• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
அவரை எல்லாரும் கொடை வள்ளல்னு சொல்றாங்களே. அவர் என்ன அவ்வளவு பெரிய கொடை வள்ளலா உண்மையிலே?
கொடை வள்ளல் இல்லிங்க. குடை வள்ளலுங்க.
அப்படீன்னா எல்லாருக்கும் குடையை தானமாத் தருவாரா?
அதெல்லாம் இல்லீங்க. அவர்கிட்டே யாராவது பேசப்போனா குடை குடைன்னு குடைஞ்சு எடுத்துவிடுவார்.
 
தலைவர் 45 நாளா சோறு தண்ணி இல்லாம இருக்கார் தெரியுமா?
அப்படியா? பார்த்தா அப்படி தெரியல்லியே
அதுவா? 45 நாளா அவர் சோத்துக்கு பதிலா இட்லி,தோசை, பூரி, உப்புமா, சப்பாத்தி இது மாதிரியே சாப்பிட்டுக்கிட்டு தண்ணிக்குப்பதிலா ரம், விஸ்கி, பீர் இப்படி டிரிங்க்ஸா குடிச்சிக்கிட்டு இருக்காரு. அதைச் சொன்னேன்.
 
தபால்காரர்: நான் இந்தக் கடுதாசியை உங்க கிட்டே கொடுக்கறதுக்கு 5 மைல் நடந்து வரவேண்டி இருக்கு.

கிராமவாசி: நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க? பேசாமல் அந்தக் கடுதாசியை தபால் பெட்டியிலே போடவேண்டியதுதானே.
 
Thinking out of the box

Interviewer: He ordered a cup of coffee for the candidate. Coffee arrived kept before the candidate, then he asked what is before you?




Candidate: Instantly replied “Tea”




He got selected.




You know how and why did he say “TEA” when he knows very well that coffee was kept before.





(Answer: The question was “What is before you (U – alphabet) Reply was “TEA” ( T – alphabet)




Alphabet “T” was before Alphabet “U”
 
Thinking out of box

Interviewer (to an unmarried girl candidate) –

What if, one morning you woke up & found that you were pregnant?




Girl – I will be very excited and take an off, to celebrate with my husband.

***********

Normally an unmarried girl will be shocked to hear this, but she managed it well. Why I should think it in the wrong way, she said later when asked.
 
யானை உங்களோடதா? அது செத்ததுக்கா இப்படி அழறீங்க?

இல்லை. அதைப் புதைக்கறதுக்கான குழி வெட்டற வேலையை எங்கிட்டே கொடுத்து இருக்காங்க. அதை நெனச்சித்தான் அழறேன்.
 
A mechanic was removing a cylinder-head from the motor of a Harley motorcycle when he spotted a well-known cardiologist in his shop.




The cardiologist was there waiting for the service manager to come and take a look at his bike when the mechanic shouted across the Garage, 'Hey Doc, want to take a look at this?'




The cardiologist, a bit surprised, walked over to where the mechanic was working on the motorcycle. The mechanic straightened up, wiped his hands on a rag and asked, "So Doc, look at this engine. I opened its heart, took the valves out, repaired any damage, and then put them back in, and when I finish, it works just like new... So how come I make $39,675 a year and you get the really big bucks ($1,695,759), when you and I are doing basically the same work?'




The cardiologist paused, smiled and leaned over, then whispered to the mechanic... "Try doing it with the engine running"
 
Repeat of my FB jottings, July 2014

உண்மையில் நடந்தது

நான் ஒரு டாக்ஸி புக் பண்ணியிருந்தேன். டாக்ஸி டிரைவர் எனக்கு ஃபோன் பண்ணி இடம் எது என்று தெரிந்து கொள்ள 'எங்கே சார் வரணும்?' என்று கேட்டார். நான் அவரிடம் 'திருவான்மியூர் பஸ் டெப்போ தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியும்' என்றார் அவர். 'அங்கே வந்து நின்று கொண்டு பார்த்தால் எதிர் வரிசையில் ரெண்டு கேட் தெரியும். அதுலே இடது பக்கக் கேட்டுக்குள் நுழையவும்' என்று சொன்னேன். 'அதெல்லாம் சரிதான் சார். இடது பக்கக் கேட்டுன்னா ரைட்டா லெஃப்டான்னு சொல்லுங்க சார். வெறும் இடது பக்கம்னு சொன்னா எப்படி சார்?' என்றாரே பார்க்கலாம். 'என்னப்பா உனக்குத் தமிழ் தெரியாதா? இடது பக்கம்னா லெஃப்ட்டுன்னு கூடத் தெரியாதா?' என்று கேட்டேன். 'தெரியும் சார். நான் (பச்சைத்) தமிழன் சார். ஆனா நல்லாப் புரியற மாதிரி லெஃப்ட்டுன்னு (தமிழ்லெ) சொன்னா நான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன் இல்லே' என்றார். தமிழ் நாட்டின் கதியை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று எனக்குப் புரியவில்லை.

