• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


பழைமையே மீண்டும்
.....


'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' - என்று
இடக்குப் பேசியே வாழும் தானைத் தலைவர்கள்,

வெற்றி களிப்பில் மூழ்குவாரோ? வட இந்தியா
சுற்றிலும் இருள் மூழ்கத் தவிப்பில் சிக்கியதால்!

இதேபோல் நிலைமை தொடர்ந்தால், மக்களும்
புது வழிகள் போலப் பழமையை நாடவேண்டும்!

எரிபொருள் ஒருநாள் தீர்ந்துபோகும்! நம் அடுப்பு
எரிக்க விறகு அடுப்பைத்தான் நாட வேண்டும்!

வெய்யில் இத்தனை வீணாகிப் போனாலும் கூட
வெய்யிலை நாம் உயயோகிப்பது இல்லையே!

இருள் நீக்கச் சிம்னி விளக்கு; வியர்க்காதிருக்க
சுருள் விசிறி, பயணத்திற்கு மிதிவண்டி, மாட்டு

வண்டி அல்லது குதிரை வண்டி என்று மக்களும்
அண்ட வேண்டுமோ பழைமையையே மீண்டும்!

:noidea:

 
Where will you go for the Cart. Now a days no "bile gaadi", tractors
and ploughing machines have replaced the bulls (of the ox family).
Some of them are being butchered for meat eating and they have higher
price in the bull market. One can notice many of them are being taken
to Kerala and other places. Cows are not spared. Where is the
Kerosene Lamp, you may be able to buy a lamp but not kerosene and
it is again a shortage and fetches a high price in the black market. Only
solution is solar lamp which costs more than Rs.500, per piece. Would you
be able to use the olden days wood burning clay stove i.e. Aduppu" in
the third floor of a Flat.

Balasubramanian
Ambattur
 

Dear Bala Sir,

I was also writing about the impossible! 'Will we be forced to follow the style of living in the olden days?' was my wonder!!

Regards ......... :)
 

எண் பதினெட்டு !


எண் பதினெட்டு மிகவும் சிறப்பானது;
எண்ணுவோம் நாம் அதில் சிலவற்றை!

அதில் காணும் ஒன்றும், எட்டும் கூட்டி
அதை இரட்டிப்பாக்க, வரும் அதே எண்!

இந்தச் சிறப்பு வேறு எந்த எண்ணுக்கும்
வந்து சேராது! து மிக விந்தையாகும்!

பகவத்கீதை அத்தியாயங்களும், மஹா-
பாரத குருக்ஷேத்திரப் போர் நாட்களும்,

வாகனம் ஓட்ட, ஓட்டுப் போட, உரிமை
வாங்க, பல நாடுகளில் கூறும் வயதும்,

ஐயப்பன் அருள் பெற சபரி மலையிலே
ஐயப்ப பக்தர் தவறாது ஏறும் படிகளும்,

ஆடிப் பெருக்கில், காவிரி ஆறு பெருகி
ஓடி வர நிரம்பும் படிகளும், பதினெட்டு!

இந்த ஆண்டில் மழையின் கடவுளான
இந்திரன் செய்த சதியால் வறட்சியே!

பெருகும் ஆற்றைக் காண வந்த மக்கள்
உருக்கும் வெய்யிலில் காய்ந்து போன

வறண்ட மணற்பரப்பு கண்டு, அதிலும்
திரண்டு, மனம் மகிழக் கொண்டாடினர்!

:grouphug: . . . :party:
 

ஆடிப் பெருக்கு - 2011

30THCAUVERY_1160542g.jpg


Photo courtesy: The Hindu
 

வந்த வரை லாபம்!


ஒலிம்பிக் தங்கங்கள் குவித்து, தம் கரகோஷ
ஒலி எழுப்பி, அண்டை நாடு மகிழ்ந்து இருக்க,

கிடைத்த ஒரு வெண்கலத்துடன், நேற்றுதான்
கிடைத்தது இன்னொரு வெள்ளி நம் நாட்டுக்கு!

