, இன்றைக்கு தண்டத்துக்கு ஒரு தொண்டும், இல்லாமலிருக்கிறோமே’ என்று வருத்தமாய் இருக்கிறது. அந்த மாதிரி ஸமயத்தில் எவனோ ஒருத்தன், ‘தரித்ரத்தில் திண்டாடறேன், அஞ்சோ, பத்து உதவி பண்ணுங்கோ’ என்று வந்தால் பரோபகாரிக்கு ஸந்தோஷமாயிருக்கிறது; ‘யாரோ கீழே விழுந்துவிட்டார்கள். first-aid‘ தரவேண்டும், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போகவேண்டும்’ என்று ஸேவைக்கு டிமான்ட் வந்தால் உடனே ஸந்தோஷம் உண்டாகிறது.

அதாவது, ஒரு பரோபகாரி விண்டு பார்த்துக் கொண்டால், அவனுடைய உள்மனஸுக்கே அது ஸம்மதமாகத்தான் இருக்காது என்றாலும்கூட, அவனுக்கு ஸேவை செய்வதில் உள்ள ஆசையினால், அவனையும் அறியாமலே அந்த ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு வேறு எவனோ ஒருத்தன் தரித்திரத்திலோ ஆபத்திலோ கஷ்டப்பட்டாக வேண்டியிருக்கிறது. அதவாது, தான் இன்னொருத்தன் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டும் என்ற ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு எவனாவது கஷ்டப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்! “எதிர்ப்பார்கிறான்” என்றால் மனஸ் அறிந்து இல்லை. “எனக்குத் தொண்டு வாய்ப்பு கிடைப்பதற்காக யாராவது கஷ்டப்படவேண்டும்” என்று மனஸறிந்து ஒரு உபகாரி நினைக்கமாட்டான். ஆனாலும் மனஸுக்குள்ளே சூதாக இப்படியும் ஒரு எண்ணம் பதுங்கி கொண்டு இருக்கிறாற் போலத்தான் இருக்கிறது.

வெள்ள நிவாரணம் என்று பெரிதாக ஒரு பணி செய்து முடித்துத் திரும்பும்போது, ‘நாளைக்கு இப்படி ஓடி ஆடி நூறு ஜனங்களுக்குச் செய்வதற்கில்லையே’ என்று ஒரு தாபம் பிறந்தால், அப்போது தனக்கு ஸேவா பாக்யம், அதிலே கிடைக்கும் ஆசைப்பூர்த்தி, ஆத்ம த்ருப்தி போய்விட்டதே என்ற அபிப்ராயம் துளியாவது இருக்கத்தான் செய்கிறது. ஸேவை மாதிரி உத்தம விஷயமாக இல்லாமல் கெடுதலானவற்றில் ஆசை உள்ளபோது இந்த அபிப்ராயமே நன்றாக பலமாக வெளிப்பட்டு, பிறரை மனஸறிந்து கஷ்டப்படுத்தியாவது ஸ்வய ஆசையைப் பூர்த்திப் பண்ணிக் கொள்ள வைக்கிறது.

எதுவோ ஒன்றில் நாம் ஆசை வைத்து விட்டால் அது நம் கையை விட்டுப் போகிறபோது, நமக்கு அந்த ஒன்றில் ஏற்படும் மனத்ருப்தியையே நினைத்து பிறத்தியார் கஷ்டப்பட்டாவது நமக்கு அது மறுபடி கிட்டவைக்க வேண்டுமென்று நினைத்துவிடுகிறோம்.

இப்படி அநேகத் தப்பு எண்ணங்களை ஆசை உண்டாக்குகிறது.

இதுவரை ஆசைப்படுகிறவர் ஆளாகிற கஷ்டம், துக்கங்களையே பற்றி நிறையச் சொன்னேனே, ஆசைப்படுகிறவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்ட துக்கங்களைப் பார்க்கும்போது இது ரொம்ப அல்பமாகி விடுகிறது. ஆசையினால் எத்தனை கொலைகள்! ஸாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கவேண்டுமென்று ராஜாக்கள், ராஜா மாதிரியான ஹிட்லர், முஸோலினி போன்றவற்கள் ஆசைப்பட்டால் எத்தனை லக்ஷம் உயிர்கள் சாகவேண்டியிருக்கிறது? நடக்கின்ற அத்தனை கொலையும், கொள்ளையும், ஸ்த்ரீகளை பலாத்காரம் படுத்துவதும், மற்ற மோசடிகளும் ஆசையினால்தானே?

தன்னுடைய ஆசையினால் மற்றவருக்கு இழைக்கும் இந்தத் துன்பங்கள் ஒருவனைச் சும்மா விடுவதில்லை. அவை எல்லாம் அவனுடைய பாபக் கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரக லோகத்திலும் மறு ஜன்மாக்களிலும் பழி வாங்கத்தான் செய்யும்.


Sage of Kanchi

Krish Ram
 
ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்

ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்


ராமபிரானின் சிரத்தின் மேல் பொன் கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தவர்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.


நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.


ஸ்ரீராமன் என்றால் ஆனந்தம்


ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்ப வன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ராமன் தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக் குள்ளே ஆனந்தமாகவே இருந்தான்.


சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகா மல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக் கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.


ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான மத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார்.

சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தான்.


ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மைல் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.


ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார் என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா? நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள்தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார் என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும். ஸ்ரீராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக்கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக்கொண்டு வாழ்ந்தார்.


வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக்கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது.

அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.


நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக் கூடாது.

ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. தர்மம் தர்மம் எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம” என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்துவருகிறான். சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர் களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.



தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)

http://tamil.thehindu.com/society/spirituality/
 
Sri Pradosha Nayanmar’s 89th Jayanthi Celebration – Oct 26, 2015

Sri Pradosha Nayanmar’s 89th Jayanthi Celebration – Oct 26, 2015




Every time we read about Sri Pradosham mama, it brings an unexplainable feeling of how he was able to see Periyava as Arunachalam, Sadhasivam, Maheswarar at all times! Not a second mama saw Him as a madathipathi or just a sanyasi. Only the punyas from the past several janmas combined made such a devotion to happen. Similarly how fortunate he was to be blessed by Periyava immensely.

I have seen this drawing of Periyava standing in one leg and always used to think that it was the artist’s imagination. Only after reading this incident it is giving goose-bumps to know that Periyava stood like this for 15 minutes just for mama – who will get such a great blessing?!

