• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
நீங்க காதல் கல்யாணத்தை ஆதரிக்கிறீங்களா இல்லை எதிர்க்கிறீங்களா?
என் பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை ஆதரிப்பேன். ஆனா பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அதை எதிர்ப்பேன்.
ஏன்?
பையன் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா வரவேண்டிய வரதட்சிணை போயிடும்.
அதே பொண்ணு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டா செலவு மிச்சம். அதான் காரணம்.
 
என்னது? உன் மாமியார் கிணத்துலே விழுந்துட்டாரா? உடனே தீ அணைப்பு நிலையத்துக்கு ஃபோன் பண்ணினியா?
இல்லை. ரெண்டு மணி நேரம் கழிச்சித் தான் ஃபோன் பண்ணினேன்.
ஏன் உடனே ஃபோன் பண்ணல்லே?
உடனே ஃபோன் பண்ணினா அவங்க வந்து காப்பாத்திடமாட்டாங்களா? அதுக்குத்தான்.
 
என்னைக்குமே கோர்ட்டுக்குப் போகாத அந்த வக்கீல் இன்னிக்கிக் கோர்ட்டுக்குப் போயிருக்கார், தெரியுமா?
நல்ல கேஸ் ஏதாவது கிடைச்சிருக்கும்.
அதெல்லாமில்லை. அவர்மேலே யாரோ கேஸ் போட்டுட்டாங்களாம்
 
சார், எந்தப் பாட்டையும் மேடையிலே பாடறதுக்குப் பயமா இருக்கு.
பயம் எதுக்கு?
என் பாட்டைப் பாட நீயாருன்னு அந்தப் பாட்டை இயக்கினவரோ இல்லை பாடினவரோ வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சிட்டா என்ன பண்றதுன்னுதான்.
 
என்னங்க தலைவரே, evm மெஷின் கூடாதுன்னு மாயாவதி, மமதா, கேஜ்ரிவால் இப்படி எல்லாரும் சொல்றாங்க. நீங்க என்னடான்னா நம்ம ஊர் தேர்தலுக்கு evm மெஷினைத்தான் பயன்படுத்தணும்னு அழுத்தமாச் சொல்றீங்க.
நம்ம தோத்துப் போயிட்டா, வேறே யாரையும் ஒண்ணும் சொல்ல முடியாத நேரத்துலே இந்த மெஷினாலதான் நாம தோத்தோம்னு சொல்லிக்கலாமில்லே. அதான்.
 
A suffering patient to a busy doctor:
I am afraid doctor, I can't wait till the WEEK END. By then, I feel that I will get very much WEAKENED!
 
108 தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்கிட்டு நான் தேங்காய்களை உடைச்சிக்கிட்டு இருக்கும்போது ஒரு தேங்காய்ச்சில்லு அப்போ பக்கத்திலே போய்க் கொண்டு இருந்தவரோடே கண்ணுலே குத்திட்டுது. உடனே அவர் ரகளை பண்ண ஆரம்பிச்சிட்டார். அவரை சமாதானப் படுத்த பக்கத்துலேஇருக்கிற டாக்டர்கிட்டே அழைச்சிக் கிட்டு போக வேண்டியதாய்ப் போயிடுச்சு. டாக்டர் அவரோடே கண்ணை டெஸ்ட் பண்ணிட்டு இது கொஞ்சம் சிக்கலான கேஸ். ரொம்ப ஜாக்கிரதையா இதை கவனிக்கல்லைனா கண்ணே போயிடும்னு சொல்லி கண்ணுக்குக் கட்டுப் போட்டு, இவர் கண்ணு தப்பணும்னு கடவுளை வேண்டிக்கங்கன்னு சொல்லிட்டார்.
அப்புறம் நீங்க என்ன பண்ணினீங்க?
பிள்ளையாரப்பா, இவருக்கு கண் ஒண்ணும் ஆகாம காப்பாத்து . உனக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிக் கிட்டேன்.
 