(அடைப்புக் குறிக்குள் இருப்பது அழுத்தத்திற்காகச் சேர்க்கப் பட்டுள்ளது)

அந்த வண்டியில் நாங்கள் புறப்பட்டோம். டிரைவர் ஒரு ரோடு ஜங்ஷன் வந்த போது எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்ற சந்தேகம் வரவே 'சார், லெஃப்ட்லே தானே திரும்பணும்' என்று கேட்டார். 'எஸ் ரைட்' என்று நான் சொன்னவுடன் லெஃப்டில் திரும்ப ஆரம்பித்த டிரைவர் திடீரென்று ரைட் ஸைடில் திரும்ப ஆரம்பிக்கவே 'என்னங்க, லெஃப்டிலே திரும்பினவர் ஏன் ரைட்லே திரும்பறீங்க?' என்று நான் கேட்கவே அவர் ' நீங்கதானே சார் சொன்னீங்க ரைட்டுனு' என்றார். 'என்னங்க குழப்பறீங்க? 'நீங்க லெஃப்டிலேதானே திரும்பணும்'னு கேட்டீங்க. நானும் 'நீங்க சொன்னது ரைட்'டுனு சொன்னேன். நான் தமிழ்லே 'ஆமாம் சரி' ன்னு சொல்லியிருந்தா உங்களுக்குப் புரியாம போயிருக்கும். அதனாலே இங்கிலீஷுலே சொன்னேன். எப்படிச்சொன்னாலும் நீங்க குழம்பிப் போறீங்க. நான் என்ன செய்யறது?' என்றேன் நான்.


நான் எழுதியதில் முதல் பாதி முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை. ஆனால் அடுத்த பாதி என் சொந்தக் கற்பனை (கற்பனைங்கிறது உடான்ஸைக் குறிக்கும் ஒரு மரியாதை வார்த்தை).
 
அந்தப் பொண்ணு அவர் கிட்டே அப்படி என்ன கெஞ்சரா?
அவளுக்குக் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க சான்ஸ் கேட்டு கெஞ்சரா.
 
பாகவதர்: பூஜ்யம்கறது ஒரு விசேஷமான எண். பூஜ்யத்தோடு பூஜ்யத்தைக் கூட்டினால் வருவது பூஜ்யம். பூஜ்யத்திலிருந்து பூஜ்யத்தைக் கழித்தால் வருவது பூஜ்யம். பூஜ்யத்தை பூஜ்யத்தால் பெருக்கினால் வருவதும் பூஜ்யம்தான். பூஜ்யம் என்றால் பூஜிக்கத்தக்கது என்று அர்த்தம்.
பையன்: அப்படீன்னா நான் கணக்குப்பரீட்சையில் பூஜ்யம் வாங்கினதுக்கு என்னை ஏன் பின்னே திட்டுறீங்க?
 
In 1900s
A father came home from work to find his wife and children at the supper table.
Today
A father comes home to a note: "Jimmy's at baseball, Cindy's at gymnastics, I'm at gym, Pizza in the fridge."
A father is no more the head or the headache of the house as before, but is just a figurehead
 
நேத்து பிரியா ஊருக்குப் போகும்போது அவளுக்கு வடை பிடிக்குமேன்னு வடை கொடுத்து அனுப்பினேன்.
பிரியாவடை கொடுத்து அனுப்பினேன்னு சொல்லு.
 
குரு: ஆசையை அடக்கு. அதுதான் மோட்சத்திற்குப் போவதற்கு ஒரே வழி.
ஏடாகூட சிஷ்யன் 1: ஆசையைஅடக்கணும் நினைக்கிறதே ஒருஆசை தானே குருவே!
ஏடாகூட சிஷ்யன் 2: மோட்சத்திற்குப்போகணும்னு நினைக்கறதும் ஒரு ஆசை தானே குருவே!
குரு: உங்களை மாதிரி சிஷ்யர்களை யெல்லாம் கரையேத்தணும் நான் நினைத்தேனே அந்த ஆசையை நான் முதலில் அடக்கியிருக்கவேண்டும்
 
ஓய் பெரிசு! பஸ் ஏறறதுக்கே இப்படித் தடுமாறினா, நீ பஸ்லே ஏறறதுக்குள்ளே பஸ் உன் மேலே ஏறிடப்பேகுது
 
When a newly married couple smile, everyone knows why.
But when a fifteen year old married couple smile everyone wonders why..!!! ?
 
நீங்க எந்த ஹேர் ஆயில் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் ஹேர் ஆயில்.
நீங்க எந்த சோப் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் சோப்.
நீங்க எந்த டூத் பேஸ்ட்டை உபயோகிக்கிறீங்க?
தினேஷ் டூத் பேஸ்ட்.
நீங்க எந்த பிளேட் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் பிளேட்.
நீங்க எந்த கிரீம் உபயோகிக்கிறீங்க?
தினேஷ் கிரீமைத்தான்.
என்னங்க எதுக்கு எடுத்தாலும் தினேஷ் பொருட்களையே உபயோகிக்கிறதாகச் சொல்றீங்க. ஆனால் இவ்வளவு வெரைட்டியான பொருள்களை உற்பத்தி செய்கிற தினேஷ் அப்படிங்கற கம்பெனி பேரை நான் கேட்டதேயில்லையே.
தினேஷ் அப்படிங்கறது எனக்கு கம்பெனி கொடுக்கிற என்னுடைய ரூம் மேட்டுங்க. கம்பெனி இல்லே.
 
