த3ச’கம் 38 ( 1 to 5)
கிருஷ்ணாவதாரம்
ஆனந்த3ரூப ப4க3வன்னயி தேSவதாரே
ப்ராப்தே ப்ரதீ3ப்த ப4வதங்க3 நிரீயமாணை:|
காந்தி வ்ரஜைரிவ க4னாக4ன மண்ட3லைர்த்3யா:
ஆவ்ருண்வதி விருருசே கில வர்ஷவேலா ||(38 – 1)
ஆனந்த ரூபியாகிய பகவானே! தங்கள் திரு அவதார சமயம் நெருங்கியபோது, தங்கள் திருமேனியில் இருந்து வெளிப்படும் கிரணக் கூட்டங்களை ஒத்த மேகக் கூட்டங்கள், வான வெளியை மறைத்துக் கொண்டு இருக்கும் மழைக் காலமாக இருந்தது.
ஆசா’ஸு சீ’தலதராஸு பயோத3தோயை
ராசா’ஸிதாப்தி விவசே’ஷு ச ஸஜ்ஜனேஷு |
நைசா’ கரோத3யவிதௌ4 நிசி’ மத்3யமாயாம்
க்லேசா’பஹஸ் த்ரிஜக3தாம் த்வமிஹாவிராஸீ:||(38 – 2)
மழை நீரால் எல்லா திசைகளும் நன்கு குளிர்ந்து, நல்லோர்கள் தாங்கள் விரும்பிய காரியம் கைகூடியதால் ஆனந்தப் பரவசம் அடைந்தபோது, நடு நிசியில், சந்திரன் உதிக்கும் வேளையில், மூவுலகங்களின் துயர்களைத் துடைக்க வந்த தாங்கள் திரு அவதாரம் செய்தீர்கள்
பா3ல்யச்’ப்ருசா’பி வபுஷா த3து4ஷா விபூ4தி:
உத்3யத் கிரீட கனகாங்க3த3 ஹாரபா4ஸா |
ச’ங்காரிவாரிஜ க3தா3 பரி பா4ஸிதேன
மேகா4ஸிதேன பரிலேஸித2 ஸூதி க்3ருஹே|| ( 38 – 3)
பால பாவத்தை அடைந்திருந்தாலும் ஐஸ்வர்யங்களைத் தரிக்கின்றதும்; ஜொலிக்கின்ற கிரீடம், கை வளைகள், தோள் வளைகள், முத்துமாலைகள் இவற்றால் காந்தியுடன் விளங்குவதும்; சங்கம், சக்கரம், பத்மம், கதை இவற்றுடன் விளங்குவதும்; மேகம் போன்ற நீல நிறத்தை உடையதும் ஆன திருமேனியுடன் பிரசவ அறையில் தாங்கள் விளங்கினீர்கள்.
வக்ஷ ஸ்த2லீ திருஷ்டி மகரந்த ரசம் நிலீன விலாஸி லக்ஷ்மி
மந்தா3க்ஷ லக்ஷித கடா2க்ஷ விமோக்ஷ பே4தை3: |
த்வன் மந்தி3ரஸ்ய க2லகம்ஸ க்ருதாமலக்ஷ்மிம்
உன்மார்ஜயன்னிவ விரேஜித வாஸுதே3வ ||(38 – 4)
ஹே வாசுதேவனே ! உங்கள் மார்பில் சுகமாக வாசம் செய்யும் அழகுடைய லக்ஷ்மி தேவியின் வெட்கம் கலந்த கண் பார்வையால், அந்த அறையில் துஷ்டனான கம்சனால் உண்டு பண்ணப்பட்ட அலக்ஷ்மியை நாசம் செய்தீர்கள் நீங்கள்.
சௌ’ரிஸ்து தீ4ர முனிமண்ட3ல சேதஸோபி
தூ3ரஸ்திதம் வபுருதீ3க்ஷ்ய நிஜேக்ஷணாப்4யாம் |
ஆனந்த பா4ஷ்ப புலகோத்3க3ம க3த்3க3தா3ர்த்3ர
ஸ்துஷ்டாவ த்3ருஷ்டி மகரந்த3 ரஸம் ப4வந்தம் ||(38 – 5)
வசுதேவர்,ஞானிகளாகிய முனிவர்களின் புத்திக்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருக்கும் தங்கள் திருவடிகளைத் தன் கண்களால் தரிசித்து; ஆனந்தக் கண்ணீர், மயிர்க் கூச்சம், குரல் தழுதழுப்பு இவற்றால் கனிந்து; கண்களுக்குப் பூந்தேன் போன்று இருக்கும் தங்களைத் துதித்தார்.