Mama’s 89th jayanthi is on October 26, 2015 and vedic celebrations are planned. Attached is the invitation. Devotees in and around Chennai are welcome to attend and receive the blessings of mama and Periyava
Hara Hara Sankara Jaya Jaya Sankara!


Please open the link to view the invitation

https://mahaperiyavaa.wordpress.com...anmars-89th-jayanthi-celebration-oct-26-2015/
 
Mahodhaya Maha Punniya Kalam

Mahodhaya Maha Punniya Kalam

Thanks to Smt Mahalakshmi mami in sharing this with me. HH Balaperiyava had asked mami to ensure that the mahodhaya mahatmiyam is known to everyone and He had asked mami to spread the message to all devotees
.

Mahodhayam is much more important than kumba-mela. Kumba-mela happens every 14 years and this mahodhayam happens after 144 years.

Although Mahodhyam is going to happen on Feb 8th, it technically starts 3 months prior as I understand.

Attending a kumbabishekams – that too for a great kshetram like Vedaranyam is a huge punyam. During the punya kaalam, take a snanam wherever we are thinking about the punyakalam, we get all the benefits.

Sri Dikshitar is going to speak about this in Vedaranyam kumbabishekam and we will get the video recording of it and share it here….

Brahmasri Sundaresa Dikshitar, a maha-vidwan has given some highlights of this punya dhinam. I will be posting about this great vidwan separately along with his video.

Sri Ramajayam

Our Motherland Bharatha Desam has a very proud heritage and culture. It has a lot of ancient temples, sadgurus, divya desams, and holy rivers. Every place here in this nation has rich spiritual significance where by people visit these Kshethrams, worship the Devathas, attain both material and spiritual benefits all the way till Moksha. We have seen and heard many of them in our own experiences.

The Vedas, Puranas, and all our ancient scriptures emphasize the importance of holy rivers such as Ganga, Yamuna, Saraswathi, Godhavari, Krishnaveni, Tungabadhra which has their own unique spiritual significance, has the power to gives us the immense punnya (meritorious deed), destroys our sins, cure our diseases, and ailing’s. We need to take bath in those sacred rivers and try to attain all the benefits and moksham.

There are many auspicious times. Out of those, ‘Arthodhaya Punniya Kaalam’ and ‘Mahodhaya Punniya Kaalam’ is a very rare happening and come once every several decades.

‘Mahodhaya Maha Punniya Kalam’ is a very rare happening and is considered an extremely auspicious day. It occurs this coming 25th Thai Amavasya, Manmadha Varusham (Feb. 8, 2016). ‘Mahodhaya Punniya Kaalam’ is a day when the following attributes align together in a single day:

[TABLE="width: 704"]
[TR]
[TD]Thithi[/TD]
[TD="width: 234"]Amavasya[/TD]
[/TR]
[TR]
[TD="width: 234"]Nakshathiram[/TD]
[TD="width: 234"]Thiruvonam[/TD]
[/TR]
[TR]
[TD="width: 234"]Yogam[/TD]
[TD="width: 234"]Vyathi Patham[/TD]
[/TR]
[TR]
[TD="width: 234"]Month[/TD]
[TD="width: 234"]Maagam[/TD]
[/TR]
[TR]
[TD="width: 234"]Vaaram[/TD]
[TD="width: 234"]Soma (Monday)[/TD]
[/TR]
[/TABLE]

The alignment of these above attributes is a very rare phenomenon. If the same set of attributes align on Sunday (Vaaram) it is called ‘Arthodhaya Maha Punniya Kalam’. The last occurrence happened several decades back so we can realize what a significant day this is.

During this auspicious time, one needs to do Snanam, Shradham, Dhanam, Tharpanam, Puja, and Vratham. Whoever takes bath in holy rivers during ‘Mahodhaya Punniya Kalam’ won’t have Garba Vasam (birth through uterus), Brahmahathi Dosham will be destroyed, gets rid of all sins, acquire wealth, will attain Indira Lokham as well as Mukthi.

One who offers ‘Pindam’ even of the size of a mustard to ancestors on this day will be peaceful and content till Surya and Chandra are there. Offering ‘Pindam’ (equivalent to ‘Vanni’ leaf) to Pithrus (ancestors) with Bhakthi and Shraddha will get rid of their sins, go to heaven and then proceed to Moksham.

One is called a ‘Sath Pathram’ if he observes Aachaaram, Thapas, Vedam, listening to Vedanta, Siva Puja, doing upanyasam on Puranas. We have to go above and beyond and give dhanam to people (Sath Pathram) with this quality.

If we cannot find any Sath Pathram’s at that time we need to think about him in our minds, give our offerings through our mind and then physically offer those on a later date. One who does Snanam at this time will get rid of sins including thanks giving. One who does Snanam at this time will pierce through the Surya Mandalam and reach Brahma Lokham. We need to give Arghiyam (Water Oblation) at this time. Chant the sloka below and give Arghiyam:

“Dhiwakaraa Namaste Asthu Tejoraathe Jagadpadhe |

Athri Gothra Samuthpanna Lakshmi Devyaaha Sagodhara Argam Grahanaa Bhavannu Sudha Kumbha Namasthuthe

Vidhir Paadha Mahaa Yoginnu Mahaa Paadhaha Naadhasanaa Sahasthra Baaho Sarvaathmannu Irahanaagyam Namasthuthe

Thithi Nakshathira Vaaranam Adhishaa Parameswaraa Maasa Roopa Grahaa Naagyam Kaala Roopa Namasthuthe”

Offer food to fourteen (14) people and give Gho Matha (cow), Gruham (house) as Dhanam, based on what one can afford. There are few slokas for doing this as well:

“Nakshathraanaam Athipadhe Devaanaam Amruthapradhaa Thraagimaam Rogini Gaantha Kalaakesha Namasthuthe Dheena Naadha Jagan Naadha Kala Naadha Kirupaakara Thothipaadha Padma Yugale Bhakthi Rasthu Asalaanama Vyathipaadha Namasthe Asthu Soma Suriya Agni Sannibha Yathigaanathy Grutham Kinjithu Thadhu Akshayam Ihaasthume Arthinaam Kalpa Vrukesi Vaasudeva Janaardhanaa Maasalar Ruthu Ayana Kaalesaa Paabam Samayaa Mehare Sravarkeshu Jagannadha Jennarkkeshaa Thavaa Kosavaa Yanmaya Thattham Arthipyahaa Thatharkishyam Igaasthume”

Pray for Dhana Balam and then do Shradham and Tharpanam. All the above said Dhanams will yield rich dividends. Doing Snaanam in holy places such as Rameswaram will give us Maha Punniyam. Listening to this narration itself will get rid of our deadly sins.

