• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
New Jersey Swaminatha Bhagavathar

Swami-page.webp[video=youtube_share;7FOIIBV3fzw]https://youtu.be/7FOIIBV3fzw[/video]
 
Vijayadashami

Vijayadashami

As per Hindu religion, on this day in the Treta Yug, King Rama, also called Shri Ram, the seventh avatar of Vishnu, killed Ravana who had abducted Rama's wife Sita to his kingdom of Lanka. Rama, his brotherLakshmana, their follower Hanuman and an army fought a great battle to rescue Sita. The entire narrative is recorded in the epic Ramayana, a Hindu scripture.

Rama had performed "Chandi Homa" and invoked the blessings of Durga, who blessed Rama with secret knowledge of the way to kill Ravana. On the day of Ashvin Shukla Dashami, Rama defeated Ravana and rescued Sita. Thus it is termed as Vijaya Dashami. Based on the inferences from Valmiki’s Ramayana, Kalidas’s Raghuvamsa, Tulsidas’s Ram Charit Manas, and Keshavdas's Ram Chandra Yas Chandrika as well as common perception in India, Rama, Sita, and Lakshmana returned to Ayodhya on the 30th day of Ashvin (19–20 days after Vijayadashmi). To mark the return of Lord Rama, in the evening, the residents of Ayodhya lit their city with millions of earthen lamps (called Deepak). Since then, this day is celebrated in India as Deepawali or Diwali.

Many people perform "Aditya Homa" as a "Shanti Yagna" and recite Sundara Kanda of Srimad Ramayana for 5 days. These Yagna performances are thought to create powerful agents in the atmosphere surrounding the house that will keep the household environment clean and healthy. These rituals are intended to rid the household of the ten bad qualities, which are represented by 10 heads of Ravana as follows:

1. Kama vasana (Lust)
2. Krodha (Anger)
3. Moha (Attraction )
4. Lobha (Greed)
5. Mada (Over Pride)
6. Matsara (Jealousy)
7. Swartha (Selfishness)
8. Anyaaya (Injustice)
9. Amanavata (Cruelty)
10.Ahankara (Ego).

Some householders perform Yagnas thrice daily along with Sandhya Vandana, which is also called Aahavaneeya Agni, Grahapatya Agni or Dakshina Agni. In addition, the Aditya Homa is performed with the Maha Surya Mantras and the Aruna Prapathaka of the Yajurveda. These mantras are believed to keep the heart, brain and digestive functions in balance in the absence of adequate sunlight in the winter months.


Sage of Kanchi

Raman Kuppuswamy
 
ஆசையின் செயலும் ‘அதிஷ்டான’மும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 181

ஆசையின் செயலும் ‘அதிஷ்டான’மும்

அப்புறம் சொல்லிக்கொண்டு போகிறார், அதன் க்ரூர ரூபம், கார்யம் முதலானதுகளை, அக்னியை எப்படிப் புகை மறைக்கிறதோ, கண்ணாடியை எப்படி தூசி மறைக்கிறதோ, வயிற்றில் உள்ள சிசுவை எப்படி கர்ப்பப்பை மறைக்கிறதோ, ‘அப்படி காமம் ஞானத்தைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு மறைக்கிறது,’ என்று சொல்லிவிட்டு மறுபடி, ‘ஆமாண்டா அர்ஜுனா! ஞானிக்குப் பரம சத்ரு இதுதான். பூர்த்தியே பண்ணமுடியாமல் கொழுந்தவிட்டுக்கொண்டிருக்கும் ஆசைத் தீதான் மநுஷ்யனின் அறிவை அப்படியே சூழ்ந்து கொண்டிருக்கிறது’ என்கிறார்.

முதலில் அறிவுத் தீயை மறைக்கும் புகையாய் ஆசை இருக்கிறது என்றார். அப்புறம், இதுவே அக்னிபோல ஒருத்தனைத் தபிக்கச் செய்வதை நினைத்து, ‘அறிவை எரிக்கிற நெருப்புப்போல ஆசை பிடித்துக்கொண்டிருக்கிறது’ என்கிறார்.

இன்னமும் சொல்கிறார்:

எந்த வஸ்துவானாலும் அது தொழில் பண்ணவேண்டுமானால் ஏதோ ஒரு இடத்தில் ஊன்றி நிலைப்பட்டு நின்று அங்கேயிருந்துதான் கைவரிசையைக் காட்டவேண்டும். இப்படி நிற்கும் ஸ்தானத்துக்கு “அதிஷ்டானம்” என்று பெயர்.

‘அதிஷ்டானம்’ என்றவுடன் ஸ்ந்நியாஸிகளின் ஸமாதிகளுக்கு அப்படிப் பேர் சொல்வது நினைவு வரலாம். எதனால் இந்தப் பேர் என்றே கேள்வி எழலாம்.

சரீரத்தைவிட்டு ஸித்தியான பெரியவர்களுடைய அநுக்ரஹ சக்தியில் ஒரு கலை ப்ராணவியோகமான பிறகும் அவர்களுடைய சரீரத்திலே இருந்து கொண்டிருக்கும். அந்தப் பெரியவருடைய தேஹத்தைப் புதைத்து வைக்கிற இடத்தில் இந்த அநுக்ரஹ கலையானது ஊன்றி நின்று பக்தர்களுக்குப் பாயும்படியாக ஸ்தானம் ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதனால்தான் ஸமாதியை ‘அதிஷ்டானம்’ என்பது.

வழக்கத்தில் எப்படியிருக்கிறதென்றால், சில இடங்களில் ஸமாதியின் மேலே துளஸி வைக்கிறார்கள், சில இடங்களில் ஸமாதிக்கு மேல் சிவலிங்கம் ப்ரதிஷ்டை செய்கிறார்கள். துளஸி வைக்கப்பட்ட ஸமாதியை ப்ருந்தாவனம் என்றும் லிங்கம் வைக்ககப்பட்ட ஸமாதியை அதிஷ்டானம் என்றும் சொல்வதாக வழக்கு ஏற்பட்டிருக்கிறது. நம் மடத்து ஆசார்யர்களிலேயே கலவையில் ஸித்தியான இரண்டு பெரியவர்களுக்கு அங்கே துளஸி வைத்த ப்ருந்தாவனம் அமைந்திருக்கிறது, இளையாற்றங்குடியில் ஸித்தியானவருக்கு அங்கே சிவலிங்க ப்ரதிஷ்டையோடு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.

ஆசை தன்னை ஊன்ற வைத்துக்கொண்டிருக்கிற அதிஷ்டானம் என்ன என்று பகவான் சொல்கிறார். ஒன்றில்லை, மூன்று அதிஷ்டானங்கள். ஜீவனை ‘உண்டு – இல்லை’ என்று வதைப்பதற்காக அவனுடைய இந்திரியம், மனஸ், புத்தி மூன்றையுமே ஆசை ஆக்ரமித்துக்கொண்டு தனக்கு அதிஷ்டானமாக்கிக் கொண்டிருக்கிறது; அவனை மோஹத்திலே தள்ளி ஞானத்தை மறைக்கிறது என்கிறார்.

‘அர்ஜுனா! உன்னை நன்றாக அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டு இந்த ஆசைப் பாவியை (“பாப்மா” என்றே மறுபடி சொல்கிறார்) வெல்லு, கொல்லு’ என்கிறார்.

நன்றாக வர்ணித்துச் சொல்லிவிட்டால் போதுமா? கொல்ல முடியவில்லையே எதைப் பண்ணவே படாது என்று நினைத்து அதில் ஆசையை அடக்குகிறோமோ அதுவேதான் திமிறிக்கொண்டு கிளம்புகிறது?

அர்ஜுனனின் குறை

ஆசையை அடக்குவது என்பதும் மனஸை அடக்குவது என்பதும் ஒன்றுதான். ஏனென்றால் ஆசைகள் முளைக்கிற ஆதார ஸ்தானம் மனஸ்தான். அதை அடக்கவே முடியாமல் அது பலவந்தமாய் ஜீவனை இழுத்துக்கொண்டு போகிறதே என்று அர்ஜுனன் அழுகிறான்.*

சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி பலவத் த்ருடம் |
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம் ||

‘க்ருஷ்ணா! இந்த மனஸ் சஞ்சல மயமாயிருக்கிறதே; ஜீவனைப் போட்டுக் கலக்குகிறதே! (‘மாதி’ என்றால் கலக்குவது, கடைவது. ‘அம்ருத மதனம்’ என்பதில் வரும் ‘மத’ பாற்கடலைக் கடைந்ததைத்தானே குறிப்பிடுகிறது? ‘ப்ரமாதி’:ரொம்பவும் கலக்குவது. ஜீவனைப் போட்டுக் கடைந்து கலக்குகிறது மனஸின் எண்ணங்கள்.) இது ரொம்ப பலமாகவும் உறுதியாகவும் கலக்குகிறது. எப்படிக் காற்றைப் பிடித்து நிறுத்திவைக்க முடியாதோ, அப்படியேதான் இந்த மனஸையும் பிடித்து அடக்கி வைக்கமுடியாது என்றே எனக்குத் தோன்றுகிறது’ என்கிறான் அர்ஜுனன்.

‘தஸ்ய’ – இந்த மனஸினுடைய; ‘நிக்ரஹம்’ – அடக்கல்; ‘வாயோரிவ’ – காற்றைப் போல, அதாவது காற்றை அடக்கிவைப்பது போல; ‘ஸுதுஷ்கரம்’ – ஸாதிக்க முடியாத கார்யம் என்று, ‘மந்யே’ நினைக்கிறேன்.

கண்ணன் சொல்லும் உபாயம்

அழுகிற அர்ஜுனனிடம், ‘நீ சொல்கிறாற்போல மனோ நிக்ரஹம் கஷ்டமானதுதான். ஆனாலும் இது ஸாதிக்கவே முடியாதது இல்லையப்பா’ என்று பகவான் உத்ஸாஹப்படுத்திச் சொல்கிறார். அவன் சொன்னதை ஒப்புக்கொள்கிறாற் போலவே ‘ஸிம்பதெடிக்’க்காக ஆரம்பித்து அப்புறம் அவன் முடியாதது என்று கைவிடப் பார்க்கிற ஸாதனையை முடியும்படிப் பண்ண வழி சொல்லித் தருகிறார், ‘ஹோப்’ கொடுத்துச் சொல்கிறார்.

அஸம்சயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம் |

‘சலம்’ என்றால் சஞ்சலம்தான். சஞ்சலித்துக்கொண்டேயிருக்கும் மனஸை அடக்க முடியாதுதான். ‘துர் நிக்ரஹம்’ – நிக்ரஹம் செய்வதற்கு முடியாது. ‘அஸம்சயம்’ – இதிலே ஸந்தேஹமில்லை. ‘அர்ஜுனா (அர்ஜுனனை ‘மஹாபாஹு’ என்கிறார். மஹா வீரனாதலால் அவனுடைய தோள் வலியைக் குறிக்க ‘மஹாபாஹு’ என்று கூப்பிடுகிறார். வெளி யுத்தத்தில் போலவே உள் யுத்தத்திலும் அவன் மஹா வீரன் ஆகணும் என்று தார்பர்யம்.) ஸந்தேஹமில்லாமல் நீ சொன்னமாதிரிதான் மனஸ் சஞ்சலித்துக் கொண்டேயிருக்கிறது. அதை நிக்ரஹம் பண்ணுவது லேசில்லைதான்’ என்று, அவன் சொன்னதற்கு ஆமாம் போட்டுவிட்டு, அதற்குப் பரிஹாரமும் சொல்கிறார்.

ரொம்பவும் முக்யமான விஷயத்தைச் சொல்கிறார்: “அப்யாஸம், வைராக்யம் என்ற இரண்டில் தீவிரமாயிருந்தாயானால் மனோ நிக்ரஹம் பண்ணி விடலாம்” என்கிறார்.

‘எத்தனை திமிறினாலும், உன்னை திசை தப்பி எத்தனை தரம் இழுத்துக்கொண்டு போனாலும் ஸரி, அதற்காக மனஸைக் கட்டுப்படுத்த ப்ரயாஸை எடுக்காமல் விட்டு விடாதே. வெளியிலே ஓடுகிற அதை ஒவ்வொரு தரமும் மறுபடி உன் வழிக்கு இழுத்துக்கொண்டு வரப் பார். இப்படி விடா முயற்சியுடன் எதிரத்துப் போராடிக்கொண்டேயிருந்தால், அது ஒருநாள் அடங்கிப் பணிந்துபோக ஆரம்பித்துவிடும். எதிடமும் ஆசைவைக்கப்படாது என்ற வைராக்ய சிந்தை, எத்தனை வழுக்கிவிட்டாலும் ஊன்றி நிற்கஅப்யாஸம் செய்து கொண்டே இருப்பது – ஆகிய இந்த இரண்டால் முடிவிலே ஒரு நாள் ஜயித்துவிடலாம்’ – இப்படி பகவான் ஆறுதலாக பதில் சொல்கிறார்.

யதோ யதோ நிச்சரதி மநச் சஞ்சலம் அஸ்திரம்|
ததஸ்ததோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத்||

‘யதோ யதோ’ – எது எதை, அதாவது எந்தெந்த ஆசையை, முன்னிட்டு; ‘சஞ்சலம்’ – சஞ்சலித்துக்கொண்டேயிருப்பதும்; ‘அஸ்திரம்’ – எதிலும் நிலைப்பட்டு நிற்காததுமான; ‘மந:’ – மனஸானது, ‘நிச்சரதி’ – வெளியில் ஓடிக்கொண்டேயிருக்கிறதோ, ‘ததஸ்தத:’ – அந்த ஒவ்வொரு ஆசையிலிருந்தும், ‘ஏதத்’ – இந்த மனஸை, ‘நியம்ய’ – இழுத்து அடக்கி; ‘ஆத்மநி ஏவ’ (‘அத்மந்யேவ’) – ஆத்மாவிலேயே; ‘வசம் நயேத்’ – வசப்படுத்தி வைக்கவேண்டும். எத்தனை தரம் என்னென்ன ஆசைகளை முன்னிட்டு மனஸ் வெளியில் திரும்பத் திரும்ப ஓடினாலும் ஸரி, ஒவ்வொரு தரமும் அந்த ஆசை ஒவ்வொன்றிலிருந்தும் மனஸைத் திருப்பிக் கட்டுப்படுத்தி ஆத்மாவிலேயே அடங்கியிருக்கச் செய்யவேண்டும்.


Sage of Kanchi

Krish Ram
 
நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் -காஞ&#30

நவராத்திரி பற்றிய 50 சிறு குறிப்புகள் -காஞ்சி மஹா பெரியவா

சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிடைக்கும்.

நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா
சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி, போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.
அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலு வைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.
வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும்

நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் . ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,

எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை,
கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.


Sage of Kanchi

Krishnamoorthi Balasubramaniam
 
Navarathiri Special-Saraswathi Devi

Navarathiri Special-Saraswathi Devi

OCTOBER 21, 2015

saraswathidevi.png




Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy Navarathiri! These three days are dedicated for Saraswathi Devi. Here below Sri Periyava beautifully explains the divinity of Saraswathi Devi and Sarada Navaratri. Ram Ram.
ஸரஸ்வதி

ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)

காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். ‘பண்டிட்’ என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு எல்லாம்கூட இப்படிப்பட்ட பண்டிட்கள்தாம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே ‘சாரதா பீடம்’ என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.

நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம்.

இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு ‘சாரதா மடம்’ என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.

ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம்.

மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் ‘பல்லவேந்திரபுரி’யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.

‘மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது.

சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.

ஸரஸ்வதி பூஜா காலத்தை நினைக்கிறபோது, இந்த தாப சாந்தியைச் சொல்லும்போது, இதற்கு அநுகூலமாக இன்னொன்றுகூடத் தோன்றுகிறது. வெளி உலகம் எப்படியிருக்கிறதோ அது நம் மனஸையும் அப்படி ஆக்குகிறது.

பல பலவென்று விடிவதைப் பார்த்தால் நமக்கும் ஒரு உற்சாகம் உண்டாகிறது. மப்பும், மந்தாரமும், அழுகைத் தூற்றலாகவும் இருந்தால், நமக்கும் களையே இல்லாமல் என்னவோபோல் துக்கமாயிருக்கிறது. விடிவதற்கு முந்தின ப்ராம்ம முகூர்த்தத்திலும், ஸாயங்கால ஸந்தியிலும் வெளி உலகில் ஒரு சாந்தி பரவியிருப்பதால் அப்போது நமக்கும் மனசு அடங்கி தியானத்தில் உட்காரத் தோன்றுகிறது.

