• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 58 ( 1 to 5)

தா3வாக்3னி மோக்ஷ:

த்வயி விஹரணலோலே பா3ல ஜாலை: ப்ரலம்ப3
ப்ரமத2ன ஸவிலம்பே3 தே4னவ: ஸ்வைரசாரா:|
த்ருணா குதுக நிவிஷ்டா தூ3ரம் தூ3ரம் சரந்த்ய:
கிமபி விபின மைஷீகாக்2யமீஷாம் ப3பூ4வு:||(58 – 1)


தாங்கள் கோப பாலர்களுடன் விளையாட விருப்பம் உடையவராகப் பிரலம்பாசுரனைக் கொல்லுவதற்காகத் தாமதித்த பொழுது பசுக்கள் தம் இஷ்டப்படி சஞ்சரித்துக் கொண்டு புல்லை உண்ண விரும்பி வெகு தூரத்தில் உள்ள ஐஷீகம் என்ற பெயர் உடைய ஒரு வனத்தை அடைந்தன.( 58 – 1)


அனதி4க3த நிதா3க4 க்ரௌர்ய ப்3ருந்தா3வனாந்தாத்
ப3ஹி ரித3 முபயாதா : கானனம் த4னவசஸ்தா:|
தவ விரஹ வஷண்ணா ஊஷ்மல க்3ரீஷ்ம தாப
ப்ரஸர விஸர த3ம்ப4ஸ்யாகுலா: ஸ்தம்ப4மாபு:||( 58 – 2)


அந்தப் பசுக்கள், வேனல் காலத்தின் கொடுமை அறியப்படாத பிருந்தாவனத்தில் இருந்து, இந்தக் காட்டை வந்து அடைந்ததால், தங்கள் பிரிவினால் மிகவும் வருந்தியும், மிகக் கடுமையான க்ரீஷ்ம ருதுவின் தாபத்தால் உண்டான தாகத்தால் தம் வசம் இழந்தும், அசைவற்று நின்றன. ( 58 – 2)


தத3னு ஸஹ ஸஹாயைர் தூ3ரமன்விஷ்ய சௌ’ரே
க3லித ஸரணி முஞ்ஜாரண்ய ஸஞ்ஜாத கே2த3ம் |
பசு’குலமபிவீக்ஷ்ய க்ஷிப்ர மாநேஷு மாரா
த்வயி க3தவதி ஹீ ஹீ ஸர்வதோSக்னிர் ஜஜ்ரும்பே4 ||( 58 – 3)

சூரஸேனகுலத்தில் ஜனனம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணா! அப்போது தோழர்களுடன் வெகு தூரம் தேடிப் பிறகு வழி பிழைத்து, முஞ்சிக் காட்டில் கஷ்டப்படுகின்ற பசுக் கூட்டதைக் கண்டு, விரைவாக ஒட்டிக் கொண்டுவரத் தாங்கள் பக்கத்தில் சென்ற பொழுது, நான்கு புறங்களிலும் காட்டுத் தீ பற்றி எரிந்தது. ஹா!ஹா! என்ன கஷ்டம்! ( 58 – 3)


ஸகல ஹரிதி தீ3ப்தே கோ4ர பா4ங்கார பீ4மே
சி’கி2னி விஹத மார்கா3 அர்த4 த3க்3தா4 இவர்தா:|
அஹஹ பு4வனா ப4ந்தோ பாஹி பாஹீதி ஸர்வே
ச’ரண முபக3தாஸ்த்வாம் தாபஹர்தார மேகம் ||(58 – 4)

காட்டுத் தீ எல்லா திக்குகளிலும் கோரமான சத்தத்துடன் பயங்கரமாக எரியும் பொழுது, அவர்கள் எல்லோரும் வழி மறிக்கப்பட்டு, பாதி எரிந்தர்வர்கள் போல வருந்தி “லோக பந்துவே! காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று மூன்று வகைத் தாபங்களையும் போக்கடிக்க வல்ல தங்களையே சரணம் அடைந்தார்கள். ( 58 – 4 )


அலமலமதிபீ4த்யா ஸர்வதோ மீலயத்4வம்
த்3ருச’மிதி தவ வாசா மீலிதாக்ஷேஷு தேஷு |
க்வனு த3வ த3ஹனோSசௌ’ குத்ர முஞ்சாடவி ஸா
ஸபதி3 வவ்ருதிரே தே ஹந்த பா4ண்டீ3ர தே3சே’ ||( 58 – 5)

“போதும்! போதும்! அதிகம் பயந்தது போதும். நீங்கள் எப்போரும் இப்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள் ” என்ற தங்கள் திருவாக்கின்படி அவர்கள் கண்களை மூடிக் கொண்டபோது அந்தக் காட்டுத்தீ எங்கே?அந்த முஞ்சிக் காடு எங்கே? அவர்கள் இருந்தது பாண்டீர மரத்தின் அடியில்! என்ன ஆச்சரியம்! ( 58 – 5)
 
[h=1]1. “உன் அண்ணன்.”[/h]

உருவமும், அருவமும் ஆக விளங்கும்
கருநிறக் கண்ணன், கார்மேக வண்ணன்;
வருவான் அவனை விரும்பி அழைத்தால்,
சிறுவன் ஜடிலனின் கதை இதை உணர்த்துமே!

பண்டைய நாட்களில் பள்ளிகள் குறைவு;
எண்ணிவிடலாம் ஒரு கை விரல்களால்!
படிப்பதென்றால் பல காத தூரம் தனியே
நடந்து சென்றிட வேண்டும் மாணவர்கள்.

காட்டு வழியே தன்னந் தனியே தினம்,
காட்டு விலங்குகளின் பீதியில் செல்லும்,
சிறுவன் ஜடிலன் தன் ஏழைத் தாயிடம்,
மறுகியவாறே ஒருநாள் உரைத்தான்,

“கள்ளிக் காட்டைக் கண்டாலே அச்சம்.
பள்ளி செல்லவோ மிகவும் விருப்பம்.
எனக்குத் துணையாக யார் வருவார்கள்?
எனக்கு ஒரு பதில் கூறுங்கள் அம்மா!”

“கண்ணன் இருக்கும் போது நமக்கு
என்ன பயம் சொல், என் கண்ணே” என்ற
தாயிடம் கேட்டான் “யார் அந்தக் கண்ணன்?”
தாய் சொன்னாள், “அவன் உன் அண்ணன்.”

பாதி வழியில் சிம்ம கர்ச்சனை கேட்டு,
பீதியில் உறைந்த சிறுவன் ஜடிலன்,
“கண்ணா! கண்ணா! உடனே வா! என்
அண்ணா! அண்ணா!” என்று ஓலமிட,

மனத்தை மயக்கும் மோகனச் சிரிப்புடன்,
முன்னே வந்து நின்ற அழகிய சிறுவன்,
“வா தம்பி! நாம் பள்ளிக்கு போவோம்” என
வழி காட்டி நடந்தான் ஜடிலன் முன்னே.

பள்ளியை அடைந்ததும் ஜடிலனிடம்,
“பள்ளி விட்டதும் கூப்பிடு, வருவேன்” எனப்
பகர்ந்து மறைந்தவன் யார் என்பதை அந்தப்
பாலகன் அறியான், நாம் அறிவோமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 58 ( 6 to 10)

தா3வாக்3னி மோக்ஷ:

ஜெய ஜெய தவ மாயா கேயமீசே’தி தேஷாம்
நுதிபி4 ருதித ஹாஸோ ப3த்3த3னானா விலாஸ:|
புனரபி விபினாந்தே பப்ராசார: பாடலாதி3
ப்ரஸவ நிகர மாத்ரா க்3ராஹ்ய க3ர்மானுபா4வே ||(58 – 6)


“ஹே ஈசா! தங்கள் மேன்மை பெற்று விளங்க வேண்டும்! தங்களுடைய மாயை எப்படிப் பட்டது!” என்று பலவாறான புகழ் உரைகளைக் கேட்டு மந்தஹாசத்துடன், பல லீலைகள் புரிந்து கொண்டு, வேனல் நிலவும் வன மத்தியில் மீண்டும் சஞ்சரித்தீர்கள் அல்லவா?
( 58 – 6)

த்வயி விமுக2 மிவோச்சைஸ் தாப பா4ரம் வஹந்தம்
தவ ப4ஜன வத3ந்த: பங்க முச்சோஷயந்தம்|
தவ பு4ஜ வது3த3ஞ்சத் பூ4ரிதேஜ: ப்ரவாஹம்
தபஸ மய மனைஷீர் யாமுநேஷு ஸ்த2லேஷு ||( 58 – 7)


தங்களிடத்தில் பக்தி இல்லாததைப் போல அதிகமான ஆத்யாத்மகம் முதலிய தாபத்தை (உஷ்ணத்தை) வஹிக்கின்றதும், தங்கள் சேவையைப் போல உள்ளத்தில் இருக்கும் பாபச் சேற்றை போக்கடிப்பதும் (உலர்த்துவதும்), தங்கள் கைகளைப் போல உயரக் கிளம்புகின்ற அதிகமான பராக்கிரமத்தின் பெருக்கை (வெய்யிலின் பெருக்கை) உடையதும் ஆகிய வேனற் காலத்தை யமுனா தீரத்தில் உள்ள பிரதேசங்களில் கழித்தீர்கள் அல்லவா?
( 58 – 7)

தத3னு ஜலத3 ஜாலைஸ் தவத்3வ்புஸ்துல்ய பாபி4:
விகாஸ தமல வித்3யுத் பீதவாஸோ விலாசௌ:|
ஸகல பு4வன பா4ஜாம் ஹர்ஷதா3ம் வர்ஷவேலாம்
க்ஷிதி த4ர குஹரேஷு ஸ்வைரவாஸீ வ்யனைஷீ: ||( 58 – 8 )

அதன் பிறகு, தங்கள் திரு மேனியை ஒத்த நிறமுடையவைகளும், மஞ்சள் பட்டாடை போல பிரகாசிக்கும் மின்னற் கொடிகளை உடையவைகளும், ஆகிய மேகக் கூட்டங்கள், உலகத்தில் உள்ள எல்லோருக்கும் ஆனந்தம் அளிக்கும் மழைக் காலத்தில் மலைக் குகைகளில் தங்கள் இஷ்டம் போல வசித்தீர்கள் அல்லவா? ( 58 – 8)

குஹரதல நிவிஷ்டம் த்வாம் க3ரிஷ்டம் கி3ரீந்த்3ரா:
சி’கி2குல நவ கேகா காகுபி4: ஸ்தோத்ரகாரி |
ஸ்புட குடஜ கத3ம்பசஸ்தோம புஷ்பாஞ்ஜலிஞ்ச
ப்ரவி த3த4னு பே4ஜே தே3வ கோ3வர்த4னோSசௌ ||( 58 – 9)

ஹே தேவா! மலை அரசனான கோவர்த்தனன் தன் குகைகளில் வசிக்கும் தங்களை மயில்களின் கோகா சப்தங்களால் மகிழ்வித்துக் கொண்டும், தங்களைப் புகழ்ந்து கொண்டும், மலர்ந்த புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து சேவித்துக் கொண்டும் இருந்தான் அல்லவா?( 58 – 9)

அத2ச’ரத முபேதாம் தாம் ப4வத்3 ப4க்த சேதோ
விமலா ஸலில பூராம் மானயன் கானனேஷு |
தருண மமல வனாந்தே சாரு ஸஞ்சாராயன் கா:
பவனபுரபதே த்வம் தே3ஹிமே தே3ஹ சௌக்2யம் ||(58 – 10 )

அதன் பிறகு தாங்கள், தங்கள் பக்தர்கள் உள்ளம் போல நிர்மலமான ஜலப் பிரவாகத்தை உடைய அந்த சரத் காலத்தை காடுகளில் அனுபவித்துக் கொண்டும், நிர்மலமான் காடுகளில் பசுக்களை நன்கு மேய்த்துக் கொண்டும் இருந்த குருவாயூரப்பா! எனக்கு தேக சுகத்தைத் தந்தருளும்! ( 58 – 10)
 
[h=1]3. எண்ணைக்கிண்ணம்[/h]

தானே சிறந்த பக்தன் என்று
தாளாத மமதை கொண்டுவிட்ட,
தேவரிஷி நாரதரின் கர்வத்தை
தேவன் பங்கம் செய்த கதை இது!

