• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My Collections

Status
Not open for further replies.
இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்க

இந்து சாஸ்திரங்கள் கூறும் சில நல்ல பழக்கங்கள் :


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.

2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.

4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.

5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதோ வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.

7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.

8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.

9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.

10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11.சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.

12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.

13.ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.

14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.

15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.

17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.

18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.

19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.

20.தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.

22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.

23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.

24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.

25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.

28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.

29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.

30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும்.
வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு,
மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.

32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை,அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.

33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.

34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.

35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.

37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.

38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.

40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.

42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.

43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும். வசதி இருப்பின் செய்து கொள்ளவும். குற்ற உணர்ச்சி தேவையில்லை.

44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.

45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.

47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.

48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.

49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.

50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம்.
சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.

52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது. ஓம் சிவ சிவ ஓம் ஜெபிக்கலாம்.

53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.

54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.

55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.

57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.

58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.

59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை
கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌவ்யமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.

60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.

62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.

63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.

64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக்
கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா,
விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.

65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.

67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.

68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.

69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை. அல்லது மெல்லிய குரலில் பாடவும்.

70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71.சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என
வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி
புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.

72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.

73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.

74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.

75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.

77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.

78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.

79. வி.ஐ.பி. க்கு முன்னுரிமை கொடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. அது நியாயமானதுதான்.

80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.

82. கோபுர தரிசனம் கோடி நன்மை.

83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.

84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.

85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.

87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.

88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.

89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3.
விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.

92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.

93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.

94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.

95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.

97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம்,
மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.

98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.

99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்

Ayraa
[TABLE="class: gsc-search-box"]
[TR]
[TD="class: gsc-input"][/TD]
[TD="class: gsc-search-button"][/TD]
[/TR]
[/TABLE]
 
வெற்றிலை

வெற்றிலை

10259724_927643677268210_1338355181081855053_n.jpg



பூக்காமல், காய்க்காமல் கடைசி வரை வெறும் இலைகளாக மட்டுமே இருப்பதால் வெற்றிலை எனப்பெயர் வந்தது. அதைப்போல பூத்துவிட்டு கடைசிவரை காய்க்காமலே இருக்கும் தாவரத்தை 'காயா' என்றனர். காயா என்பது தமிழ் இலக்கணத்தில் எதிர்மறையை குறிக்கும். காய்க்காமலே இருப்பதால் தான் 'காயா'. தில் மலரும் பூவை காயாம்பூ என்றனர். நீலநிறங் கொண்ட திருமாலை குறிக்க 'காயாம்பூ மேனியன்' எனும் பெயர் இதனால் வந்தது. காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் காயாம்பூ பூத்ததாக தமிழ் இலக்கியம் கூறுகிறது.



| ???????? ?????? | Dinamalar
 
Last edited:
ஆலயத்திற்குள் செய்யக்கூடாதவை..,

ஆலயத்திற்குள் செய்யக்கூடாதவை..,
------------------------------------------------------------.
*அடுத்தவர் பணத்திலோ,பொருளாலோ அர்ச்சனை செய்யக்கூடாது.

*அசுப காரியங்களுக்கு சென்றுவிட்டு ஆலயத்திற்கு செல்லக்கூடாது.
*இயற்கை உபாதைகளை கட்டுபடுத்திகொண்டு கோயிலுக்கு செல்லக்கூடாது.

*கோபத்துடன் சாமி கும்பிடவோ,அர்ச்சனை செய்யவோ கூடாது.
*சாப்பிட்டவுடன் தெய்வத்தை தரிசிக்க கூடாது.


*எச்சில் துப்பக்கூடாது.
*கால் அலம்பாமல் ஆலயத்திற்குள் அடியெடுத்து வைத்தல் கூடாது.
*தலையை விரித்துகொண்டு செல்லக்கூடாது.
*வேகமாக வலம் வருதல் கூடாது.
*மற்ற ஆலயங்களை பெற்றி பெருமை பேசக்கூடாது.


* தற்பெருமை பேசுதல் கூடாது.
*மற்றவ்ர்களுக்கு ஆசீர்வாதம் செய்யக்கூடாது.
*சத்தம் போட்டு பேசவோ,மற்றவரை தொந்தரவு செய்யவோ கூடாது.
*கோயிலில் அசுத்தம் செய்யக்கூடாது.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
தூங்கி எழுந்தவுடன் பார்க்கதக்கவைகள்;

தூங்கி எழுந்தவுடன் பார்க்கதக்கவைகள்;
--------------------------------------------------------
1.தன்னுனைய வலது கை.
2.கண்ணாடி
3.தன் மீது அன்பு வத்திருப்பவர் முகம் அல்லது கணவன்/ மனைவி/மகன்/மகள் முகம்.
4.சூரியன்.
5.தாமரைப்பூ.

6.சந்தனம்.
7.கடல்.
8.இயற்கை காட்சிகள்.
9.வயல்.
10.சந்தனம்.

11.சிவலிங்கம்.
12.ராஜகோபுரம்.
13.கன்று உடைய பசுமாடு.
14.பூந்தோட்டம்.

இதில் ஏதாவது ஒன்றை தூங்கி எழுந்தவுடன் பார்த்தால் அன்றைய தினம் மனதுக்கு இனிய நாளாக அமையும் என்பது சாஸ்திர நம்பிக்கையாகும்.


மேலும் தூங்கி எழுந்தவுடன்,அதிகாலை பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்த நடைபயிற்சி செய்து உதயசூரியனை பார்த்தால் எல்லா நாளும்,இனிய நாளே.


அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்&#

எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன?



* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.


* திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.


* திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.


* காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பி லை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.


* திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்ய ப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக் கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.


* கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றன ர். உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.


* ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிற கு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படு கிறது. இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகி றது.


* கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்க ளுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளா றுகளைத் தீர்க்கிறது.


* நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.


* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின்போது கமகமக்கும் சுண்டலும் பாலும் நிவேதனம் செய்யப்படுகின்றன.


* கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாமபூஜையின்போது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.


* நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.


* கேரளம், குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக செய்யப்படுகிறது.


* திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.


* கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயா ல் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகி றது. செம்பை வைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.


* குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், அவருக்கு தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.


* முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர் த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயி லின் பிரதான பிரசாதம்.


* திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடை சி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும்
சர்க்கரைப்பொங்கலும் நிவேத னம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.


* சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.




Indira Srinivasan

*******
 
நந்திக் கல்யாணம்

நந்திக் கல்யாணம்

738d4cfca208fd24c93e01c555c7f6b6_L.jpg


"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" என்பது, நம் முன்னோர்களின் நம்பிக்கையுடன் கூடிய சொல்வழக்கு.

நந்தியெம்பெருமாள் கயிலையில் சிவபெருமானின் வாயிற்காவலனாக இருப்பவர். திருமழபாடி என்னும் தலத்தில் அவதரித்தவர்.

திருவையாற்றீசன் ஐயாறப்பர்மீது மிகுந்த பக்திகொண்டவர் சிலாத முனிவர். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தும் புத்திரப் பேறின்மையால் வருந்திய முனிவர், ஐயாறப்பரை வழிபட்டு அருந்த வமியற்றினார்.

முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், "சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது, பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக்கொள். அவனுக்கு ஆயுள் 16 ஆண்டுகள் மட்டுமே' என்று அசரீரி வாக்காகக் கூறினார்.

அதன்படியே யாகபூமியிலிருந்து ஒரு பெட்டகம் வெளிப்பட்டது. அதற்குள் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறையணிந்த முடியும் கொண்ட ஒரு மூர்த்தியைக் கண்டார். அம்மூர்த்தியை வணங்கினார். மீண்டும் ஐயாறப்பர்அசரீரியாய் "பெட்டியை மூடித்திற' என்றார். அவ்வாறே சிலாதர் பெட்டியை மூடித்திறந்ததும், பெட்டிக்குள் அழகிய குழந்தையொன்று காணப்பட்டது. அதைக்கண்ட முனிவரும், அவரது மனைவியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். செப்பேசர் 14 வயதுக்குள் சகலகலைகளையும் கற்று வல்லவராயினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது ஆயுள் முடிந்து விடும் என்று பெற்றோர் வருந்துவதைக் கண்ட செப்பேசர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை வணங்கி, அங்குள்ள அயனரி தீர்த்தத்தில் நீராடி, கால்மேல் காலையூன்றிக் கடுந்தவம் மேற்கொண்டார். நீர்வாழ் உயிர்கள் அவரது உடலை அரித்துத் தின்றன. மனந்தளராத செப்பேசர் பலநாள் தவமிருந்தார்.

