• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
அம்மா: ஏண்டா, பல் வலிக்கிறதுடா. உடனே டாக்டர்கிட்டே காட்டினா பரவாயில்லைடா.
மகன்: அம்மா, இது நம்ம ஊரு இல்லே நினைச்ச உடனே டாக்டரைப் போய்ப் பாக்கறதுக்கு. இது அமெரிக்கா. டாக்டர்கிட்டே முதல்லேயே அப்பாயின்ட்மென்ட் வாங்கி அவர் எப்ப வரச் சொல்றாரோ அப்பத்தான் அவரைப் பாக்க முடியும்.


அம்மா :இதென்னடா இது கூத்தா இருக்கு அப்பாயின்ட்மென்டும் அம்மாயின்மென்டும்? டாக்டருக்கு எப்ப சௌகரியமோ அப்பத்தான் எனக்குப் பல் வலி வரணுமா?
 
எங்க வீட்டு சமையல் மாமி பயங்கர ஊழல் மாமி.
அப்படீன்னா அரசியல்லே சேர்ந்தா அடுத்த மந்திரி அவங்க தான்னு சொல்லு
 
அப்பா: (வீட்டுக்கு வந்தவரைக் காண்பித்து) டேய் இவர் யாருன்னு தெரியுமாடா?
பையன்: தெரியாதப்பா.
அப்பா: இவர் தாண்டா எல்லாப் பத்திரிகையிலேயும் ஜோக் எழுதறவர்.
பையன்: ஓ! நீ சொல்லுவியே போர் அடிக்கிற ஜோக்கர் மாமான்னு. அவர் இவர் தானா?
 
I went to a book store and asked the saleswoman where the Self Help section was.

She said if she told me it would defeat the purpose.
 
அசட்டுப்பிச்சு: அப்பா, நெருப்புக்குப் பக்கத்துலே போகப்போக சூடு ஜாஸ்தியாத்தானே தெரியும்.

அப்பா: ஆமாம்.

அ.பிச்சு: அப்படீன்னா ஊட்டி சென்னையை விட சூரியனுக்குப் பக்கத்துலே இருக்கு. ஆனாலும் ஏன் ஊட்டி ஜில்லுனு இருக்கு. சென்னை சூடா இருக்கு?

அப்பா: ?????
 
ஆசிரியர்: சென்னையிலே சாயந்திரம் மணி 5:30 ஆக இருக்கும்போது லண்டன்லே மணி பட்டப்பகல் 12:00. என்ன காரணம்?
மாணவன்: லண்டன் கடிகாரம் ஸ்லோவா போறது தான் காரணம்.
 
கொசு: ஏய், அவனைக் கடிச்சுடாதே. அவன் இந்தியாவிலிருந்த வந்திருக்கான். அவனைக் கடிச்சா உனக்கு பூனைக்கால், எலிக்கால்னு ஏதாவது எக்கச்சக்கமான வியாதி வந்து தொலையப் போகுது
 
நீங்க என்ன பூனைக்குட்டி வளர்க்கிறீங்களா உங்க வீட்டிலே? பூனை சத்தம் கேட்டுக்கிட்டே இருக்குதே அப்பப்போ.
இல்லை. என் பொண்ணு பிடில் கத்துக்கறா.
 
போலீஸ்: என்ன தைரியம் இருந்தா பட்டப்பகல்லே வீடு புகுந்து திருடியிருப்பே?
திருடன்: அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்குக் கண் பார்வை சரியில்லாததனாலே ராத்திரி வீடு புகுந்து திருட முடியறது இல்லீங்க. அதான்.
 
நான் பிச்சை கேக்க வரலை தாயே. நீங்க ஒரு வாரமா Facebook லே எழுதாததைப் பாத்து உங்களுக்கு உடம்பு சரி இல்லையோன்னு விசாரிச்சிட்டுப் போகலாம்னு வந்தேன் தாயே.
 
ஐயா, உங்க வூட்டு சாப்பாட்டுலே உப்பு சாஸ்தியா இருக்கறதை நீங்க எனக்குப் போடற இம்மாத்தூண்டு பிச்சையிலேருந்து கண்டு பிடிச்சுச் சொல்றேன். அம்மாவை சாப்பாட்டுலே உப்பை கொஞ்சம் குறைச்சலாப் போடச்சொல்லுங்க. இல்லாங்காட்டி வூட்டுலே அத்தினி பேருக்கும் bp வந்து உடம்புக்கு நோவு வந்துட்டா எனக்கு உங்க வூட்டுப் பிச்சை இல்லாம பூடும்.
 
A true incident


It once happened, Shankaran Pillai was living in Alabama, and he was accused by his neighbor, a lady, of having called her a pig. He was taken to court and the judge fined him heavily. After the judgment was delivered, Shankaran Pillai said, “There is a cultural issue here. I would like to confirm what I can say and what I cannot say. Is it all right if I call a pig Mrs. Johnson?” The judge said, “There is no legal issue there. You can call a pig whatever you want.” Shankaran Pillai looked at the lady and said, “Good afternoon, Mrs. Johnson.”
 
திருடன் 1: என்ன அண்ணே, எங்கே புறப்பட்டீங்க?

திருடன் 2: கம்ப்யூட்டர் கத்துக்கப்போறேன் அண்ணே.

திருடன் : அது உங்களுக்கு எதுக்கு அண்ணே?

