# 251. மாவும், உப்பும்.
பிறந்தவுடனேயே தாயைப் பறி கொடுத்துவிட்டார் அவர்.
தாயில்லாப் பிள்ளை என்று செல்லம் கொடுத்துக் அவரைக்
குட்டிச் சுவராக்கினார்கள் குடும்பதில் உள்ள எல்லோருமாக.
படிப்பும் ஏறவில்லை, தலை எழுத்தும் சரியாக இல்லை.
எப்படியாது பிரயோஜகனாக்க விரும்பிய அவர் அண்ணன்
என்னென்னவோ செய்து பார்த்தார். ஊஹூம்! பயனில்லை!
கடை வைத்துக் கொடுத்தால் அவர்
opcorn:
கடை சாமான்களைத் தின்று தீர்த்தார். :hungry:
அவர் மாவு விற்கப் போனால் புயல் காற்று வீசியது.
அவர் உப்பு விற்கப் போனால் பெருமழை பெய்தது.
ஆனால் ஒரு குருட்டு அதிர்ஷ்டம் கூடவே வந்தது!
ஹோமியோபதி டாக்டர் என்ற போர்டு போட்டுக் கொண்டு
துணிந்து ப்ராக்டீஸ் செய்யத் துவங்கினார் ஒரு நகரில்.
யாராவது நோயாளிகள் வந்தால் நன்றாக தெய்வத்தை வேண்டி
புத்தகத்தைத் திறந்து
கண்ணில் முதலில் படும் மருந்தைக் கொடுப்பார்.
என்ன அதிசயம்! கை ராசிக்காரர் என்ற பெயர் விரைவிலேயே!
குருட்டு அதிர்ஷ்டம் இவ்வளவு குருடாக இருக்குமா என்ன?
பழைய ஜனாதிபதியின் பெயரும் இவர் பெயராக இருந்ததால்
அதுவும் ரோரிங் பிராக்டிசுக்கு நன்கு உதவியது.
மாவும், உப்பும் ஏமாற்றியவரை, மருந்து காப்பாற்றியது! :thumb: