• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#794. இராசியைப் பொருத்தி அறிக

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக ஓடிடு மாகில்
உதித்த இராசி உணர்ந்து கொளுற்றே.


பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் தோன்றும். அகன்றும் தணிந்தும் மாறி மாறி ஓடாமல் ஒரே நாடியில் மிகுதியாக ஓடினால் பிறந்த ராசியைப் பொருத்தி கதிரவன் நாடி, சந்திரன் நாடி அறிய வேண்டும்.


#795. தீப ஒளி தோன்றும்!


நடுவுநில் லாம லிடம் வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின் பணிசேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண் டென் றானே.

இரண்டு நாடிகளின் வழியே சமமாக நிற்காமல் இடம் அல்லது வலமோடிப் பாய்கின்ற வாயுவை சுழுமுனையில் பொருத்த வேண்டும். நாடிகள் இரண்டையும் ஒத்து இயங்கச் செய்து, குண்டலினியைப் புருவமக்தியில் கொண்டு பொருத்தினால் அப்போது நடுநாடியான சுழுமுனையின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும்.


#796. ஆயுளை மூச்சு தீர்மானிக்கும்


ஆயும் பொருளும் அணி மலர் மேலது
வாயு விதமும் பதினாறு உளவலி
போய மனத்தைப் பொருகின்ற ஆதாரம்
ஆயுவும் நாளும் முகுர்த்தமும் ஆமே.

ஆராய்ச்சிக்கு உரிய சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் பதினாறு கலைகள் பொருந்திய சந்திரன் நன்கு விளங்குவான். அந்தக் கலையே நமது ஆயுட்காலத்தைத் தீர்மானிக்கும். அதுவே நாட்களாகவும், தியான காலத்துக்குரிய முகூர்த்தமாகவும் அமையும்.
 
Socrates on Marriage
e7fee5f1-c7bf-47a5-9a84-95109703dc74.jpg
 
One day Socrates was talking to one of his friends.
The lady made a loud ruckus so as to disturb them.
But the visitor would take a hint and leave the house.
So she brought a pail of water and drenched the men
by throwing the water on both of them.
Socrates is not called a philosopher without a reason.
He told his friend,"As usual the rain followed the thunder!" :rolleyes:
Many things and situations ( besides a bad spouse) can make a person a philosopher!
 
17. வார சூலம்

வாரம் = கிழமை. சூலம் = குற்றம்

பிரயாணத்துக்கு நன்மை தராத தோஷங்கள்.

#797. தவிர்க்க வேண்டிய நாட்களும், திசைகளும்

வாரத்திற் சூலம் வரும்வழி கூறுங்கால்
நேரொத்த திங்கள் சனிகிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.


திங்கள்,சனிக் கிழமைகளில் கிழக்கே சூலம் ஆகும். செவ்வாய், புதன் கிழமைகளில் வடக்கே சூலம் ஆகும். ஞாயிறு, வெள்ளிக் கிழமைகளில் மேற்கே சூலம் ஆகும்.


#798. சூலமும் தீமைகளும்


தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வளமுன்ன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.


வியாழக் கிழமையன்று சூலம் தெற்கு திசையில் அமையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு இடப் பக்கமாகவோ அல்லது பின்பக்கமாகவோ இருந்தால் நன்மை விளையும். சூலம் நாம் செல்லும் திசைக்கு வலப்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ இருந்தால் தீமை விளையும்.
 
18. கேசரி யோகம்

18. கேசரி யோகம்
கேசரி = வானம்.
கேசரி = சிங்கம்.
கேசரி யோகம் என்பது சிங்கத்தைப் போல மேல் நோக்கிய பார்வையுடன் இருப்பது.
இந்த யோகத்தைச் செய்பவர் வானத்தில் செல்லும் ஆற்றலைப் பெறுவர் என்பர்.

799. நமன் இல்லை!

கட்டக் கழன்று கீழ் நான்று விழாமல்
ஆட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாள்கோர்த்து
நட்டம் இருக்க நமன் இல்லை தானே.

மூச்சுக் காற்று கீழே இறங்காமல் அண்ணாக்கில் அதைக் கட்டிவிட வேண்டும். அபான வாயு குதம் வழியாகவோ அல்லது குறி வழியாகவோ வெளியேறாமல் குதத்தைச் சுருக்கி நிறுத்த வேண்டும். இரு கண் பார்வைகளையும் ஒன்றாக்கிவிட வேண்டும். உள்ளத்தைச் சுழுமுனை வழியே பாயும் மூச்சில் கொண்டு நிறுத்த வேண்டும். உடலைத் தாண்டிய இந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் அவன் காலத்தைக் கடந்து விடலாம். அவனுக்கு ஒரு நமன் இல்லை.