Doing Snanams (head bath) in ‘Vedhanadhi’ also called as ‘Sannidhi Kadal’,

in Vedaranyama Vedapureeswarar temple theertham inside the temple is called as ‘Manikarnikai Theertham’, ‘Rudrakodi Kadal Theertham’ located in the south bottom of the temple, and ‘Aadthi Sethu Kadal Theertham’ are considered very auspicious.

Doing Dhanams and Tharpanams in ‘Dhanushkoti’ is equal to living in the following Punniya Kshethrams for a year; Madhyarjunam, Kumbakonam, Mayiladudhurai, Vedaraynam, Chidambaram, Naimisaranyam, Sri Sailam, Sri Rangam, Vrudhachalam, Tirumalai, Kanchipuram, Vaideeswaran Kovil, Dakshina Kailasam. It reaps crores of benefits compared to what one accrues normally.

Any Punniya Karmas (Meritorious Deed) done on this day will result in billion times benefit. For example, doing a Gho Dhanam on this day is equivalent to doing crore Gho Dhanams.

Sath Karmas & Dhanams to be done on this day & Benefits:


  1. Dhanams to Sath Pathrams (Good Vedic Scholars), will accrue crore times the benefit.
  2. Gho Dhanam – Equivalent to doing crore Gho Dhanams than a normal day.
  3. Bhoo Dhanam – Same as above.
  4. Gruha Dhanam with groceries for one year – Attains Vaikuntam.
  5. Sethu Snanam (Rameswaram) on this day will ensure there is no Garbavasam (re-birth) and will attain Moksha.
  6. Doing Dhanams in Dhanushkoti is equal to living in the following Punniya Kshethrams for a year; Madhyarjunam, Kumbakonam, Mayiladudhurai, Vedaraynam, Chidambaram, Naimisaranyam, Sri Sailam, Sri Rangam, Vrudhachalam, Tirumalai, Kanchipuram, Vaideeswaran Kovil, Dakshina Kailasam. Good Children are born.
  7. Koti Janma Sins including Pancha Maha Pabhams (Sins) are destroyed.
  8. Doing Dhanams will give 1000 Aswamedha Yaja benefits.
  9. Pithru Tharpanams done on this day is equivalent to doing crore times and help Pithrus attain Mukthi.
  10. Donate Panagam, Payasam, Banana Items, Chandanam, Umbrella, Jackfruit,
    Padhuka, Pathram, and Pushpam. This will give us the benefit of doing many Soma Yagnam’s.
  11. Dhanam’s done in Dhanushkodi is considered very auspicious.
  12. Doing Vishnu, Siva Puja’s on this day chanting Purusha Suktham, Sri Rudram, Chamakam respectively and do abishekams. Saturn and Sevvai (Angaraga) doshams will be cleared and will not recur.


The above said is mentiond in Skanda Maha Puranam, Sethu Mahathmiyam, Brahma Kandam, 52[SUP]nd[/SUP] Adhyaayam in detail for more than 100 Slokas.



-By Brahmashri. R. Sundararama Vaajapeyaaji Dikshitar

Ram Ram!!

https://mahaperiyavaa.wordpress.com/2015/10/11/mahodhaya-maha-punniya-kalam-must-read/

 
நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம்

நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது."

(குடிகாரக் கணவனை திருத்திய சம்பவம்)

நவராத்திரி ஸ்பெஷல் எட்டாம் நாள் கட்டுரை.

கட்டுரை-இந்திரா-செளந்தர்ராஜன்

நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

நவராத்திரியும் கொலுவும் மேல்தட்டு மக்களுக்காக என்று சில காலம் இருந்தது. குச்சு வீட்டுக்கும் கொலுவுக்கும் சம்பந்தமில்லாத படி, ஒரு இடைவெளியும் இருந்தது. அதற்கு சில வலுவான காரணங்களும் இருந்தன.

கொலு வைக்க முதலில் ஒரு பெரிய ஹால் வேண்டும். அதாவது இடம். அடுத்து, தினசரி வருகிறவர்களுக்கு வெற்றிலை – பாக்கு வைத்து தருவதோடு, சுண்டல் விநியோகம் இதில் முக்கியம். இது போக, தினசரி லலிதா சஹஸ்ரநாம பாராயணம், நைவேத்யம், பாகவதம் படிப்பது என்கிற கட்டங்கள் வேறு. இதை எல்லாம் ஒருவரால் செய்ய முடியாது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இது சாத்தியம்.

அன்றாடம் வேலைக்கு போனால்தான் வீட்டில் அடுப்பெரிய முடியும் என்பவர்களுக்கு துளியும் சாத்தியமில்லை என்கிற ஒரு நிலையை, இது உருவாக்கிவிட்டது. தன்னால் தான் கொலு வைக்க முடிய வில்லை – யாராவது வைத்திருக்கும் கொலுவுக்காவது போய் வணங்கி வரலாம் என்பதற்கும் சாதி, ஏழ்மை என்கிற குறுக்கீடுகள்.

மொத்தத்தில், மிகுந்த பொருட் செறிவுள்ள நவராத்திரி என்பது மேல் தட்டு மக்களுக்காக மட்டுமே என்று இருந்த ஒரு நிலையில்தான், பெரியவர் ஒரு ஏழைப்பெண் மூலம், ‘அது அனைவருக்குமானது. மனம் பக்தியோடு விரும்ப வேண்டியதே முக்கியம்’ என்பதை உலகத்துக்கு உணர்த்தினார்.

ஒரு குடிகார கணவனோடு அல்லாடிய அந்தப் பெண்ணும், வரிசையில் நின்று பெரியவரை சந்தித்தபோது அவள் கண்களில் அப்படி ஒரு சோகம். மனமும் தற்கொலை செய்து கொண்டுவிடும் எண்ணத்தில் எல்லாம் இருந்தது.

இவ்வேளையில்தான் பெரியவர் அவள் அவலத்தை, அவள் கூறாமலே புரிந்து கொண்டார்.

இந்த நாட்டில் பெண்களின் வாழ்வு என்பதே ஒரு சூதாட்டம் போலத்தான் இருக்கிறது. நல்ல கணவன் என்னும் தாயம் எல்லோருக்கும் விழுந்து விடுவதில்லை. அவளாலும் சுயமாக ஒரு மனம் நிறைந்த கணவனை தேர்வு செய்ய வாழ்வின் வழிமுறைகளில் இடமில்லை. இது என்ன கொடுமை அல்லது சோதனை என்பதுதான் அவளுக்குள் இருந்த கேள்வி.

