• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

But how to manage the sky high travel expenses? :(

The best idea is to have only a back pack of belongings!! :cool:

Managing with a backpack will become possible ONLY
we have the wisdom to store 1/3 of the dresses
in the three different locations of our stay! :thumb:

So back to the square one ( aka #22450) :)


One's own house needs to be maintained as well.
THAT makes the annual trip a necessity - at an enormous expenditure!
More luggage makes these trips more difficult - since we are not growing younger !
 
Entrusting someone with the house key for regular cleaning will surely lead to the misuse of the house - in a place where everyone wishes for a little extra space.

Renting out will render us homeless during our next visit and also cause a deep dent in the purse - when we try to get back the house into a salable condition!

While we can stay for 60 months or more at a stretch here, we can't do it in India.
So the nAdOi / nAdu vittuOdi life till 2121 is inevitable!

Well! We should actually feel happy and thank Divine Providence for guiding us so that we just got into this country before you-know-who got into that office!
 
# 81. தேஜஸ். (5)

ஒரு பிரபல ஹிந்திப் படப் பாடலில்
"ந ந ந, ந ந ந, ந ந ந" என்று வரும்.

தேஜசும் அதுபோலத் தான்!

"ந, ந, ந" என்று தலையை வேகமாகப்
பக்க வாட்டில் அசைத்து எதிர்ப்பான்!

பிடிக்காவிட்டால் அவனைத் தொட முடியாது.
பிடிக்காத ஆடையைப் போட்டுவிட முடியாது.

பிடிக்காத உணவைத் தர முடியாது.
பிடிக்காதது எதையும் செய்ய முடியாது.

"கழுவும் மீனில் நழுவும் மீன்" என்பார்கள்!
எத்தனை விதங்கள் உண்டோ அவன்
அத்தனையிலும் தப்பி விடுவான்.

இடுக்கு வழியாகச் சென்று விடுவான்.
கால்களுக்கு இடைவழியாகச் செல்வான்.

பிடித்துத் தூக்கினால் இரண்டு கைகளையும்
"Hands up!" செய்து நழுவிவிடுவான்.

ஒல்லி உடம்பு...உயரம் சற்று அதிகம்!
பிடித்த உணவும் சேமியா, நூடுல்ஸ், பாஸ்தா!

முனிவர் போலப் பாலும், பழமும் முதல் சாய்ஸ்!
Organic vegan ஆனதால் 'சாய் பால்' தான்!

வாழைப் பழம் என்றால் உயிர்! அதை
ஓடி ஓடி வந்து கடித்து விட்டுப் போவான்.

அம்மாவின் தோளையும் கடிக்கப் பிடிக்கும்.
ஸிம்பா போல மேலே பாய்ந்து தள்ளி விடுவான்.

நான்கு முனைகள் கொண்ட என் தடியை எடுத்து
சிலம்பு சுழற்றிய போது அசந்து விட்டோம்.

இன்னமும் எனக்கு சந்தேகம் உண்டு!
அவன் அதைச் சுழற்றினானா அல்லது
அது அவனை இழுத்துச் சுழற்றியதா?

பாயை விரித்துச் சுருட்டி ஒரு விளையாட்டு!
குங்குமச் சிமிழின் மூடி ஒரு பம்பரம் ஆயிற்று.:tinfoil3:

Skype இல் அக்காவைப் பார்த்துவிட்டு
"பாப்பு பாப்பு" என்றான். அவள், "தேஜஸ்!" :baby:

எல்லாக் கடவுள்களின் பெயரும் தெரியும்.
தவறாகச் சொன்னால் தலை அசைத்து "ந ந ந ந!" :nono:

"ராமா" என்றால் "ஸீதா" என்பான்! "தாத்தா!" "பாட்டி!"
Ipad operation எல்லாம் அத்துப்படி. IPad பற்றிய
ஒரு conference சுக்குச் சென்ற தம்பி சொன்னான்,

"இவனையும் ஒரு delegate ஆக்கி இருக்கலாம்!
பேசத் தெரியாவிட்டாலும் demonstrate செய்வானே!"
:thumb:​
 
Last edited:
.
# 82. தேஜஸ். (6)

அய்யாவுக்கு எப்போதும் டிப் டாப்பாக
ஃ புல் பான்ட், ஃபுல்ஷர்ட்! 'இன்' பண்ண வேண்டும்.