அவரது பக்திக்கு இரங்கிய இறைவன் செப்பேசருக்கு தீர்க்காயுளையும் 16 பேறுகளையும் தந்தருளினார். செப்பேசரின் புண்பட்ட உடலை நலமுறச் செய்ய மனங்கொண்ட ஈசன் கங்கை நீர், பிரம்மன் கமண்டல நீர், அம்மையின் கொங்கைப்பால், கொண்டல் (மேகம்) நீர், இடப நந்தியின் வாய்நுரை நீர் என்னும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார். செப்பேசரின் புண்கள் நீங்கின; உடல் பிரகாசம் கொண்டது.

ஈசன் அருள்பெற்ற செப்பேசருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் சிலாதர். அதன்படி வசிஷ்ட முனிவரின் பௌத்ரியும், வியாக்ரபாத முனிவரின் புத்ரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம் பிரகாசையை செப்பேசருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவும், திருமணஊர்வலமும் மிகச்சிறப்பாக நடந்தேறின.

திருவையாற்றைச் சுற்றியுள்ள தலங்களான திருவேதிக்குடியிலிருந்து வேதியர்களும், திருப் பூந்துருத்தியிலிருந்து பூக்களும், திருப்பழனத்திலிருந்து பழங்களும், திருச்சோற்றுத் துறையிலிருந்து உணவு வகைகளும், திருநெய்த்தானத்திலிருந்து நெய்யும், திருக்கண்டியூரிலிருந்து செப்பேசருக்கான நகைகளும் வரவழைக்கப்பட்டன.

செப்பேசர் ஐயாறப்பரிடம் உபதேசம் பெற்று கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியையும், சிவபெருமானுக்கு வாயில் காப்போனாகும் பதவியையும், சைவாச்சார்யார்களுள் முதல் குரு என்ற தன்மையையும் பெற்றார். இத்தகைய பெரும் பேறுகளைப் பெற்ற செப்பேசர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.

நந்திதேவருக்கும் சுயம் பிரகாசைக்கும் நடந்த திருமண நிகழ்வு திருமழபாடியில் ஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண் டாடப்படுகிறது. திருவையாற்றிலிருந்து பஞ்சநதீஸ்வரர் வந்து திருமணத்தை நடத்திவைப்பது வழக்கம்.

காவிரியின் இருமருங்கிலும் அமைந்துள்ள திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு தலங்களும் சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படுகின்றன.

சித்திரை பௌர்ணமியை அடுத்துவரும் விசாக நட்சத்திரத் தன்று, திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர்த்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நந்திதேவர் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு தலத்து மூர்த்திகளுக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு ஐயாறப் பரும் அறம்வளர்ந்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கிலும்; நந்தியெம்பெருமான் வெட்டிவேர் பல்லக்கிலும் ஆறு தலங்களுக்கும் எழுந்தருள்வர்.

அந்தந்த தலத்து மூர்த்திகளும் இவர்களை எதிர்கொண்டழைப்பர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அம்மூர்த்திகளும் உடன்வர, நந்தியெம்பெருமானும் ஏழூர் மூர்த்திகளும் திருவையாற்றில் எழுந்தருள்வர். இவ்விழாவை திருநந்தி தேவர் திருமண ஊர்வலம் என்பர். பல்லக்குகளின் அலங்காரமும் வீதிகளில் அவை உலாவருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு திருமுறைப்பாராயணம், சிவஸ்துதிகள் செய்தபடி பல்லக்குகளைப் பின் தொடர்ந்து வலம்வருவதன் மூலம் நலன்கள் பல பெறுகிறார்கள்.

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஏழூர்த்திருவிழா பக்தர்கள் கண்டு களித்துப் பலன்பெறவேண்டிய சிறப்பான விழாவாகும்.


கந்தனின் தந்தையை தான் கவனமாய் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
நந்தியே உம்மை துதித்தேன் நாடி வந்து எமை காப்பாய்


??????? ????????
 
அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?

அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?


p62a.jpg


அரச மரத்தில் அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம்.

அகிம்சையை போதித்த புத்தர், இந்த அரச (போதி)மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்துதான் ஞானியாக ஆனார்.


வ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த: மரங்களுக்குள் நான் அரச மரமாக இருக்கிறேன் என்கிறார் கண்ணபிரான் கீதையில். அதாவது அனைத்து மரங்களிலும் எனது (தெய்வ) சக்தி காணப்பட்டாலும் கூட, பிப்ப லாதம் என்னும் அரச மரத்தில் எனது தெய்வ சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதே இதன் கருத்து. மேலும், மூலதோ ப்ருஹம் ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே , அக்ரத: ‡வரூபாய வ்ருக்ஷராஜாய தே நம:

என்பதாக, அரச மரத்தின் அடிப்பகுதியில் ப்ருஹ்மதேவனும், நடுப்பகுதியில் ஸ்ரீ மஹா விஷ்ணுவும், நுனிப்பகுதியில் ஸ்ரீபரமசிவனும் எப்போதும் வாசம் செய்கிறார்கள்.

ஆகவே தான், மும்மூர்த்தி வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதக்ஷினம் செய்வதும் நமஸ்கரிப்பதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்
.

சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணிவரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும், நமது உடலுக்கும் நன்மையைத் தரும். அந்த நேரத்துக்குப் பிறகு - அதாவது ஸங்கவ காலம் எனப்படும் காலை சுமார் 10.40 மணிக்கு மேல், அரச மரத்திலிருந்து வெளிப்படும் காற்று நன்மையைத் தராது. தவிர, புத்தி வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலுடையது. ஆகவே காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள், பிரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழி பாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
 
'vaataapi jeernam, vaataapi jeernam'

'vaataapi jeernam, vaataapi jeernam'

agastya%20rishi.jpg




Ilvala and his brother Vatapi cherished an implacable hatred towards brahmanas. They had curious plan for killing them. Ilvala would, with effective hospitality, invite a brahmana to a feast. By the power of his magic he would transform his brother Catapi into a goat and he would kill this pseudo-goat for food and serve its meat to the gust. In those days, the brahmanas used it eat meat.

The feast over, Ilivala Would invoke his brother Vatapi to come out, for he hat the art of bringing back to life those whom lie had killed. And Vatapi, who as food had entered the vitals of the unlucky brahmana, would spring up sound and whole and rend his way out with fiendish laughter, of course killing the gust in doing, so. In this manner, many brahmanas had died.
\

Ilvala was very happy when he learnt that Agastya was in the neighborhood, since he felt that here was good brahmana delivered into his hands. So, lie welcomed him and prepared the usual feast. The sage ate heartily of Vatapi transformed into a goat, and it only remained for livala to call out Vatapi for the rending scene. And, as usual, Ilivla repeated the magic formula and shouted: "Vatapi-come Out!"


Agastya smiled and, gently rubbing his stomach said:
'vaataapi jeernam, vaataapi jeernam' "O Vatapi, be digested in my stomach for the peace and good of the world."

Ilvala shouted again and again in frantic fear: " O Vatapi, come forth."


There was no response and the sage explained the reason. Vatapi had been digested. The trick had been tried once too often.


The asura bowed to Agastya and surrendered to him the riches he sought. Thus was the sage able to satisfy Lopamudra's desire.


Agastya asked her what she would prefer whether ten ordinarily good sons or one super good son with the strength of ten. Lopamudra replied she would like to have one exceptionally virtuous and learned son. The story goes that she was blessed with such a gifted son.




https://drive.google.com/file/d/0B2KCzQUKGe9Oa2c1dnZVYW5KZWM/view?pli=1
 
ஆரத்தி எடுப்பது ஏன்

ஆரத்தி எடுப்பது ஏன்

Tamil-Daily-News-Paper_7268291711808.jpg



நம் முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை. சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம் அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள் மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தபட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்து என்று கூறி வருகிறோம்.

ஒவ்வொரு மனிதனை சுற்றிலும் ஆரா என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது. மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை ஆந்த சூட்சுமம் பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷக்கிருமிகளை பரவாது காக்கிறது. வீட்டினுள் நுழையும் முன்பே ஆரா சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தபட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அதுபோல் ஆரத்தி எடுக்கும்போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக நாம் பெற முடியும்.


Dinakaran - Taking Arati you know why? |?????? ???????? ??? ?????????
 
பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப்பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.


பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென்கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.


பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப் பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அல மாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதுண்டு. அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும்.


சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்க வேண்டும். ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய்விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண்ணங்களை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப்படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

???? ??? ?????? ?????? ????????? - ??? ????????
 
How many times we have to do Pradaksina?

How many times we have to do Pradaksina?



For each deity, the minimum number of PRADAKSHINA to be done is specified.

Lord Ganesha – 1 Pradakshina
Lord Shiva – 2 Pradakshina
Lord Vishnu – 3 Pradakshina
Lord Ayyappa – 4 Pradakshina
Lord Subramaniya – 5 Pradakshina
Goddess Durga – 6 Pradakshina
Peepal Tree – 7 Pradakshina

But it is good if you do, 21 Pradakshina to any deity, it is considered as Sanctified.

