• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Bhaktha Meera ANURADHA (indru ivar oru professor in U.S.A)!!! :thumb:

attachment.php
 
malarum ninaivugaL....

தாயினும் சாலப் பரிந்து!

ஒரு முறை இவர் கோவைக்குத் திடீர்ப் பயணம் ரயிலில்!
அவர் அப்புறம் சென்றவுடனேயே எனக்குத் திடீர் சோதனை!​

அடிக்கடி வரும் தொல்லைகள் Uterus fibroid களால்!
அடி வயிற்றில் இருந்தது ஒரு டைம் பாம் போலவே!

மடை திறந்து தடையின்றி பாயும் அவ்வப்போது!
ஆங்காங்கே மயங்கி விழுந்ததும் உண்டு சிலமுறை!

நம்பர் 1, 2 அடக்க முடியும் ஓரளவுக்கு - பெண்கள்
நம்பர் 3 ஐக் கட்டுப்படுத்த முடியாததை அறிவர்.

Hospital admission , Emergency D.N.C என்று ஏக ரகளை!​
ரயிலில் இருந்த இவருக்குத் தகவல் சொல்ல வசதி இல்லை!

அப்போது மொபைல் போன் கனவில் கூட இருக்கவில்லை
ரயில் பயணம் 24 மணிக்கு மேலாகும் அந்த நாட்களில்

எல்லா உதவிகளையும் நண்பர்கள் தான் ஓடியாடிச் செய்தார்கள்!
அன்றிரவு hospital வாசம் எனக்கு compulsory ஆகிவிட்டது

சின்னவன் அன்றிரவு ப்ரியா வீட்டில் தங்கி விட்டான்.
என்னுடன் ஹாஸ்பிடலில் ப்ரியாவின் பாட்டி தங்கியிருந்தார்!

இரவு முழுவதும் உறங்கவே இல்லை அந்த அம்மையார்!
எனக்கு விசிறிக் கொண்டு என்னருகில் அமர்ந்திருந்தார்!

தமிழில் பேசிக்கொண்டும், வெற்றிலையை மென்று கொண்டும்!
தெலுங்கோ, ஆங்கிலமோ சுத்தமாகத் தெரியாது அம்மையாருக்கு.

மிகவும் வயதானவர் அவர் ! என்னுடன் வந்து தங்க வேண்டிய
அவசியமோ அவசரமோ எதுவும் இல்லை என்றாலும் கூட,

அன்று தாயினும் சாலப் பரிந்து அவர் எனக்குச் செய்ததை
என்றுமே மறவேன் - நான் என் உயிர் உள்ள வரையிலும் !

நான் கண்ட தெய்வ மனிதர்களில் இவரும் முக்கியமானவர்! :hail:


 
Last edited:
When my elder son started learning about Fractions in his school he started playing a new game in Mathematics. Whatever he wanted should be given to him by the count of three!
So it should actually go ,"One! Two! Three!" :high5:

But if the thing does appear before him by the count of two, he would divert to a different way of counting.

After 2 it would become 2 and 1/16, 2 and 1/8, 2 and 3/16, 2 and 1/4, 2 and 5/16, 2 and 3/8, 2 and 7/16 etc until he reached 2 and 15/16! :bump2:

By that time surely anyone would have given him what he wanted! :becky:

It was fun game in mathematics, helping him learn the importance of fraction and their correct order too!
 
malarum ninaivugaL...

Vegans...the purest Vegetarians!

இரண்டு மகன்களும் மாறிவிட்டனர்
vegetarian களிலிருந்து vegan களாக!

இவர் சஷ்டியப்த பூர்த்தியை 1999 இல்,
இவர்கள் செய்தார்கள் விமரிசையாக!

திரும்பிச் செல்லும் போது படித்துள்ளன
ர்,
மிருகங்கள் நம்மிடம் படுகின்ற பாட்டை!

பசுக்கள் எல்லாம் வெறும் 'பால் தரும்
மிஷீன்'களாக மாறியது எப்படி என்று!