குளிக்க வைக்க ஆடையைக் கழற்றினால் அழுது, கத்தி ஊரைக் கூட்டுவான்! :bathbaby:

குளித்தபிறகு ஆயில் மசாஜ், body மசாஜ்
சமர்த்தாகச் செய்து கொள்ளுவான். :baby:

Eyelashes அவ்வளவு நீளம்.
"Butterfly flutter by" என்று பாடத் தோன்றும்.

நெற்றியில் சந்தனத் தழும்பு உள்ளதே!
இப்போது நெற்றியைத் தொட விடமாட்டான்!

மறந்து விடாமல் இருக்க தினமும்
கொஞ்சம் முட்டுக் குத்தித் தவழ்ந்தான்.

மணலில் விளையாடப் பிடிக்குமாம்.
இங்கே மணல் இல்லை! மிஸ் செய்தான்!

எதிர் வீட்டுத் தாத்தாவை எழுப்பி
விட்டு விட்டு​
அவர் ஊஞ்சல் சேரில் ஓய்யாரமாக ஆடினான்.

மாரீ பிஸ்கட் inaugurate செய்தான். :hungry:
எல்லோர் தோளிலும் சவாரி செய்தான்.

என்னிடம் தூக்கச் சொல்லவில்லை.

அவனுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது
அவனையும் போட்டுக்கொண்டு நானும் விழுவேன் என்று!

சின்ன மர ஸ்டூலின் கால்களுக்கு இடையே
புகுந்து பல சர்க்கஸ் வித்தைகள் செய்தான்.

விளக்கை போட்டுப் போட்டு அணைப்பது
மிகவும் பிடித்த விளையாட்டு! கே. பாலசந்தர்?
:noidea:


 
# 83. T.J .Specials. (7)

அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்...
"சா பா மூ! நோ மே ஸீ!!!"

நிச்சயமாக எதோ பொருள் இருக்கின்றது.
அதோ டோனில் அதே டியுனில் சொல்வதால்.

அது என்ன என்று கண்டு பிடிக்க முடியவில்லை!

அவன் அம்மாவையும், அப்பாவையும்
ஒரு விரலை பிடித்துக் கொண்டு
தன்னுடன் இழுத்துச் செல்வான்.

மற்றவர்களை "வ்வா! வ்வா!" என்று.

வீணை மிகவும் பிடித்துவிட்டது.
தந்திகளைப் பற்றி இழுப்பான்.

லூசாக இருந்ததால் பரவாயில்லை.
இல்லாவிட்டால் விரல் வலிக்கும்.

Action songs நன்றாகச் செய்வான்.
இம்மியும் மாறாமல் ஒவ்வொரு முறையும்!

இவனுக்குப் பிடித்தவைகள்...லைட், நிலா, ஃபேன்.
அப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்துள்ளான்.

சீதா ராமர் கல்யாண உற்சவத்தை
கண் கொட்டாமல் பார்த்து ரசித்தான்.

கை
த் தடியைச் சிலம்பு சுற்றி அவனைக்
கண் கொட்டாமல் ரசிக்க வைத்தான்.

Seedless மாதுளை முத்துக்களை
மிகவும் ரசித்து, ருசித்துப் புசித்தான்!

எட்டு ஊருக்குச் சத்தம் போடும் மிக்ஸியை
வந்து வந்து தவறாமல் வேடிக்கை பார்த்தான்.:happy:

நினைத்தபோதெல்லாம் கூவும் சேவலின்
குரலைக் கேட்டு நடுநடுங்கினான்! :fear:

மண்டு, குண்டு சேவல் நாள் முழுவதும்
மருட்டிக் கொண்டிருந்தது குழந்தையை.

நிறைய நிறையக் கற்றுக் கொண்டான்.
நிறைய நிறையக் கற்றுக் கொடுத்தான்.

