• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 26 : க3ஜேந்த்3ர மோக்ஷ வர்ணனம்

த்வத் ஸேவாயா வைப4வாத்3 து3ர்நிரோத4ம்
யுத்4யந்தம் தம் வத்ஸராணாம் ஸஹஸ்ரம் |
ப்ராப்தே காலே த்வத் பதை3காக்3ர்ய ஸித்3த4யை
நக்ராக்ராந்தம் ஹஸ்தி வர்யம் வ்யதா4ஸ்த்வம் || (26 – 6)

தங்களை ஆராதனை செய்து வந்த பெருமையால் ஆயிரம் வருஷங்கள் கஜேந்திரன் முதலையோடு போராடினான். தங்கள் பாதங்களைச் சேரும் காலம் வந்ததும் அவனை முதலையால் பீடிக்கப்படச் செய்தீர்கள் அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------------

ஆர்த்திவ்யக்த ப்ராக்தன ஞானப4க்தி :
சு’ண்டோத் க்ஷிப்தை: புண்ட3ரீகை: ஸமர்ச்சன் |
பூர்வாப்4யஸ்தம் நிர்விசே’ஷாத்மநிஷ்டம்
ஸ்தோத்ர ச்’ரேஷ்டம் ஸோsன்வகா3தீ3த் பராத்மன் || (26 – 7 )

பரமாத்மனே! வருந்திய கஜேந்திரனுக்குப் பூர்வ ஜன்ம நினைவால், முன்பு இருந்த ஞானமும் பக்தியும் மீண்டும் விளங்கின. துதிக்கையால் உயரத் தூக்கிய தாமரைப்பூவைத் தங்களுக்கு அர்ப்பணித்தபடி, முன் ஜன்மத்தில் அப்யாசம் செய்திருந்த, நிர்குணப் பிரம்மத்தில் நிலை பெற்ற, ஒரு சிறந்த ஸ்தோத்திரத்தை இடைவிடாமல் ஓதியது.

-----------------------------------------------------------------------------------------------------------------

ச்’ருத்வா ஸ்தோத்ரம் நிர்கு3ணஸ்த2ம் ஸமஸ்தம்
ப்3ரஹ்மேசா’த்3யைர் நாஹமித்ய ப்ரயாதே |
ஸர்வாத்மா த்வம் பூ4ரி காருண்ய வேகா3த்
தார்க்ஷ்யாரூட4: ப்ரேக்ஷிதோபூ4: புரஸ்தாத் || (26 – 8)

நிர்குண பிரம்மத்தைப் பற்றிய அந்த ஸ்தோத்திரத்தைக் கேட்ட பிரம்மன், சிவன் ஆகியோர் “அது நானல்ல!” என்று அருகில் வராத போது சர்வ ஸ்வரூபியாகிய தாங்கள் ஆளவில்லாத கருணை கொண்டு கருடன் மேலேறிக் கஜேந்திரனின் முன்பு காட்சி அளித்தீர்கள் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------------------

ஹஸ்தீந்த்3ரம் தம் ஹஸ்த பத்3மேன த்4ருத்வா
சக்ரேண த்வம் நக்ரவர்யம் வ்யதா3ரீ:|
க3ந்த4ர்வேsஸ்மின் முக்த சா’பே ஸ ஹஸ்தி
த்வத் ஸாரூப்யம் ப்ராப்ய தே3தி3ப்யதே ஸ்ம || (26 – 9)

தாங்கள் அந்த கஜேந்திரனைத் தாமரைப் பூப் போன்ற கையால் உயரத் தூக்கிவிட்டு, சக்கராயுதத்தால் அந்த முதலையைப் பிளந்தீர்கள் அல்லவா? சாபத்திலிருந்து விடுபட்ட முதலை கந்தர்வனாக சுய வடிவம் பெற்றது. கஜேந்திரனும் தங்கள் சாரூப்பியத்தை அடைந்தான்.

-------------------------------------------------------------------------------------------------------------------

ஏதத் வ்ருத்தம் த்வாம் ச மாம் ச ப்ரகே3 யோ கா3யேத்
ஸோsயம் பூ4யஸே ச்’ரேயஸே ஸ்யாத் |
இத்யுக்த்வைனம் தேன ஸார்த்த4ம் க3தஸ்த்வம்
தி3ஷ்ணம் விஷ்ணோ பாஹி வாதாலயேச’ || (26 – 10)

“இந்தக் கதையையும், உன்னையும், என்னையும் யார் விடியற்காலையில் கானம் செய்கின்றாரோ அவர்கள் மிகுந்த நன்மைகளை அடைவார்கள் ” என்று கஜேந்திரனிடம் கூறினீர்கள். பிறகு அவனையும் அழைத்துக் கொண்டு வைகுந்தம் சென்றீர்கள். குருவாயூரப்பா என்னைக் காத்தருள வேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 27 : அம்ருத மத2ன வர்ணனம்

து3ர்வாஸா: ஸுரவனிதாப்த தி3வ்ய மால்யம்
ச’க்ராய ஸ்வயமுபதா3ய தாத்ரா பூ4ய: |
நாகே3ந்த்3ர ப்ரதி ம்ருதி3தே ச’சா’ப ச’க்ரம்
கா க்ஷாந்தி ஸ்வதி3தர தே3வதாம்ச’ ஜானாம் || (27 – 1 )

ஓர் அப்சரஸ் ஸ்த்ரீ தனக்குத் தந்த தெய்வீக மாலையைத் துர்வாசர் தானே நேரில் சென்று இந்திரனுக்குத் தந்தார். பிறகு அந்தத் தெய்வீக மாலையை, ஐராவதம் காலால் மிதித்தைக் கண்டு, கோபம் கொண்டு துர்வாசர் இந்திரனைச் சபித்தார். உம்மைத் தவிர வேறு தெய்வங்களின் அம்சங்களாகத் தோன்றியவர்களிடம் பொறுமை என்பது ஏது?

----------------------------------------------------------------------------------------------------------------

சா’பேன ப்ரதி2தஜரேsத2 நிர்ஜரேந்த்3ரே
தே3வேஷ் வப்யஸுர ஜிதேஷு நிஷ்ப்4ரபேஷு |
ச’ர்வாத்3யா: கமலஜமேத்ய ஸர்வ தே3வா
நிர்வாண ப்ரப4வ ஸமம் ப4வந்தமாபு : || (27 – 2)

மோக்ஷத்தின் உற்பத்தி ஸ்தானமாகிய பிரபுவே! சாபத்தால் தேவேந்திரன் முதுமை அடைந்தான். தேவர்கள் பலவீனர்களாகி அசுரர்களிடம் தோற்றுப் போனார்கள். ஒளி குன்றி அனைவரும் வருந்தினார்கள். அப்போது பரமசிவன் முதலான எல்லா தேவர்களும் பிரம்மனிடம் சென்று அவருடன் சேர்ந்து தங்களிடம் வந்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------

ப்3ரஹ்மாத்3யை ஸ்துதமஹிமா சிரம் ததா3னீம்
ப்ராது3ஷ்யன் வரத3 புர: பரேண தா4ம்னா |
ஹே தே3வா தி3திஜ குலைர் விதா4ய ஸந்தி4ம்
பீயூஷம் பரிமத2தேதி பர்ய சா’ரத்வம் || (27 – 3)

வரத! பிரம்மன் முதலான தேவர்கள் நெடுநேரம் துதித்த பிறகு, மேலான காந்தியுடனும், மகிமையுடனும் தாங்கள் அவர்கள் முன்பு தோன்றினீர்கள். “ஹே தேவர்களே! அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு அமிர்தத்தைக் கடையுங்கள்” என்று அவர்களுக்குக் கட்டளை இட்டீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------

ஸந்தா4னம் க்ருதவதி தா3னவை:ஸுரௌகே4
மந்தா2னாம் நயதி மதே3ன மந்த3ராத்3ரிம் |
ப்4ரஷ்டேsஸ்மின் ப3த3ர மிவோத்3 வஹன் க2கே3ந்த்3ரே
ஸத்3யஸ்த்வம் விநிஹிதவான் பய: பயோகௌ4 || (27 – 4)

தேவர்கள் அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டனர். அவர்கள் கர்வத்துடன் மந்தர மலையைத் தூக்கி வரும் போது அது கீழே விழுந்து விட, தாங்கள் பக்ஷி ராஜன் மேல் அமர்ந்து கொண்டு, அதை ஒரு இலந்தைக் கொட்டையைப் போல எளிதாகக் கொண்டு வந்து பாற்கடலில் வைத்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஆதா4ய த்3ருதமத2 வாஸுகிம் வரத்ராம்
பாதோ2தௌ4 விநிஹித ஸர்வ பீ3ஜ ஜாலை: |
ப்ராரப்3தே மத2ன விதௌ4 ஸுராஸுரைஸ்தை:
வ்யாஜாத்வம் பு4ஜக3முகே2sகரோ ஸுராரீன் || (27 – 5)


அதன் பிறகு விரைவாக வாசுகியை மத்துக் கயிராக்கி, எல்லா விதைகளும் இடப்பட்ட கடலைத் தேவாசுரர்கள் கடையும் போது, வஞ்கமாகத் தாங்கள் அசுரர்களைப் பாம்பின் தலைப் பக்கம் இருக்கச் செய்தீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 27 : அம்ருத மத2ன வர்ணனம்

க்ஷுப்3தா3த்3ரௌ க்ஷுபி4த ஜலோத3ரே ததா3னீம்
து3க்3தா4ப்3தௌ4 கு3ருதர பா4ரதோ நிமக்3னே |
தே3வேஷு வ்யதி2த தமேஷு தத் ப்ரியைஷீ
ப்ராணைஷீ:கமட2தனும் கடோ2ரா ப்ருஷ்டா2ம் || (27 – 6)

அப்போது பாற்கடலின் உட்புறத்தில் சுழற்றப்பட்ட மந்தர மலை மிகுந்த பாரத்தால் மூழ்கிப் போய் விட்டது. தேவர்கள் மிகுந்த வருத்தம் அடையத் தாங்கள் கடினமான முதுகு ஓட்டை உடைய ஒரு பெரிய ஆமை வடிவம் தாங்கினீர்கள். தேவர்களிடம் தாங்கள் கொண்ட பிரியத்தைக் காட்டினீர்கள்.

