• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 211. PENNY WISE AND POUND FOOLISH .

"லாக்கர் வாடகை நஷ்டம்" என்றார் பெரியவர்.
ஆண்டு வாடகை அப்போது அறுநூறு தான்.

"மாதம் ஐம்பது ரூபாய் தான் விழுகிறது.
வீட்டில் நகைகளை வைத்துக் கொள்ள முடியுமா?"

"வீட்டில் எதற்கு வைத்துக் கொள்ள வேண்டும்?
எல்லாவற்றியும் விற்று விடலாம்! பயம் இல்லை!"

"வீட்டில் உள்ளவர்களே வாங்கிக் கொண்டால்
வீட்டை விட்டு வெளியே போகாதே நகைகள்!"

பெண்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளுக்கு மதிப்பு?
நல்ல தம்பிகள் பூம் பூம் என்று தலை ஆட்டும்போது!

வீரப் பிரதாபத்துடன் அனைவரும் சென்றனர்.
லாக்கரைக் காலி செய்து நேரே நகைக்கடை சென்றனர்.

கிடைத்த விலைக்கு விற்றனர் கல்லுக் கல்லான நகைகளை.

இன்று தங்கம் விலை ஆறு மடங்கு உயர்ந்துள்ளது!
வெள்ளியின் விலை பத்து மடங்கு உயர்ந்துள்ளது!! :shocked:

"ஆண்டுக்கு அறு நூறு ரூபாய் மிச்சம் செய்யவேண்டி
இப்படி நீங்கள் நஷ்டப் பட்டீர்களே!" என்று :tsk:
யாரவது துணிந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

"ஆறு அணாவுக்கு வாங்கினதை நான்
ஆறு ரூபாய்க்கு விற்றேன் இதில் என்ன நஷ்டம்?" :blah:

"இன்று அதுவே அறுபத்து ரூபாய் ஆயிற்றே!"
ஊஹூம்! காதிலேயே விழாது. சௌகரி
யம். :ear:

"என் வெள்ளி நான் விற்பேன்!" என்று ஜம்பம். :fish:

சில மனிதர்களுக்குத் தனக்காகவும் தெரியாது! :loco:
பிறர் சொன்னாலும் புரியாது. :nono:

Because they have closed and double barred minds! :hand:

 
# 212 . டிராமா கிளப்.

எங்கள் கம்பெனியில் அமச்சூர் நடிகர்கள் அநேகம்.

திரைப்படத்தில் சான்ஸ் கிடைக்கததால் தங்கள் ஏக்கத்தை
தீர்த்துக்கொள்ள பெரிய நாடக விழா நடத்துவார்கள்.

ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும். நன்றாகவே இருக்கும்.

Topical themes சிலர் எடுத்துக் கொள்ளுவார்கள்
அல்லது புராணக் கதைகள், இதிகாசங்கள் என்று
இருக்கவே இருக்கின்றது என்றும் தீராத stock!

அன்று 'என்றும் புதுமையான' ராமாயண நாடகம்.
சோனி ராவணன் தான் கிடைத்தான் போல.

குரல் மிகவும் கம்பீரமாக இருந்ததனால் அந்த
ராவணன் ரோலை கொடுத்தார்களோ என்னமோ.

மூச்சு விடாமல் முழுப் பக்க டயலாக் பேசி,
p. S. வீராப்பா போலச் சிரித்து அச்சுறுத்தி,

மீசையை ஸ்டைலாக நீவி விட்டுக்கொண்டு,
கன கம்பீரமாக சின்ன foot ஸ்டூலில் காலை வைத்து,

சிம்மாசனத்தில் அமரும் போது... ஸ்டூல் அசைந்தது.

அன்று ராவணன் நடுங்கியதை நினைத்தால், :fear:
இன்றும் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது. :rofl:

அவன் பேசிய டயலாக் என்ன!

"நேனே ராவணேஸ்வருடு!"
என்று கொக்கரித்தது என்ன!!

கடைசியில் ஸ்டூல் ஆட்டத்தைக் கண்டு ஆடிபோனதென்ன!!!
Super duper comedy scene - though completely unplanned! :clap2:​

 
Gurukulam VS remote teaching!

