• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....

..........
'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!'
போதும் ஐந்து பதக்கங்கள் என்று மகிழ்வோம்! .....
.
இரட்டிப்பு மகிழ்ச்சி!

இன்னும்
பதக்கங்கள் வேண்டும் என

எண்ணும் மனம், நமக்கும் இருக்கும்!

சென்ற முறை வந்தவை மூன்றுதான்;
இந்த முறை வந்தவையோ ஆறு! ஆம்!

இறுதி நாள் இன்னொரு வெள்ளியின்
வருகை; நம் மக்களுக்கோ ஆனந்தம்!

மூன்று, ஆறு என இரட்டிப்பு னதில்,
இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி வருகிறது!

{2 X :second:} + {4 X :third:}
 

ஒரு படி மேலே!


இந்தியா வென்ற இரண்டாம் வெள்ளி

இந்தியாவை ஒரு படி மேலே ஏற்றிட,

ஐம்பத்தியாறாம் இடத்திலிருந்த நாம்,
ஐம்பத்திஐந்தாம் இடத்திற்கு வந்தோம்!

வெற்றியும் தோல்வியும் வரும்; அதைப்
பற்றிக் கவலை கொள்வது பேதமையே!

இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு,
இன்னும் மேன்மை பெற முனைவோம்!


:ballchain:=> :high5: . . :thumb:
 

எனக்கும் இருந்தால்...


கம்பனைப் போன்ற கவி நயம் எனக்கும் இருந்தால்,

வம்பினில் மாட்டாது, ராம காதையைப் படைப்பேன்!

அருணாச்சல கவி போல அடுக்கு மொழி இருந்தால்,
அருமையான பாடல்களை, அழகாகப் படைப்பேன்!

மூதாட்டி ஔவையின் அறிவுக் கூர்மை இருந்தால்,
மூதுரைகள் பற்பல கணினியில் தட்டெழுதுவேன்!

பாரதியின் வீரம் நெஞ்சு நிறைய எனக்கு இருந்தால்,
'பார் அதிசயத்தை' என்று வியக்கும்படி எழுதுவேன்!

இவை ஒன்றுமிலாது கவிதைகள் படைக்க வந்தால்,
சுவை சொட்டச் சொட்டக் கவிதைகள் வந்திடுமோ?

சிந்தையில் வந்த எண்ண அலைகளை விரும்பினால்,
சிந்தையில் யான் பெறும் மகிழ்வுடன் தொடருவேன்!


:typing: . . . :typing:
 
எண்ண அலைகள் பின்னூட்டம்: அஞ்சல் 1353

அலையும் எண்ணங்களை வலையில் பதியும்போது
கலைநயம் மிளிரப் படைப்பது கடினமே
என்பதை இங்குள்ள எவரும் அறிவர்;
அன்புடன் நீங்கள் சொல்லும் போது
அந்த விதைகள் கவிதை யாகலாம்
வந்தபடி எழுதிய உரைநடை ஆகலாம்.
செய்திகள் அழுத்தத்தில் சுவை குன்றலாம்;
எய்தது இலக்கில் படலாம் தவறலாம்.

கோர்வை யாகப் பதிந்த நூலின்
பார்வைகள் பக்கங்கள் படிப்போர் விருப்பமே
என்பதை நீங்கள் அறியும் போது
துன்பம் சஞ்சலம் விடுத்துத் தொடர்வீர்!

கவிஞர் வாசகர் விமர்சகர் யார்க்கும்
தவிர்க்க முடியாதது வித்யா கர்வம்!
கூர்ந்து எழுதிய விமரிசனங் களில்
கூர்மை, உண்மை பார்ப்பது நன்மை.

மலரின் மணத்தை நுகர்வர் சிலபேர்;
மலரின் அழகும் பார்ப்போர் சிலபேர்;
மலரின் அமைப்பும் எனக்குப் பிடிக்கும்.

மலரின் மணத்தைப் பரப்பும் போது
மலர்கள் முன்பே ஒழுங்கில் உள்ளதால்
கொழுந்தும் கொஞ்சம் சேர்த்துச் செய்தால்
பழுதில் லாமல் இருக்கும் என்று
முழுமை கருதிப் பரிந்தேன் முயல்வீர்!

*****
 
Last edited:
சிந்தையில் வந்த எண்ண அலைகளை விரும்பினால்,
சிந்தையில் யான் பெறும் மகிழ்வுடன் தொடருவேன்!


மதிப்புகுரிய ராஜி ராம் அவர்களே.... உங்களின் எண்ண அலைகள் மிகவும் அற்புதம். தயயை செய்து முற்றுப் புள்ளி வைத்துவிடாதீர்கள். அதற்க்கு நிறைய ரசிகர்கள் இருப்பது உங்களுக்கு தெரியும். அதனால் தொடரவும்....
 