-------------------------------------------------------------------------------------------------------

வஜ்ராதி ஸ்தி2ரதர கர்பரேண விஷ்ணோ
விஸ்தாரத் பரிக3த லக்ஷ யோஜனேன |
அம்போ4தே4 குஹர க3தேன வர்ஷ்மணா த்வம்
நிர்மக்3னம் க்ஷிதி த4ர நாத2 முன்னினேத2 || (27 – 7 )

விஷ்ணோ! லக்ஷம் யோஜனை அகன்றதும், வஜ்ஜிராயுதத்தைக் காட்டிலும் கடினமான முதுகு ஓட்டை உடையதும் ஆகிய சரீரம் படைத்த தாங்கள் சமுத்திரத்துக்குள் சென்று மூழ்கி விட்ட அந்த மலையை மேலே எடுத்து வந்தீர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------

உன்மக்3னே ஜ்ஜடிதி ததா3 த4ராத4ரேந்த்3ரே
நிர்மேது2ர் த்3ருட4மிஹ ஸம்மதே3ன ஸர்வே |
ஆவிச்’ய த்3விதய க3ணேsபி ஸர்ப்ப ராஜே
வைவச்’யம் பரிச’மயன்னவீ வ்ருத4ஸ்தான் || (27 – 8 )

அந்தப் பெரிய மலை மேலே எழும்பி வந்தவுடன் எல்லோரும் சந்தோஷமாகவும் விரைவாகவும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தார்கள். தாங்கள் தேவர்களிடமும், சர்ப்ப ராஜன் வாசுகியிடமும் பிரவேசித்து அவர்களைச் சோர்வு இல்லாதவர்களாகச் செய்தீர்கள் அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------

உத்3தா3ம ப்4ரமண ஜவோன்னமத் கி3ரீந்த்3ரன்
யஸ்தைக ஸ்தி2ரதர ஹஸ்த பங்கஜம் த்வாம் |
அப்4ராந்தே விதி4கி3ரிசா’த3ய: ப்ரமோதா3த்3
உத்3ப்4ராந்தா நுநுவுருபாத்த புஷ்ப வர்ஷா: || (27 – 9 )


மிகவும் வேகமாகச் சுழன்றதால் அந்த மலை கடலிலிருந்து உயரக் கிளம்பியது. அந்த மலையின் மேல் தாங்கள் அழுத்தமாகத் தங்கள் தாமரைக் கையைப் பதித்த போது ஆகாயத்திலிருந்து பிரமன் சிவன் முதலானர்கள் பூமாரி பெய்து தங்களைத் துதித்தார்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

தை3த்யௌகே4 பு4ஜக3 முக2நிலேன தப்தே
தேனைவ த்ரித3ச’ குலேபி கிஞ்சிதா3ர்த்தே |
காருண்யாத்தவ கில தே3வ வாரிவாஹா:
ப்ராவர்ஷன்னமரகணான்ன தை3த்ய ஸங்கா3ன் || (27 – 10)

ஈசா ! பாம்பின் வாயிலிருந்து வெளிப்பட்ட விஷக் காற்றினால் அசுரர்கள் தாபம் அடைந்தனர். தேவர்களும் சிறிது துன்புற அவர்கள் மீது மட்டும் மேகங்களை மழை பொழியச் செய்தீர்கள். ஆனால் அசுரர்கள் மீது மழை பெய்யவில்லை.

----------------------------------------------------------------------------------------------------------------

உத்3தா4மயத்3 ப3ஹு திமிநக்ர சக்ரவாலே
தத்ராப்3தௌ4 சிரமதி2sதேபி நிர்விகாரே |
ஏகஸ்த்வம் கரயுக3 க்ருஷ்ட ஸர்ப்ப ராஜ:
ஸம் ராஜன் பவனபுரேச’ பாஹி ரோகாத் || (27 – 11)

அஞ்சி ஓடுகின்ற அநேகம் திமிங்கிலங்களையும், முதலைகளையும் உடைய அந்தக் கடல் வெகு நேரம் கடையப்பட்ட போதிலும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. அப்போது தாங்கள் ஒருவராகவே இரு கைகளாலும் சர்ப்ப ராஜனை இழுத்துக் கடலைக் கடைந்து கொண்டு விளங்கினீர்கள். அப்படிப்பட்ட தாங்கள் என்னை ரோகங்களிலிருந்து காக்க வேண்டும்!

-----------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 28 : அம்ருத மத2ன வர்ணனம்

க3ரலம் தரலானலம் புரஸ்தாத்

ஜலதே4ருத்3விஜகா3ல காலகூடம் |
அமரஸ்துதிவாத3மோத3 நிக்4னோ
கி3ரிச’ஸ் தன்னிபபௌ ப4வத் ப்ரியார்த்த2ம் || (28 – 1)

ஜ்வலிக்கின்ற அக்கினியோடு கூடின காலகூட விஷம் சமுத்திரத்திலிருந்து முதலில் வெளி வந்தது. தேவர்களின் துதிகளால் மனம் மகிழ்ந்த பரமசிவன் அதைத் தங்கள் பிரீதிக்காக மிச்சம் இல்லாமல் பருகிவிட்டார் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------

விமத2ஸ்து ஸுராஸுரேஷு ஜாத

ஸுரபி4ஸ் தாம்ருஷிஷு ந்யதா4ஸ்த்ரிதா4மன்
ஹயரத்ன மபூ4த3தே2 ப4ரத்னம்
த்3யுதருச்’ சாப்ஸரஸ: ஸுரேஷு தானி || (28 – 2)

மேலும் பாற்கடலைக் கடைந்த போது காமதேனு வெளி வந்தது. அதை மஹரிஷிகளிடம் கொடுத்து விட்டீர். பிறகு குதிரைகளில் சிறந்ததான உச்சைச்ரவஸ் வெளிப்பட்டது. பிறகு யானைகளில் சிறந்த ஐராவதமும், கற்பக விருக்ஷமும், அப்ஸரஸ்களும் வெளிப்பட்டனர். இவற்றை எல்லாம் தாங்கள் தேவர்களுக்கு அளித்தீர்கள்.

---------------------------------------------------------------------------------------------------------------

ஜக3தீ3ச’ ப4வத்பரா ததா3னீம்
கமனீயா கமலா ப3பூ4வ தே3வி |
அமலாமவலோக்ய யாம் விலோல:
ஸகலேsபி ஸ்ப்ருஹயாம் ப3பூ4வ லோக: || (28 – 3)

ஜகதீசா ! அப்போது தங்களிடம் பிரியம் கொண்டவளும், மனத்தைக் கவர்பவளும் ஆன லக்ஷ்மீ தேவி தோன்றினாள். மாசற்ற அவளைக் கண்டதும் மனம் கலங்கி உலகம் முழுவதுமே அவளை அடைய விரும்பியது அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------------------

த்வயி த3த்த ஹ்ருதே3 ததை3வ தே3வ்யை
த்ரித3சே’ந்த்3ரோ மணிபீடி2காம் வ்யதாரீத் |
ஸகலோ பஹ்ருதா பி4ஷேசநீயைர்
ருஷயஸ்தாம் ச்’ருதி கீ3ர்பி4ரப்4ய ஷிஞ்சன் || (28 – 4)

தங்களிடம் மனத்தை அர்ப்பணித்துவிட்ட லக்ஷ்மீ தேவிக்கு இந்திரன் உடனே ஓர் இரத்தின பீடத்தை அளித்தான். எல்லோராலும் கொண்டு வரப்பட்ட பொருட்களைக் கொண்டு ருஷிகள் வேத மந்திரங்களுடன் லக்ஷ்மீ தேவிக்கு அபிஷேகம் செய்தார்கள் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------------------

அபிஷேக ஜலானு பாதி முக்3த4த்வத3 பாங்கை3:
அவபூ4ஷிதாங்க3 வல்லீம்|
மணி குண்ட3ல பீத சேல ஹார ப்ரமுகை2:
தாமமராத3யோs ன்வ பூ4ஷண் || (28 – 5)

அபிஷேக நீருடன் கூடத் தன் மேல் விழுகின்ற மனோஹரமான தங்களின் கடைக் கண் பார்வைகளால் மேலும் அலங்கரிக்கப்பட்ட கொடி போன்ற லக்ஷ்மீ தேவியைத் தேவர்கள் இரத்தின குண்டலங்களாலும், மஞ்சள் நிறப் பட்டாடையாலும், ஹாரங்களாலும் அலங்கரித்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 28 : அம்ருத மத2ன வர்ணனம்

வரண ஸ்ரஜ மாத்த ப்4ருங்க3 நாத3ம்
த3த4தீ ஸா குசகும்ப4 மந்த3யானா |
பத3 சிஞ்ஜித மஞ்ஜு நூபுராத்வாம்
கலிதவ்ரீலவிலாஸ மாஸஸாத3 || (28 – 6 )

அந்த லக்ஷ்மீ தேவி வண்டுகளின் ஒலியுடன் கூடின ஸ்வயம்வர மாலையைக் கையில் பிடித்துக் கொண்டு, கும்பங்களை நிகர்த்த ஸ்தனங்களின் பாரத்தால் மெதுவான நடை நடந்து, கால்களில் சிலம்புகள் ஒலிக்கத் தங்களை வெட்கத்துடன் அடைந்தாள்.

