• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

I have always wondered at the drop-outs from my music / dance classes.

When the lesson become tougher some people drop out.

It is the same everywhere even outside the school/ colleges.

When the matter / material seems to be above their grasping power, people drop out.

Won't it be better to strive to raise one's level so as to be able to :laser:

comprehend and grasp the matter / material/ ideas being conveyed?
 
#2554 to #2557

#2554. தூயமணி தூய ஒளிவிடும்!

தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை
தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூயனல் தூயவு மாமே
.

சிவன் தூய மணி நிறத்தினன்; அவன் அனலும் தூய்மையானது; அவன் தூய ஒளியுடன் மிளிர்வான்; இந்த தூய மணியின் வேரையும் ஆதாரத்தையும் எவரும் அறிகிலர். இந்தத் தூய மணியில் ஒளிரும் அக்கினியின் ஆதாரத்தை அறிந்து கொண்டவர்கள் தாமும் தூய்மை அடைவார்கள்.

#2555. தூயது வாளா நாதன் திருநாமம்


தூயது வாளா வைத்தது தூநெறி
தூயது வாளா நாதன் திருநாமம்
தூயது வாளா அட்டமா சித்தியும்
தூயது வாளா தூயடிச் சொல்லே.


தூய மௌனத்தில் உள்ளது தூய நெறியடையும் வழி.
தூய மௌனத்தில் உள்ளது தலைவனின் திருநாமம்.
தூய மௌனத்தில் உள்ளன அட்டமா சித்திகள்.
தூய மௌனத்தில் உள்ளன ஈசனின் திருவடிகள்.


#2556. மருளால் சிந்தை மயங்குகின்றாரே


பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியில்
மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.


எந்தை சிவன் புண்ணியன்; நம்மால் விரும்பிப் பெறப்பட வேண்டியவன்; அடியவர் அவன் அருளை நாடி அவனைப் போற்றி நிற்கின்றனர். மற்றவர் பிறவித் தளையில் பிணிபட்டுச் சுவர்க்கம், நரகம், உலகம் என்று உழன்று திரிந்து துன்புறுகின்றார்கள். அவர்கள் மருளால் மயங்கிச் சிந்தைத் தெளிவு சிறிதும் இல்லாதவர்.


#2557. வினையாளர் விளைவறியார்!


வினையா மசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
வினையாளார் மிக்க விளைவறி யாரே.


மயக்கத்தில் உள்ள சீவர்கள், தம் வினைகளால் அசத்து ஆகிய மாயை வலுவடைந்து, தமக்குத் துன்பத்தைத் தருகின்ற உண்மையை அறியார். கொடிய வினைகள் நீங்கிச் செல்வதற்குச் சீவன் தூய ஞானத்தைத் தேட வேண்டும் என்ற உண்மையையும் அறியார். “வினைகளைத் துறந்து விட்டால் வீடுபேறு கிடைக்கும்!” என்று வேதம் கூறும் உண்மையையும் அறியார். வினைகளை புரியும் சீவர்கள் அதன் காரண காரியங்களை அறிய மாட்டார்.



 
34. முத்தி நிந்தை

34. முத்தி நிந்தை கூடாது

முத்தி என்னும் வீடுபேறு உண்மை அல்ல என்று இகழ்ந்து பேசுதல் கூடாது!


#2558 to #2561


#2558. பரகதி என்று ஒன்று உண்டு!

பரகதி யுண்டென இல்லையென் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே.


பரகதி (வீடுபேறு ) என்ற முத்தி நிலை என்று ஒன்று உண்டு என்று கூறும் போது, அப்படி எதுவும் இல்லை என்று மறுத்துப் பேசுபவர்கள் தவறாமல் நரகத்தைச் சென்று அடைவர் என்று இந்த ஞாலம் அறியும். மேலும் வாழும்போதும் அவர்கள் உணவுக்காகப் பிச்சையெடுப்பர். குதிரை போலத் தாவிச் சென்று உணவைத் தேடி அலைவர்.


#2559. பரிசறிந்து பாடகில்லார்!


கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார்நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லாரவர் பேறிது வாமே.


குருநாதன் காட்டிய வழியில் சென்று சிவத்துடன் கூட மாட்டார்கள்! இறைவன் அருளை நாடாமல் அலங்காரமாகப் பேசிக்கொண்டு திரிவார்கள்.
சீவர்களுக்குச் சிவன் செய்யும் நன்மையை எண்ணித் துதித்துப் பாடவும் மாட்டார்கள். இங்கனம் இறைவனைக் குறித்து ஆடவும் பாடவும் செய்யாதவர் இந்த பெரிய பேற்றை எய்துவாரோ?


#2560. இங்கு இது என்ன என்கின்றானே!


புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைப் தெய்வமென் றெண்ணி
அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன
இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே


என் உள்ளத்தின் எண்ண ஓட்டம் வெளியே செல்வதும் பின்னர் மீண்டும் திருப்புவதும் ஆக இருந்தது. அது அவ்வண்ணம் செய்யாமல் தடுத்து நிறுத்தினேன். என் உள்ளத்தைச் செம்மையாக்கிச் சிவன் மீது செலுத்தினேன். அவனை “என் தலைவா!” என்று அழைத்தேன். என் உயிர் அறிவு கெட்டு ஒழியும்படி அவன் வெளிப்பட்டான். “இங்கு இது என்ன?” என்று என்னைக் கேட்டான்.


#2561. அடலெரி வண்ணன் அங்கு நின்றான்


திடரிடை நில்லாத நீர்போல் ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லா கலஞ்சேரு மாபோல்
அடலெரி வண்ணனும் அங்குநின் றானே.


மேடான நிலத்தில் தண்ணீர் தங்கி இராது! அதை போன்றே உடலில் பொருந்தி நிற்காமல் ஓடிவிடும் என் உள்ளத்தில் சிவன் தன் அருளைக் கூட்டினான். கடலில் நின்று விடாமல் கரையை நோக்கிச் செல்லும் மரக்கலம் போல என்னைச் செலுத்திப் பிறவிக் கடலில் இருந்து கரை ஏற்றுபவன் நெருப்பின் செம்மை நிறம் கொண்ட என் சிவபெருமான்





 
#2562 to #2565

#2562. தாமரை நூல்போல் தடுப்பார்

தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும்
போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர்
காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள்
தீநெறி செல்வான் திரிகின்ற வாறே.


நீர்நிலையைக் கடப்பவரைத் தாமரைக் கொடி தடுக்கும். அது போலவே பரகதி நாடுபவரைச் சிலர் தடுப்பர். சிவத்தை அடையும் வழி வெளி உலகில் உள்ளது என்று கூறித் திரிவர். வீடுபேற்றை அடையும் வழியைக் காட்டினாலும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த மூடர்கள் தீ நெறியைத் தேடி திரிபவர்கள்.


#2563. ஊடும் உருவினனை உன்னுவீர்!


மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையுங் கழனி கடந்தோறும்
ஊடும் உருவினை யுன்னகி லாரே.


அறியாமை இருளினால் மூடப்படாத ஞானியர்கள் சிவத்தைச் சிந்தையில் பொருத்தி அவனுடன் கூடி இருப்பார்கள். அறியாமையில் அழுந்திக் கிடைப்பவர்களோ எனில் காட்டிலும், மேட்டிலும், மலையிலும், கழனியிலும் ஊடுருவி நிற்கும் ஒப்பற்ற சிவனை எண்ணுவதில்லை அன்றோ !


#2564. சீவன் செல்லும் திசைகள்


ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவார் குடக்கும் குணக்கும் குறிவழி
நாவினின் மந்திர மென்று நடுவங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.


உடலை விட்டுப் பிரிந்த பின்பு ஆன்மா தெற்கு நோக்கி நரகத்துக்கோ அல்லது வடக்கு நோக்கிச் சுவர்க்கத்துக்கோ செல்லும். அழியாத அமரத்தன்மை பெற்றவர்கள் ஓர் உண்மையை அறிவர். அறிவு உதயமாவது புருவ மத்தியாகிய கிழக்கு திசை ! அறிவு மறைவது பிடரிக் கண் ஆகிய மேற்கு திசை . இந்த இரண்டிற்கும் நடுவே, நாவுக்கு மேலே, பிரமரந்திரத்தில், உள்ளது ஒரு மந்திரப் பொருள். அமரத் தன்மை வாய்ந்தவர்கள் உடலில் உள்ள அக்கினிக் கலையை நன்கு வளர்த்துப் பிரமரந்திரத்தில் உள்ள சிவனுடன் பொருந்தி விளங்குவர்.


#2565. வல்வினை தாங்கி நிற்பார்


மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவினை யாளர்
தமக்குற வல்லினை தாங்கிநின் றாரே.


அழகிய பெண்கள் மயக்கம் தரும் பார்வையால் நோக்கினாலும் மாதவம் செய்பவர் அவர்களிடம் மயங்க மாட்டார். அவர்களை தீவினையாளர்கள் இழிவாகப் பேசினாலும் அதை நினைவில் கொள்ளார். ஆனால் இந்த ஞானிகளைத் தாறுமாறாகப் பேசியவர்கள் தம் செய்த தீவினையால் வல்வினைகள் வந்து தம்மைப் பொருந்திடும் வண்ணம் வருந்துவர்.




 
35. இலக்கணாத் திரயம்

35. இலக்கணாத் திரயம்

இலக்கணா = லக்ஷணா

திரயம் = மூன்று

ஒரு பொருளின் இலக்கணையை மற்றொன்றுக்கு கூறுவது.

