• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

எண்ண அலைகள்....


பொறுத்தார் பூமி ஆள்வார்!


திருச்சூர் பூரத் திருவிழாவில், அதிகாலை

திருச்சூர் நகரில் வெடி முழங்கும்! நேற்று

நித்திரா தேவியின் அரவணைப்பை நாடி,
நித்திரையில் நன்கு ஆழ்ந்த வேளையில்,

படீரென வெடித்த வெடிக் கட்டுச் சத்தம்,
திடீரென உலுக்கி, விழிக்கவும் வைத்தது!

பத்து வெடிகளுக்குப் பின் இடைவேளை
பத்து மணித் துளிகள்; மீண்டும் வெடிகள்!

நமது தீபாவளித் திருநாள், பத்து மணிக்கு
நமது வெடிகளை நிறுத்தச் சொல்லுபவர்,

விரதம் ஒரு மாதம் முடித்த மகிழ்வினில்,
இரவு முழுதும் விடாது ஒலியலை எழுப்பி,

இரக்கம் இன்றி, அமைதி அழித்து, மக்கள்
உறக்கம் கெடுத்தவரை, எதுவும் செய்யார்!

'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று படித்து,
பொறுமையைக் கற்றவர்கள்தானே நாம்!

:peace:

குறிப்பு: ஆடி மாதம் முழுதும் தேவியைத் தொழுது, பூஜைகள் செய்தவர்கள், ஞாயிற்றுக்
கிழமையன்று கூழ் காய்ச்சிய வைபவம் முடித்து, எழுப்பிய ஒலி அலைகளே இவை!
:boom:
 

'ஏரியல்' போல!


பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டி,

உண்மை பல உரைத்தார், மஹா பெரியவர்!

நாகரீகப் போர்வை, தலைவிரி கோலத்தில்
மோகம் கொள்ள வைத்துள்ளது, மக்களை!

ஆண், பெண் பேதமின்றிப் பலர் கேட்கின்றார்
ஏன் தலைமுடியை முடிய வேண்டும் என்று!

முடிந்திட வேண்டும் என்பதாலே, அது தலை-
முடி எனப் பெயர் பெற்றதோ என வியப்பேன்!

பிரேத காரியங்கள் செய்யும் போது மட்டுமே
பின்னலை அவிழ்க்க வேண்டும் என்கிறாரே!

எப்போதும் விரித்துப் போட்டால், முடிகளும்
தப்பாது செய்திடுமாம் 'ஏரியல்' வேலையை!

கெட்ட சக்திகளை ஆகர்ஷித்து, நம் உலகில்
கெட்ட செயல்கள் பெருகிட வைத்திடுமாம்!

'பெண்களே பெண்களுக்குச் சொல்லாததால்,
உண்மையை உரைக்க நான் வந்தேன்', என்று

மனம் வெதும்புகிறார் நம் மஹா பெரியவர்!
மனம் மாறுவாரோ நாகரீகப் பெண்மணிகள்?

அலை பாயும் கேசராய், நீண்ட தலைமுடியை
அலைய விடுகின்ற ஆண்களும் மாறுவாரோ?


:hippie:
 

'பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்' என்ற, காஞ்சி ஸ்ரீ பரமாச்சாரியார் எழுதிய புத்தகத்தின் பக்கம் 76 -ல்

இருந்து ஒரு பகுதி:



"குடுமி, கொண்டை, பின்னல் என்றிப்படிக் கேசத்தை விரிக்காமல் ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தான் மங்களம்.

ஸ்த்ரீகள் - புருஷர்கள் யாரானாலும் ப்ரேத கார்யத்தில்தான் கேசத்தை அவிழ்த்து விடுவது. மற்ற சமயங்களிலும்

அப்படியே இருந்தால், அதைப் போல ஒரு க்ஷாமம் கிடையாது. எப்போதும் அப்படி என்றால், லோகத்தில்

எப்போதுமே ப்ரேதம், ஆவி சூழ்ந்திருக்கிற மாதிரியான நிலவரம்தான் இருக்கும். மனஸின் அடக்கம் கட்டுப்பாடு

என்பதில்தானே உத்தமமான வாழ்க்கையே இருக்கிறது? அதற்கு வெளிச் சின்னமாகத்தான், அடங்காமல் பறக்கிற

கேசத்தை, ஸ்த்ரீ - புருஷர் இருவருமே முடிந்து கொண்டு, அதனாலேயே துர்மங்கள சக்திகள் சேராமலும்

ரக்ஷித்தார்கள். :angel:


 
வணக்கம் திருமதி ராஜி ராம்.