ஏன் நம்ம கலக்டர் இவ்வளவு கோவமா இருக்கார்?
நம்ம ஹோட்டல் திறப்பு விழாவிற்கு 'மாவட்ட கலக்டர் வருகை' அப்படீன்னு போடறதுக்குப் பதிலா 'மாவாட்ட கலக்டர் வருகை'ன்னு போஸ்டர் அடிச்சி ஒட்டிட்டாங்க. அதான் அவர் கோபத்திற்குக் காரணம்.
 
you have got to help!” said the tearful man at the door. “There is a family that I know very well that is in desperate need of money. The Father has been out of a job for over a year, they have five kids at home with barely a bit of food to eat. The worst part is, that they are about to kicked out of the house and they will be left on the streets without a roof over their heads!” The man concluded with one last heart wrenching sob. “Well,” said the man at the door, “that really is a sad story. Why don’t you come inside and we’ll talk about it a little more.” “So how much money is needed exactly?” asked the man when they were both seated. “Oh it’s really terrible”, said the man starting up again, “why just for the rent $3000 is needed by tomorrow otherwise they’ll be kicked out onto the streets.” “How do you know so much about this situation?” asked the man as he reached for his check book. “Well,” said the man breaking down once more “they are my tenants.”
 
இவர் ஓடற ரயிலிலிருந்து விழுந்து தப்பிச்சவருங்க.
ஓடற ரயிலிலிருந்து விழுந்தும் தப்பிச்சவரா? இல்லே ஓடற ரயிலே இருந்து விழுந்ததனாலே தப்பிச்சவரா?
 
எதுக்கெடுத்தாலும் வள் வள்னு விழறாளே. யார் அவ?
அவதான் வள்ளி.
 
*அந்தப் பொண்ணு 'மாமி உங்க ஆசீர்வாதம் வேணும்' னு கேட்டா. நானும் அதுக்கென்ன? பேஷா உனக்கு என் ஆசீர்வாதம் எப்பவும் உண்டுன்னு சொன்னேன். அப்படிச் சொல்லிட்டு கொஞ்சநேரம் கழிச்சுப் பாத்தா நான் வாங்கி வெச்சிருந்த 2*கிலோ ஆசீர்வாத் கோதுமை மாவுப் பொட்டணத்தைக் காணோம்.
 
A solicitor for the Red Cross called upon a well-to-do young couple for a donation. Hearing a commotion inside he knocked extra-loudly on the door. A somewhat disheveled man admitted him in. “What can I do for you?” he growled, clearly upset about something. “I would like to speak to the master of the house,” said the solicitor politely. “Then you’re just in time,” barked the young man. “My wife and I are settling that very question right now!”
 
கம்பெனி ஆபீஸர்: : என்னய்யா இது? என்ன பண்ணியிருக்கே?
புதிதாக வேலைக்குச்சேர்ந்தவர்: நீங்க தானே சார் கேட்டீங்க குறைஞ்சது மூணு கொடேஷனாவது வேணும்னு. அதான் நான் அஞ்சு கொடேஷன் கொடுத்திருக்கேன் சார். ஷேக்ஸ்பியரிலே இருந்து ஒண்ணு, ஜான்ஸனோடே கொடேஷன் ஒண்ணு...
க. ஆபீஸர்: நிறுத்து. உன்னை நம்ம ஆபீஸுக்கு வேண்டிய ஸ்டேஷனரிக்கு கொறஞ்சது மூணு கொடேஷனாவது வாங்கச் சொன்னா ஷேக்ஸ்பியர், ஜான்ஸன்னு சொல்லிக்கிட்டு இருக்கே. இதை யாரையா கேட்டா?
கம்பெனி அஸிஸ்டண்ட்: அது தாங்க டிரபிள் காலேஜூலே இருந்து நேரா நாம வேலைக்கு ஆட்களை எடுத்தா.
 