The Mantra which devotees has to recite while doing Pradakshina is

“Yaani Kaani Cha Paapani Janmaantara Krutani Cha Taani Taani Vinashyanthi Pradakshinam Pade Pade”

Meaning: The sins committed by an individual from his in-numeral past births are destroyed by each step taken whilst doing the Pradakshina.




How many times we have to do Pradaksina?
 
தர்ப்பைப்புல்லின் மகத்துவம் :

தர்ப்பைப்புல்லின் மகத்துவம் :

நம்மால் காண முடியாத தீய கதிர்வீச்சுக்களை நமக்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி தர்ப்பை புல்லுக்கு உண்டு. மந்திரங்களை தேக்கி வைத்துக் கொள்ளும் சக்தி கொண்டது அது.

வைதீகக் காரியங்களைமேற்கொள்ளும்போது எந்த அமானுஷ்ய இடையூறும் ஏற்பட்டுவிடாதபடி தர்ப்பை காக்கிறது. அதனை மடக்கி, முடிச்சிட்டு பவித்ரமாக அணிந்துகொண்டு, நம்மைச் சுற்றிலும் இரண்டிரண்டாக தர்ப்பையைப் பரப்பி வைத்துக்கொள்வதும் இதற்காகத்தான். தர்ப்பையை அக்கினியின் பிரதிநிதி என்று சொல்வார்கள். ஆதி நாளிலிருந்தே கிரகண காலங்களில் பெரியவர்கள் எல்லா உணவுப் பொருட்களிலும் தர்ப்பையை கிள்ளிப் போடுவர்.

கிரகணத்தின்போது தீய கதிர்வீச்சுக்கள் உணவை பாதிக்காத வண்ணம் தர்ப்பை பாதுகாக்கிறது. ஒரு இடிதாங்கிபோல தர்ப்பை செயல்படுகிறது.

பாணிணி என்கிற முனிவர் கௌமுதி என்கிற மாபெரும் நூலை எழுதியபோது பவித்ர பாணியாக விரல்களில் தர்ப்பை பவித்ரத்தை அணிந்து எழுதினார் என்று மகாபாஷ்யம் தெரிவிக்கிறது. அலைபாயும் புத்தியைக் கட்டுப்படுத்தி அதைக் கூர்மையாக்கும் தர்ப்பை, உடல் வலிமையையும் வளர்க்கிறது. காரியத்தை மேற்கொள்ளும்போது நமக்குள்ளிருக்கும் சக்தி பிரவாகமாகப் பொங்கிவர தர்ப்பை உதவுகிறது. நம் சார்பாக காரியங்களை செய்ய புரோகிதருக்கு அதிகாரத்தை மாற்றும்போதும், பெண்கள் பித்ரு காரியங்கள் செய்ய நேரிடும் போதும் மற்றவருக்கு தன் கையாலேயே தர்ப்பையை கொடுக்கலாம் என்று வேதங்கள் வழிமுறைகளை வகுத்திருக்கின்றன.

அதாவது, காரியங்கள் செய்பவர் வேறானாலும் காரிய கர்த்தாவின் அம்சமாக தர்ப்பையே விளங்குகிறது. தர்ப்பை அஸ்திரம் போன்றது. மந்திரங்களை ஏற்றி ஏவினால் ஏவுகணைபோல பாயும் வீர்யம் கொண்டது. ஆலய கும்பாபிஷேகத்தின்போது தர்ப்பை மூலமாக மந்திர சக்திகளை கலசங்களில் ஆவாஹனம் செய்வார்கள்.

அதாவது, ஆண்டாண்டு காலமாக கோயிலின் சாந்நித்தியம் நிலைத்திருக்க இந்த தர்ப்பை உதவுகிறது. அதேபோல பிரம்மோற்சவம் போன்ற கோயில் திருவிழாக்களின் துவக்க கட்டமாக கோயில் கொடிமரத்தில் தர்ப்பையினால் ஆன கொடியை ஏற்றிவிட்டுதான் அடுத்தடுத்த கட்ட இறைப் பணிகளில் இறங்குவார்கள். தர்ப்பைப் பாயில் (தர்ப்பாசனம்) அமர்ந்து தியானம் செய்தால் மிக எளிதில் தியானம் சித்திக்கும்.

சுபகாரியங்களோ அல்லது மற்ற காரியங்களோ எது செய்ய வேண்டுமானாலும், தர்ப்பை அணிவது இந்துமதத்தின் மரபு. தர்ப்பையை வலதுகை மோதிர விரலில் அணியவேண்டும்.

இதற்காக தர்ப்பையில் மோதிரம் போன்ற வளையம் செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின் நுனிப்பகுதிதான் முக்கியமானது. இது மின்காந்தப் பாதையில் வரும் தடைகளை நீக்குகிறது. ஒரு டாக்டர் தர்ப்பையை பரிசோதித்தபோது அது அறுபது சதவிகித எக்ஸ்ரே கதிர் வீச்சுகளை வாங்கிக் கொள்வதைக் கண்டாராம். ஆகவே, தர்ப்பை மேலும் பல கதிர்வீச்சுகளை அடக்கிவிடும் என்றும் நம்பப்படுகிறது. அதனால்தான் சில வேத மந்திரங்களை உச்சரிக்கும்போது தர்ப்பை அணிவது கட்டாயமாகக் கருதப்படுகிறது. தர்ப்பை ஒரு வகைப்புல். இதை எங்கு வேண்டுமானாலும் பயிரிடலாம் என்று எண்ணுவது தவறு. இது தானாக வளர வேண்டும். அனேகமாக இந்தியா முழுவதும் இது விளைகிறது.

ஒரு புல்லைக் கொண்டு செய்யும் தர்ப்பம் இறப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளிலும், இரண்டு புற்களைக் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் தினசரி நடைமுறைகளுக்கும், மூன்று புற்கள் கொண்டு செய்யப்படும் தர்ப்பம் அமாவாசை தர்ப்பணம் போன்றவற்றிலும், நான்கு புற்களினால் செய்யப்பட்ட தர்ப்பம் கோயில் நடைமுறைகளுக்கும் பயன்படுகின்றது.

அக்னிகுண்டத்துக்கு நாலுபக்கமும் தர்ப்பை வைக்கப்படுகிறது. சுத்தி புண்யாஹவாசன நேரத்தில் கையில் பிடித்துள்ள தர்ப்பையின் நுனி தண்ணீர் பாத்திரத்தில் பட்டு அதிர்வுகளை மந்திர உச்சாடணத்தோடு சேர்ந்து நீக்குகின்றன. தர்ப்பைப்புல்லை எடுப்பதற்கும் சில மந்திரங்கள் உண்டு. பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று தான் இந்த புல்லை சேகரிக்க வேண்டும்.


தர்ப்பையைக் கொண்டே வேத காலங்களில் தவறான அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தினார்கள் என்பது இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு தெரிய வேண்டிய ஒன்று.

Sage of Kanchi

Balaji Iyer
 
தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை

தெய்வமாலை சுத்தம் செய்யும் முறை


கழுததில் அணிய வேண்டிய ருத்ராட்ச மாலையை பாலில் சிறிது கல் உப்பு போட்டு சுத்தநீரில் கழுவி வைக்கவும். ருத்ராட்ச மாலை சுத்தபடுத்தி இதற்கன மந்திரம் 9 முறைகிழ உள்ளவாறு கூறவும். ருத்ராட்ச மாலையை கையில் வைத்துக் கொண்டு பயபக்தியுடன் மந்திரம் கூறவும்
ஓம் ஐயும் கிலியும் செளவும் ஸ்ரீயும்

ஹரிம்ஓம் நமசிவாய ஓம் சிவநேத்ராய


ருத்ராட்சாய நம;



ருத்ராட்ச மாலையை மட்டும் பெற்றோரிடம் அல்லது தான் மதிப்பவரிடம் கொடுத்து அணித்து கொள்ளவும்..அவர்கள் காலில் விழுந்து வாங்கிக் கொள்ளவும்
அணிந்த பிறகு ருத்ராட்ச மாலையை காரணமில்லாமல் களாட்டக் கூடாது. .சுய கட்டுப் தேவை

????? ???? ?????????? ????????? ????? : ????????? ??????? ???????? ????

 
புண்ணியம் செய்தல் வேண்டும்

புண்ணியம் செய்தல் வேண்டும்

நம் சந்ததியருக்கு
எதை சேர்த்து வைக்கவேண்டும் ..?
புண்ணியங்களையா ..?
பாவங்களையா ……….?

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமப்பவர்கள்…!
நாமோ நமது முன்னோர்களின் கர்மாவை சுமக்கிறவர்கள்…!!
ஆக நாம் எல்லாரும் ஒருவகையில் கர்மாவை சுமக்கும் வாகனங்களே ..!!