’பெண்மை என்பதைக் காப்பாற்றவேண்டும்’ என்பது ஒரு அற்புதமான தொகுப்பு. பல மாதங்கள் முன்பு நான் அதை முழுவதும் தட்டெழுதி இங்கு நூலிட நினைத்தேன். அப்போது நம் முற்போக்கு நண்பர்கள் பலர் இங்கு சுறுசுறுப்பாக வாதங்களில் ஈடுபட்டிருந்ததால் முயற்சியைக் கைவிட்டேன். அந்தச் சிறு புத்தகம் இன்று அச்சில் இல்லை என்று நினைக்கிறேன். கிடைத்தல் பிரதிகள் வாங்கி விசேஷங்களில் வினியோகிக்கலாம்.
 
Mrs VRji

You have brought out a valid point. How many ladies will support you in this suggestion.
In fact you have raised an very interesting point quoting the words of Mahaperiyaval about
the sanctity of combing the hair. It just not end with that. Some girls go to Spa for dressing
and some run a comb through their hair or touch it and if they find not to their liking
immediately seek the help of the scissors or a razor blade to trim it to suit their choice.
Strictly speaking, Ladies are not supposed to cut their hair during ordinary days. Maybe
that if they regularly apply or try some light oils. there may not be any difficulty in combing
in place of leaving like that uncombed. Strictly speaking uncombing of hair is against our religious
representation. One has to maintain the virginity of hair without approaching scissor or
blade or seeking the help of the Spa. The idea of cutting the hair stating that the hair breaks
while combing it is generally not acceptable but the practice is in vogue. Some take shampoo
or some conditioner bath and walk into the house with water dropping from the hair without
properly wiping out, is also not advisable.

Balasubramanian
Ambattur
 
Dear Bala Sir,

We see this even in marriages. On the reception day the bride, nowadays , is always on "THALAI VIRI KOLAM"... Though this is prevelant in north, there they will put their saree palloo on top of thier head and cover it. One cannot see the lengthy hair among any of the college/school going girls here. Main reason given is maintaining the hair is a very big problem!!!

Cheers.
 
வணக்கம் திருமதி ராஜி ராம்.

’பெண்மை என்பதைக் காப்பாற்றவேண்டும்’ என்பது ஒரு அற்புதமான தொகுப்பு. பல மாதங்கள் முன்பு நான் அதை முழுவதும் தட்டெழுதி இங்கு நூலிட நினைத்தேன். ............
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! அந்தப் புத்தகம் நேற்றுத்தான் எனக்குக் கிடைத்தது. தலைவிரி கோலம் இன்றைய

நவ நாகரீகம் ஆகிக் கண்களை உறுத்துவதால், அது பற்றி எழுதிவிட்டு, பரமாச்சாரியார் சொன்ன வார்த்தைகளையும்

மேற்கோள் காட்டினேன்.



என்னைப் பொறுத்தவரை, பரமாச்சாரியார் சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை! பெண்கள் பணி

செய்யப் போகவே கூடாது என்பதும், பழைய கால வழக்கப்படிச் சாணம் தெளித்து, கோலம் இட்டு, மாவு அரைத்து, இடித்து

என்று வேலைகள் செய்தல் நலம் என்பதும் ஒப்புக் கொள்ள முடியவில்லை! அப் பணிகளைப் பணிப் பெண்களே

செய்வார்கள்; இல்லத்தரசிகள் அல்ல.



கிராமத்திலேயே வாழ்ந்து, வீட்டு வேலைகளை அம்மாவுடன் சேர்ந்து செய்து, பக்கத்துக் கிராமத்தில் வாக்குப்படும் பெண்கள்

வாழ்ந்த காலம் மாறிவிட்டதே! கணினி மயமாகிவிட்ட உலகில், பெண்கள் எல்லாவற்றையும் (சீருந்து ஓட்டுவது போன்றவை)

கற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. படித்த பெண்களால், பழைய காலம் போல வீட்டிலேயே அடைந்து

கிடக்கவும் முடியாது.



