61c. அரனும், அரசனும்.
# 61 (c). அரனும், அரசனும்.
“கரையை எல்லோரும் அடைத்துவிட்டனர்;
கரையை அடைக்காதவன் வந்தியின் ஆள்.
அழகன், இளைஞன், கூலியாள் போலில்லை.
அரசன் மகன் போல் ஆட்டம் போடுகிறான்.
ஆடியும், பாடியும், ஓடியும், சாடியும்,
வேடிக்கைகள் பல செய்து வருகிறான்.
மண்ணை அளைவான், நீரில் நீந்துவான்,
சின்னப் பிள்ளை போல சேட்டை செய்வான்.
தண்டிக்கவும் என் மனம் ஒப்பவில்லை.
கண்டித்தால் அவன் பதில் பேசவில்லை.”
மந்திரிகள் புடைசூழ மன்னன் வந்தான்.
வந்தியின் கரை அடைக்கப்படவில்லை.
அடுத்த கரையும் இடிந்து போனதால்
கடும் கோப வசப்பட்டான் மன்னன்.
பொற்பிரம்பை எடுத்து உயர்த்தினான்;
வெற்று முதுகில் ஓங்கி அடித்தான்!
கூடையுடன் மண்ணைக் கொட்டிவிட்டு
கூப்பிடும் முன்னே அவன் மறைந்தான்.
அண்ட சராசரங்களையும் தன்னுள்
கொண்ட திருமேனியை அடித்ததால்,
அவன் முதுகில் இட்ட அடி, பட்டது
அவன் தாங்கும் அனைவர் முதுகிலும்.
அரசன், மந்திரி, ஏவலர், காவலர்,
அரசி, அரசகுமாரன், சேடிப்பெண்கள்,
பிரதானிகள், குடிமக்கள், மகளிர்,
பிரபுக்கள், சிறுவர், சிறுமியர் என,
ஐம் பூதங்கள், பதினான்கு உலகங்கள்,
மும் மூர்த்திகள், தேவாதி தேவர்கள்,
அத்தனை பேரும் கலங்கி நின்றனர்,
அத்தன் முதுகில் விழுந்த அடியால்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
# 61 (c). அரனும், அரசனும்.
“கரையை எல்லோரும் அடைத்துவிட்டனர்;
கரையை அடைக்காதவன் வந்தியின் ஆள்.
அழகன், இளைஞன், கூலியாள் போலில்லை.
அரசன் மகன் போல் ஆட்டம் போடுகிறான்.
ஆடியும், பாடியும், ஓடியும், சாடியும்,
வேடிக்கைகள் பல செய்து வருகிறான்.
மண்ணை அளைவான், நீரில் நீந்துவான்,
சின்னப் பிள்ளை போல சேட்டை செய்வான்.
தண்டிக்கவும் என் மனம் ஒப்பவில்லை.
கண்டித்தால் அவன் பதில் பேசவில்லை.”
மந்திரிகள் புடைசூழ மன்னன் வந்தான்.
வந்தியின் கரை அடைக்கப்படவில்லை.
அடுத்த கரையும் இடிந்து போனதால்
கடும் கோப வசப்பட்டான் மன்னன்.
பொற்பிரம்பை எடுத்து உயர்த்தினான்;
வெற்று முதுகில் ஓங்கி அடித்தான்!
கூடையுடன் மண்ணைக் கொட்டிவிட்டு
கூப்பிடும் முன்னே அவன் மறைந்தான்.
அண்ட சராசரங்களையும் தன்னுள்
கொண்ட திருமேனியை அடித்ததால்,
அவன் முதுகில் இட்ட அடி, பட்டது
அவன் தாங்கும் அனைவர் முதுகிலும்.
அரசன், மந்திரி, ஏவலர், காவலர்,
அரசி, அரசகுமாரன், சேடிப்பெண்கள்,
பிரதானிகள், குடிமக்கள், மகளிர்,
பிரபுக்கள், சிறுவர், சிறுமியர் என,
ஐம் பூதங்கள், பதினான்கு உலகங்கள்,
மும் மூர்த்திகள், தேவாதி தேவர்கள்,
அத்தனை பேரும் கலங்கி நின்றனர்,
அத்தன் முதுகில் விழுந்த அடியால்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.