“தன்னுடைய ஒரு சிறந்த பக்தன்
மன்னுலகில் உண்டு” என்றான்;
மூவுலகும் வலம் வரும் தேவ
முனிவரிடம் தாமரைக் கண்ணன்.

“என்னிலும் சிறந்த பக்தனா?” என
எள்ளி நகையாடிய முனிவரிடம்,
“நீயே சென்று கண்டு வா” என்று
நீல வண்ணன் ஆணை இட்டான்.

அந்த மனிதனோ ஒரு விவசாயி.
எந்த நேரமும் வேலைகள் தான்!
உதயத்தில் ஒரே ஒரு முறையும்,
உறங்குமுன் ஒரே ஒரு முறையும்,

ஹரி நாமத்தைக் கூறி வந்தான்.
பரிதவித்து உருகிவிடவில்லை.
தன்னைப் போல் இடைவிடாது
தலைவனை எண்ணவுமில்லை!

“ஒரு நாள் பொழுது முழுவதிலும்
இரு முறையே ஹரி எனக் கூறும்
இவனா உங்கள் சிறந்த பக்தன்?”
இறைவனிடம் கேட்டார் முனிவர்.

சிந்திய புன்னகையுடன் கண்ணன்,
சிந்தாமல் அவர் கொண்டு செல்ல,
தந்தான் சிறு கிண்ணம் ஒன்றை,
முன்பே எண்ணையால் நிறைத்து!

உலகை வலம் வந்தவரிடம்,
“உண்மையாகவே என்னை நீர்
எத்தனை முறை நினைத்தீர்?
என்னிடம் கூற வேண்டும்” என,

“ஒரு முறை கூட எண்ணவில்லை;
ஒருமித்த என்னுடைய கவனம்
எண்ணைக் கிண்ணத்தை மட்டுமே
எண்ணியபடி இருந்ததால், இறைவா!”

“வேலை வந்தவுடனேயே உமக்கு
வேளை இல்லை என்னை எண்ண!
வேளை தவறாமல் அவன் இருமுறை
வேலைகளிடையே எண்ணுகின்றானே!”

நாரதரின் பெருமையும், கர்வமும்
நாணமாக மாறிவிடக் கூறினார்,
“சஞ்சாரி ஆகிய என்னை விடவும்
சம்சாரி ஆகிய அவனே சிறந்தவன்!”

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 59 ( 1 to 5)

வேணு கா3ன வர்ணனம்

த்வத்3 வபுர் நவ கலாய கோமலம்
ப்ரேம தோ3ஹன மசேஷ மோஹனம் |
ப்ரஹ்ம தத்வ பரிசின் முதா3த்மகம்
வீக்ஷ்ய ஸம்முமுஹு ரன்வஹம் ஸ்த்ரிய:||( 59 – 1)


புதுக் காசாம்பூ போலக் கோமளமானதும்; பிரேமையைப் பெருக்குகின்றதும்; எல்லோரையும் முற்றிலும் மயக்குவதும்; சச்சிதானந்த ரூபம் ஆனதும்; பர பிரம்மமும் ஆகிய தங்கள் திருமேனியைக் கண்டு கோபிகைகள் ஒவ்வொரு நாளும் மயக்கம் அடைந்தனர். ( 59 – 1)

மன்மதோன் மதித மானஸா: க்ரமாத்
தத்3விலோகன ராதஸ் ததஸ்தத:|
கோ3பிகாஸ் தவ ந ஸேஹிரே ஹரே
கானநோப க3தி மப்யஹர்முகே2 ||( 59 – 2)


ஹே கிருஷ்ணா! கோபிகைகள் மன்மதனால் கலக்கப்பட்ட மனதை உடையவர்களாகி, எல்லா இடத்திலும் எப்போதும் தங்களையே காண விரும்பினர். காலையில் தாங்கள் காட்டுக்குச் செல்வதைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.( 59 – 2)

நிர்க3தே ப4வதி த3த்த3 த்3ருஷ்ட்ய:
த்வத்3 க3தேன மனஸா ம்ருகே3க்ஷணா:|
வேணு நாத3 முபகர்ண்ய தூரத:
த்வத்விலாஸ கத2யாபிரேமிரே ||( 59 – 3)

காட்டுக்குப் புறப்பட்ட தங்கள் இடத்திலேயே கண்களைச் செலுத்திய மான் கண்ணியர், உங்களுடனேயே அவர்களும் மனம் சென்றுவிட, வெகு தூரத்தில் இருந்தே வேணு கானத்தைக் கேட்டுக் கொண்டும், தங்கள் லீலைகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் களித்தனர் அல்லவா? ( 59 – 3)

கானனாந்த மிதவான் ப4வானபி
ஸ்நிக்3த4 பாத3ப தலே மனோரமே |
வ்யத்யயாகலித பாத3மாஸ்தித:
ப்ரத்ய பூரயத வேணு நாலிகாம் ||( 59 – 4)


காட்டுக்குச் சென்ற தாங்களும் மநோஹரமான நல்ல நிழல் உள்ள ஒரு மரத்தினடியில் கால்களை மாற்றி வைத்து நின்று புல்லாங்குழல் ஊதினீ ர்கள் அல்லவா? ( 59 – 4)

மார பா3ணது4த கே2சரீ குலம்
நிர்விகார பசு’பக்ஷி மண்ட3லம் |
த்3ராவணம் ச த்3ருஷதா3 மபிப்ரபோ4
தாவகம் வ்யஜனி வேணு கூஜிதம் ||( 59 – 5)

ஹே கிருஷ்ணா! தங்களுடைய வேணு நாதம் அப்சர ஸ்திரீக்களைக் கூடக் காமவிகாரத்தால் சலிக்கச் செய்தது. பசு, பக்ஷிக் கூட்டங்களை அசைவற்றதாகச் செய்தது. கல்லையும் கரையச் செய்தது. ( 59 – 5)
 
[h=1]20. பக்தி,பகுத்தறிவு.[/h]

மூவுலக சஞ்சாரியான நாரதர்
முன் நிற்கக் கண்டார் இருவரை.

இருவருமே நல்ல தபஸ்விகள்,
இறையைக் காண விழைபவர்கள்.

“வைகுண்டத்திலிருந்தா வருகின்றீர்?
வைகுண்டநாதன் என்ன செய்கின்றார்?”

நாரதர் சிரித்துவிட்டுச் சொன்னார்,
“நாரணனுக்கு எல்லாமே விளையாட்டு!

யானைகளையும், ஒட்டகங்களையும்,
யாராலுமே செய்ய முடியாதபடி, அவர்

ஊசியின் சிறு கண்ணின் வழியே
உள்ளே புகச் செய்கின்றார், ஆஹா!”

முதலாம் யோகி பரம பக்தர்,
முழு விசுவாசம் உடையவர்.

“செய்வார்! செய்வார்! அவர்தான்
செய்ய வல்லவர் அற்புதங்களை!”

இரண்டாமவர் பகுத்தறிவுவாதி;
இளநகை புரிந்தார் அப்போது.

“யானையாவது? ஊசிக் காதாவது?
யாருக்கு காது குத்துகின்றீர்கள்?”

“முடியும்” என்றால் எல்லாம் முடியும்;
“முடியாது” என்றால் எதுவும் முடியாது!

“உருவம்” என்றால் உண்டு உருவம்;
“அருவம்” என்றால் வெறும் அருவமே.

நாம் விரும்புகின்றபடியே தன்னை,
நமக்குக் வெளிக்காட்டுவான் இறைவன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 59 ( 6 to 10)

வேணு கா3ன வர்ணனம்

வேணுரந்த்4ர தரலங்கு3லீ த3லம்
தாள சஞ்சலித பாத3 பல்லவம் |
தத்ஸ்திதன்ய தம் தவ பரோக்ஷ மப்யஹோ
ஸம்விசிந்த்ய முமுஹூர் வ்ரஜாங்கனா ||( 59 – 6)


வேணுவின் துவாரங்களில் சலிக்கின்ற விரல் நுனிகளையும், தாளத்தை அனுசரித்து அசைகின்ற துளிர் போன்ற கால்களையும் உடைய தங்களின் அந்த நிலையை நேரில் காணாது இருந்த போதிலும், கற்பனை செய்த காட்சியிலேயே மோஹம் கொண்டனர் கோப ஸ்திரீக்கள். என்ன ஓர் ஆச்சரியம்! ( 59 – 6)


நிர்விஷங்க ப4வத3ங்க3 த3ர்ஷினீ :
கேசரீ :க2க3ம்ருகா3ன் பசூ’னபி |
த்வத பத3 ப்ரணயி கானனம் ச தா:
த4ன்ய த4ன்யா மிதி நன்வமானயன் ||( 59- 7)

தங்கு தடையின்றித் தங்கள் திருமேனியைத் தரிசிக்கின்ற தேவ ஸ்த்ரீக்களையும், பறவைகளையும், பசுக்களையும் அந்த பிருந்தாவனத்தையும் மிகவும் பாக்கியசாலிகள் என்று அந்த கோபிகைகள் கருதினார்கள் அல்லவா? ( 59 – 7)


ஸம்பிபே3ய மது4ராம்ருதம் கதா3
வேணு முக்த ரஸ சேஷமேகதா3 |
தூரதோ ப3த க்ருதும் து3ராச’யேதி
ஆகுலாமுஹிரிமா: ஸமாமுஹன் ||( 59 – 8)

“வேணுவினால் அனுபவிக்கப்பட்டு மீதியான ரசத்தை உடைய அந்த அதராம்ருதத்தை என்றாவது ஒரு தடவையாவது நான் பானம் செய்வேனா? ஆ கஷ்டம்! வெகு தூரத்தில் இருக்கும் பேராசையால் என்ன பிரயோஜனம்?” என்று மனம் கலங்கி மயங்கினார்கள் கோபஸ்த்ரீக்கள். ( 59 – 8)


