• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 67. Making up for the lost time.

எனக்கு கிஃப்ட் ஷாப்புகள் பிடிக்கும்.
எல்லாவற்றையும் தொட்டுப் பார்க்கலாம்.

விளையாடலாம். அணிந்து கொண்டு போட்டோ !:photo:​
வெளியில் கொண்டு வந்தால் தான் பில்!

Falling Water என்ற இடத்தில் இருந்த
கிஃ ப்ட் ஷாப்பை விட்டுவர மனம் இல்லை. :love:

சாவி கொடுத்தால் ஓடும், ஆடும், பாடும், நடக்கும்
எல்லா பொம்மைகளையும் test செய்தேன். :high5:

ஷாப்பில் இருந்தவர் வயதான அம்மையார்.
சிரித்த முகம், நல்ல சுபாவம், அமைதியானவர்.

அவர் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்!

"I never had any of these when I was young!
I am making up for the lost time!" என்றேன்.

அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது! :becky:
"Go ahead and enjoy !" என்றார்.

"இப்படி ஒரு பாட்டிக்குள் அப்படி ஒரு குட்டியா?"​
என்ற வியந்தாரோ என்னவோ?​
 
# 68. அணிகலன் முதல் ஆனை வரை.

"மம்மி! உனக்கு இந்த ஷாப் பிடிக்கும்!" :love:
"மம்மிக்கு எல்லா ஷாப்பும் பிடிக்கும்!" :)

அதன் பெயர் Container Store.

அணிகலன்கள் முதல் ஆனை வரையில்
அனைத்தையும் பேக் செய்ய பாக்ஸ் உண்டு!

குட்டி காயின் போடுவதற்கு!
மறந்து விடாமல் மருந்து மாத்திரை உண்ண!

ஒரு நாள் கோட்டா, ஒரு வாரம், ஒரு மாதம்,
ஒரு நேரம், இரு நேரம், நான்கு நேரங்கள்!

அற்புதமான கடை அது.
"ஆள் பாதி ஆடை பாதி" போல

பொருளின் மதிப்பு அதை வைத்த
பாக்ஸினால் அதிகம் ஆகும், உண்மை.​
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 69. Built-in-dining table.

வயிறு ஒரு Built-in-dining table
ஆகிவிட்டது அவருக்கு.

டாக்டரிடம் சென்றார் கவலையோடு!
"சப்பாத்தி சாப்பிட்டால் சரியாகும்
கவலைப் படவேண்டாம்!" என்றார்.

அடுத்த முறை அவர் வீடு சென்றபோது
அமரிக்கையாக சப்பாத்திகள் மூன்று!

பரவாயில்லையே இவர்!!!
குறையவில்லையே உடல்!!!

காரணம் தெரிந்தது அவர்
குழம்பு, ரசம், தயிர் என்று
சாதத்துடன் தொடர்ந்தபோது.

"சாதத்துக்கு பதில் சப்பாத்தி" என்று
தெளிவாகச் சொல்லாததனால்,

சப்பாத்தியும் சாப்பிட்டு விட்டு,
முறைப்படி மூன்று சாதமும் உண்டு,
எடை குறையவில்லை என்றால் எப்படி??? :faint:


 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 70. A visiting Professor?

ஒரு முறை ஹைதராபாத் பயணம்.

பரீட்சார்த்தமாக அந்த சில நாட்கள் மட்டும்
சில 'கோச்'களில் (?) மூன்று சைடு பெர்த்துகள்!

இரண்டு பெர்துகள் மட்டும் இருக்கும் போதே,
உரசாமல் தாண்டி யாராலும் போகமுடியாது.

மூன்று பேரும் வழியில் காலைத் தொங்கவிட்டு
விதியே எனக் குறுக்காக அமர்ந்திருந்தோம்!

அவர் பேசவும் இல்லை, சிரிக்கவும் இல்லை
அமைதியாக மாரீ பிஸ்கட் கடித்துக்கொண்டு,
மினரல் வாட்டர் குடித்துக் கொண்டு இருந்தார்.

அடுத்த சீட் ஆசாமி இப்படி silent ஆக இருந்தால்,
படு போராக நீண்ட நெடிய பயணம் இருக்குமே!!

"நீங்கள் ஒரு professor?" எனக் கேட்டேன்.
சிரித்துக் கொண்டே தலையை அசைத்தார்.

"விசிடிங் professor??" வியப்புடம் "ஆம்!"என
"From Germany?" எனக் கேட்டேன்.