வெளியுலகம் இப்படித் தன்மயமாகும்போது, உள்ளத்தையும் தன் மயமாக்கப் பிரயாசை செய்தால், சாதாரணமாக மற்ற சமயங்களில் இருப்பதைவிட சுலபமாக மனசை நிறுத்தி, உள்ளும் புறமும் ஒன்றாகி, சாந்தத்தில் தோய்ந்திருக்க அநுகூலமாயிருக்கிறது. தினந்தோறும் வைகறை சந்தியையில் இப்படி இருப்பதைப் போல், ஒரு வருஷம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு குறிப்பிட்ட பக்ஷம் முழுவதுமே இப்படி மனோலயத்திற்கு வசதியாக இருக்கிற பருவம் எதுவென்றால், அது ஸரஸ்வதி பூஜையை ஒட்டிய காலம்தான். சீதோஷ்ணம் பரம சுகமாக, ஹிதமாக, வெயிலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கிற காலம் இது. சாந்தமான சூரியன், தாவள்யமான சந்திரிகை, வெள்ளை வெளேர் என்ற மேகக் கூட்டங்கள் எல்லாம் இருக்கிற காலம்.

இதிலே விசேஷம் என்னவென்றால் பாரத பூமி முழுவதற்கும் இதே மாதிரியான சீதோஷ்ண நிலை இந்த சரத் கால ஆரம்பத்தில் மட்டுமே இருப்பதுதான். மற்றப் பருவங்களில் பாரத தேசத்தின் ஒரு கோடியிலிருக்கிற பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் இன்னொரு கோடியிலுள்ள பகுதியின் சீதோஷ்ணத்திற்கும் ஏற்றத்தாழ்வு இருக்கும். பங்குனி, சித்திரை மாதங்களில் தமிழ் தேசத்தில் இருப்பதைவிட தெலுங்கு தேசத்தில் ஒரளவுக்கு ஜாஸ்தி உஷ்ணம். மத்யப்பிரதேசம், டில்லி இப்படிப்போனால் அங்கே நம் ஊரைவிட பத்து, பன்னிரண்டு டிகிரிக்குமேல் உஷ்ணமாயிருக்கும். இதேபோல் நம் நாட்டில் மார்கழி மாதத்தில் குளிருகிறது என்றால், இந்தக் குளிர் ஒன்றுமில்லை என்கிற மாதிரி, வடக்கே ஜலமே ஐஸாகப் போய்விடுகிறது. நம் சீமையில் ஒயாமல் மழை கொட்டுகிற ஐப்பசி, கார்த்திகையில் வடக்கே மழையில்லை.

பக்கத்திலேயே கேரளாவில் வைகாசி ஆனியில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டுகிறபோது, நம் ஊரில் கோடை மழை என்று ஏதோ கொஞ்சம் பெய்தாலும், ஒரே வெயிலாக வறட்சியாகவே இருக்கிறது. இதே சமயத்தில் விந்திய பர்வதத்தைச் சுற்றி மத்தியப்பிரதேசத்திலும் மான்ஸுன் மழை கொட்டுகிறது. இப்படி ஒவ்வொரு பிராந்தியத்தில் ஒவ்வொரு தினுஸாக இருக்கிற சீதோஷ்ணம் சரத்ருதுவின் ஆரம்பமான ஸரஸ்வதி பூஜா காலத்தில் தேசம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக 95 டிகிரிக்கு மேலே போய்ப் புழுங்காமலும் 75 டிகிரிக்குக் கீழே போய்க் குளிரில் நடுங்க வைக்காமலும், ரொம்பவும் ஹிதமாக, சுக சீதோஷ்ணமாக இருக்கிறது. இந்த சமயத்தில் காச்மீரத்திலிருந்து டில்லி, காசி, கல்கத்தா, பம்பாய், காஞ்சீபுரம், குடகு, கன்யாகுமாரி என்று எல்லா ஊர் Weather report -ஐயும் பார்த்தால் அதிகபட்ச, குறைந்த பட்ச டிகிரிகள் எல்லா இடத்திலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கிறது.

மற்ற சமயங்களில் ஒரு சீமைக்கும் இன்னொன்றுக்குமிடையே எட்டிலிருந்து பன்னிரண்டு டிகிரிவரை வித்தியாசம் இருந்தது போல் இப்போது இல்லை. சீதோஷ்ண ரீதியில் இந்த ஒரு சமயத்தில் நாம் வேறு வேறு என்று பிரிந்திராமல், அதாவது துவந்தம் போய் எல்லோரும் ஒரே மாதிரி நிலையில் சேர்ந்திருக்கிறோம்.

ஞானத்தினால் எல்லாம் ஒன்று என்று துவந்தத்தைப் போக்கி வைக்கிற வித்யா அதிதேவதையின் தெளிவான ஸ்வரூபம் போலவே இந்த சீதோஷ்ணம் இருக்கிறது. நம் தேசம் முழுவதும் இப்படி சமசீதோஷ்ண நிலையும், வெண்ணிறமும் சாந்தமும் அமையும்போது, வெளியுலகின் ஹிதத்தால் உள்ளுக்கும் சுலபத்தில் அந்த சமநிலையை உண்டாக்கிக்கொள்ள வசதியாக இருக்கிறது. இக்காலத்தில் இப்படிப்பட்ட குண விசேஷமே உருவெடுத்து வந்த ஸ்ரீ ஸரஸ்வதி தேவியின் ஆராதனமும் வருவதால். சகல ஜனங்களும் இதை எல்லாம் உணர்ந்து பூஜித்தால் ஞானமும் தெளிவும் பெற முடியும்.


ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.

ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன. திருவள்ளுவரும், பரமேசுவரனைப் பாத பூஜை பண்ண வைக்காத ஒரு படிப்பினால் என்ன பயன் என்று கேட்கிறார்.


கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?

அகங்காரம் எல்லாம் அடிபட்டுப்போய்ப் பரமாத்ம வஸ்துவுடன் சேருகிற ஞானத்தைத் தரவே சகல வித்யைகளும் ஆதியில் ஏற்பட்டிருந்தன. மற்ற அகங்காரங்கள் ஒரு பக்கம் இருக்க, ‘நாம் வித்வான்’ என்பதாக படிப்பினாலேயே ஒரு பெரிய அகம்பாவம் வந்துவிடும். இதனால்தான், நம் பூர்விகர்கள் வித்தையோடு, விநயத்தையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னார்கள்: வித்யா விநய ஸம்பன்னே!

இப்போது படிப்பு எல்லாம் லௌகிகத்துக்காகத்தான் என்று ஆகிவிட்டது. பலவிதமான வித்யைகள், ஸயன்ஸுகளைத் தெரிந்து கொண்டு வெகுசாமர்த்தியமாக பாபங்களைப் பண்ணிப் பிறரிடமிருந்து தப்பித்துக்கொண்டு பெருமைப்படுகிறோம். இப்போதைய படிப்பினால் வருகிற விஷய அறிவை ஞானம் என்று சொல்வதானால்,அஞ்ஞானம்தான் மோக்ஷ சாதனம் என்று கூடச் சொல்லி விடுவேன்.

ஞானம் ஒன்றே மோக்ஷ உபாயம் என்று சொல்ல வந்த அத்வைதத்துக்கு நான் பிரதிநிதி என்று பேர். ஆனால், இப்போது படித்தவர்களின் ‘நாகரிக’ தேசங்களில் நடக்கிற அகாரியங்களைப் பார்க்கிறபோது, எதுவுமே தெரியாமல், எழுத்தறிவே இல்லாமல், பரம அஞ்ஞானிகளாக இருந்துகொண்டு, பகவான் என்கிற ஒருத்தனை நம்பிப் பாவத்துக்குப் பயந்து, கள்ளங் கபடமில்லாமல் இருக்கிற ஆதிவாசிகளும் காட்டுக் குடிகளும்தான் ஈஸ்வரப் பிரசாதம் பெறுபவர்கள் என்றே தோன்றுகிறது. நாம்கூட அப்படி ஆகிவிட்டால் தேவலை போலிருக்கிறது.


ஆனால், இப்போதுள்ள வித்யைகளும் போதனை முறைகளும் வெற்று லௌகிகத்துக்கும் அகங்காரத்துக்குமே ஆஸ்பதமாக இருக்கின்றன என்பதால், ஆத்மார்த்தமான சாஸ்திரங்களை, கலைகளை, வித்யைகளைக் குறைவாகப் பேசக் கூடாதுதான். இவை எல்லாம் அகங்காரத்தைக் கரைத்து, லோக க்ஷேமத்தையும் ஆத்ம க்ஷேமத்தையும் தரவே நம் தேசத்தில் ஏற்பட்டிருந்தன.

இப்போதும்கூடப் புதிது புதிதாக விருத்தியாகியிருக்கிற வித்யைகள், டெக்னாலஜி ஆகியவற்றால் எத்தனையோ லோக க்ஷேமத்தை உண்டாக்கலாம். நல்லறிவை வளர்த்துக் கொள்ளலாம். எல்லா ‘எலிமென்டு’களுக்கும் மூலமான ‘எனர்ஜி’ ஒன்றேதான் என்று கண்டுபிடித்து விட்ட அடாமிக் (அணு) ஸயன்ஸிலேயே நன்றாக ஊறினால், அதுவேகூட ஆத்மிக அத்வைதத்துக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். ஒயாமல் ஆசை வாய்ப்பட்டுப் பறப்பாகப் பறந்து கொண்டிராமல் ஆன்றோர்கள் போட்டுத் தந்த வாழ்க்கை முறையை நாம் மேற்கொண்டு, வித்யைகளை அப்பியசித்து வந்தால், இன்றும் அவை புறத்துக்கு நல்லது செய்யும்; உள்ளுக்கு ஞானமும் தரும்.

மருந்தோடு பத்தியமும் முக்கியம். வித்யை என்கிற மருந்துக்கு அடக்கம், விநயம் என்கிற பத்தியம் அவசியம். இப்போது அது இல்லாததால் மருந்தே விஷமாகியிருக்கிறது. ஆனால், அடக்கத்தோடு பயின்றால் வித்யையே உண்மையில் ஞானம் தரும் அமிருதமாகும். அதனால்தான் ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி இரண்டு பேரையுமே வித்யா தேவதைகளாகவும் வைத்திருக்கிறார்கள். ஸரஸ்வதி, சகல கலாவாணி, வித்யா ஸ்வரூபிணி என்று எல்லோருமே அறிவீர்கள்.

‘சர்வ வித்யைகளுக்கும் பிரபு (ஈசானன்)’ என்றே வேதம் ஸதாசிவனான தக்ஷிணாமூர்த்தியைச் சொல்லுகிறது. பேச்சு, காரியம் அறிவது எல்லாம் அடங்கிப் போன நிலையிலிருக்கிற தக்ஷிணாமூர்த்தியே ‘மேதா தக்ஷிணாமூர்த்தி’யாகிப் பெரிய புத்திப் பிரகாசம், வாக்குவன்மை, வித்வ சக்தி எல்லாம் தருகிறார். ஸரஸ்வதி,

தக்ஷிணாமூர்த்தி இருவரும் அக்ஷமாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்திருக்கிறார்கள். அதற்குப் பேரே ‘கலை’. ‘கலை’ என்றால் எது வளருகிறதோ அது. வித்யைக்கு முடிவே இல்லை. ‘கற்றது கை மண் அளவு கல்லாதது உலக அளவு’ என்று ஸரஸ்வதியே விநயத்தோடு நினைக்கிறாளாம். இவள் தலையில் வைத்திருப்பது மூன்றாம் பிறை. அது பூரண சந்திரனாக வளர வேண்டும்.


ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.

இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது. தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன.


https://mahaperiyavaa.wordpress.com/2015/10/21/navarathiri-special-saraswathi-devi/
 
ஆத்மா: மாறுபாடு அற்றது

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 182

ஆத்மா: மாறுபாடு அற்றது

ஆத்மா என்கிற ஜீவனுடைய நிஜ ஸ்வரூபத்தில் விஷயத்தைக் கொண்டு வந்துவிட்டார்!

தனி ஜீவன் என்று குறுகி நிற்கிறபோது மனஸ்தான் ஜீவன் என்று தோன்றுகிறது. தனக்கென்று தனித்தனியாக இன்னின்ன லக்ஷணம் இருக்கிறது, அதாவது தான் சிவப்பு, தனக்கு இன்ன பெயர், இன்ன ஊர், இன்னார் அப்பா – அம்மா, இன்ன படிப்பு, இன்ன வேலை, இன்னின்ன குணம் (ஒருத்தன் முன்கோபியாயிருக்கிறான்; இன்னொருத்தன் சாந்த ஸ்வபாவியாயிருக்கிறான்; ஒருத்தன் குஷியாயிருக்கிறான்; இன்னொருத்தன் அழுமூஞ்சியாயிருக்கிறான். ஒருத்தன் கெட்டிக்காரனாயிருக்கிறான், இன்னொருத்தன் அசடாக இருக்கிறான். இப்படித் தனி ஆள் என்ற நிலையில் ஒவ்வொருவனுக்கும் குறிப்பிட்ட குணங்கள் இருக்கின்றனவே, அதிலே தனக்கு இன்னின்ன குணம்) என்பதாகக் கட்டுப்படுத்திக் காட்டும் லக்ஷணங்கள் எல்லாம் ஜீவனானவன் தன்னை மனஸோடு identify பண்ணிக்கொள்வதனால் ஏற்பட்டவைதான். அதாவது, ஜீவன் தன்னுடைய மனஸின் எண்ணங்களால் தன்னை எப்படித் தெரிந்து கொள்கிறானோ அதுவே தன்னுடைய நிஜ ஸ்வரூபம் என்று நினைக்கிறான்.

அவனே தூங்குகிறான், அல்லது க்ளோரோஃபார்ம் கொடுத்த மயக்கத்திலிருக்கிறான், அல்லது யோக நிஷ்டையில் அப்படியே ஸமாதியில் ஆழ்ந்து கிடக்கிறானென்றால் அப்போதெல்லாம் மனஸ் வேலை செய்யவில்லை. அவனுக்கு எந்தவிதமான எண்ணமும் இல்லை. தன்னைக் குறித்து தனித்ததாக எந்த லக்ஷணமும் இருப்பதாக அவனுக்கு அப்போது தெரிவதேயில்லை. இந்த நிலைகளில் ஸகல ஜீவன்களும் ஸமம்தான் – அரசன் ஆண்டி இரண்டு பேரும் ஒன்றுதான். தூங்குகிற அல்லது மூர்ச்சித்திருக்கிற அல்லது ஸமாதி நிலையிலுள்ள ராஜாவுக்குத் தன் ராஜரீக மஹிமை எதுவும் தெரியாது. அப்போது ஆண்டிக்கும் தன் தரித்ரத் திண்டாட்டம் தெரிவதில்லை. பலிஷ்டனான ஒரு வஸ்தாத், ரொம்பவும் துர்பலனான ஒரு நோஞ்சான், A -யிலிருந்து Z -வரை டிகிரிகள் போட்டுக்கொள்ளும் மஹாமேதாவி, சுட்டுப் போட்டாலும் படிப்பு ஏறாத நிரக்ஷரகுக்ஷி- இப்படி எவரானாலும் தங்கள் தனி குணம், லக்ஷணம் எதுவும் இல்லாமல், அனைவரும் ஒரே ஸ்திதியில் இருப்பதாக இந்த மனஸற்ற நிலை இருக்கிறது. மனஸின் வேலையில்லாமல் தூங்குகிறவனுக்குத் தன் பேர், ஊர், தனக்கு ப்ரியமானவர்கள், விரோதமானவர்கள் ஏதாவது தெரியுமா? தான் ஆணா பெண்ணா, கிழமா குழந்தையா என்பதெல்லாம் கூடத் தெரிவதில்லை. மனஸ் வேலை செய்யும்போது தனித்தனி லக்ஷணங்களோடு ஒருத்தருக்கொருத்தர் நூறாயிரம் வித்யாஸத்தோடு இருக்கிற அத்தனை கோடானு கோடிப் பேர்களும் அது வேலை செய்யாத ஸமயத்தில் ஒரு வித்யாஸம்கூட இல்லாமல் ஒன்றாகவே இருக்கிறார்கள் -ஆனாலும் இருக்கிறார்கள்; லக்ஷணங்கள் என்ற கட்டுப்பாடுகள் இல்லாத நிஜமான “நானாக” இருக்கிறார்கள்.