ஒரு புறம் உணவு உள்ளே செல்லும்.
மறு புறம் பாலும், கழிவும்
வெளியே வரும்!

பிறந்ததிலிருந்து நின்று கொண்டே த
ம்
ஜீவனைக் கழிக்குமாம் அந்தப் பசுக்கள்!

கால்களால் உடலின் எடையைக் கூட
தாங்க முடியாததால், தாங்க ஒரு தூளி!

அன்றிலிருந்து சின்னவன் Vegan ஆனான்!
அடுத்தது பெரியவனும் Vegan ஆகி விட்டான்.

அவர்கள் மணந்த பெண்களும் vegans ஆனார்கள் .
அவர்கள் குழந்தைகளும் Vegans ஆகிவிட்டார்கள் !

I, Iyer, I......r.என்று வரிசைப் படுத்துவார்கள் முன்பு!
Non vegetarian, Vegetarian, Vegan இது இன்றைய ஆர்டர் !

முதலில் நிறையக் கஷ்டப் பட்டார்கள்!
இப்போது உள்ளன நிறைய சாய்ஸ்
கள்!

Sour கிரீம் வைத்து செய்கின்றார்கள்
தயிர்ப் பச்சடி, அவியல், மோர்க்குழம்பு!

Soy ஐஸ் கிரீம் சாப்பிட்டால் பின்னர்
தொடவே மாட்டோம் பால் ஐஸ் கிரீம்!

சுவையோ சுவை! நிறமோ நிறம்!
உலகம் மாறி வருகின்றது உண்மை!


 

"இது என்ன பிரமாதம்?"

கட்டுக்காரன் கூலியைக் கேட்டு
விக்கித்து நின்றான் அவன். :shocked:

"இது என்ன பிரமாதம்?
நானே கட்டுவேன் என் வீட்டை!"

மளமள வென்று செங்கல்லை அடுக்கித்
தளதள வென்று பூசிக் கொண்டே போனான்.

ஐந்தடி உயரம் வீடு வளர்ந்த பின் ஒருநாள்
கண்டு பிடித்தான்,"கதவு வைக்கவில்லையே!"​

அதுவரை தாண்டி உள்ளே குதித்தால்​
தெரியவே இல்லை கதவு இல்லாதது!:rolleyes:

ஒரு சுவற்றை இடித்து நிலவைப் பதித்தான்.
மீண்டும் மள மளவென வேலை நடந்தது.

கூரை உயரம் வந்ததும் தான் தெரிந்தது ,
"அடடா ஜன்னல்கள் வைக்கவில்லையே!"

மீண்டும் சுவர்களைப் பெயர்த்து
மீண்டும் சுவர்களில் ஜன்னல்கள்.

இப்படி யாராவது செய்வார்களா என்று
தப்பான ஆராய்ச்சி செய்ய வேண்டாம்! :nono:

நிச்சயமாக செய்வார்கள் சிலரேனும்! :)

 
All people suffering from Diabetes!

Never ever walk bare footed anywhere... inside / outside the house.

If you have to do pradakshiNam in a temple, make sure to wear a thick protective pair of socks. Otherwise you may end up with sand/ gravel/ small pebbles lodged inside the sole of the feet - even without realizing it! :scared:

Symptoms and signs of diabetic foot problems arise due to the decreased sensation from nerve damage as well as the lack of oxygen delivery to the feet caused by vascular disease. People with diabetes have an increased risk of ulcers and damage to the feet.

Diabetes and Foot Problems Symptoms (Swelling), Treatment ...

https://www.medicinenet.com/foot_problems_diabetes/article.htm

diabetic-min-2-647x359.jpg


images
images
 
malarum ninaivugaL...

Same ! Same !

Alumni Meet இல் எல்லோரையும்
Asin மிரண்டாவைக் குடித்துவிட்டு

கலாய்ப்பது போலவே நானும்
கலாய்ப்பேன் என் நண்பர்களையும்!