------------------------------------------------------------------------------------------------------------

கி3ரிச’ த்3ருஹிணாதி3 ஸர்வ தே3வான்
கு3ணபா4ஜோsபி அவிமுக்த தோ3ஷ லேசா’ன் |
அவம்ருச்’ய ஸ தை3வ ஸர்வ ரம்யே
நிஹிதா த்வய்யனயாsபி தி3வ்யமாலா || (28 – 7 )

சிவன், பிரம்மன் முதலிய தேவர்கள் குணவான்களாக இருந்த போதிலும் காமக் குரோதங்கள் போன்ற தோஷங்கள் நீங்கப் பெறாதவர்கள். எப்போதும் தோஷமற்றவராக, நற்குணங்கள் நிரம்பியவராக, மனோஹரமாக இருக்கும் தங்கள் கழுத்தில் அந்த வரமாலை அணிவிக்கப்பட்டது அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------------------

உரஸா தரஸா மமாநிதை2நாம் பு4வனானாம்
ஜனனீ மனன்யா பா4வாம் |
த்வது3ரோ விலஸத் ததீ3க்ஷண ஸ்ரீ
பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விச்வம் || (28 – 8)

உலகங்களுக்கு எல்லாம் தாயாகிய, வேறு எவரிடத்திலும் பற்றில்லாத, லக்ஷ்மியைத் தாங்கள் மார்பில் ஏந்தி கௌரவித்தீர்கள். தங்கள் மார்பில் விளங்கும் அந்த லக்ஷ்மீ தேவியின் கருணா கடாக்ஷத்தால் உலகம் முழுவதும் செழிப்படைந்தது.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அதி மோஹன விப்4ரமா ததா3னீம்
மத3யந்தீ க2லு வாருணீ நிராகா3த் |
தமஸ: பத3வி மதா3ஸ் த்வமேனாம்
அதி ஸம்மானனயா மஹா ஸுரேப்4ய: || (28 – 9 )

அப்போது அதி மோஹன விலாசத்துடன் கூடிய, மதத்தை உண்டாக்குபவள் என்ற பெயர் பெற்ற வாருணீ தேவி பாற்கடலிலிருந்து வெளிப்பட்டாள். அறிவின்மைக்கு இருப்பிடமான அவளைத் தாங்கள் மிகுந்த வெகுமானத்துடன் பெருமை வாய்ந்த அசுரர்களுக்குப் பரிசாக அளித்தீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------------------------

தருணாம்பு3த3 ஸுந்த3ரஸ் ததா3 த்வம் நனு
த4ன்வந்தரி ருத்தி2தோsம்பு3 ராசே’: |
அம்ருதம் கலசே’ வஹன் கராப்4யாம்
அகி2லார்த்திம் ஹர மாருதாலயேசா’ || (28 – 10)

புது மேகம் போன்ற நிறம் கொண்ட அழகனனாகிய தாங்கள், இரு கைகளிலும் அமிர்த கலசத்தைப் பற்றிக் கொண்டு, சமுத்திரத்தில் இருந்து தன்வந்திரியாக வெளிப்பட்டீர்கள். குருவாயூரப்பா என் வியாதிகள் எல்லாவற்றையும் நாசம் செய்ய வேண்டும்!

------------------------------------------------------------------------------------------------------------------
 
SRIMAN NAARAAYANEEYAM IS THE BHAAGAVATA MAHAA PURAANAM IN A CONDENSED AND A CAPSULE FORM.
IF PEOPLE DO NOT FIND TIME TO READ THE CAPSULE FORM HOW AND WHEN WILL THEY FIND
TIME TO READ THE ORIGINAL FULL VERSION OF THE BHAAGAVATA MAHAAA PURANAM ??? :noidea:
 
I am hoping to be able to finish blogging Sriman naaraayaneeyam in WordPress before Dasara starts.
One full day was wasted on 8th since there was no Internet for almost 22 hours! :(
Two more dasakams (94 & 95) and meaning of one dasakam (94) are to be typed yet and posted!
 
த3ச’கம் 29 : தே3வானாம் அம்ருதோபலப்3தி4 ப்ரகார வர்ணனம்

உத்3க3ச்ச2தஸ்தவ கரதா3ம்ருதம் ஹரத்ஸு

தை3த்யேஷு தானச’ரணானனுநீய தே3வான் |
ஸத்3யஸ் திரோத3தி4த2 தே3வ ப4வத் ப்ரபா4வாத்3
உத்3யத்ஸ்வ யூத்2ய கலஹா தி3திஜா ப3பூ4வு: || (29 – 1)

பாற்கடலிலிருந்து வெளிவந்த தங்கள் கையிலிருந்த அம்ருத கலசத்தை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். வேறு புகல் இல்லாத தேவர்களைச் சமாதனப் படுத்திவிட்டு உடனே அங்கிருந்து மறைந்து விட்டீர்கள் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------

ச்’யாமாம் ருசாsபி வயஸாsபி தனும் ததா3னீம்
ப்ராப்தோஸி துங்க3குச மண்ட3ல ப4ங்கு3ராம் த்வம் |
பீயூஷ கும்ப4 கலஹம் பரிமுச்ய ஸர்வே
த்ருஷ்ணாகுலா : ப்ரதியயுஸ் த்வது3ரோஜகும்பே4 || (29 – 2)


அப்போது தாங்கள் நீலநிற உருவத்துடனும், நடு வயதான பருவத்துடனும் , உயர்ந்த ஸ்தனங்களால் சற்று வளைந்ததும் ஆன, சரீரத்தை உடைய ஒரு பெண்ணின் வடிவத்தை எடுத்துக் கொண்டீர்கள் அல்லவா? தங்களைக் கண்ட அசுரர்களெல்லாம் அம்ருத கலசத்தை விட்டு விட்டுத் தங்களின் கலசம் போன்ற ஸ்தனங்களின் மேல் ஆசை கொண்டு தங்களிடம் வந்தார்கள் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------------------

கா த்வம் ம்ருகா3க்ஷி விப4ஜஸ்வ ஸுதா4மிமாமிதி
ஆரூட3 ராக3 விவசா’னபி4 யாசதோsமூன் |
விச்’வஸ்யதே மயி கத2ம் குலடாsஸ்மி தை3த்யா:
இத்யாலபன்னபி ஸுவிச்’வஸிதானதானீ : || (29 – 3)

“மான் விழி படைத்தவளே! நீ யார்? இந்த அமிர்தத்தை எங்களுக்குப் பங்கிட்டுக் கொடு!” என்று காமம் தலைக்கு ஏறியதால் பரவசர்களாகிய அந்த அசுரர்கள் தங்களிடம் யாசித்தனர். அவர்களை நோக்கி,” நான் ஒரு வியபசாரிணி. என்னிடத்தில் எங்கனம் நம்பிக்கை வைத்தீர்கள் நீங்கள்?” என்று கேட்டுக் கொண்டே அவர்களின் நம்பிக்கையை மேலும் உறுதியானதாக ஆக்கினீர்கள் அல்லவா!

---------------------------------------------------------------------------------------------------------------

மோதா3த் ஸுதா4 கலச’மேஷு த3த3த்ஸு ஸா த்வம்
து3ச்’சேஷ்டிதம் மம ஸஹத்4வமிதி ப்3ருவாணா |
பங்க்தி ப்ரபே4த3விநிவேசி’த தை3த்யா
லீலாவிலாஸ க3திபி4: ஸமதா3: ஸுதா4ம் தாம் || (29 – 4)

அந்த அசுரர்கள் சந்தோஷத்துடன் அமிர்த கலசத்தைத் தங்களிடம் தந்து விட்டனர். மோஹினியின் ரூபம் தரித்த தாங்கள் அவர்களிடம் ” என்னுடைய தகாத செயலைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறியபடி அங்கிருந்த தேவர்களையும் அசுரர்களையும் தனித்தனி வரிசைகளில் அமர வைத்தீர்கள். மனோஹரமாக விளையாடிக் கொண்டும் சிருங்கர சேஷ்டைகள் செய்து கொண்டும் அவர்களிடயே அமிர்தத்தைப் பங்கிட்டீர்கள் அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------------

அஸ்மாஸ்வியம் ப்ராணாயனீத்ய ஸுரேஷு தேஷு
ஜோஷம் ஸ்தி2தேஷ்வத2 ஸமாப்ய ஸுதா4ம் ஸுரேஷு |
த்வம் ப4க்தலோகவச’கோ3 நிஜரூப மேத்ய
ஸ்வர்பா4னு மர்த்த4 பரிபீத ஸுத4ம் வ்யலாவீ : || (29 – 5)

“இவள் நம்மிடத்தில் பிரியம் உடையவள்” என்று எண்ணி அசுரர்கள் அமைதியாக இருந்தனர். பக்தர்களுக்கு வசப்படும் தாங்கள் முழுவதுமாக அமிர்தத்தை தேவர்களுக்குத் தந்து விட்டீர்கள். பிறகு தங்கள் ஸ்வரூபத்தை எடுத்துக் கொண்டு பாதி அமிர்தத்தை பருகிவிட்ட ராஹுவை வெட்டினீர்கள் அல்லவா ?

---------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 29 : தே3வானாம் அம்ருதோபலப்3தி4 ப்ரகார வர்ணனம்

த்வத்த: ஸுதா4 ஹரண யோக்3ய ப2லம் பரேஷு த3த்தவா
க3தே த்வயி ஸுரை: க2லு தே வ்யக்3ருஹ்ணன் |
கோ4ரேsத2 மூர்ச்ச2தி ரணே ப3லி தை3த்ய மாயா
வ்யாமோஹிதே ஸுரக3ணே த்வமிஹாவிராஸீ: || (29 – 6)

தங்களிடமிருந்து அமிர்த கலசத்தை அபஹரித்ததற்குத் தகுந்த பலனை அசுரர்களுக்குத் தந்துவிட்டுத் தாங்கள் அங்கிருந்து மறைந்து சென்று விட்டீர்கள். உடனே தேவாசுர யுத்தம் தொடங்கிப் போர் வலுத்தது. பலியின் மாயையால் தேவர்கள் சமூஹம் மதி மயங்கி நின்ற போது தாங்கள் அந்தப் போர்க்களத்தில் தோன்றினீர்கள் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------

த்வம் காலநேமிமத2 மாலி முகா2ஞ் ஜக4ந்த2
ச’க்ரோ ஜகா4ன ப3லி ஜம்ப4வலான் ஸபாகான்|
சு’ஷ்கார்த்3ர து3ஷ்கர வதே4 நமுசௌ ச லூனே
பே2னேன நாரத3கி3ரா ந்யருணோ ரணம் தவம் || (29 – 7 )

அதன் பின்னர் தாங்கள் காலநேமி, மாலி முதலானவர்களைக் கொன்றீர்கள். இந்திரன் போரில் பாகாசுரன், பலி, ஜம்பன், வலன் போன்றோரைக் கொன்றான். உலர்ந்ததாலோ, நனைந்ததாலோ வெட்டப் படமுடியாத நமுசியும் நுரையால் கொல்லப்பட்டான். பிறகு நாரதரின் கூற்றுக்கு இணங்கித் தாங்கள் போரை நிறுத்தினீர்கள் அல்லவா ?