இயற்கையை ரசிப்போம்!


விலைவாசி உயர்ந்து சாமானியர்களைப் பெரும்

மலைப்பில் ஆழ்த்தும் இந்த நாட்களில், அன்னை

இயற்கை அளிக்கும் சின்னஞ்சிறு ஆனந்தங்களை,
இயன்றவரை போற்றி அனுபவிக்க முயலுவோம்!

மழைக்காக ஏங்கி, தன் இனிய குரலால், விடாமல்
அழைக்கும் அந்தக் கருங் குயிலின் கானத்தையும்,

வானம் இருண்டு, மேகங்கள் சூழ்ந்து, பொழிகின்ற
வான் மழையையும், குட்டைகளாகக் குழிகளிலே

சேர்ந்து, மண்ணுக்கு ஏற்ப நிறம் மாறும் நீரையும்,
சோர்ந்து போன மனதிற்கு தெம்பினைத் தந்திடும்

வண்ண வண்ண மலர்களையும், அவற்றின் தேன்
உண்ண வரும் தேன் சிட்டின் இனிய குரலையும்,

மாமரத்தில் பழங்கள் உண்ணக் கூட்டமாய் வந்து,
மாம்பழத்தைச் சுவைக்கும் பச்சைக் கிளிகளையும்,

வானில் இரவில் சுடர்விடும் விண்மீன்களையும்,
வானம் பெருமை கொள்ளும் பூரண நிலவையும்,

உதய சூரியனின் குங்கும நிறத்தையும், போற்றி
இதயம் இன்புற்று, உலகில் உய்ந்திட அறிவோம்!

பெரும் செலவு இன்றி, இயற்கை நம் மனதிற்குத்
தரும் இன்பங்களை அனுபவிக்கவும் அறிவோம்!


:decision: . . .
icon3.png
 

எனக்கும் இருந்தால்...


கம்பனைப் போன்ற கவி நயம் எனக்கும் இருந்தால்,

வம்பினில் மாட்டாது, ராம காதையைப் படைப்பேன்!

அருணாச்சல கவி போல அடுக்கு மொழி இருந்தால்,
அருமையான பாடல்களை, அழகாகப் படைப்பேன்!

மூதாட்டி ஔவையின் அறிவுக் கூர்மை இருந்தால்,
மூதுரைகள் பற்பல கணினியில் தட்டெழுதுவேன்!

பாரதியின் வீரம் நெஞ்சு நிறைய எனக்கு இருந்தால்,
'பார் அதிசயத்தை' என்று வியக்கும்படி எழுதுவேன்!

இவை ஒன்றுமிலாது கவிதைகள் படைக்க வந்தால்,
சுவை சொட்டச் சொட்டக் கவிதைகள் வந்திடுமோ?

சிந்தையில் வந்த எண்ண அலைகளை விரும்பினால்,
சிந்தையில் யான் பெறும் மகிழ்வுடன் தொடருவேன்!


:typing: . . . :typing:


சிந்தனையில் வந்திடும் எண்ண அலைகள்...


சிதறாத நல் முத்துச் சரங்கள்...

Tvk











 
சிந்தனையில் வந்திடும் எண்ண அலைகள்...

சிதறாத நல் முத்துச் சரங்கள்...
தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு நன்றி, நண்பரே! :yo:
 

இணையதளம்!


இணையதளம் சில நல்ல நண்பர்களை

இணைக்கும் பாலமாக இருத்தல் நலம்!

எழுதும் எல்லோரும் காவியம் போன்று

எழுதும் திறனைப் பெறுவது அபூர்வமே!

எண்ணங்களைப் பகிர்ந்து, பிறரின் மன
எண்ணங்களை அறிந்து நட்புப் பெறவே,

நாம் வருகிறோம் இணையதளத்திற்கு;
நம்மைப் போலக் கண்ணோட்டம் உள்ள

சிலரின் நட்பினைப் பெற்றால் பெருமை;
பலரின் கருத்துக்களை அறிதல் அருமை!

குற்றங்களையே தோண்டித் துருவாமல்,
பெற்ற நட்பைப் பேணிக் காத்திடுவோம்!

:grouphug: . . . :high5:
 

பாதுகாப்பே இல்லையா?


சிங்காரச் சென்னைத் தெருக்களில், என்றும்

பொங்கி ஓடும் காட்டறுபோல நெரிசல்தான்!

துள்ளும் வயதில், சின்னஞ் சிறிசுகள் பலரை
துள்ளுந்தில் அள்ளிச் செல்லுவது, கொடுமை!