அதற்கு பெரியவர் சொன்ன பதில், அவளுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; அது ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்துக்கும் சேர்த்துதான்…

‘நம்ம சமூகத்துல வீட்டுப் பொண்ணு கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுன்னு சொல்வா. அதுக்கு உண்மையான அர்த்தம், அவ சந்தோஷமாய் புருஷனோட பிள்ளை குட்டிகள்னு வாழணுங்கறது மட்டுமில்லை. அப்படி அவ வாழற மாதிரி, அந்த வீட்டு ஆண்மக்கள் நடந்துக்கணும். எந்த ஒரு பெண்ணை ஒரு ஆண்மகன் அழ வெச்சாலும் சரி; அதுக்கான பதில் விளைவு, அவன் சகோதரி மூலமாவோ இல்லை; அவன் பெத்தெடுக்கப் போற பெண் மூலமாவோ வந்தே தீரும்.

அம்மா, அக்கா, தங்கைகள் மேல பாசமாய் ஒரு பவ்யத்தோட இருக்கறது பெருசேயில்லை. எல்லாப் பெண்கள் கிட்டயும் இந்தப் பாசமும் பவ்யமும் இருக்கணும். சாபங்கள்ள பெண் சாபத்துக்கு வேகம் அதிகம். ஆகையால, அந்த சாபத்துக்கு ஆளாகாம வாழறதுதான் உத்தமமான ஆண்மை’ என்று, ஆண் மைக்கு பொருள் கூறிய பெரியவர், எங்காவது ஒரு பெண் கண்ணீர் சிந்து கிறாள் என்றால், அதற்கு பின்னாலே நிச்சயம் அவளது வினைப்பாடு மட்டு மல்ல; அவளது குடும்பத்து ஆண்களின் வினைப்பாடுகளும் இருக்கும் என்று கூறியதுதான் இதில் முக்கியம்.

இதனால்தான் நம் சமூகத்தில் பல பெண்களின் திருமண வாழ்க்கை என்பது அமைந்தால்தான் உண்டு, இல்லாவிட்டால் சாகும் வரை சுருதி பேதத்தோடே வாழ வேண்டி வந்துவிடுகிறது. அதனால் பாதகமில்லை. எப்பேர்பட்ட அழுக்கையும், தோக்கிற விதமாக தோத்தால் நீக்கி விடமுடியும் என்னும்போது, இந்த வினைப்பாடுகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை.

மனித வாழ்க்கை என்பதே ஒரு மாயா விளையாட்டுதானே? ஒருவருக்கு பிடித்த விஷயம் இன்னொருவருக்கு பிடிக்காமல் போகிறது; ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித ரசனை. எல்லாமே மாயையால்தானே?

அப்படி இருக்க, இங்கே பாவமே செய்யாமல், புண்ணியம் மட்டுமே செய்தபடி வாழ்ந்துவிட எத்தனை பேரால் முடியும்? தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியமாலும், புரிந்தும் புரியாமலும் தவறுகள் செய்வதும், பின் வருந்தித் திருந்துவதும்தானே, மனிதர்களின் வழக்கமாக உள்ளது.

தவறுகளிலேயே மூழ்கிவிடக்கூடாது. அறச்செயல்களையும் அவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான், திருநாள் கொண்டாட்டங்கள் வருகின்றன. மகாமகம், கும்ப மேளா என்று நடப்பதெல்லாமே பாவமூட்டையின் கனத்தை குறைப்பதற்குதானே?

அதெல்லாம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வரும் விசேஷங்கள். வருடாவருடமே ஒரு ப்யூரிஃபயரை, ஒரு ரெக்டிஃபிகேஷனை, ஒரு ப்ரிவென்ஷனை செய்து கொள்ளத்தான் நவராத்திரமே வகுக்கப்பட்டது.

விஷ்ணுவுக்கும், ஈஸ்வரனுக்கும், மற்றுமுள்ள முருகன், கணபதி போன்றோருக்கெல்லாம் ஒன்றிரண்டு நாள்தான் இம்மட்டில் கணக்கு.

அம்பாள் தாய்மை கொண்டவளல்லவா? அதனால்தான், வஞ்சனை இல்லாமல் மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் ஒன்பது ரசங்களுக்கும் ஆதாரமான ஒன்பது சக்தியை வாரி வழங்கி, தன் பிள்ளைகளை ரட்சிக்க ஒன்பது நாட்களுக்கு நவராத்திரியை நமக்கு கொடுத்துவிட்டாள்.

இப்படிப்பட்ட நவராத்திரியை அந்த ஏழைப்பெண்ணும் கொண்டாடச் சொல்கிறார் பெரியவர்.

‘பெருசா கொலு வைக்கணும்னு அவசியமில்லை. பக்தியோட நாலு பொம்மை போதும். ஒரு பலகை மேல கோலம் போட்டு, அந்த பொம்மைகளை வெச்சு தினசரி விளக்கேத்தி உருக்கமாய் வழிபடு. சிரமப்பட்டாவது தினசரி ஒரு தானியத்துல சுண்டல் பண்ணிடு. அதை உன் கையால எல்லோருக்கும் விநியோகம் செய்.

கொண்டக்கடலை சுண்டல் தரும் போது, குரு பகவானோட அனுக்ரஹத்தை உடம்பானது உறிஞ்சிக்கற ஆற்றல் ஏற்படறது. பாசிப்பயறுல சுண்டல் தரும் போதும் இதேமாதிரி நடக்கறது. கிரகங்களோட ஆற்றல் மத்தவாளுக்கு கிடைக்க நாம காரணமாய் இருக்கறதால, கிரகங்களோட கருணை நம் வரைல அதிகரிக்கறது.

நம்ம ஜாதகப்படி க்ஷீணமாய் ஒரு கிரகம் இருந்தா, அது மருந்து சாப்பிட்ட உடம்பாட்டம் பலமடையறது. உடம்பு ஆரோக்கியமானாலே, மனசும் ஆகித்தானே தீரணும்?

