• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

During my son's wedding in U.S.A, we got to meet all his colleagues and their secretaries.

They were very nice people and they congratulated us for the way we had brought up our son.

Subsequently we were invited to the farewell party arranged by his department colleagues.

I met a very handsome guy with a brilliant smile. No wonder he was the chosen one to perform the experiments in front of the T.V. Camera!

We got into conversation. He told me that he too had married an Asian girl - a Korean.

He went on to say that his in-laws were visiting him right then. His wife would show them around and accompany them on their shopping sprees.

He himself did not know a word of Korean language and his in-laws did not know a word of English.

I asked him,"How do you communicate with them then?"

He replied giving me one of his brilliant smiles and said,

"I will give them a smile every time I come face to face with them and get out of their way as quickly as possible!"

I asked him, "So your smile will be invariably followed by your disappearing act?"

He chuckled heartily and said, "Yes you may say so!"

Disappearing Acts come in very handy in everyday life when

1. we do not KNOW to communicate,

2. when we do not WISH to communicate and

3. when the 'cat gets our tongue' and we become tongue-tied!

In my opinion Silence is GOLDEN even otherwise.
 
malarum ninaivugaL...

மிருதங்கம் மணி.

A. I. R. Artist! பந்தா பார்ட்டி!!
நிறைய மாணவர்கள் உண்டு!!!

Rehearsal என்றாலே பிடிக்காது!
"rehearsal எனக்குத் தேவையில்லை!"

ஒரே பதில் தான் வரும் எப்போதுமே!
ஒருவேளை வந்தாலும் பீஸ் உண்டு!

பாட்டுக்கு அவர் வாசிப்பதற்கும், :drum:
நாட்டியத்திற்கு வாசிப்பதற்கும்,

உள்ள வேறுபாடுகளை என்னால்
உணர வைக்கவே முடியவில்லை! :(

சொந்தச் சரக்கு ஜொலிக்கும்
இசைக்கச்சேரிகளில் என்றும்!

நாட்டியத்திலோ மிருதங்கம்,
நாட்டிய ஜதிகளுடன் கலந்து,

அல்வாத் துண்டுகள் போல
ஜாதிகளை
அனுபவிக்க எளிதாக்க வேண்டும்.

ஜதியை எழுதிக் கொடுத்தால்,
ஜம்பமாகக் கடாசி விடுவார்.

பாடும் போது, முத்தாய்ப்பு
முடியும் வரையில் பாடகர்,

புன்சிரிப்புடன் அமரலாம்;
அதில் எந்த தவறும் இல்லை.

திடீர் முத்தாய்ப்புகள் வாசித்தால்,
நடனமணிகள் வெறுமனே,

மேடையில் சிரித்துக் கொண்டு,
பேசாமல் நிற்க முடியுமா?

இந்த வேறுபாடுகளை அவர்
புரிந்து கொள்ளவே இல்லை.

நிறைய rehearsal செய்வோம்!
பாடா விட்டால் கூட மாணவிகள்

பாங்காக ஆடி விடுவார்கள்!
Puncture ஆக மாட்டார்கள்!
 

"Go back to your normal life ASAP !!!"

When I underwent hysterectomy in my early forties,
my good friend and surgeon Dr. Gita advised me,

"GO back to your normal life as quickly as possible!"

While the others were saying "Don't do this!" "Don't lift this" "Don't eat this" etc, she insisted that I should return to my normal life style
as quickly as possible.

How right she was!!!

I went back to my busy schedule and kept depression as far away from me as possible. I had every reason to become depressed and wallow in selfpity!

For the next three years I was all alone
with my sons away in their hostel
and my husband away in Mumbai.

If I had let selfpity take over me,
if I had let depression approach me,
I would have ended up becoming a different person.

Work, work and work more and more!

If nothing is there to do,
at least maintain a garden
or do some social service.


An idle mind is Devil's workshop.
AND the Devil always busy!!!

212.jpg
 
malarum ninaivugaL...


flute john.

அற்புதமான ஆர்டிஸ்ட் இவர்!
கற்றதில்லை கர்னாடக சங்கீதம்!

