• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Demotion is so much easier than construction. Right?
Dentists offer was to knock off all the teeth and give me a full denture!
I am not the kind of person who would sacrifice a leg just because it was causing severe pain. My option is as always 3 'R's
Retain ( all the healthy teeth)
Repair ( those which can be repaired)
Replace ( if it is beyond repair)
We have one more week to think and decide as to who will listen to whom!
 
My dear mom had all her teeth knocked off when she was hardly 48.
For the rest of her life she had to sacrifice on the tate of the food.

The upper denture which covered the roof of the mouth
would ruin one's ability the taste the food being eaten! :(
 
# 223. கரும்பு ஜூஸ்.

சாலை ஓரக் கடையில் பிழியும் கரும்புச் சாற்றை
துணிச்சல்கார்களால் மட்டுமே குடிக்க முடியும். :fear:

தரையும் மண்ணில் கிடக்கும் அந்தக் கரும்புகள்.
அதன் தோலைச் சுரண்டி விட்டு மீண்டும் மண்ணில்!

இரண்டு லிட்டர் மினி பக்கெட் நீரை வைத்துக் கொண்டு
இரு நூறு தம்ளர்களைக் கழுவி விடுவான் மாயாவி! :bolt:

பற்றாக்குறைக்கும ஈக்கூட்டம் வேறு மொய்க்கும்!

கரும்புகளுக்கிடையில் விஷப் பாம்பு ஒன்று!

அதையும் மடித்து அவன் மிஷீனில் சொருகிவிட
பாம்பு ஜூஸும் கரும்புடன் கலந்து வந்திருக்கிறது. :shocked:

அதைக் குடித்த ஒருவர் - அல்சர் ஆசாமி - ஆள் அவுட்!
கரும்புக் கழிவில் பாம்பும் கிடந்தது செய்தியானது!

கரும்பு ஜூசைக் குடித்த அவரும் 'செய்தி'யனார். :doh:​
 
#224. "நீங்களும், உங்கள் மகனும்!!

தலையில் சின்ன அறுவை சிகிச்சை நடந்தது.
அவன் போதாத காலம் பக்கவாதத்தில் முடிந்தது.

அவனது வலப் பக்கம் நல்ல பாதிப்பு. :crutch:
உண்ண முடியவில்லை, உடுக்க முடியவில்லை.

மறதியும் புதிதாகச் சேர்ந்து கொண்டது. :confused:
பணிக்குச் செல்லவும் முடியவில்லை!

இருவர் வருமானம் ஒருவர் வருமானம் ஆனது!

ஏராளமான மருந்துச் செலவு ஒருபுறம்.
பிள்ளை
யின் படிப்புச் செலவு ஒருபுறம்.

அவன் மனைவி அவன் தாயிடம் சொல்கிறாள்,

"உங்கள் மகனை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.
என் மகனுடன் நான் வெளியேறி விடுகிறேன்!" :bolt:

"மோஹமுத்கரம்" என்னும் பஜகோவிந்தம்
உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

What can be more fragile, more precarious and
more uncertain than the life of a human being?:faint:


பஜகோவிந்தம் (5).

சுற்றத்தினர் சுயநலவாதிகள்.


யாவத்3 வித்தோ பார்ஜன சக்த:
தாவன் நிஜ பரிவாரோ ரக்த: |
பச்'சாஜ்ஜீவதி ஜர்ஜர தே3ஹே
வார்த்தாம் கோபின ப்ருச்சதி கே3ஹே ||

பணம் சம்பாதித்துத் தரும் வரையில் மனைவி, மக்கள் அன்புடன் பழகுவர். உடல் தளர்ந்தபின் அவன் வீட்டில் தங்கிவிட்டால், யாரும் அவனுடன் பேசக்கூட மாட்டார்கள். சுற்றத்தினர்களும் சுயநலவாதிகளே என்று உணர்வாய்.



 
The mother of the man referred to in the above post is not highly educated
and had never done any job outside her house!

