• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
சிதம்பரம்: இந்த பட்ஜெட்டுலே சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. துணிச்சலுடன் பல புரட்சிகரமான சீர்திருத்தங்களை செய்து இருக்கலாம். வாய்ப்பைத் தவற விட்டுட்டாங்க.
அவர்: அப்படி நீங்க சொன்னபடி சீர்திருத்தம் செய்து இருந்தா நீங்க அதை ஆதரிச்சிருப்பீங்களா?
சிதம்பரம்: ஊஹூம். அதெல்லாம் இல்லை. அப்படி செய்து இருந்தால் நான் அவர்களைக் கடுமையாக விமசரித்து இருப்பேன். அந்த வாய்ப்பு இப்போது கிடைக்காமல் போய்விட்டது
 
தலைவர்: இந்தியப் பெருமக்களே நமது நாட்டின் அனைத்து சங்கங்களும் மூன்று நாட்கள் முழு வேலை நிறுத்தம் செய்வதால் அரசாங்க மற்றும் தனியார் துறை அலுவலகங்கள், வங்கிகள், அரசாங்க மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களும் இயங்காது. ஹோட்டல்கள் மூடப்படும். முழுக் கடையுடைப்பு, மன்னிக்கவும் முழுக் கடையடைப்பு நடைபெறும். இம்மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு அளிக்கும்படி பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களில் ஒருவர்: என்னங்க இது அனியாயமா இருக்கு. 'உங்க வேலையெல்லாம நடக்கவிடாம முடக்கி வெப்போம். நீங்க அவசரத்துக்குப் பணம் எடுக்க முடியாம செய்வோம் . ஹோட்டல்லே சாப்பிடறவங்க எக்கேடு கெட்டுப்போனா என்ன? போக்குவரத்து இல்லாததாலே நீங்க எந்த நல்லதுக்கும் கெட்டதுக்கும் போக முடியாம தவிச்சா எங்களுக்கு என்ன?' அப்படின்னு சொல்லாம சொல்றமாதிரி இருக்கு.. இதுக்கு நம்ம ஆதரவு தரணுமாம். இதுக்குப் பதிலா 'உங்களை எல்லாம் செமையா உதைக்கப் போறோம். அதுக்கு நீங்க எங்களோடே ஒத்துழைச்சு உங்க முகத்தையும் மூஞ்சியையும் காண்பிச்சி எங்களுக்கு முழு ஆதரவு தரணும்'னு கேட்டிருக்கலாம்.
 
நான் அடுத்த வாரம் பெங்களூரு போகலாம்னு இருக்கேன்.
நீங்க பெங்களூர் போறதுக்கு முன்னாலே சென்டர் என்ன பண்ணுது, கர்நாடகா என்ன பண்ணுது, தமிழ் நாடு என்ன பண்ணப் போகுது அப்படிங்கறதை எல்லாம், நம்ம கட்சித் தலைவர்கள், கர்நாடகக் கட்சித் தலைவர்கள் இவங்களைக் கலந்து ஆலோசிச்சி, ஒண்ணும் பிரச்சினை இருக்காதுன்னு பட்டுதுன்னா, பஸ்லேயோ காரிலேயோ போகலாம். அப்படி ஏதாவது சந்தேகமா இருந்ததுன்னா, பேசாம பிளேன்லே போயிடுங்க. ஆனா அதுக்கு முன்னாடி அவங்களும் ஸ்டிரைக், க்ரைக் எதுவும் பண்ணாம இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கிங்க.
 
இந்தக் கோவில் ரொம்பப் பழமையான கோவில். இதைக் கட்டி 700 வருஷம் 21 நாள் ஆகுது.
அதெப்படி அவ்வளவு கச்சிதமா சொல்றீங்க? உங்களுக்கு எப்படித் தெரியும்?
21 நாளைக்கு முன்னாடி நான் இங்கே வந்திருந்த போது கைட் இந்தக் கோவில் கட்டி 700 வருஷம் ஆகுதுன்னு எங்கிட்டே சொன்னார்.
 