நமது முன்னோர்களின் பாவ புண்ணியங்களின் விளைவுதான் நாம்..!
நமது பாவ புண்ணியங்களின் விளைவுகள்தான், நமது சந்ததிகள்.. !
நம் தாத்தாக்கள், கொள்ளுத் தாத்தாக்களின் ஜீன், நம்மிடம் இருக்கிறது என்பதை விஞ்ஞானம் ஒப்புக்கொள்கிறது. அதனால்தான் மருத்துவர் கேட்கிறார் “இந்த நோய், உங்கள் அப்பா அம்மா – தாத்தா பாட்டிக்கு இருந்ததா?’ என்று.

நோய் மட்டுமல்ல; பண்பு, அறிவு, குணம், ஞானம், நடை, உடை, பாவனை, செயல்பாடு, புத்தி சாலித்தனம் வெற்றி தோல்வி இவை எல்லாமும் வழிவழியாக சந்ததிகள் வழியே பயணிக்கிறது.
தாத்தா வழியாக வந்த நோய்க்கு நாம் மருந்து எடுத்துக்கொண்டு பரிகாரம் தேடுவதுபோல், அவர்கள் வழியாக வந்த நமது தீய அம்சங்களுக்கும் எதிர்மறைகளுக்கும் ஆன்மிகம் மூலம் நாம் தீர்வைத் தேடுகிறோம்.

நீ செய்யும் தீவினையைக் கண்டவர் யாரு மில்லை
என்ற கற்பனையில் நீ உலாவ ..
உன்னிலிருப்பவனே பதிந்திட்டுக்
காத்திருப்பான் காலத் திற்காக ..
தக்க தருணத்தில் வெளியிடுவான் ..
அதை நீ அனுபவிக்க …
என்பதே மெய்ஞ்ஞானம்.

நம் சந்ததிகள் நமது கர்மாவை சுமக்காமல் இருக்க நாம் நமது பிந்தைய தலைமுறை பயன் படும் வகையில் நாம் புண்ணியம் செய்தல் வேண்டும்.

ஆக என்ன செய்தால் எத்தனை தலை முறைக்கு புண்ணியம் என்பதைப் பார்ப்போம் …!
நாம் செய்யும் நற்காரியங்கள் எத்தனை தலை முறைக்கு சென்றடையும் என்பது குறித்து கேட்டவரையில் சில இங்கே :

பட்டினியால் வருந்தும்
ஏழைகளுக்கு உணவளித்தல்
…….. 3 தலைமுறைக்கு.

புண்ணிய நதிகளில் நீராடுதல் ……..3 தலைமுறைக்கு.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுதல் ….5 தலைமுறைக்கு.

அன்னதானம் செய்தல் ………………..5 தலைமுறைக்கு.

ஏழைப்பெண்ணுக்கு
திருமணம் செய்வித்தல் ……………. 5 தலைமுறைக்கு.

பித்ரு கைங்கர்யங்களுக்கு
உதவுவது ……………………………………6 தலைமுறைக்கு.

திருக்கோயில் புனர்நிர்மாணம் ……..7 தலைமுறைக்கு.

அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திம கிரியை செய்தல் ……………..9 தலைமுறைக்கு.

பசுவின் உயிரைக் காப்பாற்றுவது ..14 தலைமுறைக்கு.

முன்னோர்களுக்கு கயாஷேத்திரத்தில்
பிண்டம் அளித்து திதிபூஜை செய்தல் ..21 தலைமுறைக்கு.

நாமும் முடிந்தவரை புண்ணியம் செய்வோம்…!
நமது பிந்தைய தலைமுறையாவது நன்றாக இருக்கட்டும் ..!!



????????? ??????? ???????? | Venkatachalam Nagappan
 
அபிசார தோஷம் (செய்வினை) - பாதிப்பும் பரிகா&#29

அபிசார தோஷம் (செய்வினை) - பாதிப்பும் பரிகாரமும்

அபிஷார தோஷம் என்பது வழக்கில் செய்வினை என்று அழைக்கப்படுகிறது. மாந்திரீக கலையை பயன்படுத்தி தன் விரோதிகளை அழிப்பது செய்வினை ஆகும். இந்த மாந்திரீக வேலைகளுக்கு க்ரூதகி - யக்ஞனி போன்ற துர் தேவதைகளை வசியப்படுத்தி அதன் மூலம் ஏவல் விடப்படுகிறது. செய்வினை ஒருவருக்கு செய்யப்பட்டால் அதனால் அவர் 12 வருட காலமும், யார் செய்தார்களோ அவர்கள 98 வருடமும் பாதிக்கப்படுவர். அவர்களின் வம்சாவழியும் பாதிப்படையும். ஆதலால் யாரும் செய்வினை காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

செய்வினை ஏவலை மிக சுலபமாகவும் செய்துவிட முடியாது. ஏனென்றால் இதனை செய்ய ஊர் தெய்வ உத்தரவு, குல தெய்வ உத்தரவு, உங்கள் ஜாதக கிரக நிலை இவற்றை அறிந்துதான் செய்வினை, ஏவலில் ஈடுபடமுடியும்.




செய்வினையால் ஏற்படும் பாதிப்பு :
உங்களுக்கு செய்வினை பாதிப்பு இருந்தால் அதனால் செய்து வைத்த உணவு நிறம் மாறும், உணவில் மனித உறுப்புகள் கிடக்கும், செய்து வைத்த உணவில் துர்நாற்றம் வீசும், வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் இறக்கும். பயங்கரமான உருவங்கள் கனவில் வந்து மிரட்டும். இரவில் வீட்டில் மனிதர் ஓடுவது, கற்கள் வீசுவது ஆகியவையும், உடலில் இனம் புரியாத நோய் உருவாகும், சேர்த்துவைத்த செல்வம் கரையும், மனம் பேதலிக்கும், தன்னிலை மறக்க வைக்கும்.

பரிகாரம் : குல தெய்வ வழிபாடும், ஊர் தெய்வ வழிபாடும் செய்து வரவும். வீட்டில் மஹாசுதர்சன ஹோமம், மஹா மிருத்யுஞ்ச ஹோமம், கனபதி ஹோமம் செய்யவும். இதிலும் தோஷம் தீராதவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

 
தண்ணீர் தெய்வம்: அறியப்படாத சமயம்- 'மம்ம&#30

தண்ணீர் தெய்வம்: அறியப்படாத சமயம்- 'மம்மி வாட்டா'


mummy_2346167g.jpg


இயற்கையைத் தெய்வமாக வழிபடும் மரபு உலகம் முழுவதும் இருந்துள்ளது. கிறிஸ்துவம், இஸ்லாம், இந்து போன்ற பெரும் மதங்கள் தோன்றுவதற்கு முன்பு இருந்த நாட்டார் தெய்வங்கள் அனைத்தும் இயற்கையைக் குறிப்பவைதான். மம்மி வாட்டா (Mami wata) அம்மாதிரியான தெய்வங்களுள் ஒன்று.


மம்மி வாட்டா, பரவலாக ஆப்பிரிக்கா முழுவதும் வணங்கப்பட்டுவரும் பெண் தெய்வம். இதன் வரலாறு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வரை செல்கிறது. மம்மி வாட்டா என்ற சொற்களின் அர்த்தம் ‘தண்ணீர்த் தாய்’ எனச் சொல்லப்படுகிறது. Water Mother என்னும் ஆங்கிலச் சொற்களில் இருந்து இந்தச் சொல் உருவானதாகவும் சொல்லப்படுகிறது.


ஆனால் பழமையான எகிப்திய மொழியில் இருந்து திரிந்த சொற்கள்தான் இவை எனத் தற்கால ஆய்வுகள் சொல்கின்றன. இந்தச் சான்றின் அடிப்படையில் மம்மி வாட்டா வழிபாடு முதலில் எகிப்தில் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது.



மம்மி வாட்டா கோயில்



மம்மி வாட்டா உருவம் கலை ரீதியாக இன்றும் கொண்டாடப்படும் தொன்ம வடிவமாக உள்ளது. மம்மி வாட்டா சிலைகள் கி.பி. 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனச் சொல்லப்படுகின்றன. இன்று கிடைக்கும் மம்மி வாட்டா ஓவியங்கள், மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருகின்றன. அடர்ந்த சுருள் கூந்தலை விரித்துப் போட்டிருக்கும் மம்மி வாட்டா தோளின் குறுக்காக மலைப்பாம்பை அணிந்திருப்பாள்.

