• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 236. All India hoax in soap powder.

பட் பட் என்று சத்தமிட்டுக் கொண்டு
ஒரு வண்டியில் வந்தார்கள் அவர்கள்.

எங்கள் போதாத காலம் - புதியவர்களான
அவர்களை watchman உள்ளே அனுமதித்தான்.

பள பள என்று மின்னும் ஒரு கிலோ பாக்கெட்டுகள்.
கண்ணைப் பறிக்கும் பெயர், நிறம், அழகு எல்லாமே!

ஒரு T.V. channel மட்டும் விளம்பரம் செய்கிறதாம்.
ஒரு கிலோ விலை ஜஸ்ட் 299 ரூ மட்டுமே.

Introductory offer ஜஸ்ட் 199 ரூ மட்டுமே.
மேலும் பரிசாக ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்! மயக்கமே வந்தது! :faint:

இரண்டு கிலோ நல்ல சோப்பு பவுடர் கிடைக்கும்
வெறும் 199 ரூபாய்க்கு!

இருநூறு கொடுத்தால் மஹாபாவி
ஒரு ரூபாயை வேறு திருப்பித் தந்தான்
பெரிய சத்திய சந்தன் போல. :doh:

ஐந்து நிமிடத்தில் வண்டி காலி ஆகிவிட்டது.
பட் பட் சத்ததுடன் சென்று விட்டார்கள்

ஜவ்வரிசி போல நல்ல வடிவம்;
நீலம், ஆரஞ்சு கடுகுகள் போன்ற
உருண்டைகள் இடையிடையே.

ஆனால்..
கையில் தொட்டால் தீப்போல எரிகிறது. :flame:
"நுரை என்றல் என்ன?" என்று கேட்கிறது.

"அழுக்குக்கும் எனக்கும் இணை பிரியாத தொடர்பு!"
என்கின்றன துவைத்த துணிமணிகள்.

எதற்குமே அதை உபயோகிக்க முடியவில்லை!

ஒன்றே ஒன்று மட்டும் இன்னும் டெஸ்ட் செய்யவில்லை,
kitchen sink choke remover ஆக உபயோகப்படுமா என்பது.

அடுத்த நாள் தெரிந்தது அவர்கள் ஒரே நாளில்
ஊர் முழுவதையும் ஏமாற்றியது இதே போல.

எத்தனை large scale hoax + swindling ! :shocked:
All India level இல் நடந்ததா தெரியவில்லை.​
 
The name of an influential family member is a master key

which can open many locked doors and locked minds!

But we must be extra careful NOT to tarnish their image or ruin their good name!
 
Waking time has got preponed by 30 more minutes.
Which means I get 30 minutes less sleep everyday!
It is the month of Margazhi!
There is Magic and Music in the air!
We can sleep more later but miss the musical magic???? :nono:
 
Last edited:
# 237. Tap water cleaning.

ஒரு நாள் இரவு தங்க வேண்டியிருந்தது நர்சிங் ஹோமில் (1989).

Butcher's shop போலக் காட்சி அளித்தது அந்த இடம். :fear:
டாக்டர்கள் எல்லோரும் ரத்தம் சிந்திக் காய்ந்த ஏப்ரன்களில்!

பஞ்சும், மருந்துக் கழிவும் , இரும்பின் துருவாடையும்
தலையைச் சுற்றி மயக்கம் வருவது போலிருந்தது. :dizzy:

இது போததுன்று இன்னொரு காட்சியும் கண்டேன்!

ஒருவருக்கு ஊசி போட்டு விட்டு அதைக் குழாய் நீரில்
கழுவி விட்டு இன்னொருவருக்கும்
ஊசி போடுவதை. :shocked:

Sterilisation என்று கேள்விப்பட்டிருப்பார்களா இல்லையா?
C. M. O விடம் சொன்னால் அவர் சொல்கிறார் என்னிடம்,

"வேண்டுமென்றால் நீங்கள் மேலே complain பண்ணுங்கள்!
எதுவும் நடக்காது நீங்கள் நினைக்கின்றபடி." சிரிப்பு வேறே! :heh:

இது போன்ற இடங்களுக்குப் போகின்றவர்களுக்கு என்ன தான் வராது
Including AIDS??? thanks to the tap water cleaning of syringe and needle. :doh:
 
# 238. The first baby show.

சின்னவன் மிகவும் சின்னவனாக இருக்கும் போது :baby:
நல்ல உயரம், ஒல்லி - ஆனால் கன்னம் மட்டும் பூரி போல!