He leaped in his seat to perform
the world's record sitting-high-jump!

கண்கள் இரண்டும் flying saucer ஆகிவிட்டன.
"Do you know me by any chance?"

நிச்சயமாக எனக்கு அவரைத் தெரியாது!
அவ்வளவு நிச்சயமாக அவரிடம் ஏன்
அப்படிச் சொன்னேன் என்றும் தெரியாது.

அவருடைய எண்ண ஓட்டங்களை நான்
சரியாக receive செய்திருப்பேனோ??

ஊருக்குத் திரும்பும் வரை அவர் உணவு
மாரீ பிஸ்கட் + மினரல் வாட்டர் தானாம்!

எலும்பும் தோலுமாக இருந்தார் அவர்!
நாடு திரும்ப இன்னும் எத்தனை நாட்களே?
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்


# 71. Super clean lady?

தண்ணீருக்கு எவ்வளவு தட்டுப்பாடு
இருந்தால் என்ன?

சோப்பு விலை வானளவாக எவ்வளவு
உயர்ந்தால் என்ன?

மூன்று நேரம் குளிப்பவர்களும் உள்ளனர்.
மொத்தத்தையும் சுத்தம் செய்பவர்களும் கூட!

"கடுகு முதல் காஸ் சிலிண்டர் வரை...!"

இது slogan contest அல்ல! அல்ல! :nono:
என் பழைய neighborhood லேடி!

கடுகு முதல் காஸ் cylinder வரை
தினமும் எல்லாம் சுத்தம் செய்யப்படும்.

"கடுகு O.K! காஸ் cylinder !!! :rolleyes:

"இன்று வரும்... நாளை போகும்...
நம் சொந்தம் அல்லவே" என்றால்,

"பரவாலேதண்டி! நாக்கு அன்னி
சுப்பரங்கமுகா உண்டவலேனு!"

என்ன சுப்புரங்கமோ ஆனந்தரங்கமோ
இன்று வரை எனக்குப் புரியாத ஒன்று!

அப்பா அடிக்கடி சொல்லுவார்,

"Man must know how to get rid of his
superfluous energy in a harmless way !" :roll:

இந்த சுப்புரங்கமும் அதில் ஒன்றோ? :noidea:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 72. சுஜாதாவின் கண்ணீர் ஏன்?

அவர் கேரளத்துப் பெண் குட்டி.
அங்கே இங்கிலீஷ் lecturer ஆவர்.

சுருட்டை முடியும், கூர்மூக்கும்
சிறிதாக, அழகாக இருப்பார்.:music:

இரவு உணவுக்கு எல்லோரும்
எங்கள் மெஸ் ஹால் போவோம்;

ஒரு பர்லாங் தூரம் இருக்கும்;
ஓபன் air - நாசுரல் A. C . போல.

தலைவலி என்று டாக்டரிடம் போனார்.
கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டுமாம்.:nerd:

அந்த நன்னாள்... மெஸ் ஹால் செல்லும்போது...
அவர் கண்ணீர்
அருவி பாய்ச்சியது ஏன்???

அது ஆனந்தக் கண்ணீர் வகைப்படும்! :Cry:
ஆகாயத்தில் அவர் பார்த்ததில்லையாம்...

அதுவரையிலும் ஒரு நாள் கூட ....
அத்தனை அழகான Twinkling little stars! :love:

 
A famous Hollywood star was asked the reason for his long standing and very successful marriage.

His unexpectedly short answer was "Separate bathroom!"

True! Some personal habits of persons will be repulsive to some others!

I started pondering on this line.

Some couple need separate BEDROOMS for a successful marriage.

Some other need an Open marriage for a successful marriage.

My guess is that the high profile divorce will cause bankruptcy.

So a bedroom with doors closed and bolted to the legally wedded spouse,

or a bedroom with open doors for persons other than the spouse,

will work out equally well to remain married and prosperous -

without sacrificing their personal preferences and needs!
 
A wake up call for the ladies who are always grumbling and complaining....

Are you sure you are suffering more than Sita Devi

(who lived in the forest fr 13 years ; got abducted by a RAvaNa; got banished from the country when she was full term pregnant and finally had to return to the womb of the earth from she had originally emerged)?

Are you sure you are suffering more than Dhroupadhi

(who was disrobed and humiliated in a dharbar filled with spineless men; who had to live in the forest for 13 years; who had to tackle with lust filled men all her life and who had all her sons mercilessly murdered by AswathAma while they were fast asleep)?