------------------------------------------------------------------------------------------------------------------

யோஷாவபூர் த3னுஜ மோஹன மாஹிதம் தே ச்’ருத்வா
விலோகன குதூஹலவான் மஹேச’: |
பூ4தை: ஸமம் கி3ரிஜயா ச க3த :பத3ம் தே
ஸ்துத்வாsப்3ரவீத3பி4மதம் த்வமதோ2 திரோதா4:|| (29 – 8 )

அசுரர்களை மயக்கிய மோஹினியின் ரூபத்தைத் தாங்கள் எடுத்துக் கொண்டதைக் கேட்ட மகேஸ்வரன், தானும் அதைக் காண ஆவலுற்றார். பார்வதி தேவியுடனும், பூத கணங்களுடனும் தங்கள் ஸ்தானமாகிய வைகுண்டத்துக்கு வந்தார். தங்களைத் துதித்துத் தன் விருப்பத்தைக் கூறும் போது தாங்கள் மறைந்து அருளினீர்கள் அல்லவா?

-----------------------------------------------------------------------------------------------------------------

ஆராமஸீமனி ச கந்து3க கா4த லீலா
லோலாயமான நயனாம் கமனீம் மனோக்ஞாம்|
த்வாமேஷ வீக்ஷ்ய விக3லத்3 வஸனாம் மனோபூ4
வேகா3த் அனங்க3ரிபுரங்க3 ஸமாலிலிங்க3 || (29 – 9)

பூந்தோட்டத்தில், அருகில், சலிக்கின்ற கண்களுடனும், மனத்தைக் கவரும் பெண்ணுருவத்துடனும், ஆடை நழுவும்படி பந்து விளையாடும் தங்களைக் கண்டவுடன், மன்மதனின் வைரியாகிய பரமசிவன் காம விகாரம் அடைந்துத் தங்களை ஆலிங்கனம் செய்து கொண்டார் அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------------------

பூ4யோsபி வித்3ருதவதீமுபதா4வ்ய தே3வோ
வீர்ய ப்ரமோக்ஷ விகஸத் பரமார்த்த2 போ3த4: |
தன்மானிதஸ்தவ மஹத்வமுவாச தே3வ்யை
தத்தா த்3ருச’ஸ்த்வமவ வாத நிகேத நாத2 || (29 – 10)

மறுபடியும் நழுவி ஓடிய மோஹினியைத் பின்தொடர்ந்து தன் வீரியத்தை விட்ட பிறகே பரமேசுவரன் உண்மை விளக்கம் பெற்றார். தங்களால் வெகுமதிக்கப் பட்டுத் தங்கள் மகிமையைப் பார்வதி தேவிக்கு எடுத்துரைத்தார். அப்படிப் பட்ட பெருமை வாய்ந்த குருவாயூரப்பா! தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 30 ( 1 to 5 )

த3ச’கம் 30 : வாமன சரித வர்ணனம்

ச’க்ரேண ஸம்யதி ஹதோSபி ப3லிர் மஹாத்மா
சு’க்ரேண ஜீவிததனு: க்ரதுவர்த்3தி4 தோஷ்மா|
விக்ராந்திமான் ப4யநிலீன ஸுராம் த்ரிலோகீம்
சக்ரே வசே’ ஸ தவ சக்ரமுகா3த3 பீ4த || (30 – 1)

இந்திரனால் போரில் கொல்லப் பட்டிருந்தாலும், குலகுரு சுக்கிராசாரியார் மகாத்மாவான மஹா பலியை மீண்டும் உயிர்ப்பித்தார். அவன் விச்வஜித் யாகம் செய்ததால் சக்தி பெருகி மிகுந்த பராக்கிரமசாலி ஆனான். தங்கள் சுதர்சனச் சக்கரத்துக்கு அஞ்சாமல், தேவர்களை ஓடி ஒளியச் செய்துவிட்டு மூன்று உலகங்களையும் தன்வசம் ஆக்கிக் கொண்டான்.

--------------------------------------------------------------------------------------------------------

புத்ரார்த்தி த3ர்ச’ன வசா’த3தி3திர் விஷண்ணா
தம் காச்’யபம் நிஜபதிம் ச’ரணம் ப்ரபன்னா |
த்வத் பூஜனம் தது3தி3தம் ஹி பயோவ்ரதாக்2யம்
ஸா த்3வாத3சா’ஹமசரத் த்வயி ப4க்தி பூர்ணா || (30 – 2)

தன் புத்திரர்களாகிய தேவர்கள் துன்புறுவதைக் கண்ட அதிதி தேவி, மிகவும் மனம் வருந்தித் தன் கணவர் காச்யபரிடம் சரண் அடைந்தாள். அவர் உபதேசித்த ப்யோவிரதத்தைத் தங்களிடம் நிறைந்த பக்தியுடன் பன்னிரண்டு நாட்களுக்குச் செய்தாள்.

-----------------------------------------------------------------------------------------------------------------

தஸ்யாவதௌ4 த்வயி நிலீனமதேரமுஷ்யா:
ச்’யாமச்’சதுர் பு4ஜ வபு: ஸ்வயமாவிராஸீ: |
நம்ராம் ச தாமிஹ ப4வத்தனயோ ப4வேயம்
கோ3ப்யம் மதீ3க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ: || (30 – 3)

அந்த விரதத்தின் முடிவில் தங்களிடம் லயித்த மனத்தை உடைய அதிதி தேவிக்கு முன்பு ம ச்யாமள வர்ணத்துடனும் நான்கு புஜங்களுடனும் தாங்கள் தோன்றினீர்கள். உங்களை வணங்கிய அதிதி தேவியிடம்,"நான் உனக்குப் பிள்ளையாக வந்து பிறப்பேன். என் தரிசனம் மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும்!” என்று கூறிவிட்டு மறைந்து சென்று விட்டீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

த்வம் காச்’யபே தபஸி ஸன்னித3த4த் ததா3னீம்
ப்ராப்தோSஸி கர்ப்ப4 மதி3தே: ப்ரணுதோ விதா4த்ரா|
ப்ராஸூத ச ப்ரகட வைஷ்ணவ தி3வ்ய ரூபம் ஸா
த்3வாத3சீ ‘ ச்’ரவண புண்யதி3னே ப4வந்தம் || (30 – 4)

அப்போது தவத்தினால் வளர்ந்த காசியபரின் வீரியத்தில் தங்கள் எழுந்தருளி, அதிதி தேவியின் கர்ப்பத்தை அடைந்து பிரம்மனால் துதிக்கப் பட்டீர்கள். அதிதி தேவி தங்களைச் சங்கு சக்கரம் முதலியவற்றால் விஷ்ணுவைப் போன்ற திவ்ய ரூபத்துடன், துவாதசியும் சிரவண நக்ஷத்திரமும் கூடிய ஒரு சுபதினத்தில் பிரசவித்தாள்.

-------------------------------------------------------------------------------------------------------------

புண்யாச்’ரமம் தமபி வர்ஷதி புஷ்ப வர்ஷை:
ஹர்ஷாகுலே ஸுரகுலே க்ருத தூர்ய கோ4ஷே |
ப3த்3த4வாஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்4யாம்
த்வம் தத் க்ஷணே படுதமம் வடுரூபமாதா4: || (30 – 5)

தேவர் கூட்டம் ஆனந்த பரவசத்துடன் தூரிய வாத்தியத்தை முழக்கியது. அந்த புண்ணிய ஆசிரமத்தின் மீது பூமழையைப் பொழிந்தது. அஞ்சலி செய்து கொண்டு தங்கள் பெற்றோர் ” ஜய ஜய ” என்று துதிக்கவும், அந்தக் கணத்திலேயே சாமர்த்தியசாலியாகிய ஒரு பிரம்மச்சாரியின் ஸ்வரூபத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 30 : வாமன சரித வர்ணனம் : வாமன சரித வர்ணனம்

தாவத் ப்ரஜாபதி முகை ரூபனீய மௌஞ்ஜி
தண்டா3ஜினாக்ஷவலயாதி3பி4ரர்ச்யமான:|
தே3தீ3ப்ய மான வபுரீச’ க்ருதாக்3னி கார்யஸ்த்வம்
ப்ராஸ்தி2தா2 ப3லிக்3ருஹம் ப்ரக்ருதாச்’வ மேத4ம் || (30 – 6)


ஈசா ! அப்போதே காச்யபர் முதலியவர்களால் உபநயனம் செய்விக்கப் பெற்றீர். மேகலை, தண்டம், கிருஷ்ணாஜினம், ருத்திராக்ஷ மாலை முதலிவற்றால் பூஜிக்கப் பெற்றீர். மிகுந்த பிரகாசத்துடன் கூடியவராக, அக்கினி காரியத்தைச் செய்து முடித்து விட்டு, அசுவமேத யாகம் நடைபெறும் மஹாபலியின் இருப்பிடத்துக்குச் சென்றீர்கள்.