#800. அழுக்கு அற்றுப் போகும்


வண்ணான் ஒலிக்கும் சதுரப் பலகை மேல்
கண் ஆறு மோழை படாமல் கரைகட்டி
விண் ஆறு பாய்ச்சி குளத்தை நிரப்பினால்
அண்ணாந்து பார்க்க அழுக்கு அற்றவாறே.


சீவன், முன் பக்கம் உள்ள தன் மூளையைச் சிவயோக நாதத்தினால் மோத வேண்டும். இரண்டு கண்களின் பார்வைகளையும் மாறி மாறிப் பார்ப்பதால் சிரசின் உள்ளே ஏற்படும் இரண்டு கரைகள். அவற்றின் இடையே உள்ள சஹஸ்ர தளம் என்னும் குளத்தை வானத்தில் உண்டாகும் ஒளியைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்குப் பிறகு நெற்றிக்கு மேலே நிமிர்ந்து பார்த்தால் அந்த சீவன் தன் குற்றங்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை அடைந்து விடுவான்.

விளக்கம்

வண்ணான் = சீவன்
உவர்மண் = மூலபந்தம்
அடித்துத் துவைத்தல் = தவம் என்ற நாதத்தில் மோதுதல்
அழுக்கு நீங்குதல் = சீவனின் மலங்கள் அனைத்தும் நீங்குதல்



# 801. இறக்காமல் இருக்கலாம்


இடக்கை வலக்கை இரண்டையு மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே.

இடைகலை பிங்கலை நாடிகள் வழியே மூச்சுக் காற்று இயங்குவதை மாற்றிச் சுழுமுனை வழியே செலுத்தும் கலையை ஒருவன் அறிந்து கொண்டு விட்டால் அவருக்குத் தளர்ச்சி ஏற்படாது. மற்றவர் உறங்கும் போது பயிற்சி செய்து வந்தால் ஒருவனுக்கு இறப்பு இல்லை. நீண்ட காலம் வாழ இயலும்.
 
#802. நிலா மண்டலம் பாலிக்கும்

ஆய்ந்து உரைசெய்யில் அமுதம் நின்றுஊறிடும்
வாய்ந்து உரைசெய்யும் வருகின்ற காலத்து
நீந்துஉரை செய்யில் நிலாமண்டலம் ஆய்
பாய்ந்து உரை செய்தது பாலிக்குமாறே.

மறைகளை ஆராய்ந்து சொல்லப் போனால், சுழுமுனைத் தியானச் சாதனையில் அமுதம் ஊறிப் பெருகும் . அது அப்போது ஓர் ஒலியை எழுப்பும். ஒலிக்கும் போது சந்திர மண்டலமாக விளங்கி அது நம்மைப் பாதுகாக்கும்.

#803. நூறு கோடி ஆண்டுகள்


நாவின் நுனியை நடுவே விசிறிடில்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி ஊனே.

நாக்கின் நுனியை அண்ணாக்கில் உரசினால் பிரணவத் தொனி கேட்கும். சீவனும், சிவனும் அங்கே தோன்றுவர். மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கே தோன்றுவர். நூறு கோடி ஆண்டுகளுக்கு மரணம் என்பதே இராது.

முப்பத்து மூவர்:

துவாதச ஆதித்தர் - 12.
ஏகாதச ருத்திரர் - 11
அஷ்ட வசுக்கள் - 8
அஸ்வினி குமாரர் - 2


#804. அமுதம் உண்ணலாம்


ஊன் ஊறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வான் ஊறல் பாயும் வகைஅறி வார் இல்லை;
வான் ஊறல் பாயும் வகை அறிவாளர்க்குத்
தேன் ஊறல் உண்டு தெளியலும் ஆமே.


ஊனால் ஆன உடம்பால் அறியும் அறிவு எல்லாம் ஒருவரின் சிரசில் பொருந்தி அமையும். அந்த சிரசின் உச்சியின் மேல் வான் மண்டலம் பொருந்தி அமையும். ஆயினும் இதன் இயல்பை அறிந்தவர் இல்லை. வான்மண்டலத்தைப் பொருந்தி அறிந்து கொண்டவர் அங்கு ஊறும் தேனை ஒத்த இனிய அமுதத்தை உண்டு தெளிவு பெறலாம்.
 
Ref: Post# 192 of Thread Chennai Rains by Mr. V. Ganesh:

There is a song in Thirumarai for stopping rains..Any one is aware..There was a puja yesterday at Tanjore Big Temple to Varuna Bagawan for rains to stop

http://temple.dinamalar.com/news_detail.php?id=49923



Madam, please can you help in identifying the concerned verses of Sundarar's Thirumurai for stopping rains?
Can it be this one, I am not sure? Or is this verse for getting rains? Please condone my ignorance.

