• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
ஏன் அந்த அம்மா அவ்வளவு டென்ஷனாஇருக்காங்க?
அவங்க பசங்களுக்குப் பரீட்சை ஆரம்பம் ஆயிட்டுது இல்லே. அதனாலே பசங்க பரீட்சை முடியறவரையிலும் அவங்க அப்படித்தான் இருப்பாங்க.
 
பாப்பா நீ அந்த பின் சீட்டிலே போய் உக்காரு.
ஊஹூம். நான் மாட்டேன். அது குத்தும்
 
அந்த மந்திரவாதி எப்படி ஒரு வெத்து கைக்குட்டையிலிருந்து கத்தை கத்தையா ரூபா நோட்டை வரவழைச்சார் பாத்தியா?
ஆமாம். இதைப் பெரிசா சொல்ல வந்துட்டே. நம்ம ஊர் அரசியல்வாதிகள் செய்யாத மேஜிக்கா இது? கைக்குட்டை கூட இல்லாம வெறும் கையிலே ஆரம்பிச்சி கோடிகோடியாப் பணம் பண்ணியிருக்காங்களே. அதைப் பார்க்கும் போது இதெல்லாம் ஒண்ணுமேயில்லை.
 
என்அண்ணாவுக்குப் புத்திர தோஷம் இருக்குன்னு சொல்றார் ஒரு ஜோஸ்யர்.

பெண் கல்யாணத்துக்காக ஜோசியர் கிட்டே ஜாதகத்தைக் காண்பிச்சிக் கேட்டா பெண்ணுக்கு செவ்வாய் தோஷம்னு சொல்லிட்டார்.



சரி கோவிலுக்குப் போய் பரிகாரமா அர்ச்சனை பண்ணப் போனா கோவில்லே பயங்கரக் கும்பல். என்னன்னு விசாரிச்சா இன்னிக்குக் கோவில்லே பிரதோஷம்னு சொல்றாங்க..

டாக்டரைப் பார்க்கப்போனா எனக்கு கடும் ஜலதோஷம்னு மருந்து கொடுத்துட்டார். இப்படி நாளுக்கு ஒரு தோஷமும் ஆளுக்கு ஒரு தோஷமுமா சொல்லிக்கிட்டு இருந்தா நான் என்ன ஆறது?

உங்க பேர் என்னவோ?

அதை ஏன் கேக்கறீங்க? என் பேர் சந்தோஷம்.
 
டாக்டர்: (பலமாக) உங்களுக்கு என்ன இப்போ ரெண்டு காதும் கேக்கலியா?
அவர்: ஆமாம் டாக்டர். அது மாத்திரமில்லை . நான் பேசறதே என் காதுலே விழ மாட்டேங்குது டாக்டர்.
 
கொலைகாரன் ஒருத்தன் தூக்குத் தண்டனையிலிருந்து தப்பிக்க தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகிட்டானே. அதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?
இப்ப கொலைகாரங்களுக்குத் தூக்குத் தண்டனை தரக்கூடாதுன்னு மனித உரிமைக்காரங்க எல்லாம் சத்தம் போடறாங்க இல்லியா? அதனாலே தூக்குத் தண்டனை தரதுக்குப் பதிலா கொலைகாரங்க எல்லாம் கட்டாயமா தற்கொலை பண்ணிக்கணும்னு ஒரு சட்டம் கொண்டு வந்துட்டா மனித உரிமைக்காரங்க எல்லாம் எதுவும் பேச முடியாது பாருங்க.
 
இது எப்படிங்க நியாயம்?
எதைச் சொல்றீங்க?
நான் என்ன சிகிச்சை கொடுத்தாலும் நோயாளி பிழைக்கிறதும் பிழைக்காம இருக்கிறதும் ஆண்டவன் கையிலேதான் இருக்குன்னு சொல்லிட்டு சிகிச்சைக்கான பணத்தை மட்டும் இந்த டாக்டர் வாங்கிக்கிட்டாரே அதைச் சொல்றேன்.
 
ஏன் எல்லாரும் இப்படி தலைதெறிக்க ஓடறாங்க?
ஓட்டப் பந்தயம் நடக்குது. யார் முதல்லே வராங்களோ அவங்களுக்கு வெள்ளிக் கோப்பை பரிசு கிடைக்கும்.
யாராவது ஒருத்தருக்குத்தானே பரிசு கிடைக்கப்போகுது. அப்படி இருக்கும்போது எல்லாரும் ஏன் இப்படி ஓடறாங்க?
 
A pastor concluded that his church was getting into very serious financial troubles While checking the church storeroom, he discovered several cartons of new bibles that had never been opened and distributed.