ப்ரத்யஹஞ்ச புனரித்த2 மங்க3னா :
சித்தயோனி ஜனிதா த3னுக்3ராஹாத் |
பத்3த4 ராக3 விவசா’ஸ்த்வயி ப்ரபோ4
நித்ய மாபுரிஹ க்ருத்ய மூட4தாம் ||( 59 – 9)

ஹே பிரபுவே! ஒவ்வொரு நாளும் கோபிகைகள் மறுபடியும் இவ்விதம் மன்மதனால் உண்டு பண்ணப் பட்ட அனுக்ரஹத்தால் தங்களிடத்தில் ஆசை வைத்து அதனால் பரவசர்கள் ஆகி வீடுகளில் செய்ய வேண்டியதை மறந்து அறியாமையை அடைந்தனர்.
( 59 – 9 )


ராக3ஸ் தாவஜ் ஜாயதே ஹி ஸ்வபா4வான்
மோக்ஷோ பாயோ யத்னத: ஸ்யான்ன வாஸ்யாத் |
தாஸாம் த்வேகம் தத்3த்3வயம் லாப்3த4 மாஸீத்
பா4க்யம் பா4க்யம் பாஹி வாதாலயேச’ ||( 59 – 10)


அனுராகம் என்னும் ஆசை சுபாவத்திலேயே உண்டாகிறது அல்லவா? மோக்ஷதிற்கு உபாயம் நம் முயற்சியால் உண்டாகலாம். அல்லது உண்டாகாமல் போகலாம். கோபிகளுக்கு அவர்களின் அனுராகமே மோக்ஷத்திற்கு உபாயமாகி விட்டது அல்லவா! அவை இரண்டும் ஒன்றாகக் கிடைத்த அவர்களின் பாக்கியமே பாக்கியம். குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 59 – 10)
 
[h=1]24. நாரதரின் நரகம்.[/h]

நாரதர் ஒரு நாள் தன் துடுக்குத்தனத்தால்
நாராயணனையும் கோபமூட்டிவிட்டார்.

சாந்த ஸ்வரூபியான இறைவனும்,
சாந்தம் கலைந்து முனியைச் சபித்தார்,

“நரகத்தில் நீ விழுந்து புரள்வாய்”என்று!
நாரணன் வாக்குப் பொய்யாகலாகுமா?

இடியுண்ட நாகம்போல நடுங்கினாலும்,
இறைவனிடம் கேட்டார் “எது நரகம்?”

நாராயணனும், நிலத்தில் மண்மீது
சீரான வரைபடம் ஒன்றை வரைந்தார்.

பிரபஞ்சம் முழுவதும் அங்கே அழகிய
பிரசித்தி பெற்ற படமாக உருவானது.

நரகத்தைச் சுட்டிக் காட்டிய இறைவன்,
‘நரகம்’ எனப் பெயரையும் எழுதினான்.

“இதுவா நரகம்? இதுதானே நரகம்?
இப்போதே நான் அதில் புரள்கின்றேன்!”

மண்ணில் வரைந்த படத்தில் உள்ள
மண் நரகத்தில் புரண்டார் முனிவர்.

“ஏய்க்கின்றீர் நீர்! இதுவா நரகம்?
துய்க்க வேண்டும் தண்டனையை!”

“தாங்களே வரைந்தீர்கள் பிரபஞ்சத்தை!
தாங்களே நரகத்தையும் வரைந்துவிட்டு,

தாங்களே அதன் பெயரையும் எழுதினீர்!
தங்கள் வாக்குப் பொய்யாகலாகுமா ஐயனே?”

நாரணனுக்கே நகைப்பு வந்துவிட்டது.
நாரதரை தண்டிப்பதும் கூடக் கடினமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 60 ( 1 to 5)

கோ3பி வஸ்த்ர அபஹரணம்

மத3னாதுர சேதஸோSன்வஹம்
ப4வத3ங்க்4ரி த்3வயதாஸ்ய காம்யயா |
யமுனா தட ஸீம்னி சைகதீம்
தரலாக்ஷ்யோ கி3ரிஜாம் ஸமார்ச்சிசன் ||( 60 – 1)

ஒவ்வொரு நாளும், காமத்தால் பரவசம் அடைந்த மனத்தையுடைய சஞ்சலாக்ஷிகள் ஆகிய கோபிகைகள், தங்கள் திருவடிகளை சேவிக்கும் விருப்பத்தினா,ல் யமுனா நதிக் கரையில், மண்ணால் உண்டாக்கப்பட்ட மலைமகள் பார்வதி தேவியை பூஜை செய்தனர்.
( 60 – 1)

தவ நாம கதா2ரதா: ஸமம்
ஸுத்3ருஷ:ப்ராதருபாக3தா: நதீ3ம் |
உபஹார ச’தை ரபூஜயன்
த3யிதோ நந்தசஸுதோ ப4வேதி3தி||( 60 – 2)

அழகான கண்களை உடைய அவர்கள் தங்கள் திருநாமத்தை உச்சரிப்பதில் விருப்பம் உடையவர்களாய் விடியற்காலையில் ஒன்று சேர்ந்து யமுனா நதிக்குச் சென்று ‘”நந்த குமாரன் எனக்குக் கணவனாக வேண்டும்” என்று பிரார்த்தித்து அநேகம் காணிக்கைகளுடன் தேவியைப் பூஜை செய்தார்கள் அல்லவா? ( 60 – 2)

இதி மாஸ முபாஹித வ்ரதா:
தரலாக்ஷீ :அபி4 வீக்ஷ்ய தா ப4வான் |
கருணா ம்ருது4லோ நதீ3 தடம்
ஸமாயாஸீத் ததனுக்3ரஹேச்ச2யா ||( 60 – 3)


இவ்வாறு ஒரு மாதம் மழுவதும் விரதம் அனுஷ்டித்தவர்களும், சஞ்சலிக்கும் கண்களை உடையவர்களும் ஆகிய அந்த கோபிகைகளைக் கண்டு தாங்கள் கருணையால் மனம் கனிந்தீர்கள். அவர்களை அனுக்ரஹிக்க விரும்பி யமுனை நதிக் கரைக்குச் சென்றீர்கள்.
( 60 – 3)

நியமாவஸிதௌ நிஜாம்ப3ரம்
தட ஸீமனி அவமுச்ய தாஸ்ததா3 |
யமுனாகுல கே2லனாகுலா:
புரதஸ்த்வாம் அவலோக்ய லஜ்ஜிதா:||( 60 – 4)


விரதம் முடிந்த பிறகு அவரவர் வஸ்திரத்தைக் கரையில் அவிழ்த்து வைத்துவிட்டு அவர்கள் யமுனா ஜலத்தில் விளையாடும்போது தங்களை எதிரில் கண்டு மிகுந்த வெட்கம் அடைந்தனர். ( 60 – 4)

த்ரபயா நமிதானனாஸ்வதோ
வனிதா ஸ்வம்ப3ர ஜாலமந்திகே |
நிஹிதம் பரிக்3ருஹ்ய பூ4ருஹோ
விபடம் த்வம் தரஸா (S )தி4ரூட4வான் || ( 60 – 5)

அப்போது அந்தப் பெண்கள் வெட்கத்தால் தலை குனிந்து நிற்கும்போது கரையில் வைக்கப்பட்டிருந்த அவர்களின் வஸ்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு விரைந்து மரக்கொம்பில் ஏறிக் கொண்டீர்கள் அல்லவா? ( 60 – 5)
 
[h=1]26. மாயையின் சக்தி.[/h]

“மாயையின் வயப்பட்டவர்களால்
மாயையை அறியவே முடியாது!”
கூறும் இறைவனிடம் நாரத முனிவர்
கூறினார்,”நானும் காணவேண்டுமே!”

நீண்ட நெடிய பயணம் சென்றனர்,
நீல வர்ணனும் நாரதரும் ஒருநாள்.
“நீர் வேட்கை மிகுந்து உள்ளது!
நீர் கொண்டு வாரும் நாரதரே!”

நீர் நிலையை அடைந்த நாரதர்;
நிகரற்ற ஓரழகியைக் கண்டார்.
அவளும் இன்சொல் பயிலவே,
அவரும் மதி மயங்கலானார்.

இருவரும் கூடி இன்புற்றிடவே,
பிறந்தன பலப் பல குழந்தைகள்.
கொடிய நோய் ஒன்று தோன்றியது;
நொடியில் மரணம் விளைவித்தது!

“வேறிடம் போவோம்” எனக் கூறி
வேகமாகக் குடும்பத்துடன் செல்ல,
பொங்கிய ஆற்று நீர் அனைவரையும்
எங்கோ இழுத்துச் சென்று விடவே,

தனித்து விடப்பட்ட நாரதர் கண்கள்
பனித்து அழுது புலம்பும் பொழுது,
“நீர் என்ன செய்து கொண்டுள்ளீர்?
நீர் கொண்டுவர இவ்வளவு நேரமா?”

“ஒரே நிமிடத்தில் இத்தனையும்
ஒருசேர நிகழ்ந்தனவா, இறைவா?
உன் மாயைக்கு ஒரு நமஸ்காரம்!
உனக்கு ஒரு கோடி நமஸ்காரம்!

மாயையை என்னிடம் நெருங்கிவிட,
மறந்தும் கூட நீ அனுமதியாதே!
மானிடர்கள் படும் துன்பங்கள்,
மாதவா! மலைப்பூட்டுதே!” என்றார்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 60 ( 6 to 11)

கோ3பி வஸ்த்ர அபஹரணம்
இஹ தாவது3பேத்ய நீயதாம்
வஸனம் வ: ஸுத்3ருஷோ யதா2யத2ம் |
இதி நர்ம ம்ருது3ஸ்மிதே த்வயி
ப்3ருவதி வ்யாமுமுஹே வது4 ஜனை:||( 60 – 6)

“கட்டழகிகளே! இங்கே வந்து அவரவர் ஆடைகளை மாறாமல் எடுத்துக் கொண்டு போகலாம் !” என்று தாங்கள் பரிகாசமாகச் சிரித்துக் கொண்டு சொல்லும்போது என்ன செய்வது என்று அறியாத அந்த கோபிகைகள் மோஹம் அடைந்தார்கள் அல்லவா?
( 60 – 6)

அயி ஜீவ சிரம் கிஷோர ந:
தவ தாஸீ ரவசி’ கரோஷி கிம் |
ப்ரதி3சா’ம்பர மம்பு3 ஜேக்ஷணேதி
உதி3தஸ்த்வம் ஸ்மிதமேவ த3த்தவான் ||( 60 – 7)

“ஹே கிஷோர! நீ நீண்ட நாள் வாழவேண்டும்! உன் பணிப் பெண்களாகிய ( பிரேமைக்கு உரியவர்களாகிய) எங்களை ஏன் இப்படிப் பரவசப்படுத்துகின்றாய்? (உன் வசப்படுத்திக் கொள்ளவில்லை?) ஹே தாமரைக் கண்ணா! (கணவன் கொடுக்க வேண்டிய) வஸ்த்திரத்தைக் கொடு! ” என்ற கூறத் தங்கள் வஸ்திரத்தைக் கொடுக்காமல் மந்தஹாசத்தை மட்டும் கொடுத்தீர்கள்! ( 60 – 7)

