#3. The birth of Ganesha.
யானைமுகன்
யானைமுகன் திரிந்தான் உலகமெங்கும்;
யானைமுகன் கொன்றான் உயிர்களை!
யானைமுகனின் தன்மைகளை அறிந்து
யானைமுகனை அணுகினார் குலகுரு.
“அசுர குலத்தின் குலகுரு சுக்கிரன்
அரசன் ஆணைப்படி வந்துள்ளேன்!
கற்க வேண்டியவை உள்ளன பல.
கற்பிக்க விரும்பியே வந்துள்ளேன்.
சிவபெருமானை அறியவில்லை நீ!
தவம் எதுவும் புரியவில்லை நீ!
அறியவில்லை பகைவரின் பண்பை
அறியவில்லை நிலையாமையை.
வாணாளை வீணாளாகக் கழித்தாய்.
வானவரையும் ஆளலாம் முயன்றால்.”
குலகுருவின் அடிகளைப் பணிந்தான்,
“நலம் பயக்கும் சொற்கள் புகன்றீர்.
தவம் புரியும் முறையை அறியேன்
தயை புரிந்து கற்பியுங்கள் அதனை!”
சுக்கிரரிடம் கற்றான் அக்கறையுடன்;
உக்கிர தவம் செய்ய விழைந்தான்.
“தவம் புரியத் தகுந்த இடம் மேரு!
தவம் புரிந்து அடைவாய் மேன்மை!”
யானைமுகன் சென்றான் மேருவுக்கு.
யானைமுகன் செயல்களை அறிந்து
பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் அசுரர்,
பெரும் துயர் அடைந்தனர் தேவர்கள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
யானைமுகன்
யானைமுகன் திரிந்தான் உலகமெங்கும்;
யானைமுகன் கொன்றான் உயிர்களை!
யானைமுகனின் தன்மைகளை அறிந்து
யானைமுகனை அணுகினார் குலகுரு.
“அசுர குலத்தின் குலகுரு சுக்கிரன்
அரசன் ஆணைப்படி வந்துள்ளேன்!
கற்க வேண்டியவை உள்ளன பல.
கற்பிக்க விரும்பியே வந்துள்ளேன்.
சிவபெருமானை அறியவில்லை நீ!
தவம் எதுவும் புரியவில்லை நீ!
அறியவில்லை பகைவரின் பண்பை
அறியவில்லை நிலையாமையை.
வாணாளை வீணாளாகக் கழித்தாய்.
வானவரையும் ஆளலாம் முயன்றால்.”
குலகுருவின் அடிகளைப் பணிந்தான்,
“நலம் பயக்கும் சொற்கள் புகன்றீர்.
தவம் புரியும் முறையை அறியேன்
தயை புரிந்து கற்பியுங்கள் அதனை!”
சுக்கிரரிடம் கற்றான் அக்கறையுடன்;
உக்கிர தவம் செய்ய விழைந்தான்.
“தவம் புரியத் தகுந்த இடம் மேரு!
தவம் புரிந்து அடைவாய் மேன்மை!”
யானைமுகன் சென்றான் மேருவுக்கு.
யானைமுகன் செயல்களை அறிந்து
பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் அசுரர்,
பெரும் துயர் அடைந்தனர் தேவர்கள்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.