She was supposed to look after her dependent son and also go out and earn enough to for their living expenses and his medical expenses!
 
# 225. "மருந்துச் செலவு உன்னது!"

தா
ய்க்கு வயது மிகவும் முதிர்ந்து விட்டது.
தனியே இருக்கும் தைரியம் மறைந்துவிட்டது.

மகனிடம் அவனுடன் வைத்துக் கொள்ளச் சொன்னாள்.
மகன் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லாதவன்.

மனைவிடம் கேட்டான்,"என்ன செய்யலாம்?"

"வேறு வழி இல்லாமல் கூட்டிக் கொண்டு வந்தாலும்
முதைலேயே கறாராகக் கூறிவிடுங்கள் நீங்கள்;
அம்மா! மருந்துச் செலவு உன்னது என்று!

உணவுக்கு அதிகம் ஆகாது தெரியும்.
மருந்து மாத்திரைக்கு என்ன ஆகும் தெரியாது!"

அந்த கண்டிஷனுக்கும் ஒத்துக் கொண்டாள்.

பிறகு அகதிகள் முகாமில் அளிப்பதுபோல
அவளுக்கு மருமகள் உணவு அளிக்கவே
துணிந்து தாய் தனியே வந்து விட்டாள்! :bolt:

"தென்னை
யைப் பெற்றால் இளநீரு! :couch2:
பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு" :whoo:

என்று தெரியாமலா சொன்னார்கள்?
:doh:
 
# 226. வந்தவனுக்கு வண்டிக் கூலி.

சில சம்பிரதாயங்கள் சங்கடமானவை.

எப்போதோ யாராலோ ஏற்படுத்தப் பட்டவை.
இப்போது ஏற்கக் கூடியது அல்லவே அல்ல.

முன்பு ஒரே ஊரில், ஒரே தெருவில் இருப்பார்கள்.
வருபவர்கள் ஏதேனும் கொண்டு வருவார்கள்;
வீட்டில் இருப்பவர்கள் ஏதேனும் தருவார்கள்.

இன்று விமானம், ரயில், பஸ், கார் ஏறிப் போகிறோம்.

சென்ற உடனேயே பெட்டியில் என்ன இருக்கிறது
என்று பார்க்கவே அனைவருக்கும் ஆவல் மீறும்!
ஒன்றும் இல்லையென்றால் முகம் வாடிவிடும். :pout:

"செலவழித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சில நாட்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ளுவோம்!"

அது நினைவுக்கு வராது. :nono:

"நாங்கள் சாப்பாட்டுக்குச் செலவு செய்யவில்லையா?"

"வந்தவனுக்கு வண்டிக் கூலி,
இருப்பவனுக்கு உணவுச் செலவு!"

சிலர் அம்மி போல இருக்கும் இடத்தை விட்டு
நகருவதே இல்லை. :couch2:

அவர்களுக்கு வண்டிக் கூலியும் இல்லை.

யாரும் அவர்கள் வீட்டுக்கு வராததால்
அவர்களுக்கு உணவுச் செலவும் இல்லை.

பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் தாம்! :thumb:
 
There are two extreme types of relationships.
One type wants to travel around to show up in the house of every relative.
The other type would neither trvel nor encourage guests and visitors.
Often they may be the products made by the very same parents.
 
For any relationship to be successful and pleasant it must work in both directions. A man can't behave a spade - drawing in everything towards himself and hope for a good, successful and peasant relationship.
 
# 227. ரோஜா மாலை.

நண்பரின் மனைவியின் திடீர் மறைவு
என்னை மிகவும் பாதித்துவிட்டது. :whoo:

"இறுதியாக ஒருமுறை பார்ப்போம்!" என்று
இவருடனும் பிற நண்பர்களுடனும் சென்றேன். :flock:

"மாலை வாங்க வேண்டும்" என்று நான் சொல்லவும்,
ஒரு நண்பரின் மனைவி "அதெல்லாம் எதற்கு?" என்றார்.