எந்தப் புதுப் படத்தில் வந்த
எந்தப் புதுப் பாடலையும்

வந்த சூடு ஆறும் முன்பே
வாசித்துக் காட்ட வல்லவர்.

"கண்ணன் பாடல்களுக்கு ஒரு
குழல் இருந்தால் இனிக்குமே!" என

இவரை வரவழைத்தேன் நான்.
"நீங்கள் பாடப் பாட நானும்

பின் தொடர்வேன் சரியாக!"
என்றார் தன்னம்பிக்கையுடன்.

"மஹா கணபதிம்" முதலில்!
முதல் வரியிலேயே பல்டி!

ஸ்வரம் சொல்லி, key board இல்
வாசித்தும் ஒன்றும் பயனில்லை!

அன்று தான் உணர்ந்தேன் நம்
சாஸ்திரீய சங்கீதப் பெருமையை!

"விட்டால் போதும்!" என்று எண்ணி
வாசிக்காமலே சென்று விட்டார்!

திரைப்பட பாடல் நிகழ்சிகள்
தொடர்ந்தன எப்போதும் போல.
 

We often put off or neglect a work/chore, hoping to save some time. But someone will appear unannounced and waste the time we originally wanted to save.

When we are least presentable, we will get all the rare and unusual visitors!

When the house looks as if struck by a mini tsunami, the special people will arrive hoping to 'give us a surprise' and get 'properly surprised' instead! :shocked:
 



Points to Ponder:-

1. Revolutions may be set off by trifles!

2. BUT a revolution is never about trifles!

3. Revolutions restore Justice.

4. Dark deeds and dawn will reveal themselves.

5. Foul play and Fraud end in Failure.

'Go with the flow' and
'zip your lips' are NOT
for everyone in the world.

Some may do it for personal gains(?)
Some may do it to keep off troubles!
Some may do it for reasons unknown(?)
Some won't do it for any of the above!

 
malarum ninaivugaL...

சலூனும், சங்கீதமும்.

ஒரே ஒரு சலூன்; ஒருபாடு கூட்டம்;
ஒரு நிமிடம் நேரம் கிடைத்தாலும்,

ஒலிக்கும் இனிய கிளாரிநெட் இசை!
ஒலிப்பவர் சலூன் சொந்தக்காரர்!

இயற்கையாகவே இசைப்பவர் தான்;
இசை பயின்றது இல்லை இவரும்!

மனதில் மிகவும் ஆசை இவருக்கும்
'மேடையில் வாசிக்க வேண்டும்' என்று.

நான் அழைக்கவில்லை இவரை வாசிக்க
ஜானுடன் செய்த வீண் முயற்சிக்குப் பிறகு.

'ஊர் அறிந்த சலூன்காரர்!' என்பதும்
உள்ளூர ஒரு காரணமோ அறியேன்!

அந்த வழியாக நடந்து சென்றால் போதும் - ஒரு
தேவதையைப் பார்ப்பது போலப் பார்ப்பார்.

கூடவே எப்போதும் இருப்பவருக்குத்
தெரியாத நம்முடைய மேன்மைகள்

எப்படி தூரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்
இப்படி நன்றாகத் தெரிகின்றதோ? விந்தை!

 


ஏட்டிக்குப் போட்டி !!!

நகைக் கடை இன்விடேசன் வந்தது.

பயல்கள் விடாமல் பிடித்து நிறுத்தி

அளந்தனர் அவர்கள் சிறப்பு ஆஃபர் பற்றி. :blah:

ஒரு வழியாகக் கழற்றிக் கொண்டு வந்தால்....

அவர்கள் அதே போல் மாட்டிக் கொண்டனர்

தலை விரி கோலமாக, நைட்டியில் திரியும்,

இரட்டைத் தொண்டையில் மட்டுமன்றி,

எட்டுக் கட்டையில் பேசும் ஒருத்தியிடம்!

தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவர்கள் :bolt:

ஓடினது இப்போதும் சிரிப்பு வருகிறது.

அவர்கள் sales promotion செய்தார்கள்.