இதுதான் முக்யமான விஷயம். தூக்கம், மூர்ச்சை, ஸமாதி ஆகிய நிலைகளில் ஒருத்தன் செத்துப் போய்விடவில்லை. உயிரோடுதான் இருக்கிறான். அப்போதும் இவனுக்குள்ளே ஒன்று இருந்து கொண்டிருக்கிறதே, அதுதான் ஆத்மா.

அதற்கு சாவே கிடையாது. அதற்கு மாறுதலும் கிடையாது. மாறுதல் என்பதும் ஒரு தினுஸில் சாவுதான் – யோசித்துப்பார்த்தால் புரியும். “சாவு” என்பது “இல்லாமல் போவதுதானே?” “பொய்யாய்ப் போவது” தானே? பூ காயாய் மாறுகிறது, காய் பழமாய் மாறுகிறது, புழு குளவியாய் மாறுகிறது என்றெல்லாம் சொல்லும்போது அந்தப் பூ, காய், புழு எல்லாம் இல்லாமல் போய்தான் அவற்றின் இடத்தில் காயும், பழமும், குளவியும் வந்திருக்கின்றன. அதாவது, வளர்ச்சி என்று சொல்கிற மாறுதலுக்குள்ளே ஒரு அழிவு அல்லது சாவு இருக்கிறது; ஒரு ரூபம் அழிந்துதான் இன்னொன்றாக வளர்ந்து உருவாகிறது.

நம் உடம்பு மாறுகிறது. குழந்தையாயிருந்த உடம்பு வேறே; நடுத்தர வயஸுக்காரனின் உடம்பு வேறே. எத்தனையோ விதத்தில் மாறி, வளர்ந்து குழந்தையின் உடம்பு மத்யம பிராயத்தினனின் உடம்பாகிறது. அதற்கப்புறம் ஜரை (மூப்பு) வருகிறது. இதுவரை வளர்ச்சியால் மாறிய உடம்பு இனிமேல் தேய்வினால் மாற ஆரம்பிக்கிறது. தோல் மாறிச் சுருங்குகிறது. தலைமயிர் மாறி நரைக்கிறது. நமக்கு அப்படித் தெரியாவிட்டாலும், ப்ரதிக்ஷணமும் உடம்பு மாறிக்கொண்டேதானிருக்கிறது என்று டாக்டர்களும், ஃபிஸியாலஜிக்காரர்களும் சொல்கிறார்கள். அதாவது- உடம்பை “நான்” என்று நினைக்கிறோமாயினும் அது க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக்கொண்டு, அதாவது செத்துப் போய்க் கொண்டிருக்கிறது! அப்படியானால் போன க்ஷணம் செத்துப்போய்விட்ட உடம்பை இந்த க்ஷணமும் “நான்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே, இது எப்படி? போன க்ஷணம் என்ன? நாற்பது, ஐம்பது வருஷம் முந்தி நடக்கக்கூடத் தெரியாமல் இருந்த குழந்தையுடம்பிலிருந்து இன்றைக்கு இருக்கிற உடம்புவரை மாறிமாறி – அதாவது செத்துச் செத்து – உண்டான அத்தனை உடம்புகளையும் ஒரே “நானு”டையதாக நினைக்கிறோமே இது எப்படி?

இப்படியேதான் மனஸை எடுத்துக்கொண்டாலும், அது ஓயாமல் சஞ்சரித்துக் கொண்டேயிருப்பதைத்தான் இத்தனை நாழி சொன்னேன். அதாவது ஓயாமல் மாறிக்கொண்டு, செத்துக்கொண்டு இருக்கிறது. போன ஸெகன்ட் அதற்குத் துக்கம்; இந்த ஸெகன்ட் ஸந்தோஷம்; அடுத்த ஸெகன்ட் கோபம். மனஸின் வளர்ச்சியும் அறிவின் வளர்ச்சியும் குழந்தைப் பிரயாத்திலிருந்து எத்தனை வித்யாஸமாக மாறி இருக்கிறது? அப்புறம் ரொம்ப வ்ருத்தாப்யத்தில் இவையே தேய்ந்து ஓய்ந்தும் போய்விடுகின்றன. அதாவது மாறுதல் என்கிற அழிவின் ஓட்டம் நிற்பதே இல்லை. மாறுபாட்டை ‘விகாரம்’ என்பார்கள். விகாரம் என்றால் கோரம், குரூபம் என்று தமிழில் அர்த்தம் பண்ணிக்கொள்கிறோம். காரணம், மாறுபடுகிறபோது அப்படி மாறுபாடு காண்கிற வஸ்துவின் ரூபம் நசித்துப் போவதுதான்! ஒரு வஸ்து நாசமாகிக் கிடந்தால் அது பார்ப்பதற்கு ரொம்பவும் விகாரம்தானே? ஆனாலும் இங்கே நான் சொன்ன எக்ஸாம்பிள்களிலெல்லாம் ஒரு வஸ்து நசிப்பதோடு முடியவில்லை; இன்னொன்றாக அது பரிணமிக்கவும் செய்கிறது. பூ நசித்ததோடு முடியாமல் காயாகிறது. காய் நசித்ததோடு முடியாமல் பழமாக ஆகிறது. புழு நசித்ததோடு முடியாமல் குளவியாகிறது. உயிர்தத்வம், உயிர்தத்வம் என்னும் எதுவோ ஒன்று பூக்கும் அடிப்படையிலிருந்து கொண்டு அந்த ரூபத்தை அழியப்பண்ணியே காயாக்கி, அந்தக் காய்க்கும் அடிப்படையாயிருந்து கொண்டு அதைப் பழமாக்குகிறது. உயிரோடு மரத்திலே அந்தப் பூ ஒரு அங்கமாய் ஒட்டிக்கொண்டிருப்பதால் இப்படி நடக்கிறது. அதுவே மரத்திலிருந்து ஒரு பூவை நாம் பறித்து விட்டால் அது வாடிச் செத்துப் போவதோடேயே முடிந்து போகிறது. அப்போது பூ காயாவதில்லை. புழுவின் ஆதாரமாக உள்ள உயிர்தத்வம் அந்தப புழு ரூபத்தைக் கொன்ற பின்னும் அதே உயிராதாரமாக அதனிடத்தில் புதிதாக உண்டாக்கிய குளவியிடம் இருக்கிறது. புழுவை நாம் நசுக்கிப்போட்டால், அல்லது ஒரு குருவி எடுத்துத் தின்றுவிட்டால் அது குளவியாகாமல் ஓரேயடியாய் அழிவடைகிறது.

இப்படியே நம் உடம்பும் மனஸும் அழிந்து அழிந்து புதுப்புது ரூபம் எடுத்துக்கொண்டேயிருக்கும்போது அத்தனைக்கும் அடிப்படையாக இருக்கிற உயிர்த் தத்வம்தான் ஆத்மா. உயிர்த் தத்வம் என்றால் மூச்சு இல்லை. மூச்சு போன பின்னும் ஆத்மா அழிவதில்லை. மூச்சைக்கொண்டு உடம்பு வாழும்படியாகச் செய்யும் உயிருக்குயிரான தத்வமே ஆத்மா. அதுதான் “நிஜ” நாம். போன நிமிஷம் இருந்து, இந்த நிமிஷம் இல்லாமலாகிவிட்ட உடம்போ, மனஸோ எப்படி நிஜ நாமாக இருக்கமுடியும்? அதுதான் க்ஷணத்துக் க்ஷணம் பொய்யாகி விடுகிறதே! இம்மாதிரி மாறுதல்கள் இல்லாமல், அதாவது நிர்விகாரமாக, எப்போதும் ஒரே போலவே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாதான் நிஜ “நான்.” உடம்பும் மனஸும் பல தினுஸாய் மாறினாலும், அத்தனை நிலைகளிலும் “நான்” என்று இருக்கிற பாவம் மட்டும் கொஞ்சங்கூட மாறாமலே தானே இருக்கிறது? அதனால் அந்த நிலைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்த “நான்” என்ற அடிப்படையான ஆத்மாவை மட்டும் பிரித்துப் பார்த்தால் இதுதான் நமது நிஜ ஸ்வரூபம் என்று ஆகிவிடுகிறது.

உடம்பைப் பற்றிய ப்ரக்ஞை இல்லாமல், மனஸின் ஓட்டமும் இல்லாமல் ஆழ்ந்து தூங்கும்போது, மூர்ச்சை போட்டுக் கிடக்கும்போது, ஸமாதி நிஷ்டை கூடியிருக்கும் போது அப்படித்தான் ஆத்மா மாத்திரம் இருக்கிறது.

அது மாறுபடாத வஸ்து. குழந்தையாயிருந்த போது இருந்த “நான்” என்ற நினைப்புக்கும் இப்போதுள்ள “நான்” என்ற நினைப்புக்கும் கொஞ்சமாவது வித்யாஸமிருக்கிறதா? இல்லையே! விஷயம் தெரியாதபோது, விஷயம் தெரிந்த பிற்பாடு, வியாதியுள்ள போது, ஆரோக்யமாயிருக்கிற போது, தரித்ரப்பட்ட போது, பணம் வந்ததற்குப் பிற்பாடு – இப்படி சரீரம், மனஸ் இவை பலவிதங்களில் கஷ்ட ஸுகங்கள் படுகிறபோதும் அந்த இரண்டின் நிலைகள் பலதினுஸாக மாறிக்கொண்டே இருந்தாலும், அத்தனையிலும் “நான்” என்ற பாவம் மாத்திரம் முழுக்க ஒரே விதமாகத்தான் இருக்கிறது. மாறிவிட்டவற்றை, இனியும் மாறிக்கொண்டே இருக்கப் போகிறவற்றை “நான்” என்ற சொல்வதற்கில்லை. அத்தனை நிலைக்கும் ஆதாரமாயிருந்து கொண்டு, “ஸூத்ரே மணிகணா இவ” என்று பகவான் (கீதை. 7-7) சொன்னபடி, பல மணிகளையும் ஒரே ஜபமாலையாகக் கோத்துக் கொடுக்கிற சரடு மாதிரி, அத்தனை மாறுபட்ட நிலைகள் அததுவும் தனியே சிதறிப்போய் நசித்துவிடாமல், தொடர்புப்படுத்தி ஒரு வாழ்க்கையாகக் காட்டிக்கொடுக்கிற ஆத்மாதான் நிஜத்தில் நாம்.



Sage of Kanchi

Krish Ram
 
maitrIm bhajata, akhila hrit jaitrIm |

maitrIm bhajata, akhila hrit jaitrIm |

10428476_10153670573599244_3638283007629241218_n.jpg


maitrIm bhajata, akhila hrit jaitrIm |

Atmavad Eva parAnn api pashyata |
yudhham tyajata, spardhAm tyajata |
tyajata parEShu akrama-AkramaNam ||

jananI prithivI kAma-dukhArtE |
janako dEvah sakala dayALuh |
'dAmyata, datta, dayadhvam' janatA |
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm ||
shrEyO bhUyAt sakala janAnAnAm ||

Maithreem Bhajatha Akila Hrith Jeththreem

- Serve with Friendship and Humility, which will conquer the Hearts of Everyone.

Atmavat Eva Paraan api pashyata

- Look upon others similar to yourself.

Yuddham Tyajata

- Renounce War

Spardhaam Tyajata

- Renounce unnecessary Competition for Power

Tyajata Pareshwa akrama aakramanam

- Give up Aggression on others' properties which is wrong

Jananee Prthivee Kaamadughaastey

- Mother Earth is big enough and ready to give us all we desire like a Kaamadenu

JanakO Deva: Sakala Dayaalu:

- God, Our Father, is very Compassionate to All

Daamyata - So, Restrain yourself

Datta - So, Donate your wealth to others

Dayathvam - So, Be Kind to others

Janathaa: - Oh People of the World

Sreyo Bhooyaath Sakala Janaanaam

- May All People of this World be Happy and Prosperous.

Sreyo Bhooyaath Sakala Janaanaam

- May All People of this World be Happy and Prosperous.

Sreyo Bhooyaath Sakala Janaanaam

- May All People of this World be Happy and Prosperous!

*****

It is exactly 49 years today since Maitreem Bhajatha, the immortal poem composed by Mahaswamigal, was rendered at the United Nations on October 23rd, 1966 on the occasion of the UN day, by Bharat Ratna Smt. M.S. Subbalakshmi!

The tune for the song was composed by Shri Vasant Desai and he was paid Rs. 501 by Shri T. Sadasivam, MSS' husband, in 1966!


Sage of Kanchi

Panchanathan Suresh
 
Invitation for Annabishekam in Gangaikonda Cholapuram – Oct 27, 2015

Invitation for Annabishekam in Gangaikonda Cholapuram – Oct 27, 2015

23-10-2015

Please attend this event – if not possible, pray from wherever you are and attend nearby Sivan Kovil to receive blessings.


வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம். அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது.

பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.
சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் .

அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம். ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர். சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர். காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, சென்னை திருமயிலை முண்டககன்ணீயம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்

அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.
Om Nama Shivaya!


Please open the link to view complete invitation


https://mahaperiyavaa.files.wordpress.com/2015/10/gkcpuram1.jpg
 
நிஜ’ ஆத்மாவும் பொய் வேஷ மனஸும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 183

‘நிஜ’ ஆத்மாவும் பொய் வேஷ மனஸும்

‘நிஜம்’ என்பதை ‘உண்மையானது’ என்று நாம் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். ‘நிஜம்’ என்பதற்கு நிஜமான அர்த்தம், ‘தனக்கே உரிய ஸ்வபாவம்’, ‘தன் உண்மை இயல்பு’ என்பதாகும். இரண்டு அர்த்தத்திலும் ஆத்மாதான் நிஜ நாம். அதை அறியாத நாம் மனஸின் பொய் வேஷத்தில் நம் ஸ்வபாவத்தைத் தெரிந்து கொள்ளாமலிருப்பவர்கள்தான். மனஸை நாமாகவே நினைத்துவிடுகிற அளவுக்கு அது பெரியே வேஷம் போட்டு ஏமாற்றிவிடுகிறது.

ஒரு வேஷமில்லை, மாறிக்கொண்டே இருக்கிற பல வேஷங்கள்! பழநியில் (தண்டாயுதபாணிக்கு) கிடுகிடு வென்று ஒரு அபிஷேகத்துக்கு மேல் இன்னொரு அபிஷேகமாகப் பண்ணித் திரைபோட்டு அலங்காரம் பண்ணித் திறந்து காட்டுவார்கள். ஒரு அலங்காரத்திலே ஆண்டிப்பண்டாரமாக நிற்பார்; கொஞ்ச நேரத்தில் இன்னொரு அபிஷேக, அலங்காரமாகித் திரையை விலக்கும்போது பார்த்தால் ராஜாவாகக் காட்சி கொடுப்பார்; அதற்கப்புறம் இன்னொரு அலங்காரத்தில் வேடரூபத்தில் தர்சனம் தருவார். அதே மாதிரிதான் நம் வேஷமும் மாறிக்கொண்டே இருக்கிறது. பிறந்ததிலிருந்து (கருவாய் உருவனாதிலிருந்து, இன்னும் பின்னே போனால் எத்தனையோ ஜன்மத்துக்கு முன்னாலிருந்து) நம் உடம்பும் மனஸும் மாறிக்கொண்டே இருக்கிறதென்றால் ஒவ்வொரு மாற்றமும் ஒரு வேஷந்தானே? இருந்தாலும், ஒரு துணியும் போட்டுக்கொள்ளாமல், மல மூத்ரங்களை அடித்துக்கொண்டு, செருப்பு, துடைப்பக்கட்டை எதுவானாலும் ‘ஹாவு ஹாவு’ என்று கடித்துக்கொண்டு ‘ஹா, ஹூ’ என்று விளையாடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தையதோன் இன்றைக்கு எத்தனையோ நாசூக்கு நாகரிகம் பார்க்கிற நாம் என்பதாக ஒரு “நான்-எண்ணம்” அன்றிலிருந்து இன்றுவரை அறாத, மாறாத தொடரிழையாக இருந்துகொண்டேயிருக்கிறது. இந்த எண்ணத்துக்கு அடியில் நமக்கு உயிராதாரமாக இருப்பதுதான் ஆத்மா. அன்றைக்குக் குழந்தை வேஷத்தில் இருந்தவனும் இன்றைக்கு இப்போது நாமுள்ள இந்த வேஷத்திலிருப்பவனும் ஒரே ஆஸாமி என்று நமக்குத் தெரிந்து, மற்றவர்களுக்கும் தெரிவது அத்தனை வேஷத்துக்கும் ஆதாரமாக மாறாமலுள்ள அந்த ஆத்மாவினால்தான்.