In the olden days Students used to live in the house of their chosen guru to learn what they wished to learn. They would serve Guru and his pathni in their various chres and tasks.

They would eat the simple food offered by the guru pathni and live in the humble hut of their guru - with no complaints whatsoever. They would be all eyes and ears to learn from the guru - Whenever he wish to teach.

Now the guru lives in one continent and his / her student in a continent diametrically opposite to it. They use the Internet to come together virtually - to teach or to learn.

Now the teaching has been taken to a new level. If we wish to popularise the compositions of our grandfather, we have to present his work - visually and in audio form in such a way that anyone in the world can access them - as if they are pieces of cashew halwa served on a gold plate. They may / may not wish to send any feedback.

Gone are the days of the desktops and laptops. Now everything should appear on their palm sized mobile or better still on their stamp sized Apple watch. :wacko:
 
# 213. "பெள்ளமா? காதா?" :decision:

டிராமா கிளப் நாடகப் போட்டியில்
social themes இருப்பதுண்டு.

அன்று "குடியும், கூத்தும் எப்படிக்
குடும்பத்தைப் பாழாக்குகிறன" என்ற தீம்.​

உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும்
உடையவன் தான் அன்றைய நாடக ஹீரோ.

விலைமகள் வீட்டுக்குச் செல்வது போலக் காட்சி.
பிறகு வெளியே வந்து அவளுக்கு பணம் தருவான்.

பின்னல் அமர்ந்திருந்த இரண்டு வாண்டுகள் பேசின!

"ஆமே ஆயின பெள்ளமா காதா?"
( = அவள் அவன் மனைவியா? இல்லையா?)

"ஆமே ஆயின பெள்ளம் காது ரா!
பெள்ளானிக்கி எவரு டப்பு இவ்வரு".

( = அவள் அவன் மனைவி இல்லை!
மனைவிக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள்!)

உலக மஹா தத்துவத்தையே ஒரு வாக்கியத்தில்​
அடக்கி விட்டான் அந்த உலக மஹா மேதை! :clap2:

மனைவி என்றால், எல்லாமே ஃப்ரீ! :ohwell:

அவள் செய்யும் வேலைகளுக்கும், பிற சேவைகளுக்கும்,
பணம் கொடுத்தால், பிறகு பையில் என்ன மிஞ்சும்??? :rolleyes:
 

# 214. எப்படி மனைவி கிடைக்கிறாள்?

எனக்குத் தெரிந்த எத்தனையோ பயல்கள்
மணமகளைத் தேடுகிறார்கள், தேடுகிறார்கள்,
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னமும். :bump2:

யாருக்குமே பெண் கிடைப்பது இல்லை! :nono:

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும்,
நன்கு சம்பாதிக்கும், கண்ணுக்கு லக்ஷணமான
இவர்களுக்குப் பெண் கிடைப்பதே இல்லை.

சிக்னலில் பிச்சை எடுப்பவனுக்கும்,
பாட்டுப் பாடி உண்டி குலுக்கும் குருடனுக்கும்,

தெரு முனையில் சேர் வயர் பின்னுபவனுக்கும்,
ஒரு கிளியையும், கூண்டையும் வைத்துக் கொண்டு
உற்சாகமாகப் பிழைப்பு நடத்துபவருக்கும், :blabla:

எப்படி மனைவி கிடைக்கின்றாள்?
இது என்ன மாயாஜாலம்?

புரியவில்லை எனக்கு! :dizzy:
உங்களுக்குப் புரிகின்றதா???
 
MoondRu vElai VS Moondru vELai!

One needs yogam to enjoy any bhogam - be it to eat fresh food, get one's prescribed beauty sleep, dress up well and enjoy all the pleasures of life.

Often this Yogam for Bhogam is independent of the earnings of the enjoyer aka Bhogi.

I know people who who earn three different salaries from three different sources BUT are not blessed to eat fresh homemade food, served with love, three times a day.

There are others whose entire thought process is always focused on food and they get to enjoy piping hot food during every meal.

Who/ What decides the their yogam and bhogam?

What makes these vast differences?
 
Occupation: Sukha jeevanam! :couch2:

Those who have this occupation (?) never realize how lucky they are considering

the fact that the majority of humanity struggle to get decent meals for themselves!
 
