• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 94. The youngest account holder.

அப்போதெல்லாம் take home salary
அற்பமான சில நூறு ரூபாய்களே! :roll:

ஆனால் அதிலும் மிச்சம் செய்து சேமிப்போம்.
தங்கம் கிராம் பத்து ரூபாய் விற்ற காலம்! :shocked:

மாதக் கடைசியில் கையில் ஐந்து ரூபாய் இருந்தால்
ஒரு ராஜா போல ஃபீல் பண்ணுவோம்! :high5:

ஐந்து ரூபாய் கை மாற்று வாங்கி இருந்தால்
இலங்கை வேந்தன் போல் மனம் கலங்குவோம். :tsk:

என் பெரிய மகனுக்கு ஒரு savings account.
Youngest account holder (வயது 1 +)

Rs. ஐந்து ரூபாய் மட்டும் போட்டு ஆரம்பித்தோம்!

மாதம் ஒரு முறை Bank செல்லும்போது அவனுக்கு
special welcome + குட்டி gifts + toys !

காரணம்.....?

அவன் தான் youngest account holder.:baby:
ஒரு prince போலவே அவனை வரவேற்பார்கள்!

அது ஒரு பொற்காலம். நூறு ரூபாயில் குடித்தனம்!

இன்று alms > ஐந்து ரூபாய் தரவேண்டுமாம்!
இல்லாவிட்டால் வீசி எறிவார்கள் தரையில்! :mad2:
 
# 95. SUPERB PILLOW FIGHT !

மதுரைக் கல்லூரியில் படித்த போது
முதலாம் ஆண்டு விசித்திரமானது!

பகலில் அதுவே எங்கள் வகுப்பு அறை,
இரவு அதுவே படுக்கை அறையாகிவிடும்!

ரூமுக்கு பார்டர் கட்டியது போல - எங்கள்
பெட்டி, படுக்கை, புத்தகங்கள் - இறையாமல்.
ஒரு நாள் மும்மரமாக சீரியஸ் pillow fight :fencing:
நானும் என்னுடைய அறை சிநேகிதியும்!

வார்டன் சிஸ்டர் நின்று வேடிக்கை பார்த்தது
எங்களுக்குத் கொஞ்சமும் தெரியவே இல்லை!

எல்லோரும் திடீரெனக் கப்சிப் ஆனதால், நாங்கள் :tape:
என்னவோ என்று பார்த்தபோது தெரிந்தது!

அன்று இரவு வராண்டாவில் தூங்கவேண்டும்!:sleep:
அது தான் எங்களுக்குப் PUNISHMENT.

கதவுகள் திறந்தே இருக்கும்.

அறையினுள் இருந்த இருபது பேரில்
அன்று நாங்கள் இருவர் மட்டும்

கதவுக்கு வெளியே..............
ஹாயாகக் காற்றோட்டமாக....
குறட்டைச் சத்தம் இல்லாமல்.....

நல்ல பனிஷ்மென்ட் தான் அல்லவா?! ! :thumb:​
 
# 96. Chemistry experiment.

இரண்டாவது ஆண்டு கல்லூரிப் படிப்பு!
எனக்கு அம்மை போட்டுவிட்டது.

உடனே அப்பா அம்மாவை வரச்சொல்லி
வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.

இரண்டு வாரம் enforced vacation!
Chemistry யில் இரண்டு titration மிஸ் ஆனது !

தினம் தினம் சென்று அதைச் செய்ய அனுமதி
கேட்டுக் கேட்டுக் என் கால் தான் தேய்ந்தது!

கடைசி வரையில் என்னை அதைச் செய்ய
அனுமதிக்கவே இல்லை அவர்கள்!

தினமும் ஒரு கதை! ஒரு புதுக் காரணம்!

தட்டிக் கழிப்பது தெரிந்ததும் நான்
Titration end point நன்றாகத்
தெரிந்து வைத்துக் கொண்டேன் !

அதுவே எனக்கு public examil
வரவேண்டும் என வாழ்த்தினார்கள்!

அதுவே எனக்கு வந்தது! நான் தயார்!!!

அவர்களால் என் மார்க்குகளைக்
குறைக்கவோ தடுக்கவோ முடியவில்லை.

இன்று வரை காரணம் தெரியவில்லை! ஒரு குரு
ஒரு மாணவியை இப்படி சோதிக்கலாகுமா?
 
# 97. யானை மேலே சவாரி.

எங்கள் ஊரில் அடிக்கடி
யானையைப் பார்க்கலாம்.