Are you sure you are suffering more than Kunthi Devi

(whose husband could not give her sons ; who had to live at the mercy of wicked nephews and who finally got burned alive in a wildfire)?

Are you sure you are suffering more than Devaki

(who almost got killed on her wedding day; who spent her entire fertile period in the darkest dungeon; who had her newborn babies snatched away from her arms and dashed on stone wall right in front of her eyes)?

Never complain again nor nag anyone again.

We are not equal to even the dust of the feet of these brave ladies! :hail:
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 73. ஆட்டுக்கல் மகாத்மியம்.

ஆந்திரா ஆட்டுக்கல்லின் top surface
அம்மிக்கல் போல flat ஆக இருக்கும்.

மாவு அரைக்கும் போது வெளியே
மாவு வழிந்துவிடும் அபாயம் உண்டு.

அம்மா எனக்காகக் குஞ்சலம் போல
ஆட்டுக்கல் சென்னையிலிருந்து !

பார்க்கவே மிக அழகாக இருக்கும்.
விளிம்பு நல்ல உயரம் ஆக இருக்கும்.

ஊருக்கு வரும்போது எனக்கு அதையும்
உடன் எடுத்துவரும் உத்தேசம் இருந்தது.

வீணை மாஸ்டர் ஒரு வரம் கேட்டார்.
அது அந்தக் குஞ்சல ஆட்டுக்கல் தான்.

இன்றைக்கும் அதைப் பெருமையாக
'imported gadget ' போல வைத்துள்ளார்.

It is in safe, protective and proud hands. :)
 
சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 74. குலத்தளவே ஆகும் குணம்!

'பிளஸ் டூ' வுக்குப் பிறகு பெரியவன் போட்டோ
எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது!

For his record breaking performance by
securing seats in seven different institutions!

எல்லோரும் வாழ்த்துக்கள் கூறினர்!
அவனை விட எங்களுக்கே பெருமை.

பெருமை என்றால் கூடவே ஒரு
ஊசிக் குத்தலும் வரவேண்டுமே! :smash:

என் கணவரின் கார் டிரைவர் கேட்டான்,

"enthukku photo paddadhi ?
babu thappip pOyaadaa ??"

(எதற்கு பத்திரிகையில் போட்டோ வந்தது?
மகன் வீட்டை விட்டுப் போய் விட்டானா?)

குலத்தளவே ஆகும் குணம், :laser:
மனத்தளவே ஆகும் மாண்பு! :loco:

நாலாம் வகுப்புப் படித்த (??)
மூன்றாம் தர டிரைவரிடம் (!
!)
நாம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? :whoo:
 
If your aged parents are

unable to eat nutritious food.... give them Complan

unable to empty their bowels....give them oats and fruits

unable to walk steadily.....given them a cane/ walking stick/ walker.

unable to bear the heat.....install an A.C unit in their room

Unable to bear the cold....install a room heater in their room.

Most parents may not openly ask for these but rest assured

they will bless you all day ong for your consideration and kindness.
 
A Survival kit for the senior citizens.....

A small bag with the following things -

hung from the walker or kept with a walking stick!

A torch - since the power cut is unpredictable

A small water bottle....in case they become thirsty or cough or hiccup

A small box with 4 / 6 biscuits.....acute hunger might end in Ulcer!

A small box of candy - incase the blood sugar drops to dangerous low values

A cell phone for contacting the outside world in case of an emergency.
 
75. Harmonium vs E. Sruthi box

டவுனில் ஓர் டான்ஸ் competition.


Make up உடன் சென்றதால் எங்களுக்கு
பாயிண்ட் டு பாயிண்ட் லிப்ட் கிடைத்தது.

திரும்பி வரும்போது சிட்டி பஸ் தான்.
கூட்டத்தில் ஒரு 'தொங்கும்' பயணம்.

பாதி மேக்கப்புடன் மாணவ மணிகள்.
கையில் பெரிய பைகளுடன் பெற்றோர்கள்.

என் ஹார்மோனியம் ஒரு பெரிய சாக்கில்!

மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்றேன் நான்...
ஒரு கையால் கம்பியைப் பற்றி balance ! :tsk:

இன்னொரு கையில் ஹார்மோனியச் சாக்கை
உச்சிக் குடுமி போல பிடித்துக் கொண்டு!

மிருதங்கம் மாஸ்டர் கையில் அவர் கருவி,
வீணை மாஸ்டர் மறந்தாரோ, துறந்தாரோ,
எனக்கு உதவ முன்வரவில்லை அன்றைக்கு. :whoo:

அன்று முடிவு எடுத்து அடுத்த வாய்ப்பிலேயே
வாங்கினது ஒரு compact Electronic Sruthi Box!