111. Escapism (aka Entertainment)


Escapism is the mental diversion from the daily stresses and strains, using entertainments and recreations. It includes all the actions done by us to fight depression, loneliness and sadness.

Several industries have popped up, helping people relax and relieve their tension. The most important forms of entertainment as escapism are fiction, literature, music, sports, television, internet and video games.

Even normal daily activities like eating and sleeping become means of escapism when indulged in excess. Karl Marx wrote that Religion is the opium of the people. Even religion, drugs, drinks, pornography are various means of escapism.

Some people are of the opinion that the very idea of escapism is fundamentally and exclusively negative. Escapists are branded as unhappy people who are unable to connect with reality, meaningfully.

There are many safe and acceptable forms of escapism as entertainments. An entertainment is an event, a performance, an activity designed to give pleasure to the audience. The various popular entertainments are games, amusement parks, cartoons, comics, dances, drama, gambling, museums, music, magic shows, night life, pets, tourism, toys and variety entertainment.

It is amazing how much of our time is spent in pursuit of entertainment and escapism. Some people seem to have all the free time in the world and they are determined to spend it watching “the idiot box” dawn to dusk! Eventually they themselves become “couch potatoes”.

Remember the golden rule; anything in excess is not good for you.

Visalakshi Ramani

https://visalakshiramani.wordpress.com/articles/miraculous-mind/escapism-and-entertainment/
 
I am shocked to notice that kids, youngsters and even adults NEED constant entertainment at their disposal.

Those who can't read still need Audio books to keep them entertained. In fact the moment the car is switched on and even before it starts moving the story continues from where it was cut off during the previous drive!

The youngest member in the family is ready to leave in a moment's notice. He just needs enough time to grab his Ipad and water bottle and he is set for the day's outing.

Videos while travelling mi]music while moving around, earphones while jogging and crossing roads... It is a miracle that they all reach their destinations safe!
 

# 215. THE "NO BAR" GUY (LOW BAR GUY?).

நண்பியின் மகன் பெண் தேடுகிறான்.
நம்மால் ஆன உதவியைச் செய்வோமே!

"என்ன மாதிரிப் பெண் வேண்டும் உனக்கு?"
"எப்படி இருந்தாலும் ஓ.கே. தான் மாமி!"

ஏதாவது SPECIFICATIONS வேண்டுமே!
"உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?"

"Anything between five and six feet!"

"உடல் வாகு ஸ்லிம்மாக வேண்டுமா?"
"Anyone like Kushboo is also o.k."

"கலர் எப்படி இருக்க வேண்டும்?"
"
கலர் பத்தி எல்லாம் கவலை வேண்டாம்"

" பிராமின் பொண்ணு தானே வேண்டும்?"

"Religion no bar; Region no bar;
Caste no bar; Non Vegetarian no bar"

இத்தனை 'பார்'களையும் கழட்டி விட்டும்
இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்றால்...? :shocked:
தலை சுற்றியது எனக்கு! :faint:

அவன் பெற்றோர் அவனைப் பற்றிக்
கவலைப் படுவதன் காரணம் தெரிந்தது. :whoo:

"இது வேண்டும்" என்று கேட்டால் கிடைக்கும்.

எது வேண்டும் என்றே தெரியாதவனை என்ன செய்வது?? :wacko:
 
# 216. Broadminded... at what cost???

அந்தப் பெண்ணின் நட்சத்திரம்
ஆகாது அவள் மாமியாருக்கு!

மாமியாரோ, மாமனாரோ இல்லாத
நல்ல இடமாகப் பார்க்கவேண்டுமே!
கவலைப்பட்டனர் அவள் பெற்றோர்!

அப்போது அவர்கள் முன் வந்தார்கள்
"எங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை!"

நம்பவே முடியவில்லை யாராலும்! :shocked:

பாத்ரூம் போகக் கூட சகுனம் பார்க்கும்
பாலக்காட்டு கிராமங்களில் ஒன்றில்
இவ்வளவு broad-minded persons ??? :rolleyes:

பிறகு ஒவ்வொன்றாகப் பட்டியல் நீண்டது
அவள் கொண்டுவரவேண்டிய சீர்கள்!