மரங்களை நகர்த்துவதற்கும்
loading & unloading செய்யவும்
சொந்த யானைகளை சில புள்ளிகள்
வைத்துக்கொண்டு இருப்பார்கள்.

மனிதனின் கூலியை மிச்சம் செய்யலாம்.
யானை கொடி பிடித்து strike செய்யாதே!

பெரிய குழியை வெட்டி ஒரு காட்டு
யானையைப் பிடிப்பதையும் கூடக்
காட்டிக் கொடுத்துள்ளார் என் தந்தை.

யானையின் கழுத்தின் மேல் அமர்ந்து
ஆடி ஆடி கம்பீரமாகச் செல்பவர்களைப்
பார்க்கப் பார்க்க ஆசையாக இருக்கும்!

ஒரே ஒரு தடவையாவது ஆனை சவாரி
வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று.

ஒரு முறை வீட்டுக்கே வந்தது யானை.
மட்டைக் தேங்காயை காலால் தேய்த்து
உரித்து, உடைத்து, பருப்பை எடுத்து
உண்ணும் விந்தையைக் கண்டேன்!

வாழைப் பழங்கள் ஒரு குலை மாயமானது!
கடைசியில் யானைக்காரன் "யாருக்காவது
யானை சவாரி செய்ய வேண்டுமா?" என்றான்!
பல நாள் கனவு பலிக்கப் போகின்றது!

"எனக்கு! எனக்கு!" என்று முன்னால் ஓடினேன்!
அப்போது நான் குழந்தையும் அல்ல, பெரியவளும் அல்ல, இரண்டும் கெட்டான் வயது.

கீழே இருந்து ஒருவன் என்னைத் தூக்கிக் கொடுக்க
யானை மேல் இருந்தவன் வாங்கிக்கொண்டான்.

பார்த்தால் தெரிவதில்லை நமக்கு.
யானையின் மேல் ஊசி போன்ற ரோமங்கள்!

கிராமபோன் ஊசிகளைப் பொருத்திய ஒரு
சீப்பினால் உடலை வாரி விட்டது போல வலி!

துடித்துப் போய்விட்டேன் எதிர்பாராத வலியால்.
கீழே இறங்கினால் போதும் என்று ஆகி விட்டது.

அப்போது புரிந்தது ஏன் அம்பாரி தேவை என்று!

அவர்கள் யானையைப் படுக்கச் சொல்லி விட்டு
அதன் கழுத்தின் மேல் ஏறும் மர்மமும் விளங்கியது!

ஆசைப் படுவதெல்லாம் கிடைப்பது கூட
சில சமயங்களில் வேதனை தான் அல்லவா?​

 
# 98. ஆடி வெள்ளி.

பெரியவனின் convocation களை மிஸ் செய்தோம்.
சின்னவனின் convocation களை மிஸ் செய்யவில்லை.

அதற்கும் பெரியவனே காரணம்.
அவன் வற்புறுத்தல் தான் காரணம்.

காலையிலே I.I.T சென்று மதியம் வரை
அமர்ந்து இருந்து, வெளியே வந்தோம்.

குடலே ஜீரணம் ஆகிக் கொண்டு இருந்தது.
அதை விட அவசரம் - a visit to the restroom!

எதோ ஒரு ஹோட்டலில் நுழைந்தோம்.

இவரை ஆர்டர் செய்யச் சொல்லி விட்டு
நான் என் வேலையை கவனிக்கச் சென்றேன்!

நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஒரு சங்கடம்.
bladder muscles tone குறைந்து விடுவதால்!

இவர் சாதத்தில் குழம்பை ஊற்றிக் கொண்டிருந்தார்.
வினோதமான மணம் அன்றைய சமையலில்!

இவ்வளவு பெரிய பறங்கிக் காய்த் துண்டா?
ஆந்த்ராவின் 'த்ரீ-இன்-ஒன்' போல இங்கேயுமா?

குழம்பை saucer to plate ஊற்றினேன்.
ஜலதரங்கம் போல ஒரு சப்தம் கேட்டது.

தட்டில் கையை வைத்தால் விரல் நீள
எலும்புத் துண்டு அந்தக் குழம்பில்!

எனக்கு அன்று ஆவேசமே வந்து விட்டது!
ஆடி வெள்ளிக்கிழமையன்று இப்படியா?

என்ன பேசினேன் என்று நினைவில்லை.
ஆனால் ஹோட்டல் இன் சார்ஜ் ஓடி வந்துவிட்டார்.