எந்த விபத்தும் நேராமல் அவர்கள் வீடு சேர,
அந்தப் பெற்றோர் வேண்டாத நேரமில்லை!

பள்ளிக்குள் பாதுக்காப்புத்தான் என எண்ணி,
எள்ளளவும் ஐயம் இல்லாது இருக்க, நேற்று

நீச்சல் பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்கி,
நீச்சல் குளம் அமைத்த சிறந்த பள்ளியிலே,

நீரிலே மூழ்கி இறந்தான் பச்சிளம் பாலகன்,
நேரிலே கண்டும் காப்பாற்ற யாருமில்லாது!

பயிற்சி முடித்து வெளிவரும் சமயம் அவன்
அயற்சியால் நழுவி மீண்டும் உள்ளே நழுவ,

காப்பாற்றுமாறு நண்பர்கள் கூக்குரலிட்டும்,
காப்பற்றப் பயிற்சியாளர் ஓடி வரவில்லை!

பயிற்சி தரப் பெரும் பணம் பெறுகின்றனரே!
பயிற்சி பெறும் மாணவரின் உயிரைக் காக்க,

நல்ல திறமைசாலிகள் இருக்க வேண்டாமா?
நல்ல உயிர்க் காவலன் இருக்க வேண்டாமா?

பணம் சேர்க்கும் உபாயங்கள் பல தேடுவோர்,
கணம் நினைப்பாரோ உயிர்களைக் காத்திட?

கடுமையான சட்டங்கள் இருந்தால்தான், இக்
கொடுமையான நிகழ்வுகளைத் தடுக்கலாம்!

:whip: . . . :lock1:


 
Sowbagyavathy Raji Ram, Greetings.

நீரிலே மூழ்கி இறந்தான் பச்சிளம் பாலகன்,
நேரிலே கண்டும் காப்பாற்ற யாருமில்லாது!


Is that true? What were they doing? How about the persons watching? did you say they did not jump in? Where is that country going? When someone is drowning, where is the time to even think? One should just act. Just instinct. I just can't believe what I am reading.. I wish I was there.. that boy wouldn't have died. Shame shame on all the people around.. criminal negligence........ I am sad very sad to read this..
 

எனக்கும் இருந்தால்...


கம்பனைப் போன்ற கவி நயம் எனக்கும் இருந்தால்,

வம்பினில் மாட்டாது, ராம காதையைப் படைப்பேன்!

அருணாச்சல கவி போல அடுக்கு மொழி இருந்தால்,
அருமையான பாடல்களை, அழகாகப் படைப்பேன்!

மூதாட்டி ஔவையின் அறிவுக் கூர்மை இருந்தால்,
மூதுரைகள் பற்பல கணினியில் தட்டெழுதுவேன்!

பாரதியின் வீரம் நெஞ்சு நிறைய எனக்கு இருந்தால்,
'பார் அதிசயத்தை' என்று வியக்கும்படி எழுதுவேன்!

இவை ஒன்றுமிலாது கவிதைகள் படைக்க வந்தால்,
சுவை சொட்டச் சொட்டக் கவிதைகள் வந்திடுமோ?

சிந்தையில் வந்த எண்ண அலைகளை விரும்பினால்,
சிந்தையில் யான் பெறும் மகிழ்வுடன் தொடருவேன்!


:typing: . . . :typing:

Sowbagyavathy Raji Ram,

You just proved your worth in Gold/ platinum/ diamond/ tumeric ( take your pick, or pick all, please) by composing a poem in Chennai Tamizh. What a feat? Hats off to you! I enjoyed it!

Cheers!
 
............ Where is that country going? When someone is drowning, where is the time to even think? One should just act. Just instinct. I just can't believe what I am reading.........
Dear Raghy Sir,

I have given the link for this sad news, reported by Times of India in the next post. The school is very popular in our area

West K K nagar, where my son did his schooling from 3rd standard to + 2. There was no swimming pool in those days.

Recently it was built and swimming was made compulsory for all students from a particular class. It is supposed to

accommodate only 15 children BUT there were about 35 children when this accident happened. The boys who were learning

were not confident to jump in and save the child and the coach did NOT act immediately. The whole area was mourning the

death. Only after the media flashed the news repeatedly, the school declared a holiday on Friday.

PS: When I am very sad, I write a lot. That Chennai Senthamizh song was one of them!
:typing:
 

ஒரு புதிய யுக்தி!


இணையதளத்தில் ஏதேனும் ஓரிடத்தில், ஓர்

இழையினைத் தொடங்கச் சிலர் விழைவார்!