பண்டம், பாத்திரம், நகை, நட்டு ஓ.கே!
கட்டில், பீரோ, T. V, washing machine, :bump2:
grinder, mixie, சோபா செட் என்று ஒன்று விடாமல்
கறந்துவிட்டனர் அந்த broad -minded parents!

பெண்ணையும் கொடுத்து, பொருளையும் கொடுத்து
அவளுக்கு வாழ்வு தந்த பெயரையும் கொடுத்தார்கள்.

அத்தனை பொருள்கள் அவன் சம்பாத்தியத்தில் வாங்க
எத்தனை ஆண்டு காலம் பிடிக்கும் சிந்தியுங்கள்!:popcorn:

திடீர் தோசை, திடீர் சாம்பார் போல அவனுக்குக் கிடைத்தது!
முழுக் கதையும் தெரியும் முன்பே யாரும் மயங்க வேண்டாம்!

சோழியன் குடுமி சும்மா ஆடாது புரிந்துகொள்ளுங்கள்!
ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போக மாட்டான்!
 
The husband used to hide behind the newspaper spread out in front of his face. When his wife talks he would say "Um" from behind the screen of paper at regular intervals.

This went on for a long time until one day he was caught red handed as he continued saying "Um" as usual.

The wife told him in a harsh voice, "I have stopped talking 10 minutes ago! :fish:

Result!?

The husband will know what was spoken by the nEtAs of different nations meeting in a distant continent - but not what the person nearest to him had just said. :doh:
 
Classical Music adds a new dimension to one's personality

- a tenderness, a spirituality and an inexplicable attractiveness.

Classical dance makes a person bright, very expressive, alert and alive.
 
# 217. Three establishments in one salary.

சல்லடை போட்டு சலித்துக் கண்டு பிடித்தனர் அவளை.
ஒரே மகனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

முதல் நாளில் இருந்தே ஒத்துப் போகவில்லை.

அவன் மனைவியும் சரி, அவன் அம்மாவும் சரி,
இருவருமே சேர்ந்து இருக்க விரும்பவில்லை.

பெற்றோர்கள் கூறினார்கள்,

"ஆடி ஓடி ஓய்ந்து விட்டோம்
உன் குழந்தையை எங்களால்
பார்த்துக்கொள்ள முடியாது."

அவள் சொன்னாள் அவனிடம்,

"தனியாக இருந்தாலும் இருப்பேன்!
இவர்களுடன் இருக்க மாட்டேன்!"

பலன்....மூன்று establishments!

கண் காணாத இடத்தில் இரவு பகல் உழைக்கின்றான்!

வயது
ப் பெண்ணை வைத்துக் கொண்டு மனைவி தலைநகரில்.

வயோதிகத்தில் தள்ளாடும் பெற்றோர்கள் வேறிடத்தில்.

யாருக்கு இருக்கும் வாழ்க்கையில் இன்பம்???

money making machine அவனுக்கா???

வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு
வாழும் அவளுக்கா???

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு
வாழும் பெற்றோர்களுக்கா???

தனியாக இருந்து தத்தளித்தாலும் பரவாயில்லை
என்று நினைப்பவர், கூடி இருந்து சுகப்படக் கூடாதா?
 
# 218. மோப்ப மனிதர்கள்!

தேஜஸ் ( 18 months young) வந்த போது கவனித்தேன்.

சில வீடுகளில் நுழைய மறுத்தான்;
சில வீடுகளில் இருந்து வர மறுத்தான்.

He was sensitive to home atmosphere.

நாமும் அப்படித்தான் இருக்கின்றோம்
அதைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமலேயே!

சில வீடுகளில் வாசலில் நின்று பேசுவோம்.
சிலவற்றில் ஹாலில் அமர்ந்து பேசுவோம்.

அதிசயமாக சமையல் அறை வரை செல்வோம்
அதிக அன்புடன் பழகுபவர் வீட்டில்.

சில வீடுகளில் பாத்ரூம் கூடப் போகத் தோன்றாது!

அவர்கள் நாம் use பண்ணிய பிறகு
அங்கே சென்று மோப்பம் பிடிப்பார்கள்.
அல்லது எதாவது spray செய்வார்கள்...