அம்மையார் எதற்கு :blabla: செய்தார்??? :rolleyes:
 
சரியாக வரிசைப் படுத்துக என்று
ஒரு லிஸ்டைக் கொடுத்தால்
யார் யார் திணறுவார் கூறுங்கள்! :dizzy:

சாந்தி முகூர்த்தம்,
பெண் பார்த்தல்,
சீமந்தம்,
நிச்சயதார்த்தம்,
திருமணம்,
வளைகாப்பு.
வரவேற்பு.
குவாக்குவா பாப்பா.

(நிச்சயமாக ஒரு நடிகை தான்) :drama:
 
நாட்டியத்திலோ மிருதங்கம்,
நாட்டிய ஜதிகளுடன் கலந்து,

அல்வாத் துண்டுகள் போல ஜதிகளை
அனுபவிக்க எளிதாக்க வேண்டும்.

a very good example for this ...

https://youtu.be/moAnuP5JeK4?t=44


Attachments area

Preview YouTube video Kollam BalaMurali 08 Charukesi Thillana BalaMurali


Kollam BalaMurali 08 Charukesi Thillana BalaMurali






 
இளைஞர்களே உஷார்! உஷார்!

விக்கிரமாதித்தன் காலம் தொட்டு
விடாமல் தொடர்வது இப்பிரச்சனை!

காலடிகளைப் பார்த்து விட்டு இருவர்
கல்யாணப் பெண்ணை முடிவு செய்ய,

தந்தை ஒரு பெண்ணின் மகளையும் ,
அந்தப் பெண்ணை மகனும் மணப்பர்.

இருவருக்கும் குழந்தை பிறந்தால்
இரு குழந்தைகளுக்கும் என்ன உறவு?

சிக்கலான பிரச்னை தான் இது
விக்கிரமாதித்தனுக்கே கூட!!!

ரேடியோவில் குரலைக் கேட்டு
காதலில் விழுந்தவர்களின் கதை

அற்புதமான திரைப்படம் ஆகி
வெற்றிகள் பல அடைந்தது!

இன்றும் தொடர்கிறது இது
எழுத்து உலகத்திலும் கூட ! :typing:

முகம் தெரியாத நபர்களிடம்
மனதைப் பறி கொடுத்துவிட்டு, :love:

இலவு காத்த கிளியாகாதீர்! :nono:
இளைஞர்களே உஷார்! உஷார்! :moony:
 
malarum ninaivugaL...

காந்திஜியைப் போலவே!

வாரம் ஒரு முறை திரைப்படம்
வெட்டவெளி gallery இல் இடுவர்,

நல்ல நல்ல தெலுங்குப் படங்களை!
எல்லோருக்கும் அங்கே நல்வரவு!

கடவுளர் கதைகள் பிரசித்தம்.
ராஜா, ராணி கதைகளும் தான்!

Trick shots நிறைய இருக்கும்,
Thrilling ஆகவும் இருக்கும்!

மொழியைப் பயில சுலபமான
வழி, திரைப்படங்கள் பார்ப்பது!

வேறு கேளிக்கைகள் இல்லாததால்,
திரைப்படங்களை விரும்புவேன்!

மகன்களுக்கு பார்க்க வேண்டாம்!
தந்தைக்கும் பார்க்க வேண்டாம்!

தந்தை மகன்களை அனுப்புவார்
வலுக்கட்டாயமாக gallery க்கு!

அமர்ந்துடனேயே உறங்கிவிடுவார்கள்,
ஆளுக்கு ஒரு மடியில் தலை வைத்து!

படம் முழுவதும் நல்ல உறக்கமே!
முடிந்த பின் வீட்டுக்குச் செல்லுவோம்.

பாதி உறக்கத்தில் எழுந்தவர்களைப்
பத்திரமாக அழைத்துச் செல்லுவேன்!

ஆளுக்கு ஒரு பக்கம் கைலாகு கொடுத்து,
ஆடி ஆடி வீடு வரையிலும் மூவருமாக!

காந்திஜி இரண்டு சிறுமிகளுடன்
நடந்து செல்வது போலவே தான்!