நான் இன்று கண்டதோ, வினோதமான யுக்தி!
தான் ஆரம்பித்த புதிய இழையிலே வினவிய

கேள்விக்கு, தானே பதில் எழுதி மகிழ்கின்றார்,
கேள்வியும் நானே பதிலும் நானே என ஒருவர்!

தன் அறிவுக்கு எட்டும் விளக்கங்களைப் பிறர்
தன் இழையிலே எழுத எதிர்பார்க்கின்றாரோ?

தன் பெயருடன் அஞ்சல் வருமென்று அறியாது,
தன் முயற்சிதனைச் செய்கின்றாரோ? அல்லது

வாசகர்கள் தங்கள் இரு காதுகளிலும், எடுத்து
வாசனைப் பூச் சூடுவாரென நினைக்கிறாரோ?


:noidea: . . . :dizzy:
 

Very sad indeed. Just a regular CPR was required. Had they drained the water out from the lungs even after few minutes, and resuscititated, that boy would have been alive. Kids were watching him fall in the pool; they went alert elderly persons; would have taken only few minutes to get that kid out of water; would have had a lot of time for CPR. Poor kid...
 

ஏமாற்றும் சட்டம்!


சட்டம் ஒரு இருட்டறையே என்றும்,

சட்டத்திலே பல ஓட்டைகள் என்றும்,

எல்லோரும் அறிந்ததால், இதனைப்
பல்வேறு வகைகளில் சாதகமாக்கி,

கொலைக் குற்றம் புரிந்திடுவோரின்
துணைக்குப் போவோரும் தப்புவார்!

ஜெயிலுக்குச் சென்றாலும், உடனே
பெயிலில் வெளிவர, ஒரு வித F I R!

தன் பணியாளர் மட்டும் ஜெயிலில்!
தான் வருவார் வெளியே பெயிலில்!

குற்றம் புரிந்தோரை தண்டித்தாலே,
குற்றங்கள் குறைந்திட ஏதுவாகும்!


:lock1:


 

நீயாக இரு!


சிந்தையில் என்றும் நிலைத்து நின்றாலும்,

தந்தைக்கு என்று ஒரு நினைவு நாள் உண்டு!

இன்று அந்நாள் என எண்ண அலை தோன்ற,
என்றும் நினைப்பவரை இன்னும் நினைத்து,

அவரை எண்ணியே உறங்கியதால், நேற்று
அவரே என் கனவிலும் தோன்றிவிட்டார்!

'எத்தனையோ உயர்வுகள் அடைய எண்ணி,
அத்தனையும் அடையாமல் போனேன்', என

என் மனம் அடிக்கடி எண்ணுவதை அவரிடம்
என் வினாவாகக் கேட்டதும், அவர் சிரித்தார்!

'பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் உன்
சிறந்த குணத்தால் போற்றப்படுகின்றாயே!

சுற்றமும், நட்பும் உன் வரவால் கிடைக்கப்
பெற்றிடும் இனிமையால் ஆனந்திக்கிறதே!

இந்த வெற்றியே நீ பெறும் பெரும் வெற்றி!
இந்த எண்ணத்தோடு நீ நீயாக இரு மகளே!'


:angel: . . . :peace:
 

நீயாக இரு!


சிந்தையில் என்றும் நிலைத்து நின்றாலும்,

தந்தைக்கு என்று ஒரு நினைவு நாள் உண்டு!

இன்று அந்நாள் என எண்ண அலை தோன்ற,
என்றும் நினைப்பவரை இன்னும் நினைத்து,

அவரை எண்ணியே உறங்கியதால், நேற்று
அவரே என் கனவிலும் தோன்றிவிட்டார்!

'எத்தனையோ உயர்வுகள் அடைய எண்ணி,
அத்தனையும் அடையாமல் போனேன்', என

என் மனம் அடிக்கடி எண்ணுவதை அவரிடம்
என் வினாவாகக் கேட்டதும், அவர் சிரித்தார்!

'பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் உன்
சிறந்த குணத்தால் போற்றப்படுகின்றாயே!

சுற்றமும், நட்பும் உன் வரவால் கிடைக்கப்
பெற்றிடும் இனிமையால் ஆனந்திக்கிறதே!

இந்த வெற்றியே நீ பெறும் பெரும் வெற்றி!
இந்த எண்ணத்தோடு நீ நீயாக இரு மகளே!'


:angel: . . . :peace:


" நீ நீயாக இரு மகளே!'"


ஹூம்.... இந்த பசங்க [ஆணோ, பெண்ணோ]... என் பேச்சே எங்கே கேக்குதுங்க...




""ஒரு அப்பா[வியி]ன் புலம்பல்""

tvk








 

Latest posts

Latest ads

Back
Top