• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
சீனு: படம் பார்க்கலாம்னு போனேன். ஒரே கும்பலா இருந்தது. திரும்பி வந்துட்டேன்.

கோபு: நானும் படம் பார்க்கலாம்னு போனேன். கும்பலே இல்லை. அதனாலே திரும்பி வந்துட்டேன்.
 
அவர் ஏன் ஜோக் எழுதறதை நிறுத்திட்டார்?
டாக்டர்களைப் பத்தி ஜோக் எழுதினார். டாக்டர்கள் சங்கம் அவர் மேல கேஸ் போட்டுது. ஆசிரியர்களைப் பத்தி எழுதினார். ஆசிரியர்கள் சங்கம் கேஸ் போட்டுது. அரசாங்க அலுவலர்களைப்பத்தி எழுதினார். அவங்க சங்கம் இவரை உண்டு இல்லைன்னு பண்ணிட்டுது. சாமியார்களைப் பத்தி எழுதினார். அகில இந்திய சாமியார்கள் சங்கம் இவரைப் படாத பாடுபடுத்திட்டுது. அதே மாதிரி போலீஸ்,
அரசியல்வாதி, பெண்கள், வக்கீல்கள் இப்படி இவர் யாரைப் பத்தி எழுதினாலும் அந்தந்த சங்கங்களும் அவர் மேலே நடவடிக்கை எடுக்கப்போய் இப்ப அவர் ஜெயில்லே இருக்கார்.
 
ஏன் அந்தப் பெரிய ஆஸ்பத்திரியிலே இருக்கிற டாக்டர்களொல்லாம் நம்ம தலைவரை சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு போகச் சொல்றாங்க? நம்ம நாட்டிலே முடியாதா?
அதெல்லாம் ஒண்ணுமில்லை. இங்கே சிகிச்சையளிச்சு ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா அவரோட கட்சித் தொண்டர்கள் ஆஸ்பத்திரியை அடிச்சி நொறுக்கிடுவாங்க. அதான்.
 
ஆபீஸுலே வேலை செய்யற எல்லாரும் லீவு வந்ததுன்னா சந்தோஷப் படுவாங்க. நீங்க என்ன சார் இப்படி அலுத்துக்கிறீங்க?

லீவு விட்டா வீட்டுலே தொந்திரவு தாங்க முடியாது. இங்கே அழைச்சுக்கிட்டு போங்க அங்கே அழைச்சிக்கிட்டுப் போங்கன்னு ஆளுக்கு ஆள் தொந்திரவு. கடைக்குப் போய் அதை வாங்கிக் கொடுங்கன்னு இதைவாங்கிக் கொடுங்கன்னு பிச்சிப் பிடுங்கல். ஏகப்பட்ட அலைச்சல். எக்கச்சக்கமான செலவு வேறே. அதே, ஆபீஸ் இருந்தா அலையாம கொள்ளாம ஆபீஸ் நாற்காலியிலே சௌகரியமா சாஞ்சிக்கிட்டு ஆபீஸ் செலவுலே ஃபேன், லைட் எல்லாம் பேட்டுக்கிட்டு அப்பப்போ துங்கிக்கிட்டு எந்தச் செலவுமில்லாம நல்லாப் பொழுது போகும். அப்படிஇருக்கும்போது.....
 
நாங்க மொத்தம் இருபத்து நாலு பேர் அந்த வேன்லே போய்க்கிட்டு இருந்தோம். வேன் நல்ல வேகமாப் போய்கிட்டிருந்தது. பக்கத்துலே ஒரு கார் வேகமாக எங்க வேனை தாண்டி போச்சு. வேன் டிரைவருக்குப் பொறுக்கலை. வேனை இன்னும் வேகமாக ஓட்டி காரை ஓவர்டேக் பண்ணப்பார்த்தார். ரெண்டு பேருக்குள்ளே ஒரேபோட்டாபோட்டி. அப்பத்தான் எதிர்பாராத விதமா எதிரிலே ஒரு லாரி முழு வேகத்தாடே வந்துகிட்டு இருந்தது. வேன் டிரைவர் சடனா பிரேக் போட்டார். பிரேக் பிடிக்கலை. டிரைவர் வேனை வேகமா இடது பக்கம் திருப்பி அங்கேயிருந்த மரத்துலே மோதினார். அவ்வளவுதான் தெரியும். அப்புறம் என்ன ஆச்சுன்னே தெரியாது. நிறைய பேர் செத்துட்டாங்க.
அது சரி. நீங்க என்ன ஆனீங்க, செத்தீங்களா, பிழைச்சீங்களா?
 