அதற்குப் பிறகு ஒரு compact Electronic தம்புரா.
ஆனால் இப்போது நான் program தருவதில்லை.:nono:

எதோ பழமொழி ஞாபகம் வருகின்றதா?
நாயையும்.. கல்லையும் பற்றி??? :rolleyes:
 


சிந்தையில் நின்ற விந்தை மனிதர்கள்

# 76. நீலம்மா.

என் மகன்களின் ஸ்கூல் ஆயா நீலம்மா.
நீலக் கலர் புடவை தான் தினமும்;

வழிய வழிய எண்ணை வைத்து வாரி,
காதருகில் பெரிய கொண்டை ஒன்று.

மடிசார் போல வலப் பக்கம் புடவை.
பெரிய குரலும், உருவமும் கொண்டவள்.

நகை எல்லோரும் போட்டுக் கொள்ளுவோம்.
அவள் 'நட்'டுப் போட்டுக் கொண்டு இருப்பாள்.

காது விளிம்பு முழுவதும் வரிசையாக,
மேலும் மூக்கின் இருபுறங்களிலும்!

நடுவில் மட்டும் 'மாட்டின் வளையம்' !

'சூர்ப்பனகை ட்ரீட்மென்ட்' செய்தால் தங்கம்
எத்தனை கிலோ தேறுமோ தெரியாது!

தசரா காலத்தில் அவள் மிகவும் பிஸி.
காலனியில் உள்ள 3000 + வீடுகளுக்கும் விசிட்.

அதிகம் இல்லை இரண்டு ரூபாய் தரவேண்டும்.
இரட்டை இலை போல விரல்களை அமைத்து,

அதைக் கத்தரி போல அசைத்துக் கொண்டே,
நமக்கு ஆரத்தி போலத் தொடர்ந்து எடுப்பாள்!

Background மியூசிக் "அம்மா ரெண்டு ரூபாய்!" :sing:
ஆரத்தியும், பாட்டும் இனாம் தரும் வரை தொடரும்.

தன் மீதும் தன் வேலை மீதும் அவளுக்கு
அளவு கடந்த அபிமானமும் பெருமையும் உண்டு!

அவள் அடிக்கடி கூறுவது இதுவே!

"டீச்சர் பணி எவரேனும் சேய கலரு!
நா பணி வாரு சேய கலரா?? :rant:

("யார் வேண்டுமானாலும் டீச்சர் வேலை செய்யமுடியும்.
என் வேலையை அவர்களால் செய்ய முடியுமா?") :moony:

நல்ல கேள்வி தான்! :thumb:

இதுவரை யாரும் அவள் விடும்
சவாலை ஏற்றதாகத் தெரியவில்லை!:scared:


 
# 77. தேஜஸ். (1)

அவனுக்கு இதைவிடவும் பொருத்தமான பெயர்
இருக்கவே முடியாது என்று எனக்குத் தோன்றும்.

பிறந்த அன்றே அழகாகக் கட்டை விரலைக் கொண்டு
வாயில் வைத்துக் கொண்டு எல்லோரையும் அசத்தினான்.

நம் கைவிரல்களை சரியாகப் பிடிப்பான்.
நம் கண்களுக்குள் உற்றுப் பார்ப்பான்.

பலவருடங்கள் சந்தனம் இட்டுக் கொண்டால்
ஒரு நிற மாற்றம் நெற்றியில் தெரியும் அல்லவா?

கட்டை விரலால் சந்தனம் தீற்றியது போல
நெற்றியின் நடுவில் ஒரு அடையாளம்!

நேரில் பார்க்கும் போதும் தெளிவாகத் தெரியும்,​
போட்டோக்களிலும் தெளிவாகத் தெரியும். :photo:

முதலில் பேசிய வார்த்தை "அமிர்தா!"

எட்டு மாதக் குழந்தையாகக் காலையில்
கண் விழித்தவுடன் சொன்ன வார்த்தை!

பிறகு அதுவே தினசரி ஜபம் ஆயிற்று. :happy:

சங்கீதத்தில் 'கோபுச்ச யதி' என்று ஒன்றுண்டு.
நதியின் பிரவாகத்துக்கு எதிர்மறை ஆனது.

பெரிதாகத் தொடங்கிப் பின் படிப்படியாகச்
சுருங்கியபடியே சிறிதாகும் அழகான யதி.