2. vaiyaka mu'r'ru maamazhai ma'ra:nthu
vayalil :neerilai maa:nila:n tharukoam
uyyak ko'lkama'r 'rengka'lai yenna
o'liko'l ve'nmuki laayppara:n thengkum
peyyu maamazhaip peruve'l'la:n thavirththup
peyarththum panniru vaeliko'n daru'lum
seykai ka'ndu:nin thiruvadi yadai:nthaen
sezhumpo zhilthirup punkooru 'laanae
Madam, you can feel free to address me simply Lalita. Thank you.
 
Dear Lalitha,

"வையகமுற்று மாமழை துறந்து
வயலில் நீரிலை மாநிலந்தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை யென்ன
ஒளிகொள் வெய்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும்
பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளுஞ்
செய்கை கண்டு நின்திருவடி யடைந்தேன்
செழும் பொழில் திருப்புன்கூர் உளானே." (சுந்தரர்)

The verse prays for rains and also for avoiding heavy floods caused by heavy rains!
 
#805 to # 807

#805. இளமையுடன் இருக்க வழி

மேலை அண்ணாவில் விரைந்து இருகால் இடின்
காலனும் இல்லை கதவம் திறந்திடும்
ஞாலம் அறிய நரை திரி மாறிடும்
பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.


மேல் அண்ணாக்குப் பகுதியில் பிராணன், அபானன் என்ற இரு வாயுக்களும் பொருந்தும்படி பயிற்சி செய்ய வேண்டும். அப்போது உடலுக்கு அழிவு இராது. பிரமரந்திரம் என்னும் உச்சித் துளையின் வழி திறக்கும். நரை திரை மாறி, இளமை திரும்புவதை உலகம் கண்டறியும். இது சிவ சக்தியரின் ஆணை ஆகும்.


#806. உடலறிவு நீங்குவர்


நந்தி முதலாக நாமேலே ஏறிட்டுச்
சந்தித்து இருக்கில் தரணி முழுது ஆளும்
பந்தித்து இருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித்து இருப்பவர் தீவினை யாளரே.


சிவத்தை முன்னிட்டு நாக்கின் நுனியை அண்ணாக்கில் ஏறும்படிச் செய்ய வேண்டும். அங்கே நடுநாடியின் உச்சியில் கூடி இருக்க வேண்டும். அப்போது அந்த யோகி உலகம் முழுவதையும் ஆளலாம். உடல் நினைவை ஒழித்துச் சிவனையே நினைத்துக் கொண்டிருப்பவர் உண்மையான அக்கினி காரியம் செய்தவர் ஆவார்.


#807. வினை நீங்குவர்


தீவினை ஆடத் திகைத்து அங்கு இருந்தவர்
நாவினை நாடின் நமனுக்கு இடம் இல்லை
பாவினை நாடிப் பயன் அறக் கண்டவர்
தேவினை ஆடிய தீங்கரும்பு ஆமே.

தீ வினைகள் நம்மை வருத்தும் பொழுது அறிவு மயங்கும். சீவர்கள் நாவினால் செய்யும் பயிற்சியினால் கூற்றுவனை வென்று விடலாம். பல வேறு வினைகளை ஆராய்ந்து அவற்றின் பயன் இன்மையை உணர்ந்து கொண்டவர்கள் தெய்வப் பணியில் ஈடுபடுவர். அதன் இனிமையைச் சுவைத்து இருப்பர்.
 
#808. ஊன் உடலில் அமுதம்

தீங்கரும்பு ஆகவே செய்தொழில் உள்ளவர்
ஆங்கரும்பு ஆக அடைய நா ஏறிட்டுக்
கோங்கு அரும்பு ஆகிய கோணை நிமிர்த்திட
ஊன்கரும்பு ஆகிய ஊன் நீர் வருமே.

இனிய கரும்பு போன்ற வினைகளைச் செய்பவர்கள் சுழுமுனை நாடியில் உள்ள கரும்பைச் சுவைகக் விரும்பினால். நாக்கை மேலே ஏற்றி நாடு நாடியின் கோணலை நேராக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஊன் உடலிலேயே அமுதத்தைக் காண இயலும்.


809. திருவைந்தெழுத்து


ஊன்நீர் வழியாக உள்நாவை ஏறிட்டு,
தேன்நீர் பருகி, சிவாய நாம என்று
கான்நீர் வரும் வழி கங்கை தருவிக்கும்
வான்நீர் வரும் வழி வாய்ந்தறிவீரே.


அண்ணாக்குப் பகுதி வழியே ஒருவன் தன் உண்ணாக்கை மேலே ஏற்ற வேண்டும். அங்கே ஊறும் அமுதத்தைப் பருக வேண்டும். ‘சிவாயநம’ என்ற ஐந்து எழுத்துக்களை சிந்தனை செய்ய வேண்டும். அப்போது ஓர் ஒளி வெள்ளம் நீர் வெள்ளம் போல முகத்தின் முன்பு பெருகும். அந்த வான கங்கையை அறிந்து கொள்ள வேண்டும்.