நாம் இருக்கும் போதே, நமக்குத் தெரியும்படி. :shocked:

ஒரு முறை இவ்வாறு செய்தால் நாம்
மறுமுறை அந்த வீட்டுக்கே போக மாட்டோம்! :bolt:
அப்புறம் எப்படி அங்கே பாத்ரூம் போவோம்?

"Actions speak louder than words!"

You are unwelcome here! என்பதை :hand:
இதைவிட அநாகரீகமாகச் 'சொல்ல' முடியுமா?? :doh:​
 
அவர்கள் நம் வீட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்?
"இந்தக் காபி ஒரே தண்ணி! எவன் குடிப்பான் இதை?"

உங்கள் வீட்டில் நீங்கள் ஒட்டகப் பாலில் காபி குடித்தாலும்
வந்த இடத்தில் தருவதைப் பருகுவது தான் நாகரீகம்!
 


# 214. எப்படி மனைவி கிடைக்கிறாள்?

எனக்குத் தெரிந்த எத்தனையோ பயல்கள்
மணமகளைத் தேடுகிறார்கள், தேடுகிறார்கள்,
தேடிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னமும். :bump2:

யாருக்குமே பெண் கிடைப்பது இல்லை! :nono:

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும்,
நன்கு சம்பாதிக்கும், கண்ணுக்கு லக்ஷணமான
இவர்களுக்குப் பெண் கிடைப்பதே இல்லை.

சிக்னலில் பிச்சை எடுப்பவனுக்கும்,
பாட்டுப் பாடி உண்டி குலுக்கும் குருடனுக்கும்,

தெரு முனையில் சேர் வயர் பின்னுபவனுக்கும்,
ஒரு கிளியையும், கூண்டையும் வைத்துக் கொண்டு
உற்சாகமாகப் பிழைப்பு நடத்துபவருக்கும், :blabla:

எப்படி மனைவி கிடைக்கின்றாள்?
இது என்ன மாயாஜாலம்?

புரியவில்லை எனக்கு! :dizzy:
உங்களுக்குப் புரிகின்றதா???

I found the answer for this puzzle yesterday!

The blind beggar and other men appearing in the post are good enough for their life partners - who only wish for a MALE companion for safety from the other males with roving eyes!

They do not make any impossible demands in their relationship. They share the poverty and other difficulties willingly and without whining.

It was usual for the women of the olden times to marry a government employee for obvious reasons. "All PAY and no WORK" as I would put it!

I find some of the mamis here living comfortably - thanks to the pension of their husband, when he is alive and even after that.

Girls may specify the educational qualification, height, structure and age of the groom, in addition to his income.

Have you heard of the girl insisting that the boy must have graduated from a specific educational institution?

Looks like no boy will be considered for marriage in the future - unless they are the products of I I T or I I M.

Is it surprising that the grooms are in a long search for a suitable bride?

BUT all these specification VANISH if the person selected by the girl is a boy from another religion or caste! :boom:
 
# 219. KarElA SwAmiji!

When we are happy, we can smile! :)
When we smile, we become happy! :happy:
It works both ways! :cool:

வாழ்க்கையில் இது உண்மையாக நடக்கும்.

பிடித்தால் மிகவும் விரும்பி உண்ணுவோம்.

உண்ணுவதால் விரும்பத் தொடங்குவோம்!

எங்கள் ஊரில் ஒரு "கரேலா சுவாமிஜி" உள்ளார்.
(கரேலா = பாகற்காய் / bitter gourd.)

அவர் பிக்ஷைக்குப் போன ஒரு இடத்தில்
பாகற்காயை அள்ளி இலையில் வைத்திருக்கின்றனர்.

அவருக்கு அது அவ்வளவு பிடிக்காது.
ஆனால் சன்யாசிகள் சுவை பாராட்டக் கூடாது.:nono:

அதனால் முதலில் அதை முடித்துவிட்டு
பிறகு மற்ற பண்டங்களை உண்ணலாம் என்று
முதலில் கரேலாவை முடித்துவிட்டார்.

அவருக்கு அது நிரம்பவும் பிடிக்கும் என்று
மீண்டும் நிறைய அள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

அத்துடன் நிற்கவில்லை அவர்கள்.

"சுவாமிஜிக்கு கரேலா தான் பிடிக்கும்" என்று கூற

எங்கு போனாலும் தவறாமல் கரேலா இருக்குமாம்.