இது மூன்று வகைப் படும். அவை….

1. விட்ட இலக்கணை,

2. விடாத இலக்கணை,
3. விட்டும் விடாத இலக்கணை.

1. விட்ட இலக்கணைக்கு உதாரணம்:


கங்கையில் உள்ள சிற்றூர்.

இதில் ‘கங்கை’ என்ற சொல் கங்கை ஆற்றைக் குறிக்கவில்லை!
கங்கைக் கரையைக் குறிக்கின்றது!

2. விடாத இலக்கணைக்கு உதாரணம்:


அங்கே சிவப்பு ஓடுகின்றது!

இதில் ‘சிவப்பு’ என்பது சிவப்பு நிறக்குதிரையைக் குறிக்கும்.

3. விட்டும் விடாத இலக்கணைக்கு உதாரணம் :


அந்த தேவதத்தன் தான் இவன்!

முன்பு தேவதத்தனைப் பார்த்த காலத்தைக் கூறாமல் விட்டுவிட்டு
பார்த்த மனிதன் தேவதத்தனை விட்டு விடாமல் குறிக்கின்றது.

#2566 & #2567

#2566. இலக்கணாதீதம் சொரூபமே

விட்ட இலக்கணைதான்போம் வியோமத்துத்
தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்
விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்
சுட்டு மிலக்கணா தீதம் சொருபமே.


“ஆன்மா வானத்தில் செல்லும்!” என்பது ‘விட்ட இலக்கணை’.
ஏனென்றால் போக்குவரவு இல்லாதது ஆன்மா. இங்கு ‘ஆன்மா’ என்ற சொல் நுண்ணுடலைகே குறிக்கின்றது.


“ஆன்மா உபசாந்தத்தில் அமையும்” இது விடாத இலக்கணை.
ஏனென்றால் துன்ப நிலையில் இருந்த அதே ஆன்மா இன்ப நிலையில் பொருந்தியுள்ளது.


“ஆன்மா சத்தம் முதலியவற்றை உணரும்!” இது விட்டும் விடாத இலக்கணை.
ஏனென்றால் சத்தம் முதலியவற்றை ஆன்மா தானே உணருவதில்லை. அவற்றை ஆன்மா ஐம்பொறிகளின் வழியே உணர்கின்றது.


#2567. கதிர் எதிராகும்!


வில்லின் விசைநாணிற்கோத்து இலக்கெய்தபின்
கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன
வில்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்குக்
கல்கலன் என்னக் கதிரெதி ராமே.


சீவன், பிரணவம் என்ற வில்லில், புருவ மத்தியையும் பிடரிக் கண்ணையும் இணைக்கும் நாணைப் பூட்ட வேண்டும். இந்த நாணின் விசையால் அம்பினை இலக்கை நோக்கி எய்ததும் ஐம்பொறிகள் ஆகிய யானைகள் சாய்ந்து விழுந்துவிடும். பிரணவ வில்லில் இருந்து உயரச் சென்றவருக்குக் கதிர் வீசி ஒளிரும் நவமணிகள் போன்ற சிவன் வெளிப்படுவான்!



a request to the exponents in sanskrit in this forum!
Please give some more examples to make the difference
between the three lakshanas in lakshana trayam
more clear to everyone ( including me!)
 
36. தத்துவமசி

36. தத்துவமசி வாக்கியம்
தத் + த்வம் + அசி = அது + நீ + ஆகிறாய் = அது நீ ஆகிறாய்!

#2568 to #2571


#2568. தத்துவமசி உண்மையே.

சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்து அற்ற தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத் துவமசி உண்மையே.

சீவன் சீவ துரியத்தில் பொருந்தித் தத்துவங்களைத் துறந்துவிட்டு நிலை தொம்பதம் ஆகும். சீவன் பர துரியத்தில் பரத்தோடு பொருந்தி ஒருப்பது தத் பதம் ஆகும்.
சீவன் சிவதுரியத்தில் சிவனுடன் பொருந்தி இருப்பது அசி பதம் ஆகும். இல்லாத தத்துவங்களையும் துறந்துவிட்ட சீவன் தத்துவமசியால் உண்மையான பேறு பெறும்.

#2569. தொந்தத்தசி தத்வமசியே.

ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
ஈறான தொந்தத் தசிதத்வ மசியே.


முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்துவிட்ட ஆன்மா பொருந்துகின்ற தொம்பதம் ஒரு தூயநிலை ஆகும். ஆன்மா உபசாந்த நிலையில் தத் பதம் என்ற நிலையைஅடையும். சீவன் இதனையும் கடந்து அ சி பதம் ஆகிய சிவகதியை அடையும்போது தொந்தத்தசி, தத்துவமசி இரண்டும் ஒன்றே ஆகும்.

#2570. சீவன் பரன் சிவனாமே.

ஆகிய வச்சோயம் தேவதத் தன்னிடத்து
ஆகிய விட்டு விடாத விலக்கணைத்து
ஆருப சாந்தமே தொந்தத் தசியென்ப
ஆகிய சீவன் பரன்சிவ னாமே.


விட்டும் விடாத இலக்கணையின் உதாரணம் “அவனே இந்த தேவதத்தன்” என்ற கூற்றினில் உள்ள ‘தொந்தத்தசி’ மூன்று பதங்களிலும் சாந்தம் அடைந்த சீவனுக்குப் பொருந்தும். அதனால் அந்த சீவன் பரனாகவும், சிவனாகவும், ஆகிவிடும்.

#2571. சித்தாந்தம், வேதாந்தம்

துவந்தத் தசியே தொந்தத் தசியும்
அவைமன்னா வந்து வயத்தேகமான
தவமுறு தத்துவ மசிவே தாந்த
சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே
.

‘துவம் தத் அசி’ என்பதும் ‘தொந்தத் தசி’ என்பதும் ஒன்றே ஆகும். வேதாந்தம் கூறும் தவப் பயன் “தத்துவமசி” அல்லது ” நீ அது ஆகிறாய்” என்பது. சித்தாந்தம் செப்புவது ” தத்துவமசி ” அல்லது “நீ சிவம் ஆகின்றாய்” என்பது ஆகும். எனவே இவை இரண்டும் ஒரு பொருளைக் கூறுகின்றன!





 
#2572 to #2575

#2572. பரம்பரமாம் உதிக்கும் அருநிலம்

துரியம் அடங்கிய சொல்லறும் பாழை
அரிய பரமென்பர் ஆதர்இது அன்று என்னார்
உரிய பரம்பர மாமொன் றுதிக்கும்
அருநிலம் என்பதை யாரறி வாரே.


சீவ துரியத்தில் சீவன் அடையும் சொல்ல இயலாத சீவப்பாழையே மேலான பரம் என்பர் சிலர். உண்மையில் இது பர நிலை அன்று. இதற்கும் மேலே உள்ளது பரநிலை. அதற்கும் மேலே உள்ளது பரம் ஆகிய சிவன் உதிக்கும் நிலை. இந்த அரிய இடத்தை யார் அறிவாரோ?


#2573. உம் பதம் மும்பதமாகும்


தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்
நம்பிய முத்துரி யத்துமே னாடவே
யும்பத மும்பத மாகும் உயிர்பரன்
செம்பொரு ளான சிவமென லாமே


தொம்பதம், தத் பதம், அசி பதம் என்ற மூன்று நிலைகளில் சீவ துரியம், பர துரியம், சிவதுரியம் என்ற மூன்று துரியங்கள் பொருந்தும். இவற்றுக்கும் மேலே சீவன் சிவனை விருப்பும்போது ‘உம்பதம்’ ஆகிய ‘தொம்பதம்’ பக்குவம் அடையும். அதனால் சீவன், பரன் ஆகிப் பின்னர் சிவன் ஆகிவிடுவான்.


#2574. சொரூப ஆனந்தம்


வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்து
உய்த்த பிரணவ மாமுப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்
வைத்த படியே யடைந்து நின்றானே.


சிவ துரியத்தில் முடிவில் சொரூப ஆனந்தம் தோன்றும். அந்த நிலையில் பிரணவ உபதேசத்தை எண்ணி அமைந்திருங்கள். அப்போது மெய்யுணர்வு பொருந்தி இருக்கச் சிவன் தோன்றுவான்.


#2575. மன வாசகம் கடந்த மன்னன் சிவன்


நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்
பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்
தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி
மனவா சகங்கடந்த மன்னனை நாடே.


நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், துரியாதீதம் என்று ஐந்து நிலைகளையும் நாதத்தில் பொருத்தி வைக்கவும். ஆன்மாவைப் பீடித்துள்ள மலங்களை முற்றிலுமாகத் துறந்துவிடவும். தூய நிலையை அடையவும். மேலே செல்லப் பரதுரியத்தில் உபசாந்தம் அமையும். அதைக் கடந்த சிவதியில், மனமும் வாக்கும் எட்ட இயலாத நிலையில் இருக்கும் பரம்பரனாகிய சிவன் இருக்கின்றான். அவனை நாடுங்கள்.


 
#2576 to #2579

#2576. காரணம் இன்றியே காட்டும் தகைமைத்து

பூரணி யாது புறம்பொன்றி லாமையின்
பேரணி யாதது பேச்சொன்றி லாமையின்
ஓரணை யாததுவொன்றுமி லாமையிற்
காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே.