"நம் மரியாதையையும் அன்பையும் காட்டுவதற்கு!" என்றேன்.

"அதைத் தூக்கி விசிறப் போகிறார்கள்!
அதில் பணம் செலவு செய்வானேன்?"

அவர் மாலையை வாங்கவும் இல்லை.
அவர் மாலையை வாங்க விடவும் இல்லை.

இவரிடம் நான் பணம் கொடுத்தேன்.
பெரிய ரோஜா மாலை வாங்கி வந்தார்.

காரில் இருந்து நான் இறங்கி நடப்பதற்கு முன்பே
இவர் மாலையைச் சுமக்க, நண்பரின் மனைவி
எனக்குக் காத்திராமல் முன்னே சென்று விட்டார்.

நான் அந்த வீட்டின் உள்ளே செல்லும் முன்பே
ரோஜா மலையை இவர் கைகளில் இருந்து வாங்கித்
தான் கொண்டு வந்தது போலப் போட்டும் விட்டார்.

Shining in borrowed feathers may be O. K!
This is shining in borrowed glory! :doh:

அத்தனை தூரம் மாலை வாங்க வேண்டாம் என்று தடுத்தவர்
அவ்வளவு விரைவாகச் சென்று அதைப் போடுவானேன்??? :mmph:

P.S:

Later on the lady who hurried laid the garland herself passed away.
I was not in india at that time. I learned the news from a mutual friend. I wonder whether she got a rose garland from someone else


 
# 228. "BRING THE SAMPLE IN A MATCH BOX ONLY!"

எங்கள் கம்பெனி டிஸ்பென்சரியில் இருந்தது
ஒரு குட்டி மைக்ரோலேப், சில ஸ்டாஃப்களுடன்!

Urine, Motion, Blood test எல்லாம் செய்வார்கள்.

Motion டெஸ்டுக்கு சாம்பிள் எப்போதுமே ஒரு
மேட்ச் பாக்ஸ்சில் கொண்டு போகவேண்டும்.

அங்கு இருந்த என் நண்பரிடம் கேட்டேன்,

"மேட்ச் பாக்ஸ்சுக்கும் motion டெஸ்ட்டுக்கும்
என்ன தொடர்பு?" என்று. :confused:

ஒரு worker நியூஸ் பேப்பரில் motion சாம்பிள் பாக் செய்து
மேஜை மேல் வைத்து விட்டுப் போய்விட்டான். :bolt:

இவர் தினமும் வரும் டிபன் பொட்டலம் என்று நினைத்து
அதைப் பிரிக்க ... :shocked:

இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது ஷாக்கில்!

அன்றிலிருந்து நியூஸ் பேப்பர் பொட்டலத்தைப் பார்த்தாலே
'பேசும் படம்' திரைப் படத்தில் ஒரு மனிதன்
கமலின் கிஃப்ட் பாக்கைப் பார்த்துவிட்டு
குமட்டுவது போல ஆகிவிட்டது இவருக்கு.

அன்றிலிருந்து ஸ்ட்ரிக்ட் ரூல் !

"BRING THE SAMPLE IN A MATCH BOX ONLY!"

Occupational hazard மனிதனை
எப்படி எல்லாம் பாதிக்கின்றது பாருங்கள்!" :doh:​
 
Today being the third Tuesday of the month was the power cut day.
No power from 9 A.M till now
I was not caught unawares this time but posting before 9 A.M
( after finishing all the household chores and washing clothes)
is an impossible task even for me!
Posting will be resumed on 14th since I will be busy with attending a wedding.
 
# 229. நல்லெண்ணெய் தாத்தா.

விசாகாவில் காலனிக் கடையில் ஒரே கும்மாளம்!