--------------------------------------------------------------------------------------

கா3த்ரேண பா4விமஹிமோசித கௌ3ரவம்
ப்ராக்3வ்யாவ்ருண்வதேவ த4ரணீம் சலயன்னயாஸீ: |
சத்ரம் பரேஷ்மதி ரணார்த்த2மிவாத3தா4னோ
தண்ட3ம் ச தா3னவ ஜனேஷ்விவ ஸன்னிதா4தும் || (30 – 7 )

பின்னால் நிகழவிருக்கும் விச்வரூபத்தை முன்னாலேயே தெரிவித்தத் தங்கள் சரீரத்தின் பாரத்தால் பூமி அசைய நடந்து சென்றீர். சத்ருக்களின் தேஜசை மறைப்பதற்குக் குடையும், அசுரர்களிடம் பிரயோகிப்பதற்குத் தண்டமும் எடுத்துச் சென்றீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------

தாம் நர்மதோ3த்தர தடே ஹயமேத3சா’லா
மாஸேது3ஷி த்வயி ருசா தவ ருத்3த4நேத்ரை: |
பா4ஸ்வான் கிமேஷ த3ஹனோ நு ஸனத்குமாரோ
யோ3கீ நு கோsயமிதி சு’க்ரமுகை: ச’ச’ங்கே || (30 – 8 )

நர்மதையின் வடக்குக் கரையில் அமைந்திருந்த யாகசாலையைச் சென்று அடைந்த போது, தங்கள் தேஹ காந்தியைக் கண்ட சுக்கிராச்சாரியார் போன்றோர் “இங்கே வருபவன் சூரியனா அல்லது அக்கினியா அல்லது யோகீசுவரனான சந்த குமாரனோ? இது யாராக இருக்கும்?” என்று ஐயம் அடைந்தார்கள் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆனீதமாசு’ ப்4ருகுபி4ர் மஹஸாsபி4 பூ4தைஸ்த்வாம்
ரம்ய ரூப மஸுர: புலகாவ்ருதாங்க3 :
ப4க்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிணிஜ்ய பாதௌ3
தத்தோய மன்வத்4ருத மூர்த்த4னி தீர்த்த2 தீர்த்த2ம் || (30- 9 )

தங்கள் தேஜஸ்சைக் கண்ட சுக்கிராசாரியார் துரிதமாக எதிர்கொண்டு தங்களை வரவேற்றார். மனோஹரமான தங்கள் ரூபத்தைக் கண்டு மயிர் கூச்சடைந்தான் அசுர அரசன் மஹா பலி. மிகுந்த பக்தியுடன், எல்லாத் தீர்த்தங்களையும் பாவனமாகும் தங்கள் திருவடி நீரைத் தலயில் தரித்துக் கொண்டான்.

--------------------------------------------------------------------------------------------

ப்ரஹ்லாத3 வம்ச’ ஜதயா க்ரதுபி4ர் த்3விஜேஷு
விச்வாஸதோ நு ததி3த3ம் தி3திஜோsபி லேபே4 |
யத்தே பதா3ம்பு3 கி3ரிச’ஸ்ய சி’ரோபி4 லால்யம்
ஸ த்வம் விபோ4 கு3ருபுராலய பலயேதா2: || (30- 10)

பரமசிவன் தலையில் விளங்கும் தங்களின் பாத தீர்த்தத்தை; பிரஹலாதனின் வம்சத்தில் பிறந்ததாலோ, அல்லது யாகங்களை அனுஷ்டித்ததாலோ, அல்லது பிராமணர்களிடம் கொண்ட விசுவாசத்தினாலோ அசுர அரசன் மஹாபலியும் கிடைக்கப் பெற்றான் அல்லவா?

--------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 31 ( 1 to 5)

த3ச’கம் 31 : வாமன சரித வர்ணனம்


ப்ரீத்யா தை3த்யஸ்தவ தனுமஹ: ப்ரேக்ஷணாத் ஸர்வதா2Sபி
த்வாமராத்4யன்னஜித ரசயன்னஞ்ஜலிம் ஸஞ்ஜகா3த3 |
மத்த: கிம் தே ஸமபி4லஷிதம் விப்ரஸூனோ வத3 த்வம்
வ்யக்த ம் ப4க்தம் ப4வனமவனீம் வாSபி ஸர்வம் ப்ரதாஸ்தே || (31 – 1)


யாராலும் வெல்லப்படாதவரே! தங்களின்சரீர காந்தியைக் கண்டவுடன் உண்டான் பிரீத்தியால் மஹாபலி எல்லா விதங்களிலும் தங்களை ஆராதித்தான். அஞ்சலி செய்தாவாறு தங்களிடம், ” பிராம்மண குமாரரே! என்னிடமிருந்து எதை விரும்புகின்றீர்கள் என்று தெளிவாகக் கூறுங்கள். அது அன்னம், வீடு, பூமி அல்லது அவை அனைத்துமே தேவை என்றாலும் நான் அவற்றைத் தருகின்றேன்!|” என்றான்.

---------------------------------------------------------------------------------------------------

தாமக்ஷீணாம் ப3லிகி3ர முபாகர்ண்யா காருண்ய பூர்ணோSபி
அஸ்யோத்ஸேகம் ச’மயிதுமனா தை3த்ய வம்ச’ம் ப்ரச’ம்ஸன் |
பூ4மிம் பாத3த்ரய பரிமிதாம் ப்ரார்த்த2யாமாஸித த்வம்
ஸர்வம் தே3ஹீதி து நிக3தி3தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் ​|| (31 – 2)

ஒரு குறையும் இல்லாத பலியின் வார்த்தைகளைக் கேட்ட தாங்கள், கருணை நிரம்பியவராக இருந்த போதிலும், அவன் கர்வத்தை அடக்க விரும்பினீர்கள். அசுர வம்சத்தைப் புகழ்ந்துவிட்டு மூன்றடி மண் வேண்டும் என்று வேண்டினீர்கள். ” எல்லாவற்றையும் கொடு!” என்று கேட்டிருந்தால் எத்தனை நகைப்புக்கு இடமாக அது ஆகி இருக்கும்!

----------------------------------------------------------------------------------------------------

விச்’வேச’ம் மாம் த்ரிபத3மிஹ கிம் யாசதே பா3லிச’ஸ்தவம்
ஸர்வாம் பூ4மிம் வ்ருணு கிமுமனோத்யாலபத்தவாம் ஸ த்3ருப்யன்|
யஸ்மாத்3 த3ர்பாத் த்ரிபத3 பரிபூர்த்யக்ஷம: க்ஷேப வாதா3ன்
பந்த4ம் சாஸாவக3மத3தத3ர்ஹோSபி கா3டோ4ப சாந்த்யை || (31 – 3)

” சிறு பிள்ளைத்தனமாக உலகங்களுக்கு எல்லாம் அதிபதியாகிய என்னிடம் வெறும் மூன்றடி மண் மட்டும் நீ யாசிக்கின்றாய்! அதனால் என்ன பயன்? இந்த பூமி முழுவதையுமே வாங்கிக் கொள்!” என்று கர்வத்தோடு மஹாபலி தங்களிடம் சொன்னான் அல்லவா ? பிறகு அவன் அந்த மூன்றடி மண் கூடக் கொடுக்க முடியாமல் இகழ்ச்சியையும், அவன் கர்வம் முற்றிலுமாக அடங்குவதற்குச் சிறையும் ( அவன் அவைகளை அடைவதற்குத் தகுதி இல்லாதவனான போதிலும்) அவன் கர்வத்தின் காரணமாக அடைந்தான் அல்லவா!

----------------------------------------------------------------------------------------------------

பாத3த்ரய்யா யதி3 ந முதி3தோ விஷ்டபைர் நாபி துஷ்யேத்
இத்யுக்Sதேஸ்மின் வரத3 ப4வதோ தா3து காமேSத2 தோயம் |
தை3த்யாசார்யஸ் தவ க2லு பரீக்ஷார்த்தி2ன: ப்ரேரணாத்தம்
மாமா தே3யம் ஹரிரயமிதி வ்யக்தமேவா ப3பா4ஷே || (31 – 4)

“மூன்றடி மண்ணைக் கொண்டு சந்தோஷம் அடையாதவன் மூன்று உலகங்கள் கிடைத்தாலும் சந்தோஷம் அடைய மாட்டான்!” என்று தாங்கள் மஹா பலியிடம் கூறினீர்கள். எல்லா வரங்களையும் தரும் வரதா! அந்த மஹாபலி கமண்டல நீர் வார்த்துத் தங்களுக்குத் தானம் அளிக்க விரும்பினான். அப்போது தங்கள் பிரேரணையாலேயே மஹா பலியைப் பரீட்சித்தார் குல குரு சுக்ராச்சாரியார். மஹாபலியிடம் “கொடுக்காதே! கொடுக்காதே! இவன் எல்லாவற்றையும் அபகரிக்கும் மஹா விஷ்ணு!” என்றார் அல்லவா?

------------------------------------------------------------------------------------------------------

யாசத்யேவம் யதி ஸ ப4க3வான் பூர்ணகாமோSஸ்மி ஸோSஹம்
தா3ஸ்யாம்யேவ ஸ்தி2ரமிதி வத3ன் காவ்யச’ப்தோSபி தை3த்ய: |
விந்த்4யாவல்யா நிஜத3யிதயா த3த்த பாத்3யாய துப்4யம்
சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோய பூர்வம் || ( 31 – 5 )

“ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிறைந்துள்ள அந்த பகவானே என்னிடம் யாசிக்கின்றான் என்றால் அவன் விருப்பத்தை நான் நிறைவேற்றியவன் ஆகின்றேன். நான் தானம் கொடுக்கத் தான் போகின்றேன்!” என்று உறுதியாகக் கூறிய மஹாபலியைச் சுக்கிராச்சாரியார் கோபத்தால் சபித்தார். பத்தினி விந்தியாவளி பாதநீர் அளிக்கத் தங்களுக்குத் தானநீர் வார்த்து அனைத்தையும் அர்ப்பணம் செய்தான் அசுர அரசன்! ஆச்சரியம்! ஆச்சரியம்!

---------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 31 : வாமன சரித வர்ணனம்

நிஸ்ஸந்தே3ஹம் தி3திகுலபதௌ த்வய்ய சேஷார்ப்பணம் தத்
வ்யாதன்வானே முமுசுர் ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம் |
திவ்யம் ரூபம் தவ ச ததி3த3ம் பச்’யதாம் விச்’வ பா4ஜாம்
உச்சைருச்சை ரவ்ருத4த3வதீ4க்ருத்ய விச்வாண்ட3 பா4ண்ட3ம் || (31 – 6)


அசுர அரசன் மஹாபலி, சந்தேகத்துக்கு இடமின்றித் தங்களிடம் மிச்சமின்றி அனைத்தையும் அர்ப்பணம் செய்தபோது, தேவர்களும் ரிஷிகளும் பூமாரி பொழிந்தனர். திவ்யமான வாமன ரூபமும் பிரபஞ்சவாசிகள் காணும்போதே பிரம்மாண்டம் வரையிலும் மேலும் மேலும் வளர்ந்தது அல்லவா?