போலீஸ்: என்ன தைரியம் இருந்தா பட்டப்பகல்லே வீடு புகுந்து திருடியிருப்பே?
திருடன்: அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. எனக்குக் கண் பார்வை சரியில்லாததனாலே ராத்திரி வீடு புகுந்து திருட முடியறது இல்லீங்க. அதான்.
 
அந்த மனுஷன் செத்ததுக்கு அவங்க ரெண்டு பேரும் ஏன் அழறாங்க?

ஒருத்தர் அவர் கிட்டே கடனா 10000 ரூபா கேட்டிருக்காரு. அவரும் தரேன்னு சொல்லி இருக்காரு. ஆனா கொடுக்கறதுக்கு முன்னாடியே செத்துப் போயிட்டாரேன்னு அழறாரு.

இன்னொருத்தர்?

அவர் யாருக்கும் தெரியாம அவர்கிட்டே ஒரு10000 ரூபாயைக்கொடுத்து பத்திரமா வச்சிருக்கச் சொன்னாராம். அந்தப் பணத்தை எப்படித் திரும்ப வாங்கறதுன்னு தெரியாம கவலைப்பட்டு அழறார்.
 
Pros and cons are opposite to each other.


So does it imply that pro(gress) and con(gress) are opposed to each other?
 
ஆமாம், உனக்கு இப்ப என்ன சம்பளம்?

வருஷத்துக்கு 6 லட்சம்.

பரவாயில்லியே. எந்தக் கம்பெனியிலே?

கம்பெனியா? என்ன சொல்றீங்க நீங்க? நான் காலேஜ் ஸ்டூடண்ட். நான் காலேஜூக்குக் கட்டின சம்பளத்தைச் சொன்னேன்.
 
என்ன ஊர் பூராவும் வெங்காய வாசனையா இருக்கே?

சங்கீத சீஸன் ஆரம்பம் ஆயிடுத்தோ இல்லையோ? சங்கீத நாதம் காதைத் துளைக்காம போனாலும், வெங்காய வாசனை மூக்கைத் துளைக்காம போகாது.

*
 
அவர்: அம்மா விசுவாசியான நம்ம கட்சித் தலைவிகிட்டே போய் என் பெண்குழந்தைக்குப் பேர் வெக்கச்சொன்னா, குழந்தைக்கு "அம்மா" ன்னு பேர் வெச்சிட்டாங்க.!
 
அந்தப் பாகவதற்கு காபின்னா ரொம்பப் பிடிக்கும்.

எனக்குக்கூட காபின்னா உயிர். அதுவும் கும்பகோணம் டிகிரி காபின்னா கேட்கவே வேணாம்.

நாங்க கச்சேரியைப் பத்திப்பேசிக்கிட்டு இருக்கோம். கான்டீனைப் பத்தி இல்லை.
 
Wrong email address:




A couple was going on vacation but his wife was on a business trip so he went to the destination first and his wife would meet him the next day.




When he reached his hotel, he decided to send his wife a quick email.




Unfortunately, when typing her address, he mistyped a letter and his note was directed instead to an elderly preacher’s wife whose husband had passed away only the day before.




When the grieving widow checked her email, she took one look at the monitor, let out a piercing scream, and fell to the floor in a dead faint.




At the sound, her family rushed into the room and saw this note on the screen:




Dearest Wife,

Just got checked in. Everything prepared for your arrival tomorrow.




P.S. Sure is hot down here.
 
Still nothing

A guy walks into the doctor's office and says, "Doc, I haven't had a bowel movement in a week!" The doctor gives him a prescription for a mild laxative and tells him, "If it doesn't work, let me know."

A week later the guy is back: "Doc, still no movement!"

The doctor says, "Hmm, guess you need something stronger," and prescribes a powerful laxative.

Still another week later the poor guy is back: "Doc, STILL nothing!"

The doctor, worried, says, "We'd better get some more information about you to try to figure out what's going on. What do you do for a living?"

"I'm a musician."

The doctor looks up and says, "Well, that's it! Here's $10.00. Go get something to eat!"
 
வக்கீல் ஐயா, நான் சாகற வரையிலும் இந்த கேஸ் முடியாம நீங்க தான் பார்த்துக்கணும்.

அது ஒண்ணும் பிரச்சினையே இல்லை. பாதி நாள் ஸ்டிரைக், மீதி நாள் வாய்தான்னு அப்பப்ப வாங்கி உங்க ஆயுசு முடியறவரைக்கும் இழுக்கடிச்சிட மாட்டோம்? நீங்க சாகறதுக்கு முன்னாடி இந்த கேஸை முடிக்கச் சொன்னாத்தான் பிரச்சினை.
 
சட்டைப் பையிலே பணத்தை வச்சா அதை என் பையன் திருடிடறான். என்ன செய்யறதுன்னே தெரியல்லே?