#810. உடலே ஓர் ஆலயம் ஆகும் !


வாய்ந்தறிந்து உள்ளே வழிபாடு செய்தவர்
காய்ந்த அறிவு ஆகக் கருணை பொழிந்திடும்;
பாய்ந்து, அறிந்து உள்ளே படிக்கதவு ஒன்று இட்டுக்
கோய்ந்து அறிந்து உள்உறை கோயிலும் ஆமே.


சிவனை மனதில் இருத்தி வழிபாடு செய்யும் போது மலங்களைச் சுட்டெரிக்கும் சக்தி தேவி ஒலி வடிவாகவும், ஒளி வடிவாகவும் வெளிப்படுவாள். அந்த ஒளி, ஒலிகளில் மனத்தைப் பதிக்க வேண்டும். சலந்தர பந்தனமும், கேசரி முத்திரையும் அமைத்து அவை கீழே இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அங்கேயே குவிந்து தியானம் செய்தால் அந்த யோகின் உடலே ஓர் ஆலயமாக மாறிவிடும்.
 
# 811 to # 814

#811. தீயினும் தீயவர்!

கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தாரணி முழுதுக்கும்;
காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளும்
தீயினும் தீயரத் தீவினை யாளர்க்கே.


அகக் கோவிலையே தன் இருப்பிடமாகக் கொண்டு வாழ்பவர்கள் உலகம் மொத்தத்துக்கும் தாயினும் மேலாகத் தன் அருளைப் பொழிவர். பிறர் இவரைச் சினந்தாலும் இவர் நன்மையே செய்வார். ஆனால் சினம் கொண்டவர்கள் தீவினை செய்தவர்களுக்குத் தீயைவிட அதிகமாகத் தீமை செய்து விடுவார்கள்.


#812. சிவபெருமான் இயல்பு


தீவினை யாளர்தம் சென்னியில் உள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி ஆனவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியில் உள்ளானே.


சிவபெருமானின் இருப்பிடங்கள் இவை:
மூலாக்கினியை எழுப்பி யோகம் செய்பவரின் சென்னியில் இருப்பான்.
சஹஸ்ரதளத்தில் உணர்பவருக்குப் பொன்னொளியில் விளங்குவான்.
தொடர்ந்து பாவனை செய்பவர்களுக்கு பாவகப் பொருளாக இருப்பான்.
சிவயோகம் செய்பவரின் அறிவில் சிவா பெருமான் செறிந்து விளங்குவான்.


#813. ஒளிக் கதிர்கள் பரப்புவான்


மதியினின் எழும் கதிர் போலப் பதினாறாய்,
பதிமனை நூறு நூற் றிருபத்து நாலாய்
கதிமனை உள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தன தானே.


சந்திரனின் கலைகள் பதினாறு. அது போன்றே விசுத்திச் சக்கரத்தில் உள்ள தாமரையின் இதழ்கள் பதறினாறு. உடலில் உள்ள சக்கரங்கள் ஒளி பரப்பும் கதிர்கள் 224. உலகங்களில் உள்ள ஒளிக் கதிர்களை உடலிலும் பரப்பி அதன் மூலம் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று மாறுபடாமல் சிவன் விளங்குவான்.


#814. இன்பம் அளிப்பாள்


இருந்தனள் சததியும் அக்கலை சூழ
இருந்தனள் கண்ணியம் அந்நடு ஆக
இருந்தனள் மான் நேர்முகம் நில ஆர
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

பராசக்தி விசுத்திச்சக்கரத்தின் நடுவே விளங்குகின்றாள். அக்கிரணங்களின் இடையில் பராசக்தி விளங்குகின்றாள். ஆன்ம தத்துவத்தில் சந்திரனாக விளங்குபவளும் சக்தி தேவியே. போகத்தின் போது உடலில் பொருந்தி இன்பம் அளிப்பவளும் சக்தி தேவியே
 
#815. விசுத்திச் சக்கரம்

பொழிந்தவிரு வெள்ளி பொன் மண் அடையில்
வழிந்துஉள் இருந்தது வான் முதல்; அங்குக்
கழிந்து அது போகாமல் காக்க வல்லார்க்கு
கொழுந்து அது ஆகும் குணம் அது தானே.


அனைத்துமாக உள்ள பராசக்தி வெண்மையான சுக்கிலத்திலும், பொன் மாயமான சுரோணிதத்திலும் பொருந்தி உள்ளாள். அவை செயல்படும் இடமாகிய ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் பொருந்தி உள்ளாள். ஆற்றல் கழிந்து செல்லாமல் காத்துக் கொள்ள அறிந்து கொண்டு விட்டால் அதுவே உடலைக் காக்கும் சிறந்த பச்சிலை ஆகி விடும். விசுத்தி மந்திரங்களில் அளிக்கும் பயன் இதுவே.