கோவையில் நடக்கும் போது hostess ,
சென்னையில் நடக்கும் போது guest!

இந்த முறை மேடையில் நின்றுகொண்டு
கீழே பார்த்தால் கண்கள் கூசுகின்றன!

எல்லோரும் gold framed specs!
எல்லோருக்கும் பளபளக்கும் domes !!

பேசும் போது சொன்னேன், "தேவை
மேடை மீது கூலிங் கிளாஸ்!" என்று.

Lunchtime ! பார்த்தால் எல்லோரும்
ஒரு போலவே இருக்கின்றார்கள்!

பின்புறம் 'same! same!' முன்பே தெரியும்!
முன்புறமும் 'same! same!' தான் ஆச்சர்யம்!

சின்ன prosperous செல்லத் தொப்பை.
இழுத்துக் கட்டிய leather இடுப்பு பெல்ட்.

பின் புறமும் மட்டுமல்ல same same
முன்புறமும் கூட same same என்றால்

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
என்னிடம் தான் இறுதியில் opinion கேட்பர்.

எப்போதுமே ஒளிவு மறைவு இல்லாமல்
மனதில் பட்டதைச் சொல்லுவேன் என!

ஒவ்வொரு வயோதிகனுக்குளும் உள்ளே
ஒவ்வொரு பால
ன் ஒளிந்து இருக்கின்றான்!

ஒவ்வொரு பாட்டிக்குள்ளேயும் உள்ளே
ஒரு குட்டிப்பெண் ஒளிந்து இருக்கின்றாள்!
 


கர்வ பங்கம்.


கர்வம் மேலோங்கினால், அதை
சர்வ வியாபி கண்ணன் அழிப்பான்.
பதிவிரதை நானே என்ற கர்வத்தைச்
சதி திரௌபதி விடுத்த கதையே இது .

அஞ்ஞாத வாசத்துக்கு முன்னர்,
மெய்ஞானி ஆன மாயக் கண்ணன்
சொன்னான் அப்பாண்டவர்களிடம்,
“இன்னொரு இடம் போவோம் நாம்.”

காமிய ஏரிக்கு அருகே ஒரு
ரம்மியமான இடத்தில் வந்து
தங்கினார்கள் மூன்று நாட்கள்,
பொங்கும் புதிய உணர்வுடனே.

அழகியதொரு ஆஸ்ரமம்; அதன்
அழகிய பூந்தோட்டத்தில் ஒரு
பழுத்த மாங்கனியைக் கண்டனர்,
பழக்காலமாக இல்லாதபோதிலும்.

விரும்பிய திரௌபதிக்கு, கனியை
விரும்பித் தந்தான் அர்ஜுனன்.
“என்ன காரியம் செய்தீர் நீர்?”
என்றே பதைத்தான் கண்ணன்.

“கடும் தவ முனிவர் ஒருவர்
பெறும் உணவு தினம் இக்கனியே.
சபிப்பாரோ அன்றி எரிப்பாரோ?
அபிப்பிராயம் அவருக்கு எதுவோ?

மனத்தில் உள்ள எண்ணங்களை,
மறைக்காமல் வெளியே கூறினால்,
மாங்கனி எழும்பி முன் போலவே
மரத்திலேயே இணைந்து விடும்.”

“அரசனாகி நான் மீண்டும் நிறைய
அறச் செயல்கள் புரிய வேண்டும்”
தருமன் இதைச் சொன்னதும் கனி
தலை அளவுக்கு உயர்ந்து நின்றது.

“மார்பைப் பிளந்து சத்தியமாக
மாள வைத்து, துரியோதனனின்
தொடையைக் கதையால் பிளந்து
முடிப்பேன் சபதத்தை, பீமன் நான்!”

“கர்ணனைக் கொல்வதே என்
வர்ணிக்க முடியாத ஆக்ரஹம்.”
அர்ஜுனன் சொன்னபோது, கனி
மரக் கிளையின் வெகு அருகில்.