என்ன என்று அங்கு சென்று பார்த்தால்
தமிழ் நாட்டுத் தாத்தா நட்ட நடுவில்.
அவரைச் சுற்றி சுந்தரத் தெலுங்கர்கள். :grouphug:

அவர் அபிநயிக்க, கடைக்காரர்
ஒவ்வொரு பொருளாகக் காட்ட,

அவர் அது இல்லை என்று தலை ஆட்டி
மேலும் தீவிரமாக அபிநயிக்க,

சுந்தரத் தெலுங்கர்களுக்கு நல்ல தமாஷ். :becky:

"உங்களுக்கு என்ன வேண்டும் மாமா?"
தமிழ்க்குரல் கேட்டு ஓடியே வந்துவிட்டார். :ear:

நல்லெண்ணெய் வேண்டுமாம்.

அவர் தலையில் தேய்ப்பது போலக் காட்டவே
தேங்காய் எண்ணை முதல் கொண்டு
அத்தனை எண்ணையையும் காட்டி இருக்கிறார்
கடைக்காரர் - நல்லெண்ணெயைத் தவிர.

பிறகு அவருக்கு எல்லா எண்ணெய்களின் பெயர்களையும்
எளிதில் நினைவு வைத்துக் கொள்ளும் முறையும்
கற்றுக்கொடுத்தேன்.

வேர்ச்சன நுன = வேர்க்கடலை எண்ணை.

கொப்பரி நுன = தேங்காய் எண்ணை.

மஞ்சி நுன = நல்லெண்ணெய்.

பாவம் தாத்தா, நல்ல மனிதரைக்
காமெடியன் ஆக்கிவிட்டார்கள் அன்று! :tsk:​
 
# 230. A treasurer's job.

"If you want to know the value of money
just go out and try to borrow some!"

எத்தனை உண்மையான வார்த்தைகள்.

கடன் கூட வாங்க வேண்டாம்
subscription வாங்குவதே போதும்!

அப்போது லேடீஸ் கிளப்பின் மாத ஃபீஸ்
ஜஸ்ட் இரண்டே இரண்டு ரூபாய்!

நீலம்மாவின் தசரா போனஸ் போல!

'பெரிய மனிதர்'களின் "பெரிய மனைவிகள்"
அதையும் கூடத் தர மாட்டார்கள்.
துரத்தித் துரத்தி வாங்க வேண்டும் - அல்லது :bump2:
எல்லோரும் நூறு ரூபாயை நீட்டுவார்கள்.

அத்தனை 98 ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? :shocked:

" இரடு ரூபாய்க் கோஸரம் சம்பேஸ்துந்தி!"
( இரண்டு ரூபாய்காக உயிரை வாங்குகிறாள்!)

இரண்டு ரூபாய் தராமல் இவர்கள் எல்லோரும்
என் உயிரை வாங்குவது போதாது என்று
போனஸ் ஆகத் திட்டு வேறு free ஆக! :doh:

கடைசியில் இரண்டு ரூபாயை உயர்த்தி
ஐந்தாக்கி அதையும் ஸாலரியில் இருந்தே
எடுக்க ஆரம்பித்தார்கள்! இறைவனுக்கு நன்றி! :hail:​
 
Some people take pleasure in delaying the payments due and or make the person collecting the money walk up and down umpteen times. :roll:

They think that this makes them feel very important and the other person made to walk feel little.

I am sure it is the other way. By belittling the others one becomes little himself / herself.

It is far nicer to rove your greatness and worth by helping other people and not by torturing in umpteen different invisible methods! :boink:

The poor milkman is still going around collecting money for this month's milk. Seems he has to advance money from his pocket for their milk coupons and the get it reimbursed these stingy misers! :mmph:
 
Are many of the health problems gender related?
Most of the mamas were wearing spectacles and hearing aids.
Most of the mamis had difficulty in walking and climbing the stairs.
Even those who were young, thin and non-bulky!
What causes this problem which is becoming prevalent???
 
# 231. Morargin.

அது ஊரோடு எல்லோரும் urine புகழ் பாடிய காலம்.
'சர்வரோக நிவாரணி' போல ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது.