அதி3ருஹ்ய தடம் க்ருதாஞ்ஜலி :
பரிசு’த்3த4 ஸ்வக3தி நிரீக்ஷ்ய தா:|
வசனான்யகி2லான் யனுக்3ரஹ்ம்
புனரேவம் கி3ர மப்யதா முதா3|| ( 60 – 8)


கரையில் ஏறிக் கும்பிட்டு வணங்கியவர்களும், அதனால் பரிசுத்தம் அடைந்தவர்களும், தன்னையே சரணம் அடைந்தவர்களும் ஆகிய அந்தப் பெண்களைக் கண்டு மிகவும் சந்தோஷம் அடைந்து எல்லா வஸ்திரங்களையும் அளித்துப் பிறகு அனுகிரஹம் செய்யும் ஒரு வசனத்தையும் தந்தருளினீர்கள் அல்லவா? ( 60 – 8)

விதி3தம் நனு வோ மனீஷிதம்
வதி3தாரா ஸ்த்விஹ யோக்3ய முத்தரம் |
யமுனா புலினே ஸ சந்த்3ரிகா:
க்ஷணதா3 இத்ய ப3லாஸ்த்வ மூசிவான் ||( 60 – 9 )

“ஓ பெண்களே! உங்கள் விருப்பம் என்னால் அறியபட்டது. ஆனால் இதற்குத் தகுந்த பதிலை யமுனை நதியின் மணல் திட்டில் நிலவுடன் கூடிய இரவுகள் சொல்லும்!” என்று தாங்கள் அந்தப்பெண்களிடம் சொன்னீர்கள் அல்லவா? (60 – 9)

உபகர்ண்ய ப4வன் முக2ச்யுதம்
மது4 நிஷ்யந்தி3 வசோ ம்ருகீ3 த்3ருஷ: |
ப்ரணயா த3யி வீக்ஷ்ய வீக்ஷ்ய தே
வதனாப்3ஜம் ச’னகைர் க்ருஹம் க3தா: ||( 60 – 10)

பகவானே! அந்த மான் கண்ணியர் தங்கள் திருமுகத்தில் இருந்து வெளிவந்த, தேனைப் பெருக்குகின்ற திருவாக்கினைக் கேட்டு, பிரேமையுடன் திரும்பிப் பார்த்தபடியே மெல்லத் தங்கள் வீட்டுக்குத் திரும்பினார்கள் அல்லவா? ( 60 – 10)

இதி நன்வனுக்3ருஹ்ய வல்லவீ :
விபினாந்தேஷு புரேவா ஸஞ்சரன் |
கருணா சி’சி’ரோ ஹரே ஹர
த்வரயா மே ஸகலா மாயாவலிம் ||( 60 – 11)


ஹே ஸ்ரீதரா! இவ்விதம் கோபிகைகளை அனுக்ரஹித்து முன்போலவே காடுகளில் சுற்றிக் கொண்டிருந்த தாங்கள் எனது எல்லா வியாதிக் கூட்டத்தையும் விரைவில் போக்க வேண்டும். ( 60 – 11)
 
[h=1]36. கர்வ பங்கம்.[/h]
கர்வம் மேலோங்கினால், அதை
சர்வ வியாபி கண்ணன் அழிப்பான்.
பதிவிரதை நானே என்ற கர்வத்தைச்
சதி திரௌபதி விடுத்த கதையே இது .

அஞ்ஞாத வாசத்துக்கு முன்னர்,
மெய்ஞானி ஆன மாயக் கண்ணன்
சொன்னான் அப்பாண்டவர்களிடம்,
“இன்னொரு இடம் போவோம் நாம்.”

காமிய ஏரிக்கு அருகே ஒரு
ரம்மியமான இடத்தில் வந்து
தங்கினார்கள் மூன்று நாட்கள்,
பொங்கும் புதிய உணர்வுடனே.

அழகியதொரு ஆஸ்ரமம்; அதன்
அழகிய பூந்தோட்டத்தில் ஒரு
பழுத்த மாங்கனியைக் கண்டனர்,
பழக்காலமாக இல்லாதபோதிலும்.

விரும்பிய திரௌபதிக்கு, கனியை
விரும்பித் தந்தான் அர்ஜுனன்.
“என்ன காரியம் செய்தீர் நீர்?”
என்றே பதைத்தான் கண்ணன்.

“கடும் தவ முனிவர் ஒருவர்
பெறும் உணவு தினம் இக்கனியே.
சபிப்பாரோ அன்றி எரிப்பாரோ?
அபிப்பிராயம் அவருக்கு எதுவோ?

மனத்தில் உள்ள எண்ணங்களை,
மறைக்காமல் வெளியே கூறினால்,
மாங்கனி எழும்பி முன் போலவே
மரத்திலேயே இணைந்து விடும்.”

“அரசனாகி நான் மீண்டும் நிறைய
அறச் செயல்கள் புரிய வேண்டும்”
தருமன் இதைச் சொன்னதும் கனி
தலை அளவுக்கு உயர்ந்து நின்றது.

“மார்பைப் பிளந்து சத்தியமாக
மாள வைத்து, துரியோதனனின்
தொடையைக் கதையால் பிளந்து
முடிப்பேன் சபதத்தை, பீமன் நான்!”

“கர்ணனைக் கொல்வதே என்
வர்ணிக்க முடியாத ஆக்ரஹம்.”
அர்ஜுனன் சொன்னபோது, கனி
மரக் கிளையின் வெகு அருகில்.

“பட்டத்து இளவரசன் ஆவேன் நான்,
இஷ்டத்துடன் அன்னையைக் காப்பேன்.”
“அண்ணனுக்கு சாமரம் வீசிக்கொண்டு,
அண்மையிலேயே இருப்பேன் நான்.”

அழகிய இரட்டையரின் சொற்கள்;
கனியோ கிளையின் காம்பருகே!
“அழ வைத்தவர்களின் அழிவினைக்
கண்டு நான் சிரிப்பேன்!” திரௌபதி.

உயர்ந்திருந்த கனி, மீண்டும்
தயங்காமல் மண்ணில் விழுந்தது.
வேறு வழி இல்லாமல், அப்போது
கூறினாள் அவள் உண்மையினை.

“யாகத்தில் கர்ணனைக் கண்டு,
வீரனிவன் குந்தி மகனானால்,
யாருக்கும் வாய்க்காத வலிய
ஆறு வீரருக்கு மனைவி நான்!”

விக்கித்துப் போயினர் அவள்
வீரக் கணவன்மார்கள் ஐவரும்.
“இவளா சதி? இவளா பதிவிரதை?”
அவள் கர்வம் மறைந்து போனது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
த3ச’கம் 61 ( 1 to 5)

விப்ர பத்னீ அனுக்ரஹம்

ததச்’ச ப்3ருந்தா3வனதோதிS தூ3ரதோ
வனம் கதஸ்த்வம் கலு கோ3ப கோ3குலை: |
ஹ்ருத3ந்தரே ப4க்த்தர த்3விஜாங்க3னா
கத3ம்ப3 கானுக்3ராஹணா க்3ரஹம் வஹன் ||( 61 – 1)

அதன் பிறகு தாங்கள் மனதில் தங்களுடைய பக்த சிரேஷ்டைகள் ஆகிய பிராமணப் பெண்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு கோபாலர்களுடனும், பசுக் கூட்டத்துடனும் பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள காட்டுக்குச் சென்றீர்கள் அல்லவா?
(61 – 1)


ததோ நிரீக்ஷ்ய ச’ரணே வனாந்தரே
கிசோ’ர லோகம் க்ஷுதி4தம் த்ருஷாகுலம் |
அதூ3ரதோ யக்ஞா பரான் த்3விஜான் ப்ரதி
வ்யஸர்ஜயோ தீ3தி3வியாசனாய தான் ||( 61 – 2)


பிறகு புகலிடம் ஒன்றும் இல்லாத காட்டின் நடுவில் கோபகுமாரர்கள் பசியாலும், தாகத்தாலும் வருந்துவதைக் கண்டு அருகில் யாகம் செய்வதில் ஈடுபட்டிருக்கும் பிராமணர்களிடத்தில் அன்னத்தை யாசிப்பதற்கு அவர்களை அனுப்பினீர்கள் அல்லவா?
( 61 – 2)


க3தேஷ்வதோ2 தேஷ்வபி4தா4ய தேSபி4தா4ம்
குமாரகேஷ்வோத3ன யசிஷு ப்ரபோ4 |
ச்’ருதி ஸ்தி2ரா அப்யபி4 நின்யுரச்’ருதிம்
ந கிஞ்சி தூசுச்’ச மஹீ ஸுரோத்தமா ||(61 – 3)


ஹே பிரபோ! அதன் பிறகு அவ்விதம் சென்ற அந்தச் சிறுவர்கள் தங்கள் திருநாமத்தைச் சொல்லி யாசிக்கும்போது, அந்த பிராமண உத்தமர்கள் வேதங்களை நன்கு அறிந்தவர்கள் ஆயினும் (காது நன்றாகக் கேட்பவர்கள் ஆன போதிலும்) வேதங்களை அறியாதவர்கள் போல (காது கேட்காதவர்கள் போல) அபிநயித்து ஒன்றும் பதில் கூறவில்லை. ( 61 – 3)


அனாத3ராத் கி2ன்னதி4யோ ஹி பா3லகா:
ஸமாயுயுர யுக்தமிதம் ஹி யஜ்வஸு |
சிராத3 ப4க்தா: கலு தே மஹீஸுரா:
கத2ம் ஹி ப4க்தம் த்வயி தை: ஸமர்ப்யதே ||( 61 – 4)


பிராமணர்கள் அநாதரவு செய்ததால் அந்தச் சிறுவர்கள் மனம் வருந்தித் திரும்பி வந்தார்கள் அல்லவா? விதிப்படி யாகம் அனுஷ்டிக்கும் தீட்சிதர்கள் அநாதரவு செய்வது என்பது யுக்தம் தான். என்றால் அந்த பூலோகத் தேவர்கள் வெகு காலமாகவே தங்களிடம் பக்தி இல்லாதவர்கள் (அன்னம் இல்லாதவர்கள்) அல்லவா? அப்படிப்பட்ட அவர்களால் தங்களிடத்தில் அன்னத்தை (பக்தியை) எப்படிக் கொடுப்பார்கள்?( 61 – 4)


நிவேத3யத்4வம் க்3ருஹிணீ ஜனாய மாம்
தி3சே’யுரன்னம் கருணாகுலா இமா: |
இதி ஸ்மிதார்த்3ரம் ப4வதேரிதா க3தா:
தே தா3ரகா தா3ரஜனம் யயாசிரே ||( 61 – 5 )


“தீக்ஷித பத்தினிகள் இடத்தில் என்னைப் பற்றித் தெரிவியுங்கள். கருணை கூர்ந்த அவர்கள் அன்னத்தைக் கொடுப்பார்கள்!” என்று புன்னகையுடன் தாங்கள் கூற, அந்தச் சிறுவர்கள் தீக்ஷித பத்தினிகள் இடத்தில் சென்று அன்னம் யாசித்தனர். ( 61 – 5)
 
[h=1]40. நாரத கானம்.[/h]

நாரத கானம் மூன்று உலகங்களிலும்,
மாறாப் புகழ் பெற்றது என அறிவோம்.