இறைவனின் எல்லையைக் கடந்து வேறு ஒரு பொருள் இருக்க முடியாது. அது அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொள்ள வல்லது. அதனால் ‘இறைவன் இத்துடன் நிறைவு பெற்றுவிட்டான்!’ என்று நம்மால் கூற முடியாது. அது பெயர் இல்லாதது. அது வாக்கைக் கடந்து குணம் குறிகளையும் கடந்து விளங்குவது. அதற்குச் செய்ய வேண்டிய செயல் இல்லை. அதனால் அதை அணுகுவதற்கு இயலாதது. எந்தக் காரணமும் இல்லாமலேயே அது தன்னைத் தானே வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தது.


#2577. அனந்த ஆனந்தி ஆகும்


நீயது வானா யெனநின்ற பேருரை
ஆயது நானானேன் என்னச் சமைந்தறச்
சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள்
ஆயது வாயனந் தானந்தி யாகுமே.


குருவின் உபதேசம் “நீ அது ஆனாய்” என்பது. அதையே மாணவன் பாவிக்க வேண்டிய முறை ” அது நான் ஆனேன்”என்பது ஆகும். அப்போது மாணவனின் பாச பந்தங்கள் நீங்கும். சிவன் அருளால் மாணவன் தானும் சிவமாகி விளங்குவான். அழிவில்லாத ஆனந்தத்தை அடைவான்.


#2578. ஓம் மயம் ஆகும்!


உயிர்பர மாக உயர்பர சீவன்
அரிய சிவமாக அச்சிவம் வேதத்
திரியிலுஞ் சீராம் பராபரன் என்ன
உரிய உரையற்ற ஓம்மய மாமே


சாதனையால் சீவன் பரம் ஆனது. பரம் பின்னர் சிவம் ஆனது. மூன்று வேதங்களும் அறிந்து கொள்வதற்கு அரியவன் ஆன அந்தச் சிவன் பராபரன் ஆவான். இவன் சீவர்களுக்கு வெறும் சொற்களால் உணர்த்த முடியாத உயர்ந்த பிரணவ வடிவு ஆனவன்.


#2579. சீவன் சிவகதி அடையும்

வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில்
ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்கும்
தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி
சேய்நா டொளியெனச் சிவகதி யைந்துமே.


பிரணவம் உடலில் வாய் (உண்ணாக்கு), நாசி, புருவமத்தி, நெற்றி, தலையுச்சி என்ற ஐந்து இடங்களில் விளங்கும். சகலநிலையில் சுழுமுனை என்னும் தாய் நாடியில் விளங்குகின்ற நாதம் முதலான தத்துவங்கள் ஒளியாக மாறி இந்த ஐந்து இடங்களிலும் சென்று பாயச் சீவன் சிவகதியை அடையும்.


 
The long overdue #2278 in now in its right place!

#2274 to #2278

#2274. பரமாகார் பாசம் பற்றியவர்

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமா மதீதம் பயிலப் பயிலப்
பரமா வதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.


நின்மல சாக்கிராதீதத்தில் ஆன்ம தத்துவங்களை விட்டு விட்ட ஒரு சீவன் பரம் ஆகிவிடும். இந்த நின்மல சாக்கிராதீத நிலையைப் பயிலப் பயிலப் சீவனுடன் பரம் வந்து பொருந்தும். பரம் ஆக இயலாது இந்த நின்மல சாக்கிர அதீத நிலையை அடைய இயலாதவர்களுக்கு. இத்தகையவர் என்றுமே பாசத்தில் இருந்தும் பற்றுக்களில் இருந்தும் விடுதலை பெறார்.


#2275. தூய அறிவு சிவானந்தம்


ஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய வறிவு சிவானந்தமாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.


நாம் ஆராய்ந்து அறிய விரும்பும் மாயை ஒவ்வொரு சீவனின் உள்ளும் புறமும் சூழ்ந்துள்ளது. அது சீவனின் சிந்திக்கும் திறனையை மயக்கிச் சொல் வன்மையை அழிக்கிறது. சீவன் அந்த மாயையைக் கடந்து வந்தால் சீவனின் அறிவு தூய்மை அடைந்து விடும். அதுவே பின்னர் சிவானந்தமாக மாறி, சீவனின் அறிவை மயக்கும் மாயையை மூடிவிடும் ஒரு பொருளாக மாறிவிடும்.


#2276. நரிகளை ஓடத் துரத்திய நாதர்


துரியப் பரியி லிருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை யோடாத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்றோலமிட் டன்றே.


துரிய நிலை என்னும் பரியின் மேல் இருந்தது சீவன். அதை அங்கிருந்து பராவத்தை நிலையில் புகச் செய்தான் ஈசன். பராவத்தை நிலையில் இந்திரியங்கள் என்னும் நரிகள் நாதனால் விரட்டப்பட்டு ஓடிச் சென்று விட்டன. சீவனுக்கு உரிய வினைகள் அவனை அணுக முடியாமல் எட்ட நின்று ஓலம் இட்டன.


#2277. இவன் அவன் வடிவு ஆவான்


நின்றஇச் சாக்கிரம் நீள்துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றல் மணம் செய்ய, மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.


சீவன் சாக்கிரத்தில் துரியாதீத நிலையை அடையும் போது மன்றில் ஆடும் செஞ்சடைப் பிரானும் அவனுடன் கலந்து நிற்பான். சிவனும், சீவனும் ஒன்றாகப் பொருந்தும் போது இருளாகிய மாயை விலகி விடும். அதனால் சீவனும் சிவனைப் போன்ற அகண்ட வடிவத்தை அடைந்து விடுவான்.


2278. துரியத்துத் தீது அகலாதே!

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.


விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது மனம் உலகை நோக்கி விரிந்தால், அப்போது மாயையின் காரியமாகிய உலகம் சீவனுக்கு நன்கு விளங்கும். வலிமை வாய்ந்த மாயை தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரை நன்கு பந்தப் படுத்திவிடும். சீவன் சிவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு மேலே சென்றால் சிவப் பேற்றினை அடைந்து சிவமாகவே மாறிவிடும். துரியத்தில் மாயையின் தொடர்பு இருந்தால் மாயையின் தீமை அகன்று செல்லாது.


#2279. அமலன் என்று அறிதியே

உன்னை அறியாது, உடலை முன் நான் என்றாய்,
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்ததும் பிறவித் தணவாதால்
அன்ன வியாத்தான் அமலன் என்று அறிதியே.


முன்பு உன் ஆன்ம ஒளியை நீ அறிந்து கொள்ளாமல் ‘என் உடல் தான் நான்’ என்று கூறினாய். பின்னர் உன் ஆன்ம ஒளியை அறிந்து கொண்டு துரியத்தில் நின்றாய். உன் ஆன்மவொளி சிவவொளியில் லயம் பெற வேண்டும். அதுவரை பிறவித் துயர் அகலாது. ஆன்ம ஒளி சிவ ஒளியில் அடங்குவதே மலங்கள் நீங்கிய தூய நிலையை அடைவது என்று அறிந்து கொள்வாய்!


#2280. இருவரும் இன்றி ஒன்றாகி நின்றார்

கருவரம் பாகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
யிருவரும் இன்றியொன் றாகிநின் றாரே.


துரியத்தில் உள்ள நுண்ணிய தேகம் கருவறையின் வரம்புக்கு உற்பட்டது. பிறவியின் காரணம் அகற்றப் படும் வரை பருவுடலும் நுண்ணுடலும் பொருந்திச் சீவன் பிரவிப் பிணியில் துயருறும். குருவருள் பெற்றுப் பருவுடல், நுண்ணுடலைச் சீவன் துறந்து விட்டால் அப்போது சீவன் சிவனுடன் ஒன்றாகிவிடும்.

#2281. பரதுரியம் பரம் ஆம்

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணு அசைவிற் பராதீதம் சுழுத்தி
பணியின் பரதுரியம் பரம் ஆமே.


துரிய நிலையில் நனவு, கனவு, சுழுத்தி நிலைகளைக் கடந்து செல்லும் ஆன்மா பர துரீய நிலையை அடையும். அந்நிலையில் ஆன்மா உயரிய பரம் என்று ஆகிவிடும்.


#2282. சிவதுரியான உயிர்

பரதுரியத்து நனவும், பரந்து
விரிசனம் உண்ட கனவும் மெய்ச் சாந்தி
உருஉரு கின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவதுரி யத்தனும் ஆமே.


பரதுரிய நனவு நிலையை அடுத்து பரதுரிய கனவு நிலை அமையும். இந்நிலையில் பரவி விரிந்த உலகின் தூலநிலை அழிந்து போகும். இதனை அடுத்த பரதுரிய சுழுத்தி நிலை அமையும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உபசாந்தம் என்று விவரிக்க முடியாத ஒரு மனஅமைதி உண்டாகும். இந்த நிலையையும் கடந்து செல்லும் ஆன்மா சிவதுரியத்தை அடையும்.


#2283. உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்


பரமா நனவின் பின், பாற்சகம் உண்ட
திறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,
உரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே
தரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே.

பர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.





 
Last edited:
#2580 to #2583

#2580. பிரிவறியாத பிரான் சிவன்

அறிவறி யாமை இரண்டும் அகற்றிப்
செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்
பிறிவறி யாது பிரானென்று பேணுங்
குறியறி யாதவர் கொள்ளறி யாரே.