உள்ளே குடிக்க, பூசிக் கொள்ள, தடவிக் கொள்ள என்று.
விடிகாலையில் வருவது 'பெஸ்ட் சாம்பிள்' என்றார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டால் கூட
நிச்சயமாகக் குடிக்க முடியாது அதை. :yuck:

மாடு வாலைத் தூக்கும் முன்பே சிலர்
சொம்புடன் சென்று தயாராக நிற்பார்கள்.

இனி எல்லோரும் பாட்டிலில் சேகரித்து
Recycle செய்வார்களோ என்று தோன்றியது.

அன்று என் மனதில் உதித்த பெயர் தான் Morargin!
icon3.png

அன்று நாங்கள் siblings ஐந்து பேரும் சிரித்தது போல
என்றாவது சிரித்திருப்போமா தெரியாது. :rofl:

அப்பாவுக்கும் அந்தப்பெயர் பிடித்திருந்தது.
அடிக்கடிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார். :laugh:

Urine recycle செய்து அதன் மூலம்
உடல் நலம் பெற்றோமோ இல்லையோ
சிரித்துத் சிரித்தே உடல் நலம் பெற்றிருப்போம். :becky:​
 
# 232. Why the candle light dinners?

கண்களில் 'பாப்பா' பெரிய வட்டம் ஆனால்
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். :love:

நமக்குப் பிடித்தவர்களைப் பார்க்கும்போது
பாப்பாவின் விட்டம் மிகப் பெரிதாகும். :happy:

மனிதமூளை இவ்விரண்டையும் அறிந்துள்ளது.
அதன் பலன் தான்
candle light dinner!

மங்கிய ஒளியில் பாப்பா பெரியது ஆகும்.
பிரகாச ஒளியில் ஊசி முனை ஆகிவிடும்.

மங்கிய ஒளியில் இன்னொரு நன்மையையும் உண்டு!
சின்ன
ச் சின்ன குறைகள் தென்படாது கண்களுக்கு! :nono:

அரை இருட்டில் பெண்கள் அனைவரும் அழகிகளே! :music:
வாழ்க! வளர்க!!
Candle light dinners!!!
 
Has A. C become a necessity instead of being a luxury ?

We had gone for the attending the wedding - mostly to meet all the members of the family who are now sprawled across India.

I could not see anyone of them in the wedding hall. When we went to take leave of the organizer of the wedding, he took us to the room allotted for the groom.

We found that big room packed with people. What were they all doing in that room - without participating in the wedding celebration or interacting with the other guests?

Apparently, they did not want to leave the A. C room. So they would rather miss the fun/ function and interaction than leave the A.C room!

In another house we visited there was only one room with A.C . Apparently all the five sisters want that room! The youngest and the smartet has occupied the room - along with her husband!! :couch2:
 
Today I came across and interesting product.

When we reverse the direction, things become fascinating!

( How I wish we could reverse our advancing ages as easily as this)

Smoke flows upwards and maks the place look like the swarggam shown in the movies.

When smoke is made to travel downwards by some crafty means,
it becomes an interesting waterfall like smokefall.

Once the idea is born many variations appear. Take a peek and enjoy the fun!


images



Find more complex smokefalls here:

https://www.google.com/search?q=rev...UIDygC&biw=1366&bih=697#imgrc=QR7XqhYRbQ3sqM:
 
# 233. குட்டி nurse போட்ட பெரிய ஊசி!

எப்போதும் போல அங்கேயும் கேரளா
சிஸ்டேர்ஸ் (நர்சுகள்) அதிகம் இருந்தனர்.

அதில் ஒருவர் midget போல மிகவும் குட்டை.

உயரமானவர்கள் ஸ்டூலில் அமர்ந்தால்
அவர் நிற்பதைவிட உயரமாக இருப்பார்கள்.

அவரிடம் ஊசி போட்டுக்கொள்ளுவது என்றால்
எல்லோருக்குமே உண்டு மிகுந்த அச்சம். :scared:

Javelin throw , Short-put throw போல
ஓடி வந்து நம் கையைப் பதம் பார்ப்பார். :bowl:

அப்போது தான் ஊசி உள்ளே இறங்குமாம்.