ஸினிமா, ட்ராமாவிலே பல வேஷங்களில் ஒரு நடிகன் வருகிறான். ஒன்றில் அவன் ராமனாக வரலாம். இன்னொன்றில் ராவணனாக வரலாம். ஒன்றில் பணக்காரனாகவும் இன்னொன்றில் தரித்ரனாகவும் வரலாம். இப்படி வேஷம் மாறுகிறதென்றாலும் வேஷம் போட்டுக் கொண்ட ஆஸாமி ஒருத்தன்தான். அப்படியே நம்முடைய வாழ்க்கை நாடகத்தில் நாம் போட்டுக்கொள்ளும் பல வேஷங்களில் ஒரு வேஷமாக இல்லாமல், இத்தனை வேஷமும் போட்டுக்கொள்கிற அந்த ஒரு நிஜ ஆஸாமியாக இருப்பது ஆத்மாதான். வேஷங்கள் பல இருக்கின்றன என்பதாலேயே, வேஷமாயில்லாத ஒரு நிஜ ஆஸாமியும் இருப்பதால்தான் இந்த வேஷங்கள் அவனுக்கு ஏற்பட முடிகிறது என்று ஆகிவிடுகிறது.

வேஷத்தைக் கலைத்துவிட்டு, அந்த ட்ரெஸ், மேக்கப் எல்லலாவற்றையும் எடுத்துவிட்டு ஆஸாமி தன் வீட்டில் இருக்கிறாற்போல், ஆத்மாவானது மனஸ், உடம்பு முதலிய உடுப்பும் ஹரிதாரமும் இல்லாமல் ஸுஷுப்தியிலும் (தூக்கத்திலும்) நிஷ்டையிலும் இருக்கிறது. அப்போது உடம்போடு, மனஸோடு பட்டுக்கொள்ளாமல், தனியாயிருப்பதானால் ஒரே சாந்தமாய் இருக்கிறது. ஒரு கார்யமும் எண்ணமுமில்லாமல், இவற்றால் ஏற்படும் இழுபறிப் போராட்டம், அதாவது தேவாஸுர யுத்தம் இல்லாமல் ஜீவன் இருப்பது அப்போதுதான். ஆசையும், அதனால் ஏற்படும் அவஸ்தையுமில்லாமல் ஜீவன் இருப்பது மனஸின் ஆட்டமில்லாமல் ஆத்மா மட்டும் இருந்து கொண்டிருக்கும் நிலையிலேதான். ப்ரசாந்த நிலை என்கிற உசந்த அமைதி நிலை அதுதான்.

ஆத்மாவினாலேயே மனத்தின் இயக்கம்

ஆனால், விசித்ரம் என்னவென்றால், சாந்தமயமான இந்த ஆத்மா இல்லாமல், சாந்தியே தெரியாத மனஸுக்கு வேலை செய்கிற சக்தி இல்லை. மனஸின் வேலை என்பது என்ன? எதையாவது நினைப்பது, ஆசைப்படுவது. நினைப்பும் ஆசையும் இல்லாததாக ஆத்மா இருந்தாலும் அந்த உயிர்த் தத்வம் இல்லாமல் மனஸ் நினைக்க முடியாது. மனஸின் நினைப்புக்களை (குறிப்பாக ஆசைகளை) ஒட்டித்தான் சரீரம் வேலை செய்வது. உடம்பைப்பலவிதமாய் வேலை வாங்குவது மனஸ்தான். ஆனால் அந்த, மனஸும் வேலை செய்வது ஆத்மாவின் சக்தியால்தான். ஆனால், ஆத்மாவோ தனியாய் உள்ளபோது “சக்தி” என்பதற்கு இடமே கொடுக்காததாக, ஒரே சாந்த மயமாகத்தான் இருக்கிறது. “ஆத்மசக்தி” என்று தற்காலத்தில் பத்திரிகைகளிலும் ப்ரஸங்கங்களிலும் ரொம்ப அடிபடுகிற வார்த்தைகூட யோசித்துப் பார்த்தால் ஸரியானதில்லைதான். இன்னொன்றை (நல்லதாகவோ, கெட்டதாகவோ) பாதிப்பதாக ஒன்று உள்ளபோதுதான் அதன் “சக்தி” பற்றிய பிரஸ்தாவமே வரமுடியும். எதனோடும் ஸம்பந்தப்படாமல் தான் பாட்டுக்கு சாந்தமயமாய் இருக்கிற ஆத்மாவில் “சக்தி”க்கு இடமில்லை.

“ஸம்பந்தப்படவில்லை என்கிறீர்கள், நீங்கள்தானே கொஞ்சம் முன்னாடி மனஸ், உடம்பு எதுவானாலும் அவை வேலை செய்ய ஆத்மாதான் ஆதாரம் என்றீர்கள்?” என்று கேட்கலாம்.

மாயை

வாஸ்தவம். ஆத்மா இல்லாமல் எந்த இயக்கமும் இல்லை. ஆனாலும் ஆத்மா எதனோடும் நேராக ஸம்பந்தப்படவில்லை. இதைத்தான் மாயை என்பது. எத்தனை யோசித்தாலும் இது புரிபடாது. எதிலும் ஸம்பந்தப்படாவிட்டாலும் ஸம்பந்தப்பட்டாற்போல மாயா விலாஸத்தால் ஆத்மா இருந்து கொண்டுதான் இத்தனை கூத்தையும் நடத்துகிறது!

இதை ஏதோ கொஞ்சம் புரியவைப்பதற்காக ஓரிரு த்ருஷ்டாந்தம் சொல்வார்கள். அதாவது, ஸூர்யன் இருப்பதால்தான் இத்தனை செடி கொடிகளும், வ்ருக்ஷங்களும் வளர்ந்துகொண்டும், புஷ்பித்துக்கொண்டும், பழுத்துக்கொண்டும் இருப்பது. ஸூர்யன் இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது. அதற்காக, ஸூர்யனேதான் திட்டம் போட்டு இவற்றை எல்லாம் உண்டாக்கி நடத்துவதாகச் சொல்லமுடியுமா?

வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்டாயிருந்தால் எந்தக் கார்யமும் செய்ய முடிவதில்லை. விளக்கு ஏற்றி வைக்கிறோம். அதன் வெளிச்சத்தில் ஒருத்தன் புராணம் படிக்கிறான், இன்னொருத்தன் ஏதோ மனைஸக் கெடுக்கும் நாவல் படிக்கிறான். வெளிச்சத்தின் துணையினால் பலபேர் பலவிதமான நல்லதும் கெட்டதுமான கார்யங்களைச் செய்கிறார்கள். அதனால் இத்தனைக்கும் விளக்குதான் ஜவாப்தாரி என்று சொல்வதா? ஆனாலும் அந்த தீபம் இல்லாவிட்டால் இந்தக் கார்யம் எதுவம் நடக்கமுடியாது. இப்படித்தான் ஆத்மாவின் நேர் தூண்டுதல் அல்லது கர்த்ருத்வம் இல்லாமலே அதன் ஸாந்நித்ய விசேஷத்தால் மட்டும் மனஸ் வேலைசெய்வதும், சரீரத்தை வேலை வாங்குவது என்று உபமானம் சொல்கிறார்கள்.




Sage of Kanchi

Krish Ram
 
மஹாபாரத கதை சுருக்கமாக...

மஹாபாரத கதை சுருக்கமாக...

மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.

குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.

மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்

சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.

இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.

அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.

இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்துகொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள்தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.

திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்துவைக்கிறார் பீஷ்மர்.

திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன்(தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

குந்திக்கு ஒரு முனிவர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை முயற்சித்துப் பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன்தான்.

கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும்போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக்கொடுக்கிறார்.

திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி இறக்கிறார்.

பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.

பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.

சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை)யுதிஷ்டிரனை அதில் கலந்துகொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.

இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.

போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் 100 பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அந்தக் குழந்தைதான் பரீட்சித்து.

பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.


Sage of Kanchi

Raman Kuppuswamy
 
இருக்கும் நிலையும், செய்யும் நிலையும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 184

இருக்கும் நிலையும், செய்யும் நிலையும்

மனஸானது நினைப்பு என்ற வேலையில்லாமலும், சரீரம் ஓடியாடிச் செய்யும் வேலையில்லாமலும் தூங்குகிறபோது அல்லது ஸமாதி நிலையிலிருக்கும்போது ஜீவன் அந்த ஆத்மாவாகவே இருக்கிறான் என்று சொன்னேன்.

அது இருக்கிற நிலை. மனஸும் உடம்பும் வந்தவிட்டதோ, உடனே அந்த ‘இருக்கிற’ நிலை போய், ‘செய்கிற’ நிலை வந்துவிடுகிறது. இவை இல்லாதபோது ஆத்மா ஏதாவது செய்ததா? இல்லை. எதுவுமே செய்யவில்லை. வெறுமனே இருந்துகொண்டு மட்டும் இருக்கிறது. இதைத்தான் ‘கேவல ஸ்திதி’ என்பது. “கேவலம்” என்றால் மட்டமானது என்று அர்த்தமில்லை. எதனாலோ இப்படி (அர்த்தம்) வந்து விட்டது. அந்த வார்த்தைக்கு ஸரியான அர்த்தம், இன்னொன்றின் கலப்பில்லாமல், தன்னன்தனியாக ஸ்வச்சமாக இருப்பது என்பதே. இப்படி “கேவல”மாக ஆத்மாவைப் பிரித்து அதிலே நிலைத்திருக்கும் அநுபவம்தான் “கைவல்யம்.” கைவல்ய பதவி, கைவல்ய மோக்ஷம் என்று கேள்விப்படிட்டிருப்பீர்கள். அப்படியென்றால், மனஸின் பந்தமும் அதனால் ஏற்படும் ஸம்ஸார பந்தமும் இல்லாமல் விடுபட்டுத் “தான்” மட்டும் கலப்பற்று நிற்கிற சாச்வதாநுபவம் என்று அர்த்தம்.

மோக்ஷம் என்பதை ஒவ்வொரு ஸித்தாந்தம் ஒவ்வொரு பெயரில் சொல்லியிருக்கும். அத்வைதிகள் அதை ஆத்ம ஸாக்க்ஷாத்காரம் அல்லது ப்ரஹ்ம ஸாக்க்ஷாத்காரம் என்கிறோம். சைவர்களும், வைஷ்ணவர்களும் சிவ ஸாயுஜ்யம், விஷ்ணு ஸாயுஜ்யம் என்பார்கள். புத்தர் ஒரு தீபம் அணைந்து போய்விட்டாற்போல ஸகலமும் அழிந்து போய்விட்ட “நிர்வாணம்” என்கிறார். ந்யாய – வைசேஷிக ஸித்தாந்திகள் துக்கம் என்பதே இல்லாததான “அபவர்க்கம்” என்பார்கள். ஜைன மதத்திலும், யோக சாஸ்த்ரத்திலும் “கேவல ஸ்திதி”, கைவல்யம்” என்றே மோக்ஷத்தைச் சொல்லியிருக்கிறது.

இப்படி வெறுமனே “இருந்துகொண்டு மட்டும் இருக்கிற நிலை” போய், மனஸ் முளைத்து “செய்கிற நிலை” ஏற்பட்டு விட்டால் உடனே அனர்த்த பரம்பரை அத்தனையும் புற்றீசல் மாதிரிப் புறப்பட்டு விடுகின்றன.

ஆசைப் பசியின் விளைவுகள்

மனஸ் வந்துவிட்டால் உடனே அதற்கு ஆசைகள் என்ற ஆயிரக்கணக்கான பசிகள் ஏற்பட்டு, அதைத் தீர்த்துக் கொள்வதில் கோபம், லோபம், பொய், பொறமை, அழுகை, பயம், எல்லாமும் பட்டாளமாக வந்துவிடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால் அதுதான் இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்று என்று ஆசைப் பூர்த்திக்கான கார்யங்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகத்தான் நாம் செய்கிற இத்தனை கார்யங்களும் என்றாலும், இந்தக் கார்யங்களினால் அதிகபக்ஷமாக அடையக்கூடிய ஸந்தோஷங்களுங்கூடத் தற்காலிகமாக இருந்து மறைந்துதான் போகின்றன. எதுவுமே கலப்படமில்லாத ஸந்தோஷமாக இல்லாமல் கையோடேயே ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது.

“பக்ஷணம் சாப்பிட்டால் ஸந்தோஷமாயிருக்கிறது, வயிற்றுவலியும் வருகிறது” என்பது வயிற்றுப் பசி விஷயத்தில் மட்டும்தான் என்று இல்லை. கண்ணின் பசி, காதின் பசி, சரீரப்பசி, எண்ணத்தின் பசி, பணப்பசி எல்லாவற்றிலும் இதே தான் நடக்கிறது. குழந்தை விளையாடிப் பார்த்தால் ஸந்தோஷமாயிருக்கிறது. அதற்கு ஒரு ஜ்வரம் வந்துவிட்டால் இந்த ஸ்ந்தோஷத்தைப்போல் நாலு மடங்கு கவலை ஏற்படுகிறது. நிறையப் பணம் வந்தால் ஸந்தோஷமாயிருக்கிறது, அதே ஸமயத்தில், திருட்டுப் போயிடப் போறதே! டாக்ஸை உசத்திவிடப் போறானே! எவனாவது டொனேஷன்’ கேட்டுண்டு வந்துடப் போறானே” என்றெல்லாம் பல தினுஸான கவலையும் பயமும் உண்டாகிறது. உத்யோகம் பண்ணுவது, குழந்தை குட்டி பெற்றுக்கொள்வது, பணம் சேர்ப்பது, க்ளப்புக்குப் போவது ஸினிமாவுக்குப் போவது என்றிப்படி-இன்னும் என்னென்ன செய்கிறோமோ அவை எல்லாமும் – ஸந்தோஷம் வேண்டும், ஆனந்தம் வேண்டும் என்பதற்காகவே ஆனாலும், ஒவ்வொன்றாலும் உண்டாகிற ஸந்தோஷத்தோடு கூட அதை விடவும் ஜாஸ்தியாக துக்கம், விசாரம், பயம், ஆத்திரம், அவமானம், பொறாமை, அஹங்காரம் எல்லாமும் உண்டாகின்றன. அப்படியாவது இந்த ஆனந்தங்களில் ஏதாவது ஒன்றையாவது சாச்வதமாகப் பிடித்து வைத்துக்கொள்ளமுடிகிறதா என்றால் அதுவும் இல்லை.

ஏதோ ஒன்றின் மேல் ஆசை உண்டானவுடன் அதை எப்படி அடைவது என்ற கவலை பிறக்கிறது. இன்னொருத்தன் அதை அடைய முயற்சி செய்கிறானென்றால், போட்டி போடுகிறானே என்று கோபம் வருகிறது. அதை அவன் அடைந்துவிட்டால் பொறாமை, நாம் அடைந்து விட்டால் திமிர் – அவனை அவமானப்படுத்தத் தோன்றுவது – இப்படியாக, ஆசையின் நிகர விளைவாக, ஏதோ ஒரு தோஷத்தை ஸம்பாதித்துக் கொள்கிறோம். ஆசைப்பட்ட வஸ்துவை அடைந்தபின் அல்ப ஸந்தோஷம். அப்புறம் அது தேய்ந்து மறைந்து போய் இன்னொரு வஸ்துவுக்காக இதே மாதிரிப் பறப்பும் தோஷங்களை ஸம்பாதித்துக்கொள்வதும்.

ஆசை வைத்த எதையோ ஒன்றை அடைவதற்காகவே க்ஷணநேரம் சும்மாயில்லாமல் கார்யம் செய்கிறோம். தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு மனஸ் புறப்பட்டதோ இல்லையோ இந்தக் கார்யப் பிசாசு பிடித்துக்கொண்டு சாந்தம் என்ன, நிம்மதி என்ன, நிறைவு என்ன என்றே தெரியாதபடி ஆட்டிவைக்க ஆரம்பிக்கிறது. நடு நடுவிலே ஏதோ கொஞ்சம் ஆசை ஈடேறி, பிறக்கிற நிம்மதியும் த்ருப்தியும் போன சுவடு தெரியாமல் அத்ருப்தி ப்ரவாஹத்தில் எங்கேயோ அடித்துக்கொண்டு போய்விடுகிறது.