“பட்டத்து இளவரசன் ஆவேன் நான்,
இஷ்டத்துடன் அன்னையைக் காப்பேன்.”
“அண்ணனுக்கு சாமரம் வீசிக்கொண்டு,
அண்மையிலேயே இருப்பேன் நான்.”

அழகிய இரட்டையரின் சொற்கள்;
கனியோ கிளையின் காம்பருகே!
“அழ வைத்தவர்களின் அழிவினைக்
கண்டு நான் சிரிப்பேன்!” திரௌபதி.

உயர்ந்திருந்த கனி, மீண்டும்
தயங்காமல் மண்ணில் விழுந்தது.
வேறு வழி இல்லாமல், அப்போது
கூறினாள் அவள் உண்மையினை.

“யாகத்தில் கர்ணனைக் கண்டு,
வீரனிவன் குந்தி மகனானால்,
யாருக்கும் வாய்க்காத வலிய
ஆறு வீரருக்கு மனைவி நான்!”

விக்கித்துப் போயினர் அவள்
வீரக் கணவன்மார்கள் ஐவரும்.
“இவளா சதி? இவளா பதிவிரதை?”
அவள் கர்வம் மறைந்து போனது!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
Rides Orlando - Fun Spot

https://fun-spot.com/orlando/

We are glad you're interested in visiting us here in Orlando! We have many great ride and games for kids and adults alike. From the classics, like bumper kars ...Orlando Hours & Directions · ‎Orlando Park Map · ‎Orlando Thrill Rides · ‎Gator Spot

Most of these rides are forbidden for me and YET

I do manage to hop on to some of the safer rides.

It gives happiness watching the others having such a great fun!


 
Your father might be less educated/ less qualified than you;
he might be shorter and lighter than you;
but no doubt he is also wiser and more experienced than you.
At some point of one's life everyone will say
images


HAPPY FATHER'S DAY! HAPPY GRANDFATHER'S DAY!!
 
"FUN" redefined in my perspective.... !!!

1. To get scorched in in the hot Sun and drenched in rain alternately

2. To find out how long you can keep on walking in one day

3. To find out the minimum sleep required by you to keep sane

4. To develop the capacity to store water and energy like a camel and go on for hours without food food and water

5.To find out how much heat, IR and UVR one can handle without getting sunburned - despite getting roasted and toasted to resemble beetroot

6. To find out how much noise one can tolerate in the restrooms where every other woman is a character from ancient Indian mythology (like ThAdagai and Poothanai).

The noise of their foot steps, the banging of the metal doors shaking every door in the room, the constant sound of the gushing water flushing out after the business is over, the noise made while pulling out the paper towels for drying their hands, the sound made by the heavy bags dragged along, the little angelic banshees carried along ....just to name a few.

I saw men with oxygen tube inserted in their nostrils, new born babies in strollers covered by towels, toddlers dragged along on foot, or in small carts. It looked like a vENduthal ( a nErchi or a dream come true) to many.

What a weird concept of having fun!!!!
 
Long back one of my friends and well wishers made an observation in Telugu.

He said, "Ramini gAru! mee dheggara anni unnai gaani meeru Emaina andhkO lEkha pothunnAru!" meaning

"Mrs. Ramani. You have everything around you but you are not able to enjoy any of them"

I do not know whether my life / existence can be put in a nutshell in any better way than this.

TRUE! I have EVERYTHING and yet I am destined to enjoy NOTHING!

I have long since understood and accepted my destiny! :ohwell:
 
YOgam and bhOgam!

bhOgam = enjoyment

yOgam = the divine permission to bhOgam

Even if I arrange for a party for the others I am so very lucky that

I would be the only ONE not able to taste the food I had ordered for all of us!

One NEEDS yOgam to eat / sleep / dress up / to enjoy/ to have good company/

to visit places / to have good health / to have a loving family......:bump2:

machchak kaaran = koduthu vaithavan /(vaithavaL) = Given and Kept by God!
 
Last edited:
எள்ளு காய்கின்றதே என்று எலிப் புழுக்கையும் அதனுடன் காயுமாம்!

