பூங்கோடி! பூங்கோடி !
.......மௌனம்........
''என்ன பூங்கொடி நான் கூப்பிடுவது காதில் விழவில்லையா'' ?
அல்லது விழுந்தும் விழாதது போல் இருக்கிறாயா'' ?
மௌனம் கலைந்து பூங்கொடி பேசினால்
''முல்லை நிலம் ஆளும் மன்னரின் மகன் தாங்கள்.
இந்த சாதாரண தேரோட்டியின் மகளை
காக்கவைப்பதில் என்ன மகிழ்ச்சியோ'' ?
இளந்திரையன் அதற்கு
'' இல்லை பூங்கொடி எம்மான் தொல்காப்பியனார்
மன்னரை சந்திக்க வந்தார் ..அவரை
வணங்கிவிட்டு வர சிறிது நேரமாகிவிட்டது''
என்று கூறி பூங்கொடியின் கரத்தை
மெல்லப்பற்றினான்.
''ஓகோ ! நான் என்னவோ தொல்காப்பியனார்
வகுத்தளித்தவாறு
காரும் மாலையும் முல்லை
அதனால் இந்த கார்காலத்தின் மாலைப்பொழுதில்
என்னை நீண்டநேரம் காக்கவைத்துவிட்டு மெதுவாக
வந்துள்ளீர்களோ என்று நினைத்தேன் ''
என்று கூறி சிரித்தாள்.
பூங்கொடியின் முத்துப்பல் சிரிப்பில் தன்னைமுழுதும்
பறிகொடுத்த இளந்திரையன் மெல்ல அருகில் வந்து
அவளின் மென்மையான கைகலைப்பற்றி
தனது பார்வையால் காதலுக்கு முன்னுரை எழுதினான் .
.
அவனின் பார்வையை புரிந்துகொண்டவள் போல் சற்றே விலகி நின்று ...
'' இளவரசருக்கு தொல்காப்பியனார் அருளிச் செய்த ...
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிய பொருளே
என்பது கூடவா தெரியாமல் போயிற்று என்று கூறி நகைத்தாள் !
அதற்கு இளந்திரையன் ..
'' தேருங் காலை என்றதனால் குறிஞ்சிக்கு புணர்ச்சியும்
பாலைக்கு பிரிவும் முல்லைக்கு இருத்தலும்
நெய்தற்கு இரங்கலும் மருதத்திற்கு ஊடலும்
அவ்வந் நிமித்தம் என்று ஆராய்ந்து நான் அறிந்தாலும்
..
தினைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலநொருங்கு மயங்குதல் இல்லென மொழிய
புலன்நன் குணர்ந்த புலமை யோரே
என்றும் கூறியுள்ளாரே ! என்று கூறி சிரித்தான்.
இதன் பொருளையும் அனைத்தும் அறிந்த
எம் வருங்கால மன்னர் கூறிவிட்டால்
என்னைப்போன்ற பேதைப் பெண்களுக்கும்
வசதியாக இருக்கும் என்று குறும்பாக சிரித்து கேட்க்க ..
இளந்திரையன் ..
'இங்கு ஒரு நிலமே மயங்குமாறாயிற்று
உரிப்பொருள் மயக்குறுதல் என்னாது திணையும் மயங்கிற்று ''
என்று கூறியவாறு
கனி தாங்கா அந்த வஞ்சிக் கொடியை
கரம் சுற்றிக் காவியம் எழுத கண்களால்
அழைத்தான்
கண்ணியவளும் தன்னை மறந்தாள் !
காரும் மாலையும் முல்லை
நூற்பா 20 அகத் 6
புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிய பொருளே
நூற்பா 16
தினைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலநொருங்கு மயங்குதல் இல்லென மொழிய
புலன்நன் குணர்ந்த புலமை யோரே
நூற்பா 14