எத்தனையோ திறமைசாலிகள் இருக்கலாம்;
அத்தனை பேரையும் கண்டுபிடித்து, சிறப்புறப்

பயிற்சி அளித்தால், நாமும் வெல்ல முடியுமே!
பயிற்சி உள்ளது, சுவிஸ் வாங்கிக் கணக்கிலே

கோடிகளில் சேர்க்க, தேசத் தலைவர்களுக்கு!
'கோடிகள் செலவாகும், விளையாட்டில் நல்ல

வீரர்களை உருவாக்க!' என்று மேடைகளில் ஏறி
வீர முழக்கமிடுவதும் அதே அரசியல்வாதிகளே!

இதுபோன்ற அரசியல் உள்ளவரை, நமது நாடும்
இதுபோன்ற ஏமாற்றங்களை அடைவது உறுதி!

வந்த வரை லாபம் என்று சாந்தி பெற்று, நாமும்
இந்த வெற்றியாளரைப் பாராட்டி மகிழ்வோம்!


:second: ....... :clap2: . . . :third: ,,,,,, :clap2:
 
இன்னொரு வெற்றிக் கனி!

விளையாட்டில் முதன்மை பெற நாம்
சளைக்காது முயற்சி செய்தாலும், நம்

அரசாங்கம் முனைந்து உதவாததால்,
அரிய வெற்றிக் கனிகள் வரவில்லை!

எதிராளியின் தோல்வி நமது வெற்றி!
எதிர்பார்த்த வெண்கலம் வந்துவிட்டது!

நம் வீராங்கனை விளையாடிய பின்னர்
நம் வெற்றி எனில், இன்னும் மகிழலாம்!


:dance: . . . :third:
 


Unless the Metur Dam gets water from Karnataka and water is released
by the Government of Tamil Nadu, how can we expect water in Cauvery.
This Adi Peruku was not having any fun, as hithertofore.

Balasubramanian
Ambattur
 
Dear Raji/Balu Sir,

had gone to my village near Vellore and the village has a river called "goundanya maha nadhi", must have been a big one in earlier time and the water used to get merged with Palar near palliconda. But over theyears the river has shrunk to a small area due to every one occupying the place for cultivation and housing. The river bed is like hard granite stone. So much has changed that it brought tears to my eyes. Unless some one with a strong heart & will to merge all the rivers we will be forced to live in our dreams of gushing waters in our riverbeds...
can i share with what i saw in my village thru a small kirukkal?
ஆடி மாதமும், அக்ரஹரமும்!!

ஆடி பிறப்பு என்றாலே உடுக்கையும் மேளமும் ஒலிக்கும்
மஞ்சள் துணிகளின் படபடப்பு எங்கும் கேட்கும்.
வேப்பிலயின் கசந்த வாடை எங்கும் பரவியிருக்கும்.
அம்மன் கோவில்களில் செங்கல் நடுவில் கொதிக்கும் கூழ்!!
ஊர் முழுதும் கேட்கும் ஆத்தாவின் பாடல்கள் எல் ஆர் ஈஸ்வரியின் குரலில்
புகழ்பரப்பும் ஆத்தாவின் ம்கிமைகளை ஒலமிடும் பூசாரியின் அபஸ்வர குரல்
இது மட்டும் மாற்வில்லை!!

அரசாங்கம் ஆணை பிறபித்தும், மஞ்சள் துணி கழுத்தில் கட்டி ,
இருபுறமும் பிடித்துக்கொண்டு நடுவில் ஆடு, பன்னி,கோழி, என
நடக்கும் சிறுவர்கள், சுற்றமும் நட்பும் கூடி வர, மேள தாளம் முழங்க,
கோயில் நோக்கி பந்தாவுடன் நடப்பதும் மாறவில்லை!!