மிகவும் அழகாக இருப்பான். அப்போது தான் அங்கே
The first baby ஷோ ஆர்கனைஸ் செய்தார்கள்.

சொல்லிக் கொண்டே இருந்தார்கள் என்னிடம்,

"உங்கள் மகனை பார்த்த பிறகு தான் எங்களுக்கு
இந்த பேபி ஷோ பற்றிய எண்ணமே வந்தது.
கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும்" என்று!

ஆனால் அது நடக்கவில்லை அவர்கள் விரும்பியபடி.
அப்போது நாங்கள் தெற்கே வந்து விட்டோம் லீவுக்கு.

பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதுவே தொடர்ந்ததால்
அந்த போட்டியில் கலந்து கொள்ளவே முடியவில்லை.

The prize was guaranteed - since the competition was started to give

us the prize. But deserving something is not the same as receiving that thing !!! Right??? :juggle:​
 
Everyone of knows about the 18 padi in the temple. Today I discovered the 18 madi in our temple.
I needed change for 100 re note. The priest handed over to me a wad of folded notes. Believe me they were all made to 16+ folds!
I know HOW they folded the paper currency so mercilessly but I am unable to figure out WHY?
 
Every dentist does root canal treatment. But the real difference lies in the quality of the treatment offered and not just on the quantity of the money charged!

I have seen tailors who stitch very cheap - because they are going to learn how to stitch, in the materials given by us!

That reminds me of the story of a master tailor.

It is a well known fact that goldsmiths HAVE to steal some gold from the work commissioned to them and in the same way tailors HAVE to steal some cloth.

One extra careful person provided the material demanded by the tailor and sat in front of him watching him cut the material to his own size.

He went to home with a sigh of relief and was feeling happy and satisfied at his own resourcefulness.

When he came to collect the new dress, he was greeted by the tailor who word exact same waistcoat as his own. :wacko:

The secret...

The tailor had folded the cloth over one extra time before cutting out the waist coat, thus making it into two coats instead of one.

The Moral....

You can never outsmart a trained and talented thief! :evil:
 
Last edited:
# 239. A colorful ball of saris!!!

அமெரிக்காவுக்கு maiden trip in 1998!

அப்போது வயதும் சற்றுக் குறைவு,
உடம்பும் சற்று ஒல்லி, energy அதிகம்.

Conquest of The East Coast போல நாங்கள்
மூன்று வாரங்கள் காரிலேயே லாங் டூர்.

உண்பது எப்போதும் எங்காவது வெளியில்!
உறங்குவதும், குளிப்பதும் நண்பர்கள் வீட்டில்.

ஒரு வாரம் ஆகிவிட்டது. அன்று வாஷிங் டே.

ஏழு செட் உடைகளை மிஷீனில் போட்டால்
drier திரும்பக் கொடுத்தது ஒரு பெரிய கலர்புல் பால்!

அத்தனை சாரிகளும் பின்னிப் பிணைந்து ஒன்றாகி
ஒரே பெரிய கலர்ஃபுல் பந்தாக மாறி விட்டன.​

அன்று முழுவதும் எனக்கு துச்சாதனன் வேலை! :doh:

ஒவ்வொரு புடவையாக உருவி எடுத்து மடித்து
வைப்பதற்குள் கைகள் சோர்ந்து போயின.

அதன் பின் ஒவ்வொரு சாரியையும் மடித்து
நடுவில் ஒரு ரிப்பன் வைத்துக் கட்டிவிடுவேன்.