Sage of Kanchi

Krish Ram
 
கொள்ளுவதும் தள்ளுவதும்

தெய்வத்தின் குரல் (நான்காம் பாகம்) 185

கொள்ளுவதும் தள்ளுவதும்

ஒன்றைக் கொள்ளுவதற்காகச் செய்யும் முயற்சியில் கஷ்டம்; அதை நமக்கென்று (வைத்துக்) கொண்டிருப்பதிலேயே எத்தனையோ கஷ்டம்; அது கைவிட்டுப் போனாலும் கஷ்டம். கொள்ளுகிறதால் ஏற்படும் இந்தக் கஷ்டங்களோடேயே கைகோத்துக் கொண்டு, தள்ளுவதால் ஏற்படும் அநேக கஷ்டங்களும் சேருகின்றன. எந்தக் கார்யமானாலும் ஒன்றைக் கொள்ளுவது (ஸம்பாதிப்பது) , இன்னொன்றைத் தள்ளுவது (விலக்குவது) இரண்டும் சேர்ந்து சேர்ந்தே வரும். இல்லாததைக் கொண்டு வரவேண்டும்; வேண்டாமென்பதைத் தள்ளவேண்டும். உடம்பு நன்றாயிருக்கச் சாப்பிடவும் வேண்டும். விஸர்ஜனம் பண்ணவும் வேண்டும் என்றிருக்கிறமாதிரிதான். போக்கிரி வேலைக்காரனைத் தள்ள வேண்டும், நல்ல வேலைக்காரனைக் கொண்டுவரவேண்டும், சத்ருக்களைப் போக்க வேண்டும், மித்ரர்களை அடைய வேண்டும். பணத்தைக் கொண்டுவர வேண்டுமென்றால், அந்த முயற்சிக்கு இடையூறாக வருகிற எல்லாவற்றையும் தள்ளவேண்டும். எல்லா ஆசைக்கும் இப்படியே.

இப்படிக் கொள்ளுவது, தள்ளுவது இரண்டாலும் உபத்ரவம். (உட்) கொண்ட ஆஹாரம் ஜெரிக்காமல் உபத்ரவப்படுத்துகிறது; அல்லது மறுபடி அதே மாதிரி வேண்டும் என்ற அரிப்பை ஏற்படுத்துகிறது. விஸர்ஜனம் ஆகாவிட்டால் வியாதி உண்டாக்குகிறது; அல்லது ஒரேயடியாகப் “போய்”, கால் கை ஓய்ந்து படுக்கும்படிப் பண்ணுகிறது. தள்ளின வேலைக்காரன் நம் கையை காலை உடைத்துப்போட வேண்டும் என்று கருவிக்கொண்டு போகிறான். அவனிடம் பயப்படுகிறோம். ‘கொண்ட’ வேலைக்காரன் இன்க்ரிமென்ட் கேட்கிறான்; ஸ்ட்ரைக் செய்வேனென்று பயமுறுத்துகிறான். ஒரு காலத்தில் கொண்டவனையே இன்னொரு காலத்தில் தள்ளவேண்டியதாகிறது. முதல் நாள் ‘கொண்ட’ ஆஹாரத்தைத்தானே மறுநாள் விஸர்ஜனமாகத் தள்ளுகிறோம்?

சத்ருவிடம் பயப்படுவது போதாதென்று மித்ரர் ரொம்பவும் உறவு கொண்டாடிக்கொண்டு வந்து விடப்போகிறாரே என்று அதைவிட பயப்பட வேண்டியிருக்கிறது. (நம்மைப் பற்றி அவர்களுக்கும் இதே மாதிரி இருக்கலாம்!) ஆக, கொண்டதையே தள்ளும்படி ஏற்படுகிறது.

இப்படிப் பார்த்துக்கொண்டே போனால் கார்யம் செய்வதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது.

கார்யமே இல்லாமல் வெறும் ஆத்மா மட்டும் இருக்கும்போது எத்தனை நன்றாயிருக்கிறது? நமக்கு ஸமாதி நிஷ்டை பற்றித் தெரியாவிட்டாலும் நித்ரை பற்றித் தெரியும். அந்த நித்ரை எத்தனை ஆனந்தமாயிருந்தது? ஒரு கார்யமும் இல்லாமல், மனஸும் இல்லாமல் எத்தனை நிம்மதியாயிருந்தது? ஒரு ராஜாகூட, ஸகல போக்யங்களிலும் அலுத்துப்போய் தன் ராஜரிகப் பெருமை எதுவுமில்லாத நித்ரையில் விழவேண்டுமென்று தினமும் நினைக்கத்தானே செய்கிறான்? அது எதனால் என்றால் ஆத்மாவாக இருக்கும்போது கொள்ளுவது, தள்ளுவது என்ற இரண்டும் இல்லாததால்தான். ஆத்மாதான் நிஜ நாம் என்று பார்த்தோம். நம்மை நாமே கொள்ளுவது என்பது எப்படி ஸாத்யம்? இனிமேல்தான் நாம் நம்மைக் கொள்ளவேண்டுமென்றால் இப்போது நாம் யாராகவோவா இருக்கிறோம்? நாம் எப்படி நாமாக இல்லாமலிருக்கமுடியும்? நாம் எப்படி யாரோவாக இருக்கமுடியும்? – இந்த இரண்டுமே ஸாத்யமில்லை. அதே மாதிரி நம்மையே நாம் எப்படித் தள்ளிக்கொள்ளமுடியும்? முடியுமானால் தள்ளுவது யார்? தள்ளிய பின் மிஞ்சக்கூடியது யார்? நம்மைத் தவிர நம்மிடம் எதுவும் இருக்கவே முடியாதாதலால், ஆத்மாவைத் தள்ளவோ, தள்ளியபின் மிஞ்சி நிற்கவோ எவரும் இருக்கமுடியாது. நம்மை நாமே தள்ள முடியாது, கொண்டு வரவும்முடியாது. நாம் நாமாக இருந்துகொண்டே இருக்கிறோமாதலால், புதிதாகக் கொண்டு வரமுடியாது.

அம்பாளை இப்படிப்பட்ட ஆத்ம ஸ்வரூபமாக வைத்துத்தான் (லலிதா) ஸஹஸ்ரநாமத்தில் அவளுக்கு ஹேயோபாதேய வர்ஜிதா என்று ஒரு பெயர் சொல்லியிருக்கிறது. “ஹேயம்” என்றால் தள்ளப்படுவது. “உபாதேயம்” என்றால் கொள்ளப்படுவது, தள்ளவும் முடியாதவளாக, கொள்ளவும் முடியாதவளாக இருப்பவள் “ஹேயோபாதேய வர்ஜிதா.” நம்மைத் தவிர வேறாக இருப்பவற்றைத்தான் கொள்ளவும், தள்ளவும் ஓயாமல் கார்யம் செய்து வீணாகிறோம். நாமாகவே இருப்பதற்குக் கார்யம் வேண்டாம். நாமாகவே இருக்கும் போது கார்யத்தின் தொல்லையே இல்லை.

அதனால்தான் தூக்கத்திலே அத்தனை ஸெளக்யம், சாந்தி. ஆசையின் பிடுங்கல், மனஸின் அரிப்பு இல்லாமல், தேவாஸுர யுத்தம் என்றேனே, அது இல்லாமல் நாம் நிம்மதியாயிருப்பது தூக்கத்தில்தான். நமக்குத் தகுதி இல்லாவிட்டாலும் பகவான் பரம கருணையால் தினமும் ஏழெட்டு மணி இந்த சாந்த நிலையை அநுக்ரஹம் பண்ணுகிறார். ஒருகால், பிறரிடம் கருணையால் நாம் அவர்களுக்கு இந்த ஏழெட்டு மணியாவது உபத்ரவம் பண்ணாதிருக்கவே நம்மைத் தூங்கப் பண்ணுவதாகவும் இருக்கலாம்!

தூக்கமல்ல வழி

அப்படியானால், தேவாஸுர யுத்தமில்லாமல், மனஸ் இல்லாமல், அதிலிருந்து முளைக்கும் ஆசை இல்லாமல் நாம் சாந்தமாக இருக்க வழி தூங்கிக் கொண்டேயிருப்பதுதானா? நிறையத் தூக்க மாத்திரை வாங்கி வைத்துக்கொண்டு, முழித்துக்கொள்ளும் போதல்லாம் போட்டுக்கொண்டு மறுபடி தூங்கிவிடலாமா?

அது ஸரியில்லை.

நல்ல தூக்கத்திலே மனஸின் க்ருத்ரிமம் இல்லை, ஆத்மா மட்டும் இருக்கிறது என்றாலும், ‘ஆத்மாநுபவம்’ என்கிற ஆனந்தமான சாந்தமான நிலையாக நாம் அதைத் தெரிந்து கொண்டு தூக்கத்தின் போது அநுபவிக்கிறோமா என்ன? இல்லை. முழித்துக்கொண்ட பிற்பாடு “ஸுகமாகத் தூங்கினேன்; நிம்மதியாயிருந்தது” என்று சொல்லத் தெரிகிறதே ஒழிய, தூங்கும்போது அந்த ஸுகமோ, நிம்மதியோ நமக்குத் தெரியவில்லை. ஏதோ மரக்கட்டை மாதிரி கிடக்கிறோம். இப்படி வெறும் ஜட நிலைக்கு நம்மைத் தாழ்த்திக் கொள்வது நம்மையே நாம் அவமரியாதை பண்ணிக்கொள்வதுதான். வேறு யாராவது நம்மை “ஜடமே” என்று கூப்பிட்டால் அவமானம், கோபம் படுகிறோமே, நம்மை நாமே அப்படி பண்ணிக்கொள்ளலாமா? ஸ்ருஷ்டி என்ற பெரிய விஷயத்தையே ஏளனப்படுத்துவதாக ஒரு மநுஷ்யன் தன்னை எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டிருக்கும் ஜட ஸ்திதிக்குத் தாழ்த்திக் கொள்ளக்கூடாது.

ஜட நிலைமைக்கு அப்புறம் ஓரறிவிலிருந்து ஆறறிவு என்று ஸ்ருஷ்டி க்ரமம் உயர்ந்துகொண்டே போவதில் மநுஷ்யன் உச்சாணியல் இருக்கிறான். இந்த ஆறறிவால் இவனுக்கு ஏகப்பட்ட உபத்ரவங்கள், ஹிம்ஸைகள் ஏற்படுவது வாஸ்தவந்தான். ஆனால், அதற்காகப் பேடி மாதிரி, ஒருவன் தன்னை நபும்ஸகனாக்கிக் கொள்கிற மாதிரி, இதுகள் எல்லாவற்றையும் சக்தியிழக்கப் பண்ணி ஜடமாக்குவது கொஞ்சங்கூட அழகில்லை. ஆறறிவுகளால் ஹிம்ஸை, உபத்ரவம் வந்தாலும் எத்தனையோ நல்லதும் பண்ண முடிகிறதோ இல்லையோ? உசந்த தத்வ விசாரணை, ஸங்கீதம், சில்பம், பொது ஜன ஸேவை, அன்பு, த்யாகம், இப்படி எத்தனையோ நல்லவற்றிலும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்களையும் மனஸையும் செலுத்த முடிகிறதோல்லியோ? இப்படிச் செய்ய முயலவேண்டும். அப்புறம், ஆறறிவுக்கு மேலே ஒரே அறிவாக ஆக, ஞான விசாரம் செய்யவேண்டும்; ஆறறிவுக்குக் கீழே ஜடநிலைக்குப் போகப்படாது.


Sage of Kanchi

Krish Ram
 
உபநயனம் செய்விப்பதை தள்ளிப்ப்போடக்கூடாது - காஞ்சி மஹா பெரியவாளின் ஆக்ஞை

உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit (கீழ் வரம்பு) , பதினாறு வயசு upper limit (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸ¨ரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல.

இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு டிலே செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள். பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது. கலியாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனால் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலம் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கலியாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

இதிலே ஒரு வேடிக்கை, அல்லது பெரிய கஷ்டம், தர்ம சாஸ்திரங்களில், ஸ¨த்ரங்களில் சொல்லியுள்ள ரூல்களை மனம் போனபடி மீறுகிறபோதே, அங்கங்கே எப்படியோ பழக்கத்தில் வந்துவிட்ட சில விஷயங்களைப் பெரிய சாஸ்திர ரூல் மாதிரி நினைத்துக் கொண்டு அநுஸரித்து வருகிறார்கள். உதாரணமாக அக்காள் கல்யாணத்துக்கு இருக்கும் போது தம்பிக்குப் பூணூல் போடக்கூடாது;ஒரே ஸமயத்தில் மூன்று பிரம்மச்சாரிகள் ஒரு வீட்டில் இருக்கக் கூடாது என்கிறது. போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டு, பிள்ளைகளுக்கு உரிய காலத்தில் உபநயன ஸம்ஸ்காரம் செய்விக்காமல் இருக்கிறார்கள். ஆதாரமான தர்ம சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கிற வயசு வரம்பை இம்மாதிரி லெனகிகமான வழக்கங்களை முன்னிட்டு மீறுவது ஸரியல்ல.

உபநயன ஸம்ஸ்காரத்தை எந்தக் காரணத்தை முன்னிட்டும் தள்ளிப் போடவே கூடாது. கல்யாணத்திலே பண ஸம்பந்தத்தைக் கொண்டு விட்டு அதற்காக கால தாமஸம் பண்ணுவது தப்பு.

கல்யாணத்திலாவது தவிர்க்க முடியாமல் 'ஷோ'அம்சங்கள் சேர்ந்துவிட்டன என்கலாம். நாம் வேண்டாமென்றாலும் பிள்ளையகத்தார் வேண்டும் என்றால் இந்த ஆடம்பரங்களைப் பண்ணித்தான் ஆகவேண்டும். இதற்குப் பணம் சேர்க்க வேண்டும். இதற்காகக் கால தாமஸம் பண்ண வேண்டியிருக்கிறது. அதோடு கூடக் கல்யாணம் என்பதில் வரன் என்று ஒருத்தனைத் தேடிப் பிடித்து, நமக்கு அவனைப் பிடித்து, அவன் வீட்டாருக்கும் நம் ஸம்பந்தம் பிடிக்க வேண்டியதாக இருக்கிறது. வரன் வேட்டையில் காலம் செலவிட வேண்டியதாகிறது.

பூணூல் விஷயம் இப்படியில்லை. இதை ஏன் ஆடம்பரமாகப் பண்ணவில்லை என்று எந்த ஸம்பந்தியும் நம்மை நிர்பந்திக்கப் போவதில்லை. மாப்பிள்ளை தேடுகிறதுபோல் இதில் வெளியே யாரையோ தேடிப்போய் பரஸ்பர ஸம்மதத்தைப் பெறவேண்டியும் இருக்கவில்லை. ஆதலால் உரிய காலத்தில் ஒரு பிள்ளைக்குப் பூணூல் போடாமலிருப்பதற்கு எந்த ஸமானதானமும் சொல்வதற்கில்லை. அதை எந்த விதத்திலும் மன்னிப்பதற்கேயில்லை.

அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது, வெறும் vanity, ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு இந்தச் செலவை எவ்வளவு தள்ளிப்போடலாமோ அப்படிச் செய்வதற்காக காலம் கடத்துவதை எவ்வளவு கண்டித்தாலும் போதாது.

அதாவது சாஸ்திரத்தில் இருப்பனவற்றோடுகூட, அவற்றுக்கு முரணில்லாத குலாசார, தேசாசாரங்களையும் பின்பற்ற வேண்டுமே ஒழிய, சாஸ்திரப் பிரமாணத்தை விட்டுவிட்டு, அதற்கு மாறுதலாக ஏற்பட்டு விட்ட பழக்கங்களைக் கடைபிடிப்பது என்று வைத்துக் கொள்ளக் கூடாது.

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. 'அது காம்யோபநயனம்'எனப்படும். 'காம்யம்'என்றால் ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு ஏற்பட்டானதற்குப் பிறகு உபநயனம் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோது பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் 'ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது!ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!)
 
ஒரு பிராமணன் தன வாழ்நாளில் எவ்வளவு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் ?
ஒரு உத்தேசமான கணக்கு :
ஒரு நாளைக்கு மூன்று வேளை ஒரு பிராமணன் தன வாழ்நாளில் எவ்வளவு காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் ?ஜபம் (108 + 32 + 64) = 204 தடவை. ஒரு வருஷத்திற்கு 365 x 204 = 74460. காயத்ரி ஜபம் (ஆவணி அவிட்டம் மறுநாள்) ஒரு 1008. ஆக மொத்தம் ஒரு வருசத்திற்கு 74460 + 1008 = 75468.