சிறுமிகள் அவருக்குக் கைலாகு கொடுத்தனர்.
சிறுவர்களுக்குக் கைலாகு நான் கொடுத்தேன்!
 
One characteristic of human beings has always interested and intrigued me!

A short person always comments on the height of the others. A dark skinned person invariably comments on the skin color. So also one with unsightly teeth will comment first on the teeth of the others.

The list can go on...!

The point I wanted to state is this:-

A confused man brands others as confused; :loco:

a rogue brands others as rogues and :spy:

a bully brands other bullies! :whip:

Interesting trait? :decision: Irritating trait?
 
malarum ninaivugaL...

பொறி தெறித்த அறை.

விசாகா சென்ற புதிது.
தெலுகு பேச வராது!

சிம்மாசலம் பார்க்கப்
போனோம் - பஸ் பயணம்.

அம்மாவிடம்
என் சின்னவன்,
ஆறு மாதக் குழந்தையாக!

என்னிடம் என் பெரியவன்,
மூன்றரை வயதுப் பையன்.

தரிசனம் முடிந்து பஸ்ஸில்
ஏறினால் சரியான கூட்டம்!

காய்கறிக்காரர்கள் அட்டஹாசம்
சொல்லாமலேயே தெரிந்துவிடும்.

தூங்கும் குழந்தை
கள் தோளில்,
ஒரு கையில் கம்பியைப் பற்றி,

காலை ஊன்றிச் செய்த பயணம்
'தொங்கும் ஊர்தி'யில் போலவே.

அம்மா கதவுக்கு நேரே circus !
அம்மாவுக்கு பின்புறம் நான்.

காய்கறிக் கூடைகள் வழி நெடுக!
காலை வைக்கவும் இடமில்லை!

கூடைகள் வித்தியாசமானவை;
வட்டம் அதிகம், உயரம் குறைவு!

ஒருத்தி அம்மாவைத் தொடர்ந்து
பிடித்துத் தள்ளிக் கொண்டே இருக்க,

வில் போல உடலை வளைத்து,
அம்மாவும் குழந்தையுடன் சமாளிக்க;

தெலுங்கில் திட்டிக் கொண்டே அவள்
தொடர்ந்து பிடித்துத் தள்ளவே எனக்குள்

நிகழ்ந்தது நரசிம்ஹ அவதாரம்!
கம்பியை விட்டு விட்டு நின்று ,

கொடுத்தேன் அவளுக்கு ஒரு அறை!
செவிட்டில் பொறி பறக்கும் அறை!

எனக்குத் தெரிந்த 'மொழி'யில் பேசினேன்!
எனக்கு வேறு வழி தெரியவில்லை!

உலகம் முழுவதும் புரிந்து கொள்ளும் மொழி?
ஒன்று புன்சிரிப்பு! மற்றது கன்னத்தில் அறை!

விழுந்தால் அம்மாவும் குழந்யையும்
வெளியே

விழுவது எங்கே எனக் குலை நடுங்கியதால்!

இப்போதோ அவளுக்கு ஆவேசம் வந்தது!
பத்திரகாளி போலத் திரும்பினாள்.

ஓங்கிய அவள் கையை
ப் பிடித்துத் தடுத்தேன்!
உடைந்த
து கண்ணாடி வளையல்; அது பட்டு,

ஒரு துளி ரத்தம் வந்ததும், ஆவேசம்
எல்லை மீறிவிட்டது எல்லோருக்கும்!

சம்பேஸ்தானு (கொன்று விடுகிறேன்)
அவளுடைய மொத்தக் கூட்டமும் நெருங்க;

ஆஞ்சநேயரே என் உதவிக்கு வந்தார்;
ஆஞ்சநேயலு என்னும் மனிதர் வடிவில்!

அவருக்கு
ப்புரிந்து விட்டது உடனேயே
எங்கள் நிலைமை என்னவென்று!

எங்கள் கம்பெனி security officer அவர்
என்று அப்போது எனக்குத் தெரியாது.