உண்மைதான் அவர் நினைத்தது!
ஊசி இறங்கியே விட்டது கை எலும்பில்! :shocked:

அதைப் பிடித்து 'வலித்த' போது​
அது உடைந்து போயிற்று கை எலும்பினுள்!​

சின்ன அறுவை சிகிச்சை ஒன்று செய்து
ஊசியைக் 'கைப்பற்றினார்கள்' அவர்கள்.

இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால்
யார் யாரெல்லாம் நேரத்தைத் தொலைக்கக்
கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்களோ?

அங்கு டென்டிஸ்ட் இடம் போனபோது,
"Do you feel any discomfort or pain"
என்ற அவர் நிமிடத்துக்கு பத்துமுறை கேட்டது
நினைவுக்கு வந்தது இப்போது!

இந்தியாவைப் பொருத்த வரையில்
Patients are no better than cattle! :flock:​
 
# 234. THE LIE DETECTORS

இயற்கையே நமக்கு தந்துள்ளது
ஏகப்பட்ட LIE DETECTORS.

நாம் நேரில் பேசும்போது ஒருவருடைய
கண்களில் காணலாம் மெய்யும், பொய்யும்!

எத்தனை திறமை வாய்ந்த நடிகர் ஆனாலும்
கண்கள் கூறிவிடும் மனதில் உள்ள உண்மையை.

பிடிக்காது என்றால் பாப்பாவின் விட்டம் சிறியதாகும். :suspicious:
பிடித்தது என்றால் பாப்பாவின் வட்டம் பெரிதாகும்.

போனில் பேசும் போது அவர்களின்
வார்த்தைகளே காட்டிக் கொடுக்கும் இதை.

கள்ளச் சிரிப்பு என்பார்கள்.

கண்ணனின் கள்ளத்தனமான சிரிப்பு அல்ல இது
போலியாக முயற்சி செய்து சிரிப்பது :heh:

அது நேரில் கூடத் தெரியாது அவ்வளவாக.
போனில் மண்டையில் அடித்தது போல் தெரியும். :phone:

தப்பு செய்தவர்கள் நம்மிடமிருந்து
சற்று விலகியே நிற்பார்கள்.

நம் அருகில் சென்றபோதும் அவர்கள் நகர்வார்கள். :bolt:
இது :smokin:and :spit: கேசுகளுக்கு ரொம்பவே பொருந்தும்.

அவர்களின் body language காட்டிக் கொடுக்கும்
அவர் பொய்மையையும், போடும் வேடத்தையும்!

கண்களையும், காதுகளையும் நாம் அலெர்ட் ஆக
வைத்திருந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.​
 
Buying gifts is far less troublesome than delivering the gifts bought - in person in every person's house!

When we buy and bring goods from abroad, the least they can do is to come and collect it from us and say a word of thanks - if it is not too difficult for them.

But we have to buy stuff spending the hard earned money converted to the ever fluctuating UDS.

After coming back to India, we have to go around in a taxi to deliver those gift - without expecting even a word of thanks!

There is name for this type of person and he /she is called a Karma yOgi.

It is our karma to buy those gifts and deliver them in person
and their yogam to enjoy without moving a muscle or spending a penny!
 
# 235. பிராமன்ஸ்' hoax !

அன்று ஒரு விடுமுறை நாள்.

அடுத்த வீட்டில் ஸ்பஷ்டமாக தேவ பாஷையில்
ஆசீர்வதிக்கும் ஒரு அவியல் குரல் கேட்டது.

அடுத்த நிமிடம் நான்கு பேர்கள் வந்தனர்.

மூன்று பேர்கள் பஞ்சகச்சம் உடுத்தி இருக்க
ஒருவன் மட்டும் பேன்ட், ஷர்ட் + கிராப்.

"உள்ளே வரலாமா?" என்றார் ஆஜானுபாகு மனிதர்!