நாரதரும் தோல்வியினைத் தழுவி,
நாணமடைந்ததையும் அறிவோமா?

பால அனுமனுக்குப் பல வரங்கள்
பல தேவர்கள் உவந்து அளித்தனர்.

அனைத்து வேத வேதாந்தங்களிலும்,
அனைத்து வித சாஸ்திரங்களிலும்,

அனைத்து வகைக் கலைகளிலும்,
அளவிட முடியாத நிபுணத்துவம்!

நாரதருக்கும் உண்டு குறும்பு!
பிரம்மச்சாரி அல்லவா அவர்?

பெருமைகளை உணராமல், அனுமனை
வெறும் ஒரு குரங்காகவே எண்ணினார்.

ஆசிகள் வேண்டி அனுமன் பணிந்திட,
கீதங்கள் பாடுமாறு அவனைப் பணித்தார்.

அனுமனின் கானத்தில் மயங்கியவர்,
ஆனந்தத்தில் கண்களை மூடி அமரவே,

கல்லும் கனிந்து உருகிவிட்டதால்,
கல்லே பெரும் வெள்ளமாகி விட்டது.

உருகிய கல்லில் நாரதர் வீணையும்,
அருகினிலே அங்கே மிதக்கலானது.

“போதும் போதும்” என்றார் நாரதர்,
கீதத்தை நிறுத்தினான் அனுமன்.

உருகிய கல் மீண்டும் உறைந்துபோய்,
அரிய வீணையைப் பற்றிக்கொண்டது.

“எடுத்தால் வரவில்லையே வீணை!
அடுத்தது நான் என்ன செய்யட்டும்?”

மீண்டும் பாடும்படி அனுமனை
வேண்டிக் கேட்டார் நாரத முனிவர்.

தேனினும் இனிய கானத்தினால்
தேன் போல் இளகியது கற்பாறை.

விரைந்து வீணையை மீட்ட நாரதர்,
மறைந்தே போனார் ஒருநொடியில்!

பெருமைகளை முழுவதும் அறியாமல்,
சிறுமைப் படுத்தலாகாது ஒருவரையும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
த3ச’கம் 61 ( 6 to 10)

விப்ர பத்னீ அனுக்ரஹம்
க்3ருஹீதநாம்னி த்வயி ஸம்ப்4ரமாகுலா:
சதுர் வித4ம் போ4ஜ்ய ரஸம் ப்ரக்3ருஹ்ய தா:|
சிரம் த்4ருத த்வத்ப்ரவிலோகநாக்3ரஹா :
ஸ்வகைர் நிருத்3தா4 அபி தூர்ண மாயயு: ||( 61 – 6)

தங்கள் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் வெகு கலாமாகத் தங்களை தரிசிக்கும் ஆவல் கொண்டிருந்த அந்த தீக்ஷித பத்தினிகள் பரபரப்பு அடைந்தவர்களாகி காத்தியம், சோஷ்யம், லேஹியம், பேயம் என்ற நான்கு வகை பக்ஷணங்களையும் எடுத்து கொண்டு, தங்கள் கணவர்களால் தடுக்கப்பட்டவர்கள் ஆனபோதும் விரைந்து வந்தனர்.
( 61 – 6)

விலோல பிச்ச2ம் சிகுரே கபோலயோ:
ஸமுல்லஸத் குண்ட3ல மார்த்ர மீக்ஷிதே |
நிதா4ய பா4ஹும்ஸுஹ்ருதம் ஸஸீமனி
ஸ்தி2தம் பவந்தம் ஸமலோகயந்த தா:||( 61 – 7)

கொண்டையில் சலிக்கின்ற மயில் தோகையை உடையவரும், இரு கன்னங்களில் நன்கு பிரகாசிக்கும் குண்டலங்களை உடையவரும், கடைக் கண்களில் கனிவுகொண்டவரும், தோழனின் தோளில் கை வைத்து நிற்பவரும் ஆன தங்களைக் கண்டனர். ( 61 – 7)

ததா3 ச காசித் த்வது3பாகமோத்3யதா
க்3ருஹீத ஹஸ்தா த3யிதேன யஜ்வனா |
ததை3வ ஸஞ்சிந்த்ய ப4வந்த மஞ்ஜஸா
விவேச’ கைவல்ய மஹோ க்ருதின்யசௌ ||( 61 – 8)

மற்றவர்கள் எல்லோரும் சென்றபோது தங்களிடம் வரயத்தனித்த ஒருவள் அவன் கணவனால் கைகளால் பிடித்துத் தடுக்கப்பட்டு, தங்களை தியானித்துக் கொண்டு தத்க்ஷணமே சிரமம் இல்லாமல் மோக்ஷத்தை அடைந்தாள். அவள் அன்றோ பாக்கியசாலி! ( 61 – 8)

ஆதா3ய போ4ஜ்யாநனுக்3ரஹ்ய தா: புன:
த்வத3ங்க3 ஸங்க3 ஸ்ப்ருஹயோஜ்ஜதீ க்3ருஹம் |
விலோக்ய யக்ஞாய விஸர்ஜயன்னிமா :
சகர்த2 ப4ர்த்ரூனபி தாஸ்வக3ர்ஹணான் ||( 61 – 9)

பக்ஷணங்களை அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை அனுக்ரஹித்துப் பிறகு, தங்களுடைய அங்க சங்கம் விரும்பி அவர்கள் வீடுகளை புறக்கணிப்பதைக் கண்டு, யாகத்தை நிறைவேற்றுவதற்காக அவர்களை அனுப்பினீர்கள். அவர்கள் கணவர்களையும் தீய எண்ணம் அற்றவர்களாகச் செய்தீர்கள் அல்லவா? ( 61 – 9)


நிரூப்ய தோ3ஷம் நிஜமங்க3னா ஜனே
விலோக்ய ப4க்திம் ச புனர் விசாரிபி4:|
ப்ரபுத்3த4 தத்வைஸ் த்வமபி4ஷ்டுதோ த்3விஜை :
மருத்புராதீ4ச’ நிருந்தி4 மே கதா3ன் ||( 61 – 10)

ஹே குருவாயூரப்பா! தம் தோஷங்களை உணர்ந்த; தம் பத்தினிகளின் பக்தியைக் கண்டு விசாரம் செய்த; அதன் மூலம் உண்மை அறிந்த; அந்தணர்களால் நன்கு துதிக்கப்பட்ட; தாங்கள் என் வியாதிகளைப் போக்க வேண்டும். ( 61 – 10)
 
[h=1]கண்ணன் என் கடவுள்.[/h]
எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம்கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
9.jpg



THE GLORIES OF LORD KRISHNA.

He is deliciously sweet to think about,
The thoughts about Him are also sweet;

With His presence the Universe is built,
He who resides in everyone’s heart.

He ate the soil quite playfully,
He measured world equally playfully;

He saved pAnchAli from public shame,
His countless miracles sing His fame.

He lifted the mountain Govardhana,
And protected Gokulam from Indra;

He mesmerized the calves and cow,
Every pretty damsel was His Lady Love.

He is the God of Music divine,
A cowherd, walking by the ravine;

Giridhara is the great dharma dhAtA,
Through His gospel of The Bagavat Gita.

The learned men always praise Him,
The illiterate men always worship Him,

The Deva and others beings adore Him,
The God of all the Gods-it is always Him.

He becomes the kindest mother,
The guiding and protecting father;

The most dependable elder brother,
To Him who surrender do never bother.

He enjoys eating the stolen butter,
His mind is as soft as the butter;

Can there can be another like Him?
If there is one, I’m yet to find Him!

Seeking His blessings,
For ever and ever,
For everyone here,
Visalakshi Ramani.
 
த3ச’கம் 62 ( 1 to 5)

கோ3வர்த்3த4ன ப3லி

கதா3சித்3 கோ3பாலான் விஹித மக2ஸம்பா4ர விப4வான்
நிரீக்ஷ்ய த்வம் சௌரே மக3வமத3ம் உத்3த்4வம்ஸிது மனா:|
விஜானன்னப்யேதான் வினய ம்ருது3 நந்தாதி3 பசு’பான்
அப்ருச்ச: கோ வாSயம் ஜனக ப4வதா முத்3யம இதி || ( 62 – 1 )


ஹே கிருஷ்ணா! ஒருநாள் தங்கள் கோபாலர்கள் யாகத்திற்கு வேண்டிய பண்டங்களை சேகரிப்பதைக் கண்டு; இந்திரனின் மமதையை ஒழிக்க எண்ணி இருந்தபோதிலும் ,”அப்பா! இந்த முயற்சி எதற்காக?” என்று மிகுந்த வணக்கத்துடன் நந்தன் முதலிய கோபர்களைக் கேட்டீர்கள் அல்லவா?
( 62 – 1)


ப3பா4ஷே நந்த3ஸ்த்வாம் ஸுத நானு விதேயோ மக4வதோ
மகோ2 வர்ஷே வர்ஷே ஸுக2யதி ஸ வர்ஷேன ப்ருதி2வீம் |
ந்ருணாம் வர்ஷாயத்தம் நிகி2ல முப ஜீவ்யம் மஹிதலே
விசேஷாத3ஸ்மாகம் த்ருண ஸலில ஜீவா ஹி பச’வ:||( 62 – 2 )


“பிள்ளாய்! ஒவ்வொரு வருஷமும் நாம் இந்திர யாகம் செய்தே தீரவேண்டும். இந்திரன் மழை பொழியச் செய்து பூமிக்குச் சுகம் அளிக்கின்றான். பூமியில் உள்ளவர்களின் ஜீவன் மழையை அனுசரித்தே உள்ளது. விசேஷமாக நமக்கு மழையே வாழ்வாதாரம். ஏனென்றால் பசுக்களுக்கு புல்லும், நீரும் முக்கிய ஆகாரம்” என்று நந்தன் தங்களிடம் உரைத்தான் அல்லவா? (62 – 2)


இதி ச்’ருத்வா வாசம் பிதுரயி ப4வானாஹா ஸரஸம்
தி4கே3தன்னோ ஸத்யம் மக4வாஜனிதா வ்ருஷ்டிரிதி யத் |
அத்3ருஷ்டம் ஜீவானாம் ஸ்ருஜதி க2லு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹாராண்யே வ்ருக்ஷா: கிமிவ ப3லி மிந்த்3ராய த3த3தே||( 62 – 3 )