சீவன் சிற்றறிவு படைத்தது. சிவன் பேரறிவு உடையவன். சீவனின் சுட்டறிவு, அறியாமை இரண்டையுமே சிவன் அகற்றி விடுவான். சிவன் செறிந்த அறிவின் வடிவமாக எங்கும் நிறைந்து இருப்பான். அவனை ” என்னை விட்டுப் பிரிவதை அறியாத பிரானே!” என்று விரும்பிப் போற்ற வேண்டும். இதைச் செய்ய அறியாதவர் சிவனைத் தம்முடன் பொருத்திக் கொள்ளும் முறையை அறியாதவர்கள் ஆவர்.


#2581. அப்பும் அனலும் அறிவார்


அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்புங் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே.


உலகியல் அறிவு பெற்றவர் அறிவது அக்கினித் தத்துவமும் ( உலக இன்பங்களை நாடச் செய்யும் மூலாக்கினியையும்) அப்புத் தத்துவமும்( நீர் வடிவாக வெளிப்படும் வீரியமும்) ஆகும். இவை அவர்களுக்குச் சுக துக்கங்களைத் தரும். தத்துவ ஞானிகள் அக்கினியைச் சிவனாகவும், நீரைச் சக்தி தேவியாகவும் காண்பர். எல்லாம் அறிந்த சிவன் சீவனோடு கலந்து இருந்து இதை புலப்படுத்தினால் மட்டுமே இது புலப்படும். இல்லாவிட்டால் சிற்றறிவு படைத்த சீவனால் பேரறிவு படைத்த சிவனை அறிந்து கொள்ள முடியாது.


#2582. பதியிற் பதியும் பரவுயிர்

அதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி
அதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா
மதிபெற்று இருள்விட்ட மன்னுயி ரொன்றாம்
பதியிற் பதியும் பரவுயிர் தானே.

அதீதத்திற்குள்ளும் அதனைக் கடந்தும் விளங்குபவன் சிவன். அதீதத்தில் நுழையும் சீவன், அறிவையும் கருவிகளையும் இழந்தும் துறந்தும் ஒன்றும் அறியாத அஞ்ஞான நிலையில் இருப்பவன். மதி மண்டலம் விளங்கப் பெற்று அஞ்ஞான இருளை அகற்றிய பெருமை படைத்த சீவன் சிவனுடன் ஒன்றிச் சிவநிலையை அடையும். அந்த சீவன் பரம் என்ற பெயர் பெறும்.

#2583. கண்ணுதலான் கருணை

அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்
முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்
படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்
கடிதொழ காணன்னுங் கண்ணுத லானே.


சிவபெருமான் முன்னின்று தலை வணங்கி அவன் அடிகளைத் தொழுதேன். அவனும் என் முன்னர் வெளிப்பட்டு நின்றான். ” முன்பு நீ என்னைத் தொழுதாய்! “நான் அது ஆனேன்” என்று என்னைக் குறித்து பாவித்தாய். அது இன்று மெய்ப்படுவதை பார்!”என்று எனக்கு அருள் செய்தான் கண்ணுதல் கடவுளான சிவன்.

 
#2584 to #2586

#2584. நிமலன் சீவனின் மலம் நீக்குவான்

நின்மலன் மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்திவன் என்னடி யானென்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மல மாகென்று நீக்கவல் லானே.


நின்மலன், ஒளிரும் மேனி படைத்த நிமலன், பிறப்பு அற்றவன், பாசங்கள் அற்றவன்; என் மனதில் வீற்றிருந்து என்னைத் தன் அடியவன் ஆக்கிக் கொண்டவன், பொன் வண்ணம் உடைய பெருமான் என்னிடம், “நீ மலமற்று விளங்குவாய்” என்று சொல்லி என் மலங்களை நீக்கிவிட்டான்.

#2585. இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே.

துறந்துபுக் குள்ளொளிச் சோதியைக் கண்டு
பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே
மறந்தறி யாவென்னை வானவர் கோனும்
இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே.


பாசப் பிணைப்புகள், ஆன்மதத்துவங்கள் அனைத்தையும் துறந்து நான் உடலில் உள்முகமாகச் சென்றேன். அங்கு ஒளிரும் சிவச்சோதியைக் கண்டேன். என் உள்ளம் உடலை விடுத்துப் புறத்தில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றது. ஆயினும் அவனை மறவாமல் அவன் அடிகளில் பணிவுடன் இருந்தேன். எனக்கு நிலவுகிலேயே மரணம் இல்லாத நீண்ட வாழ்வைத் தந்தருளினான் சிவன்.

#2586. இறைவன் ஆட்ட ஆடும் அகிலம்!

மெய்வாய் கண்மூக்குச் செவியென்னும் மெய்த் தோற்றத்
தவ்வாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வா யியுரும் இறையாட்ட ஆடலாற்
கைவா யிலாநிறை எங்கும் மெய் கண்டதே.

மெய், வாய், கண், மூக்கு, செவி, என்ற ஐந்து ஞானேந்திரியங்களும்; மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் நான்கும்; பிற ஆன்ம தத்துவங்களும்; எல்ல உயிரினங்களும்; இறையருளால் இயங்குபவை. எனினும் இவற்றை இயக்குவதற்குக் கைகளோ கூறுவதற்கு வாயோ இல்லாத சிவபிரான் தானே சீவர்களின் உடலாகவும், உயிராகவும், அறிவாகவும் நிறைந்து செறிந்து விளங்குகின்றான்.

 
Last edited:
37. விச்வகிராசம்

37 . விச்வகிராசம்
விச்வம் = உலகம்
கிராசம் = கவளம்.
விச்வ கிராசம் = உலக உயிர்ப்பு ஒடுக்கம்
இறைவனது பெரு நிலையில் அகிலம் கவளமாக விழுங்கப்படுத்தல்

#2587 to #2590


#2587. இவ்வுடற் போமப் பரத்தே.

அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே.


வானத்தில் தோன்றும் நிழல் வடிவங்கள் வானிலேயே மறைந்துவிடும். நீரில் தோன்றும் நீர்க் குமிழில்கள் நீரிலேயே மறைந்து விடும். அது போன்றே தீயின் முன் உலா கர்ப்பூரம் தீயில் எரிந்து மறைந்து விடும். சிவத்தில் தோன்றிய சீவனின் உடல் சிவத்திலேயே சென்று ஒடுங்கி விடும்.

#2588. சிவசக்தியரோடு ஒன்றித் தானே பரமாம்

உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற்
படருஞ் சிவசத்தி தாமே பரமாம்
உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக்
கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே.


ஒளி மயமான உயிருடன் பருவுடல் பிரிவின்றி ஒன்றிவிட்டால், சீவன் பர நிலை எய்தும். சிவசக்தியரோடு ஒன்றும். உடல் என்ற சிறையில் இருந்து விடுதலை பெற்ற சீவன், சிவத்தைப் போலவே எங்கும் பரவியும், விரவியும் நிறைந்திருக்கும்.

#2589. சராசரம் தவிர்க்க முடியாதது

செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்துங்
குவிவொன் றிலாமல் விரிந்தும் குவிந்தும்
தவிர்வொன் றிலாத சராசரந் தானே.

செவி, மெய், வாய், கண், மூக்கு என்ற ஐந்து பொறிகளும்; பக்குவம் அடையாத மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு அந்தக் கரணங்களுடன் புருடனும் சேர்ந்த ஐந்தும், உலக முகமாக குவிந்து விரிந்தும் இருக்கின்றன. இதனால் அசையும் ஆசையாப் பொருட்கள் நிறைந்த சராசரம் தவிர்க்க முடியாதது ஆகின்றது. காணும் பொருட்களின் மீது கருவிகள் விரிந்து செல்லும் போது உலகம் நிலைப்படுகின்றது. அகண்ட சிவத்தில் கருவிகள் குவியும் போது உலகம் மறைந்து விடுகின்றது.

#2590. உலகம் உண்டும் உமிழ்க்கும் வரம்

பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்கும்
திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும்
உரனெங்கு மாயுல குண்டும் உமிழ்க்கும்
வரமிங்ஙன் கண்டுயான் வாழ்ந்துற்ற வாறே.

முப்பத்தாறு ஆன்ம தத்துவங்களைத் துறந்து விட்ட ஆன்மா பரத்தின் நிலையை அடையும். யாண்டும் பரவிப் பொருந்தும். சிவனைச் சார்ந்து இருப்பதால் அவனைப் போலவே எங்கும் நிறைந்த பொருளாக ஆகிவிடும். உலகத்த அழிக்கவும், ஆக்கவும், ஆற்றல் பெற்றதாகி விடும். நானும் சிவனருளால் இத்தகைய ஆற்றலைப் பெற்று வாழ்பவன் ஆனேன்.






 
#2591 to #2594

#2591. வெட்ட வெளியனு மாமே

அளந்து துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக்
கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனு மாமே


சீவன் துரியத்தில் அடைந்த தூயஅறிவினைத் துணையாகக் கொண்டு, உலக முகமாகச் சென்று தான் நுகர்ந்த அனுபவங்களை ஒழித்துத்; தெளிந்த பரம் சிவம் ஆகிவிட்டால் அவன் சிதாகாச வடிவினன் ஆகி விடுவான்.


#2592. நந்தி இதயத்துளானே.


இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒழிய விழுங்கி
இருந்தஎன் நந்தி இதயத்து ளானே.


தீயில் காய்ச்சிய இரும்பு தன் மீது விழும் நீரை உள்ளே இழுத்துக் கொள்ளும். அது போலவே சிவன் என்னை தனக்குள் வாங்கிக் கொண்டான். மேன்மையான பரம் கீழ்முகமாக நோக்குவது விட்டு விட்டு, வலிமை வாய்ந்த முப்பாழ்களையும் விழுங்கியது. அத்தகைய நந்திப்பெருமான் என் உள்ளத்தில் இருக்கின்றான்.