அவருக்கு பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது
நாங்கள் அங்கு
பாஷை தெரியாத புதுமுகங்கள்

(அம்மா இது போல தொங்கிக் கொண்டு
பேருந்தில் பிராயணம் செய்பவர் அல்ல )


அவரும், அவருடைய நண்பர்களும்,
அமைத்தனர் வியூகம் எங்களைச் சுற்றி!

அத்தனை பேரையும் தடுத்தும், விரட்டியும்,
அண்ணன் போலக் காப்பாற்றினார் அவர்.

வீடு வரையிலும் துணைக்கு வந்து
மாடியேறிச் செல்லும் வரை நின்றார்.

உடன் வந்த இவர்
என்ன செய்தார்?
"கதை கதையாம்" என்று பலநாட்கள்


கதை போல இதைச் சொல்லிச் சொல்லி
அதைக் கேட்பவர்களுடன் சேர்ந்து சிரித்தார்!

அன்று மட்டும் அந்த ஆஞ்சநேயலுகாரு,
அந்த பஸ்ஸில் வராமல் இருந்திருந்தால் ...!

அன்றிலிருந்து தெரிந்து கொண்டேன்
அழைக்காமலே உதவுது யார் என்று!

வாய் விட்டுச் சொன்னாலும் கூட :help:
வந்து செய்யாதவர்கள் மனிதர்கள்.

மனத்தால் "நீயே கதி!" என்று உறுதியாக :pray:
நினைத்தவுடன் வந்து உதவுபவன் அவன்!

தெய்வம் மனித வடிவில் வரும்! :angel:
தெய்வ மனிதர்கள் பலரைக் கண்ட

பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
"நம்பினார் கெடுவதில்லை!" உண்மை! :hail:
 
Last edited:
What is the story behind the expression

To 'Cut the Gordian knot!'

Phrygians were without a king at one time. Next man to enter the city driving an ox cart should become their king - as predicted by an oracle!

Gordias a peasant farmer drove into town on an ox-cart. He was declared by the priests as their new king.

In gratitude, Midas his son dedicated the ox-cart to the God Zeus and tied it with an intricate knot.

When Alexander arrived, Phrygia had been reduced to a province of the Persian Empire.

Several themes of myth converged on the chariot

Midas was connected in legend with Alexander's native Macedonia, where the lowland 'Gardens of Midas" still bore his name.

The Phrygian tribes were rightly remembered as having once dwelt in Macedonia.

So, in 333 BC, while wintering at Gordium, Alexander the Great attempted to untie the knot. When he could not find the end to the knot to unbind it, he sliced it in half with a stroke of his sword, producing the required ends

This is the famous "Alexandrian solution"... Solving a difficult problem with one bold step.

That night there was a violent thunderstorm. Alexander's prophet took this as a sign that would grant Alexander many victories.

Once Alexander had sliced the knot with a sword-stroke, his biographers claimed in retrospect that an oracle further prophesied that the one to untie the knot would become the king of Asia.
 
அன்றிலிருந்து தெரிந்து கொண்டேன்
அழைக்காமலே உதவுது யார் என்று!

வாய் விட்டுச் சொன்னாலும் கூட :help:
வந்து செய்யாதவர்கள் மனிதர்கள்.

மனத்தால் "நீயே கதி!" என்று உறுதியாக :pray:
நினைத்தவுடன் வந்து உதவுபவன் அவன்!

தெய்வம் மனித வடிவில் வரும்! :angel:
தெய்வ மனிதர்கள் பலரைக் கண்ட

பாக்கியசாலிகளில் நானும் ஒருத்தி.
"நம்பினார் கெடுவதில்லை!" உண்மை! :hail:


இதனால் நாம் அறியும் நீதி ???

"கொண்டவன் கைவிட்டாலும் :(
ஆண்டவன் கைவிட மாட்டான்!" :thumb:
 
Foot note to post # 22090

பின்குறிப்பு.

எங்கள் பஸ் ஸ்டாப்புக்கு
முந்தியது அந்த ஸ்டாப்.

மொத்த
க் கூட்டமும் அங்கே
இறங்கி விட்டது! அப்பாடா!!

