#2644 to #2648
#2644. தந்தை, தாய், கேளியான் ஒப்பான்!
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேளியான் ஒக்குஞ்
செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பது தானே.
அமரரும் அறிவதற்கு அரிய பொருள் ஆகிய சிவன், எனக்கு நல்வழி காட்டுவான். இந்த வாழ்வில் அவனே எனக்குத் தந்தையும், தாயும், இனிய தோழனும் ஆவான்.
என்னைச் சிறந்த வழியில் செழுத்திச் சிவலோகத்தை அடைவிப்பான். இந்த வழிகளில் எல்லாம் நந்தி எனக்கு உதவுவான்.
#2645. தேவர்க்கும் தேவர் சிவபிரான்
எறிவது ஞானத் துறைவாள் உருவி
அறிவது னோடேயவ் வாண்டகை யானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல்கணப் பற்றுவி டாரே.
சோதனையின் பயன் ஞானவாளை அதன் உறையிலிருந்து உருவி எடுத்து, அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்குவது ஆகும். இந்த அரிய திறமையைத் தந்த இறைவன் இருப்பதை அறிவதும் ஆகும். அறிவதோடு நின்று விடாமல் தேவர் தேவனை நெருங்கிப் பொருத்தவதும் ஆகும். சீவன் தன்னை அஞ்ஞான இருளை ஆழ்த்திடும் பல கூட்டங்களை விட்டு அப்போது விலகிச் செல்ல இயலும்.
#2646. ஆதிப் பிரான் சிவன்
ஆதிப் பிரான்தந்த வாள்அங்கைக்கொண்டபின்
வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை
சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம்
ஆதிக்கண் தெய்வம் அவன்இவன் ஆமே.
நான் சிவகுரு தந்த ஞானவாளைக் கையில் எடுத்த பின்பு, என்னை நன்னெறியில் இருந்து வேறுபடுத்தி நீக்கும் வல்லமை எவருக்கும் இல்லை! என் சிந்தையைச் சோதனை செய்து நான் சிவன் அல்லாத எல்லாவற்றையும் நிலை பெறாதபடிச் செய்து விடுவேன். அப்போது ஆதி மூர்த்தியாகிய சிவனைப் பொருந்தி நானும் சிவமாகவே ஆகிவிடுவேன்.
#2647. சதுரர்க்கே சாதிக்க இயலும்!
அந்தக் கருவை யருவை வினைசெய்தற்
பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே.
சீவனின் பிறவிக்கு காரணம் ஆவது அதைத் தளைப்படுத்தும் பாசம்; அருவமாகிய மாயை; சீவன் புரியும் கன்மங்கள் உண்டாக்கும் வினைப் பயன்கள்; கன்மங்கள் புரியும் போது எழுகின்ற அச்சம்; அந்த அச்சத்தினால் உண்டாகும் பிறவி. இவற்றைப் போக்கச் சோதனை செய்ய வேண்டும். குருவின் போதனையால் தீநெறி செல்லாதவாறு மாணவன் தன் சிந்தையைச் சீர்ப்படுத்த வேண்டும். இங்கனம் சோதனை செய்யும் ஆற்றல் படைத்தவருக்கே சிவத்தைச் சார்ந்து தானும் சிவம் ஆக முடியும்.
#2648. என்னுள் புகும் தற்பரனே.
உரையற்ற தொன்றை யுரைத்தான் எனக்குக்
கரையற் றெழுந்த கலைவேட் டறுத்துத்
திரையொத்த என்னுடல் நீங்கா திருத்திப்
புரையற்ற என்னுட் புகுந்தற் பரனே.
சொற்களால் சொல்ல முடியாத பிரணவ உபதேசத்தை என் அகவுணர்வில் விளங்கும்படி என் குருநாதன் உபதேசம் செய்தான். கரை கடந்த கல்வியிலும் ஆராய்ச்சியிலும் இருந்த என் விருப்பதையொழித்தான். அலை போல வந்து வந்து மறைந்துவிடும் இயல்பை உடைய என் உடலை அழியாத வண்ணம் செய்தான். குற்றம் நீங்கிய என்னிடம் என் பெருமான் வந்து பொருந்தினான்.
திருமந்திரத்தின் எட்டாம் தந்திரம் முற்றுப் பெற்றது