ஹே கிருஷ்ணா! தந்தையின் இந்த வார்த்தையைக் கேட்டுத் தாங்கள், “மழை இந்திரனால் உண்டு பண்ணப் படுவது என்பது உண்மையல்ல. பிராணிகளின் அதிருஷ்டமே மழையை உண்டு பண்ணுகிறது. பெருங்காடுகளில் மரங்கள் இந்திரனுக்கு பலியைக் கொடுக்கின்றன” என்று சரசமாக உரைத்தீர்கள் அல்லவா? ( 62 – 3)


இத3ம் தாவத் ஸத்யம் யதி3ஹ பச’வோ ந; குலத4னம்
ததா3ஜீவ்யாயாசௌ ப3லிராசல ப4ர்த்ரே ஸமுசித:|
ஸுரேப்4யோSப்யுத்க்ருஷ்டா நனு த4ரணி தே3வா: க்ஷிதி தலே
ததஸ்தேSப்யராத்4யா இதி ஜக3தீ3த2 த்வம் நிஜ ஜனான் || ( 62 – 4 )

“இவ்விடத்தில் பசுக்கள் நம் குலதனம் என்பது தான் உண்மை. இந்த யாகம் அவற்றின் உப ஜீவனத்திற்கு காரணமான மலையரசுக்குக் கொடுப்பது தான் உசிதம். பூவுலகில் அந்தணர்கள் தேவர்களைக் காட்டிலும் மேன்மை பெற்றவர்கள் அன்றோ? ஆகையால் அவர்களும் ஆராதிக்கத் தகுந்தவர்களே!” என்று தாங்கள் தங்கள் பந்துக்களிடம் கூறினீர்கள் அல்லவா/ ( 64 – 4)


ப4வத்3வாசம் ச்’ருத்வா ப3ஹுமதியுதாஸ்தேSபி பசு’பா:
த்3விஜேந்த்3ரானர்ச்சந்தோ ப3லிமத3 து3ருச்சை: க்ஷிதிப்4ருதே |
வ்யது4 : ப்ராத3க்ஷிண்யம் ஸுப்4ருச’ மன மன்னாத3ரயுதா:
த்வமாதச்’சை’லாத்மா ப3லி மகி2ல மாபீ4ரபுரத: ||( 62 – 5 )

அந்த கோபாலர்களும் தங்கள் திருவாக்கை கேட்டு வெகுமானத்துடன் பிராமணர்களை பூஜித்து மலை அரசன் கோவர்த்தனனுக்கு உயர்ந்த பலியைக் கொடுத்தனர். மிகுந்த பணிவுடன் வலம் வந்தனர். வணங்கினர். மலை ரூபியாகத் தாங்களே கோபாலர்களுக்கு எதிரில் பலி முழுவதையும் உண்டீர்கள் அல்லவா? ( 62 – 5)
 
த3ச’கம் 62 ( 6 to 10)

கோ3வர்த்3த4ன ப3லி

அவோசச்’சைவம் தான் கிமிஹ விதத2ம் மே நிக3தி3தம்
கி3ரீந்த்3ரோ நன்வேஷ ஸ்வப3லி முபபு4ங்க்தே ஸ்வவபுஷா |
அயம் கோ3த்ரோ கோ3த்ரத்3விஷி ச குபிதே ரக்ஷிதுமலம்
ஸமஸ்தாநித்யுக்தா ஜக்ருஷுரகி2லா கோகுலஜுஷ : ||( 62 – 6)


“இப்போது என் வாக்கு வீணாகவில்லை அல்லவா? இந்த மலை தன் சரீரத்துடன் தனக்கிட்ட பலியை உண்டது” என்று அவர்களைப் பார்த்துக் கூறினீர்கள். “மலைகளின் பகைவன் இந்திரன் கோபம் அடைந்தாலும் பூமியைக் காக்கும் இந்த மலை நம்மைக் காக்கும் சக்தியுடையதே!” என்று கூறப்பட்டதும் கோகுல வாசிகள் சந்தோஷித்தார்கள் அல்லவா. ( 62 – 6)


பரி ப்ரீதா யாதா: க2லு ப4வது3பேதா வ்ரஜ ஜுஷோ
வ்ரஜம் யாவத்தாவன்நிஜ மக2விப4ங்க3ம் நிச’மயன் |
ப4வந்தம் ஜனன்னப்யதி4க ரஜஸாSSக்ராந்த ஹ்ருத3யோ
ந ஸேஹே தே3வேந்த்3ரஸ் த்வது பரசிதாத்மோன்னதிரபி ||( 62 – 7)


கோகுலவாசிகள் மிகவும் சந்தோஷம் அடைந்தவர்களாக தங்களுடன் எப்போது கோகுலத்துக்குச் சென்றனரோ அப்போதே இந்திரன் தன் யாகம் தடைப்பட்டதை அறிந்தான். தங்களைப் பற்றி நன்கு அறிந்திருந்தும், தாங்கள் அளித்த இந்திரப் பதவியில் அமர்ந்து இருந்தும் கூட அதிக ரஜோ குணம் கொண்டதால் இந்திரனால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ( 62 – 7)


மனுஷ்யத்வம் யாதோ மகு4பி4த3பி தே3வேஷ்வ வினயம்
வித4த்தே சேன்னஷ்டஸ் த்ரித3ச’ஸத3ஸாம் கோsபி மஹிமா |
ததச்’ச த்4வம்ஸிஷ்யே பசு’பஹதகஸ்ய ஸ்ரியமிதி
ப்ரவ்ருத்தஸ்த்வாம் ஜேதும் ஸகில மக4வா து3ர்மத3 நிதி4: ||(62 – 8)

மதுவைக் கொன்ற விஷ்ணுகூட மனுஷ்யத் தன்மை அடைந்தவராக தேவர்களிடம் அபராதம் செய்வார் ஆகில் சமஸ்த தேவர்களின் மகிமை நாசம் அடைந்துவிட்டது. இடைப் பிள்ளை கிருஷ்ணனின் ஐஸ்வரியத்தை நான் நாசம் செய்கின்றேன்!” என்று மமதைகொண்ட இந்திரன் தங்களை வெற்றி கொள்ள எண்ணினான் அல்லவா? ( 62 – 8)


த்வதாவாஸம் ஹந்தும் ப்ரளயஜல தா3னம்ப4ர பு4வி
பர்ஹிண்வன் விப்4ராண: கலிச’மய மப்4ரோப4க3மான:|
புனச்தேன்யைரந்தர் த3ஹன மருதா3த்3யௌர் விஹஸிதோ
ப4வன் மாயானைவ த்ரிபு4வனபதே மோஹயதி கம் || ( 62 – 9)

அந்த இந்திரன் தங்கள் இருப்பிடத்தை அழிப்பதற்கு ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு வஜ்ஜிராயுததைக் கையில் எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் பிரளய கால மேகங்களை ஏவி விட்டு, அக்னி, வாயு முதலியவர்கள் மனதுக்குள் பரிஹசிக்கும்படி புறப்பட்டான் அல்லவா? மூவுலகங்களுக்கும் அதிபதியான கிருஷ்ணா! தங்கள் மாயை யாரை மயக்காது? ( 62 – 9)


ஸுரேந்த்3ர: க்ருத்3த4ஸ்சேத் த்3விஜ கருணா சைலக்ருபயா
Sப்யநாதங்கோSஸ்மாகம் நியத இதி விச்’வாஸ்ய பசு’பான்|
அஹோ கின்னாயாதோ கி3ரிபி4தி3தி ஸஞ்சிந்த்ய நிவஸன்
மருத்கே3ஹாதீ4ச’ ப்ரணுத முரவைரின் மம க3தான் || (62 – 10)

“தேவந்திரன் கோபம் அடைந்தாலும் பிராமணர்கள் கருணையினாலும், மலையின் அருளாலும் நமக்கு க்ஷேமம் நிச்சயம்!” என்று கோபாலர்களை நம்பச் செய்தீர். “இந்திரன் ஏன் இன்னமும் வரவில்லை?’ என்று ஆலோசித்துக் காத்திருந்த முரவைரியான குருவயூரப்பா! என் வியாதிகளைத் தாங்கள் அகற்ற வேண்டும்.
( 62 – 10)
 
த3ச’கம் 63 ( 1 to 5 )

கோ3வர்த்3த4ன உத்3தா4ரணம்

த3த்3ருஷிரே3கில தத்க்ஷண மக்ஷத:
தனித ஜ்ரும்பி4த கம்பித தி3க்தடா:|
ஸுஷமயா பவத3ங்க3துலாம் க3தா
வ்ரஜபதோ3பரி வரித3ராஸ்த்வயா || ( 63 – 1)

அப்போதே கோகுலத்தின் மேல் இடைவிடாத இடிமுழக்கத்தால் திக்குகளை நடுங்கச் செய்த, நிறத்தில் தங்கள் திருமேனிக்கு நிகரான மேகங்கள் காணப்பட்டன அல்லவா?
( 63 – 1)

விபுல கரகமிச்’ரைஸ் தோய தா4ரா நிபாதை:
தி3சி’ தி3சி’ பசு’பானாம் மண்ட3லே தண்3ட்3யமானே |
குபித ஹரி க்ருதான்ன: பாஹி பாஹீதி தேஷாம்
வசன மஜித ச்’ருண்வன் மா பி3பீ4தேத்யபா4ணீ:|| ( 63 – 2)


ஒருவராலும் ஜெயிக்கமுடியாத கிருஷ்ணா! பெருத்த ஆலங்கட்டிகளுடன் கூடிய மழைத் தாரை வீழ்ந்து எல்லா இடங்களிலும் இடையர் கூட்டத்தை தண்டிக்க, “கோபம் கொண்ட இந்திரனிடமிருந்து எங்களைக் காப்பாற்று! காப்பாற்று!” என்று இறைஞ்சும் இடையர்களின் வசனத்தைக் கேட்ட தாங்கள், “பயப்படாதீர்கள்!” என்று உரைத்தீர்கள் அல்லவா? ( 63 – 2)


குல இஹ கலு கோ3த்ரோ தை3வதம் கோ3த்ரச’த்ரோ:
விஹதிமிஹ ஸ ருந்த்4யாத் கோ நு வ: ஸம்ச’யோஸ்மின்|
இதி ஸஹஸித வாதீ தே3வ கோ3வர்த4னாத்3ரிம்
த்வரித முத3முமூலோ மூலதோ பா3ல3தோர்ப்4யாம் || ( 63 – 3)


“இந்த கோகுலத்தில் பசுக்களைக் காப்பாற்றும் கோவர்த்தனமலை அல்லவா தெய்வம்? அம்மலை எல்லா மலைகளுக்குப் பகைவனாகிய இந்திரனின் இந்தக் கெடுதியைத் தடை செய்யும். இதில் உங்களுக்கு என்ன சந்தேஹம்?” இவ்விதம் சொல்லிக் கொண்டே பிரசாக ரூபியான தாங்கள் அம்மலையை சிரித்துக் கொண்டே இளம் கரங்களால் விரைவாக வேருடன் பிடுங்கி எடுத்தீர்கள் அல்லவா? ( 63 – 3)