150ஆண்டுகளுக்கு முன் ரயில் பயண வசதி வந்தபோது நமது இன்றைய அரசியல் வாதிகள் அன்று இருந்திருந்தால் இப்படி ஒரு போராட்டம் நடந்து இருக்குமோ?
"ரயில்கள் ஒழிக. அரசே ரயில்களை எதிர்த்து நாடு தழுவிய மாபெரும் போராட்டம் ரயில்களை வாபஸ் பெறும் வரையில் நடைபெறும். ஒரு ரயில் ஓடுவதால் 13,421 மாட்டு வண்டிகள், 10,733 குதிரை வண்டிகள், 21,347 கைவண்டிகள், 1,34,789 வண்டி ஓட்டுனர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். அவர்களை நம்பி இருக்கும் 12,36,528 குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு பட்டினி கிடந்து சாக நேரிடும். எனவே உடனே ரயில்களைத் தண்டவாளத்தில் விடுவதைத் தவிர்க்கவும். இன்றேல் ரயில்களை எதிர்த்து மறியல் போராட்டமும், ரயில் கொளுத்தும் போராட்டமும், தண்டவாளம் பெயர்க்கும் போராட்டமும் நடைபெறும் என்று எச்சரிக்கிறோம். அரசே, ரயில்களை உடனே வாபஸ் வாங்கவும்".
 
அம்மா: அவனுக்கு வந்திருக்கிறது வைரஸ் ஜூரமாம்.
பாட்டி: நான் அவன் கிட்டே அப்பவே சொன்னேன், 'கம்ப்யூடர்லே வைரஸ் வந்திருக்கின்னு உங்க அண்ணா சொல்லிண்டு இருந்தான்டா. இப்ப கம்ப்யூடர்லே போய் விளையாடாதேடா' ன்னு. சொன்னா கேட்டாத்தானே. இப்பப் பாரு அவனை வைரஸ் ஜுரம் தொத்தினுடுத்து.
 
என்னங்க, இங்கே எச்சில் துப்பவும்னு போர்டு போட்டிருக்கே, இந்தப் போர்டைப் பார்க்காமலே போறீங்களே.
அதைப் பார்த்து நான் என்ன பண்ணணும்?
இங்கே வந்து எச்சில் துப்பிட்டுப் போங்க
 
அரசாங்கம் திட்டக் குழு ஒண்ணு அமைக்கப் போறாங்களாமே.
இது என்ன அநியாயமா இருக்கே.
இதுலே என்ன அநியாயம் இருக்கு?
திட்டறதுக்குக் கூட ஒரு குழுவா?
 
Doctor : You’re overweight, Lady.
Patient: I think, I want a second opinion.
Doctor: OK, you’re also ugly. This is my second opinion.
 
தேர்தலோ தேர்தல்
அந்த அம்மா ஏன் ஒவ்வொரு வீடா ஏறி இறங்கறாங்க? ஓட்டுக் கேக்கவா?
இல்லை. ஒட்டுக் கேக்க.
 
என் குழந்ழையை நான் சிரமப்பட்டு ஆராரோ பாடி தூங்க வைக்கிறேன். ஆனா பக்கத்து வீட்டிலே யார்யாரோ பாடி குழந்தையோடே தூக்கத்தைக் கெடுத்துடறாங்க.
 
நீங்க பத்து வருஷத்துக்கு முன்னாலே காஞ்சீபுரத்துக்குப் பக்கத்துலே ஒரு இடம் வாங்கினீங்களே. அதுக்குப் பட்டா வாங்கிட்டீங்களா?
வாங்கின கையோட பட்டாவுக்கு அப்ளை பண்ணினேன். இது வரையிலும் கிடைக்கலை.
இல்லியே. அப்ளை பண்ணினா ஒரு மாசத்துக்குள்ளே கொடுத்துடுவாங்களே.
நான் அந்த ஒரு மாசத்துக்காகத்தான் பத்து வருஷமாக் காத்துக்கிட்டு இருக்கேன்.
 
A poet visited Tenali Raman hoping to impress him with some poems he had written.
Raman asked him to leave the poems with him and promised to read them later.The man, however, insisted on reading out the poems to him.As the poet droned on Raman fell asleep.
When he woke up, the poet asked: “Sir, shall I read the poems again?"
“Why? I’ve already given you my opinion, haven’t I?"
“No, Sir," said the man. “You fell asleep."
“That’s right," replied Raman. “When I fell asleep I gave my opinion."
Moral learnt:
When I give my opinion in the classroom, my teacher doesn't relish it.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top