Jack, Paul and Louie all raised their hands to volunteer for the task.




The minister knew that Jack and Paul earned their living as salesmen and were likely capable of selling some bibles. But he had serious doubts about Louie who was a local farmer, who had always kept to himself because he was embarrassed by his speech impediment. Poor Louie stuttered badly. But, NOT WANTING TO discourage Louie, the minister decided to let him try anyway.




He sent the three of them away with the back seat of their cars stacked with bibles. He asked them to meet with him and report the results of their door-to-door selling efforts the following Sunday.




Anxious to find out how successful they were, the minister immediately asked Jack, "Well, Jack, how did you make out selling our bibles last week?"




Proudly handing the reverend an envelope, Jack replied, "Using my sales prowess, I was able to sell 20 bibles, and here's the $200 I collected on behalf of the church."




"Fine job, Jack!", the minister said, vigorously shaking his hand.

"You are indeed a fine salesman and the Church is indebted to you."

Turning to Paul, "And Paul, how many bibles did you sell for the

Church last week?"




Paul, smiling and sticking out his chest, confidently replied, "I am a professional salesman.. I sold 28 bibles on behalf of the church, and here's $280 I collected."




The minister responded, "That's absolutely splendid, Paul. You are truly a professional salesman and the church is indebted to you."




Apprehensively, the minister turned to Louie and said, "And Louie, did you manage to sell any bibles last week?" Louie silently offered the minister a large envelope. The minister opened it and counted the contents. "What is this?. Louie, there's $3200 in here! Are you suggesting that you sold 320 bibles for the church, door to door, in just one week?"




Louie just nodded. That's impossible!" both Jack and Paul said in unison. "We are professional salesmen, yet you claim to have sold 10 times as many bibles as we could."




"Yes, this does seem unlikely," the minister! agreed. "I think you'd better explain how you managed to accomplish this, Louie."




Louie shrugged. "I-I-I re-re-really do-do-don't kn-kn-know f-f-f-for sh-sh-sh-sure," he stammered.




Impatiently, Peter interrupted. "For crying out loud, Louie, just tell us what you said to them when they answered the door!"




"A-a-a-all I-I-I s-s-said wa-wa-was," Louis replied,

"W-w-w-w-would y-y-y-you l-l-l-l-l-like t-t-to b-b-b-buy th-th-th-this b-b-b-b-bible f-f-for t-t-ten b-b-b-bucks ------o-o-o-or-------- wo-wo-would yo-you j-j-j-just l-like m-m-me t-t-to st-st-stand h-h-here and r-r-r-r-r-read it t-to y-y-you??"
 
அந்த அம்மா என்ன இப்படிப் பேசிட்டாங்க? இத் தாலி உறவே வேணாம்னு சொல்றாங்களே.
அவங்க அவங்களோடே தாலியைப் பத்திச் சொல்லல்லே. அவங்க அரசியல்வாதி ஆச்சே. நம்ம நாட்டுக்கும் இத்தாலி நாட்டுக்கும் இப்ப உள்ள உறவைப் பத்தி சொல்றாங்க.
 
அரசியல்வாதி: என்னை நீங்கள் பிரதமர் ஆக்கினால் நான் ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் ஏழு லட்சம் கோடி ரூபாயை வெளிக் கொணர்வேன்.
கூட்டத்தில் ஒருவர்: என்னங்க இவர் ஸ்விஸ் வங்கியிலே ஏழு லட்சம் கோடி ரூபாயா பதுக்கி வச்சிருக்கறாரு?அதை இவ்வளவு பகிரங்கமா வேறே பொதுக்கூட்டத்திலே சொல்றாரு.
 
உங்க கிட்டே எவ்வளவு கறுப்புப் பணம் இருக்கும்?
எவ்வளவுன்னு இப்ப எனக்குத் தெரியாது. இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்டிலிருந்து ரெய்ட் பண்ண வரப்போ அவங்க கணக்குப் பண்ணி சொல்லுவாங்க இல்லே. அப்ப நான் தெரிஞ்சிப்பேன்.
 
The girl came home from school.
Her mother asked, “Dear how was your first day at school?” And the girl replied, “First day? You mean I have to go back there tomorrow?”
 
ரௌடியின் மகன் : அப்பா எனக்கு என் வாத்தியாரோடே ஒரு பிரச்சினை இருந்தது. என்ன பண்றதுன்னே தெரியல்லே. கடைசியிலே ஒரு விதமா அதை முடிச்சுட்டேன். இந்தாங்க அப்பா உங்க கத்தி.
 