பழமையான சிலைகளிலும் இந்த உருவமே செதுக்கப்பட்டிருக்கிறது; ஆடைகள் எதுவும் அணிந்திருக்கவில்லை. பிற்காலப் படங்கள் மம்மி வாட்டாவை ஆடையுடன் பிரம்மாண்டமாகச் சித்திரிக்கின்றன. மம்மி வாட்டா கோயில்கள் ‘மமஸ்ஸீ’ (mamaissii) என அழைக்கப்படுகின்றன. இந்தக் கோயில்களில் பெண்களே பூசாரி களாக உள்ளனர். அவர்களும் ‘மமஸ்ஸீ’ என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறார்கள். தமிழ்த் திராவிட வழிபாட்டுக்கும் மம்மி வாட்டா வழிபாட்டுக்கும் தொடர்பு இருப்பதாக விவியன் ஹண்டர் ஹிண்ரோவின் ஆய்வு முடிவு சொல்கிறது.


மிகப் பழமையான மம்மி வாட்டாவின் கரு எனச் சொல்லப்படும் ஒரு வழிபாட்டுச் சிற்பத்தைத் தமிழ் லிங்க வழிபாட்டுடன் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு ஹிண்ரோ வருகிறார். இந்தியாவிலும் தண்ணீரைப் பெண் தெய்வமாக வழிபடும் வழக்கம் இருக்கிறது. இங்குள்ள காளி வழிபாட்டுடனும் இதை ஒப்பிடுகிறார் அவர்.


அருளும் துடியான தெய்வம்



நம்முடைய நாட்டார் தெய்வங்களைப் போல மம்மி ஆப்பிரிக்க கண்டப் பகுதிகளில் துடியான தெய்வமாகப் போற்றப்படுகிறாள். சொல்லுக்கடங்காத சூரத்தனங்கள் கொண்டவளாகவும் மம்மி வாட்டா தொன்மக் கதைகளில் சித்திரிக்கப்படுகிறாள். அவளது ஆக்ரோஷத்தை வெள்ளப் பெருக்குக்கும் அவளது கருணையை நீரின் அமைதிக்கும் ஒப்பிடுகிறார்கள்.


துன்பங்களை, வலிகளை, பாவங்களை வாங்கிக்கொண்டு மக்களுக்கு மனசாந்தியை வழங்கக்கூடியவள் மம்மி வாட்டா. குழந்தையில்லாப் பெண்களுக்கு குழந்தைப் பேற்றை அருளக்கூடியவாளாகவும் மம்மி வாட்டா வணங்கப்படுகிறாள். இன்றைக்கு மம்மி வாட்டா வழிபாடு கியூபா, பிரேசில், நைஜீரியா, கானா, ஜமைக்கா, ஹெய்டி எனப் பல்வேறு நாடுகளில் பரவியிருக்கிறது.

??????? ????????: ?????????? ?????- '????? ??????' - ?? ?????
 
விக்ரகங்களை கருங்கல்லால் ஏன் செய்கிறார&#

விக்ரகங்களை கருங்கல்லால் ஏன் செய்கிறார்கள்?

கோயில் மூலஸ்தானத்தில் உள்ள விக்ரகங்களை உலோகத்தால் செய்யாமல் கருங்கல்லால் மட்டுமே செய்கிறார்கள். (ஒரு சில கோயில்களில் சுதை, மரத்தாலும் செய்யப்படுவது விதி விலக்கு). இதற்கு முக்கியமான காரணம் உண்டு. உலகத்தின் ஆற்றலை விட கல்லின் ஆற்றல் பலமடங்கு அதிகமானது. எந்த சக்தியையும் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் தன்மையுடையது கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் தன்மை விசேஷமாக அடங்கியிருந்து வெளிப்படுவது போல் வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

1. கல்லில் நீர் உள்ளது. எனவே தான் இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. (கல்லினுள் நீருற்று இருப்பதை காணலாம்)

2. பஞ்சபூதத்தில் நிலம் என்ற பூதமும் கல்லில் உள்ளது. எனவே தான் கல்லில் செடி, மரம் வளர்கிறது.

3. கல்லில் நெருப்பு உண்டு. கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறது.

4. கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் தேரை கூட வசிக்கிறது.

5. ஆகாயத்தை போல வெளியிலிருக்கும் சப்தத்தை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு. எனவே தான் கருங்கல்லால் கட்டப்பட்ட சில கோயில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது. (உதாரணம்: திருவையாறு ஐயாறப்பன் கோயில்). எனவே தான் ஐம்பூத வடிவிலிருக்கும் ஆண்டவனை, ஐம்பூத பொருளான கல்லில் வீற்றிருக்கும்படி அமைத்து வழிபாடு செய்யப்படுகிறது.

THIRUVAZHMUDI EESWARAR SAMEDHA THIRIBURA SUNDHARAMBIGAI: ??????????? ???????????? ??? ??????????????
 
How to do Pradakshina in Shiva Temple?


How to do Pradakshina in Shiva Temple?



PRADAKSHINA is always done only in a clockwise manner, the reason behind this is that we have to keep the Lord always on our right.

In India the right side symbolizes auspiciousness. So as we circumambulate the sanctum sanctorum. We remind ourselves to lead an auspicious life of righteousness, with the Lord who is the indispensable source of help and strength, as our guide - the "right hand".

Indian scriptures enjoin –

MATRUDEVO BHAVA (WORSHIP MOTHER AS GOD),
PITRUDEVO BHAVA (WORSHIP FATHER AS GOD) and
AACHARYADEVO BHAVA (WORSHIP TEACHER/GURU AS GOD)


You have to consider your parents and teachers as you would the Lord. With this in mind we also do PRADAKSHINA around our parents and divine personages.



After the completion of traditional worship (PUJA), we customarily do PRADAKSHINA around ourselves. In this way we recognize and remember the supreme divinity within us, which alone is idolized in the form of the Lord that we worship outside.

How to do Pradakshina in Shiva Temple?

In Shiva temples, the devotees start the PRADAKSHINA as usual from the front and go clockwise till they reach the GOMUKIHI (the outlet for ABHISHEKA water) from the Sanctum Sanctorum.

As usual the clockwise perambulation is maintained outside of the Bali stones. The outlet for the ritual ablution offered on the Shivalinga with water, milk, curd, coconut water, ghee, ashes (Vibhuthi/Basma), etc. is not to be crossed.

So the worshippers have to return in anti-clockwise direction till they reach the other side of the Gomukhi outlet to complete the circle. During this anti-clockwise perambulation, the devotee should tread a path inside of the Bali stones. The Bali stone is always to be kept to the right side of the devotees. After reaching the Gomukhi outlet, they have to return to the front in the clockwise direction keeping the path outside the Bali stones.

Thus one PRADAKSHINA is completed. If you don’t find a BALI stone it doesn't matter, make sure you don’t cross GOMUKHI.


bell-icon.png





How to do Pradakshina in Shiva Temple?
 
The gayatri mantra :

THE GAYATRI MANTRA :

Om Bhoor Bhuvah Swah
Tat Savitur Vareniyam
Bhargo Devasya Dhimahi
Dhiyo Yonah Prachodayat .

ஓம் பூர் புவஹ் ஸ்வாஹ்
தத் சவிதூர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்

MEANING: "May the Almighty God illuminate our Intellect and lead us on to the Righteous Path”.

Gayatri is known as Vedmata , Devmata and Vishwamata

VEDMATA – Gayatri Shakti is called Vedmata as the Vedasoriginated from the Gayatri Mantra.


DEVMATA – She is known as Devmata because she helps in themanifestation of divine virtues (gun), actions (karma) and nature(swabhav) in her devotees .



VISHWAMATA – She is known as Vishwamata as she givesinspiration for the establishment of a universal family“Vasudhaiva kutumbakam” . That is regarding every humanbeing in the world as being part of one’s own family.

GAYATRI is known as The Guru-mantra. In all the Mantras, it is the best and most supreme. Gayatri Mantra was the first lesson taught in schools in ancient times, as the purpose of education is to attain WISDOM , or the highest form of RIGHTEOUS INTELLIGENCE.

The 24 letters of the Gayatri Mantra have been designed in such a way that the mere chanting of this Mantra activates subtle energies in the subtle nerves (Naadis) of the tongue, throat, brain centre and the palate.

Gayatri Mantra is the only Mantra which when chanted OPENS and LINKS ALL the SUBTLE ENERGY CHAKRAS present in our body.NO OTHER MANTRA does the same.The Naadis (subtle nerves) of the mouth transport the impulses of Gayatri Mantra chanting, to the various Chakras of the body thereby creating an uninterrupted flow of divine cosmic energy.

The chanting of the Gayatri Mantra subtly commences and awakens the subtle energy centers of ourbody, thereby benefiting the devotee extraordinarily both materially and spiritually.As righteous intellect, and discriminating faculties develop it is only natural that physical, material and spiritual benefits follow. The Gayatri Mantra Sadhana results in a well organized scientific process of spiritual growth. Gayatri Sadhana is notbased on blind faith but has a solid scientific basis to the same.

His Holiness Jagat Guru Sri Sri Shankaracharya says
-


“it is beyond human competence to describe the glory of Gayatri. Nothing is more important in the worldthan to attain spiritual wisdom, which is inspired by Gayatri Sadhana.Gayatri is the primordial mantra. Its Sadhana destroys sins and promotes virtues.”