அந்த 'எலிப் புழுக்கை' யார் என்று நான் சொல்லவும் வேண்டுமோ?

தனியே விட முடியாததால் கூடக் கூட்டிக் கொண்டு போக வேண்டும்.

கூடக் கூட்டிக் கொண்டு போவதால் டிக்கெட் வாங்க வேண்டும்.

டிக்கெட் வாங்கியதால் 'பார்க்'குக்குப் போக வேண்டும்.

'பார்க்'குக்குப் போக வேண்டியதால் எலெக்ட்ரி ஸ்கூட்டர் 'ரென்ட்' பண்ண

வேண்டும்.


ஸ்கூட்டர் ரென்ட் வேஸ்ட் ஆகிறதே என்று அதை ட்டிச் செல்ல வேண்டும்.

ride வேஸ்ட் ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

காயும் வெய்யிலிலும், பெய்யும் மழையிலும் வெளியில் பரிதாபமாகக்

காத்திருக்கலாம்.


அடுத்த ride சென்றால் ரிபீட் performance.

கிடைத்தவை.....

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டப் practice, வானளாவிய சர்க்கரை ரத்தத்தில்,

விண்ணளவு உயர்ந்த ரத்த அழுத்தம், சில பல fungal infections ......

மகிழ்ச்சி அடையும் பொழுது நாம் செய்த புண்ணியம் குறையுமாம்!

மற்ற பொழுதுகளில் நாம் சேகரித்த பாவ மூட்டை குறையுமாம்.

நமது பாவம் குறைவது நமக்கு நல்லது தானே!
 
Last edited:
malarum ninaivugaL...

உலகம் சுற்றும் வாலிபன்!

உலகம் சுற்றும் வாலிபன் யார் தெரியுமா?
உண்மையிலேயே என் கணவர் தான் அது!

வீட்டில் இருப்புக் கொள்ளது இவருக்கு!
வீட்டை விட்டு எங்காவது போக வேண்டும்!

வேலை இருக்கின்றதோ இல்லையோ இவர்
'வேலை உண்டு பண்ணிக் கொண்டு' செல்வார்!

'இவர் தான் அந்
ச் சாலையில் அதிகம் செல்பவர் என்று
சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபணம் ஆயிற்று!

சாலையில் இருக்கும் குழியை படம் பிடிக்கும் போது
சாலையில் சென்றது இவர் ஸ்கூட்டர் மட்டுமே!

'ஹிந்து'வில் கலர் போட்டோவைப் பார்த்ததும்,
சந்தோஷம் பிடிபடவில்லை அவருக்கு அன்று!

தெரிந்தவர்கள் எல்லோருமே விசாரிக்கவும்,
ஹீரோ போல சில நாட்கள் உணர்ந்தார்!

Law of Randomization நிரூபித்து விட்டது...
அந்த
ச் சாலையில் அதிகம் செல்வது இவரே!

உத்தியோகம் மட்டும் புருஷ லக்ஷணம் அல்ல!
ஊர் சுற்றுவதும் இவருக்குப் புருஷ லக்ஷணம் ! :roll:
 
My father used to say long back that

"Americans work hardest during their vacation"

It was so long ago that we had no idea my sons would become US citizens

and we ourselves might also eventually become US citizens.

As usual my dad was 100% correct.

American are on their toes for 18+ hours during their vacation

while they might be 6+ hours on toes during their working days!

I learned a few things during this trip.

If the vacation is going to be hectic and very demanding

it must be less than 4 days in its duration.

If the vacation is going to be longer than 4 days

it must be easy, relaxing and less demanding.

The idea of vacation is to take a break from the busy job.

So what is the idea of making a vacation so busy that

one might end up saying, "I need a real vacation during this vacation!"

P.S:

When one looks like his/her passport photo.....

it is time to go back home from one's vacation! :dizzy:

When one looks like the caricature of one's passport photo,

he/ she has already overstayed his / her vacation! :rofl:
 

Latest ads

Back
Top