ஒட்டகத்தின் கால் ஏன் அவ்வளவு நீளமா இருக்கு?
ஒட்டகத்தோட உடம்பு தரையிலிருந்து ரொம்ப உயரத்தில் இருக்கறதாலே அதன் கால் அவ்வளவு நீளமா இருக்க வேண்டி இருக்கு.
 
அவரோட உடம்பு என்ன அப்படி வீங்கியிருக்கு?
அவரா? அவர் இந்த ஊரிலேய பெரிய பணக்காரர். அவருக்கு என்ன ஆச்சுன்னே தெரியல்லே.
எனக்குத் தெரிஞ்சி போச்சு. அது பண வீக்கம்.
 
நடிகை நளினகாந்தாக்கு அந்தப் பத்திரிகை மேலே என்ன கோபம்?
அந்தப் பத்திரிகையிலே அந்த நடிகை நல்லா நடிச்சிருக்காங்கன்னு எழுதறதுக்குப் பதிலா நல்லா தடிச்சிருக்காங்கன்னு எழுதிட்டாங்களாம்.
 
வக்கீல்: எப்பவும் எதிர் தரப்பு சொல்றதை கேட்டுக்கணும்.
அவன்: ஐயா, இதைத் தயவு செஞ்சி என் மனைவி கிட்டே வந்து சொல்றீங்களா?
 
இவர் அக்கௌண்டண்ட் ஜெனரல் ஆபீஸுலே சேர்ந்தாலும் சேர்ந்தார், இவரோட உபத்திரவம் தாங்க முடியலை.
ஏன்? அப்படி என்ன தொந்திரவு பண்றார்?
நான் எனக்கு சேலை வாங்கணும்னாகூட, வெவ்வேறே கடைகளிலிருந்து குறைஞ்ச பட்சம் மூணு கொட்டேஷன் வாங்கி, குறைஞ்ச விலை யார் கோட் பண்ணியிருக்காங்களோ, அவங்க கடையிலிருந்து தான் சேலை வாங்கணும்னு கட்டாயப்படுத்தறார்
 
அவர் ஒரு காம்ப்ளக்ஸ்லே இருக்கார்
என்ன காம்ப்ளக்ஸ்? Inferiority complex ஆ?
இல்லை சார். அவர் ஷாந்தி காம்ப்ளக்ஸ்னு அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஒரு ஃப்ளாட்டிலே இருக்கார்னு சொல்ல வந்தேன்.
 
இவர்தான்டா சின்ன வயசுலே நீ குளத்துலே விழுந்த போது தன்னோடு உயிரைப் பத்திக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் குளத்துலே குதிச்சி உன்னைக் காப்பாத்தியவர்.
நான் அம்பத்தஞ்சு வருஷமா கஷ்டப் படறதுக்கு இவர்தான் காரணமா?
 
என் பொண்ணு கொடுத்து வெச்சவ. மாப்பிள்ளை அவளைத்தாங்கு தாங்குன்னு தாங்கறார். அவ இல்லாம அவராலே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. காலையிலே எழுந்தும் எழுந்திருக்காமலும் காபி போட்டு எடுத்துட்டுப் போய் என் மகளை எழுப்பி அவளை உபசாரம் பண்றது என்ன, சமையலறையிலே அவளுக்கு கூடமாட உதவி செய்யறது என்ன, எப்படிச்சொல்றதுன்னே தெரியல்லே.
ஆமாம் உங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணினீங்களே அவங்க எப்படி இருக்காங்க?
அந்தக் கண்ணறாவியை ஏன் கேட்கறே. அவளைப் பாத்து அவன் வழியறதும் அவ பின்னாடியே அவ முந்தாணியைப் பிடிச்சிக்கிட்டு அலையறதும், அவளுக்குப் பெட் காபி போட்டுத்தரதும் கண்ணறாவி சகிக்கல்லே. என்ன சொக்குப் பொடி போட்டாளோ தெரியல்லே. ஒரு ஆம்பிளையா லட்சணமா இல்லாம பொண்டாட்டி தாசனா இருக்கான். வெட்கமா இருக்கு வெளியே சொல்ல.
 