--------------------------------------------------------------------------------------------------------------------------

த்வத் பதா3க்3ரம் நிஜபத3க3தம் புண்டரீகோத்3ப4வோசௌ
குண்டீ3 தோயை ரஸிசத3புனாத்யஜ்ஜலம் விச்’வலோகன் |
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப3ஹு நன்ருதே கே2சரைருத்ஸவேsஸ்மின்
பே4ரி நிக்4னன் பு4வனமசரஜ் ஜாம்பவான் ப4க்திசாலி || (31 – 7 )


பிரம்ம தேவன் தனது இடமாகிய சத்திய லோகத்தை அடைந்த தங்கள் திருவடியின் நுனியைக் கமண்டல ஜலத்தால் அபிஷேகம் செய்தான். அந்த ஜலம் எல்லா உலகங்களையும் புனிதமாக்கியது. மகிழ்ச்சியில் கந்தர்வர்கள் கானம் செய்தனர். பக்திமானாகிய ஜாம்பவான் பேரிகையை முழக்கிக் கொண்டு உலகை வலம் வந்தார் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------------------------------------

தாவத்3தை3த்யாஸ் த்வனு மதிம்ருதே ப4ர்த்துராரப்3த4 யுத்3தா4:
தே3வோபேதைர் ப4வத3னுசரைஸ் ஸங்க3தா ப4ங்க3மாபன் |
காலத்மாsயம் வஸதி புரதோ யத்3வசா’த் ப்ராக்3ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்3தை4ரிதி ப3லிகி3ரா தேsத2 பாதாளமாபு: || (31 – 8)


அதற்குள் அங்கிருந்த அசுரர்கள் அரசனின் அனுமதி இல்லாமலேயே யுத்தம் செய்யத் தொடங்கினர். தங்களின் பணியாட்கள் அந்த அசுரர்களை வென்று விட்டனர். அப்போது பலி,” யாருடைய பிரபாவத்தால் நாம் முன்பு ஜெயிக்கப்பட்டோமோ அதே பகவான் காலஸ்வரூபியாக இங்கே நிற்கின்றார். யுத்தம் செய்வதால் என்ன பயன்?” என்று கூறவும் அந்த அசுரர்கள் பாதாளம் சென்றுவிட்டனர்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

பாசை’ர் ப3த்3த4ம் பதக3பதினா தை3த்ய முச்சைரவாதீ3:
தார்தீயீகம் தி3ச’ மம பத3ம் கின்ன விச்’வேச்’வரோஸி |
பாத3ம் மூர்த்த்4னி ப்ரணய ப4க3வன்னித்யகம்பம் வத3ந்தம்
ப்ரஹ்லாத3ஸ்தம் ஸ்வயுமுபக3தோ மானயன்னஸ்தவீத்வாம் || (31 – 9)

கருடானால் வருண பாசத்தில் கட்டப்பட்ட மஹாபலியைப் பார்த்து ” எனக்கு மூன்றடி மண்ணைக் கொடு! நீ உலகங்களுக்கு எல்லாம் அதிபதி அல்லவா?” என்றீர்கள். “பகவானே! என் தலை மீது தங்கள் திருவடியை வையுங்கள்!” என்று சிறிது நடுக்கம் இல்லாமல் கூறிய மஹாபலியை பாராட்டிய வண்ணம் அங்கு வந்த பிரஹ்லாதன் தங்களைத் துதித்தான் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------------------------------

த3ர்போச்சி2த்யை விஹிதமகி2லம் தை3த்ய ஸித்3தோ4sஸி புண்யை:
லோகஸ்தேsஸ்து த்ரிதி3வவிஜயீ வாஸவத்வம் ச பச்’சாத் |
மத்ஸாயுஜ்யம் ப4ஜ ச புனரித்யன்வக்3ருஹ்ணா ப3லிம் தம்
விப்ரை: ஸந்தாநிதமக2வர: பாஹி வாதாலயேசா’ || (31 – 10 )


“மஹாபலி! உன் கர்வத்தைப் போக்குவதற்காகவே நான் இதைச் செய்தேன். புண்ணிய கர்மங்களால் நீ ஒரு சித்தன் ஆகிவிட்டாய்! உனக்காக ஸ்வர்க்கத்திலும் மேலான ஒரு உலகம் ஏற்படட்டும். பிறகு இந்திரப் பதவியும், அதன் பின்னர் என் ஸாயுஜ்யமும் நீ அடைவாய்!” என்று அவனை அனுக்ரஹித்தீர்கள் குருவாயூரப்பா ! பிராமணர்களைக் கொண்டு அந்த யாகத்தைப் பூர்த்தி செய்த தாங்கள் என்னை காப்பாற்ற வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
 
Last edited:
த3ச’கம் 32 : மத்ஸ்யாவதார வர்ணனம்

புரா ஹயக்3ரீவ மஹாஸுரேண
ஷஷ்டாந்தரான் தோத்3யத3காண்ட3கல்பே |
நித்3ரோன் முக2 ப்3ரஹ்ம முகா2த்3 த்4ருதேஷு
வேதே3ஷ் வதி4த்ஸ: கில மத்ஸ்ய ரூபம் || (32 – 1)


ஆறாவது மன்வந்தரத்தின் முடிவில் உண்டாகிய அவரந்தரப் பிரளயத்தின் போது, நித்திரை செய்து கொண்டிருந்த பிரம்மனின் திருமுகத்திலிருந்து, ஹயக்ரீவன் என்ற அசுரன் வேதங்களை அபஹரித்தான். அப்போது தாங்கள் மத்ஸ்ய ரூபத்தை எடுக்க விழைந்தீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------

ஸத்யவ்ரதஸ்ய த்3ரமிலாதி4 ப4ர்த்து:
நதீ3ஜலே தர்பயதஸ் ததா3னீம்|
கராஞ்ஜலௌ ஸஜ்ஜ்வலிதாக்ருதி:
த்வமத்3ருச்’யதா2: கச்’சன பா3லமீன: || (32 – 2)

அப்போது நதி ஜலத்தில் தர்ப்பணம் செய்து கொண்டிருந்த திராவிட அரசனாகிய சத்திய விரதனின் கூப்பிய கைகளில் தாங்கள் ஒரு சிறு மீன் குஞ்சாகத் தோன்றி நன்கு பிரசாசித்தீர்கள் அல்லவா?

-------------------------------------------------------------------------------------------------------

க்ஷிப்தம் ஜலே த்வாம் சகிதம் விலோக்ய
நின்யேsம்பு3 பாத்ரேண முனி: ஸ்வகே3ஹம் |
ஸ்வல்பைரஹோபி4ஹி: கலசீ’ம் ச கூபம்
வாபீம் ஸரச்’சானசி’ஷே விபோ4 த்வம் || (32 – 3 )

மீண்டும் ஜலத்தில் விடப் பட்டபோது தாங்கள் அஞ்சியதைக் கண்டு அந்த ராஜருஷி தங்களைத் தன் ஜல பாத்திரத்திலேயே தன் இருப்பிடத்துக்கு எடுத்துச் சென்றார். எங்கும் நிறைந்துள்ள விஷ்ணோ! தாங்கள் விரைவாக வளர்ந்து அந்த ஜல பாத்திரதையும், பிறகு கிணற்றையும், குளத்தையும், தடாகத்தையும் வியாபித்தீர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------
யோக3ப்ரபா4வாத்3 ப4வதாக்ஞயைவ
நீதஸ்ததஸ்த்வம் முனினா பயோதி4ம் |
ப்ருஷ்டோsமுனா கல்ப தி3த்3ருக்ஷுமேனம்
ஸப்தாஹமாஸ்வேதி வதன்னையாஸீ: || (32 – 4)


அதன் பின் தங்கள் கட்டளையின் படி அந்த ராஜருஷி தன் யோக மகிமையால் தங்களைச் சமுத்திரத்தில் கொண்டு சேர்த்தார். பிரளயத்தைக் காண விரும்பிய அவரிடம் தாங்கள், “ஏழு நாட்கள் பொறுத்திரு!” என்று கூறி விட்டு மறைந்து விட்டீர்கள் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------
ப்ராப்தே த்வது3க்தோsஹனி வாரிதா4ரா
பரிப்லுதே பூ4மிதலே முனீந்த்ர: |
ஸப்தர்ருஷிபி4: ஸார்த்த4 மபாரவாரிண்
யுத்கூர்ணமான: ச’ரணம் யயௌ தாம் || (32 – 5)

தாங்கள் குறிப்பிட தினம் வந்தபோது, கொட்டிய கன மழையால் பூமி மூழ்கி விட்டது. அந்த ராஜருஷியும் சப்த ருஷிகளுடன் பிரளய ஜலத்தில் சுழன்று கொண்டு தங்களிடம் சரணடைந்தார்.