அவனுக்கு ஏழு வயதில் பூணல் போடப்படவேண்டும். அவன் பூரண ஆயிசு 100 எனக் கொண்டால் அவன் 93 வருஷங்கள் (100-7) 75468 ஜபம் பண்ண வேண்டும். அதாவது 75468 x 93 = 70,18,524 தடவை காயத்ரி ஜபம் பண்ண வேண்டும்.
இதில் பலருக்கு ஏழு வயதில் பூணல் போடப்பட்டிருக்காது. அவர்கள் இந்த கணக்கை கொண்டுவர சுலப வழி இருக்கிறது.
கிரஹணங்கள் அன்றோ, அதிஷ்டானத்திலோ, ஜீவ சமாதி யருகிலோ, நதிக்கரையிலோ, கோவில்களிலோ காயத்ரி ஜபம் செய்ய அது பல மடங்காக பெருகும்.
 
[h=3]Stories of Nine Durga[/h]
devi_kamakshi1.jpg


Shailaputri
The first form of Devi Durga is Shailaputri. She is the daughter of the King of Mountains – Himalaya. King Himalaya and his wife Menaka perfomed many austerities and Divine Mother was pleased with them and came down to Earth as their daughter – Shaila means mountain and putri is daughter. So Divine Mother took birth as the daughter of the Mountain. Her vehicle is the Bull and in Her right hand She holds a Trishul (Trident) and in Her left hand a Lotus flower.
In Daksha’s yagya, Divine Mother in the form of Sati gave up Her body. After that, She took the form of Shailaputri, and once again joined Lord Shiva as His Divine consort. Shailaputri is the first of the nine Durgas and She is the Goddess of Inspiration.
We are living with Shailaputri today!
Brahmacharini
The meaning of the word “Brahma” is tapasya (austerities). In this form, Mother holds a japa mala in Her right hand and a kamandalu (water pot) in Her left hand. To obtain Lord Shiva, Goddess Brahmacharini did tapasya following the advice of Narada Muni. Divine Mother is Maha Shakti (Divine Energy). To obtain liberation, a seeker worships Divine Mother (Shakti) in the form of Brahmacharini, and She grants him Brahma Gyaan (knowledge of Brahman). Therefore, Her name is Brahmacharini and Her work is to give knowledge of the Supreme to devotees. Brahmacharini is the Goddess of Sacred Study.
Chandraganta
The third form of Mother is Chandraganta. Chandra means moon and in this form Mother is cool like a moonbeam. She provides the highest peace (param shaanti) and supreme welfare (kalyaan kaari). Her form is like gold and Her vehicle is the lion (dharma). She has ten hands and holds various weapons such as kadga (sword of wisdom), baan (sharp arrows), trishul (Trident), and padma (Lotus of Peace).
Her worship blesses the seeker with removal of all confusion (paap) and obstacles. Chandraganta is the Goddess of the Delight of Practice.
Kushmanda
The fourth form of Goddess Durga is Kushmanda. At the beginning when there was no creation, there was darkness everywhere. Kushmanda gave rise to creation and She lives in the realm of the sun (Surya Loka). The energy in all of creation is Kushmanda. This form of Mother has eight hands and therefore She is often called Ashtabhuja Devi. Her vehicle is a lion (dharma) and in Her hands Mother holds a water pot (kamandalu), arrows, the revolving discus (chakra), club, lotus flower of peace, a pot filled with immortal nectar and a japa maala. If you worship Mother Kushmanda, She destroys disease and sorrow and bestows the boons of long life, fame, strength and good health. Kushmanda is the Goddess of Purifying Austerity.
Skandamata
The fifth form of Goddess Durga is Skandamata. Mother Durga married Lord Shiva for the purpose of blessing the Devas with a commander-in-chief. In the war between the forces of duality (asuras) and unity (devas), the devas (forces of unity) needed a leader. Shiva and Parvati’s son Kartik who is also called Skanda is the commander of those Divine armies. As Skandamaata, Durga Devi is seen as the Mother of Skanda and She holds him in Her lap as She sits on a lion. She has four arms. The upper hands hold a lotus in each and with one of the lower hands She grants boons and with the other holds Kartik in Her lap. When a devotee does puja to Skandamata, She fulfills all desires. Skandamata is the Goddess who Nurtures Divinity.
Katyayani
Mother Katyayani is the sixth form of Durga. Maharishi Katyayana was a great Seer who performed strong tapasya in his ashram. One day Brahma, Vishnu and Maheswar came to his ashram to enlist his help for the purpose of killing Mahishasura. All the Gods came and from their bodies, their own energies and pure lights united to give rise to a beautiful form of Goddess Durga. This happened on the 14th day of the dark fortnight of the month of Ashwin. Maharishi Katyayana was the first to worship this Goddess Durga, and therefore She was named Katyayani. He worshipped Her on the 7th, 8th and 9th days of the bright fortnight of the month of Ashwin (Fall Navaratri). On the tenth day (the day of Victory), Goddess Katyayani vanquished Mahishasura.
Katayayani means the Goddess who is Ever Pure. Mother Katyayani has four hands. In her upper-right hand she displays the mudra that grants freedom from fear and in her lower-right hand she displays the mudra bestowing boons. In her upper-left hand she holds a sword and a lotus flower in her lower-left hand.
Devotees who worship Mother Katyayani with a pure attitude from their heart are blessed with the fulfillment of their needs for artha (wealth), dharma (ideal of perfection), kama (desires) and moksha (liberation). All disease, sorrow and suffering is destroyed by Mother.
Kalaraatri
Mother Kalaraatri is the seventh form of Durga. The reason she is called Kalaraatri is that she is the destroyer of that kaal (time) who destroys everything. Kalaraatri means the Dark Night (surrendering the ego). Her color is dark and her hair is unbound and flies wildly in all directions. She wears a garland of lightning and from her body emanates a light that is strong like a fire.
Her vehicle is a donkey. In her upper right hand she holds a mudra to grant boons and in her lower right hand she grants fearlessness. In her upper left hand she holds a club and an iron knife in her lower left hand.
She is fearful to look at but she grants very auspicious fruit to devotees. Another name for her is “Bhayankari” (this literally means “Fearful”). When devotees see her, they should not have fear. If they do her puja, she will grant freedom from fear of ghosts, spirits, snakes, fire, floods, and dangerous animals.
Maha Gauri
The eighth form of Mother is Mahagauri. Devi Parvati was dark colored and Mahadev used to call her “Kaalike”. She did tapasya and Mahadev was pleased with her tapasya. He showered Ganga water upon her and she became “white”. Therefore, her name is Mahagauri.
Her vehicle is a bull. In her upper right hand she shows the mudra bestowing boons and in her lower right hand she holds a trishul. In her upper left hand she holds a drum (damaru) and in her lower left hand is the mudra bestowing boons.
If we do puja to Mahagauri all confusion will be destroyed. Sorrow, confusion, suffering, poverty cannot touch one who worships Mahagauri. Mahagauri means Great Radiant Light.
Siddhidaatri
Siddhidaatri is the ninth form of Durga and Mother is given this name because she grants perfection (siddhi daan) to devotees and spiritual aspirants. It was with Siddhidaatri’s Grace (anukampa) that Lord Shiva got the Ardhanarishwara form. Her vehicle is a lion and Her asana is a lotus flower. In her upper-right hand Mother holds a club and in her lower-right hand is a discus. In her upper-left hand she holds a lotus and in her lower-left hand is a conch. For all spiritual aspirants and devotees, worship of Mother Siddhidaatri grants all desires both in this world and the other world. Siddhidaatri means Grantor of perfection.
 
கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி!
கண் கண்ட கலியுக காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா ஜோதி
உலகம் உய்ய உதித்த உத்தம அனுஷ அத்வைத மஹா ஜோதி
கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி
அனுஷத்தில் உதித்த அத்வைத மஹா ஜோதி
அகிலத்தில் உலவும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஆத்மாவில் உரையும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஆலயத்தில் தாங்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
இம்மைக்கு வழிகாட்டும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
இல்லறத்திற்கு ஒளி வீசும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஈனப்பிறவியை உயர்த்தும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஈடில்லா அருள் செய்யும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
உண்மை பொருளை உணர்த்தும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
உலகை காக்கும் உத்தம அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஊழ்வினை பயனை மாற்றும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஊன் உறக்கம் தனை மறந்த அனுஷ அத்வைத மஹா ஜோதி
எளிமை கோலம் ஏற்ற மஹா அனுஷ அத்வைத மஹா ஜோதி
எங்கள் கவலை தீர்க்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஏற்ற தாழ்வை களையும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஏழ்மை அகற்றும் ஞான அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஐம்புலன்களையும் அடக்கிய v அத்வைத மஹா ஜோதி
ஐயமில்லை அது தெய்வ மஹா அனுஷ அத்வைத ஜோதி
ஒப்புயர்வற்ற உண்மை அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஒளிநிறைந்த காஞ்சி மஹா அனுஷ அத்வைத ஜோதி
ஓம்காரமாய் ஒலிக்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஓய்வில்லா அருள் செய்யும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஔடதமாக ஆகும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
அஹ்தே கண் கண்ட கலியுக காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா ஜோதி
காஞ்சி காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா பெரியவா சரணம்!
கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி!
கண் கண்ட கலியுக காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா ஜோதி
உலகம் உய்ய உதித்த உத்தம அனுஷ அத்வைத மஹா ஜோதி
கலியுகம் கண் கண்ட காஞ்சி அனுஷ அத்வைத மஹா ஜோதி
அனுஷத்தில் உதித்த அத்வைத மஹா ஜோதி
அகிலத்தில் உலவும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஆத்மாவில் உரையும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஆலயத்தில் தாங்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
இம்மைக்கு வழிகாட்டும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
இல்லறத்திற்கு ஒளி வீசும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஈனப்பிறவியை உயர்த்தும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஈடில்லா அருள் செய்யும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
உண்மை பொருளை உணர்த்தும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
உலகை காக்கும் உத்தம அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஊழ்வினை பயனை மாற்றும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஊன் உறக்கம் தனை மறந்த அனுஷ அத்வைத மஹா ஜோதி
எளிமை கோலம் ஏற்ற மஹா அனுஷ அத்வைத மஹா ஜோதி
எங்கள் கவலை தீர்க்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஏற்ற தாழ்வை களையும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஏழ்மை அகற்றும் ஞான அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஐம்புலன்களையும் அடக்கிய v அத்வைத மஹா ஜோதி
ஐயமில்லை அது தெய்வ மஹா அனுஷ அத்வைத ஜோதி
ஒப்புயர்வற்ற உண்மை அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஒளிநிறைந்த காஞ்சி மஹா அனுஷ அத்வைத ஜோதி
ஓம்காரமாய் ஒலிக்கும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஓய்வில்லா அருள் செய்யும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
ஔடதமாக ஆகும் அனுஷ அத்வைத மஹா ஜோதி
அஹ்தே கண் கண்ட கலியுக காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா ஜோதி
காஞ்சி காமகோடி பரமாச்சார்ய அனுஷ அத்வைத மஹா பெரியவா சரணம்!
 
Mahaperiava was interviewed by great many foreign journalists and persoanlities. Some of them I find of immense interest and englightening to lay people like us (me) It is a must read for youngsters and the elders, (repeat read and reread...) What a wonderful thought you have started this thread! (Probably it is the wish of Mahaperiava!!
 
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. 'சேவை' என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட 'அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்' என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்பட்டு அந்த வழியில் மேலும் மேலும் செல்வோம். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடு போன்ற ஜீவன்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பழைய நாளில் கால்நடைகளுக்காக என்றே குளம் வெட்டுவது, அவை தினவு தீர்த்துக் கொள்வதற்காக உராய்ந்து கொள்வதற்கு அங்கங்கே கல் போடுவது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். தினமும் ஒவ்வொருவரும் ஒரு மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக் கீரையோ கொடுக்க வேண்டும். மாட்டுக் ஒரு பிடி புல் கொடுப்பதை "கோ க்ராஸம்" என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு (Mouthful); இங்கிலீஷில் புல்லை grass என்பதுகூட இதிலிருந்தே வந்திருக்கலாம். யாகம், யக்ஞம், தர்ப்பணம், திவஸம் முதலிய இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, மற்ற உலகங்களிலிருப்பவர்களுக்கும் நம் சேவையை விஸ்தரிக்கின்றன என்ற உணர்வோடு அவற்றைச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மந்திரத்தோடு சேர்த்துச் செய்யப்படும் சேவை. நம்மைப் போலவே செய்ய விருப்பம் உள்ளவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு எல்லோரும் ஒரே சங்கமாக ஒரே அபிப்ராயமாக இருந்து கொண்டு சேவை செய்வது சிலாக்கியம். அப்படிப் பலர் கூடிச் செய்யும்போது நிறையப் பணி செய்ய முடியும். சத்தியத்தாலும் நியமத்தாலும் இப்படிப்பட்ட சங்கடங்கள் உடையாமல் காக்க வேண்டும். பரோபகாரம் செய்பவர்களுக்கு ஊக்கமும், தைரியமும் அத்தியாவசியம். மான அவமானத்தைப் பொருட்படுத்தாத குணம் வேண்டும்.
பொழுதுபோக்கு என்று ருசியாகத் தின்கிற இடத்திலும், கண்களைக் கவர்கிற காட்சிசாலைகளிலும் பொழுதை வீணாக்குவது தவறு. இந்தப் பொழுதை பிறருக்குச் சேவை செய்வதில் செலவழிக்க வேண்டும்.
வாழ்க்கைத் தொல்லைகளிலேயே கொஞ்சம் உல்லாசமாகப் போக்குவது ஒரு தப்பா என்று கேட்பீர்கள். உங்களுக்குச் சொல்கிறேன். பரோபகாரமாகச் சேவை செய்தால் அதுவே பெரிய உல்லாசம் என்று தெரியும். அதுவே விளையாட்டு, அதுவே இன்பம். கிருஷ்ண பரமாத்மா இப்படித்தான் வெளியிலே விளையாடுவதாகத் தெரிந்தாலும், உள்ளே அத்தனையும் பரோபகார சேவைதான் செய்தான். எத்தனை பேருடைய, எத்தனை எத்தனை கஷ்டங்களை விளையாட்டாகவே போக்கடித்தான்? குன்றைத் தூக்கிப் பிடித்தது விளையாட்டு மாதிரி இருக்கும். ஆனால் கோபர்களைக் காப்பதற்கே அவ்வளவு பெரிய மலையை பாலகிருஷ்ணன் தூக்கினான். சின்னக் குழந்தை விஷம் கக்கும் காளிங்கனின் படத்திலே நர்த்தனம் செய்தது வெளியிலே பார்த்தால் விளையாட்டு; உண்மையில் அதுவும் ஜனங்களைக் காத்து அவர்களுக்கு நீர் நிலையை மீட்டுத் தருவதற்காக செய்த சேவைதான். இப்படித்தான் எத்தனையோ விளையாட்டுக்கள் செய்தான். அத்தனையும் சேவை. எவனைப்போல் விளையாடினவன் இல்லையோ அவனைப்போல் சேவை செய்தவனும்மில்லை என்று கிருஷ்ண பரமாத்மாவின் உதாரணத்தில் பார்க்கிறோம். லௌகிக சேவை மட்டுமில்லை. ஞான சேவையும் நிறைய செய்தான். அர்ஜுனன், உத்தவர் போன்றவர்களுக்கு மகா உபதேசங்கள் செய்தான். சேவை, ஞானம், விளையாட்டு எல்லாம் அவனிடம் ஒன்றாக இருந்தன. துளிக்கூடப் பற்றுதல் இன்றியே இத்தனையும் செய்தான். சிரித்துக்கொண்டே சாந்தமாக இவ்வளவையும் செய்தான். அதனாலேயே அநாயாசமாகச் செய்ய முடிந்தது. நம்மிலும் சேவை செய்கிறவர்களுகெல்லாம் இந்தச் சிரிப்பும் சாந்தமும் எப்போதும் இருக்க வேண்டும் - தைரியம், ஊக்கம் இவற்றோடு.
பகவான் எடுத்த பல அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தில்தான் சேவை அதிகம். ராமாவதாரத்தில் சேவைக்கென்றே ஆஞ்சநேய ஸ்வாமி வந்தார். இவர்கள் இருவரையும் ஸ்மரித்து நாமும் சுத்தமான உள்ளத்துடன், எந்த சுய நலமும் கருதாமல் எவ்வித விளம்பரத்துக்கும் ஆசைப்படாமல் சேவை செய்ய வேண்டும். நமக்குத் 'தீட்டு' ஏற்பட்டால் அச்சமயத்தில் உலகோடு சேர முடியாமல் ஒதுங்கியிருக்கிறோமல்லவா? அவ்விதமே உலகுக்கு உபயோகமாக சேவை செய்யாத ஒவ்வொரு நாளும் நமக்கு தீட்டுநாள் என்று கருதி, அவரவரும் தம்மாலான சேவையில் ஈடுபடவேண்டும்.
ஜீவராசிகளுக்கு செய்கிற உபகாரத்தால் சகல பிராணிகளுக்கும் மாதா பிதாவாக இருக்கப்பட்ட பரமேசுவரனுக்கே பூஜை பண்ணியதாக ஆகிறது. இதைத்தான் திருமூலர் திருமந்திரத்திலும் சொல்லியிருக்கிறது.
நடமாடக் கோயில் நம்பர்க் கொன் றீயின்
படமாடக் கோயில்பகவற்கீ தாமே.
இதற்கு அர்த்தம், "மக்களுக்குச் செய்கிற உதவி சாட்சாத் ஈசுவர ப்ரீதியாகச் செய்கிற பூஜையே ஆகும்" என்பது
 
