rgurus
Active member
நிர்ப்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை.
இவ்வழக்கில் குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏபி சிங் கூறுகையில் "இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை. யாரையும் தூக்கிலிடக்கூடாது என்ற காந்திய கொள்கை அழிக்கப் பட்டுள்ளது. அனைவரும் வாழ்வதற்கு உரிமை உள்ளது. இது மனித உரிமைச் சட்டத்திற்குப் புறம்பானது. இவர்களைத் தூக்கில் ஏற்றுவதனல் இத்தகைய குற்றங்கள் குறையாது. தீர்ப்பை மறு சீராய்வு செய்து மனு தாக்கல் செய்யப்படும்" என்று கூறியிருக்கிறார். செய்தி
இந்தக் கற்பழிப்புக் கொலை வழக்கில் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை கொடூரமாகப் பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்ரிம் கோர்ட் rarest of the rare (மிக மிக அபூர்வமான) வழக்கு என்பதால் இதில் சம்பந்தப்பட்ட நால்வருக்கும் மிகுந்த ஆலோசனைக்குப் பிறகே தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது. இதில் ஒரு 17 வயது சிறுவன் ஜுவனைல்(இளைஞன்) என்ற காரணத்தால் அன்றைய சட்டத்தின்படி தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு சீர்திருத்த மையத்திற்கு அனுப்பப் பட்டு இருப்பது கொடுமையிலும் கொடுமை.
எப்போது ஒருவன் தன் வயதிற்கு மீறிய தகாத செயல்களில் ஈடுபடுகிறானோ அப்போதே அவன் விவரம் புரியாத இளைஞன் என்று கருதப்படக்கூடாது. இன்றைய சட்டத்திற்கு retrospective effect கொடுத்து அவன் தண்டிக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது இந்தத் தீர்ப்பு மனித உரிமைச்சட்டத்திற்குப் புறம்பானது என்று
குற்றவாளிகளின் வழக்கறிஞர் சிங் மனித உரிமை பற்றிப் பேசுகிறார். இத்தகைய மனித மிருகங்களை வாழ விடுவது சமூகத்திற்கு நல்லது அல்ல. ஒருவரின் உயிர்வாழும் உரிமையைக் கொடூரமாகப் பறித்தது யார்? அப்படிப் பறித்தவர்களின் உரிமையைப் பற்றிப் பேசுவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது. இத்தகையவர்கள் வாழாததால் இந்த உலகிற்கு லாபமே ஒழிய நஷ்டம் எதுவும் இல்லை. இவர்கள் வாழும் தகுதியை இழந்தவர்கள். எனவே இவர்கள் தூக்கில் இடப்பட வேண்டியவர்கள்தான்.
இத்தகையவர்களைத் தூக்கில் போடுவதால் இம்மாதிரி குற்றங்களைத் தடுக்க முடியாது என்பது அடுத்தபடியாக சிங் வைத்த உளுத்துப்போன ஒரு மடத்தனமான வாதம். திருடர்களைத் தண்டிக்கும் சட்டம் இருந்த போதிலும் திருடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதால் அந்த சட்டத்தையே எடுத்துவிடுவதுதான் தீர்ப்பா? இதே போல் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்களைத் தண்டிக்கும் அத்தனை சட்டங்களையும் எடுத்துவிட வேண்டியதுதானா? அப்படிப் பார்த்தால் அனைத்துச் சட்டங்களையும் எடுத்துவிட வேண்டியதுதான். இப்படிப் பேசும் ஒரு வழக்கறிஞரை என்னவென்று சொல்வது? என்னைக் கேட்டால் இத்தகைய வக்கீல்களையும், கொலைகாரர்களை ஆதரிக்கும் மனித உரிமைக் கழகத்தைச் சார்ந்த அனைவரையும் தூக்கிலிட்டால் கூட தவறேதுமில்லை.
போதாததற்கு இவர் காந்தியத்தை வேறு இதில் இழுக்கிறார். இதைவிட காந்தியத்தைக் கேவலப்படுத்த வேறு யாராலும் முடியாது. இன்று காந்தி இருந்திருந்தால் இந்த மாதிரித் தப்பும் தவறுமாகப் பேசி தன் கொள்கைகளைக் கொச்சைப்படுத்திய இவரைத் தூக்கிலிடச் சொல்லி இருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன்.