சில நாட்களில் அதுவே அவருக்கு பிடித்துப் போயிற்றாம்.
நமக்கும் அப்படியே கஷ்ட நஷ்டங்கள் பழகிவிடும்.

பிறர் பார்த்து வியப்பார்கள் எப்படித்தான் :shocked:

பொறுத்துக் கொள்ளுகிறார்களோ என்று?

மனிதன் அலாஸ்காவிலும் வாழ்கிறான்! :smow:
மனிதன் சஹாரவிலும் வாழ்கிறான்! :flame:

மனதார முயன்றால் முடியாதது எது??? :ballchain:
Man can do anything and live anywhere!!! :thumb:
 

REAL LIFE LIFELONG PARTNERS!!!

சில வியாதிகள் வரும்போது
லைஃப் டைம் contract உடன் வரும். :tea:

நாம் இருக்கும் வரையில் அதுவும்
நம்முடன் இணைபிரியாது தொடரும். :bump2:

கூட நான்கு நண்பர்களையும்
தவறாமல் அழைத்து வரும். :grouphug:

"The more the merrier" அல்லவா ?

"கால்வலி எப்படி இருக்கிறது?" என்றால்
"பழகிப் போய் விட்டது!" என்பது என் பதில்.

What cannot be cured must be endured! :frusty:

என்பது எவ்வளவு உண்மை! :sad:

We all love RamApathy, UmApathy, Sreepathy

and Lakshmipathy
but which of us loves Neuropathy???
 
# 220. Dowry for Dames ???

முதலில் பெண்வீட்டார் செலவு செய்வார்கள்.
நான்கு நாட்கள் ஜம்மென்று கல்யாணம் நடக்கும்.
சுற்றம் புடை சூழ எல்லோரும் வருவர். :flock:

எல்லோரும் இழுத்துப் போட்டுக்கொண்டு
எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

வீட்டிலேயோ, கோவிலேயோ நடக்கும்.
அதிகம் செலவு ஆகாது இப்போதுபோல!
கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவர். :grouphug:

இப்போது போல வருபவர்களுக்கு
ஹோட்டல் ரூம் போட வேண்டாம். :couch2:

பிறகு இரண்டு நாள் கல்யாணம் ஆயிற்று.
முதல் நாள் விரதமும், நிச்சயதார்த்தமும்.

அடுத்தநாள், ஊஞ்சல், காசியாத்திரை,
பாணிக்ரஹணம், மாங்கல்ய தாரணம்
ஹோமம் எல்லாம் நடக்கும்

மாலையில் நலுங்கு and reception.

இரவு படுக்கை அறைக்குள் வந்து
bed மீது ஜம்ப் பண்ணி அமர்ந்து கொண்டு
மந்திரம் சொல்ல வைப்பார் வாத்தியார். :becky:

பிறகு செலவைக் குறைக்க ஒரு நாள் திருமணம்!

முதல் நாள் மாலை reception உடன் தொடங்கி
மறுநாள் கல்யாணச் சாப்பாட்டுடன் முடிந்துவிடும்.

பிறகு இரு வீட்டுக்காரர்களும் திருமணச்
செலவைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

இப்போது சில இடங்களில் 'மணமகன் செலவில்' கல்யாணம்!

இப்படியே போனால் சில வருடங்களில் ஆண்கள்
பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிவருமோ???

Law of Demand and Supply is applicable everywhere!!!

Marriage is fast becoming an ABC ( A Business Contract).​
 
When we performed the wedding of our younger son we rented the Community Hall in our colony premises for the use of the sambandhis and their relatives.

I was worried thinking maybe I should have booked rooms for them in a hotel nearby.

When asked about this the group answered in union thanking me for not booking rooms in a hotel. Apparently they were all together in the same room after many years and enjoyed the togetherness and company of their loved ones.

Those who value personal comfort over companionship might have complained about this.

As they say, "Different strokes for different folks!"
 
# 221. "Was he not manly???"

பள்ளிப் படிப்பின் போதே படிப்பார்கள் :love:
Romantic Novels புத்தகத்தில் மறைத்து வைத்து.

எல்லா ஹீரோக்களும் tall, dark and handsome!