சென்னையிலே தெருக்களிலே நடமாடவே முடியல்லே. நகை பறிப்பு, கொலை கொள்ளை எல்லாம் ஜாஸ்தி ஆயிட்டுது
ஆமாங்க. என்ன பண்றது? நகர போலீஸ் பூராவும் mlaக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க கூவத்தூருக்குப் போயிட்டாங்க. இங்கே மக்களைப் பாதுகாக்க போலீஸ் இல்லை.
 
அந்த சினிமா நடிகை இடைத்தேர்தல்லே நிக்கறாங்களாமே?
ஆமாம். அது பெண்களுக்கான இடைத் தேர்தல் போட்டி.
 
ஜோசியர்: இப்ப உங்களுக்கு இருக்கிற தோஷத்துக்கு பரிகாரமா நீங்க உங்களுக்கு ரொம்ப புடிச்ச ஒரு பழத்தை தினமும் முருகனுக்குப் படைச்சிட்டு முழு பழத்தையும் வேறே யாரோடேயும் பங்கு போட்டுக்காம நீங்களே சாப்பிடணும்.
அவர்: அப்படியா?
ஜோசியர்: என்ன யோசிக்கிறீங்க?
அவர்: எனக்கு ரொம்ப புடிச்ச பழம் பலாப்பழங்க!
 
எப்பப் பார்த்தாலும் அவன் ஏன் மூக்கை சிந்திக்கிட்டே இருக்கான்?
அதுவா? அவனோட ஆசிரியர் எப்பவும் அவனைப் பார்த்து சிந்தி, சிந்தின்னு சொல்லுவாராம். அதை அந்தப் பையன் தப்பா புரிஞ்சிக்கிட்டான்.
 
கணவன்: (லேடி டாக்டரிடம்) இவ உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு டாக்டர்
டாக்டர்: ( பெண்ணை செக் செய்து பார்த்துவிட்டு) மோசமா இல்லை. மாசமா இருக்காங்க. அவ்வளவுதான்
 
Politics is the last resort of scoundrals. Johnson
No. the correct statement is "politics is the last refuge of a scoundrel'
Even though the words are different, that means the same thing
Has not Kuvathur resort justified Johnson's statement?
 
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் வெல்லும் னு அந்த ரெண்டுபேரும் கூவிக்கிட்டு இருக்காங்களே.யார் அவங்க?
ஒருத்தர் பன்னீர்செல்வம் கட்சி. இப்ப அவங்க கட்சி ஜெயிச்சதனாலே அவர் அப்படிக் கூவுறார். இன்னொருத்தர் சசிகலா கட்சி. அவர் கட்சி தோத்ததனாலே அவரும் அதைச் சொல்லியே கூவுறார்.
 
என்னங்க அவர் விடுதலை, விடுதலைன்னு உற்சாகமா பாடிக்கிட்டு இருக்காரே, யார் அது?
அவரை நீங்க உங்க தொகுதியிலே பார்த்திருக்க முடியாது. கூவத்தூர் பட்டியிலே இருந்து தப்பிச்சி வெளியிலே வந்த உங்க தொகுதி mla..
 
கணவன்: (லேடி டாக்டரிடம்) இவ உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு டாக்டர்
டாக்டர்: ( பெண்ணை செக் செய்து பார்த்துவிட்டு) மோசமா இல்லை. மாசமா இருக்காங்க. அவ்வளவுதான்
 
கடைக்காரரே, என்ன அக்கிரமமா இருக்கு. நான் இங்கே உங்க கடையிலே வாங்கின எட்டு முழ வேட்டியை வீட்டுக்குப்போய் பொட்டணத்திலிருந்து எடுத்து பிரிச்சிப் பார்த்தால் நாலு முழம் தான் இருக்கு. அதே மாதிரி ஆறு கெஜப் புடவை மூணு கெஜம் தான் இருக்கு.
சார், நாங்க ஒண்ணும் உங்களை ஏமாத்தலை. நாங்க தான் இந்த போர்டுலே தெளிவா எழுதி இருக்கோமே 50% தள்ளுபடின்னு. அதைப் படிச்சிட்டுத்தானே நீங்க கடைக்குள்ளே வந்து எல்லாத்தையும் வாங்கினீங்க. அப்புறம் என்ன?
 
என்ன பண்ணினாலும் குண்டாக முடியவில்லையேன்னு அவன் ரொம்பக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தான். இப்ப அரசாங்கத்தோட தயவுலே அவனோட பிரச்சினை தீர்ந்துட்டுது.
எப்படி?
அரசாங்கம் அவனை குண்டர் சடடத்துலே கைது செய்துட்டுது இல்லே. அதான்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top