#2593. அகிலம் விழுங்கும் சிவபெருமான்


கரியுண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும்
அரிய துரியமேல் அகிலமும் எல்லாம்
திரிய விழுங்குஞ் சிவபெரு மானே.


யானை நோயால் பீடிக்கப்பட்ட விளாம் பழத்தில் ஓடு மட்டுமே இருக்கும் . கனியின் உள்ளே ஒன்றும் இராது. சிவன் முன்பு சீவனும் பரமும் இது போலவே விளங்குவர். சீவன் அரிய துரிய நிலையை அடைத்து விட்டால், சிவன் சீவனின் இயல்புகளை மாற்றித் தன்வசப்படுத்திக் கொள்வான்.


#2594. அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்


அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன்
நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாமறி யோமே.


எல்லாத் தத்துவங்களின் முதலாகவும், முடிவாகவும் இருப்பவன் பராபரன் ஆகிய சிவன். அவனே அனைவரின் மேலான பரன் என்ற நிலையிலும் பொருந்தியுள்ளான். அவனை நெருங்கிச் செல்பவர்களின் பரத்தின் கீழான தத்துவங்களை அவன் உண்டு ஒழித்து விடுவான். இறுதியில் அவன் பரத்தையும் சீவனையும் ஆட்கொண்டு; ஞானம், ஞேயம், ஞாத்ரு என்ற மூன்றும் ஒன்றாகி விடும்படி செய்யும் உண்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியாது.



 
38. வாய்மை

38. வாய்மை
வாய்மை = உண்மை
பொய்ப் பொருளை நீக்கி விட்டு மெய்ப் பொருளிடம் சென்று சேர்வது

#2595 to #2599

2595. செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே

அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற மாற்றிடின்
செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே

அருள்மொழிகளால் சீவன் மலம் நீங்கும் இயல்பு இத்தன்மை வாய்ந்தது. தீயில் புடம் இட்ட பொன் குற்றங்கள் நீங்கித் தூய்மை அடையும் சீவன் இறைவனைச் சிந்தையில் நிறுத்தித் தன் மலம் நீங்கும்படி தியானித்தால், அது செழுஞ் சுடராகத் திகழ்ந்து குற்றங்களை நீக்கிவிடும்.

#2596. எல்லாம் அறிந்த இறைவன் எனலாமே.

எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு
எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை
எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.


எல்லாவற்றையும் அறியும் அறிவு வடிவானவன் சிவன். அவனை அறிவதை விட்டு விட்டு, வேறு உலகியல் பொருட்களை அறிந்து கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. ‘எல்லாவற்றையும் அறியும் சிவன் தானே!’ என்ற பாவனையில் இருக்கும் சீவன், தானும் எல்லாவற்றையும் அறியும் சிவனாகவே விளங்கும்.

#2597. கலை நின்ற கள்வன் சிவன்

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனை கண்டுகொண் டேனே.

தலையில் மீது உள்ள மேருமலையின் மீது இருந்து கொண்டு நான் இடைவிடாமல் தியானம் செய்தேன். நான் ஊன் பொருளாகிய உடலின் இயல்பைக் கடந்தேன். அருள் பொழியும் பார்வதி தேவியைத் தன் உடலின் ஒரு பாகத்தில் கொண்ட சிவனை, சந்திர கலையில் ஒளிந்து நிற்கும் கள்வனை நான் கண்டு கொண்டேன்.

#2598. ஊனே உருகிய உள்ளம்

தானே யுலகில் தலைவ னெனத்தகும்
தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும்
ஊனே யுருகிய வுள்ளமொன் றாமே.


‘சிவன்’ என்றதும் ஊனும் உருகும் உள்ளம் கொண்டவர்களின் சிறப்புக்கள் இவை. அவர் தானே உலகின் தலைவன் எனக் கூறும் தகைமை கொண்டவர்; அவர் தானே உலகுக்கு ஓர் தத்துவமாகி இருப்பர். அவர் காரணமாகவே உலகில் மாரி பொய்யாது பெய்யும் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றன வேதங்கள்.

#2599. அருள் பெற்ற காறணம் என்ன?

அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவோர் தாமே.


சீவன் சிவன் அருள் பெறக் காரணம் என்ன என்று வினவிடில் விடை இதுவே! பிரபஞ்சப் போரில், சிதறித் திரியும் சிந்தையை ஒன்றுபடுத்தி, அதைத் தன் வசப்படுத்தி, இவர் இறைவனிடம் செலுத்தினார். உலக மயக்கத்தில் உள்ள சிந்தையை மாற்றுவதற்கு ஒரே வழி சிவனின் சேவடிகளைப் போற்றி வழிபடுவது ஆகும்.




 
#2600 to #2604

#2600. ஊழித் தலைவன் சிவன்

மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னை
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந் தூழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே.


மெய்ப் பொருளில் கலந்து விட்ட அன்பர்களின் உடலிலும், உயிரிலும் பிரிவின்றிக் கலந்து நிற்பவன் சிவன். பொய்யான உலகத்தின் மீது பற்றுக் கொண்டவர்களின் முன்பு சென்று சேராதவன் சிவன். உய்கின்ற வழியினை நாடுபவரின் விருப்புக்களை அழித்து நிற்பவன் ஊழித் தலைவன் ஆன சிவன். மெய்யடியார்கள் உடலிலும், உயிரிலும் தானும் பொருந்தி அவர்தமக்கு பேரின்பத்தை விளைவிப்பவன் சிவன்.


#2601. கைக் கலந்தார் கருத்து உறலாம்.


மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனை
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.


மெய்ப்பொருளாகிய சிவனுடன் பிரிவு இல்லாமல் இருப்பவனுடன் சிவன் ஒன்றாகக் கலந்து நிற்பான். பொய்ப்பொருளாகிய உலக இயலில் விருப்பம் கொண்டவருடன் சிவன் சேரமாட்டான். சுழுமுனை நாடியில் பொருந்தி உடலில் மேல் நோக்கிச் செல்பவர்கள், சுழுமுனை நாடியில் சிவனை எண்ணி இருந்தால் அவர்கள் சிவனுடன் பொருந்துவார்கள்.


#2602. ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.


எய்திய காலத் திருபொழு துஞ்சிவன்
மெய்செயின் மேலை விதியது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில்
ஐயனும் அவ்வழி யாகிநின் றானே.


சிவன் மேல் சிந்தையை நிறுத்திப் பகலும் இரவும் அவன் நம் உடலில் பொருந்தும்படி எண்ணி இருக்க வேண்டும். அப்போது அந்தப் பெருமான் நம் தலையின் மேல் சிறந்து விளங்குவான். புலன் வழி நடப்பதையும், பொய்யன உலகத்தில் நாட்டம் கொள்வதையும் துறந்து விட்டால், நாம் சிவனை நாடிச் செல்லும் அதே பாதையில் அவனே நமக்கு எதிர்ப்படுவான்!


#2603. உய்ய அருள் செய்த உத்தமன்


எய்துவ தெய்தா தொழிவ திதுவருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி
பொய்செய்புலன் நெறியொன்பதுந்தாட்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.


யோக சாதனையில் வெற்றி அடைவதும் அடையாததும் இறைவன் திருவருள் படி நிகழும்! ஆயினும் உத்தமன் நந்தி இந்த நெறியைச் சீவன் உய்வதற்காகச் செய்துள்ளான். பொய்யனை உலக வாழ்வு விளை நிலம் ஆகும் உடலில் உள்ள ஐம்பொறிகளுக்கு. ஒன்பது துவாரங்களை தாளிட்டுஅடைத்துவிட்டால், சீவன் மெய்யகிய வான் புரவியைக் கொண்டு சீவப் பிரயாணம் செய்யலாம்.

#2604. வேத முதல்வன் சிவன்

கைகலந் தானை கருத்தினுள் நந்தியை
மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப்
பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமே.


சிவன் சுழுமுனை நாடியில் கலந்து விளங்குபவன்; அன்பர்களின் சிந்தையில் சிறந்திருப்பவன்; அவர்கள் உடலிலும் கலந்து இருப்பவன்; மூலாதாரத்தில் நிலை பெற்று இருப்பவன்; வேத முதல்வன்; உலகப் பற்றுக் கொண்டவர்களிடம் வெளிப்படாதவன்; நின்மலமானவன்; இத்தகைய பெருமை வாய்ந்த இறைவன் பொய்யான உடல் பற்றினையும் உலகப்பற்றினையும் துறந்தவர்களுக்குப் புகலிடம் ஆவான்.




 
#2605 to #2609

#2605. அதுவே பெரும் பேறு ஆகும்

மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாருந் திறந்தறி வாரில்லை
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டுஅங்கு
அத்தாள் திறக்கில் அரும் பேற தாமே.


உண்மையான தன் திருவடிகளை அன்பர் மனத்தில் பொருத்தி வைப்பவன் நந்தி எம் பெருமான். அவனைச் சுழுமுனை வழிச் சென்று அங்குள்ள தாழ்ப்பாளைத் திறந்து காண்பவர் எவருமில்லை. துன்பத்தைத் தருகின்ற, உலகின் மீது கொண்ட பொய் பற்றுகளை நீக்கிச் சுழுமுனையைத் திறப்பவருக்குக் கிடைப்பதர்க்கு அரிய பெரும் பேறு கிடைக்கும்.