அடுத்த சந்திப்புக்காக நாங்கள் மிகவும்
ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளோம்.

தேஜசின் தேஜஸ், ஓஜஸ்,
ஸ்ரேயஸ், யசஸ்​
தினமும் வளர்ந்து பெருகவேண்டும்!:pray:

எல்லா நலன்களும், பெருமைகளும் பெற்று
அவன் சீரும் சிறப்புமாக வாழவேண்டும்! :hail:

P. S.

TEJAS = T. J != Tom and Jerry!! My favorites!!!
 
புதுக் கண்ணாடி ஆர்டர் செய்திருந்தேன்.
அது நிற்கவே இல்லை மூக்கின் மீது !

வழுக்கி வழுக்கிக் கீழே வந்து கொண்டிருந்தது.
விழிகள் இருந்தும் எதையும் படிக்க முடியவில்லை.

பிறகு தெரிந்தது nosepadஐ நசுக்காமல் தந்துள்ளார் என்று.

பிறகு புரிந்தது "சா பா மூ நோ மே ஸீ" என்பதன் பொருள்!!

சா பா மூ = சப்பை மூக்கு இருந்தால்
நோ மே ஸீ = (உன்னால் எதையும்) பார்க்க முடியாது :rofl:
 
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்!

ராமனுக்கு லக்ஷ்மணன் போல தேஜஸுக்குத் தருண் குட்டி!

நிறம், குறும்பு, அறிவு அனைத்திலும் அண்ணனுக்குச் சவால்!

அவன் அன்னை விளையாட்டாகவே எண்ணும், எழுத்தும்,
அனைத்தும், கற்றுக் கொடுப்பாள் குழந்தைகளுக்கு.

ஒன்றரை வயதிலேயே எந்தப் புத்தகத்தையும் படிப்பான்.
எந்த floor puzzle கொடுத்தாலும் முனைந்து செய்வான்.

எந்த alphabet கொடுத்தாலும் கூறுவான் - அதில் தொடங்கும்
பறவை, மிருகம், கனி, காய் வகைகளின் பெயர்களை!

Z டு A தலை கீழாகக் கரதல பாடம்!
100 டு 1 தலை கீழாகக் கரதல பாடம்!!

'ர', 'ற' என்ற எழுத்துக்கள் மட்டும் வராமல் கொஞ்சம் படுத்தும்!
இங்கு 'ர', 'ற' எல்லாமே 'ழ' என்பதால் எந்தப் பிரச்சனையும் இல்லை!

பெரிய டான்ஸர் ஆக இருந்திருப்பான் / அல்லது ஆவான்!
மண்டல அடவுகளை மிகவும் அற்புதமாகச் செய்வான்!

ஓரக் கண் பார்வையும், அபிநயமும் யார் சொல்லிக் கொடுத்தார்களோ?
ஓயாமல் தட்டாமாலை Sufi டான்சர்களைப் போலச் சுற்றும் மர்மம் என்ன?

இப்போதெல்லாம் இரண்டு கால்களையும் மாறி மாறி அடித்து நாட்டியம்!
மூன்று காலங்களில் அந்தக் கஷ்டமான ஸ்டெப் செய்து காட்டுகின்றான்!

அண்ணனுடன் தானும் kung fu கிளாஸ் போகின்றான் - அண்ணனுடன்
தானும் குட்டி Ukulele எடுத்துக் கொண்டு மியூசிக் கிளாஸ் போகின்றான்.

ஒரே போல உடுத்த வேண்டும், உண்ண வேண்டும், உறங்க வேண்டும்.
வீட்டுக்குள்ளே பாயிண்ட் டு பாயிண்ட் transportation on some wheels!

எப்போதுமே மூன்று சக்கர நீல ஸ்கூட்டர் மீது பயணம்!
நீல ஸ்கூட்டர் இல்லாவிட்டால் நீல பிளாஸ்மா கார் தான்!

கலப்படம் இல்லாத அந்தணக் குழந்தைகள் இருவரும் இறையருளால்
வளமுடன் நீண்டகாலம் வாழ்ந்து அரிய சாதனைகள் பல புரிய வேண்டும்!
 
# 84. Baby Swapna's birthday.

ஸ்வப்னா எங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை.
அன்று அவள் முதலாம் ஆண்டு நிறைவு விழா!

"கொஞ்சம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள்!
கொஞ்ச நேரத்தில் வருகின்றேன்" என்றார் அவள் அம்மா.

காலை எட்டு மணிக்கு விட்டுச் சென்றவர் மீண்டும்
மாலை ஐந்து மணிக்கு வந்ததார் குழந்தைக்காக!

அப்போதெல்லாம் இன்று போல LEAK PROOF NAPKIN
குழந்தைகளுக்கு அணிவிப்பது என்பது கிடையாது.

என் மகனுக்கு ஊட்டிய எளிய உணவையே
BIRTHDAY BABY ஸ்வப்னாவுக்கும் ஊட்டினேன்.

அவளையும் சுத்தம் செய்தேன்; தூங்க வைத்தேன்.:sleep:
அன்று மாலை கோலாகல பார்ட்டி நடந்தது. :party:

எனக்கு INVITATION இல்லை!
எதிர்பார்க்கவுமில்லை.

"என் கடன் பணி செய்து கிடைப்பதுவே" என்னும்
மனப்பான்மை வளர இவை நிரம்பவும் உதவுமே!

தோட்டத்தில் பார்ட்டி! நன்கு பார்க்க முடிந்தது!

பட்டுச் சட்டையும், நகைகளும் பூட்டின பின்
"அதே ஸ்வப்னாவா?" என்று அதிசயித்தேன். :baby:

எல்லோரும் தூக்கி கொஞ்சி விளையாடினார்கள்.
எல்லோரும் அன்று காலை எங்கே இருந்தார்கள்??? :noidea:​
 
# 85. Terrace Dance Classes.

பதினைந்து குழந்தைகள் ஆடுவதற்கு
எத்தனை இடம் வேண்டும் தெரியுமா?

என் வீட்டு ஹால் நிச்சயம் போதாது!

தினமும் கிளாஸ் இருந்ததால் சிறிய
வகுப்புகள் ஆக ஆக்கவும் முடியவில்லை!

பலன்... மொட்டை மாடியில் வகுப்பு!

எங்கு பார்த்தாலும் விழிக் கணைகள்...
தொடங்கி
ய முதல் சில நாட்களுக்கு!​

பிறகு அவரவர் வேலையைப் பார்த்தனர்.
நமக்குத் தொல்லை இல்லாமல் ஆனது!

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்!

போயும் போயும் வகுப்பை யார் தினம்
பார்த்து
நேரத்தை வீணாக்கிப் பார்க்கப்போகின்றார்கள்?
என்று எண்ணிய என் எண்ணம் நிஜமானது! :thumb:
 
# 86. Brick Race.

Ladies' Club போட்டிகளில் மிகப்
பிரபலமானது இந்தப் போட்டி.

தம்பதியினரின் திறமையைச்
சோதிக்கும் ஒரு விளையாட்டு.

(விபரீதக் கற்பனைகள் வேண்டாம்!) :nono:

செங்கல் நிலத்தின் மேலே இருக்கும்!
எடுத்து வீச அனுமதி கிடையாது! :nono:

:brick: :nono:

கணவன் இரண்டு செங்கல்களை
மாற்றி மாற்றி தரையின் மீது
மனைவிக்காக வைத்துக் கொடுக்க,

அவள் அதன் மீது balance செய்தபடி
தரையை மிதிக்காமல் நடந்து வர வேண்டும்.

முதலில் முடிவுக் கோட்டை அடைபவர்
போட்டியில் வென்றவர் ஆவர்.

அங்கேயும் மூன்று ரகக் கணவர்கள்....!

மனைவி வெல்லவேண்டும் என்று
தள்ளித் தள்ளிக் கற்களை வைத்து,
அவளையும் கீழே தள்ளுபவர்.(1)

மனைவி விழக் கூடாது என்று
பக்கம் பக்கம் கற்களை வைத்து
வெல்லும் வாய்ப்பைப் பறிப்பவர்.(2)

சரியான தூரத்தில் வைத்து உதவுபவர்.(3)
என் கணவர் மூன்றாவது ரகம். :cool:

எனக்கும் in those days balance நன்றாக நிற்கும்.
எங்களுக்கே முதல் பரிசு எப்போதும்! :first:​
 

# 87. இவன் ராமனா? கண்ணனா?

பிறந்தது ரோஹிணி நக்ஷத்திரத்தில்
"கண்ணன்"!​
பெயர் என் தந்தையுடையது "ராமன்".

இவன் ராமனா? கண்ணனா? தெரியாது! :noidea:
ஒரு முறை Mrs.C.M.D யுடன் trouble!

அவர் அஜந்தாக் கொண்டை போடுவார்.
அவர் உயரத்துக்கும், நிறத்துக்கும்,
அழகுக்கும், அது அழகு சேர்க்கும்.

நான் எப்போதும் முன்னால் அமர்வேன்.
அன்று அவருக்குப் பின்னால் என் chair.

நான் ஏமாந்த ஒரு split - second இல் இவன்
அஜந்தாவைப் பறிக்க முயன்று தோற்றான்.

கோபமாகத் திரும்பியவர் இவனது
பொக்கை வாய்ச் சிரிப்பில் மயங்கி
மடியில் வைத்துக் கொஞ்சலானார்!

If you are a cute baby :baby:
(or a sweet/pretty lady) :music:

you can do anything and
get away with it! என்று
அன்று நிரூபணம் ஆயிற்று! :thumb:
 
I got a surprise gift on The Teacher's Day.

Someone (quite unknown to me) had used his Time and Talent to

render the Online Sanskrit Tamil Dictionary posted by me into

an Offline Dictionary making it available to all and

at the same time giving me the due credit.

I realize how good it feels to be in the receiving end
of a selfless act - just for a change!
:couch2:
May the likes of him fill the earth and make it a happy place!
:amen:

damodarreddy challaSep 5, 2018plus.google.com/100920258479375771844
Namaskaram amma,
thanks for great work.
i created an offline dictionary database using this, and now available to all, with full credits to you.
here is the link…

https://github.com/sanskrit-coders/...-indic-entries/samskritam-tamizham_dictionary

Thank you Mr. Damodara Reddy! I doubt whether you are a member of this forum. According to my knowledge, long time observation and logical inference...if you are a member, you would not have helped me and also responded to me in this manner! God Bless you and your loved ones!:pray2:
 
Now that the blog of "The AzhwArgaL" has been completed, I must start my next project.

My long time dream has been to blog the lives of the Great Saints and Sanths of India ( not the modern gurus performing magic shows)

The reference material may costs in *** $ or **** Rupees!

The other option is to sieve through the tone of materials available on the internet and condense them into a tablet form!

In all probability the second option maywork out!

That I write for free itself unpalatable for many. To spend more money for the materials needed, for the sake of writing for free... :nono:
 
The other dream is to compile all works glorifying Krishna under one heading!

Ashtapadhi, Krishna Leela tarangiNi, Krishna KarnAmrutham, Mukundha mAlai etc.

Lord Krishna has to help me in this Himalayan task! :pray:

It makes me very sad that I am unable to get a photo of my first guru and

paternal grandfather Sri K.R.Narayanan, for posting on the blog of the collection

of all his compositions ! :(
 
Last edited:
Now anyone can own a moon! :love:

8-20cm-Diameter-3D-Print-Moon-Lamp-USB-LED-Night-Light-Lunar-Moonlight-Gift-Touch-Sensor_4cd89e38-6489-4100-95e7-f635b5b100c7_400x.jpg



The 3 D printed, rechargeable LED Moon Lamp!
 
# 88. The Coffee Ceremony! :tea:

அவர்கள் வட நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் டீ மட்டுமே குடிப்பவர்கள்!

அது போன்றவர்கள் காபி போட்டால்
சாதாரணமாக வாயில் வைக்க வழங்காது! :wacko:

"காபி வேண்டாம்" என்று சொன்னபோதும்
"குடித்து விட்டுச் சொல்லுங்கள் எப்படி என்று!"
அது போன்ற காபி நான் குடித்ததே இல்லை!:faint:

கோப்பையின் நடுவில் உயர்ந்து நின்றது
ஒரு COFFEE AND CREAM WHIRLPOOL !

நிறமும், மணமும், சுவையும் அப்பப்பா!
நானும் அதே இன்ஸ்டன்ட் காபி தான்!
ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே!

அவர்கள் அதை ஒரு CEREMONY போலச்
செய்வது, விளக்கிய பின் விளங்கியது.

பொடியுடன், சர்க்கரையும், பால் ஏடும்,
நன்றாக கலக்கியபின் அதில் நன்கு
கொதிக்கும் பாலை ஊற்றிய காபி! வாவ்!

JAPANESE TEA CEREMONY போல
NORTH INDIAN COFFEE CEREMONY!

அதிசயம் ஆனால் உண்மை!
அவர்கள் அந்தக் காபியையும்
கூடக் குடிப்பதில்லையாம்
icon4.png
 
# 89. கமிட்மென்ட் போர் 108 ABISHEKAM.

சிவலிங்கத்துக்கு 108 அபிஷேகம் வேண்டுதல்.
திங்களன்று மட்டும் செய்து
கொண்டு வந்தேன்​

108 இல் 78 முடிந்து விட்டது. மீதம் முப்பது???
ஒரு மாதத்தில் ஊருக்கு மூட்டை கட்ட வேண்டும்.

மிகுந்த முப்பது அபிஷேகங்கள்...? :confused:

பூசாரியிடம் என் நிலைமையை விளக்கினேன்!
தினமும் செய்து தர ஒப்புக் கொண்டார்.

முப்பது நாட்களுக்கு தொடர்ந்து செய்து
ஸ்கோரை எட்டிவிட்டோம் நாங்கள். :bowl:

என் நன்றியைக் காட்ட ஒரு நல்ல
10 x 6 ஸ்பெஷல் சோமன் செட்!

அவர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை! :shocked:
மிகவும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். :happy:

How true is the saying...

"When you receive an act of kindness
please pass it on to the others also!"
 
# 91. புல்லெட் குஷ்பூ இட்லி!

Rocky mountain விசிட்.
இரவு அங்கேயே ஹால்ட்.

குழந்தை அமர்ந்து உண்ணவிடமாட்டான்.
எனவே Carry out food வழக்கம் போல.

சவுத் இந்தியன் speciality என்று
இட்லி வடை கேட்டிருக்கிறார்கள்.

வடை தீர்ந்து விட்டது என்று நல்ல
மனத்துடன் மூன்று மூன்று இட்லிகள். :hungry:

குஷ்பூ புல்லெட் ஆக மாறி இருந்தாள்.:ballchain:
கத்தியினால் தான் வெட்ட வேண்டுமா?

விள்ளவே முடியவில்லை!விழுங்கவும் தான்!
கிரிக்கெட் பால் போல இருந்தது. :bowl:

Speciality இப்படி இருந்தால்
Ordinary எப்படி இருக்குமோ? :scared:​
 
# 90. ஹிமாலயக் 'குட்டி'கள்!

(குட்டி = கூட்டில் ஒளிந்திருக்கும் ஒரு சிறு
பருப்புத் தேங்காயின் செல்லப் பெயர்!)

ஒரு திருமணத்துக்குப் போயிருந்தோம்
பக்ஷணங்கள் எல்லாம் giant size !

லட்டு திருப்பதி லட்டு தானோ?

முறுக்குகள் எல்லாம் குறைந்தது
18 அங்குல விட்டம்!வாவ்!
எப்படித்தான் சுற்றினார்களோ?:faint:

'குட்டி' மினி ஹிமாலயாஸ் போல!
அவர்களிடம் கேட்டேன் "ஏன்" என்று!

முகமூடி போடாத பகல் கொள்ளையர்கள்
(லௌகிக பாஷையில் சொன்னால் சம்பந்திகள்)
அளவுகள் கொடுத்து இருந்தார்களாம்!