வாரந்திரச் சந்தையில், அறை
வாங்கியவளைக் கண்டேன்!

அதன் பிறகு பலமுறைகள்!
அவளுக்கு
என்னை நினைவில்லை!!

ஒரு முறை நிகழ்ந்தது
நினைவிருக்கும் நன்கு!

தினமும் நூறு முறை
குஸ்தி போடுபவளுக்கு :boxing:

என் நினைவு இருக்குமா? :nono:
நன்றே அதுவும் என்பேன்! :thumb:

அந்த பஸ் ஸ்டாப் பெயர்
'நாத்தைய பாலம்' ஆகும்! :bolt:

இதைவிட பொருத்தமான
பெயர் இருக்க முடியுமா? :yuck:
 
malarum ninaivugaL...

க்ருஹப்ரவேசம்.

அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு,
அப்போது தான் திரும்பி வந்திருந்தார்,

இவர் பெயரை உடைய இவர் நண்பர்;
ஒரே தடபுடல் தான் எப்போதும், எதிலும்! :drum:

அமெரிக்கா returned ஆயிற்றே!
ஆரவாரம் அதிகமாகவே இருந்தது! :horn:

"Photographer ஒன்றும் வேண்டாம்
Photos நானே எடுக்கின்றேன்!" என

எடுத்துத் தள்ளினார் போட்டோக்கள்!
எல்லோருக்கும் ஏகப்பட்ட அதிசயம்!

சின்ன தங்கை கேலி செய்தாள்,
'ரீல்' போடாமல் 'ரீல்' விடுவதாக!

ஆவலுடன் அந்த போட்டோக்களை
எதிர்பார்த்தவர்களுக்கு கிடைத்தது?

பசு மாடு வீட்டுக்குள் நுழையும் போது
பின்புறம் இருந்து எடுத்த போட்டோ!

ஒன்றே ஒன்று தான் கிடைத்தது!
பின்புறம் ... ஒரு பசுவினுடையது!

'ரீல்' போடாமல் 'ரீல்' விட்டதற்கு
ஃபீல் பண்ணவில்லை இதுவரை! :lie:
 

The actress acting in a realistic rape scene
might very well end up becoming pregnant! :preggers:

So much for authenticity and reality!!! :rolleyes:

When they CAN show a severed human (?) tongue - doing its last bit of hopping with life so realistically and frighteningly- why is it that...

1. the actors are given empty glasses and told to pretend that they are drinking coffee/ tea / water from it???

2. the suitcases and trunks carried by the hero / heroine / comedian
always appear to be huge but are invariably empty???

3. how the villain can carry a box full of sold gold bars/ gold bricks
with the flick of his little finger??? :shocked:

Points to ponder!!! :confused:
 
malarum ninaivugaL....

நெற்றிக் கண் உதவியது!

இடது புறம் ஓரமாகச் செல்வேன்...
நடைபாதையில் நடப்பது போலவே.

பட்டம் பூச்சி வடிவ டாலர் செயினை
எப்போதும் அணிந்திருப்பேன் நான்;

பட்டைச் செயினில் மாட்டிய பிறகு
பட்டாம் பூச்சி மேலும் அழகானது!

தினமும் கோவிலுக்குச் செல்லும்
நல்ல பழக்கம் உண்டு அப்போது!

ஓரமாகச் செல்லும் என்னை
நேராக மோதி விடுவது போல

ஒருவன் சைக்கிளில் வந்தான்;
அத்தனை பெரிய சாலை காலியாக

இருந்த போதும் wrong side இலும்
எனக்கு நேர் எதிரிலும் அவன் வந்ததால்

கோபம் தலைக்கேறிவிட்டது!
தெலுங்கில் திட்டி விட்டேன்,

"உனக்கு டிராபிக் ரூல் தெரியாதா?
உனக்குக் கண்ணும் தெரியாதா?"

நான் முறைத்ததைக் கண்டவுடன்,
நீங்கிச் சென்றுவிட்டான் அவன்.

கோபத்துடனேயே செல்பவளிடம்,
கேட்கின்றான் செக்யூரிட்டி கூலாக!