தத3னு கி3ரிவரஸ்ய ப்ரோத்3த்4ருதஸ்யாஸ்ய தாவத்
ஸிகலித ம்ருது3தே3சே’ தூ3ரதோ வாரிதாபே |
பரிகர பரிமிச்’ரான் தே4னு கோ3பானத4ஸ்தாத்
உபநித3த4 த3த4த்தா2 ஹஸ்த பத்3மேன சை’லம் || ( 63 – 4)

அதன் பிறகு உயரத் தூக்கப்பட்ட அம்மலையின் அடியில், வெகு தூரத்துக்கு தடுக்கப்பட வெள்ளத்தை உடைய மிருதுவான இடத்தில், வீட்டுச் சாமான்களுடன் , பசுக்களையும், கோபர்களையும் இருக்கச் செய்து , தாமரை போன்ற கைகளால் மலையைத் தாங்கிக் கொண்டு இருந்தீர்கள் அல்லவா? ( 63 – 4)


ப4வதி வித்4ருத சை’லே பா3லிகாபி4ர் வயஸ்யை:
அபி விஹித விலாஸம் கேலி லாபாதி3 லோலே|
ஸவித4 மிலித தே4னூரேக ஹஸ்தேன கண்டூ3
யதி ஸதி பசு’பாலஸ் தோஷ மைஷந்த ஸர்வே || ( 63 – 5)

தாங்கள் மலையைத் தூக்கிக் கொண்டும், சிறு பெண்களுடனும் , தோழர்களுடனும் பேசுவதில் ஈடுபட்டுக் கொண்டும், பக்கத்தில் வந்த பசுக்களை ஒரு கையால் தடவிக் கொண்டும் இருந்தபொழுது எல்லா கோபர்களும் சந்தோஷம் அடைந்தனர் அல்லவா?
( 63 – 5)
 
த3ச’கம் 63 ( 6 to 10)

கோ3வர்த்3த4ன உத்3தா4ரணம்

அதி மஹான் கி3ரிரேஷு து வாமகே
கர ஸரோருஹி தம் த4ரதே சிரம் |
கிமித3 மத்3பு4த மத்3ரிப3லம் ந்விதி
த்வதவலோகிபி4 ராகதி கோ3பகை:||( 63 – 6)

“இந்த மலையோ மிகவும் பெரியது. இந்தக் கிருஷ்ணனோ தாமரைப் பூ போன்ற தன் இடக் கையால் அதை நெடுநேரம் சுமக்கின்றான். இது என்ன மாயம்? மலையின் சக்தியாக இருக்குமோ?” என்று தங்களின் மகிமையை அறியாத கோபர்கள் கூறினார்கள் அல்லவா?
( 63 – 6)

அஹஹ தா4ர்ஷ்ட்ய மமுஷ்ய வடோர்கி3ரிம்
வ்யதி2த பா3ஹு ரஸாவவரோபயேத்|
இதி ஹரிஸ்த்வயி பத்3த4விக3ர்ஹணோ
திவஸ ஸப்தக முக்3ரம வர்ஷயத் || ( 63 – 7)

“இந்தச் சிறுவனுக்கு என்ன துணிச்சல்! இவன் கை வேதனை அடைந்தால் மலையைக் கீழே இறக்கி வைப்பான்!” என்று இந்திரன் ஏழு நாட்கள் முழுவதும் கடுமையான மழையைப் பெய்யச் செய்தான் அல்லவா? ( 63 – 7)


அசலதி த்வயி தே3வ பதா3த் பத3ம்
கலித3 ஸர்வ ஜலே ச க3னோத்கரே |
அபஹ்ருதே மருதா மருதாம் பதி:
தவ த3பி4 ச’ங்கித தீ4ஸ்ஸமுபாத்3ரவத்|| ( 63 – 8 )

ஹே தேவ! தாங்கள் நின்ற இடத்தில் இருந்து ஓர் அடி கூட அசையாதிருந்தபோது ஜலம் பொழிந்த மேகங்கள் காற்றால் விரட்டப்பட்டுவிட தேவர்களின் அரசன் இந்திரன் தங்கள் விஷயத்தில் பலவித சந்தேகங்கள் எழ அங்கிருந்து சென்று விட்டான் அல்லவா? ( 63 – 8)


ச’மமுபேயுஷி வர்ஷ ப4ரே ததா3
பசு’ப தே4னுகுலே ச விநிர்க3தே|
பு4வி விபோ4 ஸமுபாஹித பூ4தர;
ப்ரமுதி3தை :பசுபை: பரிரேபிஷே|| ( 63 – 9)

அப்பொழுது பெரு மழை ஓய்ந்துபோக; கோபர்களும் பசுக்களும் வெளிவர; சர்வ சக்தனான தாங்கள் மலையைக் கீழே வைத்தீர்கள். மிகவும் மகிழ்ந்த கோபர்கள் தங்களைக் கட்டி அணைத்தார்கள் அல்லவா? ( 63 – 9)


த4ரணி மேவ புரா த்4ருதவனாஸி
க்ஷிதித4ரோத்3த4ரணோ தவ க: ச்’ரம:|
இதி நுதிஸ் த்ரித3சை’: கமலாபதே
கு3ருபுராலய பாலய மாம் க3தா3த் || ( 63 – 10)

லக்ஷ்மி காந்தனான குருவாயூரப்பா! முன்பு தாங்கள் பூமியையே தூக்கி இருக்கின்றீர்கள்! அப்படிப்பட்ட தங்களுக்கு ஒரு மலையைத் தூக்குவதில் என்ன கஷ்டம்?”: என்று தேவர்கள் தங்களைத் துதித்தனர். அப்படிப் பட்ட தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும். ( 63 – 10)
 
Last edited:
த3ச’கம் 64 ( 1 to 5 )

கோவிந்த3 அபி4ஷேகம்

ஆலோக்ய சை’லோத்3த4ரணாதி3 ரூபம்
ப்ரபா4வ முச்சைஸ் தவ கோ3ப லோகா:|
விச்’வேச்’வரம் த்வா மபி4மத்ய விச்வே
நந்த3ம் ப4வஜ்ஜாதக மன்வ ப்ருச்சன் || ( 64 – 1)


எல்லா கோபர்களும், மலையைத் தூக்கியது முதலான தங்களுடைய மகா உன்னதமான மகிமையைக் கண்டு வியந்து, தாங்கள் சர்வேஸ்வரன் என்ற எண்ணம் கொண்டு, நந்தனிடம் தங்கள் ஜாதகத்தைப் பற்றி விசாரித்தார்கள். ( 64 – 1)

க3ர்கோ3தி3தோ நிர்க3தி3தோ நிஜாய
வர்கா3ய தாதேன தவ ப்ரபா4வ:||
பூர்வாதி4கஸ் த்வய்யனுராக3 ஏஷாம்
ஐதி4ஷ்ட தாவத்3 ப3ஹுமான பா4ர:|| ( 64 – 2)

முன்பு கர்க்கர் கூறிய தங்கள் மகிமையைத் தங்கள் தகப்பனார் தன் மித்ர பந்துக்களுக்கு எடுத்து உரைக்க, அன்று முதல் அவர்கள் தங்கள் மீது கொண்டிருந் வாச்தல்யமும், பிரேமையும் முன்பு இருந்ததை விட அதிகம் விருத்தி அடைந்தது.( 64 – 2)


ததோSவமானோதி3த தத்வ போ3த3:
ஸுராதி4 ராஜஸ் சஹ தி3வ்ய க3வ்யா:|
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்ட க3ர்வ:
ஸ்ப்ருஷ்ட்வா பதா3ப்ஜம் மணி மௌலினா தே || ( 64 – 3 )


அதன் பின்னர் அவமானத்தால் உண்மையை அறிந்து கொண்ட இந்திரன், தன் கர்வம் அழிந்தவனாகக் காமதேனுவுடன் வந்து, தன் ரத்னகிரீடம் தங்கள் பாதங்களில் படுமாறு நமஸ்கரித்தான் அல்லவா? ( 64 – 3)


ஸ்நேஹஸ் நுதைஸ்த்வாம் ஸுரபி: பயோபி:
கோவிந்த3 நாமாங்கித மப்4யஷிஞ்சத் |
ஐராவதோ பாஹ்ருத தி3வ்ய க3ங்கா3
பாதோ2பி4 ரிந்த்3ரோபி ச ஜாதஹர்ஷ: || ( 64 – 4 )


காமதேனு சிநேகத்தால் பெருக்கிய பாலைக் கொண்டு தங்களை கோவிந்தன் என்ற பெயரில் பிரசித்தி பெற்றவனாக அபிஷேகம் செய்தது. இந்திரனும் சந்தோஷம் அடைந்து ஐராவதத்தால் கொண்டு வரப்பட்ட ஆகாச கங்கா ஜலத்தால் தங்களை அபிஷேகம் செய்தான் அல்லவா?( 64 – 4)


ஜக3த் த்ரயேச’ த்வயி கோ3குலேசே ‘
ததா2Sபி4ஷிக்தே ஸதி கோ3ப வாட:|
நாகேபி வைகுண்ட2 பதே3Sப்ய லப்4யாம்
ச்’ரியம் ப்ரபேதே3 ப4வத: ப்ரபா4வாத் || ( 64 – 5)


மூவுலகிற்கும் நாயகன் ஆகிய தங்களை கோகுலத்துக்கு நாயகன் ஆக அபிஷேகம் செய்தபோது, தங்கள் மகிமையால் கோகுலம் சுவர்க்கத்திலும், வைகுண்டதிலும் அடையமுடியாத ஐஸ்வர்யத்தை அடைந்தது. ( 64 – 5)
 
த3ச’கம் 64 ( 6 to 10)

கோவிந்த3 அபி4ஷேகம்
கதா3சித் அந்தர் யமுனாம் ப்ரபா4தே
ஸ்னாயன் பிதா வாருண பூருஷேண |
நீதஸ்தமானேது மகா3: புரிம்த்வாம்
தாம் வாருணீம் காரண மர்த்ய ரூப: || ( 64 – 6 )

ஒருநாள் விடியலில் யமுனா நதியில் நீராடிக் கொண்டிருந்த தங்கள் தந்தை வருணனுடைய ஒரு தூதனால் கொண்டு போகப் பட்டான். அவரைத் திருப்பி அழைத்து வருவதற்குக் ஒரு காரணத்தால் அவதரித்து மனித உருவம் கொண்டத் தாங்கள் அந்த வருண லோகத்திற்குச் சென்றீர்கள் அல்லவா? ( 64 – 6)


ஸஸம்ப்4ரமம் தேன ஜலாதி3பேன
ப்ரபூஜிதஸ்த்வம் ப்ர்தி க்3ருஹ்ய தாதம்|
உபாக3தஸ் தத்க்ஷண மாத்ம கே3ஹம்
பிதாSவத3த் தச்சரிதம் நிஜேப்4ய: || ( 64 – 7)


ஜலத்துக்கு அதிபதி ஆகிய வருணன் பரபரப்புடன் தங்களைப் பூஜித்து தங்கள் பிதாவையும் தங்களுடன் அனுப்பி வைத்தான். தங்கள் இருப்பிடத்துக்கு வந்த பிறகு தங்கள் தந்தை அந்தச் சரிதத்தைத் தன் பந்துக்களுக்கு எடுத்து உரைத்தார். ( 64 – 7)