இப்படி ஒன்பது நாள், ஒன்பது சக்தியை நாம ஏற்படுத்தறோம். நமக்குள்ளேயும் ஏற்படுத்திக்கறோம்’ – என்று அவர் கூற, அந்த பெண்ணும் தன்னால் முடிந்த விதத்தில் நவராத்திரியை கொண்டாட, அனுக்ரஹம் என்னும் அருள் அவள் வரையில் துளித்துளியாக சேரத் தொடங்கியது. மூன்று மாதங்களில் அவள் வாழ்வில் பெரிய மாற்றம். அவள் கணவனுக்கு உடல் நலம் பாதித்தது. டாக்டர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். கூடவே, இனி ஒரு வேளை குடித்தாலும் உயிர் போய்விடும் என்று செய்த எச்சரிக்கை, அவனை குடியின் பக்கமே போகவிடாதபடி தடுத்தது. குடி நிற்கவும் புத்தியும் தெளிவாகியது. நல்ல நேரம் வந்துவிட்டால், அது எல்லா சாகசங்களையும் செய்யத் தொடங்கிவிடும்.

குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள். பெரியவரையும் தன் கொலுவில் ஒரு கடவுளாக சேர்த்துக் கொண்டாள்.

கல்கத்தா சேட்ஜியின் பதினெட்டு புராண நூல் வெளியீடு மட்டுமே பரிகாரமல்ல; நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது.

உடனேயே அரசமரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்து பிள்ளை வந்துவிட்டதா என்று பரிசோதிப்பதுபோல, இந்த விஷயத்தில் பரிசோதனைகள் கூடாது.

ஆத்மார்த்தமாகவும் உருக்கமாகவும் செய்ய வேண்டியது, பின் ஆசையோடும் ஏமாற்றுவதற்காக செய்கின்ற ஒன்றாகவும் மாறி பரிகாரத்துக்குப் பதில் பெரும் பாவத்தை தந்துவிடும்.

‘இந்த நவராத்திரியின்போது நாம் குழந்தைகளாகிவிட வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்குத்தான் கோபமோ தாபமோ நிலையானது கிடையாது. உணர்ச்சிகள் வேரூன்றாமல் நாமும் குழந்தையாக மாறி, பக்தி புரியவேண்டும்.

உப நிஷதமும் ‘குழந்தையாய் இரு’ என்கிறது – என்னும் பெரியவர், அம்பாளின் முப்பெரும் அம்சங்கள் குறித்து சொன்னதையும் கேட்போம்.

சாஷாத் பராசக்தியை காத்யாயனியாகவும், மகாலக்ஷ்மியை பார்கவியாகவும், நாம் குழந்தைகளாக்கி, அந்த பாவத்திலேயே வழிபட்டால் நமக்கும் குழந்தைத் தன்மை சாஷாத்கரித்துவிடும். இந்த நாளில் வாட்டர் ஃப்ரூப் என்று சொல்வது போல், நாம் காம ஃப்ரூப், சோக ஃப்ரூப் என்று எல்லாமாக சாந்தமாக ஆய்வோம்.

குழந்தை ரூபத்தில் இருந்தாலும் ஞானப் பாலூட்டும் ஸ்ரீமாதாவாக இருக்கிற தேவி நமக்கு இந்த அனுகிரகத்தை செய்வாள்.

குழந்தையாக வந்த காத்யாயனியை தமிழ்நாட்டு கிராம ஜனங்கள் கூட நீண்ட காலமாக வழிபட்டு வந்திருக்கிறார்கள் என்பது என் யூகம். காத்தாயி என்கிற சொல் தான் காத்யாயனி என்று நினைக்கிறேன்.

பட்டாரிகை என்று பெரிய வித்யோபாசகர்கள் குறிப்பிடும் அம்பாளைத்தான், நம் கிராம மக்கள் பிடாரி என்று பூஜிக்கிறார்கள். பழைய செப்பேடுகளில் பட்டாரிகா மான்யம் என்பதுதான் பிடாரி மான்யம் என்று திருத்திக் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறே, கிராம ஜனங்களும் கூட சரஸ்வதியை நீண்ட காலமாக வழிபட்டிருக்கிறார்கள். பேச்சாயி, பேச்சாயி என்று சொல்கிற கிராம தேவதை பேச்சுக்கு ஆயியான வாய்க்தேவி சரஸ்வதியைத்தான் குறிப்பிடுகிறது.

கிராமத்து ஜனங்களை அம்பாள் புறக்கணித்துவிடவில்லை. அவர்களுக்கு ஏற்ப, போய் அவர்களிடம் அமர்ந்து அருள்பாலிக்கிறாள்.”- என்று அம்பாளுக்கும் துர்காலக்ஷ்மி சரஸ்வதிக்கும் பெரியவர் கூறிய விளக்கமாகட்டும், அவர் காட்டிய வழியாகட்டும் அவரை ஜகத்குரு என்று சொல்வது எவ்வளவு சரியான பதம் என்று எண்ணி நெகிழ வைக்கிறது



Sage of Kanchi

Varagooran Narayanan
 
அகண்ட ஆனந்தம் மனத்துக்கு இல்லை

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 179

அகண்ட ஆனந்தம் மனத்துக்கு இல்லை

ஆக, ஆரம்பித்த இடத்துக்கே திரும்ப வருகிறோம் – நமக்குள்ளே தினந்தினமும் நடக்கிற தேவாஸுர யுத்தத்திலே நல்ல வ்ருத்திகளான தேவசக்திகளை ஹதாஹதம் பண்ணும் கெட்ட வ்ருத்தி என்னும் அஸுர சக்திகளுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக இருப்பது ஆசைதான்.