"எப்படி உங்கள் செயினைப் பறிக்காமல்
போய்விட்டான் அந்த கஜ தொங்கன்?"

தொங்கன் என்றாலேயே திருடன்!
'கஜ தொங்கன்' மஹா திருடன்!

கஜ தொங்கனை ஏன் colony க்குள் விட்டாய்?"
அதற்கு பதில் ஒரு அசட்டு சிரிப்பு! ( இளிப்பு?) :heh:

கூட்டுக் களவாணிகளோ என்னவோ? :doh:
திட்டி விட்டுப் போனேன் அவனையும்.

தொடுவது போல் அருகில் வந்தவன்...
தொங்கும் செயினைப் பறிக்கவில்லை!

காரணம் புரிந்தது, அதே கோபத்துடன் :rant:
கண்ணாடி முன் நின்று திட்டின போது!

என்னை பார்த்தால் அச்ச உணர்வு :fear:
எனக்கே வந்து விட்டது அப்போது!

நவரசப் பயிற்சி நன்மை செய்தது!
நெற்றிக்கண் நன்கு பணி செய்தது! :mad2:

பட்டைச் செயினும் தப்பியது!
பட்டாம் பூச்சி டாலரும் தான்! :hail:
 

அஷ்ட வக்கிரன்.


வேத விற்பன்னரான உத்தாலகரிடம்
வேதம் பயின்ற ஒரு சீடர் கஹோளர்;
நியம நிஷ்டைகளில் சிறந்த போதிலும்,
திறமை குறைந்தவர் வேதப் பயிற்சியில்.

சீலம், பக்தி, நற்குணம் பெற்றிருந்ததால்,
சீலவதி குருவின் மகளையே மணந்தார்.
வேத பாடத்தின்போது அருகே அமர்வாள்
மாதரில் சிறந்த குருவின் மகள் சுஜாதை.

கருவில் உருவான குழந்தையும் கூட,
கருவிலேயே வேதம் கேட்டுப் படித்தது;
தந்தையின் தவறுகளைக் கேட்டு வருந்தி,
விந்தையாய் எட்டுக் கோணல் அடைந்தது!

அஷ்ட வக்கிரன் என்று பெயர் பெற்றவன்,
கஷ்டமான வேத, வேதாந்தங்களைத் தன்
பாலப் பருவத்திலேயே நன்கு பயின்றதால்
பால சூரியனைப் போலவே திகழ்ந்தான்.

மிதிலையில் நிகழ்ந்த பெரிய யாகத்துக்கு
மிதப்புடன் சென்றவனைத் தடுத்தான்,
தோற்றத்தை மட்டும் கண்டு ஏமாந்த,
ஏற்றத்தை அறியாத அறிவிலி சேவகன்.

“வெளித் தோற்றம் அறிவுக்குப் பிரமாணமா?
வெளி வடிவம் பருத்து, உள்ளே பஞ்சு ஆனால்?
முதிர்ச்சி என்பது வெறும் வயதினால் அல்ல;
முதிர்ச்சி என்பது ஞானத்தாலேயே உண்டு.”

வாத நிபுணன் வந்தியைத் தன்னுடைய
வாதத்தால் வென்ற அஷ்டவக்கிரன், தன்
தந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்ற அந்த
வந்திக்கும் அதே கதியை ஏற்படுத்தினான்.

தோற்றத்தைக் கண்டு ஒரு மனிதனின்
ஏற்றத்தை நாம் எடை போட வேண்டாம்.
தோற்றங்கள் நம்மை ஏமாற்றிவிடலாம்;
ஏற்றங்களை நாம் உணருதல் வேண்டும்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Sleep steals our time. (33% to 50+% of one's life gets wasted thus)

So does marital pleasures! :hug:

But the second one steals our energy as well !!! :(

AhAram/ vihAram / enjoyment must all be minimum to enable

the person to spend most of his /her time in useful pursuits!!!
 
malaum ninaivugaL...

17 நிமிடங்கள், 9 சுற்றுக்கள்.

கோவிலுக்குப் போகும் போது
இருக்கும் சரியாக 17 நிமிடங்கள்!