Swami Vivekananda said,


“only that thing should be begged from a KING which befits his dignity. Therefore Spiritual wisdom alone is the most suitable gift which should be asked from God. Gayatri mantra is imbued with spiritual wisdom and, therefore, it has been acclaimed the greatest of all the mantras.”

Shri Ramakrishna Paramhamsa stated:


“ I tell people that it is not necessary to get engaged incomplicated Sadhanas. Perform simple Gayatri Sadhana and see the results. Great Siddhis are attained by Gayatri Sadhana.This Mantra is short, no doubt, but it is extremely powerful.”

Dr.Howard Steingeril, an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory.. Hindus' Gayathri Mantra produced 110,000 sound waves per second.. This was the highest and was found to be the most powerful hymn in the world. Through the combination of sound or sound waves of a particular frequency, the Mantra is claimed capable of developing specific spiritual potentialities. The Hamburg university initiated research into the efficacy of the Gayathri Mantra both on the mental and physical plane of CREATION.

The GAYATHRI MANTRA is broadcast daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.






Gayatri Mantra - IMPORTANCE
 
ராமனின் இன்னொரு அம்மா

ராமனின் இன்னொரு அம்மா

மார்ச் 25,2015,11:01 IST



large_110115211.jpg


ராமாவதாரம் ராவண வதத்திற்காக நிகழ்ந்தது என்பர். ஆனால், உண்மையில் ராமன் இந்த பூமியில் அவதரிக்க காரணமாக இருந்தவர்கள் கவுதமரும், அகலிகையும் தான். சந்தர்ப்ப சூழலால் மனைவியைக் "கல்லாகப் போ' என்ற சபித்த கவுதமர், அதற்கு விமோசனமாக "பகவான் நாராயணன் ராமாவதாரம் எடுத்து பூமிக்கு வருவார். அவரது பாதம் எப்போது உன் மீது படுகிறதோ அப்போது சுயவடிவம் பெறுவாய்,'' என்றார்.

அதன்படி ராமனின் பாதம் பட்டதும் சுயவடிவம் பெற்றாள். தன்னுடன் வந்த விஸ்வாமித்திரரிடம், ""இந்த அன்னைக்கு ஏன் இக்கதி நேர்ந்தது?'' என்று கேட்டார். பெற்றவளான கோசலையை மட்டுமல்ல!
அகலிகையையும் "அம்மா' என்று அழைத்து அவளுக்கு பெருமை சேர்த்தார்.

Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
குளித்துவிட்டு காலையில் மட்டும் சொல்லவ&#



இவைகள் ஹோம மந்திரங்கள்.

குளித்துவிட்டு காலையில் மட்டும் சொல்லவேண்டும்



உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.



அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்விநௌ ப்ரசோதயாத்



பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்



கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்



ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்



மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்



திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்



புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்



பூசம்
ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்



ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்



மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்



பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபல்குநீ ப்ரசோதயாத்


உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்



அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்



சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்



சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்


விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்



அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்



கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்


மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்



பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்



உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்



திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்



அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ ஸ்ரவிஷ்டா ப்ரசோதயாத்


சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்



பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்



உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்



ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

Thanks:
Astrologer Krishnamoorthi


WORLD BRAHMINS
 
ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்

ஆலயம் சென்று வழிபடுவோர் கவனிக்கவும்


1. ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.
2. முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.
3. போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம்.
4. குடும்பத்தோடு செல்வது நல்லதுதான். அதற்காக பூஜையை வாரக்கணக்கில் தாமதப்படுத்தக் கூடாது.
5. புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும், பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்ப்பீர். மற்ற விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை.

6. போகும்போதா வரும்போதோ யாருக்கும் பிச்சை போட வேண்டாம்.
7. பெண்கள் வீட்டுக்கு விலக்காகி 7 நாட்கள் கழித்துச் செல்வது நல்லது.
8. யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர்.
9. போகும்போதோ வரும்போதோ குல தெய்வத்தை வழிபடலாம். தோஷமில்லை.
10. தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த பூஜையும் பலன் தராது.

11. சுவாமி தரிசனம் சிலமணி நேரம் ஆகும் என்பதால் புறப்படுவதற்கு முன்பு பன், டீ, பிஸ்கட், காபி, ரஸ்க், டிரை ப்ரூட்ஸ், கூல்ட்ரிங்ஸ், போன்ற ஸ்லைட் ஃபுட் சாப்பிடலாம்.
12. பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்யவும்.
13. ஆலயம் வர இயலாதவர்கள், வெளி நாடு வாசிகள், விரும்பாதவர்கள் இவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள், விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலிதமாகும்.
14. பூஜைக்காக தாங்கள் நேரம், பணம் செலவழிப்பது பெரிய விஷயமல்ல. கணிந்த, தாழ்ந்த, முறையான பக்தி மனோபாவமே பலனை நிர்ணயம் செய்கிறது.
15. முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது.

16. பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஹோரையில் செய்யுங்கள்.
17. தேவையான காலம் வரை வருடத்திற்கு ஒரு முறையாவது இப்பூஜையை செய்ய வேண்டும்.
18. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது.
19. பொழுதுபோவதற்காக (சுற்றுலா) ஆலயம் செல்லாதீர்.
20. தங்கள் சக்திக்கேற்றபடி பூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சாதாரண பூஜை செய்தால் பலிக்காது. எளியவர்கள் கடன் வாங்கி பெரிதாக செய்ய வேண்டாம்.

21. பூஜைக்கு அமாவாசை, பவுர்ணமி தங்கள் பிறந்த நாள், சித்திரை 1, ஜனவரி 1 போன்றவை உகந்தவை.
22. தலங்களுக்கு செல்வதற்கு முன் 1 நாளும், பின் 1 நாளும் இறந்தவர் வீட்டிற்கு செல்லாதீர்.
23. நெருங்கிய உறவினர் இறந்துவிட்டால் ஐயர் அல்லது ஜோதிடரைக் கேட்டு தகுந்த காலம் கடந்து தரிசிக்க வேண்டும்.
24. வசதியுள்ளவர்கள் புத்தாடை அணிந்து செல்லலாம்.
25. மாலை நேர பூஜைக்கு காலை அணிந்த உடையை அணியாதீர்.

26. ராகுகால பூஜையைத் தவிர மற்ற பூஜைகளை காலை 7.00 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.
27. பொருட்கள் தரமாக இருந்தால் அனைத்தையும் பரிகார ஸ்தலத்தில் வாங்குவது சிறந்தது.
28. அதிகம் பேரம் பேச வேண்டாம்.
29. முதலில் விநாயகர், அருகம்புல் வைத்து பிரார்த்தித்து, ஒரு தேங்காயை வலது கையில் வைத்துக்கொண்டு 1 பிரதட்சணம் வந்து பூஜையைத் துவங்கி ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த சிதறு காயை உடையுங்கள்.
30. ஆலயத்திற்குள் யாருடனும் பேச வேண்டாம். செல்போன்களைத் தவிர்க்கவும்.

31. வெற்றிலைக்கு நுனியும், வாழைப் பழத்திற்கு காம்பும் இருக்க வேண்டும். வில்வம் மற்றும் தாமரைப்பூவிற்கு இதழ்கள் மட்டுமே உயர்ந்தவை. காம்பு, மஞ்சள் கரு, உள் இழைகள் இருக்கக்கூடாது.
32. வெற்றிலை, வாழைப்பழம், தேங்காய், உதிரி புஷ்பங்கள், பழவகைகள், மண் விளக்கு, ஸ்பூன், அலங்கார மாலை, அர்ச்சனைத் தட்டு முதலியவற்றை கழுவி எடுத்துச் செல்லவும்.
33. சிதறு காயைத் தவிர மற்ற காய்களை மஞ்சள் தடவி (இளநிற மஞ்சள்) எடுத்துச் செல்லுங்கள்.
34. மண்விளக்குகளில் ஐந்து இடத்தில் மோதிர விரலால் மஞ்சள், குங்குமம் வைக்க வேண்டும். இதற்கு சந்தனம் உபயோகிக்கக் கூடாது.
35. பூஜை சாமான்களை கைகளில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்காமல் பித்தளை, எவர் சில்வர் தாம்பாளம், கூடை இவற்றில் வைத்துக் கொடுங்கள்.

36. நைவேத்யம் அந்தந்த ஆலய மடப்பள்ளியில் தயார் செய்ய வேண்டும். நீங்கள் தயாரித்து எடுத்துச் செல்லக்கூடாது.
37. பால்கோவா, ஸ்வீட்ஸ், அவல் பொரி, கடலை இவற்றையும் நைவேத்தியமாகப் பயன்படுத்தலாம்.
38. திரி, தீப்பெட்டி, டிஸ்யூ பேப்பர், கேண்டில், நெய் துடைக்க துணி, ஸ்பூன் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.
39. திரை போட்ட பின் பிரதட்சணம் வர வேண்டாம்.
40. விநாயகருக்கு ஒன்று. தனி அம்பாளுக்கு இரண்டு. சிவனைச் சார்ந்த அம்பாளுக்கு மூன்று என்ற கணக்கில் வலம் வாருங்கள்.