Gayatr iJapa's mahima - Can anyone elaborate and what benefits will one derive. I am writing Likita Japa 1008 per day. It has given me a very peaceful life. I crossed crore so far. Anyway I am putting this information for the perusal of like-minded and derive the benefits! Shri Ram
 
The tradition of chanting Gayathri Japam is observed strictly from the Vedic time period. The Gayatri Japam is typically recited for 1008 (or 108) times. The Upakarma and Gayatri Japam are considered very important, particularly for unmarried boys, bachelors, who are supposed to learn Vedas. Gayatri Japam and its meaning:
Aum bhoor bhuwah swaha,tat savitur varenyambhargo devasaya dheemahidhiyo yo naha prachodayat.Oh God! Thou art the Giver of Life, Remover of painand sorrow,The Bestower of happiness, Oh! Creator of theUniverse,May we receive thy supreme sin-destroying light,May Thou guide our intellect in the right direction.Word for Word Meaning of the MantraAum = Brahma ; bhoor = embodiment of vital spiritualenergy(pran) ; bhuwah = destroyer of sufferings ;swaha = embodiment of happiness ; tat = that ;savitur = bright like sun ; varenyam = best choicest ;bhargo = destroyer of sins ; devasya = divine ;dheemahi = may imbibe ; dhiyo = intellect ; yo = who ;naha = our ; prachodayat = may inspire ; Meaning ofGayatri MantraIn the yester years Rishis had selected certain specific words for Mantras and arranged them in such a way so that they not only convey the meaning but also create specific mind power through their utterance. Similarly Gayatri Mantra inspires wisdom in us. Thus May the Almighty God illuminate our intellect to lead us along the righteous path. If one follows the the righteous path and attain wisdom, a person never gets bottlenecked in calamity nor does he gets trapped in the wrong directives. Chanting of Gayatri Mantra removes this deficiency. The teachings and powers incorporated in the Gayatri Mantra fulfill this purpose. Hindus believe that righteous wisdom starts emerging soon after the recitions (Japam) of this Mantra is performed. Everyone can try chanting the Gayatri Japam silently and attain the eternal peace! If one does Sandhyavandanam thrice, he gets blessed by all the three Goddesses. Because Gayathri is Vedamatha, the mother of all Vedas. A person , who is totally devoted to Gayatri recitation can achieve great success in the path of self advancement. Gayatri worship results in extraordinary benefits to its devotees. Numerous persons over thousands of years have achieved material and spiritual benefits by worshiping Gayatri. To be very precise, Pujya Shri Swami Daya Nanda Saraswathi (Arya Samaj founder) has also said that this word AUM is the most glorious name for God as the on word AUM, composed of the letters of A U M constitutes many names of God. At the same time it connotes all the names of God. The Brahman loves this name even as a father loves his child. In short, the Gayatri mantra, the most mighty of the Vedic mantras, is a prayer to the Sun God to alleviate one from all human sins, physical dissipation and to bestow knowledge, health and longevity.
Gayatri Mantra forms a part of the Rg Veda Samhita
Om Shri Siruvakshyai Namaha


 
Last edited:
MahAperiyavA's teachings and messages (vb)

Since the thread under the same caption with more contributions of messages by our friend Nannilam Balasubramanian was closed, I had to start this new thread.

In this thread, I intend to share the messages of MahAperiyvA's which I come across more often..

Request members to take part by contributing..

Here is one.....

கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும். சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் பகிர்கிறோம். அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம் கூறுகிறார் : “மஹா பெரியவாள் சொல்கிற கதைகளை வில்லுப்பாட்டில் பொருத்தமான இடத்தில் நான் சொல்வது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம், அவர் “ஏண்டா! இன்னிக்கு உன்னோட புரோகிராம்ல பால்கதை சொல்லுவியோ?” என்று கேட்ட சந்தர்ப்பங்களுமுண்டு. அது என்ன பால் கதை?”


பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!

பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.
அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.

என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.
அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்? அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.
பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் ஆறு ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் பதினாறு ரூபா விலை சொல்றான்” என்றாள்.
ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் ஆறு ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு பதினாறு ரூபாயாகக் கூடிவிட்டதே! இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.
இதுதான், மஹாபெரியவாள் ரசித்துக் கேட்கிற பால் கதை. இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?
நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள்.
Source: face book














 
மஹா பெரியவாவைத் தரிசிக்க ஒருவர் மடத்திற்கு வந்திருந்தார். [ஏதோ வேலையாxக மடத்துப் பக்கம் வந்தவர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தார். வந்தவர் வரிசையில் நின்னார்.

தன்னோட முறை வந்ததும் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினார். எல்லாம் கடனேன்னு செய்யற மாதிரி தான் இருந்தது. பெரியவா அவரைப் பார்த்து, “என்ன சுவாமியையெல்லாம் திட்டறதுல்ல இருந்து ஒரு வழியா ஓய்ஞ்சிட்ட போலருக்கு. திட்டியும் பிரயோஜனமில்லைன்னு தோணிடுத்து. அதனால தினமும் பண்ணிண்டு இருந்த பூஜையைக் கூட நிறுத்திட்டே இல்லையா?” அப்படின்னு கேட்டார்.

வந்தவருக்கு அதிர்ச்சி ‘நாம எதுவுமே சொல்லல, ஆனா, எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பார்த்தவர் மாதிரி பரமாச்சார்யா சொல்றாரே!ன்னு ஆச்சரியம்.
“பெரியவா! குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமான ஜீவனமாயிடுத்து. சரியா வேலையும் கிடைக்கிறதில்லை. பகவானை வேண்டிண்டு ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு புரிஞ்சுடுத்து. மத்தவளுக்கெல்லாம் கேட்குறதுக்கு முன்னாலேயே கொடுக்குற சாமி எனக்கு மட்டும் ஏன் இப்படி பண்றார்? அதான் எல்லாத்தையும் நிறுத்திட்டேன்!” கண் ஓரத்துல நீர் தளும்ப தழுதழுப்பா சொன்னார் அவர்.

பரிவோட அவரைப் பார்த்தார் மகான், “ஒரு விஷயம் கேட்கிறேன். கரெக்டா யோசிச்சு சொல்லு. ஒரு ஆஸ்பத்திக்கு தினமும் எத்தனையோ நோயாளிகள் வருவா. சிலர் தலைவலின்னு வருவா, சிலருக்கு காய்ச்சல் வந்திருக்கும். இவாள்லாம் அங்கே இருக்கறச்சே பாம்பு கடிச்சுடுத்துன்னு ஒருத்தரைத் தூக்கிண்டு வருவா, இந்த மாதிரியான சந்தர்ப்பத்cc துல டாக்டர்கள் என்ன பண்ணுவா?

யாருக்கு உடனடியா சிகிச்சை பண்ணனுமோ, யாருக்கு சட்டுனு சிகிச்சை பண்ணலைன்னா அப்புறம் அது பிரயோஜனப்படாதோ, யாருக்கு மரண அவஸ்தை தீரணுமோ அவாளைப் பார்க்கப் போயிடுவா. அதுக்காக சாதாரண காய்ச்சல், தலைவலி வந்தவாளை டாக்டர்கள் அலட்சியப் படுத்தபடுத்தறாங்கறது அர்த்தம் இல்லை.

அவாளுக்கு கொஞ்சம் தாமதமா சிகிச்சை தந்துக்கலாம். பெரிய அவஸ்தை எதுவும் வந்துடாது.

சாதாரண நோயாளிக்கு சிகிச்சை பண்ற டாக்டர்களுக்கே, யாருக்கு எப்போ உதவணும்கிறது தெரியறதுன்னா, பிறவிப் பிணிக்கே சிகிச்சை பண்ணி, அதனால வரக்கூடிய சங்கடங்களை போக்கக்கூடிய பகவானுக்கு யாரோட பிரச்னையை உடனடியா தீர்க்கணுன்னு தெரியாதா?

உனக்கு சுவாமியோட கடாட்சம் கிடைக்க கொஞ்சம் தாமதமாறதுன்னா, உன்னை விட அதிகமா அவஸ்தைப் பட்டுண்டு இருக்கற யாருக்கோ உதவுவதற்காக சுவாமி ஓடியிருக்கார்னு அர்த்தம். அந்த வேலை முடிஞ்சதும் அவசியம் உனக்கும் அனுக்கிரகம் பண்ணுவார். அதுக்குள்ளே அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”

பெரியவா சொல்லச் சொல்ல, அந்த நபர் கண்ணில் இருந்து தாரை தாரையாக நீர் வடிஞ்சது. அதுவே அவரோட தவறான எண்ணத்தை அலம்பித் தள்ளி அவரோட மனசை சுத்தப்படுத்தியிருக்கும்கறது நிச்சயம்.

மனஅழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகானை பரிபூரணமான நம்பிக்கையோட மறுபடியும் நமஸ்காரம் செஞ்சுண்டு புறப்பட்டார் வந்தவர்.
அவருக்கு மட்டுமில்லாமல் நம் அனைவருக்குமே பாடம் நடத்தியுள்ளார் நம் பெரியவா!⁠⁠⁠⁠

Source: WhatsApp.
 
பெரியவா சரணம்


""பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார் ""


பம்பாயைச் சேர்ந்த ஏழை இளைஞர். இவரின் தந்தை பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிறிய பணியில் இருந்தார். மிக சொற்ப வருமானம். இளைஞர், அவருக்கு ஒரு தங்கை என இரு குழந்தைகள். தன் சொற்ப வருமானத்தில் இரு குழந்தைகளையும் படிக்க வைத்து குடும்பத்தையும் சிரமத்தோடு நடத்தி வந்த தந்தை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அப்பொழுது அந்த இளைஞர் பியுசி படித்துக் கொண்டிருந்தார். இளைஞரின் படிப்பு அத்துடன் நிற்க குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழல். எங்கு தேடியும் வேலைக் கிடைக்காததால், அவ்வப் பொழுது கிடைக்கும் சிறு பணிகளைச் செய்து, பொருள் ஈட்டினார். தாயும் தன் பங்குக்கு அக்கம் பக்கம் உதவி செய்து பணம் ஈட்டினார் என்றாலும் நிரந்தரப் பணி இல்லாததால் வருமானமும் நிரந்தரமாக வரவில்லை. மிகவும் கஷ்ட நிலைதான் என்றாலும் அந்த கஷ்ட நிலையிலும் தன் தங்கையை படிக்க வைத்தார். வந்த வருமானத்தை வைத்து தாய் எப்படியோ சமாளித்து வந்தார். அவர்கள் பொருளில் வறியவர்களாக இருந்தாலும், குணத்தில் செல்வந்தர்களாக வளர்க்கப்பட்டிருந்தனர். அமைதியான நடத்தை, நல்ல ஒழுக்கம், சிறந்த பக்தி, பெரியவர்களிடத்து மரியாதை, நேர்மை என நல்ல பண்புடன் இருந்தனர்.

ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தாயும் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். மன வேதனையும், வறுமையும் வாட்ட தாயின் பொருளுதவியும் நின்று போன நிலையில் குடும்பம் தத்தளித்தது. தங்கையின் படிப்பு பத்தாம் வகுப்புடன் நின்றது. தாய் ஈட்டிய சிறு பொருள் கொண்டு வாரம் ஐந்து நாட்கள் உணவருந்திய குடும்பம் மூன்று நாட்கள் கூட சமாளிக்க முடியாது திண்டாடியது. தாங்க முடியாத சூழலில் தங்கை வீட்டு வேலை செய்து பொருள் ஈட்டுவதாக சொல்ல, அண்ணனின் உள்ளம் வலித்தது. தன்னை விட ஏழு வயது சிறிய தன் தங்கையை, தன் தந்தை மறைவுக்குப் பின், தந்தையாக பொறுப்புக்களை தோளில் சுமந்து, எப்பாடு பட்டாவது பட்டாதாரியாக்கி ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விட வேண்டும் என கனவு கண்டவர்; மிகுந்த பாசம் கொண்டவர்; தான் கஷ்டப்பட்டாலும் தன் தங்கை கஷ்டப் படக் கூடாது என கண்ணும் கருத்துமாக வளர்த்தவர், தங்கையின் சொல் கேட்டு கண்ணீர் சிந்தினார். மனமும் கனவும் பெரிதாக இருந்து என்ன பயன் , அதை செயல்படுத்த சரியான சூழ் நிலை இல்லையே; அந்த நொடிப் பொழுதை கடந்து தான் ஆக வேண்டும் என உண்மை உறைக்க, தங்கையின் பிடிவாதத்திற்கு ஒப்புக் கொண்டார்.


மூன்று மாதங்கள் வலியும் வேதனையுமாய் கழிய, தன் தந்தையின் நெருங்கிய சொந்தக்காரர் திரு நெல்வேலியில் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரிடம் சென்று உதவிக் கேட்போம். அவர் சிபாரிசில் அங்கேயே ஏதாவது வேலை கிடைத்தால் தங்கையையும் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என புதுக் கனவு கண்டார். கஷ்டப்பட்டு போக்குவரத்து செலவுக்கு என சிறிது பொருள் சேமித்து, உறவினருக்கு தன் வருகை குறித்து தபால் எழுதி விட்டு, தங்கையையும் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு திருநெல்வேலிப் புறப்பட்டார். திருநெல்வேலியில் தன் உறவினர் வீட்டுக்குச் சென்றவருக்கு பெரும் அதிர்ச்சி . வாசலில் ஒரு பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. அக்ரஹாரத்தில் அக்கம் பக்கத்தவரிடம் விசாரிக்க, ‘அவர்கள் வெளியூர் சென்று விட்டார்கள், எப்பொழுது வருவார்கள் எனத் தெரியாது’ என அனைவரும் ஒரே பதிலையே கூறினர். மிகவும் நெருங்கிய உறவு என்பதால் முழுமையாக அவரை நம்பி வந்து விட்டார். கையிலோ மிகவும் சொற்ப பணம். திரும்பிப் போக முடியுமா என்பதே கேள்விக்குறி. அங்கு வேறு யாரையும் தெரியாது. பொழுது சாய்ந்து விட்டதால், சரி நாளை அவர் வருகிறாரா என பார்ப்போம் என முடிவு செய்து பிரயாணக் களைப்பில் ஒரு வீட்டுத் திண்ணையில் அயர்ந்து உறங்கி விட்டார்.


காலையில் பொது இடத்தில் குளித்து விட்டு அரை குறையாக வயிற்றை நிரப்பி விட்டு உறவினருக்கு காத்திருந்தார். அன்றும் அவர் வரவில்லை. அன்றைய பொழுது பயனில்லாது போயிற்று. மறு நாள் பொழுது விடிந்தது. அவருக்கும் தான் வாழ்க்கையில் புதிய உதயம் தோன்றியது. வழக்கம் போல் உறவினருக்கு காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான். நம் வருகை அறிந்து உறவினர் பயணப் பட்டிருப்பாரோ என சந்தேகம் எழுந்தது. மேற் கொண்டு என்ன செய்வது எனப் புரியவில்லை.