வயல்வெளிகளில் நடந்து போகும்போது ரீங்காரமிடும் சில்வண்டு,
காடு கழணிகள், தோப்பு துரவுகள், வில்வண்டி, குளம் குட்டைகளில்
ஊறியே கிடக்கும் எருமைகள், நீர் நிரம்பிய ஏரிகள், ஆறுகளும் அவற்றில்
போனவருடம் பெய்த மழை நீர் இன்னும் வற்றாமல் நூலிழை போல
ஒடும் தெளிந்த நீர், அதில் ஒடும் சிறு மீன்கள்,
ஆளரவமிலாமல் கிடக்கும்
அக்ரஹாரத்து திண்ணை,
மடிசார் கட்டிய காவிரி மாமி, ஈஸிசேரில்

சாய்ந்து தூங்கும் வாத்தியார், எங்கு திரும்பினாலும் பச்சை பசெலென்று
இருக்கும் தென்னை மரங்களும், காற்றில் பேய் போலாடும் கரும்பு
தோட்டங்களும், நானாவித குரலெழுப்பும் பறவைகளும், குருவிகளும்,
மீனூர் மலை மீது அமர்ந்த பெருமாளே,
நீங்கள் இருந்தும்,

உங்கள் பார்வையிலிருந்தும் இவையெல்லாம் எப்படி
காணாமல் போயின!!
 
....... But over the years the river has shrunk to a small area due to every one occupying the place for cultivation and housing. The river bed is like hard granite stone. So much has changed that it brought tears to my eyes. ....

வயல்களெல்லாம் பாத்தி கட்டுவதை விட்டு பிளாட் ஆகின்றன;

வில்வண்டிகள் போய், மோட்டார் சைக்கிள்கள் உலவுகின்றன;

ஏரிகள் தூர்வாரப்படாது சமவெளியாகி வறண்டு போயின;


ஆறுகள் அணைகட்டித் தடுத்த நீர் வராது, மணற் பரப்பாயின;



நீரில்லாத வறட்சியில் பச்சையாவது, தென்னையாவது?



மடிசார் மாமிகள் நைட்டி அணியத் தொடங்கினாரோ?



மின்விசிறி பழகிய பின் திண்ணைக்கு யார் வருவார்?



பறவைகள் பசுமை மறைந்தால் காணாமல் போய்விடுமே!



ஏதோ, L R ஈஸ்வரி பாட்டு ஒலிப்பதே ஒரு நிறைவுதான்!



எந்தக் குருக்களும் வித்வான்போலப் பாடவும் மாட்டார்!



பலி போடும் வழக்கம் மட்டும் எக்காலத்திலும் மாறாதோ?




:pout:
 

அதே வழியா?


தேசத்தைச் சீர் கெடுக்கும் ஊழலை நீக்கிவிட,
தேசத்தின் அண்ணன் போல வந்த தலைவர்,

உண்ணா விரதங்களை வழியாகக் கொண்டும்,
எண்ணிவிட்டார் இப்போது அரசியலிலே புக!

தான் போட்டியிட்டு வெல்ல விரும்பவில்லை;
தன் ஆதரவு வெளியிலிருந்துதான் என்கிறார்!

கட்சியின் பெயரும் மக்கள் தேர்வாம்; இந்தக்
கட்சி நடத்திடக் கறுப்புப் பணம் வேண்டாமா?

கோடிகளில் செலவு செய்திட முனையும் பல
கேடிகள் நிறைந்ததுதானே இந்திய அரசியல்!

நேர்மையாக நடக்க விரும்புகின்ற எவரேனும்
தேர்வில் வென்று, நாட்டைக் காக்க முடியுமா?


:noidea:
 

அல்ப ஆசை!


என்னவர், கூடைப் பந்து விளையாட்டிலே
தன்னிகர் இல்லாதவர் தம் இளமையிலே!

இசையில் மட்டும் ஈடுபாடு கொண்டதால்,
இசை அன்றி நான் வேறேதும் அறியேன்!

எனக்கும் அல்ப ஆசை உண்டு; என்றேனும்
எனக்கும் கூடையில் பந்து இட வேண்டும்!