"இவர் தான் ஆர்டர் செய்தார்" என்றான் சர்வர்.
இவர், "நான் ஆர்டர் செய்யவில்லை!" என்றார்.

இவர் என்ன சொன்னாரோ தெரியாது! :noidea:
அவன் என்ன கேட்டானோ தெரியாது! :noidea:

"எங்களப் பார்த்தால் ஆடி வெள்ளியன்று
ஆட்டுக்கறிக் குழம்பு சாப்பிடுபவர்கள்
போல இருக்கிறதா?" என்று ரகளை செய்தேன். :rant:

" அம்மா! நீங்க ஒண்ணும் தரவேண்டாம்!
வேறு vegetarian ஹோட்டலுக்குப்போங்கள்!"
என்று சமாதானம் செய்து அனுப்பினார்கள்.

வெளியே வரும் போது சிலர் சாப்பிடும்
வஸ்துக்கள் என் வயிற்றைப் புரட்டின. :whoo:

உள்ளே நுழையும் போது அவைகள்
ஏன் எங்கள் கண்களில் படவில்லை? :suspicious:

SELECTIVE HEARING போல இங்கும்
SELECTIVE SEEING என்று ஒன்று உண்டா? :wacko:

ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும்
தவறாமல் என் நினைவுக்கு வந்து
என்னைத் தொந்தரவு செய்யும் இது!

நல்ல வேளை எலும்பைப் போட்டிருந்தான்...
இல்லாவிட்டால்...நினைக்கவே பயமாக இருந்தது! :doh:​
 
102. Types of Listening



We all appear to listen attentively to what is being told to us. But surprisingly we hardly listen to 50% of what is being told to us and later on hardly remember 50% of what we had listened to!

This is due to the defective listening techniques we employ. There are several defective listening techniques like ‘false listening’, ‘initial listening’ and ‘partial listening’. On the other hand ‘good listening’ can be either ‘full listening’ or ‘deep listening’.

False listening occurs when a person pretends to listen keenly, but actually nothing gets registered in his mind. People who are known to indulge in this kind of listening are the Royalty, Politicians, Sports stars, Film stars and famous persons in any other field. They are forced to listen to a lot of talk, from persons whom they may never meet again! So they need not listen to nor remember, what they are being told!

Initial listening is when we listen to the opening remark, immediately form an opinion about it and wait for a chance to voice it. We stop listening to everything that follows the initial remark.

Partial listening is what most of us do most of the time! We listen a little and soon get diverted or distracted and lose the continuity.

Full listening is the most active form of listening. The listener pays close attention to the speaker and understands thoroughly what is being conveyed to him.

Deep listening is, when we not only listen to the words being spoken, but also understand the underlying emotions. We watch the body language of the speaker. We grasp the needs, preferences, biases, values and beliefs of the speaker. Deep listening is called as “the whole person listening”. It is also the wholesome listening technique.

It is said that, “The best gift you can ever give a woman is your undivided attention.” This is the gift every woman seeks for, all her life, but sadly very few ever receive it!

Visalakshi Ramani

https://visalakshiramani.wordpress.com/articles/miraculous-mind/types-of-listening/

 
103. Selective Listening



There are many similarities in the ways the brain processes the sound signals and the visual images. But there are many differences too. The main difference relates to the attention we pay.

We have more control on what we want to see than what we want to hear. Why?

We can turn our head and look at the object of interest without any disturbances. But it is difficult to listen just to the sound that interests us. We always hear overlapping and conflicting sounds which cause chaos. But this problem is settled in a unique way!

We can mentally choose to focus on one sound and block out the other conflicting sounds. This ability is called ‘Selective listening’. When two different stories are read out, in the two ears of a person simultaneously, he can decide to hear any one of them fully and just skip the other willfully.

We communicate through languages which have both sound and meaning. We understand coherent and meaningful words but not disconnected and meaningless chatter. Even in a crowded room filled with multi-lingual-babble, we can hear our name being called out softly, by some one, somewhere in the crowd.

Selective listening is an everyday business for almost every one. A person immersed in a T.V show is virtually deaf to all the other sounds around him. Have you ever watched a person working on a P.C? He is in the deepest form of meditation—lost to the entire external world! Many domestic quarrels result from this kind of selective listening.

It is amazing to watch students who use music as a barrier to all the other sounds. Have you watched a person studying hard for an upcoming exam, while music is played around him, round the clock? The music does not disturb his study but helps to keep off all the other unpleasant and disturbing sounds.

Diamond cuts a diamond. So too a pleasant sound cuts off an unpleasant sound!

Visalakshi Ramani


https://visalakshiramani.wordpress.com/articles/miraculous-mind/selective-listening/
 
I have just completed blogging 30 out of the several hundred compositions

of my paternal grandfather and my first guru - who taught me Music,

Maths and English Grammar. I hope to be able to add as many songs as

possible with the help of my dear sister and Veena Guru Smt. Raji Ram.

I am sharing the link of the new blog with those who really care!

https://haridasanarayanan.wordpress.com/

Bharathiyar songs are sung by people in many styles. I too wish to give

the same liberty to those who plan to sing these songs. As long as you

stick to the specified Ragam and Thalam, you have the liberty to bring out

the best in you in the most creative way.
 
# 99. க்ருஷ்டையா.

மூன்றாவது servant quarters இல்
குடிபுகுந்தது அவன் குடும்பம்.

எங்களுக்கு வேலை செய்ததும்
இவனது மனைவி மனோரமாவே!

ஒரு மகன், ஒரு மகள் அவ்வளவே!

நல்ல வருமானம் கிடைத்தும் அது
அப்படியே wine ஷாப்புக்குப்
போய்விடுவதனால் அந்த வறுமை.

பகலெல்லாம் நன்றாக இருப்பான்.
இரவில் ஆளே மாறிவிடுவான்!

"மஹா பாரதமுலோ க்ருஷ்ண பரமாத்மா
ஏமி செப்பாடு தெலுசா?" என்ற தொடங்கி

மனோரமாவை சப்பாத்தி மாவு பிசைவான்.
குழந்தைகள் பயந்து வீறிட்டு அலறும்.
அவர்கள் முதுகிலும் நாலு சாத்துவான்.

அப்போது நாம் என்ன சொன்னாலும்
அவன் காதில் விழாது என்பதால்;

அடுத்த நாள் அறிவுரை சொன்னால்
குனிந்த தலை நிமிராமல் கேட்பான்.

"இனிக் குடிக்க மாட்டேன்!" என்று சத்தியம்
தன் தலை மேல் அடித்துச் செய்வான்.

"குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு!"
இங்கு அவன் பேச்சு மாலை வரை தான்!

இரவு மீண்டும் அதே கூத்து! அதே ரகளை!

அவள் அத்தனை பொறுமைசாலியாக
அவனுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்தாள்?

தாலி தந்த அந்த மெல்லிய வேலிக்காகவா?
தகப்பன் என்ற ஒருவன் தேவை என்றா?

அவனால் கால் காசு பிரயோஜனம் இல்லை!
பூவுக்கும், பொட்டுக்கும் அவள் தந்த மதிப்பா?

இதுதான் ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் வாழ்க்கையா?
 
100. கன்னையா.

காய்கறி வியாபாரம் செய்து வாழ்பவன்;
கணக்கில் புலிகள் தான் அவனும் மனைவியும்!

சந்தையில் அத்தனை விதமான காய்கறிகள்
அத்தனை மாறுபட்ட விலைகளில் வந்து குவியும்.

யார் யார் எத்தனை எடையில் எதனை
வாங்கினார்கள் என்று நினைவு வைத்து
மனக் கணக்கிலேயே செய்து விடுவர்.​

ஒரே சமயத்தில் பல customer களை
கவனிப்பார்கள் அவனும் மனைவியும்.

சுருள் தலை முடியும், நல்ல மரியாதையும்
கொண்ட அவன் கடையில் குவியும் கூட்டம்.

அவனுக்கு மூன்று குழந்தைகள் உண்டு.
மகன், மகள், மகன் என்ற வரிசையில்.

பெரிய இடத்துப் பிள்ளைகள் போல
தோரணை, தோற்றம், பழக்கம் எல்லாம்!

பெரியன் பத்தாவது படித்து முடித்தான்.
பாலிடெக்னிக் சேர்ந்து படிக்க விரும்பினான்.

செலவை எண்ணி அஞ்சினார்கள் பெற்றோர்கள்.
அவன் எதையும் கேட்கத் தயாராக இல்லை.

அவர்கள் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளவும் இல்லை.
எதையோ கரைத்துக் குடித்து உயிரை விட்டான்.

வளர்ந்த மகன் கை கொடுப்பான் என்ற கனவு
இலவு காத்த கிளியானது! உடைந்து போனார்கள்!

ஒரே வாரத்தில் தலை முடி நரைத்த விந்தை கண்டேன்!

நடைப் பிணமாக அவர்களை ஆக்கி விட்டு
அவன் ஹாயாகப் போய்ச் சேர்ந்துவிட்டான்.

ராமனைப் பிரிந்த தசரதன் நினைவுக்கு வந்தார்.

குழந்தைகள் என்றைக்கு பெற்றோர் என்பவர்
பணம் காய்க்கும் மரம் அல்ல என்ற உணருவார்?

வைத்துக் கொண்டே தன் குழந்தைகளுக்குத்
தர மறுக்கும் பெற்றோர்களும் உலகில் உண்டோ???​
 
The lyrics will be added in English also as suggested by dear sister Smt. Raji Ram

in the new blog on the compositions of my paternal grandfather K.R.Narayanan.

True! Many Tamils CAN NOT read Tamil - even if they want to sing those songs! :(
 
# 101. Alphabets Ashok.

மனோரமா கிருஷ்டையாவின் மகனுக்கு
"Alphabets அசோக்" என்று பெயரிட்டேன்!

காரணம்......?

A to z அவன் அழகாக எழுதுவான்! :thumb:
இதில் என்ன அதிசயம் என்கின்றீர்களா?

அந்த எழுக்களில் ஓசையை அறியாமல்,
அந்த வரிசையை மனனம் செய்யாமல்,
அவன் எழுதுவதே அந்த விந்தை.

ஹீரோக்பிக்ஸ் போல அவற்றையே
அப்படியே வரிசையாகக் கற்று இருந்தான்.

அவன் ஆர்வத்தைப் பார்த்த நான்
அவனுக்கு அவற்றை நன்கு கற்றுத் தந்தேன்.

இன்றைக்கும் என்னால் ஓசையை நினைக்காமல்
a to z எழுத முடியும் என்று தோன்றவில்லை!
அவன் எப்படித்தான் எழுதினானோ!!! :clap2:​
 
# 102. நாவல்கள் எழுதிய நாயகி.

அவர் ஒரு ஆசிரியரின் மனைவி
என்று அறிந்து இருந்தேன் நான்!

அவர் ஒரு புகழ் பெற்ற நாவல்
ஆசிரியர் என்று பின்னர் தெரிந்தது. :typing:

எத்தனை அடக்கம், எளிமை, நளினம்!

Personification of simplicity
and modest to the core!

பின்னால் அவரிடம் சிலாகித்தபோது,
"இது என்ன பெரிய விஷயம்?" என்பது போல் :nono:
அதை build up/ blow up செய்யவில்லை. :hand:

நிறை குடம் தளும்பாது உண்மைதான்!
நிறைந்த கனிகளின் கிளை தாழ்ந்து
நிற்பதும் உண்மை தான் உணர்ந்தேன். :hail:

Her pen name was one of the names of Saraswathi! :thumb:
 
The teacher husband of the lady novelist was one of my fans!
He respected me as the mother of two brilliant children.

I was a single parent for all practical purposes - as my husband would be always away on long tours and postings in remote parts of India.

When he came to know that his respect for me increased manifolds!
 
# 103. கூட்டணி.

என்னை எதிர்ப்பவர்கள் எப்போதும்
கூட்டு முயற்சியாகவே செய்வார்கள்.

நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பலம்
அவற்றின் எண்ணிக்கையிலேயே! :flock:

ஈயக் குண்டு எறியும் ஒரு போட்டி!
அதை நடத்துபவரின் பெயரும் அதுவே!

எல்லோர் பெயர்களை எழுதிக் கொண்டு,
அவர்களுக்கு நம்பர்கள் அல்லாட் செய்தார்கள்.​

ஒவ்வொருவராக குண்டு எறிய வைத்து,
அங்கே அவர்களின் நம்பரை வைத்தார்கள்.

கடைசிப் பெண் எறிந்த உடனேயே
பரிசு யாருக்கு என்ற ரிசல்ட் அறிவிப்பு! :director:
வீசிய நீளங்களை அளக்கவும் இல்லை!

எந்த நம்பர் முதலிடம் என்று அளந்து பார்த்து,
லிஸ்டில் அவர் யார் என்று பார்த்துச்
சொல்ல வேண்டும் 'யார் வென்றவர்' என்று.

கண்டக்டர் விடவில்லை! நானும் தான்! :fencing:

"பார்த்தாலே தெரிகின்றதே!" என்றார்.
"பார்த்தல் நம்பர் தெரியும்! பெயர் கூடவா?"என

வேறு வழி இல்லாமல் அளந்து பார்த்தால்
முதலிடத்தில் என் நம்பர் உள்ளது! :first:​

காற்றுப் போன பலூன் ஆகிவிட்டது
கண்டக்டர் * * * * * * * முகம்!

நான் போராடுவேன் என்று அவர்
சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"உங்களுக்குப் அவரைப் பிடித்திருந்தால்
நீங்கள் பரிசை ஃப்ரீயாகக் கொடுங்கள்!

போட்டி என்று வைத்தால் அதைப்
பொறுப்பாகச் செய்யுங்கள்" என்றேன்!

Projectiles படித்து விட்டு குண்டு வீசிய என்னை :brick:​
குண்டு Just like that ஓரம் கட்ட விடுவேனா? :nono:​
 
# 104. My Hindi teacher.

நான் பள்ளியில் படிக்கும்போது
ஹிந்தி ஒழிப்புப் போராட்டம்!

ஹிந்தி வகுப்புகளிலும் கல் விழும்.
ஹிந்தி ஆசிரியர் மீதும் கூட.

ஹிந்தி டீச்சர் ஒரு திருமணம் ஆகாத மிஸ்.
விதவைத் தாயார் அவருக்குத் துணை.

பெட்டிக் கடை போன்ற சிறிய வீட்டில்
மனநிறைவோடு வாழ்ந்து இருந்தனர்.

சொற்பச் சம்பளம் கிடைக்கும்
அந்த வேலையும் போனால்....? :peep:

நல்லவேளை அவருக்கு ஆபீஸ்
கிளெர்க் உத்தியோகம் கிடைத்தது!

மண்டையை உடைத்துக் கொண்டு
ஹிந்தி படித்தாலும், அவர்கள்
மண்டை மீண்டும் உடையலாம்! :brick:

யானை தான் தலையிலேயே
மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும்.

தமிழனும் அதையே செய்கின்றான். :crazy:

உலகின் எந்த மூலைக்குச்சென்றாலும்
பிழைக்கும் தகுதியைப் பெறவேண்டாமா??

குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்
கொண்டு இருந்தால் போதுமா???:horn:
 
The blog on the compositions of my paternal grandfather is under construction now.

https://haridasanarayanan.wordpress.com/

As suggested by my dear sister Smt. Raji Ram, I am including the English Transliteration of the songs right below the Tamil songs.

There are 133 songs all together. I with the help of my sister will post as many of them as possible. It is a miracle that the registers which my grandfather had used to write down his songs have not crumbled down during the past 50+ years!

May be because he used the register meant for writing accounts. But the pages do not look very good when scanned due to the numerous lines running both horizontally and vertically!

On second thoughts can there really be an unmixed blessing in Nature ??? :decision:
 
# 105. மிளகூட்டல் அபிஷேகம்!

முன்பெல்லாம் இளவயதிலேயே
திருமணம் ஆகிவிடும் பெண்களுக்கு!

கருத்தடை கான்செப்டோ, வசதிகளோ
இல்லாததால், ஃபெர்டிலிட்டி period
முழுவதும் பெற்றுத் தள்ளுவார்கள்! :bump2:

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம்
15 ஆண்டுகள் இருந்தாலே மிகவும் அதிசயம்!

அம்மாவும், பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு
பிரசவ வார்டு ஆக்கி விடுவார்கள் வீட்டையே! :Cry:​

மாமாவுக்கும், மருமகனுக்கும் ஒரே வயது!
சித்தப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே வயது!

"டேய் மாமா போடா!" "டேய் சித்தப்பா வாடா!"
எல்லாம் அன்று சர்வ சாதாரணம். :rolleyes:

மருமகனும், மாமியாரும் சமயத்தில்
சம வயதினராகவும் இருப்பது உண்டு !

பயந்தாங்குள்ளி மனைவிடம் பேசுவதைவிட
விவரம் அறிந்த மாமியாரிடம் பேசுவதை
மருமகன்கள் விரும்பியும் இருக்கலாம்.

அம்மாவின் மீதே பொறாமை கொண்ட ஒருத்தி
கற்சட்டி மிளகூட்டளை அம்மா மீது ஊற்றினாளாம்! :faint:

அந்த அம்மாவே என்னிடம் கூறியதால் நம்பினேன்!
நல்ல காலம் உயிர்சேதம் இல்லை, Police உம் வரவில்லை!

யார் யார் மீது எதற்குப் பொறாமைப் படுவது என்ற
ஒரு வரைமுறை கொஞ்சமாவது வேண்டாமா???​
 
# 106. தவலை வடை.

என் நெருங்கின தோழியின் வாழ்வில்
நடந்த நிகழ்ச்சி உண்மை நிகழ்ச்சி இது !

அவள் கணவர் அவளைக் "கிராமப்புறம்"
என்று எப்போதும் கேலி செய்வாராம். :laugh:

திருமணமான புதிதில் ஹோட்டல் விசிட்.
வடை, ஸ்வீட், காபி ஆர்டர் செய்தார்கள்.

"ஸ்பூனைக் கண்ணாலாவது பார்த்ததுண்டா?
ஹோட்டலுக்குள் நுழைந்தது உண்டா?" என்று
கேலி பேசிக்கொண்டிருந்தாராம் அவர்.

வடை வந்தவுடன் ஜம்பமாக அவளிடம்,
"பார் இப்படி எடுக்க வேண்டும்!" என்று காட்ட,
தவலை வடை தவளை வடையாக மாறிவிட்டு :frog:​

அடுத்த டேபிள் ஆசாமியின் தட்டுக்குத் தாவ,
அவன் அஞ்சி நடுங்கினான்! :fear:
இவர் முகத்தில் ஈயாடவில்லையாம்.

அன்றிலிருந்து கிராமத்துப் புறம்
என்ற கேலிப் பேச்சு நின்றதாம்!
தவலைக்கும், தவளைக்கும் நன்றி! :pray2:​
 
The new limits set to laziness

The remote assistant is expected

1. switch ON/OFF the T.V

2. connect someone on the phone

3. reduce the volume/ brightness of the T.V.

4. flush the toilet after use

5. switch on the microwave

6. switch on the Roomba

7. make the shopping list

8. read the notification

9. tell the weather for the day

10. tell the time of the day

11. tell jokes/stories to kids

12. play word game/ hide and seek with kids

I may be unaware of some more uses of the remote assistant.

Where is human race heading to????

One obvious fact is that the remote assistant has assumed the role of real person - so very indispensable - that people greet her Good morning and good night in addition to thanking her for the tasks performed by her.

Remember they never do these to a real human being helping them in more ways than the virtual Alexa! :(
 
# 107. Triangular love affair?

பார்க் செய்யப்பட்ட காரில் அமர்ந்திருந்தேன்.

மற்றவர்கள் கடைக்குள் சென்றிருந்தார்கள்.

பக்கத்துக் காரில் ஹாலிவுட் movie காட்சி!


உலகின் இறுதி நா
ட்களில், இறுதி ஆட்களைப் போல,
இருவர் முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். :kiss:

Tom and Jerry கார்ட்டூனில் கிஸ்ஸிங் பூத்தில்

Plunger ஐ வைத்து கிஸ் செய்து ஏய்க்கும் Tom!

அது போன்ற ஒரு காட்சி.
திருப்பி விட்டேன் தலையை.


இரண்டு பசங்கள் கடையிலிருந்து வெளியே வந்தனர்.

அவர்களில் ஒருவன் காரில் ஏறிக் கொண்டான்.

காரில் இருந்தவன் இறங்கி மற்றவனுடன் சென்றான்.

அந்த சீனப் பெண் இவனையும் அதே காதலுடன்...! :kiss:

ஆசியப் பெண்கள் ரொம்பவும் ஸ்மார்ட் தான்! :first:


தங்கள் பெயரையும் கெடுத்துக் கொள்ளாமல் :gossip:

தங்கள் இஷ்டம் போல வாழ்கின்றார்களே! :whistle:

6 + அடி உயர அமெரிக்க ஆண்களை 4 + அடி உயர
ஆசியப் பெண்கள் அடிமைப் படுத்தும் விந்தை கண்டேன்! :wacko:

அமெரிக்கப் பெண்களை போல primiscus love life எதுவும் :angel:

இருக்காது என்று எண்ணி ஆண்கள் ஏமாறுகின்றார்களோ???


மொழு மொழு உடம்பையும், petite figure ஐயும் காட்டிப்

பெண்கள் வாழ வழி செய்து கொள்கின்றார்களோ??? :noidea:
 
# 108. Flash Flood.

என் மகன் இருந்த APARTMENT COMPLEX இல் வசித்த
அவன் நண்பனின் மனைவி UPSET ஆகி இருந்தாள்! :pout:

ஒரு பெண் வீட்டைக் காலி செய்துவிட்டு தன் நாடு
திரும்பிச் சென்றாளாம் அன்று! என்ன காரணம்?

YELLOWSTONE NATIONAL PARK சென்றிருந்தார்களாம்.
இரவில் FLASH FLOOD அவனை அடித்துக் கொண்டு போனது!

அத்தனை பொருட்களையும் விற்று விட்டோ, கடாசி விட்டோ
தன்னந் தனியாக நாடு திரும்புகின்றாள் பாவம்! :plane:

ஒரு சப்தமோ, ஒரு சலசலப்போ எதுவுமே கிடையாது! :ear:
அவள் சொல்லாவிட்டால் எனக்குத் தெரிந்திருக்காது!

தனி மனிதனின் சுதந்திரம் என்று விலகி விலகித் :bolt:
தனித் தனியாக வாழ்கின்றார்கள் CONCRETE காட்டில்! :doh:

காணாமல் போனால் கேட்க நாதி எவரும் இல்லாதவர் பலர்! :(கண்டு கொள்ள ஆள் இல்லாமல் அனாதையாக இறப்பவர்கள்!

உடல் இன்பத்தையே பெரிதாக மதித்து வாழ்பவர்கள் - அது
முடியாமல் போனால் 45+ வயதில் தற்கொலையை நாடுபவர்கள்!

என்ன சுதந்திரமோ அது அல்லது என்ன தந்திரமோ அறியேன்!!
உடலையே பெரிதாக மதித்து ஓர் உண்மையை மறக்கின்றார்கள்!

அழியும் உடலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு - என்று இவர்கள்
அழியாத ஒரே மெய்ப்பொருளைப் பற்ற முன்வருவார்கள் ???
 
# 109. The jargon in the train.

ஒரு ரயில் பயணத்தின் போது இருவர்
எதிர் சீட்டுக்காரர்கள் வழி நெடுக
jargon பேசியபடி வந்தார்கள்! :blabla:

"நீங்கள் ஐ. ஐ. டி. ப்ரொஃபசர்களா?"
1000 வாட் பல்ப் ஆயின முகங்கள்! :happy:
"எப்படிக் கண்டு பிடித்தீர்கள் நீங்கள்?"

"என் இரு மகன்களும் I.I.T. Students.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதும்
எனக்கு ஒன்றும் புரியாது!"என்றேன். :rolleyes:

"one - up " ஆக ஃ பீல் செய்தனர்! :high5:
விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்தனர்.

சென்னையில் இருக்கும்போது கண்டிப்பாக
அவர்கள் வீட்டுக்கு வரச் சொன்னார்கள்!
professional proclamations are loud and clear! :horn:
பூவின் மணம் போலவும், மணியின் ஒளி போலவும்!
 
# 110. Dangerously low?

மகனின் நண்பனையும், மனைவியையும்,
ஒரு நாள் டின்னருக்கு அழைக்கச் செய்தேன்.

அவர்கள் வந்தவுடன் என் விழிகளே பிதுங்கின! :shocked:
அவ்வளவு 'லோ நெக்' அணிந்து வந்திருந்தாள்!

நிற்கும் போதே பாதி வெளியே தெரிந்தது.
குனிந்தால் எல்லாமே தெரிந்தது! :doh:

மூன்று மாதக் கைக் குழந்தைக்காரி...
இப்படிப்பட்ட உடை அணியலாமா?

ஒழுங்காக இருக்கும்போதே வாய்ப்பாடு
ஒரு பெண் = இரண்டு * * * * :wacko:

இரண்டு பெண்கள் = நான்கு * * * * :shocked:
மூன்று பெண்கள் = ஆறு * * * * என்று! :faint:

இது நமக்குத் தேவையா? :nono:

அவள் கணவனோ என்றால் தேன் குடித்த நரிதான்!
அவளைச் சுற்றி சுற்றி வந்து முத்தம் இடுவதும், அணைப்பதும்...

நாடு விட்டு நாடு வந்தால்
நாணம் இன்றிப் போகுமா???

நல்லவேளை நம் குழந்தைகளும்
நம் மருமகள்களும் இப்படி இல்லை! :happy:


 
I wrote once that the place where we are born decides our safety in life.

I have one more addition to that concept. The place where we live chosen

to live, decides how much we spend on medicines and vaccinations.

In the city which has issued our photo I.D. medicines and vaccinations are

free. In the city where we visit , we have to pay through the nose for the

vaccinations. Small mercy is that medicines are still free - if prescribe by

the primary care doctor in the other state.
 

Latest ads

Back
Top