இது மிகப் பெரிய விஷயம், விவாதிப்பதற்கு. எனவே இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்! :)
 

அங்கும் தொடரும்....


பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றி,
பல கோடி ஜீவராசிகளைத் தன் மீது தாங்கி,

பொறுமைக்கு இலக்கணம் இவளே என்று
போற்றப்படுபவள், நம் பூமித் தாய் ஆவாள்!

பசுமைக் காடுகள் பெருகி, வான் மழையும்
குளுமை சேர்க்க, அருமையாக இருந்தவள்,

நவீன மயத்தால் நலிந்து போகிறாள், இன்று!
நவீன கண்டுபிடிப்பிலே 'பிளாஸ்டிக்' ஒன்று!

அழிக்கப் பல ஆண்டுகள் ஆகும் இப்பொருள்,
அழிக்கிறது பூமித்தாயை, குப்பையாக மாறி!

எங்கும் எதிலும் பிளாஸ்டிக்கின் உபயோகம்!
அங்கிங்கு எனாதபடி எங்கும் வியாபித்திடும்!

நிலவுக்கு விண்கலம் அனுப்பிய பின், அங்கு
நிலவும் சூழ்நிலை மனிதன் வாழ ஒவ்வாது

என்று கண்டுபிடித்ததால், நிலவு பிழைத்தது!
இன்று சிவந்த செவ்வாயில் ஒரு விண்கலம்!

மனித வாழ்வுக்கு அங்கு ஏற்ற சூழ்நிலையாக
இனிதே இருப்பின், அங்கும் அழிவு தொடரும்!

:humble:

 

மன நிறைவு!


'கவிதையா எழுதுகிறாய்?' என, சிலர்

தவித்து, மாய்ந்திடும் போது, எனக்கு

ஒரு நண்பரிடமிருந்து வேண்டுகோள்!
ஒரு துறை மட்டுமல்லாது, பல்வேறு

துறைகளில் சிறந்த மனிதர்; அவரின்

துணைவி ஓர் அறுசுவை அரசி! அந்த

இருவரையு
ம், 'பொதிகை' நேயர்கள்,
அருமையாக அறிவார்கள்! வாழ்த்துக்

கவிதையை நான் புனைந்து அனுப்ப,
கவிஞர் பலர் எழுதிய கவிதைகளுடன்

மணவிழா மலரில் அதை இணைத்து,
மணக்கும் சமையல் குறிப்புகள் சில,

இரண்டாம் பகுதியில் பதித்துவிட்டு,
திரண்ட விருந்தினர் அனைவருக்கும்

தாம்பூலப் பையுடன் வழங்க, நாங்கள்
தம்பதியரை வாழ்த்தி, மனம் நிறை
,

இனிய இல்லம் திரும்பினோம்; அந்த
இனிய நினைவுகளால், மகிழ்ந்தோம்!



:high5:

 

பிஞ்சுப் பிராயத்திலேயே!


பிஞ்சு வயதில் அரிய பாடலைப் பாடினால், நம்

நெஞ்சு நெகிழுமா என்று நான் ஐயப்படுவேன்!

குழந்தைக் குரல் உடைந்து மாறும் பருவத்தின்
குழந்தை, நேற்றுப் பாடிய பாடலால், கேட்டவர்

உள்ளம் கலங்கி, கண்ணீர் சுரந்தது நிஜம்தான்!
'உள்ளத்தில் நல்ல உள்ளம்' என்று துவங்கிடும்,

நயமான சொல்லழகும், பாடலின் கருத்தழகும்,
வயப்படுத்தும் இசை அழகும் நிரம்பிய பாடல்!

இத்தனை பிஞ்சுப் பிராயத்திலே, அனுபவித்து
எத்தனை அருமையாகப் பாடினான் சிறுவன்!