கொத்துக் கொத்தாக இருக்கும் ஆனால்
பந்துபோல உருவம் மறாது. கை வலிக்காது.

பிறகு சின்ன சின்ன net zip washing bags கிடைத்தன.​
அதற்குப் பிறகு washing saris was NOT a nightmare.​
 



# 240. Sofa sets in many colors???

Washington D.C. யில் மட்டும் ஒரு வாரம் கேம்ப்.

அங்கு மகனின் நண்பர்கள் வீட்டில் கண்டது
நான்கு சோபா செட்டுகள்....நான்கு நிறங்களில்!

கார்பெட்டுடன் மேட்ச் செய்து அனைத்தையும் வாங்குபவர்கள்
இப்படி நான்கு கலர்களில்.... நான்கு டிசைன்களில்???

அவர்களிடமே கேட்டுவிட்டேன் என் ஐயத்தை!
அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். :pound:

"ஆன்ட்
டி! எதுவுமே நாங்கள் வாங்கவில்லை.
எல்லாமே ஃப்ரீயாகக் கிடைத்தவை தாம்!"

பிறகு தெரிந்தது அங்கு சிலவற்றுக்கு
resale value கம்மி (அல்லது கிடையவே கிடையாது). :nono:

வீடு மாறும் போது வேண்டாத நல்லவற்றை
வெளியே வைத்துவிட்டுப் போகிறார்கள்.

first come ... first served அல்லது
finders are the keepers எனலாம்!

சொந்தக்காரர்கள் அந்தப் பக்கம் போனவுடன்
இவர்கள் ஓடிச் சென்று அதைக் கைப்பற்றி
வெற்றிகரமாக வீட்டில் கொண்டு சேர்ப்பார். :grouphug:

A scholar's life மிகவும் கடினமானது. பாவம்!

It is a hand to mouth existence! :tsk:
A penny saved is a penny earned அல்லவா? :popcorn:

 
'The more the merrier' is the common saying.

But when does 'The more becomes scarier'?

When a group of doctors decide to visit you in a hospital no special reason!

In the dental college where I went for taking special opg X Ray, I felt this!

The X Ray itself seemed to affect me in an inexplicable manner.

I feel weird even if I talk in a cell phone! :(

We look so much more scarier inside than we do outside.

I guess some people look equally scary externally as well internally.

Than God for the tissues, fat and skin that cover the frame inside us and

make us tolerable presentable.

This is what one looks like when the well adorned spherical head is

X Rayed on a flat surface!

images


Will these images help to develop detachment from one's beautiful body.

May BE ... May be NOT!

9k=

The machine scanning round the head makes eerie noise as though from the mysterious outer space sending chills down the spine.

I had kept my eyes tightly shut. My be the experience would have affected me even more .... had I kept me eyes wide open!
 

# 241. கை நிறைய tablets with பட்டாணி!

அவர் ஒரு weird and strange person! :heh:
ஒரு Nutty professor போல எனலாம்.

நிறைய புத்தி ஆனால் எங்கோ கொஞ்சம்
(சந்தேகம் இல்லாமல்) loose contact. :tsk:

கை நிறைய விசிடிங் கார்ட்ஸ் வைத்திருப்பார்.

பார்ப்பவர்களுக்கு எல்லாம் சுண்டல் விநியோகம் போல
பார பட்சம் இன்றி அதைக் கொடுப்பார். எதற்காகவோ??

ஒரு முறை ரயில் பயணத்தில் எங்கள் எதிர்சீட்டில்.
கலர்க் கலராக மாத்திரைகள் பையிலிருந்து எடுத்தார்.

அவர் அவற்றை விழுங்கும் முன் அவரிடம் கேட்டேன்,
"வெறும் வயிற்றில் இப்படி மருந்துகளைச் சாப்பிடலாமா?"

உடனே வாங்கினார் அங்கு வந்த
தேங்காய்- மாங்காய்-பட்டாணி சுண்டல்.

ஒரு தொன்னையில் போட்டு ஸ்பூனாக
ஒரு ஸ்ட்ரிப் பனை இலைத் துண்டுடன்.