செய்ய வேண்டும் 9 சுற்றுக்கள்;
மலை மீது உள்ள 3 கோவில்களில்!

அடிவாரத்தில் ஆனைமுகன்,
நடு மலையின்மேல் அனுமன்,

உச்சியில் இருப்பார் பெருமாளும்,
பத்மாவதித் தாயும், ஆண்டாளும்.

கீழே கோவிலில் மூன்று சுற்றுக்கள்,
கிடு கிடு என்றோடி நடுவில் அனுமனுக்கு!

மேலே மூன்று சுற்றுக்கள் செய்துவிட்டு
கால் பதியாமல் ஓட்டம் என் வீட்டுக்கு !

அப்போதே சொன்னார் பூஜாரி மனைவி !
"இப்படி ஓடாதே அம்மா திருஷ்டி படும்!

எல்லார் கண்ணும் நல்ல கண்ணல்ல!
பொல்லாதவை தான் அதிகம்!" என்று.

அனுபவசாலி! அறிவுரை சொன்னார்!
அனுபவம் வந்தபின் அறிவுரை புரிந்தது!

வழுக்கை விழுந்த பின் சீப்பு எதற்கு?
முட்டி தேய்த்தபின் வருத்தம் எதற்கு?
 
malarum ninaivugaL...

ஹனுமான் மஹிமை.

அண்ணன் மிக நன்கு படித்தால்
அவனால் தம்பிக்கு டென்ஷன்!

எப்போதும், எல்லோரும், அவர்களை
ஒப்பிட்டுப் பார்த்தபடியே இருப்பார்கள்!

தனித் திறமைகள் வேறுபடும் ஆனால்...
நினைத்துப் பார்ப்பதில்லை எவருமே!

சின்னவன் பாடு திண்டாட்டமாயிற்று!
அண்ணன் எப்போதும் முதல் மார்க்கு!

"விளையாட்டுப் பிள்ளையாக உள்ளான்!"
"வகுப்பில் distract ஆகி விடுகின்றான்!"

"Lazy with a capital L!" என்றெல்லாம்
என்னிடம் கூறுவார்கள் அவன் டீச்சர்கள்!

"இவன் அவனைவிட அதிகம் துறு துறு .
இவன் அவனுக்குச் சளைத்தவன் அல்ல!

எனக்கு மட்டும் தெரிந்தால் போதாதே!
என்ன செய்யலாம்?" என சிந்தித்தேன்!

ஹனுமான் மகிமையில் மிகுந்த நம்பிக்கை!
ஹனுமான் சாலீஸ் படிக்கத் தொடங்கினேன்!

ராமனுக்காக அற்புதங்கள் செய்தவர் - என்
ராமனுக்காகவும் அற்புதங்கள் செய்வார்!

செய்வார் அல்ல, செய்தார் மெய்யாகவே!
பொய்த்துப் போகவில்லை என் நம்பிக்கை!

அதன் பின் விளையாட்டெல்லாம் குறைந்தது,
விழுந்து விழுந்து படிக்கத் தொடங்கினான்!

பத்தாம் வகுப்பில் மிகவும் நல்ல மதிப்பெண்கள்.
பத்மா சேஷாத்ரி Entrance Exam இல் முதல் ரேங்க்!

I. I. T. Entrance exam இல் நல்ல ரேங்க் கிடைத்து
E. E. E .இல் இடம் கிடைத்தது சென்னையிலேயே!

Passport, Visa, Scholarship, University Admission
எல்லாம் அனுமன் அருளால் தடையின்றி நடந்தன.

Doctorate இலும் Robert. T . Chien Memorial Award in
Electrical and Computer Engineering இல் கிடைத்தது.

University Notice Board இல் என் அப்பா பெயரும்,
இவன் அப்பா பெயரும், இணைந்த இவன் பெயரை

இன்றும் நீங்கள் காணலாம் U of I சென்றால்!
என்றுமே மறவாதீர்கள் இந்த உண்மையினை!

More things are wrought by prayer

than the world dreams of! :pray: :hail:


 

Latest ads

Back
Top