உயர்ந்த ஸந்தோஷத்தைத் தருவதாக நமக்குத் தோன்றுகிற நல்ல ஆசைகள் கூட உண்மையில் துன்பம் தருபவைதான். ஏனென்றால், எப்பேர்ப்பட்ட ஆசையாயிருந்தாலும் அது ஒரு வித அரிப்புத்தான் ஆசை, ஆசை என்பது. மனஸுக்கு எடுக்கிற தாஹம் தான் ஆசை. ஆசையிருக்கிறதென்றால் மனஸ் என்று ஒன்று இருக்கிறது என்றே அர்த்தம். மனஸ் என்பது இருந்துவிட்டால் உபத்ரவம்தான். மனஸ் அத்மாவுக்கு த்விதீயமான வஸ்து; அதனால் பஹேதுவானது என்று பார்த்தோமே! இந்த மனஸ் என்கிற வஸ்துதான் அகண்டானந்தமான பரமாத்மா சிறுத்துக் குறுகி போய் ஜீவாத்மா என்று வேஷம் போட்டுக்கொள்ளும்போது இப்படி அதைச் சின்னதாகக் குறுக்க வைத்துக் கட்டுவது. தனி ஜீவன்கள், Individual -கள் என்று தங்களை அவர்கள் தெரிந்துகொள்வதே தனித்தனி மனஸ்களைக் கொண்டுதான். ஆனதால் மனஸ் என்பது பரமாத்மாவுக்கு வேறேயாகத்தான் எப்போதும் இருக்கமுடியும். ரொம்ப உயர்ந்த நிலையில்கூட அது பரமாத்மாவைத் தொட்டுக் கவிந்து கொண்டோ, அல்லது பரமாத்மாவின் சக்தி, கருணை முதலானவற்றை ஒரளவுக்குத் தனக்குள்ளும் நிரம்பிக்கொண்டோதான் இருக்கமுடியுமே தவிர, அப்படியே அவனுடைய அகண்டாகார ஸ்வரூபத்தோடு ஒன்றாகி, அவனுடைய அகண்டாநந்தத்தைத் தானும் அநுபவிக்க முடியாது. இந்த மனஸைப் பூராவும் அவனிடமே கரைத்து இல்லயென்றாக்கிக் கொண்டால்தான் சாச்வதமான அகண்ட ஆனந்தம் கிடைக்கும்.

வைகுண்டத்திலே, கைலாஸத்திலே பேரானந்தம் அநுபவிப்பதாகச் சொல்வதும்கூட மனஸை வைத்துக் கொண்டு பெறும் அநுபவம்தான். த்வைத விசிஷ்டாத்வைத ஸித்தாந்திகள் இது துக்கக் கலப்பேயில்லாத சாச்வத ஆனந்தம் என்று சொல்கிறார்கள். ஆனாலும்கூட அங்கே அவர்கள் முக்தர்களாகச் சொல்பவர்கள் பரமாத்மாவுக்கு வேறேயாக இருந்துகொண்டு, வேறுபட்ட மனஸால்தான் அவரை அநுபவிக்கிறார்களாதலால், நிறைந்த நிறைவு நிலையிலேயே நிரந்தரமாக இல்லாமல் குறைவுகளுக்கும், துக்கங்களுக்கும் எப்போதாவது ஒரு ஸமயத்திலாவது ஆளாகத்தான் செய்கிறார்களென்றே புராணங்களிலிருந்து தெரிகிறது. ஸாக்க்ஷாத் அம்பாள், மஹாலக்ஷ்மியிலிருந்து நாரதர், ஸநகாதிகள், ப்ருங்கி மஹர்ஷி மாதிரியான மஹா மஹா பெரியவர்களும்கூடத் தனியான ஒரு மனஸோடு பரமாத்மாவுக்கு வேறே மாதிரி பாவத்தில் இருக்குமபோது துக்கத்துக்கும் கோபத்துக்கும் ஆளாவது, சாபத்துக்கு ஆளாவது, பரமாத்மாவைப் பிரிந்து ரொம்பவும் துக்கிப்பது, பூலோகத்தில் பிறந்து பச்சாதாபப்பட்டு மிகவும் உக்ரமாகத் தபஸ் செய்து தங்களையே வருத்திக்கொள்வது என்றெல்லாம் அவஸ்தைப்படத்தான் வேண்டியிருக்கிறது என்று புராணக் கதைகளிலிருந்து தெரிகிறது. அதனாலேதான், மற்றப் பற்றுக்கள் (ஆசைகள்) விடுவதற்காகப் பரமாத்மா ஒருவனிடம் மாத்திரம் பற்று (ஆசை) வையுங்கள் என்று,

பற்றுக பற்றற்றான் பற்றினை – அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்று திருவள்ளுவர் சொன்னதற்கு மேலேயும் போய்;

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்.

என்று திருமூலர் சொன்னார்.

யுத்தம் தீர ஆசையை அழிக்க!

நமக்கு ஸந்தோஷம் தருவதாகத் தோன்றினாலும் உண்மையில் கஷ்டம் விளைவிப்பதுதான் என்பதாகச் சில ஆசைகளைப் பற்றி மாத்திரம் நமக்கே தெரிகிறது. உதாரணமாக, அரிக்கிறபோது சொறிந்துகொண்டால் ஹிதமாயிருக்கிறதென்று அப்படிப் பண்ணினால் அப்புறம் புண் ஜாஸ்தியாவது நமக்கு நன்றாகத் தெரிகிறது. அதனால் சொறிந்து கொள்ளாமல் கட்டுப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறோம். எல்லா ஆசையுமே அரிப்புத்தான். ஆசை என்பதே அரிப்புத் தான். அதன் பூர்த்திக்காகப் பண்ணுவதெல்லாமே சொறிந்து கொடுத்துப் புண்ணை ‘ஸெப்டிக்’ ஆக்குவதுதான்.

இதனால் என்ன ஏற்படுகிறதென்றால் ஆசையை அழித்தால்தான் உள்ளே நடக்கும் தேவாஸுர யுத்தம் தீரும், நமக்கு சாந்தி கிடைக்கும்.

எப்படி அழிப்பது?

நூறு, ஆயிரம், லக்ஷமாக இத்தனை ஆசைகள் இருக்கின்றனவே! ஒன்றை அடக்கினால் இன்னொன்று தலைதூக்குகிறதே! அந்த இன்னொன்றை அடக்கப்போனால் முதல் ஆசையே ‘நான் செத்தேனா பார்!’ என்று ‘ஸொரூபம்’ காட்டுகிறதே!

மரணத்தால் ஆசை அழியுமா?

‘ஸரி, இந்த உடம்பு இருப்பதால்தானே ஆசை ஏற்படுகிறது? ஆசையால் துன்பப்படுவது – துன்பப்படுத்துவது, ஆசையால் பயப்படுவது – பயமுறுத்துவது, ஆசையால் அவமானத்துக்கு ஆளாவது – அவமானத்துக்கு ஆளாக்குவது எல்லாம் உடம்பு உள்ளவரைதானே? செத்துப்போனவர்களுக்கு துன்பம் உண்டா, பயம் உண்டா, அவமானமுண்டா?’ என்று நினைத்து மரணத்துக்கு வேண்டிக்கொள்ளலாமா? குளம் குட்டையில் விழலாமா? சாண் கயிற்றைத் தேடலாமா?

ஊஹூம். இது ஸொல்யூஷன் (தீர்வு) இல்லை.