--------------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 32 : மத்ஸ்யாவதார வர்ணனம்

த4ராம் த்வதா3தே3ஷ கரீமவாப்தாம்
நௌரூபிணிமாருருஹுஸ் ததா தே |
தத் கம்பகம்ப்ரேஷு ச தேஷு பூ4ய:
த்வமம்பு3 தே4ரா விரபூ4ர் மஹீயான் || (32 – 6 )


அப்போது அவர்கள் தங்களின் கட்டளைக்கு இணங்கி தோணி ரூபமாக அங்கு வந்த பூமியில் ஏறிக் கொண்டார்கள். அந்தத் தோணியின் ஆட்டத்தில் அவர்கள் நடு நடுங்கியபோது தங்கள் முன்னிலும் பெரிய மீனாக உருவெடுத்துச் சமுத்திரத்தில் தோன்றினீர்கள் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------

ஜ்ஜஷாக்ருதிம் யோஜன லக்ஷ தீர்க்கா4ம்
த3தா4னமுச்சைஸ் தரதேஜஸம் த்வாம்|
நிரீக்ஷ்ய துஷ்டா முனயஸ் த்வது3க்த்யா
த்வத் துங்க3 ச்3ருங்கே3 தரணிம் ப3ப3ந்து4: || (32 – 7 )

லக்ஷ யோஜனை நீண்ட மீன் உருவத்தைத் தாங்கிய, அதிக தேஜஸ்ஸுடன் கூடியத் தங்களைக் கண்டு முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். தாங்கள் கூறியபடித் தோணியைத் தங்கள் உயர்ந்த கொம்பில் கட்டினார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்ருஷ்ட நௌகோ முனி மண்ட3லாய
ப்ரத3ர்ச3யன் விச்’வ ஜக3த்3 விபா4கா3ன் |
ஸம் ஸ்தூயமானோ ந்ருவரேண தேன
ஞானம் பரம் சோப தி3ச’ன்னசாரீ: || (32 – 8 )

அந்தத் தோணியை இழுத்துக் கொண்டும், முனிவர்களுக்கு உலகின் எல்லாப் பிரிவுகளையும் காண்பித்துக் கொண்டும், அந்த அரசனுக்கு ஆத்மஞானத்தை உபதேசித்துக் கொண்டும், அதனால் அவரால் அங்கு நன்கு துதிக்கப் பட்டும் தாங்கள் சஞ்சரித்தீர்கள் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------------

கல்பாவதௌ4 ஸப்த முனீன் புரோவத்
ப்ரஸ்தா2ப்ய ஸத்யவ்ரத பூ4மிபம் தம் |
வைவஸ்வதாக்2யம் மனுமாத3தா4ன :
க்ரோதா4த்3 ஹயக்3ரீவ மபி4த்3ருதோs பூ4: | (32 – 9 )

பிரளயத்தின் முடிவில் சப்த ரிஷிகளை முன்போலவே ஸ்தாபித்தீர்கள். சத்யவிரதனை வைவஸ்வத மனுவாக ஆக்கினீர்கள். கோபத்துடன் ஹயக்ரீவ அசுரனுடன் போர் புரிந்தீர்கள்.

--------------------------------------------------------------------------------------------------------

ஸ்வதுங்க3 ச்’ருங்க3 க்ஷத வக்ஷஸம் தம்
நிபாத்ய தை3த்யம் நிக3மான் க்3ருஹீத்வா |
விரிஞ்சயே ப்ரீத ஹ்ருதே3 த3தா3ன:
ப்ரப4ஞ்ஜனாகா3ரபதே ப்ரபாயா: || (32 – 10)

உயர்ந்த உமது கொம்பினால் அசுரனின் மார்பைப் பிளந்தீர்கள். அந்த அசுரனைக் கீழே தள்ளிவிட்டு வேதங்களை மீட்டு பிரம்ம தேவனுக்குக் கொடுத்து அவனை உவகை கொள்ளச் செய்தீர்கள். குருவாயூரப்பா! என்னை ரட்சிக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------------
 
த3ச’கம் 33 : அம்ப3ரீஷோபாக்2யானம்

வைவஸ்தாக்ய மனுபுத்ர நபா4க3 ஜாத
நாபா4க3 நாமக நரேந்த்ர ஸுதோம்sப3ரீஷ:|
ஸப்தார்ணவாவ்ருத மஹீத3யிதோsபி ரேமே
த்வத் ஸங்கி3ஷு த்வயி ச மக்3னமனா: ஸதை3வ || (33 – 1)

வைவஸ்வத மனுவின் குமாரன் நபாகனின் புத்திரன் நாபாகன். இவருடைய மகன் அம்பரீஷன் ஏழு சமுத்திரங்களால் சூழப்பட்ட பூமியின் அதிபதியாக இருந்த போதிலும், தங்களிடத்திலும் தங்களின் பக்தர்களிடதிலும் ஆழ்ந்த மனத்துடன் ஆனந்தமாக இருந்து வந்தார்.

-----------------------------------------------------------------------------------------------------

த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதன்வதோsஸ்ய
ப4க்த்யைவ தே3வ நசிராத3ப்4ருதா2: ப்ரஸாத3ம் |
யேனாஸ்ய யாசனம்ருதேsப்யபி4 ரக்ஷணார்த்தம்
சக்ரம் ப4வான் ப்ரவிததார ஸஹஸ்ர தா4ரம் || (33 – 2)

சர்வேசா ! தங்கள் ப்ரீதிக்காகவே அம்பரீஷன் எல்லாக் கர்மங்களையும் அனுஷ்டித்து வந்தான். அவன் பக்தியை மெச்சி வெகு சீக்கிரமாகத் தாங்கள் அனுக்ரஹம் செய்தீர்கள். அதனால் அவன் கேட்காமல் இருந்த போதிலும் அவனை ரக்ஷிப்பதற்கு ஆயிரம் முனைகளையுடை தங்களின் சுதர்சனச் சக்கரத்தைக் கொடுத்தீர்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------

ஸ த்3வாத3சீ’ வ்ரதமதோ2 ப4வத3ர்சனார்த்த2ம்
வர்ஷம் த3தௌ4 மது4வனே யமுனோப கண்டே2 |
பத்ன்யா ஸமம் ஸுமனஸா மஹதீம் விதன்வன்
பூஜாம் த்3விஜேஷு விஸ்ருஜன் பசு’ ஷஷ்டி கோடிம் || (33 – 3)

அம்பரீஷன் யமுனையின் கரையில் உள்ள மது வனத்தில் தன் மனைவியுடன் புஷ்பங்களைக் கொண்டு தங்களை பூஜித்தான். பிராமணர்களுக்கு அறுபது கோடி பசுக்களைத் தானம் செய்தான். தங்களை ஆராதிப்பதற்காக ஓராண்டு காலம் துவாதசீ விரதத்தை அனுஷ்டித்தான் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------------

தத்ராத2 பாரண தி3னே ப4வ த3ர்சனாந்தே
துர்வாஸஸாsஸ்ய முனினா ப4வனம் ப்ரபேதே3|
போ4க்தும் வ்ருதச்’ச ஸ ந்ருபேண பரார்த்திசீ’லோ
மந்த3ம் ஜகா3ம யமுனாம் நியமான் விதா4ஸ்யன் || (33 – 4)

அப்போது அந்த இடத்தில் பாரணை செய்து பூஜையை முடிக்க வேண்டிய தினத்தில், துர்வாச முனிவர் தங்கள் அரண்மனையை அடைந்தார். அவரிடம் போஜனம் செய்யுமாறு அம்பரீஷன் வேண்டிகொண்டான். பிறரைத் துன்புறுத்தும் இயல்புடைய அந்த முனிவர் நியமங்களை அனுஷ்டிக்க யமுனை நதிக்கு மிகவும் மெதுவாகச் சென்றார்.

-------------------------------------------------------------------------------------------------------------

ராக்ஞாsத2 பாரண முஹூர்த்த ஸமாப்தி கே2தா3த்3
வாரைவ பாரணமகாரி ப4வத் பரேண |
ப்ராப்தோ முனிஸ்தத3த2 தி3வ்ய த்3ருச்’யா விஜானன்
க்ஷிப்யன் க்ருதோ4த்3த்4ருத ஜடோ விததான் க்ருத்யாம் || (33 – 5)

பாரணைக்கு உரிய நேரம் கடந்துவிடும் என்று வருந்திய அம்பரீஷன், வெறும் நீரைப் பருகிப் பாரணையை முடித்துக் கொண்டான். அதன் பின்னர் அங்கு வந்த துர்வாசர் திவ்ய திருஷ்டியால் அதை அறிந்து கொண்டார். அம்பரீஷனைக் கடிந்து கொண்டு விட்டுக் கோபத்தில் தன் ஜடையைப் பிய்த்து அதிலிருந்து கிருத்தியை என்ற ஒரு துஷ்ட தேவதையைச் சிருஷ்டி செய்தார்.

----------------------------------------------------------------------------------------------------------
 
Here is the poem i just promised.
You will find more on NaaraayaNa here
https://visalramani.wordpress.com/


செவிடன் காது!



ஒருமுறை கேட்டேன் அறியாமையால்,
குருவிடம் நான் ஒரு சிறிய கேள்வி!

“பாங்குடன் உலகைக் காக்கும் கைகளில்,
சங்கு, சக்கரம், கதை, தாமரைகள் ஏன்?”

சிறு குழந்தைக்குச் சொல்வது போல,
சிரித்தபடியே சொன்னார் எங்கள் ஆசான்.

“இறைவன் நல்வழி நடப்பவர்களுக்கு,
சிறந்த தாமரை மலரினைத் தருவான்.”

தவறு செய்வோரை, சங்கொலி எழுப்பி,
கவனத்துடன் நடக்கும்படிச் சொல்வான்.

செவிடன் காதில் ஊதிய சங்கானால்,
செவிட்டில் அடிப்பான் கதையினால்!

தடுத்தும் மீண்டும் வரம்பு மீறினால்,
எடுப்பான் சக்கராயுதத்தை!”, என்றவர்

“உங்களுக்கு வேண்டியது தாமரையா,
சங்கா, சக்கரமா?”, எனக் கேட்டார்!

கனியிருக்கக் காய்களைக் கவருவோமா?
இனிய தாமரை இருக்க மற்றவை எதற்கு?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி


THE CONCH AND THE DEAF EARS.

I asked my guru one day, “Why does the protector of the creation –
VishnU-carry a lotus flower, a conch, a mace and a discus?”

My guru was pleased with my question and replied with a smile.

“God will present the lovely lotus flower to everyone treading on the path of dharmA.

He will blow his conch and warn the person who commits occasional mistakes.

He will give a light blow or a gentle knock with His mace, if the person continues in the path of adharmA.


If His warnings fall on deaf ears, He will use His discus. Which of these do you want to get?”


We are not fools to prefer sour fruits to ripe sweet ones
nor the conch, the mace and the discus to the lovely lotus flower!
 
அகர வரிசைப் பாட்டு


அன்பர் உள்ளம் உறைபவனே வா வா கண்ணா;
ஆலிலை மேல் பாலகனே வா வா கண்ணா.

இடையர் குலத்திலகமே நீ வா வா வா கண்ணா;
ஈரேழ் உலகும் காப்பவனே வா வா கண்ணா.