#816. மெய்ஞானம் உண்டாகும்


குணம்அது ஆகிய கோமளவல்லி
மணம் அது ஆக மகிழ்ந்து அங்கு இருக்கில்,
தனம்அது ஆகிய தத்துவ ஞானம்
இனம்அது ஆக இருந்தனன் தானே.

காம வெற்றிக்குக் காரணம் ஆகும் குண்டலினி சக்தி. கொடி போன்று மிக மெல்லிய இந்த சக்தி வான மண்டலத்தை அடைந்து, சிவனுடன் சேர்ந்து மகிழும். அவ்வாறு நடந்தால் எட்டு பெருஞ் சித்திகளும் கைக் கூடும். மெய் ஞானம் உண்டாகும். குண்டலினி சக்தியுடன் அறிவு மயமான சிவனும் நம் அறிவில் செறிந்து விளங்குவான்.

#817. நீண்ட காலம் வாழ முடியும்


இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேல் எழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலும் ஆமே.


விசுத்திச் சக்கரத்தின் கீழே ஓடும் மூச்சுக் காற்று, கண்டத்திலிருந்து உள்முகமாக மேல் நோக்கிச் செல்லும். அது உடலில் உள்ள வானத்தை அடைந்து கவிழ்ந்திருக்கும் சஹஸ்ரதளத்தில் விளங்க வேண்டும். அப்போது சந்திர மண்டலம் நன்கு வளரும். பூமண்டலத்தில் நெடுங்காலம் உயிர் வாழ முடியும்.

#818. நாதாந்தம் தரும் ஆனந்தம்


மண்டலத் துள்ளே மன ஒட்டி யாணத்தைக்
கண்டுஅகத்து அங்கே கருதியே கீழ்க்கட்டி,
பண்டுஅகத் துள்ளே பகலே ஒளிஆகக்
குண்டலக் காதனும் கூத்து ஒழிந் தானே.


சந்திர மண்டலத்துக்குள்ளே, சஹஸ்ரதளம் என்னும் ஒட்டியாணத்தால், மனத்தைக் கீழே செல்லாதவாறு கட்டி நிறுத்தி விட வேண்டும். உள்ளம் தளர்ச்சி அடையாமல் சிரசிலேயே நிற்கும் போது இயல்பான சாலந்திர பந்தனம் ஏற்பட்டு மூச்சுத் தடைப்படும். ஆனந்தமய கோசத்தில் கதிரவன் ஒளி வீசுவான். குண்டலத்தை அணிந்த சிவபெருமானும் தன் ஐந்தொழில்களை ஒழித்து விட்டு அசைவின்றி அங்கே விளங்குவான்.

ஆனந்தமய கோசம் ஒளி மயமானது. அது ஒளி அணுக்களால் ஆனது
ஈசனின் ஐந்தொழில்கள் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல்.
 
Dear Lalitha,

"வையகமுற்று மாமழை துறந்து
வயலில் நீரிலை மாநிலந்தருகோம்
உய்யக் கொள்க மற்றெங்களை யென்ன
ஒளிகொள் வெய்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்தும்
பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளுஞ்
செய்கை கண்டு நின்திருவடி யடைந்தேன்
செழும் பொழில் திருப்புன்கூர் உளானே." (சுந்தரர்)

The verse prays for rains and also for avoiding heavy floods caused by heavy rains!


Thank you, Ma'am for the clarification!
 
Sharing a quote:


By-three-methods-we-may-learn-wisdom-First-by-reflection-which-is-noblest-Second-by-imitation-which-is-easiest-and-third-by-experience-which-is-the-bitterest-Confucius.jpg



By three methods we may learn wisdom: First, by reflection, which is noblest; Second, by imitation, which is easiest; and third by experience, which is the bitterest – Confucius
 
Experience runs a costly school but fools won't learn from anywhere else! :ballchain:

They shun both the noblest and the easiest methods and settle for the bitterest! :loco:

What can we say about those who refuse to learn even from their bitter experiences??? :tape2:
 
#819. மனம் உடல் பற்றை ஒழிக்க வேண்டும்

ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமரும்
கழிகின்ற வாயுவும் காக்கலும் ஆகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிக்கின்ற காலத்துப் பைஅகற் றீரே.


மேலே சொன்ன சாதனையால் விசுத்திச் சக்கரத்துக்குக் கீழே சென்று கழிந்து போகின்ற வாயு அண்ணாக்கின் வழியே சென்று மேலே போய்த் தங்கும். ஒளி நிலை பெற்று வழியும். அந்த சமயங்களில், சஹஸ்ரதளத்தில் ஈசன் திருவடிகளைத் தொழும் போது, உடல் நினைவைத் துறந்து விடுங்கள். உடலைப் பற்றி மறந்து விடுங்கள்.