"அமிர்தா" அது போன்றே மாற்றம் அடைந்தது.
"அமிர்தா...அமிதா... மிதா... தா..." என்று!

இதை இரண்டு ஸ்தாயியில் மாற்றி மாற்றிச் :sing:
சொல்லும் போது அது காதில் அமிர்தமே! :ear:​
 
# 78. தேஜஸ். (2)

படுத்துக் கொள்ளும் நாட்களில்
அவன் கவிழத் தொடங்கினான் .

நீந்த வேண்டிய நாட்களில் அவன்
தவழத் தொடங்கினான்.

நிற்பதற்கு மிகவும் பிடிக்கும்.

மரம் ஏறுவது போல ஏறுவான் நம்
மடியிலிருந்து தோள்வரையிலும்!

கைக்கு எட்டாததைக் கால் விரல்கள் பற்றும்.
அவ்வளவு perfect grip பார்த்ததில்லை!

நடக்கத் தொடங்கும் முன்பே ஓடினான்

கூடைப் பந்து வீரன் போல எப்போதும்
A boy on the move holding a big ball.

குளிக்கும் போது கூடைப் பந்து ஆடுகின்றான்.
'நெட்'டையும் 'பாலை'யும் பார்த்து அசந்தேன்.

அவன் அம்மா அவனுடைய பொருட்கள்
அத்தனையும் அள்ளிக்கொண்டு வந்து இருந்தாள்,
அவன் பேபி- ரூம் அறையைத் தவிர.

நிறைய நிறையப் படித்தான் தினமும்!
காலண்டரில் நம்பர்களைக் காட்டினான்.

கலர்களைக் சரியாகக் காட்டினான்.
One டு twenty தானே சொன்னான்.

A to zee with objects சொன்னான்.
அம்மாவும் அவனும் மாறி மாறி
rhymes டூயட் பாடினார்கள்.

இரண்டு முறை ஒரு பொருளைத் தொட்டால்
அம்மா அதன் பெயரைச் சொல்ல வேண்டும்.

நிறையப் புது வார்த்தைகள் கற்றுக் கொண்டான்.
Tejas was just 17 months young at that time! :)
 
தேஜஸ் = கூர்மை, தீச்சுடர், வெப்பம், ஒளி, பிரகாசம், காந்தி,

ஜோதி, வலிமை, சாமர்த்தியம், தைரியம், ஆன்ம பலம், மஹிமை,

சாரம், சத்து, சக்தி, நெருப்பு, வேகம், புதிய வெண்ணை, தங்கம்.
 
# 79. தேஜஸ். (3)

மின்னல் பரமேஸ்வரன் என்று ஒருவர்.
போலீஸ் சர்க்கிளில் மிகவும் பிரசித்தம்.

அவர் மின்னல் வேகம் உடையவராம்.
இவனும் மின்னல் தேஜஸ் ஆனான்.

ஒரு பக்கெட்டைக் கவிழ்த்துப் போட்டு
அதைத் தள்ளிக் கொண்டு வீடு முழுவதும்
புல்டோசர் போல அதை ஓட்டினான். :roll:

chair மேல் குஷன் இருந்தால் பிடிக்காது.
எல்லாவற்றையும் கீழே தள்ளுவான். பிறகு
அவற்றின் மேல் 'தத்துக்கா புத்துக்கா' நடை!

பேபி ஷூவைக் கொண்டு தந்தால், போட்டுவிட்டு
உடனடியாக அவனுடன் வெளியே போகவேண்டும்.

இல்லாவிட்டால் படிப் படியாக
அவன் அழுகை தீவிரம் அடையும்.

முதலில் பாகவதர் போல் "ஆ......!"
அடுத்தது சிரித்துக்கொண்டே அழும்
சிவாஜி கணேசன் போல,"ஆ! அஹ், அஹ், அஹ்"

அதற்கும் நாம் மசியாவிட்டால் பிறகு "ம்......!"
உதடுகள் பிரியாமல் அழுவான். அடுத்தது
"ம்!....ம்!.....ம்! .....ம்!" என்று
full throttle and acceleration! :Cry:

மொட்டை மாடி மிகவும் பிடித்தது அவனுக்கு.
நாற்பது அடி உயரத்தில் இருந்து நல்ல வியூ!

சில வீடுகளுக்குள் நுழைய மறுத்தான்! :nono:
சில வீடுகளில் இருந்து வர மறுத்தான்! :nono:

Sensitive to the home atmosphere aka ambience???