உலகை உண்டு உமிழ்ந்தவனே வா வா வா கண்ணா;
ஊதும் குழல் கை அழகா வா வா கண்ணா.

எதுகுலத்தில் உதித்தவனே வா வா வா கண்ணா;
ஏழுமலை ஆண்டவனே வா வா கண்ணா.

ஐவர்களின் நண்பனே நீ வா வா வா கண்ணா;
ஒளி விடும் நடனாகரனே வா வா கண்ணா.

ஓங்கி வளர்ந்த வாமனனே வா வா வா கண்ணா;
ஒளஷதமே ஆரமுதே வா வா கண்ணா.

ஆடி வா நீ ஓடி வா நீ வா வா வா கண்ணா;
ஓடி வா நீ ஆடி வா நீ வா வா கண்ணா.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி



THE DIVINE BABY KRISHNA.

He who resides in His Baktha’s hrudhayam,
He who floats in the waters of Pralayam;

He who is a gem among the innocent cowherds,
He who is the protector of the fourteen worlds;

He who conceals and restores Creation,
He who plays flute for His recreation;

He who grew up in Yadhu Kula,
He who is the Lord of Thirumala;

He who is is the friend of Pandavas,
He who on Kaliya did divine Thandavas;

He who as Thrivikrama performed the improbability,
He whose name is the nectar bestowing immortality.

Come to me! Come tome! Come to me!
 
[h=1]கண்ணன் என் கடவுள்.[/h]
எண்ண இனிப்பவன் கண்ணன்,
என்றும் இனியவன் கண்ணன்;
எங்கும் இருப்பவன் கண்ணன்,
எங்கள் இதயத்தில் கண்ணன்.

மண்ணை உண்டவன் கண்ணன்,
விண்ணை அளந்தவன் கண்ணன்;
மங்கையைக் காத்தவன் கண்ணன்,
மாயங்கள் செய்தவன் கண்ணன்.

குன்றை எடுத்தவன் கண்ணன்,
கோகுலம் காத்தவன் கண்ணன்;
கன்றை மயக்கிடும் கண்ணன்,
கன்னியர் விரும்பிடும் கண்ணன்.

இசையின் கடவுளும் கண்ணன்,
இடையர் பிள்ளையும் கண்ணன்;
கீதையைத் தந்தவன் கண்ணன்,
கிரிதரனும் அந்தக் கண்ணன்.

மேதைகள் போற்றிடும் கண்ணன்,
பேதைகள் வணங்கிடும் கண்ணன்;
தேவர்கள் தொழுதிடும் கண்ணன்,
தெய்வங்களின் தலைவன் கண்ணன்.

நீயே கதி என்று சொன்னால்,
நித்தமும் காத்திடும் கண்ணன்;
தாயும் தந்தையுமாகி நல்ல
தயை புரிந்திடும் கண்ணன்.

வெண்ணை திருடிய கண்ணன்,
வெள்ளை மனம்கொண்ட கண்ணன்;
மண்ணில் இவனைப் போல் உண்டோ?
எண்ணித் தெரிந்தவரை இல்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.



THE GLORIES OF LORD KRISHNA.


He is deliciously sweet to think about,
The thoughts about Him are also sweet;
With His presence the Universe is built,
He who resides in everyone’s heart.


He ate the soil quite playfully,
He measured world equally playfully;
He saved pAnchAli from public shame,
His countless miracles sing His fame.


He lifted the mountain Govardhana,
And protected Gokulam from Indra;
He mesmerized the calves and cow,
Every pretty damsel was His Lady Love.


He is the God of Music divine,
A cowherd, walking by the ravine;
Giridhara is the great dharma dhAtA,
Through His gospel of The Bagavat Gita.


The learned men always praise Him,
The illiterate men always worship Him,
The Deva and others beings adore Him,
The God of all the Gods-it is always Him.


He becomes the kindest mother,
The guiding and protecting father;
The most dependable elder brother,
To Him who surrender do never bother.


He enjoys eating the stolen butter,
His heart is as soft as the butter;
Can there can be another like Him?
If there is one, I’m yet to find Him!


Seeking His blessings,
For ever and ever,
For everyone here,
Visalakshi Ramani.

 
த3ச’கம் 33 ( 6 to 10)

த3ச’கம் 33 : அம்ப3ரீஷோபாக்2யானம்

க்ருத்யாம் ச தாமஸித4ராம் 4 த3ஹந்தீம்
அக்3ரேSபி4வீக்ஷ்ய ந்ருபதிர் ந பதாச்ச கம்பே |
த்வத்3 ப4க்த பா3த4 மபி4வீக்ஷ்ய ஸுத3ர்ச’னம் தே
க்ருத்யானலம் ச’லப4யன் முனிமன்வதா4வீத் || (33 – 6)


கையில் கத்தியை ஏந்திக் கொண்டு, உலகங்களை எரிப்பவளாக அந்தக் கிருத்தியை நேராக எதிரில் வரக் கண்ட பின்னும் அம்பரீஷன் அந்த இடத்தில் இருந்து அசையவில்லை. தங்கள் பக்தனை பாதிக்க வந்த அந்த கிருத்தியை என்ற துஷ்ட தேவதையைச் சுதர்சனச் சக்கரம் ஒரு வெட்டுக் கிளியைத் தீ விழுங்குவது போல விழுங்கி விட்டது. அதன் பிறகு துர்வாசரைத் துரத்தத் தொடங்கியது.

----------------------------------------------------------------------------------------------------------

தா4வன்னசேஷ பு4வனேஷு பி4யா ஸ பச்’யன்
விச்’வத்ர சக்ரமபி தே க3தவான் விரிஞ்சிம் |
க: காலசக்ரமதி லங்க4யதீத்தயபாஸ்த:
ச’ர்வம் யயௌ ஸ ச ப4வந்தமவந்த3தைவ || (33 – 7 )

துர்வாசர் பயந்து உலகமெல்லாம் ஓடிய போதிலும் சுதர்சனச் சக்கரம் அவரைப் பின் தொடர்ந்தது. அவர் பிரம்ம தேவரிடம் சென்றார். “காலச் சக்கரத்தை யாரால் மீற முடியும்?” என்று கேட்டுவிட்டு பிரம்மன் அவரைக் கைவிட்டு விட்டான். பிறகு முனிவர் சிவனிடம் ஓடிச் சென்றார். அந்தச் சிவனும் தங்களையே நமஸ்கரித்தார்.

-------------------------------------------------------------------------------------------------------------------

பூ4யோ ப4வன்னிலயமேத்ய முனிம் நமந்தம்
ப்ராசே ப4வானஹம்ருஷே நனு ப4க்ததா3ஸ: |
ஞானம் தபச்’ச வினயான்விதமேவ மான்யம்
யாஹ்யம்ப3ரஷ பத3மேவ ப4ஜேதி பூ4மன் || (33 – 8)

ஒப்புயர்வற்ற தேவா! பிறகு தங்கள் இடமாகிய வைகுண்டத்துக்கு வந்து துர்வாச முனிவர் தங்களை நமஸ்கரித்தார். தாங்கள் அவரைப் பார்த்து, “ஹே மஹரிஷி! நான் என் பக்தர்களின் தாசன் அல்லவா? ஞானமும், தவமும் வினயத்துடன் இருந்தால் மட்டுமே அவை வெகுமானிக்கத் தகுந்தவை. தாங்கள் இங்கிருந்து போகலாம். சென்று அம்பரீஷனின் பாதங்களையே சரண் அடையுங்கள்” என்று கூறினீர்கள் அல்லவா?

----------------------------------------------------------------------------------------------------------------

தாவத் ஸமேத்ய முனினா ஸ க்3ருஹீத பாதோ3
ராஜாSப்யஸ்ருத்ய ப3வத3ஸ்த்ர மஸாவநௌஷீத் |
சக்ரே க3தே முனிரதா3த3கி3லா சி’ஷோSஸ்மை
த்வத்3ப4க்திமாக3ஸி க்ருதேSபி க்ருபாம் ச ச’ம்ஸன் || (33 – 9 )

அப்போதே ஓடி வந்த முனிவர் தன் பாதங்களைப் பிடித்தவுடன் அம்பரீஷன் சற்றுப் பின் வாங்கினான். பிறகு தங்களின் சக்கராயுதத்தைத் துதித்தான். சக்கரம் திரும்பிச் சென்று விட்டது. முனிவர் அரசனுக்குத் தங்களிடம் உள்ள பக்தியையும், தீங்கு செய்த தனக்கு அவன் காட்டிய கருணையையும் புகழ்ந்துவிட்டு அவனை நன்கு ஆசீர்வதித்தார் அல்லவா?

---------------------------------------------------------------------------------------------------------------------

ராஜா ப்ரதீக்ஷ்ய முனிமேகஸமாமனாச்’வான்
ஸம்போ4ஜ்ய ஸாது4 தம்ருஷிம் விஸ்ருஜன் ப்ரஸன்னம்|
பு4க்த்வா ஸ்வயம் த்வயி ததோSபி த்3ருட4ம் ரதோSபூ4த்
ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவனேச’ பாயா: || (33 – 10)

அம்பரீஷன் துர்வாச முனிவரை எதிர்பார்த்து மேலும் ஓராண்டு ஆகாரம் பண்ணாமல் இருந்தான். அந்த முனிவருக்குத் திருப்தி ஏற்படும் வண்ணம் அவருக்கு நன்றாக போஜனம் செய்வித்தான். சந்தோஷம் அடைந்த முனிவரை வழி அனுப்பிவிட்டுத் தானும் போஜனம் செய்து தங்களிடம் முன்பை விடவும் அதிக பக்தி கொண்டான். இறுதியில் தங்களின் சாயுஜ்யத்தையும் அடைந்தான் அம்பரீஷன். அப்படிப்பட்ட மகிமை உடைய தாங்கள் என்னைக் காப்பாற்ற வேண்டும் குருவாயூரப்பா!

-------------------------------------------------------------------------------------------------------------
 
Amma thanks for the response. All the happenings in the NARAYANEEAM are much valuable and inspirable. Every instant is really enjoyable His MAHIMA can not be simply told. SARVAM KRISHNARPANAMASTHU.
I am son Chakrapani
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top