உங்க மாப்பிள்ளை U.N. employedன்னு சொன்னீங்க. ஆனா ரெண்டு மாசமா உங்க வீட்டிலேயே தானே இருக்கார்.
அதை ஏன் கேக்கிறீங்க? நானும் முதல்லே அப்படித்தான் நெனச்சு என் பெண்ணைக் கொடுத்தேன். அப்புறம்தான் தெரிஞ்சது அவர் unemployed ங்கறதை அப்படிச் சொல்லியிருக்கார்னு.
 
அவர்: சார், நீங்க என் பையனை கொஞ்சம் கண்டிச்சி வையுங்க. அவன் சரியாகவே படிக்க மாட்டேங்கிறான்.
ஆசிரியர்: உங்களுக்கு நான் உண்டு என் வேலையுண்டுன்னு இருக்கிறது பிடிக்கலையா? நான் உங்க பையனைக் கண்டிக்கப்போக அவன் போலீஸுலே கம்ப்ளெயின் பண்ணி பத்திரிகைகளெல்லாம் உங்க பையனை நான் சித்திரவதை பண்ணினேன்னு எழுதப்போயி என் வேலை போயி நட்ட நடு ரோட்டிலே நான் அனாதையா நிக்கிறதைப் பார்க்கணும்னு உங்களுக்கு ஆசையா?
 
உங்களுக்கு அடுத்த சீட் காலியா?

ஆமாம். உட்காருங்க. அதுவும் என்னோட சீட் தான்.

ஏன் நீங்க ரெண்டு சீட் புக் பண்ணினீங்க?

என் மனைவிக்காக புக் பண்ணினேன். ஆனால் அவ இறந்து போயிட்டா.

அடடா, கேக்கறதுக்கே கஷ்டமா இருக்கே. ஆமாம். அந்த டிக்கட்டுக்கு உங்க சொந்தக்காரங்க யாரையாவது கூட்டிக்கிட்டு வந்திருக்கலாமே.

ஆனா அவங்க எல்லாரும் அவளோடே இறுதிச் சடங்குக்குப் போயிருக்காங்க.
 
இன்னிக்கு ஹோட்டல் சாப்பாடுதான்னு முடிவு பண்ணிட்டேன்.
வீட்டுச்சாப்பாடு போரடிக்கிறதுன்னு அப்படி முடிவு பண்ணிட்டீங்களா?
அதெல்லாம் இல்லீங்க. இன்னிக்கு ஒரு நாள் சமையல் வேலையிலிருந்து ரெஸ்ட் எடுத்துக்கலாமேன்னுதான்.
 
மாப்பிள்ளை பார்க்க வர நேரம் பாத்து பெண்ணுக்கு கூச்சம் ரொம்பவும் அதிகமாயிட்டுது
இவ்வளவு மாடர்னா இருக்கிற பொண்ணு இவ்வளவு கூச்சப்படறான்னா ஆச்சரியமா இருக்கு.
அதில்லை. மூணு நாளா ஐஸ்கிரீம் சாப்பிட முடியாம பல் கூச்சத்திலே ரொம்பவும் அவதிப்பட்டா. இப்ப மாப்பிள்ளை பார்க்க வர நேரம் பார்த்து பல் கூச்சம் ஜாஸ்தி ஆயிட்டுது. அதைச்சொன்னேன்.
 
நான் இந்த கடிதத்தை ரொம்பவும் மெதுவாகவே எழுதுகிறேன். ஏன்னா இப்பத்தான் நீ எழுத்தெல்லாம் ஒவ்வொண்ணா கூட்டித் தமிழ் படிக்க ஆரம்பிச்சிருக்கே. உன்னாலே வேகமாப் படிக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும்.
 
அவர் இரண்டு கால்களையும் கழுத்தைச் சுத்தி குறுக்கா போட்டு ஒரு ஆசனம் பண்ணினாரே. ரொம்பவும் ஆச்சரியமா இருந்தது!
கடைசியிலே முடிச்சு விழுந்து ஒரு டாக்டரைக் கூப்பிட்டு அந்த முடிச்சைப் பிரிச்சி அவரோடே கையைக்காலை விடுவிச்சி இப்ப அவருக்கு சுளுக்கு எடுக்க வேண்டியதாப்போச்சு.
 
என்னங்க? இந்த பக்கத்துலே எல்லா ஹோட்டல்லேயும் வாழைக்காய்க்கறி, வாழைக்காய்க் கூட்டு, வாழைத்தண்டுபச்சடி, வாழைப்பூ உசிலி இப்படி எல்லாமே வாழை சமாச்சாரமாகவே இருக்கு. ஏன்?
அதுவா? ரெண்டு நாளைக்கு முன்னே இங்கே பேய்க்காத்து அடிச்சதுலே வாழை மரங்களெல்லாம் சாஞ்சிடுத்து.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top