செத்துப் போனவர்களுக்கு ஆசையும் அதனால் ஏற்படும் பயம், அழுகை, அவமானம் முதலானதும் இல்லை என்று முடிவு பண்ணினது தப்பு. செத்துப்போனவர்கள் ஒரேயடியாகப் போய்விடவில்லை. உயிரோடிருந்தபோது பலவிதமான ஆசைகளுக்கு உட்பட்டு அவர்கள் பண்ணிய பாபங்களை உடம்பு போன பின்னும் நரகாதி லோகங்களில் அநுபவித்துவிட்டு பாக்கியை அநுபவிக்க இந்த லோகத்துக்கே அவர்கள் வந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

அதாவது, அந்த உடம்புதான் போச்சு. வேறே உடம்பு வந்துவிட்டது. அது மநுஷ உடம்பாகவே இருந்து மறுபடி பழையபடியே ஆசைகள் பட்டு அவஸ்தைகளைத் தேடிக்கொள்ளலாம். அல்லது ஒரு மாட்டின் உடம்பாகி ஏர்க்காலில் அவதிப்படலாம். குதிரையின் உடம்பாகி வண்டிபாரத்தை இழுத்துக்கொண்டு ஓடலாம். ஆக- உடம்பு, அதனால் வருகிற துன்பம் இரண்டையும் சாவினால் போக்கிக்கொண்டுவிட முடியாது.

அதிலும் தற்கொலையால் சாவு தேடிக்கொள்வது என்னும்போது, ப்ராண ஹத்தி என்று இதுவே பெரிய பாபமாகச் சேர்ந்து, இதற்காக வேறு மஹா கஷ்டமான தண்டனைகள் அநுபவிக்க வேண்டிவரும். தற்காலத்தில் சிலர் பெரிய தப்புக் கார்யம் பண்ணிப், ‘பிடிபட்டு விடுவோம்’ என்கிற ஸ்திதி உண்டானாலோ, அல்லது ஸஹிக்க முடியாத பெரிய துக்கம் எதுவாவது ஏற்பட்டாலோ ரிவால்வரை எடுத்துத் தங்களையே சுட்டுக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் ஸம்ஸாரத்தால் உண்டாகும் தீமைகளையும் துக்கங்களையும் போக்கிக்கொள்ள இது ஒரு வழியாகுமா என்றால், ஆகாது. ஸ்தூல சரீரத்தை அழித்துக்கொண்டாலும் அப்புறம் ஸூக்ஷ்மமாக ஏதோ ஒரு மாதிரியான மற்றொரு சரீரம் இருந்துகொண்டிருக்கும். நாம் பண்ணின கார்யம், எண்ணின எண்ணம் எல்லாவற்றுக்கும் காரணமாகவும், அவற்றை அநுபவித்த ஒன்றாகவும், சாவுவரை அநுபவித்தும் தீர்க்காமல் இன்னும் பாக்கி நிற்கும் அநுபவத்தை அடைய வேண்டியதாகவும், எண்ணின எண்ணங்களுடைய போக்குகள் மறுபடியும் அப்படியே எண்ண வைக்கிற விதத்தில் வேர் கொண்டு ஆஸ்பதமாகப் பற்றிக் கொண்டிருப்பதாகவும் ‘அந்தஃகரணம்’ என்பதன் ரூபமாக அந்த மற்றொரு சரீரம் இருந்துகொண்டிருக்கும். தற்கொலையால் ஸ்தூல சரீரத்தைப் போக்கிக்கொண்ட பிற்பாடும் அந்த சரீரத்தோடு சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும்.

நாமாக ஸூயிஸைட் பண்ணிப் போக்கிக் கொள்ளாமல் தானாக உயிர் போனால், ஜீவனின் ஸூக்ஷ்ம சரீரம் நரகம் அல்லது ஸ்வர்க்கத்தில் கர்மபலனை ஓரளவுக்கு அநுபவித்துவிட்டு, பாக்கியை அநுபவிக்க பூலோகத்திலேயே ‘எண்பத்துநாலுலக்ஷம் யோனி பேதம்’ என்னும் உயிரினங்களில் எதுவோ ஒன்றாகப் பிறக்கிறது. ஸூயிஸைட் பண்ணிக்கொண்டவனின் ஆவியோ நரகத்திலுள்ளதை விடக் கஷ்டமான அவஸ்தைகளை ஆத்மஹத்திப் பாபத்துக்காக இந்த லோகத்திலேயே அலையாய் அலைந்து அநுபவிக்கவேண்டும். நரகம் அல்லது ஸ்வர்க்கம், அப்புறம் மறுபடி பூமி என்பதற்கு முந்தி, ‘பேயாய் அலைவது’ என்றே சொல்கிறோமே, அப்படி ஒரே தவிப்புடன் அலையவேண்டும். அந்த ரூபத்தில் பசி தாஹம் முதலானவற்றைப் பூர்த்தி பண்ணிக்கொள்ளமுடியாமல் எவராவது ஒருத்தருடைய உடம்பைப் பிடித்து ஆட்டிவைத்துக்கொண்டு, இந்தப் பாபத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். வேப்பிலையால் வீறுவீறு என்று அடிவாங்கவேண்டும். இதோடு நிற்காது. மறுபடி ஜன்மா வரும். எந்தத் தப்பு வெளிவந்துவிடுமோ என்று பயந்து தற்கொலை செய்துகொண்டானோ, அல்லது எந்தத் தோல்வியைத் தாங்கமுடியாமல் சுட்டுக்கொண்டானோ, அல்லது எந்த வ்யாதிக் கஷ்டம் தாங்காமல் விஷத்தைச் சாப்பிட்டானோ அந்தத் தப்பு மாதிரியே ஒன்று அடுத்த ஜன்மாவில் அம்பலமாகி மானம் போகத்தான் போகும்; அல்லது அதே போன்ற தோல்வி அப்போது ஏற்படத்தான் செய்யும்., அதே மாதிரி வ்யாதி உபாதைப்படத்தான் செய்யும். அதனால் தற்கொலை மூலம் எதிலிருந்து ஒருத்தன் தப்புவதற்கு நினைக்கிறானோ அதனிடமிருந்து தப்புவதென்பது இல்லவே இல்லை. இதோடுகூடக் குட்டி போட்டுக் கொண்டு தர்கொலைக்குத் தண்டனையாக ஆவி ரூபத்தில் அநேக அவஸ்தைகள்!