ஹரிம் வினிச்’சித்ய ப4வந்தமேதான்
ப4வத்பதா3லோகான் ப3த்3த4 த்ருஷ்ணான்|
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பத3ம்
தத்3தூ3ராப மன்யைஸ்தவ மதீ3த்3ருச’ஸ்தான் || ( 64 – 8 )

எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! தங்களை சாக்ஷாத் விஷ்ணு என்று நிச்சயித்துக் கொண்டு தங்களுடைய லோகத்தைக் காண ஆசை கொண்டவர்கள் ஆன இவர்களுக்குத் தாங்கள் மற்றவர்களால் அடைய முடியாத பரம பதத்தைக் காட்டினீர்கள் அல்லவா? ( 64 – 8)


ஸ்புரத் பரானந்த3 ரஸப்ரவாஹ
ப்ரபூர்ண கைவல்ய மஹாபயோதௌ4 |
சிரம் நிமக்3ன: கலு கோ3ப ஸங்கா3:
த்வயைவ பூ4மன் புனருத்3த்4ருதாஸ்தே|| ( 64 – 9 )


ஹே பரிபூர்ண ஸ்வரூபியே அந்த கோபர்கள் எல்லாம் பிரகாசிக்கும் பரமானந்த ரசத்தின் பெருக்கால் நன்கு நிறைந்து விளங்கும் மோக்ஷம் என்னும் பெருங்கடலில் வெகு நேரம் மூழ்கி விட்டார்கள் அல்லவா? அவர்கள் தங்களாலேயே மீண்டும் கரை ஏற்றப் பட்டனர்.
( 64 – 9)


கரப3த3ரவதே3வம் தே3வ குத்ராவதாரே
நிஜபத னவாப்யம் த3ர்சி’தம் ப4க்தி பா4ஜாம் |
ததி3ஹ பசு’ப ரூபி த்வம் ஹி சாக்ஷாத் பராத்மா
பவன புரவாஸின் பாஹி மா மாமயேப்4ய:|| ( 64 -10)


ஹே தேவா! ஒருவராலும் அடைய முடியாத தங்களுடைய ஸ்தானம் வேறு எந்த அவதாரத்தில் இவ்விதம் இலந்தைக் கனி போல பக்தர்களுக்குக் காண்பிக்கப்பட்டது? ஆகையால் இவ்விடத்தில் கோபால ரூபியாக இருக்கின்ற தாங்கள் சந்தேகமே இல்லாமல் சாக்ஷாத் பரமாத்மாவே தான்! என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும். ( 64 – 10)
 
த3ச’கம் 65 ( 1 to 5)

கோ3பீனாம் க3மனம்

கோ3பி ஜனாய கதி2தம் நியமாவஸானே
மாரோத்ஸவம் த்வத2 ஸாத4யிதும் ப்ரவ்ருத்த:|
ஸாந்த்ரேன சாந்த்ர மஹஸா சி’சி’ரி க்ருதாசே’
ப்ராபூரயோ முரளிகாம் யமுனாவனாந்தே ||( 65 – 1)


பிறகு தாங்கள் கௌரீ விரதத்தின் முடிவில் கோபிகைகளுக்குப் பிரதிக்ஞை செய்தபடி, காமோத்ஸவத்தை நிறைவேற்ற முயன்றவராக, நிலவினால் குளிர்ந்த யமுனா நதிக் கரையில் உள்ள ஒரு வனத்தில் இருந்து வேணுகானம் செய்தீர்கள் அல்லவா? ( 65 – 1)

ஸம்மூர்ச்சா2னபி4 ருதி3த ஸ்வர மண்ட3லாபி4:
ஸம்மூர்ச்ச2யந்த மகி2லம் பு4வனாந்தராலம் |
த்வத்3 வேணு நாத3 முபகர்ண்ய விபோ4 தருண்ய:
தத்தா த்3ருச’ம் கமபி சித்த விமோஹமாபு:|| ( 65 – 2)


ஹே பிரபு! வேணுவிலிருந்து வெளிக் கிளம்பிய ஸ்வரக் கூட்டங்களால், ஸப்த ஸ்வரங்களின் அரோஹண அவரோஹண கிரமங்களால், பூலோகம் முழுவதையும் நன்கு மயக்கும் தங்களின் வேணு கானத்தைக் கேட்டதால் , இளம் பெண்கள் உவமை அற்றதும் இன்னது என்று இனம் காட்ட முடியாததும் ஆகிய ஒரு மதி மயக்கத்தை அடைந்தனர்.
( 65 – 2)

தா கே3ஹ க்ருத்ய நிரதாஸ் தனய ப்ரஸக்தா:
காந்தோப ஸேவன பராச்’ச ஸரோருஹாக்ஷ்ய:|
ஸர்வம் விஸ்ருஜ்ய முரளீ மோஹிதாஸ்தே
காந்தார தேச’மபி காந்ததனோ ஸமேதா:|| ( 65 – 3)

ஹே சுந்தரமூர்த்தியே! வீட்டு வேலைகளில் ஈடுபட்டவர்களும்; குழந்தைகளை லாலித்துக் கொண்டு இருப்பவர்களும்; பதிதேவனின் சிஸ்ருஷையில் ஈடுபட்டிருந்தவர்களும் ஆகிய அந்தத் தாமரைக் கண்ணிகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டுக் காட்டுக்கு வந்தார்கள் அல்லவா? (65 – 3)
காச்’சின் நிஜாங்க3 பரிபூ4ஷண மாத3தா4னா
வேணு ப்ரணாத3 முப்கர்ண்ய க்ருதார்த்த பூ4ஷா:|
த்வாமாகா3தா நனு ததை2வ விப4ஷிதாப்4ய :
தா ஏவ ஸம்ருருசிரே தவ லோசனாய || ( 65 – 4)

சிலர் தாங்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கும் பொழுது வேணு நாதத்தால் இழுக்கப்பட்டு பாதி அணிந்த ஆபரணங்களுடன் அப்படியே தங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? நன்கு அலங்கரித்துக் கொண்டு வந்தவர்களை விடவும் அவர்களே தங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள். ( 65 – 4 )

ஹாரம் நிதம்ப3 பு4வி காசன தா4ரயந்தீ
காஞ்சீம் ச கண்ட2 பு4வி தே3வ ஸமாக3தா த்வாம் |
ஹாரித்வ மாத்ம ஜக4னஸ்ய முகுந்த3 துப்4யம்
வ்யக்தம் ப3பா4ஷ இவ முக்3த4 முகி2 விசேஷாத் || ( 65 – 5)

ஹே தேவா! ஒருவள் தன் இடையில் முத்து மாலையையும், கழுத்தில் ஒட்டியாணாத்தையும் அணிந்துகொண்டு தங்களிடம் வந்தாள் அல்லவா? அந்த அழகி தன் இடைப் பிரதேசத்தின் விசஷமான மனோ ஹரிதையைத் (முத்து மாலையுடன் விளங்கும் தன்மையைத் ) தங்களிடம் இப்படி வெளிப்படுத்தினாள் போலும். ( 65 – 5)
 
த3ச’கம் 65 ( 6 to 9)

கோ3பீனாம் க3மனம்
காச்’சித் குசே புன ரஸஜ்ஜித கஞ்சுலீகா
வ்யாமோஹத: பர வதூ4பி4 ரலக்ஷ்யமாணா |
த்வா மாயயௌ நிருபமா ப்ரணயாதிபா4ர
ராஜ்யாபி4ஷேக வித3யே கலசீ’தரேவ || ( 65 – 6 )

வேறொருத்தி மயக்கத்தால் ரவிக்கையே அணியாமல்; மற்ற ஸ்த்ரீக்களால் காணப்படாதவளாக; தன் இரு ஸ்தனங்களில் உவமையற்ற பிரேமை ஆகின்ற ராஜ்ஜியத்தில் பட்டாபிஷேகம் செய்வதற்கு இரண்டு குடங்களைத் தாங்கியவள் போலத் தங்களிடம் வந்தாள் அல்லவா?( 65 – 6 )

காச்’சித்3 க்3ருஹாத் கில நிரேது மபாரயந்த்ய :
த்வாமேவ தே3வ ஹ்ருத3யே ஸுத்3ருட4ம் விபா4வ்ய|
தே3ஹம் விதூ4ய பரசித்ஸுக2 ரூபமேகம்
தவா மாவிச’ன் பரமிமா நனு த4ன்யத4ன்யா:|| ( 65 – 7 )


ஹே தேவ! சில கோபிகள் வீட்டிலிருந்து வெளியில் வரமுடியாதவர்களாகத் உங்களையே த்யானித்துக் கொண்டு சரீரத்தை விடுத்து சச்சிதானந்த ரூபியான உம்முடன் ஒன்றிவிட்டார்கள் அல்லவா? அவர்கள் மகா பாக்கியசாலிகள்! ( 65 – 7)

ஜாராத்மனா ந பரமாத்மதயா ஸ்மரந்த்யோ
நார்யோ க3தா: பரம ஹம்ஸக3திம் க்ஷணேன |
தம் த்வாம் ப்ரகாச’ பரமாத்மதனும் கதஞ்சித்
சித்தே வ்ஹன்னம்ருத மச்’ரம மச்’னுவீய || ( 65 – 8)


கோபஸ்த்ரீகள் பரமாத்மா என்று உங்களை எண்ணாமல், ஒரு சோர நாயகன் என்று எண்ணத்தினாலே தங்களை தியானித்துக் கொண்டு ஒரு நொடிப் பொழுதில் ஞானிகள் அடையும் மோக்ஷத்தை அடைந்தார்கள். பிரத்யக்ஷமாக விளங்கும் பரமாத்ம ஸ்வரூபினான உங்களை எவ்விதமாகிலும் நான் மனதில் தியானம் செய்து மோக்ஷத்தைச் சிரமம் இன்றி அடைவேனாகுக. ( 65 – 8)

அப்யா4க3தாபி4 ரபி4தோ வ்ரஜ ஸுந்தரீபி:
முக்3த4 ஸ்மிதார்த்3ர வத3ன: கருணாவலோகீ |
நிஸ்ஸீமா காந்தி ஜலதி4ஸ்த்வ மவேக்ஷ்யமாணோ
விச்’வைக ஹ்ருத்3ய ஹர மே பரமேச’ ரோகான் || ( 65 – 9)


திரிலோக சுந்தரன் ஆன குருவாயோரப்பா! தங்கள் சமீபம் வந்த கோபிகளின் மனோஹரமான புன்னகையால் கனிந்த முகத்தை உடையவரும்; கருணையுடன் பார்ப்பவரும்; எல்லையற்ற காந்தியின் கடல் போன்றவரும்; நாற்புறங்களில் இருந்து தரிசிகப்படுபவருமாகிய தாங்கள் என்னை வியாதிகளில் இருந்து காக்க வேண்டும்.(65 – 9)
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top