நம்ம தேச ராஜா இனிமேல் இங்கிலீஷ் வருஷப் பிறப்பு ஜனவரி 1ந்தேதி கிடையாது. மார்ச் 1ந்தேதி அப்படின்னு மாத்திட்டார்.
ஏங்க?
ஏன்னா, ஸெப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்கிற இந்த மாதங்கள் எல்லாம் 7,8,9,10 ங்கற எண்களையும் மாதங்களையும் குறிக்கிறதாலே, மார்ச் 1ந்தேதி வருஷப் பிறப்பாக இருந்தால்தான் சரியாக இருக்கும். அதனால் மார்ச் 1ந்தேதி தான் இனிமேல் வருஷப் பிறப்புன்னு உத்திரவு போட்டுட்டார்..
 
என்னங்க இது அநியாயமா இருக்கு?
எதைச் சொல்றீங்க?
இங்க பாருங்க இந்த ஹோட்டல் வாசல்லே இருக்கிற போர்டை. பெட்ரோல், டீஸல் மற்ற பொருள்களின் விலைக்கு ஏற்ப பண்டங்கள் விலை வாரம் ஒரு முறை மாற்றப்படும்.
படு பாவிங்க. ஏற்றப்படும்னு எழுதறதுக்குப் பதிலா மாற்றப் படும்னு நாசூக்கா எழுதியிருக்காங்க.
இந்த போர்டு எழுதாமலே இத்தனை நாளா இவங்க இதைத்தான் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க.
 
A bus full of politicians was moving along the country road. Then it crashed into the tree and overturned. Blood and glass were everywhere. A middle-aged farmer working on the field nearby saw the accident and decided to help: he dug a huge hole and buried all the politicians who were still alive. He thought he did his country a great service.
 
சண்டை போட்டா அதை அப்பப்போ மறந்துடணும். சும்மா அதையே நினைச்சிக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு எங்க அப்பா அடிக்கடி என் கிட்டே சொல்லுவார். ஆனா எங்க சரித்திர வாத்தியார் எவன் எவன் எத்தனை வருஷத்துக்கு முன்னாடி யாரோடே எதுக்காக சண்டை போட்டான்னு கேட்டுக் கேட்டு என் உயிரை எடுத்துக்கிட்டு இருக்கார். ஒரு நாள் அப்பா கிட்டே சொல்லி வாத்தியாருக்குப் புத்திமதி சொல்லச் சொல்லணும்.
 
ஒரு அரசியல்வாதி தான் இறந்துவிட்டதாக ஒரு புரளியைக் கிளப்பி விட்டார். ஏன் என்று அவர் நண்பன் கேட்ட போது அரசியல்வாதி சொன்னார்: நான் செத்தா எத்தனை பேர் தற்கொலை பண்ணிக்கிறாங கன்னு பார்க்கிறதுக்குத்தான் இந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டேன் என்றார். நாட்கள் ஓடின. ஒருவரும் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று தெரிந்ததும் கடைசியில் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார்.
 
வேலைக்காரி: என் கண்டிஷனுக்கு ஒப்புத்துக்கிட்டா நான் வேலைக்கு வரேன்.
வீட்டுக்கார அம்மாள்: என்ன கண்டிஷன் சொல்லு?
வேலைக்காரி: என்னோட மாச சம்பளத்தைத் தவிர நீங்க தீபாவளி, பொங்கல் இந்த ரெண்டு நாளிலேயும் ஒரு மாச சம்பளம் போனஸாவும், இங்கிலீஷ் வருஷப் பிறப்பு, தமிழ் வருஷப் பிறப்பு, என் பிறந்தநாள், உங்க வீட்டிலே இருக்கிற ஒவ்வொருத்தரும் பிறந்த நாள் இப்படி மத்த நாளிலே பாதி மாச சம்பளத்தைப் போனஸாவும் தந்துடணும். அப்புறம் தினமும் காலையில ஒரு மணி நேரந்தான் வேலை செய்வேன். வாரத்துக்கு ஒரு நாள் லீவு, தவிர கவர்மெண்ட் லீவு தவிர எனக்கு உடம்பு முடியாத நாளெல்லாம் லீவு கொடுத்துடணும். பண்டிகை நாளிலேயும் எங்க வீட்டுலே விசேஷம் நடக்கிற நாளிலேயும் நான் வர மாட்டேன்
வீ. அம்மாள்: பொங்கலும் இங்கிலீஷ் வருஷப் பிறப்பும் பக்கத்துப்பக்கத்துலேதானே வருது. அப்படி இருக்கும்போது..?
வேலைக்காரி: அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?
வீ. அம்மாள்: இவ்வளவு தானா இன்னும் ஏதாவது உண்டா?
வேலைக்காரி: இப்போதைக்கு இவ்வளவுதான் ஞாபகத்துக்கு வருது. ஞாபகம் வர வர நான் சொல்வேன்.
வீ. அம்மாள்:(மனதுக்குள்)அமெரிக்காவே பரவாயில்லை போல இருக்கே. அங்கே செஞ்ச வேலைக்கு மாத்திரம் பணம் கொடுத்தா போதும்.
 