திருடன் : அதுவா? இனிமே எல்லாமே டிஜிட்டல் ஆகப்போகுது. யாரும் பணத்தைக் கையிலியோ, வீட்டுலேயோ வெச்சிக்க மாட்டாங்க. அதனாலே நாம எல்லாம் முன்னே மாதிரி வீடு புகுந்து திருடறதோ இல்லே, ரோட்டுலே கொள்ளை அடிக்கிறதோ லாபமில்லே. அதுவுமில்லாம அது ரிஸ்கியான வேலை. இப்ப எல்லாம் கம்ப்யூட்டர் தெரிஞ்சவங்க எல்லாம் உக்காந்த எடத்துலே இருந்தே என்னமோ சொல்லறாங்களே, ஹேக்கிங், ஃபிஷிங்னு அந்த மாதிரி செஞ்சு பல பேருடைய பாங்க் கணக்குலே இருந்து லட்சக்கணக்குலே சுருட்டறதுதான் பிரபலம் ஆகிக்கிட்டு இருக்கு. அதான் நான் கம்ப்யூட்டர் கத்துக்கறதுன்னு தீர்மானிச்சுட்டேன்.
 
வீட்டுக்கார அம்மா: போன மாசம் நீ சொல்லாம கொள்ளாம அஞ்சு நாள் வரலை.

வீட்டு வேலைக்காரி: நீங்க தப்பாச் சொல்றீங்க. நான் என் பையனோடே லாப்டாப்புலே எல்லாத்தையும் ரிகார்ட் பண்ணி வெச்சிருக்கேன். கரெக்டா நாளு நாள் தான் வரலை அதுவும் சொல்லாம கொள்ளாம இல்லை. உங்களுக்கு ஈ மெயில் அனுப்பி இருந்தேனே பாக்கலையா?
 
ஐயா தர்மம் பண்ணுங்க ஐயா. Full talk time இருக்கற மாதிரி என் செல் ஃபோனை ரீசார்ஜ் பண்ணணுங்க ஐயா.
 
Anne went away to college and promptly became an avid animal right activist. When she came home for the Holidays she noticed her mother wearing a beautiful genuine fur coat. “Oh Mom,” Anne exclaimed in a disapproving tone, “some animal must have suffered terribly just so you can get a fur coat.” “ANNE!” Screamed her Mom Aghast ” I SEND YOU AWAY TO COLLEGE AND YOU COME BACK TALKING LIKE THAT?! HOW DARE YOU TALK THAT WAY ABOUT YOUR DAD!!!”
 
மாமி நான் எம் பொண்ணுக்கான ஜாதகத்தைப் பார்த்துண்டு இருந்தப்போ எங்காத்து கம்ப்யூட்டர் crash ஆயிடுத்து. ஒரு மணி நேரம் உங்க laptop ஐக் கொடுத்தேள்னா நான் அந்த ஜாதகங்களை ப் பார்த்துட்டு உடனே திருப்பித்தந்துடறேன்.
 
He applied for aid to various Universities in US for pursuing his higher studies.


When I asked him whether he got any aid from any of the Universities he had no hesitation in saying he has got AIDS from many.
 
அப்பா, பாருங்க அப்பா பாட்டியை. நான் விளையாடறதுக்குக் கேட்டா, பாட்டி அந்த ஐபேடை எனக்குத் தரமாட்டேங்கறா அப்பா. பாட்டியே அதுலே ரெண்டு மணி நேரமா கேம்ஸ் விளையாடிண்டு இருக்கா அப்பா. எனக்கு அதை பாட்டி கிட்டே இருந்து வாங்கிக் கொடுங்கப்பா.

கம்ப்யூட்டர்லே பாட்டி என்னதான் விளையாடறா?

ஃப்ரீசெல், ஸாலிடேர், ஸ்பைடர், சுடோகு எல்லாம் ஆடிட்டு இருக்கா அப்பா.
 
280 பேர் அம்மா செத்த அதிர்ச்சி தாங்காம செத்துட்டாங்க. அவங்க குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் தரதாக கட்சி தீர்மானிச்சி இருக்கு.
அட்டா! இது தெரிஞ்சி இருந்தால் நாலு நாளைக்கு முன்னே செத்துப் போன என் தாத்தா அம்மா செத்த அதிர்ச்சியினாலேதான் செத்தார்னு சொல்லி இருப்பேனே.
 
நான் ஒண்ணுமே பண்ணாதபோது வாத்தியார் என்னை திட்டறார்.

அதெப்படி நீ ஓண்ணுமே செய்யாதபோது வாத்தியார் உன்னைத் திட்டலாம் ?

அவர் கொடுத்த ஒரு ஹோம் வொர்க்கைக் கூட நான் பண்ணலையாம். அதுக்காகத் திட்டறார்
 
David Is finally engaged, and is excited to show off his new bride. “Ma”, he said to his Mother, “I’m going to bring home three girls and I want you to guess which one is my fiance.” Sure enough twenty minutes later, David walks in the door with three girls following behind him. “It’s that one”, said his mother, without blinking an eye. “Holy cow”, exclaimed David, “how in the world did you know it was her?” “I just don’t like her”, she replied.
 
Wife

Old farmer Johnson was dying. The family was standing around his bed. With a low voice he sad to his wife: "When I'm dead I want you to marry farmer Jones."

Wife: "No, I can't marry anyone after you."

Johnson: "But I want you to."

Wife: "But why?"

Johnson: "Jones once cheated me in a hourse deal. I don't know how else to punish him"
 
அரசர்: மந்திரியாரே, என்னோட இ மெயிலைத் திறக்க முடியவில்லை.

மந்திரி: ஏன் அரசே?

அரசர்: பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டது .

மந்திரி: பாஸ்வேர்ட் உங்கள் மனைவி பெயரைத்தானே வைத்ததாகச் சொன்னீர்கள் அரசே.

அரசர்: ஆம். ஆனால் எந்த மனைவி என்பதை மறந்துவிட்டேன்.

மந்திரி: (மனதிற்குள்) நாளுக்கு ஒரு திருமணம் செய்து கொண்டால் இப்படித்தான்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top