எல்லா ஹீரோயின்களும் அனிச்சமலர் போல
மோப்பக் குழையும் ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

படித்துப் படித்துக் கனவுகளை வளர்ந்து,
நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சமும் தொடர்பு
இல்லாமல் தயார் ஆனார்கள் அந்தப் பெண்கள்.

மண இரவு அன்றே மன முறிவு!!!.

"அவன் ஆண் பிள்ளையே இல்லை!
அவனுக்கு மனைவி தேவையே இல்லை!"

"எப்படி உனக்குத் தெரியும்?" என்றால்
"பக்கத்தில் வரவே பயப்படுகிறான்!"

"புதுப் பெண் பயமுறுத்தவேண்டாம்
என்று GENTLE ஆக இருந்திருப்பான்!

அல்லது அவனும் களைத்துப் போயிருப்பான்;
வாழ்க்கை முழுவதும் முன்னால் இருக்கிறதே!"

எதையும் கேட்கும் நிலைமையில் இல்லை அவள்.

கதையில் படித்த ஹீரோவைப்போல இவன்
நடந்து கொள்ளாததால், ஆண்மையற்றவன்
என்ற முத்திரையைக் கவலைப்படாமல் குத்தினாள்.

படித்து நல்ல வேலையிலும் இருந்ததால்
அப்பா, அம்மாவின் ஆதிக்கம் செல்லாது. :nono:

அடுத்த நாளே பிரிந்தார்கள் அவர்கள். :bolt:

மண முறிவு ஏற்படவில்லை இன்னமும்!
மன முறிவுடன் நிற்கின்றது இன்றைக்கும்.

அறுபது வயதை நெருங்கும் அவள் இனி
அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை.

சிலருக்கு "காய்ந்த மாட்டையும், கம்பையும்" தெரியும்.
கலைஞனையும், ரசிகனையும் இனம் காணத் தெரியாது. :doh:​
 
# 222. ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்யலாம்.

மகன்களுக்கு நண்பர்கள் அதிகம். :grouphug:

அதிலும் பெரியவனுக்கு உள்ளனர்
நல்ல நண்பர்கள் உலகெங்கிலும்!

எங்கள் முதல் விசிட்டின் போது
எல்லோருக்கும் போன் பறந்தது. :phone:

அந்த இந்தியன் உணவு விடுதியில்
நாங்கள் மொத்தம் பதினாறு பேர்கள்!

ஆள் ஆளுக்கு ஆர்டர் செய்கிறார்கள். :hungry:

சர்வர் கேட்டதைக் கேட்டவர்களுக்குத்
தந்து கொண்டே இருந்தான் - மாற்றாமல்

"இன்றைக்கு பில் பழுக்கப் போகிறது!
இந்த மாதம் பட்ஜெட்டில் மகனுக்கு
துண்டு விழுமோ அல்லது
வேஷ்டியே விழுமோ?

என் கவலை எனக்கு. :scared:

பில் கொண்டுவந்தவன் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பில்லைக் கொடுத்ததும் தான்
எனக்கு மூச்சே வந்தது பழையபடி.

"Go Dutch" என்று ஒரு system! :thumb:

எல்லோரும் ஒரே டேபிளில் அமரலாம்.
பிடித்ததை ஆர்டர் செய்யலாம்.

அவரவர் பில்லைக் கொடுக்கலாம்.

இங்கு போல ஏமாந்தவன் ஒருவன் தலையில்
எல்லோருமாகக் கை வைக்க வேண்டாம்.

Americans are very cautious about their money! :thumb:
 
In continuation to # 22698

Their ideas were weird right from the grand old lady in the house,
through her children, down to the grand children.

IF the bride does not become pregnant on the very first night, she is considered to be barren! :shocked:

Not just the bride but the names of her whole clan would be drawn through mud.

We need not waste our sympathy on some people since their sufferings are their own doings!

Since the elder sister separated from her new husband on the first day, the younger sister could got any match for herself.

They both earned more than they can spend. They both are drawing fat pensions! God knows who are the lucky persons who would inherit their flats and other assets.
 
The recurring torture called dental pain has finally made me agree to go to a dentist. A new one this time. I am really scared - fearing the digging, grinding, irrigating and construction he might plan to carry on inside my mouth. :scared:
 

Latest ads

Back
Top