அதை அவன் புஸ்தகத்துக்குள்ளே வெச்சிடு. அப்ப அது பத்திரமா இருக்கும். தொட மாட்டான்.
 
ஸ்கூட்டர்லே மீசை தாடி வச்சிக்கிட்டு ஒரு ஆள் வந்தாரப்பா.

ஓ! ஸ்கூட்டருக்குக்கூட மீசை தாடியெல்லாம் முளைக்க ஆரம்பிச்சுட்டுதா?
 
பிச்சைக்காரன் 1: கறுப்புப் பணம்னு சொல்றாங்களே. அது என்ன அண்ணே?

பிச்சைக்காரன் 2: அது ஒண்ணுமில்லை அண்ணே. அது கள்ளப் பணம். திருடங்க பறிச்சி வச்சிருந்தா அது திருட்டுப்பணம். பணக்காரங்க பதுக்கி வச்சிருந்தா அது கறுப்புப் பணம்.

பிச்சைக்காரன் 1: என் கிட்டே இருக்கிற இந்த நூறு ரூபாய் சில்லறையும் ஒரே கறுப்பா யிருக்கே, அதுதான் கறுப்புப் பணமோன்னு நினைச்சேன்.

பிச்சைக்காரன்2: இல்லே அண்ணே! அது அவ்வளவும் வெள்ளைப் பணம். அதுக்குத்தான் இப்ப ரொம்பவும் மவுசு சாஸ்தி.

**********
 
In-laws and out-laws?


Who is that lady?

Ush! She is my in-law?

The way in which you react, I think you are her outlaw.

Yes. We daughter-in-laws are generally treated like that only. isn't it?
 
Praying For Gifts




Two young boys were spending the night at their grandparents the week before Christmas. At bedtime, the two boys knelt beside their beds to say their prayers when the youngest one began praying at the top of his lungs.




"I PRAY FOR A NEW BICYCLE..."

"I PRAY FOR A NEW NINTENDO..."

"I PRAY FOR A NEW VCR..."




His older brother leaned over and nudged the younger brother and said, "Why are you shouting your prayers? God isn't deaf."




To which the little brother replied, "No, but Grandma is!"
 
நான் உங்கிட்டே கொடுத்த பாமை அந்தக் காருக்குள்ளே நான் சொன்ன இடத்திலே ஜாக்கிரதையா வெக்கணும்.வைக்கும்போது பாம் வெடிக்காமல் பாத்துக்க. தப்பித்தவறி வெடிச்சிடுத்துன்னு வெச்சிக்க அப்புறம் அவ்வளவுதான்.


அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அதுக்காகத்தான் இன்னொரு பாம் நான் கையிலே எக்ஸ்ட்ராவா வெச்சிருக்கேன்.
 
இன்ஸ்பெக்டர் சார் என்னோட தொலைஞ்சி போன சைக்கிள் கிடைச்சுட்டுதா?

கிடைக்கலை. அதுக்குப் பதிலா வேறே ஒரு சைக்கிளை எடுத்துக்குங்க.

சரி சார். ( அப்போது இன்னொருவர் வருகிறார்)

அவர்: இன்ஸ்பெக்டர் சார், காணாமப்போன என்னோடே மனைவி கிடைச்சிட்டாங்களா?

இல்லை.

பரவாயில்லை. இன்ஸ்பெக்டர். அவருக்கு வேறே ஒரு சைக்கிள் தந்த மாதிரி எனக்கு வேறே யாரையாவது கொடுத்தாக் கூடப் போதும்.
 
இடுக்கண் வருங்கால் நகுகன்னு வள்ளுவர் சொன்னபடி பண்ணப்போக என் வேலை போயிடுத்து.

ஏன்?

எங்க ஆபீஸ் மானேஜர் நான் சரியா வேலை செய்யல்லேன்னு என்னைக் கன்னா பின்னான்னு திட்டினார். அதைக் கேட்டு நான் சிரிச்சேன்.
 
He said to the writer 'Sir, there is just one difference between you and Oliver Goldsmith'.

The writer was taken by pleasant surprise that he was comparable to the great English writer and egged on by curiosity he wanted to know what that one difference was. So he said ' thank you for comparing me with Oliver Goldsmith. His English was classic, but my English may not be so. Is that what you mean?'

'No,sir' quipped his critic ' while Goldsmith wrote like an angel and talked like a fool, you write like a fool and also talk like a fool. That it is the only difference'.

( it is believed that Goldsmith was a great writer but a bad speaker)
 
Last edited:
New Year's resolution is something that goes in through one year and out through the other ear.

This is what happens year after year!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top