பிடித்த வீடுகளில் Donald Duck போல
பின்னால் பார்த்துக் கொண்டு வேகமாக
முன்னால் ஓடி முட்டிக் கொண்டான்.


0
up_dis.png



# 79. தேஜஸ். (3)

மின்னல் பரமேஸ்வரன் என்று ஒருவர்.

போலீஸ் சர்க்கிளில் மிகவும் பிரசித்தம்.

அவர் மின்னல் வேகம் உடையவராம்.

இவனும் மின்னல் தேஜஸ் ஆனான்.

ஒரு பக்கெட்டைக் கவிழ்த்துப் போட்டு

அதைத் தள்ளிக் கொண்டு வீடு முழுவதும்

புல்டோசர் போல அதை ஓட்டினான். :roll:

chair மேல் குஷன் இருந்தால் பிடிக்காது.

எல்லாவற்றையும் கீழே தள்ளுவான். பிறகு

அவற்றின் மேல் 'தத்துக்கா புத்துக்கா' நடை!

பேபி ஷூவைக் கொண்டு தந்தால், போட்டுவிட்டு

உடனடியாக அவனுடன் வெளியே போகவேண்டும்.

இல்லாவிட்டால் படிப் படியாக

அவன் அழுகை தீவிரம் அடையும்.

முதலில் பாகவதர் போல் "ஆ......!"

அடுத்தது சிரித்துக்கொண்டே அழும்

சிவாஜி கணேசன் போல,"ஆ! அஹ், அஹ், அஹ்"

அதற்கும் நாம் மசியாவிட்டால் பிறகு "ம்......!"

உதடுகள் பிரியாமல் அழுவான். அடுத்தது

"ம்!....ம்!.....ம்! .....ம்!" என்று

full throttle and acceleration! :Cry:

மொட்டை மாடி மிகவும் பிடித்தது அவனுக்கு.

நாற்பது அடி உயரத்தில் இருந்து நல்ல வியூ!

சில வீடுகளுக்குள் நுழைய மறுத்தான்! :nono:

சில வீடுகளில் இருந்து வர மறுத்தான்! :nono:

sensitive to the home atmosphere???

பிடித்த வீடுகளில் Donald Duck போல

பின்னால் பார்த்துக் கொண்டு வேகமாக

முன்னால் ஓடி முட்டிக் கொண்டான்.
 
#80. தேஜஸ்.(4).

வரும்போது ஃப்ளு குழந்தையின்
அடுத்த அடுத்த சீட்கள் இவர்களுக்கு.

ஃப்ளு பிடித்துக் கொண்டுவிட்டது பாவம்! :sick:
Time zone difference (-) 11 - 30 மணிகள்.

வந்து ஒரு வாரம் வரையில் இவன்
'அவன் time zone' இல் இருந்தான்;

இரவு ஒரு மணிக்கு எழுந்து கொண்டான்.
breakfast சாப்பிட்டான்; விளையாடினான்;

குளித்து விட்டு lunch சாப்பிட்டு விட்டு
மதியம் ஒரு மணிக்கு மீண்டும் உறங்கினான். :sleep:

பாவம் என் மகனும், மருமகளும் தான்!
அவனுடனும் விழித்துக் கொண்டு இருந்தார்கள்.

எங்களுடனும் விழித்துக் கொண்டுஇருந்தார்கள்.
அல்லது இருக்க
க் கடின முயற்சி செய்தனர்.

"கச்சேரி முடியும் போது சுருதி சேர்ந்தது போல"
ஊருக்குத் திரும்புவதற்கு முதல் நாள் தான்
நம் டைம் zone க்கு வந்தார்கள் எல்லோரும். :clock:

U.S.A போன பிறகு "Repeat performance?" :noidea:
 
குறிலும், நெடிலும்!

பாம்பு என்று எழுதச் சொன்னால்
பம்பு என்ற எழுதினான் ஒருவன்!

காரணம் கேட்ட போது சொன்னான்,

"கால் இல்லையே பாம்புக்கு! அதனால்
கால் கொடுக்கவில்லை நானும்" என்று!

குறிலை நெடிலாகவும், நெடிலைக்
குறிலாகவும் மாற்றிப் படியுங்கள்!

பொழுது போகாதவர்களுக்கும் கூட
பொழுது போதாமல் ஆகிவிடும்!
 
When we plan to spend four months each in three different locations
it is wisdom to keep ~ 1/3 of our total dresses in every location.
But apparently wisdom as well as common sense are very rare!
 

Latest ads

Back
Top