அதையும் மரியாதையாக உண்ணாமல்
ஆகாசத்தில் வீசி வாயால் பிடிக்க முயன்று
அவைகளும் தரையில் விழுந்தன. :doh:

இறுதில் ஒரு வாய் தண்ணீருடன்
அத்தனை tablet களையும் விழுங்கினார்.
ஒன்றுடன் ஒன்ற ரியாக்ட் செய்தால்...?? :scared:

Nuts will remain nuts - despite their age ,
qualification, posting and profession-
என்று நிரூபணம் ஆனது one more time.


 
# 242. தயிர் உணர்த்தியவர்.

மூதாதையரில் ஒருவர் சண்டைக் கோழியாம்! :argue:

தினமும் உண்டு, உடுத்து, படுப்பது போலவே
தினமும் ஒரு ரவுண்டு சண்டை போடாவிட்டால் :boxing:
அவரது மண்டை பானை போல உடைந்துவிடுமாம்.

பலன்...மனிதர்களை சண்டைக்கு இழுப்பதில்
ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் (பெறாமல்) பெற்றார்.

ஒரு நாள் என்ன செய்தும் எவருமே சண்டைக்கு வரவில்லை.
அவர்களுக்கும் இவர் வழிமுறைகள் அத்துப்படி ஆகிவிட்டன.

வேறு வழியின்றி தயிரை வெயிலில் வாசலில் உணர்த்தினர்.
ஒரு புது மனிதன் இந்தப் புதுமையினால் மிகவும் கவரப்பட்டு

"ஏன் தயிரை வெயிலில் உணர்த்துகிறீர்கள்?" என்று கேட்டதும்,

"என் தயிர், என் வாசல், நான் உணர்த்துவேன், உமக்கு என்ன?"
என்று அவரைப் பிலு பிலு வென்று பிடித்துக் கொண்டாராம்!

'தயிர் உணர்த்துபவரைக் கண்டாலும்' கழற்றிக் கொள்ளுங்கள்.
'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?' யார் கண்டார்கள்?
 
The ancestors pass on their weird traits through their offsprings.

That is why marrying in close family is highly risky...

both by the increased risks in health and in behaviour.

If marrying a cousin is not O. K. how about
marrying a sibling as they did in Ancient Egypt??? :faint:
 
Last edited:
Singing two of my grandfather's composition in the temple everyday has created interest in some of the people. Now they are asking for the link to the blog of his songs. I do hope they share the links with the lovers of music as well as students and teachers of music and let the songs spread.
 

# 243. NINE HOURS of slow COOKING !

ராஜ்மா என்னும் சிவந்த விதைகள்
மிகவும் பிடிக்கும் அவர்களுக்கு.

ஆனால் சமைக்க எடுத்துக்கொள்ளுவது
சரியாக ஒன்பது மணி நேரம். :clock:

காரணம்.... ஊற வைப்பதையும் அறியார்கள்,
pressure குக்கரையும் பார்த்ததில்லை அவர்கள்.

ஓவர் நைட் ஊற வைத்துவிட்டு குக்கரில் போட்டால்
பத்து நிமிடங்களில் வெந்து குழைந்துவிடும் என்றால்
கண்கள் flying saucers போல ஆகிவிடுகின்றன.:shocked:

கற்றுக் கொடுத்ததற்கு கிடைத்த தண்டனை (?)

ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு
வாங்கிச் செல்ல வேண்டும் ஒரு pressure குக்கர்.:roll:

இது எப்படி இருக்கு??? :rolleyes:
 

# 244. தையல் கையில் போட்ட தையல்.

சின்ன வயதில் எனக்கு மிகவும் பிடிக்கும்
கலர் கலரான கண்ணாடி வளையல்கள்.

அடிக்கடிக் கழற்றிக் கழற்றிப் போட்டுக் கொண்டே இருப்பேன்.
கையும், காலும் சும்மா இருக்காதே! :roll:

அதில் ஒன்று விரிந்திருந்தது தெரியவில்லை.
மணிக்கட்டை வளையல் கிழித்து விட்டது.