#2606. உணர்வினால் ஏத்துமின்


உய்யும் வகையால் உணர்வில் ஏத்துமின்
மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானே.


உய்வடைய விரும்பினால் சிவனை உங்கள் உணர்வால் போற்றி வழிபடுங்கள். அப்போது மெய்யான அரன் நெறி அங்கு நிலவும். திண்ணென்ற மன உறுதியுடன் பொய்யன உடலையும் உலகையும் ஒருவர் கடந்து விளங்கினால், அவரது சிரசில் சகசிரதளத்தில், தலைவன் சிவன் அந்தச் சீவனுடன் வேறுபாடு எதுவும் இன்றிப் பொருந்தி நிற்பான்.


#2607. செம்பொற் சிவகதி சென்றெய்தலாமே.


வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாது
அம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாமே.


நறுமணம் கமழும் சகசிரதளத் தாமரை மலரில் ஓர் அரிய சிவக்கனி உள்ளது. சீவன் அந்தக் கனியை உண்ண விடாமல் தடுக்கின்றன விஷய வாசனைகள் என்னும் பறவைகள். அந்தப் பறவைகளைப் பிரணவ வில்லை வளைத்துச் சீவ சக்தி என்ற அம்பினால் விரட்டி விட வேண்டும். அப்போது சீவன் சிவக்கனியைச் சுவைக்கலாம்! செம்பொன் ஒளி வீசும் சிவகதியைச் சென்று அடையலாம்.


#2608. தூயவன் துயக்கறுப்பான்!


மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத்தானைத் தொடர்மின்தொடர்ந்தால்
தியக்கஞ் செய்யாதே சிவனெம் பெருமான்
உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே.


மயக்கத்தைத் தரும் ஐம்புலன் ஆசைகளை அறுத்து விடுங்கள்! மனக் கலக்கத்தை போக்கிய சிவனைப் பின் தொடருங்கள்! சிவனைத் தவிர வேறொரு தெய்வம் உண்டு என்று மயங்கி நிற்காதீர்கள். சிவனே என் இறைவன் என்று உறுதியாக அவனைத் தொடர்ந்தால் நான் உய்ந்து போகும்படி அவன் என்னைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான்.


#2609. இருங்காயம் மேவும்!


மனமது தானே நினையவல் லாருக்குக்கு
இனமெனக் கூறு மிருங்காய மேவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.


உள்ளத்தால் உலகத்தைப் பற்றிக் கொள்ளாமல், உள்ளத்தால் சிவனைப் பற்றிக் கொள்ளும் அன்பர்களுக்குச் சிவம் பதிந்துள்ள மேலான நுண்ணுடல் வந்து பொருந்தும். உலகத்தைப் பற்றி எண்ணாமல் சிவனைத் தியானம் செய்தால் ஞான பூமியில் தூய சிவன் அருள் பெறலாம்.





 
39. ஞானியின் செயல்
தன்னை உணர்ந்து கொண்ட ஞானி செய்ய வேண்டிய செயல்
தன் முன்னை வினைகளைக் கடிதல் ஆகும்.

#2610 to #2612


#2610. தன்னை அறிந்த தத்துவ ஞானிகள்

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்
பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்
தன்னை யறிந்திடுந் தததுவ ஞானிகள்
நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.

முன்னைப் பழவினைப் பயன்கள் வந்து உற்றால் ஞானிகள் அவற்றை அனுபவித்துக் கழித்து விடுவர். இந்தப் பிறவியில் புதிய வினைகளும், வினைப் பயன்களும் சேராமல் பார்த்துக் கொள்வர். தன்னை உள்ளபடி அறிந்த இந்தத் தத்துவ ஞானிகள், நன்மை தராத ஐம்புலன்களை வசப்படுத்தி அடக்கி விடுவர்.

#2611. சென்னியில் வைத்த சிவன் அருள்

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே.


தன்னை உள்ளபடி அறிந்து கொண்ட தத்துவ ஞானிகள் சிவசிந்தனையால் பழ வினைகளைப் போக்கி விடுவர். சென்னியின் மேல் விளங்கும் சிவன் அருளால் இன்னும் புது வினைகள் வரும் முன்பே அவற்றை அழித்து விடுவர்.

#2612. மனவாக்குக் கெட்டவர்

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.

மனம், வாக்கு, காயம் என்ற முக்கரணங்களின் செயலால் சீவனை வல்வினைகள் வந்து பற்றிக் கொள்ளும். சீவனின் இந்த முக்கரணங்கள் உலகினைப் பற்றாமல் சிவனை பற்றி நின்றால் அப்போது சீவனுக்குப் புதிய வினைகள் எதுவும் வந்து சேராது. சாதனையால் மனம், வாக்கு, செயல் என்ற மூன்றையும் அழித்துவிட்டவர் வினைகளில் இருந்து விடுபடும் வழியினை அறிந்த ஞானி ஆவார்.




 
40. அவா அறுத்தல்

உலகப் பொருட்களின் மீது நாம் கொள்ளும் அவாவே நம் பிறவிக்குக் காரணம் ஆகின்றது.
எனவே அவா அறுப்பது ஞானியின் முக்கிய கடமை ஆகும்.

#2613. ஈசன் இருந்த இடம் எளிதாமே.

வாசியு மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.

பிரம்மரந்திரத்தை நோக்கிச் செல்லும் ‘வாசி’ என்னும் பிராணவாயுவையும் , ‘ஊசி’ என்று சொல்லபப்டும் சுழுமுனையையும் பற்றி பேசுவதாலும் பிறருக்கு அவற்றைப் பற்றிக் கூறுவதாலும் எந்த பனும் விளையாது. உலகப் பொருட்களின் மேல் கொண்ட ஆசையையும், மக்கள் மேல் கொண்ட அன்பையும் அகற்றினால் ஈசன் இருக்கும் இடம் தெள்ளத் தெளிவாகவும் எளிதாகவும் தெரிந்து விடும்.

#2614. வேட்கை விட்டார் நெஞ்சில் உளான் சிவன் !

மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.

சிவ பெருமான் இருக்கும் இடம் வீட்டுச் சுவரில் உள்ள மாடம் அல்ல; உயர்ந்த மண்டபங்கள் அல்ல; வீட்டில் உள்ள கூடம் அல்ல; அழகிய கோவில் அல்ல; வேடம் கொண்ட மனிதர்களின் கள்ள உள்ளம் அல்ல; ஆசைகளை அறுத்துவிட்ட அரிய மனிதர்களின் உள்ளத்தில் இருந்து கொண்டு அவர்களை இயக்கி முத்தி தருபவன் சிவன்.

#2615. ஆசையறுமின்கள்!

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்த மாமே.


ஆசையை விட்டு விடுங்கள்; ஆசையை விட்டு விடுங்கள்; ஈசன் மேல் கொண்ட ஆசையையும் விட்டு விடுங்கள். சீவன் ஆசைப் படத் தொடரும் துன்பங்கள்! சீவன் ஆசைகளை விட விடப் படரும் தூய இன்பம்!

#2616. படுவழி செய்யும் பற்றறுங்கள்!

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்றற வீசி
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே.


நுண்மையாக சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்தும் சீவனை உலக முகமாக இயங்கச் செய்கின்றன. சீவனுக்கு எண்ணற்ற துன்பங்களைத் தருகின்றன. சீவன் கூடவே இருந்துகொண்டு அதைத் தீய வழிகளில் செலுத்துகின்றான். எனவே பற்றுக்களைத் துறந்து விட்டு, ஆசைகளை அழித்துவிட்டு, மெய்ஞ்ஞானம் அடைவதே சீவன் தனனை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்வதற்கு ஏற்ற ஒரே வழி.

#2617. ஈசன் தரித்து நின்றான்

உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போனது
உவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர்
தவாக்கடல் ஈசன் தரித்து நின்றானே.


பௌர்ணமி நிலவில் பொங்கி எழும் கடல் போலப் பொங்கி உலகை அழித்த பல ஊழிகள் கடந்து சென்றன. இன்பம் துன்பம் என்ற இரு கடலில் ஆழ்ந்து இறந்தனர் வானோர் முதலிய வகையினர். ஆசைக் கடலில் அகப்பட்டு உலகில் பிறவியை விடாமல் உள்ளனர் உலகத்தோர். நிலையாக ஆனந்தக் கடலில் நின்று கொண்டுருப்பவன் ஈசன் ஒருவன் மட்டுமே.




 
#2618 to #2622

#2618. அருள் நேரே பெறுபவர் ஞானியர்

நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
துந்தொழி லற்றுச் சுத்தம தாகலும்
பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.


தொடர்ந்து வந்த பழைய வினைகளில் இருந்து விடுபட்டு; பாசத் தளைகளை அறுத்து எறிந்து விட்டு, நெடுங் காலம் செயல்கள் அற்று இருந்து; ஒரு சீவன் சுத்த நிலையை அடைகின்றது. ஈசனின் ஐந்தொழில்களைக் கடந்து நின்று அவன் அருளை பெறுகின்ற இத்தகைய சீவர் தூய ஞானி ஆவார்.


#2619. ஒண் சித்தி முத்தி ஆகும்

உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம்
பெண்மயற் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
வண்மை யருள்தான் அடைந்தன்பில் ஆறுமே
.


