திருமூலரின் திருமந்திரம் : மூன்றாம் தந்திரம்
6. பிரத்தியாகாரம்
வெளி நோக்கிச் செல்லும் மனத்தை அடக்கி உள்ளேயே நிறுத்துவது பிரத்தியாகாரம்.
இது அடயோகம், இலய யோகம், நியமம், ஆசனம், இலம்பிகா யோகம், மந்திர யோகம், ராஜ யோகம், சிவயோகம் என்னும் பல வகைப்படும்.
#578. சிவனை உணரலாம்
கண்டு கண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்
கொண்டு கொண்டு உள்ள குணம் பல காணலாம்
பண்டு உகந்து எங்கும் பழமறை தேடியை
இன்று கண்டு இங்கே இருக்கலும் ஆமே.
வெளியே சென்று பழக்கப்பட்டுவிட்ட மனதை உடலின் உள்ளேயே பொருந்தும்படிச் செய்தால் சிறிது சிறிதாக மன இருள் விலகும். எங்கும் எப்போதும் மறைகளால் தேடப்படும் பரம்பொருளை நம் உடலின் உள்ளேயே நம்மால் உணர முடியும்.
---------------------------------------------------------------------------------------------------
#579. மனத்தை மந்திரம் உள்ளிழுக்கும்
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்த பின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே.
குண்டலினி சக்தி நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத் தொலைவில் மூலாதாரத்தில் உள்ளது. அதை எழுப்பி மேலே செலுத்தும் பிரசாத மந்திரத்தை எவரும் அறியவில்லை. அந்த மந்திரத்தை நாம் அறிந்து கொண்ட பின்னர் ஈசன் நாத மயமாக நம் தலையில் விளங்குவான்.
-------------------------------------------------------------------------------------------------
#580. செழுஞ்சுடர்
மூலத்து இருவிரல் மேலுக்கு முன் நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ் நின்ற
கோலித்த குண்டலினி உள்எழும் செஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே.
குண்டலினி சக்தி மண்டலமிட்டு இருக்கும் இடம் எது?
குண்டலினி மூலாதாரத்துக்கு இரண்டு விரல் அளவு மேலே இருக்கும். யோனிக்கு இரண்டு விரல் அளவு கீழே இருக்கும். மண்டலமிட்டு வட்ட வடிவமான குண்டலினியில் எழும் செஞ்சுடர் கொப்பூழுக்குக் கீழே நான்கு விரல் தொலைவில் உள்ளது. இது தலை உச்சியில் இருக்கும் பிரமரந்திரம் என்னும் தொளை வரையில் செல்லக் கூடியது.
--------------------------------------------------------------------------------------------------------