இன்று கணினி நிறைவேற்றியது; எப்படி?
இன்று Google Home page திறந்தவுடன், ஒரு

சின்னப் படத்தில், விரும்பிய விளையாட்டு!
சின்னச் சின்னக் 'கிளிக்'குகள் செய்தவுடன்

பந்து கூடைக்கருகில் செல்கிறது; சரியாகப்
பந்து கூடையில் விழ ஒரு காலக் கணக்கு!

தாளம் கற்றுத் தந்த இசைதான் உதவியது!
தாளம் தப்பாது நான் செய்த 'கிளிக்'குகளே

அழகாய்ப் பந்தைக் கூடையில் இடுகிறதே!
பழகிய ஆட்டம்போல உள்ளம் மகிழ்கிறதே!

london-2012-basketball-0808.jpg



P.S: You can try your luck in this game! Star is given if points are more than 10. :dance:
 
In the basket ball game that I mentioned above, I could take 14 points initially to get one star!

After some practice, I got the maximum of 21 points to get two stars!! Good relaxation for me! :D
 

கண்ணனை சேவிப்போம்!

கண்ணன் பிறந்த நாளில், தருகின்றேன் என்
எண்ணத்தில் வரும் நாராயணீய வர்ணனை!

"கதிரவன் போல ஒளிரும் கிரீடம்; திலகம்
அதிக அழகூட்டும் நுதல்; கருணை வழியும்

கண்கள்; கனிந்த புன்னகை; அழகு மிகு நாசி;
கன்னங்களில் ஒளிரும் மகர குண்டலங்கள்;

வனமாலை, முத்து மாலை, ஸ்ரீவத்சம் இவை
விளங்கும் நின் தோற்றத்தை சேவிக்கிறேன்!"

:pray:

 
வணக்கம் திருமதி ராஜிராம்.

நீக்கள் எழுதுவதுபோல் அமைந்த ஒரு புதுக்கவிதை இதோ:

ராமன் விளைவு
பசுபதி

பார்புகழ் நோபல் பரிசுவென்று, பாரதத்தில்
பேர்பெற்ற ராமனது பேச்சில் நகையிழையும்.

விருந்துக்குச் சென்றிருந்தார் விஞ்ஞானி ஓர்நாள்;
அருந்தவோர் அரியமது அளித்தனர் யாவர்க்கும்.

மதுக்கிண்ணம் பார்த்ததுமே மறுத்துவிட்டார் ராமன்!
’இதற்கென்ன காரணம்?’ என்றவர்க்(கு) உரைத்தார்:

"ராமன்விளை வைஸோம ரசத்தில் ஆயலாம்;
ஸோமரசம் செய்விளைவை ராமனிடம் அன்று!"

*****

இது குறள் வெண்செந்துரறையால் ஆனது என்று ஆசிரியர் இங்கு விளக்குகிறார்:
பசுபதிவுகள்
(யாப்பிலக்கணம் என்ற பதிவைப் பார்க்கவும்.)
 
இது குறள் வெண்செந்துரறையால் ஆனது என்று ஆசிரியர் இங்கு விளக்குகிறார்
வாழ்வின் யதார்த்தங்களை இரு வரி வடிவில், எளிய தமிழில் எழுதுவதே என் விருப்பம்.

அதில் பா இலக்கணம் இருக்கிறதா என்று ஆராய்வதும் இல்லை! சில கவிதைகளால் சிலர் மனம்

மாறினால் ஆனந்திப்பேன்! சில ஆங்கில சொற்களின் கலப்பதை விரும்பியவர்களும் உண்டு! :)
 

இன்று வரை தொடர்கிறது ...


கார் மேக வண்ணக் கண்ணன் பிறந்த நாளில்,
பார் காணாத வெள்ளம் வந்தது யமுனையில்!

மரண பயத்தால் நடுங்கிய அரக்க மாமனால்,
மரணம் சேய்க்குச் சம்பவிக்கும் என்று அஞ்சி,

கொட்டும் மழை தடுத்தும், ஆற்றைக் கடந்து,
எட்டினான் வசுதேவன், தாய் யசோதையை!