சீவன் தன் உண்மையான வடிவம் ஒளிமயமானது என்று அறிந்து கொண்டால் சீவனிடம் அறிவுடன் கூடிய சித்தியும் முத்தியும் உண்டாகும். பெண்ணாசையைத் துறந்து விட்டால் சீவனுக்கு அட்டமா சித்திகளும் கைக் கூடும். உண்மையான உறுதியான சிவப் பற்றுக் கொண்ட ஒரு ஞானி தன் தேகத்தை விட்டு விட்டால் சிவத்தில் அருளை பெறுவார். பின்னர் சிவத்துடனேயே ஒன்றி விடுவார்.


#2620. சிவன் இவன் ஈசன்


அவனிவன் ஈசனென் றன்புற நாடிச்
சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார்
பவனிவன் பல்வகை யாமிப் பிறவி
புவனிவன் போவது பொய்கண்ட போதே.


சீவன் சிவன் ஆக வேண்டும் என்று உறுதி பூண்டு அன்புடன் ஈசனை நாடுகின்றது. அதனால் சீவன் சிவனாகவே மாறி பதி என்னும் நிலையை அடைகின்றது. இந்த உண்மையை உலகத்தோர் உணர்வதில்லை. பின்பு சீவன் ஏன் பல பிறவிகள் எடுத்து பல உலகங்களுக்குச் செல்கின்றது? சீவன் உண்மைப் பொருளை அறிந்து கொண்டு அதனை நாடாமல் பொய்ப் பொருட்களாகிய உலக விஷயங்களில் ஈடுபடுவதே இதற்குக் காரணம்.


#2621. விதிக்கின்ற ஐவர்


கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே.


உலகம் முழுவதும் துன்புறமாறு சீவர்களுக்குப் பரு உடலைத் தருவதும், பின்னர் அதை நீக்குவதும், மீண்டும் அவர்களைப் பிறவியில் கொண்டு தள்ளுவதும் செய்வது நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்ற ஐந்து தெய்வங்கள். அறிவுடையோர் இந்த ஐவரையும் விரும்ப மாட்டார். பரு உடலில் இருந்து நுண் உடலுக்குச் செல்லும் சுழுமுனை நாடியில் இவர்கள் பொருந்தி இருப்பதே அதற்குக் காரணம்.


#2622. மூல வித்து ஆகும்


உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தையில் வைத்துத் தெளிவுறச் சேர்த்திட்டால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே.


“உய்ந்து விட்டோம்! ஞானம் பெற்றோம்! இனிப் பிறவி இல்லை!” என்பீர்கள். அந்த ஞானத்துக்கு அடிப்படை இன்னதென்று அறிவீரா? மூலாதாரத்தில் வீரிய சக்தியாகக் கலந்துள்ளார் உருத்திர மூர்த்தி. சிந்தனையால் மூலாக்கினியை மேலே எழச்செய்து அதை ஒளிமயமாகக் காண்பதே வரவிருக்கும் பிறவிகளை ஒழிப்பதற்கு உரிய வழியாகும்.





 
41. பக்தியுடைமை

41. பக்தியுடைமை
அகண்ட சிவத்தின் மீது அளவற்ற அன்பு கொள்வது பக்தியுடைமை ஆகும்.

#2623 to #2627


2623. பக்தர் பரவும் பசுபதி!

முத்திசெய் ஞானமும் கேள்வியு மாய்நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான்தனைச்
சுத்தனை தூய்நெறி யாய்நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தானென்றே.

இறைவன் சீவர்களுக்கு முக்தியைத் தருகின்ற ஞான வடிவானவன். அந்தத் தலைவனே மந்திர வடிவாகவும் உள்ளான். மாயாத அமரர்களை வழி நடத்தும் பிரான் அவனே. அவன் தூயவன். தூய நெறியாக விளங்குபவன். அடியார்கள் போற்றிப் புகழும் உயிர்த்தொகைகளின் தலைவன் ஆகிய பசுபதி அவனே!

#2624. என்னை அடிமை கொண்டான்

அடியார் அடியார் அடியார்க் கடிமைக்கு
அடியவனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவனடி கூட
அடியா னிவனென் றடிமைகொண் டானே.

சிவன் அடியவர் பரம்பரையில் தோன்றிய அடியவரின், அடியவரின், அடியவரின், அடிமைக்கு அடியவன் ஆனேன். அவரிடம் அடிமையும் பூண்டு கொண்டேன். அந்த அடியாரின் அருளால் சிவஞானம் பெற்றேன். சிவன் என்னையும் தன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டான்.

#2625. உமாபதி ஆகிநின்றான்

நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானே.

தன்னைச் சார்ந்தவர்களுக்கு சிவன் நீரை விடக் குளிர்ந்தவன்! உலகத்தைச் சார்ந்தவருக்கு அவன் நெருப்பை விடச் சூடானவன். சிவனின் இந்தச் செயல்களை உள்ளபடி யார் அறிவார்? அவன் உலகில் செய்யும் செயலுக்குப் பயன் தருகின்றவரை விடவும் மிகவும் நேர்மையானவன். தன்னைச் சிந்தையில் பொறுத்தி வந்தனை செய்பவருக்கு உள்ளத்தின் உமாபதியாக உமை அம்மையுடன் எழுந்தருள்வான்.

2626. உலகு ஏழும் அறியாத ஒருவன்

ஒத்துல கேழும் அறியா ஒருவனென்
அத்தன் இருந்திடம் ஆரறிவார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரே?

ஏழு உலகங்களில் உள்ள அனைவரும் ஒன்றாகக் கூடி ஆராய்ச்சி செய்தாலும் அறிந்து கொள்ள முடியாத ஒப்பற்றவான் சிவன். எனில் என் தலைவன் சிவன் எழுந்தருளிய இடத்தை யாரால் அறிந்து கொள்ள முடியும்? பக்தரின் பக்திக்கு இரங்கி அத்தன் தன்னைத் தானே வெளிப் படுத்தினால் அன்றி முத்தைப் போன்ற அந்த முத்தி நாதனைப் பற்றிக் கூறுவதற்கு முந்துபவர் யாரோ உளர்?

#2627. கன்றாய் நாடி அழைத்தேன் நாதனை!

ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனை
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானே.

ஆவின் கன்று தன் தாயை நாடி “அம்மா!” எனக் கதறி அழைக்கும். அது போன்றே பசுத் தன்மை வாய்ந்த நான் என் தாயாகிய சிவனை பக்தியுடன் கதறி அழைத்தேன். அமரர்களுக்கும் அப்பாற்பட்ட என் தலைவன், ஊனால் ஆகிய உடலில் குடியிருக்கும் என்னை நாடி, என் மனதில் வந்து எழுந்தருளினான்.





 
#2628 to #2632

#2628. பணி ஒன்றும் இல்லையே

பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலால்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே.


பாசத்தால் கட்டுண்டவர்கள் பிறவியைக் கடவாதவர்கள். அதனால் அவர்கள் செயலால் பயன் எதுவும் விளையாது. பாசத் தளைகளைத் துணித்து விட்டவர்கள் நேசத்துடன் ஈசனைச் சிந்தித்து அமைந்திருப்பர். அதனால் அவர்கள் செய்ய வேண்டிய செயலென்று ஒன்றுமில்லை. பாசத் தளையில் அகப்பட்டவருக்குப் பிறவியும், பாசத் தளைகளைத் துணித்தவருக்கு முக்தியும் அருள்வது ஈசன் செயல். அதனால் நேசத்துடன் ஈசனைப் பற்றிக் கொண்டு இருப்பவர்கள் செய்ய வேண்டிய செயல் என்று ஒன்றும் இல்லை.

#2629. நந்தி அல்லாது வேறு தெய்வம் இல்லை

பறவையிற் கற்பமும் பாம்பும் மெய்யாக
குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி
நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால்
இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே
.

உடலின் காயகல்பமாகக் குண்டலினி சக்தி விளங்குகின்றது. அதை எழுப்பி, உடலில்,மேல் நோக்கிச் செலுத்தி, நாத ஒலி கேட்கும் தலை உச்சியாகிய மேருமலையை அடைந்தேன். அங்கு விளங்கும் ஒளி மண்டலத்தில் ஏறினேன். தேன் சிந்தும் சகசிர மலரைக் கொண்டு என் பெருமானை நான் வழிபட்டேன். என் தலைவன் சிவனைத் தவிர்த்து வேறு தெய்வங்களை வழிபடுவதற்கு என் மனம் என்றும் ஒப்பாது!

#2630. பிறப்பறுத்து உய்மின்!

உறுதுணை நந்தியை உம்பர் பிரானை
பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்மின்
செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து
உறுதுணை யாயங்கி யாகிநின் றானே.


தன் அடியவருக்கு சிவன் உறுதுணை ஆவான்! அவன் உம்பர்களின் ஒப்பற்ற பிரான்! அவனைத் துணையாகப் பெற்றுப் பிறவிப் பிணியை அறுத்து எறியுங்கள்! உய்வடைந்து கடைத்தேறுங்கள்! சிவனைச் செறிந்த துணைவனாகக் கொண்டு சிந்தையை அவன் சீரடிகளில் கொண்டு பொருத்தினால், உறுதுணையாக நிற்பான் அந்த ஒளிவடிவான பிரான்!

#2631. முப்புரம் செற்ற முதல்வன்

வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற
தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக்
கானவன் என்றுங் கருவரை யானென்றும்
ஊனத னுள்நினைந் தொன்றுபட் டாரே.