தனியாக இருந்தால் இரும்புக் கதவைத் திறக்க மாட்டேன்.
இவர் இருந்ததால் தைரியமாக கதவைத் திறந்தேன்.

ஆளுக்கு ஒரு சேரில் அவர்களே அமர்ந்து கொண்டார்கள்.

ஏதோ போட்டோ I. D card மற்றும்
fees due என்று ஒரு கல்லூரியில் கொடுத்த
ஒரு கடிதத்தையும் காட்டி உதவி கேட்டனர்.

படிப்புக்கு என்றால் எல்லோருமே உதவுவார்களே!

"எங்களால் முடிந்தது இது தான்!"
என்று இருநூறு ரூபாய் கொடுத்தால்

"ஐநூறாவது தாருங்கள்" என்று மன்றாடினார்கள்!

நல்ல வேளை கையில் அவ்வளவு தான் இருந்தது
இல்லாவிட்டால் தூக்கிக் கொடுந்திருந்திருப்போமோ?

போகும் முன்பு பெயர் கேட்டார்கள்.

இவர் பெயரைச் சொன்னால் :nono:
என் பெயர் தான் வேண்டுமாம்!

அடுத்த நாள் தெரிந்தது அவர்கள்
என் பெயரைச் சொல்லிக் கொண்டு
அத்தனை வீட்டுக்குள்ளும் சென்று நுழைந்தது!

ஐநூறில் தொடங்கி 'பேரமாடி' ஐந்து ரூபாய் வரை
கிடைத்ததை விடாமல் வாங்கிக் கொண்டது. :popcorn:

ஒரு வீட்டில்," wrist watch கொடு!" என்று மல்லுக்கு நின்றது;
இன்னொரு வீட்டில் "டைம் பீஸ் வேண்டும்!" என்று கேட்டது.

நல்ல collection!!!

அன்று நரி முகத்தில் (என் முகத்தில்?) விழித்ததாலா?​
போததற்கு என் பெயரை வேறு உபயோகித்து இருக்கிறார்கள்.
ஒரு நம்பகத் தன்மை இருக்குமே! கில்லாடிகள்!! :spy:

அன்றே முடிவு செய்தேன் ஒரு 'மாற்றுப்பெயர்'
யோசித்துத் தயார் செய்து வைக்க வேண்டும்

இந்த மாதிரி ஆட்களிடம் 'உண்மைப் பெயரை'க் கூறி
அவர்கள் கூறும் எல்லாவற்றையும் உண்மை ஆக்கவேண்டாமே!

வெறும் ஆசீர்வாதத்தை 'முதலா'க வைத்துக் கொண்டு :blabla:
ஒரு நாளில் அவ்வளவு நிறைய சம்பாதித்தது
அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்! :shocked:​
 

சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள்!

ஒவ்வொரு நாளும் எத்தனையோ மனிதர்களை
ஒவ்வொருவரும் சந்திக்கின்றோம் என்றாலும்,

அத்தனை பேரும் நம் நினைவில் நிற்பது இல்லை.
அத்தனை பேர் நினைவில் நாமும் இருக்க மாட்டோம்!

சிந்தையில் நிற்பார்கள் சில விந்தை மனிதர்கள் மட்டும்.
எந்தக் காரணத்தினால் என்பது நமக்கு முக்கியமல்ல!

என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்
படிக்க விரும்புவன் கல்லிலும் காண்பான் ஒரு பாடம்!

புரிந்து கொள்ளுபவன் புல்லிலும் காண்பான் ஒரு போதனை.
தேவை கற்
க வேண்டும் என்ற ஆவலும், சிரத்தையுமே!

இந்தத் தொடரில் வருபார்கள் உண்மையான,
உயிருடன் வாழ்கின்ற (வாழ்ந்த) நிஜ மனிதர்கள்.

சிந்தித்தால் புரியும் நன்றாக, இந்த விந்தை மனிதர்கள்
சிந்தையில் ஏன் நிலைத்து நிற்கின்றார்கள் என்று!
விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்! :pray2:

 

Latest ads

Back
Top