#820. மணி விளக்கு ஆகும்!


பையின் உள்ளே படிக்கதவு ஒன்று இடின்
மெய்யினின் உள்ளே விளங்கும் ஒளியதுஆம்
கையினுள் வாயுக் கதித்தி அங்கே எழுந்திடின்
மை அணி கோயில் மணிவிளக்கு ஆமே.


உடலில் உள்ள மூலாதாரக் கதவு குதம் ஆகும். அதைச் சுருக்கிப் பிடித்தால் மூல பந்தம் நிகழும். அதனால் அபானன் அமுக்கப்படும். தன திசையை மாற்றிக் கொண்டு மேல் நோக்கிப் போகும். உயிர்ப்பை மாற்றி மேலே செலுத்தும் போது உடல் ஒளியுடன் விளங்கும். அபானன் நாடியினுள் மேலே எழும் போது மலங்கள் நிறைந்த சீவன் ஒளி உடையதாக விளங்கும்.

#821. அக்கினிக் கலை வளரும்


விளங்கிடும் வாயுவை மேல் எழ உன்னி
நலங்கிடும் கண்டத்து நாடியின் உள்ளே
வணங்கிடும் மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்
சுணங்கிட, நின்றவை சொல்லலும் ஆமே.

மூல பந்தத்தால் அபானனை திசை மாற்றி மேலே செல்ல வைக்க வேண்டும். மூல பந்தத்துடன் செய்யும் சாலந்தர பந்தனம் பிராணவாயுவையும் அபான வாயுவையும் ஒன்றாகச் சேர்க்கும். அதனால் அக்கினிக் கலை நன்கு வளர்ந்து, மிளிர்ந்து, ஒளிரும்.
 
#822 to #824

#822. தொலை நோக்கு கிடைக்கும்

சொல்லலும் ஆயிடும் மாகத்து வாயுவும்
சொல்லலும் ஆகும் அனல் நீர் கடினமும்
சொல்லலும் ஆகும் இவை அஞ்சும் கூடிடின்
சொல்லும் ஆம் தூர தரிசனம் தானே.


வான் பூதத்தில் மற்ற ஐந்து பூதங்களும் ஒடுங்கி மறைந்து இருப்பதை அறிவோம். வானம் முதலிய ஐந்து பூதங்களும் ஒளி மயமாகப் பொருந்தி இருக்கும். இதைக் கண்டு அறிந்தவர் தொலை நோக்குப் பெறுவார்.


#823. சிவஞானம் தரும் பயன்.


தூர தரிசனம் சொல்லுவான் காணல் ஆம்
கார் ஆரும் கண்ணி கடை ஞானம் உட்பெய்து
தேர் ஆரும் தீபத்து எழில் சிந்தை வைத்திடின்
பார்ஆர் உலகம் பகல் முன்னது ஆமே.


தொலைப் பார்வையைப் பற்றிச் சொந்த அனுபவத்தால் அறிந்து கொள்ளலாம். மேகத்தைப் போல அருள் பொழியும் சக்தியைப் பற்றிய ஞானத்தை உள்ளே நிறுத்த வேண்டும். அழகிய ஒளி மிகுந்த தீபத்தைப் போன்ற சிவஞானத்தின் மீது மனத்தை நிலை நிறுத்த வேண்டும். அப்போது பூமி முதலான உலகங்கள் பகலில் பார்ப்பதைப் போலத் தெளிவாகக் காட்சி அளிக்கும்.


#824. ஆன்மாவில் சிவன் விளங்குவான்


முன்எழு நாபிக்கு முந்நால் விரற்கீழே
பன்எழு வேதம் பகல் ஒளி உண்டு என்னும்
தன்எழு நாதத்து நல்தீபம் வைத்திடத்
தன்எழு கோவில் தலைவனும் ஆம்.


முன்னால் எழுவது கொப்பூழ்த் தாமரை. அதற்குப் பன்னிரண்டு விரற்கடை கீழே உள்ளது மூலாதாரம். அங்கு கதிரவன் விளங்குவதாக வேதங்கள் கூறும். கீழே செல்லாதவாறு பந்தித்துக் குண்டலினியை மேலே செலுத்தும் பொழுது ஒரு நாதம் எழும். அதில் அறிவு பொருந்தி இருந்தால் அப்போது ஆன்மாவாகிய கோவிலில் சிவன் விளங்குவான்.
 
19. பரியங்க யோகம்

பரியங்கம் என்பது கட்டில்.
யோகம் என்பது சேர்க்கை.
கட்டிலில் ஆடவனும் பெண்னும் கூடி செய்யும் போகத்தையே
ஒரு யோகமாக மாற்றுவது பரியங்க யோகம்.


#825. போகத்தை யோகமாக்க வேண்டும்!