இசைக் கருவிகளை உடன் வாசித்த அத்தனை
இசைக் கலைஞர்களும், மதிப்பெண்கள் இடும்

மேதைகளும், அரங்கத்திலே கூடியவர்களும்,
மேடையில் பாடியதை டிவி யில் ரசித்தவரும்,

அவனுடனே கர்ணனின் காலத்திற்கே சென்று,
அவனது உணர்ச்சிகளுடன் ஒன்றிப் போயினர்!

நயமாகப் பாடிய அந்தச் சிறுவனுக்கு, இறைவன்
நலமான நல்வாழ்வைத் தந்திட வேண்டுவோம்!

:pray:

 
Last edited:
Gud morning R RMam yes ,I happen to watch to show ,wow,its simply super,words cannot match this kind of occassion Actually i was waiting for GAUTHUM,turn.,he deserve the whole heart wishes from all.AND THATS THE SOUL REACH MUSIC.CAN MAKE ANY ONE MOVED,
 
FXCD0004.JPG



Guru Brahma,Guru Vishnuhu



Guru Devo Maheswaraha



One to wipe out the sorrows, there is no medicine, other than absolutely firm
mind, trust and faith towards God. Besides dedicated attention exclusively towards God
and consistent Bhakti can also help to balance oneself and also to bear the sorrows. That is why,
in the ester years, temples were constructed by Mahans for encouraging the people
to visit the Temples and create an awareness in their minds about the religious principles, codes,
etc, which would pave a way towards Bakthi and make one to pray and worship, chant Mantras, etc.
in the praise of God. One takes coconut, betal leaves, supari, banana, neivedhya prasadam etc to offer
to the Deity only to express the gratitude to the God for receiving all the welfare measures
and benefits in the life because of HIS blessings.

Balasubramanian
Ambattur
 
Last edited:

கடல் கடந்து கர்நாடக இசை!


சிந்தையை மகிழ்விக்கும் கர்நாடக இசை,

இந்தியாவின் தனிப் பெருமையே ஆகும்!

தென்னிந்தியாவில் வாழ்ந்தும், இத்தகைய
இன்னிசையைக் கற்காமல் பலர் வாழ்ந்திட,

அமெரிக்க நாட்டில் வாழ்ந்தும், மனத்திற்கு
அமைதி தரும் இந்த இசையைக் கற்றவள்,

இருவர் பாடிய அதி வேகப் பாடலை, தான்
ஒருத்தியாகப் பாடி, அதிசயிக்க வைத்தாள்!

சின்னத் தாள வித்தியாசங்கள், இறுதியில்
சின்ன ஸ்வர வித்தியாசங்கள் தவிர்த்தால்

எந்தக் குறையும் இல்லாது, அமர்க்களமாக
இந்தச் சிறுமி பாடினாள்; தந்தைதான் குரு!

நடுவர்கள் ரசிகர்களுடன் சேர்ந்துகொண்டு,
சடுதியில் கைதட்டி ஆனந்தித்து அருமை!

அறிவும், அழகும் ஒருசேர அமைந்த சிறுமி,
செறிவான ஞானம் பெற வாழ்த்திடுவோம்!

:thumb:
 
Some of the remedial measures, which may be implemented to remove Vastu Doshas are as follows:
These days, Vasthu is given more importance as compared to ester years.
Some of the guidelines heard from now and then are given hereunder for information only.
1) Start with Vigneswara Homam, Navagraha Home and Vastu Purush
pooja before one enters the newly constructed house or office premises. Make the Cow to
enter the house along with its cub first after doing Go-Puja.
2) Some even do Nava Chandi yoga, etc.
3) In fact bhoomi puja has to be done only after knowing Vastu purusha details according to
panchangam.
5) If some body is buying an old with an idea of constructing new one, one has to avoid
using the old ones.
6) One can chant Om Namo Bhagvate Vastu Devaya Namah while commencing the work
for vasthu remedies.
7) One can keep a picture of Kann Thrushti Ganapathy at the entrance of the house.
8) One has to properly design the puja room at the right place facing east preferably.
9) Some say the proposed room in the South-West portion of the house is not to be kept empty.
10) One has to light a lamp preferably every evening without forgetting at the entrance of the house


Balasubramanian
Ambattur
 

Latest posts

Latest ads

Back
Top