இத்தனை நூறு ஆண்டுகள் சென்றும், நேற்று
எத்தனை மழை, அவன் பிறந்தநாளில் இங்கு!

வறண்ட சிங்காரச் சென்னையை நனைக்கத்
திரண்ட மேகங்கள் தந்தன அவ்வதிசயத்தை!

எண்ண எண்ண வியக்க வைக்கிறது மனதை,
கண்ணன் பிறந்த நாளில் வந்த பெரும் மழை!

:rain: . . . :rain:
 
Last edited:

எப்போதும் முதலிடம்!


தங்கம் வெல்லுவதில் முதல் இடம், என்றும்
தங்களுக்கே என்று கொக்கரிக்கும் ஒரு நாடு!

சின்னஞ் சிறுசுகளைக் கொடுமைப் படுத்தி,
எண்ணும் இலக்கை அடைகிறது அந்த நாடு!

பிஞ்சிலேயே பெற்றோரிடமிருந்து பிரித்து,
நெஞ்சில் விதைக்கிறார் தங்க வேட்கையை!

அடிபட்டு, மிதிபட்டு, அழுது, அரற்றி, இலக்கை
அடையப் பயிற்சிகளை விடாது செய்கின்றார்!

நெஞ்சை நெகிழ வைக்கின்றன, ஈரம் இல்லா
நெஞ்சு கொண்ட பயிற்சியாளரின் செயல்கள்!

எப்படியும் தங்கம் வேண்டும் என்ற வெறியை
இப்படித்தான் செயலாக்க வேண்டுமா? நமது

இந்தியா தங்கம் வெல்லாதிருப்பது மேன்மை!
சிந்திக்கவே பயங்கரமான செயல்கள் இல்லை!

:whip: . . . :brick: . . . :nono:
 
Last edited:
தங்கத்தைப் புடம்போட்டு அணிகள் செய்வதுபோல்
அங்கத்தைப் புடம்போடுவது தங்கம் வெல்லவோ?
எங்கே போயின இந்த ஐநாசபை,
மனித உரிமை அமைப்புகள்? இதுவே
இந்தியாவில் என்றால் இருப்பார்களா சும்மா?
 
......... எங்கே போயின இந்த ஐநாசபை,
மனித உரிமை அமைப்புகள்? இதுவே
இந்தியாவில் என்றால் இருப்பார்களா சும்மா?
நம் ரேணு சொல்லுவதுபோல் 'இந்தியர்கள் இளிச்சவாயர்கள்'! :loco:
 

தங்கமே, தங்கமே!


துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசைத்
தப்பாது பெற்றவரும், இந்த முறை ஏமாற்றிட,

மங்காப் புகழ் பெற்ற ஒலிம்பிக் விளையாட்டில்,
தங்கப் பதக்கம் ஒன்று கூட நாம் பெறவில்லை!

ஒற்றைத் தங்கம் வென்ற நாடுகள், பட்டியலில்
வெற்றிப் படிகளில் முன்னேறிச் செல்ல, நமது

இந்திய தேசம் பெற்றது ஐம்பத்தியாறாம் இடம்!
சிந்தையைக் கொஞ்சம் கலங்க வைக்கிறது! சில

நாடுகள், சின்னஞ் சிறிசுகளை வதைத்து, தமது
நாட்டின் தங்க வேட்டைக்கு முனைவது கண்டு,

அப்படியேனும் தங்கம் வேண்டாம் என நம்மை
இப்போதும் நினைக்க வைப்பது பாரம்பரியமோ?

பொன் கிடைக்காவிட்டால் என்ன? பழமொழி
பொன் பற்றி நமக்கு அறிவுறுத்த இருக்கிறதே!

'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!'
போதும் ஐந்து பதக்கங்கள் என்று மகிழ்வோம்!

:decision: . . . :becky:
 

Latest ads

Back
Top