பூசுவன எல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையும் சாத்திக்
காயக் குழலி கலவியொடும் கலந்து,
ஊசித் துளையுற, தூங்காது போகமே.


பூசத் தகுந்த வாசனைப் பொருட்களை எல்லாம் பூசிக் கொண்ட ஓர் ஆடவன், மணம் வீசும் மலர் மாலையை அணிந்த ஒரு பெண்ணுடன் புணர்ச்சியில் ஈடுபடும் பொழுது, அவன் உள்ளம் தலை உச்சியில் உள்ள பிரமரந்திரத்தின் மீது நிலைத்திருந்தால் அந்தப் புணர்ச்சி தளர்ச்சி அடையாது.


#826. நாத விந்துக்களாக மாறிவிடும்!


போதத்தை உன்னவே போகாது வாயுவும்
மேகத்தை வெள்ளியும் மீளும் வியாழத்தில்
சூதொத்த மென் முலையாளும் நல் சூதனும்
தாதில் குழைந்து தலை கண்டவாறே.


உச்சித் தொளையாகிய பிரமரந்திரத்தில் விளங்குகின்ற பேரறிவு பொருந்திய சிவனை எண்ணியபடி ஓர் ஆடவன் புணர்ச்ச்சியில் ஈடுபட்டால், அவனது காம வாயு விரைவாகத் தொழில் புரியாது. நீரின் தன்மை கொண்ட அவன் சுக்கிலம் பெண்ணின் சுரோணிதத்தில் கலக்காமலேய திரும்பிவிடும். சூதாடும் கருவியைப் போன்ற ஸ்தனங்கள் உடைய பெண்ணும், உடல் என்னும் தேரைச் செலுத்தும் ஆடவனும், செய்த இந்தக் கூட்டுறவால் வெளிப்பட்ட சுக்கிலமும் சுரோணிதமும் நாத விந்துக்களாக மாறித் தலையில் சென்று பொருந்தும்.

இந்த யோகத்தில் ஈடுபடுபவன், தன் தலையில் நாதமாகிய சிவனும் விந்துவாகிய சக்தியும் விளங்குவதைக் காண்பான். பிரமரந்திரத்தை நினைவில் கொள்வதால் காம வாயு சுக்கிலத்தை நீக்கம் செய்யாது. அது நேராக மூலாதாரத்திலிருந்து தலையைச் சென்று அடைந்துவிடும்



#827. உடல் தளராது


கண்டனும் கண்டியும் காதல்செய் யோகத்து,
மண்டலம் கொண்டுஇரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேல்கொண்டு வான் நீர் உருட்டிடத்
தண்டு ஒருகாலும் தளராது அங்கமே.

ஒரு தலைவனும் தலைவியும் விருப்பத்துடன் கூடிப் புணரும் போது; அக்கினி மண்டலம், கதிரவன் மண்டலம் என்ற இரண்டையும் கடந்து மேலே சென்று; சந்திர மண்டலத்தில் தலையின் மேலே உள்ள வெளியை உணருவர். அங்கு சந்திர மண்டலத்தில் வான் கங்கை ஒளியைப் பெருக்கும். அதனால் அவர்கள் உடல் ஒரு போதும் தளர்ச்சி அடையாது.


#828. விந்துவை வெற்றி பெறலாம்


அங்குஅப் புணர்ச்சியும் ஆகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமல் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்க தலைவனும் ஆமே.


புணர்ச்சியின் போது காமத் தீ உடலிலிருந்து விந்துவை நீக்கம் செய்யும். அவ்வாறு நிகழாமல் விந்துவைப் பாதுகாத்து யோகத்தால் விந்து நீக்கத்தை வெற்றி கொண்டவன் ஒரு தலைவன் ஆவான்.
 
#829. உடல் வசப்படும்

தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
தலைவனும் ஆயிடும் தன் வழி போகம்
தலைவனும் ஆயிடும் தன் வழி உள்ளே
தலைவனும் ஆயிடும் தன் வழி அஞ்சே.


இவ்வாறு வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். அவன் சொற்படி ஐந்து பூதங்களும் நடக்கும்.


#830. ஐந்து நாழிகை போதும்!


அஞ்சிக் கடிகைமேல், ஆறாம் கடிகையில்
துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன் பால்
‘நெஞ்சு நிறைந்தது வாய்கொளது’ என்றது
பஞ்சக் கடிகை பரியங்க யோகமே.

பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். ஆறாம் நாழிகையில் துணைவி தன் துணைவனுடன் பொருந்தி உறங்குவாள். ஐந்து நாழிகைப் பரியங்க யோகமே அவளுக்கு மன நிறைவை அளித்துப் போதும் இனி வேண்டாம் என எண்ணச் செய்யும். இதற்கு மேலே பரியங்க யோகம் நீடித்தால் விந்து வெளிப்படும்.