சட்ட சபையிலே எப்ப பார்த்தாலும் தூங்கிக்கிட்டே இருப்பாரே அந்த mla இப்ப மரம் நடு விழா கொண்டாடப் போறாராமே. ஆமாம். என்ன மரம் நடப் போறாரு?
தூங்குமூஞ்சி மரம்தான்.
 
One day David went to an auction. While he was there, he bid for a parrot. David really wanted this bird, so he got caught up and thoroughly involved in the bidding. He kept on bidding, but kept getting outbid, so he bid higher and higher and higher.






As he was paying for the parrot, he said to the auctioneer, 'I hope this parrot can talk. I would hate to have paid this much for it, only to find out that he can't talk!'





'Don't worry.' said the auctioneer, 'He can talk. Who do you think kept bidding against you
 
அவர் பெண்டாட்டிதான் அவரை அவ்வளவு நல்லா கவனிச்சிக்கிறாங்க. அருமையா சமையல் பண்ணிப் போடறாங்க. வீட்டு வேலைகளையெல்லாம் பொறுப்பா தலைமேலே போட்டுக்கிட்டு நல்லபடியா செஞ்சி முடிக்கிறாங்க. அப்படி இருக்கும்போது அவர் ஏன் எல்லார் எதிரிலேயும் அவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டே இருக்கார்.
அதுவா? அப்பத்தான் அவரை நாலு பேர் ஆம்பிளைன்னு மதிப்பாங்களாம். இல்லேன்னா அவரை (henpecked husband) பொண்டாட்டி தாசன்னு சொல்லிடுவாங்களாம்.
 
நம்ம தலைவர் கோவில் கோவிலாப் போயி எல்லா சாமிகளையும் கும்பிட்டுகிட்டு வராரே. என்ன விசேஷம்?
அவர் ஏதோ ஒரு பெரிய ஊழல் கேஸுலே மாட்டிக்கிட்டு இருப்பாரோனு நினைக்கிறேன்.
 
அவங்களுக்குள்ளே என்ன தகறாரு?
அந்த அம்மா வந்து பையனை டாக்டருக்குப் படிக்க வைக்கணும்னு சொல்றாங்க. அவரான பையனை ஐ.ஐ.டியிலே தான் படிக்க வைக்கணும்னு சொல்றார்.
ஆமாம் பையன் என்ன பண்றான்?
பையன் பிறந்து ஒரு மாசம் தான் ஆகுது. தூளியிலே படுத்துத் தூங்கிக்கிட்டு இருக்கான்.
 
அவர் ஏன் ஒலிம்பிக்ஸ் பந்தயத்துலே தடத்துலே கீழே விழுந்து தூங்க ஆரம்பிச்சுட்டார்?
அவர் ஊக்க மருந்து சாப்பிடறதுக்குப் பதிலா தூக்க மருந்து சாப்பிட்டுட்டாராம்.
 
உங்க நாய் கடிக்குமா?
கடிக்காது.
அப்படின்னா இந்த நாயை நான் கொஞ்சலாமா?
ஓ! கொஞ்சலாமே.
(அவர் கொஞ்சும் போது நாய் கடித்து விட்டது.)
நாய் கடிக்காதுன்னீங்க. கடிச்சுட்டுதே.
இது எங்க நாய் இல்லீங்க. பக்கத்து வீட்டு நாய்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top