அழுத்திக் கையில் போடும் போது ஒரு ஸ்ரீ சூர்ணம் போல
நீண்ட, மெல்லிய, ஆழமமான காயம் கையில்!

அன்று பஞ்சாபி உடை + புல் கை டாப்! நல்ல வசதி.
அதை இழுத்து கையை மறைத்துக் கொண்டேன்!

உண்ணும்போது ரசம் capillary action இல்
ஆடை வழியாக ஏற,

புண்ணில் புளியும், காரமும் பட்டு எரியத் தொடங்கவே
நல்ல பாம்பு போல "உஸ்ஸ்! உஸ்ஸ்!" என்றிருக்கிறேன்.

அதை கவனித்த அக்கா," அவ்வளவு காரம் இல்லையே!"
என்ற என் கையைப் பிடிக்கப் புண் வெளியே தெரிந்து விட்டது.

உடனே அப்பா 'C' போன்று வளைந்த ஊசியில்
கறுப்பு நூலைக் கோர்த்து என்னைத் துரத்த ஆரமித்தார் -
தையல் கையில் தையல் போட.

நடு ஹாலில் ஆட்டுக் கட்டில் ஒன்று மாட்டி இருக்கும்.
அதைச் சுற்றிச் சுற்றி ஓடி, ஓடி .....:llama:
அத்தனை பேருக்கும் தண்ணி காட்டினேன்!

அலறல் கேட்டு அக்கம் பக்கத்துக்கு வீட்டினர் வந்து விட்டனர்.
எல்லோருமாக என்னைப் பிடித்துக் கொள்ள :flock:
அப்பா என் கையில் தையல் போட்டு விட்டார்.

பின்னால் என் அங்க அடையாளத்துக்கு
அது மிகவும் உதவியாக இருக்கிறது.

கெட்டதிலும் நல்லது என்பார்களே அது இது தானோ?! :rolleyes:
 
The Pendulum has moved back to the original settings.

The Love - Hate psychology is at work again.

These ancient proverbs had been proved true one more time.

அரை
த்தவளுக்கு ஆட்டுக்கல்!
சுட்டவளுக்கு தோசைக்கு கல்!!

பண்ணிவளுக்குப் பாத்திரம்!
எண்ணிவளுக்கு ஏமாற்றம்!!

I got up at 3-45 A.M to get ready the 4 different prasadams to take to the tempe for our pooja today. All I got back was the almost empty vessels with some morsels sticking to the sides!

Those came to the temple empty handed were carrying home big plates filled with our offerings.
I who went with more luggage than I can carry came home empty handed! :(

They neither gave us while giving to the others nor left anything in the plate or in our vessels.

Moral:

Those who enjoy most are those who do not make anything or do anything!
 
My eldest grandson has received a medal for being the most outstanding student of the year in a music school.

I am glad the music remains in the family may be as a mandolin/ violin/ guitar/ ukulele. Music makes life worth living... especially the soothing Classical music.
 
LOVE - HATE phychology is not new to me.
The same thing happens to me everywhere.

Here people LOVE to read what I write.
But they HATE to interact with me.

Often times the same thing happens to me
among family members and also friends.

Looks like no one can either LIVE with me :hand:
nor live without me!!! :(

But I never really feel alone since I know Him-
who is hiding thumb sized in my fist sized heart -
never leaving me nor forsaking me nor hating me!!
 
Last edited:
#161. அருகிலும், தொலைவிலும்!

முதுகும் முதுகும் ஒட்டி நிற்கும் இருவர்
முகம் கண்டு எப்படிப் பேச முடியும்?
எதிர் எதிரே வந்து நிற்க விரும்பினால்,
எண்ணி ஓர் அடி பின் வாங்கினாலே போதும்.

“முன் வைத்த காலைப் பின் வையேன்” என,
முரண்டு பிடித்து முன் நோக்கிச் சென்றால்;
முழு உலகையுமே சுற்றி வர முயன்றால்;
முகமன் கூறலாம் அதன் பாதிச் சுற்றிலே.