இதனாலெல்லாந்தான் ஆத்மஹத்தி பெரிய பாபமென்று தர்ம சாஸ்த்ரங்கள் முடிவு செய்திருக்கின்றன. இக்காலச் சட்டப்படியும்கூட அது குற்றம் என்று வைத்திருக்கிறார்கள்.

படவேண்டிய கஷ்டங்களோடுகூட வேப்பிலை அடியும் வாங்குவதுதான் மிச்சம்.


Sage of Kanchi


Krish Ram
 
தர்ம மூர்த்தி

MAHAPERIYAVAA

தர்ம மூர்த்தி

DECEMBER 1, 2014





சர்வேஸ்வர ஸ்வரூபி, கலியுக நடமாடும் தெய்வம் ஸ்ரீமஹாஸ்வாமிகள் தமது 87 வருட மடாதிபத்யத்தில் செய்த தர்ம கார்யங்களில் மிகவும் முக்கியமானதாக கீழ்கண்டவற்றை படித்தறிந்தேன்.

1. கும்பகோணத்தில் அத்வைத சபா
2. திருவானைக் காவலில் வேத தர்ம பரிபாலன சபா
3. வேத தர்ஷண நிதி ட்ரஸ்ட்
4. திருவிடைமருதூரில் திருப்பாவை திருவெம்பாவை மாநாடு
5. பல இடங்களில் வேதபாடசாலைகளும், சம்ரக்ஷணமும்
6. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு தாடங்க பிரதிஷ்டைகள், கும்பாபிஷேகம்

7. திருவானைக்காவல் ஸ்ரீமடம் ஸ்ரீர்ணோத்தாரணம்
8. ஸ்ரீ கும்பகோண மடத்தில் ஸ்ரீர்ணோத்தாரணம்,
9. தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி கோவில் கும்பாபிஷேகம்
10. இராமேஸ்வரம் – அக்னி தீர்த்தக் கரையில் ஆதி சங்கர பகவத் பாதாள் மண்டபம் – ஸ்ரீமடம் நிர்மாணம், கும்பாபிஷேகம் 1963-ல்.
11. திருவிடைமருதூரில் மஹாதனத் தெருவில் உள்ள மடம் ஜீர்ணோத்தாரணம், கும்பாபிஷேகம் 1963-ல்.
12. காஞ்சிபுரத்தில் ஸ்ரீமடத்தில் ஜீர்ணோத்தாரணம், 16 கால் கருங்கல் மண்டபம், பாதுகை பிரதிஷ்டை

13. ஸ்ரீசைலத்தில் ஸ்ரீமடம், ஆச்சார்யாள் பிரதிஷ்டை
14. காஞ்சிபுரத்தில், சின்ன காஞ்சி, ஆனைக்கட்டித் தெருவில் உள்ள ஸ்ரீமடத்தைக் கண்டுப்டித்துக் காட்டியது.
15. காஞ்சியில் வியாஸ பாரத கலாசார சதஸ்
16. காஞ்சியில் 1008 பஜனை கோஷ்டிகளின் பஜனை ஸ்ரீமஹாபெரியவா முன்னிலையில் ஸ்ரீபெரியண்ணன் என்பவரால் நடந்தேறியது.
17. 1964-ல் கலவை பிருந்தாவன டிரஸ்ட், சஷ்டியப்த பூர்த்தி டிரஸ்டுகள்
18. காஞ்சியில் ஸ்ரீ சங்கரமடம்
19. காஞ்சியில் ஸ்ரீ காமகோடீஸ்வரர் கோயில்
20. அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் ஸ்ரீசங்கர மடம்
21. கயாவில் ஸ்ரீசங்கர மடம்
22. பத்ரிகாஸ்ரமத்தில் ஸ்ரீமன் பத்ரி நாராயணா கோவிலில் ஸ்ரீ ஆச்சார்யாள் ஸ்ரீ சங்கரர் சன்னதி யானை தந்தத்தில் பெரிய ஆச்சார்யாள் மூர்த்தி பிரதிஷ்டை
23. பூரி ஜகன்னாத்தில் ஸ்ரீ சங்கர மடம்
24. சென்னையில் அஷ்டலக்ஷ்மி கோவில்

25. ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம்
26. காஞ்சிபுரத்தில் 108 சிவாலயங்களில் பலவற்றைக் கண்டுபிடித்து கோவில் கட்டி, நித்ய பூஜைக்கு ஏற்பாடு செய்தது
27. கச்சிமூதூர் அர்ச்சகர் டிரஸ்ட்
28. 1944-ம் ஆண்டில் ஸ்ரீகாஞ்சி காமாக்ஷிக்கு கும்பாபிஷேகம் செய்தது
29. ஸ்ரீகாமாக்ஷிக்கு வெள்ளி ரதம் செய்தது
30. VRNT யின் கிளை, நிஷேப ட்ரஸ்ட்
31. வேதபாட நிதி ட்ரஸ்ட்
32. ஸ்ரீவித்யாரண்யாள் வேத பாஷ்ய ட்ரஸ்ட் – ஹம்பி பாடசாலை

33. உட்டங்கித வித்யாரண்யாள் ட்ரஸ்ட்
34. கன்னிகாதான டிரஸ்ட் (னுங்கம்பாக்கம்)
35. பிடி அரிசி திட்டம்
36. உத்திர சிதம்பர ஸ்ரீ நடராஜா கோவில்
37. மஹபூப் நகரில் சூர்யலக்ஷ்மி காட்டன் மில்லில் சிவன் கோவில்
38. ஏழை எளிய குடும்பத்தினரின் பெண்களின் கல்யானத்திற்காக பண உதவி, திருமாங்கல்யம் கொடுத்தல்

இப்படியாக பல்வேறு தர்ம கார்யங்களை நிறுவி இன்றும் தர்மம் தழைக்கும்படியாக அருள்மழை பொழியும் ஆச்சார்யாள் திருப்பாதம் தனை அனுதினமும் போற்றி, தர்ம நெறியோடு வாழ்வோமாக!
சாணு புத்திரன்

https://saimadhura.wordpress.com/tag/mahaperiyavaa/



 
கல்திரை

கல்திரை

பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.

மதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.

கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.

இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.

சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.

வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.

அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.

அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.

அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்……

உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!

48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.

திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.

இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை அதை. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதிபோடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.

சம்போ மகாதேவா!!

சேதப்படுத்தப்பட்ட சிவலிங்கத் திருமேனி சுவாமி சன்னதியில் விவரப்பலகையுடன் வைக்கப்பட்டு உள்ளது.


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/20/
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top