அந்த சமயத்தில் நமது மஹா பெரியவா திரு நெல்வேலியில் முகாமிட்டிருந்தார். அக்ரஹாரத்து மக்கள் அவரைத் தரிசிக்க செல்ல இவருக்கும் தரிசிக்க ஆவல் பிறந்தது. அவர் முகாமிட்டிருந்த இடம் சென்றார். கூட்டம் வழிய அந்த கூட்டத்துடன் அவரும் கலந்தார். தரிசிக்க முடியுமா என்று தெரியவில்லை. பொறுமையுடன் காத்திருந்தார். நேரம் நகர்ந்துக் கொண்டிருந்த்து. அந்த சமயம் பின் இருந்து ஒருவர் வந்து, “ என்னப்பா, பெரியவாளைத் தரிசிக்க வந்தியா? வா” என்று அவரை முன் நோக்கி அழைத்துச் சென்று பெரியவா முன் நிறுத்தி விட்டு சென்று விட்டார்.

மஹா பெரியவா முன் நின்ற இளைஞர் நமஸ்கரித்து எழுந்தார். அவரின் உள்ளத்து சோகத்தையும், கள்ளமில்லா உள்ளத்தையும் படம் பிடித்த மஹா பெரியவா, “என்னப்பா எங்கேந்து வர?” எனத் துவக்கினார். “பம்பாய்லேந்து வரேன்” என வார்த்தைகள் வாயிலிருந்து தடங்கி தடுக்கி விழுந்தது. “யாரு... இன்னார் பையனா நீ?” எனக் கேள்வி எழுப்ப, இளைஞர் ஆம் எனத் தலை அசைத்தார். மேலும் அவரைப் பேச விடாது பெரியவாளே பேசத் தொடங்கினார். “ உங்க அப்பாவத் தெரியும்பா. அவர் மடத்துக்கு வந்திருக்கார். உங்க தாத்தாவுக்கும் மடத்துக்கும் தொடர்பு உண்டு. உன் அப்பா அம்மா காலமாயிட்டா இல்லியோ. இப்ப நீ என்ன பன்ற?”
“வேலை ஒன்னும் இல்லைப் பெரியவா” நா தழு தழுத்தது.
“உன்னோட வேற யார் இருக்கா?”
“ ஒரு தங்கை மட்டுமதான்”
“அவ என்ன பண்றா?”
“ பத்தாவது படிச்சுட்டு வீட்டு வேலை பாக்கறா” என்றார் கண்ணீர் வழிய. சில நொடி அமைதிக்குப் பின் மஹா பெரியவா தொடர்ந்தார். “நீ யாரை நம்பி இங்க வந்தியோ அவா உன் வருகை தெரிஞ்சு வேற ஊர் போய்ட்டா. இனி அவாளுக்காக காத்திருக்காத. இன்னிக்கே ஊருக்கு கிளம்பு. இனிமே நீ யாரையும் நம்பி இருக்க வேண்டாம். கவலைப்படாம போ” என்று சொல்ல இளைஞர் ஒன்றும் பேசவில்லை. கைகட்டி நின்றார். மஹா பெரியவா அருகே இருந்தவரிடம், “யார் இவனை அழைச்சுண்டு வந்தா?” என்று கேட்க, அந்த அன்பர் முன் வந்து, “நீங்க தான் பெரிவா என்னை அழைச்சுண்டு வரச் சொல்லி சொன்னேள்..” என்று இழுக்க, “ நானா?” என பெரியவா கேட்க, எல்லோரையும் நற்செயலுக்கு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குரு(றும்பு) நாதரின் கேள்விக்கு என்ன பதில்? --- வந்தவர் அமைதி காக்க, “ சரி , நீ ஒண்ணு செய். இவனுக்கு ஆகாரம் பண்ணி வெச்சு, அவன் பம்பாய் போய் சேர ரயில் டிக்கெட்டும் வாங்கிக் கொடு” என்று சொல்ல வந்தவர் அதை பெரும் பாக்கியமாக எடுத்துக் கொண்டார். இளைஞர் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க, மஹபெரியவா ஆசியுடன் அனுப்பி வைத்தார்.மஹாபெரியவாளைத் தரிசித்த நினைவுகள் நீண்ட பயணத்தின் துணை வர இளைஞரும் பம்பாய் ரயில் நிலையம் வந்தடைந்தார். ரயில் நிலைய நுழைவு வாயிலில் டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்க, சட்டைப் பையில் கை விட டிக்கெட் அங்கு இல்ல. பேன்ட் பாக்கெட்டில் கை விட அங்கும் இல்லை. அவசரம் அவசரமாக தான் ஒரு மாற்றுத் துணி வைத்திருந்த துணிப் பையில் தேட டிக்கெட் அங்கும் இல்லை. பரிசோதகர் அவரை தனியே ஓரமாக நிறுத்தி வைத்தார். ரயில் உள்ளே இரு பரிசோதகர் வந்த பொழுது இருந்த டிக்கெட் எப்படி காணாமல் போனது என மூளை சிந்திக்க, உடம்பு பதற்றமடைந்து மீண்டும் மீண்டும் தேட, உள்ளம் மட்டும் மஹா பெரியவாளின் நினைவுகளிலிருந்து அகலாது நின்றது. கையிலோ மிகவும் சொற்ப பணம், தண்டனைக்குரிய தொகையை எப்படியும் செலுத்த முடியாது. எதையும் மேற்கொண்டு சிந்திக்க முடியாது நின்றார்.


டிக்கெட் பரிசோதகர் தன் பணி முடித்த பின் இவர் பக்கம் திரும்பினார்.
“ நீ ஏன் ஓரமா நிக்கற?”
“ சார் நீங்கதான் என்னிடம் டிக்கெட் இல்லை என்று நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்” என்றான்.
பார்வையில் தமிழர் எனப் புரிந்து கொண்ட பரிசோதகர் “ ஓ தமிழா.. இல்லியே வேற காரணத்துக்குன்னா ஒன்ன நிறுத்தி வெச்சேன்”
என்று அவர் சிந்திக்க, அவர் யோசனைக்கு ஒன்றும் எட்டவில்லை. இல்ல டிக்கெட் இல்லனு தான் என்னை நிறுத்தி வைத்தீர்கள் என அவர் மீண்டும் சொல்ல இவர் மறுக்க, இப்படியே போய்க் கொண்டிருந்த்து. அங்கு அவருள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பவர் நம் மஹா பெரியவர் அல்லவா? (பரிசோதகருக்கு இளைஞரின் நேர்மையை படம் பிடித்து காட்டிக் கொண்டிருந்தார். )மஹா பெரியவா தான் எண்ணிய வேலை நடந்து முடியும் வரை விலகுவதில்லை. அனைவரையும் கைப்பாவையாக்கி நடனம் ஆட வைப்பவரின் பொம்மலாட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.
யோசித்துக் கொண்டே நடந்தவர் அந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு தன் அலுவலக அறை வந்தார். அவனை அமர வைத்து அவனைப் பற்றி கேட்டு விட்டு எங்கிருந்து வருகிறாய் என கேட்க, டிக்கெட்டைத் தவறவிட்ட எனக்கு அபராதம் விதிக்காது அமர வைத்து தன்னைப் பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறாரே என குழப்பமாக இருந்தது. இருந்தாலும் பெரியவர் - தந்தை ஸ்தானத்தில் இருப்பவர் என எண்ணி இளைஞர் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். தான் திரு நெல்வேலி சென்றதையும் உறவினர் இல்லாததால் செய்வதறியாது நின்றதையும் மஹா பெரியவாளைத் தரிசித்ததையும் - ஏன் சொல்கிறோம் எனப் புரியாமலே கொட்டிக் கொண்டிருந்தார். காஞ்சி மஹா பெரியவாளைத் தரிசினம் பண்ணியா காஞ்சிப் பெரியவாளையா - அந்த மஹானையா என கண்கள் அகல விரிய - உள்ளம் மத்தாப்பாய் - மலர மீன்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தவர் பெரியவாளை நினைத்து தலை மீது கரம் குவித்து வணங்கினார். அந்த இளைஞர் மீது மேலும் ஆர்வம் ஏற்பட அவன் குடும்பத்தை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.


அந்த இளைஞர் அனைத்து விவரங்களையும் கூற, அந்த இளைஞரின் நேர்மை, பணிவு என அனைத்தும் அவரைக் கவர தன் முகவரியைத் தந்து இன்றே நீ உன் தங்கையை அழைத்துக் கொண்டு என் வீட்டிற்கு வா என்று அனுப்பி வைத்தார். அன்றைய நிகழ்வுகளை இளைஞரால் நம்ப முடியவில்லை இது நாம் தரிசித்த மஹா பெரியவாளின் கருணைதான் எனப் புரிந்து அவருக்கு மனமார நன்றி செலுத்தினார். டிக்கெட்டைத் தொலைக்கச் செய்து கருணையும் காட்டி விட்டாரே என உள்ளம் உருக நன்றி செலுத்தினார். வீட்டிற்கு வந்து தன் தங்கையிடம் நடந்தவைகளைக் கூறி, அன்று மாலையே டிக்கெட் பரிசோதகரின் இல்லத்துக்கு இருவரும் சென்றனர். முதல் பார்வையிலேயே அண்ணன் தங்கையை தம்பதியருக்கு பிடித்து விட அவர்களை தங்கள் இல்லத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டனர்.

டிக்கெட் பரிசோதகர் அந்த இளைஞரை கல்லூரியிலும். தங்கையை மேற்படிப்பிலும் சேர்த்தார். குழந்தைப் பாக்கியம் இல்லாத அத் தம்பதியர் - இருவரையும் தங்கள் சொந்த பிள்ளைகள் போல் பார்த்துக் கொண்டனர். எங்கோ அனாதையாய் கிடந்த தங்கள் மீது பாசத்தைப் பொழியும் தம்பதியர் மீது இவர்களும் மிகுந்த அன்பு காட்டினர். நல்ல ஒழுக்கம், அடக்கம், பணிவு, பக்தி, மரியாதை, சொந்த பெற்றோரைப் போல் கண்ணும் கருத்துமாய் இயல்பாய் அக்கறைக் காட்டுவதும் பாசத்தைப் பொழிவதுமென அவர்களின் நடவடிக்கை அனைத்தும் தம்பதியரைக் கரைய வைத்தது. பிள்ளைப் பாசத்தையே அனுபவித்திராத அவர்களுக்கு, இவர்கள் இருவரும் காட்டிய பாசம் உள்ளத்தை உருக்கியது. வயதான காலத்தில் மஹா பெரியவாதான் இவர்களைக் காண வைத்து அனைத்து சந்தோஷங்களையும் தந்து ஆனந்தப் பட வைத்துள்ளார் என மஹா பெரியவாளை வணங்கித் தம்பதியர் நன்றி கூறினர்.


மாதங்கள் நகர்ந்தன. தம்பதியர் இருவரும் ஏக மனதாக முடிவு செய்து, அவர்கள் இருவரையும் தங்கள் வாரிசாக சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டனர். மஹா பெரியவாளைத் தரிசித்த நாள் முதல் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடந்து வரும் அதிசயத்தை உணர்ந்த இளைஞர் பக்தியுடன் நாள் தவறாது நன்றி செலுத்தினார். ஆதரவற்று பெரும் பள்ளத் தாக்கில் வீழ்ந்திருந்த தனக்கு அன்புக் கரம் நீட்டி ஆசியுடன் பெரும் பாக்கியத்தையும் அள்ளிக் கொடுத்த மஹா பெரியவாளே அவரின் முழு முதற் தெய்வமானார். அனாதையாய் நின்ற தனக்கும் தன் தங்கைக்கும் அன்பு பெற்றோர்களாகி வளமும் தந்த டிக்கெட் பரிசோதகர் தம்பதிகளை தன் சொந்த பெற்றோராகவே பூஜித்தார். வருடங்கள் நகர்ந்தன. தம்பதியர் தங்கையை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தனர். இளைஞரும் ஒரு தனியார் அலுவலகத்தில் ஒரு பணியில் அமர்ந்தார். இளைஞருக்கும் திருமணம் செய்ய வரன் தேடிய பொழுது வரன் அமையாது, வயது கடந்துக் கொண்டே போனது. தம்பதியர் இளைஞரின் பூரண சம்மதத்துடன் ஒரு அனாதை விடுதியில் ஒரு நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து முடித்தனர்.

வருடங்கள் சென்றன. டிக்கெட் பரிசோதகர் தான் சம்பாதித்த சொத்து மற்றும் பூர்விக சொத்து என அனைத்து சொத்துக்களையும் நான்குப் பிரிவாகப் பிரித்தார். மனைவி மற்றும் சட்டப்படி தத்து எடுத்துக் கொண்ட மக்களுக்கு கொடுத்தது போக மீதி ஒரு பங்கை சமூக சேவைக்கு என ஒதுக்கினார். அந்தத் தொகை மூவர் ஒப்புதலின் பேரில் செலவழிக்கப்பட வேண்டும் என எழுதி வைத்தார். பரிசோதகர் மற்றும் சில ஆண்டுகளில் அவர் மனைவியும் இறந்து விட சொத்து சற்று பெரியத் தொகையாக இருந்ததால் அதை எந்த விதத்தில் சமூகப் பணிக்கு செலவிடுவது, அதை எப்படிக் கையாள்வது எனக் குழப்பம் ஏற்பட தன்னை அனைத்திலும் வளமாக்கிய தன் தெய்வம் மஹா பெரியவாளைத் தேடி இளைஞர் காஞ்சி வந்தார்.


பெரியவாளின் முன் கண்ணீர் பெருக்கோடு கைக் கூப்பி நின்றார். அவர் வடித்த கண்ணீர் பெரியவாளின் பாதத்தில் நன்றியாகப் போய்க் கலந்தது. அந்தக் கண்ணீரே மஹா பெரியவாளுடன் உரையாடியது. உணர்ச்சிப் பெருக்கோடு நின்றவர் ஆசுவாசப் படுத்திக் கொள்ள பெரியவா மௌனமாய் இருந்தார். சில நிமிடங்களில் சுதாரித்த இளைஞர், தன் குழப்பத்தை தெரிவித்து தங்களின் சித்தப்படி செய்ய விழைகிறேன் என்றார். “பணத்தை அனாதைக் குழந்தைகளின் கல்விக்கும், மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கும் செலவிடு. நீ செய்யும் உதவி உன் இடது கைக்கு கூடத் தெரியக் கூடாது. அவர்களுக்கு தொண்டு செய்வதையே இனி உன் முழு நேரப் பணியாகக் கொள்” என ஆசிக் கொடுக்க , இளைஞர் தன் குழப்பம் தீர்ந்த மகிழ்வில் ஆசியுடன் உத்தரவு பெற்றார். இல்லம் வந்தவர் தன் பணியை ராஜினாமா செய்து விட்டு, மஹாப் பெரியவாளின் ஆசிப்படி தொண்டாற்ற ஆரம்பித்தார்.


இளைஞரின் தாத்தா மஹாபெரியவாளைத் தரிசித்தவர். அவர் தந்தையும் பெரியவாளைத் தரிசித்து ஆசி பெற்றவர். நம் மஹா பெரியவாளின் பார்வை ஒரு பரம்பரையின் மீது விழுந்து விட்டால் அவர்கள் மரணப் பள்ளத்தாக்கில் விழுந்தாலும் கைத் தூக்கி விட்டு விடுவார். இது அந்த பரம்பரையினரின் விசுவாசத்தைப் பொறுத்தது. ஆதரவற்று அனாதயாய் நின்ற அண்ணனையும் தங்கையையும் பாதுகாப்பான இடத்தில் சேர்த்து அனைத்திலும் வளமாக்கினார். குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு முதுமையில் போற்றிப் பேண அருமையான செல்வங்களைத் தந்து பாக்கியம் தந்தார். அனாதையாய் நின்ற ஒரு குடும்பத்திற்கும், முதியவர்களுக்கும் ஆசி தந்த மஹா பெரியவா அந்த செல்வ வளத்தையே மேலும் மேலும் பல அனாதைகளுக்கும் முதியவர்களுக்கும் பயன்படும்படி செய்தார். இது மஹா பெரியவாளின் கருணையா... காருண்யமா...

மஹா பெரியவாளின் ஒரு ஆசி எத்தனை ஆசிகளாக பெருகி அதனால் எத்தனை மக்கள் பாக்கியம் அடைகிறார்கள்.
எண்ணிலடங்கா ஆசிகளையும் அனுக்ரஹங்களையும் வாரி வாரி வழங்கி தன் புகழை மறைப் பொருளாக வைத்துச் சென்ற மாமுனியே சரணம் சரணமையா!


(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து)

Source: Whatsapp.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top