#831. குண்டலினியைக் கடக்க இயலும்


பரியங்க யோகத்துப் பஞ்சக் கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தவர்க்கு அல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.

நழுகின்ற வளையல்கள் அணிந்த கைகளை உடைய, மணம் பொருந்திய கொங்கைகளை உடைய குண்டலினி சக்தியைக் கடந்து மேலே செல்வது மிகவும் அரிது. பரியங்க யோகத்தில் அரிதாக ஐந்து நாழிகை இருக்க முடிந்தவனுக்கே இந்த திறமை வாய்க்கும்.


#832. பரியங்க யோகம் மேன்மை தரும்


ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்,
விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ஆர் அமுதினைப் பஞ்சக் கடிகையில்
‘எண்ணாம்’ என எண்ணி இருந்தான் இருந்ததே.


யாவருக்குமே அடைவதற்கு அரிதாகிய இந்த யோகத்தைச் செய்து அதை அறிவித்தவர் யார் தெரியுமா? வான் கங்கையை ஜடையில் தரித்த ருத்திரன் ஆவான். அவன் உருவத்தை எண்ணாமல், நாதத்துடன் கூடிய ஒளியை ஐந்து நாழிகைப் பொழுது எண்ணாமல் எண்ணி அனுபவித்திருந்தான்.
 
#833 to #836

#833. யோகத்துக்கு உரிய வயது

ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
ஆய்ந்த குழலியோடு ஐந்தும் மலர்ந்திடச்
சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.


இந்தப் பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும், ஆணுக்கு முப்பதும் ஆகும். அப்போது இந்த யோகத்தில் பொருந்திய இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆனால் ஆணுக்கு விந்து நீக்கம் ஏற்படாது.


#834. கள்ளத் தட்டானார்


வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத் தட்டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பரியக் குழல் வழியே சென்று
வள்ளி உள்நாவில் அடக்கி வைத்தாரே.

வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிற சுரோணிதத்தில் கலக்காமல் தடுத்தார் மறைந்து இருந்த சிவன் என்னும் தட்டானார். அவர் கரியாகிய அருளினால் பக்குவம் செய்வார். தீ என்ற அக்கினிக் கலை உண்டாகும் வண்ணம், ஊதுகுழல் ஆகிய சுழுமுனை வழியே சென்று; உள்நாவில் ஒளிமயமான சந்திர மண்டலத்தை விளங்க வைப்பார்.


#835. சிவசூரியன் விளங்குவான்


வைத்த இருவரும் தம்மில் மகிழ்ந்து உடன்
சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே.

காம வயப்படாமல் தெய்வ காரியமாக எண்ணிப் பரியங்க யோகத்தைச் செய்ய வேண்டும். விந்து நீக்கம் இல்லாமல் ஆணும் பெண்ணும் புணரும் போது இருவரும் இன்பம் அடைவர். அவர்களுக்குப் பத்து திசைகளுக்கும் தலைவனான பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான சிவசூரியன் விளங்குவான்.


#836. நாதத்தில் திளைப்பர்


வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
தங்களில் பொன் இடை வெள்ளிதாழா முனம்
திங்களில் செவ்வாய் புதைந்திருந்தாரே.

விருப்பத்தைத் தருபவன் கதிரவன். பிறப்பைத் தருவது கருவாய். பரியங்க யோகம் செய்யும் ஆடவன் இவை இரண்டுக்கும் இடையில் ஆனந்தம் அடைவான். அவ்வகைப் புணர்ச்சியில் சுக்கிலம் சுரோணிதம் வழியே பாயாது. எனவே இருவரும் சந்திர மண்டலத்தில் உள்ள செந்நிறம் உடைய சக்தியாகிய நாதத்தில் திளைத்து இருப்பர்.
 
"My idea of Christmas, whether old-fashioned or modern, is very simple: loving others. Come to think of it, why do we have to wait for Christmas to do that"- Bob Hope
 
"My idea of Christmas, whether old-fashioned or modern, is very simple: loving others. Come to think of it, why do we have to wait for Christmas to do that"- Bob Hope

I got a small red purse with a long handle.
The message inscribed on it read
"Love all! Serve all !!"
Sayta Sai Baba.

Love is the master key that opens every locked mind and heart. :)
Love is the weakness misused by the unscrupulous ruthless people! :(

We tolerate people whom we need not tolerate because we love them.

In fact the very purpose of Education seems to be to train us
to tolerate people whom we really do not need to tolerate! :boink:
 
Did anyone actually visit the blog?
I will never know since I can't enter into my own a/c.
Thanks to the automatic arrangements which can't reason
nor can be made to see any reason! :(
Once my elder son got very vexed while talking on the phone.
He then told me "I am trying to talk to a human being!" :(
Now I understand how he must have felt when he said this!
Automated messages are OK for normal situations but for the abnormal situations??? :frusty:
 

Latest ads

Back
Top