நினைத்துப் பார்த்தால் அதிசயம், உண்மை;
அனைத்துப் பொருட்களையும் விடவும் நம்
அருகில் இருப்பவன் நாம் காண இயலாத,
சிறு வடிவுடைய அந்த ஆண்டவன் தானே!

கை அளவு இதயத்தில் கட்டை விரல் உயரத்தில்,
மையத்தில் அமர்ந்து, ஆட்சி செய்கிறான் அவன்.
குருதி கொப்பளிக்கும் நம் இருதயமே அவன்,
விரும்பி அமரும் ஒரு இரத்தின சிம்மாசனம்.

சூரியன், சந்திரன், மின்னும் தாரகைகளை,
சீரிய முறையில் கண்ணால் காண முடியுது.
மழையை, மின்னல் கீற்றினை காண முடியுது;
மாதவனை மட்டும் ஏன் காண முடியவில்லை?

விரித்த வலை போன்றே நம் ஐம் பொறிகள்,
விரிந்து பரந்து வெளியே செல்கின்றன.
திருப்பி அவற்றை உள்ளே செலுத்தினால்,
திவ்ய மங்களனை நாம் உணர முடியும்.

மிக மிக அருகில் அவன் இருந்த போதிலும்,
மிக மிகத் தொலைவில் இருப்பது போல,
உணர்வது தவறான பயண திசையினால்!
உள்முகம் சென்றால் உணர்வோம் அவனை.

பாதையை மாற்றுவோம் உள்முகம் நோக்கி,
பயணத்தைத் தொடர்வோம் இறைவனை நோக்கி,
பரந்த உலகில் மாறாத சிறந்த பயன் என்று,
பரந்தாமனை விடவும் வேறு என்ன உண்டு?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

# 161. The nearest and the farthest.

If two men stand back to back, it will be impossible for them to talk to each other, facing each other. If they really want to come face to face, each of them just has to move back one step.

If they both of them are stubborn and would not step back, they will have to go forward and cover the entire globe and meet each other halfway through!

It is really surprising that the person who is nearest to us is God! He is the size of our little thumb, sits in our fist-sized-heart and rules over the world. The heart bubbling with blood is the pretty throne made of Corundum, He loves best!

We are able to see The Sun, The Moon, the stars the rain-drops and even the forked flash of a lightning. But why are we unable to see God?

Our sense organs spread in the external world, like a fishing net thrown by an expert fisherman. However hard we may try, we will never be able to find God-since we are traveling in the wrong direction. If we turn back all our senses and redirect them towards the inner self, we will surely find Him!

Even though God is closest to us, we feel that He is farthest from us because of the wrong direction of our travel.

Let us travel towards Him and not away from Him. What can be a better purpose of a human life, than knowing Him our protector and creator!


 
oh morargin super madam,
I remember this - sharab nahi hai peshab.
reg telugu - one T.Udaya Baskar Rao, we used to call him as tub Rao
as he was searching for a house in west mambalam.
At that period water shortage was all over city. He was asked to come on sunday
when her husband will be available at home
So he asked the houseowner to provide a kundi in telugu a vessel to store water.
she told him bluntly that house is not available for him.
he was stunned after hearing , we had a good laugh when he narrated
 
Last edited:
oh morargin super madam,
I remember this - sharab nahi hai peshab.
reg telugu - one T.Udaya Baskar Rao, we used to call him as tub Rao
as he was searching for a house in west mambalam.
At that period water shortage was all over city. He was asked to come on sunday
when her husband will be available at home
So he asked the houseowner to provide a kundi in telugu a vessel to store water.
she told him bluntly that house is not available for him.
he was stunned after hearing , we had a good laugh when he narrated

I have enough knowledge to compare the words in at least 5 langages and it is real fun how a harmless word in one language becomes objectionable in another! :laugh:
In fact we have a separate thread "Translation Confusion" to list them just for the fun of it! :rofl:
 

Latest ads

Back
Top