அதன்படி எல்லாம் தயார் செய்தார்களாம்!
பதினெட்டு அவர்களின் லக்கி நம்பர் போல!
எல்லாமே பதினெட்டை எட்டி இருந்தன!

ஒருபக்கதில் குட்டியின் காலிக் கூட்டை
வைத்து ஏமாற்றும் சில பிரகிருதிகள்! :evi:

மறுபுறம் ஹிமாலய சாதனைகள் புரியும்
புரியும் தாராள பந்தா பார்டிகள்! :popcorn:

நாம் எங்கே போகின்றோம்???:noidea:​
 
"Help me!" OR "I am homeless!"
Are the usual messages held on a board by the
men and women we meet at cross roads.
But the man we saw yesterday hels colorful board with
a bright yellow smiling smiley on a blue background.
It read "Be awesome!
Small wonder most people donated to him with green dollars.
Tell me honestly who does not want to be / or become Awesome???
 
# 92. Container cum food.

IKEA என்ற அழகான கடைகள்.
பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

அதன் specialty பிரட் & சூப்.

பிரட் சிறு பரணி போல இருக்கும்.
அழகான மூடியும் கூட இருக்கும்.

அதையே குடைந்து அதனுள்
சூப்பர் spicy சூப் நிரம்ப!

சூப்பைச் சாப்பிட்டு விட்டு ,
பிரட்டையும் சாப்பிடலாம்.

கண்ணுக்கும் விருந்து நம் பசித்த :love:
வயிற்றுக்கும் கூட நல்ல விருந்து.:hungry:

முதல் முறைபோன அன்று கிருத்திகை.
அதனால் Bread and soup :nono:

இரண்டாவது முறை IKEA போனோம்
இதை ருசித்து உண்பதற்காகவே


P.S.
Recently IKEA was opened in India in Hyderabad.
As expected by me, there was a mad rush to enter the shop!
 
Last edited:
# 93. THE LIMITS OF FREEDOM.

அக்காவின் பேரன் அமெரிக்கா வந்தான்,
M. S. Course அங்கே செய்வதற்கு !
அவன் கை நிறைய converted dollars ! :popcorn:
கூடவே பெரிய ஷாப்பிங் லிஸ்டு!

அவனுக்கு Financial Aid கிடையாது. :nono:

"அந்த லிஸ்ட் சாமான்களைப் பிறகு
அமைதியாக வாங்கலாம்!" என்றால்,
"நான் பிடித்த முயலுக்கு முன்றே கால்!" :high5:

பெரிய ஸ்டோருக்கு அழைத்துச் சென்றால்,
ஆள் அடிக்கடி காணாது போய்விடுவான்.

அவனை trace செய்வதே வேலை ஆயிற்று!

எல்லாவற்றையும் குடைந்து கொண்டு...
எல்லாவற்றையும் அணிந்து கொண்டு...

எல்லாவற்றையும் taste செய்து கொண்டு...
எல்லாவற்றையும் test செய்துகொண்டு...!

கோபமே வராத என் மகனுக்கும் அன்று
கோபம் வந்து விட்டது! காரணம்...?

Perfume section சுவர்க்க பூமி ஆகியிருந்தது,
அத்தனை spray க்களையும் பீச்சியிருந்தான்!​

"ஏன் இப்படிச் செய்கின்றாய்?" என்றால்
"ஃ ப்ரீ சாம்பிள் தானே!" என்ற பதில்.

"அது உனக்காக மட்டுமல்ல!
எல்லோருக்காகவும்தான்!" என

"சென்னை பாண்டி பஜார் perfume
இதை விட நன்றாக இருக்கும்!" என

"அப்போது அங்கேயே வாங்கிக் கொள்!"
கைப் பிடித்து இழுத்து வந்தோம் வெளியே.

ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு,
நம்மை வம்பில் மாட்டுவதற்கு முன்!

ஒரு சொற்றொடர் நினவுக்கு வந்தது!
"அவிழ்த்து விட்ட கன்றுக் குட்டி (AVKK) போல!" :llama:​
 

Latest ads

Back
Top