ஒளி மண்டலத்தில் வாழ்பவர்கள் வானவர்கள். இருள் மண்டலத்தில் வாழ்பவர்கள் தானவர்கள். வானவர்களை அடக்கி ஆண்ட தானவர்களின் முப்புரத்தைச் சிரித்தே எரித்து விட்டவன் சிவன்! அவன் நாத மாயம் ஆனவன். வீரிய கோசத்தில் விளங்குபவன். ஊனால் ஆகிய சீவர்களின் உடல்களில் உறைபவன்.

#2632. மூழ்கி நின்றேன்!

நிலைபெறு கேடென்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம்
மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்தும் மூழ்கிநின் றேனே.


சீவனுக்குப் பிறவி ஒரு பிணியைப் போன்றது. சீவன் குண்டலினியை சகசிர தளத்தில் கொண்டு சேர்த்து நிலை பெறலாம். அல்லது அதைச் செய்ய அறியாமல் வாழ்வில் கேடுறலாம் எனக் கருவிகள் கரணங்களுடன் சீவர்களைப் படைத்தவன் சிவன். அவனை நான் தலை உச்சியில் உள்ள மலையிலும், நெற்றியில் உள்ள வானவெளியிலும், சகசிரதளத்திலும், மூலாதாரத்திலும், மனமண்டலத்திலும் ஆழ்ந்து தியானித்து இருந்தேன்.


 
42. முத்தியுடைமை

42. முத்தியுடைமை
முத்தி = விடுதலை = வீடுபேறு
முத்தியுடைமை = பக்தியினால் முக்தி அடைவது

#2633. பரானந்த போதர்

முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத்
தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி
மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப்
பத்தியி லுற்றோர் பரானந்த போதரே.


பரானந்த போதர்கள் எவர்?

இவர்கள் முத்தி நிலையில் சிவபெருமானின் முழு அருளையும் பெற்றவர்கள்.
முப்பாத்தாறு தத்துவங்களும் ஆன்மாவிலிருந்து வேறுபாட்டன என்பதை அறிந்தவர்கள்.
தன்பணி இறைவனை எண்ணி இருப்பதே என்று மெய்தவத்தை மேற்கொண்டவர்கள்.
தாம் செய்கின்ற வினைகளையும் செயல்களையும் விட்டு ஒழிந்தவர்கள்.
உண்மையான இறை பக்தியில் அமிழ்ந்து சிவானந்தத்தில் திளைப்பவர்கள்


#2634. நலம் கொண்ட நால்வர் நாடுவர்


வளங்கனி தேடிய வன்தாள் பறவை
உளங்கனி தேடி உழிதரும் போது
களங்கனி அங்கியிற் கைவிளக் கேற்றி
நலங் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே.


சிவக்கனியை நாடும் மூலாதாரத்தில் கால்களை பதித்துள்ள சீவன் என்னும் பறவை. தன் உள்ள மண்டலத்தில் உள்ள சிவக்கனியை சீவப் பறவை நாடும் போது, கழுத்துக்கும் மேலே உள்ள அக்கினியால் சுழுமுனையில் விளக்கை ஏற்றும். அப்போது அந்தக் கரணங்கள் நான்கும் உடல் அற்ற இடத்தில் சிவானந்தத்தில் திளைத்து இருக்கும்.





 
43. சோதனை
மாணவன் குருநாதரின் அருளால் உண்மையை உணருதல்

2635. அருட்கடல் ஆடினேன்

பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து
அம்மான் அடிதந் தருட்கடல் ஆடினோம்
எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச்
சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே.


பேச்சற்ற பேரின்ப நிலையில் விளங்கும் பெருமை வாய்ந்தவன் சிவபெருமான். அந்தபப் பெருமான் அடிமலர்கள் தந்த ஞானத்தால் நான் அருட்கடலில் மூழ்கினேன். என்னை அவன் எல்லா மாயங்களையும் கடக்கச் செய்தான். அவற்றில் இருந்து என்னை வேறுபடுத்தினான். என்னைச் செயல் அற்று இருக்கும் படிச் செய்தான் . இதுவே சிவன் செய்த சோதனை ஆகும்.


#2636. சிவனுடன் கூடுவேன்!


அறிவுடை யானரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடுங் கூடுவன் நானே.


அகண்ட அளவில்லாத அறிவு உடையவன் சிவன்; மா மறைகள் போற்றிப் புகழும் மறைகளின் நாயகன் சிவன்; தேவர்களின் தலைவன் சிவன்; ஐம்புலன் அறிவினைகே கடந்து அகண்ட அறிவினைப் பெற்றவன் சிவன்; இத்தகைய குறிகளைக் கொண்ட என் தலைவனுடன் நான் பொருத்தி நிற்பேன்


#2637. அறிவு அறியாமை


அறிவு அறிவு என்றங் கரற்றும் உலகம்
அறிவு அறியாமையை யாரும் அறியார்
அறிவு அறியாமை கடந்தஅறிவு ஆனால்
அறிவு அறியாமை அழகிய வாறே.


அறிவு அறிவு என்று உலகம் முழுவதும் அரற்றுகின்றது. ஆனால் அது குறிப்பிடுவது பாசவயப்பட்ட அறியாமை என்று உலகம் உணர்வதில்லை.
அறிவு பாச அறிவைக் கடந்து சிவஞானம் ஆகிவிட்டால் அப்போது பாச அறிவின் இலக்கணம் என்ன என்பது உலகுக்குப் புரியும்.


#2638. சீவன் சிவன் ஆகும் தன்மை


குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவமென லாமே.


சீவன் தன் சுட்டறிவு அகன்று எல்லாவற்றையும் ஒருசேர அறியும் அறிவுநிலையில் நின்றுகொண்டு; கீழான மலங்களுடன் சென்று சேராமல் இருந்து கொண்டு ; தம் அறிவு கெட்டுச் சிவன் அறிவுடன் தானும் பொருந்தி; தான் என்னும் தனித்தன்மை இல்லாமல்; சிவனுடன் இரண்டறக் கலத்தலே சீவன் சிவம் ஆகும் தன்மையை அடைவது எனப்படும்.





 
#2639 to #2643

#2639. எங்கும் கலந்து நிற்பான் சிவன்!

காலினில் ஊறுங் கரும்பினில் கட்டியும்
பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை
காவலன் எங்குங் கலந்துநின் றானே.

காற்றிலிருந்து பரிசை உணர்வைப் பிரிக்க முடியாது. கரும்பில் இருந்து இனிய சுவையைப் பரிக்க முடியாது. பாலினுள் மறைந்த நெய் போலவும், பழத்தினுள் மறைந்த பழ ரசத்தைப் போலவும், மலருள் மறைந்த மணம் போலவும், சீவனுடன் சிவன் கலந்து நிற்கின்றான். அவன் காணப்படும் அனைத்துப் பொருட்களிலும் கலந்து நிற்கின்றான்.

#2640. மனத்திடை இருப்பான் சிவன்

விருப்பொடு கூடி விகிர்த்னை நாடிப்
பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல
இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார்
நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே.

சிவனையே தன் கணவனாக அடைய விரும்பி உமை அன்னை விருப்பத்துடன் இமயம் சென்று சேர்ந்தாள். அதே போன்று சீவனும் சிவனையே தன் தலைவனாக ஏற்றுத் தன்னிச்சை என்று ஒன்றும் இல்லாமல், அவன் இச்சைப் படி வாழ்ந்தால் அந்தச் சீவன் மனத்தில் சிவன் ஒளி வடிவாக நிற்பான்.

#2641. சிந்தையிலுள்ளே சிவனிருந்தானே.

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள
எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ்
சிந்தையி லுள்ளே சிவனிருந் தானே.

என் தலையின் மீது ஒரு பெருவெளி விளங்குகிறது. என் தலைவன் சிவன் என் மனமண்டலத்தைத் தன் ஆலயமாக்கி அதில் எழுந்தருளினான் . அப்போது எந்தை வந்துவிட்டான் என்று நானும் என் ஆன்ம அறிவு கெட்டு நின்றேன். என் மனத்துள் சிவன் சிறந்து விளங்குவதைக் கண்டு கொண்டேன்.

#2642. பரிசு செய்வானே.

தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.


சிவன் சத்து, சித்து, ஆனந்தம் என்ற மூன்று உயரிய பண்புகளை உடையவன். அவனே நாம் செய்யும் தவத்தின் பயன் ஆவான். அவன் தவம் செய்பவருக்கு நன்மைகள் செய்பவன்; அவன் கள்ளமற்ற உள்ளத்தின் நடுவில் வீற்று இருப்பவன்; அவன் அழியாத இயல்பினன்; இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிவனையே நீங்கள் நாடுங்கள். நாடினால் சிவன் எண்ணற்ற சீவராசிகளில் இருந்து உம்மை மேலானவன் ஆக்குவான்.

#2643. நல்ல வழி காட்டுவான்

தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே
படர்ந்துநின் றாதிப் பராபரன் எந்தை
கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானே.

என்னை சோதிக்கும் போது சிவன் அங்கு தொடர்ந்து நின்றான். நல்ல நாதனாகவும் சிவன் அங்கேயே தொடர்ந்து நின்றான். அனைத்திலும் சிவன் தானும் கலந்து நின்றான். மேலும் அவன் அனைத்தையும் கடந்தும் நின்றான். அவன்அனைத்தையும் கடந்து செல்வதற்கு எனக்கு நல்ல வழி காட்டினான்.

 

Latest ads

Back
Top