Raji Ram
Active member
To think over...
எப்படி உருவாக்க முடியும்?
இளைஞரின் பேச்சு திரைப்படங்களில் வருகிறதா,
இளைஞர்கள் திரைப்படம் பார்த்துக் கற்கின்றாரா?
கல்லூரிப் பிள்ளைகளின் மொழி, தரமும் தாழ்ந்து,
உள்ளூரத் தற்பெருமையையும் வளர்ப்பது நிஜமே!
எவரை கண்டாலும், நல்ல குணங்களைப் பாராது,
அவரது குறைகளைக் 'கலாய்ப்பது' பெருமையாம்!
கலகலப்பாக இருப்பதாக நினைத்து, இது போன்று
கலாய்க்கும் சமுதாயம் ஏன் உருவானது? முதலில்
இந்தச் சொல்லே எப்போது அகராதியிலே வந்தது?
இந்தச் சமுதாயத்தை அது சீரழிக்க முனைகிறது!
எல்லோரும் அழகாகப் பிறக்க முடியாது; அதுபோல்
எல்லோரும் ஒரே அளவில் வார்த்திருக்க முடியாது!
உயரம் அதிகமானால் 'மலை, நெடு மரம், கொக்கு!'
உயரம் குறைவானால் 'எலி, குள்ளமணி, ஆழாக்கு!'
கண்ணாடி அணிந்தால் 'சோடா புட்டி', பற்கள் ஒரு
பெண்ணுக்கு நீண்டிருந்தால் 'தேங்காய்த் துருவி!'
இப்படியே இளைஞர்கள் பேசிக்கொண்டு இருந்தால்,
எப்படி நல்ல சமுதாயத்தை உருவாக்கிட முடியும்?
இனிய உளவாக இன்னாத கூறாத பழக்கம் வந்தால்,
இனி ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க இயலும்!
:decision:
P.S: Last two lines are for all of us to think over seriously!!