41. ஒரு பிரதட்சணம் முடிந்ததும் கொடி மரத்தடியில் கைகூப்பி நின்று வணங்கியதும் அடுத்ததை துவங்கவும்.
42. கொடிமரத்தடியைத் தவிர வேறெங்கும் விழுந்து வணங்கக் கூடாது.
43. ஸ்பெஷல் எண்ட்ரன்ஸ் வழியாகச் சென்றால் சிறப்பான நிம்மதியான தரிசனம் கிடைக்கும்.
44. பிற தீபங்களிலிருந்து உங்கள் தீபத்தை ஏற்ற வேண்டாம்.
45. நெய் அல்லது எண்ணையை பிற விளக்குகளில ஊற்ற வேண்டாம்.

46. அபிஷேக ஆராதனைகளும், ஹோமங்களும் உயர்வு தரும்.
47. பரிகாரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு விபூதி, பிரசாதம் அனுப்பி வைக்க வேண்டும்.
48. பரிகாரம் செய்யும் நேரத்தில், பரிகாரம் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் உறங்கக் கூடாது.
49. பூஜை செய்து கொண்டிருக்கும் சமயம், யாராவது பிரசாதம் கொடுத்தால், அதை பெற்றுக்கொண்டு பூஜை முடிந்தபின் உண்ணவும்.
50. பரிகாரம் செய்தபின் பூஜை பொருட்களை அங்கேயே கொடுத்து விடுவது நல்லது. பசுமாட்டிற்கு வாழைப்பழம், மற்றவற்றை ஐயரிடம் கொடுக்கலாம். சிப்பந்திகளிடமும் கொடுக்கலாம்.

51. பிரத்யேக கனி வகைகளை வைத்துப் படைப்பது நல்லது. எலுமிச்சை, மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு, மா முதலியன.
52. வேகமாக ப்ரதட்சணம் வராமல் பொறுமையாக நமச்சிவாய என்ற 5 எழுந்து மந்திரத்தை உச்சரித்தபடி பொறுமையாக வருவது நல்லது.
53. பலன் முழுமையாகப் பெற 1 வருஷ காலம் வரை ஆகலாம். நமக்கு 1 வருஷம் என்பது ஆண்டவனுக்கு 1 நாள்.
54. ஒவ்வொரு ஆலயத்திலும் தீபம் ஏற்றுவதற்கென்று உரிய தனியான இடத்தில் ஏற்றவும், சிலைகள் அருகில் ஏற்றக்கூடாது.
55. சுவாமியைத் தொடாமல் பூஜிக்கவும்.

56. பூஜை செய்த சாமான்கள் பூஜை செய்யாதவற்றுடன் சேர்ந்து விடக்கூடாது.
57. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்காக 5 மூக்கு தீபம் ஏற்ற வேண்டும்.
58. திரி கனமாக இருந்தால் தீபம் நின்று எரியும். தீபம் ஏற்றிய பின் விளக்குகளை தூக்கி தீபம் காட்டுவது, நகற்றுவது கூடாது. தீபத்துடன் பிரதட்சணம் வருவது தவறு.
59. ஒரு கையில் விபூதி குங்குமம் வாங்கக்கூடாது. இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து பௌயமாக பெற்றுக் கொள்ள வேண்டும். விபூதி, குங்குமத்தை பேப்பரில் வாங்ககூடாது.
60. பெற்ற விபூதி குங்கும பிரசாதத்தை கீழே கொட்டாமல் வீட்டிற்கு பேப்பரில் மடித்து எடுத்துச் செல்லவும்.

61. விபூதியை நிமிர்ந்து நின்று அப்படியே பூசிக் கொள்ளவும். இடது கையில் வைக்க வேண்டும்.
62. பரிகாரங்கள் அனைத்தும் தங்கள் ஜோதிடரின் அறிவுரைப்படி வரிசைக் கிரமமாக இருக்க வேண்டும்.
63. அலங்கார மாலை அவசியமானது தான். ஆனால் மாலையை விட உதிரிப்பூக்கள் விசேஷமானது.
64. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, பச்சை, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ போன்ற பூ வகைகளால் பூஜிப்பது நல்லது.
65. காளி, துர்கா, முருகனுக்கு பஞ்ச அரளிப் பூக்கள் விசேஷமானது.

66. அம்பாளுக்கு மெருன் நிற குங்குமமே சிறந்தது.
67. எண்ணையை விட நெய்க்கு வீரியம் மிக அதிகம்.
68. சாதாரண மாலையை வாங்காமல் பாதம் வரையிலுள்ள வாகை மாலையை வாங்குங்கள்.
69. சுவாமி சன்னதியில் ஸ்தோத்திரங்கள் பாடுவது பிறருக்கு தொல்லையாக அமையும். அமைதி தேவை.
70. கஜ பூஜை, ஒட்டக பூஜை, கோ பூஜை, சிப்பந்திகளுக்கு தட்சணை தருவது இவை பூஜையின் பலனை அதிகரிக்கும். ஜீவகாருண்யம் உயர்வு தரும்.

71. சிவன், அம்பாளை மட்டும் தரிசிப்பது சரியல்ல. பரிவார தேவதைகள் என வழங்கப்படும் பிற சன்னதிகளிலும் வழிபாடு தேவை. நெய் தீபம் ஏற்றி உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கலாம்.
72. வாழைப்பழத்தில் பூவம் பழம் உயர்ந்தது. அடுத்து நாட்டுப்பழம்.
73. சூடம் ஏற்றினால் புகையினால் இடம் மாசுபடும்.
74. ஆலயத் தூய்மை ஆலய தரிசனத்தை விட முக்கியமானது.
75. தல வரலாறு புத்தகம் வாங்கி ஸ்தலம் சம்பந்தப்பட்ட அனைத்து விசேஷங்களையும் தெரிந்துகொள்வது பூஜைக்கு உதவும்.

76. கோயிலுக்குள் சில்லறை கிடைக்காது. ரூ. 10,50,100 என மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். சில்லறைக் காசுகள் போடுவதைத் தவிர்ப்பீர்.
77. கூட்டம் அலைமோதும் ஸ்தலங்களில் பொறுமை தேவை.
78. காசு செலவழித்து செல்பவர் மீது பொறாமை வேண்டாம். நிர்வாகத்திற்கு பணம் தேவை.
79. செல்போன்களைத் தவிர்க்கவும்.
80. விபூதி குங்குமம் வாங்கும் முன்பே பிராமணருக்கு தட்சணை கொடுத்து விட வேண்டும்.

81. சங்கல்பம் மிக முக்கியம்.
82. கோபுர தரிசனம் கோடி நன்மை.
83. சண்டிகேஸ்வரருக்கு கடைசிப் பிரகாரத்தில் தீபம் ஏற்றி வழிபடுங்கள். அமைதியாக கையை தட்டுங்கள். சொடுக்குப் போடாதீர்.
84. கொடி மரத்தடியில் வடக்குப் பார்த்து விழுந்து வணங்கி பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
85. பிறகு சற்று விலகி கீழே அமர்ந்து 1 நிமிஷம் தியானம் பண்ணி பிரார்த்தனையை நிறைவேற்றவும்.

86. ஆரம்பத்தில் விநாயகரிடம் விடுத்த வேண்டுகோள்தான் இறுதி வரை இருக்க வேண்டும். மாறக்கூடாது.
87. பிரார்த்தனைகள் 1 அல்லது 2க்கு மேல் இருக்கக்கூடாது.
88. காவல் தெய்வங்கள் இருந்தால் அவர்களை வழிபட்ட பிறகே விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும்.
89. இத்தகைய பூஜைகள் காரியசித்தி பூஜைகள் தானே தவிர கர்ம வினைகளை முற்றிலும் மாற்றாது. ஆனால் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும்.
90. பூஜைக்கு முன்னுரிமை பெறுபவை. 1. பித்ருக்கள், 2. குலதெய்வம், 3. விநாயகர், 4. திசாநாதன், 5. பிரச்சனை அல்லது கோரிக்கை சார்ந்த தெய்வம்.

91. நவக்கிரகங்கள் சம்பந்தமின்றி நேரடியாக செயல்படும் ஆற்றல் முனீஸ்வரர், அனுமார், பசு, யானை இவர்களுக்கு உண்டு.
92. இயன்றவரை இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருங்கள்.
93. தோஷ நிவர்த்திப் பூஜாக்களை இளம் வயதிலேயே 30 வயதிற்குள் செய்து விடுங்கள்.
94. ஸ்தோத்ர பாராயணம் எல்லோருக்கும் அவ்வளவு பலன் தராது.
95. கடுமையான விரதங்களை மேற்கொள்வது, அடிக்கடி பட்டினி கிடப்பது இவற்றை தவிர்க்கவும்.

96. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
97. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
98. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
99. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
100. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.


Sage of Kanchi

S Chandra Sekhar
 
மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:

மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:


மோதிர விரலால் திருநீறை எடுப்பது ஏன்:


நாம் வெளியில் செல்லும் போது, அங்கு இருக்கும் அதிர்வுகளை பலவழிகளில் நம் உடல் ஏற்றுக் கொள்கிறது. இது நம் உடலின் ஏழு சக்கரங்கள் வழியாக நிகழ்கிறது.


அதனால் தான், நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் கலாசாரத்தில் இருந்து வருகிறது. பசுவின் சாணம் மற்றும் சில பிரத்யேகப் பொருட்கள் கலந்த கலவையின் சாம்பல் தான் விபூதி அல்லது திருநீறு.

இதற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. விபூதி இட்டுக் கொள்ளும் போது, வாழ்வின் உயர்ந்த அம்சங்களை ஈர்த்துக் கொள்ளலாம். நம்மைச் சுற்றிலும் தெய்வீகத் தன்மை உண்டாகும். இதனால், தீயவற்றைத் தவிர்க்க முடியும்.

புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) திருநீறு பூசினால் வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
தொண்டைக்குழியில்(விசுத்தி சக்கரம்) பூசினால் உடலிலும், மனதிலும் சக்தி அதிகரிக்கும்.

நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதியில் பூசினால் தெய்வீக அன்பைப் பெறலாம்.

விபூதியை மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

aanmigam
 
பதஞ்சலி முனிவர் :


இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர்.

மகாவிஷ்ணு எடுத்த ஒவ்வொரு அவதாரத்திலும் அவருக்குத் துணையாக ஆதிசேடனின் செயல்பட்டார் என்று புராணம் கூறுகிறது. இராமாயணத்தில் ஆதிசேடனே இலக்குவணனாகத் தோன்றினார் என்பது நாம் அறிந்ததே. பரந்தாமனின் படுக்கையான ஆதிசேஷன்தான் பதஞ்சலி முனிவராக அவதரித்தார்.

பதஞ்சலி முனிவர் மூலமாக நாம் சைவ வைணவ ஒற்றுமையையும் உணரலாம். ஆம், ஸ்ரீஹரியின் தூண்டுதலின் பேராலாயே ஆதிசேடனின் ஆடல்வல்லானான நடராசப்பெருமானின் நடனத்தைக் காணும் பொருட்டு பதஞ்சலி முனிவராகத் தோன்றினார்.

ஒருசமயம் மகாவிஷ்ணு ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருந்தபோது, திடீரென்று அவரது கனம் அதிகரித்ததைக் கண்டு வியந்து அதற்கான காரணமென்ன என்று கேட்க, அதற்கு மகாவிஷ்ணு, "ஆதிசேஷா, தில்லையம்பதியில் ஆடலரசன் கூத்தபிரான் நடனமாடும் காட்சியைக் கண்டு ரசித்தேன்; மகிழ்ந்தேன்; புன்னகைத்தேன். அதனால் என்னுடல் சற்று கனத்துவிட்டது " என்றார்.

தாங்கள் கண்ட தில்லைக்கூத்தரின் திருநடனக்காட்சியை தரிசிக்கும் பாக்கியம் எனக்கும் கிட்ட தாங்கள் அருளவேண்டும்'' என்று ஆதிசேஷன் இறைஞ்சினார். அதே சமயம் பகவானை விட்டுப் பிரியவும் விரும்பாமல் தவித்தார். இதை அறிந்த பகவான் "ஆதிசேஷா, அதற்கு நீ சில காலம் தவமியற்றினால் உனக்கு அந்த பாக்கியம் கிட்டும். நீ எம்மை விட்டுப் பிரியாமல் மாய உருவம் கொள்ள அருள்கிறேன். தவம் மேற்கொள்'' என்றார் மகாவிஷ்ணு.


மகாவிஷ்ணுவின் அனுமதியுடன் பலகாலம் தவம் மேற்கொண்ட ஆதிசேஷன் முன் தோன்றிய ஈசன், தவம் கண்டு மெச்சி " . நீ பூலோகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது நீ பூலோகத்தில் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறப்பாய். பதஞ்சலி என்று பெயர் பெறுவாய். யோக சாஸ்திரங்கள் பல கற்று, உலகிற்குப் பல வியாக்கியானங் களை வழங்குவாய். நீ பதஞ்சலியாக அவதரித்ததும், நீ அவ தரித்த வியாக்ரபுரத்தில் உன் வருகைக்காக புலிக்கால்களுடனும் புலிக்கைகளுடனும் வியாக்கிரபாத முனிவர் காத்துக்கொண்டிருப்பார். அவருடன் சேர்ந்து என்னை வழிபட்டு, என் ஆனந்த நடனத்தை தரிசிப்பாய்'' என்று அருளினார். ஈசனார் அருளியவாறே அவர்கள் விரும்பிய ஆனந்த நர்த்தனத்தைக் தில்லையில் கண்டுமகிழ்ந்தார்கள்.

ஸ்ரீநடராஜரின் தாண்டவத்தின்போது பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருபக்கங்களிலும் நின்று வணங்கி, சிவதாண்டவத்தில் முழுவது மாகக் கலந்தார்கள்.

பதஞ்சலி முனிவருக்கு, திருவாரூர் அருகிலுள்ள விளமல் திருத்தலத்தில் தியாகராஜர் ருத்ரபாத தரிசனம் காட்டிய தினம் பங்குனி உத்திரத்திருநாள் என்று புராணம் கூறுகிறது. சிவபெருமான் விஸ்வரூபம் எடுத்துநின்ற இத்தல சிவாலயத்தில், பதஞ்சலி முனிவருக்கு தனிச்சந்நிதி உள்ளது.

இவரை வழிபட்டால் கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்பர். அகப்பார்வையின் மூலம் ஆன்ம உய்வு பெறலாம் என்ற தத்துவத்தை பின்பற்றி ரிஷிகளால் இயற்றப் பட்ட பல சாஸ்திரங்களிலே ஒப்பற்றதும், நடைமுறைக்கு ஏற்றதுமான யோகக் கலை பதஞ்சலி முனிவர், நந்திதேவரிடம் உபதேசம் பெற்று நமக்களித்ததாகும்.


பல திருத்தலங்களில் சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்த பதஞ்சலிமுனிவர், பல யோகக்கலை நூல்களையும், சூத்திரங்களையும் இயற்றியபின் வைகுண்டம் சென்று, தன் மாய உருவினைக் கலைத்து மகாவிஷ்ணுவோடு கலந்தார்.

ஆடவல்ல பெருமானாகிய ஸ்ரீமத் நடராஜமூர்த்தி திருநடனம் செய்யும் இடத்தில், நந்தி, ப்ருங்கி என்கிற தேவாம்சமுடையவர்களும், வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற மாமுனிவர்களும் இருப்பதாக ஐதீகம்.

"நடேச மஹிமா" , "நடேச அஷ்டகம்" அல்லது சம்பு நடனம்” எ/ன அழைக்கப்படும் ஸ்தோத்திரம் பதஞ்சலி முனிவர் கூத்தபிரானின் நடனத்தைக் கண்டு இன்புற்றுப் பாடியதாகும்.இந்த ஸ்லோகத்தைக் கூறி சிவபெருமானை வழிபட ஆரோக்கியம், , ஸம்பத்து முதலான சகல பாக்கியங்களும் உண்டாகும்.

aanmigam
 
பெயரின் முன் "ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்

பெயரின் முன் "ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்வது ஏன்

பெயரின் முன் "ஸ்ரீ' என்று சேர்த்துக் கொள்வது ஏன்?
இந்து மதத்தைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் மங்களம் பொருந்தியிருக்க வேண்டும் என்னும் அடிப்படைத் தத்துவம் உடையதாகும். "ஸ்ரீ' என்றால் லட்சுமி, திரு (செல்வம்), மங்களம், அழகு என பல பொருள் உண்டு.

பெயரிலும் மங்களம் பொருந்தி புகழ் பெற வேண்டும் என்பதாலேயே "ஸ்ரீ' என சேர்க்கப்படுகிறது. இன்றைய மலேசியா நமது சோழர்களின் ஆட்சிக்கு உட்படுத்தப்பட்ட காலத்தில், இந்து தர்மம் பரவியதால் இன்றும் அங்கு பேசப்படும் "மலாய்' மொழியில் அநேகமான சொற்களில் "ஸ்ரீ' சேர்ந்துள்ளதைக் காணலாம்.


aanmigam: ??????? ???? "????' ????? ?????????? ??????? ???
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top